Rescue Dawn. வியட்நாம் போரின்போது, அந்நாட்டின் ஒரு கிராமத்தில் மாட்டிக்கொண்ட அமெரிக்க Dieter Dengler, எப்படி அங்கிருந்து தப்பித்தார் என்பதைவைத்து எடுக்கப்பட்ட படம். Actually, Herzog ஏற்கனவே தானெடுத்த Little Dieter Needs to Fly டாக்குமென்ட்ரியை அடிப்படையாக வைத்தே இப்படத்தையெடுத்தார். Dieter Dengler and Duane Martin, இருவரும்தான் பிரதான ஆட்கள். அக்கிராமத்தில் மாட்டிக்கொண்டு அவர்கள் அனுபவிக்கும் கஷ்டம், கொடுமைகளெல்லாம் ஒரேமாதிரிதான்யென்றாலும் இரண்டுபேருக்கும் எதில் மிகப்பெரிய வித்தியாசமென்றால் - Stockdale paradox. எவ்வளவுதான் கஷ்டங்கள், துயரங்களிருந்தாலும் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் இதையெல்லாம் கடந்து வரமுடியும் என்று நம்பலாம். ஆனால், அந்த கஷ்டங்களிலிருந்து தப்பிக்கும்வரை அந்த சூழ்நிலையில்தானே வாழ்ந்தாக வேண்டும். Realityயை மாற்ற முடியாதில்லையா?. அந்தவாய்ப்பிருந்தால் நாட்டில் ஏன் இத்தனை சிக்கல்கள், தற்கொலைகள், குடும்ப வன்முறைகள். இதிலிருந்து மீள வாய்ப்பேயில்லையென்ற ரியாலிட்டி + ஆனால் அதை மீறியெழும் Optimism = Stockdale paradox. படத்தில், Dieterருக்கு நிதர்சனம் புரியும். ஆனால், அதையும்மீறி தான் தப்பித்துவிடுவோம் என்ற நினைப்பு சதாசர்வகாலமும் ஓடிக்கொண்டேயிருக்கும். Duane அதற்கு நேர்மாறாக ஒரு quixotic மனநிலையிலேயே இருப்பார். அமெரிக்க படைகள் எப்படியும் தன்னைவந்து காப்பாற்றிவிடும் அதுஇதுவென்று பிதற்ற ஆரம்பிப்பார். தப்பித்தபிறகும் அதே மனநிலை தொடரும். 

Detached from reality, False hope - இரண்டுமே மிகக்கொடுமையானது + ஆபத்தானது. ஆபத்து - அந்த மனநிலையில் இருப்பவர்களுக்கும், அவர்களை சார்ந்தவர்களுக்கும். ஒருவேளை பெரிய அதிகாரத்தில் இருப்பவர்களானால் அந்த ஆபத்தின் வீரியம் கூடிக்கொண்டேபோகும். Confront the reality. That's the key brother. ஆப்ட்டிமிஸ்ட்காக இருப்பதில் ஒரு சிக்கலும் கிடையாது, provided - நிதர்சனத்திலிருந்து விலகிச்செல்லாதவரை. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், Pragmatism. இந்த விஷயம் தற்போது சாத்தியமா, எந்தளவுக்கு பயன்தரும், எதிர்காலத்தில் எந்தமாதிரி விளைவுகள் ஏற்படும், இதுபோன்ற திட்டங்கள், இதுவரை எப்படியான பலன்களை தந்திருக்கின்றன, அத்திட்டங்களை, அதை செயல்படுத்தும்விதத்தை - நாம் எவ்வாறு கையாண்டோம். இதையெல்லாம் யோசிப்பது எவ்வளவு முக்கியம். ஆனால், இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் பேசாமல் விவசாயிகள் முதல் வறட்சி பாதிப்பிற்குள்ளான பகுதிவாழ் மக்கள் வரை - அனைவரையும், நதிநீர் இணைப்பு திட்டம் மட்டும் வந்துவிட்டால் எல்லா பிரச்சனைகளும் தீர்ந்தது என்று நம்பவைக்கும் முயற்சி தொடர்ந்து ஜோராக நடந்துகொண்டிருக்கிறது. இந்த false hopeபைத்தான் ஆபத்தானது என்கிறேன். உதாரணத்திற்கு, போனமாதம் அஸாமில் கடும்வெள்ளமேற்ப்பட்டது. இந்தசமயத்தில்தான், River Interlinking Projectன் முக்கிய phaseஸான Ken - Betwa link பற்றி அறிவிப்புவருகிறது. கூடவே, அஸாம் மாநிலத்தில் ஏற்படும் வெள்ளங்களை தடுக்க இந்தத்திட்டத்தால் மட்டுமே முடியும் என்பதைப்போன்ற பேச்சுகளும். ஆனால் - reality?. இதுதான் ரியாலிட்டி. அஸாம் மட்டுமல்ல. நாட்டின் பலபகுதிகளிலும் நிர்வாக சீர்கேடு, over exploitation of resources, நாட்டின் வளர்சிக்காக என்ற பெயரில் நடக்கும் natural resources சார்ந்த கூத்துகள் - தன்போக்கில் நடந்துகொண்டே இருக்கின்றன/இனியும் நடக்கும். ஆனால், அதையெல்லாம் கணக்கிலெடுக்காமல் ஜக்கி  முதல் ரஜினி, மயில்சாமி மாதிரியான ஆட்கள்வரை நதிகள் இணைப்பு அதுஇதுவென்று நமக்கு பாடமெடுக்கும்பொழுது...it's like, an assault on our sanity. இதைக்கூட போய்த்தொலைகிறது என்று விட்டுத்தள்ளுவோம். விவசாயிகள், மக்களுக்கு எப்பேர்பட்ட நம்பிக்கையை (தெரிந்தோ தெரியாமலோ) விதைக்கிறார்கள் ? அதான் இதிலிருக்கும் மிகப்பெரிய சிக்கல்.

Indian Rivers Inter-link:


தேசிய நதிநீர் இணைப்பு (Indian Rivers inter-link) - இதன் டெக்னிகல் பெயர், Inter Basin Water Transfer (IBWT) என்பதே. இதைச் செயல்படுத்தும் அமைப்பு, infact இதற்காகவே ஏற்படுத்தப்பட்ட அமைப்புதான் National Water Development Agency (NWDA). இந்த திட்டத்தின் சுருக்கமான வரலாறு.
இந்த வெட்டிக்கதையெல்லாம் எதற்கு. 100 வருடங்களாக இந்த ஐடியா இங்கே புழங்கிக்கொண்டிருக்கிறதென்றால் சும்மாவா ? இத்திட்டத்தின் Pros and Cons என்னென்ன ? எப்பொழுது திட்டம் நிறைவடையும் ? எல்லாவற்றையும்விட முக்கியமானது. தமிழனாக, தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் ? இதையெல்லாம் விட்டுவிட்டு கண்ட கதையையும் புலம்பல்களையும்...நிற்க: அவற்றையெல்லாம்பற்றி பேசுவதற்கு முன், இந்தியாவின் தற்போதைய நிலை, இத்திட்டத்திற்கான அவசியம் - இரண்டும் முக்கியமல்லவா.

Floods - Droughts - Inconsistent rainfall:

எளிமையான, அடிப்படை விஷயத்திலிருந்து ஆரம்பிப்போம். மழை. பெரிய கண்டுபிடிப்பெல்லாம் ஒன்றுமில்லை. அனைவருமே கவனித்திருக்கக்கூடும். இந்தியாவின் சமச்சீரற்ற மழை அளவை. இந்த Post Monsoon Rainfall mapகளின்(Oct, Nov, Dec) மூலம் எளிதாக இதனை புரிந்துகொள்ள முடியும்(ஏன் post-monsoon rainfall முக்கியமானதென்றால் இந்தியாவின் 70% மழைக்கு monsoonனே காரணம். விவசாயம் முதல் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுவரை அனைத்துமே மான்சூனை நம்பியேயிருக்கின்றன).

2016ல் குஜராத், ராஜஸ்தான் பகுதிகளில் அதிக்கப்படியான மழை. 2015ல் 
நிலைமை தலைகீழ். தென்னிந்தியா மட்டும் எந்தவிதத்தில் குறைச்சல் ? இங்கும் அதே நிலைமைதான்.

இந்திய மழை - மிகவும் நக்கல் பிடித்தது. கடந்த  பல decadeகளாக அதன் நக்கல்தனம் கூடிக்கொண்டே போகிறதே தவிர, குறைந்தபாடில்லை. பருவமழையை எடுத்துக்கொண்டால், ஒன்றிரண்டு நாளில் மொத்தமாக கொட்டித்தீர்க்கும். இல்லாவிட்டால், வழக்கத்தைவிட கம்மியாக பெய்யும். நாம் சுதாரிப்பாக முன்னேற்பாடுகளை செய்யாவிட்டால், கஷ்டம். கடந்த பத்தாண்டுகளில் தென்னிந்தியாவை எடுத்துக்கொண்டால், எத்தனை பருவமழைகள் பொய்த்துப்போயிருக்குமென்று நினைக்கிறீர்கள்? (பருவமழை எவ்வளவு முக்கியத்துவம்வாய்ந்ததென்று தெரிந்துகொள்ள - How does the monsoon affect the economy)


தென்னிந்தியாவில்தான் இந்த நிலையென்றால், இந்தியாவின் பிற பகுதிகளில் நிலைமை இன்னும் மோசம். ஒன்று, மழையேயில்லாமல் கடும் வறட்சி நிலவும் அல்லது பெருமழை காரணமாக வெள்ளம் ஏற்படும். போனவருடம், பெரும்பாலும் மழையில்லாமல் வறட்சி நிலவும் ராஜஸ்தான் – குஜராத் பகுதிகளில் பெருமழை பெய்து – வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது (கீழுள்ள Map). அதுபோக, வழக்கம்போல் – அஸாம், பிஹார் பகுதிகளில் கடும் வெள்ளம். இன்னொரு பக்கம் - 2015,  வெள்ளம்  வழிந்தோடும் செழிப்பான ஒரிஸாவின் சில பகுதிகளில் வறட்சி நிலவியது. 2016, மகாராஷ்டிராவின் பலபகுதிகளில் கடும்வறட்சி காரணமாக ஹாஸ்பிட்டல்களைக்கூட மூடும் நிலை ஏற்பட்டது.
இந்தியா மட்டுமல்ல, பெரும்பாலான தெற்காசிய நாடுகளில் இதே நிலைமைதான். Erratic rainfall pattern.---------------------

அடுத்ததாக, நீர்த்தேவை. 1950’s – 2010. அறுபதே ஆண்டுகள். இந்தியாவின் Per Capita Water Availability, 70% சரிந்துள்ளது. மிகமிக மோசமான சரிவிது. Per Capita Storageலும் இந்தியா மிகமோசமான நிலைமையில் உள்ளது (1950’sல் 15 BCMமாக இருந்தது. இன்று 200 BCMக்கு உயர்ந்துள்ளது). Dam போன்ற அமைப்புகளின் மூலம் நீரை சேமித்தாலொழிய Per Capita Storageயை உயர்த்த முடியாது என்று ஒரு தரப்பினர் உறுதியாக நம்புகிறார்கள்.மழை அளவு, டேம்களின் நீரளவு, Water availability - எல்லாவற்றிலும் இந்தியா முழுக்கவே (obviously) சமச்சீரற்ற நிலைமையே நிலவுகிறது. Brahmaputra: 14057 cu m/year என்றிருக்கும் Per Capita Water availability, 2000கிமீகள் தாண்டியிருக்கும் Sabarmati பகுதியில் 307 cu m/year என்றிருக்கிறது. அவ்வளவு ஏன்...தமிழ்நாட்டைப் பாருங்கள். காவெரி -  கன்னியாகுமரி, இரண்டுக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள். ஆக, விவசாயத்திலிருந்து - வறட்சிவரை, பல வாழ்வாதாரப் பிரச்சனைகளை சமாளிக்க நதிகளை இணைப்பதே மிகச்சிறந்த வழியென்று அரசுகளும் + பல அறிஞர்களும் + பெரும்பான்மையான விவசாயிகளும் + அநேக மக்களும் நம்புகின்றனர். மேலே பார்த்தவற்றின் மொத்த தொகுப்பாக, இந்த இமேஜை எடுத்துக்கொள்ளலாம்.

மேலே பேசிய பல பிரச்சனைகளை பெருமளவில் நிவர்த்திசெய்ய இந்த inter-linking of rivers projectடால் மட்டுமே முடியுமென்று பலரும் பல்வேறு தளத்தில், கோணத்தில் நம்புகிறார்கள். ஆனால் - திட்டமே பிரச்சனைக்குரியதாக இருந்தால் ? ஏற்கனவே நிலவும் சிக்கல்களை மேலும்  விஸ்தாரமாக்கினால் ? பேசுவோம்.

இந்த IBWT திட்டத்தின் crux என்ன ?

பெயரை வைத்தே ஒரு ஐடியா கிடைத்திருக்குமென்று நினைக்கிறேன். Inter Basin Water Transfer. ஆறு வழக்கத்தைவிட அதிகமான நீர்வரத்தை சந்திக்கும்போது வெள்ளம் ஏற்படும். வெள்ளம், ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் பாயும் அல்லது கடலில் கலக்கும். இந்த அதிகப்படியான நீர்வரத்தை (Surplus) வறட்சியடைந்த/நீர்வரத்து கம்மியாக உள்ள (deficitஆறுகளுக்கு திருப்பிவிட்டால் ? அதுபோக, அங்கங்கே டேம்கள் கட்டி தண்ணீரை சேமித்துவைப்பதோடு, அதன்மூலம் hydroelectricityயை உற்பத்தி செய்ய முடியும்தானே. நல்ல ஐடியா!

      (படத்தில் red stretch - இரண்டு ஆறுகளை இணைக்கப்போகும் canal)

இந்தியாவின் இமயமலை பகுதிகளின் 14 நதிகள் + மற்ற பகுதிகளின் 16 நதிகள், இவற்றை கால்வாய்கள் மூலம் இணைப்பது. ஒவ்வொரு கால்வாய்களின் இடையே dams கட்டுவதன் மூலம், அந்தந்த damகள் அமையும் சுற்றுப்புற ஊர்களின் நீர்த்தேவையை பூர்த்தி செய்வது. இப்படியாக 30 கால்வாய்களும், 3000 டேம்களும் கட்டப்படும் என்று திட்டமிட்டுள்ளனர். 

இத்திட்டத்தின் Pros என சுட்டிக்காட்டப்படுபவைகள்


Surplus/Deficit Water:

திட்டத்தின் மிகமுக்கியமான, அடிப்படையான விஷயம் – Surplus water. முதல் சிக்கலே இங்கிருந்துதான் தொடங்குகிறது. பேப்பரில் பார்க்க, படுபக்காவான திட்டம்போலத் தெரியும். அதிகப்படியான நீர்வரத்து (Surplus) உள்ள நதிகளிலிருந்து நீர்வரத்து கம்மியான(Deficit) ஆறுகளுக்கு கொண்டுசெல்வது. லாஜிக் அருமை. ஆனால், இந்த Surplus – Deficit எப்படி கணக்கிட்டார்கள் ? அதற்கான அளவீடுகள் என்ன ? யாருக்குமே தெரியாது. அரசு டாக்குமென்ட்களில் இதற்கான தெளிவான விளக்கங்கள் இல்லை. பொத்தாம்பொதுவாக – மழைக்காலங்களில் ஆறுகளில் ஏற்படும் வெள்ளத்தை வைத்து ஒரு கணக்கு சொல்கிறார்கள். இதென்ன குளமா குட்டையா - நீர் கொள்ளளவு/வரத்தை கணக்கிட?. சரி, அப்படியே Surplusசென்று வைத்துக்கொண்டாலும் திட்டத்தின் documentகளில் சொல்லப்படும் நீரளவை வைத்துப்பார்த்தால், deficit basinகளுக்கு போதியளவும் கிடைக்காது. வெள்ளத்தையும் தடுக்க போதுமானதாக இருக்காது.

நதிகள்/ஆறுகளைப் பொறுத்தவரை "Surplus" என்றெல்லாம் ஒன்றுமேயில்லை. உலகின் எந்த நதியாக/ஆறாக இருந்தாலும் வருடத்திற்கு ஒன்றிரண்டு முறைகள் வெள்ளத்தை ஏற்படுத்தும் என்று கணக்கிடப்பட்டுள்ளது(அந்த வெள்ளம் ஏன் முக்கியம் என்பதுபற்றி கொஞ்சநேரங்கழித்து பார்ப்போம்). அந்த வெள்ளத்தையெல்லாம் surplus என்று கணக்கிலெடுப்பது சரியாக வருமா ?. இதுவொரு பக்கமிருக்க, வெள்ளம் - மிகபெரியளவில் இமயமலையிலிருந்து உற்பத்தியாகும் கங்கை, பிரம்மபுத்ரா மாதிரியான நதிகளில்தான் வருடாவருடம் தவறாமல் ஏற்படுகிறது. கடுமையான சேதங்களை உண்டாக்குகிறது.

இமயமலையில் உற்பத்தியாகும் ஆறுகளை எடுத்துக்கொண்டால், பனி உருகுதல்தான் (கொஞ்சம் மழை)  கங்கை, பிரம்மபுத்ரா, அதன் கிளை ஆறுகள் – எல்லாவற்றிக்குமான மூலம். இந்த ஆறுகள்/நதிகளெல்லாம் மழையை சார்ந்திருக்க வேண்டியே அவசியமேயில்லை. இதெல்லாம் வற்றாத ஆறுகள்/நதிகள். ஆனால், Peninsular rivers (காவெரி, கிருஷ்ணா, கோதாவரி) இதெல்லாம் முழுக்க முழுக்க மழையை மட்டுமே நம்பியிருக்கும் நதிகள்/ஆறுகள்.  Of course, மழையை என்றால் - மான்சூனை என்று பொருள்.


இதைத்தாண்டி மற்ற Surplus ஆறுகளில் - Surplus நீர்வரத்துண்டுயென்று இவர்கள் சொல்லும் Peninsular ஆறுகளில், ஏற்கனவே மழையளவு குறைவாகிக்கொண்டே வருகிறது. Surplus River Basins Face Drop In Rainfall: IIT Studyஉதாரணமாக, தமிழ்நாட்டில் Cauvery-Vaigai-Gundar இணைப்புத்திட்டம். மஹாநதி – கோதவரியிலிருந்து surplus நீரை இங்கே திருப்பிவிடும் திட்டம். ஏற்கனவே மஹாநதி – கோதவரி பகுதிகளில் நீர்வரத்து குறைவு (IIT Study linkல் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது). பிறகெப்படி சர்ப்லஸ்?. அப்படியே சர்ப்லஸ் நீர் வருகிறதென்று வைத்துக்கொள்வோம். திருப்பிவிடப்படும் நீரில் எத்தனை சதவீதம் இங்குவந்து சேரும் ? எவ்வளவுதூரம் அந்த நிலங்கள் நீரை உறிஞ்சிக்கொள்ளும், எவ்வளவு ஆவியாகும்...ப்ராக்ட்டிகலாக இதையெல்லாம் கணக்கெடுப்பது மிகமிகக்கஷ்டம்.  Hydrogeology அவ்வளவு எளிதானதன்று.

வெள்ளத்திற்கு வருவோம். Yes. வெள்ளத்தால் நமக்கு மிகப்பெரிய சேதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் இதற்கு இன்னொரு பக்கமும் உண்டு. யோசித்துப்பாருங்கள். இமயமலையிலிருந்து, கிட்டத்தட்ட 8Km உயரத்திலிருந்து கிளம்பும் ஆறுகள் எத்தனை வீரியத்துடன் கீழேவரும் ? அந்த வேகத்தில் வழியில் ஏகப்பட்ட செழிப்பான மண்வளத்தை அம்மலையிலிருந்து கீழே ஆறுகளுக்கு கொண்டவந்துசேர்க்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் flow இது. நதிகள்/ஆறுகளில் ஏற்படும் வெள்ளம் - இந்த அட்டகாசமான மண்வளத்தை மேற்கொண்டு ஆறுகளை சுற்றியுள்ள பகுதிகளில் பரப்பிவிடுகிறது. நதிக்கரைகளில் நாகரீகம் தோன்றியது தற்செயல் கிடையாதே. இந்த வளம்தானே காரணம். Flood cycle என்பார்கள். உலகின் எந்த ஆறு/நதியாக இருந்தாலும் இந்த சுழற்சி இருந்துகொண்டேயிருக்கும். அது கங்கையாக இருந்தாலும், நைல் நதியாக இருந்தாலும், சீனாவின் துயரமென்று (சிலரால்) அழைக்கப்படும் Huang Heவாக இருந்தாலும் - இந்த நதிகளில் ஏற்படும் வெள்ளங்கள் மேற்கொண்டு அந்தப்பகுதிகளில் ஒருங்கே வளத்தையும் + நமக்கு சில இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. அவ்வளவுதூரம் போவானேன் ? ஏன் காவேரி டெல்டா பகுதியில் மட்டும் இவ்வளவு மண் வளங்கள் ?. 

1. How Floods Shaped Civilization

2. Floods play a vital role in ecosystems – it’s time to get out of their way

"Flood pulse concept" - கங்கை போன்ற மிகப்பெரிய ஆறுகளுக்கு வெள்ளம் எந்தளவு இயற்கையான நிகழ்வு, எவ்வளவு முக்கியம் என்பதை பற்றியெல்லாம் நம்மைவிட பிறநாட்டினர் அதிகளவில் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விக்கி பேஜிலேயே இதற்கான தெளிவான விளக்கமுண்டு. மீன்கள். உலகின் பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தால் மீன்வளம் பலமடங்கு அதிகரிப்பதுண்டு. சில இடங்களில் குறைவதும் உண்டு. தேவையான nutrients + ecology அமைந்துவிட்டால், மீன்கள் கூட்டம் மளமளவென்று பெருக ஆரம்பிக்கும். பின்பு மீன்களை இரையாகக்கொள்ளும் உயிரினங்கள் வளர ஆரம்பிக்கும். காலபோக்கில் அதகளமான food chain உருவாகிவிடும். இதுவரை அப்படித்தான் உருவாகியிருக்கிறது.


அப்படியானால் வெள்ளங்களால் நமக்கேற்படும் இழப்புகள் ? அதை கண்டுகொள்ளாமல்விட முடியுமா ? அப்படி யாரும் சொல்லவில்லையே. நதிகள்/ஆறுகளில் ஏற்படும் வெள்ளத்தை வில்லனாக சித்தரிப்பது/பார்ப்பதுதான் இடிக்கிறது. அது காலங்காலமாக மனித இனம் தோன்றும் முன்னரே நடந்துவரும் இயற்கையான நிகழ்வுகளில் ஒன்று. இதுபோன்ற வெள்ளங்களை நமக்கு சாதகமாக "Controlled flooding"ன் மூலம் பயன்படுத்திக்கொள்ளும் உத்தியை உலகின் பலநாடுகளும் கடைபிடிக்கத்தொடங்கியிருக்கின்றனர். இதன்மூலம், இயற்கையாகவே அப்பகுதிகளின் மண்வளத்தையும் + நீர் வளத்தையும் + மீன்கள் வளத்தையும் அட்டகாசமாக அதிகரிக்க முடியும். அதையும்தாண்டி நம்மூரில் நடக்கும் deforestation, exploitation, encroachmentsகளை கட்டுக்குள் கொண்டுவந்தாலே வெள்ளத்தை பெருமளவில் கட்டுபடுத்த முடியும். ஆர்வமிருப்பின் இந்த பேப்பரை, குறிப்பாக River regulation and experimental floods படிக்கவும்.


------------------

இத்திட்டத்தின் ஆதரவாளர்கள், அதன் எதிர்பாளர்களைப் பார்த்து தவறாமல் கேட்கும்கேள்வி: "இந்த திட்டத்தின் மூலம் வறட்சி குறையும், விவசாயத்திற்கான நீர்வளம் அதிகரிக்கும், அதன்மூலம் விவசாயம் வளரும். இதெல்லாம் நடக்காது/சரிவராது என்பதெல்லாம் தேவையில்லாத பயங்கள். நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன ?".

அதே கேள்விகளைத்தான் எதிர்ப்பாளர்கள், திட்டத்தின் ஆதரவாளர்களைப்பார்த்து கேட்கிறார்கள். Infact, இந்தத்திட்டமே முழுக்க முழுக்க 
arithmeticகை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. தோராயமாக இவ்வளவு தண்ணீர் வருகிறது - அதை இங்கே, திருப்பிவிட்டால் - இத்தனை மக்கள் பயனடைவார்கள். அவ்வளவுதான். இதெல்லாம் Predictions. இதெல்லாம் நடக்கும் என்பதற்கு என்ன ஆதாரங்கள் இவர்களிடமுண்டு ? NWAD websiteல் இத்திட்ட documentகளில் கொடுக்கப்படும் பிறநாட்டில் நடந்த, இதேமாதிரியான திட்டங்கள் உதாரணங்களில் பல flaws உண்டு. அவையெல்லாம் பெரும்பாலும் மிகமிக சொற்பஅளவிலான கிலோமீட்டர்களை மட்டுமே இணைக்கும் திட்டங்கள். மிகப்பெரிய உதாரணமாக இவர்கள் காண்பிக்கும் சீனாவின்  Yangtze River: South–North Water Transfer Project ஒரு failure என்பதை இத்தனைகாலம் ஒப்புக்கொள்ளாத சீன அரசே இப்பொழுது இதைப்பற்றி பேச ஆரம்பித்திருக்கிறது. 

China: Yangtze River, South–North Water Transfer Project

இத்திட்டம், சேர்மன் மாவோ காலத்திலயே பேசப்பட்ட திட்டம். சீனாவிலும் கிட்டத்தட்ட இந்தியாவைப் போன்ற நிலைமைதான். ஆசியாவின் (உலகின் மூன்றாவது) மிகநீண்ட ஆறான   Yangtzeவின் புண்ணியத்தால் சீனாவின் தெற்குப்பகுதிகளில் தண்ணீர் பிரச்சனையில்லை. ஆனால், வடக்கு பகுதிளில் நீர்த்தட்டுபாடு, கடும்வறட்சி. இதை சமாளிக்க - மூன்று routeகளில் ஆறுகளை இணைக்கும் திட்டம் தொடங்கி இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் திட்டத்தின்படி திருப்பிவிடப்பட்ட நீர்செல்லும் பகுதியிலிருக்கும் மக்களின் நீர்த்தேவை ஓரளவு பூர்த்தியாகத் தொடங்கியது. ஆனால், சிலவருடங்களிலேயே சிக்கல் ஆரமபித்தது. Yangtze பேஸின் பகுதிகளில் மழை குறைவு + ஏகப்பட்ட டேம்கள் + இயற்கையான நீர்வழியை மாற்றியதன்விளைவு, உள்ளதும் போச்சு என்ற கதையாக Yangtzeவின் பகுதிலேயே 50 ஆண்டுகளாக இல்லாத வறட்சி. The Aral Sea Crisis:

Aral sea என்பது, கஜகிஸ்தான் - உஸ்பெகிஸ்தானுக்கு இடையிலிருக்கும் ஒரு ஏரி. ஏரிக்கு ஏன் Sea என்று பெயர் ? Obviously, size. 68,000 sq.km. பிரம்மாண்டத்தின் மறுஉருவம். அத்தகைய  ஏரிக்கு ஏகப்பட்ட ஆறுகளிலிருந்து நீர்வரத்து உண்டு. இதன் காரணமாக, Aral Seaயை சுற்றியுள்ள பகுதிளில் மீன்வளம் அளப்பரியது. 1930களில், ரஷ்ய அரசு - இந்த ஏரிக்குதான் இவ்வளவு அளவுக்கதிகமான (Surplus) நீர்வரத்து உள்ளதே. அதை கொஞ்சம் திசைதிருப்பி - மற்ற ஊர் மக்களுக்கும், விவசாயத்திற்கும் (குறிப்பாக - காட்டன்) பயன்படுத்தலாமே என்று கணக்கிட்டு Amu Darya/Syr Darya என்று ஆரல் ஏரியின் முக்கிய நீர்வரத்து ஆறுகளை திசைதிருப்பிவிட்டது. அந்தகாலகட்டத்தில் நல்ல திட்டமாகவே தோன்றியிருக்கக்கூடும். 

ஆனால், 1970களில் நீர்வரத்து குறையத்தொடங்கியது. கொஞ்சகொஞ்சமாக Aral Sea சுருங்கி சுருங்கி, இன்று 90% நீரேயில்லாமல் - கிட்டத்தட்ட ஒரு குட்டையாகவே மாறிவிட்டது. One of the planet's worst environmental disasters என்று பல அறிஞர்களும் சொல்கிறார்கள் (Watch: Aral Sea: Man-made environmental disaster)


விஷயம் இதோடு முடியவில்லை. திருப்பிவிடப்பட்ட நீரைநம்பி காட்டன் உட்பட இன்னபிற விவசாயங்கள் ஆரம்பிக்கப்பட்டது என்று பார்த்தோமே, அதெல்லாமே அந்தந்த பகுதிகளில் நசிந்துபோய்விட்டது. அந்த இடங்களில் வேறுவகை பயிர்களும் விளைவது கஷ்டமாக உள்ளது. நிலத்தின்தன்மையே 60 ஆண்டுகளில் முற்றிலுமாக மாறிவிட்டதே. பின்பு எங்கிருந்து பிறபயிர்கள் வளரும் ? என்ன நோக்கத்திற்காக - தண்ணீர் திருப்பிவிடப்பட்டதோ அதுவே அடிப்பட்டுபோய்விட்டது. (ஆனாலும் - ஒரு நல்ல செய்தி உண்டு)

Reservoir-induced Seismicity:

பல geologistகளுக்கே இதுபற்றி தெரியாது. Seismicity = frequency and distribution of earthquakes in a particular region. இந்த seismicity/நில அதிர்வுகள்/பூகம்பம், இயற்கையாக - geology சார்ந்து, Faulting காரணமாக நிகழலாம். அதுபோக மனித நடவடிக்கைகள், பாறையை குண்டு வைத்து தகர்த்தல், mining activities போன்ற சில காரணங்களாலும் நிகழலலாம் (intensity கம்மியாக இருக்கும்). இதில், damகளும் அடக்கம். Late 1960's தொடங்கித்தான் இந்த RIS (Reservoir-induced Seismicity) சார்ந்து பரவலாக ஆராய்ச்சிகள் ஆரம்பிக்கப்படலாயிற்று. இதன் அடிப்படை சைன்ஸ் - பூகம்பம்/நிலநடுக்கம்/அதிர்வு, பூமிக்கடியிலிருக்கும் fault'sகளின் நகர்தலால் ஏற்படும். இந்த fault's நகரும்போது energy வெளிப்படும் (அதுதான் பூகம்பம். Read). RISக்கு காரணமாக சொல்லப்படுவது, நகரலாமா - வேண்டாமா என்ற யோசனையிலிருக்கும் fault zoneகளில் மிகப்பெரிய டேம்களை கட்டும்போது டேம்களில் தேங்கியிருக்கும் நீர் அதிகளவில் pressureரை அந்த faultகளின் மேல் செலுத்த ஆரம்பிக்கின்றன. மேலும் உள்ளே கசியும் நீரும் சேர்ந்து - அந்த faultகள நகர்த்தி அதிர்வுகளை உண்டாக்கின்றன. இதை ஒருசாரர் ஏற்கவில்லையென்றாலும், தொடர்ச்சியாக இந்த கோணத்தில் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன.

இந்தியாவின் 1967, Koyna நிலநடுக்கும் அப்படியான ஒன்று என்று ஒரு தரப்பினர் உறுதியாக நம்புகிறார்கள். இன்னொரு தரப்பினர், முற்றிலுமாக மறுக்கிறார்கள். ஆனால் -  // 1967 -  2015, as many as 1,19,934 earthquakes of different magnitudes have been recorded at the Koyna earthquake monitoring centre // 2017லயும் சேர்த்து, நிச்சயமாக அந்த ஏரியாவில் ஆயிரக்கணக்கான நிலஅதிர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. நானே நேரடியாக அந்த dataக்களை பார்த்துள்ளேன் (Confidential என்பதால், எங்கே - எப்படியென்று சொல்ல முடியாது). 

Koyna earthquakes triggered by reservoir, claim seismologist

இந்தத்தியரியை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில் - இரண்டு மாதங்கள் முன்பு, Koynaவில் ஒரு ஆராய்ச்சி துவங்கியுள்ளது.

Why is India drilling deep into an earthquake hotspot?Koynaவைப் விட்டுத்தள்ளுங்கள். நம் அண்ணன். சீனா - கொஞ்சநேரம் முன்னே, Yangtze River, South–North Water Transfer Project பற்றி பார்த்தோமே. அதில் கட்டப்பட்ட, World's biggest ever hydroelectric dam தான் - Three Gorges dam. கட்டி முடிக்க கிட்டத்தட்ட பத்தாண்டுகளாயிற்று. அந்த damமின் காரணமாக, எப்பொழுதுமே தங்களை விட்டுக்கொடுக்காத சீன அரசே - இந்த டேமினால் அந்தப்பகுதியில் நிலஅதிர்வுகள் அதிகரித்திருக்கின்றன என்பதை ஒருமாதிரியாக ஒப்புக்கொண்டுள்ளது.

2. Did a giant dam cause China’s latest earthquake?

Ofcourse, RIS - மிகப்பெரிய டேம்களில் மட்டுமே சாத்தியமென்றாலும் "seismic activity" அதிகமாகயிருக்கும் இடங்களில் சின்னதோ/பெரியதோ டேம்கள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை துல்லியாமாக யாராலும் கூறமுடியாது. இதன் காரணமாகவே இந்தியாவில் இந்த inter-linking projectக்காக இமயமலைப்பகுதிகளில் கட்டப்படப்போகும் டேம்களை geological aspectல் கலக்கத்துடன் பார்க்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அந்தப்பகுதி ஏற்கனவே seismically very active. அந்தப்பகுதியில் எந்தளவிற்கு பூகம்பம் வரும், அதை தாங்க வேண்டுமென்றால் எப்படியான டேம்/கட்டிட அமைப்பு இருக்க வேண்டும், இதெல்லாம் பக்கவாக ஸ்டடி செய்யப்பட்டே இத்திட்டம் ஆரம்பிக்கப்படும். ஆனாலும், அதெல்லாம் predictions மட்டுமே. Geologyயை பொறுத்தமட்டில் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு கீழே, பூமிக்கடியில் என்ன நடக்கிறது/நடக்கப்போகிறதென்று யாராலும் உறுதியாக கூறயியலாது. நமது limitationகளில் ஒன்று. ஒருவேளை, எதாவது அசம்பாவிதம் நடந்தால் ?. அந்தளவுக்கு ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது ?. அதுதான் இங்கெழும் கேள்வி.

Inter-state Relations:

25-30 ஆண்டுகள்கழித்து திட்டம் நிறைவேறியது என்று வைத்துக்கொள்வோம். "Surplus" நீரை ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு முறையாக வழங்குமென்பதற்கு யார் உத்தரவாதம் தருவது ?. இதை டைப்படித்துக்கொண்டிருக்கும்போதே, நியூஸில் "முல்லை - பெரியார் அணைப்பகுதியில் வாகன நிறுத்தப்பிரச்சனையை இரு மாநிலங்களும் பேசித்தீர்த்துக்கொள்ள வேன்றுமென்று கோர்ட் சொல்லியது" என்று செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. I mean, "வாகன நிறுத்த பிரச்சனை...". Insane. அதற்கே கோர்ட்வரை போகவேண்டியுள்ளது. இந்த லட்சணத்தில் நீர் பகிர்தல் - அடிதடி வெட்டுக்குத்துதான். // Many projects are already stuck because of disputes between states, and these will only increase, say experts // - இந்தக் கட்டுரையே போதுமானது. மாநிலங்களுக்கிடையேயான தற்போதையே நிலைமையை விளக்க.

China - India - Bangladesh Relations:

India X China, இரண்டு நாடுகளுமே பெரிய hydroelectric போரில் இறங்கியுள்ளது. Ofcourse, சீனாவுடன் நம்மால் போட்டிபோட முடியாது (சீனா, ஒற்றை அதிகாரமுள்ள நாடு + யாருக்கும் எந்த பதிலும் அவர்கள் சொல்லத் தேவையில்லை). இந்தப்போட்டியினால் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியிருப்பது அருணாச்சல பிரதேசம் தான். கேரளாவை "கடவுளின் தேசம்" என்கிறார்கள். என்னைக்கேட்டால் அருணாச்சல பிரதேசம் தான் "கடவுளின் தேசம்". 

ஒருபக்கம் சீனா மறுபக்கம் இந்தியா, மாற்றிமாற்றி டேம்கள் கட்டும்முனைப்பில் ஈடுபட்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னெவென்றால், பிரம்மபுத்ராவில் சீனா கட்டப்போகும் டேம்களால் தங்கள் ஏரியாவுக்குவரும் நீர்வரத்து குறைந்துவிடுமென்று இந்தியா கடுமையான எதிர்ப்புகுரலை பதிவு செய்துவரும் அதேசமயத்தில், தாங்கள் கட்டப்போகும் டேம்களால் பங்களாதேஷ்க்கச் செல்லும் நீர்வரத்து குறைவதைப்பற்றி கவலையேபடவில்லை. இந்த டேம்கள் பற்றியும், Inter-linking project பற்றியும் பங்களாதேஷ் பலமான எதிர்ப்புகளை தெரிவித்துவந்தாலும் இந்தியா அதெயெல்லாம் காதுகொடுத்து கேட்பதாகயில்லை. எளிதாக புரிய வைக்க வேண்டுமென்றால் ஆந்திரா - கர்நாடாகா - தமிழ்நாடு - புதிய அணைகள் கதையை ஞாபகப்படுத்திக்கொள்ளவும். தமிழ்நாடு, riparian zoneல் இருப்பதைப்போல - பங்களாதேஷ், riparian பகுதியில் உள்ளது. Simple.

1. China and India 'water grab' dams put ecology of Himalayas in danger


2. Water Wars: China, India and the Great Dam Rush

3. India plans to 'divert rivers' to fight drought; Bangladesh cries foul

Environmental Disaster - Migration:

எத்தனை டேம்கள் - எவ்வளவு pollution, எவ்வளவு தூரம் நிலங்களை ஆக்கிரமிக்க வேண்டியிருக்கும், அதில் காடுகள் எத்தனை, புதிதாக காடுகளுக்கு நடுவில் கால்வாயை கொண்டுசெல்வது சூழலியலை எவ்வளவு பாதிக்கும்...ம்ஹும். இதுபற்றியெல்லாம் அரசாங்கம் கவலைப்படுவதாய் தெரியவில்லை. போனமாதம் தொடங்கியிருக்கும் Ken - Betwa Porjectடை எடுத்துக்கொள்வோமே. Panna tiger reserveவின் ஒரு பகுதியை இதற்காக கையகப்படுத்த வேண்டியுள்ளது. அங்கேயிருக்கும் புலிகள் முதல் வல்லூறுகள் வரை என்னாவது என்ற கேள்விக்கு...அரசாங்கம் அதற்கான திட்டங்கள் வைத்துள்ளது என்ற மொட்டை பதில் மட்டுமே மிஞ்சுகிறது. புலிகள் எல்லாவற்றையும் பிடித்து அந்தப்பக்கம் விடுவார்களோ ?. அதுசரி, இந்தத் திட்டத்திற்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் environmental boardலிருந்து clearance கிடைத்தது ?காடு என்பது வெறும் புலி, கரடி, பறவைகள் மட்டும் கிடையாதே. ஆறு/நதி என்பதே ஒரு உயிர்சூழல். கங்கையிலிருக்கும் சிலவகை மீன்கள், நத்தைகள், தவளைகள், பிற நீர்வாழ் உயிரினங்கள் கோதாவரியில் கிடையாது. கோதாவரியிலிருந்து காவேரிக்கு வந்தால்...ஓவ்வொரு சூழலுக்கென்றே தனித்துவமான உயிரினங்கள் உண்டு. அதை சர்வசாதாரணமாக களைத்துப்போடுவது மிகச்சுலபம். ஆனால் மீட்பது மிகமிகமிகக்கடினமான, almost நடக்காத காரியம். உயிரினங்களைத்தாண்டி, பாறை அமைப்புகளில்கூட அந்ததந்த நிலப்பரப்பிற்கும்/சூழலியலுக்கும் தகுந்தமாதிரி uniquenessசோடு இருக்கும். //Vishal Verma, a teacher and a researcher in geology and palaeontology in Madhya Pradesh, translates it for the layperson: “These are very special rocks. The flowing rivers, along the sandstone mountains, create sand granules of various sizes. Because these are of different sizes, it traps not just air in between but also captures moisture. This, along with shallow waters near the river banks, becomes an important habitat for a number of reptiles. If a reservoir is built, these functions of the ecosystem are disturbed; these habitats would be disturbed " //. (Read). கீழேயிருக்கும் Wildlife reserves + அருகில் வரப்போகும் ப்ராஜெக்ட்களை பார்த்தாலே பகீர் என்கிறது. எவ்வளவு delicate system அது. ரொம்ப கேஷ்வலாக இதையெல்லாம் எடுத்துக்கொள்கிறோமா ?மக்கள் இடம்பெயர்தல், அது இன்னொரு கொடுமை. எத்தனை லட்சம் மக்கள் இடம்பெயர்வார்கள், அவர்களுக்கான இழப்பீடு எவ்வாறு தரப்படும் இதுபற்றியெல்லாம் மேலோட்டமான தகவல்கள் மட்டுமே கூறப்படுகிறது. Interlinking of rivers, or the fallacy of development agendas

In a nutshell...

1. நிச்சயமாக நல்ல நோக்கத்துடன்தான் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், intentionனுக்கும் executionனுக்கும் மலையளவு வித்தியாசம் உண்டல்லவா? 25-30 ஆண்டுகள், 6 லட்சம் கோடி - இத்தனையும் செய்து - திட்டம் முடிந்து உரிய பலனிருக்குமா என்றே தெரியாதபோது, இவ்வளவு ரிஸ்க் தேவையா? அப்படியே ரிஸ்க் எடுப்பதாயிருந்தாலும் at what cost ? சூழலியலை முற்றிலுமாக மாற்றிவிட்டால்...நிச்சயம் மீளமுடியாத irreversible விஷயமாயிற்றே இது.

2. If the cons outweighs pros, அப்படியொரு திட்டம் தேவையா ? அதையும்மீறி திட்டத்தை செயல்படுத்தினாலும், வறட்சி/வெள்ளம் கூடவே செய்யும் என்பதை மேலே China, Aral Sea போன்ற உதாரணங்கள் மூலம் பார்த்தோம். இன்னும் கூட - Tagus river Water ProjectLesotho Water Project - என்று பல உதாரணங்களை அடுக்கமுடியும். If something is defeating it's own purpose...ditch it.

3. அண்டை நாடுகளை விடுங்கள்; நாட்டிற்குள்ளாகவே ஒவ்வொரு மாநிலத்துக்கும் இடையே ஏற்கனவே நீர் பகிர்தலில் ஏகத்துக்கும் பிரச்சனை. அதையே - சுப்ரீம்கோர்ட் உட்பட - யாராலும் சுமூகமாக தீர்க்க முடியவில்லை. இவர்களை நம்பி...

4. நாட்டில் இவ்வளவு நீர்சார்ந்த பிரச்சனைகள் நிலவுகிறதே, அதற்கு என்னதான் தீர்வு ?...Well, இது ஒன்றுதான் தீர்வுவென்று யார் சொன்னது ? India has failed to make the most of the monsoon. இந்த மாதம்கூட சராசரி அளவைவிட பலமடங்கு தென்னிந்தியாவில் மழை கொட்டித்தீர்த்துள்ளது. ஆனால், இதை முறையாக சேமிக்க தெரியாதது யார் தவறு ? இந்த டேட்டாவின்படி இந்தியா வருடம்முழுவதும் பெய்யும்மழையில் வெறும் 6% மட்டுமே சேமிக்கிறது. வளர்ந்த நாடுகள 250% மழைநீரை சேமித்து வைக்கிறார்கள்.

5. அப்படியே திட்டம் நிறைவேறி நீர்வரத்து உள்ளதென்றே வைத்துக்கொள்வோம். இந்தியாவில் நீரை அதிகளவில் உபயோகப்படுத்தும் செக்டார் எது தெரியுமா ? விவசாயம். 85% - 90%. Crop patternகளைப் பொறுத்துதானே நீர் தேவை. Surplus நீர்வரத்து உள்ளதேயென்ற நம்பிக்கையில் பல மாநிலங்கள் பணப்பயிர்களான காட்டன், கரும்புகளுக்கு மாறினால் ? மேற்கொண்டு groundwater exploitation அதிகரிக்கவே செய்யும். திரும்ப முதலிலிருந்து cycle தொடரும். அவ்வளவே. கீழிருக்கும் டேட்டாவின் முக்கியத்துவம்புரிந்தால், அசல் பிரச்சனை எங்கிருக்கிறது என்று புரியும்.


இரண்டுநாட்கள் முன்புதான் The Hinduவில் இந்தக் கட்டுரை வந்தது. Sundarbans பற்றி. A fragile ark that shelters 2,626 creatures. Sundarbans, கங்கை + பிரம்மபுத்ரா டெல்டா பகுதி. அவ்வளவு delicate, fragile சூழலியல் நிறைந்த பகுதி. அந்த 9000 Sq.Kmல் எத்தனை உயிரினங்கள் (நமக்கு தெரிந்து) இருக்கின்றன தெரியுமா ?. 2626. அதில் பல அந்தப்பகுதியில் மட்டுமே வாழும் உயிரினங்கள் (endemic). அந்தப்பகுதியைச் சேர்ந்த Royal Bengal Tigers மட்டும்தான், உப்பு நீரில் புழங்கக்கூடிய ஒரே புலி இனம். மற்றும் adaptabilityக்கும் பெயர்போன புலிகள் அவை. தவளைகள், டால்பின்ஸ், மீன்கள், ஆமைகள், பல்லிகள், நண்டுகள் - அந்தப்பகுதியின் biosphereரை உலகின் பலநாடுகளை முனைப்புடன் கவனித்துவருகின்றனர். அந்த டெல்டா பகுதிக்கு வரும் நீரை - மக்களின் நன்மைக்காக  திசைதிருப்புகிறேன், டேம் கட்டுகிறேன் என்ற பெயரில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் இப்போதில்லாவிட்டாலும் சிலஆண்டுகள்கழித்தாவது பெரியவிலை கொடுக்க வேண்டியதிருக்கும். கடைசியில், எந்த மக்களுக்காக திட்டங்கள் கொண்டுவரப்பட்டதோ அவர்கள் தலையில்தான் எல்லா கஷ்டங்களும் வந்துவிடியும். ஆறுகள்/நதிகள் - இந்த சூழலியலின் முழுமையை நம்மால் ஒருநிலைக்குமேல் புரிந்துகொள்ள முடியாது. வாய்ப்பேயில்லை. இதைமட்டும் அவ்வப்போது நாம் ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

--------------------------

Since Aristotle, man has organized his knowledge vertically in separate and unrelated groups - Science, Religion, Sex, Relaxation, Work etc. Had man been able to see past this hypnotic way of thinking, to distrust it (as did Einstein), and to resystematize his knowledge so that it would all be related horizontally, he would now enjoy the perfect sanity which comes from being able to deal with his life in its entirety.

Recently, it has become possible for man to chemically alter his mental state and thus alter his point of view (that is, his own basic relation with the outside world which determines how he stores his information). He can restructure his thinking and change his language so that his thoughts bear more relation to his life and his problems, therefore approaching them more sanely.

It is this quest for pure sanity that forms the basis of the songs on this album.

- The Psychedelic Sounds of the 13th Floor Elevators


A map is not the territory, என் profession சார்ந்ததென்பதால் இந்த ஸ்டேட்மென்ட் மூலம் Alfred Korzybskiயின் பெயர் மட்டும் பரிட்சயம். மற்றபடி அவரைப்பற்றியோ அவரது semantics பற்றியோ ஒன்றுமே தெரியாது. ஆனால் இந்த mathematician/philosopherக்கு என்னைபோன்ற psychedelic rock இசைப்பிரியர்கள் பெரிதும் நன்றிக்கடன்பட்டிருக்கிறார்கள். இவரின் horizontal thinking வழிமுறையால் ஈர்க்கப்பட்ட ஒரு 23 வயது இளைஞன் (படிப்பு, Chemical Engineering + Psychology ) இந்த horizontal thinkingகை ராக் இசையின்மூலம் வெளிபடுத்தினால் எப்படியிருக்கும் என்று யோசித்ததின் விளைவு...The 13th Floor Elevators. அந்த இளைஞன் பெயர் - Tommy Hall.

Psychoactive plants/flowers வகைகள்...நமக்கு பரிட்சயம் இல்லாவிட்டாலும் (?) மதிகெட்டான் சோலை என்ற பெயரையாவது கேள்விப்பட்டிருப்போம். தேனி, கொடைக்கானல் என்று நம்மூரிலேயே பல இடங்கள் இந்தப்பெயருடைய சோலைகள் உண்டு. முன்பு காடுகள், காடுகளாகயிருந்தபொழுது இதுமாதிரியான இடங்களுக்குள் நுழைந்தால், கொஞ்சகொஞ்சமாக hallucinations வளர ஆரம்பிக்குமாம். ஆனால் நம்மால் அதை உணர முடியாது. ரொம்ப மெல்லமெல்லதான் அதன் வீரியம் செயல்பட ஆரம்பிக்கும். Psychedelic இசையின் முக்கிய வகைகளில் இதுவும் ஒன்று. ரொம்ப மெதுவாக ஆரம்பித்து...ஒரு grand climaxசை நோக்கி நகரும். இதுமாதிரியான இசை, போகப்'போக அதே patternனில் சிக்கக்கொண்டது. அதைவிட மோசம்....நம்மால் அடுத்து என்னமாதிரியான இசைக்கோர்ப்பு வரப்போகிறது என்று predict செய்யுமளவிற்கு repetitiveவான இசையாகப்போயிற்று. ஆனால், 13th Floor Elevatorsல் ஆரம்பித்து King Gizzard and Lizard Wizard வரை, இதற்கு நேர்மாறான poleல் இருந்து...எடுத்த உடனே பட்டென்று நமது அட்ரினலின் சுரப்பிகளுக்கு வேலைவைக்கும் இசை. என்னமாதிரியான இசையாகயிருந்தாலும் Psychedelic இசையைப் பொறுத்தவரை, it's not about the question of how but where?.

Mid-60களில் சைக்கடெலிக் ராக் இசை, அமெரிக்கவின் சில பகுதிகளில் தலையெடுக்கத் தொடங்கியதென்றாலும், முதன்முதலில் தங்களுது இசையை "Psychedelic music"கென்று வகைப்படுத்திய குழுவினரென்றால் அது The 13th Floor Elevators தான். இத்தனைக்கும் Tommy Hallக்கு முறையான இசைப்பயிற்சியென்று எதுவுமில்லை. ஆனால், psychic விஷயங்களின்மீது மட்டும் ஏகவெறி இருந்தது. அந்த psychic தன்மையை இசையில் கொண்டுவர அவர் தேர்ந்தெடுத்தவழி - வேறென்ன, அந்த காலத்தில் ஏகப்பட்ட இசை ஆளுமைகள் நம்பிய அதே வழிதான் - LSD. அவர்களது குழு, தங்களது முதல் jamming sessionனை ஆரம்பிக்கும் முன்னர் ஒரு புனித LSD பயணம் மேற்கொண்டனர். இதுவும் போதாதென்று, 13th Floor Elevatorன் ஒவ்வொரு மெம்பரும் - ஒவ்வொரு முறை இசைக்கருவியை தொடும்முன்னர் LSDயை தொட்டுப்பார்த்தாக வேண்டுமென்ற உன்னத சத்தியத்தை Tommy வாங்கிக்கொண்டார். ஒரேயொரு மெம்பரைத்தவிர எல்லா ஆட்களும் மிகக்குஷியாக இதற்கு உடன்பட்டனர். விளைவு ?

---------

வாழ்ந்து கெட்டவர்கள் ஒருவகையென்றால், தாங்கள் ராஜாவைப்போல வாழ்ந்து, கெட்டொழிந்து போனதையே உணராத/உணரமுடியாதவர்கள் இன்னொரு வகை. 13th Floor Elevatorsன் Singer/Guitarist/Harmonica player/Song writer - Roky Erickson, இரண்டாவது வகை. Garage Rock/Psychedelic Rock இசையைப்பொறுத்தவரை இன்றளவும் Roky - லெஜென்ட். மிகமிக அனாயசமாக குரலின் pitchசை மாற்றுவதாகட்டும், கூடவே harmonicaவை இசைப்பதாகட்டும், லிரிக்ஸாகட்டும் - Rokyயை தலையில்தூக்கி வைத்து கொண்டாடினர். அவரது vocal rangeக்கு ஒரு சிறிய உதாரணமாக...இந்த வீடியோ. அந்த அதிர்வு, throw...Rokyயை காரணமில்லாமலா கொண்டாடினர்.

Tommy Hallன் தீர்க்கமான - இப்படித்தான் தங்கள் இசையிருக்க வேண்டும் - பார்வை, Rokyன் அதகளமான மியூசிகல் சென்ஸ், மற்ற மெம்பர்களின் (குறிப்பாக Stacy Sutherland) ஆளுமை...The 13th Floor Elevators வெகுஅனாயசமாக பல பிம்பங்களை உடைக்கத்தொடங்கினர். அடுத்த paraவில் அதைப்பற்றி பேசிக்கொள்ளலாம். // எல்லா ஆட்களும் மிகக்குஷியாக இதற்கு உடன்பட்டனர். விளைவு ? // இதைப்பற்றி பேசுவோம். 1966 - 68, இரண்டே ஆண்டுகள்.  புகழின், க்ரியேட்டிவிட்டியின் உச்சத்தை பார்த்தாயிற்று. பிறகென்ன....சரிவுதான். அளவுக்கதிகமான போதை மருந்து உட்கொண்டதன் விளைவு, Roky Ericksonன் போலீசால் கைது செய்யப்பட்டு - Paranoid schizophrenia இருப்பதாக கண்டறியப்பட்டு - மனநல விடுதியில் 4 ஆண்டுகள் கழித்தார்.ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் - நரகம். ஷாக் ட்ரீட்மென்டில் ஆரம்பித்து ஏகப்பட்ட சிகிச்சைகள். அதிலயே ஆள் முக்கால்வாசி காலி. வெளியவந்தவரிடம் ரிகார்ட் லேபிள் ஆட்கள் சக்கையாக ஏமாற்றி - ஷோ நடத்தியும்/ராயல்டி விவகாரங்களிலும் - காசு பார்த்தனர். இவரோ, தன்னைச்சுற்றி என்ன நடக்கிறததென்பதையே சரிவர உணர முடியாத ஆளாக சுற்றிக்கொண்டிருந்தார். கடன் சுமை, வறுமை, மனநிலை கோளாறிலிருந்து முழுமையாக வெளிவராத நிலைமை...எல்லாம் சேர்ந்து Rokyயை ஒரேடியாக அமுக்கிப்போட்டுவிட்டது. அந்த முழுகதையையும் இந்த documentaryயில் பார்க்கலாம். Tommy Hall கதையே வேறு. இன்றளவும் psychic experiments, LSD என்று ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறார்

ஏன் 13th Floor Elevators முக்கியமான band ? Impact and influence. Cream, The Doors, Grateful Deadல் ஆரம்பித்து ZZ Top, Spaceman 3, Brian Jonestown Massacre, Black Flag என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் இவர்கள் பாதித்த bands ஏராளம். Mid-60களின் சைக்கடெலிக் இசையைப்பொறுத்தவரை ஒரு துல்லியமான pattern உண்டு. Hippie/Free love/Indian - Asian இசைக்கூறுகள்/mysticism/LSD எல்லாம் கலந்த folk-based அல்லது progressive இசையின் நீட்சியாகவே இருந்தது. பட்டென்று சொல்வதென்றால், slow - poison. மெ...து...வா...க மி...த...ப்...ப...பதைப் போன்ற இசை. ஆனால், 13th Floor Elevatorsயின் இசை polar opposite. ரணகளம். சடக்கென்று ஒரு high-stateல் நம்மை மிதக்க வைக்கும். உதாரணம் வேண்டுமா ? Reverberation. இந்த வார்த்தையின் sonic manifestation தான் இந்தப்பாடல்
கிடாரின் echo/reverberation, Roky Ericksonனின் dope குரல், பின்னணி குரல்....எல்லாவற்றையும் தாண்டி ஒரு குறிப்பிட்ட இசை உள்ளுக்குள் குடைகிறாதா ? அதற்குப்பெயர்தான் Electric Jug. இசைப்பவர் - bandன் காரணகர்த்தா Tommy Hall. இந்த electric jug தான் 13th Floor Elevatorsன் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. Electric Jug ஏற்படுத்தும் குறுகுறுப்பு மிகஅலாதியானது. கேட்க ஆரம்பித்தபுதிதில் அந்த atmosphereரிலிருந்து வெளிவர எனக்கு சிலபல நாட்களானது. எந்தவிதத்தில் பார்த்தாலும், 13th Floor Elevatorsன் முதல் ஆல்பம் - The Psychedelic Sounds of the 13th Floor Elevators, seminal work. Pink Flyodல் ஆரம்பித்து பல bandகளை இந்த ஒரு ஆல்பம் ஏகத்துக்கும் பாதித்திருக்கிறது. இந்த ஆல்பம் + Easter Everywhere, தொடர்ச்சியாக கேட்டால்...கஞ்சாவாவது ஒண்ணாவது. இதற்கு மிஞ்சிய weed ஒன்றுமேயில்லை. Ericksonனின் வார்த்தைகளில் சொல்வதென்றால் "This music makes you see things if you want to". (
எப்படி இதை சொல்லாமல் இருப்பது ? இந்தப் பாடலை சொல்லாமல்விட்டால் ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு மோட்சம் கிடையாது. Ericksonன் range and dynamics... )


A monkey could play one note. But could a stoned monkey?: Will Carruthers, Spacemen 3

80களில் இவர்களது நீட்சியாக வந்த பல psychedelic குழுவினருள் முக்கியமான ஆட்கள் - Spaceman 3. Neo - psychedeliaவில் fiercenessசை உள்ளே புகுத்தியதில் இவர்கள் பங்கு மிகப்பெரியது. Slow burning psychedeliaவிலிருந்து, 13th Floor Elevatorsசைப் போன்றே அதகள psychedelic இசையில் தான் இவர்களது ஆரம்பகால ஆல்பங்களிருந்தது. பின்னாட்களில் experimental rock இசையை நோக்கி நகரத்தொடங்கினர். Pink Flyodதனமான Playing with Fire தான் பலரது ஆதர்ஷம் என்றாலும், எனக்குப்பிடித்த இரண்டு ஆல்பம்கள் The Perfect Prescription and Taking Drugs to Make Music to Take Drugs To


--------------------------

1990's. The Brian Jonestown Massacre. இந்த bandடைப் பற்றி ஏன் பேசுகிறேன் என்று சத்தியமாக எனக்கும் தெரியவில்லை. அசரடிக்கும், புதிய திறப்புகளை/தளங்களைத்தொட்ட குழுவா - இசையா (actually, Anton Newcombeன் ஒன்-மேன் ஷோ தான் இந்தக்குழு) என்றால், இல்லை. வேண்டுமானால் Pop-psych-rock என்று சொல்லலாம். ஒருவேளை, இப்பொழுதுதான் சைக்கடெலிக் கேட்க ஆரம்பித்திருந்தால், casual listenersக்கான அருமையான ஆரம்பம் - The Brian Jonestown Massacre. எல்லாவற்றையும் தாண்டி, And This Is Our Music மற்றும் Revelation, நல்ல ஆல்பங்களே. அப்பறம், பாடல்களுக்கு பெயர் வைப்பதில் சமர்த்தர்கள்.--------------------


Australia. ஜியாலஜிகலாக/பூகோளரீதியாக/ஈகாலஜிகளாக பல தனித்தன்மைகளைக், ஏகப்பட்ட சுவாரஸ்யங்களைக் கொண்ட கண்டம்/நாடு. குறிப்பாக, barren lands, desert. அதன் நிலப்பரப்புக்கு நிச்சயமாக அடர்ந்த சைக்கடெலிக்தன்மை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சொல்லிவைத்தது போல், Post - 2000னின் ரகளையான psychedelic bands அனைத்தும் ஆஸ்த்ரேலியாவைச் சேர்ந்ததாக எப்படியிருக்க முடியும் ? Tame Impala - Pond - King Gizzard and the Lizard Wizard (இதில் Tame Impala பற்றி போதுமென்றளவிற்கு பேசியாகிவிட்டது).


Nonagon infinity opens the door. True. So fucking true. படம் பேர் ஞாபகமில்லை...Keanu நடித்து, The Keymaker கூட ஒவ்வொரு கதவாக திறக்க முற்படும் காட்சி. அதுபோலவே, இந்த ஆல்பம்குள் நுழைந்துவிட்டால் - லிட்ரலி - முடிவே கிடையாது. 9 பாடல்கலென்று சொல்லப்பட்டாலும் 41:45 நிமிடமும் ஒரே இசைக்கோர்ப்பு போலவேயிருந்தால் எப்படியிருக்கும் ? ஒரு பாடலும் இன்னொரு பாடலும் அவ்வளவு கச்சிதமாக seamless loopல் கோர்க்கப்பட்டிருக்கும். ரெண்டாவது பாடலின் வரிகள் ஏழாவது பாடலில் வரும்; எட்டாவது பாட்டின் வரிகள் மூன்றாவது பாடலில். சுருக்கமாக, இந்த ஆல்பத்திற்கு முடிவே கிடையாது. நீங்கள் லூப்பில் ஓடவிட்டீர்களென்றால் நிறுத்தவே முடியாது/தோணாது. இசையென்று எடுத்துக்கொண்டால், savage. எத்தனை கிடார் லேயர்கள், புல்லாங்குழல்/சிதார் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டிற்கும்விதம், background vocals, time signature/shifting போன்றவைகளில் கையாளப்பட்டிருக்கும் tweaks...ஏகவிஷயங்கள் உண்டு. "அனுபவித்தால் மட்டுமே புரியும்" என்ற திராபை உதராணத்தைதவிர வேறு வார்த்தைகள் தோன்றவில்லை. Wah Wah - Road Train - Robot Stop, மூன்றும் ஒன்றுசேரும் இடம்...


பல புகழ்பெற்ற bandகளைப் போலவே King Gizzard & Lizard Wizardம் ஹைஸ்கூல் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட band. இந்த குழுவின், மூலவர் - Stu Mackenzie. கிறுக்குத்தனம் மிஞ்சிய ஆள். வருடத்திற்கு ஒரு புது இசைக்கருவியை கற்றுக்கொள்வது இந்தாளின் பல resolutionகளில் ஒன்று. சைக்கடெலிக்/garage rock அதுஇது என்று ஓவராக சலம்பாமல், Stu சொன்ன ஒரு விஷயம் - Intellectualising music is a bit dumb, in a way - கச்சிதம். ஒருவகையான, கேட்பதற்கு "ரம்மியமான" சைக்கடெலிக் இசையைப்போட்டு தேய்க்காமல் ஒவ்வொரு ஆல்பத்திலும் எதையாவது பரீட்சார்த்தமாக செய்துகொண்டே இருக்கிறார்கள். அது, நாலு பாடல்கள் கொண்ட ஆல்பத்தின் ஒவ்வொரு பாடலும் 10:10 நிமிஷம் - Quartersஸாகட்டும் (Jazzy flowவுடன் ஒவ்வொரு பாடலும் வேறு லெவல்); இல்லை - இந்த வருடம் வெளியான - Flying Microtonal Banana ஆகட்டும்,எதையாவது செய்துதொலைத்துவிடுகிறார்களா... நம்மால் அதைவிட்டு வெளியே வரவே முடிவதில்லை.

Flying Microtonal Banana, microtone - இருப்பதிலேயே குறைந்த - இரண்டு notesகளுக்கிடையேயான இடைவெளி (Ref: 1, 2) - மாயாஜாலங்கள் தேவை என்பதற்காக custom made guitar எல்லாம் செய்து...ஒன்றை சொல்லியாக வேண்டும். KGATLW band, "புதுமையாக" எதையாவது செய்கிறேன் பேர்வழியென்று வம்படியாக எதையும் செய்யாமல், it just flows. ஒரு பாடல்...ஒரேயொரு பாடல் இந்த ஆல்பத்திலிருந்து. ஆல்பம் கவர் ஆர்ட்டில் - பாம்பு/கிதார், இதெல்லாம் காரணமில்லாமலா ? அதுவும் இந்த வருடம், 5 ஆல்பம்களை வெளியிடப்போவதாக சொல்லியிருக்கிறார்கள். Insane.


Kevin Parker (Tame Impala) - Pond, இரண்டிற்கும் ஏக தொடர்பிருக்கிறது. Kevin Parker Pondல் (honorary) member + producer/arranger. முக்கியமாக Jay Watson, இரண்டிலும் மெம்பர். Tame Impalaவின் இசை, intact + trippyயென்றால் Pondன் இசை Freewheelin + Pop தன்மைகொண்டது. போன வாரம் வெளியான The Weather (Produced by Kevin Parker), அதற்குள்ளாகவே க்ளாசிக் என்று ரசிகர்களால் கொண்டாப்படுகிறது.ஒரு upcoming band பற்றி சொல்லியாக வேண்டும். Magic Shoppe. Psychedelic என்றால், உடனடியாக நமக்கு என்னவெல்லாம் ஞாபகம்வருமோ, அத்தனையும் இவர்கள் இசையில் உண்டு. 60களின் குரல் + தெறிக்கும் கிடார் + ஸின்த். Would say, அலாதியான இசை என்றெல்லாம் சொல்ல முடியாது - ஆனால், ரசித்து கிறங்கக்கூடிய இசை. கடைசியாக வெளிவந்த இவர்களது "Wonderland"...அப்படியொரு தரம்.இன்னொரு ஆளைப்பற்றி சொல்லாமல் போனால் இந்த போஸ்ட், முழுமை பெறாது. Captain Beefart. Youtubeல், இந்த channelலின் சொந்தக்காரர். Cult personality. இவரது அப்லோட்ஸ்க்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. முழுக்கமுழுக்க சைக்கடெலிக் இசைகளை மட்டுமே அப்லோட் செய்வார். இவரது புண்ணியத்தால் பல mesmerizing இசைக்கோர்ப்புகள் தெரியவந்தன. பல புதிய bandsகளைப்பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. இப்படியாக இவர் மூலமும், இவரைப்போன்ற பல ஆட்கள்/சேனல்கள் (குறிப்பாக, Stoned Meadow Of Doom) மூலம் கேட்டதில் எனக்கு மிகப்பிடித்த "typical" psychedelic albumsகளில் சில. 
  • Kikagaku Moyo - Kikagaku Moyo (ஜாப்பனீஸில் Geometric Patterns என்று அர்த்தம். காரணப்பெயர். ஏனென்று இந்த ஆல்பம் கேட்டால் புரிந்துவிடும்)
-------------------------