Unconventional in every sense. சரணம் பல்லவி இத்யாதிகள் என்று வரையறுக்கவே முடியாத ஒரு பாடல். அதுவும் ஓபனிங்.....படீரென்று பெருமழை மாதிரி ஆரம்பிக்கும். ஒரு அறிகுறியும் இருக்காது. சரி......பாடல் செல்லச் செல்ல டெம்போ மாறும்.....வழக்கமான, நமக்கு பரிச்சயமான ஒரு வடிவுக்குள் வரும் என்று எதிர்பார்த்தல்.......திடீரென்று சில நொடிகளுக்கு ஒலிக்கும் ஸின்த், நடுநடுவே உலவும் மெல்லிய கீபோர்ட் நோட். திரும்ப பழைய முறைக்கு தி....ரு....ம்....பு....ம் என்று நினைக்கும் இடத்தில், குரலின் பிட்ச் மாறும்....அதனைத் தொடர்ந்து தான் ப்யூர் மேஜிக் - மிகச் சரியாக 3:40 - 3:45 வரை கேக்கும் அந்த ட்ரம் பீட் போன்றதொரு ஸின்த் இசை. இப்படியாக போய் கொண்டிருக்கையில், 5:24ல் ஒலிக்கும் கடம்.....பாடல் முடியப் போகும்போது முற்றிலும் வேறு ஸ்கேலில் முடியும். இதற்கு மேல் இதைப் பற்றிப் பேசவே சங்கோஜமாக உள்ளது. அதைக் கேட்பதே மிகச் சிறந்த வழி.
ரங்கீலா - 1995. ரஹ்மானின் முதல் ஹிந்தி பிரவேசம் என்று நினைத்திருப்போம். ஆனால் அதற்கு முன்னரே, 94களின் போதே, புகழ் பெற்ற இயக்குனர் கோவிந்த் நிஹ்லாணி த்ரோகால்(Drokal) என்ற படத்திற்காக ரஹ்மானை ஒப்பந்தம் செய்துவிட்டார். ரஹ்மானும் படத்திற்கான பாடல்களையும் சிலபல பின்னணி இசை வேலைகளும் முடித்திருந்தார். ஆனால், அவரது சிஸ்டம் க்ராஷ் ஆனபடியால் அனைத்தும் அழிந்து போய்விட்டது. கடைசியில் அந்தப் படமே ட்ராப் ஆனது. பின்னாளில் அதே தலைப்பில் மற்றொரு படத்தை அவர் இயக்கினர். அதுதான் தமிழில் - குருதிப்புனல். சுபாஷ் கய்ம் ரஹ்மானுடன் 93லிலேயே பணியாற்ற வேண்டியது. ஆனால் அந்தப் படமும் ட்ராப் ஆனது. ஆக, ரங்கீலாவே ரஹ்மானின் முதல் ஹிந்திப் பிரவேசமாக அமைந்தது.
ஜம்ப் கட்: 2012. ராக்ஸ்டார். Phir se ud chala. கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன் அவர் செய்ததன் நீட்சி என்று இதனைச் சொல்லலாம். பாடல் ஆரம்பிக்கும் விதமாகட்டும்....டெம்போவாகட்டும்.....பின்னாடி சற்றே மாறும் வடிவம் என்று, இன்னவகைதான் என்று கூறவே முடியாத ஒரு ஸ்ட்ரக்சர். நான் பாடலை முதலில் கேக்கும் போது, சரி இந்த இடத்தில் வழமையான வடிவத்திற்கு வரும் என்று யோசித்து யோசித்து.....பாடல் முடிந்தே விட்டது. இந்த மேஜிக் பிடிபட கொஞ்ச நேரம் ஆனது.
Source: rahmaniac.wordpress.com
ரஹ்மானின் பல பாடல்கள் இதுபோல சரணம் பல்லவி அதுஇது என்று கட்டுப்பாடுகள் அற்றது. ராகம் போன்ற ஒரு கட்டமைப்புகள் பலவித புதுமைகள் செய்வது ஒருபுறம் என்றால் புதிதாக ஒரு வடிவத்தையே நடைமுறைபடுத்துவது இன்னொரு வகை. பழைய காலத்து ஆசாமிகளில் சிலபேருக்கு இது புரியவே புரியாது. ஒரு ராணுவ ஒழுங்குடன் கூடிய, பல்லவி சரணம் ராகங்களின் அடிப்படையில் பாடல்களை அமைப்பது அல்லது வெஸ்டர்ன் க்ளாசிகல், இதுபோன்ற அடிப்படைகளின் வழியே உருவாவதயே "திரைப்பட இசை' என்று நம்பும் ஆட்கள். அவர்கள் ரஹ்மானின் இதுபோன்ற பாடல்களை குப்பை என்று சொல்லாவிட்டால் தான் ஆச்சரியமே.
ரஹ்மானைப் பற்றி சீரியசாக பேசும் அல்லது விவாதிக்கும் பலரும் உபயோகப்படுத்தும் ஒரு வார்த்தை, Layering. டக்கென்று தோன்றும் ஒரு உதாரணம் - இந்தப் பாடல். இதில் ஆரம்பித்தில் வயலின் ஒரு ஸ்கேலில் ஒலிக்கும், ஸின்த் இசை ஒரு லேயராக ஆரம்பிக்கும், டெக்னோ இரண்டு ஸ்பீக்கர்களுக்கும் மாறிமாறி சென்று வர ஆரம்பிக்கும், "ஹே ஹே " என்ற ஓசை வேறு - ரஹ்மான் குரல்களையே லேயர்களாக பயன்படுத்துவதில் மாஸ்டர் - அவ்வப்போது கேக்கும்..... திரும்ப வயலின், ஆனால் இந்தமுறை முற்றிலும் வேறு ஸ்கேலில் ஆரம்பிக்கும்.....இதுவொரு மிகச்சிறிய உதாரணம். முதல் தடவை ரஹ்மானின் இசை பிடிபடாது....போகப்போகத் தான் பிடிக்கும் என்று பலரும் சொல்லக் காரணம், இதுதான். போனமுறை கேக்கும் போது இதை கவனிக்கவில்லையே என்று நாம் பல லேயர்களை தவறவிட்டு பின்னாட்களில் ரசித்திருப்போம். இதுவொன்றும் சாதாரண வேலை அல்ல. ஆரம்பகாலங்களில் ஒற்றை ஆளாக ரஹ்மான் இந்த வேலையைச் செய்திருக்கிறார்( ஒலிப்பதிவாளர் - ஹெச்.ஸ்ரீதரின் பங்கு இதில் மிக முக்கியமானது). இப்படித்தான் வரவேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் திருப்தியாக வரும்வரை விடாமல் லேயர் ஸ்ட்ரக்சர்களை மாற்றிக் கொண்டிருப்பாராம். அப்படியும், கேசட் தயாராகப் போகும் வரை சின்னச்சின்ன விஷயங்களை விடாமல் செய்துகொண்டே இருப்பாராம்.
With Rahman. I learnt something new. Before I worked with him, I recorded with 100-125 musicians. When I sat down with Rahman, I looked for the musicians but there seemed to be none around. He just switched on his keyboard and started playing notes, adding the rhythm as he went along. Rahman has a new way of thinking. He is a singer, a lyricist, a composer, an orchestra conductor, an arranger, and a sound engineer. Except for the lyrics he does everything else in a song.
- Subash Ghai
இதுபோன்றே பிடித்த இன்னொரு இசைக் கோர்ப்பு, புதிய மனிதா - எந்திரனில் இருந்து. இந்தப் பாடலை இசை இல்லாமல் வெறும் எஸ்பிபியின் குரலை மட்டும் வைத்துக் கேட்டாலும் ஒரு உற்சாகத்தை ஆர்வத்தை உணரலாம். சிட்டி - மே மே என்று கத்தும் ஆட்டின் இசை இதில் வருவதை எத்தனை பேர் கவனித்தீர்கள்...பின்னணியில் வயலின்களின் சங்கமம் வேறு அட்டகாசம் போங்கள்.
Jhootha hai sahiயில் வரும், இதுவும் அதேபோன்ற வயலின் + டெக்னோ உள்ள பாடல். ஒருமாதிரியான புதிர்த்தன்மை நிறைந்த பாடலாக எனக்குத் தோன்றும். ஏன் பிடிக்கும் என்றெல்லாம் தெரியாது. சைக்கிள் பெல், வளையல் வரிசையில் - செல்போன் போடும் கீபேட் சத்தம் உட்பட அனைத்தையும் இசையாக மாற்றியிருப்பார்.
குரல்களையே லேயர்களாக மாற்றுவார் என்று டைப்படித்துக் கொண்டிருக்கும் போது, இந்தப் பாடலை எப்படி சொல்லாமல் விடுவதா என்று ஞாபகம் வந்தது. மிகச் சரியாக 0.06 நொடியில் கேட்கும் "டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்" என்பதாகட்டும், பாடலின் ஆரம்பத்தில் வரும் "ஜும்ஜூகுஜும்ஜூகு" - அதென்ன வார்த்தை என்று இன்றுவரை என்னால் கண்டறிய முடியவில்லை - என்பதாகட்டும், ஹரிஹரனின் 'பபபபப்பப்ப ....சகமகப்" போன்ற வார்த்தை தெளிப்புகள், அந்த "டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்' பல்வேறு வடிவங்களில் பாடல் முழுவதும் விளையாடுவதாகட்டும், கடைசி கட்டத்தில் ரஹ்மானே பாடம் அந்தப் பகுதி, கர்னாடக ஜதி சொல்லும் லேயேர், உதித் நாராயணனின் குரல் என்று குரல்களில் மட்டும் ஒரு ஏழு லேயர்களை சொல்லலாம். தவிர, பாடல் முழுவதும் ஹரிஹரனின் குரல் இரண்டு ஸ்கேலில் தான் கேட்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்தப் பாடலை எப்பொழுது கேட்டாலும் மிகுந்த உற்சாகத்தை (எனக்குத்) தரத் தவறுவதில்லை.
90களில், இதுபோன்ற வெவ்வேறு இசைக் கருவிகளின் சங்கமமாக இருந்த அவரின் இசைக் கோர்ப்பு 2000த்திற்கு பிறகு மாறுதலடைந்து வெவ்வேறு இசை வடிவங்களின் amalgamation என்று மாறியது. ஏலே கீச்சான் - சமீபத்திய மிகச் சிறந்த உதாரணம்: கன்ட்ரி இசை + ரெகே + ஆப்ரிக்க + நமது நாட்டுபுற இசையினுடைய குரல் வடிவம். பலபேர் 90களின் ரஹ்மான் என்ற பதத்தை பயன்படுத்துவது இதனால்தான் என்று தோன்றுகிறது.
உத்தேசமானதொரு கணக்கில் முப்பது ரூபாய் பெறாத குடிக்கு வாடிக்கையாளன் செய்யும் செலவு என்பத்தைந்து ரூபாய். அவனுக்கு ஊக்கத் தொகையாகக் கிடைப்பது, அனுபவிப்பது பீடிப்புகை, மூச்சு முட்டல், கொசுக்கடி, சாக்கடை நாற்றம், வாந்தி, அருவருப்பு, பகலானால் உலகத்து ஈக்கள், காறித்துப்பிய எச்சில், விருப்பம் போலத் திரிதரும் எலி, பெருச்சாளி, மூஞ்சூறு, தெறிபாச்சா, கண்டாங்கி பாச்சா, பலவகைப் பல்லிகள், காலில் உராயும் பூனைக்குட்டிகள், குரைக்காமல் வாலொதிக்கிக் கிடக்கும் சொறி பிடித்த நாய்கள்.......
வாடிக்கையாளர்களான கனரக வாகன ஓட்டிகள், சாலைப் பணியாளர்கள், கை வண்டிக்காரர், துப்புரவு தொழிலாளிகள், குறு வியாபாரிகள், சிறு தொழிற்கூடங்களில் வார்ப்பட. கடைசல், கருமான் தொழில் செய்வோர், கட்டிடத் தொழிற் கூலிகள், யாவரும் பன்றிகளுக்கும் கீழாகத் தாம் நடத்தப்படுவதை ஒரு போதையின் பொருட்டுச் சகித்துக் கொள்கிறார்கள். அவர்களது வாக்குகள் வேண்டும், வரிப்பணம் வேண்டும், உழைப்பு வேண்டும், கோஷம் வேண்டும், கூட்டம் வேண்டும், ஆனால் மனிதனாக நடத்தப்பட வேண்டா......
- நாஞ்சில் நாடன், உண்ணற்க கள்ளை
"மதம் ஒரு அபின்/Religion is the opium of the masses"......புகழ்பெற்ற ஸ்டிரியோடைப்பிக்காக பயன்படுத்தப்பட்டு வரும் மேற்கோள்களில் ஒன்று. சரமாரியாக அனைவராலும் மேற்கோள் காட்டப்படுவது. ஆனால், நிஜத்தில் மார்க்ஸ் சொன்னது " Religious suffering is, at one and the same time, the expression of real suffering and a protest against real suffering. Religion is the sigh of the oppressed creature, the heart of a heartless world, and the soul of soulless conditions. It is the opium of the people". ஆனால், ஏன் மார்க்ஸ் போதை வஸ்துவுடன் மதத்தை ஒப்பிட வேண்டும் - the expression of real suffering and a protest against real suffering. இந்தப் புத்தகத்தின் பதிப்புரையில் ஒரு நீண்ட வாக்கியம் வருகிறது... "மது தீர்ந்த காலிக் கோப்பைகள் சூன்யமானவை அல்ல. அவற்றில் நம் மகிழ்ச்சிகளையும் கொண்டாட்டங்களையும் துயரங்களையும் அவலங்களையும் இழிவுகளையும் கோபங்களையும் எள்ளலகளையும் அசிங்கங்களையும் அவரவர் வசதிக்கேற்ப இட்டு நிரப்புகிறோம்". ஒரு தொடர்பை என்னால் உணர முடிகிறது. வூடி ஆலனின் Midnight in Parisல், ஒரு கதாபாத்திரம் இப்படிச் சொல்லும் " Nostalgia is denial...denial of the painful present... ". குடிப்பவர்கள் கொடுக்கும் விளக்கங்களை வைத்துப் பார்க்கும் போது குடிக்கும் இது முற்றிலும் பொருந்தும் என்றே தோன்றுகிறது.
குடியால் ஒரு குடும்பமே சின்னாபின்னப்பட்டுப் போனதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்,பார்த்துக் கொண்டும் இருக்கிறேன். தினமும் மாலை வீடு திரும்பும் போது, ஒரு ஐந்து பேராவது எங்கள் ஏரியாவில் தள்ளாடாமல் நடந்ததில்லை. குடியின் இன்னொரு முகம் - பெண்கள் & குழந்தைகள் மீதான அழுத்தம்/வன்முறை. ஒருபுறம் அரசாங்கமே ஏகத்துக்கும் டாஸ்மாக் கடைகளை திறப்பதும், சற்றே வசதியுள்ளவர்கள் கொஞ்சம் தரமான மது வகைகளை குடிப்பதும், அவர்களுக்குரிய வெளி கிடைப்பதுமாய் இருக்க - வசதியற்ற லோயர்/மிடில் க்ளாஸ் குடிமக்களின் நிலைமை தான் மிகுந்த கவலைக்குரியது. மொத்தமாக குடிப்பவர்கள் என்று எடுத்துக் கொண்டாலும், புள்ளி விவரங்களின்படி குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்தில் தொடங்கி பல குற்றங்கள் வரை குடியும் ஒரு காரணி என்பதை மறுப்பதற்கில்லை. சிறுவயது முதல் குடி(பவர்கள்) மீது(ம்) ஒரு அசூயையே இருந்தது. ஆனால் அனுபவம் காரணமாக அதுமாறியது. நான் ஷார்ட் - சைட் காரணமாக கண்ணாடி அணிந்திருக்கிறேன். பவர் -2. கண்ணாடி அணிபவர்கள் அனைவரும் அதே பவரில் தான் கண்ணாடி அணிவார்கள்/அணிய வேண்டும் என்று நான் நினைப்பது (மொக்க உதாரணம் தான்) எவ்வளவு அபத்தமோ அதேபோன்று என் மதிப்பீடுகளை அடுத்தவரிடமும் எதிர்பார்ப்பது. அவரவர் வளர்ந்த சூழ்நிலை, வாழ்வியல் முறை, அனுபவங்கள் என்று பலவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டுமல்லவா....ஆனால், "ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து. பக்தி என்பது தனிச் சொத்து" என்பதில் எனக்கு உறுதியான பிடிப்புண்டு. பக்தி, குடி, இசங்கள் என்று எல்லாவற்றையும் பொதுவெளிக்கு கொண்டுவரும் போது என் மூக்கை தொடும் அளவுக்கு நீட்டாதீர்கள்.....நானும் உங்கள் மூக்கை தொட மாட்டேன் என்ற அளவில் என் "ஐடியாலஜி"யில் முன்னேறியிருக்கிறேன்.
நிற்க: வெறுமனே, குடிக்கும் போது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்களினால் தான் கவலை தீர்வது போன்றதொரு உணர்வும், அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது என்று சொல்லிவிட்டுச் செல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. சற்று விரிவாகப் பேசதல் நலம் பயக்கும் என்று நம்புகிறேன். இருப்பினும், இந்தப் பகுதி மந்தமாக (என் எழுத்து வன்மையின் காரணமாக ) தோன்றலாம்.
இந்தப் படங்கள் சிகரெட்டின் நிக்கோடின்காக கொடுக்கப்பட்டது. ஆனால், ஆல்கஹாலின் செயல்பாட்டை எளிதில் புரிந்து கொள்ள இதுவே ஏதுவாக இருக்கும் என்று தோன்றுகிறது. மூளையின் அகராதியில், Pleasure = டொபமைன் (ஒரு நியூரோட்ரான்ஸ்மிட்டர்) என்று அர்த்தம். (நான் எழுதிய பதிவு எனக்கே கை கொடுத்தது குறித்து மகிழ்ச்சி). இந்த டொபமைன் பல்வேறு காரணிகளால் தூண்டப்படலாம். பிடித்த இசை, செக்ஸ், உணவு, பஞ்சி ஜம்பிங் போன்ற பல இயற்கையான காரணிகள் உள்ளன.
அதுபோன்ற நிகழ்வுகளை சந்திக்கும் போது, மூளையில் இருக்கும் மஞ்சள் கலர் செல் ஒன்று, சில நியூரோட்ரான்ஸ்மிட்டர்களை வெளிவிடும் (மஞ்சள் துகள்கள்). சிவப்பு குள்ளர்களின் வேலை, அளவைமீறி அத்துகள்கள் வெளிவந்து விடாமல் பார்த்துக் கொள்வது. மஞ்சள் துணுக்குகள் அருகிலிருக்கும் டொபமைன் செல்லைத் தூண்டும். டொபமைன் சுரக்க ஆரம்பிக்கும். அது பக்கத்தில் இருக்கும் மற்றொரு பிங்க் நிற செல்லை அடையும் போது, நாம் "மகிழ்ச்சி, ஆனந்தம்,நிறைவை" உணர்கிறோம். சிவப்பு குள்ளர்கள் & டொபமைன் செல் ரெண்டும் ஒரு சில நிமிடங்களில் "போதும்....இத்தோடு நிறுத்திக் கொள்வோம்" என்றொரு உடன்படிக்கைக்கு வந்து டொபமைன் சுரப்பதை நிறுத்திவிடும். இதுதான் இயற்கையான காரணிகளால் ஏற்படும் நிகழ்வு.
இதுவே, நிகோடின் - ஆல்கஹால் - போதை வஸ்துக்களை உட்கொண்டபின் எவ்வாறு மாறுகிறது என்று பார்ப்போம்.
அதே மெக்கானிசம் தான். ஆனால், போதை வஸ்துக்கள் நேரடியாக டொபமைன் செல்களை தாக்கி - டொபமைனை சுரக்கச் செய்துவிடும். சிவப்பு குள்ளர்களின் பங்கே இதில் மிகக் கம்மி...விளைவு....இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று மூளை அந்த சுகத்தை விரும்ப ஆரம்பித்துவிடும். (விரிவான தகவல்களுக்கு)
இங்கு ஒரு சிறிய விளக்கத்தை பார்த்தாக வேண்டும். கோகைன் போன்ற போதை வஸ்துக்கள், நேரடியாக டொபமைன் செல்களை தாக்கும். ஆனால் ஆல்கஹாலில் பல்வேறு மூலக்கூறுகள் இருப்பதால் அது நேரடியாக டொபமைன் செல்களை (கவனிக்க: நேரடியாக) தாக்குகிறதா என்பது குறித்து இன்னமும் சரிவர தெரியவரவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால், டொபமைனை சுரக்கச் செய்வதில் ஆல்கஹாலின் பங்கு நிச்சயம் உண்டு. அதன் விளைவாகவே மிதமிஞ்சிய குடிக்குப் பிறகு ஏற்படும் மாற்றங்களை காணலாம். ரெண்டு பெக் அடிப்பவர்கள் தொடர்ந்து அதையே அடித்துக் கொண்டிருந்தால் மூளை அதற்கு பழகிவிடும். ஆனால், அவரே கொஞ்ச கொஞ்சாமாக அளவை கூட்ட ஆரம்பித்தால்......ஆரம்பித்தது பிரச்சனை. இதுபோன்ற விளைவுகள் தான் ஏற்படும்.
ஆல்கஹாலைப் போன்ற, ஏன் அதைவிட இயற்கையாகவே போதை தரும் வஸ்துக்களும் உள்ளன. உதாரணமாக இசையை எடுத்துக் கொள்வோம். மிகத் தெளிவாக இந்தக் கட்டுரையில் இசை எவ்வாறு டொபமைனை தூண்டுகிறது என்று விளக்கப்பட்டிருக்கிறது.
மேலும் மூளை - ஆல்கஹால் தொடர்பு பற்றிய தெரிந்துகொள்ள விழைவோர்:
நான் இதுவரை குடித்தது இல்லை. அதுபற்றிய நினைப்பே எழுந்ததில்லை. இதுவொரு க்ளிஷேத்தனமான வாக்கியமாகத் தோன்றினாலும், சிலருக்கு சில விஷயங்களில் ஆர்வம் இருக்காது. அதுபோல இதில் எனக்கு ஆர்வம் இல்லை. அவ்வளவே. ஆனால், நண்பர்கள் சிலர் - "ஜாலிக்கு" போன்ற வார்த்தைகளை என்னிடம் பயன்படுத்தும் போது, 'எனக்கு ஆர்வம் இல்லை' என்பதைச் சொல்லி புரிய வைக்க கஷ்டப்பட வேண்டும்/பட்டிருக்கிறேன். அப்போது கீழ்கண்ட விஷயங்களைக் கொண்டுதான் பேச வேண்டியிருக்கும்.
ஒருவர் (கொஞ்சமாக)குடித்துவிட்டு ஒரு இசையை கேட்கிறார் என்று வைத்துக் கொள்வோம். படு மோசமாக உள்ளது (அ) மிகச் சிறந்த இசை என்று ஒரு கருத்திற்கு வருகிறார். ஆனால், அது அவரது முழுத் திறனுடன் உணரந்தாரா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் மேலே சொன்னது போல, ஆல்கஹால் அவர் எடுக்கும் முடிவுகளில் நிச்சயம் ஆதிக்கம் செலுத்தும். அது எந்தளவுக்கு என்பது ஆட்களைப் பொறுத்தவரை வேறுபடலாம். ஆனால், ஆல்கஹால் இல்லாமல் அவர் எடுக்கும் முடிவுக்கும் உட்கொண்டபின் எடுக்கும் முடிவுக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு. அதுனால் ஒரு external stimuli என்னை அதிகாரப்படுத்துவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. I am & i will be the boss......அதீத மகிழ்ச்சியோ பயங்கர துக்கமோ, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளவே நான் விரும்புகிறேன். எல்லாம் அனுபவம் தானே.
ஒரு அக்மார்க் நாத்திகர் இருக்கிறார். அதே வீட்டில் ஆத்திகரும் இருக்கிறார். இருவரும் கடும் உழைப்பாளிகள். ஆத்திகர், கடவுளை நம்பினாலும் தனது கடும் உழைப்பின் மூலமே முன்னேற முடியும் என்பதில் உறுதியாய் இருக்கிறார். இருவருக்கும் ஒரே சமயத்தில் பயங்கர நஷ்டம் ஏற்படுகிறது. மனப்பாரம் குறைய, ஆத்திகர் அடிக்கடி கோவிலுக்குச் செல்கிறார். நாத்திகர் - அதே காரணத்தைக் கூறி குடிக்கிறார். இரண்டிற்கும் யாதொரு வேறுபாடும்எனக்குத் தெரியவில்லை. கண்டவர்கள் தெரியப்படுத்தலாம். ஒருவருக்கு குடி - மற்றொருவருக்கு கடவுள். மார்க்ஸ் - மதம் - போதை. உடல்நிலையை கருத்தில் கொண்டு கடவுளே பரவாயில்லை என்று நான் சொல்வேன்.
என்ன இருந்தாலும் குடி என்று வரும் போது..........இப்போது என் நண்பன் ஒருவனே, மகிழ்ச்சி - கொண்டாட்டம் என்பதற்காக குடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். வெயிலில் ஒருபோதும் இறங்காத ஆள் நான். இரண்டு மணி நேரம் ஒரு புகைப்படம் எடுக்க ஒரே இடத்தில நின்றிருக்கிறேன். அதுதான் எனக்கு மிகப் பெரிய கொண்டாட்டம். ஒரு மாநிலம் விட்டு இன்னொரு மாநிலம் ஒரு படத்தைக் காண ஆவலுடன் செல்வதுதான் சிலருக்கு மிகப் பெரிய கொண்டாட்டம். அதுபோல என் நண்பன் குடிப்பதைக் கொண்டாட்டமாகக் கருதலாம். ஆனால்.....தன்னையும், தன்னை சார்ந்திருப்பவர்களையும் பாதிக்காத வண்ணம் அதை அவனால் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறதா என்பதுதானே முக்கியம். அதை மட்டும் அவனுக்கு நண்பனாக நினைவுபடுத்தத் தவற மாட்டேன்.
ஆகவே, குடியை ஒரு "escape route" போன்று முன்வைக்கும் போது, மேலே கூறியது போல் எனக்கு பல மாறுபட்ட கருத்துகள் உள்ளன. ஆனால், அதே குடியை ஒரு வாழ்க்கை முறையாக இந்தப் புத்தகம் முன் நிறுத்துகிறது - கள். மொத்தம் ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம். பெரியாரின் 1963, "மது ஆதரவாளர்களின் மாநாட்டு'' உரையில் ஆரம்பித்து ரெங்கையா முருகன் - ஹரி சரவணன் ஆகியோரின் "ரைஸ்பீரும் வறுத்த அணிலும்" என்ற அட்டகாசமானதொரு பழங்குடி மக்களின் குடிப் பழக்கம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் முடிகிறது. ஏறக்குறைய அனைத்து கட்டுரைகளும் முன்வைக்கும் விஷயம் - கள்.
ஆதிகாலம் தொட்டு எவ்வாறு கள் நம்முடைய உணவின் ஒரு பகுதியாக இருந்தது, பெண்கள்/சிறார்கள் என்று அனைத்து தரப்பினரும் எவ்வாறு கள்ளை உண்டு களித்தனர் என்று மிகத்தெளிவாக சித்தரிக்கும் கட்டுரைகள் உள்ளன. நூற்றாண்டுகள் செல்லச் செல்ல கள்ளை/குடியைப் பற்றிய பார்வை, எவ்வாறு மாறத் தொடங்கியது போன்ற விவரணைகள் உள்ளன. குறிப்பாக, காலனிய ஆதிக்கத்தின் போது - குடி எப்படி மது "வகை"யாக மாறியது என்றும் குடிவரி போன்ற சமாச்சாரங்கள் எவ்வாறு நம் நாட்டிற்குள் வந்தது என்பது பற்றியுமான மிகநீண்டதொரு கட்டுரை தான் அ.மார்க்ஸினுடையது. இஸ்லாத்தில் குடிகலாச்சாரம் என்ற ஹெச்.ஜி.ரசூலின் கட்டுரையும், சங்க இலக்கியப் பெண்களின் மதுவுண்ணல் பற்றிய பெருமாள் முருகனின் கட்டுரையும் வேறொரு பரிமாணத்தில் குடியைப் பற்றிய நமது பார்வையை விஸ்தரிக்ககிறது. கலாச்சாரம், அது சார்ந்த ஒழுக்க மதிப்பீடுகள் என்ற தளத்தில் இருந்து மிகவிரிவாக ஜாமலனின் குடிகலாச்சாரமும் கலாச்சார குடிகளும் பேசுகிறது. புத்தகத்தில் எனக்கு மிகப்பிடித்த கட்டுரை(?), விக்ரமாதித்யனின் "வாழ்க்கை வாய்த்தது குடியும் வாய்த்தது கவிதையும் வாய்த்தது". ஒரு படத்தின் கச்சிதமான திரைக்கதை போன்ற சம்பவ விவரணைகள். குடி பற்றிய ஆராய்ச்சி, வரலாறு, அறிவியல் எல்லாவற்றையும் தாண்டி - இந்தக் கட்டுரை நிதர்சனத்தை போட்டுடைக்கிறது. ஏன் பல ஆட்களால் குடியை விட முடிவதில்லை, என்பதை போகிறபோக்கில் அணுகிவிட முடியாது. வாழ்வியல் சார்ந்த அநேக விஷயங்கள் உண்டு என்பதை இக்கட்டுரையில் கண்டுனரலாம். அதைப்போன்றே, பிரான்சிஸ் கிருபாவினது - உடன்படிக்கை புட்டி. இவை இரண்டுமே வாழ்க்கை + குடி = வாழ்க்கை என்ற, அனுபவரீதியலான கட்டுரைகள். நாஞ்சில் நாடனின் கட்டுரை தான் இந்தப் புத்தகத்தின் அடிநாதம். எவ்வாறு 'குடி'மகன்கள் நடத்தப்படுகின்றனர் என்பது குறித்த காரசாரமான கட்டுரை. அனைவருக்கும் தெரிந்த அவரது பகடி இதில் சரளமாக ஓடுகிறது. "விக்ரமாதித்யன் பாடல் பெற்றத் தலமான" ஒரு சிறு உதாரணம். கடைசியில் இருக்கும் "ரைஸ்பீரும் வறுத்த அணிலும்" மிகக் கவனமாக பரந்துபட்ட பயணங்களுக்குப் பிறகு - ஏறக்குறைய முழு இந்தியாவையும் சுற்றி இருக்கிறார்கள் - தொகுக்கப்பட்ட கட்டுரை.
புத்தகத்தில் பல கட்டுரையும் சொல்ல விழைவது, கள்ளை மறுபடியும் விற்க அனுமதிக்கும் விஷயம். ஆனால் அதை அரசாங்கம் சாத்தியப்படுத்துமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியே......டாஸ்மாக் குறித்து எனக்கு மிக நன்றாகவே தெரியும். ஏனென்றால், என் அப்பா Prohibition & Excise என்ற, வருவாய் துறையின் கீழ்வரும் துறையில் சிறுது காலம் அசிஸ்டன்ட் கமிஷனர் (கலால்) பணியாற்றியுள்ளார். மொலாசெஸில்(கரும்பில் இருந்து சீனி தயாரிக்கம் போது வரும் பொருள்) ஆரம்பித்து, புதிய பீர் ஒயின் தொழிற்சாலைகள் தொடங்க அனுமதி, மருத்துவமனைகளில் இருக்கும் பெத்தடின் முதற்கொண்டு - போதை லாகிரி வஸ்துக்களை கட்டுக்குள் வைத்திருக்கும் துறை அது. டாஸ்மாக் செயல்படும் விதம் குறித்து அடிக்கடி மேற்பார்வை செய்யப்பட வேண்டி இருக்கும். மேல நாஞ்சில் நாடன் சொல்லிய அனைத்தும் என் அப்பா சொல்லியிருக்கிறார். செக்கிங் போகும் போது உள்ளே நுழையவே முடியாது. குமட்டல் ஏற்படுத்தும் இடங்கள். டாஸ்மாக்கில் வேலை செய்யும் முதுகலை பட்டதாரிகள். ஒழுங்காக வராத மீதி சில்லறைகள். த்ரீ ஸ்டார் ஹோட்டல் பார்கள் என்றால் அதுவொரு மாதிரி.......டாஸ்மாக் பார் என்றால் அது ஒருமாதிரி. ஐயப்ப சீசனில், தனி டம்பளர். அம்புகுறி போட்டு - "டாஸ்மாக் போகும் வழி" என்று இருந்த அட்டைகள். குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் திறக்க அனுமதி மறுத்த போது எம்.எல்.எல்வே நேரடியாக வந்து சண்டை போட்டது.....இப்படி பல கதைகள் எனக்குப் பரிச்சயம்.
இதுவொருபுறம் இருக்க, டாஸ்மாக் விற்பனை - டார்கெட் குறித்து ஒரு இம்சை எழும். எப்படி எப்படி எல்லாம் அதிமாக விற்பனை செய்யலாம் என்று மெட்ராஸில் மீட்டிங் வேறு. ஒருவரது மாவட்டத்தில் குறைவாக விற்பனை ஆகியிருந்தால், மூத்த அதிகாரிகள் அனைவரின் முன்னாடியும் கடிந்து கொள்வதும் நடக்கும். இப்போது இந்த டார்கெட் விவகாரம் பூதாகரமாக வளர்ந்துள்ளது. இதைப் படித்துப் பாருங்கள். இந்தளவுக்கு வெறித்தனமாக நடவடிக்கை எடுக்கக் காரணம்......டாஸ்மாகினால் வரும் வருமானம். இதில் வருமானம் என்று அரசு கணக்கு காண்பிப்பது, விற்பனை ஆகும் சரக்குகளின் வரியில் இருந்து கிடைப்பது (இதை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்). 1983ல் வெறும் 180 கோடி அளவிற்கே வருவாய் ஈட்டும் நிறுவனமாக இருந்த டாஸ்மாக், முப்பது ஆண்டுகளில் 100 மடங்கு "லாபம்" தரும் நிறுவனமாக வளர்ந்துள்ளது(link). 2011 - 12 ஆம் ஆண்டில் டாஸ்மாக் விற்பனை 18,000 கோடி. நூறு மடங்கு. வேறு துறையில் இதுபோன்ற வளர்ச்சி எட்டப்பட்டுள்ளதா.....கல்வி, சுகாதாரம் போன்ற விஷயங்களுக்கு இதுபோன்ற "டார்கெட்" எல்லாம் வைத்து வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறோமா..... சராசரியாக ஆண்டுக்க 20% "வளர்ச்சி" இருக்கிறது. இந்த தமிழ்நாடு அரசின் வருவாய் அறிக்கையில் (பக்கம் 4) State Excise என்ற தலைப்பின் கீழ், எவ்வளவு வருவாய் வருகிறது என்று மிகத் தெளிவான தகவல்கள் உள்ளன. அதே அறிக்கைய்ல் பிற வரிகளின் மூலம் வரும் வருவாய்க்கும் இதற்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது....
இதில் மத்திய அரசுக்கும் வரியாக கணிசமான பங்கு போகும். இனிதான் மிக அதிர்ச்சிகரமான தகவல் வரப் போகிறது. 2015ஆம் ஆண்டில் - நமது நாட்டிற்கு மதுவால் ஏற்படப்போகும் மொத்த வருமானம், 1.4 லட்சம் கோடி. இப்போதைய வருவாய் 57 ஆயிரம் கோடி. ஆக கிட்டதட்ட மும்மடங்கு உயரப் போகிறுது. வருவாயில் மாநில அரசுகள் தங்களுக்கென்று எடுத்தது போக, கொடுப்பதே இவ்வளவு கோடி என்றால் - மாநிலங்களுக்கு எவ்வளவு வருவாய் வரும் ? இத்தகைய அள்ளி அள்ளி கொடுக்கும் ஒரு நிறுவனத்தை நமது அரசுகள் மூட முன்வருமா ? ஒரு பக்கம் மானியம், இலவசம் என்று மத்திய அரசு முதற்கொண்டு மாநில அரசுகள் வரை தரும் அனைத்தயும் மறுபக்கம் இப்படியாக டாஸ்மாக் கடைகளின் மூலம் ஈடுகட்டி, ஏன் அதற்கு மேலாகவே வசூலித்துவிடுகின்றன. எதில் முன்னேறுகிறோமோ இல்லையோ, உலகளவில் மது உற்பத்தி செய்யும் நாடுகளில் வெகுவேகமாக நாம் முன்னேறி வருகிறோம். பார்க்க
ஒரு IMFL(Indian Made Foreign Liquors)வகை க்வாட்டார் பிராந்தியின் விலை, 80ரூ என்று வைத்துக் கொள்வோம். அதற்கு நிஜமான அடக்கவிலை 10ரூ கூட பெறாது என்று சொல்கிறார்கள். கோகோ-கோலா இரண்டு ரூபாய்தான், கொள்ளை அடிக்கிறார்கள் என்று கூவும் ஆட்கள் கூட, குடி விஷயத்தில் இதனை மறந்து விடுகின்றனர். கிட்டத்தட்ட எட்டு மடங்கு லாபம் தரும் தொழில். வெளிநாட்டு வகை மது வகைகளை விட, IMFL வகை மதுவகைகள் தான் மிக அபாயகரமானது என்று பலரும் சொல்கிறார்கள். ஐம்பதாயிரம் ரூபாய் மாத வருமானம் உள்ளவர் வெளிநாட்டு மதுவகையை குடிப்பதற்கும் எட்டாயிரம் ரூபாய் வருமானம் உள்ள ஆள் IMFL குடிப்பதற்கும் ஏகத்துக்கும் வித்தியாசம் உண்டல்லவா..... தரமானத்தை தயார் செய்தால் ஒரே பாட்டிலுடன் நிறுத்தி விடுவார்கள் என்று கருதி, அரசே தரத்தை விரும்பாமல் கூட இருக்கலாம்.
இவ்வளவு அபரிமிதமாக காசை - எல்லா பொதுமக்களும் அனுபவிக்கக வரியாக வாரி வழங்கும் ஆட்களில், பெரும்பாலானவர்களின் நிலை பரிதாபகரமானது. அவர்கள் நடத்தப்படும் முறை அதைவிட கொடுமை. அதைத்தான் நாஞ்சில் நாடனின் கட்டுரை துல்லியாமாக விவரிக்கிறது. இதற்கு தீர்வாக கள்ளுக் கடைகளை - ஏதாவது அதிசயம் நடந்தாலன்றி - அரசாங்கம் திறந்தாலும்....இத்தகைய வருமானம் வரும்வழியை அரசாங்கம் விட்டுவிடுமா என்று தெரியவில்லை. இன்னொரு பக்கம், பயங்கர போதையை சுவைத்துவிட்டு, நம்மாட்களில் எத்துனை பேர் கள்ளுக்கு மாறுவார்கள் என்பதும் கேள்விக்குறியே. ஆனால், பெருமளவில் டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு ஒரு கட்டுக்குள் அதனை கொண்டுவந்தால்....இப்போது குடித்துக் கொண்டிருக்கும் பல பேர் கள்ளுக்கு மாறுவார்கள் என்ற நம்பிக்கையோட இதனை அணுகலாம். போதைக்காக குடிப்பது போக - சாக்கடையில் இறங்கி வேலை செய்யும் ஆட்கள் குடிப்பதற்கான காரணம் முற்றிலும் வேறு. அவர்களைப் போன்ற ஆட்களை அப்படியே வைத்துவிட்டு, குடிக்காதீர்கள் என்ற எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்களுக்கு அறிவுரை கூறுவது.
கள்ளைப்பற்றி பேசும் பொழுது....... 'அந்த காலத்தில்' என்றொரு பதம் சரளமாக புழங்குகிறது. அன்றிருந்த உணவுப் பழக்கங்கள், வாழ்க்கை முறை எல்லாம் தற்காலத்திற்க்கும் ஒத்து வருமா.....போன்ற பல கேள்விகளை இந்தப் புத்தகம் எழுப்பினாலும், பின்பக்க அட்டைக் குறிப்பில் இருப்பதைப் போல "குடி பற்றிய சமூகவியல் நோக்கில் ஒரு மீள் பார்வை தேவையானதாகவும், அவசியமானதாகவும் இருக்கின்ற இந்நேரத்தில் - அதைபற்றிய விவாதத்தை மேலெடுத்துச் செல்ல இந்தத் தொகுப்பு சாத்தியப்படுத்தியிருக்கிறது என்று நம்புகிறோம்". சாத்தியப்படுத்த வேண்டும் என்பதே என் ஆசையும்.
------------------------------------------
இந்தப் புத்தகத்தைப் பல மாதங்கள் முன்பு படித்தது. மதுபானக் கடை படத்தைப் பார்த்து விட்டு எழுதாலாம்.......எழுதலாம்.....என்று காத்திருந்து....படம் ரெண்டே நாள் தான் எங்கள் ஊரில் ஓடியது. நண்பர் ஒருவர், ரெண்டு மாதங்கள் முன்பு மாடர்ன் சினிமா - டிவிடி போட்டிருக்கிறார்கள் என்று சொன்னார். கடைசியில் டிவிடியே போன வாரம் தான் இங்கு வந்தது. நாஞ்சில் நாடனின் மேலே சொன்ன கட்டுரை தான் படத்திற்கு அடிப்படை. தவிர, இந்தப் புத்தகத்தை இயக்குனர் படித்திருப்பார் என்று எண்ணுகிறேன். கொஞ்சம் செயற்கைத்தனமான காட்சியமைப்புகள் வசனங்கள் என்று இருந்தாலும் (சுவரில் அக்கா மாலா....கூல்ட்ரிங்க்ஸ் செம), மிக முக்கியமானதொரு முயற்சி. மேலே நாம் பார்த்த அனைத்து கேள்விகளும் படத்திலும் வருகிறது. இந்தப் படத்தை தவறவிட வேண்டாம்.
எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமலேயே இந்தப் பதிவை ஆரம்பிக்கின்றேன். இதற்கு முன்னர், ப்ரூஸ் லீ பற்றிய பதிவில் எவ்வாறு ஆரம்பிப்பது என்று மிகக் குழப்பமாக இருந்ததுண்டு. இதுவரை நான் சந்தித்த ஆட்களில் ப்ரூஸ் லீ, மைக்கல் ஜாக்சன் பற்றி ஏதேனும் பேச்சு வந்தால்.......இருவரையும் தெரியாது என்று ஒருவர் கூட சொன்னதில்லை. இதுபோன்ற ஆட்களைப் பற்றியெல்லாம் ஆரம்பிக்கும் போது, எவ்வாறு ஆரம்பிப்பது என்ற குழுப்பம் ஏற்படுவது சகஜமே. அந்த குழப்பத்தை சாக்கிட்டு, வழக்கம் போல் சொந்தக் கதையில் இருந்து தொடங்குகிறேன்.
சிடி ப்ளேயர் என்ற உபகரணம், முதன்முதலில் எங்கள் வீட்டிற்கு வந்தது - 2003ல் தான். டிவி கூட, பரவலாக எல்லா பக்கமும் வந்த பிறகே வாங்கினோம். கேபிள், காலேஜ் சேர்ந்த பிறகே நிரந்தரமாக வீட்டில் இணைக்கப்பட்டது(ஓவரா க்ரிகெட் பாத்ததுனால லீவ்ல மட்டும் தான் கேபிள் குடுப்பாங்க...பல பேர் வீட்டிலும் அப்ப அதுதான் வழக்கம்னு நெனைக்கிறேன்). ஆக, சிடி ப்ளேயரும் சற்று தாமதமாகவே வாங்கப்பட்டது. ப்லிப்ஸ் சிடி ப்ளேயர். கூடவே Jackson's Greatest Hits என்ற வீடியோ சிடி. அதன் விலை 120 ரூ. ஒரிஜினலாக இருந்து இவ்ளோ விலை என்றால் பரவாயில்லை. அது பைரேட்டட் விசிடி(அப்பவே அப்பிடி). திண்டுக்கல்லில் பத்து வருடங்கள் முன்பு திருட்டு டிவிடி எல்லாம் அநியாய விலை.ஒரிஜினல் ஆங்கில சிடிகள் எல்லாம் அந்த ஊரில் மிகமிக அரிது(அப்படியான ஊரில் இருந்து ஒரு பதிவுலக ஆளுமை உருவாகி உள்ளது காலத்தின் கட்டாயம்). எனக்கு இந்த சிடி ப்ளேயர் இதிலெல்லாம் அப்போது ஆர்வம் இல்லை. வாங்கி வந்தது, என் அப்பா. கூடவே ஜாக்ஸனின் சிடியையும் கையேடு அவர்தான் வாங்கி வந்தார். இங்கு இன்னொன்றை சொல்லியாக வேண்டும், எந்தளவுக்கு ஜாக்ஸனின் பாடல்கள் எனக்கு பிடிக்குமோ அதைவிட அதிகமாக என் அப்பாவிற்கு பிடிக்கும். ACDCயை அதிக வால்யுமில் அலற விட்ட போது, என்னைவிட அதிகமாக ரசித்தவர் அவரே. இதை எதற்கு சொல்கிறேன் என்றால், தலைமுறை இடைவெளியின்றி ஜாக்ஸனின் இசையில் இருந்த துள்ளலுக்கு அனைவரும் அடிமை என்பது கவனிக்கப்பட வேண்டியது. தொடர்ந்து லூப்பில் அந்த விசிடியே ஓடிக்கொண்டிருந்தது. காலை, மாலை, இரவு என்று கணக்குவழக்கே இல்லை. அதற்கு முன்னர், கேபிள் இருந்த காலத்தில் அவ்வப்போது MTvயில் மட்டுமே ஜாக்ஸனை கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, நினைத்த நேரத்தில் கேட்க முடிந்ததே பெரிய விஷயமாகப்பட்டது. என் பாட்டி கூட, "அந்த பொண்ணு பாட்ட போட்டுட்டியா " என்று கேட்கும் அளவுக்கு சிடியை போட்டு தேய்தாகிவிட்டது. அதற்குப் பின்னர் MP3, இன்டர்நெட் என்று பாடல்களை தேடிக் கேட்கும் விதம் மாறியது.
அந்த ஜாக்ஸனின் Greatest Hit's சிடியில் ஏறக்குறைய அவரது எல்லா புகழ் பெற்ற பாடல்களும் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் உன்மத்தம் பிடிக்க வைக்கும் அளவிற்கு இருந்தாலும், மற்ற எல்லாவற்றில் இருந்தும் வித்தியாசமான அனுபவத்தை அழுத்தத்தை கொடுத்த பாடல் - Bad. ஜாக்சனின் குரலில் பெண்/சிறுவன் போன்றதொரு தன்மை இருக்கும். Thrillerல் கூட நல்ல "பையன்" வகையான பாடல்களை, அந்தக் குரலிலேயே பாடியிருப்பார். ஆனால் Bad பாடல் அதற்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு rugged வகையான பாடலாக இருப்பதைக் கவனிக்கலாம். அதே ஆல்பத்தில் இருந்த Dirty Dianaவும் பின்னாட்களில், They Don't Care about usசிலும் அந்த ஆக்ரோஷத்தைக் காணலாம்.
1982ல் த்ரில்லர் வெளியாகிறது(இதுபோன்ற விஷயங்களை மாமூலான வார்த்தைகளைப் போட்டுத் தான் எழுத முடியும்). த்ரில்லரைப் பொறுத்தவரை, இன்று வரை உலகளவில் அதிகம் விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் ஆல்பம் என்பதிலிருந்து - வாங்கிய விருதுகள் வரை, சாதனைகள் அன்றி வேறொன்றும் இல்லை. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், EPIC. கற்பனைக்கும் எட்டாத வெற்றியைக் கண்ட பின், ஜாக்ஸன் 1987ல் அடுத்த ஆல்பத்திற்கு தயாரான பொழுது – மிக தீர்க்கமானதொரு முடிவில் இருந்தார். த்ரில்லரை விட அதிகளவில் இந்த ஆல்பத்தை விற்கச் செய்வது. அறைகளின் கண்ணாடியில் 100 மில்லியன் என்று எழுதி வைத்திருந்தாராம். அதுதான் இலக்கு என்பதை நினைவுறுத்த. அப்படிப்பட்ட ஒரு ஆல்பம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி (1987 - 2012) சிலபல மாதங்கள் முன்பு, ஸ்பைக் லீயின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் அட்டகாசமானதொரு டாகுமென்டரி தான் Bad 25. ஆல்பத்தைப் பற்றி மட்டுமல்லாமல் ஜாக்ஸனைப் பற்றியும் பல விஷயங்களை மிக மிக சுவாரசியமாக பதிவு செய்துள்ளனர்.
கவர் போட்டோவில் ஆரம்பித்து ஏகப்பட்ட சுவாரசியங்கள் Bad ஆல்பத்தைப் பொறுத்தவரை நடந்தேறியுள்ளன. உதாரணமாக, முதலில் ஆல்பம் கவராக வேறொரு படம் தான் முடிவு செய்யப்பட்டதாம். ஆனால் அது வேண்டாமென்று முடிவு செய்யப்பட்டு, இந்த ஐகானிக் படம் தேர்வு செய்யப்பட்டது. மேலே சொன்னது போல, மென்மையான/சாக்லேட் பாய் என்று சொல்வோமே, அதுபோன்ற தனது இமேஜய் அவர் மாற்ற விரும்பியதற்கு பொருத்தமாக இருந்தது இந்தக் கவர் இமேஜ். அதற்குப் பிறகு, க்வின்சி ஜோன்ஸும்(தயாரிப்பாளர்) ஜாக்ஸனும் எடுத்த முடிவுதான், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. வெறும் வார்த்தை ஜாலத்திற்காக சொல்லவில்லை. முற்றிலும் உண்மை.
Bad பாடலுக்குப் பிறகு, வீடியோவை உருவாக்குவது என்று முடிவானது. ஜாக்ஸனின் த்ரில்லர் வீடியோ உலகம் முழுவதும் ஏற்படுத்திய அதிர்வு, பூகம்பத்தின் aftershock போல இன்றளவும் ஏதாவதொரு வடிவில் இருந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில், மலேசியாவில் யுவன் நிகழ்ச்சி நடந்ததை டிவியில் காண நேர்ந்தது. அதில், த்ரில்லர் ரெட் ஜாக்கட்டையே அவர் அணிந்திருந்தார். அப்படிப்பட்டதொரு வீடியோவிற்குப் பிறகு வரும் வீடியோ.......ஜாக்சனின் பரிணாமத்தை மாற்றிக் காட்டும் வகையில் இருக்க வேண்டும்.....ஒரு rawness இருக்க வேண்டும். பாடலில் இருக்கும் ஆக்ரோஷம் அத்தனையும் வீடியோவில் வெளிப்பட வேண்டும். இத்தனைக்கும் பொருத்தமான நபர் வேறு யாராக இருக்க முடியும்.......சாட்சாத் நமது மார்டின் ஸ்கார்சேஸி தான். மைக்கல் ஜாக்ஸன் இதனை வீடியோ என்றே அழைக்க விரும்பாமல், Short Film என்று அழைப்பதையே விரும்பினார் என்றால், ஸ்கார்சேஸி அதற்கும் ஒருபடி மேலே போய், ஸ்க்ரிப்ட் எழுத – Color of money படத்தின் ஸ்கிரிப்ட் ரைட்டரை அமர்த்தி, பல மாதங்கள் கொஞ்ச கொஞ்சமாக கான்செப்ட்டை செதுக்கி இந்த வீடியோவை உருவாகினார். இதற்கு மேல் இதுபற்றிய விஷயங்களை சொன்னால் சுவாரஸ்யம் போய்விடும். நீங்களே டாகுமென்டரியைப் பார்க்கும் பொழுது ஸ்கார்சேஸி + ஜாக்சனின் மேதைமை புரியும். இந்த வீடியோ ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது என்றால், ஒரே காரணம் - ஷாட்கள். ஒவ்வொன்றும் ஸ்கார்சேஸியின் ட்ரேட்மார்க் விஷயங்கள். கறுப்பு வெள்ளையில் ஆரம்பித்து, தெருவில் ஜாக்ஸன் போகும் போது வரும் லாங் ஷாட்கள் என்று.....முழுக்க முழக்க ஸ்கார்சேஸியன்தனமான வீடியோ. என்ன மாதிரியான க்ளோஸ்-அப் காட்சிகள்....இன்றும் நினைவில் உள்ளது. அதுவரை பாடல்களுக்கனா வீடியோவில் இதுபோன்றேல்லாம் க்ளோஸ் – அப் காட்சிகள் இருந்ததே இல்லை. பாடல் ஆரம்பிக்கும் போது, ஜாக்ஸன் கையை மேல உயர்த்தும் போது ஒரு ஷாட் வரும். அட்டகாசம். என்னால் மறக்க முடியாத ஓப்பனிங்களில் ஒன்று. தொடர்ந்து கால்கள், கைகள் என்று அதுவரை பாடல்களுக்கான வீடியோக்களுக்கு இருந்த மரபை உடைத்தது ஸ்கார்சேஸி தான். கேமேராவும் ஜாக்ஸனுடன் சேர்ந்து நடனம் புரிந்திருக்கும். ஜாக்ஸனின் டான்ஸ் மூவ்கள் உருவான விதம பற்றிய அட்டகாசமான தகவல்கள் இதில் உள்ளன. West Side Story மாதிரியான படங்களில் இருந்து எவ்வாறு மூவ்களை எடுத்தக் கொண்டார் என்பது குறித்தெல்லாம் பல விஷயங்கள் இதில் உள்ளன. உபரித் தகவல், ஸ்கார்சேஸி இந்த வீடியோவை டைரக்ட் செய்த பிறகு இப்பொழுதுதான், இந்த டாகுமெண்டரிக்கா இந்த வீடியோவைப் பார்க்கிறார். இந்த ”Short Film”மை எடிட் செய்தது.........வேறு யார்.......தெல்மா ஸ்கூமேக்கர் தான்.
பின் Liberian Girlல் ஆரம்பித்து Man in the Mirror வரையிலான Bad ஆல்பத்தின் அனைத்துப் பாடல்களும் எவ்வாறு உருவானது, அதில் நடந்த சுவாரசியங்கள், பின்னணித் தகவல்கள் என்று போகப்போக ஒரே ரகளை தான். உதாரணமாக, Smooth Criminal வீடியோவில் வரும் வொயிட் ஜாக்கட்டை மிக நேர்த்தியாக, இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற டிசைன் செய்தது ஜாக்ஸன் தான். Get my kenny shoes now.......அதே ஸ்மூத் க்ரிமினல் வீடியோ எதனைத் தழுவி எடுக்கப்பட்டது தெரியுமோ ?? நுவார் பதிவில் சிலாகித்து எழுதியிருந்த The Third Man தான் அந்தப் படம். நீண்ட நிழல்கள்.....நினைவிருக்கும் என்று நம்புகிறேன். "Annie are you ok ? " ஞாபகம் உள்ளதா ?? ஏகப்பட மாடுலேஷங்களில் ஸ்மூத் க்ரிமினல் பாடலில் வருமே.......அந்த Annie யார் தெரியுமோ ??? CPR முதலுதவி சிகிச்சைக்கு ஜாக்ஸன் பயன்படுத்திய பொம்மையின் பெயர் தான் ஆனி.........செம ட்ரிவியா அது.
உச்சஸ்தாயிலிலும் ஜாக்ஸனால் வெகு சுலபமாக பாட முடியும். ஆண்மை கலந்த குரல்.....ஸ்மூத் க்ரிமினால் மாதிரி. ஆனால் இந்த சிறுவன் மாதிரியான குரலையே அவர் விரும்பியிருக்கிறார். ஹார்ட் ராக்கிஷ் Dirty Diana, Leave me alone, They way u make me feel என்று எல்லா பாடல்களுக்கும் ஒரு குட்டி வரலாறே உள்ளது. அதேபோல், முதன்முதலில் விரலில் சொடுக்கு போடுகிறோம் இல்லையா........அதையும் ஒரு சின்ன இசைக் கோர்ப்பாகக் கருதி (ரஹ்மான் சைக்கிள் பெல்லை உபயோகித்தது ஞாபகம் வருகிறது) அதற்கு தனக்குத்தானே க்ரெடிட் கொடுத்தவர், ஜாக்ஸன் தான். Bad ஆல்பத்தில் பல சொடுக்கு "இசை" உண்டு.
மற்றொரு மறக்க முடியாத பாடல்....."Man in the mirror". ஜாக்ஸன் காந்தியைப் பற்றி விரும்பி படித்தவர். காந்தியின் "Be the Change you wish to see in the world" மேற்கோள் கூட இந்தப் பாடல் வரிகளை எழுத அவருக்கு உதவியிருக்கலாம் என்பது என் அனுமானம். மன்டேலாவை வெகுவாக மதித்தவர். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அந்த man in the mirror இடம் மனவிட்டு பேசினாலே தீர்க்க முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. Obviuosly, நாம செய்வதைத் தான் கண்ணாடி காட்டும். அடுத்தவர்களுக்கு எதையாவது செய்யும் முன் இதை ஒருமுறை யோசித்தால் நலம். நமக்கே ஒருநாள் அது திரும்பும்.
ஜாக்ஸனை அணுகுகிறவர்களில் ரெண்டு விதமான ஆட்களை நான் பார்த்திருக்கிறேன், அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்கும் ஜாக்ஸன் வெறியர்கள் நீங்கலாக. ஒன்று, இது வெறும் பாப் இசை தானே....இதில் அவர் ஏதோ செய்தார் என்ற அளவிலான ஆட்களும், கண்மூடித்தனமாக என்னமோ அவர் பிறக்கும் போதே ஜீனியசாக பிறந்து(ராமானுஜம், பிகாசோ போல) தானாகவே அவருக்கு எல்லாம் கைவந்தது என்று நினைப்பவர்கள். சிறுவர்களுக்குரிய எந்தவித சந்தோஷங்களும் கிடைக்காமல், கிடைத்தாலும் அதை அனுபவிக்க முடியாமல், மிகமிக கடுமையான ராணுவ ஒழுங்குடன் கூடிய பயிற்சியினாலயே அவர் ஜீனியஸாக மாறியவர். இந்த ஆல்பம் தாயாராகிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு நாளைக்கு அவர் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவாரம். இந்த ஆல்பம் என்று மட்டுமில்லாமல், ஏறக்குறைய எல்லா ஆல்பங்களிலும் அவரது கற்பனைக்கும் எட்டாத உழைப்பு உள்ளது. ப்ரூஸ் லீயிடமும் இந்த வெறித்தனமான உழைப்பைக் காணலாம். அதில் முக்கியமானது, மிகமிக ஒழுங்குடன் ஒரு முனிவர் தவம் செய்வதைப் போலத்தான இவர்களது உழைப்பு இருந்தது. செய்யும் வேலையின் மீது அவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வு, செய்நேர்த்தி. மேடை அமைப்பது முதல் இப்படிதான் இருக்க வேண்டும் என்று Industry Standards என்று சொல்வார்களே அதைச் செய்து காட்டியது அவர்தான். எவ்வளவு உயரத்திற்கு அவர் போயிருந்தாலும், கொடுங்கனவு போல் பல்வேறு பிரச்சனைகள் வாழ்க்கை முழுவதும் துரத்தி துரத்தி கடைசியில் அவரை சாகடித்தே விட்டது. விடுங்கள். அதைப்பற்றி பேச ஆரம்பித்தால் போய்க் கொண்டேயிருக்கும். மேல சொன்ன ரெண்டு விதமான ஆட்களும், ஏன் மூன்றாவது வகை ஆட்களும் கூட - இந்த டாகுமென்டரியைப் பார்த்தால், அவரின் மீதான மதிப்பு+மலைப்பு நிச்சயம் இன்னும் அதிகரிக்கும். பதிவெழுதுவது முதற்கொண்டு, செய்யும் வேலையை இன்னும் ரசித்து செய்ய வைக்கும்/வைத்தது.
இந்த டாகுமென்டரி அட்டகாசமாக வர இன்னொரு காரணம், ஸ்பைக் லீ. எனக்குப் பிடித்த இயக்குனர்களில் ஒருவர்(யார தான் நா அப்பிடி சொல்லல). ஜாக்ஸனின் ரசிகர் என்பதை விட, வெறியர் என்று சொல்லலாம். மால்காம் X, 25th Hour போன்றவற்றின் இயக்குனர். ஆப்ரிக்க-அமெரிக்கர்களுக்காக தொடர்ந்து பல்வேறு விஷயங்களை செய்து வருபவர். சில சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு வார்த்தைகளை விட்டு சர்ச்சைக்குள்ளாவார். இவருக்கும் க்வின்டினுக்கும் ஏழாம் பொருத்தம். ஜாங்கோ வரை அது தொடர்கிறது. இவரின் படங்களை, Spike lee presents, Spike Lee's film என்றெல்லாம் மாமூலாக ஆரம்பிக்க மாட்டார்...... A Spike Lee's Joint. அவ்ளோதான். ஆப்ரிக்க - அமெரிக்க இளம் தலைமுறையினர் மீதான இவரின் positive influence மிக அதிகம். அதற்கு மிகச் சிறந்த உதாரணம், போன வாரம் வெளிவந்த இந்தப் பாடல் தான்.
The problem with Hollywood, is the audience expects to get the answers like a pill. They expect to know not just whodunnit, but the motives of the characters, the how and why. Real life is not like that. Even our closest friend – we don't know what he really thinks. In films we want more than in real life, everything being made clear. That means this kind of cinema is a lie. I cannot make cinema that way
-Nuri Bilge Ceylan
சமீபத்தில் இன்டர்வியு நிமித்தமாக டெராடூன் செல்ல வேண்டியிருந்தது. முற்றிலும் புதிய சூழல். அதைச் சமாளிப்பதொன்றும் பெரிய விஷயமாகப்படவில்லை(நாடு விட்டு நாடே மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்). ஆனால், சமாளிக்க மிகக்கடினமாக இருந்தது - குளிர்....அதுவும் மைனஸில். வெயிலும் வெயில் சார்ந்த இடமுமாகவே இருந்துவிட்டு, சட்டென்று அந்தக் குளிரை தாக்குப்பிடிப்பது சிரமமாகவே இருந்தது. ஸ்டேஷனில் இறங்கி கொஞ்ச நேரம் வரை அக்குளிர் உறைக்கவில்லை. நேரம் செல்லச்செல்ல தனது ஆக்கிரமிப்பை என்மீது முழுமையாக செலுத்தத் தொடங்கியது. வெயிலைக் கூட ஒருவாறு சமாளித்து விடலாம். ஆனால், இந்தக் குளிர்......இரவு நேரத்தில், போர்வை சிறியது என்பதால் கால்களின் வழியாகக் உடல் முழுவதும் சர்வ அலட்சியமாக விளையாடத் தொடங்கியது. அங்கிருந்த நாட்களில் எங்கு சென்றாலும் குளிர் பற்றிய நினைப்பே முதலில் வந்தது. குளிரின் பிரதான குணங்களில் ஒன்று,உஷ்ணப் பிரேதேசத்தை சேர்ந்தவர்களாக இருந்தால் - என்னதான் அதற்குரிய ஆயத்தங்கள் செய்திருந்தாலும், அதன் நினைப்பை நம்மிடமிருந்து அகற்ற முடியாது. எந்த வேளையில் ஈடுபட்டிருந்தாலும் ஒரு ஓரத்தில் அதன் நினைப்பு இருந்தே தீரும். நான் உணர்ந்த வரை, குளிர் - மழை எல்லாம் ஒரு வகையான கிரியாஊக்கிகள். சட்டென்று பல நினைவுகளை கிளப்பிவிடும் வல்லமை பொருந்தியவைகள்.
ஊருக்கு போயிருந்தேன்; தாங்கமுடியாத அளவிற்கு செமத்தியான குளிர், என்று ஒற்றை வரியில் முடித்திருக்க வேண்டிய விஷயத்தை, romanticize செய்து நீட்டி முழுக்கி ஒரு பத்தியாக சொல்வேன் என்று நானே நினைத்ததில்லை. ஒரே ஒரு காரணம், இந்தப் படத்தின் தாக்கம். பார்த்து முடித்த கையேடு இதனை தட்டச்ச ஆரம்பித்துவிட்டேன். துருக்கியின் அனடொலியா என்ற நகரமும் அதன் வளைந்து நெளிந்த மலைப்பாதைகளும் படர்ந்த வெளிகளும் நாய்களும் அந்தச் சூழலில் உலாவிக் கொண்டிருந்த மனிதர்களும், அந்தக் குளிரைப் போல முழுவதுமாக என்னை ஆட்கொண்டு விட்டனர். சட்டென்று எனக்கு மேற்கூறிய அனுபவமே ஞாபகத்திற்கு வந்தது. வேறு எதனுடனும் என்னால் தொடர்புபடுத்த இயலவில்லை. உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இதனை எழுதுவது எனக்கே நன்றாகத் தெரிகிறது. அதனை மறைக்க விரும்பவில்லை. படத்தின் தாக்கம் அவ்வளவு வீரியமானது. இவ்வளவு அழுத்தமானதொரு படத்தை சமீபத்தில் நான் பார்த்திருக்கவில்லை.
மூவர். நண்பர்களாகவோ, உறவினர்களாகவோ இருக்கலாம். வெகு இயல்பாக சிரித்தபடி உணவருந்திக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு கொலை. அதைத் தானே செய்ததாக ஒப்புக் கொண்ட ஒரு மனிதனையும் அவனுக்குத் துணையாக இருந்த மற்றொருவனையும் - கொலை செய்யப்பட இடத்தையும் பிணத்தையும் அடையாளம் காண்பிக்க போலீஸ் ஆட்களும்,அரசாங்க அதிகாரியும்,ஒரு மருத்துவரும், குழி தோண்டும் ஆட்களும் அந்தி சாயும் பொழுதில் அனடொலியா நகரத்திற்கு வெளியே இருக்கும் மலைப்பாதைகளில் சென்று தேடத் தொடங்குகின்றனர் என்பதாக ஆரம்பிக்கிறது கதை. இருட்டத் தொடங்கியதால், வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் அவசரத்தில் அதிகாரிகள் இருக்கின்றனர். இங்குதான் ஒரு பெரிய சிக்கல் தொடங்குகிறது. கொன்று புதைத்த ஆளுக்கு எந்த இடத்தில் புதைத்தோம் என்று தெரியவில்லை. சொல்லும் இடத்தில் எல்லாம் வண்டியை நிறுத்தி, அதன் முகப்பு விளக்கின் வெளிச்சத்தில் தேட வேண்டிய நிலைமை. நேரம் செல்லச் செல்லச் உயர்அதிகாரிகள் பொறுமை இழந்து, அந்த வெறுப்பைக் கைதிகளிடம் காட்ட ஆரம்பிக்கின்றார். பல மணிநேரம் செலவழித்தும் ஒன்றும் பயனளிக்காததால், பக்கத்து ஊரின் மேயர் வீட்டில் அன்றிரவைக் கழிப்பது என்று முடிவெடுக்கின்றனர். அனைவரும் உணவருந்திக் கொண்டிருக்கும் போது, பட்டென்று மின்சாரம் தடைபடுகிறது. மேயர் தன் மகளிடம் விளக்கு கொண்டு வரச் சொல்ல.......அவரது மகளைப் பார்த்த மாத்திரத்தில், கொலைகாரன் மூத்த காவலதிகாரியிடம் அனைத்தையும் ஒப்புக் கொள்கிறான். இங்கு இன்னொரு உண்மையும் தெரிய வருகிறது. பொழுது புலர்ந்த சிறிது நேரத்தில், மறுபடியும் பிணத்தைத் தேடிச் செல்கின்றனர். இந்தமுறை அவர்களை சரியான இடத்திற்கே கொலையாளி(?) அழைத்துச் செல்ல......ஒருவழியாக பிணத்தைக் கண்டுபிடிக்கின்றனர். பிணத்தைத் தூக்க Bag போன்ற விஷயங்களை ஆட்கள் எடுத்துவர மறந்ததால், வேறு வழியில்லாமல் வண்டியின் பின்புறம் அப்படியே பிணத்தை சரித்து வைத்தபடி - ஒரு காவலாளி மறக்காமல் பப்பாளி பழங்களை பிணத்தின் அருகிலேயே வைத்துக் கொள்ள - அனைவரும் ஊருக்கு திரும்புகின்றனர். இறந்தவனின் மனைவி தன் மகனுடன் அங்கு வந்து பிணத்தை அடையாளம் காட்ட, பிரேதப் பரிசோதனை செய்யப்பட, எலும்புகள் உடையும், பிரேதம் அறுபடும் சத்தமும் பின்னணி "இசை"யாக ஒலிக்க படம் முடிவடைகிறது.
சினிமாவை பொறுத்தவரை Exposition என்றொரு பதம் உண்டு. இந்த கதாபாத்திரம்/சம்பவத்திற்கு, பின்னணியில் சில காரணங்கள் உள்ளன, அந்தக் காரணங்களால்தான் இதுபோன்றதொரு விஷயம் நடந்தது என்று பார்வையாளருக்கு ஒரு விளக்கம் கூறுவதைப் போன்ற விஷயத்திற்குப் பெயர் தான் Exposition. ஆனால் நிஜ வாழ்க்கையில் இதுபோன்றதொரு விளக்கம் நம் யாருக்கும் முன்னதாகவே கிடைப்பதில்லை, தெரிவதில்லை. சமீபத்தில் டெல்லியில் நடந்த வன்கொடுமையை ஒட்டி, ஒரு ஆங்கில நியூஸ் சேனலில் (NDTV என்று ஞாபகம்) ஒரு குற்றவாளியின் குடியிருப்பு பகுதிக்குச் சென்று அந்நபரின் பக்கத்து வீட்டு ஆட்களிடம் பேட்டி கண்டனர். அனைவரும் சொன்னது, அந்தப் பையன் இருக்கும் இடமே தெரியாது. கடும் உழைப்பாளி. பெற்றோரை மதிக்கும் ஆள்.......இதுபோன்று தான் (கேமரா, அனுமதியே இல்லாமல், படாரென்று அவர்களது வீட்டிற்குள் நுழைந்தது வேறு விஷயம்). இதுபோன்றதொரு பையன் இப்படியான காரியம் செய்வான் என்று யார் எதிர்பார்த்திருப்பார்கள் ? இவ்வளவு ஏன், நாம் நெருங்கிப் பழகும் நண்பர்கள் கூட சில சமயம் புரிந்து கொள்ளவே முடியாத அளவிற்கு மனதில் ஒன்றை வைத்துப் பேசுவார்கள். ஊர்வன,பறப்பன என்று அனைத்து உயிரினங்களும் திடீரென்று புரிந்து கொள்ள முடியாத சில விஷயங்களைச் செய்யும். பல உதாரணங்கள் உண்டு.விஞ்ஞானிகளால் இன்றுவரை அவற்றிக்கு விடையளிக்க முடியவில்லை. மனித மனமும் இதற்கு விதிவிலக்கல்ல. அச்சமயங்களில் அதற்குரிய விளக்கத்தை யாராலும் தர இயலாது. சமீபத்தில் இந்தச் செய்தியை நம்மில் பல பேர் படித்திருப்போம். இதற்கு 90 % காரணம், குடியாக இருந்தாலும் - கொலை செய்யும் அளவிற்கு அவர்கள் மனதில் என்ன இருந்தது ? முன்விரோதமா ? அல்லது விபத்தா ? எப்படி அந்த வெறி வந்தது......தெரியாது. இதனடிப்படையிலேயே, நூரி பில்கே ஜெலான் இக்கதையை முன்னகர்த்துகிறார்.
படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒருவிதமான பிரச்சனை, நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களைப் போல. அவர்களது ஒருநாள் நிகழ்வை மிகத் துல்லியமாக ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வே இந்தப் படம். பிணத்தைத் தேடிக் கொண்டிருக்கும் போது, அருகிலிருக்கும் ஆப்பிள் மரத்திலிருந்து பழங்களை எடுத்துக் கொண்டிருக்கும் காவலாளியில் தொடங்கி கடைசி கட்டத்தில், பிரேதப் பரிசோதனை செய்யும் ஆள்(படத்திலேயே மிகப் பிடித்தது இந்தக் கதாபாத்திரம் தான்) - பிணத்தை வைத்துக் கொண்டு சாவகாசமாக, எலக்ட்ரிக் ரம்பம் இருந்திருந்தால் சுலபமாக,வேகமாக அறுக்கலாம் என்று புகார் பட்டியல் வாசிப்பது வரை, அவரவர் கவலை அவரவருக்கு. படம் முழுமைக்கும் ரெண்டு பெண்களே காட்டப்பட்டாலும், படம் நெடுகிலும் பெண்கள் இருப்பதைப் போன்றதொரு உணர்வு. மற்றவர்களிடம் எரிந்துவிழும் காவல் அதிகாரி, மனைவியிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தவுடன் பம்முவதும், அரசாங்க அதிகாரி ஒரு பெண்ணைப்பற்றிக் கூறும் கதையும்(இது மிக முக்கியமானது), விவாகரத்தான மருத்துவரின் மனைவி என்று முகம் தெரியா பெண்களின் தாக்கத்தை படம் நெடுகிலும் உணரலாம். கூட வந்தவன் நான்தான் கொலை செய்தேன் என்று சொல்ல வாயெடுக்கும் போது, சும்மா இரு என்று அவனை அதட்டிவிட்டு, நான்தான் கொலை செய்தேன் என்று ஏன் இன்னொரு ஆள் ஒப்புக் கொள்ள வேண்டும் ? திரும்பத் திரும்ப இறந்த போன ஒரு பெண்ணின் கதையை பற்றி அரசாங்க அதிகாரி ஏன் கிளற வேண்டும் ? புதைக்கப்படும் போது உயிருடன் இருந்தான் என்று தெரிய வந்ததை ஏன் மருத்துவர் மறைக்கக் வேண்டும் ? மருத்துவமனை வாசலில், உள்ளே கணவன் பிணமாக இருக்கும் போது, வெளியே அவனது மனைவி காலை ஆட்டிய வண்ணம் சாவதானமாக உட்காந்திருந்ததன் காரணம் என்ன ? மீண்டும் ஒருமுறை மேலே இருக்கும் ஜெலானின் வார்த்தைகளை படித்துவிட்டு, படத்தைப் பாருங்கள்.
இவ்வளவு அளப்பரிய தாக்கத்தை இப்படம் ஏற்படுத்த மற்றொரு காரணம், இதன் ஒளிப்பதிவு. வார்த்தைகளே இல்லை. பொருட்செலவு செய்து எடுக்கப்படும் ஹாலிவுட் படங்கள் எல்லாம் இந்த ஒளிப்பதிவின் அருகில் வரவே முடியாது. "ஹாலிவுட் தரத்தை" விடுத்து நமது படங்கள் இதுபோன்ற தரத்தை நோக்கி நகர்ந்தால் நலம். கதாபாத்திரங்களின் உளவியலோடு, அந்த சூழ்நிலையை நாம் உள்வாங்குவதற்குரிய வெளியை (Space) போதிய அளவுக்கு நம்மூர் படங்கள் மட்டுமல்ல, நமது ஆதர்ஷமான ஹாலிவுட் படங்கள் கூடத் தருவதில்லை. இவனுக்கு இப்படி நடந்தது -> அதனால் இப்படி செய்தான் -> அதனால் இது நடந்தது..........அதோடு படம் முடிந்தது.
இதுபோன்ற படங்களை அடுத்த தளத்திற்கு எவ்வாறு ஒளிப்பதிவு எடுத்துச் செல்கிறது என்பதனை இதில் வரும் க்ளோஸ்-அப் காட்சிகளாகட்டும், மிட்/லாங் ஷாட்களாகட்டும் வெகு இயல்பாக பார்வையாளர்கள் உணரலாம். கார்களின் முகப்பு விளக்கு ஒளியே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டியது, ஒளிப்பதிவு எங்கேயும் துருத்திக்கொண்டு தெரியாமல், நம்மை கதையுடன் ஐக்கியப்படுத்தும் ஊடகமாக மட்டுமே திகழ்கிறது. படத்தை மீறி இசையாகட்டும், ஒளிப்பதிவாகட்டும் - துருத்திக் கொண்டு தெரிவதை எவ்வாறு எடுத்துக் கொள்வது என்று புரியாமல் விழிக்கும் பல திரைப்பட ரசிகர்களில் நானும் ஒருவன். ஒளிப்பதிவு நேர்த்தியுடன் வர இன்னொரு காரணாம், ஜெலான் - ஓவியராக வரத் திட்டமிட்டு - பின் புகைப்படக் கலைஞராக மாறியதாகவும் இருக்கலாம்.
உலகின் மிகச் சிறந்த பல இயக்குனர்களைப் போல, நூரி பில்கே ஜெலான் இலக்கிய நாட்டம் உள்ளவர் (there u go.....).
"I don't like puzzles. But in real life, we have to deal with half of reality, and we have the habit, or the reflex, of guessing the rest – because we're always lying to each other; everybody's protecting himself. If the audience doesn't join in the process, it's impossible to make it deeper, like literature."
சில இயக்குனர்கள் வாழ்கையின், மனிதர்களின் மீதான தங்களது மதிப்பீடுகளை பார்வையை எவ்வித சமரசமும் இன்றி அப்படியே திரையில் பிரதிபலிக்க விரும்புவார்கள். தாங்கள் எந்த நிலையில் வாழ்வை அணுகுகிறார்களோ அத்தளத்திற்கே பார்வையாளர்களும் வர வேண்டும் என்று விரும்புவார்கள். "இதோ இந்த உச்சியின் மீது நின்று பார்....கீழிருக்கும் ஊர் அட்டகாசமாகத் தெரியும்" என்று நம்மை அந்த உச்சிக்கு அழைத்து செல்ல விருப்பப்படுவார்கள். தர்கொவ்ஸ்கி, பெர்க்மன், பெல்லா டார் போன்ற ஆட்களைப் போல. ஜெலானும் அந்த வகையிலயே வருகிறார். என்னதான் உச்சிக்கு நாம் சென்றாலும் நம் கண்களின் வழியாகவே தான் நாம் அனைத்தையும் பார்க்க வேண்டியிருக்கும். நமக்கான கோணங்களை நாம் தான் உருவாக்கி கொள்ள வேண்டும். இலக்கியத்தைப் போல. ஏன் இந்த கதாபாத்திரங்கள் இவ்வாறு பேசுகின்றன, மிக நீண்ட மௌனங்கள் எதற்கு, வெறுமையான பார்வைகள் எதற்கு என்றெல்லாம் யோசித்தோமானால் கதாபாத்திரங்களின் மனநிலையை நம்மால் புரிந்து கொள்ள முடியும். இந்தப் படத்தில் மேயரின் வீட்டில் அனைவரும் உணவருந்தும் போது, கொலையாளி மேயரின் மகளைப் பார்த்து அழத் தொடங்குவான். அது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தாலும், ஜெலானுக்கு அக்காட்சி எவ்வாறு தோன்றியது ?
"Definitely. In The Brothers Karamazov, you remember, Dmitri wakes up and realizes somebody has put a pillow under his head. That makes him confess to a murder he hasn't committed "
மேலும் ஜெலான், ஆன்டன் செகாவின் தீவிர ரசிகர். அவரே அதற்கான விளக்கத்தையும் கூறுகிறார்.
"Yes, actually in all my films I believe there is an element of Chekhov, because Chekhov wrote so many stories. He had stories about almost every situation, and I love them very much. So maybe he's influenced the way I look at life. Life follows Chekhov for me, in a way. After reading Chekhov, you begin to see the same kind of situations in life. And in the script writing stage, I remember the stories somehow, so yes, Chekhov is here "
இங்கு இன்னொரு கேள்வி இயல்பாகவே வரலாம். இயக்குனர் இலக்கிய பிடிப்புள்ளவர், செகாவின் ரசிகர் என்ற தகவல்களை எல்லாம் தெரிந்துகொண்டு பார்த்தால் மட்டுமே படத்தை மேலதிகமாக ரசிக்க முடியமா.......என்ற கேள்வி வரலாம். சினிமா குறித்தான தளத்தில் ஒரு கட்டுரையை படித்துக் கொண்டிருந்த பொழுது, கீழ இருக்கும் ட்ரைலர் அந்தத் தளத்தில் இருந்தது. படத்தின் பெயர் ஆர்வத்தை தூண்டவே, ட்ரைலரை பார்த்தேன். அவ்வளவுதான். டவுன்லோட் செய்ய ஆரம்பித்துவிட்டேன். டவுன்லோட் முடிந்து தான் இது துருக்கி மொழிப் படம் என்றே தெரியும். படம் பிடித்துப்போய், - வழக்கம் போல - இயக்குனரைப் பற்றித் தேடி, அவரது பேட்டிகளை பார்த்து/படித்து..........இப்போது மனதுக்கு பிடித்த இயக்குனராக ஆகி விட்டார். அவரது மற்ற படங்களையும் டவுன்லோட் செய்து பார்க்க ஆரம்பித்தாகி விட்டது. ஆனால், அடுத்த முறை அவரது படத்தை பார்க்கும் போது - அவரது படத்தை தாண்டிய விஷயங்கள், இலக்கிய ரசனைகள் குறித்தெல்லாம் நாம் பார்த்தால் - அப்படத்தின் மேல் ஒருவித முன்முடிவும், இலக்கிய ரசிகர் இவரு..."இன்ன காரணத்திற்காக வெச்சிருப்பாரோ" என்ற அனுமானமும் நிச்சயம் எழ வாய்ப்புண்டு. அதை மீறி படம் பார்ப்பது அவரவர் கையில் தான் இருக்கிறது.
நான் முதன்முதலில் பார்க்கும் துருக்கி மொழிப் படம் இதுதான். இதனால் ஏற்பட்ட மற்றோரு நல்ல விஷயம், Semih Kaplanoğlu என்ற மற்றோரு துருக்கி இயக்குனரைப் பற்றியும் அவரது The Yusuf Trilogy பற்றித் தெரிந்து கொண்டதுமே ஆகும். இதுவே சிலபல மாதங்கள் முன்பு என்றால், நண்பர்களுக்கு இந்தப் படத்தைப் பாருங்கள் என்று மெயில்,மெசேஜ் செய்திருப்பேன் (அதுகூட பரவாயில்லை, எஸ்எம்எஸ் எல்லாம் அனுப்பிய காலம் உண்டு). அந்த பித்துக்குளித்தனத்தை இப்போது விட்டாயிற்று. ஒன்றே ஒன்று மட்டும், இந்தப் படத்தைப் பார்க்காமல் இருந்திருந்தால், என் வாழ்வில் ஒரு நல்ல படைப்பை சர்வநிச்சயமாக இழந்திருப்பேன்.
இணையத்தில் அவரது இரண்டு படங்கள் இலவசமாகவே கிடைக்கின்றன. இந்தப் படம் உட்பட, ஏனைய படங்களும் டொரன்ட்ல் உள்ளது.
ரோஜா படம் வெளியானபொழுது எனக்கு ஆறு வயது. அதனால் அந்தப் படத்தின் இசை குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஒளிப்பதிவு நினைவில் உள்ளது. பாடல்கள் கேட்க அருமையாக இருந்தது. அவ்வளவே தான் ஞாபகம் உள்ளது. அதேபோன்று தான், அதற்கடுத்த ஆண்டில் வெளிவந்த திருடா திருடா. ஒளிப்பதிவும் - அதிரடியான இசையும் ஞாபகம் உள்ளது. ஊன்றிக் கேட்கும் பழக்கம் எல்லாம் இல்லாத வயது (ஆறு ஏழு வயதிலயே அவ்வாறு கேட்கும் அளவிற்கெல்லாம் - மணிரத்னம் படங்களில் வரும் "சிறுவர்கள்" தவிர்த்து - யாராவது சிறுவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே). 1998. ஏதோ ஒரு விடுமுறை தினம் என்று நினைக்கிறேன். இருங்கள், விக்கியைப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது......எஸ்....இந்தியாவின் சுதந்திரதினம். அதுவும் ஐம்பதாவது பொன்விழா கொண்டாட்டம். DDயில் சுதந்திரதின சிறப்பு நிகழ்ச்சியில், ஒரு படம் குறித்து அதன் இயக்குனர், வசனகர்த்தா, நடிகர்( திக்கித்திணறிய தமிழில் ஒரு ஹிந்தி நடிகர்) என்று அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், வழக்கத்துக்கு மாறாக சவ்ண்ட் இஞ்சினியர் ஒருவரும் பேசினார். H.ஸ்ரீதர். ஒரு பாடலைச் சொல்லி, கண்ணை மூடிக் கேட்டால் அப்படியே ரயிலில் பிரயாணம் செய்வதைப் போன்றதொரு உணர்வைத் தரும் என்று சிலாகித்துக்கொண்டிருந்தார். என்ன பாடல் என்று சொல்லத்தான் வேண்டுமா ?
படமும் வெளியானது. எனது இசை கேட்கும் வழக்கத்தையே முற்றிலுமாக மாற்றி அமைத்த படமாக அந்தப் படம் அமைந்தது. 13 வயது என்பதால் ஓரளவிற்கு(அட...அதைவிட இது நல்லாயிருக்கே....என்று யோசிக்கும்) அறிவுதான் அப்பொழுது இருந்தது என்றாலும், அன்று கேட்கத் தொடங்கிய வெவ்வேறு வகையான பாடல்கள் இன்றளவும் எனக்கு சலிப்பைத் தருவதில்லை. ரஹ்மான் இசையில் லேயர்ஸ், orchestration - என்பதெல்லாம் மிகமிக நுணுக்கமாக தனித்துவமாக கையாளப்படுகிறது. உயிரே படத்தில், என்னுயிரே பாடலில் இந்த இடத்தில வரும் இசை, என்ன கருவி என்று தெரியவில்லை.....அப்படியே தூண்டில் மாதிரி என்னை இழுத்துக்கொண்டே இருந்தது. மேலும், இந்தப் பாடலில் ஆரம்பத்திலிருந்து கிடார் மூன்றுவித ஸ்கேலில் - மூன்று வெவ்வேறு லேயர்களில் ஒலிப்பதைக் கேட்கலாம். சரியாக சொல்ல அளவிற்கு டெக்னிகல் அறிவு கிடையாது. நீங்கள் கேட்பதே நலம்.
தைய தையா, என்னுயிரே இந்து ரெண்டு பாடல்களையும் விட மிகமிக - ஏனென்றே தெரியாமல் - வெறித்தனமாக பிடித்த இன்னொரு பாடல் - சந்தோஷக் கண்ணீரே..... முதன்முறையாக அந்தப் பாடலைக் கேட்கும் போது இருந்த இனம்புரியாத சந்தோசத்திற்கு ஈடுயிணை எதுவும் இல்லை. ஒருசில ஆண்டுகள் முன்னர், அந்தப் படப்பாடல்களின் பின்னணி குறித்து - சுஃபி வகையான இசை என்ற அளவில் மட்டுமே தெரிந்திருந்து. ஹிந்தியில் பலமுறை கேட்டிருக்கிறேன். வார்த்தைகளில் ஒரு லாவகம் இருந்தது என்று மட்டும் உரைத்தது. சென்ற வருடம். NDTVயின் ரஹ்மானுடனான பேட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் தெரிந்துகொண்ட பல விஷயங்களில் தில் சே பாடல்களைப் பற்றிய விஷயங்களும் அடங்கும். அந்தப் பாடல்களுக்கு வேறொரு பரிமாணத்தை என்னுள் இந்த இன்டர்வியு உண்டாக்கியது.
NDTV: So you said you were there and Dil Se, how did it happen?
AR Rahman: So Dil Se would be probably me at that zone and very much in the UK. Going and coming back. So the brief was very funny. Just gave me the seven stages of love.
NDTV: Arey waah!
AR Rahman: It's attraction, its lust and finally it's death.
NDTV: Why is this?
AR Rahman: Forgot all of the stages. I mean I never told you a story...
NDTV: Which stage were you at that time?
AR Rahman: I was in the last stage.
NDTV: So, let us see how did it happen?
AR Rahman: I think that one song we did. Satrangi Re, probably the culmination of everything. That song has got seven-stage thing.
NDTV: But in actual Dil Se was a big hit!
AR Rahman: Yeah. I think Dil Se had great lyrics, you get to sing, we all sing.
NDTV: Now, you are being very modest. Let us hear this song. And they will decide which is beautiful...
NDTV: What do you think when you played now?
AR Rahman: I think it's a very meditative. It has got two outburst of anger. I would say anger but angst in it. And it has got opposite of that. If you can code this together, the mantra is like explosion of anger and the initial was very meditative. It takes you to the zone of, it's very typical Mani.
NDTV: Yeah, but how did you vibe everything so well, that you got thing?
AR Rahman: I am a big fan. I am still a fan...
NDTV: And vice versa of course. What he says about you. I mean I am no one to say, but you are a good human being, on top of being a good talent, all great people tend to be that, I think yeah. But tell me you have a fun side also, Chahiya Chahiya where did that come from?
AR Rahman: It's a long story.
NDTV: I would love to hear that because it's like the left half of you?
AR Rahman: Ah, I think, when you discover an artist like Sukhwinder, who is amazing, so in the process of discovering as an artist and a lyrics writer and all that stuff, when I was doing Vande Maatram, we jammed together once. I said, okay let's start with something of Babe Bulleh Shah, you know his poetry, because I am a big fan of Nusrat and his music. I said why don't you, you are from Punjab, let's take some poetry, so this is a poetry of Baba Bulleh Shah, so I put a grew and we started jamming and so, ah, it was called Thaiya Thaiya first and it didn't fit into the album of course of Vande Matram. So, I said let's not give it all away, it was there lying for an year and then money came and I said that's my song and I am doing an expo, so we had this great idea, so I wanted to do it on sort of a train, and I wanted Shah Rukh to dance on the train and of course Gulzar Sahib came with Chahiya Chahiya. It changed and because it changed it became more phonetic, interesting quality about it and has this beautiful thought in it and Sukhi sang it and he landed.
-------------------------------
இந்தப் பாடலைப் பற்றி மேலிருப்பதைப் போன்ற பதிவைத்தான் எழுதுவதாக சிலபல மாதங்கள் முன்புவரை முடிவில் இருந்தேன். "Jab tak hai jaan" என்ற படத்தின் "Challa" என்ற பாடல் வெளியானது. ராபி ஷெர்கில் பாடிய - Bhulla ki jaana maen kaun - பாடலின் மிகப் பெரிய ரசிகன். அதபோன்றதொரு ஸ்டைலில் இந்தப்பாடல் இருந்ததனால், தத்துவரீதியிலான அர்த்தம் என்னவென்று தெரிந்துகொள்ள, பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை நெட்டில் தேடிக்கொண்டிருந்தேன். பொதுவாக, Ignorance is a bliss என்பதில் முழு நம்பிக்கை உடையவன். குழந்தைகள் ஏன் சிரிக்கிறார்கள் என்று அதன் காரணத்தைத் தேடத் தொடங்கினால், அதன் அழகை ரசிக்க முடியாததைப் போன்று.....பாடல் வரிகளுக்கு சரிவர அர்த்தம் தெரியாமல் கேட்பதிலும் ஒரு அலாதி சுகம் இருக்கவே செய்கிறது. இருந்தாலும், என்னதான் இந்தப் பாடலுக்கு அர்த்தம் என்று பார்த்துவிடுவது என்று வலைப் பக்கத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பாடலுக்கு பக்கத்திலயே - Dil se re English translation என்று இருந்தது. ஒரு ஆர்வத்தில் என்னதான் அர்த்தம் என்று பார்ப்போமே என்று க்ளிக் செய்ய......
உண்மையாகச் சொல்கிறேன். Maglev ரயில்கள் ஓடும்பொழுது தண்டவாளத்தில்படாமல் அந்தரத்தில் மிதப்பதைப் போன்றதொரு தோற்றம் இருக்குமே, அப்படியான ஒரு நிலையிலயே சில நிமிடங்கள் இருந்தேன். அதுவரை ரசித்துவந்த அந்தப் பாடலின் தமிழ் வரிகள் ஒன்றுமேயில்லை என்று தோன்றியது. (முடிந்தால் அந்தப் பாடலை இங்கே கேட்டுக் கொண்டே கீழ்வரும் பத்திகளை படியுங்கள்)
The sun had come out
The temperature had dropped
a whirlwind kicked up
just as a cry shot forth from the heart
Two autumn leaves fell from the trees, from the tree branches they fell.
Then seasons passed,
and those two poor leaves,
in their desire to sprout, passed over the desert.
Those leaves were our hearts…they were our hearts…
If you have a heart, you’ll know pain in your lifetime,
and if pain is there, there has to be a heart too.
இதைப்பற்றி இந்த பதிவில் சொல்லியாக வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டு, இணையத்தில் "தில்சே ரே" என்று தமிழில் டைப் அடித்துப் பார்த்தேன். இதுகுறித்து வேறு தகவல்கள் இருக்கின்றனவா, வேறு யாரேனும் இந்தக் கோணத்தில் எழுதியிருகிறார்களா என்று தேட, கூகிள் என்னை கீழ்க்கண்ட பதிவுகளுக்கு ஈட்டுச் சென்றது. உளமாரக் கூறுகிறேன், இந்தப் பதிவுகள் தான் இப்பட பாடல்கள் குறித்தும் வேறு சில விஷயங்கள் குறித்தும் தெளிவாக எனக்குப் புரிய வைத்தது.
எதற்கெடுத்தாலும் 2000க்கு முன்பு தான் ரஹ்மானின் இசை அருமை, அற்புதம். அதற்குபிறகு ஒன்றுமேயில்லை (அப்படி ஏகடியம் பேசுபவர்களில் 99.99 % பேர் தமிழ் தவிர அவர் இசையமைத்த எதையும் கேட்டதில்லை என்பதை நானே பார்த்திருகிறேன்) இந்த பதிவுகளை படிக்க வேண்டுகிறேன். ஆனால், இந்தப் பதிவில் சொல்லியிருக்கும் சுஃபி தாக்கத்தோடு, நல்ல படங்கள், ஷ்யாம் பெனகல் மாதிரியான இயக்குனர்கள், எம்.எப்.ஹுசைன் மாதிரியான கலைஞர்கள் போன்றவர்களோடு எல்லாம் பணியாற்றும் சந்தர்ப்பம், பாடல் வரிகள், மார்கெட், புதிய முயற்சிகளை பரிசோதித்து பார்ப்பதற்கு உரிய களம் என்று காரணிகளும் சேர்ந்தே அவரை ஹிந்தியில் அதிகமாக இசையமைக்க வைத்ததாக எனக்குப்படுகிறது.
மேலே இருக்கும் பதிவின் வாயிலாக நான் தெரிந்துகொண்ட மிகமிக முக்கியமானதொரு விஷயம்.........
இந்தப் பாடல் இடம்பெற்ற ’தில் சே’ பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன ஒரு குறிப்பு முக்கியமானது. அதில் உள்ள பாடல்கள் அனைத்தும் திரைப்படத்திற்கு என்று உருவாக்கப்பட்டவை அல்ல. தனியான சூஃபி ஆல்பமாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவை. எனவே அவற்றின் இசையில் சூஃபி மரபிசைக் கருவிகளை அதிகமாகப் பயன்படுத்தியிருந்தார். பின்னால் அவை திரைப்படத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேற்கத்திய வாத்திய இசைகளை அவற்றுடன் இணைக்க வேண்டி ஆயிற்று.
இந்த வார்த்தைகளையும் மேல ரஹ்மானின் NDTV இன்டர்வியுவையும் படித்துப் பாருங்கள். ச்சையா ச்சையா பாடலை எடுத்துக் கொள்வோம். எப்படியானதொரு ரகளையான இசை. ஆனால் அது ஒரு சுஃபி பாடல் என்றால் நம்ப முடிகிறதா ? வரிகளைப் பாருங்கள்....
மிகமிக முக்கியமானதொரு பாடல், என்னுயிரே (அ) சத்ரங்கி ரே. பாடல் மட்டுமல்லாமல் படத்திற்குமான அடிப்படை அந்த ஏழு நிலைகள் தான்.
Hub(attraction - ஈர்ப்பு)
Uns (infatuation - கவர்ச்சி)
Ishq (love - காதல்)
Aqidat (reverence - பக்தி)
Ibaadat(worship - வழிபாடு)
Junoon (passion - பித்து)
Maut (death - மரணம்)
முடிவாக, DIL SE - a journey through these seven shades (Source). இதுபற்றி தான் மேலிருக்கும் பேட்டியில் ரஹ்மான் "I was in the last stage" என்று கூறியிருப்பதைக் கவனிக்க.
படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் இந்த நிலைகளையும் காட்சிகளையும் தொடர்புபடுத்துவதில் சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன். நுனிப்புல் மேய்ச்சல் போன்ற தெளிவில்லாத அரசியல் பார்வையை வலிய திணித்தற்கு பதில், இந்த நிலைகளை வைத்தே அற்புதமானதொரு படத்தை மணிரத்னம் கொடுத்திருக்காலாம். விட்டுவிட்டார். இந்தப் பாடல் குறித்து மிக விரிவாக இந்தப் பதிவில்அலசப்பட்டுள்ளது. அதில் இவர் குறிபிட்டுள்ள ரூமி குறித்தும் நான் தெரிந்துகொள்ள ரஹ்மானின் இசை தான் காரணம். The meeting place - Rockstar. Again, ராக்ஸ்டார் படப்பாடல்களும் முழுக்க முழுக்க melancholyயான சுஃபி தன்மையுடைய பாடல்கள்.
Do You Know
Away From Here
Out beyond ideas of wrongdoing and rightdoing
there is a field.
I will meet you there
- Mewlana Jalaluddin Rumi
இதைக் கேட்டதில் இருந்து ரூமியைப் பற்றி தெரிந்துகொள்ளும் முயற்சியில் இருக்கிறேன். என்ன மாதிரியான வார்த்தைகள்.......அதுவும் காதலைக் குறித்து ஏராளமான அற்புதங்கள் எழுதித் தள்ளியிருக்கிறார் (ரூமியைப் பற்றி மேலதிகமாக வேறொன்றும் தெரியாமல் ஜல்லியடிக்க விருப்பமில்லை. சில வாரங்களாகத்தான் படித்தக் கொண்டிருக்க்ரியேன்). ஜோதா அக்பரில் - க்வாஜா மேரே க்வாஜா பாடலில், வெள்ளை உடையில் அனைவரும் சுற்றுவார்களே(அதன் அர்த்தம் இதன் மூலமாகத்தான் தெரிந்தது).... அதுகுறித்தும் ரூமி குறித்தும் ஓஷோ கீழ்கண்டவாறு கூறுகிறார்.
You must have seen small children -- they like to whirl; and everybody stops them, because the fear of the parents is that the child may fall, may have a fracture, may get hurt. But in spite of all prohibitions, children love to whirl. And nobody has inquired why children love, all over the world, irrespective of race, nation, religion, why children love to whirl.
Jalaluddin Rumi, seeing children whirl, thought that there must be something that the children feel but they cannot express, and perhaps they are not fully aware what it is. So he tried whirling himself, and he was amazed that if you go on whirling there comes a moment when the center of your being remains static and your whole body, mind, brain, everything, whirls.
And that center which does not whirl, is you, the center of the cyclone. The whirling is almost like a cyclone, but exactly in the middle of the cyclone you will find a point which has not moved at all. Every wheel needs a center on which to turn, and the center has to remain unturning. You see in bicycles, in bullock carts, wherever there is a wheel, there is something in the center which is unmoving.
Once Jalaluddin became aware that you can find the unmoving center of your being, he tried for thirty-six hours non-stop, without eating, without drinking -- he was determined to whirl to his absolute capacity, not to hold back anything... unless he falls, he is not going to stop. Thirty-six hours he whirled, a great crowd watched. The crowd went on changing; people had to go to eat and then they came again. People had to do their work and then they came again; thirty-six hours is a long period. And after thirty-six hours he fell down. And people heard a great laughter.
Jalaluddin was laughing loudly, and he said, "You think you have seen me falling, I have also seen myself falling. These thirty-six hours I have not moved a single inch. Now I don't have to go to Mecca in search of God, I have found him. In the unmoving center of my own being, he is".
இந்த மூன்று பதிவுகளையும் - உருது தொடர்பையும் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது.......எனக்குப் பிடித்த ஹிந்திப் பாடல்கள் குறித்து நினைவுபடுத்திப் பார்த்தேன். ஒன்று எனக்கு மிகத் தெளிவாகப் புரிந்தது. பெருமளவில் உருது கலந்த ஹிந்தி பாடல்கள் தான் எனக்கு மிகப் பிடித்தமானவைகளாக இருந்திருக்கின்றன. விஷால் பரத்வாஜின் படங்கள் முதல், மணிரத்னத்தின் ஹிந்தி படங்கள், இன்றைய ப்ரஸுன் ஜோஷி வரை பெரிய லிஸ்ட் ஒன்று உள்ளது. நிச்சயமாக இதற்கு உர்து மொழியின் லாவகமும் ஓசை நயமுமே காரணமாக இருக்க முடியும். மசூதிகள் இருந்த/இருக்கும் பகுதியில் நான் வளர்ந்ததினால் பாங்கு ஓதும் போது அந்த லாவகமும் நயமும் கேட்க பெரிய அனுபவமாக இருக்கும். நான் படித்த பள்ளியில் வேறு - திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார், புகழ்பெற்ற ஸ்கூல் அது - ஒவ்வொரு திங்களன்றும் மும்மதப் பாடல்கள் என்று ப்ரேயரில் பாட வைப்பார்கள். ஆறு வருடமாக "ஹஸ்பிரப்பி ஜல்லல்லா" என்ற ஆரம்பிக்கும் நாகூர் ஹனிஃபா பாடிய பாடலைப் பாடவேண்டும். இன்றுவரை அர்த்தம் தெரியாது. ஆனால் அந்த பாட்டில் ஒரு உணர்ச்சி இருக்கும். போஸ் - ஷ்யாம் பெனகல் படத்தில் ரஹ்மானின் இசையில் அந்த வரிகளை மீண்டும் கேட்ட பொழுதுதான் அதன் முழு வீரியமும் புரிந்தது. முடிவை நோக்கி அந்தப் பாடல் நகர நகர ஒரு வசீகரிப்பை உணரலாம். காந்தி கூட ஹிந்தி + உர்து சேர்ந்த ஹிந்துஸ்தானி என்ற மொழியே, ஹிந்திக்கு பதில் இந்தியாவின் official languageஆக இருக்கும் வேண்டும் என்று உர்துவின் மேல்கொண்ட ஈர்ப்பினாலும், முக்கியமாக அரசியல் காரணங்களுக்காவும் கூறினார். திருவிளையாடல் விறகு வெட்டி போலத்தான் - உர்து குறித்து எனக்கு தெரிந்ததும். மிகமிக சொற்பமாக கேட்டதை படித்ததை வைத்தே என் கருத்துகளை கூறியிருக்கிறேன். உர்து, ஹிந்தி குறித்து - எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல ஒரு தொனி தெரிந்தால் நான் அதற்குப் பொறுப்பில்லை :)
இதுபோன்றதொரு உர்து மொழியில் - கவிஞர்களாக இருக்கும், குல்ஸார், ஜாவேத் அக்தர் போன்ற ஆட்கள் பாடல் வரிகளை எழுதும் பொழுது..........அதன் தரம் எங்கோ சென்றுவிடுகிறது. ஆனால், நமது தொன்மையான தமிழ் மொழியின் திரைப்படப் பாடல்களின் தரம் ? ஏன் பிரமீள் போன்றவர்களது நவீன கவிதைகளை யாரும் பாடலாக்க முன்வருவதில்லை என்று தெரியவில்லை. பெரும்பாலும் மிக அரதப்பழசான பாடல் வரிகளை வைத்தே ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறோம். (வைரமுத்து - இளையராஜா கூட்டணி உடைந்தது மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமே இல்லை). வைரமுத்துவின் மீது எனக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும், போகிறபோக்கில் அவரது பாடல்களில் தெறிக்கும் வரிகளுக்கு ஈடாக இன்றிருக்கும் யாராலும் எழுத முடியவில்லை என்பதுதான் உண்மை. ராக்ஸ்டார் படம் பார்த்துவிட்டு - அதுவும் சப்டைட்டில்களின் மூலம் - பாடல்களின் அர்த்தங்களை தெரிந்துகொண்டு உணர்ச்சிவசப்பட்ட நிலையில், கவிஞர்/நண்பர் விஷால் அவர்களும் இதே கருத்தைச் சொன்னார். அந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் கலாப்ரியா போன்றோரது நவீன தமிழ்க் கவிதைகளை ஒத்திருக்கின்றது என்று வெகுவாக சிலாகித்துச் சொன்னார். குல்ஸாரே தில்சே படத்தின் சுஃபித் தன்மை குறித்து ஒரு நேர்காணலில் சொன்னது:
Recently I returned from Chennai after a music sitting with Mani Ratnam and A.R. Rahman. We are working together again after "Dil Se" for Mani's "Guru". Again we'll try to attempt a different sound.
"Guru" has a serious layer below the surface, which I'll tap as a poet. Mani Ratnam is the only director who asks for abstract images. It's lovely to share my poetry with him. His Hindi is getting better. But I'm lagging behind. My Tamil should improve soon.
As a lyricist, I'd say my first turning point as an abstract lyricist was "Humne dekhi hai un aankhon ki mehekti khushboo" in "Khamoshi". Another turning point was Mani Ratnam's "Dil Se" where with "Chaiyyan chaiyyan" my sufiyana phase started. Now let's see...perhaps with "Guru" there will be another turning point. It's wonderful to work with a director who expresses scenes musically.
அந்த தில்சே ரே பாடல் ஏன் எத்துனை முறை கேட்டாலும் சலிப்பதேயில்லை என்று புரியவில்லை. புரிந்துகொள்ளும் ஆராய்ச்சியிலும் நான் இறங்க விரும்பவில்லை. ரஹ்மான் நேர்காணலில் கூறியிருப்பதைப் போல, பாடல் முழுக்கு angst தான் இருக்கும். ஆனாலும் கொண்டாட்டமான இசை. என்னவொரு முரண்நகை. நான் கேட்ட வரையில் ஒரு ஏழு லேயர்கள் அந்தப் பாடலில் இருந்தது. ரஹ்மான் பாடலைப் பொருத்தவரை இரு இசைக் கருவி/பீட் மட்டும் லூப்பில் போட்டதைப் போல, ஆரம்பம் -> முடிவு வரை, பின்னணயில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். இதிலும் அந்த ஆரம்ப prelude இசை கடைசிவரை பின்னணியில் ஒலிப்பதைக் கேட்கலாம். அதே போன்ற interlude வரும் சமயத்தில், கிடார் வெவ்வேறுவிதமான ஸ்கேல்களில் ஒலிப்பதைக் கேட்கலாம். இந்தப் பாடலின் பேஸ் கிடாருக்கு - பிரத்தியேகமாக Pink Flyod குழுவில் பேஸ் கிடாரிஸ்டாக இருந்த கய் ப்ராட்டை(Guy Pratt) வரவழைத்து ஒலிப்பதிவு செய்துள்ளனர். இந்தப் பாடலை தற்போதைய Mtv Unplugged நிகழ்ச்சியில் ரஹ்மான் பாடிய பொழுது.......நேரடியாக அதனைக் கேட்டவர்கள் அனைவரும் கொடுத்துவைத்தவர்கள். ரஹ்மான் 4:37நிமிடத்தில் verseசை ஆரம்பிக்கும்பொழுது அவர் முகத்தில் தெரியும் உற்சாகத்தையும் கூட இசைப்பவர்கள்,கோரஸ் குழுவினர் என்று அனைவரும் லயித்துப் போயிருப்பதையும்........அதேபோன்று தான் இதே நிகழ்ச்சியில் "ரெஹ்னா தூ" பாடலும். ஏறக்குறைய உர்து தான். வார்த்தைகளை கவனியுங்கள். ஹுர்துரா...........அர்த்தமே தெரியாது...ஆனால், மேஜிக்.
You know what the fellow said – in Italy, for thirty years under the Borgias, they had warfare, terror, murder and bloodshed, but they produced Michelangelo, Leonardo da Vinci and the Renaissance. In Switzerland, they had brotherly love, they had five hundred years of democracy and peace – and what did that produce? The cuckoo clock.
- Harry lime, The Third Man
ஐரோப்பிய சினிமாக்களைப் பொறுத்தவரை – நாஜிகள் & இரண்டாம் உலகப் போரின் தாக்கம் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. ஏற்கனவே ஸ்கார்சேசே பற்றிய வீடியோ பதிவில் இதுபற்றி சற்றே பேசியிருக்கிறேன். ஃப்லிம் நுவாரோடு மட்டுமில்லாமல், அமெரிக்க-ஐரோப்பிய சினிமாக்களைப் பற்றிப் பேசும்பொழுது மிகமுக்கியமானதொரு விஷயமிது. சரி, நுவாரோடு இந்த விஷயம் எவ்வாறு தொடர்புடையது ?
ஜெர்மனியில், நாஜிக்களின் கெடுபிடியால் எக்ஸ்ப்ரஸனிஸ்ட் படங்களின் பிதாமகன்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு புலம்பெயரத் தொடங்கினர். அவர்கள் மட்டுமா.....ஒளிப்பதிவாளர், செட் டைரக்டர்கள் என்று ஒரு பட்டாளாமே அவர்களைப் பின்தொடர்ந்தது. ஹாலிவுட்டில் தங்கள் பாணியில் படங்களை எடுக்க ஆரம்பித்தனர். விளைவு, இதுவரை ஹாலிவுட் பார்த்தறியாத கேமரா கோணங்கள் – இசை – செட்டிங்ஸ் என்று முற்றிலும் புதுவகையான சினிமாக்கள் தயாராகத் தொடங்கியது. கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம், இந்த காலகட்டத்திற்கு முன்னர்வந்த ஹாலிவுட் படங்கள் எல்லாம் மிகமிக ஜனரஞ்சகமான மசாலாத்தனமான படங்கள் தான்.
நுவார் படங்களின் மிக முக்கியமானதொரு அம்சம், முக்கிய கதாபாத்திரம் – வேறு நாட்டையோ ஊரையோ சேர்ந்தவர்களாக இருப்பார்கள், புலம் பெயர்ந்த இயக்குனர்கள் போல. அந்தக் கதாபாத்திரங்கள் திடீரென்று உயிர்போகும் நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் அப்போதைய அமெரிக்க இயக்குனர்களுக்கு – வெறும் படத்துடன் தொடர்புடைய விஷயங்கள். ஆனால், ஐரோப்பிய இயக்குனர்களைப் பொறுத்தவரை, நாஜிக்களின் பிடியில் அவர்கள் ஏற்கனவே இருந்தபடியால் அவர்களால் கதாபாத்திரங்களின் மனநிலையை எளிதாக உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. உதாரணமாக, The Killers படத்தில், தன்னைக் கொல்ல வருகிறார்கள் என்று தெரிந்தும், தப்பியோட நினைக்காமல் அறையிலயே சாவை எதிர்நோக்கி காத்திருக்கும் கதாபாத்திரத்தை எப்படி அவ்வளவு தத்ரூபமாக அதன் இயக்குனர், ராபர்ட் சிட்மேக்கால் பிரதிபலிக்க முடிந்தது ? காரணம், அவர் பிறந்தது ஜெர்மனியில். அங்கே படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது நாஜிகள் ஆட்சிக்கு வருகின்றனர். கடும் கெடுபிடி. நடுராத்திரி கண்காணிப்பு, மிரட்டல் என்று அன்றைய பல ஜெர்மனிய படைப்பாளிகள் அனைத்து விதமான நுவார் சூழ்நிலைகளையும் பார்த்துவிட்டிருந்தனர். பில்லி வைல்டர், எட்கர் உல்மர், ஃப்ரிட்ஸ் லேங் என்று ஜெர்மனியைச் சேர்ந்தவர்களே ஆரம்பகாலகட்டத்தில் நுவார் ஜானரில் கோலோச்சினார்கள். தங்களது எக்ஸ்ப்ரஸனிஸ்ட் பட நுணுக்கங்கள் + அந்நிய நாடான அமெரிக்காவில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் + அமேரிக்கா குறித்து அவர்களுக்கு இருந்த கற்பிதங்கள் என்று அனைத்தையும் கலந்துகட்டி அட்டகாசமான திரைப்பட உத்திகள் மூலம் படங்களாகக் கொடுக்கத் தொடங்கினர்.
அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய கால கட்டம். Pearl Harbour தாக்குதல் – ஹிரோஷிமாவிற்கு பிறகு, நமது நாட்டின் மீதும் அணுஆயுதத் தாக்குதல் நடைபெறலாம் என்று மக்கள் அஞ்சத் தொடங்கினார். இந்த அணுஆயுத விஷயம் 40களின் இறுதியில் கோல்ட் வார் சமயத்தில், உச்சத்தில் இருந்தது. இந்தகாலகட்டத்தில், அமெரிக்காவில் வெளிவந்த சினிமா, கதைகள் என்று சகலத்திலும் இந்தப் பயத்தை அப்பட்டமாகப் பார்க்கலாம். அப்போதைய பொருளாதார சீர்த்திருத்தங்களினால் வேலை சார்ந்த நிச்சயமற்றத் தன்மையும் இருந்தது. இந்தப் பயம் – நிச்சயமற்ற தன்மை அனைத்தையும் அமெரிக்க இயக்குனர்களின் நுவார்ப் படங்களில் காணலாம். The big american dream என்ற ஒரு பதம் உண்டே, அதுகுறித்தான கேள்விகளை மறைமுகமாக நுவார் படங்கள் கோடிட்டுக் காட்டியது.
ஃப்லிம் நுவார் படங்களின் கூறுகள் என்னென்ன ?
குற்றம்,கொலை,கொள்ளை
நல்லவன்/கெட்டவன் என்றெல்லாம் வரையறுக்க முடியாத ஆண்கள்
டிடெக்டிவ்ஸ்
குயுக்தி பிடித்த கவர்ச்சிகரமான பெண்கள்
நேர்மையற்ற போலீஸ்காரர்கள்
விளிம்புநிலை மனிதர்கள்
வெளியூரில்/நாட்டில் இருந்து வந்த கதாபாத்திரங்கள்
அவர்களின் பார்வையில் அவர்கள் புகந்த நாடுகள்
– இவர்கள் அனைவரும் சிக்கல்கள் நிறைந்த மனநிலையில் எப்படியாவது எல்லாவற்றிலும் இருந்து தப்பி வெளியேறிவிட முடியாதா என்று ஏங்குபவர்களாகவே இருப்பர்.
நக்கல்/குதர்க்கம் நிறைந்த வசனங்கள்
ஆள் அரவமற்ற சாலைகள்: போஸ்ட் கம்பங்கள்
ஒழுங்கில்லாமல் நீளும் நிழல்கள்
நியான் விளக்குகள்
ஒடுக்கமான குடியிருப்புகள்
பனி மூட்டம், ஏராளமான சிகரெட்கள்
எல்லாவற்றிற்கும் மேலாக படம் முழுக்க விரவிக்கிடக்கும் டார்க் டோன்.
செமி – டாக்மெண்டரி ஸ்டைல், இத்தாலிய நியோ – ரியலிசத்தின் விளைவாக.
- மற்றொன்று பல்ப் ஃபிக்சன். பல நுவார் படங்கள் பல்ப் ஃபிக்சன் வகை நாவல்களின் அடிப்படையிலேயே இயற்றப்பட்டது. ஒரு பல்ப் ஃபிக்சன் கதையிலிருந்தோ ஒன்றுக்கு மேற்பட்ட பல்ப் ஃபிக்சன் கதைகளின் கோர்வையாகவோ அப்படங்கள் இருந்தன.
1940 – 1958 வரையான காலகட்டம் தான் நுவார் படங்களின் பொற்காலம். இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் மேற்கூறிய கூறுகளுடன் வெளிவந்த படங்களே க்ளாசிக் நுவார் படங்கள் ஆகும். ஃப்லிம் நுவார் என்பது ஃப்ரெஞ்ச் சொல். ஃப்லிம் நுவார் = டார்க் ஃப்லிம் (Dark film) என்று பொருள். ஃப்ரெஞ்ச் திரைப்பட திறனாய்வாளர்கள் தான் இந்தப் பெயரைச் சூட்டியது. இது தனி வகை ஜானரா(Genre) அல்லது நியு-வேவ் மாதிரியான நிகழ்வா என்பது குறித்து மாற்றுக் கருத்துகள் உள்ளன.
ஆண்கள்:
நல்லவன் – கெட்டவன் என்பதெல்லாம் ரிலெடிவ் பதங்கள்தானே. அது நுவார் படங்களின் ஆண்களுக்கு அப்படியே பொருந்தும். என்ன யோசிக்கிறார்கள், இதைச் செய்வார்களா மாட்டார்களா என்பதையெல்லாம் நாம் ஊகிக்கவே முடியாது. ஒரு சிக்குண்ட மனநிலையிலேயே எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய ஆட்களாகவே இருப்பார்கள். உதாரணமாக, The Maltese Falcon(1941 – முதல் நுவார் படம் என்று பரவலாக அறியப்படும் படம்) படத்தின் ஹம்ப்ரி போகார்ட் – ஒரு டிடெக்டிவாக வருவார். தனது பார்ட்னரின் மனைவியுடன் ஒழுங்குமீறிய தொடர்பு வேறு இருக்கும். இன்னொரு பெண்ணுடன் காதல்(?) மலரும். ஆனால், இறுதியில் அவள் எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் போலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவார். இன்னதான் செய்வார் என்று யாரலும் கணிக்க முடியாது ஒரு கதாபாத்திரம். ஏன் இவ்வாறு அவர்களது பாத்திரப்படைப்பு இருந்தது என்பதற்கு விடை – மேலே சொன்ன இரண்டாம் உலகப் போர்: அணுஆயுதப் போர் குறித்த பயங்கள் – அந்தகாலகட்டத்தில் சமூகத்தின் மனநிலை.
பெண்கள்:
நுவார் படங்களைப் பொறுத்தவரை இருவகைப் பெண்கள் இருப்பார்கள். ஒருதலைப்பட்சமாக ஒருவனைக் காதலிக்கும் அப்பாவி வகையான பெண்கள். மற்றொரு வகையான பெண்கள் தான், பல நுவார் படங்களின் அடிநாதமே – Femme Fatales என்றழைக்கபடும் சூழ்ச்சி நிறைந்த பெண்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் Double Indemnity(1944) படத்தில் வரும் ஃப்லிஸ் டைட்ரிசன். பேசியே ஆளை மயக்கிவிடுவார்கள். இவர்களால் ஆபத்து என்று அந்த ஆண்களுக்கு தெரிந்தாலும் விலகிச் செல்ல முற்படாமல் வலியப் போய் அவர்களின் சிலந்தி வலையில் அகப்பட்டுக் கொள்வார்கள். இதை இன்னொரு வகையாகவும் பார்க்கலாம். சுதந்திரமாக தனக்கு பிடித்ததைச் செய்யும், தனக்கான முடிவுகளை தானே எடுக்கும், ஆண்களின் மேல் அதிகாரம் செலுத்தும் பெண்களாக இருப்பர்.
பரவியிருக்கும் இருண்மை & கேமரா கோணங்கள்:
படம் முழுவதும் ஒருவித அசௌகரியம் விரவிக்கிடக்கும். பெரும்பாலும் கறுப்ப வெள்ளையிலேயே படங்கள் இருக்கும். ஒருவேளை, கறுப்பு – வெள்ளைக்கு மத்தியிலிருக்கும் க்ரே ஷேட்ஸ்களை அவைகள் குறிக்கிறதோ ? கதாபாத்திரங்களும் அவ்வாறு நல்லது – கெட்டது, இரண்டிற்கும் இடையிலேயே ஊசலாடிக்கொண்டிருப்பர். அவர்களது மனஓட்டத்தை பிரதிபலிக்கும் விதமாகவே படத்தின் டோன் இருப்பதைக் காணலாம்.
லோ – ஆங்கிள், டட்ச்(Dutch) ஆங்கிள் என்று தனித்துவமான கேமரா கோணங்களை இப்படங்களில் அதிகளவில் கையாண்டிருப்பர். எனக்கு தனிப்பட்ட முறையில், The Third Man படத்தில் வரும் கேமெரா கோணங்கள் மிகப் பிடிக்கும்.குறிப்பாக டனல்களில் கேமெரா செய்திருக்கும் ஜாலங்கள்...இன்று வரை ஒருசில படங்களே அத்தனை அழுத்தமாக இருந்திருக்கின்றன.
சரி, 1958 வரை நுவாரின் பொற்காலம் என்று சொல்லியாயிற்று. அப்படியென்றால் அதற்கு பிறகு நுவார் படங்கள் வந்ததில்லையா ? நுவார் படங்கள் காலம் முடிந்ததா என்றால்.........இல்லை. நுவார் படங்களின் தாக்கம் ஃப்ரெஞ்ச் நியு-வேவ் படங்களில் அதிகளவில் இருந்தது. அதன் காரணமாகப் பிறந்ததுதான் நியோ – நுவார் (Neo noir). அதன் முதல் & தலையாய படம் குறித்தான பதிவு தான் இது. கோதார்தின் Bande a part படத்தில் நுவாரின் கூறுகளைக் காணலாம். இந்த நியோ நுவார் பல வடிவங்களை எடுத்து, Pulp fictionல் வேறு தளத்திற்குச் சென்றது. கோயன் ப்ரதர்ஸின் நுவார்+ ஹிட்சகாக் படங்களுக்கான ட்ரிபியுட் தான், The man who wasn’t there. The Dark knight கூட, நுவார் வகைப் படம் தான். அவ்ளோ ஏன், Blue velvetல் கூட நுவாரின் பல கூறுகள்உள்ளன.
ஆனால், பல க்ளாசிக் நுவார் ஸ்டைலுடன் தற்போதைய பல வகை நுவார்களைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். நுவார் = டார்க்......அதுபோக மேல இருக்கும் கூறுகள் கொண்ட படங்கள் அனைத்தும் நுவார் என்ற பெரிய ஆலமரத்தின் கீழ் அடங்கும். அதில் கிளைகளாக இருக்கும் பிற நுவார்கள் தான் – neo noir, sci fi noirs, etc.. எல்லாம்.
எனது பரிந்துரைகள்:
நுவார் பற்றி தெரிந்துகொள்ள நினைப்பவர்கள், இந்த ஆறு படங்களைப் பார்த்தால் போதும் என்பது என் கருத்து. இவைகளை பார்த்தபின் தானாகவே அதன் மீது மோகம் வந்துவிடும். ஒவ்வொன்றும் ஒரு ஜெம். டைம்லஸ் க்ளாசிக். ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு பதிவாவது எழுத வேண்டும்.
நம்மூரைப் பொறுத்தவரை எனக்குப் பிடித்த இரண்டு நுவார் படங்கள்:
புதிய பறவை:
என் அப்பா இந்தப் படத்தின் தீவிர ரசிகர். அவர் சொல்லித்தான் தாதா மிராசி(இந்தப் படத்தின் இயக்குனர்) குறித்தெல்லாம் எனக்கு தெரியும். படம் ஒரு ஆங்கில -> வங்களா மொழிப்படத்தின் ரீமேக். இதில் சிவாஜி – உன்னை ஒன்று கேட்பேன் பாடலில் சிகரெட் பிடிக்கும் காட்சியும், ஆகா மெல்ல நட மெல்ல பாடலில் – அணிந்துவரும் சட்டையும் அப்போது மிகப் பிரபலமாம். இப்போது கூட படத்தின் ஒளிப்பதிவு துல்லியமாக இருப்பதை உணரலாம். எம்ஜியார் படத்திற்கு முன்னமே இவ்ளோ அற்புதமாக கலருடன் படம் வெளிவந்ததில் எம்ஜியார் ரசிகர்கள் எரிச்சலில் இருந்திருக்கின்றனர். அந்த எம்ஜியார் படம் குறித்து என் அப்பா சொன்னது நினைவில்லை.
Johnny gaddar:
நான் பார்த்த இந்தியப் படங்களில் தலைசிறந்த நுவார் என்று இதைச் சொல்வேன். ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் நாவலைப் படித்தே கதையின் நாயகன்(?) திட்டத்தை தீட்டுவதாக வரும். அட்டகாசமான டிவிஸ்ட்கள் நிறைந்தது. இன்னொரு பிடித்த விஷயம், இசை.
இதுபோக, 60களின் எம்ஜியார் படங்கள் – என் தங்கை – பலவற்றிலும் நுவார்த்தன்மை இருப்பதைக் காணலாம். சுஜாதாவின், கணேஷ் வசந்த் கதைகளில் பல நுவார் படங்களின்(அல்லது அதன் மூல நாவல்களின்) தாக்கத்தை நிறையவே காணலாம். திடீரெண்டு அவர்கள் ஆபிசில் ஒரு பெண் வந்து உட்காந்திருப்பாள் (The Maltese Falcon) செத்தவன் திடீரென்று உயிரோடு வருவான் (The Third man)...இதுபோல. ரேமன்ட் சாண்ட்லர், ஜேம்ஸ் கெய்ன் போன்ற நுவார் வகை பல்ப் எழுத்தாளர்கள் குறித்து அவர் எங்கோ எழுதிப் படித்த ஞாபகம்.
தமிழ் சினிமாவில் இன்னும் சரிவரப் கையாளப்படாதா வகை இந்த நுவார் என்பது என் கருத்து. பல அட்டகாசமான படங்களை இதில் எடுக்கலாம். மிஷ்கின் அதற்கு மிகப் பொருத்தமான இயக்குனர் என்பது என் கருத்து. அவரின் சில படங்கள் கூட நுவார் வகைகள் தான்.