Saint Anthony of Padua. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்புகழ் பெற்ற போர்த்துகீசிய புனிதர். நம்மூரில் புனித அந்தோனியார் என்கிறோமே, அவர்தான். Patron Saint of lost things. ஏன் இந்தப் பெயரென்றால் எதாவது காணாமல் போயிருந்தால் இவரை நினைத்து ஜெபித்தால் அந்தப்பொருள் கிடைத்துவிடும். பொருள் - உயர்திணை, அஃறிணை எல்லாமும் இவ்வார்த்தைக்குள் அடங்கும். புயலில் மாட்டிக்கொண்ட, காணாமல்போன மாலுமிகள், மீனவர்கள் அனைவரும் சரணாகதியடையுமிடம் புனிதர் அந்தோனி.
சுமார் 400 ஆண்டுகளுக்கு கன்னியாகுமரி கடலோரம் போர்த்துகீசிய கப்பல் ஒன்றில் காலரா நோய் கடுமையாகப் பரவி அதிலிருந்த ஏராளமானோர் இறந்துவிட, கப்பலிலிருந்த ஒரு சிற்பி புனித அந்தோனியாரை வேண்டிக்கொண்டு அவரின் சிலை வடிக்கிறார். கொஞ்சநாட்களில் காலரா பாதிப்பு நின்றுவிட மீதியிருந்த அனைவரும் உயிர் பிழைக்கின்றனர். அதற்கு நன்றிக்கடனாக கன்னியாகுமரியின் கடலோரம் அச்சிலையை வைத்து ஒரு சின்ன ஆலயத்தை ஏற்படுத்துகின்றனர். அந்த ஆலயம் - திருநெல்வேலி உவரியிலிருக்கும் புனித அந்தோனியார் ஆலயம் (கொற்கை நாவல் உவரியை அடிப்படையாக் கொண்டதாக நினைவு). அந்தோனியாருக்கு இன்னுமொரு சிறப்பு உண்டு. பறவைகள், மீன்களுக்கெல்லாம் போதனை செய்தவர். அவர் இயற்பெயரை சொல்ல மறந்துவிட்டேனே...Fernando.
Whoever approaches the Spirit will feel its warmth, hence his heart will be lifted up to new heights
- St. Anthony of Padua
திண்டுக்கல் ஆத்தூர் டேம். செப்டெம்பர் மாதம். காலை சுமார் ஏழு மணி. சங்குவளை நாரைகள் (Painted Storks).ஒரு பெரிய நாரைக்கூட்டம் (இந்நாரைகள் ரெகுலர் விசிட்டர்ஸ்) டேம் மதகருகே உலாத்திக்கொண்டிருக்க, நாலைந்து நாரைகள் மட்டும் சற்று தள்ளி குட்டை போல் தேங்கியிருந்த தண்ணீரில் மீன்களையும் நத்தைகளையும் (பெரிதாக ஒன்றும் இருந்தாக தெரியவில்லை) துரத்திப் பிடித்துக்கொண்டிருந்தன. இந்த நாலைந்து நாரைகளை தூரத்திலேயே கவனித்துவிட்டபடியால் வெகு ஜாக்கிரதையாக, அடிமைப்பெண் எம்ஜிஆர் போல புதர்களுக்கு நடுவில் ஒருமார்க்கமாக குனிந்து குனிந்து குட்டையை நெருங்கிவிட்டேன். சத்தமில்லாமல் அப்படியே உட்கார்ந்தும் விட்டேன். பறவைகளின் புலன்கள் படு ஷார்ப். நாம் கொஞ்சம் சொதப்பினாலும், சுதாரித்துக்கொண்டு படக்கென்று பறந்துவிடும். இரையை தேடிக்கொண்டிருக்கும் பறவைகளை இப்படி பயப்படுத்தி பறக்கச் செய்வது பெரும்பாவம். அந்த ஜாக்கிரதை உணர்வு எப்பொழுதுமே நமக்குத்தேவை.
ஃபோட்டோ எடுப்பதைவிட அப்செர்வ் செய்வதில்தான் ஆர்வம் என்பதால் ஏறக்குறைய கால் மணி நேரம் பைனாகுலர்வழியாக திருப்தியாக அப்செர்வ் செய்தேன். சேறும் சகதியுமான தண்ணீரிலிருந்து அலேக்காக மீன்களை பிடித்து ஜாலியாக உண்டுகொண்டிருந்தன. அலகின் நுனியிலிருந்து நீர் சொட்டிக்கொண்டிருக்கிறது. சூரியன் வேறு நேர் எதிர்திசையில் இருந்தபடியால் அட்டகாசமாக அனைத்தையும் கவனிக்க முடிந்தது. எதற்கும் ஃபோட்டோ எடுத்து வைப்போமெயென்று ரெடியாகி...கச்சிதமாக focus செய்வதற்குள் எப்படியோ அனைத்து நாரைகளும் ஒருசில வினாடிகளில் சுதாரித்துக்கொண்டு பறக்கத்தொடங்கின. இடது பக்கத்திலிருந்து முதல் நாரை. Zoom செய்து பாருங்களேன். இன்றுவரை இந்த imagery படுதுல்லியமாக நினைவில் உள்ளது. நான்கும் கிளம்பி, அரை வட்டமடித்து, சற்று தொலைவில் எதிர்த்தாற்போலிருந்த திட்டில் போய் இறங்கின. அந்த ஒரு நாரை மட்டும் அத்திட்டிற்கு போய் இறங்கும்வரையில் தலையை என் பக்கமாகவே திருப்பியிருந்தது. பார்வை முழுக்க என்னை நோக்கியே இருந்தது. கோபமா ? எரிச்சலா ? அசூயையா ? எல்லாம் கலந்த கலவையா ?. இதுபோல ஏகப்பட்ட அனுபவங்கள் (எனக்கு மட்டுமல்ல எல்லா birdersகளுக்கும் நிச்சயமாக இருக்கும்) உண்டென்றாலும் இதைப்பற்றி சொல்ல ஒரு ட்ரைலரே காரணம்.
அந்த ட்ரைலர் - இதுதான். ட்ரைலர், அதிலிருக்கும் சில ஷாட்ஸ், படத்தைப்பற்றி எதாவது brief - இதைவைத்துதான் படங்கள் பார்ப்பது வழக்கம். Of course, The Ornithologist என்று பெயரிருந்தாலும் ட்ரைலர் பார்க்கும்போதே இது typical bird watching வகை படமில்லை என்று புரிந்துவிட்டது. ஆனாலும் முதல் பதினைந்து நிமிடங்கள் முழுக்க முழுக்க பறவை நோக்குதலைப் பற்றியது. பறவை நோக்குதலின் mood, rhythm, ambience - மூன்றையும் படுதுல்லியமாக அந்த ஆரம்ப பதினைந்து நிமிடங்களில் காணலாம். திரைப்படங்களில் இது வெகு அரிதாகவே நிகழும்.
இந்தப்படம், Stranger by the lakeகை ஞாபகப்படுத்தியது. அந்தப்படமும் இதுபோன்றே ஏன், எதற்கு, எங்கு போன்ற கேள்விகளை தாண்டிய படம். டிபிகல் சர்ரியல் படங்களுண்டு. இது சர்ரியல் படமென்று ஒவ்வொரு காட்சியும் அதனை ஊர்ஜிதப்படுத்துவதுபோல சர்ரியல்நெஸ் முகத்திலடிக்கும். சிலவகை படங்களுண்டு. கொஞ்சகொஞ்சமாக நம்மை உள்ளிழுத்து படம் முடிந்த பிறகும் அந்த trippiness நம்மை விடாது. ஆர்னிதாலஜிஸ்ட் அப்படியான படம். Cinematography அவ்வளவு பிடித்தது.
Fernando, ஒரு ஆர்னிதாலஜிஸ்ட். ஆற்றின் கரையில் டெண்டமைத்து பறவைகளை வெகு தீவிரமாக அவன் கண்காணித்துக் கொண்டிருப்பதிலிருந்து படம் ஆரம்பிக்கும். கடுமையான குளிர். பனி மூட்டம். ஆனாலும் ஆனந்தமாக பனிக்கு ஊடே அவ்வளவு குளிர்ந்த நீரில் லயிப்புடன் நீந்திக்கொண்டிருப்பான். பின்பு Kayak எனப்படும் சின்னப் படகை எடுத்துக்கொண்டு ஆற்றில் செல்லத்தொடங்குவான். சற்றென்று Black Stork பறவை கண்ணில்படும். அல்லது பறவையின் கண்ணில் இவன் படுவான். Transfix என்போமே அதுபோல மெய்மறந்து பைனாகுலர் வழியாக அப்பறவையை பார்த்துக்கொண்டிருப்பான் (ஏன் மேலே அந்த ஒரு நாரையைப் பற்றி சொன்னேனென்று இந்தக்காட்சியை காணும்போது புரியும்). சுவாரஸ்யத்தில் ஆற்றின் போக்கை கவனிக்கத்தவற, வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு படகு கவிழ்ந்துவிடும்.
இரண்டு சீன யாத்ரீகர்கள். யார், என்னவென்று ஒன்றுமே தெரியாது. எப்படி அந்தக்காட்டிற்குள் வந்தார்கள்...அதுவும் தெரியாது. அவர்கள், Fernando மயக்கமான நிலையில் கரையொதுங்கி இருப்பதைக்கண்டு, முதலுதவி எல்லாம் செய்து அவனை காப்பாற்றுவார்கள். பயணக்களைப்பில் அவர்கள் ஒரு பக்கமும் இவன் ஒரு பக்கமுமாக தூங்க, மறுநாள் Fernando எழும்போது முழுவதுமாக கட்டப்பட்டுக் கிடப்பான். எல்லாம் அந்த சீனர்களின் வேலை. என்ன காரணம் ?. ம்ஹும். வழக்கம்போல் ஒன்றும் தெரியாது. அவனை என்ன செய்வதென்று திட்டம் தீட்டுவார்கள் பாருங்கள். அதைக்கேட்டு பேஸ்தடித்து கஷ்டபட்டு அவர்கள் பிடியிலிருந்து தப்பித்துவிடுவான். அடுத்தநாள் இரவில் இன்னொரு கூட்டத்தை காண நேரிடுகிறது. அக்கூட்டத்தை எப்படி விவரிப்பது ?. "ஒரு மார்க்கமான" கூட்டம் ?. இத்தனை விஷயங்கள் நடந்தாலும் அவன் முகத்தில் ஒருவித அமைதி இருந்துகொண்டேயிருக்கும். அவ்வளவு களோபரத்திற்கிடையேயும் பறவைகளை கவனிப்பதை விடமாட்டான். அடுத்தநாள் காலை. நாயின் குறைப்பு சத்தம் கேட்டு கண்விழித்துப் பார்த்தால், அந்தக் காட்டில் ஒரு ஆட்டுக் கூட்டம். அக்கூட்டத்தின் மேய்ப்பன் பெயர்... என்னவென்று யூகித்திருப்பீர்கள். ஜீசஸ். காது கேட்காத, வாய் பேச முடியாத மேய்ப்பன். அந்த நாயும் அவனுமாக சேர்ந்து ஆட்டுக்கூட்டத்தை மேய்த்துக்கொண்டிருப்பார்கள். அதன் பிறகு நடக்கும் கதையை விவரிப்பது கடினம். பார்த்தாலொழிய புரியாது. படம் முடியும்போது இன்னொரு கதாபாத்திரம் உள்ளே வரும். Anthony. Fernando --> Jesus <-- Anthony, இதுதான் கதை.
Joao Pedro Rodrigues. எப்படி இந்தாள் இவ்வளவு துல்லியமாக பறவை நோக்குதலை கையாள முடிந்தது என்று தேடினால்.."I wanted to be an ornithologist when I was a kid. That was the main desire behind making the film. It’s always been present in me. My parents were both physicists, so I was raised with a scientific and rational way of looking at the world. Before studying cinema, I studied biology. Cinema interrupted this, and in a way I replaced this love of watching and observing birds in the wild and being alone, although I never felt alone because I felt surrounded by nature and living creatures.
I’m a very rational person who’s not religious at all. But I’m very attracted to the idea of how religion is told. What made religion interesting for me was art. I’ve always found it really interesting to work with myths, and not only Portuguese myths. During the Portuguese dictatorship, which ended in 1974, religion was one of the symbols, one of the pillars of the regime. This is why I thought it would be interesting to focus on an essential Catholic symbol for Portugal, Saint Anthony; a saint in a constant state of transformation. In religion itself, sacred paintings are an attempt to give faces and bodies to the saints; beings who are both transcendental and physically powerful. The persons depicted are so physically powerful that they become almost blasphemous. I find this contradiction in religion itself fascinating, the idea of translating something transcendental into images".
ஏன் இந்தப் படம் என்னை ஈர்த்தது ? நானொரு birder என்பதாலா ? நிச்சயமாக இல்லை. போஸ்டின் ஆரம்பத்திலிருக்கும் quote தான் காரணம். படம் அந்த மாதிரி. இன்னொரு காரணம், I never felt alone because I felt surrounded by nature and living creatures...இதை படித்துவிட்டு உணர்ச்சிமிகுதியால் கத்தாத குறை. அந்த மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. "காடு ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது". இப்படியெல்லாம் சொல்வது படு க்ளீஷேவாகிவிட்டது. ஆனாலும் எனக்கு வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை. பறவைகளை பெர்னாண்டோ நோக்குவதுபோல, காடும் அதிலிருக்கும் பறவைகளும் இன்னபிற உயிரினங்களும் அவனை அப்செர்வ் செய்யும். காடுகளின் தனித்துவமே அதுதான். நமக்குத் தெரியாமல் ஆயிரம் கண்கள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கும்; ஆயிரம் நாசிகள் நம்மை மோப்பம் பிடித்துக்கொண்டிருக்கும். காடுகளை கண்டபடி romanticize செய்தே பழகிவிட்டோம். காடு, எந்தளவிற்கு கருணைமிக்கதோ அந்தளவிற்கு கொடூரமானதும் கூட. இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று எதுவும் கிடையாது. எதுவும் சாத்தியம். அச்சாத்தியங்களின் ருசியை மிகமிக கொஞ்சமேனும் அறிவேன்.
மிகப்பிடித்த என்று சொல்வதை விட, மிகவும் பாதித்த ஓவியங்களில் ஒன்று. The Scream. Lucid dreamமாக இதுமாதிரி ஒரு உருவம் அவ்வப்போது தூக்கத்தில் வருவதுண்டு. இதை வரைந்த Edvard Munch, Van Gogh - இருவருமே எக்சிஸ்டென்சியலிச படைப்புகளை அதிகளவில் படைத்தவர்கள் இருவரும் (Of course, அந்த காலகட்டத்தில் existentialism என்ற வார்த்தையே புழக்கத்தில் இல்லை). டக்கென்று அவர்களின் ஓவியங்களைப் பார்த்தாலே ஒரு விஷயம் துண்டாகத் தெரியும். Human suffering (கனத்த மௌனத்தில் - கன்னத்திலோ/தலையிலோ கைவைத்தபடியான ஆட்களை அதிகளவில் இவர்களது ஓவியங்களைப் பார்க்கலாம்). இருவருமே அதை வெளிப்படுத்தியவிதம்தான் அலாதியானது. ஒன்றுமில்லை, சாதாரண ஷூக்கள். அதைவைத்து Van Gogh வெளிப்படுத்திய emptiness ஏராளம். அதுமாதிரியே, Munch திரும்பத்திரும்ப அலைக்கழிப்பிற்குள்ளான/ஏமாற்றமடைந்த முகங்களாகவே வரைந்து தள்ளினார். அவர்களது காலத்துக்கு முந்தைய ஆட்களில் பலரும் இவ்வாறான ஓவியங்களை வரைந்திருந்தாலும், அதிலொரு நளினம் இருக்கும். Sufferingல் என்ன எழவு நளினம் வேண்டிக்கிடக்கிறது; நம்மைச்சுற்றி அனைத்துமே வெறுமையாகவும்/அசௌகரியமாகவும் இருக்கும்போது....இப்பிடியெல்லாம் யோசிக்காமல் மிகஇயல்பாகவே அவர்களுக்கு இந்த ஓவியங்கள் கைவரப்பெற்றது. காரணம், அவர்கள் வாழ்க்கை அப்படி. அது தனிக்கதை.
எதற்கு இந்தப்பேச்சை எடுத்தேன் என்றால், க்ரேக்கின் Epicurus காலம் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை, மனித இனம் - ஒரு விஷயத்தில் இருந்துமட்டும் தொடர்ந்து ஓடிஒழிய பிரயத்தனப்பட்டுக்கொண்டே இருக்கிறது. Suffering. எந்தவடிவில் இருந்தாலும், அதிலிருந்து தப்பித்தால் போதும் என்ற மனநிலை (பல மதங்களிலும், தன்னைத்தானே வதைக்குள்ளாக்கும் விஷயங்களுக்கும் இதற்கும் நிறைய தொடர்புண்டு என்றுபடுகிறது). Sufferingல் இருந்து மனிதர்கள் தப்பிக்க ஓடிய/ஓடும் escape routeடை நான்கு வழிகளாகப் பிரிக்கலாம். ஏகப்பட்ட கிளை பாதைகள் உண்டென்றாலும், நான்குதான் பிரதானமாக கண்ணுக்குத் தெரிகிறது. மதம் - அரசியல் - தத்துவம் - கலை.
இதில் மதமும் - அரசியலும் தான் மிகமுக்கியமானவைகள். பெரும்பான்மையான மக்களை நேரடியாக பாதிக்கும் ஆற்றல் பெற்றவைகள். ஒருவேளை மனிதனுக்கு பயம்/துன்பம்/ஆற்றாமை/வதை போன்றவைகள் இல்லாமல் இருந்திருந்தால், கடவுளுக்கு வேலையே இருந்திருக்காது. மதங்கள் தோன்ற வாய்ப்பேயில்லை. பல அரசியல் கோட்பாடுகளும் சித்தாந்தங்களும், இந்த sufferingகை ஒழிக்கிறேன் என்று தோன்றியவைகள்தானே. கம்யூனிஸத்தை எடுத்துக்கொள்வோமே. அதன் ஆரம்பம் - human sufferingகை வைத்துதானே இருந்தது. அதோடு சேர்த்து மார்க்ஸ் - religious sufferingகைப் பற்றியும் பேசத்தவறவில்லை. Capitalismமின் கைப்பாவை தான் மதம் என்று கடுமையாகவே எழுதித்தள்ளினார். ஆனால் மதமும் - அரசியலும் ஒரு விசயத்தில் மட்டும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதல்ல. அதிகாரம். அன்றைக்கு க்றிஸ்தவ மதம் தொடங்கி இன்றைய புத்த மதம் வரை (ஸ்ரீலங்கா நல்ல உதாரணம்) எல்லா மதங்களின் ஆகப்பெரிய குறிக்கோள்களில் ஒன்றாக அதிகாரமே முன்னிலையில் இருக்கிறது.
அரசியல் மட்டும் சளைத்ததா. ஒன்றும் வேண்டாம். "மதம் ஒரு ஓபியம்" என்ற கம்யூனிஸ நாடுகளில் என்ன நடந்தது ? "அதிகாரமே ஓபியம்" என்ற நிலையைத்தான் அடைந்தது. ஒரு சின்ன வேலை செய்யுங்களேன்: ட்ராட்ஸ்கி எப்படி/எங்கு இறந்தார் ? என்று தேடிப்படித்துப் பாருங்கள். அதிகாரத்தின் போதை அளப்பரியது. எப்பேர்ப்பட்ட நிலையான மனிதனையும்/ஆட்சியையும் தன்வசப்படுத்தும் ஆற்றல் அதிகார போதைக்கு உண்டு. ரொம்ப சிரமப்படுவானேன். பல தொலைக்காட்சிகளிலும் RSS/பிஜேபி ஆட்கள் முன்னெப்பொழுதையும்விட தற்போது அதிகளவில் தங்கள "கருத்துகளை" வெளிப்படையாகப் பேசுவதை எப்படி பார்ப்பது ?.
Sci-Fi என்றாலே one dimensionalலாக பறக்கும் தட்டு, டைம் ட்ராவல் என்ற படங்களா போய்க்கொண்டிருந்த ஒரு காலத்தில், தர்கொவ்ஸ்கி வெறிமுத்திய சமயம்....Stalker பார்க்க நேர்ந்தது. Stalkerம் Solarisம் பெரிய revelation என்றே சொல்லலாம். அறிவியல் புனைவு என்பது வெறும் வேற்றுகிரகம், டைம் ட்ராவல், இத்யாதிகள் என்றில்லாமல் காலம்/நேரம் எல்லாம் கடந்த ஒரு environment எப்படி இருக்கும் (மிகமெதுவாக நகரும் காட்சிகளுக்கான காரணம் இதுவாக இருக்கலாம்) - ஒரு பார்வையாளராக Sci-Fi படத்தை பார்க்கிறோம் என்பதைத் தாண்டி, நாமே அந்த இடத்தில் வாழ்ந்தால் ? இதுதான் அந்த இரண்டு படத்திற்கும் அடிப்படை. வெறுமனே படத்தை "பார்த்தல்" என்றில்லாமல்....Stalker படத்தில் வருவதைப் போன்ற ஒரு zoneனிற்குள் போகநேர்ந்தால் ? இந்த psychological approachசை கற்றுக்கொண்டது தர்கொவ்ஸ்கியின் படங்களில் இருந்துதான்.
அப்படியான Stalker படத்தின் கதையை/திரைக்கதையை எழுதியது Arkady and Boris Strugatsky சகோதரர்கள். 1964ஆம் ஆண்டு அவர்கள் எழுதிய Hard to be God என்ற கதை படமாக வந்துள்ளது என்றவகையில் தான் இந்தப்படம் அறிமுகம். படத்தின் பெயர் - Hard to be God. ட்ரைலர் பார்த்தேன் - அதகளம். அவ்வளவுதான். மேற்கொண்டு எதுவும் யோசிக்காமல் படம் பார்த்தாயிற்று. அதன்பிறகு தான் Alexei German என்ற ஜீனியஸ் பற்றி தெரியவந்தது. இந்தாளைப்பற்றி இத்தனை நாள் தெரியாமல் இருந்துவிட்டோமே என்று வருத்தப்படும் அளவிற்கு இருந்தது Hard to be God. இந்தப் படம் வெளிவரும்போது அவர் உயிருடன் இல்லை. எப்பேர்ப்பட்ட உழைப்பிற்குப் பிறகு இந்தப் படம் வெளிவந்தது என்று தெரிந்துகொள்ள விருப்பமிருப்பின், இங்கே படித்துப் பார்க்கலாம்.
மதம் + அதிகாரம் = Suffering, இம்மூன்றும் குவியும் புள்ளிதான் இந்தப் படம். எவ்வளவு brutalலாக அதன் விளைவுகளைக் காண்பிக்க முடியுமோ அத்தனை தூரம் காண்பித்திருக்கிறார்கள். இதில் ஏகபட்ட அரசியல்/கலை பற்றிய பகடிகளும் உண்டு. நிறங்கள் எல்லாம் குறியீடா ? Knowledge என்பது என்ன ? அதைக் கற்றுத்தரத்தானே இங்கிருந்து அங்கே 30 பேர் போனார்கள். ஆனால் இந்த "ஞானம்" யாருக்கானது ? எப்படியானது ? Communism தான் மக்களது விடுதலைக்கான வழியா ? ஏகப்பட்ட கேள்விகளும் உள்குத்துகளும் படத்தில் உள்ளன. குறிப்பாக ஐரோப்பிய சமூகத்தைப் பற்றி. மேற்கொண்டு ஒரு வார்த்தை சொன்னாலும், படத்தைப் பற்றிய உங்கள் பார்வையை அது பாதிக்கக்கூடும். நீங்களே பார்த்துவிடுங்கள். ஆனால், நிச்சயமாக எனக்கொரு தனித்துவமான அனுபவத்தை இந்தப்படம் கொடுத்ததுபோல உங்களுக்கும் கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.
I was born a suspect. Came out my mother’s stomach; anything that happened in a three-block radius, I was a suspect! White America is so scared of black teenagers. I walk down the streets, women are grabbing hold of their Mace, everybody’s tucking in their chains, people are hitting their car doors, people get into karate stances. I look up in the air, there’s a bunch of old white ladies on the phone - they’ll dial nine-one and just wait for me to do something
- Chris Rock
Stage 1:
1) Bruce Lee பிடிக்குமா: செக்
2) Rap பிடிக்குமா. குறைந்தபட்சம் குழந்தைகளுக்குப் பரிச்சயமான Eminemனாவது கேட்கும் பழக்கம் உண்டா: செக்
3) தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறீர்களா, தமிழ் சிற்றிதழ்களில் வரும் சினிமா தொடர்பான விமர்சனம்....whatever....படித்த பிறகு: செக்
4) Friends (அ) மெட்டி ஒலி நாடகம் பிடிக்குமா : செக்
5) டிவியில் சிவாஜி படம் ஓடும்பொழுதோ/சட்டசபையில் ஜெயலலிதா பேசும்பொழுதோ...தன்னையறியாமல் அடக்கமாட்டாமல் சிரிப்பு வருமா: செக்
6) "ழ"வை சரியாக உச்சரிக்க வருமா: செக்
7) தாகமெடுத்து "இலக்கிய" கூட்டங்களுக்குப் போனதுண்டா: செக்
8) அட்வைஸ் கேட்பதும்/சொல்வதும் மிகப்பெரிய கடுங்கொடுமை என்பவரா: செக்
Stage 2:
9) தன்னைத்தானே எவ்வளவு மோசமாக சுயபகடி செய்ய முடியுமா அத்தனை மோசமாக சுயபகடி செய்துகொள்பவரா: செக்
10) Misanthropic symptoms உள்ளவரா: செக்
11) Reputation ஒரு ஆபத்தான மிருகம் என்ற நினைப்பில் உள்ளவரா: செக்
12) எதையாவது சதா நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளவரா: செக்
Stage 3:
13) தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்பதை எப்பொழுதும் ஆர்வமாக கவனிக்க முற்படுபவரா: செக்
12) எல்லா மாற்றங்களும் நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்ற நிதர்சனத்தை உணர்ந்தவரா: செக்
13) Principle of Causation பற்றி புரிந்து வைத்துள்ளவரா: செக்
இந்த 13 பாய்ன்ட்ல் 8 - 10 points பொருந்தினால், இந்த Stand-up comedyகளும்/கார்ட்டூன்களும் உங்களுக்கு மிகமிகப் பிடிக்கும். 10 - 12 points பொருந்தினால், இந்த பதிவு உங்களுக்கானது கிடையாது. ஏற்கனவே இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டுமே. 12 pointsக்கு மேல் பொருந்தினால், நிச்சயம் ஒரு செமையான satiristடாக வர எல்லா தகுதியும் உங்களுக்கு உண்டு. அந்த ஜாதிக்கு அப்பிடியொரு பஞ்சம் இங்கு நிலவுகிறது. Political Satirist, Social Satirist எல்லாம் இங்கு வெகுவெகு அபூர்வம்.
Every sixth person in the world is an Indian. இது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அதுபோலவே, உலகளவில் திறந்தவெளியையே கக்கூஸாக பயன்படுத்தும் 110கோடி பேரில்....63.8கோடி ஆட்கள் இந்தியர்கள். இதுவெறும் தகவல் கிடையாது. பெண் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கு போகாமல் இருப்பதில் தொடங்கி ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயம் இது. Now, இந்த சீனை பார்ப்போம்.
ஐயோ..ஐயோ..ஐயோ..ஐயோ..ஐயோ..ஐயோ..ஐயோ...ஐயோ..ஐயோ..ஐயோ..இந்தியாவை கேவலப்படுத்திவிட்டார்களே (Slumdog Millionaire படத்திற்கு அப்படித்தான் குரல் கொடுத்தார்கள்) என்று சிலருக்குத் தோன்றலாம். சிலர் காமடியாக எடுத்துக்கொள்ளலாம். அது இரண்டாம்பட்சம். மிகமுக்கியமானது, மேலே பார்த்த புள்ளிவிவரம். அது facts. நம்மைச்சுற்றி என்ன நடக்கிறது என்ற கவனம் இல்லாவிடில், இதுவெறும் offensive காமெடியாக/அல்லது ஜாலியாக கடந்து போய்விடும். ஆனால் சிலபல விஷயங்கள் பற்றிய பின்புலம்/இல்லை, அதைத்தேடிப் போகும் ஆர்வம் இருந்தாலொழிய இதுபோன்ற காமெடிகளை எரிச்சலாகவே பார்க்க வேண்டியிருக்கும். இதை க்ரியேட் செய்தவர்களுக்கு, இத்தனை தகவல்கள் தெரிந்திருக்கலாம்/தெரிந்திருக்காமல் போகலாம். ஆனால், நம்மை கொஞ்சமேனும் அசைத்துப்பார்த்தால் போதும். இது ஒன்றும் பிரமாதமான காமெடி இல்லைதான். ஆனால், அதற்கே அந்த லின்க்கில் இருக்கும் காமென்ட்களைப் பாருங்கள். ட்ராக்மாறி எங்கு போகின்றதென்று.
இதுபோன்ற பல காமெடிகளின் crux இதுதான். ஒரு படு offensive விஷயத்தை அதேயளவிற்கு/அதைவிட தூக்கலாக offensiveவாக சொல்வது. உதாரணமாக, உலகம் தோன்றிய வரலாறு/மனிதர்கள் தோன்றிய வரலாறு என்று நமது பண்டிதமணிகள் அடித்துவிடும் சரடுகள் ஒரு லாஜிகல் மைன்ட்க்கு insultingகாவும்/offensiveவாகவும் தெரியத்தானே செய்யும். அதை சகித்துக்கொள்வதுபோல இதையும் சகித்துக்கொள்ள வேண்டியதுதான். நம்மை pampering செய்வது இதன் நோக்கமல்ல; உலுக்குவது. நல்ல art form அதைதான் செய்ய வேண்டும். அதையே சீரியஸாக சொல்லாமல், இப்படி காமெடியாக சொல்வதன் மூலம், எளிதில் மக்களை யோசிக்க வைக்க முடியும்; "ஆமால...இதையா நம்பிகிட்டு/செஞ்சுகிட்டு இருக்கோம்" என்று நமது ஈகோவை சற்று அடக்கி, வேறு கோணத்தை முன்வைக்கும். Of course, இதுபோன்ற எல்லா காமெடி ஷோ/டாக் க்ஷோக்களின் நோக்கமும் இதுதான் என்று சொல்லவே முடியாது.
எனது கணிப்பின்படி இதுபோன்ற சூழல் இந்தியாவில் (குறிப்பாக தமிழ்நாட்டில்) நடக்க வாய்ப்பேயில்லை என்று தோன்றுகிறது. Yes...அங்கொன்றும் இங்கொன்றுமாக சில முயற்சிகள் நடந்தாலும் அடுத்த கட்டத்திற்கு எதுவும் போகவில்லை/போகவும் முடியாது. ஆர்வமுள்ள ஆட்கள் இருந்தாலும், சிஸ்டம் விடாது. அடி வெளுத்துவிடுவார்கள்; சாவு நிச்சயம். ஆனால் இலைமறைகாயாக செய்ய முடியும். 60களின் தென்னமெரிக்க சினிமாவில் இதுபோன்ற பகடிகள் அதிகம். ஏன் சிஸ்டம் வரைக்கும் போவானேன். ஜாலியாக Fbயிலோ, twitterயில் கூட கலாய்க்க முடிவதில்லை.
அதையும் மீறி ஏதாவது முயற்சி நடந்தாலும், அடுத்தவருக்கு என்றால் பிரச்சனையில்லை. ஆனால் என்னை/என் ரசனையை/என் நம்பிக்கைககளை கலாய்த்தால் அதை வெகு சீரியஸ் முகத்துடன் அணுகுவது நமது ஆட்களின் பிரச்சனை. சுயபகடி என்பது நம்மாட்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது. அப்படியான சுயபகடியின் மூலம் Black peopleன் வலிகளை/குசும்புகளை/கைவிட வேண்டிய விஷயங்களை சொல்வதில் கைதேர்ந்தவர்கள் Chris Rock, Dave Chappelle. பழைய ஆட்களில் Richard Pryor, Bill Cosby, Dick Gregory (இந்தாளை மிகப்பிடிக்கும். இதைப் பார்த்தால் ஏனென்று புரியும்). இதில் Bill Cosby, போன வருடம் sexual assault கேஸில் மாட்டிக்கொண்டார். விடுவார்களா...வறுத்தெடுத்துவிட்டார்கள். Chirs Rockன் இந்த show, one of my all time favorites.
அதுபோலவே Dave Chappelleயின் இந்த முழு ஷோவும்.
நம்மாட்களுக்கு Memeகளினால் மட்டுமே பரிட்ச்யமான George Carlinனில் ஆரம்பித்து Louis C K வரை இன்னொரு பக்கம். இதில் Carlin - அமெரிக்க வாழ்வின் அபத்தங்களை போட்டுத்தாளிப்பதில் வல்லவர். கூடவே, கடவுள் மறுப்பும்/அரசுகளின் மீதான விமர்சனமும்.
Lewis Black. இவரது ஸ்டைல் எனக்கு மிகப்பிடிக்கும். கொஞ்சகொஞ்சமாக rantடை ஆரம்பிப்பார்.
Bill Maher. அலட்டிக்கொள்ளாத ஸ்டைல்
Stephen Colbert. Deadpanனிற்கு சிறந்த உதாரணம். இவரும் Eminemம் அடித்த கூத்தை நீங்களே பாருங்கள். இவர் அவ்வளவாக stand-up நிகழ்ச்சிகளை நடத்துவதில்லை
Louis CK. Freestyle comedian என்று சொல்லலாம். சமீபத்தில் கூட Child abuseசைப்பற்றி பேசுகிறேன் பேர்வழி என்று வாங்கிக்கட்டிக்கொண்டார்.
மேலிருப்பவர்கள் போலல்லாமல், சிரித்தால் போதும்/நோக்கமெல்லாம் ஒன்றுமில்லை என்று வகையில் Kevin Hart, Aziz Ansari, Russell Peters போன்ற ஆட்கள் உண்டு. என்னதான் சொன்னாலும், Russell Petersன் இந்த ஷோ (முழு ஷோவும்) எப்பொழுது வேண்டுமென்றாலும் திரும்பத்திரும்ப பார்க்கலாம்.
பெண்களில் (தனியாக இப்படி சொல்வதில் உடன்பாடில்லை என்றாலும், அவர்களது ஷோக்களின் தீம்கள் அப்பிடி இருப்பதால்) Whoopi Goldberg (மொக்கை) காலம் தொடங்கி இன்றிருக்கும் Sarah Silverman, Amy Schumer பலர் இருந்தாலும் எனக்குப் பிடித்தது Janeane Garofalo தான்.
இதுவொரு பக்கம் என்றால், அடல்ட் கார்ட்டூன்கள் இன்னொரு பக்கம். இதில் Family Guy, South Park (எல்லா சீசனும் பார்த்தால் நிச்சயம் போர் அடிக்கும். Repetitiveவாகவே இருக்கும். டைம் வேஸ்ட் செய்ய வேண்டாம்) பிடித்தமானது. Boondocks டவுன்லோட் செய்ததோடு சரி. இன்னும் பார்க்க ஆரம்பிக்கவில்லை. அதனால், இந்த கார்ட்டூன்களை வெறித்தனமாக பார்த்த Hari Krishஸிடம் சிலபல வரிகள் எழுதித்தருமாறு கேட்டேன். அவரும் ஆஃபிஸ் நேரத்தில் கர்மசிரத்தையாக உட்கார்ந்து எழுதிக்கொடுத்துள்ளார். Over to Hari Krish
--------------------------------------
The theme of the following Adult cartoons might be off putting for you, if you are easily offended. So, please feel free to steer clear. And for the some of us who enjoy racial, dark, gruesome, offensive humor, we are going to have a very good time.
Some of the contents in the adult cartoons discussed here could not be reproduced in the live action format because … you will know .. if you watch them.
One thing that we can agree that the Americans are good at is taking a good look at themselves and laugh. We are nowhere near their sense of humor. It is evident when we watch their movies, series , video games, stand-up comedy and celebrity roasts.
These are the 3 adult cartoons i liked the most. The reason being obviously, the offensive humor. I am sucker for that.
South park: started airing in the year 1997 with the following disclaimer
Well, now you know what you expect. And what you get is the 22 minutes of unruly, offensive, gruesome toilet humor you can ever imagine. This is the show that took insult comic to the whole new level. You cannot watch one of the episodes without thinking, ”they made fun of that” or “How can you make fun of that?” and thats where they win.
The main characters are 9 year old 4th grade children of southpark elementary. After watching a couple of seasons you will not help but becoming a fan of one of the main character “Eric Cartman” who is america’s darling. The irony here is Cartman is everything that is wrong with America and they are 100% aware of that. South park has a huge cast which includes Stan the voice of reason, Kyle the Jew, Kenny the dirty one, Randy the America’s dad, Mr Hanke the chirstmas Poo (It is exactly what you think it is), Mr.Garrison the sexually confused elementary school teacher who had two sex change operations in the course of the series, Terrance and Philip the Canadian comedy duo, Cartman the jew hating, fat, ignorant racist kid and Jesus christ and satan as reoccurring character.
There is a huge, in your face parody of celebrities that include Tom Cruise, Kanye West, Mel Gibson, Oprah, and Muhammed (which explains the threats ). So, if you are a celebrity and if you mess up, you end up in a episode of south park. by the way, most of the characters are voiced by Matt and Trey the creators. This is the show that put “Comedy central” on map which has become famous for introducing some of the best stand up comedians in the history of the US and there are always “the Roasts”.
Cartman best scene:
“When you're born into this world, you're given a ticket to the freak show. If you're born in America you get a front row seat” – George Carlin
And south park is america’s conscious with sick sense of humor. South park has been threatened, criticized and sued for its political and religious satire over the years and but the makers Trey Parker and Matt Stone would not stop. South park is by far the Maxx usage of Freedom to express. If Eminem were a Cartoon, it would be south park. Over the years, south park has gone through many changes but the best one is adapting to the serial elements and reoccurring story lines. Watch the seasons 18 and 19 (By far the best season in recent years)
And finally, it is free. You can watch the full episodes at southpark.cc.com. because, as the creators say “Fuck Piratebay”.
P.S: There is a hilarious documentary about the making of South park which is available in their site. South park also released a kick ass video game and a full, length movie which was nominated for academy awards for best original song in a feature film and this is how the creators walked the red carpet.
Family Guy:
If you are one of those guys who do not like the yellow people of the Simpsons and looking for a better and adult version, look no further and watch “family guy”. TThe creator Seth Macfarlane has a impressive resume with the movie Ted, the other TV shows “Cosmos:: The space time odyssey”, The Cleveland show , the spin -off of family guy (Don’t watch it, it is not worth it) and the American dad. When he is not repeating the living shit out whatever he is good at , he voice acts, directs and writes for family guy. This is one of those shows that audience love so much they have made FOX revive it not one but twice after being cancelled.
The infamous offensive bits:
Family guy is grown man’s Simpsons that revolve around the Griffins, a dysfunctional family that is led by ignorant, douchy and absolutely stupid Peter griffin. The satire on America here is done mostly by flashbacks and cutaways which became overwhelming at some point, it led to south park make a couple of special episodes about how corny and predictable the show is. (The Simpsons team sent them flowers as a token of appreciation ). Despite getting cancelled twice and being accused of being a Simpson rip off, fans still tune into family guy because of the shows hilarity and self awareness. The shows sometimes makes fun of itself when it doesn’t call bullshit on other shows and celebrities (Check out the news sequence of family guy. Its hilarious).
The first thing that attracts you in my opinion is the cast, just like south park , family guy’s huge cast is its main asset. Especially, Stewie Griffin – the an old year old toddler (one of the best things with cartoons/animes , the cast doesn’t have to age) with Posh British accent and undying rage to kill his mother Lois. Macfarlene said he influence for Stewie’s character is “Rex Harrison” , the guy who played “Henry Higgins fin My fair lady” . The exploits of Brian Griffin (The families pet dog ) and stewie duo has become a huge hit among the fans. Apart from being a social satire , FG stands out for his dry wit and sarcastic humor mostly pointed straight at religion and taboo subjects. It is not as brutal as south park but FG has its way of giving it to the intended.
The Situation of FG being funny or unfunny solely depends on the certificate the episodes get mainly during the later years. I think it tries too hard to be funny these days. But hey, it might just be me and the show has its moments. Macfarlene’s singing abilities is well known from his Oscar hosting and Graham Norton show appearances and he goes full on Bruce Springsteen on the show which led to some of the best original songs that TV can offer. Unlike, south park FG has its array of celebrity cameos who “willingly” take jabs at themselves.
Don’t miss this song about FCC, the censor equivalent. Jesus and death appear as reoccurring characters in family guy as well (These guys would not leave them alone) with Adam west (Batman 1960) paying himself as himself as Mayor.West (one of the most bizarre characters in T history). FG has many straight to DVD movies released during its successful run which includes 3 star wars parodies (Macfarlene is a huge ass nerd) if you‘d like to check ‘em out. Finally , if you like to watch a borderline alcoholic mom throw up on her baby, a liberal douche, atheist , drug addict, smug dog be the voice of reason of the family, A toddler build a time machine to stop his birth or Peter Griffin fight a giant chicken , you will not be disappointed.
The Boondocks:
You might have noticed that I have compared Family guy with south park all, over the review of the same. Because of south park’s reach and being a phenomenon. You can't help but compare a newly airing series to south park as the latter laid the foundation deep and strong for a newbie to follow. Here is where The boondocks stands out.
Have you wondered why non-black people are so much obsessed with the African American / Hip hop culture ?. I believe because its is FRESH. So, just like its background and settings which is predominantly black The boondocks came out of nowhere to become one of the influential anime/adult cartoon of last decade. Running for only short lived 4 seasons , this is one of the freshest anime you will come across.
The opening sequence starts with a Afro Samurai influenced visuals with Asheru’s “Judo flips” as theme song (My ring tone for last 4 years). The 60s and 70s blaxplotation/ black power influenced lyrics what got me into this in the first place.
Two little brothers with polar opposite personalities, one being a thinking black man and the other one being a wanna be thug and her token dirty old black grandpa move to a sub urban white neighborhood. What would you do with the above plot? Well , the creators said one of the influential, thought provoking, social satire in anime format.
This puts the racial events, black on black crimes and reverse racism is perspective while telling a funny story each episode. The animation format is heavily influenced by the Japanese Anime art. This has stirred a lot of controversy for the extended usage of the word “Nigger”( but still has nothing on Quentin tarantino’s usage on the same). Especially when Martin Luther king Jr (Cameo :P ) says it.
This has also added a new phrase in the urban dictionary called “The Nigga moment” - which is the creators witty take on black on black crime. The boondocks doesn’t shy away from parodying and making fun of the contemporary black/ hiphop culture while discussing LGBT and police and government brutality against the minorities.
The first nigga moment:
I don’t have much to say about The boondocks as it has been a very long time and I will leave you to it. One thing I can assure is, if you like Hip hop culture, movies like “Friday”, straight outta Compton, boys in the hood, menace to society and video games like “GTA san andreas” , you will love it.
“Dragob Ball Z Abridged " by teamfoustar channel youtube :
I just have to mention it because even if you haven’t watched a single episode of Dragon ball Z or its sequels , you will love it. Have you wondered DBZ is bit draggy and the humor is too PG13 for you (atleast the American version )?
If so, please do not miss this . This is parody at its best. This adult episode by episode version of DBZ is so funny , even the show creator Akira Toriyama praised it. If you are a Fan and if you want to re watch DBZ with adult rated humor and pop culture references, please do not miss it.
போன மாதம் கோர்ட் படத்தைப் பார்த்தவுடன் எழுத ஆரம்பித்த பதிவு. சோம்பேறித்தனம் காரணமாக அப்படியே போட்டுவிட்டு வேறு வேலையைப் பார்க்க போய்விட்டேன். போன வாரம் சென்னை கார்ப்பரேஷன் வெப்சைட் கண்ணில்பட, கோர்ட் படத்தை பற்றி பெரிதாக எதுவும் எழுதத் தோன்றவில்லை. இதுமாதிரி லிங்க்கை சிலபல வருடங்கள் முன்பு பாத்திருந்தால், அதீத உணர்ச்சிவசப்பட்டு ஒரு போஸ்ட் எழுதியிருப்பேன். ஏற்கனவே அப்படி ஒன்று எழுதியும் இருக்கிறேன். ஆனால் இந்தமுறை இது பழகிவிட்டது. நீங்களும் பெரிதாக ஜெர்காக மாட்டீர்கள் என்று தெரியும். தினமும் இதையெல்லாம் பார்த்துக்கொண்டே தானே இருக்கிறோம். ஆமென்.... வாழ்க பாரதம்.
1996.மாதம், தேதி எல்லாம் நினைவில்லை. இந்தியா விளையாடிக்கொண்டிருந்த ஏதோ ஒரு மேட்ச். அவ்வளவுதான் ஞாபகம். நாங்கள் இருந்தது flat சிஸ்டத்தில். எங்கள் வீட்டின் பக்கத்து வீட்டுக்கு, ரயில்வேயில் வேலை பார்த்து ரிட்டையரான 60+ ஆள் - அவர் மனைவி - அவர்கள் மகன், குடிவந்து சிலபல மாதங்களே இருக்கும். எங்கள் வீட்டு டிவியில் ஏதோ பிரச்சனை என்று அவர்கள் வீட்டில்தான், பத்தியின் முதல் வரியில் சொல்ல ஆரம்பித்த மேட்ச்சை பார்க்க நேர்ந்தது. அந்தகால வெஸ்ட் இண்டிஸ் - இந்திய வீரர்கள் பற்றி பேசிக்கொண்டிருந்த பெரியவர்... திடீரென்று ஒரு இந்திய வீரர் ஆட வந்ததும்... படுடென்ஷனாக பேச ஆரம்பித்தார். "இவுங்கள எல்லாம் உள்ள வுட்டுதான் டீம் நாசமா போச்சு" என்று ஆரம்பித்து டீம் - > கிரிக்கெட் -> சமூக காமென்ட்ரி என்று வேறுவேறு ரூட்டில் என்னென்னமோ கடுமையாக புலம்ப ஆரம்பித்தார். எந்தளவிற்கு பேசியிருந்தால்... கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்துக்கூட என்னால் அதை ஞாபகம் வைத்துக்கூற முடிகிறதென்று பாருங்கள்.
அந்த வீரர் - வினோத் காம்ப்ளி
Court - அப்படியே மனதை நெகிழச்செய்து, ஒரேநாளில் நமது அறிவுக்கண்ணை திறக்கும் படமா...என்றால் நிச்சயம் இல்லை. அதன் நோக்கமும் அதில்லை. இந்திய சினிமாவை தலைகீழாக புரட்டிப்போடப் போகும் படமா என்றால் அதுவும் இல்லை. இதுவொரு மிக எளிமையாக, அலட்டிக்கொள்ளாமல் நமது சிஸ்டத்தை ஆவணப்படுத்த முயன்றிருக்கும் படம்.Passive observerராக நம்மை இருக்க வைக்கும் படம். தினமும் அப்படித்தானே இருந்துகொண்டிருக்கிறோம். வதவதவென்று கருத்து மழை பொழிந்து தள்ளுவதைவிட, passivenessல் தான் தெளிவு பிறக்கும் என்பது என் அசைக்க முடியாத நம்பிக்கை (ஜென்னின் அடிப்படையும் இதுவே). Mass psychology (மராட்டிய நாடகம் முடிந்து – கேமரா staticகாக – படுகிளர்ச்சியாக கைதட்டிக்கொண்டிருக்கும் ஆட்களை காமிக்கும் காட்சியை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்), Judicial absurdity, Bureaucracy என்று இந்தியா இன்று சந்திக்கும் பலமுக்கிய – வெளியே பரவலாக தெரியாவிட்டாலும் – இருப்பே தெரியாமல், மக்களின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் விஷயங்களை படுயதார்த்தமாக காட்டியுள்ள படம். மேலிருக்கும் நான்கு வாக்கியங்கள் படத்தைப் பற்றி வித்தியாசமாக எழுத வேண்டுமே என்று வலிந்து திணித்த வார்த்தைகள் அல்ல. சத்தியமான உண்மை.
கொஞ்சம் சுதாரிப்பாக இருந்திருக்காவிட்டால்...இந்தாள் இந்நேரம் உயிரோடு இருந்திருக்க மாட்டார். அந்த லின்க்கைப் படித்துப்பாருங்கள். மீடியாக்கள் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதற்கான சிறு எடுத்துக்காட்டு. “தூக்கு தண்டனை” மாதிரியான விஷயங்களில் எல்லாம் உணர்ச்சிபிழம்புகளாக பல பத்திரிக்கைகளும்/செய்தித்தாள்களும் கட்டுரை எழுதி வருவது ஞாபகம் வந்து தொலைக்கிறது.
கோர்ட் படத்தை பார்க்கும் முன்னர் அதன் இயக்குனரின் கலந்துரையாடல் ஒன்றைக் காண நேரந்தது. அவருக்கு இருக்கும் தெளிவு மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. அந்த கலந்துரையாடலில் தான் (இங்கே பார்க்கலாம்) மேற்சொன்ன ஜிதன் மராண்டி பற்றி தெரிய வந்தது. அதோடு மட்டுமில்லாமல், தன்னை பாதித்த Krzysztof Kieślowskiன் குறும்படம் ஒன்றைப் பற்றியும் குறிப்பிட்டார். இது கீஸ்லோவ்ஸ்கி திரைத்துறை மாணவனாக இருக்கும்போது எடுத்த படம். இந்தப் படத்தை பார்த்தபொழுது, நமது ரிஜெஸ்ட்ர் ஆஃபிஸ்களிலும் ட்ரஷரிகளிலும் தாலுகா அலுவலங்களிலும் ஒளிந்திருந்து எடுத்ததைப்போல..சத்தியமாக உணர்ந்தேன் (அரசு அலுவலங்களில் எனக்கு ஏகப்பட்ட அனுபவம் உண்டு. ஆனால் கதவின் அந்தப்பக்கத்தில் நின்றபடி. அதைபற்றி பதிவின் கடைசியில் சொல்கிறேன்). அவர் 1966 எடுத்த படம் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் கழித்து ஒரு 27 வயது ஆளை பாதித்திருக்கிறது என்றால்.....கீஸ்லோவ்ஸ்கிக்கு – ஜீனியஸ் என்ற பெயரெல்லாம் சும்மா வந்துவிடவில்லை. (http://bombmagazine.org/article/7129714/chaitanya-tamhane)
ஓ...சொல்ல வந்து மறந்தே போனேன். கோர்ட் படத்தில் வரும் "குற்றவாளியின்" பெயர் - நாராயன் காம்ப்ளே.
அரசும் அதிகாரவர்க்கமும் எடுக்கும் ஒரு முடிவு, போடப்படும் ஒரு கையெழுத்து: ஒருவரை தூக்கில் ஏற்றும்; ஒருவரை விடுவிக்கும்; ஒரு பக்கம் திருநங்கைகளுக்கு சமஉரிமை உண்டு என்று அறிவிக்கும்; மறுபக்கம் விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கும்; இன்னும் போபால் விஷவாயு கொடுமைக்கே சரியான நிவாரணம் கிடைக்காத நிலையில் புதிய அணுஉலைகளை திறக்கச் சொல்லும்; தனி மனிதனாக இதுபற்றியெல்லாம் நம்மால் என்ன செய்ய முடியும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால், குறைந்தபட்சம் சுற்றி நடப்பவைகள் குறித்த பிரக்ஞையுடன் இருக்கலாம். அந்த உரிமையை யாரும் நம்மிடம் இருந்து பிடுங்க முடியாதுதானே. நடுவில் நம்மை திசை திருப்ப லெக்கிங்ஸ் குறித்த கட்டுரைகள் வரும்; மாட்டுக் கறி தடை என்று வரும்; ஒவ்வொரு வெள்ளியும் ஒரு படம் ரிலீஸ் ஆகும்; Facebookல் நம்மை unfriend செய்துவிட்டார்கள் என்ற சீற்றத்தில் நாம் இருக்கக் கூடும் X இதற்கு அப்படியே அந்தப் பக்கத்தில் அதிகார வர்க்கத்தால் பல முக்கிய முடிவெடுக்கள் எடுக்கப்படும். அம்முடிவுகள் நம்மை நேரடியாக பாதிக்கதாவரை......."குமுதம் போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த பத்திரிக்கையிடம் இருந்து...."
July 2015:
நெக்குருகி நிற்க நேர்ந்தது. ஷஷி தரூரின் இந்தப் பேச்சைக் கேட்டு. அதை சிலாகித்து நண்பர்கள் சோஷியல் தளங்களில் எழுதிய கட்டுரைகளை படிக்க நேர்ந்தபொழுது.....கிட்டத்தட்ட அழுதேவிட்டேன். நீங்களும் படித்துப்பாருங்கள்.
Barve Committee (1955) - Malkani Committee (1957) - X Committee - Y Committee - Z Committeeஇப்படி பல கமிட்டிக்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளன...மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது பற்றி. "வேண்டிய வசதிகள் செஞ்சு குடுத்து....இந்த வேல பாக்கச் சொல்லுங்க" என்பதில் ஆரம்பித்து வேறுவேறு வகையான பரிந்துரைகளை இந்தக் கமிட்டிகள் வழங்கியுள்ளது.
இந்த விஷயத்தில் முக்கிய மாற்றம் (குறைந்தபட்சம் சட்ட அளவில்) நடந்ததுEmployment of Manual Scavengers and Construction of Dry Latrines (Prohibition) Act, 1993அறிவிக்கப்பட்ட போதுதான். இதன்படி இப்படி கழிவுகளை அகற்ற ஆட்களை அமர்த்தும் நிறுவனங்கள்/ஆட்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும் - ஒரு வருடம் ஜெயில்/2000. Rs அபராதம். ஆச்சா...இனி 2012ற்கு வருவோம்.
இதுவரை இருக்கும் சட்டங்களால் பெரிதாக எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறி "The Prohibition of Employment as Manual Scavengers and their Rehabilitation Bill, 2012"என்ற மற்றொரு சட்டத்தை பாய்ச்சுகிறார்கள். நேரமிருப்பவர்கள் இந்த சட்டத்தைப் பற்றி படித்துப் பார்க்கலாம். ஆனால் எனக்கு ஒன்று புரியவில்லை. நேரடியாக "இது சட்டபடி குற்றம்" என்று சொல்லித் தொலைய வேண்டியது தானே. கிட்டத்தட்ட 16 பக்கம். தேவையேயில்லாத விவரணைகள், வார்த்தை ஜோடிப்புகள். எல்லோருக்கும் புரியும்படி ரெண்டு பக்கத்தில் அடக்கி எழுத முடியாதா என்ன ?
ஆனால், மேலே பார்த்த அனைத்து சட்டங்களும் - ஒரு விஷயத்தை (ஒப்புக்காகவாவது) முன்வைத்தன. "மனிதக் கழிவுகளை/சாக்கடைகளை அகற்றும் பணியில், தகுந்த பாதுகாப்பின்றி ஆட்களை வேலைக்கு வைப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்"
சென்னை - எனது Phd ஆய்வுக்குரிய பகுதி அதுதான் என்பதால், சென்னையின் கட்டிடங்கள் பற்றி எப்படியெல்லாம்/எப்போதெல்லாம் data திரட்ட முடியுமோ அப்பொழுதெல்லாம் data திரட்டுவது வழக்கமாகவே போய்விட்டது. அப்படி போன வாரம் Chennai Corporation Websiteக்கு சென்றபோது, உண்மையாகவே இது பெரிய அதிர்ச்சியையும்...இதை எப்படி எடுத்துக்கொள்வது என்றும் புரியாத நிலையும் ஏற்படுத்தியது. இப்பொழுது வரை இதன் நோக்கம் என்ன என்று தெரியவில்லை. முதல் பக்கம்...வெப்சைட்ன் முதல் பக்கமே அதுதான். அதில் இப்படியொரு லிங்க்.
நிறைய பேர் இந்த வாதத்தை (?) முன்வைத்து கேட்டிருக்கிறேன். "ஏன் இந்த மக்கள் வேலை செய்ய போக வேண்டும் ? முடியாது என்று சொல்ல வேண்டியது தானே...". விடை இந்த pdfல் இருக்கிறது. அடடா....எவ்வளவு அக்கறையுடன் மொபைல் நம்பர் முதற்கொண்டு துல்லியமாக கொடுத்திருக்கிறார்கள். இந்த லிஸ்டை பார்த்தால் சில patternகள் துல்லியமாகப் புரியும். ஒரே வீட்டில் இருந்து நான்கு பேர் கூட இதே வேலையைச் செய்வதைப் பார்க்கலாம். அதே முதல் பக்கத்தில் சுகாதார நிலையங்கள் குறித்தோ, ஹாஸ்பிடல் குறித்தோ ஏதாவது தகவல் இருக்கிறதா என்று பார்த்தால்...ம்ஹும். (சில டீடைல்களை நானும் பொதுவில் போட ஒப்பவில்லை. அதனால் erase செய்துள்ளேன்).
எனக்கு சென்னை கார்ப்பரேஷனிடம் மூன்றே மூன்று கேள்விகள் உள்ளன.
1) மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் விபரப் பட்டியல் என்றே போட்டிருக்கிறது. எப்பிடி அகற்றுகிறார்கள் ? எவ்வாறு அகற்றுகிறார்கள் ?
2) இந்த pdfன் அவசியம்/பயன் என்ன ?
3) 2012 சட்டத்தின் வரைவுகளுக்கு உட்படாமல் இவ்வேலைகளை நீங்கள் வாங்கிக் கொண்டிருந்தால், (மனசாட்சியை விடுங்கள்) அது சட்டபடி குற்றம் என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா ?
திராவிட கட்சிகள், காங்கிரஸ், பிஜேபி, தமிழ் தேசியம், ஆண்ட பரம்பரை கட்சிகள், ஆளப் போகும் பரம்பரை கட்சிகள்....இன்னும் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களது தேர்தல் அறிக்கையில் இதுவரை "மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது " குறித்து என்ன சொல்லியிருக்கிறார்கள் ? சொல்லியிருக்கிறார்கள் என்று நான் சொல்வது தேர்தல் அறிக்கையைத் தாண்டி - அடிப்படை கட்டமைப்பை எவ்வாறு செயலாக்கப் போகிறோம் என்ற தெளிவு கொஞ்சமாவது உண்டா ? பொதுக் கழிப்பிடங்களை கட்டுவோம் என்று சொன்னால் மட்டும் போதுமா ? எவ்வாறு... அதைவிட முக்கியமாக யார் அதை பராமரிப்பது என்பது பற்றியெல்லாம் இவர்களது பார்வை என்ன ? திடக்கழிவு மேலாண்மை என்பதெல்லாம் மொத்தமாக ஒரே இடத்தில குப்பையைக் குவித்து வைத்து எரிப்பதுதானா ? கிழட்டுப் பயல் மாதிரி ஒரே விஷயத்தை திரும்பத்திரும்ப சொல்லி சொல்லி போர் அடிக்கிறது. மிகமிக அடிப்படை வசதிகளான...."காலையில எந்திருச்சா கக்கா போகும்..அத கழுவ தண்ணி வேணும் (அ) வேற எதாவது வேணும்..." போன்றவைகள் குறித்து என்றைக்கு சீரியசாக செயல் படுகிறோமோ அன்று தான்..Developing country என்றாவது சொல்லிக் கொள்ளும் தகுதி நமக்குண்டு. கோர்ட் படத்தில், நாராயன் காம்ப்ளே உட்பட பல பிரதான கதாபாத்திரங்களும் மராட்டியர்களே. ஜாதி மட்டும் வேறு. அந்த pdfல் இருக்கும் அநேகரும் தமிழரே. ஜாதி என்னவாக இருக்கும் ? இவர்களுக்கு தமிழ் தேசியத்திலாவது இடமுண்டா ? இங்கே செய்யப்படும் அரசியல் எல்லாமே பெரிதும் உணர்ச்சி நிலை சார்ந்தே இருந்துவருகிறது. Social structure சார்ந்த அரசியலுக்கெல்லாம் இங்கு வழியுண்டா என்று தெரியவில்லை. எங்கு சுற்றினாலும் கடைசியில் ஊழல் (உங்கள் ஆட்சியில் ஊழல் - போன ஆட்சியை விடவா - அதற்கு முன்னால் இருந்ததை விடவா - அதற்கு முன்னாடி நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தெரியாதா...) - தமிழ்/திராவிடம் - தமிழர்கள்...இந்த பாய்ன்ட்களில் வந்துதான் இவர்கள் அரசியல் நிற்கும். நீங்கள் என்ன காரணம் வேண்டுமென்றாலும் சொல்லலாம்...இந்த ஆட்சியில் இந்தச் சட்டம் இயற்றப்பட்டது என்று புள்ளி விவரங்கள் தரலாம். அந்த pdfயையே என் கேள்வியாகத் தருகிறேன். இதற்கு தகுந்த விளக்கம் கொடுக்க முடிந்தால், என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன். Word..
அரசு அலுவலகங்களில் பரிச்சயம் உண்டென்று முன்னாடி சொல்லியிருந்தேன் அல்லவா. என் அப்பா, துணை ஆட்சியராக இருந்து ரிட்டையர் ஆனவர். என் இரண்டு தாத்தாக்களும் (அம்மா + அப்பா) தாசில்தாராக இருந்தவர்கள் (களில் எல்லாம் தாசில்தார் என்பது மிகப்பெரும் பதவி). என் அப்பாவின் தாத்தா, ப்ரிட்டிஷ் + போஸ்ட் - ப்ரிட்டிஷ் காலத்தில் கோர்ட்டில் துபாஷியாக(மொழிபெயர்ப்பாளராக) இருந்தவர். என் அப்பா துணை தாசில்தாராக இருந்து - துணை ஆட்சியராக இருந்தது வரையில் எல்லாவித அரசு அலுவலகங்களுக்கும் போயிருக்கிறேன். இந்த அரசாங்க அலுவலகங்கள் குறித்தெல்லாம் என்றுமே ஒரு அசூயை கலந்த fascination எனக்குண்டு. இப்படி சிறு வயதில் என் அப்பாவுடன் ஒட்டிக் கொண்டு ஓடியதில் ஏகப்பட்ட விஷயங்களும் மறக்க முடியாத பல நிகழ்சிகளும் இன்றும் என் நினைவில் இருக்கின்றன.
ஆனால் இந்தப் பையனுக்கு என்னைப்போல் அப்பாவுடன் சுற்றியவைகளில் சில, நினைவில் நிற்காமல், அடியோடு மறந்து போனால் நல்லது என்று நினைக்கிறேன். சின்னப் பையன் என்பதால் பெரிதாக எதுவும் இவனுக்குத் தெரியவில்லை (இந்த வீடியோ எடுத்தது 2012ல். இந்நேரம் வளந்திருப்பான்). ஸ்ரீலாங்கா, சிரியாவில் - கொத்து கொத்தாக நடந்ததை....நாம் தவணை முறையில் வேறுவிதமாக செய்து கொண்டிருக்கிறோம்.
ஒரு ஊரில் ஒரு மனமொத்த தம்பதி வாழ்ந்து வந்தார்கள். எல்லாம் திருப்தியாக அமையப்பெற்றும் இருவருக்கும் தீராத மனக்குறை ஒன்று இருந்தது. குழந்தை இல்லை. வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோவில் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை. ஆனால் ஒன்றும் நடந்தபாடில்லை. சில ஆண்டுகள் கழித்து ஆண்டவனின் கருணையால், அவர்களின் வேண்டுதலின்படி அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. தாங்க முடியாத சந்தோஷம். ஆனால் சந்தோஷம் நீண்டநாட்கள் நிலைக்கவில்லை. பையனுக்கு பேச்சு வரவில்லை. மறுபடியும் வேண்டாத தெய்வம் இல்லை. போகாத கோவில் இல்லை. செய்யாத பரிகாரம் இல்லை. கடவுள்விட்ட வழி என்று வாழ்கையை ஓட்டிக்கொண்டிருந்தனர். ஒருநாள் திடீரென்று பையன் “ங்க........ங்.....ஞ” என்று பேச முயற்சிக்கிறான். நம்பமுடியாத சந்தோசத்துடன் அந்தப்பெண் கணவர், உறவினர்கள், அண்டைவீட்டார் என்று அனைவரையும் அழைக்க...........மிகுந்த பரபரப்புடன் எல்லோரும் பையன் என்ன பேச போகிறானோ என்று ஆவலுடன் காத்திருக்க.....பையனும் பேசத் தொடங்கினான் “நீ எப்பம்ம்மா தாலி அறுப்ப......”
“நீங்க பாத்தீங்கன்னா எல்லா எடத்திலும் நகைச்சுவை கொட்டி கெடக்கு” சர்வசாதாரணமாகத் தொலைக்காட்சி முதல் பத்திரிக்கைகள் வரை திரும்பின பக்கமெல்லாம் இந்த வசனத்தை ஓராயிரம் முறை கேட்டிருப்போம். இவ்வசனத்தின் நடைமுறை அபத்தத்தையும் தாண்டி, இதிலுள்ள உண்மையை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. எகத்தாளம், ஏகடியம், நையாண்டி, பகடி, அபத்தம் போன்ற பலவற்றை நாம் சந்தித்திருப்போம். பலபேர் அவ்வனுபவத்தை உணராமல் போயிருக்கலாம். சிலர் உணர விரும்பாமல் கடந்திருக்கலாம். மேளே குறிப்பிட்டவற்றுள் முக்கியமானதொரு வகை தான் ப்ளாக் காமெடி மற்றும் டார்க் காமெடி. “நான் தான் முகேஷ் பேசுறேன்..”. புற்றுநோய்க்கு எதிரான செய்திப்படத்தில் வரும் இவ்வசனம் எவ்வாறு இன்று நகைச்சுவையாக பல்வேறு சந்தர்பங்களில் முன்வைக்கப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ப்ளாக் காமெடி என்பதற்கான மிகச்சிறந்த உதாரணமாக இதனைச் சொல்லலாம்.
டார்க் மற்றும் ப்ளாக் காமெடி, இரண்டும் ஒன்றே போலவே தோன்றினாலும் இரண்டும் மிகநுட்பமான வேறுபாடுகளைக் கொண்டது. ப்ளாக் காமெடி பெரும்பாலும் தனிமனித அனுபவங்களையே முன்னிறுத்தும். அவர்களின் பார்வையிலேயே காட்சி விவரிப்புகள் இருக்கும். ஆனால், டார்க் காமெடி குழுமனப்போக்கின் வழியாகவே செயல்படும். ஒட்டுமொத்த கட்டமைப்பை, சூழ்நிலைகளை பகடிக்குள்ளாக்குவது டார்க் காமெடி. அதில் சிக்குண்ட மனிதர்கள் தங்களது அனுபவங்களை நகைச்சுவையாக முன்வைப்பது ப்ளாக் காமெடி. எவ்வளவுதான் இதுகுறித்து பேசப்பட்டாலும், இவ்வேறுபாடுகள் குறித்தான குழப்பங்கள் இன்னமும் தீர்ந்தபாடில்லை. ஆனால், இரண்டுக்கும் பொதுவான, அடிப்படையான அம்சங்கள் சில உள்ளன.
1) பிம்பங்களை கட்டுடைத்தல் (Iconoclasm)- புனிதம், தீட்டு, பேசாப்பொருள் என்று நம்பப்படும் அனைத்தையும் பகடிக்குள்ளாக்குவது. இறப்பில் ஆரம்பித்து சித்தாந்தங்கள் வரை அநேக விஷயங்கள் இதில் அடங்கும்.
2) சுய எள்ளல் (Self Parody)– மிகமிக முக்கியமானதொரு அம்சம். மிகச்சிறந்த கலைஞர்களிடமும் அவர்தம் படைப்புகளிலும் இந்தத்தன்மையைக் காண முடியும்
3) தப்பிக்கும் மனநிலை (Escapism)– Momentary denial of the painful present. ஒருவித வெட்டேத்தியான போக்கு. மிகுந்த நெருக்கடியான தருணங்களில் அவற்றிலிருந்து தப்பிக்க/மறக்க நகைச்சுவையுடன் அத்தருணங்களை அணுகுவது. நல்ல உதாரணம் - மருத்துவமனை
இம்மூன்று அம்சங்களில் ஏதாவது ஒன்றையாவது அழுத்தமாகப் பதிவு செய்த படைப்புகளே டார்க் காமெடி/ப்ளாக் காமெடி என்ற வரையறைக்குள் வரும். இதனை சற்று ஹாஸ்யத்துடன்(Humour) மட்டும் அணுகினால், ப்ளாக் ஹியுமர் என்ற அளவிலயே அப்படைப்பு நின்றுவிடும். இம்மூன்று அம்சங்களும் எம்மாதிரியான காட்சியனுபவத்தை பார்வையாளனுக்குக் கொடுக்கிறது என்பதில் தான் தேர்ந்த படைப்பிற்கும் முற்றுப்பெறாத படைப்பிற்குமான வித்தியாசம் உள்ளதாகப்படுகிறது. உதாரணமாக ப்ளாக் காமெடி வகைத் திரைப்படங்களை எடுத்துக்கொண்டால், பல இடங்களில் நாம் சிரித்தாலும், காட்சி முடிந்து சிறிது நேரம் கழித்து இதற்குப்போயா சிரித்தோம் என்ற குற்றவுணர்வை (Guilty Pleasure) மிகச்சிறந்த படைப்புகள் எழுப்பும். அதன்மூலம் பார்வையாளனுக்கு வேறொருக் கோணத்தில் மிகுந்த வீரியத்துடன் எடுத்துக்கொண்ட கருப்பொருளை இப்படங்கள் பதிய வைக்கின்றன. குறிப்பாக, சமூக சித்தாந்தங்கள்,மதிப்பீடுகள் சார்ந்த படைப்புகளில் இவற்றைக் கண்டுணரலாம்.
ஹாலிவுட்.....ஏன், உலக திரைப்பட வரலாற்றைப் பார்த்தோமேயானால், ப்ளாக் காமெடியின் பிதாமகன் என்று ஒருவரைச் சொல்லலாம். சாப்ளின். நிகரில்லா முழுமையான கலைஞன். தனது மௌனப்படங்களில் இருந்தே ப்ளாக் காமெடியை திரையில் உலாவ விட்டவர். 1925ல் அவர் இயக்கி நடித்த The Gold Rushல், ப்ளாக் காமெடியை அடுத்த தளத்திற்கு அவரையும் அறியாமல் எடுத்துச் சென்றுள்ளார். பசியின் காரணமாகத் தனது காலணியை வேகவைத்து, மிகுந்த மிடுக்குடன் உண்ணத் தொடங்குவார். எளிதில் மறக்க முடியாத காட்சி அது -
19வது நுற்றாண்டின் இறுதியில் ரஷ்யாவில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தில் ஆரம்பித்து உலகெங்கும் பல இடங்களில் கடும் பஞ்சம், போர்க்காலங்களில் மக்கள் இவ்வாறு காலணிகளை சமைத்து உண்டதற்கான ஏராளமான சான்றுகள் உண்டு. Modern Times. மாபெரும் வீழ்ச்சி(Great Depression) காலகட்டத்தில் வெளிவந்த படம். எவ்வளவு இயந்திரத்தனமாக மக்களின் வாழ்க்கைமுறை மாறிவிட்டது என்பதை அட்டகாசமாக பகடி செய்திருப்பார். படத்தின் ஆரம்பத்தில் ஆட்டு மந்தை தொழிற்சாலைக்குள் நுழையும் காட்சி ஒன்றே போதும். ஏன் சாப்ளின் ஒரு மேதை என்றால், ஊன்றி கவனித்தால் ஒரேயொரு கருப்பு ஆடு அக்கூட்டத்தில் இருக்கும்.
The Great dictator. எத்தனை வீரியமிக்க படைப்பு. ப்ளாக் மற்றும் டார்க் காமெடி, இரண்டையும் சரிவிகிதத்தில் கலந்த படைப்பு. இத்தனைக்கும் ஹிட்லரது அராஜகங்கள் அப்படம் வந்த காலகட்டத்தில் அவ்வளவாக வெளியே தெரிந்திருக்கவில்லை. அடுத்த மிகமுக்கியமான படம் தான், Monsieur Verdoux(1947). இது ஏன் மகத்தானதொரு ப்ளாக் காமெடி என்றால், சாப்ளினின் சுய எள்ளல். அதுவரை நகைச்சுவை நடிகராக, தனக்கு ஒரு பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த வழமையான பாத்திரப்படைப்பில் இருந்து முற்றிலும்மாறி பணத்திற்காக பெண்களை மணந்து கொலைசெய்யும் பாத்திரத்தில் அதகளம் புரிந்திருப்பார். இவ்வாறாக அன்று தொடங்கி இன்று வரையில் ஹாலிவுட் திரைப்படங்கள் ப்ளாக் காமெடியில் பல்வேறு பாய்ச்சல்களை நிகழ்த்தியுள்ளன. சற்று கூர்ந்து கவனித்தால், இதற்கு பெரும்பாலும் Indie இயக்குனர்களே காரணம். டொரண்டினோ, ஜிம் ஜார்முஷ் என்று நீண்ட வரிசையே உள்ளது. இதில் மார்டின் ஸ்கார்சேஸி போன்றோரது படங்களில் தீவிரமான ப்ளாக் காமெடி இருக்கும். டொரண்டினோ படங்களில் மிகையுணர்வு சற்று தூக்கலாகத் தெரியும். கோயன் சகோதரர்களின் படங்களில் இவ்வுணர்வு படுகூடுதலாக இருப்பதைப் பார்க்கலாம். வூடி ஆலன் போன்றோர் ப்ளாக் ஹியுமரையே அதிகளவில் காட்சிப்படுத்தியிருக்கின்றனர்.
ஹாலிவுட்டைப் பற்றிப் பேசும்பொழுது, இங்கலாந்த் படங்களைப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. இங்கலாந்தில் இதற்கு Gallows Comedy என்றொரு பெயரும் உண்டு. ஹாலிவுட்டின் கட்டுப்பெட்டித்தனங்கள் பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறி இங்கலாந்தில் குடியேறிய ஒரு இயக்குனரின் இரண்டு படங்கள் மிகமுக்கியமான டார்க் காமெடித் திரைப்படங்களாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. Dr. Strangelove or: How I Learned to Stop Worrying and Love the Bomb மற்றும் A Clockwork Orange. இயக்குனர் யார் என்பதை சொல்லத்தான வேண்டுமா ? முதலாவது படத்தில் மிகையுணர்வு தூக்கலான டார்க் காமெடி இருக்கும். போர் – அவற்றிற்கான கற்பிதங்கள் – அதிகாரிகள், அவர்தம் அதிகாரங்கள் போன்றவைகள் குறித்தெல்லாம் ஏகத்துக்கும் பகடிக்கு உட்படுத்திய படம்.ஆனால் இதைவிட மிகுந்த தீவிரத்தன்மையுடன் டார்க் காமெடி வெளிப்பட்ட படம் தான் A Clockwork Orange. அரசாங்கத்திற்கும் மக்களுக்குமான பிணைப்பு, மக்கள் மேல் அரசாங்கள் செலுத்தும் கட்டுப்பாடு, பிறழ்ந்த உலகு (Dystopian society), ஓர்பால் சார்பு என்று அக்காலத்திலேயே உட்பொருளில் முற்றிலும் வேறொரு பரிமாணத்தில் இப்படம் இயங்கியது. பொதுவாக இசை மனதை சாந்தப்படுத்தும் என்றுதானே கேள்வி. ஆனால் படத்தில் இப்பிம்பம் உடைக்கப்பட்டிருக்கும்.
மற்றொரு காட்சியில், அலெக்ஸ் என்ற முக்கிய கதாபாத்திரத்தின் ஆசனவாயை சிறைச்சாலை அதிகாரி கைகளால் விரித்து, டார்ச் அடித்து சோதனை செய்துபார்ப்பார். இது எத்தகைய அசூயயை ஏற்படுத்தும் காட்சி. ஆனால் மாறாக பார்ப்பவர்களுக்கு இக்காட்சி இன்றும் சிரிப்பை ஏற்படுத்தும். குப்ரிக்கின் பெரும்பாலான படங்கள், பார்வையாளனை சிக்கல்கள் நிறைந்த புதிர்பாதைக்குள்(maze) உள்ளிழுக்கும்தன்மை கொண்டவை. பல சமயங்களில் அப்பாதைக்குள் சுற்றிக்கொண்டிருப்பதையே நாம் உணர்ந்திருக்க மாட்டோம். மேலே சொன்னது போன்ற பல காட்சிகளோ எவ்வாறு நாம் உள்வாங்குகிறோம் என்பதன் மூலம், நமது மனநிலைக் குறித்தான கேள்விகளைக் குப்ரிக் எழுப்புகிறார். ப்ளாக் காமெடியின் வேலை பாடம் புகட்டவதன்று. மாறாக, பார்வையாளனின் சுயசிந்தனையை தூண்டிவிடுவது.அதுவும் நகைச்சுவையின் மூலம். கய் ரிட்சி தொடங்கி இன்றும்கூட இங்க்லாந்து திரைப்படங்களில் ப்ளாக் காமெடிக்கென்று தனி இயக்குனர் பட்டாளமே உண்டு. கடந்த பத்து ஆண்டுகளில் உலகின் சிறந்த ப்ளாக் காமெடிப் படங்களை வரிசைப்படுத்தினால் அதில் இங்க்லாந்து நாட்டுப் படங்களே பெரும்பாலும் இடம்பிடித்திருக்கும்.
ஐரோப்பிய திரைப்படங்களை எடுத்துக் கொண்டால், சர்ரியலிசம் என்ற சித்தாந்தத்தை உருவாக்கிய அதே கோஷ்டி தான் ப்ளாக் ஹியுமர் என்ற பதத்தையும் வழக்கில்விட்டது. லூயி புனுவெல், அலயந்திரோ ஹொடரோவ்ஸ்கி முதலான முக்கிய சர்ரியலிஸ படைப்பாளிகளின் திரைப்படங்களில் ப்ளாக் காமெடியின் சாயல்களை அதிகளவில் காணலாம். நாப்பதுகளில் இத்தாலியில் உருப்பெற்ற நியு வேவ் திரைப்பட இயக்கம் எங்கெல்லாம் பரவியதோ அங்கெல்லாம் ப்ளாக் காமெடியில் படங்கள் வெளிவரத் தொடங்கின. பிரான்சில், பெரிய அளவில் இல்லாவிட்டாலும் அன்றைய கோதார்த் முதல் இன்றைய ழான் ஜெனே(Delicatessen) வரை சில ப்ளாக் காமெடிப்படங்கள் வெளிவருகின்றன. ஜெர்மனி நாஜிக்களின் பிடியில் இருந்த காரணத்தால் இயல்பாகவே நாஜிக்களை பகடிக்குள்ளாக்கும் படங்களின் எண்ணிக்கை அங்கு அதிகம். ஜெர்மன் புது அலையின் இயக்குனர்களான ஹெர்ஸாக், ஃபாஸ்பைன்டர் போன்றவர்களது படங்களில் ப்ளாக் ஹியுமரின் தன்மை அதிகளவில் உண்டு. ஆசியாவை எடுத்துக் கொண்டால், கொரியாவில் 90களில் தொடங்கிய புது அலையின் காரணமாக பார்க் ஜான் வூ, கிம் ஜா வூன், கிம் கி டுக் என்று பல படைப்பாளிகள் ப்ளாக் காமெடியை கையாண்டுள்ளனர். ஜப்பானைப் பொறுத்தவரை, தகெஷி கிடானோவை ப்ளாக் காமெடியின் உச்சம் என்று சொல்லலாம். அரசியல் ப்ளாக் காமெடி என்று வரும்பொழுது, கியூபாவின் தாமஸ் கிதராஸ் அலயா தான் என் ஆதர்சம். தான் நம்பிய/நம்பிக்கொண்டிருந்த சித்தாந்தத்தை திரைப்படங்களின் வழியாக அவரளவிற்கு விமர்சனப்பகடி செய்த இன்னொரு படைப்பாளியை நான் கண்டதில்லை.
இந்திய சினிமா என்று பார்த்தால், நானறிந்த வரையில் மிகக்குறைவாகவே ப்ளாக் காமெடி வகைப்படங்கள் வெளிவந்துள்ளன. ஷ்யாம் பெனகல் போன்ற ஆட்கள் அவ்வப்போது இதில் முத்திரை பதித்ததுண்டு. அவரது மண்டி (Mandi, 1983) இந்திய சினிமாவின் சிறந்த ப்ளாக் காமெடிப் படங்களில் ஒன்றாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது. இன்று விஷால் பரத்வாஜ், அனுராக் கஷ்யாப், அனுஷா ரிஸ்வி(பீப்ளி லைவ்) போன்றோர் ப்ளாக் ஹியுமர்/காமெடிப் படங்களில் பல பரிச்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ் சினிமாவை எடுத்துக் கொண்டால், பெரியளவில் இவ்வகைப் படங்கள் வந்ததே இல்லை என்பதே நிதர்சனம். எம்.ஆர்.ராதாவின் வசனங்களில் ப்ளாக் ஹியுமர் சகஜமாக இழையோடுவதைப் பார்க்கலாம்(ஒரு கைய வெச்சுகிட்டு எப்பிடி சாமீ கும்பிடுவ.....சலாம் போடுவியா). குறிப்பிடத்தக்க மற்றொரு ஆள், கமல். பேசும் படம் தொட்டே அவ்வப்போது படங்களிலும் வசனங்களிலும் ப்ளாக் ஹியுமரைக் கையாண்டவர். மும்பை எக்ஸ்ப்ரஸ் படத்தில் அதனை வேறொரு கட்டத்திற்கு அவர் நகர்த்தினார். அதற்குப்பிறகு தமிழ்ப் படத்தில் அட்டகாசமானதொரு டார்க் ஹியுமரைக் கொண்ட படமாக வெளிவந்த படமாக ஆரண்ய காண்டத்தைச் சொல்லலாம்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அதிகளவில் “நகைச்சுவை” படங்கள் வெளிவருவது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் ஏறக்குறைய அனைத்து படங்களுமே போகிறபோக்கில் பார்த்துவிட்டுச் செல்லும் Run of the mill வகைப் படங்களே.பெரும்பாலான படங்களில் சந்தானம் இருப்பார். நிச்சயம் பல டாஸ்மாக் காட்சிகள் உண்டு. காதல், நட்பு, பெண்கள் குறித்தெல்லாம் தத்துவார்த்த மேற்கோள்கள் இருக்கும். வேறு பொழுதுபோக்க தெரியாத, அதற்கு வழியில்லாத மக்களும் இதுபோன்ற படங்களையே திரும்பத் திரும்ப பார்த்தாக வேண்டிய கட்டாயம். ஆனால் சமீபமாக இக்குறுகிய வட்டத்தைத் தாண்டி சற்றேனும் புதிய வகை முயற்சியில் வெளிவந்த நகைச்சுவைப் படங்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பது கண்கூடு. சூது கவ்வும், நேரம் தொடங்கி தற்போதைய மூடர் கூடம் வரை மாறுபட்ட நகைச்சுவையையும் மக்கள் விரும்ப ஆரம்பித்துள்ளனர். இதில் பெரிதும் வரவேற்பைப் பெற்ற சூது கவ்வும், மூடர் கூடம் இரண்டு படத்திற்கும் சில ஒற்றுமைகள் உள்ளதை கவனிக்கலாம். கொள்ளை, கடத்தல் என்று இரண்டு படத்திலும் ப்ளாக்/டார்க் காமெடிக்கான களம் இருந்தும், அதற்கான முயற்சி என்ற அளவிலேயே இரண்டு படமும் நின்றுவிட்டதாக எனக்குப்படுகிறது.
மூடர் கூடம். இரண்டு விஷயங்களுக்காக இயக்குனரை நிச்சயம் பாராட்டியே தீரவேண்டும். சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் படித்த ஒருவனை சமூகம் எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதை சற்றேனும் பதிவு செய்தமைக்காக. எப்படி நம்மூரில் முஸ்லிம்களுக்கும், திருநங்கைகளுக்கும் வாடகைக்கு வீடு கிடைப்பதில் ஆரம்பித்து...பல பிரச்சனைகள் உள்ளனவோ அதேபோன்றுதான் சீர்திருத்தப் பள்ளியில் படித்த ஆட்களின் நிலையும். மற்றொரு பாராட்டப்பட வேண்டிய அம்சம், அந்தச் சிறுமிக்கு “பாஸ்” மீது ஏற்படும் ஈர்ப்பு. கைக்குட்டையை எடுத்துத் தருவதில் ஆரம்பித்து கதாநாயகன் பளார் என்று அறைவிடும்போது ஏற்படும் ஸ்பரிசத்தினாலும் அவன்தம் ஆண்மையினாலும் காதல் வயப்படும் கதாநாயகிகளை எத்துனை படங்களில் பார்த்திருப்போம். படத்தில் வரும் சிறுமி அவ்வாறான ஈர்ப்பில் விழும்பொழுது திரையரங்கே அதிர்கிறது (எங்கே மக்கள் அதனை புரிந்துகொள்ளாமல் போய்விடுவார்களே என்று அக்காட்சிக்கு முன்னுரை கூறும் காட்சி ஒன்றும் உள்ளது) இவைகளைத் தாண்டி மேலும் சில கவனிக்கத்தக்க காட்சிகள் படத்தில் உள்ளன. இயக்குனர் தெரிந்தே செய்தாரா என்று தெரியவில்லை. வெள்ளையனின் அப்பா – ஜெயபிரகாஷிற்கு இடையேயான, சாப்ளின் கால மௌனப்படங்களுக்கு ட்ரிபியூட் போன்றவரும் அக்காட்சி கச்சிதமாக மிகச் சரியாகத் பொருந்திப்போகிறது. இயக்குனர் தெரிந்தே செய்திருந்தால், மிகபெரிய பாராட்டுக்கள். ப்ளாக் காமெடியின் மன்னனுக்கு வேறெப்படி மரியாதை செய்துவிட முடியும். இசையைப் பற்றி சொல்லியேயாக வேண்டும். ஓப்ரா வகை, வெஸ்டர்ன் க்ளாசிகல் என்று பலதரப்பட்ட வகையிலான இசைக் கோர்ப்புகள் படம் முழுவதும் உலா வருகின்றன. அட்டகாசமாக படமாக்கப்பட்ட பாடல் ஒன்றும் சென்ராயனுக்கு உண்டு. இதில் பயன்படுத்திப்பட்டிருக்கும் பல இசைக் கோர்ப்புகள் தமிழ்த் திரைப்படங்களில் அவ்வளவாக நடந்தேறாதது. ஆனால் பின்னணி இசையைப் பொறுத்தவரை சிறிது ஏமாற்றமே. பல இடங்களில் ஒரே மாதிரியான துணுக்கிசை(Leitmotif) பயன்படுத்தப்பட்டிருப்பது சற்று அலுப்பைத் தருகிறது. பட்டென்று தெறிக்கும் வசனங்கள், ஆப்பிள் லைஃப் போன்ற போகிறபோக்கில் வரும் நகைச்சுவைகள், இயல்பான முகங்கள், வலுவில் திணிக்கப்பட்ட ஆபாச வசனங்கள் இல்லாமை என்று பல நல்ல விஷயங்கள் உண்டு. மேற்சொன்னவைகளையும் தாண்டி சில குறிப்பிடத்தக்க காட்சிகள் இருந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ள முடியாத என் நிலைமையையும் அதற்கான காரணத்தையும் பின்னர் பார்க்கலாம்.
படத்தில் சில நெருடல்களும் இல்லாமல் இல்லை. முதலில் நினைவுக்கு வருவது சில இடங்களில் துருத்திக்கொண்டுத் தெரியும் பிரச்சார நெடி. நாம் ஏன் திருடக் கூடாது என்பதற்கான வாதங்களில் ஆரம்பித்து, கம்யூனிஸம், சோஷியலிசம், குழந்தை வளர்ப்பு என்று பலவற்றிற்கும் விளக்கம் கொடுக்கிறார்கள். பாடம் புகட்டுவதைவிட பார்வையாளர்களின் சிந்தனையை தூண்டும் படங்கள் இங்கே மிகமிகக் கம்மி. அதனால் இப்படத்தை மட்டும் குறை சொல்வது சரியாக இருக்காது. நம் வாழ்வின் அபத்தங்கள் எல்லாம் சொல்லிவைத்துக் கொண்டா வருகிறது. சட்டென்று நம்மைச் சூழும் தானே. ஆனால் படத்தில், இதுபோன்ற காட்சிகளுக்கான முன்னோட்டங்கள் மிகவெளிப்படையாக இருந்தமையால் அடுத்தது என்ன என்பது சிறிது நேரத்தில் புரிந்து விடுகிறது. ப்ளாக் காமெடியைப் பொறுத்தவரை, “Surprise element” மிகமிக முக்கியம். கூடவே அக்காட்சியின் நேரமும் அதன் நீட்சியும். படத்தில் அதுபோன்ற இடங்களில் ஏறக்குறைய அனைத்து கதாபாத்திரங்களும் சற்றுமிகையான நடிப்பையே வாரிவழங்குகின்றனர். அதுவும் தொடர்ந்து சில நிமிடங்களுக்கு. ஆரம்பத்தில் ரசிக்க வைத்த இக்காட்சிகள், போகப்போக சலிப்பை ஏற்படுத்திவிடுகிறது. நாய் உட்பட ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பின்புலக் கதை ஆரம்பிக்கும்பொழுது வழக்கமான தமிழ் சினிமா மரபுகளை உடைக்கும் படமாக இருக்கப்போகிறதோ என்ற எகிறத் தொடங்க....பிற்பகுதியில் அதே மரபுக்குள் படம் சிக்கிக் கொண்டதோ என்ற கேள்வி எழாமல் இல்லை. ராபின் ஹுட்தனமாக அனைவரும் பணத்தை தூக்கிக் கொடுப்பது, டாம் & ஜெர்ரி பார்க்கும் அதே வழக்கமான வில்லன், வைரக் கடத்தல் என்று பின்பாதியில் சற்று தள்ளாட்டமாகவேப் படம் நகர்ந்ததாக எனக்குப்பட்டது.
முன்னமே சொன்னதுபோல் படத்தை முழுமையாக ரசிக்கமுடியாத சங்கடத்திற்கு என்னைத் தள்ளிய விஷயத்தைப் பற்றிப் பார்ப்போம். பரவாயில்லை, முதல் படத்திலேயே வித்தியாச முயற்சிகளுடன் ஒரு படம் அதன் இயக்குனர் என்ற திருப்தியில் வீட்டிற்கு வந்து இணையத்தைத் திறந்தால், Attack the gas station பற்றிய செய்திகள். அந்தத் தென்கொரிய படத்தையும் பார்த்தாகிவிட்டது (தமிழ் சினிமா தன் ரசிகர்களை தேடுதலுக்கு உட்படுத்துவதிலை என்று இனியாரும் குற்றம் சாட்ட முடியாது). வேறொரு படைப்பினால் பாதிப்படையாத கலைஞனே உலகில் இல்லை. திரைப்படங்களில் அது மிகமிக சகஜமானதும் இயற்கையானதும் கூட. குரோசாவா (The Virgin Spring பற்றி பெர்கமான் சொன்னது “It's touristic, lousy imitation of Kurosawa” ) -> பெர்க்மான் -> தர்கொவ்ஸ்கி.....இப்பிடி மாஸ்டர்களுக்குள்ளேயே ஒருவர்மேல் ஒருவர் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி பேச ஆரமபத்தில் பக்கம்பக்கமாகப் போகும். இவர்களைத் தாண்டி மார்டின் ஸ்கார்சேஸி போன்ற ஆட்கள் வேறு வகை. ஒரு நேர்காணலில் எப்படி ராபர்ட் ப்ரெஸானின் ஒளிப்பதிவு கோணத்தை அப்படியே ஒரு படத்தில் தான் பயன்படுத்தினேன் என்பதை சிலாகித்து விவரித்திருப்பார். இவர்களைப் போன்ற ஆட்களிடம் மற்றவர்களது பாதிப்பை உணர முடியுமே தவிர, ஒருபோதும் “போலச் செய்தல்” இருக்காது. இவ்வளவு ஏன், டொரண்டினோ அடிக்காத கூத்துக்களா. கிடானோ தொடங்கி, பல இரண்டாம் தர ஆசிய/ஹாலிவுட் ஆக்ஷன் படக் காட்சிகளின் சாயலை டொரண்டினோ படங்களில் காணலாம். அதை க்வெண்டினே, விலாவரியாக எந்தெந்த படங்கள் என்று விவரிக்கும் அழகே அழகு. ஆனால், எப்படி தான் கேமராவை திருடியதை ஹெர்சாக் இயல்பான விஷயமாகப் பார்த்தாரோ, அதேபோல் க்வெண்டின் மிகஉரிமையுடனும் வெளிப்படையாகவும் இதைச் செய்வார். இருந்தபோதிலும் அக்காட்சிகள் முற்றிலும் க்வெண்டின் பாணியிலும் வலிய திணித்ததைப் போன்ற உணர்வுகளைத் தராமலும் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சரியாகச் சொல்வதென்றால் க்வெண்டின் பாணியிலான படைப்பு என்பது கொலாஜ்(Collage) போன்றதொரு கலவையான கலை வெளிப்பாடு. மேல நீட்டிமுழக்கி சொன்னதுபோல இந்த இன்ஸ்பிரேஷன் சமாச்சாரத்திற்கு யாரும் விதிவிலக்கல்ல. ஆனால் அப்பட்டமான உருவல், அதோடு தனது சொந்த கண்டுபிடிப்பு போன்று பேசும் பொழுதுதான் அதிர்ச்சியும் எரிச்சலும் ஏற்படுகிறது (தெய்வத்திருமகள் சிறந்த உதாரணம்). மூடர் கூடத்திற்கும் Attack the gas stationனிற்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், மட்டமான மொழிபெயர்ப்புபோல் அப்படியே கொரிய படத்தில் இருந்து இப்படத்தை எடுக்காமல் அதன் பாதிப்பில் இயக்குனர் இப்படத்தை தனது பார்வையில்/பாணியில் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறார் என்று சொல்ல முடியும். ஆனால் மூடர் கூடத்தில் தனித்துவமான காட்சிகள் என்று முதலில் எனக்குப்பட்ட - வெள்ளையன் தப்பித்து ஸ்கூட்டரில் போகும் போது கூடவே ஆட்கள் வரும் காட்சி, தொலைபேசியின் எதிர்முனையில் ஐஸ்க்ரீம் கேட்கும் சிறுமி என்று பல காட்சிகளின் மூலம் அந்தக்கொரியன் படம் தான் என்பதை உணர்ந்தபொழுது சற்று வருத்தமே மிஞ்சியது. சென்ராயனின் மிகைப்படுத்தப்பட உடல்மொழிகளில் ஆரம்பித்து உச்சி மீது வானிடிந்து பாடல் நிகழும் காட்சியமைப்பு வரை பல காட்சிகள், கேமரா கோணங்கள் உட்பட அப்படியே எடுத்தாளப்பட்டிருக்கின்றன. என்னடா இது என்று ஒரு பெரிய ஏமாற்றம் மனதில் வந்து ஒட்டிக் கொண்டதென்னவோ உண்மை.
உலக நாடுகளின் திரைப்பட வரலாற்றை எடுத்துக்கொண்டால், எப்போதெல்லாம் ஒரு நாடு அடக்குமுறையில் இருந்து விடுதலை பெறுகிறதோ, அதற்குப்பின்னர் அந்நாட்டிலிருந்து வெளிவரும் பல படங்களில் நிச்சயம் அவ்வடக்குமுறை குறித்துப் பேசப்பட்டிருக்கும். இத்தாலி, லத்தீன் அமெரிக்க நாடுகள், ரஷ்யா, போலந்து என்று அடுக்கிக்கொண்டே போகலாம். கொரியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. 90களுக்குப் பிறகு வந்த கொரிய புது அலைப் படங்கள் பலவற்றிலும் 60 – 90வரை கொரியா சந்தித்து வந்து நெருக்கடிகள் அதிகளவில் இடம்பெற்றிருப்பதைக் கொரியப் பட ரசிகர்கள் அறிவோம்.கிம் கி டுக் படங்களில் ஆரம்பித்து....Peppermint Candy போன்ற பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். Attack the gas stationல் இதன் மெல்லிய தீற்றலைக் காண முடிகிறது. ஆனால் மூடர் கூடத்தில் அதன் சட்டகம் மட்டும் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கிறதேயன்றி, பின்புலங்கள் பல இடங்களில் மாறுபடுகின்றன என்பதையும் பதிவு செய்ய வேண்டும். இயக்குனர் நவீனின் பேட்டிகள் பலவற்றையும், மூடர் கூடம் பற்றியான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பலவற்றை பார்த்ததிலிருந்து நவீன், படத்தின் அனைத்து துறைகளின் மீதும் நல்ல ஆதிக்கம் உடையவர் என்பது தெரிந்தது. இசையில் இருந்து நடனம் வரை இப்படித்தான் வர வேண்டும் என்ற பிடிவாதமும் தெரிந்தது. நிறைய இயக்குனர்களுக்கு இப்பிடிவாதம் வாய்ப்பதில்லை. அடுத்தடுத்த படங்களில் இதே பிடிவாதத்துடன் அவர் வேறொரு படத்தின் சாயல் இல்லாமல், அட்டகாசமானதொரு படத்தை தருவார் என்று நம்பலாம். அதற்கான திறமை நிச்சயம் அவரிடம் உள்ளது கண்கூடு. அதுவும் ப்ளாக் காமெடி போன்ற தமிழ் சினிமா பெரிதும் பயணப்படாத தளத்தில் அவர் பயணப்பட்டால் கூடுதல் மகிழ்ச்சி. நம் நாட்டில் நகைச்சுவைக்கா பஞ்சம். மனிதக் கழிவை மனிதனே அள்ளும் நாட்டில், நிலாவுக்கு மனிதனை அனுப்பப் போகிறோம் போன்ற ப்ளாக் காமெடிகள் எப்போதும் செழிப்பாக வளையவரும் ஊரல்லவா இது. புதிய இயக்குனர்கள் இதையெல்லாம் உபயோகப்படுத்த ஆரம்பித்தால் சினிமா ரசிகர்களான நமக்குக் கொண்டாட்டம் தானே. ஆரம்பிப்பார்கள் என்றே நம்புவோம்.
பிகு: ஆறு மாதம் முன்னாடி....மூடர் கூடம் வந்த சமயத்தில் "படப்பெட்டி" இதழுக்காக எழுதியது. போனமாதம் தான் சிலபல நடைமுறை சிக்கல்கள் தாண்டி இதழ் வெளிவந்தது. அதுனால...இத இப்ப ஷேர் செய்யுறேன்