Thursday, June 18, 2020

Your Queen Is A Reptile and We are Sent Here by History

Stargazing \ Skywatching - இவற்றின் மீது பெரிய ப்ரேமை உண்டு. நிமிர்ந்து பார்க்கும்பொழுதுகளில் (அப்போது மட்டுமல்ல, ஆல்மோஸ்ட் எப்போதுமே - மணி பார்க்கும்போதுகூட - reflexive thoughtடாக) முதலில் நினைவுக்கு வருவது இதுதான். We are observing the past.

நிற்க: Arrow of Time தெரியுமில்லையா ?. காலம் - unidirectional. ----> . (நமது) கடந்த காலமென்பது - irreversible; முடிந்தது முடிந்ததுதான். ஒன்றுமே செய்ய முடியாது. அப்பறம் Theory of relativity வந்தது. காலம் - relative term என்றானது. காலம் நம்மை கடந்து (flow) செல்வதில்லை. நாம்தாம் காலத்தை கடக்கிறோம். இதற்கு முன்னரும் இப்படித்தான் இருந்தது, இப்பொழுதும் அப்படியே இருக்கிறது, இனியும் அப்படிதான் இருக்கும். அதற்கு direction என்பதெல்லாம் ஒன்றும் கிடையாது. நாம் "observe" செய்வதாலேயே காலத்திற்கு பல அர்த்தங்களை கொடுக்கிறோம். Time is an illusion. மற்றபடி மனித ஜந்துக்கள் பற்றியெல்லாம் காலத்திற்கு ஒரு எழவு அக்கறையும் கிடையாது. அதுபாட்டுக்கு இருந்துகொண்டேயிருக்கும்.

ஆனால், ஒளி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு சென்றாக வேண்டுமே. அதற்கு நேரம்/காலம் பிடிக்குமல்லவா. வினாடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர்கள் பயணிக்க கூடியது. நிலாவிலிருந்து ஒளி பூமிக்கு வர 1.3 விநாடிகளாகும். ஆக நாம் பார்க்கும் நிலா, 1.3 விநாடிகள் முந்தைய நிலா. நிலாவில் எதாவது நடந்திருந்தால் 1.3 வினாடிகள் கழித்தே அந்நிகழ்வை நாம் அப்செர்வ் செய்கிறோம். மார்ஸ் - பூமியிலிருந்து 14 light minutes தொலைவில் உள்ளது. நாம் அப்செர்வ் செய்யும் மார்ஸ், 14 நிமிடங்கள் முந்தைய மார்ஸ். நமது அண்டைய கேலக்ஸி, Canis Major Dwarf - 25000 ஒளியாண்டுகள் தள்ளியிருக்கிறது. நாம் பூமியிலிருந்து எடுக்கும் Canis Major Dwarfன் இமேஜஸ் அனைத்தும் 25000 ஆண்டுகள் முந்தையது. இரவில் நாம் பார்க்கும் பல நட்சத்திரங்கள், பால்வீதிகள்...அனைத்தும் பல நூறு, ஆயிரம், மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளவைகள். மிகமிக பவர்ஃபுல்லான ஹபிள் டெலஸ்கோப் போன்றவைகள் கொண்டு நாம் observe, record செய்யும் அனைத்து வானியல் நிகழ்வுகளும் "past tense"இல் நடந்தவைகள். நமக்கு வந்துசேர இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. அவ்வளவே. இவ்வளவு ஏன் நாம் தினசரி பார்க்கும் எல்லாமுமே nanoseconds வித்தியாசத்தில் "முந்தையது". ஒரு ட்விஸ்ட். நாம் எப்படி பல நட்சத்திரங்களின் மில்லியன் வருடத்திற்கு முந்தைய காலத்தை நோக்குகிறோமோ, அதுபோல 13.8 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கும் எதாவது ஒரு கோளிலிருந்து ஆர்வக்கோளாறு ஜந்துக்கள் நமது பூமியின் big bangகை observe செய்து கொண்டிருந்தால், இல்லை சில ஆயிரம் ஒளியாண்டுகள் தொலைவிலிருக்கும் இன்னொரு கோளிலிருந்து பூமியின் பரப்பை யாராவது ஆராய்ந்து கொண்டிருந்தால் ? What if the observer is the observed ? இப்படி பலவற்றையும் யோசித்து யோசித்து....மனித மூளை எப்பேர்ப்பட்ட விஷயங்களை எல்லாம் ஒருநொடிப்பொழுதில் contemplate செய்கிறது, தினமும் நம்மையறியாமல் எத்தனை கோள்களின் கடந்த காலங்கள் நம் தலைக்கு மேலே மின்னிக்கொண்டிருக்கிறது போன்ற பலவாறான மிதப்பில் திரிந்து கொண்டிருந்தேன். Wait. Dung Beetle என்றொரு (எனக்குப் பிடித்த) வகை வண்டுகள் உண்டு. கொச்சைத்தமிழில் "சாணி வண்டு". தூய தமிழில், ஊர்ப்பக்கம் சொல்வது - பீயுருட்டி வண்டு. முதலில் லாவகமாக சாணியை உருட்டியாக வேண்டும். அப்பறம் சரியான வேகத்தில், சரியான திசையில் - அதுவும் தன்னைவிட 1000 மடங்கு எடைகொண்ட - உருண்டைகளை உருட்டிக்கொண்டு செல்ல வேண்டும். . இருக்கும் சின்ன கண்களை உருண்டை சுத்தமாக மறைத்துவிடும். பின் எப்படி சரியான திசையில் அவ்வண்டுகள் செல்கின்றன ? அட முதலில் எப்படி திசைகளை கண்டுபிடிக்கின்றன ? நட்சத்திரங்கள், பால்வீதியை பயன்படுத்தி (Dung beetle is a master of celestial navigation). ஒரு snapshot போல நட்சத்திரங்களை மூளையில் பதிய வைத்துக்கொண்டு - பல மில்லியன் வருடங்களாக - இந்த வேலையை செய்கின்றன. Fucking ridiculous. இது தெரிய வந்தபோது, i was personally offended.


எனக்குப் பிடித்த, என்னை பாதித்த சில கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களை எவ்வித வடிவத்திற்குள்ளும் அடைக்க முடியாது. Formless, shapeless...like water. Genreless. அப்படியான ஒரு ஆள். Sun Ra. லிட்ரலாக, தன்னை Saturnனிலிருந்து - இசையின் மூலம் மக்களை விடுவிக்க, குறிப்பாக கறுப்பின மக்களை - வந்த ஆள் என்று உறுதியாக நம்பியவர். Eccentric. ஆரம்ப காலங்களில் வழமையான ஜாஸ் கலைஞராகத்தான் இருந்தார் (ஜாஸ் இசைக்குள் electric keyboards, synthesizers போன்றவைகளை கொண்டவந்த பெருமை இவரையே சாரும்). 1950களில் ஜாஸ் இசை பெரிய மாற்றத்தை சந்தித்தது. வெள்ளையர்கள் வழக்கம்போல ஜாஸ் இசையையும் appropriate செய்ய ஆரம்பிக்க அதற்கு பதிலடியாக Free Jazz movement தொடங்கியது. இன்னொரு பக்கம், USSR - US Space explorations. இதெல்லாம் சேர்ந்து Sun Ra போன்ற ஆட்களை பெரிதும் பாதிக்க - அப்படிப் பிறந்ததுதான் cosmic jazz. 1960களில் ஒரு பக்கம் மூன் லேண்டிங் மற்றொரு பக்கம் சைக்கடெலிக் இசை..எல்லாம் சேர்ந்து cosmic jazz - Afrofuturismமாக மாறுகிறது. அதன் இன்னொரு நீட்சி ராக் இசையில் - Pink Flyod போன்ற ஆட்களால் - நடந்தது. Space Rock (thus entered David Bowie). 

Sun Ra. அவரைப்பற்றி மினி தொடரே எழுத வேண்டும். அப்பேர்ப்பட்ட மனிதர். இப்படி ஒரு பத்திக்குள் அவரைப்பற்றி சுருக்கமாக எழுதியதே எனக்கு உறுத்தலாக உள்ளது. Pink Flyodடிலிருந்து Sonic Youth வரை அவர் வசீகரித்த ஆட்கள் பலருண்டு. Interstellar Overdrive, Sun Raவின் தாக்கம் பலமாக இருக்கும். காரணம் - Syd Barrett, சன் ராவின் ரசிகர். சன் ரா பற்றி நல்ல அறிமுகத்திற்கு - Space is the place.


ஐந்து வருடங்கள் முன்பு தற்செயலாக - In the castle of my skin - கேட்டேன். இதுபோல பல African jazz இசையை கேட்டிருந்தபடியால், இசையைவிட நடனம் ரொம்பவே ஈர்ப்பை ஏற்படுத்தியது. இவ்வகை நடனத்தின் பெயர் - Pantsula.1950களில் தென் ஆப்ரிக்காவில் நிறவெறிக்கு எதிராக தோன்றிய நடன வகை. Political statement (Pantsulaவிற்கென்றே பிரத்தியேக dress code கூட உண்டு). வீடியோவைப் பார்த்தால்....இசையும் நடனமும் ஒன்றுக்கொன்று நேரெதிராக இருப்பதைக் காணலாம். இசை - கச்சிதம், நடனம் - ஒழுங்கற்ற ஒழுங்கு. பாடலின் பெயரோடு சேர்த்துப்பார்க்கும்போது அம்முரண்பாட்டின் தன்மையை புரிந்துகொள்ள முடிகிறது.

அப்படியாக Sons of Kemetல் ஆரம்பித்து, The Comet is coming அங்கிருந்து Melt Yourself Down கடைசியாக Shabaka and the Ancestors வரை கேட்டாயிற்று. அனைத்திற்குமான மையப்புள்ளி - Shabaka Hutchings. மேற்கூறிய அனைத்து bandகளின் லீடர்/அசெம்ப்ளர். African history, cosmology, afrofuturism, politics - இப்படி எல்லாவற்றையும் இசையில் வெளிப்படுத்துவதென்பது எளிதான விஷயமல்ல. எப்படி Kevin Parker ஒரு ஆர்டிஸ்ட்டாக என்னை ஈர்த்தாரோ அப்படித்தான் ஷபாகா ஹட்சிங்க்ஸும். ஷபாகா, பிறந்தது இங்க்லாந்தில் என்றாலும் ஆறு வயதில் பார்பெடஸ்க்கு இடம்பெயர நேரிடுகிறது. ஒன்பது வயதில் கிளாரினெட், பத்து வயதில் சாக்ஸஃபோன் என்று சிறுவயதிலிருந்தே - மிகமிக ஏதேச்சையாக நடந்ததாக சொல்கிறார் -   இசைக்கருவிகளைக் கற்க ஆரம்பிக்கிறார். அதுவும் சுய கற்றலாக. இசைக்கருவிகளா முக்கியம். கலிப்சோ, ரெகே போன்ற கரீபியன் இசை அவரைச் சுற்றி சுழட்டியடிக்க தொடங்கியதும் அங்கிருந்துதான். கூடவே Fela Kuti, Miles Davis, Sun Ra, Jimi Hendrix என்று பல ஆளுமைகளால் ஈர்க்கப்படுகிறார். ஷபாகாவை பெரிதும் அசைத்த இன்னொரு முக்கிய இசை வடிவம் - ஹிப்-ஹாப். Notorious Bigன் flow தன்னை பெரிதும் பாதித்ததாகவும் அந்த flowவை தனது சாக்ஸஃபோனில் கேட்கலாமென்று ஒரு இன்டர்வியுவில் கூறியுள்ளார். 2010களில் இங்க்லாந்திற்குத் திரும்பி, Sons of Kemet குழுவை 2011ல் ஆரம்பிக்கிறார். Kemet என்பது பண்டைய எகிப்தின் பெயர். "Black land" என்று அர்த்தம். நைல் நதியின் தயவால் வளம்பெற்ற கரிசல் மண்ணின் காரணமாக அந்தப்பெயர். முக்கிய விஷயம் - Sun Ra Arkestraவிலும் பங்கேற்று இசைத்திருக்கிறார் (சன் ராவின் இறப்புக்கு பின்னரும் அவரது குழுவினரால் இன்றும் நடத்தப்படுகிறது). 2011 - Sons of Kemet; 2013 - The Comet is coming; 2018 - Shabaka and the Ancestors. எட்டு வருடங்களில் மூன்று இசைக்குழுக்கள். ஒவ்வொன்றும் வெவ்வேறு வகை. ஆனால் அந்த இசைகளின் ஆன்மா ஒன்றே ஒன்றுதான். விடுதலை. கறுப்பினத்தவர்கள் மீதான வரலாற்று கட்டமைப்பிலிருந்து விடுதலை; பூமியிலிருந்தும், பூமியின் கால - நேரத்திலிருந்தும் விடுதலை; ஜாஸ் இசையின் கட்டமைப்பிலிருந்து விடுதலை.


ஏனென்று தெரியவில்லை. எனக்கு சாக்ஸஃபோன் கேட்கும்போதெல்லாம் யானைகள்தான் ஞாபகத்திற்கு வரும். கம்பீரம்; மிடுக்கு; தான் பலசாலி என்பதை காட்ட வேண்டிய அவசியமில்லாதது; எத்துனை விலங்குகள் கூட்டமாகயிருந்தாலும் யானையை மறைக்க முடியுமா ? இப்படி எனக்குத்தோன்றிய குழந்தைத்தனமான ஒப்பீடுகளைத்தாண்டி - யானைகளின் பிளிறல்களுக்கு கோபம், எரிச்சல், மகிழ்ச்சி, அழுத்தம் - போன்ற அடிப்படை உணர்வுகளைத்தாண்டி பல காரணங்கள் உண்டு; பலவகைகள் உண்டு. What Elephant Calls Mean. அதுபோலவே தேர்ந்த சாக்ஸஃபோன் கலைஞனின் இசை - அழும்; சிணுங்கும்; கதறும்; சீறும்; இரக்கம் காட்டும்; சிரிப்பு காட்டும்; சாந்தப்படுத்தும்; தன்னிலை மறக்கச் செய்யும்; காலம் கடத்தும். மிகைப்படுத்தலோ வெற்றுவிவரிப்புகளோ கிடையாது. ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு ஜாஸ் ஆல்பமை உதாரணம் சொல்ல முடியும். (ஆனால் - typical, "கேட்க சந்தோசமா இருக்கு...ரொமான்டிக்கா இருக்கு..." டைப் -  lounge/liftகுள் போட லாயக்கான - ஜாஸ்/சாக்ஸஃபோன் இசையென்றால் எனக்கு அலர்ஜி).  

Sons of Kemet: Your Queen Is A Reptile


Sons of Kemetன் கோபம் அவர்களின் முதல் ஆல்பத்தின் முதல் இசைக்கோர்ப்பிலிருந்தே தொடங்கிவிட்டது. Your Queen Is A Reptile இக்குழுவின் மூன்றாவது ஆல்பம். இந்த ஆல்பத்திலிருக்கும் "க்வீன்கள்" யாரும் பிறப்பால் வந்த க்வீன்களல்ல. ஆல்பத்தின் ஆரம்பபுள்ளியாக ஷபாகா குறிப்பிடுவது "It’s like what Sun Ra said: People who are oppressed have the power to create their own mythological structures. I started thinking of the myths in our society, the royalty that dominates our thinking so that we don’t even think of them as myths". குறிப்பாக feminine spirit தான் இதற்கு மிகப்பொருத்தமானதாக இருக்குமென்று முடிவு செய்து - சோஷியல் மீடியாவில் எந்தெந்த ஆப்ரிக்க பெண்களைப்பற்றி பேசுவதென்ற கேள்வியின் மூலமாக ஒன்பது பெண்மணிகளை தேர்வு செய்கிறார். கூடவே பத்தாவது ஆளாக - 103 வயதான தனது பாட்டியையும். ஒன்பது பேரில் Harriet Tubman, Angela Davis இருவரைப்பற்றி ஓரளவு தெரியும். மற்ற யாரைப்பற்றியும் ஒன்றுமே தெரியாததால் - அவர்களைப்பற்றி தெரிந்துகொள்ள பல விஷயங்களைப் படித்தபின் - இன்னும் அதிகமாக ஆல்பத்தை ரசிக்க முடிந்தது. Nanny of the maroons பற்றி படிக்கும்போதே...Nannyயின் நிஜப்பெயர் கூட யாருக்கும் தெரியாது - மீட்பர் என்போமே - அதுமாதிரியான கதை. Harriet Tubman கதை தெரியும்தானே ? அப்படியானால் ஏன் My Queen is Harriet Tubman இசைக்கோர்ப்பு franticக்காக இருக்கிறது என்பது புரிந்துவிடும். My Queen is Doreen Lawrenceயில் தெறிக்கும் கோபம் எங்கிருந்து வந்தது ? அதன் காரணமென்ன ? Stephen Lawrence - 1993ல் லண்டனில் இனவெறியினால் படுகொலை செய்யப்பட்டவர். அவரது தாயார் - Doreen Lawrence. மகனை இனவெறியால் கொல்லப்பட்டபோதிலும் துவண்டு விழுந்துவிடாமல் தொடர்ந்து போராடிக்கொண்டிருப்பவர். My Queen Is Yaa Asantewaa, "முன்னொரு காலத்துல..." என்று ஆரம்பிக்கும் folklore கதைக்கு ஒப்பானது. ஒரு தேர்ந்த கதைசொல்லி போல் சாக்ஸஃபோன் எசப்பாட்டு பாடுவதைக் கேட்கலாம். இந்த எசப்பாட்டு அம்சம் - call and response - ப்ளூஸ் முதற்கொண்டு பல இசைவடிவில் உண்டு. கரீபியனில் வளர்ந்தவர். ரெகே இல்லாமலா...My Queen Is Mamie Phipps Clark, ரெகெ வடிவில் கிதாருக்கு பதில் சாக்ஸஃபோன். Mamie Phipps Clark ஒரு சைக்காலஜிஸ்ட் என்பதால் - இசையும் சைக்கடெலிக்காக இருக்கிறதோ ?. இந்த ஆல்பத்தை பற்றிய ஷபாகாவின் ஒரு இன்டர்வியூவில் படித்தது "Charlie Parker (jazz saxophonist) - இசையில் ஒரு பாக்ஸரின் நேர்த்தியிருக்கும். அப்பர் கட்ஸ், லோயர் கட்ஸ் போல அவ்வளவு கச்சிதம். அதை இந்த ஆல்பத்தில் கொண்டுவர நினைத்தேன்". My Queen Is Albertina Sisulu கேட்கும்போது இதனர்த்தம் புரியும். 


ஆல்பத்தின் liner notesல் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது "First the system must burn, its values set alight, its hierarchies toppled, yet within the heat of the flames we must never forget what we came here to do - form new myths, crown new queens, see new horizons....I concern myself with 'queens' not just in response to the queen of England but to expand the limited scope patriarchy allows us in seeing the worth of women throughout history. The lives of every woman I have named as a track title resounds with me. My hope is that every reader of the album title takes a moment to consider who they see as their queen then uses this as a springboard to problematising preexisting societal myths surrounding power". Get it ?. ஆல்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு "அரசியும்" எவ்வாறு இருந்திருப்பார்கள், அவர்களது "ஆட்சி" எப்படியானதாக இருந்திருக்கும், எப்படி நம்மை வழிநடத்தியிருப்பார்கள் போன்ற - alt history என்றுகூட வைத்துக்கொள்ளலாம் - கேள்விகளுக்கான பதில் தான் முழு ஆல்பமும். திருவிழா போல முழுக்க முழுக்க கொண்டாட்டம் மட்டுமே. Sons of Kemet - quartet band. நால்வரில் இருவர் ட்ரம்மர்கள். ஒரு ஜாஸ் குழுவில் இரண்டு ட்ரம்மர்கள் இருப்பதெல்லாம் அரிது. தவிர, Tuba என்றொரு இசைக்கருவி இருக்கிறதாமே...அதை வாசிக்கும் Theon Crossக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

The Comet is Coming:



மூவர் குழு. Sons of Kemetடிலிருந்து நேரெதிராக Afrofuturism வகை இசை. கூடவே ஏகப்பட்ட ஸின்தசைசர்ஸ், ஹிப்-ஹாப்தனமான பீட்ஸ். எந்தவொரு ஆர்ட்டிஸ்டாக இருந்தாலும் transition/metamorphosis phaseசென்று ஒன்று இருந்தே தீரும். அந்தசமயத்தில் அக்கலைஞர்களின் படைப்பை ரசிக்க முடிவது அலாதியானது. நம்மையும் அவர்களுடன் கூட்டிச்செல்வார்கள். இம்மூவர் குழுவின் முதல் ஆல்பம் - Channel the Spirits, தொடர்ச்சியாக கேட்டுகொண்டே இருந்தேன். Heavily hip-hop influenced என்பதால் இருக்கும். Super Mario - asteroidகளில் குதித்து குதித்து விளையாண்டால் எப்படியிருக்கும் ? அப்படியான இசைதான் Journey Through the Asteroid Belt. ஆஃபிஸில் Space Carnival கேட்டுக்கொண்டு என்னையறியாமல் ஓவராக bopping செய்து...அவமானப்படத் தெரிந்தேன்.



மேற்சொன்ன அந்த transition phase நடந்தது,Trust in the Lifeforce of the Deep Mystery மற்றும் The Afterlife ஆல்பம்களில். Space Jazzன் முக்கிய கூறுகளில் ஒன்று - கட்டற்ற சுதந்திரம். Meaning, ஸ்பேஸில் இசை எப்படி இருக்கும் என்று யாரால் சொல்ல முடியும் ? அதற்கு வரைமுறைகளே கிடையாதல்லவா. அதன் முழுஅர்த்தத்தை இந்த இரண்டு ஆல்பம்களில் உணரலாம். ஆனாலும் ஆப்ரிக்க வரலாற்றின் கூறுகள் இல்லாமலில்லை. அப்படி சொல்ல முடியாது/கூடாது. மனித வரலாற்றின் கூறுகள்...அதுவும் தவறு, present continuous tenseல் ஒரு social commentary என்பதே சரி. அந்தவகையில் இந்த ஆல்பம்களை space jazz என்பதைவிட Afrofuturism என்பதே சரி. Blood of the past. Kate Tempest பற்றி முன்னொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். Spoken word poet. இந்த Spoken word poetry அல்லது slam poetryயின் காரணகர்த்தாக்களும் அமெரிக்க-ஆப்ரிக்கர்களே. அதற்கும் ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு. Kanye West கூட Def Poetry Jamகளில் - தனது ஆரம்ப காலங்களில் - அடிக்கடி கலந்துகொண்ட ஒரு ஆள் (Kanyeவின் rapping style/flowவிற்கான விதை இங்கிருந்துதான் தொடங்கியது). Blood of the past, ferocious yet intoxicatingகான Jazz rock. இந்தக் கோபத்தை சற்று மட்டுபடுத்தி, மினிமலிஸ்ட்டாக space exploration ஆல்பம் தான் இதன் தொடர்ச்சியான The Afterlife. ஜாஸில் மரபுகளை மீறுவதைப்பற்றி...Timewave Zero.

Shabaka and the Ancestors: We are Sent Here by History


இதை எப்படி விளக்குவது ? ஒருவேளை Sons of Kemetலிருக்கும் பெண்கள் அனைவரும் வேற்றுலகம் சென்று அங்கிருப்பவர்களிடம் தங்கள் கதைகளைச் சொன்னால் ? அத்தகைய soundscape தான் இந்த ஆல்பம். மற்ற ஆல்பம்களைப் பற்றி கொஞ்சமாவது சொல்லத் தெரிந்த எனக்கு, இந்த ஆல்பம் பற்றி ஒன்றுமே சொல்லத் தெரியவில்லை. "பூமி அதிர ஆப்ரிக்க யானை ஓடி வருகிறது" என்று படிப்பதிற்கும்\வீடியோவில் பார்ப்பதிற்க்கும் நேரடியாக அந்த அதிர்வை உணர்வதிற்கும் எவ்வளவு வித்தியாசம் உண்டோ அதுபோல இந்த ஆல்பத்தை மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்டாலன்றி நான் சொல்ல நினைக்கும் ecstasy புரியாது. மற்ற இரண்டு குழுக்கள் போலன்றி - இந்த முறை ஷபாகா கைகோர்த்திருப்பது தென்னாப்ரிக்க ஜாஸ் பட்டாளத்துடன். கூடவே ஒரு அற்புதமான pianistம். Zulu chantsகளில் ஆரம்பித்து bassist, pianist வரை மிகத்தேர்ந்த கலைஞர்களின் culmination of ideas இப்படியல்லவா இருக்க வேண்டும். Run, the darkness will pass - ஒரு Bumblebee பறப்பதை வேடிக்கை பாரத்தைபோல அவ்வளவு பரவசத்தை கொடுத்தது. We Will Work, On Redefining Manhood -  இத்தனைக்கும் முதல் 1:30 நிமிடங்களுக்கு Zulu chants மட்டுமே. அதன்பிறகு bass ஆரம்பிக்க கூடவே ஷபாகாவும் ஒன்றுசேர - இதில் Manhood எங்கிருந்து வருகிறது ?. ஆல்பத்தின் ஒவ்வொரு இசைக்கோர்ப்பின் பெயரையும் கவனித்தால் ஒரு flow தென்படும். They Who Must Die --> You’ve Been Called --> Run, The Darkness Will Pass- -> The Coming of the Strange Ones -> Beasts Too Spoke of Suffering --> Finally, The Man Cried --> Teach Me How to Be Vulnerable. How to be vulnerableக்கும் They who must dieக்கும் இடைப்பட்ட மனநிலைதான் இந்த ஆல்பம். இதன் liner notesல் "continuous sonic poem"மாக இதை அணுகினோம் என்று குழுவினரால் குறிப்பிடப்பட்டுள்ளது.

African Savanna. அதிகாலைக்கும் கொஞ்சம் முந்தி. கிட்டத்தட்ட 6300 கிலோ எடைகொண்ட, அழுக்கேறிய, கூர்மையான தந்தங்களைக் கொண்ட ( ஆப்ரிக்க யானைகளில் ஆண் - பெண் இரண்டிற்கும் தந்தங்கள் இருக்கும். ஆசிய யானைகளில், பாதிக்கும் மேலான பெண் யானைகளுக்கும் ஒருசில ஆண் யானைகளுக்கும் மட்டும் தந்தங்கள் உண்டு) மூத்த பெண் யானை தன் கூட்டத்தை வழிநடத்திக்கொண்டு செல்கிறது. எருதுகொத்திகளும், கொக்குகளும் யானைகளின் மீதேறி ஓசிச் சவாரி செய்துகொண்டிருக்க, யானைகள் தோண்டி வைத்த நீர் குழிகளில் பிற விலங்குகள் குடித்துக்கொண்டிருக்க...எல்லாவற்றிக்கும் கீழே, சாணி வண்டுகள் - பழ விதைகள் கொண்ட யானை லத்தியை உருட்டிக்கொண்டிருக்க (இரவிலிருந்தே இதே வேலையாக இருந்திருக்கக்கூடும்)... 150 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவிலிருந்து, 8 நிமிடங்கள் 20 நொடிகள் - asteroids, cosmic dust, satellite junks, ஏழு கடல், ஏழு மலை - எல்லாவற்றையும் கடந்து stream of photons அப்புல்வெளிகளை அடைகிறது. அதோடு அதன் பயணம் முடியுமா என்றால்...ம்ஹும். எல்லையில்லாத வெளியில் அது போகும் போகும் போகும் போய்கொண்டேயிருக்கும். And that's how the Universe should wake - with an elephant's trumpet and dance of the dung beetles. 
  

Facebookers..

7 comments :

  1. வடை எனக்கு தான்

    ReplyDelete
  2. சிறப்பு. பல தடவை வாசிக்கணும், 10% வது மண்டையில் பதியணும்னா வேற விழியில்லை எனக்கு.

    ReplyDelete
    Replies
    1. ம்யூசிக்க எப்பிடி வாசிக்க.. கேட்க தான முடியும் ?

      Delete
  3. MSV,இளையராஜாவும் தான் ஜாம்பாவனுங்கன்னு நினைச்சுகிட்டு இருந்தேன்...
    தேளு சிபாரிசுல இன்னொரு உலகத்த இப்பத்தான் கேக்குறேன்...
    செம...

    ReplyDelete
  4. இசையை இதமாக இதயத்தில் கலந்தோடுவதை அனுபவிக்க வகை செய்கிறது தங்கள் எழுத்தாற்றல்..

    ReplyDelete