Tuesday, June 30, 2015

Kaa Sqaure: ebook


My dear boy, do you ask a fish how it swims? .....Or a bird how it flies? .... Of course not. They do it because they were born to do it
- Willy Wonka


“என்ன சொல்ல...தமிழில் இதுபோன்ற,

வாவ். சூப்பர்,

கடும் உழைப்பு தெரிகிறது...ராயல் சல்யுட்,

நல்ல முயற்சி...வாழ்த்துக்கள்,

https://lh4.googleusercontent.com/i3x45cnKTNTw42mzjI3huQTS1_pp1adXf3SjQ0mctozpi10iOyNZoAfT7fsG184T0kQjqP5SX8J2ENU=w1360-h631

இதுமாதிரியான காமென்ட்கள் தேவையா ? டிப்ளமேட்டிகாக காமென்ட் போட்டு....பதிலுக்கு நானும் அதே டிப்ளமஸியுடன் பதில் போட்டு....ஏனென்றால், டிசைன் இத்யாதிகள் எல்லாம் திருப்தியாக இருக்கப்போய்த்தானே இதனை வெளியே விடுகிறோம். தவிர நாங்கள் ஏற்கனவே படுபயங்கர narcissistகள். நீங்கள்வேறு தனியாகப் பாராட்டி..... மாறாக, எதாவது தப்பு/குறை/அபத்தம் கண்ணில்பட்டால் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அதனைச் சுட்டிக்காட்டினால் டக்கென்று அதனைத் திருத்தி வேறு வெர்ஷன் அப்லோட் செய்ய உதவியாக இருக்கும். எல்லாவற்றையும் மீறி பாராட்டியே ஆக வேண்டும் என்ற உந்துதல் முட்டிக்கொண்டு நின்றால்....இதனை வேண்டுகோளாகவே முன்வைக்கிறேன்: ஏதாவது லீவு நாளில் உங்கள் மகளையோ/மகனையோ/யாரை வேண்டுமென்றாலும்...சும்மா ஒரு அனுபவத்திற்காகவாவது – இதுவரை நீங்கள் இதனைச் செய்திருக்காவிட்டால் – அவர்களைப் பக்கத்தில் பறவைகள் நிறைய வரும் இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். பறவை பார்த்தல் என் ஆளுமையை(?) நிறைய பாதித்திருக்கிறது. இந்த வயதில் நான் உணர்ந்தவைகளை பசங்கள் சின்ன வயதிலேயே உணர்ந்தால் நிச்சயமாக அட்டகாசமான ஆட்களாக பின்னாட்களில் வருவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

கா ஸ்கொயர்

பாம்பு போன்ற பல ஊர்வனவைகளுக்கு ஒரு தனிப்பட்ட இயல்பு உண்டு. சட்டை உரிப்பது என்று சொல்கிறோமே...அதுதான் (Ecdysis). ஏன் என்று இங்கே படித்துக்கொள்ளவும். என்னதான் சொல்ல வருகிறேன் என்றால், என்னைப் பற்றி எனக்கே இருக்கும் பிம்பங்கள்/கற்பிதங்கள், அடுத்தவர்களைப் பற்றி இருக்கும் பிம்பங்கள்/கற்பிதங்கள், ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி இருக்கும் முன்முடிவுகள்/லொட்டு லொசுக்கு என்று பலதையும் அவ்வப்போது உதிர்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால், இவ்விஷயங்கள் பெரிய psychological barrierராக மாறி வருவதை உணர்ந்து கொண்டிருக்கிறேன்(டுள்ளேன்). நிரூபிக்க முயல்வது (என்னைவிட உனக்கு கம்மியாகத் தெரியும் (அ) உன்னைவிட எனக்கு இது அத்துப்படி), எப்பொழுது பார்த்தாலும் விளக்கம் கொடுத்துக்கொண்டிருப்பது (இவுங்க நம்மள பத்தி எதுனா தப்பா நெனச்சுட்டா ?), அடுத்தவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருப்பது (அடுத்தவர்களுக்கு ஒரு ____ம் புரிய வைக்க வேணாம், நான் உணர்ந்தவற்றை அவர்களும் உணரச் செய்தாலே போதும்... ஜென்னின் ஒரு கூறு. ) இப்படி நிறைய உண்டு. அதனை விளக்க முற்படுவதே அபத்தமாகப்படுகிறது. அதனால், இப்படி எந்தவொரு பதிவையும் எழுதாமல் வெறும் நாலு லிங்க் மட்டும் போட்டு போஸ்ட் செய்வதாக இருந்தேன். ஆனால், இரண்டு முக்கியமான விஷயங்களை சொல்லியாக வேண்டியுள்ளது.

1) பறவை பார்த்தல் என்பது முழுக்க முழுக்க விஞ்ஞானரீதியிலானது. இதுபோன்ற documentationகள் எல்லாம் விஞ்ஞானத்தின் அடிப்படையான கூறு. சினிமா/இசை என்பதெல்லாம் அவரவர் ரசனை சார்ந்தது. அதனால் நான் எனக்குப்பிடித்த ஒரு படத்தைப்பற்றி எப்படி வேண்டுமென்றாலும் எழுதிவிட்டு....என் ரசனை/உரிமை அதுஇதுவென்று தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் இதில் அப்படி முடியாது. இதெல்லாம் facts. தவறு வரவே கூடாது. மிகை உணர்ச்சி இருக்கக்கூடாது. “அழகு” போன்ற வார்த்தையைக் கூட மிக ஜாக்கிரதையாகவே பயன்படுத்தியிருக்கிறேன் (நமக்குதான் இந்த வித்தியாசம் எல்லாம்; பறவைகளுக்கு இல்லையே). இத்தனை ஜாக்கிரதை உணர்வையும் மீறி எங்காவது தப்பு செய்திருக்கிறோமோ - அது படிப்பவர்களை mislead செய்துவிட்டால் ? - என்ற பயம் இப்பொழுது வரை உண்டு. அதனால்தான் ஏதாவது தப்பு கண்ணில்பட்டால் உடனே சொல்லுங்கள் என்று சொன்னது.


 • மீண்டும் மீண்டும் பலமுறை பார்த்த பறவைகளைப் பற்றி மட்டுமே(ஐந்து பறவைகள் நீங்கலாக) எழுதி உள்ளேன். இன்னும் சில பறவைகளின் புகைப்படங்கள் இருந்தாலும், எனக்கு அந்தப்பறவைகள் குறித்து அதிகம் தெரியாதென்பதால் எழுதாமல் விட்டுவிட்டேன்.

 • இது தினகரனில் முன்னொரு காலத்தில் வந்த பறவைகள் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு மட்டுமே இல்லை. அதில் 76 பறவைகளைப் பற்றி எழுதியிருந்தேன். இது 150 பறவைகள், அவைகளைப் பற்றி சிறிய அறிமுகம் என்ற அளவில் இருக்கும். கவனிக்க: இது பறவைகள் பற்றிய புத்தகம் இல்லை. பறவை பார்த்தல் பற்றிய புத்தகம்.

 • சொல்லப்போனால், முழுப்புத்தகமுமே என் பெர்சனல் குறிப்புகள் மாதிரிதான். இதுவரை நான் கற்றுக்கொண்டவைகளை சரிதானா என்று பார்த்துக்கொள்வதற்கும், புதிதாக பல சுவாரசியமான விஷயங்களை தெரிந்து கொள்ளவும் முடிந்தது. உதா: மரங்கொத்தி. " இயற்கையின் பரிணாம வளர்ச்சியின் மற்றொரு அட்டகாசமான தகவமைப்பை (adaptation), மரங்கொத்திகளிடம் பார்க்கலாம். கொஞ்சம் யோசித்துப் பார்ப்போம். ஒரு நாளைக்கு, கிட்டத்தட்ட 12,000 தடவை ஒரு உயிரினம் கடினமான மரங்களை கொத்திக்கொண்டே இருக்கிறது, அதுவும் மணிக்கு 20 - 25 KM வேகத்தில். அப்படியானால் மூளை எப்பிடி இத்தனை வேகத்தை, அழுத்தத்தைத் தாங்குகிறது? அதன் கடினமான மண்டையோடுகள், சிறிய மூளை அளவு + அதனைச் சுற்றி இருக்கும் ஹெல்மெட் போன்றதொரு அமைப்பு" அட....ஏன் இத்தனை நாட்களாக தோணவில்லை நாயே...என்று கடித்துக்கொண்டேன்.

2) தினகரன் கட்டுரைகள் சும்மா தான் இருக்கிறது....ஏன் ஈபுக் போடக்கூடாது என்று வீரமகனார் உமாமஹேஸ்வரன் அடிக்கடி உசுப்பிவிடுவார். சரி என்று தினகரன் கட்டுரைகளை மட்டும் கம்பைல் செய்வது என்று ஆரம்பித்தேன். என் தமிழில் எலுத்துபிழைகள் இருக்கவே இருக்காது. விளையாடும். அதனால் படக்கென்று MS Wordல் போட்டு....pdfக்கு கன்வர்ட் செய்துவிடலாம் என்ற முடிவில் இருந்தேன். எனக்கே மனசு கேட்கவில்லை.

இங்குதான் மனித உருவில் நடமாடும் தெய்வம் – ஹாலிவுட் பாலா சீனுக்குள் வருகிறார். நீங்கள் நாமக்கல் ஆஞ்சநேயரை பார்க்க வேண்டுமா...அவர் பாலா உருவத்தில்தான் மனிதனாக சுற்றிக்கொண்டிருக்கிறார். Pdf, epub, mobi, itunes என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு மாதிரி டிசைன் செய்தாக வேண்டும். போதாகுறைக்கு எனக்கு “Find birds by color” மாதிரி எதாவது தோன்றும் (கடைசியில் பார்த்தால், சாலிம் அலியின் புத்தகத்தில்கூட இப்படியொரு விஷயம் உண்டு; எனக்கு அப்பொழுது இது தெரியாது. Find birds by color வேலை முடிந்த பின்னாடி தான் இது தெரியும். ஜீனியஸ்கள் எல்லாம் ஒன்று போலவே சிந்திப்பார்கள் என்று பாலா சொன்னார். அதுக்கு என்ன அர்த்தம் ?). அசுரத்தனமான உழைப்பு. இத்தனைக்கும் அவருக்கு ஆர்வம் இல்லாத துறை இது. ஈபுக் என்று எடுத்துக்கொண்டால், அதில் extreme level என்று என்ன உள்ளதோ அது எல்லாவற்றையும் இதில் அவர் செய்திருக்கிறார். கவர் பேஜ் டிசைனில் இருந்து டைட்டில் பெயர் வரை அன்னாரது கைங்கரியமே. இன்னும் நிறைய சொல்லலாம். Long story short.....இந்தப் படம் தான். (தூர்தர்ஷன் பார்க்காமல் வளர்ந்தவர்கள் எதாவது ஆபாசமாக நினைத்துத்தொலையக்கூடும் என்பதால், வேதாளத்திடம் மாட்டிய விக்கிரமாதித்தன்).

vethal

Gokul Ranga, Enviro Ganeshwar, P.K.Ramkuar - பறவைகளின் idயில் சில சந்தேகங்களை தீர்க்க உதவினார்கள். அவர்களுக்கு நன்றி. விக்கிபீடியா போன்ற தளங்களில் முக்கி முக்கி தமிழில் பல கட்டுரைகளை டைப் அடித்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி.

போதும். எனக்கே நாக்கு தள்ளுகிறது.

Technical glitches காரணமாக சில தளங்களில், உதா: News hunt - புக் டிசைன் சரியாக தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. Find birds by color எல்லாம் interactive. Pdf/epub ரீடரைப் பொறுத்தே வேலை செய்யும். நல்ல pdf/epub ரீடர் இருக்கும் என்று நம்புகிறோம்
To download it from Amazon:

Amazon Kindle - Link
சனியன். அமேசான்ல் எவ்வளவு முயன்றும் இலவசமாக பப்ளிஷ் செய்ய முடியவில்லை. முடிந்தளவு freeயாக டவுன்லோட் செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளோம். உதா: ஏற்கனவே அமேசானில் புத்தகம் வாங்கியவராக இருந்தால் free டவுன்லோட் செய்து கொள்ளலாம். அமேசானில் proper formatting/designனுடன் வரும் முதல் தமிழ் புத்தகம் இதுதான் என்று நான் தன்னடத்துடனும், பாலா -  தலைக்கனத்துடனும் கூறிக்கொள்கிறோம்

To download it from Newshunt: 

Link 

Interactive Map


“Important Bird Areas of Tamilnadu”


Facebookers..

14 comments :

 1. Aaranyan YatchinipriyanJuly 1, 2015 at 2:22 AM

  The Long wait is over.

  ReplyDelete
 2. அருமை. உழைத்த அத்தனை உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. வாழ்த்துகள். எல்லாரும் படித்துப் பயன்பெற வேண்டுகிறோம்.

  ReplyDelete
 4. வாழ்க பல்லாண்டு.

  ReplyDelete
 5. கொழந்தJuly 2, 2015 at 3:00 AM

  நன்றிகளும் ஆசிகளும்

  ReplyDelete
 6. கொழந்தJuly 2, 2015 at 3:01 AM

  மிக்க நன்றி.

  ReplyDelete
 7. கொழந்தJuly 2, 2015 at 3:01 AM

  Thanks a lot boss

  ReplyDelete
 8. கொழந்தJuly 2, 2015 at 3:02 AM

  அதான் Fbல நன்றி சொல்லிட்டேன்ல...இங்க திரும்ப சொல்ல முடியாது

  ReplyDelete
 9. helloezhil123@gmail.com.உங்க புத்தகம் அனுப்ப முடியுமா?

  ReplyDelete
 10. கொழந்தJuly 2, 2015 at 4:31 AM

  pdf அட்டேச் ஆவாது. 26Mb. நீங்க இதுல இருக்குற லிங்க்ல இருந்து டவுன்லோடிக்கலாமே

  ReplyDelete
 11. கொழந்தJuly 3, 2015 at 1:58 AM

  Thanks boss

  ReplyDelete
 12. இவ்வளவு சிறப்பா இருக்கும்ன்னு நினைக்கவே இல்லை டவுன்லோடிட்டு சொம்மா மேய்ந்தால் அசத்தலான தொகுப்பு அதுவும் குட்டி பசங்களுக்கு பிடிக்கும் வகையிலான லெக்சர் அடிக்காத ஒரு ஃப்ரென்ட்லி டச். (பெருசுங்க தெரிஞ்சு ஒன்னும் ஆவ போறதில்லை)

  நிஜமா ரொம்ப ரசிச்சேன்... கடுமையா வேலை வாங்கிருக்கும்.. உங்க சந்தோசத்தை என்னால உணர முடியுது... டெக்னிக்கலா பாலா எவ்வளவு உதவியிருப்பார்ன்னு உங்க வார்த்தைல தெரியுது.. என் பசங்களுக்கு அப்படியேஒரு முழு கலர் ப்ரின்ட் போட்டு கைல குடுப்பேன்... நிச்சயமா ரசிப்பாங்க... நன்றிகள்.

  ReplyDelete
 13. கொழந்தJuly 12, 2015 at 3:43 PM

  Much words. Thanks a lot

  ReplyDelete