எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்படுவதே தமிழர் மரபு. ஒரு வீடியோவையே இதற்காக வேலைமெனக்கெட்டு அப்லோட் செய்துள்ளேன். இந்த காவிரி பிரச்சனையில்(கிட்டத்தட்ட எல்லா பிரச்சனைகளுக்கும்) பெருவாரியாக எழுப்பப்படும் கோஷங்களில் ஒன்று -  தமிழர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். தமிழ்நாடு என்றொரு மாநிலமே இல்லை; அட...இதை சௌராஷ்டிரநாடு என்று வைத்துக்கொள்வோம். இப்பொழுது இருக்கும் பிரச்சனைகள் அப்பொழுதும் இல்லாமலா போய்விடும். இலங்கை நண்பர் ஒருவர்கூட - எங்கு போனாலும் தமிழர்கள் அடிவாங்கிக்கொண்டே இருக்க வேண்டியதுதானா - என்று ஸ்டேடஸ் போட்டிருந்தார். நண்பரே....இலங்கை தமிழர்கள் என்றில்லாமல், இலங்கை தெலுங்கர்களாக இருந்தாலும் இதேதான் நடந்திருக்கும். அடுத்தவனை நாசமாக்கப்பார்ப்பதெல்லாம் human traits. உலகம் முழுக்க உள்ளதுதானே. எப்படி, மைனா - invasive speciesஸோ, அதுபோல பல விஷயங்கள் defaultடாக நமது ஜீனில் உள்ளது. சரி, அவ்வளவு உத்தமர்களாக இருந்தால் - ஏன் ஒரு தரப்பு "தமிழன்" மட்டும் பீ அள்ளிக்கொண்டிருக்க வேண்டும் ? தமிழர்/திராவிடம் பேசும் எல்லாரிடமும் இந்தக்கேள்வியை கேட்டிருக்கிறேன். இதுவரை ஒருவர்கூட உருப்படியான மறுமொழி சொன்னதில்லை.

காவேரி - பூகோளரீதியாக நாம் இருக்கும் இடம், கர்னாடகா ethicalலாக நடந்துகொள்ள வேண்டும் என்பதையெல்லாம் விடுங்கள். நாம் நமது natural resourcesசை என்ன செய்து கொண்டிருக்கிறோம் ? இந்தப் பதிவின் நோக்கம் இதுமட்டுமே. நிலத்தடி நீர்வளம் - மலைகள் - ஆறுகள்/ஆற்றுப்படுக்கை, ஆற்று மண்.....ஒன்றைக்கூட விட்டுவைக்கவில்லை. அவ்வளவு தூரம் கெடுத்துவைத்திருக்கிறோம். இந்தரீதியில் போய்கொண்டிருந்தால் இன்னும் இருபது - முப்பதாண்டுகளில் பல்லி மூத்திரம் அளவிற்குதான் காவேரி ஓடிக்கொண்டிருக்கும். 

ஜல்லிக்கட்டு - இயற்கையின் பெருமையை போற்றுகிறது; தமிழர்களுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை எடுத்துக்காட்டுகிறது என்றெல்லாம் வாய்சவடால் விடுகிறோமே....நாளுக்குநாள் இயற்கை வளங்கள் எல்லாம் குறைந்துகொண்டே போகிறதே. அதுபற்றி கொஞ்சமாவது உறுத்தல் இருக்கிறதா ? நிஜமாகவே இயற்கையின்மீது பிடிப்பிருந்தால் - இதையல்லவா முதலில் காப்பாற்ற வேண்டும். "Natural Resources Management"ல் தமிழர்கள் அறிவு. சூன்யம். பூஜ்யம். சைபர். எங்கு வேண்டுமென்றாலும் வந்து சொல்வேன். உடனே, "2000 ஆண்டுகளுக்கு முன்பே...." என்று ஆரம்பிக்க வேண்டாம் ஐயா. 2000 ஆண்டுளுக்கு முன்பிருந்த மக்கள்தொகை வேறு; வாழ்க்கைமுறை வேறு; இத்தனை தொழிற்சாலைகள் இல்லை; இத்தனை கட்டிடங்கள் இல்லை; இத்தனை குழப்பங்கள் இல்லை; வாழ்க்கை இத்தனை சிக்கல் நிறைந்ததாக இல்லை; அப்போதிருந்த மலைகள் இல்லை; ஆறுகள் இல்லை. எல்லா மாறிவிட்டது. நிகழ்காலத்திற்கு வாருங்கள் ஐயா. தொட்டதற்கெல்லாம் "2000 ஆண்டுகுளுக்கு முன்பே தமிழன்..". Natural Resources Management - எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இதில் மட்டும் முன்னேற்றமேயில்லை. நண்பர் ஒருவர் Facebookல் போட்டிருந்தார் "சிவகாசி திருப்பூர் போன்ற நகரங்களில் கூட முன்பிருந்தது போன்ற தண்ணீர் பஞ்சம் இல்லையென்றால் திமுகாவின்"  என்றாரம்பித்து ஒரு போஸ்ட் போட்டிருந்தார். ஒழுங்கான திட்டமிடல் இல்லாமல் இந்தப் பகுதியில் தண்ணீர் எடுத்ததன் விளவை கீழே - over exploited mapல் பார்த்துக்கொள்ளுங்கள். Of course, தண்ணீர் ஒவ்வொருவருக்குமான உரிமை. அதை கொடுத்தேயாக வேண்டும். ஆனால், அந்தப் பக்கம் க்வாரி அனுமதி வழங்குவதில் ஆரம்பித்து - நீர்நிலைகளை முறையாக தூர்வாராமலிருந்தது - முறையற்ற போர்வேல்கள் - ஆற்றுபடுகைகளில் ஆக்கிரமிப்புகள் - குளம் குட்டை ஆக்கிரமிப்புகள் - மணல் மாஃபியா - திமுக/அதிமுக அரசுகள் பற்றி லிஸ்ட் போட்டுக்கொண்டே போகலாம்...விளைவு ? கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ரிபோர்ட்கள் அனைத்தையும் படியுங்கள். கையாலாகாத, ஊழல் நிறைந்த அரசும் + அதன் கட்டமைப்பும் பெருமளவில் இதற்கு காரணம் என்ற உண்மை, கொஞ்சமாவது உறைக்காவிட்டால்....கஷ்டம். 

போன வாரம் தமிழ்நாட்டில் - காவேரி விவசாயிகளுக்காக முழுகடையடைப்பு நடத்தினார்களே....லாரி உரிமையாளர்கள் எல்லாம் ஆக்ரோஷமாக பேசுவதை கேட்டேன் (அதே கோஷம் தான்....தமில்டா...தமிலர்கள்டா...விவசாயிகள்டா). ஐயா... தெரியாமல்தான் கேட்கிறேன். விவசாயிகள் மீது அவ்வளவு அக்கறையிருந்தால் திருட்டுமணலை எங்கள் லாரியில் அள்ளிக்கொண்டுபோக மாட்டோம் என்று முடிவுக்கு வருவதற்கென்ன ? ரயிலை மறிக்கும் ஆசாமிகள் எல்லாம் - காவேரி பேஸினில் நடைபெறும் அராஜகங்களை கண்டித்து - ஒருநாள் முழுக்க தமிழ்நாடு முழுக்க கடையடைப்பு/போராட்டம் நடத்தினால் என்ன ? 

We have fucked up the whole system. Period. அதை சரி செய்யாமல், இந்தாண்டு தண்ணீர் கிடைக்கலாம்... அடுத்தாண்டு கிடைக்கலாம்..அதற்கடுத்து ?  மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் பலரும் எதிர்பார்ப்பது ஒரே விஷயம் தான். நமக்கு இன/மொழி பற்றாளர்களைவிட visionaries தான் தேவை. துரதிர்ஷ்டவசமாக நம்மிடம் அப்படி யாருமே இல்லை. 50 வருடங்கள் கழித்து தமிழ்நாட்டின் இயற்கை வளம் எப்படி இருக்கும் ? இந்த கேள்விக்கு இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுள் எத்தனைபேர் - முதலில் இந்த விஷயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்க வேண்டுமே..அதுவே கஷ்டம் - தெளிவான பதில் வைத்திருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள் ? அரசியல்வாதிகளை விடுங்கள். நாம் என்ன தெரிந்து வைத்திருக்கிறோம் ? நமது தற்போதைய நிலைமை என்ன ? ஒருவேளை கடுமையான வறட்சி ஏற்படுகிறது...என்ன செய்வோம் ?. 1 லிட்டர் - 20 ரூபாய். 50 ரூபாயாகுகிறது - என்னால் வாங்க முடியும். 100 ரூபாய் - சமாளிக்க முடியும். ஆனால் அடிமட்டத்தில் இருக்குமாளுக்கு ? அடுத்த சந்ததியினருக்கு (இதற்குத்தானே ஐயா காதல் - கல்யாணம் - குழந்தை குட்டி - lifeல செட்டிலாகனும் - எல்லாம். அதற்கே ஆபத்தென்றால் ) என்ன பதில் வைத்திருக்கிறோம் ?  

-----------------------------------------------------------------

1) சென்னைவாசிகளே, மற்ற இடங்களை விடுங்கள். உங்கள் ஏரியாவில் டிசம்பர் 2015ல் வெள்ளம் வந்திருந்தால் - பருவமழை ஆரம்பிக்க இன்னும் மூன்று மாதங்களே உள்ளன - அதை தடுக்க தற்போது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... என்ன ஏது....எதாவது விசாரித்தீர்களா ?

2) Madhav Gadgil / Kasturirangan reports பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? (நாம நெனச்சு என்னாக போகுதுன்றீங்களா...)

3) உங்கள் வீட்டின் நிலத்தடிநீர் மட்டம் எத்தனை அடிகள் ? Over head tankல் boreலிருந்து தண்ணீர் நிரப்புவதில் முன்பிருந்ததைவிட - நேரத்தில் - வித்தியாசம் இருக்கிறதா ?

4) Cash cropsகள் என்னென்ன ? ஏன் அந்தப் பெயர் ?

5) Minimum Supportive Price(MSP) - அப்படியென்றால் ?

6) டேம்கள் கட்டுவதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அதைவிட முக்கியமாக, "நதிகள் இணைப்பு" மாதிரியான விஷயங்கள் பற்றி...

-------------------------------------------

பூமியின் மொத்த நீரில், 97.4% கடல் நீர். மீதி 2.6% மட்டுமே நன்னீர். Freshwater. அந்த 2.6%டிலும் ஏறக்குறைய முக்கால்வாசி போலார் பகுதியில் இருக்கும் glaciers. எல்லாம் போக, ஆறுகளில் குளம் குட்டைகளில் இருக்கும் நீர் எவ்வளவு இருக்கும் ? இந்தப் படத்தில் இருக்கும் சின்ன bubble அளவிற்குத்தான். பெரிய bubble தான் அந்த 2.6%. 



இந்த சின்ன bubble (freshwater)...இரண்டு வகைப்படும். Groundwater - Surface water. Ground water/Freshwater – கடல் – மழை – காடுகள் – மரங்கள் – உயிரினங்கள் – விவசாயம் – காவிரி – தமிழர்....எல்லாவற்றிக்கும் தொடர்ப்பிருக்கிறது. Complex cycle. அதனுடையே அருமை தெரியாமல் ரொம்பவும் அலட்சியமாக நடந்துகொண்டிருக்கிறோம். சில அடிப்படைகளை புரிந்துகொண்டாலன்றி அலட்சியத்தின் முழு வீரியமும் புரியாது. அதனால்...

Hydrology Cycle:

ஏன் எப்பொழுதும் வானத்தில் மேகங்கள் இருக்கின்றன ? ஏன் எப்பொழுதும் கடலில் நீரின் அளவு ஒரு நிலையிலேயே இருக்கிறது ? எளிமையான காரணங்கள். இதுவொரு endless cycle. கடல் நீர் ஆவியாகி மேலே செல்கின்றன(Evaporation) -> ஆவி, கொஞ்சகொஞ்சமாக உறைந்து மேகமாகிறது(Condensation) --> வெப்ப சலனங்கள் காரணமாக மேகம் தேக்கி வைத்திருக்கும் நீர் உடைந்து மழையாகப் பொழிகிறது(Precipitation). 

எப்படி கடல் நீர் ஆவியாகிறதோ, அதுபோல மரங்கள்/செடிகொடிகளும் தாங்கள் உறிஞ்சிய நீரை ஆவியாக்குகிறது (Evapotranpiration). நமது வீட்டு வாசலில் இருக்கும் – நன்றாக வளர்ந்த/வயதான மரம், நாள் ஒன்றிக்கு எவ்வளவு நீரை ஆவியாக்கிறது என்று நினைக்கிறீர்கள் ? 500 – 800 லிட்டர்ஸ். சதவீத அடிப்படையில் – கடலிலிருந்து ஆவியாகும் நீரின் அளவு மரங்கள்/செடிகள் வெளியிடும் நீரின் அளவைவிட அதிகம். Obviously. 70% பூமியில் கடல் நீர்தானே. இவ்வளவு கடல் நீர் இருக்கிறதே....பிறகெதற்கு மழைக்கு மரங்களை மட்டும் பெரிதும் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது ? காடுகளைப்பற்றி இவ்வளவு தூரம் பேச வேண்டியிருக்கிறது ? இங்குதான் சிக்கல். கடலிலிருந்து ஆவியாகும் நீர் பெரும்பாலும் கடற்கரையிலிருந்து 250 கிலோமீட்டருக்குள் மழையாக பெய்துவிடுகிறது (காற்றழுத்த தாழ்வு நிலை/புயல் மாதிரி எதாவது மேகங்களை தள்ளிக்கொண்டு சென்றால் தான் உண்டு). மீதி பகுதிகளில் ? மரங்களின் evapotranspiration பல வெப்ப/காற்று சலனங்களை ஏற்படுத்துகிறது. மரங்கள் எவ்வாறு மேகங்கள் உருவாக காரணமாக இருக்கின்றன என்பதைப்பற்றியெல்லாம் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. பல முடிவுகள் படிக்கவே அட்டகாசமாக இருக்கின்றன

ஸ்கூல் பசங்களுக்கு சொல்லித்தரப்படும் (சொல்லி மட்டுமே தரப்படும்) இந்தத் தகவல்கள் எல்லாம் எதற்கு ? நிற்க: Western Ghats. 1,60,000 சதுர கிலோமீட்டர். எத்தனை மரங்கள்....நாளொன்றுக்கு எத்தனை லிட்டர் தண்ணீர் அந்த மரங்களிலிருந்து வெளியேறும் என்று கற்பனை செய்து பாருங்கள். இதைத்தாண்டி, எடுத்தஎடுப்பிலேயே UNESCO மேற்குத்தொடர்ச்சி மலை பற்றி என்ன சொல்கிறது... 

Older than the Himalaya mountains, the mountain chain of the Western Ghats represents geomorphic features of immense importance with unique biophysical and ecological processes. The site’s high montane forest ecosystems influence the Indian monsoon weather pattern. Moderating the tropical climate of the region, the site presents one of the best examples of the monsoon system on the planet

கவனித்தீர்களா... best examples of the monsoon system on the planet. இதுவும் போதாதென்று மேற்குத்தொடர்ச்சி மலை நமக்குத்தரும் கொடைகளில் முக்கியமான மூன்று விஷயங்கள்: கோதாவரி, கிருஷ்ணா, காவேரி. இம்மூன்று நதிகளையும் தாண்டி, துங்கபத்ரா – தாமிரபரணி போன்ற ஆறுகளையும் அதன் கிளையாறுகளையும் கணக்கெடுத்தால் ஒரு பக்கத்திற்கு லிஸ்ட் போடலாம்.

பல்லுயிர் ஓம்புதல் – இயற்கை வழிபாடு – இயற்கையோடு இயைந்த வாழ்வு கொண்ட தமிழர்/இந்தியர் மரபு என்றெல்லாம் காலங்காலமாக ஜல்லியடித்துக்கொண்டுவரும் நாம் என்ன செய்திருக்கிறோம் ? // Change analysis has revealed the net loss of 35.3% of forest area in the Western Ghats from 1920’s to 2013 //. எண்பதே வருடத்தில் 35.3 % அழிந்தேவிட்டது. இத்தனைக்கும் இது அரசு துறை சார்ந்த அமைப்பு வெளியிட்ட ஸ்டடி. இழப்பு மேலும் அதிகம் என்று வேறு சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. 


Report: Assessment and monitoring of long-term forest cover changes (1920–2013) in Western Ghats biodiversity hotspot


இந்த அழிவிற்கும் மழைக்கும் என்ன சம்பந்தம் ? ஏகத்துக்கும் இருக்கிறது. 1920ல் ஒரு லட்சம் ஹெக்டரில் மரங்கள் இருந்தன என்று வைத்துக்கொள்வோம். அத்தனை மரங்கள் சேர்ந்து செய்யும் evapotranspiration + வெப்பநிலை/காற்று சலனங்களினால் கோவாவில் ஆரம்பித்து தமிழ்நாடு வரை மழை அளவு ஒருமாதிரி இருந்திருக்கும் அல்லவா. இப்பொழுது, ஒரு லட்சம் ஹெக்டர் 64,000மாக குறைந்திருக்கிறது. இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் ? 

சீரான மழை இருக்காது, ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒன்றிரண்டு நாட்களில் பெய்து முடித்துவிடும்; இல்லை பொய்த்துப்போக நேரிடும். நான் சொல்லவில்லை. IISc இந்த விரிவான ஸ்டடி சொல்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் மேற்குத்தொடர்ச்சி மலை சார்ந்த மழை அளவு குறைவாகவே இருக்குமென்று. கர்னாடகா தான் இதில் மிகவும் பாதிப்படையக்கூடுமென்றும் இந்த ஸ்டடி கூறுகிறது.இந்த அறிக்கையின் Appendixல் மிகத்தெளிவாக – அடுத்த பத்தாண்டுகளுக்கான மழை அளவு கணிப்பு பட்டியலிடப்பட்டிருக்கிறது. ஒருசில மாதங்கள் தவிர, பல மாதங்களில் மழை அளவு சீரற்றதாகவே உள்ளது.



Source: Analysis of land surface temperature and rainfall with landscape dynamics in Western Ghats, India 

குவாரிகளில் ஆரம்பித்து விவசாயம் வரை deforestrationனுக்கான பல காரணிகளுண்டு. உதாரணத்திற்கு விவசாயம். மலைப்பகுதியை ஆக்ரமித்து (மண்வளம் காரணமாக) விவசாயம் செய்வது காலங்காலமாக நடந்து வருகிறது. விளைவு ? 2003 – 2012. பத்தே வருடம். எவ்வாறு விவசாயம் என்ற பெயரில் காடுகள் அழிக்கப்படுகின்றன என்று பாருங்கள். இருப்பதிலேயே Southern Western Ghatsல்(கர்னாடகா - தமிழ்நாடு - கேரளா) தான் பாதிப்பதிகம்.



Water, the elixir of life:

மழை பெய்தது/பெய்கிறது/பெய்யப் போகிறது. அடுத்து ? இந்த கட்டம்தான் மிகமிக முக்கியமானது. எவ்வளவு கவனமாக நாம் செயல்பட வேண்டும், அசட்டையாக நாம் செய்யும் காரியங்களினால் எவ்வாறான விளைவுகள் ஏற்படும்....ஏகப்பட்ட விஷயங்களை புரிந்துக்கொள்ள Groundwater/Surface water பற்றிய புரிதல் மிகமிக தேவையானது. 

Surface water: குளம், குட்டை, ஆறுகள், ஏரிகள் – இவைகள் அனைத்துமே surface water. நிலத்தின் மேற்பரப்பில் இருக்கும் நீர். மழை பெய்தவுடன், மேடான பகுதியிலிருந்து இறக்கமான பகுதிக்கு நீர் ஓடும். நடுவில் பள்ளம் (குளம், குட்டை, ஏரி) இருந்தால் அங்கே தேங்கி நின்றுவிடும். Western ghatsசில் பெய்யும் மழையால், கிட்டத்தட்ட 2800m உயரம் என்பதால் மழைநீர் ஒன்று சேர்ந்து(காவேரி) பள்ளத்தை நோக்கி ஓடுகிறது. பள்ளம் ? கடல் தான். பல மில்லியன் வருடங்களாக இந்த process நடந்துகொண்டிருக்கிறது. இந்த natural flow தடைப்பட்டால் – ஆற்றுப் பாதையில் ஆக்கிரமிப்பு மாதிரி – என்னாகும். Simple. சென்னை டிசம்பர் 2015.

Groundwater: மழை அடித்துத் துவைத்திருக்கும். ஆனால் அடுத்தநாள், சுத்தமாக எல்லா நீரும் காணாமல் போயிருக்கும். அட பகல் நேரமாக இருந்தால்கூட ஆவியாகியிருக்கும் என்று புரிந்துகொள்ளலாம். இரவு நேரத்தில் எங்கே போயிருக்கும் ? Of course, எல்லாருக்கும் தெரிந்ததுதான். பூமி உறிஞ்சிக்கொள்ளும். பூமி என்ற வஸ்து என்று தோன்றியதோ, எப்பொழுதிருந்து மழை பெய்ய ஆரம்பித்ததோ எப்பொழுது நதிகள் ஆறுகள் ஓட ஆரம்பித்ததோ அன்றிலிருந்து பூமி நீரை உறிஞ்சிக்கொண்டே இருக்கிறது. அந்த நீர் எங்கே போகும் ? Aquifers. எளிமையாக சொல்வதென்றால், பூமிக்கு அடியிலிருக்கும் பாறை இடுக்குகள். நமது பூமிக்கடியில் எல்லா இடங்களிலும் நிலத்தடி நீருண்டு. அது எந்த மட்டத்தில், எந்த மாதிரியான பாறைகளுக்கு நடுவில் என்பதுதான் கேள்வி. 


க்ரைண்டர் துடைக்கும் ஸ்பான்ஜ் மாதிரியான அமைப்பை கற்பனை செய்துகொள்வோம். ஸ்பான்ஜின் மெட்டீரியல், கடிமானதாக/தண்ணீர் உறிஞ்சும் தன்மை குறைவாக இருந்தால்....நிச்சயமாக ஸ்பான்ஜ் தண்ணீரை பிடித்துவைக்கும் அளவு குறையும் தானே. அதுபோலவே...பாறை வகைகளைப் பொறுத்துதான் நிலத்தடி நீரின் ஓட்டம் இருக்கும். Limestone மாதிரியான வகை என்றால் நீரை அதிகளவு “பிடித்து” வைக்கும். இந்த பாறைகளிலிருக்கும் இடுக்குகள்/ஓட்டைகளின் அளவைத்தான் porosity என்பார்கள்.


இந்த நிலத்தடி நீர், gravityயின் காரணமாக கடல் மட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கும். பாறைகளமைப்பு, மண் தன்மை போன்ற காரணிகளால் இந்த “நகர்தல்” சில சமயம் மிகமிகமிக மெதுவாக ஆண்டுக்கணக்காக நடைபெறும். சில சமயம் மிக வேகமாக ஒரேநாளில் கூட நகர்வதுண்டு.



Riparian zone - இது மிக முக்கியமானது. ஆறு/நதி ஓரங்களில் இருக்கும் நில/காடு பரப்புகளுக்கு riparian zone/forests என்று பெயர். மிகவும் வளமையான பகுதிகள் இவை. ஏகப்பட்ட உயிரினங்கள் இந்த riparian zoneகளை நம்பியுள்ளன.

Surface waterக்கும் Groundwaterக்கும் இருக்கும் பல முக்கிய வேறுபாடுகளில் ஒன்று – தூய்மைத்தன்மை. நிலத்தடி நீர் பூமிக்கடியில் இருப்பதால், surface waterல் இருக்கும் வைரஸ், பாக்டீரியா போன்றவைகளோ, கழிவுகளோ இருக்காது. அடியில் போகப்போக Filterராகிவிடும். மாறாக, contamination இருக்கும். குறிப்பாக வேதிப்பொருட்கள். நிலத்தடிநீர் மெதுவாக நகர்வதால் – ரசாயன வேதி பொருட்கள் எல்லாம் உள்ளே இறங்கி இறங்கி தங்கி நச்சுத்தன்மை கூடும். Surface waterல் இருக்கும் கழிவுகளைக்கூட கொஞ்சம் சிரமப்பட்டு சரிசெய்து விடலாம். ஆனால் அந்த surface waterரை ஆண்டுக்கணக்கில் உறிஞ்சிகொண்டே இருக்கும் நிலத்தடி நீரில் படிந்த வேதிபபொருட்களை நீக்குவது முடியாத காரியம். இதனால்தான் பலரும் தோல் தொழிற்சாலை கழிவுகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள் வரை ஆறுகளில் முறையில்லாமல் கலப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள்.

தமிழ்நாட்டின் தற்போதைய நிலை என்ன ? Tamilnadu Pollution Contraol Boardன் ரிபோர்டை படித்தால் உண்மையான நிலவரம் புரியும்.


நிலத்தடி நீர் மாசடைதல் ஒருபக்கம் என்றால், அடுத்த பிரச்சனை....over exploitation. சக்கையாக நிலத்தடி நீரை உறிஞ்சி எடுப்பது. முறையற்ற bore போடுதலில் ஆரம்பித்து....

TWADன் இந்தப் படம் எந்தளவுக்கு தமிழ்நாட்டின் நிலை மோசமாக உள்ளது காட்டுகிறது. பாருங்கள்...காவேரி பேஸின், கோவை முழுக்க முழுக்க over exploitation தான். இதுபோக, கடைகரையோரம் உப்புநீர் உள்ளே ஏறியிருக்கிறது.  தமிழ்நாடு முழுக்க - 320+ blockகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அதில் Safeயை (பச்சை)  விட Critical + Semi - critical எத்தனை என்று பாருங்கள். மேலதிக தகவல்களுக்கு அந்த ரிப்போர்ட்டை படித்துப்பாருங்கள். அப்படியே இதையும்...


                                         Over exploited blocks of Tamil nadu 




Over exploitation எப்படி நடக்கிறது ? ஆக்டோபஸின் டென்டகில்ஸ் மாதிரி ஏகப்பட்ட கிளைக்கதைகள் இதற்குண்டு.

முறையற்ற Borewellகளில் ஆரம்பித்து... 


மேலிருக்கும் படம் மிகத்துல்லியமாக நிலைமையை விளக்குகிறது. போர் போடும்போது - அந்த இடத்தின் சூழலியல், மண்ணமைப்பு, நீர்வளம் பற்றியெல்லாம் கவலையேபடமால் ஆழமாக செல்லச்செல்ல சுற்றி இருக்கும் எல்லா நீரும் போர்வெல்லை நோக்கியே வரும்தானே. இதனால் என்ன நடக்கும் ? இதுவே கடற்கரையோரம் போர்போட்டால் ? இயற்கையாக கடலைநோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நீர் உள்வாங்கும். அந்த நீர் முடிந்தவுடன்....கடல்நீர் உள்ளே வர ஆரம்பிக்கும். இப்படித்தான் சில விவசாய நிலங்களில் உப்புநீர் உள்ளே ஏறுவது. 

விவசாயம் வரை

விவசாயத்திற்கு நிலத்தடி நீரை உபயோகப்படுத்துவதை எப்படி குறை சொல்ல முடியும் ? சுத்த பேத்தல் இது. அதானே.....நிற்க: இந்தியாவைப் பொறுத்தவரை 1960கள் மிகமிக முக்கியமான ஆண்டுகள். உணவில் தன்னிறைவை அடைந்தே தீருவது என்ற முனைப்புடன்....இந்தியா இறக்குமதி செய்த "பசுமை புரட்சி" கோடிகணக்கான இந்தியர்களின், குறிப்பாக விவசாயிகளின் தலையெழுத்தை அடியோடு மாற்றியது. அதோடு மட்டுமா...நாட்டின் விவசாய நிலங்களின் போக்கையும் அடியோடு மாற்றித்தொலைத்தது. அதுவரை surface waterகளான ஆற்றுநீர், குளம், குட்டைகளை நம்பி இருந்த விவசாயம், கொஞ்சகொஞ்சமாக நிலத்தடி நீரை நோக்கை நகர ஆரம்பித்தது. காரணம் ? "இறக்குமதி" செய்யப்பட்ட HYV (High Yield Varieties) அரிசி/கோதுமை விதைகளுக்கு நமது பாரம்பரிய விதைகளை விட பலமடங்கு தண்ணீர் தேவைப்பட்டது. 1950களில் இந்தியா முழுக்க - நிலத்தடி நீரை நம்பி செய்யப்பட்ட விவசாயத்தின் சதவீதம் இன்று எந்தளவுக்கு இருக்குமென்று நினைக்கிறீர்கள் ? 10.....20....50...100...ம்ஹும்....500 %, சரியாகத்தான் வாசித்தீர்கள் 500 % அதிகரித்திருக்கிறது. குறைந்தசெலவில் மின் மோட்டர்கள், இலவச மின்சாரம் என்று பலதும் சேர்ந்து சக்கையாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டது.


Referenced Article: India's groundwater crisis 

இந்த HYVகளால் ஏற்பட்ட இன்னொரு கொடுமை, விவசாய நிலங்களின் தன்மை மாறியது. இதோடு பல காரணிகளின் சேர, விவாசாயிகள் பணப்பயிர்களுக்கும், கரும்பிற்கும் மாறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர் (இதைப்பற்றி கொஞ்சநேரங்கழித்து பேசுவோம்). விவசாயத்தை மட்டும் குறை சொன்னால் எப்படி....மற்ற துறைகள் என்ன செய்தது ? நியாயமான கேள்வி. ஆனால், தமிழ்நாட்டின் மொத்த நீரளவில் கிட்டத்தட்ட 90% விவசாயத்திற்குதான் தேவைப்படுகிறது.



இன்னொரு பக்கம், தேவை குறைவாக இருந்தாலும் தொழிற்சாலைகளில் ஆரமபித்து, கோக் - பெப்ஸி போன்றவைகளும் - வாட்டர் பாட்டில் கம்பனிகளும் எவ்வளவு உறிகின்றன என்பதுகுறித்தான ஆராய்ச்சிகள் மிகமிகக்கம்மி. அரசாங்கமும் இதில் - obviously - மெத்தமானகவே இருக்கிறது. எப்படி நடவடிக்கை எடுக்கும் முனைப்புவரும் ? அனுமதி யார் கொடுத்தது, எவ்வளவு பேருக்கு எவ்வளவு பங்கு போயிற்று...இப்பிடி எத்தனை உட்பிரிவுகள் இதில் உள்ளன. எங்கப்பன் குதிருக்குள் இல்லையென்று அரசே சொல்லுமா என்ன. உதாரணம் வேண்டுமா... இதோ: எந்த ஏரியா...ஏற்கனவே மேலே பல புள்ளிவிவரங்களும் மோசமாக இருப்பதாக அறிவித்த கோவை - திருப்பூர் ஏரியா தான்





OK. காவேரி பிரச்சனைக்கு வருவோம். தமிழர்கள் வஞ்சிப்பு, நூற்றாண்டுகால ஒப்பந்தம்...blah...blah..blah...இதெல்லாம் தாண்டி, அசலான பிரச்சனைகளாக மூன்று விஷயங்களைச் சொல்லலாம். 

1) 2015ல் விவசாயிகள் தற்கொலை அதிகளவில் நடந்த மாநிலங்கள் என்னென்ன தெரியுமா ? நமக்கு மேலே இருக்கும் எல்லா தென்னக மாநிலங்களும். குறிப்பாக, கர்நாடகாவில் பாருங்க...40% அதிகரித்திருக்கிறது. தென் கர்நாடகா - படுவறட்சியில் உள்ளது. அதுபோலவே, ஆந்திரா - தெலுங்கானாவின் பல பகுதிகளும். இந்நிலையில் சிறிய check-damsகளை கட்டுவதை நாம் எவ்வாறு நிறுத்த சொல்ல முடியும் ? அப்பறம் தண்ணீர் இல்லாமல் நாம் மட்டும் சாவதா...அதானே. பொறுங்கள்.




கர்னாடகாவில் எங்கிருந்து பிரச்சனை தொடங்கியதென்றால், அவர்களது பயிர் செய்யும் முறையிலிருந்து. நாம் மட்டும் விதிவிலக்கல்ல. ஆனால், கர்னாடகம் நம்மைவிட, அதிகளவில் நீர் தேவைப்படும் பயிரை பயிரிட்டுக்கொண்டிருக்கிறது. அதுபற்றிய மிகத்தெளிவான கட்டுரை இது. இந்தக் கட்டுரை தான் என்னையும் இவ்வளவு நீண்ட கட்டுரையை எழுதத் தூண்டியது.

Water isn't infinite: Karnataka should take a hard look at how it uses its lifeline

கர்னாடகாவில், 40 வருடத்தில் கருப்பு பயிரிடப்படும் ஹெக்டரின் அளவு....நம்ப முடிகிறதா...+586 % அதிகரித்திருக்கிறது. இதுபோக, நெல் (Paddy) சாகுபடி. நெல் - அதிகம் தண்ணீர் தேவைப்படும் பயிர். அதன் பரப்பளவும் கர்னாடகாவில் அதிகரித்திருக்கிறது. இதுபோக, பணப்பயிர்கள். அரசாங்கத்தின் கேணத்தனமான பல கொள்கைகளையும் காரணமாக சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு, கரும்பிற்கு தரப்பட்டும் குறைந்தபட்ச ஆதார விலை (MSP - Minimum Support Price) அதிகம். அதனால், ஏற்கனவே நட்டத்தில் பொழப்பை நடத்திக்கொண்டிருக்கும் விவசாயிகள் அதைநோக்கி நகர்வதைத் தவிர வேற வழியில்லையே. நமது பாரம்பரிய உணவுப் பயிர்களான - தண்ணீர் மிகக்குறைவாகத் தேவைப்படும் - சிறு தானியங்களை யார் கண்டுகொள்கிறார்கள் ?. தமிழ்நாடென்று மொத்தமாக எடுத்துக்கொண்டால், கரும்பு பயிரிடப்படும் பரப்பளவு +220% கூடியிருக்கிறது. நெல், பருத்தி போன்ற தண்ணீர் அதிகளவு தேவைப்படும் பயிர்களின் பரப்பளவு குறைந்திருக்கிறது.ஆனால் பணப் பயிர்களின் பரப்பளவு அதிகமாயிருக்கிறது. நமது மண்வளம்/நீர் வளத்திற்கு உகந்த சிறுதானியங்களின் பரப்பளவும் குறைந்திருக்கிறது. மேலதிக விவரங்களை ரிப்போர்ட்டிலிருந்து பெறலாம்.



மேலிருக்கும் புள்ளிவிவரம் தமிழ்நாடு முழுமைக்குமானது. சிக்கல் எங்கேயென்றால் காவிரி டெல்டா பகுதிகளில் தான். இந்த இரண்டு மேப்களைப் பாருங்கள். பிரச்சனையின் ஆரம்பப்புள்ளி இதுதான். காவேரி பேஸின் பகுதியில் கர்னாடகா, தமிழ்நாடு - இரண்டு மாநிலங்களுமே அதிகளவில் கருப்பையும், நெல்லையும் பயிரிட்டுள்ளனர். (தற்போது நீர் திறக்கப்படுவது சம்பா சாகுபடிக்குத்தான் என்றாலும்) இரண்டிற்குமே அதிகளவில் தண்ணீர் தேவை. நிலத்தடி நீர்தான் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இதுவே over exploitationனிற்கு வழிவகுக்குகிறது. அதைத்தான் மேலே இருக்கும் தமிழ்நாடு மேப்பில் தெளிவாக பார்த்தோமே. இந்த over exploitation, ஆறு/குளம்/குட்டை/ரிசர்வாயர்களில் இருக்கும் surface waterரை பாதிக்கிறது. இந்த சைக்கிள் அப்படியே தொடர்ந்துகொண்டே இருக்கும்.

Src: http://archive.indiawaterportal.org/book/export/html/113

மணல் கொள்ளை....

நிலத்தடி நீரை விடுங்கள். இவ்வளவு நீர்பற்றாகுறை நிறைந்த மாநிலம். தண்ணீருக்காக சுற்றியிருக்கும் எல்லா மாநிலத்துடனும் சண்டை. நிலமை இப்படியிருக்கையில், உள்ள நீரை எவ்வளவு ஜாக்கிரதையாக பாதுகாக்க வேண்டும் ? ஆனால் தமிழ்நாட்டில் (கர்நாடகாவிலும் தான். கேனத்தனத்தில் மட்டும் அணைத்து இந்தியர்களும் ஒன்று) மணல் மாஃபியா கொடிகட்டிப் பறக்கிறது. ஆற்று மணலை எடுத்துக்கொள்வோமே. ஆற்று மணல்கள் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது ? ஆற்று மணல்களுக்கு நீரை உறிஞ்சும் தன்மை அதிகம்; மழை நீரை உள்ளது உள்ளபடி அலேக்காக உறிஞ்சிக்கொள்ளும். இதனை கண்டபடி அள்ளும்போது நிலத்தடி நீர் மட்டம் குறையும்; ஆற்றின் போக்கு மாறும்; வெள்ளப்பெருக்குகளுக்குக்கூட காரணமாக அமையும். 

இதை தற்போது அரசாங்கமே நடத்தித்தொலைவதால் இன்னும் வசதியாக போயிற்று. ஐந்தடி வரை அள்ளலாம் என்று  அனுமதி வாங்கிக்கொண்டு 25 அடிவரை அள்ளப்பட்ட  இடங்கலெல்லாம் தமிழ்நாட்டில் உண்டு. இந்த ஆய்வைப் படித்துப்பாருங்கள். தாமிரபரணியில் எப்படி அழித்தொழிக்கப்பட்டிருக்கிறதென்று. இதுபோக, தமிழ்நாட்டின் மொத்த மணல்தேவையில் 60% காவிரியில் பேஸின் பகுதியிலிருந்துதான் எடுக்கப்படுகிறது (அரசே அனுமதித்த அளவின்படி). இதோடு திருட்டுத்தனமாக மணல் அள்ளுதலையும் சேர்த்துக்கொள்ளுங்கள். சுத்தம். டிட்டோ, கர்னாடகாவிலும் இதேதான் நடக்கிறது. God's own country...கேரளா மட்டும் தப்புமா என்ன ? Western Ghats முழுக்க இதே நிலைமைதான். 

ஆட்சி மாறினாலும் இந்த கொள்ளைகள் மட்டும் என்றாவது குறைந்து பார்த்திருக்கிறீர்களா ? திமுக - அதிமுக ஆட்சி மாறினாலும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் - திமுக ஆட்சியில் கட்டபட்டது என்ற ஒரே காரணத்திற்காக கோட்டூர்புரம் லைப்ரரியை மூடினார்களல்லவா..ஆனால், க்ரானைட்/கணிம வளம்/மணல் அள்ளுதல் - இந்த விஷயங்களிலெல்லாம் முந்தைய திமுக ஆட்சியின் கொள்கைகளை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டார். ஏனென்று நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.
Desiltingகினால் (தூர் வாருதல்) என்ன நடக்கும் ? மழை பெய்கிறது. குளம், குட்டைகளில் தேங்குகிறது, ஆறுகளில் ஓடுகிறது. இந்த அமைப்புகளை முறையாக ஆழப்படுத்தி – குப்பைகள் சேராமல் வைத்திருந்தால்....நிலத்தடியின் நீர்மட்டும் அதிகரிக்கும்; இதன்மூலம் – வேதிப்பொருட்கள் கலந்த நீரின் மாசு குறையக்கூடும்;  தண்ணீர் நிறைய தேங்கி இருப்பதன் காரணமாக தண்ணீர் தட்டுபாடான காலத்தில் ஓரளவு சமாளிக்க முடியும். 


க்வாரிகளுக்கு வருவோம். க்வாரிகளால் என்ன பாதிப்பு ஏற்படும் ? நிலத்தடி நீர் பாறைகளுக்கிடையே இருக்கும்; அது பாறையின் தன்மை பொறுத்து நீரோட்டம் இருக்குமென்று கொஞ்சநேரத்திற்கு முன்பு பார்த்தோமில்லையா ? Granite போன்ற பாறைகள் அடர்ந்த வகைப் பாறைகள். இதில் ஏற்கனவே குத்துயிரும் கொலையிருமாகவே நிலத்தடி நீர் நகர்ந்துகொண்டிருக்கும். நாம் அதையும் சிதைக்கும் போது – க்வாரிகள், வெடிகள் – மொத்தமாக இந்த பாறைகளின் அமைப்பு சிதைந்து நிலத்தடி நீர் அங்கேயே மாட்டிக்கொள்ளக்கூடும். இதுபோன்ற பகுதிகளை aquitards என்று சொல்வார்கள். இதைமட்டும் சொல்லியாக வேண்டியுள்ளது. மதுரையில் கிரானைட் முறைகேடு/சகாயம் விஷயம்...அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். க்ரானைட் வெட்டி எடுக்கப்படுவதற்கு - 2003 to 2011 வரை 139 அனுமதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதில், 77 அதிமுக (2001 - 2006 ஆட்சியில்) திமுக - 68 (2006 - 2011) ஆட்சியில்.

Must Read:

1) Cauvery gouged

2) Mining mafia silenced the media

3) Illegal Sand Mining, Karnataka

4) Illegal sand mining in River Bhavani continues

5) Environmental impact of sand mining in Tamiraparani River, south Tamilnadu

6) A requiem for rivers

7) The mother of all loot


--------------------------------------
இதோடு முடித்துக்கொள்வோம். அடிக்கடி கேட்க நேரிடும், உடலெல்லாம் ப்ளேடால் கீறியதைப்போல என்னை பதற வைக்கும் சில வார்த்தைகள் "நதிநீர் இணைப்பு", "வீணாக கடலில் கலக்கும் ". மேலே பதிவு  முழுக்க மனித ஜந்துகளுக்கு தேவையான விஷயங்களைப்பற்றி மட்டுமே பார்த்தோம். ஐயா.....ஆறு/நதி என்பது நமக்கானது மட்டுமல்ல. எல்லா உயிரினத்திற்கும் பொதுவானது. நம்மைவிட ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இங்கே பலநூறு உயிரினங்கள் நடமாடிக்கொண்டிருந்தன. நாம் ஆற்றின் போக்கை மாற்றுகிறோம் என்று பேசுவதேகூட அபத்தத்திலும் அபத்தமானது. "மேற்குத்தொடர்ச்சி மலையில் தொடங்கி கேரளா வழியாக வீணாக கடலில் கலக்கும் ஆற்றை..." இப்படி பலரும் பேசத்'தொடங்குவதை பார்த்திருக்கிறேன். ஐயா...அந்த ஆறு போகும் வழியெல்லாம் நமக்கு தெரிந்த/நமக்கு தெரியாத எத்தனை எத்தனை உயிரினங்களை வாழவைத்துக்கொண்டிருக்கிறதென்று துல்லியமாக கணக்கிடும் அளவிற்கு மனிதனுக்கு சக்தியில்லை. ஆறும் - கடலும் சங்கமிக்கும் முகத்துவாரங்கள் குறிப்பிட்ட வகை மீன்கள், நண்டுகளில் ஆரம்பித்து பல உயிரினங்களுக்கு மிகமிக முக்கியமான பகுதி. இந்த சிறு உயிரினங்களை நம்பி பெரிய உயிரினங்கள் உண்டு. எல்லாவற்றையும்விட, சில processகள் irreversible. கிறுக்குத்தனமாக நாம் எதையாவது செய்துவைத்தோம் என்றால், மீண்டும் அதை சரிசெய்யவே முடியாது. மற்ற உயிரினங்களோடு சேர்த்து...சுத்திமுத்தி பாதிப்பு நமக்கும் வந்துசேரும்.

இந்த மாபெரும், அதியற்புதமான, intricate - சூழலியலில் நாமும் இருக்கிறோம். நாம் மட்டுமே கிடையாது. அவ்வளவே (இந்த புரிதலிருந்தால் ஏன் பெண்கள் மீதி ஆஸிட் அடிக்கப்போகிறான், சாதி கட்டமைப்பு இன்னும் இருக்கப்போகிறது). பூமிக்கு வந்தோமா - நமது சந்ததியை பெருக்கிவிட்டோமா - அனைத்தையும் மூடிக்கொண்டு, வேடிக்கை பார்த்தபடி இருந்தோமா - ஒருநாள் கட்டையை சாத்தினோமா....போதும். இதுவே போதும். எதையும் கெடுக்காமல் சும்மா இருப்பதே பெரிது. இதெல்லாவற்றையும் தாண்டி, இயற்கையின் complexityயை புரிந்துகொள்ள நமக்கு ஒரு ஆயுள் போதாது. ஆனால், புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். நமது குழந்தைகளுக்கும் புரிய வைக்க முயற்சி எடுக்கலாம் Dot
------------------------------
I start thinking, how many souls hip-hop has affected
How many dead folks this art resurrected
How many nations this culture connected
I just want to innovate and stimulate minds
Travel the world and penetrate the times
Escape through rhythms in search of peace and wisdom
- Common: The 6th Sense
La Haine. Hip-hop/Rapன் அசல் தாக்கத்தை இந்தப்படமளவிற்கு கச்சிதமாக பதிவு செய்த படங்கள் மிகமிகக்குறைவு. இந்த காட்சி....முதல்முறை படத்தைப் பார்த்தபொழுது, when the beat drops....சுற்றியிருந்த அனைத்துமே காணாமல் போய்விட்டது. இரண்டடி அந்தரத்திலேயே மிதந்துகொண்டிருந்தேன். முதலில் staticக்காக நிற்கும் கேமரா, அப்படியே மிதக்க ஆரம்பித்து...Vincent Casselன் முகத்திற்கு நேரே வந்து நிற்கும். எத்தனைமுறை பார்த்தாலும் இந்தக்காட்சி அலுக்காமல் சலிக்காமல் வசியப்படுத்திக்கொண்டேயிருக்கிறது.


இதில் ஒலிக்கும் மூன்று பாடல்கள்: KRS One - Sound of Da police, NTM – Police, Edith Piaf - Non Je Ne Regrette Rien. முதலிரண்டு பாடல்களும் பலவகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தவைகள். ஏன் ? Sound of Da police – இந்த வீடியோவைப் பாருங்கள்; இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா  ? அதுபோலவே NTM – Police பாடலும் (NWA - Fuck da Policeசையும் ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்).

இந்தப் படம் என்ன மாதிரியான சூழ்நிலையில் வெளியானது, ஏன் முக்கியத்துவம்வாய்ந்தது என்றறிய - தற்போது ஈரோப் முழுக்க நிலவும் சூழ்நிலையை மனதில்கொண்டு - இந்தக் கட்டுரைகளை படித்துப்பாருங்கள். குறிப்பாக, ஃப்ரான்ஸ். அரேபியர்கள்/முஸ்லிம்கள்/அல்ஜீரியா போரில் ஆரம்பித்து சமீபத்திய Charlie Hebdo வரை பெரிய வரலாறே உண்டு. அந்தமாதிரியான political tension கனன்றுகொண்டிருந்த 90களில்தான் இந்தப்படமும் வந்தது.
  1. Twenty Years of Hate: Why ‘La Haine’ is More Timely Than Ever
  2. La Haine 20 years on: what has changed?

கானா இசையும் – Rapம், ஒருவகையில் அண்ணன்-தம்பி உறவு முறைதான். கானா பரிட்சயம் இருந்தால், நான் சொல்லமுற்படும் தொடர்பையும் rap இசையின் தொடக்கத்தையும் மிகஎளிதாக புரிந்துகொள்ளலாம். Rap இசை, உருவெடுத்து – செழித்து வளர்ந்த இடங்கள், நமது வட சென்னை/ஹௌசிங் போர்ட் காலனிகள் போன்றவைகள். மழை/வெள்ள மீட்புப்பணிகளாகட்டும், உயர்கல்வி நிலையங்கள் தொடங்கப்படுவதாகட்டும், தொழில்வாய்ப்புகளாட்டும் – வட சென்னை எந்தளவிற்கு புறக்கணிக்கப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. தங்களது வாழ்க்கையில தொடங்கி....சமூக வலிகளை, ஆதங்கத்தை, புறக்கணிப்புகளை எவ்வாறு இம்மக்கள் வெளிப்படுத்துவது ? ஏதாவதொரு outlet வேண்டுமல்லவா  ? அப்படி பிறந்துதான் Hip-hop/Rap இசை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம்மூரில் சினிமா பாடல்களே எல்லாவற்றிக்குமான outlet என்றாகிவிட்டது. எஸ்கேபிஸ்ட் மனநிலையிலயே மக்கள் இசையை அணுகுவதும்/pampering செய்வது மட்டுமே இசையின் வேலையென்று நமது இசையமைப்பாளர்கள் நினைப்பதும் இந்த நிலைமைக்கு காரணமாக இருக்கக்கூடுமோ ?.



இது Commonன் Like Water for Choclate ஆல்பம் கவர். இந்தக்காட்சிகள் நமக்கு புதிதல்ல. இத்தனைக்கும் இந்த ஆல்பம், 2000தில் தான் வெளிவந்தது ? ஏன் இதை கவர் ஃபோட்டோவாக வைக்க வேண்டும் ? மெட்ராஸ் படத்தைப்பற்றி பேசும் பலரும் தவறாமல் ஒரு விஷயத்தை கூறுவதைக் கேட்டிருக்கிறேன். “இதில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நிலை பற்றி குறியீடாக பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன”. என்னமாதிரியான நிலையில் இருக்கிறோம் பாருங்கள். கண்ணுக்குமுன்னே நடக்கும்/நடந்த சமூக அவலங்களைப்பற்றி குறியீடுகளில் பேசிக்கொண்டிருக்கிறோம்; ஆனால் வெளிப்படையாக சாதிகளை போற்றிப்பாடும் படங்களுக்கும் பாடல்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. எத்தகைய மொன்னையான மனநிலை இது ? Commonன் ஆல்பம் கவர்போல இங்கு எந்த படத்திற்காவது/ஆல்பத்திற்காவது கவர் photo வைக்க முடியுமா ?. நாம் இயல்பிலேயே மந்தமான/மொன்னையான மனநிலை கொண்டவர்கள் என்பதால் இதெல்லாம் சாத்தியமேயில்லை என்பது என் நம்பிக்கை. அதெல்லாம் வெளிப்படையாக பேசக்கூடிய கானா இசையெல்லாம் ஒருபோதும் இங்கு பெரிதாக வளரப்போவதில்லை. அப்படியான எனது ஆதங்கத்தை Hip-hop/Rapபை கொண்டாடுவதன் மூலம் தீர்த்துக்கொள்கிறேன். அவ்வளவே.



Rap இசை, 80களின் ஆரம்பத்தில் எந்த காரணத்திற்காக அமெரிக்காவில் தோன்றி படுவீரியமாக வளரத்தொடங்கியதோ அதே காரணத்திற்காகதான் உலகம் முழுக்க கொண்டாடப்படலாயிற்று. Rap, முழுக்க முழுக்க verbal outletடாகத்தான் ஆரம்பகட்டங்களில் இருந்தது. Social, Political statement. வார்த்தைகள்தான் இங்கு முக்கியமேயன்றி இசை இரண்டாம்பட்சம் தான். உள்ளுக்குள் எதாவது ஒரு விஷயம் குடைந்துகொண்டே இருக்கிறது; வெளியே சொல்லியாக வேண்டும். வேறுவகை இசை என்றால் பெரிய அளவில் பயிற்சி வேண்டும்; பிறகு என்னதான் செய்வது ? மிக எளிமையாக தங்களிடம் இருந்த டிஸ்க்களில் ஜாலம் காட்ட ஆரம்பித்து (scratching) அதிலிருந்து beatகளை உருவாக்கி விளையாட ஆரம்பித்தனர். புறக்கணிக்கப்பட்ட/ஒடுக்கப்பட்ட மக்களின் இசையாக வளர்ந்ததால், உலகம் முழுவதும் அதே சூழ்நிலைச்சேர்ந்த மக்களை Hip-hop/Rap எளிதில் தன்வசப்படுத்தியது. எவ்வித பாசாங்கும் இல்லை; பட்டென்று முகத்தில் அடிப்பதைப்போல வார்த்தைகளின் மூலம் தங்களது கஷ்டங்களை பகிர்ந்துகொள்ளும் இசையை யாருக்குதான் பிடிக்காது ? (Rap இசையில் – Misogyny, Violence, Drugs எல்லாம் பிரிக்கவே முடியாத விஷயங்கள் என்பதையும் ஒத்துக்கொண்டேயாக வேண்டும். Social commentary என்றளவில் இதை நான் பார்க்கிறேன்).

திரும்ப Franceசிற்கு போவோம். ஆரம்பித்தில் கொடுத்திருந்த La Haine கட்டுரைகளை படித்திருந்தால், அந்த காலகட்டத்தில் நிலவிய social/political tension மிகத்தெளிவாகப் புரியும். அப்படி, Franceன் racial minoritiesகளின் இசையாகவே rap இசை வளரத்தொடங்கியது. இதுபற்றி, நான் வாசித்த மிகச்சிறந்த – தெளிவான கட்டுரைகளில் ஒன்று... இந்த 13 பக்கங்கள், நிச்சயமாக rap இசையைப் பற்றியும் வேறுவிதமான பார்வையும் புரிதலையும் நிச்சயம் கொடுக்கும்.  

பல hardcore hip-hop ரசிகர்களும் 1996ரோடு ஹிப்-ஹாபின் பொற்காலம் முடிந்துவிட்டது என்று யூடியுப் முதற்கொண்டு பல தளங்களிலும் காமென்ட் செய்வதைப் பார்க்க முடிகிறது. டெக்னிகலாக “Flow, Rhythm, Story-telling” என்று மட்டும் வைத்துப்பார்த்தால்(எதற்கும் இந்தப்பதிவையும் படித்துவிடுங்கள்) பழைய ஆட்களைப்போல டெக்னிக்கில் இன்றைய பெரும்பாலான ஆட்கள் அருகில்கூட வரமுடியாதென்றாலும், musicalலாக மிரட்டவே செய்கின்றனர். ஆரம்பகாலம்தொட்டே பலரும் R and B/Jazz/Soul இசை sampleகளை தொடர்ந்து பயன்படுத்திவந்தாலும், beats கேட்க துள்ளலாக இருந்தால்போதும் என்ற நிலைதான் பெருமளவில் இருந்தது(உள்ளது). A Tribe called Quest போன்று சிலர் பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டாலும் வார்த்தைகள் தான் இங்கு பிரதானம் என்ற மனநிலையே இருந்தது. ஆனால் பின்-2000ல் இருந்துதான் இந்தநிலை பெருமளவில் மாறத்தொடங்கியது. புதிதாக வந்த பலரும் Psychedelic முதற்கொண்டு Progressive வரை, மெயின்ஸ்ட்ரீம் rapகளிலேயே முயற்சிக்க ஆரம்பித்தனர். ASAP Rockyன் இந்தப்பாடல் ஒரு நல்ல உதாரணம்.


Flatbush Zombies க்ரூப்பை எடுத்துக்கொள்வோம். அவர்களது ஆல்பம் டைட்டிலைப் பாருங்கள்.... 3001: A Laced Odyssey. இவ்வளவு trippyயான rap ஆல்பம் கடந்த பத்து வருடத்தில் வந்ததாக நினைவில்லை. எந்தளவிற்கு இந்த ஆல்பத்திற்கு ரசிகர்கள் உண்டென்றால்....இந்த வீடியோவே சாட்சி


Young Fathers. Alternative hip-hopன் இளவரசர்கள். ஹிப்-ஹாப்/ராப்  என்றால் அனிச்சையாக நமெக்கென்ன நியாபகம் வரும் ? அதன் beats தானே. இவர்கள் அதையே அடியோடு மாற்றியிருக்கிறார்கள் (Punk இசையின் அடிப்படையும் இதுதான்). இசை முழுக்க விரவிக்கிடக்கும் ஒருமாதிரியான அசௌகரியம். கேட்கக்கேட்க பாடலில் இருக்கும் cluttering தன்மை எளிதில் தொற்றிக்கொள்ளும்.


இன்னொரு முக்கியமான, experimental hip-hop group - Death Grips. Young Fathersகெல்லாம் Fathers. வார்த்தைக்கு வார்த்தை, punkதனம் தெறிக்கும்.



Young Thug: 
Hip-Hop/Rapபைப் பொறுத்தவரை ஆரம்பகாலம்தொட்டே, “ஆண்மை” என்ற tagline விடாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆண் ராப் ஆர்டிஸ்ட் எப்படி இருப்பான் – உடலமைப்பு எப்படி இருக்க வேண்டும் – ஆணின் வெற்றி என்பதென்ன – வயலன்ட்டான ஆளாக தன்னை முன்னிறுத்திக்கொள்வது – gang culture, இப்படி பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் (50 Cent நல்ல உதாரணம்). இதன் காரணமாகவே LL Cool J (Ladies Love Cool James) போன்ற ஆட்களை ஏகத்துக்கும் பலரும் பகடி செய்வதுண்டு. Rapபில் போய் முக்கல்முனங்கல்களுடன் காதல் பாடல்களை  (திராபை பாடல்கள் என்பது இன்னொரு பக்கம்) பாடுவதா என்று செமத்தியாக ஓட்டப்பட்டார். அப்போதிருந்த சூழ்நிலை அப்படி. Tupac, Biggie, Snoop Dog, Ice Cube, NWA போன்ற ஆட்களின் பாடல்களே எங்கு திருப்பினாலும் ஒலித்துக்கொண்டிருந்தது. இந்த சூழ்நிலை மாற கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆனது. ஆண் rapperகள் இப்படித்தான் பாடவேண்டும், தங்களது weaknessகளை/vulnerable மனநிலையை வெளியே காட்டிக்கொள்ளக் கூடாது என்பதை பெரிய அளவில் மாற்றிய ஆள் – Kanye West. Gangster Rap அடிபிரித்தெடுத்துக்கொண்டிருந்த காலத்தில் வரிசையாக தனது weakenssகளை, தோல்விகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஆல்பமாக வெளியிட்டுகொண்டிருந்தார் (The Day Kanye West Killed Gangsta Rap). அதில் pinnacle என்றால், 808 and Heartbreaks. Production, Auto-tune என்று இந்த ஆல்பம் இன்றுவரை ஒரு க்ளாசிக். ஆனாலும் கூட Kanyeவில் தொடங்கி இன்றைய Drake வரை, ஆண்கள் – வலிமை – உடலமைப்பு போன்றவற்றில் பழைய ஆட்கள் போலத்தான். இந்த சூழ்நிலையை வைத்துப்பார்க்கும் பொழுது, Young Thug – Fetty Wap இருவரின் popularityம் பெரும் ஆச்சரியமாகவே இருக்கிறது. குறிப்பாக, Thugger a.k.a Young Thug. பத்து – பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இப்படியான ஒரு ஆள், ஹிப்-ஹாபில் இந்தளவிற்கு வெற்றிபெற்றிருக்கவே முடியாது. மிகமிக ஒடிசலான உருவம்; குழப்பமான உதறல் குரல்; மொன்னையான fashion sense என்றுதான் எடுத்தவுடன் தோன்றும். ஆனால், ஆனால் Kanye West சொல்வதைப் பாருங்கள் “Young Thug is super inspiring to me. Amazing artist !!!“. காரணமில்லாமல் இல்லை. இதை படித்துப்பாருங்கள்

Young Thug: 'I like everything people say about me – you gay, you a punk, you can't rap, you're the hardest'

போன வாரம் வந்த இந்தப்பாடல். Thuggerன் unique flowவிற்கு நல்ல உதாரணம். அப்பறம், Swagonometryயை எப்படி மறக்க முடியும்.  



Joey Bada$$:
I got sick of class, started making classics
Flow அடிபின்னும். 17 வயதில் வெளியிட்ட mixtape 1999, இன்ஸ்டன்ட் க்ளாசிக். "Golden age of Hip-hop"பின் அத்தனை கூறுகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தும் ஆள். 



Mick Jenkins – Chance the Rapper – Vic Mensa:
Rapபில் மாறிவரும் musicality பற்றி பேசிக்கொண்டிருந்தோமே, அதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள்: Mick Jenkins and Chance the Rapper. ரகளையின் மறுபெயர் – Chance the Rapper. Acid Rap காலம்தொட்டே, Chanceன் rap முழுக்கமுழுக்க கொண்டாட்டம்தான். Gospel rap கைவந்த கலை. போதுமே..எல்லா பாடல்களிலுமே அந்த gospel flow இருப்பதைக் கேட்கலாம். Mick Jenkins இதற்கு அப்படியே நேர்மாற். சுற்றிவளைக்காமல், எடுத்தவுடன் கோதாவில் இறங்குவதைப்போல rap செய்ய ஆரம்பித்துவிடுவான். Musicalலாக சிலபல பரீட்சார்த்த முயற்சிகளை செய்யத்தவறுவதும் இல்லை. எல்லாவற்றையும் விட rhymes....அதகளம். Vic Mensa – எப்பொழுதும் ஒருவித மென்சோகம் இழையோடும் ஆத்மா. ஆனால் flowவில் கில்லி.







Logic – King Los:
I was from Nazareth. I'm resurrecting hip-hop like it was Lazarus
Lyrical senseசை வைத்துப்பார்த்தால், இந்த இருவரின் லெவலே வேறு. ஒரே சிக்கல் – King Los இதுவரை முழு ஆல்பம் எதையும் வெளியிடவில்லை. ஆனால், இந்தாளின் lyrical skillக்கு மிகச்சிறந்த உதாரணம், இந்த freestyle தான்.





Childish Gambinoவை ஏன் பிடிக்கும் என்றெல்லாம் தெரியாது. ஆனால் பிடிக்கும். ஒரு quirkiness உண்டு. இத்தனைக்கும் பெரும்பாலான பாடல்கள், popதனமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு ஆல்பத்திற்கும் ஸ்டைல் மாறிக்கொண்டேயிருக்கிறது.


Rapsody - Angel Haze - Lizzo - Jungle Pussy:

இறைவிகளாவது ஒண்ணாவது, போங்கடா _____ டைப் ஆள்  தான் Jungle Pussy. டெக்னிக் என்றளவில் Rapsody தவிர, மூவரும் போக வேண்டிய தூரம் மிகமிக அதிகம். ஆனால், rap என்பது expressions என்பதை பலமுறை திரும்பத்திரும்ப மேலே பேசியிருக்கிறோம். அந்தளவில், ஒரு பக்கவான ஆல்பமோ – mixtapeப்போ இல்லாவிட்டாலும், மூவரையுமே தவிர்க்க முடியாது. 


Rapsodyயின் கதையே வேறு. மிக கச்சிதமான flow. Throw மட்டும் ஒன்று போலவே இருக்கும்.அது மட்டும்தான் குறை. மற்றபடி, female rapper என்று தனியாக அழைப்பதிலெல்லாம் உடன்பாடில்லை.



Jazz Cartier - Isaiah Rashad:
Drakeன் ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட Toronto நகரின் மறுபக்கத்தின் பிரதிபலிப்பு தான், Jazz Cartier a.k.a Jacuzzi La Fleur. நிச்சயமாக ஒரு fierceness/presence பாடல்களில் உண்டு. தவிர, புதிதாக பரீட்சார்த்தமாக எதையாவது செய்துபார்க்கும் ஆர்வமும் உண்டு. இந்தப் பாடலைப் போல. அதுபோக, நல்ல beat senseசம் உண்டு. எல்லாவற்றையும் விட, டைட்டிலைப் பாருங்கள் - Marauding In Paradise.


Kendrick - Ab-soul - SchoolBoy Q - Jay Rock வரிசையில், TDE companyன் இன்னொரு அதகளம். தனித்துவமான flow உண்டென்றாலும், இன்னும் முழு ஆல்பமாக எதுவும் வெளிவரவில்லை.



மூன்று முக்கிய ஆட்களைப்பற்றி பார்க்கும் முன், UK - Grime பற்றியும் சொல்லியாக வேண்டியுள்ளது. Fbயில் Stormzy பாடல்களை அடிக்கடி ஷேர் செய்வதுண்டு. மேலோட்டமாக பார்த்தால்(கேட்டால்) மிகவேகமாக பாடும் ஒரு முறை/டெக்னிக் என்றளவில் இதை சுருக்கி பார்க்கக்கூடும். ஆனால், இதற்குப்பின்னாடியும் ஒரு கதை. Then...மறக்காமல் காமென்ட்களையும் படிக்கவும். இல்லாவிட்டால், முழுகதையையும் தவறாக புரிந்துகொள்ளக்கூடும்

Grime isn’t just music - it’s about working-class struggle

Grimeயில் சமீபமாக கலக்கிக்கொண்டிருக்கும் ஆள் - Skepta. போன மாதம் வெளிவந்த Konnichiwa (Japaneseயில் - Good Day என்று அர்த்தம்), என்னமாதிரியான ரகளை என்பதற்கு இந்தவொரு பாடல் சான்று



Earl Sweatshirt:


I don't like Shit, I don't go outside அளவிற்கு depressingகான rap ஆல்பமை நான் கேட்டதில்லை. Wordplays...வாய்ப்பேயில்லை. ஒரு சிறிய உதாரணம், close your eyes to what you can't imagine. Earlன் பெரும்பாலான பாடல்களை கேட்டுமுடித்தவுடன், கொஞ்ச நேரத்திற்கு mundane மனநிலையிலேயே இருக்க நேரிடும். 20வருடங்கள் முன்பெல்லாம் இதுபோன்ற rapperகளை பார்த்திருக்காவே முடியாது.



Tyler, the Creator - Vince Staples:

மற்ற அனைவரையும்விட, எனது personalityயுடன் நெருக்கமாக உணரும் இரண்டு ஆட்கள் இந்த இருவரும் தான். Odd Future Wolf Gang Kill Them All (OFWGKTA) - Tyler தலைமையில் செயல்பட்டுவந்த க்ரூப். எக்ஸ்ட்ரீம் லெவல் of சேட்டைகளுக்கு பிரசித்தம். குறிப்பாக, Tyler. Slim Shadyயின் வாரிசு என்று சொல்லலாம். ஆனால், Slim Shadyயை விட மியுசிக்கல் சென்ஸ் அதிகம். இந்த க்ரூபில் Earlம் ஒரு அங்கம். க்ரூப் முழுக்க முழுக்க anti-religious. கேட்க வேண்டுமா ? Tyler + இந்த க்ரூப் எந்தளவிற்கு ரகளையானவர்கள் என்பதற்கு மிகச்சிறிய உதாரணம் இதோ 



அடுத்த 5 ஆண்டுகளில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆளேன்றால் நிச்சயமாக அது Vince Staples தான். டெக்னிக் என்று பார்த்தால், நேரடியாக preaching செய்வதைப்போன்றதொரு தோரணை. Dead pan/Black humour எல்லாம் போகிறபோக்கில் தெறிக்கும். ஆனால் குரலில், இசையில் அந்த நக்கல் கொஞ்சம்கூட வெளிப்படாது. அதுதான் விஷயம். இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போதுகூட Orlandoவில் இப்படியான படுகொலைகள் நடேந்தேறிக்கொண்டிருக்கின்றன. 

இதற்கு முன்னர், Young black men killed by US police at highest rate in year of 1,134 deaths இதுமாதிரியான பல செய்திகளை நீங்களும் படித்திருக்கக்கூடும். இந்த பின்னணியில் இருந்துதான் Vince Staplesன் பாடல்களை அணுக வேண்டியுள்ளது.
  


இதே சூழ்நிலை அப்படியே இந்தியாவுக்கும் பொருந்தும். எப்படி? Most Prisoners in India Are Muslims, BCs: NCRB. ஆனால் இதுபோன்ற விஷயங்கள் நமது படங்களிலோ/பாடல்களிலோ வெளிவராது. அதான் சிக்கலே. Vinceன் musical ஸ்டைலும் ஒருவித glominessசுடனே இருக்கும். இதற்கு தெளிவான காரணத்தை அவரே கூறுகிறார்.

Pitchfork: You’ve said that you felt like your purpose in music is to make people uncomfortable, what do you mean by that? 
Vince Staples: I just feel like that’s what music is supposed to be. Like, that’s my problem with fucking trap music: People are rapping about killing niggas and selling fucking drugs all day, but it sounds happy—that’s bullshit. That shit’s stressful: You’re not going to make no fucking money, somebody’s going to end up dead, and you’re not going to be able to pay for his funeral because his mom probably 
-----------------------------------
Must listen:
Danny Brown - Atrocity Exhibition
ASAP Rocky - At. Long. Last. ASAP
Logic - Under Pressure
Mick Jenkins - The Waters
Chance the Rapper - Acid Rap
Tyler, the Creator - Goblin
Vince Staples - Summertime 06
Vic Mensa - Innanetape
Earl Sweatshirt - I Don't Like Shit, I Don't Go Outside
Joey Bada$$ - 1999
Young Thug - Slime Season 3
Jazz Cartier - Marauding In Paradise
Mac Miller - Faces
Isaiah Rashad - Cilvia Demo