Rescue Dawn. வியட்நாம் போரின்போது, அந்நாட்டின் ஒரு கிராமத்தில் மாட்டிக்கொண்ட அமெரிக்க Dieter Dengler, எப்படி அங்கிருந்து தப்பித்தார் என்பதைவைத்து எடுக்கப்பட்ட படம். Actually, Herzog ஏற்கனவே தானெடுத்த Little Dieter Needs to Fly டாக்குமென்ட்ரியை அடிப்படையாக வைத்தே இப்படத்தையெடுத்தார். Dieter Dengler and Duane Martin, இருவரும்தான் பிரதான ஆட்கள். அக்கிராமத்தில் மாட்டிக்கொண்டு அவர்கள் அனுபவிக்கும் கஷ்டம், கொடுமைகளெல்லாம் ஒரேமாதிரிதான்யென்றாலும் இரண்டுபேருக்கும் எதில் மிகப்பெரிய வித்தியாசமென்றால் - Stockdale paradox. எவ்வளவுதான் கஷ்டங்கள், துயரங்களிருந்தாலும் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இதையெல்லாம் கடந்து வரமுடியும் என்று நம்பலாம். ஆனால், அந்த கஷ்டங்களிலிருந்து தப்பிக்கும்வரை அந்த சூழ்நிலையில்தானே வாழ்ந்தாக வேண்டும். Realityயை மாற்ற முடியாதில்லையா?. அந்தவாய்ப்பிருந்தால் நாட்டில் ஏன் இத்தனை சிக்கல்கள், தற்கொலைகள், குடும்ப வன்முறைகள். இதிலிருந்து மீள வாய்ப்பேயில்லையென்ற ரியாலிட்டி + ஆனால் அதை மீறியெழும் Optimism = Stockdale paradox. படத்தில், Dieterருக்கு நிதர்சனம் புரியும். ஆனால், அதையும்மீறி தான் தப்பித்துவிடுவோம் என்ற நினைப்பு சதாசர்வகாலமும் ஓடிக்கொண்டேயிருக்கும். Duane அதற்கு நேர்மாறாக ஒரு quixotic மனநிலையிலேயே இருப்பார். அமெரிக்க படைகள் எப்படியும் தன்னைவந்து காப்பாற்றிவிடும் அதுஇதுவென்று பிதற்ற ஆரம்பிப்பார். தப்பித்தபிறகும் அதே மனநிலை தொடரும். 

Detached from reality, False hope - இரண்டுமே மிகக்கொடுமையானது + ஆபத்தானது. ஆபத்து - அந்த மனநிலையில் இருப்பவர்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும். ஒருவேளை பெரிய அதிகாரத்தில் இருப்பவர்களானால் அந்த ஆபத்தின் வீரியம் கூடிக்கொண்டேபோகும். Confront the reality. That's the key brother. ஆப்ட்டிமிஸ்ட்காக இருப்பதில் ஒரு சிக்கலும் கிடையாது, provided - நிதர்சனத்திலிருந்து விலகிச்செல்லாதவரை. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், Pragmatism. இந்த விஷயம் தற்போது சாத்தியமா, எந்தளவுக்கு பயன்தரும், எதிர்காலத்தில் எந்தமாதிரி விளைவுகள் ஏற்படும், இதுபோன்ற திட்டங்கள், இதுவரை எப்படியான பலன்களை தந்திருக்கின்றன, அத்திட்டங்களை, அதை செயல்படுத்தும்விதத்தை - நாம் எவ்வாறு கையாண்டோம். இதையெல்லாம் யோசிப்பது எவ்வளவு முக்கியம். ஆனால், இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் பேசாமல் விவசாயிகள் முதல் வறட்சி பாதிப்பிற்குள்ளான பகுதிவாழ் மக்கள் வரை - அனைவரையும், நதிநீர் இணைப்பு திட்டம் மட்டும் வந்துவிட்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்தது என்று நம்பவைக்கும் முயற்சி தொடர்ந்து ஜோராக நடந்துகொண்டிருக்கிறது. இந்த false hopeபைத்தான் ஆபத்தானது என்கிறேன். உதாரணத்திற்கு, போனமாதம் அஸாமில் கடும்வெள்ளமேற்ப்பட்டது. இந்தசமயத்தில்தான், River Interlinking Projectன் முக்கிய phaseஸான Ken - Betwa link பற்றி அறிவிப்புவருகிறது. கூடவே, அஸாம் மாநிலத்தில் ஏற்படும் வெள்ளங்களை தடுக்க இந்தத்திட்டத்தால் மட்டுமே முடியும் என்பதைப்போன்ற பேச்சுகளும். ஆனால் - reality?. இதுதான் ரியாலிட்டி. அஸாம் மட்டுமல்ல. நாட்டின் பலபகுதிகளிலும் நிர்வாக சீர்கேடு, over exploitation of resources, நாட்டின் வளர்சிக்காக என்ற பெயரில் நடக்கும் natural resources சார்ந்த கூத்துகள் - தன்போக்கில் நடந்துகொண்டே இருக்கின்றன/இனியும் நடக்கும். ஆனால், அதையெல்லாம் கணக்கிலெடுக்காமல் ஜக்கி  முதல் ரஜினி, மயில்சாமி மாதிரியான ஆட்கள்வரை நதிகள் இணைப்பு அதுஇதுவென்று நமக்கு பாடமெடுக்கும்பொழுது...it's like, an assault on our sanity. இதைக்கூட போய்த்தொலைகிறது என்று விட்டுத்தள்ளுவோம். விவசாயிகள், மக்களுக்கு எப்பேர்பட்ட நம்பிக்கையை (தெரிந்தோ தெரியாமலோ) விதைக்கிறார்கள் ? அதான் இதிலிருக்கும் மிகப்பெரிய சிக்கல்.

Indian Rivers Inter-link:


தேசிய நதிநீர் இணைப்பு (Indian Rivers inter-link) - இதன் டெக்னிகல் பெயர், Inter Basin Water Transfer (IBWT) என்பதே. இதைச் செயல்படுத்தும் அமைப்பு, infact இதற்காகவே ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் National Water Development Agency (NWDA). இந்த திட்டத்தின் சுருக்கமான வரலாறு.
இந்த வெட்டிக்கதையெல்லாம் எதற்கு. 100 வருடங்களாக இந்த ஐடியா இங்கே புழங்கிக்கொண்டிருக்கிறதென்றால் சும்மாவா ? இத்திட்டத்தின் Pros and Cons என்னென்ன ? எப்பொழுது திட்டம் நிறைவடையும் ? எல்லாவற்றையும்விட முக்கியமானது. தமிழனாக, தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் ? இதையெல்லாம் விட்டுவிட்டு கண்ட கதையையும் புலம்பல்களையும்...நிற்க: அவற்றையெல்லாம்பற்றி பேசுவதற்கு முன், இந்தியாவின் தற்போதைய நிலை, இத்திட்டத்திற்கான அவசியம் - இரண்டும் முக்கியமல்லவா.

Floods - Droughts - Inconsistent rainfall:

எளிமையான, அடிப்படை விஷயத்திலிருந்து ஆரம்பிப்போம். மழை. பெரிய கண்டுபிடிப்பெல்லாம் ஒன்றுமில்லை. அனைவருமே கவனித்திருக்கக்கூடும். இந்தியாவின் சமச்சீரற்ற மழை அளவை. இந்த Post Monsoon Rainfall mapகளின்(Oct, Nov, Dec) மூலம் எளிதாக இதனை புரிந்துகொள்ள முடியும்(ஏன் post-monsoon rainfall முக்கியமானதென்றால் இந்தியாவின் 70% மழைக்கு monsoonனே காரணம். விவசாயம் முதல் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுவரை அனைத்துமே மான்சூனை நம்பியேயிருக்கின்றன).

2016ல் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் அதிக்கப்படியான மழை. 2015ல் 
நிலைமை தலைகீழ். தென்னிந்தியா மட்டும் எந்தவிதத்தில் குறைச்சல் ? இங்கும் அதே நிலைமைதான்.

இந்திய மழை - மிகவும் நக்கல் பிடித்தது. கடந்த  பல decadeகளாக அதன் நக்கல்தனம் கூடிக்கொண்டே போகிறதே தவிர, குறைந்தபாடில்லை. பருவமழையை எடுத்துக்கொண்டால், ஒன்றிரண்டு நாளில் மொத்தமாக கொட்டித்தீர்க்கும். இல்லாவிட்டால், வழக்கத்தைவிட கம்மியாக பெய்யும். நாம் சுதாரிப்பாக முன்னேற்பாடுகளை செய்யாவிட்டால், கஷ்டம். கடந்த பத்தாண்டுகளில் தென்னிந்தியாவை எடுத்துக்கொண்டால், எத்தனை பருவமழைகள் பொய்த்துப்போயிருக்குமென்று நினைக்கிறீர்கள்? (பருவமழை எவ்வளவு முக்கியத்துவம்வாய்ந்ததென்று தெரிந்துகொள்ள - How does the monsoon affect the economy)


தென்னிந்தியாவில்தான் இந்த நிலையென்றால், இந்தியாவின் பிற பகுதிகளில் நிலைமை இன்னும் மோசம். ஒன்று, மழையேயில்லாமல் கடும் வறட்சி நிலவும் அல்லது பெருமழை காரணமாக வெள்ளம் ஏற்படும். போனவருடம், பெரும்பாலும் மழையில்லாமல் வறட்சி நிலவும் ராஜஸ்தான் – குஜராத் பகுதிகளில் பெருமழை பெய்து – வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது (கீழுள்ள Map). அதுபோக, வழக்கம்போல் – அஸாம், பிஹார் பகுதிகளில் கடும் வெள்ளம். 



இன்னொரு பக்கம் - 2015,  வெள்ளம்  வழிந்தோடும் செழிப்பான ஒரிஸாவின் சில பகுதிகளில் வறட்சி நிலவியது. 2016, மகாராஷ்டிராவின் பலபகுதிகளில் கடும்வறட்சி காரணமாக ஹாஸ்பிட்டல்களைக்கூட மூடும் நிலை ஏற்பட்டது.




இந்தியா மட்டுமல்ல, பெரும்பாலான தெற்காசிய நாடுகளில் இதே நிலைமைதான். Erratic rainfall pattern.



---------------------

அடுத்ததாக, நீர்த்தேவை. 1950’s – 2010. அறுபதே ஆண்டுகள். இந்தியாவின் Per Capita Water Availability, 70% சரிந்துள்ளது. மிகமிக மோசமான சரிவிது. Per Capita Storageலும் இந்தியா மிகமோசமான நிலைமையில் உள்ளது (1950’sல் 15 BCMமாக இருந்தது. இன்று 200 BCMக்கு உயர்ந்துள்ளது). Dam போன்ற அமைப்புகளின் மூலம் நீரை சேமித்தாலொழிய Per Capita Storageயை உயர்த்த முடியாது என்று ஒரு தரப்பினர் உறுதியாக நம்புகிறார்கள்.



மழை அளவு, டேம்களின் நீரளவு, Water availability - எல்லாவற்றிலும் இந்தியா முழுக்கவே (obviously) சமச்சீரற்ற நிலைமையே நிலவுகிறது. Brahmaputra: 14057 cu m/year என்றிருக்கும் Per Capita Water availability, 2000கிமீகள் தாண்டியிருக்கும் Sabarmati பகுதியில் 307 cu m/year என்றிருக்கிறது. அவ்வளவு ஏன்...தமிழ்நாட்டைப் பாருங்கள். காவெரி -  கன்னியாகுமரி, இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். 



ஆக, விவசாயத்திலிருந்து - வறட்சிவரை, பல வாழ்வாதாரப் பிரச்சனைகளை சமாளிக்க நதிகளை இணைப்பதே மிகச்சிறந்த வழியென்று அரசுகளும் + பல அறிஞர்களும் + பெரும்பான்மையான விவசாயிகளும் + அநேக மக்களும் நம்புகின்றனர். மேலே பார்த்தவற்றின் மொத்த தொகுப்பாக, இந்த இமேஜை எடுத்துக்கொள்ளலாம்.

மேலே பேசிய பல பிரச்சனைகளை பெருமளவில் நிவர்த்திசெய்ய இந்த inter-linking of rivers projectடால் மட்டுமே முடியுமென்று பலரும் பல்வேறு தளத்தில், கோணத்தில் நம்புகிறார்கள். ஆனால் - திட்டமே பிரச்சனைக்குரியதாக இருந்தால் ? ஏற்கனவே நிலவும் சிக்கல்களை மேலும்  விஸ்தாரமாக்கினால் ? பேசுவோம்.

இந்த IBWT திட்டத்தின் crux என்ன ?

பெயரை வைத்தே ஒரு ஐடியா கிடைத்திருக்குமென்று நினைக்கிறேன். Inter Basin Water Transfer. ஆறு வழக்கத்தைவிட அதிகமான நீர்வரத்தை சந்திக்கும்போது வெள்ளம் ஏற்படும். வெள்ளம், ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் பாயும் அல்லது கடலில் கலக்கும். இந்த அதிகப்படியான நீர்வரத்தை (Surplus) வறட்சியடைந்த/நீர்வரத்து கம்மியாக உள்ள (deficit) ஆறுகளுக்கு திருப்பிவிட்டால் ? அதுபோக, அங்கங்கே டேம்கள் கட்டி தண்ணீரை சேமித்துவைப்பதோடு, அதன்மூலம் hydroelectricityயை உற்பத்தி செய்ய முடியும்தானே. நல்ல ஐடியா!

      (படத்தில் red stretch - இரண்டு ஆறுகளை இணைக்கப்போகும் canal)

இந்தியாவின் இமயமலை பகுதிகளின் 14 நதிகள் + மற்ற பகுதிகளின் 16 நதிகள், இவற்றை கால்வாய்கள் மூலம் இணைப்பது. ஒவ்வொரு கால்வாய்களின் இடையே dams கட்டுவதன் மூலம், அந்தந்த damகள் அமையும் சுற்றுப்புற ஊர்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வது. இப்படியாக 30 கால்வாய்களும், 3000 டேம்களும் கட்டப்படும் என்று திட்டமிட்டுள்ளனர். 

இத்திட்டத்தின் Pros என சுட்டிக்காட்டப்படுபவைகள்


Surplus/Deficit Water:

திட்டத்தின் மிகமுக்கியமான, அடிப்படையான விஷயம் – Surplus water. முதல் சிக்கலே இங்கிருந்துதான் தொடங்குகிறது. பேப்பரில் பார்க்க, படுபக்காவான திட்டம்போலத் தெரியும். அதிகப்படியான நீர்வரத்து (Surplus) உள்ள நதிகளிலிருந்து நீர்வரத்து கம்மியான(Deficit) ஆறுகளுக்கு கொண்டுசெல்வது. லாஜிக் அருமை. ஆனால், இந்த Surplus – Deficit எப்படி கணக்கிட்டார்கள் ? அதற்கான அளவீடுகள் என்ன ? யாருக்குமே தெரியாது. அரசு டாக்குமென்ட்களில் இதற்கான தெளிவான விளக்கங்கள் இல்லை. பொத்தாம்பொதுவாக – மழைக்காலங்களில் ஆறுகளில் ஏற்படும் வெள்ளத்தை வைத்து ஒரு கணக்கு சொல்கிறார்கள். இதென்ன குளமா குட்டையா - நீர் கொள்ளளவு/வரத்தை கணக்கிட?. சரி, அப்படியே Surplusசென்று வைத்துக்கொண்டாலும் திட்டத்தின் documentகளில் சொல்லப்படும் நீரளவை வைத்துப்பார்த்தால், deficit basinகளுக்கு போதியளவும் கிடைக்காது. வெள்ளத்தையும் தடுக்க போதுமானதாக இருக்காது.

நதிகள்/ஆறுகளைப் பொறுத்தவரை "Surplus" என்றெல்லாம் ஒன்றுமேயில்லை. உலகின் எந்த நதியாக/ஆறாக இருந்தாலும் வருடத்திற்கு ஒன்றிரண்டு முறைகள் வெள்ளத்தை ஏற்படுத்தும் என்று கணக்கிடப்பட்டுள்ளது(அந்த வெள்ளம் ஏன் முக்கியம் என்பதுபற்றி கொஞ்சநேரங்கழித்து பார்ப்போம்). அந்த வெள்ளத்தையெல்லாம் surplus என்று கணக்கிலெடுப்பது சரியாக வருமா ?. இதுவொரு பக்கமிருக்க, வெள்ளம் - மிகபெரியளவில் இமயமலையிலிருந்து உற்பத்தியாகும் கங்கை, பிரம்மபுத்ரா மாதிரியான நதிகளில்தான் வருடாவருடம் தவறாமல் ஏற்படுகிறது. கடுமையான சேதங்களை உண்டாக்குகிறது.

இமயமலையில் உற்பத்தியாகும் ஆறுகளை எடுத்துக்கொண்டால், பனி உருகுதல்தான் (கொஞ்சம் மழை)  கங்கை, பிரம்மபுத்ரா, அதன் கிளை ஆறுகள் – எல்லாவற்றிக்குமான மூலம். இந்த ஆறுகள்/நதிகளெல்லாம் மழையை சார்ந்திருக்க வேண்டியே அவசியமேயில்லை. இதெல்லாம் வற்றாத ஆறுகள்/நதிகள். ஆனால், Peninsular rivers (காவெரி, கிருஷ்ணா, கோதாவரி) இதெல்லாம் முழுக்க முழுக்க மழையை மட்டுமே நம்பியிருக்கும் நதிகள்/ஆறுகள்.  Of course, மழையை என்றால் - மான்சூனை என்று பொருள்.


இதைத்தாண்டி மற்ற Surplus ஆறுகளில் - Surplus நீர்வரத்துண்டுயென்று இவர்கள் சொல்லும் Peninsular ஆறுகளில், ஏற்கனவே மழையளவு குறைவாகிக்கொண்டே வருகிறது. Surplus River Basins Face Drop In Rainfall: IIT Study. உதாரணமாக, தமிழ்நாட்டில் Cauvery-Vaigai-Gundar இணைப்புத்திட்டம். மஹாநதி – கோதவரியிலிருந்து surplus நீரை இங்கே திருப்பிவிடும் திட்டம். ஏற்கனவே மஹாநதி – கோதவரி பகுதிகளில் நீர்வரத்து குறைவு (IIT Study linkல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது). பிறகெப்படி சர்ப்லஸ்?. அப்படியே சர்ப்லஸ் நீர் வருகிறதென்று வைத்துக்கொள்வோம். திருப்பிவிடப்படும் நீரில் எத்தனை சதவீதம் இங்குவந்து சேரும் ? எவ்வளவுதூரம் அந்த நிலங்கள் நீரை உறிஞ்சிக்கொள்ளும், எவ்வளவு ஆவியாகும்...ப்ராக்ட்டிகலாக இதையெல்லாம் கணக்கெடுப்பது மிகமிகக்கஷ்டம்.  Hydrogeology அவ்வளவு எளிதானதன்று.

வெள்ளத்திற்கு வருவோம். Yes. வெள்ளத்தால் நமக்கு மிகப்பெரிய சேதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு. யோசித்துப்பாருங்கள். இமயமலையிலிருந்து, கிட்டத்தட்ட 8Km உயரத்திலிருந்து கிளம்பும் ஆறுகள் எத்தனை வீரியத்துடன் கீழேவரும் ? அந்த வேகத்தில் வழியில் ஏகப்பட்ட செழிப்பான மண்வளத்தை அம்மலையிலிருந்து கீழே ஆறுகளுக்கு கொண்டவந்துசேர்க்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் flow இது. நதிகள்/ஆறுகளில் ஏற்படும் வெள்ளம் - இந்த அட்டகாசமான மண்வளத்தை மேற்கொண்டு ஆறுகளை சுற்றியுள்ள பகுதிகளில் பரப்பிவிடுகிறது. நதிக்கரைகளில் நாகரீகம் தோன்றியது தற்செயல் கிடையாதே. இந்த வளம்தானே காரணம். Flood cycle என்பார்கள். உலகின் எந்த ஆறு/நதியாக இருந்தாலும் இந்த சுழற்சி இருந்துகொண்டேயிருக்கும். அது கங்கையாக இருந்தாலும், நைல் நதியாக இருந்தாலும், சீனாவின் துயரமென்று (சிலரால்) அழைக்கப்படும் Huang Heவாக இருந்தாலும் - இந்த நதிகளில் ஏற்படும் வெள்ளங்கள் மேற்கொண்டு அந்தப்பகுதிகளில் ஒருங்கே வளத்தையும் + நமக்கு சில இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அவ்வளவுதூரம் போவானேன் ? ஏன் காவேரி டெல்டா பகுதியில் மட்டும் இவ்வளவு மண் வளங்கள் ?. 

1. How Floods Shaped Civilization

2. Floods play a vital role in ecosystems – it’s time to get out of their way

"Flood pulse concept" - கங்கை போன்ற மிகப்பெரிய ஆறுகளுக்கு வெள்ளம் எந்தளவு இயற்கையான நிகழ்வு, எவ்வளவு முக்கியம் என்பதை பற்றியெல்லாம் நம்மைவிட பிறநாட்டினர் அதிகளவில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விக்கி பேஜிலேயே இதற்கான தெளிவான விளக்கமுண்டு. மீன்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் மீன்வளம் பலமடங்கு அதிகரிப்பதுண்டு. சில இடங்களில் குறைவதும் உண்டு. தேவையான nutrients + ecology அமைந்துவிட்டால், மீன்கள் கூட்டம் மளமளவென்று பெருக ஆரம்பிக்கும். பின்பு மீன்களை இரையாகக்கொள்ளும் உயிரினங்கள் வளர ஆரம்பிக்கும். காலபோக்கில் அதகளமான food chain உருவாகிவிடும். இதுவரை அப்படித்தான் உருவாகியிருக்கிறது.


அப்படியானால் வெள்ளங்களால் நமக்கேற்படும் இழப்புகள் ? அதை கண்டுகொள்ளாமல்விட முடியுமா ? அப்படி யாரும் சொல்லவில்லையே. நதிகள்/ஆறுகளில் ஏற்படும் வெள்ளத்தை வில்லனாக சித்தரிப்பது/பார்ப்பதுதான் இடிக்கிறது. அது காலங்காலமாக மனித இனம் தோன்றும் முன்னரே நடந்துவரும் இயற்கையான நிகழ்வுகளில் ஒன்று. இதுபோன்ற வெள்ளங்களை நமக்கு சாதகமாக "Controlled flooding"ன் மூலம் பயன்படுத்திக்கொள்ளும் உத்தியை உலகின் பலநாடுகளும் கடைபிடிக்கத்தொடங்கியிருக்கின்றனர். இதன்மூலம், இயற்கையாகவே அப்பகுதிகளின் மண்வளத்தையும் + நீர் வளத்தையும் + மீன்கள் வளத்தையும் அட்டகாசமாக அதிகரிக்க முடியும். அதையும்தாண்டி நம்மூரில் நடக்கும் deforestation, exploitation, encroachmentsகளை கட்டுக்குள் கொண்டுவந்தாலே வெள்ளத்தை பெருமளவில் கட்டுபடுத்த முடியும். ஆர்வமிருப்பின் இந்த பேப்பரை, குறிப்பாக River regulation and experimental floods படிக்கவும்.


------------------

இத்திட்டத்தின் ஆதரவாளர்கள், அதன் எதிர்பாளர்களைப் பார்த்து தவறாமல் கேட்கும்கேள்வி: "இந்த திட்டத்தின் மூலம் வறட்சி குறையும், விவசாயத்திற்கான நீர்வளம் அதிகரிக்கும், அதன்மூலம் விவசாயம் வளரும். இதெல்லாம் நடக்காது/சரிவராது என்பதெல்லாம் தேவையில்லாத பயங்கள். நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன ?".

அதே கேள்விகளைத்தான் எதிர்ப்பாளர்கள், திட்டத்தின் ஆதரவாளர்களைப்பார்த்து கேட்கிறார்கள். Infact, இந்தத்திட்டமே முழுக்க முழுக்க 
arithmeticகை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தோராயமாக இவ்வளவு தண்ணீர் வருகிறது - அதை இங்கே, திருப்பிவிட்டால் - இத்தனை மக்கள் பயனடைவார்கள். அவ்வளவுதான். இதெல்லாம் Predictions. இதெல்லாம் நடக்கும் என்பதற்கு என்ன ஆதாரங்கள் இவர்களிடமுண்டு ? NWAD websiteல் இத்திட்ட documentகளில் கொடுக்கப்படும் பிறநாட்டில் நடந்த, இதேமாதிரியான திட்டங்கள் உதாரணங்களில் பல flaws உண்டு. அவையெல்லாம் பெரும்பாலும் மிகமிக சொற்பஅளவிலான கிலோமீட்டர்களை மட்டுமே இணைக்கும் திட்டங்கள். மிகப்பெரிய உதாரணமாக இவர்கள் காண்பிக்கும் சீனாவின்  Yangtze River: South–North Water Transfer Project ஒரு failure என்பதை இத்தனைகாலம் ஒப்புக்கொள்ளாத சீன அரசே இப்பொழுது இதைப்பற்றி பேச ஆரம்பித்திருக்கிறது. 

China: Yangtze River, South–North Water Transfer Project

இத்திட்டம், சேர்மன் மாவோ காலத்திலயே பேசப்பட்ட திட்டம். சீனாவிலும் கிட்டத்தட்ட இந்தியாவைப் போன்ற நிலைமைதான். ஆசியாவின் (உலகின் மூன்றாவது) மிகநீண்ட ஆறான   Yangtzeவின் புண்ணியத்தால் சீனாவின் தெற்குப்பகுதிகளில் தண்ணீர் பிரச்சனையில்லை. ஆனால், வடக்கு பகுதிளில் நீர்த்தட்டுபாடு, கடும்வறட்சி. இதை சமாளிக்க - மூன்று routeகளில் ஆறுகளை இணைக்கும் திட்டம் தொடங்கி இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் திட்டத்தின்படி திருப்பிவிடப்பட்ட நீர்செல்லும் பகுதியிலிருக்கும் மக்களின் நீர்த்தேவை ஓரளவு பூர்த்தியாகத் தொடங்கியது. ஆனால், சிலவருடங்களிலேயே சிக்கல் ஆரமபித்தது. Yangtze பேஸின் பகுதிகளில் மழை குறைவு + ஏகப்பட்ட டேம்கள் + இயற்கையான நீர்வழியை மாற்றியதன்விளைவு, உள்ளதும் போச்சு என்ற கதையாக Yangtzeவின் பகுதிலேயே 50 ஆண்டுகளாக இல்லாத வறட்சி. 



The Aral Sea Crisis:

Aral sea என்பது, கஜகிஸ்தான் - உஸ்பெகிஸ்தானுக்கு இடையிலிருக்கும் ஒரு ஏரி. ஏரிக்கு ஏன் Sea என்று பெயர் ? Obviously, size. 68,000 sq.km. பிரம்மாண்டத்தின் மறுஉருவம். அத்தகைய  ஏரிக்கு ஏகப்பட்ட ஆறுகளிலிருந்து நீர்வரத்து உண்டு. இதன் காரணமாக, Aral Seaயை சுற்றியுள்ள பகுதிளில் மீன்வளம் அளப்பரியது. 1930களில், ரஷ்ய அரசு - இந்த ஏரிக்குதான் இவ்வளவு அளவுக்கதிகமான (Surplus) நீர்வரத்து உள்ளதே. அதை கொஞ்சம் திசைதிருப்பி - மற்ற ஊர் மக்களுக்கும், விவசாயத்திற்கும் (குறிப்பாக - காட்டன்) பயன்படுத்தலாமே என்று கணக்கிட்டு Amu Darya/Syr Darya என்று ஆரல் ஏரியின் முக்கிய நீர்வரத்து ஆறுகளை திசைதிருப்பிவிட்டது. அந்தகாலகட்டத்தில் நல்ல திட்டமாகவே தோன்றியிருக்கக்கூடும். 

ஆனால், 1970களில் நீர்வரத்து குறையத்தொடங்கியது. கொஞ்சகொஞ்சமாக Aral Sea சுருங்கி சுருங்கி, இன்று 90% நீரேயில்லாமல் - கிட்டத்தட்ட ஒரு குட்டையாகவே மாறிவிட்டது. One of the planet's worst environmental disasters என்று பல அறிஞர்களும் சொல்கிறார்கள் (Watch: Aral Sea: Man-made environmental disaster)


விஷயம் இதோடு முடியவில்லை. திருப்பிவிடப்பட்ட நீரைநம்பி காட்டன் உட்பட இன்னபிற விவசாயங்கள் ஆரம்பிக்கப்பட்டது என்று பார்த்தோமே, அதெல்லாமே அந்தந்த பகுதிகளில் நசிந்துபோய்விட்டது. அந்த இடங்களில் வேறுவகை பயிர்களும் விளைவது கஷ்டமாக உள்ளது. நிலத்தின்தன்மையே 60 ஆண்டுகளில் முற்றிலுமாக மாறிவிட்டதே. பின்பு எங்கிருந்து பிறபயிர்கள் வளரும் ? என்ன நோக்கத்திற்காக - தண்ணீர் திருப்பிவிடப்பட்டதோ அதுவே அடிப்பட்டுபோய்விட்டது. (ஆனாலும் - ஒரு நல்ல செய்தி உண்டு)

Reservoir-induced Seismicity:

பல geologistகளுக்கே இதுபற்றி தெரியாது. Seismicity = frequency and distribution of earthquakes in a particular region. இந்த seismicity/நில அதிர்வுகள்/பூகம்பம், இயற்கையாக - geology சார்ந்து, Faulting காரணமாக நிகழலாம். அதுபோக மனித நடவடிக்கைகள், பாறையை குண்டு வைத்து தகர்த்தல், mining activities போன்ற சில காரணங்களாலும் நிகழலலாம் (intensity கம்மியாக இருக்கும்). இதில், damகளும் அடக்கம். Late 1960's தொடங்கித்தான் இந்த RIS (Reservoir-induced Seismicity) சார்ந்து பரவலாக ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்படலாயிற்று. இதன் அடிப்படை சைன்ஸ் - பூகம்பம்/நிலநடுக்கம்/அதிர்வு, பூமிக்கடியிலிருக்கும் fault'sகளின் நகர்தலால் ஏற்படும். இந்த fault's நகரும்போது energy வெளிப்படும் (அதுதான் பூகம்பம். Read). RISக்கு காரணமாக சொல்லப்படுவது, நகரலாமா - வேண்டாமா என்ற யோசனையிலிருக்கும் fault zoneகளில் மிகப்பெரிய டேம்களை கட்டும்போது டேம்களில் தேங்கியிருக்கும் நீர் அதிகளவில் pressureரை அந்த faultகளின் மேல் செலுத்த ஆரம்பிக்கின்றன. மேலும் உள்ளே கசியும் நீரும் சேர்ந்து - அந்த faultகள நகர்த்தி அதிர்வுகளை உண்டாக்கின்றன. இதை ஒருசாரர் ஏற்கவில்லையென்றாலும், தொடர்ச்சியாக இந்த கோணத்தில் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன.

இந்தியாவின் 1967, Koyna நிலநடுக்கும் அப்படியான ஒன்று என்று ஒரு தரப்பினர் உறுதியாக நம்புகிறார்கள். இன்னொரு தரப்பினர், முற்றிலுமாக மறுக்கிறார்கள். ஆனால் -  // 1967 -  2015, as many as 1,19,934 earthquakes of different magnitudes have been recorded at the Koyna earthquake monitoring centre // 2017லயும் சேர்த்து, நிச்சயமாக அந்த ஏரியாவில் ஆயிரக்கணக்கான நிலஅதிர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. நானே நேரடியாக அந்த dataக்களை பார்த்துள்ளேன் (Confidential என்பதால், எங்கே - எப்படியென்று சொல்ல முடியாது). 

Koyna earthquakes triggered by reservoir, claim seismologist

இந்தத்தியரியை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில் - இரண்டு மாதங்கள் முன்பு, Koynaவில் ஒரு ஆராய்ச்சி துவங்கியுள்ளது.

Why is India drilling deep into an earthquake hotspot?



Koynaவைப் விட்டுத்தள்ளுங்கள். நம் அண்ணன். சீனா - கொஞ்சநேரம் முன்னே, Yangtze River, South–North Water Transfer Project பற்றி பார்த்தோமே. அதில் கட்டப்பட்ட, World's biggest ever hydroelectric dam தான் - Three Gorges dam. கட்டி முடிக்க கிட்டத்தட்ட பத்தாண்டுகளாயிற்று. அந்த damமின் காரணமாக, எப்பொழுதுமே தங்களை விட்டுக்கொடுக்காத சீன அரசே - இந்த டேமினால் அந்தப்பகுதியில் நிலஅதிர்வுகள் அதிகரித்திருக்கின்றன என்பதை ஒருமாதிரியாக ஒப்புக்கொண்டுள்ளது.

2. Did a giant dam cause China’s latest earthquake?

Ofcourse, RIS - மிகப்பெரிய டேம்களில் மட்டுமே சாத்தியமென்றாலும் "seismic activity" அதிகமாகயிருக்கும் இடங்களில் சின்னதோ/பெரியதோ டேம்கள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை துல்லியாமாக யாராலும் கூறமுடியாது. இதன் காரணமாகவே இந்தியாவில் இந்த inter-linking projectக்காக இமயமலைப்பகுதிகளில் கட்டப்படப்போகும் டேம்களை geological aspectல் கலக்கத்துடன் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அந்தப்பகுதி ஏற்கனவே seismically very active. அந்தப்பகுதியில் எந்தளவிற்கு பூகம்பம் வரும், அதை தாங்க வேண்டுமென்றால் எப்படியான டேம்/கட்டிட அமைப்பு இருக்க வேண்டும், இதெல்லாம் பக்கவாக ஸ்டடி செய்யப்பட்டே இத்திட்டம் ஆரம்பிக்கப்படும். ஆனாலும், அதெல்லாம் predictions மட்டுமே. Geologyயை பொறுத்தமட்டில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு கீழே, பூமிக்கடியில் என்ன நடக்கிறது/நடக்கப்போகிறதென்று யாராலும் உறுதியாக கூறயியலாது. நமது limitationகளில் ஒன்று. ஒருவேளை, எதாவது அசம்பாவிதம் நடந்தால் ?. அந்தளவுக்கு ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது ?. அதுதான் இங்கெழும் கேள்வி.

Inter-state Relations:

25-30 ஆண்டுகள்கழித்து திட்டம் நிறைவேறியது என்று வைத்துக்கொள்வோம். "Surplus" நீரை ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு முறையாக வழங்குமென்பதற்கு யார் உத்தரவாதம் தருவது ?. இதை டைப்படித்துக்கொண்டிருக்கும்போதே, நியூஸில் "முல்லை - பெரியார் அணைப்பகுதியில் வாகன நிறுத்தப்பிரச்சனையை இரு மாநிலங்களும் பேசித்தீர்த்துக்கொள்ள வேன்றுமென்று கோர்ட் சொல்லியது" என்று செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. I mean, "வாகன நிறுத்த பிரச்சனை...". Insane. அதற்கே கோர்ட்வரை போகவேண்டியுள்ளது. இந்த லட்சணத்தில் நீர் பகிர்தல் - அடிதடி வெட்டுக்குத்துதான். // Many projects are already stuck because of disputes between states, and these will only increase, say experts // - இந்தக் கட்டுரையே போதுமானது. மாநிலங்களுக்கிடையேயான தற்போதையே நிலைமையை விளக்க.

China - India - Bangladesh Relations:

India X China, இரண்டு நாடுகளுமே பெரிய hydroelectric போரில் இறங்கியுள்ளது. Ofcourse, சீனாவுடன் நம்மால் போட்டிபோட முடியாது (சீனா, ஒற்றை அதிகாரமுள்ள நாடு + யாருக்கும் எந்த பதிலும் அவர்கள் சொல்லத் தேவையில்லை). இந்தப்போட்டியினால் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியிருப்பது அருணாச்சல பிரதேசம் தான். கேரளாவை "கடவுளின் தேசம்" என்கிறார்கள். என்னைக்கேட்டால் அருணாச்சல பிரதேசம் தான் "கடவுளின் தேசம்". 

ஒருபக்கம் சீனா மறுபக்கம் இந்தியா, மாற்றிமாற்றி டேம்கள் கட்டும்முனைப்பில் ஈடுபட்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னெவென்றால், பிரம்மபுத்ராவில் சீனா கட்டப்போகும் டேம்களால் தங்கள் ஏரியாவுக்குவரும் நீர்வரத்து குறைந்துவிடுமென்று இந்தியா கடுமையான எதிர்ப்புகுரலை பதிவு செய்துவரும் அதேசமயத்தில், தாங்கள் கட்டப்போகும் டேம்களால் பங்களாதேஷ்க்கச் செல்லும் நீர்வரத்து குறைவதைப்பற்றி கவலையேபடவில்லை. இந்த டேம்கள் பற்றியும், Inter-linking project பற்றியும் பங்களாதேஷ் பலமான எதிர்ப்புகளை தெரிவித்துவந்தாலும் இந்தியா அதெயெல்லாம் காதுகொடுத்து கேட்பதாகயில்லை. எளிதாக புரிய வைக்க வேண்டுமென்றால் ஆந்திரா - கர்நாடாகா - தமிழ்நாடு - புதிய அணைகள் கதையை ஞாபகப்படுத்திக்கொள்ளவும். தமிழ்நாடு, riparian zoneல் இருப்பதைப்போல - பங்களாதேஷ், riparian பகுதியில் உள்ளது. Simple.

1. China and India 'water grab' dams put ecology of Himalayas in danger


2. Water Wars: China, India and the Great Dam Rush

3. India plans to 'divert rivers' to fight drought; Bangladesh cries foul

Environmental Disaster - Migration:

எத்தனை டேம்கள் - எவ்வளவு pollution, எவ்வளவு தூரம் நிலங்களை ஆக்கிரமிக்க வேண்டியிருக்கும், அதில் காடுகள் எத்தனை, புதிதாக காடுகளுக்கு நடுவில் கால்வாயை கொண்டுசெல்வது சூழலியலை எவ்வளவு பாதிக்கும்...ம்ஹும். இதுபற்றியெல்லாம் அரசாங்கம் கவலைப்படுவதாய் தெரியவில்லை. போனமாதம் தொடங்கியிருக்கும் Ken - Betwa Porjectடை எடுத்துக்கொள்வோமே. Panna tiger reserveவின் ஒரு பகுதியை இதற்காக கையகப்படுத்த வேண்டியுள்ளது. அங்கேயிருக்கும் புலிகள் முதல் வல்லூறுகள் வரை என்னாவது என்ற கேள்விக்கு...அரசாங்கம் அதற்கான திட்டங்கள் வைத்துள்ளது என்ற மொட்டை பதில் மட்டுமே மிஞ்சுகிறது. புலிகள் எல்லாவற்றையும் பிடித்து அந்தப்பக்கம் விடுவார்களோ ?. அதுசரி, இந்தத் திட்டத்திற்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் environmental boardலிருந்து clearance கிடைத்தது ?



காடு என்பது வெறும் புலி, கரடி, பறவைகள் மட்டும் கிடையாதே. ஆறு/நதி என்பதே ஒரு உயிர்சூழல். கங்கையிலிருக்கும் சிலவகை மீன்கள், நத்தைகள், தவளைகள், பிற நீர்வாழ் உயிரினங்கள் கோதாவரியில் கிடையாது. கோதாவரியிலிருந்து காவேரிக்கு வந்தால்...ஓவ்வொரு சூழலுக்கென்றே தனித்துவமான உயிரினங்கள் உண்டு. அதை சர்வசாதாரணமாக களைத்துப்போடுவது மிகச்சுலபம். ஆனால் மீட்பது மிகமிகமிகக்கடினமான, almost நடக்காத காரியம். உயிரினங்களைத்தாண்டி, பாறை அமைப்புகளில்கூட அந்ததந்த நிலப்பரப்பிற்கும்/சூழலியலுக்கும் தகுந்தமாதிரி uniquenessசோடு இருக்கும். //Vishal Verma, a teacher and a researcher in geology and palaeontology in Madhya Pradesh, translates it for the layperson: “These are very special rocks. The flowing rivers, along the sandstone mountains, create sand granules of various sizes. Because these are of different sizes, it traps not just air in between but also captures moisture. This, along with shallow waters near the river banks, becomes an important habitat for a number of reptiles. If a reservoir is built, these functions of the ecosystem are disturbed; these habitats would be disturbed " //. (Read). கீழேயிருக்கும் Wildlife reserves + அருகில் வரப்போகும் ப்ராஜெக்ட்களை பார்த்தாலே பகீர் என்கிறது. எவ்வளவு delicate system அது. ரொம்ப கேஷ்வலாக இதையெல்லாம் எடுத்துக்கொள்கிறோமா ?



மக்கள் இடம்பெயர்தல், அது இன்னொரு கொடுமை. எத்தனை லட்சம் மக்கள் இடம்பெயர்வார்கள், அவர்களுக்கான இழப்பீடு எவ்வாறு தரப்படும் இதுபற்றியெல்லாம் மேலோட்டமான தகவல்கள் மட்டுமே கூறப்படுகிறது. Interlinking of rivers, or the fallacy of development agendas

In a nutshell...

1. நிச்சயமாக நல்ல நோக்கத்துடன்தான் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், intentionனுக்கும் executionனுக்கும் மலையளவு வித்தியாசம் உண்டல்லவா? 25-30 ஆண்டுகள், 6 லட்சம் கோடி - இத்தனையும் செய்து - திட்டம் முடிந்து உரிய பலனிருக்குமா என்றே தெரியாதபோது, இவ்வளவு ரிஸ்க் தேவையா? அப்படியே ரிஸ்க் எடுப்பதாயிருந்தாலும் at what cost ? சூழலியலை முற்றிலுமாக மாற்றிவிட்டால்...நிச்சயம் மீளமுடியாத irreversible விஷயமாயிற்றே இது.

2. If the cons outweighs pros, அப்படியொரு திட்டம் தேவையா ? அதையும்மீறி திட்டத்தை செயல்படுத்தினாலும், வறட்சி/வெள்ளம் கூடவே செய்யும் என்பதை மேலே China, Aral Sea போன்ற உதாரணங்கள் மூலம் பார்த்தோம். இன்னும் கூட - Tagus river Water Project, Lesotho Water Project - என்று பல உதாரணங்களை அடுக்கமுடியும். If something is defeating it's own purpose...ditch it.

3. அண்டை நாடுகளை விடுங்கள்; நாட்டிற்குள்ளாகவே ஒவ்வொரு மாநிலத்துக்கும் இடையே ஏற்கனவே நீர் பகிர்தலில் ஏகத்துக்கும் பிரச்சனை. அதையே - சுப்ரீம்கோர்ட் உட்பட - யாராலும் சுமூகமாக தீர்க்க முடியவில்லை. இவர்களை நம்பி...

4. நாட்டில் இவ்வளவு நீர்சார்ந்த பிரச்சனைகள் நிலவுகிறதே, அதற்கு என்னதான் தீர்வு ?...Well, இது ஒன்றுதான் தீர்வுவென்று யார் சொன்னது ? India has failed to make the most of the monsoon. இந்த மாதம்கூட சராசரி அளவைவிட பலமடங்கு தென்னிந்தியாவில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. ஆனால், இதை முறையாக சேமிக்க தெரியாதது யார் தவறு ? இந்த டேட்டாவின்படி இந்தியா வருடம்முழுவதும் பெய்யும்மழையில் வெறும் 6% மட்டுமே சேமிக்கிறது. வளர்ந்த நாடுகள 250% மழைநீரை சேமித்து வைக்கிறார்கள்.

5. அப்படியே திட்டம் நிறைவேறி நீர்வரத்து உள்ளதென்றே வைத்துக்கொள்வோம். இந்தியாவில் நீரை அதிகளவில் உபயோகப்படுத்தும் செக்டார் எது தெரியுமா ? விவசாயம். 85% - 90%. Crop patternகளைப் பொறுத்துதானே நீர் தேவை. Surplus நீர்வரத்து உள்ளதேயென்ற நம்பிக்கையில் பல மாநிலங்கள் பணப்பயிர்களான காட்டன், கரும்புகளுக்கு மாறினால் ? மேற்கொண்டு groundwater exploitation அதிகரிக்கவே செய்யும். திரும்ப முதலிலிருந்து cycle தொடரும். அவ்வளவே. கீழிருக்கும் டேட்டாவின் முக்கியத்துவம்புரிந்தால், அசல் பிரச்சனை எங்கிருக்கிறது என்று புரியும்.


இரண்டுநாட்கள் முன்புதான் The Hinduவில் இந்தக் கட்டுரை வந்தது. Sundarbans பற்றி. A fragile ark that shelters 2,626 creatures. Sundarbans, கங்கை + பிரம்மபுத்ரா டெல்டா பகுதி. அவ்வளவு delicate, fragile சூழலியல் நிறைந்த பகுதி. அந்த 9000 Sq.Kmல் எத்தனை உயிரினங்கள் (நமக்கு தெரிந்து) இருக்கின்றன தெரியுமா ?. 2626. அதில் பல அந்தப்பகுதியில் மட்டுமே வாழும் உயிரினங்கள் (endemic). அந்தப்பகுதியைச் சேர்ந்த Royal Bengal Tigers மட்டும்தான், உப்பு நீரில் புழங்கக்கூடிய ஒரே புலி இனம். மற்றும் adaptabilityக்கும் பெயர்போன புலிகள் அவை. தவளைகள், டால்பின்ஸ், மீன்கள், ஆமைகள், பல்லிகள், நண்டுகள் - அந்தப்பகுதியின் biosphereரை உலகின் பலநாடுகளை முனைப்புடன் கவனித்துவருகின்றனர். அந்த டெல்டா பகுதிக்கு வரும் நீரை - மக்களின் நன்மைக்காக  திசைதிருப்புகிறேன், டேம் கட்டுகிறேன் என்ற பெயரில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் இப்போதில்லாவிட்டாலும் சிலஆண்டுகள்கழித்தாவது பெரியவிலை கொடுக்க வேண்டியதிருக்கும். கடைசியில், எந்த மக்களுக்காக திட்டங்கள் கொண்டுவரப்பட்டதோ அவர்கள் தலையில்தான் எல்லா கஷ்டங்களும் வந்துவிடியும். ஆறுகள்/நதிகள் - இந்த சூழலியலின் முழுமையை நம்மால் ஒருநிலைக்குமேல் புரிந்துகொள்ள முடியாது. வாய்ப்பேயில்லை. இதைமட்டும் அவ்வப்போது நாம் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுவதே தமிழர் மரபு. ஒரு வீடியோவையே இதற்காக வேலைமெனக்கெட்டு அப்லோட் செய்துள்ளேன். இந்த காவிரி பிரச்சனையில்(கிட்டத்தட்ட எல்லா பிரச்சனைகளுக்கும்) பெருவாரியாக எழுப்பப்படும் கோஷங்களில் ஒன்று -  தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு என்றொரு மாநிலமே இல்லை; அட...இதை சௌராஷ்டிரநாடு என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது இருக்கும் பிரச்சனைகள் அப்பொழுதும் இல்லாமலா போய்விடும். இலங்கை நண்பர் ஒருவர்கூட - எங்கு போனாலும் தமிழர்கள் அடிவாங்கிக்கொண்டே இருக்க வேண்டியதுதானா - என்று ஸ்டேடஸ் போட்டிருந்தார். நண்பரே....இலங்கை தமிழர்கள் என்றில்லாமல், இலங்கை தெலுங்கர்களாக இருந்தாலும் இதேதான் நடந்திருக்கும். அடுத்தவனை நாசமாக்கப்பார்ப்பதெல்லாம் human traits. உலகம் முழுக்க உள்ளதுதானே. எப்படி, மைனா - invasive speciesஸோ, அதுபோல பல விஷயங்கள் defaultடாக நமது ஜீனில் உள்ளது. சரி, அவ்வளவு உத்தமர்களாக இருந்தால் - ஏன் ஒரு தரப்பு "தமிழன்" மட்டும் பீ அள்ளிக்கொண்டிருக்க வேண்டும் ? தமிழர்/திராவிடம் பேசும் எல்லாரிடமும் இந்தக்கேள்வியை கேட்டிருக்கிறேன். இதுவரை ஒருவர்கூட உருப்படியான மறுமொழி சொன்னதில்லை.

காவேரி - பூகோளரீதியாக நாம் இருக்கும் இடம், கர்னாடகா ethicalலாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் விடுங்கள். நாம் நமது natural resourcesசை என்ன செய்து கொண்டிருக்கிறோம் ? இந்தப் பதிவின் நோக்கம் இதுமட்டுமே. நிலத்தடி நீர்வளம் - மலைகள் - ஆறுகள்/ஆற்றுப்படுக்கை, ஆற்று மண்.....ஒன்றைக்கூட விட்டுவைக்கவில்லை. அவ்வளவு தூரம் கெடுத்துவைத்திருக்கிறோம். இந்தரீதியில் போய்கொண்டிருந்தால் இன்னும் இருபது - முப்பதாண்டுகளில் பல்லி மூத்திரம் அளவிற்குதான் காவேரி ஓடிக்கொண்டிருக்கும். 

ஜல்லிக்கட்டு - இயற்கையின் பெருமையை போற்றுகிறது; தமிழர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை எடுத்துக்காட்டுகிறது என்றெல்லாம் வாய்சவடால் விடுகிறோமே....நாளுக்குநாள் இயற்கை வளங்கள் எல்லாம் குறைந்துகொண்டே போகிறதே. அதுபற்றி கொஞ்சமாவது உறுத்தல் இருக்கிறதா ? நிஜமாகவே இயற்கையின்மீது பிடிப்பிருந்தால் - இதையல்லவா முதலில் காப்பாற்ற வேண்டும். "Natural Resources Management"ல் தமிழர்கள் அறிவு. சூன்யம். பூஜ்யம். சைபர். எங்கு வேண்டுமென்றாலும் வந்து சொல்வேன். உடனே, "2000 ஆண்டுகளுக்கு முன்பே...." என்று ஆரம்பிக்க வேண்டாம் ஐயா. 2000 ஆண்டுளுக்கு முன்பிருந்த மக்கள்தொகை வேறு; வாழ்க்கைமுறை வேறு; இத்தனை தொழிற்சாலைகள் இல்லை; இத்தனை கட்டிடங்கள் இல்லை; இத்தனை குழப்பங்கள் இல்லை; வாழ்க்கை இத்தனை சிக்கல் நிறைந்ததாக இல்லை; அப்போதிருந்த மலைகள் இல்லை; ஆறுகள் இல்லை. எல்லா மாறிவிட்டது. நிகழ்காலத்திற்கு வாருங்கள் ஐயா. தொட்டதற்கெல்லாம் "2000 ஆண்டுகுளுக்கு முன்பே தமிழன்..". Natural Resources Management - எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதில் மட்டும் முன்னேற்றமேயில்லை. நண்பர் ஒருவர் Facebookல் போட்டிருந்தார் "சிவகாசி திருப்பூர் போன்ற நகரங்களில் கூட முன்பிருந்தது போன்ற தண்ணீர் பஞ்சம் இல்லையென்றால் திமுகாவின்"  என்றாரம்பித்து ஒரு போஸ்ட் போட்டிருந்தார். ஒழுங்கான திட்டமிடல் இல்லாமல் இந்தப் பகுதியில் தண்ணீர் எடுத்ததன் விளவை கீழே - over exploited mapல் பார்த்துக்கொள்ளுங்கள். Of course, தண்ணீர் ஒவ்வொருவருக்குமான உரிமை. அதை கொடுத்தேயாக வேண்டும். ஆனால், அந்தப் பக்கம் க்வாரி அனுமதி வழங்குவதில் ஆரம்பித்து - நீர்நிலைகளை முறையாக தூர்வாராமலிருந்தது - முறையற்ற போர்வேல்கள் - ஆற்றுபடுகைகளில் ஆக்கிரமிப்புகள் - குளம் குட்டை ஆக்கிரமிப்புகள் - மணல் மாஃபியா - திமுக/அதிமுக அரசுகள் பற்றி லிஸ்ட் போட்டுக்கொண்டே போகலாம்...விளைவு ? கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ரிபோர்ட்கள் அனைத்தையும் படியுங்கள். கையாலாகாத, ஊழல் நிறைந்த அரசும் + அதன் கட்டமைப்பும் பெருமளவில் இதற்கு காரணம் என்ற உண்மை, கொஞ்சமாவது உறைக்காவிட்டால்....கஷ்டம். 

போன வாரம் தமிழ்நாட்டில் - காவேரி விவசாயிகளுக்காக முழுகடையடைப்பு நடத்தினார்களே....லாரி உரிமையாளர்கள் எல்லாம் ஆக்ரோஷமாக பேசுவதை கேட்டேன் (அதே கோஷம் தான்....தமில்டா...தமிலர்கள்டா...விவசாயிகள்டா). ஐயா... தெரியாமல்தான் கேட்கிறேன். விவசாயிகள் மீது அவ்வளவு அக்கறையிருந்தால் திருட்டுமணலை எங்கள் லாரியில் அள்ளிக்கொண்டுபோக மாட்டோம் என்று முடிவுக்கு வருவதற்கென்ன ? ரயிலை மறிக்கும் ஆசாமிகள் எல்லாம் - காவேரி பேஸினில் நடைபெறும் அராஜகங்களை கண்டித்து - ஒருநாள் முழுக்க தமிழ்நாடு முழுக்க கடையடைப்பு/போராட்டம் நடத்தினால் என்ன ? 

We have fucked up the whole system. Period. அதை சரி செய்யாமல், இந்தாண்டு தண்ணீர் கிடைக்கலாம்... அடுத்தாண்டு கிடைக்கலாம்..அதற்கடுத்து ?  மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் பலரும் எதிர்பார்ப்பது ஒரே விஷயம் தான். நமக்கு இன/மொழி பற்றாளர்களைவிட visionaries தான் தேவை. துரதிர்ஷ்டவசமாக நம்மிடம் அப்படி யாருமே இல்லை. 50 வருடங்கள் கழித்து தமிழ்நாட்டின் இயற்கை வளம் எப்படி இருக்கும் ? இந்த கேள்விக்கு இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுள் எத்தனைபேர் - முதலில் இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்க வேண்டுமே..அதுவே கஷ்டம் - தெளிவான பதில் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? அரசியல்வாதிகளை விடுங்கள். நாம் என்ன தெரிந்து வைத்திருக்கிறோம் ? நமது தற்போதைய நிலைமை என்ன ? ஒருவேளை கடுமையான வறட்சி ஏற்படுகிறது...என்ன செய்வோம் ?. 1 லிட்டர் - 20 ரூபாய். 50 ரூபாயாகுகிறது - என்னால் வாங்க முடியும். 100 ரூபாய் - சமாளிக்க முடியும். ஆனால் அடிமட்டத்தில் இருக்குமாளுக்கு ? அடுத்த சந்ததியினருக்கு (இதற்குத்தானே ஐயா காதல் - கல்யாணம் - குழந்தை குட்டி - lifeல செட்டிலாகனும் - எல்லாம். அதற்கே ஆபத்தென்றால் ) என்ன பதில் வைத்திருக்கிறோம் ?  

-----------------------------------------------------------------

1) சென்னைவாசிகளே, மற்ற இடங்களை விடுங்கள். உங்கள் ஏரியாவில் டிசம்பர் 2015ல் வெள்ளம் வந்திருந்தால் - பருவமழை ஆரம்பிக்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளன - அதை தடுக்க தற்போது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... என்ன ஏது....எதாவது விசாரித்தீர்களா ?

2) Madhav Gadgil / Kasturirangan reports பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? (நாம நெனச்சு என்னாக போகுதுன்றீங்களா...)

3) உங்கள் வீட்டின் நிலத்தடிநீர் மட்டம் எத்தனை அடிகள் ? Over head tankல் boreலிருந்து தண்ணீர் நிரப்புவதில் முன்பிருந்ததைவிட - நேரத்தில் - வித்தியாசம் இருக்கிறதா ?

4) Cash cropsகள் என்னென்ன ? ஏன் அந்தப் பெயர் ?

5) Minimum Supportive Price(MSP) - அப்படியென்றால் ?

6) டேம்கள் கட்டுவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அதைவிட முக்கியமாக, "நதிகள் இணைப்பு" மாதிரியான விஷயங்கள் பற்றி...

-------------------------------------------

பூமியின் மொத்த நீரில், 97.4% கடல் நீர். மீதி 2.6% மட்டுமே நன்னீர். Freshwater. அந்த 2.6%டிலும் ஏறக்குறைய முக்கால்வாசி போலார் பகுதியில் இருக்கும் glaciers. எல்லாம் போக, ஆறுகளில் குளம் குட்டைகளில் இருக்கும் நீர் எவ்வளவு இருக்கும் ? இந்தப் படத்தில் இருக்கும் சின்ன bubble அளவிற்குத்தான். பெரிய bubble தான் அந்த 2.6%. 



இந்த சின்ன bubble (freshwater)...இரண்டு வகைப்படும். Groundwater - Surface water. Ground water/Freshwater – கடல் – மழை – காடுகள் – மரங்கள் – உயிரினங்கள் – விவசாயம் – காவிரி – தமிழர்....எல்லாவற்றிக்கும் தொடர்ப்பிருக்கிறது. Complex cycle. அதனுடையே அருமை தெரியாமல் ரொம்பவும் அலட்சியமாக நடந்துகொண்டிருக்கிறோம். சில அடிப்படைகளை புரிந்துகொண்டாலன்றி அலட்சியத்தின் முழு வீரியமும் புரியாது. அதனால்...

Hydrology Cycle:

ஏன் எப்பொழுதும் வானத்தில் மேகங்கள் இருக்கின்றன ? ஏன் எப்பொழுதும் கடலில் நீரின் அளவு ஒரு நிலையிலேயே இருக்கிறது ? எளிமையான காரணங்கள். இதுவொரு endless cycle. கடல் நீர் ஆவியாகி மேலே செல்கின்றன(Evaporation) -> ஆவி, கொஞ்சகொஞ்சமாக உறைந்து மேகமாகிறது(Condensation) --> வெப்ப சலனங்கள் காரணமாக மேகம் தேக்கி வைத்திருக்கும் நீர் உடைந்து மழையாகப் பொழிகிறது(Precipitation). 

எப்படி கடல் நீர் ஆவியாகிறதோ, அதுபோல மரங்கள்/செடிகொடிகளும் தாங்கள் உறிஞ்சிய நீரை ஆவியாக்குகிறது (Evapotranpiration). நமது வீட்டு வாசலில் இருக்கும் – நன்றாக வளர்ந்த/வயதான மரம், நாள் ஒன்றிக்கு எவ்வளவு நீரை ஆவியாக்கிறது என்று நினைக்கிறீர்கள் ? 500 – 800 லிட்டர்ஸ். சதவீத அடிப்படையில் – கடலிலிருந்து ஆவியாகும் நீரின் அளவு மரங்கள்/செடிகள் வெளியிடும் நீரின் அளவைவிட அதிகம். Obviously. 70% பூமியில் கடல் நீர்தானே. இவ்வளவு கடல் நீர் இருக்கிறதே....பிறகெதற்கு மழைக்கு மரங்களை மட்டும் பெரிதும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது ? காடுகளைப்பற்றி இவ்வளவு தூரம் பேச வேண்டியிருக்கிறது ? இங்குதான் சிக்கல். கடலிலிருந்து ஆவியாகும் நீர் பெரும்பாலும் கடற்கரையிலிருந்து 250 கிலோமீட்டருக்குள் மழையாக பெய்துவிடுகிறது (காற்றழுத்த தாழ்வு நிலை/புயல் மாதிரி எதாவது மேகங்களை தள்ளிக்கொண்டு சென்றால் தான் உண்டு). மீதி பகுதிகளில் ? மரங்களின் evapotranspiration பல வெப்ப/காற்று சலனங்களை ஏற்படுத்துகிறது. மரங்கள் எவ்வாறு மேகங்கள் உருவாக காரணமாக இருக்கின்றன என்பதைப்பற்றியெல்லாம் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. பல முடிவுகள் படிக்கவே அட்டகாசமாக இருக்கின்றன

ஸ்கூல் பசங்களுக்கு சொல்லித்தரப்படும் (சொல்லி மட்டுமே தரப்படும்) இந்தத் தகவல்கள் எல்லாம் எதற்கு ? நிற்க: Western Ghats. 1,60,000 சதுர கிலோமீட்டர். எத்தனை மரங்கள்....நாளொன்றுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் அந்த மரங்களிலிருந்து வெளியேறும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதைத்தாண்டி, எடுத்தஎடுப்பிலேயே UNESCO மேற்குத்தொடர்ச்சி மலை பற்றி என்ன சொல்கிறது... 

Older than the Himalaya mountains, the mountain chain of the Western Ghats represents geomorphic features of immense importance with unique biophysical and ecological processes. The site’s high montane forest ecosystems influence the Indian monsoon weather pattern. Moderating the tropical climate of the region, the site presents one of the best examples of the monsoon system on the planet

கவனித்தீர்களா... best examples of the monsoon system on the planet. இதுவும் போதாதென்று மேற்குத்தொடர்ச்சி மலை நமக்குத்தரும் கொடைகளில் முக்கியமான மூன்று விஷயங்கள்: கோதாவரி, கிருஷ்ணா, காவேரி. இம்மூன்று நதிகளையும் தாண்டி, துங்கபத்ரா – தாமிரபரணி போன்ற ஆறுகளையும் அதன் கிளையாறுகளையும் கணக்கெடுத்தால் ஒரு பக்கத்திற்கு லிஸ்ட் போடலாம்.

பல்லுயிர் ஓம்புதல் – இயற்கை வழிபாடு – இயற்கையோடு இயைந்த வாழ்வு கொண்ட தமிழர்/இந்தியர் மரபு என்றெல்லாம் காலங்காலமாக ஜல்லியடித்துக்கொண்டுவரும் நாம் என்ன செய்திருக்கிறோம் ? // Change analysis has revealed the net loss of 35.3% of forest area in the Western Ghats from 1920’s to 2013 //. எண்பதே வருடத்தில் 35.3 % அழிந்தேவிட்டது. இத்தனைக்கும் இது அரசு துறை சார்ந்த அமைப்பு வெளியிட்ட ஸ்டடி. இழப்பு மேலும் அதிகம் என்று வேறு சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 


Report: Assessment and monitoring of long-term forest cover changes (1920–2013) in Western Ghats biodiversity hotspot


இந்த அழிவிற்கும் மழைக்கும் என்ன சம்பந்தம் ? ஏகத்துக்கும் இருக்கிறது. 1920ல் ஒரு லட்சம் ஹெக்டரில் மரங்கள் இருந்தன என்று வைத்துக்கொள்வோம். அத்தனை மரங்கள் சேர்ந்து செய்யும் evapotranspiration + வெப்பநிலை/காற்று சலனங்களினால் கோவாவில் ஆரம்பித்து தமிழ்நாடு வரை மழை அளவு ஒருமாதிரி இருந்திருக்கும் அல்லவா. இப்பொழுது, ஒரு லட்சம் ஹெக்டர் 64,000மாக குறைந்திருக்கிறது. இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் ? 

சீரான மழை இருக்காது, ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒன்றிரண்டு நாட்களில் பெய்து முடித்துவிடும்; இல்லை பொய்த்துப்போக நேரிடும். நான் சொல்லவில்லை. IISc இந்த விரிவான ஸ்டடி சொல்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் மேற்குத்தொடர்ச்சி மலை சார்ந்த மழை அளவு குறைவாகவே இருக்குமென்று. கர்னாடகா தான் இதில் மிகவும் பாதிப்படையக்கூடுமென்றும் இந்த ஸ்டடி கூறுகிறது.இந்த அறிக்கையின் Appendixல் மிகத்தெளிவாக – அடுத்த பத்தாண்டுகளுக்கான மழை அளவு கணிப்பு பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஒருசில மாதங்கள் தவிர, பல மாதங்களில் மழை அளவு சீரற்றதாகவே உள்ளது.



Source: Analysis of land surface temperature and rainfall with landscape dynamics in Western Ghats, India 

குவாரிகளில் ஆரம்பித்து விவசாயம் வரை deforestrationனுக்கான பல காரணிகளுண்டு. உதாரணத்திற்கு விவசாயம். மலைப்பகுதியை ஆக்ரமித்து (மண்வளம் காரணமாக) விவசாயம் செய்வது காலங்காலமாக நடந்து வருகிறது. விளைவு ? 2003 – 2012. பத்தே வருடம். எவ்வாறு விவசாயம் என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுகின்றன என்று பாருங்கள். இருப்பதிலேயே Southern Western Ghatsல்(கர்னாடகா - தமிழ்நாடு - கேரளா) தான் பாதிப்பதிகம்.



Water, the elixir of life:

மழை பெய்தது/பெய்கிறது/பெய்யப் போகிறது. அடுத்து ? இந்த கட்டம்தான் மிகமிக முக்கியமானது. எவ்வளவு கவனமாக நாம் செயல்பட வேண்டும், அசட்டையாக நாம் செய்யும் காரியங்களினால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும்....ஏகப்பட்ட விஷயங்களை புரிந்துக்கொள்ள Groundwater/Surface water பற்றிய புரிதல் மிகமிக தேவையானது. 

Surface water: குளம், குட்டை, ஆறுகள், ஏரிகள் – இவைகள் அனைத்துமே surface water. நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் நீர். மழை பெய்தவுடன், மேடான பகுதியிலிருந்து இறக்கமான பகுதிக்கு நீர் ஓடும். நடுவில் பள்ளம் (குளம், குட்டை, ஏரி) இருந்தால் அங்கே தேங்கி நின்றுவிடும். Western ghatsசில் பெய்யும் மழையால், கிட்டத்தட்ட 2800m உயரம் என்பதால் மழைநீர் ஒன்று சேர்ந்து(காவேரி) பள்ளத்தை நோக்கி ஓடுகிறது. பள்ளம் ? கடல் தான். பல மில்லியன் வருடங்களாக இந்த process நடந்துகொண்டிருக்கிறது. இந்த natural flow தடைப்பட்டால் – ஆற்றுப் பாதையில் ஆக்கிரமிப்பு மாதிரி – என்னாகும். Simple. சென்னை டிசம்பர் 2015.

Groundwater: மழை அடித்துத் துவைத்திருக்கும். ஆனால் அடுத்தநாள், சுத்தமாக எல்லா நீரும் காணாமல் போயிருக்கும். அட பகல் நேரமாக இருந்தால்கூட ஆவியாகியிருக்கும் என்று புரிந்துகொள்ளலாம். இரவு நேரத்தில் எங்கே போயிருக்கும் ? Of course, எல்லாருக்கும் தெரிந்ததுதான். பூமி உறிஞ்சிக்கொள்ளும். பூமி என்ற வஸ்து என்று தோன்றியதோ, எப்பொழுதிருந்து மழை பெய்ய ஆரம்பித்ததோ எப்பொழுது நதிகள் ஆறுகள் ஓட ஆரம்பித்ததோ அன்றிலிருந்து பூமி நீரை உறிஞ்சிக்கொண்டே இருக்கிறது. அந்த நீர் எங்கே போகும் ? Aquifers. எளிமையாக சொல்வதென்றால், பூமிக்கு அடியிலிருக்கும் பாறை இடுக்குகள். நமது பூமிக்கடியில் எல்லா இடங்களிலும் நிலத்தடி நீருண்டு. அது எந்த மட்டத்தில், எந்த மாதிரியான பாறைகளுக்கு நடுவில் என்பதுதான் கேள்வி. 


க்ரைண்டர் துடைக்கும் ஸ்பான்ஜ் மாதிரியான அமைப்பை கற்பனை செய்துகொள்வோம். ஸ்பான்ஜின் மெட்டீரியல், கடிமானதாக/தண்ணீர் உறிஞ்சும் தன்மை குறைவாக இருந்தால்....நிச்சயமாக ஸ்பான்ஜ் தண்ணீரை பிடித்துவைக்கும் அளவு குறையும் தானே. அதுபோலவே...பாறை வகைகளைப் பொறுத்துதான் நிலத்தடி நீரின் ஓட்டம் இருக்கும். Limestone மாதிரியான வகை என்றால் நீரை அதிகளவு “பிடித்து” வைக்கும். இந்த பாறைகளிலிருக்கும் இடுக்குகள்/ஓட்டைகளின் அளவைத்தான் porosity என்பார்கள்.


இந்த நிலத்தடி நீர், gravityயின் காரணமாக கடல் மட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும். பாறைகளமைப்பு, மண் தன்மை போன்ற காரணிகளால் இந்த “நகர்தல்” சில சமயம் மிகமிகமிக மெதுவாக ஆண்டுக்கணக்காக நடைபெறும். சில சமயம் மிக வேகமாக ஒரேநாளில் கூட நகர்வதுண்டு.



Riparian zone - இது மிக முக்கியமானது. ஆறு/நதி ஓரங்களில் இருக்கும் நில/காடு பரப்புகளுக்கு riparian zone/forests என்று பெயர். மிகவும் வளமையான பகுதிகள் இவை. ஏகப்பட்ட உயிரினங்கள் இந்த riparian zoneகளை நம்பியுள்ளன.

Surface waterக்கும் Groundwaterக்கும் இருக்கும் பல முக்கிய வேறுபாடுகளில் ஒன்று – தூய்மைத்தன்மை. நிலத்தடி நீர் பூமிக்கடியில் இருப்பதால், surface waterல் இருக்கும் வைரஸ், பாக்டீரியா போன்றவைகளோ, கழிவுகளோ இருக்காது. அடியில் போகப்போக Filterராகிவிடும். மாறாக, contamination இருக்கும். குறிப்பாக வேதிப்பொருட்கள். நிலத்தடிநீர் மெதுவாக நகர்வதால் – ரசாயன வேதி பொருட்கள் எல்லாம் உள்ளே இறங்கி இறங்கி தங்கி நச்சுத்தன்மை கூடும். Surface waterல் இருக்கும் கழிவுகளைக்கூட கொஞ்சம் சிரமப்பட்டு சரிசெய்து விடலாம். ஆனால் அந்த surface waterரை ஆண்டுக்கணக்கில் உறிஞ்சிகொண்டே இருக்கும் நிலத்தடி நீரில் படிந்த வேதிபபொருட்களை நீக்குவது முடியாத காரியம். இதனால்தான் பலரும் தோல் தொழிற்சாலை கழிவுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் வரை ஆறுகளில் முறையில்லாமல் கலப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

தமிழ்நாட்டின் தற்போதைய நிலை என்ன ? Tamilnadu Pollution Contraol Boardன் ரிபோர்டை படித்தால் உண்மையான நிலவரம் புரியும்.


நிலத்தடி நீர் மாசடைதல் ஒருபக்கம் என்றால், அடுத்த பிரச்சனை....over exploitation. சக்கையாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பது. முறையற்ற bore போடுதலில் ஆரம்பித்து....

TWADன் இந்தப் படம் எந்தளவுக்கு தமிழ்நாட்டின் நிலை மோசமாக உள்ளது காட்டுகிறது. பாருங்கள்...காவேரி பேஸின், கோவை முழுக்க முழுக்க over exploitation தான். இதுபோக, கடைகரையோரம் உப்புநீர் உள்ளே ஏறியிருக்கிறது.  தமிழ்நாடு முழுக்க - 320+ blockகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் Safeயை (பச்சை)  விட Critical + Semi - critical எத்தனை என்று பாருங்கள். மேலதிக தகவல்களுக்கு அந்த ரிப்போர்ட்டை படித்துப்பாருங்கள். அப்படியே இதையும்...


                                         Over exploited blocks of Tamil nadu 




Over exploitation எப்படி நடக்கிறது ? ஆக்டோபஸின் டென்டகில்ஸ் மாதிரி ஏகப்பட்ட கிளைக்கதைகள் இதற்குண்டு.

முறையற்ற Borewellகளில் ஆரம்பித்து... 


மேலிருக்கும் படம் மிகத்துல்லியமாக நிலைமையை விளக்குகிறது. போர் போடும்போது - அந்த இடத்தின் சூழலியல், மண்ணமைப்பு, நீர்வளம் பற்றியெல்லாம் கவலையேபடமால் ஆழமாக செல்லச்செல்ல சுற்றி இருக்கும் எல்லா நீரும் போர்வெல்லை நோக்கியே வரும்தானே. இதனால் என்ன நடக்கும் ? இதுவே கடற்கரையோரம் போர்போட்டால் ? இயற்கையாக கடலைநோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நீர் உள்வாங்கும். அந்த நீர் முடிந்தவுடன்....கடல்நீர் உள்ளே வர ஆரம்பிக்கும். இப்படித்தான் சில விவசாய நிலங்களில் உப்புநீர் உள்ளே ஏறுவது. 

விவசாயம் வரை

விவசாயத்திற்கு நிலத்தடி நீரை உபயோகப்படுத்துவதை எப்படி குறை சொல்ல முடியும் ? சுத்த பேத்தல் இது. அதானே.....நிற்க: இந்தியாவைப் பொறுத்தவரை 1960கள் மிகமிக முக்கியமான ஆண்டுகள். உணவில் தன்னிறைவை அடைந்தே தீருவது என்ற முனைப்புடன்....இந்தியா இறக்குமதி செய்த "பசுமை புரட்சி" கோடிகணக்கான இந்தியர்களின், குறிப்பாக விவசாயிகளின் தலையெழுத்தை அடியோடு மாற்றியது. அதோடு மட்டுமா...நாட்டின் விவசாய நிலங்களின் போக்கையும் அடியோடு மாற்றித்தொலைத்தது. அதுவரை surface waterகளான ஆற்றுநீர், குளம், குட்டைகளை நம்பி இருந்த விவசாயம், கொஞ்சகொஞ்சமாக நிலத்தடி நீரை நோக்கை நகர ஆரம்பித்தது. காரணம் ? "இறக்குமதி" செய்யப்பட்ட HYV (High Yield Varieties) அரிசி/கோதுமை விதைகளுக்கு நமது பாரம்பரிய விதைகளை விட பலமடங்கு தண்ணீர் தேவைப்பட்டது. 1950களில் இந்தியா முழுக்க - நிலத்தடி நீரை நம்பி செய்யப்பட்ட விவசாயத்தின் சதவீதம் இன்று எந்தளவுக்கு இருக்குமென்று நினைக்கிறீர்கள் ? 10.....20....50...100...ம்ஹும்....500 %, சரியாகத்தான் வாசித்தீர்கள் 500 % அதிகரித்திருக்கிறது. குறைந்தசெலவில் மின் மோட்டர்கள், இலவச மின்சாரம் என்று பலதும் சேர்ந்து சக்கையாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டது.


Referenced Article: India's groundwater crisis 

இந்த HYVகளால் ஏற்பட்ட இன்னொரு கொடுமை, விவசாய நிலங்களின் தன்மை மாறியது. இதோடு பல காரணிகளின் சேர, விவாசாயிகள் பணப்பயிர்களுக்கும், கரும்பிற்கும் மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர் (இதைப்பற்றி கொஞ்சநேரங்கழித்து பேசுவோம்). விவசாயத்தை மட்டும் குறை சொன்னால் எப்படி....மற்ற துறைகள் என்ன செய்தது ? நியாயமான கேள்வி. ஆனால், தமிழ்நாட்டின் மொத்த நீரளவில் கிட்டத்தட்ட 90% விவசாயத்திற்குதான் தேவைப்படுகிறது.



இன்னொரு பக்கம், தேவை குறைவாக இருந்தாலும் தொழிற்சாலைகளில் ஆரமபித்து, கோக் - பெப்ஸி போன்றவைகளும் - வாட்டர் பாட்டில் கம்பனிகளும் எவ்வளவு உறிகின்றன என்பதுகுறித்தான ஆராய்ச்சிகள் மிகமிகக்கம்மி. அரசாங்கமும் இதில் - obviously - மெத்தமானகவே இருக்கிறது. எப்படி நடவடிக்கை எடுக்கும் முனைப்புவரும் ? அனுமதி யார் கொடுத்தது, எவ்வளவு பேருக்கு எவ்வளவு பங்கு போயிற்று...இப்பிடி எத்தனை உட்பிரிவுகள் இதில் உள்ளன. எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்று அரசே சொல்லுமா என்ன. உதாரணம் வேண்டுமா... இதோ: எந்த ஏரியா...ஏற்கனவே மேலே பல புள்ளிவிவரங்களும் மோசமாக இருப்பதாக அறிவித்த கோவை - திருப்பூர் ஏரியா தான்





OK. காவேரி பிரச்சனைக்கு வருவோம். தமிழர்கள் வஞ்சிப்பு, நூற்றாண்டுகால ஒப்பந்தம்...blah...blah..blah...இதெல்லாம் தாண்டி, அசலான பிரச்சனைகளாக மூன்று விஷயங்களைச் சொல்லலாம். 

1) 2015ல் விவசாயிகள் தற்கொலை அதிகளவில் நடந்த மாநிலங்கள் என்னென்ன தெரியுமா ? நமக்கு மேலே இருக்கும் எல்லா தென்னக மாநிலங்களும். குறிப்பாக, கர்நாடகாவில் பாருங்க...40% அதிகரித்திருக்கிறது. தென் கர்நாடகா - படுவறட்சியில் உள்ளது. அதுபோலவே, ஆந்திரா - தெலுங்கானாவின் பல பகுதிகளும். இந்நிலையில் சிறிய check-damsகளை கட்டுவதை நாம் எவ்வாறு நிறுத்த சொல்ல முடியும் ? அப்பறம் தண்ணீர் இல்லாமல் நாம் மட்டும் சாவதா...அதானே. பொறுங்கள்.




கர்னாடகாவில் எங்கிருந்து பிரச்சனை தொடங்கியதென்றால், அவர்களது பயிர் செய்யும் முறையிலிருந்து. நாம் மட்டும் விதிவிலக்கல்ல. ஆனால், கர்னாடகம் நம்மைவிட, அதிகளவில் நீர் தேவைப்படும் பயிரை பயிரிட்டுக்கொண்டிருக்கிறது. அதுபற்றிய மிகத்தெளிவான கட்டுரை இது. இந்தக் கட்டுரை தான் என்னையும் இவ்வளவு நீண்ட கட்டுரையை எழுதத் தூண்டியது.

Water isn't infinite: Karnataka should take a hard look at how it uses its lifeline

கர்னாடகாவில், 40 வருடத்தில் கருப்பு பயிரிடப்படும் ஹெக்டரின் அளவு....நம்ப முடிகிறதா...+586 % அதிகரித்திருக்கிறது. இதுபோக, நெல் (Paddy) சாகுபடி. நெல் - அதிகம் தண்ணீர் தேவைப்படும் பயிர். அதன் பரப்பளவும் கர்னாடகாவில் அதிகரித்திருக்கிறது. இதுபோக, பணப்பயிர்கள். அரசாங்கத்தின் கேணத்தனமான பல கொள்கைகளையும் காரணமாக சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு, கரும்பிற்கு தரப்பட்டும் குறைந்தபட்ச ஆதார விலை (MSP - Minimum Support Price) அதிகம். அதனால், ஏற்கனவே நட்டத்தில் பொழப்பை நடத்திக்கொண்டிருக்கும் விவசாயிகள் அதைநோக்கி நகர்வதைத் தவிர வேற வழியில்லையே. நமது பாரம்பரிய உணவுப் பயிர்களான - தண்ணீர் மிகக்குறைவாகத் தேவைப்படும் - சிறு தானியங்களை யார் கண்டுகொள்கிறார்கள் ?. தமிழ்நாடென்று மொத்தமாக எடுத்துக்கொண்டால், கரும்பு பயிரிடப்படும் பரப்பளவு +220% கூடியிருக்கிறது. நெல், பருத்தி போன்ற தண்ணீர் அதிகளவு தேவைப்படும் பயிர்களின் பரப்பளவு குறைந்திருக்கிறது.ஆனால் பணப் பயிர்களின் பரப்பளவு அதிகமாயிருக்கிறது. நமது மண்வளம்/நீர் வளத்திற்கு உகந்த சிறுதானியங்களின் பரப்பளவும் குறைந்திருக்கிறது. மேலதிக விவரங்களை ரிப்போர்ட்டிலிருந்து பெறலாம்.



மேலிருக்கும் புள்ளிவிவரம் தமிழ்நாடு முழுமைக்குமானது. சிக்கல் எங்கேயென்றால் காவிரி டெல்டா பகுதிகளில் தான். இந்த இரண்டு மேப்களைப் பாருங்கள். பிரச்சனையின் ஆரம்பப்புள்ளி இதுதான். காவேரி பேஸின் பகுதியில் கர்னாடகா, தமிழ்நாடு - இரண்டு மாநிலங்களுமே அதிகளவில் கருப்பையும், நெல்லையும் பயிரிட்டுள்ளனர். (தற்போது நீர் திறக்கப்படுவது சம்பா சாகுபடிக்குத்தான் என்றாலும்) இரண்டிற்குமே அதிகளவில் தண்ணீர் தேவை. நிலத்தடி நீர்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுவே over exploitationனிற்கு வழிவகுக்குகிறது. அதைத்தான் மேலே இருக்கும் தமிழ்நாடு மேப்பில் தெளிவாக பார்த்தோமே. இந்த over exploitation, ஆறு/குளம்/குட்டை/ரிசர்வாயர்களில் இருக்கும் surface waterரை பாதிக்கிறது. இந்த சைக்கிள் அப்படியே தொடர்ந்துகொண்டே இருக்கும்.

Src: http://archive.indiawaterportal.org/book/export/html/113

மணல் கொள்ளை....

நிலத்தடி நீரை விடுங்கள். இவ்வளவு நீர்பற்றாகுறை நிறைந்த மாநிலம். தண்ணீருக்காக சுற்றியிருக்கும் எல்லா மாநிலத்துடனும் சண்டை. நிலமை இப்படியிருக்கையில், உள்ள நீரை எவ்வளவு ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும் ? ஆனால் தமிழ்நாட்டில் (கர்நாடகாவிலும் தான். கேனத்தனத்தில் மட்டும் அணைத்து இந்தியர்களும் ஒன்று) மணல் மாஃபியா கொடிகட்டிப் பறக்கிறது. ஆற்று மணலை எடுத்துக்கொள்வோமே. ஆற்று மணல்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது ? ஆற்று மணல்களுக்கு நீரை உறிஞ்சும் தன்மை அதிகம்; மழை நீரை உள்ளது உள்ளபடி அலேக்காக உறிஞ்சிக்கொள்ளும். இதனை கண்டபடி அள்ளும்போது நிலத்தடி நீர் மட்டம் குறையும்; ஆற்றின் போக்கு மாறும்; வெள்ளப்பெருக்குகளுக்குக்கூட காரணமாக அமையும். 

இதை தற்போது அரசாங்கமே நடத்தித்தொலைவதால் இன்னும் வசதியாக போயிற்று. ஐந்தடி வரை அள்ளலாம் என்று  அனுமதி வாங்கிக்கொண்டு 25 அடிவரை அள்ளப்பட்ட  இடங்கலெல்லாம் தமிழ்நாட்டில் உண்டு. இந்த ஆய்வைப் படித்துப்பாருங்கள். தாமிரபரணியில் எப்படி அழித்தொழிக்கப்பட்டிருக்கிறதென்று. இதுபோக, தமிழ்நாட்டின் மொத்த மணல்தேவையில் 60% காவிரியில் பேஸின் பகுதியிலிருந்துதான் எடுக்கப்படுகிறது (அரசே அனுமதித்த அளவின்படி). இதோடு திருட்டுத்தனமாக மணல் அள்ளுதலையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சுத்தம். டிட்டோ, கர்னாடகாவிலும் இதேதான் நடக்கிறது. God's own country...கேரளா மட்டும் தப்புமா என்ன ? Western Ghats முழுக்க இதே நிலைமைதான். 

ஆட்சி மாறினாலும் இந்த கொள்ளைகள் மட்டும் என்றாவது குறைந்து பார்த்திருக்கிறீர்களா ? திமுக - அதிமுக ஆட்சி மாறினாலும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் - திமுக ஆட்சியில் கட்டபட்டது என்ற ஒரே காரணத்திற்காக கோட்டூர்புரம் லைப்ரரியை மூடினார்களல்லவா..ஆனால், க்ரானைட்/கணிம வளம்/மணல் அள்ளுதல் - இந்த விஷயங்களிலெல்லாம் முந்தைய திமுக ஆட்சியின் கொள்கைகளை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டார். ஏனென்று நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.
Desiltingகினால் (தூர் வாருதல்) என்ன நடக்கும் ? மழை பெய்கிறது. குளம், குட்டைகளில் தேங்குகிறது, ஆறுகளில் ஓடுகிறது. இந்த அமைப்புகளை முறையாக ஆழப்படுத்தி – குப்பைகள் சேராமல் வைத்திருந்தால்....நிலத்தடியின் நீர்மட்டும் அதிகரிக்கும்; இதன்மூலம் – வேதிப்பொருட்கள் கலந்த நீரின் மாசு குறையக்கூடும்;  தண்ணீர் நிறைய தேங்கி இருப்பதன் காரணமாக தண்ணீர் தட்டுபாடான காலத்தில் ஓரளவு சமாளிக்க முடியும். 


க்வாரிகளுக்கு வருவோம். க்வாரிகளால் என்ன பாதிப்பு ஏற்படும் ? நிலத்தடி நீர் பாறைகளுக்கிடையே இருக்கும்; அது பாறையின் தன்மை பொறுத்து நீரோட்டம் இருக்குமென்று கொஞ்சநேரத்திற்கு முன்பு பார்த்தோமில்லையா ? Granite போன்ற பாறைகள் அடர்ந்த வகைப் பாறைகள். இதில் ஏற்கனவே குத்துயிரும் கொலையிருமாகவே நிலத்தடி நீர் நகர்ந்துகொண்டிருக்கும். நாம் அதையும் சிதைக்கும் போது – க்வாரிகள், வெடிகள் – மொத்தமாக இந்த பாறைகளின் அமைப்பு சிதைந்து நிலத்தடி நீர் அங்கேயே மாட்டிக்கொள்ளக்கூடும். இதுபோன்ற பகுதிகளை aquitards என்று சொல்வார்கள். இதைமட்டும் சொல்லியாக வேண்டியுள்ளது. மதுரையில் கிரானைட் முறைகேடு/சகாயம் விஷயம்...அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். க்ரானைட் வெட்டி எடுக்கப்படுவதற்கு - 2003 to 2011 வரை 139 அனுமதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதில், 77 அதிமுக (2001 - 2006 ஆட்சியில்) திமுக - 68 (2006 - 2011) ஆட்சியில்.

Must Read:

1) Cauvery gouged

2) Mining mafia silenced the media

3) Illegal Sand Mining, Karnataka

4) Illegal sand mining in River Bhavani continues

5) Environmental impact of sand mining in Tamiraparani River, south Tamilnadu

6) A requiem for rivers

7) The mother of all loot


--------------------------------------
இதோடு முடித்துக்கொள்வோம். அடிக்கடி கேட்க நேரிடும், உடலெல்லாம் ப்ளேடால் கீறியதைப்போல என்னை பதற வைக்கும் சில வார்த்தைகள் "நதிநீர் இணைப்பு", "வீணாக கடலில் கலக்கும் ". மேலே பதிவு  முழுக்க மனித ஜந்துகளுக்கு தேவையான விஷயங்களைப்பற்றி மட்டுமே பார்த்தோம். ஐயா.....ஆறு/நதி என்பது நமக்கானது மட்டுமல்ல. எல்லா உயிரினத்திற்கும் பொதுவானது. நம்மைவிட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இங்கே பலநூறு உயிரினங்கள் நடமாடிக்கொண்டிருந்தன. நாம் ஆற்றின் போக்கை மாற்றுகிறோம் என்று பேசுவதேகூட அபத்தத்திலும் அபத்தமானது. "மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடங்கி கேரளா வழியாக வீணாக கடலில் கலக்கும் ஆற்றை..." இப்படி பலரும் பேசத்'தொடங்குவதை பார்த்திருக்கிறேன். ஐயா...அந்த ஆறு போகும் வழியெல்லாம் நமக்கு தெரிந்த/நமக்கு தெரியாத எத்தனை எத்தனை உயிரினங்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறதென்று துல்லியமாக கணக்கிடும் அளவிற்கு மனிதனுக்கு சக்தியில்லை. ஆறும் - கடலும் சங்கமிக்கும் முகத்துவாரங்கள் குறிப்பிட்ட வகை மீன்கள், நண்டுகளில் ஆரம்பித்து பல உயிரினங்களுக்கு மிகமிக முக்கியமான பகுதி. இந்த சிறு உயிரினங்களை நம்பி பெரிய உயிரினங்கள் உண்டு. எல்லாவற்றையும்விட, சில processகள் irreversible. கிறுக்குத்தனமாக நாம் எதையாவது செய்துவைத்தோம் என்றால், மீண்டும் அதை சரிசெய்யவே முடியாது. மற்ற உயிரினங்களோடு சேர்த்து...சுத்திமுத்தி பாதிப்பு நமக்கும் வந்துசேரும்.

இந்த மாபெரும், அதியற்புதமான, intricate - சூழலியலில் நாமும் இருக்கிறோம். நாம் மட்டுமே கிடையாது. அவ்வளவே (இந்த புரிதலிருந்தால் ஏன் பெண்கள் மீதி ஆஸிட் அடிக்கப்போகிறான், சாதி கட்டமைப்பு இன்னும் இருக்கப்போகிறது). பூமிக்கு வந்தோமா - நமது சந்ததியை பெருக்கிவிட்டோமா - அனைத்தையும் மூடிக்கொண்டு, வேடிக்கை பார்த்தபடி இருந்தோமா - ஒருநாள் கட்டையை சாத்தினோமா....போதும். இதுவே போதும். எதையும் கெடுக்காமல் சும்மா இருப்பதே பெரிது. இதெல்லாவற்றையும் தாண்டி, இயற்கையின் complexityயை புரிந்துகொள்ள நமக்கு ஒரு ஆயுள் போதாது. ஆனால், புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். நமது குழந்தைகளுக்கும் புரிய வைக்க முயற்சி எடுக்கலாம் Dot
------------------------------