The sun had come out
The temperature had dropped
a whirlwind kicked up
just as a cry shot forth from the heart

ரோஜா படம் வெளியானபொழுது எனக்கு ஆறு வயது. அதனால் அந்தப் படத்தின் இசை குறித்து எனக்கு ஒன்றும் தெரியாது. ஒளிப்பதிவு நினைவில் உள்ளது. பாடல்கள் கேட்க அருமையாக இருந்தது. அவ்வளவே தான் ஞாபகம் உள்ளது. அதேபோன்று தான், அதற்கடுத்த ஆண்டில் வெளிவந்த திருடா திருடா. ஒளிப்பதிவும் - அதிரடியான இசையும் ஞாபகம் உள்ளது. ஊன்றிக் கேட்கும் பழக்கம் எல்லாம் இல்லாத வயது (ஆறு ஏழு  வயதிலயே அவ்வாறு கேட்கும் அளவிற்கெல்லாம் - மணிரத்னம் படங்களில் வரும் "சிறுவர்கள்" தவிர்த்து - யாராவது சிறுவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே). 1998. ஏதோ ஒரு விடுமுறை தினம் என்று நினைக்கிறேன். இருங்கள், விக்கியைப் பார்த்தால் தெரிந்துவிடப் போகிறது......எஸ்....இந்தியாவின் சுதந்திரதினம். அதுவும் ஐம்பதாவது பொன்விழா கொண்டாட்டம். DDயில் சுதந்திரதின சிறப்பு நிகழ்ச்சியில், ஒரு படம் குறித்து அதன் இயக்குனர், வசனகர்த்தா, நடிகர்( திக்கித்திணறிய தமிழில் ஒரு ஹிந்தி நடிகர்) என்று அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், வழக்கத்துக்கு மாறாக சவ்ண்ட் இஞ்சினியர் ஒருவரும் பேசினார்.    H.ஸ்ரீதர். ஒரு பாடலைச் சொல்லி, கண்ணை மூடிக் கேட்டால் அப்படியே ரயிலில் பிரயாணம் செய்வதைப் போன்றதொரு உணர்வைத் தரும் என்று சிலாகித்துக்கொண்டிருந்தார். என்ன பாடல் என்று சொல்லத்தான் வேண்டுமா ?


படமும் வெளியானது. எனது இசை கேட்கும் வழக்கத்தையே முற்றிலுமாக மாற்றி அமைத்த படமாக அந்தப் படம் அமைந்தது. 13 வயது என்பதால் ஓரளவிற்கு(அட...அதைவிட இது நல்லாயிருக்கே....என்று யோசிக்கும்) அறிவுதான் அப்பொழுது இருந்தது என்றாலும், அன்று கேட்கத் தொடங்கிய வெவ்வேறு வகையான பாடல்கள் இன்றளவும் எனக்கு சலிப்பைத் தருவதில்லை. ரஹ்மான் இசையில் லேயர்ஸ், orchestration - என்பதெல்லாம் மிகமிக நுணுக்கமாக தனித்துவமாக கையாளப்படுகிறது. உயிரே படத்தில், என்னுயிரே பாடலில் இந்த இடத்தில வரும் இசை, என்ன கருவி என்று தெரியவில்லை.....அப்படியே தூண்டில் மாதிரி என்னை இழுத்துக்கொண்டே இருந்தது. மேலும், இந்தப் பாடலில் ஆரம்பத்திலிருந்து கிடார் மூன்றுவித ஸ்கேலில் - மூன்று வெவ்வேறு லேயர்களில் ஒலிப்பதைக் கேட்கலாம். சரியாக சொல்ல அளவிற்கு டெக்னிகல் அறிவு கிடையாது. நீங்கள் கேட்பதே நலம்.

தைய தையா, என்னுயிரே இந்து ரெண்டு பாடல்களையும் விட மிகமிக - ஏனென்றே தெரியாமல் - வெறித்தனமாக பிடித்த இன்னொரு பாடல் - சந்தோஷக்  கண்ணீரே.....  முதன்முறையாக அந்தப் பாடலைக் கேட்கும் போது இருந்த இனம்புரியாத சந்தோசத்திற்கு ஈடுயிணை எதுவும் இல்லை. ஒருசில ஆண்டுகள் முன்னர், அந்தப் படப்பாடல்களின் பின்னணி குறித்து - சுஃபி வகையான இசை என்ற அளவில் மட்டுமே தெரிந்திருந்து. ஹிந்தியில் பலமுறை கேட்டிருக்கிறேன். வார்த்தைகளில் ஒரு லாவகம் இருந்தது என்று மட்டும் உரைத்தது. சென்ற வருடம். NDTVயின் ரஹ்மானுடனான பேட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் தெரிந்துகொண்ட பல விஷயங்களில் தில் சே பாடல்களைப் பற்றிய விஷயங்களும் அடங்கும். அந்தப் பாடல்களுக்கு வேறொரு பரிமாணத்தை என்னுள் இந்த இன்டர்வியு உண்டாக்கியது.

NDTV: So you said you were there and Dil Se, how did it happen?

AR Rahman: So Dil Se would be probably me at that zone and very much in the UK. Going and coming back. So the brief was very funny. Just gave me the seven stages of love.

NDTV: Arey waah!

AR Rahman: It's attraction, its lust and finally it's death.

NDTV: Why is this?

AR Rahman: Forgot all of the stages. I mean I never told you a story...

NDTV: Which stage were you at that time?

AR Rahman: I was in the last stage.

NDTV: So, let us see how did it happen?

AR Rahman: I think that one song we did. Satrangi Re, probably the culmination of everything. That song has got seven-stage thing.

NDTV: But in actual Dil Se was a big hit!

AR Rahman: Yeah. I think Dil Se had great lyrics, you get to sing, we all sing.

NDTV: Now, you are being very modest. Let us hear this song. And they will decide which is beautiful...

NDTV: What do you think when you played now?

AR Rahman: I think it's a very meditative. It has got two outburst of anger. I would say anger but angst in it. And it has got opposite of that. If you can code this together, the mantra is like explosion of anger and the initial was very meditative. It takes you to the zone of, it's very typical Mani.

NDTV: Yeah, but how did you vibe everything so well, that you got thing?

AR Rahman: I am a big fan. I am still a fan...

NDTV: And vice versa of course. What he says about you. I mean I am no one to say, but you are a good human being, on top of being a good talent, all great people tend to be that, I think yeah. But tell me you have a fun side also, Chahiya Chahiya where did that come from?

AR Rahman: It's a long story.

NDTV: I would love to hear that because it's like the left half of you?

AR Rahman: Ah, I think, when you discover an artist like Sukhwinder, who is amazing, so in the process of discovering as an artist and a lyrics writer and all that stuff, when I was doing Vande Maatram, we jammed together once. I said, okay let's start with something of Babe Bulleh Shah, you know his poetry, because I am a big fan of Nusrat and his music. I said why don't you, you are from Punjab, let's take some poetry, so this is a poetry of Baba Bulleh Shah, so I put a grew and we started jamming and so, ah, it was called Thaiya Thaiya first and it didn't fit into the album of course of Vande Matram. So, I said let's not give it all away, it was there lying for an year and then money came and I said that's my song and I am doing an expo, so we had this great idea, so I wanted to do it on sort of a train, and I wanted Shah Rukh to dance on the train and of course Gulzar Sahib came with Chahiya Chahiya. It changed and because it changed it became more phonetic, interesting quality about it and has this beautiful thought in it and Sukhi sang it and he landed.

-------------------------------

இந்தப் பாடலைப் பற்றி மேலிருப்பதைப் போன்ற பதிவைத்தான் எழுதுவதாக சிலபல மாதங்கள் முன்புவரை முடிவில் இருந்தேன். "Jab tak hai jaan"  என்ற படத்தின் "Challa" என்ற பாடல் வெளியானது. ராபி ஷெர்கில் பாடிய - Bhulla ki jaana maen kaun - பாடலின் மிகப் பெரிய ரசிகன். அதபோன்றதொரு ஸ்டைலில் இந்தப்பாடல் இருந்ததனால், தத்துவரீதியிலான அர்த்தம் என்னவென்று தெரிந்துகொள்ள, பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை நெட்டில் தேடிக்கொண்டிருந்தேன். பொதுவாக, Ignorance is a bliss என்பதில் முழு நம்பிக்கை உடையவன். குழந்தைகள் ஏன் சிரிக்கிறார்கள் என்று அதன் காரணத்தைத் தேடத் தொடங்கினால், அதன் அழகை ரசிக்க முடியாததைப் போன்று.....பாடல் வரிகளுக்கு சரிவர அர்த்தம் தெரியாமல் கேட்பதிலும் ஒரு அலாதி சுகம் இருக்கவே செய்கிறது. இருந்தாலும், என்னதான் இந்தப் பாடலுக்கு அர்த்தம் என்று பார்த்துவிடுவது என்று வலைப் பக்கத்தில் படித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பாடலுக்கு பக்கத்திலயே - Dil se re English translation என்று இருந்தது. ஒரு ஆர்வத்தில் என்னதான் அர்த்தம் என்று பார்ப்போமே என்று க்ளிக் செய்ய......

உண்மையாகச் சொல்கிறேன். Maglev ரயில்கள் ஓடும்பொழுது தண்டவாளத்தில்படாமல் அந்தரத்தில் மிதப்பதைப் போன்றதொரு தோற்றம் இருக்குமே, அப்படியான ஒரு நிலையிலயே சில நிமிடங்கள் இருந்தேன்.  அதுவரை ரசித்துவந்த அந்தப் பாடலின் தமிழ் வரிகள் ஒன்றுமேயில்லை என்று தோன்றியது. (முடிந்தால் அந்தப் பாடலை இங்கே கேட்டுக் கொண்டே கீழ்வரும் பத்திகளை படியுங்கள்)

The sun had come out
The temperature had dropped
a whirlwind kicked up
just as a cry shot forth from the heart

Two autumn leaves fell from the trees, from the tree branches they fell.
Then seasons passed,
and those two poor leaves,
in their desire to sprout, passed over the desert.

Those leaves were our hearts…they were our hearts…
If you have a heart, you’ll know pain in your lifetime,
and if pain is there, there has to be a heart too.
The seasons keep passing.....through my heart.

இதைப்பற்றி இந்த பதிவில் சொல்லியாக வேண்டும் என்று முடிவுசெய்துவிட்டு, இணையத்தில் "தில்சே ரே" என்று தமிழில் டைப் அடித்துப் பார்த்தேன். இதுகுறித்து வேறு தகவல்கள் இருக்கின்றனவா, வேறு யாரேனும் இந்தக் கோணத்தில் எழுதியிருகிறார்களா என்று தேட, கூகிள் என்னை கீழ்க்கண்ட பதிவுகளுக்கு ஈட்டுச் சென்றது. உளமாரக் கூறுகிறேன், இந்தப் பதிவுகள் தான் இப்பட பாடல்கள் குறித்தும் வேறு சில விஷயங்கள் குறித்தும் தெளிவாக எனக்குப் புரிய வைத்தது.
எதற்கெடுத்தாலும் 2000க்கு முன்பு தான் ரஹ்மானின் இசை அருமை, அற்புதம். அதற்குபிறகு ஒன்றுமேயில்லை (அப்படி ஏகடியம் பேசுபவர்களில் 99.99 % பேர் தமிழ் தவிர அவர் இசையமைத்த எதையும் கேட்டதில்லை என்பதை நானே பார்த்திருகிறேன்) இந்த பதிவுகளை படிக்க வேண்டுகிறேன். ஆனால், இந்தப் பதிவில் சொல்லியிருக்கும் சுஃபி தாக்கத்தோடு, நல்ல படங்கள், ஷ்யாம் பெனகல் மாதிரியான இயக்குனர்கள், எம்.எப்.ஹுசைன் மாதிரியான கலைஞர்கள் போன்றவர்களோடு எல்லாம் பணியாற்றும் சந்தர்ப்பம், பாடல் வரிகள், மார்கெட், புதிய முயற்சிகளை பரிசோதித்து பார்ப்பதற்கு உரிய களம் என்று காரணிகளும் சேர்ந்தே அவரை ஹிந்தியில் அதிகமாக இசையமைக்க வைத்ததாக எனக்குப்படுகிறது.

மேலே இருக்கும் பதிவின் வாயிலாக நான் தெரிந்துகொண்ட மிகமிக முக்கியமானதொரு விஷயம்.........

இந்தப் பாடல் இடம்பெற்ற ’தில் சே’ பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் சொன்ன ஒரு குறிப்பு முக்கியமானது. அதில் உள்ள பாடல்கள் அனைத்தும் திரைப்படத்திற்கு என்று உருவாக்கப்பட்டவை அல்ல. தனியான சூஃபி ஆல்பமாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டவை. எனவே அவற்றின் இசையில் சூஃபி மரபிசைக் கருவிகளை அதிகமாகப் பயன்படுத்தியிருந்தார். பின்னால் அவை திரைப்படத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது மேற்கத்திய வாத்திய இசைகளை அவற்றுடன் இணைக்க வேண்டி ஆயிற்று.


இந்த வார்த்தைகளையும் மேல ரஹ்மானின் NDTV இன்டர்வியுவையும் படித்துப் பாருங்கள். ச்சையா ச்சையா பாடலை எடுத்துக் கொள்வோம். எப்படியானதொரு ரகளையான இசை. ஆனால் அது ஒரு சுஃபி பாடல் என்றால் நம்ப முடிகிறதா ? வரிகளைப் பாருங்கள்....

எவரின் தலை மீது காதலின் நிழல் உள்ளதோ
அவரின் பாதத்தின் கீழ் சொர்க்கம் ஆகிவிடும்
எல்லோரும் இந்த நிழலில் செல்லுங்கள்
பாதங்கள் சொர்க்கத்திற்கு செல்லட்டும்


மிகமிக முக்கியமானதொரு பாடல், என்னுயிரே (அ) சத்ரங்கி ரே. பாடல் மட்டுமல்லாமல் படத்திற்குமான அடிப்படை அந்த ஏழு நிலைகள் தான்.
  1. Hub(attraction - ஈர்ப்பு) 
  2. Uns (infatuation - கவர்ச்சி) 
  3. Ishq (love - காதல்) 
  4. Aqidat (reverence - பக்தி) 
  5. Ibaadat(worship - வழிபாடு) 
  6. Junoon (passion - பித்து)
  7. Maut (death - மரணம்)
முடிவாக, DIL SE - a journey through these seven shades (Source). இதுபற்றி தான் மேலிருக்கும் பேட்டியில் ரஹ்மான் "I was in the last stage" என்று கூறியிருப்பதைக் கவனிக்க.

படம் பார்த்தவர்கள் அனைவருக்கும் இந்த நிலைகளையும் காட்சிகளையும் தொடர்புபடுத்துவதில் சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன். நுனிப்புல் மேய்ச்சல் போன்ற தெளிவில்லாத அரசியல் பார்வையை வலிய திணித்தற்கு  பதில், இந்த நிலைகளை வைத்தே அற்புதமானதொரு படத்தை மணிரத்னம் கொடுத்திருக்காலாம். விட்டுவிட்டார். இந்தப் பாடல் குறித்து மிக விரிவாக இந்தப் பதிவில்அலசப்பட்டுள்ளது. அதில் இவர் குறிபிட்டுள்ள ரூமி குறித்தும் நான் தெரிந்துகொள்ள ரஹ்மானின் இசை தான் காரணம்.  The meeting place - Rockstar. Again, ராக்ஸ்டார் படப்பாடல்களும் முழுக்க முழுக்க melancholyயான சுஃபி தன்மையுடைய பாடல்கள்.

 Do You Know
 Away From Here
Out beyond ideas of wrongdoing and rightdoing
there is a field.
I will meet you there

-  Mewlana Jalaluddin Rumi

இதைக் கேட்டதில் இருந்து ரூமியைப் பற்றி தெரிந்துகொள்ளும் முயற்சியில் இருக்கிறேன். என்ன மாதிரியான வார்த்தைகள்.......அதுவும் காதலைக் குறித்து ஏராளமான அற்புதங்கள் எழுதித் தள்ளியிருக்கிறார் (ரூமியைப் பற்றி மேலதிகமாக வேறொன்றும் தெரியாமல் ஜல்லியடிக்க விருப்பமில்லை. சில வாரங்களாகத்தான் படித்தக் கொண்டிருக்க்ரியேன்). ஜோதா அக்பரில் - க்வாஜா மேரே க்வாஜா பாடலில், வெள்ளை உடையில் அனைவரும் சுற்றுவார்களே(அதன் அர்த்தம் இதன் மூலமாகத்தான் தெரிந்தது).... அதுகுறித்தும் ரூமி குறித்தும் ஓஷோ கீழ்கண்டவாறு கூறுகிறார்.
You must have seen small children -- they like to whirl; and everybody stops them, because the fear of the parents is that the child may fall, may have a fracture, may get hurt. But in spite of all prohibitions, children love to whirl. And nobody has inquired why children love, all over the world, irrespective of race, nation, religion, why children love to whirl.

Jalaluddin Rumi, seeing children whirl, thought that there must be something that the children feel but they cannot express, and perhaps they are not fully aware what it is. So he tried whirling himself, and he was amazed that if you go on whirling there comes a moment when the center of your being remains static and your whole body, mind, brain, everything, whirls.

And that center which does not whirl, is you, the center of the cyclone. The whirling is almost like a cyclone, but exactly in the middle of the cyclone you will find a point which has not moved at all. Every wheel needs a center on which to turn, and the center has to remain unturning. You see in bicycles, in bullock carts, wherever there is a wheel, there is something in the center which is unmoving.


Once Jalaluddin became aware that you can find the unmoving center of your being, he tried for thirty-six hours non-stop, without eating, without drinking -- he was determined to whirl to his absolute capacity, not to hold back anything... unless he falls, he is not going to stop. Thirty-six hours he whirled, a great crowd watched. The crowd went on changing; people had to go to eat and then they came again. People had to do their work and then they came again; thirty-six hours is a long period. And after thirty-six hours he fell down. And people heard a great laughter.

Jalaluddin was laughing loudly, and he said, "You think you have seen me falling, I have also seen myself falling. These thirty-six hours I have not moved a single inch. Now I don't have to go to Mecca in search of God, I have found him. In the unmoving center of my own being, he is".

இந்த மூன்று பதிவுகளையும் - உருது தொடர்பையும் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது.......எனக்குப் பிடித்த ஹிந்திப் பாடல்கள் குறித்து நினைவுபடுத்திப் பார்த்தேன். ஒன்று எனக்கு மிகத் தெளிவாகப் புரிந்தது. பெருமளவில் உருது கலந்த ஹிந்தி பாடல்கள் தான் எனக்கு மிகப் பிடித்தமானவைகளாக இருந்திருக்கின்றன. விஷால் பரத்வாஜின் படங்கள் முதல், மணிரத்னத்தின் ஹிந்தி படங்கள், இன்றைய ப்ரஸுன் ஜோஷி வரை பெரிய லிஸ்ட் ஒன்று உள்ளது. நிச்சயமாக இதற்கு உர்து மொழியின் லாவகமும் ஓசை நயமுமே காரணமாக இருக்க முடியும்.  மசூதிகள் இருந்த/இருக்கும் பகுதியில் நான் வளர்ந்ததினால் பாங்கு ஓதும் போது அந்த லாவகமும் நயமும் கேட்க பெரிய அனுபவமாக இருக்கும். நான் படித்த பள்ளியில் வேறு - திண்டுக்கல் எம்.எஸ்.பி. சோலை நாடார், புகழ்பெற்ற ஸ்கூல் அது -  ஒவ்வொரு திங்களன்றும் மும்மதப் பாடல்கள் என்று ப்ரேயரில் பாட வைப்பார்கள். ஆறு வருடமாக "ஹஸ்பிரப்பி ஜல்லல்லா" என்ற ஆரம்பிக்கும் நாகூர் ஹனிஃபா பாடிய பாடலைப் பாடவேண்டும். இன்றுவரை அர்த்தம் தெரியாது. ஆனால் அந்த பாட்டில் ஒரு உணர்ச்சி இருக்கும். போஸ் - ஷ்யாம் பெனகல் படத்தில் ரஹ்மானின் இசையில் அந்த வரிகளை மீண்டும் கேட்ட பொழுதுதான் அதன் முழு வீரியமும் புரிந்தது. முடிவை நோக்கி அந்தப் பாடல் நகர நகர ஒரு வசீகரிப்பை உணரலாம்.  காந்தி கூட ஹிந்தி + உர்து சேர்ந்த ஹிந்துஸ்தானி என்ற மொழியே, ஹிந்திக்கு பதில் இந்தியாவின் official languageஆக இருக்கும் வேண்டும் என்று உர்துவின் மேல்கொண்ட ஈர்ப்பினாலும், முக்கியமாக அரசியல் காரணங்களுக்காவும் கூறினார். திருவிளையாடல் விறகு வெட்டி போலத்தான் - உர்து குறித்து எனக்கு தெரிந்ததும். மிகமிக சொற்பமாக கேட்டதை படித்ததை வைத்தே என் கருத்துகளை கூறியிருக்கிறேன். உர்து, ஹிந்தி குறித்து - எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல ஒரு தொனி தெரிந்தால் நான் அதற்குப் பொறுப்பில்லை :)


இதுபோன்றதொரு உர்து மொழியில் - கவிஞர்களாக இருக்கும், குல்ஸார், ஜாவேத் அக்தர் போன்ற ஆட்கள் பாடல் வரிகளை எழுதும் பொழுது..........அதன் தரம் எங்கோ சென்றுவிடுகிறது. ஆனால், நமது தொன்மையான தமிழ் மொழியின் திரைப்படப் பாடல்களின் தரம் ? ஏன் பிரமீள் போன்றவர்களது நவீன கவிதைகளை யாரும் பாடலாக்க முன்வருவதில்லை என்று தெரியவில்லை. பெரும்பாலும் மிக அரதப்பழசான பாடல் வரிகளை வைத்தே ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறோம். (வைரமுத்து - இளையராஜா கூட்டணி உடைந்தது மிகப் பெரிய இழப்பு என்பதில் சந்தேகமே இல்லை). வைரமுத்துவின் மீது எனக்கு பல விமர்சனங்கள் இருந்தாலும், போகிறபோக்கில் அவரது பாடல்களில் தெறிக்கும் வரிகளுக்கு ஈடாக இன்றிருக்கும் யாராலும் எழுத முடியவில்லை என்பதுதான் உண்மை. ராக்ஸ்டார் படம் பார்த்துவிட்டு - அதுவும் சப்டைட்டில்களின் மூலம் - பாடல்களின் அர்த்தங்களை தெரிந்துகொண்டு உணர்ச்சிவசப்பட்ட நிலையில், கவிஞர்/நண்பர் விஷால் அவர்களும் இதே கருத்தைச் சொன்னார். அந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் கலாப்ரியா போன்றோரது நவீன தமிழ்க் கவிதைகளை ஒத்திருக்கின்றது என்று வெகுவாக சிலாகித்துச் சொன்னார். குல்ஸாரே தில்சே படத்தின் சுஃபித் தன்மை குறித்து ஒரு நேர்காணலில் சொன்னது:

Recently I returned from Chennai after a music sitting with Mani Ratnam and A.R. Rahman. We are working together again after "Dil Se" for Mani's "Guru". Again we'll try to attempt a different sound.

"Guru" has a serious layer below the surface, which I'll tap as a poet. Mani Ratnam is the only director who asks for abstract images. It's lovely to share my poetry with him. His Hindi is getting better. But I'm lagging behind. My Tamil should improve soon.

As a lyricist, I'd say my first turning point as an abstract lyricist was "Humne dekhi hai un aankhon ki mehekti khushboo" in "Khamoshi". Another turning point was Mani Ratnam's "Dil Se" where with "Chaiyyan chaiyyan" my sufiyana phase started. Now let's see...perhaps with "Guru" there will be another turning point. It's wonderful to work with a director who expresses scenes musically.

அந்த தில்சே ரே பாடல் ஏன் எத்துனை முறை கேட்டாலும் சலிப்பதேயில்லை என்று புரியவில்லை. புரிந்துகொள்ளும் ஆராய்ச்சியிலும் நான் இறங்க விரும்பவில்லை. ரஹ்மான் நேர்காணலில் கூறியிருப்பதைப் போல, பாடல் முழுக்கு angst தான் இருக்கும். ஆனாலும் கொண்டாட்டமான இசை. என்னவொரு முரண்நகை. நான் கேட்ட வரையில் ஒரு ஏழு லேயர்கள் அந்தப் பாடலில் இருந்தது. ரஹ்மான் பாடலைப் பொருத்தவரை இரு இசைக் கருவி/பீட்  மட்டும் லூப்பில் போட்டதைப் போல, ஆரம்பம் -> முடிவு வரை, பின்னணயில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். இதிலும் அந்த ஆரம்ப prelude இசை கடைசிவரை பின்னணியில் ஒலிப்பதைக் கேட்கலாம். அதே போன்ற interlude வரும் சமயத்தில், கிடார் வெவ்வேறுவிதமான ஸ்கேல்களில் ஒலிப்பதைக் கேட்கலாம். இந்தப் பாடலின் பேஸ் கிடாருக்கு - பிரத்தியேகமாக Pink Flyod குழுவில் பேஸ் கிடாரிஸ்டாக இருந்த கய் ப்ராட்டை(Guy Pratt) வரவழைத்து ஒலிப்பதிவு செய்துள்ளனர். இந்தப் பாடலை தற்போதைய Mtv Unplugged நிகழ்ச்சியில் ரஹ்மான் பாடிய பொழுது.......நேரடியாக அதனைக் கேட்டவர்கள் அனைவரும் கொடுத்துவைத்தவர்கள். ரஹ்மான் 4:37நிமிடத்தில்  verseசை ஆரம்பிக்கும்பொழுது அவர் முகத்தில் தெரியும் உற்சாகத்தையும் கூட இசைப்பவர்கள்,கோரஸ் குழுவினர் என்று அனைவரும் லயித்துப் போயிருப்பதையும்........அதேபோன்று தான் இதே நிகழ்ச்சியில் "ரெஹ்னா தூ" பாடலும். ஏறக்குறைய உர்து தான். வார்த்தைகளை கவனியுங்கள். ஹுர்துரா...........அர்த்தமே தெரியாது...ஆனால், மேஜிக்.

You know what the fellow said – in Italy, for thirty years under the Borgias, they had warfare, terror, murder and bloodshed, but they produced Michelangelo, Leonardo da Vinci and the Renaissance. In Switzerland, they had brotherly love, they had five hundred years of democracy and peace – and what did that produce?  The cuckoo clock.

- Harry lime, The Third Man
ஐரோப்பிய சினிமாக்களைப் பொறுத்தவரை – நாஜிகள் & இரண்டாம் உலகப் போரின் தாக்கம் பற்றிப்  பேசாமல் இருக்க முடியாது. ஏற்கனவே ஸ்கார்சேசே பற்றிய வீடியோ பதிவில் இதுபற்றி சற்றே பேசியிருக்கிறேன். ஃப்லிம் நுவாரோடு மட்டுமில்லாமல், அமெரிக்க-ஐரோப்பிய சினிமாக்களைப் பற்றிப் பேசும்பொழுது மிகமுக்கியமானதொரு விஷயமிது. சரி, நுவாரோடு இந்த விஷயம் எவ்வாறு தொடர்புடையது ?

ஜெர்மனியில், நாஜிக்களின் கெடுபிடியால் எக்ஸ்ப்ரஸனிஸ்ட் படங்களின் பிதாமகன்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு புலம்பெயரத் தொடங்கினர். அவர்கள் மட்டுமா.....ஒளிப்பதிவாளர், செட் டைரக்டர்கள் என்று ஒரு பட்டாளாமே அவர்களைப் பின்தொடர்ந்தது. ஹாலிவுட்டில் தங்கள் பாணியில் படங்களை எடுக்க ஆரம்பித்தனர். விளைவு, இதுவரை ஹாலிவுட் பார்த்தறியாத கேமரா கோணங்கள் – இசை – செட்டிங்ஸ் என்று முற்றிலும் புதுவகையான சினிமாக்கள் தயாராகத் தொடங்கியது. கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம், இந்த காலகட்டத்திற்கு முன்னர்வந்த ஹாலிவுட் படங்கள் எல்லாம் மிகமிக ஜனரஞ்சகமான மசாலாத்தனமான படங்கள் தான்.

நுவார் படங்களின் மிக முக்கியமானதொரு அம்சம், முக்கிய கதாபாத்திரம் – வேறு நாட்டையோ ஊரையோ சேர்ந்தவர்களாக இருப்பார்கள், புலம் பெயர்ந்த இயக்குனர்கள் போல. அந்தக் கதாபாத்திரங்கள் திடீரென்று உயிர்போகும்  நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் அப்போதைய அமெரிக்க இயக்குனர்களுக்கு – வெறும் படத்துடன் தொடர்புடைய விஷயங்கள். ஆனால், ஐரோப்பிய இயக்குனர்களைப் பொறுத்தவரை, நாஜிக்களின் பிடியில் அவர்கள் ஏற்கனவே இருந்தபடியால் அவர்களால் கதாபாத்திரங்களின் மனநிலையை எளிதாக உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. உதாரணமாக, The Killers படத்தில், தன்னைக் கொல்ல வருகிறார்கள் என்று தெரிந்தும், தப்பியோட நினைக்காமல் அறையிலயே சாவை எதிர்நோக்கி காத்திருக்கும் கதாபாத்திரத்தை எப்படி அவ்வளவு தத்ரூபமாக அதன் இயக்குனர், ராபர்ட் சிட்மேக்கால் பிரதிபலிக்க முடிந்தது ? காரணம், அவர் பிறந்தது ஜெர்மனியில். அங்கே படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது நாஜிகள் ஆட்சிக்கு வருகின்றனர். கடும் கெடுபிடி. நடுராத்திரி கண்காணிப்பு, மிரட்டல் என்று அன்றைய பல ஜெர்மனிய படைப்பாளிகள் அனைத்து விதமான நுவார் சூழ்நிலைகளையும் பார்த்துவிட்டிருந்தனர். பில்லி வைல்டர், எட்கர் உல்மர், ஃப்ரிட்ஸ் லேங் என்று ஜெர்மனியைச் சேர்ந்தவர்களே ஆரம்பகாலகட்டத்தில் நுவார் ஜானரில் கோலோச்சினார்கள். தங்களது எக்ஸ்ப்ரஸனிஸ்ட் பட நுணுக்கங்கள் + அந்நிய நாடான அமெரிக்காவில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் + அமேரிக்கா குறித்து அவர்களுக்கு இருந்த கற்பிதங்கள் என்று அனைத்தையும் கலந்துகட்டி அட்டகாசமான திரைப்பட உத்திகள் மூலம் படங்களாகக் கொடுக்கத் தொடங்கினர்.


அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய கால கட்டம். Pearl Harbour தாக்குதல் – ஹிரோஷிமாவிற்கு பிறகு, நமது நாட்டின் மீதும் அணுஆயுதத் தாக்குதல் நடைபெறலாம் என்று மக்கள் அஞ்சத் தொடங்கினார். இந்த அணுஆயுத விஷயம் 40களின் இறுதியில் கோல்ட் வார் சமயத்தில், உச்சத்தில் இருந்தது. இந்தகாலகட்டத்தில், அமெரிக்காவில் வெளிவந்த சினிமா, கதைகள் என்று சகலத்திலும் இந்தப் பயத்தை அப்பட்டமாகப் பார்க்கலாம். அப்போதைய பொருளாதார சீர்த்திருத்தங்களினால் வேலை சார்ந்த நிச்சயமற்றத் தன்மையும் இருந்தது. இந்தப் பயம் – நிச்சயமற்ற தன்மை அனைத்தையும் அமெரிக்க இயக்குனர்களின் நுவார்ப் படங்களில் காணலாம். The big american dream என்ற ஒரு பதம் உண்டே, அதுகுறித்தான கேள்விகளை மறைமுகமாக நுவார் படங்கள் கோடிட்டுக் காட்டியது.

ஃப்லிம் நுவார் படங்களின் கூறுகள் என்னென்ன ?
  • குற்றம்,கொலை,கொள்ளை
  • நல்லவன்/கெட்டவன் என்றெல்லாம் வரையறுக்க முடியாத ஆண்கள்
  • டிடெக்டிவ்ஸ்
  • குயுக்தி பிடித்த கவர்ச்சிகரமான பெண்கள்
  • நேர்மையற்ற போலீஸ்காரர்கள்
  • விளிம்புநிலை மனிதர்கள்
  • வெளியூரில்/நாட்டில் இருந்து வந்த கதாபாத்திரங்கள்
  • அவர்களின் பார்வையில் அவர்கள் புகந்த நாடுகள்
– இவர்கள் அனைவரும் சிக்கல்கள் நிறைந்த மனநிலையில் எப்படியாவது எல்லாவற்றிலும் இருந்து தப்பி வெளியேறிவிட முடியாதா என்று ஏங்குபவர்களாகவே இருப்பர்.


  • நக்கல்/குதர்க்கம் நிறைந்த வசனங்கள்
  • ஆள் அரவமற்ற சாலைகள்: போஸ்ட் கம்பங்கள்
  • ஒழுங்கில்லாமல் நீளும் நிழல்கள்
  • நியான் விளக்குகள்
  • ஒடுக்கமான குடியிருப்புகள்
  • பனி மூட்டம், ஏராளமான சிகரெட்கள்
  • எல்லாவற்றிற்கும் மேலாக படம் முழுக்க விரவிக்கிடக்கும் டார்க் டோன்.
  • செமி – டாக்மெண்டரி ஸ்டைல், இத்தாலிய நியோ – ரியலிசத்தின் விளைவாக.
- மற்றொன்று பல்ப் ஃபிக்சன். பல நுவார் படங்கள் பல்ப் ஃபிக்சன் வகை நாவல்களின் அடிப்படையிலேயே இயற்றப்பட்டது. ஒரு  பல்ப் ஃபிக்சன் கதையிலிருந்தோ ஒன்றுக்கு மேற்பட்ட பல்ப் ஃபிக்சன் கதைகளின் கோர்வையாகவோ அப்படங்கள் இருந்தன.
1940 – 1958 வரையான காலகட்டம் தான் நுவார் படங்களின் பொற்காலம். இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் மேற்கூறிய கூறுகளுடன் வெளிவந்த படங்களே க்ளாசிக் நுவார் படங்கள் ஆகும். ஃப்லிம் நுவார் என்பது ஃப்ரெஞ்ச் சொல். ஃப்லிம் நுவார் = டார்க் ஃப்லிம் (Dark film) என்று பொருள்.  ஃப்ரெஞ்ச் திரைப்பட திறனாய்வாளர்கள் தான் இந்தப் பெயரைச் சூட்டியது. இது தனி வகை ஜானரா(Genre) அல்லது நியு-வேவ் மாதிரியான நிகழ்வா என்பது குறித்து மாற்றுக் கருத்துகள் உள்ளன. 
ஆண்கள்:

நல்லவன் – கெட்டவன் என்பதெல்லாம் ரிலெடிவ் பதங்கள்தானே. அது நுவார் படங்களின் ஆண்களுக்கு அப்படியே பொருந்தும். என்ன யோசிக்கிறார்கள், இதைச் செய்வார்களா மாட்டார்களா என்பதையெல்லாம் நாம் ஊகிக்கவே முடியாது. ஒரு சிக்குண்ட மனநிலையிலேயே எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய ஆட்களாகவே இருப்பார்கள். உதாரணமாக, The Maltese Falcon(1941 – முதல் நுவார் படம் என்று பரவலாக அறியப்படும் படம்) படத்தின் ஹம்ப்ரி போகார்ட் – ஒரு டிடெக்டிவாக வருவார். தனது பார்ட்னரின் மனைவியுடன் ஒழுங்குமீறிய தொடர்பு வேறு இருக்கும். இன்னொரு பெண்ணுடன் காதல்(?) மலரும். ஆனால், இறுதியில் அவள் எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் போலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவார். இன்னதான் செய்வார் என்று யாரலும் கணிக்க முடியாது ஒரு கதாபாத்திரம். ஏன் இவ்வாறு அவர்களது பாத்திரப்படைப்பு இருந்தது என்பதற்கு விடை – மேலே சொன்ன இரண்டாம் உலகப் போர்: அணுஆயுதப் போர் குறித்த பயங்கள் – அந்தகாலகட்டத்தில் சமூகத்தின் மனநிலை.

பெண்கள்:

நுவார் படங்களைப் பொறுத்தவரை இருவகைப் பெண்கள் இருப்பார்கள். ஒருதலைப்பட்சமாக ஒருவனைக் காதலிக்கும் அப்பாவி வகையான பெண்கள். மற்றொரு வகையான பெண்கள் தான், பல நுவார் படங்களின் அடிநாதமே – Femme Fatales என்றழைக்கபடும் சூழ்ச்சி நிறைந்த பெண்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் Double Indemnity(1944) படத்தில் வரும் ஃப்லிஸ் டைட்ரிசன். பேசியே ஆளை மயக்கிவிடுவார்கள். இவர்களால் ஆபத்து என்று அந்த ஆண்களுக்கு தெரிந்தாலும் விலகிச் செல்ல முற்படாமல் வலியப் போய் அவர்களின் சிலந்தி வலையில் அகப்பட்டுக் கொள்வார்கள். இதை இன்னொரு வகையாகவும் பார்க்கலாம். சுதந்திரமாக தனக்கு பிடித்ததைச் செய்யும், தனக்கான முடிவுகளை தானே எடுக்கும், ஆண்களின் மேல் அதிகாரம் செலுத்தும் பெண்களாக இருப்பர்.

பரவியிருக்கும் இருண்மை  & கேமரா கோணங்கள்:

படம் முழுவதும் ஒருவித அசௌகரியம் விரவிக்கிடக்கும். பெரும்பாலும் கறுப்ப வெள்ளையிலேயே படங்கள் இருக்கும். ஒருவேளை, கறுப்பு – வெள்ளைக்கு மத்தியிலிருக்கும் க்ரே ஷேட்ஸ்களை அவைகள் குறிக்கிறதோ ? கதாபாத்திரங்களும் அவ்வாறு நல்லது – கெட்டது, இரண்டிற்கும் இடையிலேயே ஊசலாடிக்கொண்டிருப்பர். அவர்களது மனஓட்டத்தை பிரதிபலிக்கும் விதமாகவே படத்தின் டோன் இருப்பதைக் காணலாம்.

லோ – ஆங்கிள், டட்ச்(Dutch) ஆங்கிள் என்று தனித்துவமான கேமரா கோணங்களை இப்படங்களில் அதிகளவில் கையாண்டிருப்பர். எனக்கு தனிப்பட்ட முறையில், The Third Man படத்தில் வரும் கேமெரா கோணங்கள் மிகப் பிடிக்கும்.குறிப்பாக டனல்களில் கேமெரா செய்திருக்கும் ஜாலங்கள்...இன்று வரை ஒருசில படங்களே அத்தனை அழுத்தமாக இருந்திருக்கின்றன.


சரி, 1958 வரை நுவாரின் பொற்காலம் என்று சொல்லியாயிற்று. அப்படியென்றால் அதற்கு பிறகு நுவார் படங்கள் வந்ததில்லையா ? நுவார் படங்கள் காலம் முடிந்ததா என்றால்.........இல்லை. நுவார் படங்களின் தாக்கம் ஃப்ரெஞ்ச் நியு-வேவ் படங்களில் அதிகளவில் இருந்தது. அதன் காரணமாகப் பிறந்ததுதான் நியோ – நுவார் (Neo noir). அதன் முதல்  & தலையாய படம் குறித்தான பதிவு தான் இது. கோதார்தின் Bande a part படத்தில் நுவாரின் கூறுகளைக் காணலாம். இந்த நியோ நுவார் பல வடிவங்களை எடுத்து, Pulp fictionல் வேறு தளத்திற்குச் சென்றது. கோயன் ப்ரதர்ஸின் நுவார்+ ஹிட்சகாக் படங்களுக்கான ட்ரிபியுட் தான், The man who wasn’t there.  The Dark knight கூட, நுவார் வகைப் படம் தான். அவ்ளோ ஏன், Blue velvetல் கூட நுவாரின்  பல கூறுகள்உள்ளன.

ஆனால், பல க்ளாசிக் நுவார் ஸ்டைலுடன் தற்போதைய பல வகை நுவார்களைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். நுவார் = டார்க்......அதுபோக மேல இருக்கும் கூறுகள் கொண்ட படங்கள் அனைத்தும் நுவார் என்ற பெரிய ஆலமரத்தின் கீழ் அடங்கும். அதில் கிளைகளாக இருக்கும் பிற நுவார்கள் தான் – neo noir, sci fi noirs, etc.. எல்லாம்.

எனது பரிந்துரைகள்:

நுவார் பற்றி தெரிந்துகொள்ள நினைப்பவர்கள், இந்த ஆறு படங்களைப் பார்த்தால் போதும் என்பது என் கருத்து. இவைகளை பார்த்தபின் தானாகவே அதன் மீது மோகம் வந்துவிடும். ஒவ்வொன்றும் ஒரு ஜெம். டைம்லஸ் க்ளாசிக். ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு பதிவாவது எழுத வேண்டும்.

நம்மூரைப் பொறுத்தவரை எனக்குப் பிடித்த இரண்டு நுவார் படங்கள்:

புதிய பறவை:

என் அப்பா இந்தப் படத்தின் தீவிர ரசிகர். அவர் சொல்லித்தான் தாதா மிராசி(இந்தப் படத்தின் இயக்குனர்) குறித்தெல்லாம் எனக்கு தெரியும். படம் ஒரு ஆங்கில -> வங்களா மொழிப்படத்தின் ரீமேக். இதில் சிவாஜி – உன்னை ஒன்று கேட்பேன் பாடலில் சிகரெட் பிடிக்கும் காட்சியும், ஆகா மெல்ல நட மெல்ல பாடலில் – அணிந்துவரும் சட்டையும் அப்போது மிகப் பிரபலமாம். இப்போது கூட படத்தின் ஒளிப்பதிவு துல்லியமாக இருப்பதை உணரலாம். எம்ஜியார் படத்திற்கு முன்னமே இவ்ளோ அற்புதமாக கலருடன் படம் வெளிவந்ததில் எம்ஜியார் ரசிகர்கள் எரிச்சலில் இருந்திருக்கின்றனர். அந்த எம்ஜியார் படம் குறித்து என் அப்பா சொன்னது நினைவில்லை.


Johnny gaddar:

நான் பார்த்த இந்தியப் படங்களில் தலைசிறந்த நுவார் என்று இதைச் சொல்வேன். ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் நாவலைப் படித்தே கதையின் நாயகன்(?) திட்டத்தை தீட்டுவதாக வரும். அட்டகாசமான டிவிஸ்ட்கள் நிறைந்தது. இன்னொரு பிடித்த விஷயம், இசை.


இதுபோக, 60களின் எம்ஜியார் படங்கள் – என் தங்கை – பலவற்றிலும் நுவார்த்தன்மை இருப்பதைக் காணலாம். சுஜாதாவின், கணேஷ் வசந்த் கதைகளில் பல நுவார் படங்களின்(அல்லது அதன் மூல நாவல்களின்) தாக்கத்தை நிறையவே காணலாம். திடீரெண்டு அவர்கள் ஆபிசில் ஒரு பெண் வந்து உட்காந்திருப்பாள் (The Maltese Falcon) செத்தவன் திடீரென்று உயிரோடு வருவான் (The Third man)...இதுபோல. ரேமன்ட் சாண்ட்லர், ஜேம்ஸ் கெய்ன் போன்ற நுவார் வகை பல்ப் எழுத்தாளர்கள் குறித்து அவர் எங்கோ எழுதிப் படித்த ஞாபகம்.

தமிழ் சினிமாவில் இன்னும் சரிவரப் கையாளப்படாதா வகை இந்த நுவார் என்பது என் கருத்து. பல அட்டகாசமான படங்களை இதில் எடுக்கலாம். மிஷ்கின் அதற்கு மிகப் பொருத்தமான இயக்குனர் என்பது என் கருத்து. அவரின் சில படங்கள் கூட நுவார் வகைகள் தான்.
-----------------------------------------------------------

ஓகே. அந்தப் பதிவிலேயே பான்ட் பற்றி தஞ்சாவூர் கல்வெட்டில் செதுக்கி அருகிலேயே குத்துக்கால் போட்டு அமரும் அளவிற்கு கருத்துகள் பலவற்றை உதிர்த்துவிட்டேன். இனி என் வசம் வேறு கருத்துகளும் இல்லை. நேராக சொல்ல வந்ததை சொல்லி விடுகிறேன். வழக்கம் போல முதல் பேராவுடன் விடைபெறும் நண்பர்களுக்கு நன்றி + வணக்கம். முதல் வேலையாக, இந்த லிங்க்கில் பான்ட் பட தீம் பாடல்கள் (கடைசி ரெண்டு படம் நீங்கலாக) அனைத்தும் உள்ளது. டவுன்லோட் செய்து கேட்டுவிட்டு பதிவைப் படித்தால், எனக்கு அரிய கருத்துகள் புரிய வாய்ப்புண்டு (ஹி..ஹி...). மொன்னைத்தனமான சிஸ்டம் ஸ்பீக்கரில் கேட்காமல், கொஞ்சம் சிரமம் பார்க்காமல் ஹெட்ஃபோனில் கேளுங்கள். இல்லை, நல்ல சரவுண்ட்சிஸ்டம் இருந்தால் ஓகே.  ஆனால், பாடல்களைக் கேட்காமல் மேற்கொண்டு படித்து...........என்னமோ போங்க.

பான்ட் படங்கள் என்றதும், பட்டென்று ரெண்டு விஷயங்கள் கணப்பொழுதில் ஞாபத்திற்கு வரும். பான்ட் தீம் இசை + கன் பேரல் சீக்வன்ஸ் -> ஒரு சேஸிங் காட்சி -> டைட்டில் சீக்வன்ஸ்.  அந்த முதல் பத்து நிமிடத்தை காண்பதற்காக 80களில் - தியேட்டரில் வாசல் டிக்கட் கிழித்து கொடுப்பவர் முதற்கொண்டு அனைவரும் உள்ளே அடித்துப்பிடித்து வந்து பார்ப்பவர்கள் என்று என் அப்பா சொல்லிக் கேட்டிருக்கிறேன். முதலில் கன் பேரல் சீக்வன்ஸில் இருந்து ஆரம்பிப்போம்.


(Source: Wikipedia)

மோரிஸ் பைண்டர் என்பவர்தான் இந்த டிசைனனை வடிவமைத்தது. நிஜ .38 காலிபர் கன்னில், பின்-ஹோல் கேமரா மூலம் இச்சீக்வன்சை படமாக்கியிருக்கிறார். Dr.No - கன் பேரல் சீக்வன்ஸில் வரும் உருவம்....ஷான் கானரி என்று நீங்கள் இதுவரை நினைத்திருந்தால், சாரி.....அது பாப் சிம்மன்ஸ் என்பவருடையது. Thunderball படத்தில் இருந்துதான் ஷான் கானரியின் சீக்வன்ஸ் இடம்பெற ஆரம்பித்தது. எல்லா சீக்வன்ஸில் இருந்து சற்று வித்தியாசமானது காஸினோ ரோயல்தான். எப்படி என்று இந்த லிங்கிலேயே விரிவாக இருக்கின்றது. இதுகுறித்த பல விஷயங்களை அங்கிருந்துதான் தெரிந்து கொண்டேன். ஸோ, அதிலிருந்து நான் விஷயங்களை உருவி இங்கே சொல்லுவதற்கு பதில், நேராக அங்கேயே படித்தால் மேலதிகமாக தகவல்கள் கிடைக்கும். ரொம்ப ஸ்டைலானது என்று எனக்குத் தோன்றுவது, ப்ராஸ்னனுடையதுதான். படு வேகம். காஸினோ ரோயல் - அதில் இருக்கும் அழுத்தம்....சான்சேயில்லை.கீழே இருக்கும் வீடியோவில் அனைத்து பான்ட் கன் பேரல் சீக்வன்ஸ் உள்ளது. இதில் ஆரம்பகால பான்ட் வரும் சீக்வன்ஸ்கள் எல்லாம் செம காமெடியாக எனக்குப்படுகிறது.


பான்ட் படங்களின் இசையைப் பொறுத்தவரை, ரெண்டு விதமாக பார்க்கலாம். தீம் சாங் மற்றும் பின்னணி இசைக் கோர்ப்பு. முதலில் இசைக் கோர்ப்பு குறித்து சுருக்கமாக பார்த்துவிடுவோம். பான்ட் பின்னணி இசை = ஜான் பேர்ரி, ஜான் பேர்ரி, ஜான் பேர்ரி......... Dr.Noவில் இசை ஒருங்கிணைப்பாளராக(Arranger) பணியாற்றிய பொழுது அவரும் அந்தப் படத்தின் இசைக் கோர்ப்பாளர் மான்ட்டி நார்மனும் சேர்ந்து உருவாகிய தீம் இசை தான் “James bond theme”. இதுபோக, ஜான் பேர்ரி பின்னாட்களில் “007 theme”  என்ற ஒரு தீமையும் உருவாக்கினார். அது ஒரு சில பான்ட் படங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.கடைசியாக மூன்ரெக்கரில் பயன்படுத்தப்பட்டது. James bond theme இசையை விட(இங்கே கேட்கலாம்), இந்த இசைக் கோர்ப்பு – intenseசாக இருக்கும். அதில் கிடார் ரிஃப்களே பிரதானம். ஒரு குறும்புத்தனம் இருக்கும். ஆனால், this one.... strictly business.


ஜான் பேர்ரி 11 ஜேம்ஸ் பான்ட் படங்களுக்கு இசைக் கோர்ப்பாளராகப் பணியாற்றியுள்ளார். பான்ட் படங்கள் என்றால் barryesqueத்தனமான இசை இருக்கும் என்பது மிக ஆழமாக அனைவரின் மனதிலும் பதிந்து விட்டது. கதை நிகழும் -சுவிஸ், சீனா என்று அந்தந்த பிராந்தியங்களுக்குரிய பிரத்தியேக இசையை கச்சிதமாக பான்ட் இசையுடன் கோர்த்தார்.


ஆனால், ஸ்கைஃபாலில் இருந்து பான்ட் படங்களின் அடிப்படை இசை சற்று மாறக்கூடும். காரணம்.........தாமஸ் நியுமன். சாம் மென்டிஸின் ஆஸ்தான இசைக் கோர்ப்பாளர். Wall E போன்ற படங்களில் எல்லாம் இவரது இசையை கேட்டு ரசித்திருக்கிறோம். Road to perdition, The Green mile, American beautyy என்று இவரது தனித்துவமான இசைக்கோர்ப்புகள் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம்.

ஜான் பேர்ரிக்கு அடுத்து, மிக அதிகளவில் பான்ட் படங்களுக்கு இசைக் கோர்ப்பாளராக இருந்தவர், Godzilla, Independence day போன்ற படங்களில் பணியாற்றிய David arnold. தனது முதல் பான்ட் படமான Tommorrow never dieஸில் பான்ட் இசைக்கு முதன்முறையாக டெக்னோ முகம் கொடுத்தவர். பான்ட் பின்னணி இசையை பொறுத்தவரை எனக்கு ஸ்பெஷாலாகத் தோன்றும் ஒரு படம் இருக்கிறது. அதை ஒருசில பத்திகள் தாண்டிப் பார்ப்போம்.

தீம் சாங்ஸ்:

Dr.Noவில் தீம் சாங் என்ற எதுவும் இல்லை. ஆனால் ஓபனிங் டைட்டில் சீக்வன்ஸ் அட்டகாசமாக இருக்கும் (வூடி ஆலனின் Bananas படத்தின் டைட்டில் சீக்வன்ஸ் இந்தப் படம் போலவே இருக்கும். யாரேனும் கவனித்திருக்கிறீர்களா ? ). அடுத்த படமான From russia with loveல் இருந்துதான் ஜான் பேர்ரி ராஜ்ஜியம் ஆரம்பமாயிற்று. ஏன் வெறும் தீம் இசை...ஒரு பாடலுடன் ஆரம்பிக்கலாமே என்று முடிவு செய்து......அப்படி ஆரம்பித்ததுதான் பான்ட் தீம் சாங்ஸ். பான்ட் தீம் பாடல்களை பாடியதாலேயே புகழ்பெற்ற பல ஆட்கள் உள்ளனர். இதுவரை வந்த 22 பான்ட் தீம் பாடல்களில் ஒரு எட்டு பாடல்களை ரெண்டு வாரம் முன்னர் தான் முழுமையாகக் கேட்டேன். அதனால், எல்லா பாடல்களையும் பற்றி பேசுவதற்கு பதில், எனக்குப் பிடித்த பாடல்களை பற்றி மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

Goldfinger(1964):

வாவ்......அதுவும் பாடலின் முடிவில் ஹைபிட்சில் கொஞ்சேநேரம் ஷெரில் பேஸியின் குரல் நின்று விளையாடும். மற்ற எல்லா பான்ட் பாடல்களிலும் இருந்து இதுமட்டும் தனியாகத் தெரிய இன்னொரு காரணம், வில்லனைப் போற்றி புகழம் பாடல் இது. (இன்னுமா அந்த டொரன்ட் டவுன்லோட் ஆகல ??????)

You Only Live Twice(1967):

அப்பா நூறடி பாய்ந்தவர். குட்டி பதினாறு அடி பாய்ந்தது. ஃப்ரான்க் சினட்ராவின் மகள் நான்சி சினட்ரா பாடியது. பாடல் முழுவதும் சினட்ரா ஸ்டைலியே இருக்கும்.ஆனால் கீழே நீங்கள் கேட்க இருப்பது, நான்சி சினட்ராவின் “Bang bang” (ஒரிஜினல் பாடகி – Cher. நான்சி சினட்ராவின் கவர் வெர்ஷன் இது). என்ன படத்தின் தீம் சாங் என்று அனைவருக்கும் தெரியும்தானே ??



On Her Majesty's Secret Service(1969):

தனக்கு மிகப் பிடித்த பான்ட் பின்னணி இசையாக ஜான் பேர்ரி இதைத்தான் குறிப்பிடுகிறார். முதன்முறையாக ஸின்தசைசர்ஸ் போன்ற நவீன கருவிகள் பயன்படுத்தப்பட்டன. படம் ஆரம்பிக்கும், அந்த ஸ்கீயிங் காட்சியினை யாரால் மறக்க இயலும். படத்திற்கு தீம் சாங் என்று எதுவும் கிடையாது. கொம்புக் கருவிகள் முழுங்க அதிரவைக்கும் ட்ரம்ஸுடன் ஆரம்பிக்கும் இசைக் கோர்ப்பு மட்டுமே உண்டு. ஆனால், மறக்க முடியாத ஒரு பேலட்  பாடல் உண்டு. லூயி மால் பதிவில் மைல்ஸ் டேவிஸ் பற்றி சொல்லியிருந்தேனே – அதற்கு இணையான இன்னொரு ஜாஸ் இசை ஜாம்பவான் லூயி ஆம்ஸ்ட்ராங். அவர் பாடிய - We Have All the Time in the World......... இதைக் கேட்காவிட்டால் நஷ்டம் உங்களுக்குத்தான். ஆம்ஸ்ட்ராங்கின் கடைசி ரெக்கார்டிங் இந்தப் பாடல் தான். பயங்கர உடல்நலக்குறைபாடு இருந்தாலும், குரலில் அந்த நடுக்கத்தை உணரலாம் – அதையும் தாண்டி அவரது கம்பீரத்தை இப்பாடலில் காணலாம். ஜான் பேர்ரியைப் பொறுத்தவரை இந்தப் பாடலும், கோல்ட்ஃபிங்கர் பாடலுமே அவருக்கு  மிகப்பிடித்த பான்ட் பாடல்களாம்.


Live and Let die (1973):

1962ல் வந்த Dr.Noவில் இசை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி, From Russia with Love(1963) முதல் Diamonds Are Forever(1971) வரை தொடர்ச்சியாக ஆறு பான்ட் படங்களுக்கு இசைக் கோர்ப்பாளராக பணியாற்றிய ஜான் பேர்ரி, பான்ட் படங்களில் இருந்து தனக்கு இடைவெளி தேவை என்று ஒதுங்கிக் கொண்டார். ஏற்கனவே ஷான் கானரியும்  Diamonds Are Forever படத்துடன் பான்ட் வேடங்களில் இருந்து ஓய்வு பெறும் - மிகப் பெரிய சம்பளத் தொகையை தருவதாக  ஆசை காட்டியும் - முடிவில் கறாராக இருந்தார்(ஆனால், மறுபடியும் பான்ட் வேடத்தில் முதுகிழார் ஆனபிறகும் நடிக்கத்தான் செய்தார்).  Diamonds Are Forever படத்திற்கு முந்தைய,  On Her Majesty's Secret Service படத்தில் நடித்த ஜார்ஜ் லாஸன்பியும் பான்ட் வேடத்திற்கு ஒத்துவரவில்லை என்ற காரணத்திற்காகத்தான் மறுபடியும்  ஷான் கானரியை அழைத்து வந்தனர்.  திரும்பவும் பான்ட் நடிகருக்கு பிரச்சனை. இதுவரை பான்ட் படங்களின் அடிநாதமாக இருந்த இசையமைப்பாளரும் கழன்று கொண்டார். தயாரிப்பாளர்களுக்கு தலை வெடிக்காத  குறைதான். ஒருவழியாக ரோஜர் மூர் என்பவரை பான்ட் வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தாயிற்று. அவருக்கு பெரிய பில்ட் அப் தேவையல்லாவா....அது நிச்சயம் முதல் டைட்டில் சீக்வன்ஸில் இருந்துதானே ஆரம்பிக்க வேண்டும்...அதுபோன்ற அதிரடி இசைக் கோர்ப்பாளர் யார் என்று யோசித்து -  Ex Beatleலான பால் மெக்கார்ட்னியை அணுகினர். 70களின் இறுதியில் தான் பீட்டில்ஸ் குழு உடைந்தது, அதன் மெம்பர்கள் அனைவரும் தனி ஆவர்த்தனம் செய்யத் தொடங்கியிருந்தனர். பால் மெக்கார்ட்னியும் தனது Wings குழுவினரோடு இசை நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தார்.

பால் மெக்கார்ட்னி இசை கோர்புக்கு கேட்ட தொகையை கேட்டு தயாரிப்பாளர்கள் மூர்ச்சையானது தான் மிச்சம். அப்பொழுதுதான் அவர்களுக்கு பீட்டில்ஸ் குழவின் இசை ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் மார்டினின் ஞாபகம் வந்தது. அவரும் பான்ட் படத்திற்கு இசைக் கோர்ப்பாளராக பணியாற்ற ஒப்புக் கொள்ள.....நமக்கு கிடைத்ததோ ஒரு மறக்க முடியாத இசைக் கோர்ப்பு. இன்றளவிலும் எல்லா பான்ட் படங்களில் இருந்தும் மிகத் தனித்துவமாகத் தெரியும் இசை, Live and Let die படத்திற்கானது. ஜார்ஜ் மார்டின் தனது நெருங்கிய நண்பரான மெக்கார்ட்னியிடம் தீம் சாங்கை இயற்றித் தர முடியாம என்று கேட்டார்.மெக்கார்ட்னி ,அவரது மனைவி வரிகளை எழுத - தனது குழுவான Wingsசுடன் சேர்ந்து இயற்றிய அந்தப் பாடல் தான் - பான்ட் பட இசை சகாப்தத்தில் முதல் பாப் ராக் வகைப் பாடல்.....என்ன மாதிரியான ஒரு பாடல்....யப்பா......way way ahead of it's time....யூகிக்க முடியாது வேறுபாடுகள் இந்தப் பாடலில் இருக்கும். க்வீனின் போஹிமியன் ராப்சோடியின் முன்னோர் என்றுகூட இந்தப் பாடலைச் சொல்லலாம். ஆனால், நீங்கள் கீழ கேட்கப் போவது - ஒரிஜினல் பால் மெக்கார்ட்னி & விங்க்ஸுடைய "Live and let die" கிடையாது. இது, Guns N Rosesஸின் கவர் வெர்ஷன். அதற்கு இணையாக இந்தப் பாடலும் எனக்கு மிகப் பிடிக்கும். இதில் இஸ்ஸி ஸ்ட்ராடின் & ஸ்லாஷ் இருவரின் கிடார் ஜாலங்களையும் அக்ஸில் ராஸின் குரலையும் பற்றி எழுத ஆரம்பித்தால் பதிவு நீ...ண்....டு கொண்டே செல்லும். So, hear it. That's it.


The Spy Who Loved Me (1977)

70களின் ஆரம்பத்தில், தங்களுது பாப் ராக்குடன் கூடிய டிஸ்கோத்தனமான இசையின் மூலம் இங்க்லாந்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் பயங்கர புகழ்பெற்றிருந்தனர். Bee Gees. Saturady night fever படத்தில், ஜான் ட்ரவோல்டா Bee Geesயின் “Stayin alive” பாடலுடன் அறிமுகமாகும் காட்சியை படம் பார்த்தவர்கள் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. இந்த The Spy Who Loved Me படத்தின் இசைக் கோர்ப்பாளர் மார்வின் ஹெம்லிச் இக்குழுவின் மிகப்பெரிய ரசிகர். படத்தின் ஓபனிங் சேசிங் காட்சியின் இசை, Bee Geesயின் இந்தப் பாடலின் சாயலில் இருப்பது, தற்செயலானது இல்லை. மேலும் இந்த படத்தின் தீம் இசையின் ஓபனிங் பியானோ நோட்ஸ் மிகப்புகழ் பெற்ற ஒன்று.


 A View To A Kill (1985)

மறுபடியும் ஒருமுறை, முற்றிலும்  வேறு வகையான பான்ட் தீம் சாங். இந்த முறை பாடலை உருவாகியது “The prettiest boys of rock” என்ற அந்தகாலகட்டத்தில் அழைக்கப்பட்ட Duran Duran இசைக் குழு. ஸின்த்களை அதிகளவில் உபயோகப்படுத்தி பிரபலமடைந்த குழு. ஒரு அதிரடியான பாடல்.


Golden eye (1995)

இன்னொரு புது பான்ட்டின் அறிமுகம். பழைய க்ளாசிக் பான்ட் ஸ்டைலில், கோல்ட்ஃபிங்கர் வகையறாவில் பாடல் இருந்தால் நலம் என்று முடிவு செய்து இயற்றியதுதான் இந்தப்பாடல். நம்மில் பலபேர் பார்த்த முதல் பான்ட் படம் இதுவாக இருக்கலாம். நிச்சயம் இந்தப் பாடலை மறந்திருக்க மாட்டோம்.


Die another day (2002)

படத்தின் டைட்டில் சீக்வன்ஸ் எல்லாம் அட்டகாசமாகத்தான் இருக்கும், ஆனால், பல ஹார்ட் கோர் பான்ட் ரசிகர்களைப் பொறுத்தவரை மடோனாவின் இந்தப் பாடல் தான் – ஆகச் சிறந்த மோசமான பான்ட் பாடல். பான்ட்’ஸ் டச் எதுவுமே இந்தப் பாடலில் இல்லை என்பது அவர்கள் வாதம். படுத்ராபையான படத்தின் ஒரே ஆறுதல், டைட்டில் சீக்வன்ஸும் இந்தப் பாடலும் தான் என்பது என் அபிப்பிராயம்.


Casino Royale(2006)

The living daylightsக்கு பிறகு ஒரு ஆண் பாடகரை பாட வைப்பது என்று முடிவு செய்தாயிற்று. ஒரு கம்பீரம்+மாடர்ன் குரல் தேவைப்பட்டது. Audioslaveன் க்ரிஸ் கார்னல் தான் சரி என்று முடிவு செய்தனர். க்ரிஸ் கார்னல் – Soundgardenனின் முன்னால் மெம்பர்.....அந்நாளில் ஆடியோஸ்லேவில் இருந்தார். இப்பொழுது, மீண்டும், சவுண்ட்கார்டனில். ஆடியோஸ்லேவ் குழுவைப் பொறுத்தவரை, எனக்கு மிகமிகப் பிடித்த ரெண்டு கிடாரிஸ்ட்கள் இருந்தனர் – Tom Morello & Chris Cornell. க்ரிஸ் கார்னலைப் பொறுத்தவரை அவரது நுணுக்கமான கிடார் ரிஃப்களுக்கு புகழ் பெற்றவர். மிகச்சாதாரணமாக ஒரு நோட்டில் இருந்து மற்றொன்றுக்கு தாவுவார். அப்படிப்பட்ட  ஒரு கிடாரிஸ்டிடம் பான்ட் பாடலைக் கொடுத்தால் ? பான்ட் தீம் இசையை ஒட்டி, பிளக்கம் கிடார் இசையுடன் பாடல் துவங்கும்.கார்ட்ஸ்களுக்கு மத்தியில் ஒரு அட்டகாசமான டைட்டில் சீக்வன்ஸ்.ஏற்கனவே காஸினோ ரோயல் – கன் பேரல் குறித்து பார்த்தோம். அதேபோன்று, இந்தப் படத்தில் பான்ட் தீம் இசை ஆரம்பத்தில் வராது. கடைசில், க்ரேக் – “My name is bond..........James Bond” என்று சொல்லும் போது தான் வரும். கீழே, Audioslaveவின் ஒரு பாடல். பாடல் வேண்டுமானால், Doesn't remind me anythingகாக இருக்கலாம். But, it reminds of me so many things.....பல விருதுகளை அள்ளிக்குவித்த வீடியோ.


Quantum of solace(2008):

Jack whiteகிடாரைப் பொறுத்தவரை, இவர் ஒரு ஜூனியர் ஆன்டி வாரல். அவ்ளோ விஷயங்கள் தெரிந்தவர். கிடார் மட்டுமின்றி, ட்ரம்ஸ், பியானோவிலும் பின்னிப் பெடலெடுக்கக் கூடியவர்.கிடாரின் எந்தவொரு ஸ்ட்ரிங்கிலும் சர்வசாதாரணமாக அற்புதங்கள நிகழ்த்தக் கூடியவர். The White Stripes பற்றி ரெண்டு பதிவாவது எழுதலாம். அவ்வளவு விஷயம் உண்டு.மறுமுனையில், அலிஷா கீய்ஸ். இவரது வசீகரக் குரலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஹைபிட்சில் கூட இவரது குரல் பல மாயாஜாலங்கள் நிகழ்த்தும். Alternative blues rockன் செல்லப் பிள்ளையும் + ஒரு க்ரியேட்டிவான R&B பாடகியும் சேர்ந்து பான்ட் படங்களின் முதல் டூயட் தீம் இசையைப் பாடுகின்றனர். ஆரம்பமே அதிரவைக்கும் கிடார் இசை – தொடர்ந்து மெல்லிய பியானோ – பின்னர் ட்ரம்ஸ் – பின் இருவரின் குரலும் overlapபில். நான் தியேட்டரில் பார்த்த பான்ட் படங்களில், மிகவும் ரசித்தது இந்தப் பாடலைத் தான். இந்த படம், ஆகச் சிறந்த பான்ட் மொக்கைகளில் ஒன்று என்று ரிவ்யுக்கள் வந்திருந்தாலும், இந்தவொரு பாடல் அந்தக் குறையை நிவர்த்தி செய்துவிட்டது.மேலும் ஜாக் வொயிடின் lyrical space அலாதியானது. அதற்கொரு சின்ன உதாரணம்தான் இந்தப் பாடல். பல மொன்னையான பான்ட் பாடல் வரிகளுக்கும் இதற்கும் உள்ள வித்தியாசம்....தெள்ளத்தெளிவு. ஆனால், இந்தப் பாடல் நிறைய பான்ட் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. நிச்சயம் அவர்கள் பழைய பான்ட் படங்களின் ரசிகர்களாகத்தான் இருக்கு முடியும்.Jack white பற்றி எழுத ஏரளாமான விஷயங்கள் உள்ளன.அதை ஒருநாள் சாவகாசமாக பார்ப்போம்.


Skyfall(2012)

Adele – போன ஆண்டின் சென்ஷேசன். சந்தேகமே இல்லை. இந்தப் பாடல், பழைய க்ளாசிக் பான்ட் ஸ்டைலில் இருப்பதைக் கேட்கலாம். குறிப்பாக, From russia with love. ஆனால், பாடல் ஆரம்பிக்கும்விதம்.....ஒருவித gloominessசை நம்மால் உணர முடியும். ஒரேகுறை என்று பார்த்தால், பாடல் வரிகள். மிகச் சாதாரணமான பாடல் வரிகள்.


விக்ரம்(1986):

இந்தப் படத்தில் எனக்குப்பிடித்த ஒரே விஷயம், ரெண்டு பாடல்கள். அதிலும் குறிப்பாக இந்தப் பாடல். தியேட்டரில் எல்லாம் இந்தப் படத்தை பார்க்கவில்லை (எட்டுமாச கைக்கொழந்த நானு). 95களில் அடிக்கடி தூர்தர்சனில் போடுவார்கள். அப்பொழுதுதான் முதலில் படத்தைப் பார்த்தது. ஆனால், பாடல்கள் எங்கப்பா புண்ணியத்தில் முன்னமே தெரியும். இந்தப் பாடல்....ஸ்கூலில் “துடிக்குது புஜம் ஜெய்பது நிஜம்..தகிடதஜ்ஜங் தகிடதஜ்ஜங்” சொல்லி முடிக்கும்போது, பக்கத்தில் இருக்கும் பையனை அட்டைக்கால் வைப்பது, இன் – செய்த சட்டையை எடுத்துவிட்டு ஓடுவது...இதுதான் என் தலையாய பொழுதுபோக்கு. இந்தப் பாடல் பயங்கரமாகப் பிடிக்கும். பைனான்ஸ் பிரச்சனையா என்னவென்று தெரியவில்லை, கமல் சூப்பர்மேன் உடையில் வருவது கொடுமையாக இருக்கும். அதேமாதிரி, தொப்பி. அதுஏன் என்றால், ஷான் கானரி ஆரம்பகால பான்ட் படங்களில் தொப்பியுடன் தான் வருவர்(அதுவே சகிக்காது). சமீபத்தில், நாயகன் குறித்த ஒரு ஆர்ட்டிகளில் கமல், இந்தப் படத்தை மணிரத்னம் இயக்கியிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஒருவேளை அப்படி நடந்திருந்தால், அக்னி நட்சத்திரம் பாடல் ஸ்டைலில் ஒரு அட்டகாசமான விஷுவல் ட்ரீட் கிடைத்திருக்கும்.

2 செப்டம்பர் 1945. நேச நாடுகளின் முன் ஜப்பான் சரணடைவதாக ஒப்புக் கொண்டு  Shigemitsu Mamoru, Umezu Yoshijiro இருவரும் போட்ட கையெழுத்துடன் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது அன்று தான். 1939ல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியபொழுது ஜெர்மனிக்கு எதிராக அணி சேர்ந்த நாடுகள் மூன்று - க்ரேட் ப்ரிட்டன், ஃப்ரான்ஸ் மற்றும் போலந்து. பின்னர்தான் மற்ற நாடுகள் வந்து சேர்ந்து கொண்டன(இந்தத் தகவல்களை எல்லாம் அனைவரும் எட்டாம் வகுப்பிலயே படித்திருப்போம்). க்ரேட்  ப்ரிட்டன், இனி இங்க்லாந்து - தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் போரில் பங்கேற்றது. 1939 முதல் 1945 வரை. விளைவு, பல்வேறு நெருக்கடிகளுக்கு இங்க்லாந்து 1945க்கு பிறகு ஆளாக நேரிட்டது. மிக முக்கியமாக, கிட்டத்தட்ட அரசு கஜானா காலியாகும் நிலைமை. தன் பிழைப்பே தள்ளாட்டமாக இருக்கும் பொழுது, வேறு நாடுகளையும் சேர்த்து கட்டி மேய்க்க வேண்டுமா என்று யோசித்து, தனது ஆதிக்கத்தின் கீழ் இருந்த பல நாடுகளை கழட்டிவிட ஆரம்பித்தது. Of course, இந்தியாவிற்கும் சுதந்திரம் கிடைத்தது.

பொருளாதரா பின்னடைவோடு சேர்ந்து பல்வேறு பிரச்சனைகளை இங்க்லாந்து அந்த காலகட்டத்தில் சந்திக்க நேர்ந்தது. அதில் மிக மிக முக்கியமான சிக்கல் - க்ரேட் ப்ரிட்டன் என்ற சாம்ராஜ்யம் குறித்த கற்பிதங்கள், மாயைகள், ஐடியாலாஜி அனைத்தும் உடைபடத் தொடங்கியதுதான். பெண்கள் - சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடம், தினக் கூலிகள், அதிகாரவர்க்கம் என்ற அனைத்து தரப்பு மக்கள் குறித்தான பார்வை மாறத் தொடங்கியது. இது அப்போதைய சினிமா, இசை என்று அனைத்திலும் பரவலாகக் காணப்பட்டது. இந்த மாற்றம், பழைய க்ரேட் ப்ரிட்டன் மகாராணி காலத்து மேட்டுக்குடி ஆசாமிகள் பலருக்கு உவப்புடையதாய் இல்லை. அவர்களால் பழைய ராணி காலத்து மனோபாவத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. பெண்கள் என்றால், சிற்சில வேலைகளுக்குத்தான் லாயக்கு(போகப் பொருட்கள்), க்ரேட் ப்ரிட்டன் நாட்டு மக்கள் மட்டுமே உலகில் மிக உயர்ந்த இனம் - மற்ற நாட்டு மக்கள், குறிப்பாக ஆப்ரிக்க - ஆசிய நாட்டு மக்கள் குறித்த பார்வை, மகாராணிக்கு கீழ்படிதல், விசுவாசம், அரசு சொல்லும் வேலையை செவ்வனே செய்வதே உண்மையான குடிமகன்: இவ்வாறு இருக்கும் அவர்களது மனோபாவம். அது போன்றதொரு ஆசாமி தான் - இயன் லான்சஸ்டர் ஃப்ளமிங்.


இயன் ஃப்ளமிங் - பயங்கர செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர்(அப்பா - பாராளுமன்ற உறுப்பினர் வேறு). படிப்பை முடித்து ஆரம்பத்தில் பல்வேறுவிதமான வேளைகளில் ஈடுபட்டு வந்தார். பின்னர்தான் இரண்டாம் உலகப் போரின் சமயம், இங்க்லாந்து ராயல் நேவியில் சேர்ந்தார். அங்கு அவர் சந்தித்த மனிதர்கள், சம்பவங்களை எல்லாம் வைத்து 1950களின் ஆரம்பத்தில் ஆரம்பித்து 1952 - மார்ச் -18ல்(எனது பிறந்தநாள் ஹி..ஹி) ஒரு உளவாளி பற்றிய நாவலை எழுதி முடிக்கிறார். Casino Royale. கரீபியனைச் சேர்ந்த ஒரு பறவையியல் நிபுணரின் பெயர் பிடித்துப் போக - அந்த நிபுணரின் பெயரை தனது உளவாளிக்கு சூட்டுகிறார்  - ஜேம்ஸ் பான்ட் . பான்ட் கதாபாத்திரத்தை வைத்து, Casino Royale தொடங்கி Octopussy & The Living Daylights வரை மொத்தம் பதினேழு  நாவல்களை படைத்துள்ளார். பான்ட் கதாபாத்திரத்தை தான் சந்தித்த சுவாரசியமான மனிதர்களை வைத்து உருவாக்கியிருக்கிறார். அதுகுறித்த ஏராளமான டாகுமென்டரிகள் கூட உள்ளன. 

பான்ட் கதாபாத்திரம் வாயிலாக இயன் ஃப்ளமிங் எதையெல்லாம் புத்தகத்தில் வெளிப்படுத்தினார் ?

1. மூன்றாம் நாடுகள், அதன் மக்கள் குறித்தான அவரது பார்வை.  பிற்பாடு நாவலை படமாக எடுத்தபொழுது, இனவெறி நிறைந்த அவரது வார்த்தைகளை பெருமளவில் மட்டுப்படுத்த வேண்டியிருந்தது. உதாரணமாக, Goldfinger நாவலில்
Bond intended to stay alive on his own terms. Those terms included putting Odd-Job or any other Korean firmly in place, which in Bond’s estimation was lower than apes in the mammalian hierarchy
பாருங்கள். "lower than apes in the mammalian hierarchy" இதுவொரு மிகச் சிறிய உதாரணம் தான். கூகிளில் Ian Fleming+racism என்று அடித்துப் பாருங்கள். வண்டி வண்டியாக அவர் நாவல்களில் இருந்து உதாரணங்கள் கொட்டும்.பான்ட் பட வில்லன்கள் எல்லாம், பெரும்பாலும் மூன்றாம் நாடுகளையும், ரஷ்யாவையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். உடலோ முகமோ விகாரமான ரீதியில் தான் இருக்கும். ஏன் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா ?

2. பெண்கள். இரண்டாம் உலகப் போரின் சமயம், போரில் பங்கேற்ற அனைத்து நாடுகளிலும் ஆண்கள் போருக்கு சென்றுவிட பெண்களின் பங்கு மிகமிக முக்கியமானதாக மாறத் தொடங்கியது. இங்கலாந்தில் போர் முடிந்து, பெண்ணியம் குறித்த கருத்துகள் பெருமளவில் வளரத் தொடங்கியது. இதுவும் பல ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது நிதர்சனமா உண்மை. அது இந்தியாவாகட்டும் இங்க்லாந்து ஆகட்டும். ஜேம்ஸ் பான்ட்டை பொறுத்தவரை, தன் காரியம் முடிய -பெண்களை எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். தனது ஆணழகை காண்பித்து எளிதில் அவர்களை வீழ்த்தி விடலாம்....இந்த நினைப்புதான் பான்ட்டிற்கு. அதிலும் ஆப்ரிக்க பெண்களாய் இருந்தால், வில்லத்தனமாகத் தான் சித்தரிக்க வேண்டும். மொத்தத்தில் தேவதாசி முறையை ஆதரித்து பேசிய சத்தியமூர்த்தி போன்று - நிறைய படித்திருந்தாலும்(?), பெண்கள் விஷயத்தில் பிற்போக்குத்தனமான சிந்தனை உள்ளவர் தான் இயன் ஃப்ளமிங்.

3. க்வீன், அரசு - குறித்த பிம்பத்தை கட்டமைக்க தனது நாவல்கள் மூலம் பெரிதும் பாடுபட்டார். உண்மையான ஊழியம், விசுவாசம், கீழ்படிதல்.....என்று பட்டியல் நீளும். இன்றுவரை, ஒருவரை - Majesty என்றெல்லாம் ஒரு நாடே அழைப்பதை என்னவென்று சொல்வது ?

4. ப்ராண்டிங்(Branding) - பான்ட்டையும் ப்ராண்டிங்கையும் பிரிக்கவே முடியாது. வால்தர் PPKவில் ஆரம்பித்து, மான்ட் ப்ளான்க் பேனா, மார்டினி, ஆஸ்டன் மார்டின் கார் என்று சகலத்திலும் ஒருவித ப்ராண்டிங் சார்ந்த ப்ரேமையை வெளிப்படுத்தினார். இதைவொரு பெரிய குற்றமாக சொல்ல முடியாது. அட, பான்ட் இதை உபயோகிக்கிறாரா என்று நமது நுகர்வு பழக்கத்துடன் இது தொடர்புடையது.


மேலே சொன்ன முதல் மூன்று முக்கிய விஷயங்கள் போக, பான்ட் நாவல்களில் ஏகப்பட்ட மொன்னைத்தனங்கள் உள்ளன. பான்ட் நாவல்கள் (என்னளவில் மட்டுமல்ல) B grade வகை பல்ப் நாவல்கள். அவ்ளவே(நான் இரண்டு நாவல்கள் வரை படிக்க முயற்சி செய்திருக்கிறேன். கொஞ்ச நேரத்தில் தூங்கி விட்டேன்). Foucault's Pendulum, The name of rose போன்ற நாவல்களை எழுதிய இத்தாலிய இலக்கிய விமர்சகர்  உம்பர்த்தோ ஈகோ ஜேம்ஸ் பான்ட் நாவலை கிழிகிழி என்று கிழித்திருக்கிறார் (அடச்சே....நா வேற லிங்க்ல இந்த மேட்டர படிச்சு, கடைசில விக்கில இயன் ஃப்ளமிங் பேஜ்லயே இந்த மேட்டர் எல்லாம் இருக்கு).
Eco also noted that the Bond villains tend to come from Central Europe or from Slavic or Mediterranean countries and have a mixed heritage and "complex and obscure origins". Eco found that the villains were generally asexual or homosexual, inventive, organizationally astute, and wealthy. Jeremy Black observed the same point: "Fleming did not use class enemies for his villains instead relying on physical distortion or ethnic identity ... Furthermore, in Britain foreign villains used foreign servants and employees ... This racism reflected not only a pronounced theme of interwar adventure writing, such as the novels of Buchan, but also widespread literary culture". Writer Louise Welsh found that the novel "Live and Let Die taps into the paranoia that some sectors of white society were feeling" as the civil rights movements challenged prejudice and inequality.
இதெல்லாம் இயன் ஃப்ளமிங் எழுதிய பான்ட் நாவல் குறித்தான பார்வைகள். திரைப்படங்களுக்கு வருவோம்.

ஜேம்ஸ் பான்ட் நாவல்கள் வெளிவர ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே மேற்கூறிய குற்றச்சாட்டுகள் வெகுவாக எழத் தொடங்கின. அதன்காரணமாக திரைப்படமாக பான்ட் நாவல்களை எடுத்தபொழுது, இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொண்டே எடுக்கப்பட்டது. பான்ட் கதாபாத்திரம் நாவல் வடிவில் வந்து, பத்து ஆண்டுகள் கழித்தே - 1962ல் Dr.No படமாக வந்தது.  நாவல்களில் இருந்து பல மாறுதலுக்குட்பட்டே சினிமாவில் பான்ட் வலம் வந்தார். ரேசிஸ விஷயங்கள் - வெளிப்படையாக - வராமல் பார்த்துக் கொண்டனர். ஆனால், புத்தகத்தில் இருந்த அதே டெம்ப்ளட்தனம் தொடரவே செய்தது(கிறது). மடத்தனமான பல ஹாலிவுட் படங்கள் போல, வில்லன்கள் ரஷ்யாவில் இருந்துதான் பெரும்பாலும் வருவார்கள், இல்லாவிட்டால் வேறு மூன்றாம் நாடுகள். தமிழ்ப் பட முஸ்லிம் - தீவிரவாதி டெம்ப்ளட்தனம் போல. அதுபோக, விஜயகாந்த் பட வாசிம் கான் தமிழில் பேசுவது மாதிரி, வேறு நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அட்டகாசமான எதுகை மோனையுடன் கூடிய ஆங்கிலத்தில் வில்லன்கள் பேசுவார்கள். சரியான காமெடி. டிபிகல் தமிழ் பட (அ) ஹாலிவுட் பட டெம்ப்ளட்கள். படங்களில் ட்விஸ்ட் என்று எதுவுமே இருக்காது. மிகமிக எளிதாக கொழந்தைகள் கூட யூகித்து விடக்கூடிய திருப்பங்கள். ஆரம்பகால பான்ட் பட சண்டைக் காட்சிகளின் தரம் எல்லாம் நாம் அறிவோம். அதே காலகட்டத்தில் வெளிவந்த பல ஆங்கிலப் படங்களில் பிரமாதமான சண்டைக் காட்சிகள் எல்லாம் உண்டு. அவ்ளோ தூரம் போவானேன், 60களில் வெளிவந்த எம்ஜியார் படங்கள் கூட அப்போதைய பான்ட் படங்களை விட எனக்கு நல்ல பொழுதுபோக்காக தெரிகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், பான்ட் படங்களுடன் இன்னொரு முக்கிய விஷயமும் சம்பந்தப்பட்டுள்ளது. Nostalgia. எனது வயதுக்காரர் ஒருவரைக் கேட்டால், Golden eye படத்தை வாயைப் பிளந்தபடி பார்த்தது நினைவுக்கு வரும். நாற்பது வயதுக்கு மேல் இருக்கும் ஆசாமிகளுக்கு,  The Spy who loved me ஞாபகத்திற்கு வரும். ஐம்பதுக்கு மேற்ப்பட்ட ஆசாமிகளுக்கு Dr.Noவில் ஆரம்பித்து பல பான்ட் படங்களின் ஞாபகம் வரும். ஏனென்றால் ஆங்கிலப் படங்களை அந்த காலகட்டத்தில் பார்ப்பது, ஒரு கிக்கான  விஷயம் அல்லவா. இப்பொழுது மாதிரி கைசொடுக்கில் என்ன மொழி படமாக இருந்தாலும் டவுன்லோட் செய்யும் வசதியெல்லாம் அப்பொழுது இல்லையே. மதுரையாய் இருந்தால் தங்கம் தியேட்டரிலும், தங்க ரீகல் டாக்கீசிலும் ஆங்கிலப் படங்கள் வெளியாகும்(என் அப்பா சொல்லித்தான் இதெல்லாம் எனக்குத் தெரியும்). விருதுநகர், சிவகாசி என்று ஆங்கிலப் படங்களை பார்ப்பதற்க்கென்றே ஒரு கூட்டம் மதுரைக்கு வருமாம். அதுவும் அப்போது - ஆசியாவிலயே பெரிய தியேட்டராக இருந்த தங்கம் தியேட்டரில் படம் பார்ப்பதே பயங்கரமான அனுபவம். அதேபோன்று மெட்ராசிலும் (பான்ட் படங்கள் ரிலீஸ் ஆகும் தியேட்டர்கள் என்று என்னமோ சொல்லியிருக்கிறார்....மினர்வாவோ ஆல்பர்ட்டோ, ஞாபகம் இல்ல) ஆங்கிலப் படத்திற்கென்றே ஒரு கூட்டம் உண்டு என்று கேள்வி. 50 ஆண்டுகள் கடந்தும் பான்ட் படங்கள் வெளியாவதால், சென்று தலைமுறையினருக்கு அந்தநாள் ஞாபகங்களை பான்ட் படங்கள் போகிறபோக்கில் மிகச் சாதாரணமாக மீள்கொணர்ந்து விடும். ஏன் 25+ல் இருக்கும் என்னை போன்ற ஆட்களுக்கு - கோல்டன் ஐ படத்தைப் இப்பொழுது பார்த்தால், சரியான காமெடியாகத் தெரியும். ஆனால், ஒருகணமேனும் ஆரம்ப காட்சியில் டேம் மேலிருந்து ப்ராஸ்னன் குதிக்கும் பொழுது, நாம் தியேட்டரில் ஆஆவென பார்த்தது ஞாபகம் வராமல் போகாது. இந்த நோஸ்டால்ஜியாவிற்கும், அந்த படங்களின் தரத்திற்கும் துளியும் தொடர்பில்லை. அப்படங்கள் சார்ந்த நினைவுகள் தானே முக்கியம் ? அந்நினைவுகளே மறுபடி மறுபடி நம்மை பான்ட் படங்களை நோக்கித் தள்ளுவதாக எனக்குப்படுகிறது. இது ரஜினி,கமல் என்று எல்லாருடைய படங்களுக்கும் பொருந்தும்.

இதுவரை வந்த 22 பான்ட் படங்களில் எனக்கு நாலு படங்கள் மட்டுமே பிடிக்கும்(எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன்). மீதியெல்லாம் என்னைப் பொறுத்தவரை படு மோசம். பத்து நிமிடங்கள் கூட பார்க்க முடியாத அளவிற்கான பான்ட் படங்கள் எல்லாம் உள்ளன, மூன்ரெக்கர் போல. பல விஜயகாந்த், அர்ஜூன் படங்கள் கூட இந்த பான்ட் படங்களை விட நல்ல விறுவிறுப்பாக இருந்திருக்கிறது. இதையெல்லாம் மீறி, எனக்கு மிகமிகப் பிடித்த பான்ட் படம் - காசினோ ரோயல். அதேபோல மிகப் பிடித்த பான்ட் - டேனியல் க்ரேக் தான். ப்ராஸ்னனிடம் ஒரு ஸ்டைல் உண்டு. ஆனால், க்ரேகிடம் இருக்கும் rawness யாரிடமும் இல்லை என்பது என் கருத்து. ஷான் கான்ரி எல்லாம் - என்னளவில், ஓவர் ரேட்டட். கொஞ்ச நேரத்தில் போர் அடிக்க ஆரம்பித்து விடும். மற்ற மூவரின் நடிப்பிலும் அழுத்தம் இல்லாதது போன்ற உணர்வு. தமிழோ ஆங்கிலப் படமோ, பான்ட் போன்ற மசாலா படத்திற்கு தேவையான கச்சிதமான ஸ்க்ரீன்ப்ளே தானே மிக முக்கியம். அது ஸ்கைஃபால் படத்தில் இருந்தால் ஓகே. ஆனால், இதிலும் ஒப்புக்கு ஒரு ஆப்ரிக்க நடிகை, வில்லன் பெயர் சில்வா (ப்ரேசிலாக இருக்கும்) என்று டெம்ப்ளட்தனங்களுக்கு பஞ்சம் இல்லாதது போலத் தெரிகிறது (குறைவாக தண்ணீர் ஓடும் ஆற்றில் நெட்டுகுத்தலாக ஓடும் ரயிலில் இருந்து பான்ட் விழுகிறார். அதுவும் குண்டடிபட்டு. வேட்டைக்காரன் விஜயே பரவாயில்லை போல). தமிழ் படங்களில் மட்டும் தோண்டித் துருவி லாஜிக் பார்ப்பது, மசாலா ஆங்கிலப் படங்களை எந்த கேள்வியும் இல்லாமல் சிலாகிப்பது - என்ற colonial hangoverயில் இருந்து நான் விடுபட்டு பல ஆண்டுகள் ஆகின்றது. ஒரு மசாலா படத்தில், தமிழோ ஆங்கிலமோ கொரியனோ - அதற்குரிய மசாலாத்தனங்கள் சரியாக இருக்கிறதா.... அவ்ளோதான்.  

மேலும் படிக்க:
பி.கு:

பான்ட் குறித்து நான் கீபோர்டில் நடனமாட ஆரம்பித்த விஷயமே வேறு. அந்த விஷயம் குறித்து நடனமாடி முடித்து, அந்தப் பதிவு ட்ராஃப்டில் இருக்கிறது. இதுவே பெரிய பதிவாக இருப்பதால், அது நாளை.

All of Louis Malle, all his good qualities and faults, was in Elevator to the Gallows

Francois Truffaut


மர்மம் பொதிந்த வசீகரக் கண்கள். படம் தொடங்குவதே அந்தக் கண்களின் க்ளோஸ்-அப்பில் இருந்துதான். ஃப்ளோரன்ஸ்(அந்தப் பெண்), ஜூலியன்(ஒரு ஆண்) தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் தம்பதிகளாகவோ காதலர்களாகவோ இருக்கலாம். "இந்த வேலையை எப்படியாவது முடித்தாக வேண்டும்" என்ற ரீதியில் ஒரு பூடகமான பேச்சாகவே அவர்களின் உரையாடல் நீள்கிறது. பேசி முடித்தவுடன் ஜூலியன் அலுவலக உதவியாளரிடம்,  அவள் எப்பொழுது பணியிலிருந்து வீட்டிற்குக் கிளம்புகிறாள் என்பது குறித்து கேட்டுக் கொண்டிருக்கிறான். அப்போது வரும் ஒரு தொலைப்பேசி அழைப்பின் மூலம் - தனது மேலதிகாரியான கார்லா - இன்னும் சிறிது நேரத்தில் ஜெனிவா புறப்படுகிறார் என்பதைத் தெரிந்து கொள்கிறான்.

தனது அறைக்கு திரும்பி, உள்ளே கதவைத் தாளிடுகிறான். டேபிள் ட்ராயரைத் திறக்க - கையுறை, துப்பாக்கி, கொக்கி கொண்ட கயிறு...மூன்றும் அங்கே பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. அறையின் ஜன்னல் கதவைத் திறந்து அதனோரம் இருக்கும் வராண்டாவில் நடந்து சென்று, கொக்கியை அவனது அறைக்கு மேல இருக்கும் அறையின் கம்பிகளை நோக்கி வீசுகிறான். கச்சிதமாக கொக்கி, அந்தக் கம்பிகளை கவ்விக் கொள்ள, மெல்ல யாரும் பார்த்திராதவாறு மேலே ஏறுகிறான். மேலே இருக்கும் அறை: அவனது மேலதிகாரி, சைமன் கார்லாவின் அறை. உள்ளே நுழைகிறான். அவனுடன் Miles Davisன் மிஸ்டிகல் ஜாஸ் இசையும் கதவிடுக்கில் புகைப் போல நுழைந்து அறை முழுவதும் வியாபிக்கத் தொடங்குகிறது. சட்டென்று  ஒருவித பரவசம், திகில், அடுத்ததாக என்னமோ நடக்கப் போகிறது - இந்த மூன்று உணர்வையும் ஒருசேர அவ்விசை நமக்குத் தருகிறது. அவனைக் கண்டவுடன் மிகுந்த உற்சாகத்துடன் கார்லா பேசத் துவங்குகிறார். அவர் பேசுவதில் இருந்து ஏதோ நிழலுலக வேலைகளில் அவர்கள் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. டக்கென்று துப்பாக்கியை இவன் எடுக்க, முதலில் ஏதோ ஒரு விளையாட்டு என்று கார்லா கருதுகிறார். பின் திடீரென்று "என் துப்பாக்கி உன்னிடம் எப்படி வந்தது" என்று  கார்லா கேட்க...........ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ப்ப்ப்ப்.

மிகச் சாதுர்யமாக அந்த அறையை உள்பக்கமாக மூடிவிட்டு, வந்தே வழியாகவே அந்தக் கயிறின் மூலம் தனது அறைக்கு திரும்புகிறான். நேரம் ஆகிவிட்டபடியால் அனைவரும் வீட்டுக்கு கிளம்பத் தொடங்குகின்றனர். அலுவலக பணியாள், கார்லா இந்நேரம் தனது ட்ரெயினை பிடிக்கப் போயிருப்பார் என்று உதவியாளரிடம் கூறுகிறான். லிஃப்டில் இறங்கிக் கொண்டிருக்கும் போது - அலுவலக உதவியாளர், நம் அதிகாரி கார்லாவை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. அடிக்கடி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்குச் சென்று விடுகிறார். பல நிழலுக வேலைகளில் எல்லாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று பேசிக் கொண்டு வருகிறாள். ஜூலியன் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு தனது காரில் ஏறி அமர்கிறான்.எதிர்த்த நடைபாதையில் இருக்கும் பூக்கடையில் வேலை பார்க்கும் பெண், தனது காதலனுக்கு  அவனைக் காட்டி ஏதோ கூறிக் கொண்டிருக்கிறாள். அவனது காதலன், On the waterfront படத்தின் ப்ராண்டோவின் ரசிகன். அதே போன்ற ஜாக்கெட் எல்லாம் அணிந்திருக்கிறான். ஒரு fake முரடன்.

காரை ஸ்டார்ட் செய்த ஜூலியன், ஏதேச்சையாக மேல பார்க்க...........அங்கே.......அந்தக் கயிறு அப்படியே தொங்கிக் கொண்டிருக்கிறது. படீரென்று தான் செய்த தவறு உரைக்க, காரை ஸ்டார்ட் செய்து நிலையிலேயே அப்படியே விட்டுவிட்டு தலைதெறிக்க அலுவலகம் நோக்கி ஓடுகிறான். லிப்ஃடில் ஏறி பொத்தானை அழுத்துகிறான். அதேசமயம் கீழே அலுவலகப் பணியாளன் லிப்ஃடை ஆஃப் செய்ய அதன் சுவிட்சை நோக்கிப் போகிறான். 3............4..........5........கடைசி தளத்தை லிஃப்ட் நெருங்கிவிட்டது. ஜூலியன் தனது லைட்டரை எடுத்து பற்ற வைக்கும்......அந்த மைக்ரோ விநாடியில்.......லிஃப்ட் நிற்கிறது.

உள்ளிருந்து பூட்டப்பட்ட அறைக்குள் கார்லாவின் பிணம் -  அவரது வெளிஅறையின் கம்பிகளில் கயிறு தொங்கிக் கொண்டிருக்கிறது - கொலை செய்த ஜூலியன் லிஃப்டுக்குள் - அவனது கார் ஸ்டார்ட் செய்யபட்ட நிலையில் ரோட்டில் நிற்கிறது - அதனை கவனித்துக் கொண்டிருக்கும் காதலர்கள் - ஜூலியனுக்காக அங்கே காத்திருக்கும் ஃப்ளோரன்ஸ்.............எத்தனை பேர் இந்த plotக்கே இந்நேரம் இந்தப் படத்தை டவுன்லோட் செய்ய எத்தனித்திருக்கிறீர்கள் ??



Miles Davis - ஜாஸ் இசைப் பிரியர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர். மைல்ஸ் டேவிஸ் குறித்து வேறொன்றை நெட்டில் தேடிக் கொண்டிருந்த பொழுது, அவர் இசையமைத்த படம் என்று இந்த படத்தின் பெயரைப் பாத்தேன். அடுத்து ட்ரைலர்....கீழே இருக்கும் ட்ரைலரைக் காண நேரிட்டது. சரியாக ட்ரைலரின் 18வது நொடியில், செமி - டார்க்நெஸில்    லிஃப்டிற்குள் ஒரு கதாபாத்திரம் லைட்டரை ஆன் செய்வான். அப்போதே எனக்குத் தெரியும், இதுபோன்ற ஒரு பதிவை நான் எழுதிக் கொண்டிருப்பேன் என்று.


படத்தின் பின்னணி இசை.....ட்ரைலரை பார்க்கும் போதே ஒருவித அதிர்வுக்கு உள்ளாகியிருப்பீர்களே.......மைல்ஸ் டேவிஸ் + இயக்குனர் லூயி மால் + படத்தின் கதாநாயகி(?) ஜேன் மோரூ, மூவரும் ஷம்பைன் அருந்தியவாரு பின்னணி இசை குறித்துப் பேசிப் பேசி செதுக்கியிருக்கிறார்கள். இரவு 11 மணிக்கு தொடங்கி, அதிகாலை 5 மணி அளவில் டேவிஸ் முழு படத்திற்கான இசையையும் முடித்து விட்டார். இந்தப் படத்தின் இசை குறித்து, விக்கிபிடியாவில் ஒரு க்ரிடிக் சொன்னதாக இருந்தது.



The loneliest trumpet sound you will ever hear, and the model for sad-core music ever since. Hear it and weep


இந்த படத்தின் இசையை புரிந்து கொள்ள, அமெரிக்க நுவார் படங்களின் பரிச்சயம் இருந்தால் நலம். அமெரிக்க படங்களில், அந்த காலகட்டத்தில் வந்த நுவார் படங்களில், இசை துருத்திக்கொண்டே ஒலிக்கும் (நமது தமிழ்ப் படங்களில் ஆதி காலம் தொட்டு இன்றளவும் அவ்வாறே பல படங்களின் இசை இருந்து வருகிறது. சினிமா -  என்ற "விஷுவல்" மீடியத்தை அளவுக்கதிகமான இசை, வசனங்கள் போன்றவற்றின் மூலம் நிரப்புவதில் எனக்கு உடன்பாடில்லை). இந்தப் படம் நுவார் படங்களின் பின்னணி இசைப் பொறுத்தவரை, மிக மிகக் கச்சிதமாக படத்துடன் பொருந்திப் போகிறது. தனியாக இதனை தரவிறக்கி கேட்டுப் பாருங்கள். பின்னர், படத்தைப் பாருங்கள். இசையிலயே படத்தின் அடிநாதம் ஒளிந்திருப்பதைக் கேட்கலாம். எந்தவிதத்திலும் படத்தை பின்னுக்குத் தள்ளாமல், படத்தை பல்வேறு தளங்களுக்கு மிக அனாயசமாக இசை இட்டுச் செல்வதைக் கேட்கலாம். ஜூலியனைத் தேடிக் கொண்டு ஃப்ளோரன்ஸ் பாரீஸ் நகர வீதியில் வெறுமையுடன் நடைபோடும் காட்சிகளில், ஒளிப்பதிவு + இசை, ஒவ்வொரு ஷாட்டும் ஒரு கவிதை. நான் சொன்னதில் துளி கூட மிகைப்படுத்தலே இல்லை.

ஒளிப்பதிவு........நிச்சயம் படத்தைப் பார்ப்பவர்களுக்கு மறக்கவியலாத ஒரு அனுபவத்தை ஒளிப்பதிவு தரும். ஒளிப்பதிவாளர் குறித்து, யாரென்று தேடிய பொழுது தான் - எனக்கு மிகப் பிடித்த மற்றொரு ப்ரெஞ்சு இயக்குனர், ழான் பியர் மெல்வில்லின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஹன்ரி டேகே தான் இதற்கும் ஒளிப்பதிவு என்று தெரிய வந்தது. படம் முழுக்க விரவியிருக்கும் அந்த டார்க் டோன், பார்ப்பவர்களை முழுவதுமாக உள்ளிழுத்துக் கொள்ளும். போலிஸ் விசாரணைக் காட்சிகளில் வரும் லைட்டிங்.......வாவ்......


ரைட்.......இதுதான் முக்கிய பகுதி. இயக்குனர் - லூயி மால். இப்படத்தை இயக்கிய பொழுது அவருக்கு வயது 24. லூயி மால் குறித்து சில மாதங்கள் முன்னர், நண்பரும் Ex-பதிவருமான கீதப்ரியன், ஃபேஸ்புக்கில் இவரின் டாகுமென்டரி - கல்கத்தா குறித்துப் பகிர்ந்திருந்தார். அப்பொழுதுதான் முதன்முறையாக இவர் பெயர் கேள்விப்படுகிறேன். பின்னர் இந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுதான், ஆஹா..இந்த இயக்குனர் தானே கீதப்ரியன் சொன்ன கல்கத்தாவின் இயக்குனர் என்பது உரைத்தது. அதைவிட ஆச்சரியமாக - சில வாரங்கள் முன்னர், மதுரை புத்தகக் கண்காட்சியில் - லூயி மால் என்ற பெயரில் ஒரு புத்தகத்தைப் பார்த்தவுடன் கிட்டத்தட்ட அதிர்ச்சியாகி விட்டேன் என்றே சொல்லலாம். முதன்முதலாக வண்ணக் கலரில், ஆழ்கடல் பற்றிய டாகுமெண்டரி ஒன்றை - இன்னொரு இயக்குனரோடு சேர்த்து - எடுத்தது இவர்தான்.படங்களோடு மட்டுமில்லாமல், சிறந்த டாகுமெண்டரி இயக்குனராகவும் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.French new wave கோஷ்டியினரோடு இவருக்கு பரிச்சயம் இருந்தாலும், அவர்களிடமிருந்து விலகி தனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டவர். மிகுந்த கறாரான விமர்சகராக அறியப்பட்ட ப்ரான்சுவா த்ரூஃபோ இவரது மேக்கிங்கை பலமுறை சிலாகித்திருக்கிறார்(இப்பொழுதுதான் இவரின் படங்களை பார்க்கத் தொடங்கி உள்ளேன். குறைந்தது ஒரு பத்து படங்களையாவது பார்த்த பின் இவரைப்பற்றி பேசவோ எழுதவோ முயற்சிக்கிறேன்).

தமிழ் திரைப்படங்களைப் பொரறுத்தவரை  இப்பொழுது சகஜமாக புழங்கும் ஒரு வார்த்தை, "ஸ்டைலிஷான மேக்கிங்". 1958லேயே, இவ்வளவு நேர்த்தியுடன் எடுக்கபட்ட இந்த படத்தையெல்லாம் எவ்வாறு அழைப்பார்கள் என்று தெரியவில்லை.

லூயி மால்

ப்லிம் நுவார் (Film noir) - இந்த வார்த்தையை நம்மில் பல பேர் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். மிக மிக சுவாரசியமான, பல்வேறு பரிசோதனை முயற்சிகள், அட்டகாசமான திரைக்கதைகள், அசரடிக்கும் ஒளிப்பதிவு என்று நுவார் படங்களின்  பரிமாணங்கள் பல. அதன் சரியான அர்த்தம் தான் என்ன ? நுவார் படங்களின் அடிப்படைகள் என்ன ? குறிப்பாக, இந்தப் படம் எவ்வாறு நுவார் வகையின் மிக முக்கியமான திருப்புமுனை படமாக இருக்கிறது ? எல்லாவற்றையும் அடுத்த பதிவில் எனக்குத் தெரிந்த அளவில் பார்ப்போம். அதற்கு முன் நீங்கள் பார்த்த, ஹிட்ச்காக்கின் ஆரம்ப கால படங்களையும், Orson Wells, John Huston, Billy Wilder போன்ற ஆட்களையும் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். கூடவே, நுவார் படங்களின் அடிநாதமான குற்றப் புனைவு (Crime Fiction) குறித்த இந்தக் கட்டுரைகளையும் படித்து விடுங்கள். Of course, இந்த கட்டுரைகள் இலக்கியம் சார்ந்ததாக மட்டுமிருந்தாலும், நுவார் குறித்த பார்வையும் - குற்றப் புனைவுகள் குறித்த பல சுவாரசியமான விஷயங்களையும் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்(கொண்டேன்).




பி.கு:
நேற்று ஒரு வெகுஜனப் பதிவருடன் நடந்த உரையாடலின் விளைவே இந்தப் பதிவு. வேற ஒரு பதிவைத் தான் டைப்புவதாக இருந்தேன். அந்த வெகுஜன பதிவர் இந்த படத்தைப் பார்த்தாரா என்று தெரியவில்லை ? இன்னொரு நண்பர்/ முன்னாள் புரட்சிப்பதிவர் ஒருவருக்கும் இந்தப் படத்தை போன வாரம் அனுப்பியிருந்தேன். அவரும் இந்தப் படத்தைப் பார்த்த மாதிரி தெரியவில்லை.

மற்றொரு இடைச் சொருகல்:


நிச்சயம் இதுமாதிரி,இவ்ளோ நேரம் யாராவது வீடியோ பதிவு என்ற பேரில் எதுனா போட்டா, நா பாப்பனே என்பது சந்தேகமே. பதிவுகளையே முதல் பேரா - கட் - கடைசி பேரான்னு படிக்கும் ஆட்கள் நாம. இதெல்லாம் தெரிஞ்சாலும், இப்படி அப்லோட் செய்யத்தான் எனக்கு பிடிச்சிருக்கு. நெஜமா எத்தன பேர் பாப்பாங்க பத்தி ஒரு கவலையும் இல்ல. ஒரு பத்து இருபது நிமிஷத்தில் பேசி முடிக்கும் அளவுக்கு ஸ்கார்சேஸி மொக்க டைரக்டரா என்ன ? 

இதுல வரும் காட்சிகள் - இணையத்தில் இருந்தும், என் டிவிடிகளில் இருந்தும், ரொம்ப குறிப்பா.......இந்த Fan montage tribute videoல இருந்து கட் செஞ்சது. அவரே கோல்டன் க்ளோப் வீடியோல இருந்து தான் கட் செஞ்சிருக்கார்.

அடுத்த பார்ட் - கொஞ்சம் அதிர்ச்சிய ஜீரணிக்க 5,6 பேர் மட்டுமே பாத்தாலும், அவுங்களும் பாவம் தான - மூணு நாள் டைம் குடுத்து, திங்கள் கிழமை அப்லோடுகிறேன்.




ஒரு வேகத்தில் ரெண்டு தப்பு வுட்டுடேன்.
  • ஸ்கார்சேசே டிவில மொதல்ல பாத்த படம், ரோஸிலினி யோட - பைசான்(Paisan).
  • Neo realismத்தின் முக்கிய ஆட்கள் - விட்டோரியோ டி சிகா, லுசினோ விஸ்காண்டி(முதல் neo realistic படம் எடுத்தவரு இவர்தான்) ஆகியோர்களை குறிப்பிடக்கூட மறந்துட்டேன்.


மத்தபடி, பாத்துட்டு சொல்லுங்க. இதுவே ரொம்ப நேரம் போனதால மீதி நாளிக்கு அப்லோடுகிறேன். 640px விடியோ போடலாம்னா, சைஸ் ரொம்ப அதிகமா வந்திருச்சு. இந்த குவாலிட்டியை பொறுத்தருள்க.