Brothers and sisters, I am here to tell you that I charge the white man. I charge the white man with being the greatest murderer on earth. I charge the white man with being the greatest kidnapper on earth. There is no place in this world that this man can go and say he created peace and harmony. Everywhere he's gone he's created havoc. Everywhere he's gone he's created destruction. So I charge him. I charge him with being the greatest kidnapper on this earth! I charge him with being the greatest murderer on this earth! I charge him with being the greatest robber and enslaver on this earth! I charge the white man with being the greatest swine-eater on this earth. The greatest drunkard on this earth! He can't deny the charges! You can't deny the charges! We're the living proof of those charges! You and I are the proof. You're not an American, you are the victim of America. You didn't have a choice coming over here. He didn't say, "Black man, black woman, come on over and help me build America". He said, "Nigger, get down in the bottom of that boat and I'm taking you over there to help me build America". Being born here does not make you an American. I am not an American, you are not an American. You are one of the 22 million black people who are the victims of America.

                                           
படம் ஆரம்பிப்பதே மால்கம் Xன் இந்த வார்த்தைகளோடு தான்.பின் கொஞ்ச கொஞ்சமாக அமெரிக்க கொடி எரிந்து X சின்னமாக மாறுகிறது. யார் மால்கம் X ? மிதவாதியா? தீவிரவாதியா? ஏன் படுகொலை செய்யப்பட்டார்? வேண்டுமென்றே வரலாற்றில் இருந்து மறைக்கப்பட்டாரா? (நேதாஜிக்கும் இதான் நடந்தது) இதற்கான விடைகளை ஓரளவு இந்தப்படத்தின் மூலம் அறியலாம். இந்தப் படத்தை 4 பகுதிகளாக பிரிக்கலாம்.

ஆரம்பகால வாழ்கை:
            மால்கமின் தந்தை-பிரசங்கம் செய்பவர்-வேறு பிரிவைச்சேர்ந்த ஆட்களால் கொல்லப்படுகிறார். தாய்-மனநிலை பாதிக்கப்பட்டவராக அறிவிக்கப்படுகிறார். இந்த சூழ்நிலையில் வேறிடத்தில் வளரும் மால்கம் பின்னாளில் ஒரு சிறிய அடியாள் வகையறாவாக வளருகிறார். ஒரு கும்பலுடன் ஏற்படும் தகராறில் பாஸ்டனுக்கு இடம்பெயருகிறார். அங்கு தன் நண்பருடன் ஒரு திருட்டில் ஈடுபடும் பொழுது கைதாகிறார். நீதிமன்றத்தில் நண்பருக்கும் அவருக்கும் 10 ஆண்டுகள் தண்டனை கிடைக்கிறது. இந்த தண்டனை திருட்டிற்கு மட்டும்தானா..இல்லை. வெள்ளைக்கார பெண்ணுடன் தொடர்பு இருந்தமைக்காகவும் இத்தனை அதிக தண்டனை.

சிறைச்சாலை வாழ்க்கை:
                                                          
இங்கு தான் அவரது வாழ்கையில் பெரும் திருப்பம் ஏற்படுகிறது. சிறைச்சாலையில் பைன்ஸ் என்பவர்-நேஷன் ஆப் இஸ்லாம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்-மால்கமிடம் கொஞ்ச கொஞ்சமாகப் பேசி இஸ்லாமின்பால் அவருக்கு மதிப்பு வரச் செய்கிறார். மேலும் வெள்ளையர்கள் எப்படி திட்டமிட்டு கருப்பினதவர்களுக்கு எதிராக ஒவ்வொரு விஷயத்திலும் வெறுப்பை விதைத்தனர் போன்றவைகளையும் போதிக்கிறார்.தங்களது தலைவரான எலைஜா முஹம்மதின் அறிவுரைக்களையும் போதனைகளையும் கடிதங்களின் வாயிலாக மால்கமிற்கு அறிமுகப்படுத்துகிறார். இதெல்லாம் கேட்டு மால்கம் இஸ்லாமிற்கு மதம் மாறுகிறார்.

விடுதலை:
              சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்தவுடன் நேராக எலைஜா முஹம்மதிடம் சென்று நேஷன் ஆப் இஸ்லாம் அமைப்பின் கொள்கை செயலாளராக பதவியேற்கிறார். முழுமூச்சுடன் பணியாற்றுகிறார். தங்கள் மக்களுக்கென்று தனியாக ஒரு அமைப்பு தேவை என்றும், நாம் அடிவாங்கிக் கொண்டே இருப்பது போதும்-நம் பாதுகாப்பும் முக்கியம்-எனவே அஹிம்சை பாதை தேவையற்ற ஒன்று என்றும் கடும் பிரச்சாரம் மேற்க்கொள்கிறார்.


இந்நிலையில் ஒரு முக்கியமான சம்பவம் நடக்கிறது. அவரது அமைப்பைச் சேர்ந்த ஒருவனை போலீஸ் கடுமையாகத் தாக்கி கைது செய்கின்றனர். மால்கம் ஒரு சிறிய கூட்டத்துடன் போலீஸ் ஸ்டேசன் சென்று கைது செய்யப்பட்டவன் எங்கே-அவனுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். முதலில் மறுக்கும் போலீஸ் அவருடன் வந்த கூட்டத்தைக் கண்டு பின்வாங்கி அடிபட்டவனை மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். மால்கம் போலீஸ் ஸ்டேசனிலிருந்து வெளியே வந்து அங்கிருந்தே மருத்துவமனைக்கு நடக்கத் தொடங்குகிறார். அவருடன் வந்த சிறிய கூட்டம் ஒன்றாக-பத்தாக-நூறாக பெருகுகிறது. ஏதோ ஒரு வசீகரத்தால் கட்டுண்ட மக்கள் கொஞ்ச கொஞ்சமாக அவர் பின்னால் அணி திரள்கின்றனர். கடைசியாக அவரது விரலசைவிற்க்கு அனைவரும் கட்டுப்படுகின்றனர். இந்நிகழ்ச்சி நேஷன் ஆப் இஸ்லாம் அமைப்பில் அவரது நிலையை உயர்த்துவதுடன் கருப்பின மக்கள் மத்தியிலும் பெரும் செல்வாக்கை சம்பாதித்து கொடுக்கிறது. அவரது செல்வாக்கு நாளுக்குநாள் உயர்கிறது. வெள்ளயர்களுக்கு எதிராக கடும் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

மெக்கா பயணம்:
           அஹிம்சை பாதையை முற்றாக தவிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார். சமகாலத்தவரும் அஹிம்சாவாதியான மார்டின் லூதர் கிங் ஜுனியரையும் பல கேள்விகளுக்கு உட்படுத்துகிறார். அதே சமயம் அவர் அமைப்பிலும் அவரது செல்வாக்கை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் அவருக்கு எதிராகத் திரும்புகின்றனர். ஆனாலும் மால்கம் எலைஜாவை முழுமையாக நம்புகிறார். இந்நிலையில் எலைஜாவிற்கு ஒரு பெண்ணுடன் தொடப்பு ஏற்பட்டு அதன் மூலம் ஒரு குழந்தையும் உண்டு என்பதை அறிந்து-தனக்கு ஒழுக்கத்தை போதித்தவர் இப்படியா என்பதை அறிந்து மிகுந்த மனவேதனையுடன் அந்த அமைப்பில் இருந்து விலகுகிறார். இருந்தாலும் அந்த அமைப்பைச்சேர்ந்தவர்களே அவரை கொலை செய்ய திட்டமிடுகின்றனர். பின் மெக்காவிற்கு புனிதப்பயணம் மேற்கொள்கின்றார். அந்தப் பயணம் அவரது பார்வையில் மாற்றத்தை உண்டு பண்ணுகிறது. அனைத்து தரப்பு மக்களையும் அனுசரித்து போக வேண்டும்-அனைவருடனும் சேர்ந்தே கருப்பின மக்களின் விடுதலைக்காக பாடுபடவேண்டும் என்ற முடிவிற்கு வருகிறார். இந்நிலையில் அவரது வீட்டின் மீது கடும் தாக்குதல் நடக்கிறது.

மறுநாள் நடக்கும் பிரச்சாரக் கூட்டத்திற்கு செல்வது தான் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று தெரிந்தும் அக்கூட்டத்திற்கு செல்கிறார். அங்கு உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே நேஷன் ஆப் இஸ்லாம் அமைப்பைச் சேர்ந்தவர்களால் சரமாரியாக சுடப்பட்டு இறக்கிறார். மார்டின் லூதர் கிங் ஜுனியர் வருத்தத்துடன் தன் அனுதாபத்தை பதிவு செய்கிறார்.அதன்பின் உண்மையான மால்கம் X பற்றி படங்களுடனும் கடைசியாக நெல்சன் மண்டேலா மால்கம் Xயைப் பற்றி விவரிப்பதுடனும் படம் முடிவடைகிறது.

மால்கம் Xல் உள்ள X எதைக் குறிக்கிறது?

அடிமைப்படுத்தப்பட்ட கருப்பின மக்களுக்கு அவர்களது எஜமானர்களே பெயர் வைக்கின்றனர். மால்கம் Xன் உண்மைப் பெயர் கூட மால்கம் லிட்டில் என்பதாகும். ஆனால் லிட்டில் என்ற பெயர் தன் குடும்பப் பெயர் அல்லவென்றும், அடிமையாய் கிடந்த தன் மூதாதையர்களின் எஜமானர் யாராவது வைத்த பெயராகயிருக்கும்-அதனால் X என்றால் கணிதத்தில் தெரியாத என்ற பொருள்-எனவே அதையே என் பெயருக்குப்பின்னால் சேர்க்கிறேன் என்கிறார்.


அவர் Extremistடா?
ஆம். அஹிம்சை வழியில் மட்டுமே போராடிக்கொண்டிருந்தால் ஒன்றும் நடக்காது என்பதில் உறுதியாய் இருந்தார். மார்டின் லூதர் கிங் ஜுனியரின் புகழ் பெற்ற பேச்சான I have a dreamற்கு எதிராக king may have a dream but we are experiencing only nightmares என்றார். ஆனால் பின்னாளில் அவர் சற்று மாறியதாகத் தெரிகிறது.


அவரைப்பற்றி அதிகம் தெரிந்து கொள்ளாமல் நான் ஏதாவது சொல்வது சரியாக இருக்காது. அதனால் இந்தப்படம் எனக்கு ஏன் பிடித்தது என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன்.

                                                                   இந்தப்படத்தை அப்படியே இந்தியச் சூழலுக்கு பொருத்திப் பார்க்கலாம். இதுல அவர் கேக்குற பல கேள்விகள் நமக்கும் கட்டாயம் தோணும். இயேசு ஏன் எல்லா ஓவியங்களிலும் வெள்ளயராகவே காட்டப்படுகிறார்? யோசிச்சுப் பார்த்தா..நம்மவுருல பல தெய்வங்களின் ஓவியங்கள் வெள்ளை நிறத்திலேயே இருக்குது. இது ரவி வர்மா வகையறாக்கள் பண்ணி வச்சது. (பெண்களையும் வெள்ளை நிறத்திலேயே சித்தரிச்சிருப்பார்கள்). அதே போல் டிக்சனரியில் Black-White இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் பார்ப்பார். அதன் மூலம் எப்படி ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு கறுப்பின மக்களுக்கு எதிராக விஷம் பரப்பப்பட்டது என்பதை புரிந்து கொள்ளலாம். நம் நாட்டிலும் இந்த மாதிரி வேலை நடந்தது அனைவருக்கும் தெரிஞ்சதே. மேலும் படத்தின் வசனங்கள் அனைத்தும் முக்கியமானவைகள். பல இடத்தில் மால்கம் Xஇன் உண்மையான வார்த்தைகளையே பயன்படுத்தியிருக்கின்றனர். மார்டின் லூதர் கிங் ஜுனியருக்கும் அவருக்கும் இருந்த முரண்பாடுகளையும் காட்டியிருக்கின்றனர். (இதில் என்ன கொடுமை என்றால் அஹிம்சை வழியில் நடந்த மார்டின் லூதர் கிங் ஜுனியர், காந்தி இவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது ஏன் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை)


                                                        சரி..இந்த மாதிரி Biopic படங்கள் ஏன் நம்ம நாட்டுல எடுக்கவே மாட்டேன்கிறாங்க? எனக்கு ஞாபகம் வரது ரெண்டே படம்-நேதாஜி(ஷ்யாம் பெனகல்) & அம்பேத்கர் (இந்த படம் எப்பதான் ரிலீஸ் ஆகுமோ?). காந்தி-அதையும் ஒரு வெள்ளக்காரன்தான் எடுக்க வேண்டியிருக்கு. சரி..பெரிய தலைவர்கள் வாழ்கைய மட்டுமில்லாமல் சாதாரண மக்களின் உண்மைக் கதைகளையாவது எடுக்குறாங்கன்னா அதுவுமில்ல. அப்படியே எடுத்தாலும் ரௌடி வகைகள் தான் வருது. பெரிய நடிகர்கள், டைரக்டர்கள்னு சொல்லிக்கிறவங்க ஒருத்தரும் இந்த மாதிரி ஒரு சின்ன முயற்சியையும் செய்யறதில்ல. புதுசா வர யாராவது செஞ்சா அதையும் ஆதரிக்கறதில்ல. இப்ப கூட நெல்லுன்னு ஒரு படம்-கீழ்வெண்மணி சம்பந்தமானது-சென்சார்ல பிரச்சனை. ஆனா இந்தப்படம் ஆரம்பிக்கறதே அமெரிக்க தேசியக்கொடியின் எரிப்போட தான். மேலும் டென்சல் வாஷிங்டன்-இதுவரை எத்தனை உண்மைக் கதைகளில் நடிச்சிருப்பார்..Hurricane, Malcom X, American Ganster இப்படி பல படங்கள சொல்லலாம். என்னய பொறுத்த வரையில் கற்பனையான ஒரு கதாபாத்திரத்தை திரையில் பிரதிபலிக்கிறதை விட உண்மையான கதாபாத்திரங்களை நடிக்கிறதே சிரமம்-திறமை என்பேன். இந்தப் படத்தின் டைரக்டர் ஸ்பைக் லீ (Inside Man, They Dont care about us-jackson video இது ரெண்டதான் நான் பார்த்திருக்கேன்) காலேஜிலயிருந்தே மால்கம் Xஇன் கதையை படமாக்க வேண்டும் என்று ரொம்பவும் ஆசைப்பட்டாராம். இவர் இதை படமாக்கிய விதத்தைப்பற்றி சில குறைபாடுகளை சொல்கின்றனர். ஆனா மால்கம் X பற்றி தெரியாதவர்கள் கூட இந்தப் படத்தைப் பார்த்தால் அவரது தாக்கத்தையும் கருப்பின மக்களின் வலியையும் கண்டிப்பாக உணரலாம். கடைசியாக எனக்கு மிகப் பிடித்த பாப் மார்லேய்யின் ஒரு மிகப் பிடித்த பாடலுடன் முடித்துக் கொள்கிறேன். தயவு செய்து இந்த பாடலை ஒரு முறை கேளுங்கள். கேட்டிருந்தால் மறுபடியும் கேட்பது தவறில்லையே.இந்த சூழ்நிலைக்கு மிகப் பொருத்தமான வரிகள்.என்ன ஒரு தீர்க்கமான வார்த்தைகள்...
Buffalo soldier, dreadlock rasta
There was a buffalo soldier in the heart of America
Stolen from Africa, brought to America
Fighting on arrival, fighting for survival

I mean it when I analyze the stench
To me it makes a lot of sense
How the dreadlock rasta was the buffalo soldier
And he was taken from Africa, brought to America
Fighting on arrival, fighting for survival

Said he was a buffalo soldier, dreadlock rasta
Buffalo soldier in the heart of America

If you know your history
Then you would know where you're coming from
Then you wouldn't have to ask me
Who the 'eck do I think I am                

I'm just a buffalo soldier in the heart of America
Stolen from Africa, brought to America
Said he was fighting on arrival, fighting for survival
Said he was a buffalo soldier, win the war for America

Dreadie, woy yoy yoy, woy yoy-yoy yoy
Woy yoy yoy yoy, yoy yoy-yoy yoy
 Buffalo soldier troddin' through the land, wo-ho-ooh
Said he wanna ran and then you wanna hand
Troddin' through the land, yea-hea, yea-ea

Said he was a buffalo soldier, win the war for America
Buffalo soldier, dreadlock rasta
Fighting on arrival, fighting for survival
Driven from the mainland to the heart of the Caribbean

Singing, woy yoy yoy, woy yoy-yoy yoy
Woy yoy yoy yoy, yoy yoy-yoy yoy

Troddin' through San Juan in the arms of America
Troddin' through Jamaica, a buffalo soldier
Fighting on arrival, fighting for survival
Buffalo soldier, dreadlock rasta


                                      நல்ல சினிமா ரசிகர்கள் யாரக்கேட்டாலும் சொல்லிருவாங்க..ஐரோப்பிய படங்கள் சினிமாவ கலையம்சத்துடன் பாவிச்சு வளர்த்துச்சா..ஹாலிவுட் திரைப்படங்களான்னு.திரைப்படங்கள் வளர ஆரம்பிச்ச காலகட்டத்துல ஐரோப்பிய சினிமாவே (இன்னும் குறிப்பா ஜெர்மன் திரைப்படங்களே) புதுசு புதுசா நிறைய பரிட்ச்சார்த்தமான முயற்சிகளிலும், புது வகை உத்திகளையும் அறிமுகப்படுத்தியது. ஜெர்மனியை தொடர்ந்து ரஷ்யா (அப்ப சோவியத்), பிரான்ஸ்...இன்னும் பல நாடுகள் இதைப் பின்பற்றி வளர ஆரம்பித்தது. அமெரிக்கா பாத்துச்சு..இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு சொல்லி மிரள வைக்கும் செட்டிங்க்ஸ், கவர்ச்சியான நாயகிகள், மேக்கிங் இதுல கவனம் செலுத்த ஆரம்பித்தது(இன்னைய வரைக்கும் அப்படித்தான் இருக்குன்னு எனக்குத் தோணுது). இதுல என்ன ஒண்ணுன்னா, நம்மாளுக ஹாலிவுட் படங்களை ஆதர்சமாக நெனச்சு அதைப் பின்பற்றி படம் எடுக்க ஆரம்பிச்சதுக்கு பதிலா,ஐரோப்பிய சினிமாவை நோக்கி திரும்பி இருந்தாங்கன்னா....அது எப்படிப்பட்ட விளைவா இருந்துருக்கும் (Culturally, Politically, Socially இப்படி எல்லா வகைகளிலும்). அப்படிப்பட்ட பரிட்ச்சார்த்தமான ஜெர்மனிய சினிமாவிற்கு இந்தப்படம் ஒரு சிறந்த உதாரணம்.

                                                      
1920ஆம் ஆண்டே இப்படி ஒரு உளவியல்ரீதியான திகில் கதையை அவர்கள் எடுத்திருந்த விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. சும்மா இல்லாம நெட்ல Worlds Greatest Horror Films அந்த மாதிரிலாம் தட்டிப்பார்க்கைல இந்தப்படத்த அடிக்கடி பார்த்திருக்கேன். சரி..என்னதான் இருக்கு,பார்க்கலாமேன்னு நெனச்சு பார்த்த..சரியான படம். கிளைமாக்ஸ ஒருவாறு ஊகிக்க முடிஞ்சாலும், கடைசி நிமிசத்திலையும் ஒரு ட்விஸ்ட் வரும் பாருங்க..செமையா இருந்துச்சு. நீங்களும் பாருங்க. உங்களுக்கும் கண்டிப்பா பிடிக்கும்.இந்தப்படத்தை இன்றளவும் யாராலும் சிறப்பான முறையில் ரீமேக் செய்ய முடியவில்லை. இனி கொஞ்சம் படக்கதைய பார்ப்போம்.
..........................

                                      ஒரு பூங்கா.அதில் ஒரு பெஞ்ச்.ஒரு இளைஞன் (பிரான்சிஸ்)+பெரியவர். பிரான்சிஸ் பெரியவரிடம் தனக்கு நேர்ந்த ஒரு நிகழ்ச்சியை விவரிக்க ஆரம்பிக்கிறான்.

ஹோஸ்டேன்வால், ஒரு சிறிய ஜெர்மனிய கிராமம்:

அங்கே ஒரு கண்காட்சி நடந்துகொண்டிருக்கிறது. அதில் நடக்கும் பல வகையான வேடிக்கை நிகழ்ச்சிகளை மக்கள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் அங்கே ஒருவர் வருகிறார். கண்காட்சி மேலாளரை கவனித்த பிறகு தன் நிகழ்ச்சியை அங்கே நடத்த அனுமதிக்கப்படுகிறார்.தன்னிடம் தூக்கத்தில் நடக்கும் வியாதி கொண்ட ஒரு ஆள் இருப்பதாகவும் (Somnambulist)-அவ்வியாதியினால் நிறைய குழப்பம் விளைந்ததனால் அவனை ஆழ்ந்த உறக்கத்தில் வைத்திருப்பதாகவும்-அவனை காண ஆவலாக இருக்கின்றீர்களா? என்று மக்களிடம் அறிவிப்பு செய்கின்றார். யாரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவதாய் இல்லை. அதைக்கண்ட அவர் ஒரு மர்மப் புன்னகை செய்கிறார்.யார் இவர்-அவர்தான் Dr.கேலிகாரி. அன்றிரவே அந்த கண்காட்சியின் அலுவலக உதவியாளர் குத்திக் கொல்லப்படுகிறான்.


இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரான்சிசும் அவனது நண்பன்-ஆலனும் அந்த கண்காட்சிக்குச் செல்ல தீர்மானிக்கின்றனர். அவர்கள் அங்கே போய்ச்சேரும் பொழுது கேலிகாரி உற்சாகமாக அறிவிப்பு செய்து கொண்டிருக்கிறார். தன்னிடம் உள்ள ஆள் 25 வருடமாக தூங்குவதாகவும், இன்று அவனை தான் எழுப்பப் போவதாகவும்-முக்கியமாக அவனால் உங்களது எதிர்காலத்தை கணித்து கூற முடியும் என்றும் கூறிவிட்டு அவனை (சிசர்) விழித்துக்கொள்ள ஆணையிடுகிறார். அவன் மெல்ல மெல்ல விழிப்படைகிறான். மக்கள் உற்சாகமாக கை தட்டுகின்றனர். அனைவரையும் முந்திக்கொண்டு ஆலன் “நான் எத்தனை காலம் வாழ்வேன்?” என்று கேட்கிறான். பதில்: விடியும் வரை. யாருக்கும் இந்த மாதிரி பதிலைக் கேட்டால் கதிகலங்கி விடும் தானே. ஆலன் மிகுந்த கலக்கமுறுகிறான். இருந்தாலும் பிரான்சிஸ் வேடிக்கையாக தங்கள் இருவரின் மனங்கவர்ந்த ஜேன் என்ற பெண்ணைப்பற்றி பேசி அவனை சகஜ நிலைக்கு கொண்டு வர முயற்சி செய்கிறான்.ஆனாலும் ஆலனின் குழப்பம் தீரவில்லை.


அன்றிரவு, ஆலன் ஒரு உருவத்தால் கொடூரமாகக் குத்திக்கொலை செய்யப்படுகிறான். பிரான்சிஸ் Dr.கேலிகாரியையும் சிசரையும் சந்தேகப்பட்டு போலீசிடம் (அவர்கள் அசிரத்தையாக ஏற்றுக்கொண்டாலும் ) புகார் அளிக்கிறான். மறுநாள் இந்த வகையிலேயே இன்னொரு கொலையும் அதன் கொலைகாரனும் பிடிபட-போலீஸ் அவன்தான் மற்ற கொலைகளையும் செய்தான் என்று நம்புகின்றனர். ஆனால் அவன் மற்ற ரெண்டு கொலைகளையும் செய்யவில்லை என்று தெரிந்து மிகுந்த குழப்படைகின்றனர். இந்நிலையில் ஜேன் மறுபடியும் ஒரு உருவத்தால் கடத்தப்பட...மிகுந்த குழப்பம் ஏற்படுகின்றது. இதற்குப் பிறகு வரும் காட்சிகளை நீங்கள் பார்ப்பதே உத்தமம்..இந்நேரம் நீங்கள் ஊகிக்க முயன்றிருப்பீர்கள். சிசர்-கொலைகாரனா? அல்லது Dr.கேலிகாரியே தானா? அல்லது வேறு யாருமா?. உங்களால் அனைத்தையும் ஊகிக்க முடிந்தாலும், கடைசியில் வரும் திருப்பத்தை கண்டிப்பாக ரசிப்பீர்கள்.


சரி..ஏன் இந்தப்படம் இன்றளவும் உலகின் முதல் அசலான திகில் படமாகக் கருதப்படுகிறது..வழக்கம்போல விக்கிபீடியா மாதிரியான தளங்களுக்கு போய் தெரிஞ்சுகிட்டது போக..நான் கவனிச்ச வரையில்..கேமரா, செட்டிங்க்ஸ் ரெண்டுமே அந்த மூட் க்கு ஏத்த மாதிரி அருமையா இருந்திச்சு. குறிப்பா செட்டிங்க்ஸ் எவ்வளவு பொருத்தாமானது என்று முழு படத்தையும் பார்த்தீங்கன்னா தெரியும். இந்தப் படத்தை one of the most influential of Expressionist films என்று இன்றளவும் கொண்டாடுகிறார்கள். மேலும் இந்தப்படத்தில் வரும் கேலிகாரி கதாபாத்திரம் சிக்மண்ட் ஃபராடை குறிப்பதாகவும் சிலர் சொல்கின்றனர் (ஃபராடும் ஜெர்மனி..அவர் பீக்ல இருந்த காலகட்டம் 1900-1930). சரி இந்தப்படத்திற்கு முன்னாடி திகில் படமே வந்ததில்லையா? நியாயமான கேள்வி. இதே கேள்வி தான் எனக்கும் தோன்றியது. அது குறித்து தேடிய போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.

எல்லோரும் படிச்சிருப்போம் பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த லூமியர் சகோதரர்கள் தான் 1895ல் முதன்முதலாக சினிமேட்டோகிராஃபே என்ற ப்ரொஜெக்டர், ஒரு சலனப்படங்களை படம்பிடிக்கும் கேமரா, படம் செறிவூட்டும் ஒரு கருவி-இது மூன்றையும் ஒன்றாக கண்டுபிடித்தனர். இதே காலகட்டத்தில் பல நாடுகளில் சலனப்படங்களை படம்பிடிக்கும் கேமரா(motion picture camera) கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்கின்றனர். ஆனால் 1891லேயே எடிசன் ஒரு ஆள் மட்டும் பார்க்கக்கூடிய கைனேடோஸ்கோப் என்ற கருவியை கண்டுபிடித்து சலனப்படங்களை காட்டியதாகவும் சொல்கின்றனர். இருந்தபோதிலும் அனைவரும் ஒத்துக்கொண்டது- லூமியர் சகோதரர்கள்தான் முதன் முதலில் சலனப்படங்களை நிறைய மக்கள் பார்க்கும்படி படம்பிடித்து வெளியிட்டனர். Workers Leaving the Lumiere Factory (1895) என்ற அந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர். அந்தப் படத்தை கீழே காணலாம். இது முடிந்து அவர்கள் அந்த கருவியை பிரபலப்படுத்த இந்தியாவிற்கும் சுற்றுப்பயணம் வந்துள்ளனர்.


(ஆனால் முதன்முதலில் (1888) சலனப்படங்களை பிரான்சின் லூயி-லே-பிரின்ஸ் என்பவர்தான் பதிவு செய்தார் என்றும், ஆனால் அவர் பொதுமக்களுக்கு அதை காட்டும் முன்னர் மர்மான முறையில் மறைந்து விட்டார் என்றும்-அவரைப்பற்றி பின் எதுவும் தெரியவில்லை என்றும் கூறுகின்றனர். அவர் எடுத்த Roundhay Garden Scene (2 sec), உலகின் முதல் அசையும் படங்களை ஒரே படச்சுருளில் பதிவு செய்த படம் என்று கூறுகின்றனர். அதைக் கீழே காணலாம்.)


இந்தியாவிலும் இது போன்று வெளிச்சத்திற்கு வராத பல திரைப்பட முன்னூடிகள் உண்டு. இந்தியாவிலேயே முதன் முதலில் திரைப்படம் காட்டிய தமிழர் வின்சென்ட் சாமிக்கண்ணு தென்னிந்தியாவில் முதன்முதலில் படம் எடுத்த (கீசகவதம், பால்கேவுக்கு முன்னாடியே) நடராஜ முதலியார் இந்த மாதிரி.

சரி திகில் படத்துக்கு வான்னு சொல்றீங்களா...அது ஜார்ஜ் மெல்லீஸ் என்பவர் 1896ல் எடுத்த Le Manoir du diable ( "The House of the Devil") என்ற வேம்பையர் படம்தான். அது முன்று நிமிடத்திற்கும் குறைவான அளவே இருந்தது. இருந்தாலும் மக்களின் ஆர்வத்தைப் பார்த்து மெல்லீஸ் மேலும்மேலும் இது மாதிரி டைப்ல ரெண்டு-மூனு நிமிட படங்களை எடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
அப்படியே கொஞ்சகொஞ்சமாக இந்த வகையான படங்கள் நிறைய வரத்தொடங்கியுள்ளன. இதில் குறிப்பிடத்தக்க விஷயம்..முக்கால்வாசி படங்கள் ஜெர்மன் படங்களாகவே இருந்தன.இதில் Nosferatu வெர்னெர் ஹெர்ஸாக்கால் ரீமேக் செய்யப்பட்டது நம் எல்லோருக்கும் தெரியும். இந்தப்படத்தையும் “M” படப்புகழ் Fritz Langதான் இயக்குவதாக இருந்ததாம். கீழே அந்த காலகட்டத்தில் வெளியான புகழ்பெற்ற ஜெர்மனியப் படங்கள். )

1919 The Cabinet of Dr. Caligari                    Robert Wiene                       Germany
 1922 Nosferatu                                               F. W. Murnau                       Germany
1924 The Last Laugh                                       F. W. Murnau                       Germany
1925 The Street of Sorrow                              G. W. Pabst                          Germany
1926 Metropolis                                              Fritz Lang                             Germany
1927 Sunrise                                                   F. W. Murnau                       Germany
1929 The Blue Angel                                     Josef Von Sternberg              Germany
1930 All Quiet on the Western Front            Lewis Milestone                    Germany
1931 M                                                          Fritz Lang                              Germany

Cinema is the most beautiful fraud in the world  
- Jean-Luc Godard

எது நல்ல சினிமா? எது நல்ல இலக்கியம்? எது நல்ல இசை? எது நல்ல பொழுதுபோக்கு?. (இந்த “நல்ல” வார்த்தைய நான் எப்பவுமே கணக்குல எடுக்கறதில்ல-அது Relative termமா இருக்கறதால. ஆனா வேறு வார்த்தை இல்லாததால அத உபயோகப்படுத்த வேண்டியிருக்கு) இந்த கேள்வி அடிக்கடி எனக்குத் தோன்றும். இத்தனை வருஷங்களா பா-கே-படித்ததுல ஒரு மார்க்கமா புரிஞ்சு வெச்சுருக்கேன். என்னளவுல இதைத்தான் அளவுகோலா வெச்சுருக்கேன்.

நல்ல சினிமா-நான் பார்க்குற சினிமா என்னை பாதிக்கணும். பாதிப்புனா நிஜ வாழ்கையில் இருக்கும் சோகங்களையும், ஏமாற்றங்களையும் மட்டும் காட்டுகிற பாதிப்பில்ல.(பல ஈரானியன் சினிமாக்கள்). (இதை ஓவியங்கள், இலக்கியம் எதுக்கு வேணாலும் பொருந்திப் பார்க்கலாம்னு நினைக்கிறேன். அப்படிப்பார்த்தா ஓவியங்கள்ள வான்காவை மட்டுமே ரசிக்க முடியும்னு தோணுது). திரையில வர கதாபாத்திரங்கள் ஒரு சூழ்நிலையில மாட்டிக்கிட்டு பயந்தா நானும் பயப்படனும்(The Shining). ஒரு பரபரப்பான க்ரைம் சீன்ல இருந்தா நானும் அந்த பரபரப்பை உணரனும் (The Departed). ஒரு அமானுஷ்ய விஷயம் நடக்குததுன்னா அது எனக்கு நடக்கிறது மாதிரி தோணனும்(2001: A Space Odyssey). கதாபாத்திரங்கள் சிரிச்சா நானும் எனைமறந்து சிரிக்கணும். இந்த மாதிரி பல “ணும்”கள் இருக்கிற சினிமாவே என்னளவுல நல்ல சினிமா. சுருக்கமா சொன்னா I dont want to watch a movie. I want to feel the movie i watch. யோசிச்சுப்பார்த்தா எவ்வளவு ஏற்றதாழ்வுகள்-பணம்,ஜாதி,மதம்...-இருந்தாலும் தியேட்டர்ல நம்ம பக்கத்தில் யார் உங்கதிருக்கான்னு தெரியாது. அப்படியே ஏதாவது யோசிச்சாலும் படம் போட்டவுடன் எல்லோருமே அதுலயே மூழ்கிறோம். ஏனா படிப்பதை விடவும், கேட்பதை விடவும் பார்ப்பது எப்போதுமே வீரியமிக்கதாகவே இருக்கும் என்பது என் எண்ணம். பல சினிமாக்கள் அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் நிறைய மாற்றங்களை-நல்ல விதமாகவும், எதிர்மறையாகவும்-ஏற்படுத்தியிருக்குங்கிறத நாம் அனைவரும் அறிவோம் (Birth of a Nation, The Battle of Algiers, Fahrenheit 9/11, Triumph of the Will-Hitler’s Propaganda). இத்தனை சக்திவாய்ந்த ஊடகத்தை நம்ம ஆட்கள் பயன்படுத்துற விதம் தான் நிறைய பேருக்கு எரிச்சலூட்டுது. நா கூட ஆரம்பத்துல நெனப்பேன், என்னடா ஆ..வு..னா-உலக சினிமா அது இது சொல்றாங்களேனு, நம்ம ஊரப் பார்த்தா. இங்க வெளியாகிற 100 படங்கள்ள, 95 படங்கள் ஹீரோவுடய சொந்த செல்வாக்க பெருக்கவும், மத ரீதியா-ஜாதி ரீதியா ஏதாவது பிட்டு போட்டு விடவும், பொழுது போக்குங்கிற பெயரில சகிக்க முடியாத காட்சிகளுடனும் தான் ரீலீஸ் ஆகுது. நல்ல பொழுதுபோக்கு படங்களுக்குக்கான முயற்சிகளும் இருக்கத்தான் செய்யுது-ஆனா அளவுல சொற்பம்.(இதெல்லாம் எல்லாருக்கும் எப்பவோ தெரியும் சொல்றீங்களா, ஆனா இப்பதான நான் ப்ளாக் எழுதுறேன்...வேற வழியில்ல.நான் சொல்லித்தான் தீருவேன்).


எதுக்கு இத்தன பீடிகைனா, எல்லாம் இந்த படத்தினாளையும், அதன் டைரக்டராலையும் வந்தது. ஏற்கனவே பலமுறை பார்த்திருந்தாலும் மறுபடியும் போன வாரம் டிவி பார்த்ததுனால வந்த வினை. இருந்தாலும் இந்தப்படத்தை தான் என் முதல் பதிவா போடலாம்னு நெனச்சிருந்தேன். அந்தப்படத்த எல்லோரும் பல தடவ பார்த்திருப்போம். இது வந்து தங்கச்சுரங்கத்தில் வெள்ளிக்காசு விற்பதைப் போலத்தான்  இந்தப்படத்தைப் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்வதும் என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் ஒவ்வொரு முறை இந்தப்படத்தை பார்க்கும்போதும் முதல்முறை பார்க்கும்போது இருந்த impact அப்படியே இருக்கு. நா 5 வருஷம் முன்னாடி காலேஜ் First yearல (Z-Studio) இந்தப் படத்தப் பார்த்தேன். அப்ப எனக்கு ஸ்கார்சேசி இவ்வளவு பெரிய இயக்குனர், டீ நீரோ இத்தனை அட்டகாசமான நடிகர் என்பதெல்லாம் தெரியாது. ஆனா படம் ஆரம்பிச்சதிலயிருந்து இங்கிட்டு அங்கிட்டு பார்வைய திருப்ப முடியல. என்ன ஒரு making, acting, narration. B&W வேற எப்பயுமே அதுல depthness அதிகமா இருக்குற மாதிரி எனக்கு தோணும். இந்தப்படம் பிடித்ததற்கு அதுவும் ஒரு காரணமா இருக்கலாம்.

கதைன்னு பார்த்தா வாழ்ந்து கெட்டவனின் கதைதான். பெரும்பாலானவர்களைப் போல் அதற்கு அவனே தான் காரணம்.

நியூயார்க்,1964:


ஒரு பெருத்த உடல் கொண்ட ஒருவர், பாரில் பேசுவதற்காக ஷேக்ஸ்பியரின் கவிதையை சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த கவிதை “That’s Entertainment” என்ற நோட்டுடன் முடிகிறது. யார் இவர்? ----அப்படியே கட்----

ஒரு குத்துச்சண்டை போட்டி,1941:


அதே “That’s Entertainment” வார்த்தைகளுடன் ஜாக்-லே-மோட்டோ பங்குபெறும் குத்துச்சண்டை போட்டி கண்முன் விரிகிறது. சரியான சண்டை.(குத்து ஒவ்வொன்றும் நமது முகத்திலேயே விழுவதைப் போல் கண்டிப்பாக அனைவரும் உணர்வோம். அற்புதமான ஒளிப்பதிவு.) இந்த போட்டில ஜாக் தோற்றதாக அறிவிக்கப்படுகிறான். இங்க ஆரம்பிக்கிற ஜாக்குடைய வாழ்க்கை பல ஏற்றத்தாழ்வுகளை சந்திக்குது. ஒரு 15 வயது பெண்ணை சந்தித்து அவளை மணக்கிறான். அவள் மீது மிகுந்த பிரியத்துடன் இருக்கிறான். பின்பு அவளது நடத்தையில் சந்தேகம் கொண்டு-தனக்கு பல வகையிலும் ஆரம்பம் முதலே உறுதுணையாக இருந்தா தம்பி ஜோயி உடன் அவளை தொடர்ப்புபடுத்தி-அதற்காக இரண்டு பேரையும் கண்முடித்தனமாக தாக்குகிறான். இதற்க்கிடையே நினைத்தது போலவே middleweight champion ஆகவும் வெற்றி பெறுகிறான். இருந்தாலும் மனதளவில் மிகுந்த குழப்பவாதியாக, சுயகட்டுப்பாடில்லாமல் மூர்கத்தனமான நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுபவனாக மாறுகிறான். கடைசியாக 1951ல் யாரை பல முறை விழ்தியிருந்தானோ- Sugar Ray Robinson- அவனாலேயே கடுமையான முறையில் தாக்கப்பட்டு, தோற்கடிக்கப்படுகிறான்.பட்டத்தையும் இழக்க நேரிடுகிறது.

1956:


குத்துச்சண்டையிலிருந்து ஓய்வு பெற்றதும் சிறிய கிளப் ஒன்றை ஆரம்பிக்கிறான். அங்கு ஏற்படும் ஒரு பிரச்சினையால் சிறைக்கு செல்ல நேரிடுகிறது. இதற்கிடையே மனைவி வேறு விவாகரத்து கோருகிறாள். பெயிலில் எடுக்க காசில்லாமல், தன் விருப்பத்திற்குரிய Middleweight Championship Beltடிலிருந்து, அதை உடைத்து நகைகளை எடுத்தும் வெளியே வர இயலாமல் போகிறது. யாரும் இல்லாமல் சிறையில் இருக்கும் பொழுது இதுவரை நடந்தவற்றை நினைத்து அழுதுகொண்டே இருக்கிறான்.

நியூயார்க்,1964:


ஒரு பெருத்த உடல் கொண்ட ஒருத்தர், பாரில் பேசுவதற்காக ஷேக்ஸ்பியரின் கவிதையை கண்ணாடியைப் பார்த்து சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த கவிதை “That’s Entertainment” என்ற நோட்டுடன் முடிகிறது. யார் இவர்? அவர்தான் ஜாக்-லே-மோட்டோ. உருவம் உப்பிப்போய் இது போன்ற வேலைகளைச் செய்தே இதுவரை காலந்தள்ளி வந்திருக்கிறார். ஒரு ஆள் வந்து எல்லாம் தயாராக இருப்பதாய் கூறிச் செல்கிறான். ஜாக் வருவதாகக் சொல்லி எழுந்திருக்கிறார். சுவற்றில் தெரியும் தன் நிழலைப் பார்க்கிறார். அது பழைய விசயங்களை அவருக்கு ஞாபகப்படுத்த, எதையோ நினைத்தவராக “I'm the boss, I'm the boss, I'm the boss, I'm the boss, I'm the boss” என்று கூறிக் கொண்டே குத்துச்சண்டை இடுவதுடன் படம் நிறைவடைகிறது. என்னதான் காளை ஒடுங்கினாலும் சீற்றம் குறையாதுதானே...

Robert De Niro:



நா என்ன சொல்றது. இவர பத்திதான் எல்லோருக்குமே தெரியுமே. எனக்கு பிடித்த 5 நடிகர்களைக் கேட்டா கண்டிப்பா அதுல இவரும் ஒருத்தரா இருப்பார் (பல பேருக்கும் அப்படித்தான்னு நெனைக்கிறேன்). இவருதான் ஜாக்-லே-மோட்டோ எழுதிய புத்தகத்தை படிச்சிட்டு அந்த கதாபாத்திரத்தால ஈர்க்கப்பட்டு அதை ஸ்கார்சேசியிடம் கொடுக்கிறார். (இங்கயும் இப்படி நிலைமை வந்தா எப்படியிருக்கும்). இதற்காக அவர் 70 பவுண்ட் எடையை கூட்டுனது, போதைப்பொருள் பழக்கத்தால verge of deathல இருந்த ஸ்கார்சேசியிடம் இந்த படத்த இயக்குமாறு சொல்லி தூக்கி விட்டது, இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும்னு நினைக்கிறேன் (உபயம்: IMDB, Wikipedia). இந்த படத்துக்காக இவர் பட்ட கஷ்டத்தை படத்துல எங்கயும் காமிச்சுக்க மாட்டார்.இவர்ட எனக்கு பிடிச்சது என்னன்னா எங்கயுமே டீ-நீரோங்குற மனிதர் கண்ணுக்கு தென்படமாட்டார். அந்த கதாபாத்திரம் மட்டுமே நமக்கு தெரியும். இந்தப்படத்திளும் மனைவியுடன் சண்டை போடும் காட்சிகளாகட்டும், பாக்ஸிங் காட்சிகளாகட்டும் இது எல்லாத்திலேயும் இதைப் பார்க்கலாம்.


கொஞ்ச கொஞ்சமா mental breakdown ஆகிற ஒரு ஆள இவரைவிட தத்ருபமாக வேற யாராலயாவது வெளிப்படுத்த முடிமாங்கிறது சந்தேகமே. எனக்கு மிகவும் பிடித்த காட்சி சிறையில் இருக்கும் பொழுது உடைந்து போய் அழுதுகொண்டே “Why? Why? Why?Why'd you do it? Why? You're so stupid...I'm not an animal” இதைச் சொல்லும் காட்சியும், கடைசியாக “I'm the boss, I'm the boss” என்று சொல்லிக்கொண்ட குத்துச்சண்டை செய்யும் காட்சியும்தான். முகத்தை கூட காட்டாமல் இந்த மாதிரி நடிப்பை வெளிப்படுத்தியதை..சத்தியமா நெனச்சு கூட பார்க்க முடியால. அந்த கதாப்பாத்திரத்தின் மூர்க்கம், கோபம், வெற்றி மிதப்பு எல்லாத்தையும் ஒரு பார்வையிலேயே புரிய வெச்சிடுவார்.

Martin Scorsese:



இந்தப் படத்தை எடுக்கைல இவரு நிலைமை என்னன்னு எல்லோர்ருக்கும் தெரியும். இருந்தாலும் இதை தனக்குத்தானே ஒரு சவாலா எடுத்துக்கிட்டு செஞ்சிருக்கார். ஏன் இந்த நல்ல சினிமா பேச்ச எடுத்தேன்னா...இவருடைய எல்லாப் படங்களையும் பார்க்கிறவுங்க தன்னை அறியாமலே அந்த கதைக்களத்துக்குள் போயிருவாங்க. எனக்கு பல தடவ நடந்திருக்கு. அது Taxi driver, Kundun, King of Comedy (டீ நீரோவின் மற்றொரு பிடித்த படம்), Briging out the dead, Gangs of New york, The Departed ஏன் இப்ப வந்த Shutter Island வரைக்கும் இவருடைய எல்லா படங்களும் அப்படித்தான் இருக்கு. இதற்கெல்லாம் அசாத்தியமான சினிமா அறிவும், அது மேல அளப்பரிய நேசிப்பும் வேணும். ரெண்டாவது, இவருக்குனு சில ட்ரேட்மார்க் மேக்கிங் ஸ்டைல் இருக்கு. எடிட்டிங், குறிப்பா ஜம்ப் கட்ஸ்-வேகமான கேமரா அசைவுகள்-செமத்தியான பின்னணி இசை-க்ளோஸ் அப் ஷாட்ஸ். இந்தப்படத்தில இது அத்தனையும் ஒண்ணா இருப்பதைப் பார்க்கலாம். என்ன மாதிரி எடிட்டிங்டா சாமி...வாய்பேயில்ல. குத்துச்சண்டை சம்பந்தப்பட்ட காட்சிகள்ல point of view ஷாட்ஸ், இதயத் துடிப்புக்கு ஏத்த மாதிரியான காட்சிகள்னு பார்க்கிறவங்க முகத்தில ஒவ்வொரு குத்தும் விழுவதைப் போலயே இருக்கும். நல்லா சவுண்ட் வெச்சு பார்த்தா இன்னும் நல்லாயிருக்கும்.


ஏன் மெமெண்டோவை எல்லோரும் கொண்டாடுகிறார்கள்? ஏன் சைக்கோ இத்தனை ஆண்டுகள் கழித்தும் பயமுறுத்துகிறது? ஏன் பைசைக்கிள் தீஃப் இப்பவும் மனதை கணக்கச் செய்கிறது? பார்க்கிறவர்களையும் ஒரு கதாபாத்திரமாக மாற்றும் வல்லமை இப்படங்களுக்கு உண்டு.இப்படி பார்க்கிறவங்கள மொத்தமா தன்வசப்படுத்தும் சினிமாதான் என்னளவில் நல்ல சினிமா. ஒரு மூணு மணி நேரம் நம்மள அறியாமே அந்த கதைக்குள்ள போயி நாம ஏமாறணும். Thats why Cinema is the most beautiful fraud in the world. (சுறா வகையான பாதிப்பை சொல்லல.அப்படி ஓரளவுக்கு சமீபத்துல நான் ஏமாந்த தமிழ் படம்னா “அஞ்சாதே”வை சொல்லலாம்).சில பேருக்கு இந்தப்படம் பிடிக்காம இருக்கலாம் (சில பேருக்கு நா இப்படி மொக்கையா எழுதுனதுனால கூட பிடிச்சதும் பிடிக்காம போக வாய்ப்பிருக்கு). இன்னம் ஒரு 50 வருசங்கழிச்சு (என் 60வது வயசுல) தூக்கத்தில எழுப்பி உனக்கு பிடிச்ச ஒரு ஐந்து படம் சொல்லுன்னு கேட்டாக்கூட இதயும் ஒண்ணா சொல்லுவேன்.
ரெண்டு நாளைக்கு முன்னால டிவிடி கடைல மேய்ஞ்சுகிட்டு இருக்குறப்போ இந்தப் படம் கண்ணுல பட்டுச்சு. என்னடா..ரிட்லி ஸ்காட்னனு போட்டுருக்கேன்னு ஒரு ஆர்வத்தில வாங்கி, நேத்துதான் பார்த்தேன். கொலம்பஸ்-அமெரிக்கா-ஸ்பெயின் இந்த மாதிரி வரலாற்றில் ஆர்வமிருப்பவங்களுக்கு நல்ல தீனி. ஏற்கனவே இந்த விசயங்கள் எல்லாம் தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லது. இல்லேனா படம் கொஞ்சம் போர் மாதிரி தோணும். என்னயிருந்தாலும் ரிட்லி ஸ்காட்டின் trademark stunnig visualsக்காக கண்டிப்பா பார்க்கலாம். சரி.. இனி கதைக்கு போவோம்.

(இந்தப்படம் கிறிஸ்டோபர் கொலம்பஸின் புகழ் பெற்ற கடல் பயணம் 1492ல் ஆரம்பித்து 500 ஆண்டுகள் நிறைவுற்றதை குறிக்கும் விதமாக 1992ல் வெளியிடப்பட்டுள்ளது).

படத்தின் பெயர் போடும் போதே பின்னணியில் பூர்வகுடிகளை கொடுமைப்படுத்திய காட்சிகளை ஓவியமாக காண்பிக்கின்றனர். அது முடிந்து கொலம்பஸ் தன் மகனுக்கு கடலைப் பற்றி சொல்லிக்கொடுப்பதில் படம் ஆரம்பிக்கிறது கொலம்பஸ் இத்தாலி நாட்டில் பிறந்திருந்தாலும் ஸ்பெயினுக்கு குடிபெயர்ந்தவராவார். அவர் 1491ல் அட்லாண்டிக் கடல் வழியாக நேர் மேற்கில் சென்று, ஆசியாவுக்கு ஒரு புதிய கடற்பாதையை கண்டுபிடிக்க முடியும் என்று உறுதியாக நம்புவதோடு மட்டுமல்லாமல், அதை பல அறிஞர்களுக்கும் நீருபிக்க முயல்கிறார். ஆனால் யாரும் அவர் கூற்றை நம்பத் தயாரில்லை. ஒரு வழியாக நயமாக பேசி சமாளித்து அந்தக் கடல் வழியைக் கண்டுபிடிக்க அரசி முதலாம் இசபெல்லாவின் உதவியைப் பெறுவதில் (ஏராளமான புதையல்களை அள்ளி வருவதாகக் கூறி) வெற்றி காண்கிறார்.

ஒரு படையைக் கூட்டிக் கொண்டு1492 ஆகஸ்ட் 3 அன்று ஸ்பெயினிலிருந்து பயணத்தைத் தொடங்குகிறார். கொலம்பஸ் கண்டுபிடிக்கும் எந்த நிலப்பகுதியாய் இருந்தாலும் அதற்கு அவரை ஆளுநராக நியமிப்பதாக இசபெல்லா அவருக்கு வாக்குறுதியளித்திருக்கிறார். கிட்டத்தட்ட 10 வாரங்கள் பயணம் மேற்கொண்டும் நினைத்தது போல் ஒன்றும் தென்படவில்லை. கப்பலைச் சார்ந்தவர்கள் பொறுமையிழந்து, கூச்சலிட ஆரம்பிக்கின்றனர். கடைசியாக கரை தென்படுகிறது. ஆரவாரத்துடன் அதில் ஒதுங்குகின்றனர்(கானரித் தீவுகள்). கொலம்பஸ் ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்டு அதற்கு “சான் சல்வடோர்” என்று பெயரிடுகிறார். இது வரை வேற்று மனிதர்கள் வாசனையே அறியாத இடமான அக்காடுகளும் ஆறுகளும் பறவைகளின் ஓசையும் சொர்க்கம் போலவே அவர்களுக்கு காட்சியளிக்கின்றது (அதனால்தான் படத்தலைப்பு Conquest of Paradise). அங்கு இருக்கும் பூர்வகுடிகளுடன் சகஜமாக பழகுகிறார்கள்.


அவர்களில் சிலர் தங்கத்தில் செய்த ஆபரணங்களை அணிந்திருப்பதைக் கண்டு தங்கத்தை தேடி எடுக்க மிகுந்த சிரமத்திற்குள்ளாகினாலும் சிறிதளவே தங்கம் கிடைக்கிறது(அதுவும் அந்த மக்கள் விரும்பி கொடுத்தது). அங்கிருந்து கிளம்பி ஹைதி தீவுகளை அடைகின்றனர். அங்கிருக்கும் பூர்வகுடிகளுடன் (டைனோ இனத்தவர்) பேசி ஒரு கோட்டை கட்டுவது என்று முடிவாகின்றது.தன்னுடன் வந்திருந்தவர்களில் ஒரு 40 பேரை மட்டும் கோட்டை கட்டுவதற்காக விட்டுவிட்டு மறுபடியும் ஸ்பெயினுக்கு சிறிதளவே தங்கத்துடன் திரும்புகிறார் கொலம்பஸ். ஸ்பெயினில் அவருக்கு உற்சாகமான வரவேற்பளிக்கின்றனர். எல்லாம் முடிந்து தங்கத்தைப் பற்றி பேச்சு வரும் பொழுது இவ்வளவுதான் கிடைத்ததா என்று அணைவரும் கேட்க, மறுபடியும் போனால் இதை விட அதிகமாகவும், நமது கலாச்சாரத்தையும், நம்பிக்கைகளையும் இன்னும் தூர தேசங்களுக்கு சென்று பரப்பலாம் என்று கொலம்பஸ் கூறுகிறார்.இம்முறை அவரோடு ஸ்பெயின் ராஜ வம்சத்தை சேர்ந்த பலரும் வருகின்றனர். அதில் மோசிக்கா என்ற முசுடும் உண்டு. அவர்கள் மேற்கிந்திய தீவை அடைந்தவுடன் அங்கே ஏற்கனவே விட்டு வந்த 40 பேரும் இறந்திருப்பதைக் கண்டு கொதிப்படைகின்றனர். அதிலும் மோசிக்கா, இதற்கு அந்த பூர்வகுடிகள் தான் காரணம், அனைவரையும் அடியோடு அழிக்க வேண்டும் என்று கூறுகிறான்.
கொலம்பஸ் அனைவரையும் அமைதிப்படுத்தி என்ன நடந்தது என்று விசாரிக்க, கடலில் இருந்து வந்த வீரர்கள் உங்கள் ஆட்களைக் கொன்று விட்டனர் என்று பூர்வகுடிகளின் தலைவன் தெரிவிக்கிறார். மோசிக்கா இதை நம்பாமல் அவர்களை கொல்வதிலேயே குறியாய் இருக்கிறான். கொலம்பஸ் அவர்களிடம் பேசி புது நகரத்தை உருவாக்குவதில் அவர்களது உதவியையும் பெறுவதில் வெற்றிபெறுகிறார். கிட்டத்தட்ட ஒரு அரசாங்கத்தையே நிர்மானிக்கின்றனர். பின் ஏற்படும் விபத்தில் நகர கட்டுமானப்பணிகள் தேக்கமடைய-பூர்வகுடிகளுக்கும் மோசிக்காவிற்கும் சண்டை வர-இன்னொரு பூர்வகுடி கும்பல் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடக்க-மோசிக்கா கொலம்பஸின் இடத்தைக் கைப்பற்ற நினைக்க-அதில் அவன் இறக்க என்று பெரும் குழப்பும் ஏற்படுகின்றது. இது ஸ்பெயினிற்கு தெரிந்து அவரை பதவியிலிருந்து தூக்கிவிட்டு,திரும்பி வர உத்தரவிடுகின்றனர். வந்தவுடன் கைதும் செய்கின்றனர்.அப்போது அவருக்கு அமெரிகோ வெஸ்புகி தென் அமெரிக்க நாடுகளுக்கு உரிய பாதையை கண்டுபிடித்துவிட்டார் என்ற செய்தியும் தெரிகிறது. பின் சிறைவாசம் முடிந்து வெளியே வருகிறார். இந்நிலையில் உலக வரைபடத்தை தயாரிக்கும் பொழுது அவர் கண்டறிந்த கண்டத்திற்கு “அமெரிக்கா” என்று பெயர் சூட்டப்படுவதைக் கண்டு விரக்தியடைகிறார். பின் மகனுடன் சேர்ந்து நாலாவது முறையாக பயணத்தைத் தொடங்க ஆயத்தமாகிறார். பையன் பெர்னாண்டோ என்பவர் தன் தந்தையை பற்றி எழுதிய குறிப்புகளைக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியோடு படம் நிறைவடைகிறது.

                           இது ரிட்லி ஸ்காட்டின் படம் என்பதால் ஒளிப்பதிவு அட்டகாசமாக இருந்தது. குறிப்பாக பூர்வகுடிகள் சம்பந்தப்பட்ட காட்சிகளும், கப்பல் காட்சிகளும் ரொம்பவே அருமையாக இருந்தது. அப்பறம்....இசை-வாங்கலிஸ் (Vangelis, இந்தப் பேர சரியா எப்படி உச்சரிக்கிறது?..). நம்ம ரஹ்மான் தனக்கு பிடித்த இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர்னு இவரைப்பத்தி சொன்னத படிச்சிருக்கேன்.சும்மா சொல்லக்கூடாது.பின்னியிருக்கிறார். கேட்டுப் பாருங்க, உங்களுக்கே தெரியும். அப்புறம் கொலம்பஸா Gerard Depardieu (தமிழ்ல எனக்கு வரல.விட்டுருங்க). நான் இவர அஸ்டரிக்ஸ் படத்துல பார்த்த ஞாபகம். பிரெஞ்சு நடிகர். செமயா நடிச்சிருக்கார். கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடிப்பதுன்னு சொல்வாங்கள்ல, அதற்கு சரியா பொருந்துகிறார்.


என்ட இருக்குற ஒரு கெட்ட பழக்கம் எல்லா படத்தின் பின்னணியையும் ஆராய்றது. சப்ஜெக்டே இல்லாத படத்தையே நொண்டிக்கிட்டு இருப்பேன். இதுல கொலம்பஸ் மாதிரி சப்ஜெக்ட் கிடைச்சா விடுவேனா. ஏற்கனவே கொலம்பஸ் பத்தி எக்குத்தப்பா கேள்விப்பட்டிருக்கேன்..படிச்சிருக்கேன்.அதை இங்க பகிர்ந்துக்க ஆசைப்படுகிறேன். விருப்பம் இருக்குறவுங்க கண்டின்யூ..இல்ல.டாட்டா..சீ யு..பைபை

கலைஞர் ஸ்டைல்ல நானே கேள்வி நானே பதில்..

கொலம்பஸ் எதைக் கண்டுபிடித்தார்? வெஸ்புகி எதைக் கண்டுபிடித்தார்?
ரெண்டு பேருமே அமெரிக்க கண்டங்களை கண்டுபிடித்தவர்கள் தான். யாரு முதல்ல?

கொலம்பஸ்:
இவரு 1492ல முதல்ல கரிபியன் தீவுகள கண்டுபிடிச்சுட்டு அது ஆசியால ஒரு பகுதின்னு நினச்சுக்கிட்டார். இவரு “Mainland” அப்படின்னு சொல்லப்படுற நிலப்பகுதிய பார்க்கவேயில்ல. தென் அமெரிகாவிற்கோ வட அமெரிகாவிற்கோ உள்ளே போகவேயில்ல. இந்த படத்தப் பார்த்தா புரியும்.
இதுல அவரு தென்-வட அமெரிக்காவிற்கு போகாம, கரீபியன் தீவுகளை மட்டும் தொட்டுட்டு வர்றது தெரியும்.

வெஸ்புகி:
இவரு 1505ஆம் ஆண்டு தான் அமெரிக்க கண்டங்களைத் தேடி 4 முறை போனதுக்கு ஆதாரமா ஒரு கடிதத்தை வெளியிடுகிறார். அதன்படி 1497ல தென் அமெரிக்காவிற்கு முதல்ல போனவர் என்று இவரை ஒரு ஜெர்மன வரைபட தயாரிப்பாளர் அறிவிக்கிறார். அதோடு இல்லாம அக்காலத்தில மேதைகளின் மொழியாக கருதப்பட்ட லத்தின் மொழில “அமெரிகோ” என்பதற்கு பெண் பெயரான “அமெரிக்கா (ஆப்ரிக்கா, ஐரோப்பா, ஆசியா-இதுவும் பெண் பெயர்கள் மாதிரி)” என்பதை தான் தயாரித்த வரைபடத்தில் இருந்த கண்டங்களுக்கு சூட்டுகிறார்.
ஆக முதல்ல அமெரிக்க கண்டங்களில் கொலம்பஸ் கால் பதித்திருந்தாலும்(1492), கொஞ்சம் அதிகப்படியாக அந்தப் பகுதிகளை, குறிப்பாக தென் அமெரிக்காவை(1497) சுற்றியவர்னு வெஸ்புகியைச் சொல்லலாம். இதுல ஏன் வெஸ்புகி முதல்ல வந்துச்சுன்னு இந்தப்படத்தில் சொல்லியிருக்காங்க.

இவுங்க ரெண்டு பேருக்கும் முன்னாடி யாருமே அந்தப்பகுதிகளுக்கு போனதில்லையா?

  • 10,000 BC லயே சைபீரியாவிலிருந்து ஒரு மக்கள் குழு அலாஸ்கா நோக்கி புலம்பெயரும் போது அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் குடியேறி கொஞ்சம் கொஞ்சமாக தென்-வட அமெரிக்காவில் வாழத்தொடங்கியுள்ளனர். அவர்கள் தான் அமெரிக்க கண்டத்தின் பூர்வகுடியினர் என்று அழைக்கப்படுகின்றனர்(மாயன், இன்கா மக்கள் இவர்கள்தான் என்றும் கூறுகின்றனர்). 
  • அதைப் போன்றே இஸ்ரேலைச் சேர்ந்த பழங்குடியினரும், ஆப்பிக்காவைச் சேர்ந்த கார்திஜியன்சும் சென்றுள்ளதாக கூறுகின்றனர்.
  • 10ஆம் நூற்றண்டிலேயே (982AD) எரிக் ரெட் என்ற நோர்வேஜியன் வைகிங்க்ஸ் அரசர் தன் குழுவினருடன் தென் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார் எனவும், அதைத்தொடர்ந்து லய்ப் எரிக்சன் என்ற மாலுமியும் 12ஆம் நூற்றண்டில் சென்றுள்ளதாகவும் கூறுகின்றனர்.

கொலம்பஸ் ஏன் புது கடல் வழியை கண்டறிய முனைய வேண்டும்?
Fall of Constantinople” இதைப்பற்றி 9,10 வரலாறில் படித்தீருப்பீர்கள். (நா படிக்க இன்னம் ரெண்டு வருஷம் இருக்கு). Constantinople-ரோமானியர்களின் தலைநகரம். இதை ஒட்டோமான் துருக்கியர்கள் கைப்பற்றுகின்றனர் (ஒட்டோமான் துருக்கியர்கள் என்றவுடன் ஓரான் பாமுக்கின் “My name is Red” ஞாபகத்திற்கு வருகிறதா). அதுவரை சீனா-இந்தியாவிற்கு சென்று வர இருந்த தரைவழிப்பாதை Constantinople வழியாகவே சென்றது. துருக்கியர்கள் அதை பிடித்தவுடன்(1453) அந்தப் பாதை அடைபட்டதால், ஐரோப்பிய நாடுகள் வேறு வழியைக் கண்டுபிடிக்க வேண்டியதாயிற்று. பல பேரும் இந்தியாவைத் தேடி புறப்பட்டாலும் கடைசியாக 1498ல் வாஸ்கோ-டே-காமா அதைச் சாதித்தார்.

கொலம்பஸின் பயணத்தால் ஏற்பட்ட விளைவுகள் என்னென்ன?
கொலம்பஸ் பயணம் ஆரம்பித்த (15ஆம் நூற்றாண்டின் கடைசி கட்டம்) காலத்தில் ஐரோப்பாவில் ஆட்சியில் இருந்து அரபு முஸ்லிம்கள் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்தனர் (இந்தப்படத்தில் கூட Granada என்ற முஸ்லிம் நினைவகத்தை இடிக்கும் காட்சி வரும்). கிறிஸ்தவ தேவாலயங்கள் (குறிப்பாக கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்) முஸ்லிம்கள் இடையேயான சண்டை உச்சதிலிருந்தது. தேவாலயங்கள் சக்திமிக்கதாக உருவேடுத்திருந்தன(இந்தப் படத்தில்கூட சூனியக்காரர்களை விரட்டும் “Burning of Heretics” உயிரோடு கொளுத்தும் சடங்கைக் காணலாம்) “Crusade war(1095-1291)” சிலுவைப்போர் ஞாபமிருக்கிறதல்லவா..அதன் நீட்சியாக இதைக் காணலாம். எனவே புதிய நாடுகள்-செல்வத்திருக்கும், மதத்தை பரப்புவதற்கும், வேலைக்கு தேவையான அடிமைகளுக்கும், பொருளாதாரத்தை மேம்படுத்தவும்-தேவைப்பட்டன. இந்த சண்டைகள், ஆக்கிரமிப்புகள் ஆகியவற்றில் ஸ்பெயினும், போர்சுகல்லும் முதன்மையாக ஈடுபட்டன.


எனவே கொலம்பஸ் போன்றவர்களது பயணம் பூர்வகுடிகளின் இனஒழிப்பிற்க்கு பெருமளவில் வித்திட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. தங்கத்தைத் தேடிச்சென்ற கொலம்பஸ் மாறாக அடிமைகளையே கொண்டு வந்தார். ஹிஸ்பனோ தீவிலும், ஹைதி தீவிலும் பெருமளவு இனப்படுகொலை நடந்ததாக சொல்கின்றனர். கொலம்பஸ் எந்த அளவு வரலாற்று நாயகனாக போற்றப்படுகிறாரோ(இப்படத்தைப் போல) அதே அளவு, சொல்லப்போனால் அதைவிட அதிகமாக தற்பொழுது இனப்படுகொலைக்கு வித்திட்டவராகவும் அறியப்படுகிறார். 

நோம் சாம்ஸ்கி இவ்வாறு கூறுகிறார்

QUESTION: 1992 is the 500th anniversary of Columbus's voyage to the Americas. Official celebrations speak of the "fifth centenary of the discovery of America" and of the "meeting of two cultures." Are these appropriate ways to refer to this event?

CHOMSKY: There's no doubt that there was a meeting of two worlds. But the phrase "discovery of America" is obviously inaccurate. What they discovered was an America that had been discovered thousands of years before by its inhabitants. Thus, what took place was the invasion of America -- an invasion by a very alien culture.

மேலும் படிக்க...


வெனிசுலாவின் பிரதமர் ஹுகோ சாவேஸ் கொலம்பஸ் பற்றி கூறியவை

இந்த காலனியாதிக்கத்தை தான் ஆய்வாளர்கள் “European colonization of the Americas” என்கின்றனர். இதற்கு அடுத்து ஏற்பட்டதே ஆசியா&ஆப்ரிக்கா காலனியாதிக்கம். இதை “New Imperialism” என்று அழைக்கின்றனர். ஆனால் ஒன்று..அந்தக்காலத்தில் போர் என்றால் நேரடியாகவாவது படையெடுத்தனர். போகப் போக அது ரொம்ப செலவுபிடித்தது, சிரமமானது என்பதால் வேறு வகையில் தாக்குதல் நடத்துகின்றனர். கலாச்சார ரீதியாக, தொழில்நுட்ப ரீதியாக, அரசியல் ரீதியாக இன்னும் பல மாதிரி. பிரிட்டிஷ் 1947ல் வெளியேறினாலும், only they are physically absent.அப்போ வெள்ளக்காரன்ட முதுகு வலைஞ்சிருந்தவர்கள், இப்ப நம்ம ஆட்கள்கிட்டயே வலைஞ்சிருக்காங்க. என்ன..கலர் தான் வித்தியாசம். அவன் வெள்ளை. நம்ம கருப்பு. என்னமோ போங்க..எங்கயோ ஆரம்பிச்சு எங்கயோ முடிக்கிறேன்.

பி.கு:  இது தொடர்பாக விஷயங்கள் தெரிந்த நண்பர்கள் அதைப் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி. அதே போல் ரிட்லி ஸ்காட்டின் "Kingdom of Heaven" பார்க்காதவர்கள், சிலுவைப்போரைப் பற்றி தெரிந்து கொள்ள அதைப் பார்க்கலாம்



1940 வரை வியட்நாம் பிரான்ஸ் வசமே இருந்தது. 1941இல் தான் ஜப்பான் பிரான்சிடம் இருந்து கைப்பற்றியது. ஜப்பானாவது நம்மை கைதூக்கிவிடும் என்று வியட்நாம் மக்கள் நம்பினாலும் ஹோசிமின் (அந்நாட்டு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்) மட்டும் நம்மை அடிமைப்படுத்தும் அனைத்து நாடுகளும் ஒன்றே என்றார். இவர் இதுபோல் பேசுவதைக் கண்ட ஜப்பான் இவரை கைது செய்ய முனைந்த போது அடர்ந்த காட்டுக்குள் பதுங்கி பேரும் கொரில்லா படையை உருவாக்கினார். 1945 II உலகப்போரில் ஜப்பான் வீழ்ச்சியடைந்த தருணத்தின் போது மறுபடியும் ஹோசிமின் தாக்குதல் நடத்தி வியட்நாமை கைப்பற்றினார். இப்போது பிரான்ஸ் திரும்பி தாக்குதல் நடத்தி, ஹோசிமினின் படைகளை சமாளிக்க முடியாமல் மண்ணைக் கவ்வியது. இருந்தாலும் தெற்குப் பகுதியை இன்னமும் தன்வசமே வைத்திருந்தது. வடக்குப் பகுதியை ஹோசிமினின் படைகள் கைப்பற்றி இருந்தன(1952)

பிரான்ஸ் பார்த்தது. இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று வேற மாதிரியான பிரச்சாரங்களை செய்ய ஆரம்பித்தது. ஹோசிமின் ஒரு கம்யூனிஸ்ட். ரஷ்யாவிற்கு ஆதரவாக இருப்பவர். இவரை வளரவிட்டால் இந்தப் பகுதி முழுவதையுமே கம்யூனிஸ்ட் ஆட்சியின் கீழ் கொண்டு வந்து விடுவார் என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்தது. இது போதாதா அமெரிக்காவிற்கு.. பிரான்சிற்கு ஏராளமான ஆயுத உதவிகளை செய்ய ஆரம்பித்தது. 1952-1965 வரை நேரடியாக போரில் ஈடுபடா விட்டாலும் இந்த உதவி தொடர்ந்தது.
                                     
கடைசியாக நாமே போரில் இறங்கலாம் என்று முடிவு செய்து 1965ல் போரில் குதித்தது. சின்னஞ்சிறிய நாடான வியட்நாமிற்கு எதிராக பெருமாளவில் ஆயுதங்களையும் விமானத்தாக்குதல்களையும் நடத்தியது. இதனால் ஆரம்பத்தில் அமெரிக்காவின் கை ஓங்கி இருந்தது. ஆனால் வெகு சீக்கிரமே நிலைமை மாறியது. சதுப்புநிலக் காடுகள்; மைனஸில் வாட்டி எடுக்கும் குளிர்; அடர்ந்த காட்டிற்குள் எங்கிருந்து எப்போது கொரில்லா தாக்குதல் நடக்கும் என்று தெரியாது-இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு பழக்கப்படாத அமெரிக்க வீரர்கள் மிகுந்த சிரமத்திற்க்கு உள்ளாயினர். விரக்தியுற்ற பலர் படையை விட்டே ஓடினர். ஹோசிமினின் கொரில்லாப் படை வெற்றி மேல் வெற்றியை பல இழப்புகளுக்கு நடுவே ஈட்டி வந்தது. கடைசியில் ஆனானப்பட்ட அமெரிக்காவே சமாதானத்திற்கு முன்வந்தது. ஆனால் ஹோசிமின் தெற்கு-வடக்கு இணையும் வரை அந்த பேச்சிற்கே இடமில்லை என்று மறுத்துவிட்டார்.இதனால் கோபமுற்ற அமெரிக்கா தான் டம்மியாக தெற்கு வியட்நாமில் அமர்த்தியிருந்த ஆட்சியை உசுப்பிவிட்டு கடும் தாக்குதலுக்கு வழிவகுத்தனர். கண்மூடித்தனமாக அனைத்து தரப்பு மக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்த்த புத்த பிக்குகளும் தாக்கப்பட்டனர். இதைக் கண்டித்து பிக்குகள் தீக்குளிப்பு போராட்டம் நடத்தினர்.


இது போக Napalm எனப்படும் கொடுமையான குண்டை வீசியும் தாக்குதல் நடத்தினார். அப்போது எடுக்கப்பட்ட (கீழே உள்ள) புகைப்படம் அனைத்து தரப்பு மக்களையும், அமெரிக்கர்களையும் சேர்த்து உலுக்கியது
.
இந்தப் பெண்மணியை எழுத்தாளர்.அ.முத்துலிங்கம் தேடிப் பேசியுள்ளார். இது சமீபத்தில் விகடனில் வந்திருந்தது. அது கிடைக்குமா என்று தேடிய போது இது கிடைத்தது. அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டுகிறேன் 
ஏனென்றால் போர்கள் குறித்து உடனுக்குடன் செய்தி தரும் முறையை தொலைகாட்சிகள் அப்போதுதான் ஆரம்பித்திருந்தன. (இப்பதான் நம்மளுக்கு இதெல்லாம் பழகிருச்சே). உலகத்தின் குரலுக்கு செவிசாய்க்க அதிபர் நிக்சன் முடிவெடுத்து படைகளை திரும்பப் பெறுவதாக அவசர அவசரமாக அறிவித்தார் (1972). ஒருவழியாக, அமெரிக்க சரித்திரத்திலேயே அதிக நாட்கள் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்தது. இப்போரில் அமெரிக்கா பல வகையிலும் படுதோல்வியைச் சந்தித்தது. சொந்த நாட்டிலும் பல எதிர்ப்புகள்.

இந்தப் படத்தை பல படங்களில் பார்த்திருப்போம். அவசர அவசரமாக காலி செய்யும் அமெரிக்க படையினர்.
லென்னான் (Give peace a chance இக்காலகட்டத்தில்தான் இயற்றப்பட்டது), முகமது அலி, பால் நுமன், ஸ்டீவி வொண்டர் போன்ற பல புகழ் பெற்ற கலைஞர்களும் பல போராட்டங்களை முன்னின்று நடத்தினர். (பாப் டிலனில் ஆரம்பித்து U2 போனோ வரை எப்போதுமே மனித உரிமை மீறல்களுக்கு எதிராக குரல் கொடுப்பதைக் காணலாம்).

                                                       இப்படத்தை புரிந்து கொள்ள இந்த தகவல்கள் எனக்கு மிகவும் உதவியாய் இருந்தன. ஆகவே தான் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்பட்டேன். இதுல என்ன கொடுமைன்னா அமெரிக்கா போன்ற நாடுகளின் போரினால் எவ்வளவு உயிர்ச்சேதம் ஏற்பட்டதோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் கம்யூனிஸ்ட் ஆட்சிகளிலும் ஏற்பட்டுள்ளது. இதெற்கெல்லாம் ஒரே தீர்வா நான் நினைப்பது காந்தியப் பாதை தான். அதற்கு சிறந்த உதாரணம்-தென் ஆப்பிரிக்கா(மண்டேலா). மோசமான உதாரணம்-இந்தியா. அவுங்க எப்படி ஒற்றுமையா உலகக்கோப்பை கால்பந்தை நடத்தினாங்க. இங்க.. 35,000 கோடி வெட்டியா ஒதுக்கி... இதுலயும் ஊழல்.
..............


" Saigon, shit. I'm still only in Saigon. Every time I think I'm gonna wake up back in the jungle" 

பெஞ்சமின் வில்லார்ட்-ஏற்கனவே வியட்நாமில் பணியாற்றிவிட்டு, வீடு திரும்பிய போதும் போரின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் விவாகரத்திற்கு ஒத்துக்கொண்டு மறுபடியும் தானாகவே மாறுதல் கேட்டு வியட்நாமிற்க்கு வந்துள்ளான். மிகுந்த விரக்தியுற்ற மனநிலையில் இவ்வாறு புலம்பிக்கொண்டும் எப்போது மறுபடியும் போருக்கு போவோம் என்ற வெறியுடனும் பயங்கர குடியில் விழுந்து கிடக்கிறான். யாரும் விரும்பி போருக்கு செல்வதில்லை. வில்லார்ட் சொல்வதிலிருந்தே எந்த அளவிற்கு போரினால் மனதளவில் பதிக்கப்பட்டுள்ளான் என்று தெரிந்து கொள்ளலாம். (குறிப்பாக அந்த கண்ணாடியை நொறுக்கும் காட்சி ஒன்று போதும்). பிறகு அவன் மற்றொரு முகாமிற்கு அழைத்து செல்லப்படுகிறான். மூன்று உயரதிகாரிகள் அவன் இதுவரை செய்த வேலைகளைப் பற்றியும் அவன் CIAஇன் ஆளாகவும் பணியாற்றியதைப் பற்றியும் விசாரிக்கிறார்கள். பின்பு அவனிடம் முக்கியமான வேலை ஒன்றை செய்யச் சொல்கிறார்கள். பல பதக்கங்களையும், பாராட்டுகளையும், கல்வி அறிவு நிறைய உள்ள, அடுத்த ஜெனரல் அவர்தான் என்று அனைவரும் நினைத்த ஒரு மனிதன் தானே ஒரு படையை வியட்நாம் ஆதிவாசிகள் உதவியுடன் திரட்டி பயங்கரமான வகையில் போர் செய்து வருகிறான். யாராலும் அவனைக் கட்டுப்படுத்தவோ, முறியடிக்கவோ இயலவில்லை. “Every man has got a breaking point. You and I have. He has reached his. And very obviously, he has gone insane.” (இந்த டயலாக்கை கேள்விப்பட்ட மாதிரி இருக்குமே. இது கூட காப்பியா..). நீ அவனை கொல்ல வேண்டும். இதுதான் உன் வேலை என்று சொல்லி அவனை அந்த மனிதன் இருப்பதாக நம்பப்படும் வியட்நாம்-கம்போடியா எல்லையில் உள்ள காட்டிற்கு ஒரு படகில் மூவர் துணையுடன்(a surfing champion, a teenager, a cook மூவருமே கட்டாய பணியிருப்பில் உள்ளவர்கள்) அனுப்பி வைக்கின்றனர். யார் அந்த மனிதன்?


அந்த மனிதன்தான் Col.வால்டர் கர்ட்ஸ் (மர்லன் பிராண்டோ). அவனது வாழ்க்கைக் குறிப்புகளை படித்துகொண்டே பயணிக்கும் வில்லார்ட், எப்படி இத்தனை திறமைமிக்க, கற்றறிந்த ஒரு சிறந்த மனிதன் இத்தகைய கொடுமையான செயல்களை செய்யத்துணிந்தான் என்றெண்ணி அதிர்ச்சியடைகிறான். பின்பு போர் எத்தகைய மனிதனையும் மாற்றி விடும் என்பதையும் உணர்கிறான். அவர்கள் பயணித்து மற்றொரு இடத்தில் இருக்கும் அமெரிக்க படைகளை சென்றடைகிறர்கள். அங்கிருந்து அவர்கள் சேர வேண்டிய இடத்திற்கு கொண்டு சேர்ப்பது Lt.Col.பில் கில்கோரின் பொறுப்பாகும்(ராபர்ட் டுவால்). இந்த கில்கோர் surfingஇல் மிகுந்த ஆர்வம் கொண்டவன். போர்களத்திலும் கூட தனக்கு தோன்றியதை (surfing உட்பட) செய்பவன். முதலில் வில்லார்ட் குழுவை ஏற்க மறுக்கும் கில்கோர், அவர்கள் குழுவில் surfing சாம்பியனான ஒரு வீரனும் இருப்பதை அறிந்து அவர்களை கொண்டு சேர்க்க ஒப்புக்கொள்கிறான்-மறுநாள் தனக்கு surfing கற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன். அடுத்த நாள் இவர்கள் surfing செய்வதற்காகவே கடற்கரையை ஒட்டி இருக்கும் ஒரு கிராமத்தின் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்துகின்றனர். அதற்காக ஹெலிகாப்டர்களில் ஒப்ரா இசையான “Ride of the Valkyires”ய் ஒலிக்கச்செய்து கொண்டே தாக்குதலை ஆரம்பிக்கின்றனர். “இந்த இசை அந்த கிராமத்தான்களுக்கு மிகுந்த பயம் கொடுக்கும் ஒன்றாகும்” என்று வெறியுடன் கில்கோர் கொக்கரிக்கிறான். பயங்கர கொண்டு மழை பொழிகிறது. கடைசியாக மிக சக்தி வாய்ந்த Napalm குண்டை வீசி தாக்குதலை முடிக்கின்றனர். இதற்கடுத்து கில்கோர் சொல்லும் வார்த்தை “Napalm, son. Nothing else in the world smells like that. I love the smell of napalm in the morning”. இதை விட போரில் வெறி கொண்ட மனிதனைக் கான முடியாது.அந்தக் காட்சியை நீங்களே காணுங்கள். மேலே உள்ள சிறுமியின் படத்தையும் இந்த வார்த்தைகளையும் நினைத்துப் பாருங்கள்.


மறுபடியும் வில்லார்ட் குழுவினர் தங்களது பயணத்தை தொடங்குகிறார்கள். வழி நெடுக வில்லார்ட் கர்ட்ஸ்சின் கடிதங்களேயும், குறிப்புகளையும் படித்துக் கொண்டிருக்கிறான். ஓருவாரக அவனால் கர்ட்ஸ்சின் மனநிலையை புரிந்து கொள்ள முடிகிறது. அப்போது அங்கு வரும் படகை சோதனையிடும் போது நடக்கும் காட்சி ஒரு காட்சியை விவரிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை.
நீங்களே பாருங்கள்.


தனிமை,விரக்தி,பெரும் மனஉளைச்சலுக்கிடேயே வில்லார்ட் குழுவினர் பயணிக்கின்றனர்.கர்ட்ஸ்சின் இருப்பிடத்தை நெருங்கும் போது ஏற்படும் தாக்குதலில் ஒரு வீரன் உயிரிழக்கிறான். surfing வீரனும் கிட்டத்தட்ட மனநிலை பாதிப்புடன் வில்லார்டுடன் சேர்ந்து கர்ட்ஸ்சின் ஆதிவாசிகள் சூழ்ந்திருக்கும் இருப்பிடத்தை அடைகிறார்கள். அங்கு அவர்களை ஒரு புகைப்படக்காரன் வரவேற்கிறான். கர்ட்ஸ்சின் நடவடிக்கைகளாள் வசியம் செய்யப்பட்டவனைப் போல் அப்புகைப்படக்காரன் காணப்படுகிறான். அவனே வில்லார்டை கர்ட்ஸ்சிடம் அனுப்பி வைக்கிறான்.இதுவரை யாரைக்காண விரும்பினானோ, யாரைக் கொல்ல அனுப்பப்பட்டானோ அவனைக் கண்டானா..கர்ட்ஸ் எப்படிப்பட்டவன்? வில்லார்டு கர்ட்சை கொன்றானா? இதை எல்லாம் தெரிந்து கொள்ள படத்தை பார்ப்பதே நல்லது.


இப்படம் Joseph Conrad என்பவர் எழுதிய Heart of Darkness நாவலை கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. எனவே வசனங்களெல்லாம் மிகக் கூர்மையாக உள்ளன. ஒலிப்பதிவும் மெய்மறக்கச் செய்யும் வகையில், நாமே அக்களத்தில் இருப்பதைப்போல் உணர்வைத் தருவதாய் உள்ளன. இசையில்லாமல் இப்படத்தைப் பார்த்தால் தலையில்லாத உடம்பைப் பார்ப்பதைப் போன்ற உணர்வையே தரும்.


மர்லன் பிராண்டோ
படத்தில் மொத்தமே ஒரு 12 நிமிடங்கள்தான் வருகிறார். ஆனால் படமுழுவதும் வியாபித்திருப்பது போல் அனைவருக்கும் தோன்றும். கர்ட்ஸ் பேசியதாக வில்லார்டிற்கு ஒரு டேப்பை போட்டுக் காண்பிப்பார்கள். “I watched a snail crawl along the edge of a straight razor. That's my dream; that's my nightmare” என்று ஒரு பிரண்ட மனநிலையில் பிராண்டோ பேசுவார். ஒரு மனிதனின் குரலில் கூட நடிப்பு வெளிப்படும் என்பதை பிராண்டோவை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். நிஜமாகவே ஒரு அமர்க்களமான modulated குரலில் பேசியிருப்பார்.
                 அதே போன்றுதான் மொட்டைத் தலையை தடவிக்கொண்டே முகத்தைக் கூட காட்டாமல் (இதற்கு காரணம், அவர் ஸ்கிரிப்டையோ நாவலையோ படிக்காமலே அசாத்திய எடையுடன் குடித்து விட்டு படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம். பின் கப்போலா நாவலை வாசிக்க வாசிக்க அதை உள்வாங்கி நடித்துள்ளார் ) நடித்திருப்பார். சத்தியமா நா மிரண்டே போய்ட்டேங்க. பார்த்தா தான் உங்களுக்கு புரியும்.

மார்டின் ஷீன்:
இதில் நடிக்கும் போது இவருக்கு நெஞ்சு வலி வேறு வந்ததாம். இருந்தாலும் ஒரு உக்கிராமான மனநிலையிலேயே அற்புதமாக நடித்திருப்பார். The Departedஇல் அனைவரும் இவரைப் பார்த்து ரசித்திருப்போம்.

பிரான்சிஸ் போர்ட் கப்போலா: இதற்காக 6 மாதம் அங்கேயே தங்கி படப்பிடிப்பு நடத்தியுள்ளார். இப்படத்திற்கு எடிட்டிங்கிற்கு மட்டும் 3 ஆண்டுகள் எடுத்துள்ளாராம்.
.................................
வியட்நாம் போருடன் தொடர்புடைய நான் பார்த்த வேறு படங்கள்: (இதெல்லாம் அமெரிக்க பார்வையிலேயே சொல்லப்பட்ட படங்கள். வியட்நாம் படங்களை நான் பார்த்ததில்லை)


  • The Deer Hunter (Robert De niro)
  • Good Morning Vietnam (Robin Williams)
  • Full Metal Jacket (Kubrick)
  • Platoon & Born on the 4th of July(Tom Cruise) இந்த இரண்டு படங்களின் டைரக்டர் ஒலிவர் ஸ்டோன் வியட்நாம் போரில் பணியாற்றியவர்.
  • American Gangster – போரின் போது அமெரிக்க படையில் ஏற்பட்ட மாற்றங்களைச் ஒரு பகுதியாக சொல்லும் படம்



ஆனா ஒண்ணுங்க. அமெரிக்காவ என்னதான் குறை சொன்னாலும் அந்த நாட்டிலிருந்து நம்ம கத்துக்க சில விஷயங்களும் இருப்பத நான் நினைக்கறேன். அதுல ஒன்னு எல்லா வகையான விமர்சனங்களுக்கும் இடமளிப்பது-அது அரசுக்கு எதிராகவே இருந்தாலும் (இந்தப்படம் மாதிரி). இப்படித்தான் ஒரு பாதிரியார்-டிராபிக் போலீஸ் சர்சைல ஒபாமாவே அவர்களைக் கூப்பிட்டு, பீர் பார்ட்டி கொடுத்தார்னு படிச்சிருப்போம். இங்க..ஒரு கவுன்சிலருக்கு எதிரா பேசுனாவே..அவ்வுளோதான். முடிஞ்சது.




போனா பதிவுல நா கேட்காமையே இன்ட்லில முத்திரை குத்திய அனைத்து குழந்தை மனம் படைத்தவர்களுக்கும் நன்றி. அப்புறம், ரொம்ப முக்கியமான விஷயம். பல பேர் ஒரே சமயத்துல என் ப்ளாக்அ படிக்கணும் முட்டி மோதுறதுனாலே ப்ளாக்கர் சைட்யே கிராஷ் ஆயிருதுன்னு சொல்றாங்க ஜாக்சன்,"அவரு", அப்பறம் எனக்குதான் இப்படி நடக்குறதாவும் சொல்றாங்க. (ஏன் அவரு காமெடி பண்ணா மட்டும் ஒத்துக்குறாங்க? நா சொல்லக்கூடாதா. ஆனா நா சீரியஸ்ஸாதான் சொல்றேன் ). உங்க ஆர்வம் புரியுது. இருந்தாலும் நா எங்க போகப்போறேன், இல்ல ப்ளாக்தான் எங்க போகப்போகுது.ரைட்.மேட்டருக்கு வருவோம். ஏற்கனவே உலக சினிமா பார்க்குறது-வாங்கறது இது குறித்து தெரிஞ்சவங்க கடைசி பத்திக்குப் போங்க. இதுக்கு மேல படிச்சு ஏதாவது அதிகப்பிரசங்கித்தனமா தெரிஞ்சா (ஏதாவது இல்ல, ஏறக்குறைய எல்லாமே) அதுக்கு நான் ஜவாப்தாரி இல்ல.

நா கூகிள் transliterationஐ பயன்படுத்தி தான் இந்த பத்து நாள்ல தமிழ்ல தட்டச்சு செய்ய கத்துக்கிட்டேன். இந்த ஒரு மென்பொருள் மட்டும்மில்லாமல் பல தமிழ் மென்பொருட்கள், எழுத்துருட்கள், வார்த்தைகள், வலைபூக்கள் இப்புடின்னு பல தமிழ் சார்ந்த விசயங்களை யாரோ முகம் தெரியாத நபர்கள்தான்(பெரும்பாலும் இலவசமாக) உருவாக்குகிறார்கள். அவர்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னு தெரியல.அத சரியா வெளிப்படுத்தவும் தெரியல.எனக்குத் தெரிந்தவற்றை பிறருடன் பகிர்வதின் மூலமே அதைச் செய்யலாம்னு நான் நம்புகிறேன். நான் வலைப்பூ எழுத ஆரம்பிச்ச காரணங்கள்ள இது மிக்க முக்கியமான ஒன்னு.
.....................................
இந்த உலக திரைப்படம், உலக திரைப்படம்னு சொல்வாங்களே (தனிப்பட்ட முறைல இந்தப்பதம் எனக்கு பிடிக்காது. என்னளவில் திரைப்படம் தான்) அத எல்லாம் எப்படி வாங்குறது? தெரிஞ்சுக்குறது அப்பிடின்னு நூற்றுக்கணக்கானோர் என்னிடம்...... கேப்பாங்கனு நெனச்சேன். யாரும் அப்படிலாம் கேட்கலே. இருந்தாலும் தாய் தடுத்தாலும் விடேன்னு சொல்லியே தீருவேன். என் ப்ளாகையும் ஒரு 50 பேராவது படிக்கிறாங்கனு கவுன்ட்டர் ஹிட்டை பார்த்தா தெரியுது. அதுல கண்டிப்பா என்னைவிட மிக அதிகமாக சினிமாவைப் பத்தி தெரிஞ்சவங்க 48 பேர் இருப்பாங்க. அதேபோல இந்த மாதிரி படங்களைப் பார்க்கணும்னு ஆர்வம் இருந்தாலும் எங்க கிடைக்கும்னு தெரியாதவங்க கண்டிப்பா 2 பேர் இருப்பாங்க(நா அப்படித்தான் இருந்தேன்(கேன்) ஹி. ஹி..). அவுங்களுக்கு என்னால் ஆனா உதவி(எனக்கும் முழுசா தெரியாதுன்கறது வேற விஷயம்). இதுக்குனு குறிப்பா வரைமுறைகள்னு ஒண்ணுமில்ல. ஆர்வம் இருந்தா அதுவே 50% முடிஞ்ச மாதிரி. நா எனக்கு தெரிஞ்சா 4 வழிகள பகிர்ந்துக்கிறேன்.

1. படிக்கிற புத்தகங்களில், அதில் வரும் திரைப்படங்கள்:
இப்பலாம் வெகுஜன பத்திரிக்கைகளில் இருந்து தீவிர இலக்கிய பத்திரிக்கைகள் வரை உலக திரைப்படம் குறித்த செய்திகள், விமர்சனங்கள் அதிகளவில் வருகின்றன என்பதை எல்லோரும் கவனித்திருப்போம்(கவனிக்கறது மட்டும்மில்லாமல் அதை நல்லா என்ன மாதிரி ஞாபகம் வெச்சுக்கணும். இதைத்தான் கண்டதைப் படித்தால் பண்டிதன் ஆகலாம்னு நம்ப இவரு......ஆங்....அவரு...சொன்னார்). அப்படி நான் பல வருடங்களாய் படித்த வரையில் உலக திரைப்படங்கள் குறித்த அறிமுகங்கள்,விமர்சனங்கள் போன்றவற்றில் அதிகமாக ஈடுபட்டு வரும் பத்திரிகைகள், எழுத்தாளர்கள்:

பத்திரிக்கை:
உயிர்மை
காலச்சுவடு
உயிரெழுத்து
வார்த்தை
உங்கள் நூலகம்
புதிய புத்தகம் பேசுது
தீராநதி

இணையஇதழ்:
உயிரோசை
காலச்சுவடு
கீற்று
திண்ணை
நிலாச்சாரல்
வல்லினம்
கூடு-குறும்படம்

எழுத்தாளர்கள்:
எஸ்.ராமகிருஷ்ணன்
சாரு நிவேதிதா
அஜயன் பாலா

இந்த புத்தகங்களில் ஏதாவது ஒன்றையாவது வாங்க முடிந்தால் நலம்.(ரெண்டு வருசங்களுக்கு முன்னாடி எல்லா நூலகங்களிலும் வந்துகிட்டிருந்தது. ஏதோ அரசியல் காரணமாக நிறுத்திட்டாங்க).இது போக இலக்கிய பத்திரிகைகளில் விமர்சனக்கட்டுரைகள் எழுதுவோர்

அம்ஷன் குமார்
யமுனா ராஜேந்திரன்
அ. ராமசாமி

இவற்றுக்கெல்லாம் மேலாக இருக்கவே இருக்கு வலைப்பூ. அதில் (தொடர்ந்து, அதிகளவில்) திரைப்படங்கள் குறித்து எழுதுவோர்.

கருந்தேள் கண்ணாயிரம்
கனவுகளின் காதலன்
பிற மொழிப்படங்கள்... தமிழில்...
கீ த ப் ப் ரி ய ன்
Butterfly Surya
கனவில் உறையும் உலகம்
வார்த்தைகள்
ILLUMINATI
அக்கரைச்சீமை
Babyஆனந்தன்
பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்
நிலா முகிலன்
பாரதிக்குமார் (நண்பர் கீ த ப் ப் ரி ய ன் அறிமுகப்படுத்தினார் )

இவர்களைத் தவிர நெறைய பதிவர்கள் அவ்வப்போது உலக சினிமாக்கள் குறித்து சிறப்பாக எழுதுகிறார்கள்.நீங்களும் ஒரு ப்ளாக் ஆரம்பிச்சிங்கனா இன்னும் வசதி. மேலே சொன்ன வலைப்பூக்களுக்கு போனிங்கனா, அவர்கள் பின்பற்றும் ப்ளாக்-விரும்பிய விமர்சன தளங்கள் ஆகியவற்றை சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.

பி.கு: நான் கடந்த ஆறு மாத காலத்தில் கடந்து வந்த வலைப்பூக்களை மட்டும்மே குறிப்பிட்டுள்ளேன். யாரவது மேற்கொண்டு வேற எழுத்தாளர்களையோ, வலைப்பூக்களையோ சொன்னா எல்லோரும் தெரிஞ்சுக்கலாம்.

2. சரி..படிச்சாச்சு -எங்க வாங்குறது - பார்க்குறது:
பெருநகரங்களில்"பிலிம்சொசைட்டி" போன்றவை இருப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனா தேனி, விழுப்புரம், புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற ஊர்கள்ள இருப்பது ரொம்ப அரிது. நம்மள மாதிரி ஆளுகளுக்கு வேற வழியில்லை. சொந்தமா வாங்கணும்-இரவல் வாங்கணும். இரவல்...உங்களுக்கே தெரியும். சொந்தமா வாங்கலாம்னா 300 ரூபாயில இருந்து 800 ரூபாய் வரைக்கும் சொல்றாங்க. கீஷ்டு கானத்தில வெர்சாக், குரோசாவா போன்ற இயக்குனர்களின் எல்லா படங்களும் அடங்கிய தனித்தனியான நாலு டிவிடியா விக்குராங்க (ஒரு டிவிடி 200r).சரி.. இந்திய படங்களாவது வாங்கலாம்னா அதுவும் (வங்களா மொழி படம் இருக்கான்னா அக்காவ திட்றியா சண்டைக்கு வராங்க) கெடைக்க கஷ்டமா இருக்கு. வேற என்னதான் வழி,டவுன்லோட் பண்ணனும்-பைரேடட் டிவிடி வாங்கணும்.

டவுன்லோட் செய்ய Rapidshareய் விட எனக்கு விருப்பமானதா இருப்பது கீழே உள்ள தளம் தான்.

Pasiloni           Tarkovsky           Kim Ki-duk          Antonioni        
Bertolucci       Wong Kar-wai    Fellini                    Scorsese                  
Jim jarmusch   Buñuel              Wim Wenders      David lynch  
Jodorowsky    Kubrick            Kieslowski          Yasujiro Ozu          
Bergman         Werner Herzog           Kurosawa     Truffaut     
Tarantino         Luc Godard      Francis Coppola     Cohen bro's                      
Soderbergh     Ritchie           Nolan           Kiarostami      Kitano  
Polanski          Zemeicks       Majid majidi              Makhmalbaf

இந்த மாதிரி சிறந்த இயக்குநர்களோட பல புகழ் பெற்ற படங்கள் நல்ல தரமான divx ப்ரின்ட்ல கொட்டிக் கிடக்கு. நீங்க இயக்குநர், நடிகர், நாவல் எந்த பேர வெச்சுனாலும் தேடலாம்.

தேவை: அதி வேக இணையம், "Downlaod accelerators", நீங்க டிவில பார்க்க விரும்பினா "Total Video Converter(to convert divx to VCD)".

இது போக Veoh,Veehd இதுள்ளையும் பார்க்கலாம்.

பழைய கிளாஸிக் வகைப் படங்களுக்கு Classiccinemaonline, Google Videos

கண்டிப்பா Rapidshareஐ விட வேகமா டவுன்லோட் ஆவது நிச்சயம். அளவும் divxனால கம்மி. முக்கியமா இது spyware, adware, pop-up window தொல்லை இல்லாத சைட். இது பிடிக்காதவங்க Rapidshareஐ உபயோகப்படுத்துறத விட torrentஐ உபயோகிப்பது உத்தமம். ( இதுல என்ன கொடுமைன என்ட இப்ப ப்ராட்பேண்ட் இல்ல. இதுல ஒன்னுதையும் நானும் பண்ண முடியாது. ஒரு காலத்தில பண்ணிகிட்டிருந்தேன்)

சரி...டவுன்லோட் பண்ண முடியாதவங்க.. சிறு ஊர்களவிட மதுரை, சென்னைல மலிவான விலைக்கு (20 ரூபாய்) ஒரிஜினல்ப்ளு-ரே டிஸ்க்ல இருந்து காப்பி பண்ண டிவிடிகள் கிடைக்கிறது. மதுரை-மீனாட்சி பஜார், சென்னை-பர்மா பஜார். சென்னையில கோல்ட் டிவிடியே 100 ரூபாய்க்கு விக்குறாங்க. அது போக சில கடைகள்ல 40-பக்க பட லிஸ்டே வெச்சுருக்காங்க. நம்ப விருப்பமான படத்திற்குரிய எண் சொல்லிட்டு ஒரு 10 நிமிஷம் கழிச்சு வந்தா எடுத்து வெச்சிருப்பாங்க. என்ன பெரும்பாலும் ஹாலிவூட் படங்கள் தான் இருக்கும். தேடித்தான் வேற மொழிப்படங்கள் வாங்கணும். சின்ன ஊர்கள்ல இருக்குறவங்க ஏதாவது வேலைய இந்த மாதிரி பெரிய ஊர்களுக்கு போகைல நேரமிருந்தா இங்க போய் வாங்கலாம். பெங்களூர்ல டவுன் ஹால் ரோட் வலது பக்கம் SP ரோட்ல கிடைக்கும்.

3. ஒரு படம் பார்க்குறோம். ரொம்ப பிடிக்குது. அவ்ளோதான்னு அதோட விடாம IMDBலயோ Wikipediaலையோ அந்த படத்தோட டைரக்டரின் பிற படங்கள் என்னனு பார்த்திங்கனா அடுத்த தடவ அந்த படங்கள் கிடைக்கும் போது உடனே வாங்குங்க. யார் நல்ல டைரக்டர், யாரு சிறந்த டைரக்டர் இதெல்லாம் போகப்போக பழகிரும். நெட்ல "உலகின் சிறந்த படங்கள், 50 movies to see before u die" இதெல்லாம் தட்டிப் பார்திங்கனா தெரியும். அதையும் மனசுல வெச்சுக்கலாம். முக்கியமா எல்லா கேபிள்ளையும் பேண்ட்டில் கடைசிய ஒரு சேனல் "UTV World Movies"ன்னு தெரியும். அதுல வாரத்திற்கு கொறஞ்சது ஒரு ஆறு நல்ல படமா போடுறாங்க. அதையும் பாக்கலாம்ன்னு நினைக்கிறேன். அப்புறம் இந்திய படங்களும் உலக படங்கள்தான். கட்டக், ரே, மிருனாள் சென், அடூர், ஜான் ஆபிரகாம்னு பல பேர் இருக்காங்க. அவங்க படத்தையும் பாருங்க. தமிழ்ல வீடு மாதிரி படங்களும் இருக்கு. நம்ம தமிழ் படம்னா சுலபமா கெடைச்சுரும். அதான் குறிப்பிடல. மேலும் இந்த நல்ல படம், நல்ல ப்ளாக், நல்ல மியூசிக், நல்ல ஏரியா .. இந்த நல்ல-வார்த்தையே என்னை பொறுத்த வரைல "Relative Term"தான். ஒருதர்கொருத்தர் வேறுபடும். அதனால நமக்கு பிடிக்குதா, எந்தவொரு எதிர்மறை எண்ணங்களையும் நம்மிடையே எழுப்பாம, யார் மேலயும் வெறுப்பை ஏற்படுத்தாத படமா இருக்கானுதான் நான் பார்ப்பேன். அது ஓடுச்சா ஓடலைய இதெல்லாம் எனக்குத் தேவையில்லை.

4. இதாங்க ரொம்ப சுலபம். நம்ம என்ன படம் பார்க்குறோமோ.. அதுதான் சிறந்த உலக திரைப்படம்னு ஒரே போடா போட வேண்டியதான். இப்ப தமிழ்ல குப்ப மாதிரி படம் எடுத்துகிட்டு இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லைனு பேட்டி கொடுக்கறது இல்லையா.. அது மாதிரிதான்.

பி.கு: இதைத் தவிர வேற நல்ல சைட்யோ(spyware, adware, pop-up Free), வழியோ இருந்தா தயவுசெய்து சொல்லுங்க.