மிதமான மழை பெய்யுது. பைக்ல சர்ர்னு போறிங்க. முகத்தில பொடிஊசி மாதிரி மழை குத்துது. அதோட வீட்டுக்கு வந்து அம்மா ஒரு ஏலக்காய் டீ போட்டு தந்தா ஒரு புத்துணர்ச்சி வருமே... அதே மாதிரி தான் இந்தப்படமும். Airbender, 2012னு மொக்க கிராபிக்ஸ் படங்களா பார்த்து கண்ணு பூத்துப் போயிருந்தா... இந்தப் படத்த பாருங்க. பார்த்தவங்க மறுபடியும் பார்க்கலாம்-தப்பில்ல.ஒரு சில கிராபிக்ஸ் காட்சிகளைத் தவிர்த்து கப்பல்,பீரங்கி முதற்கொண்டு உண்மையானவற்றையே பயன்படுத்தியிருக்காங்க கடலை விரும்பறவங்க (யார் தானில்ல)இந்தப் படத்தை கண்டிப்பா விரும்புவாங்க.
டைரக்டர்: பீட்டர் வியர் (Dead Poets Society, The Truman Show)
ஹீரோ: நம் அனைவருக்கும் பிடிச்ச ரஸ்ஸல் க்ரோ
முதல க்ரோ நடிச்ச 3:10 to Yuma, Insider, Cindrella man இதுல ஒண்ணத்தான் எழுதலாம் நெனச்சேன். க்ரோவோட பிற படங்களைப் பத்தி பல heavyweights
ஏற்கானவே எழுதிட்டதனால lightweightஆனா எனக்கு இந்தப்படம் எழுதுவது சுலபம்னு நெனச்சேன். இந்தப்படத்திற்கும் டார்வின்னுக்கும் என்ன சம்மந்தம்? கடைசில சொல்றேன்.
ஏற்கானவே எழுதிட்டதனால lightweightஆனா எனக்கு இந்தப்படம் எழுதுவது சுலபம்னு நெனச்சேன். இந்தப்படத்திற்கும் டார்வின்னுக்கும் என்ன சம்மந்தம்? கடைசில சொல்றேன்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெட்ரிக் ஒ பிரைன் என்பவர் 1969ஆம் ஆண்டு எழுதிய நாவலை (மொத்தம் 20) அடிப்படையாகக் கொண்ட படம். முக்கிய கதாபாத்திரங்கள் ஜாக் ஆப்ரி-கப்பல் காப்டன் (க்ரோ), Dr.மாரின்-கப்பல் மருத்துவர்-சுற்றுச்சூழல் ஆய்வாளர், HMS Surprise(பிரிட்டிஷ் போர்க்கப்பல் HMSனா Her Majestys Service), Acheron (பிரெஞ்சுன் சக்திவாய்ந்த மிகவேகமான போர்க்கப்பல்). நாவல்ல கதை நடந்ததா சொல்லறது 1812(பிரிட்டிஷ் X அமெரிக்க). ஆனா படத்தில் 1805 (பிரிட்டிஷ் X பிரெஞ்சு) ஆக மாத்தியிருப்பாங்க. ஏன்னு கொழந்தைக்கு கூடத் தெரியும். ஆனா உண்மையிலேயே 1805 (பிரிட்டிஷ் X பிரெஞ்சு, நெப்போலேனிக் போர்கள்-ட்ரேபால்கர் போர்), 1812 (பிரிட்டிஷ் X அமெரிக்க) போரும் நடைபெற்றுள்ளது.
ஆர்ப்பாட்டமில்லாத கடல். HMS Surprise, பசிபிக் கடல்ல வேகாம போய்க்கிட்டே..... இருக்கு. திடீர்னு பனிமூட்டத்திற்க்கு நடவே தென்படும் Acheron. ஒரு சின்ன டெமோ தாக்குதல் நடத்துது. அதுக்கே HMS Surprise ரொம்ப ஸர்ப்ரைஸ் ஆகி ஆடிப்போயிருது. சேதமானாலும் வெறிகொண்ட வேங்கையாக திருப்பி தாக்குவோம்னு ஜாக் ஆப்ரி யோசிக்கிறார். ஆனா வழக்கம் போல பெரிசுக தடா போட்டு கரைக்கு திரும்பலாம்னு சொல்றாங்க. Acheron திரும்பி சீண்டுது. சிலபல இழப்புகளுக்கு அப்பறம் அற்புதமான கலபாகஸ் தீவுகளுக்கு (உலகின் அரிதான உயிரினங்கள் வாழும்) போறாங்க.அங்க Dr.மாரின் தன் ஆராய்ச்சியை ஆரம்பிக்கலாம்னு நெனைக்குறப்போ அங்கு ஏற்கனவே Acheronனால டேமேஜான இன்னொரு சின்ன கப்பலை பார்க்குறாங்க. ஆகா... Acheron வந்துட்டான்யானு உடனடியாக கிளம்புறாங்க. இந்தப்பயணத்தில் Dr.மாரின் எதிர்பாராமல் காயமடைகிறார். வேறுவழியின்றி நண்பனுக்காக ஜாக் ஆப்ரி மறுபடியும் கலபாகஸ் தீவுகளுக்கு வண்டிய விடச்சொல்றார். ஆனால் இந்த முறை Dr.மாரினின் சேகரிப்பில் உள்ள ஒரு பூச்சியிடம் இருந்து ஒரு வித்தையை கற்றுக்கொண்டு Acheronஐ அட்டகாசமாக வீழ்த்தி சிறைபிடிக்கின்றனர். இங்க ஒரு சின்ன ட்விஸ்ட். அதற்கப்பறம்.... அவ்ளோதான். படம் ஓவர்.
.jpg)
ரஸ்ஸல் க்ரோவைப் பத்தி நான் ஒன்னும் சொல்லத்தேவையில்ல. அலட்டாம, முகத்த அஷ்டகோணலாக்காம, ஏதும் ரப்பர் மாஸ்க் போடாம செய்யற கதாபாத்திரங்கள் வழியா நம்மையும் படத்திற்குள் இழுக்கும் (நல்ல படமோ குப்ப படமோ) நடிகர். ஒரு கம்பீரமான கேப்டன் இப்படித்தான் இருப்பார்னு நம்மை நம்ப வெச்சிருவார். மேலும் இந்த படம் அக்கால கப்பற்படை-அவர்களது வாழ்கை முறை(சின்ன வயசு கேப்டன்டகள்) போர்முறை போன்றவற்றை சிறப்பாக பிரதிபலிப்பதாகச் சொல்கிறார்கள். (நா இல்லீங்க, IMDB-பிற தளங்கள்). தயவுசெய்து சின்னபசங்க இருந்தாங்கனா அவர்களையும் உட்கார வெச்சுப் பாருங்க. முக்கிமா முடிச்ச அளவு பெரிய திரைல-நல்லா சவுண்ட கூட வெச்சுப் பாருங்க. கடலின் ஆர்ப்பரிப்பு உங்கள் காதுகள்ளயும் கேட்கும். கண்டிப்பா ரசிப்பீங்க. என்ன, இன்னும் கொஞ்சம் grippingஆ திரைக்கதை இருந்திருக்கலாம். பரவாயில்ல. என்ன மாதிரி கொழந்த மனம் கொண்டவர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் (எப்பூடி!!!)
.......................................
டார்வின்னுக்கும் இப்படத்துக்கும் என்ன சம்பந்தம்? இதுல வரும் Dr.மாரின் கதாபாத்திரம் டார்வின நெனச்சு படைக்கப்பட்டதாக சொல்றாங்க. டார்வின் எந்த வழியா 1831ல் HMS Beagleல போய் (பசிபிக் கடல்-கேப் ஹார்ன்) கலபாகஸ் தீவ அடஞ்சாரோ அந்த அந்த எல்லா இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தியிருக்காங்க. முதல்முறையா கலபாகஸ் தீவுளையும் படப்பிடிப்பு நடத்தியிருக்காங்க. டார்வினின் கோட்பாடு மிக முக்கியத்தும் வாய்ந்த ஒன்று என்பதால் அவரைப்பற்றி சொல்ல ஆசைப்படுகிறேன். கொஞ்சம் போரடிக்கிற எழுத்தா தெரிஞ்சா ஸ்கிப் பண்ணிருங்க.
டார்வின்-அறிவியல் வரலாற்றின் மிக முக்கியமான கோட்பாடுகளில் ஒன்றைத் தந்தவர். அவருக்கு முன்னர், மதக்கோட்பாடுகளுக்கு எதிரான அறிஞர்கள் என்று தேவாலயங்கள் கருதிய- Giordano Bruno (கணிதவியலாளர் & வானியலறிஞர்) 1600ஆம் ஆண்டு உயிருடன் எரித்துக்கொள்ளப்பட்டார்.
![]() |
Giordano Bruno |
![]() |
Wallace & Darwin |
Over Production (தேவைக்கு அதிகமாக ஈனுதல்): ஒரு சிறுத்தை நான்கு குட்டிகளை ஏன் ஈன வேண்டும்? சூழ்நிலை காரணமாக நான்கில் இரண்டு போனாலும் கூட இரண்டு இருக்குமல்லவா.
Struggle for existence (வாழ்க்கையே போராட்டம்): தப்பிப் பிழைத்த இரண்டும் ஒன்றுடன் மற்றொன்றும் பிறவற்றோடும் உணவு, இருப்பிடத்திற்காக போராட வேண்டும்.
Variation: ஒரு சிறுத்தைக்குட்டி மற்றொன்றை போல் வேட்டையாட முடியவில்லை. ஒன்றின் புள்ளி மற்றொன்றை போல் இருப்பதில்லை(Phyisological Variation). எந்த ஒரு உயிரினம் மற்றொன்றுடன் தன்னை வேறுபடுத்தி சுற்றுச்சூழலுடன் இணைந்து சமாளிக்கிறதோ அதுவே முன்னிலிருக்கும்.
Survival of the fittest: இரு சிறுத்தைக்குட்டியில் வலியதே வாழும்.
Natural Selection: இரு சிறுத்தைக்குட்டியில் மேலே சொன்னா நான்கு தகுதிகளைக் கொண்ட சிறுத்தைக்குட்டியையே இயற்கை தேர்ந்தேடுக்கும்.
நல்லா அருமையா எழுதிருக்கீங்க,இந்தபடம் எனக்கு மிகவும் பிடிக்கும்,க்லாடியேட்டர் பார்த்து விட்டு ரஸ்ஸலின் எல்லா படமும் விரட்டி பார்த்ததில் இதும் ஒன்று,குட்
ReplyDelete@நண்பரே..
ReplyDeletecomment moderationனா என்னன்னு இப்பதான் புரியுது. அதனாலேயே லேட்டா
பப்ளிஷ் பண்ணறேன். நன்றி
நான் முதல்ல டயலாக் புரிஞ்சு பார்த்த ஆங்கிலப்படம் கிளாடியேடர். அப்ப இருந்தே என் அப்பா முதற்கொண்டு க்ரோவின் ரசிகர்கள்.
உங்கள் விமர்சனம் படிக்கும்போது நிறைய விசயங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது .உங்களுக்கென்று ஒரு தனி நடை உருவாகிவிட்டது .இது எல்லோருக்கும் அமைவதில்லை.நன்றி.தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்.
ReplyDelete@மைதீன்
ReplyDeleteமிக்க நன்றி. எனக்கு தோன்றத-படிச்சத வெச்சு எழுதறேன். அதற்காக ஏனோதானோனு எழுதுவதில்லை (நான் மட்டுமல்ல). மறுபடியும் அந்த படத்தைப் பார்த்து அதைப்பற்றி நெட்டில் விஷயங்களை அறிந்த பிறகே எழுதுறேன்.எனக்கு பிடிச்சத பிறருடன் பகிர்ந்துக்கிறேன். அவ்வளவுதான்.
நண்பரே,
ReplyDeleteபதிவுகளில் சிறப்பான தகவல்களை அளித்து எம்மை மகிழ்விக்கிறீர்கள். டார்வின் குறித்த பகுதியை ரசித்தேன்.
@கனவுகளின் காதலன்
ReplyDeleteநன்றி நண்பரே..
யான் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்.