Saturday, June 27, 2020

The Ornithologist


Saint Anthony of Padua. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்புகழ் பெற்ற போர்த்துகீசிய புனிதர். நம்மூரில் புனித அந்தோனியார் என்கிறோமே, அவர்தான்.  Patron Saint of lost things. ஏன் இந்தப் பெயரென்றால் எதாவது காணாமல் போயிருந்தால் இவரை நினைத்து ஜெபித்தால் அந்தப்பொருள் கிடைத்துவிடும். பொருள் - உயர்திணை, அஃறிணை எல்லாமும் இவ்வார்த்தைக்குள் அடங்கும். புயலில் மாட்டிக்கொண்ட, காணாமல்போன மாலுமிகள், மீனவர்கள் அனைவரும் சரணாகதியடையுமிடம் புனிதர் அந்தோனி. 

சுமார் 400 ஆண்டுகளுக்கு கன்னியாகுமரி கடலோரம் போர்த்துகீசிய கப்பல் ஒன்றில் காலரா நோய் கடுமையாகப் பரவி அதிலிருந்த ஏராளமானோர் இறந்துவிட, கப்பலிலிருந்த ஒரு சிற்பி புனித அந்தோனியாரை வேண்டிக்கொண்டு அவரின் சிலை வடிக்கிறார். கொஞ்சநாட்களில் காலரா பாதிப்பு நின்றுவிட மீதியிருந்த அனைவரும் உயிர் பிழைக்கின்றனர். அதற்கு நன்றிக்கடனாக கன்னியாகுமரியின் கடலோரம் அச்சிலையை வைத்து ஒரு சின்ன ஆலயத்தை  ஏற்படுத்துகின்றனர். அந்த ஆலயம் - திருநெல்வேலி உவரியிலிருக்கும் புனித அந்தோனியார் ஆலயம் (கொற்கை நாவல் உவரியை அடிப்படையாக் கொண்டதாக நினைவு). அந்தோனியாருக்கு இன்னுமொரு சிறப்பு உண்டு. பறவைகள், மீன்களுக்கெல்லாம் போதனை செய்தவர். அவர் இயற்பெயரை சொல்ல மறந்துவிட்டேனே...Fernando.
Whoever approaches the Spirit will feel its warmth, hence his heart will be lifted up to new heights
- St. Anthony of Padua
திண்டுக்கல் ஆத்தூர் டேம். செப்டெம்பர் மாதம். காலை சுமார் ஏழு மணி. சங்குவளை நாரைகள் (Painted Storks). ஒரு பெரிய நாரைக்கூட்டம் (இந்நாரைகள் ரெகுலர் விசிட்டர்ஸ்) டேம் மதகருகே உலாத்திக்கொண்டிருக்க, நாலைந்து நாரைகள் மட்டும் சற்று தள்ளி குட்டை போல் தேங்கியிருந்த தண்ணீரில் மீன்களையும் நத்தைகளையும் (பெரிதாக ஒன்றும் இருந்தாக தெரியவில்லை) துரத்திப் பிடித்துக்கொண்டிருந்தன. இந்த நாலைந்து நாரைகளை தூரத்திலேயே கவனித்துவிட்டபடியால் வெகு ஜாக்கிரதையாக, அடிமைப்பெண் எம்ஜிஆர் போல புதர்களுக்கு நடுவில் ஒருமார்க்கமாக குனிந்து குனிந்து குட்டையை நெருங்கிவிட்டேன். சத்தமில்லாமல் அப்படியே உட்கார்ந்தும் விட்டேன். பறவைகளின் புலன்கள் படு ஷார்ப். நாம் கொஞ்சம் சொதப்பினாலும், சுதாரித்துக்கொண்டு படக்கென்று பறந்துவிடும். இரையை தேடிக்கொண்டிருக்கும் பறவைகளை இப்படி பயப்படுத்தி பறக்கச் செய்வது பெரும்பாவம். அந்த ஜாக்கிரதை உணர்வு எப்பொழுதுமே நமக்குத்தேவை.

ஃபோட்டோ எடுப்பதைவிட அப்செர்வ் செய்வதில்தான் ஆர்வம் என்பதால் ஏறக்குறைய கால் மணி நேரம் பைனாகுலர்வழியாக திருப்தியாக அப்செர்வ் செய்தேன். சேறும் சகதியுமான தண்ணீரிலிருந்து அலேக்காக மீன்களை பிடித்து ஜாலியாக உண்டுகொண்டிருந்தன. அலகின் நுனியிலிருந்து  நீர் சொட்டிக்கொண்டிருக்கிறது. சூரியன் வேறு நேர் எதிர்திசையில் இருந்தபடியால் அட்டகாசமாக அனைத்தையும் கவனிக்க முடிந்தது. எதற்கும் ஃபோட்டோ எடுத்து வைப்போமெயென்று ரெடியாகி...கச்சிதமாக focus செய்வதற்குள் எப்படியோ அனைத்து நாரைகளும் ஒருசில வினாடிகளில் சுதாரித்துக்கொண்டு பறக்கத்தொடங்கின. இடது பக்கத்திலிருந்து முதல் நாரை. Zoom செய்து பாருங்களேன். இன்றுவரை இந்த imagery படுதுல்லியமாக நினைவில் உள்ளது. நான்கும் கிளம்பி, அரை வட்டமடித்து, சற்று தொலைவில் எதிர்த்தாற்போலிருந்த திட்டில் போய் இறங்கின. அந்த ஒரு நாரை மட்டும் அத்திட்டிற்கு போய் இறங்கும்வரையில் தலையை என் பக்கமாகவே திருப்பியிருந்தது. பார்வை முழுக்க என்னை நோக்கியே இருந்தது. கோபமா ? எரிச்சலா ? அசூயையா ? எல்லாம் கலந்த கலவையா ?. இதுபோல ஏகப்பட்ட அனுபவங்கள் (எனக்கு மட்டுமல்ல எல்லா birdersகளுக்கும் நிச்சயமாக இருக்கும்) உண்டென்றாலும் இதைப்பற்றி சொல்ல ஒரு ட்ரைலரே காரணம்.
 

அந்த ட்ரைலர் - இதுதான். ட்ரைலர், அதிலிருக்கும் சில ஷாட்ஸ், படத்தைப்பற்றி எதாவது brief - இதைவைத்துதான் படங்கள் பார்ப்பது வழக்கம். Of course, The Ornithologist என்று பெயரிருந்தாலும் ட்ரைலர் பார்க்கும்போதே இது typical bird watching வகை படமில்லை என்று புரிந்துவிட்டது. ஆனாலும் முதல் பதினைந்து நிமிடங்கள் முழுக்க முழுக்க பறவை நோக்குதலைப் பற்றியது. பறவை நோக்குதலின் mood, rhythm, ambience - மூன்றையும் படுதுல்லியமாக அந்த ஆரம்ப பதினைந்து நிமிடங்களில் காணலாம். திரைப்படங்களில் இது வெகு அரிதாகவே நிகழும்.


இந்தப்படம், Stranger by the lakeகை ஞாபகப்படுத்தியது. அந்தப்படமும் இதுபோன்றே ஏன், எதற்கு, எங்கு போன்ற கேள்விகளை தாண்டிய படம். டிபிகல் சர்ரியல் படங்களுண்டு. இது சர்ரியல் படமென்று ஒவ்வொரு காட்சியும் அதனை ஊர்ஜிதப்படுத்துவதுபோல சர்ரியல்நெஸ் முகத்திலடிக்கும். சிலவகை படங்களுண்டு. கொஞ்சகொஞ்சமாக நம்மை உள்ளிழுத்து படம் முடிந்த பிறகும் அந்த trippiness நம்மை விடாது. ஆர்னிதாலஜிஸ்ட் அப்படியான படம். Cinematography அவ்வளவு பிடித்தது.   

Fernando, ஒரு ஆர்னிதாலஜிஸ்ட். ஆற்றின் கரையில் டெண்டமைத்து பறவைகளை  வெகு தீவிரமாக அவன் கண்காணித்துக் கொண்டிருப்பதிலிருந்து படம் ஆரம்பிக்கும். கடுமையான குளிர். பனி மூட்டம். ஆனாலும் ஆனந்தமாக பனிக்கு ஊடே அவ்வளவு குளிர்ந்த நீரில் லயிப்புடன் நீந்திக்கொண்டிருப்பான். பின்பு Kayak எனப்படும் சின்னப் படகை எடுத்துக்கொண்டு ஆற்றில் செல்லத்தொடங்குவான். சற்றென்று Black Stork பறவை கண்ணில்படும். அல்லது பறவையின் கண்ணில் இவன் படுவான். Transfix என்போமே அதுபோல மெய்மறந்து பைனாகுலர் வழியாக அப்பறவையை பார்த்துக்கொண்டிருப்பான் (ஏன் மேலே அந்த ஒரு நாரையைப் பற்றி சொன்னேனென்று இந்தக்காட்சியை காணும்போது புரியும்). சுவாரஸ்யத்தில் ஆற்றின் போக்கை கவனிக்கத்தவற, வெள்ளத்தில் மாட்டிக்கொண்டு படகு கவிழ்ந்துவிடும்.

இரண்டு சீன யாத்ரீகர்கள். யார், என்னவென்று ஒன்றுமே தெரியாது. எப்படி அந்தக்காட்டிற்குள் வந்தார்கள்...அதுவும் தெரியாது. அவர்கள், Fernando மயக்கமான நிலையில் கரையொதுங்கி இருப்பதைக்கண்டு, முதலுதவி எல்லாம் செய்து அவனை காப்பாற்றுவார்கள். பயணக்களைப்பில் அவர்கள் ஒரு பக்கமும் இவன் ஒரு பக்கமுமாக தூங்க, மறுநாள் Fernando எழும்போது முழுவதுமாக கட்டப்பட்டுக் கிடப்பான். எல்லாம் அந்த சீனர்களின் வேலை. என்ன காரணம் ?. ம்ஹும். வழக்கம்போல்  ஒன்றும் தெரியாது. அவனை என்ன செய்வதென்று திட்டம் தீட்டுவார்கள் பாருங்கள். அதைக்கேட்டு பேஸ்தடித்து கஷ்டபட்டு அவர்கள் பிடியிலிருந்து தப்பித்துவிடுவான். அடுத்தநாள் இரவில் இன்னொரு கூட்டத்தை காண நேரிடுகிறது. அக்கூட்டத்தை எப்படி விவரிப்பது ?. "ஒரு மார்க்கமான" கூட்டம் ?. இத்தனை விஷயங்கள் நடந்தாலும் அவன் முகத்தில் ஒருவித அமைதி இருந்துகொண்டேயிருக்கும். அவ்வளவு களோபரத்திற்கிடையேயும் பறவைகளை கவனிப்பதை விடமாட்டான். அடுத்தநாள் காலை. நாயின் குறைப்பு சத்தம் கேட்டு கண்விழித்துப் பார்த்தால், அந்தக் காட்டில் ஒரு ஆட்டுக் கூட்டம். அக்கூட்டத்தின் மேய்ப்பன் பெயர்... என்னவென்று யூகித்திருப்பீர்கள். ஜீசஸ். காது கேட்காத, வாய் பேச முடியாத மேய்ப்பன். அந்த நாயும் அவனுமாக சேர்ந்து ஆட்டுக்கூட்டத்தை மேய்த்துக்கொண்டிருப்பார்கள். அதன் பிறகு நடக்கும் கதையை விவரிப்பது கடினம். பார்த்தாலொழிய புரியாது. படம் முடியும்போது இன்னொரு கதாபாத்திரம் உள்ளே வரும். Anthony. Fernando --> Jesus <-- Anthony, இதுதான் கதை.

Joao Pedro Rodrigues. எப்படி இந்தாள் இவ்வளவு துல்லியமாக பறவை நோக்குதலை கையாள முடிந்தது என்று தேடினால்.."I wanted to be an ornithologist when I was a kid. That was the main desire behind making the film. It’s always been present in me. My parents were both physicists, so I was raised with a scientific and rational way of looking at the world. Before studying cinema, I studied biology. Cinema interrupted this, and in a way I replaced this love of watching and observing birds in the wild and being alone, although I never felt alone because I felt surrounded by nature and living creatures.

I’m a very rational person who’s not religious at all. But I’m very attracted to the idea of how religion is told. What made religion interesting for me was art. I’ve always found it really interesting to work with myths, and not only Portuguese myths. During the Portuguese dictatorship, which ended in 1974, religion was one of the symbols, one of the pillars of the regime. This is why I thought it would be interesting to focus on an essential Catholic symbol for Portugal, Saint Anthony; a saint in a constant state of transformation. In religion itself, sacred paintings are an attempt to give faces and bodies to the saints; beings who are both transcendental and physically powerful. The persons depicted are so physically powerful that they become almost blasphemous. I find this contradiction in religion itself fascinating, the idea of translating something transcendental into images".

ஏன் இந்தப் படம் என்னை ஈர்த்தது ? நானொரு birder என்பதாலா ? நிச்சயமாக இல்லை. போஸ்டின் ஆரம்பத்திலிருக்கும் quote தான் காரணம். படம் அந்த மாதிரி. இன்னொரு காரணம், I never felt alone because I felt surrounded by nature and living creatures...இதை படித்துவிட்டு உணர்ச்சிமிகுதியால் கத்தாத குறை. அந்த மனநிலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.  "காடு ஒரு கதாபாத்திரமாகவே வருகிறது". இப்படியெல்லாம் சொல்வது படு க்ளீஷேவாகிவிட்டது. ஆனாலும் எனக்கு வேறு வார்த்தைகள் கிடைக்கவில்லை. பறவைகளை பெர்னாண்டோ நோக்குவதுபோல, காடும் அதிலிருக்கும் பறவைகளும் இன்னபிற உயிரினங்களும் அவனை அப்செர்வ் செய்யும். காடுகளின் தனித்துவமே அதுதான். நமக்குத் தெரியாமல் ஆயிரம் கண்கள் நம்மை பார்த்துக்கொண்டிருக்கும்; ஆயிரம் நாசிகள் நம்மை மோப்பம் பிடித்துக்கொண்டிருக்கும். காடுகளை கண்டபடி romanticize செய்தே பழகிவிட்டோம். காடு, எந்தளவிற்கு கருணைமிக்கதோ அந்தளவிற்கு கொடூரமானதும் கூட. இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று எதுவும் கிடையாது. எதுவும் சாத்தியம். அச்சாத்தியங்களின் ருசியை மிகமிக கொஞ்சமேனும் அறிவேன்.
Facebookers..

4 comments :

  1. Wow.amazing intro bro!will defntly watch.

    ReplyDelete
  2. sorry to ask this ....are you still alive?
    Have you watched mandalorian ?

    ReplyDelete
  3. ethachum write up eluthuya..
    Atleast some conspiracy theory yacchum eluthu..
    Bore adikuthu..

    ReplyDelete
    Replies
    1. Bore thaan adikudhu. Edhavadhu ezhudhunga Master :)

      Delete