__________________நா இனிமேல் கையை ஆட்டிகிட்டி போஸ் கொடுக்க மாட்டேன் – ஓபாமா
__________________நா இனிமேல் சட்டை இல்லாம போஸ் கொடுக்க மாட்டேன் – புடின்
__________________நா இனிமேல் எதுவும் பண்ண மாட்டேன் – பெர்லூஸ்கோனி
__________________நா இனிமேல் தான் ஏதாவது பண்ணுவேன் – மன்மோகன் சிங்
__________________நா குஷ்பு கூட இனி பேச மாட்டேன். மானாட மயிலாட பார்க்க மாட்டேன் – கலைஞர்
__________________நா எங்க வீட்டு டெலிபோன் பில்ல கட்ட மாட்டேன் – ஆ.ராசா
__________________ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா – அழகிரி
__________________நா கருந்தேள் பேரில் பதிவு எதையும் போட மாட்டேன் – குருணாநிதி
__________________ணா...சாகும் வரை என் படங்களை நானே தொடர்ந்து பார்க்கும் போராட்டத்தை தொடங்குவேன் – விஜய்.
__________________நா இனி நடிக்க மாட்டேன் – சுந்தர்.C (ஓ....அப்புடியே நடிச்சிட்டாலும்.....)
__________________நா என் அடுத்த படத்தில் நடிக்க மாட்டேன். டெனிம் மோகன ஹீரோவாவும் என்னை யாருன்னு தெரியாதுனு சொன்ன சு.மோகனை வில்லனாகவும் நடிக்க வெச்சிட்டு நா ஒதுங்கிக்க போறேன் – சாம் ஆண்டர்சன் (தல..அவுங்களுக்கு நீங்களே பரவாயில்லை)
__________________ஆபிரகாம் லிங்கனை கொன்னவனுக்கும் சோனியா குடும்பத்தினருக்கும் உள்ள தொடர்பு குறித்து என்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட மாட்டேன் – சுப்பிரமணிய சுவாமி
__________________சும்மா இருத்தலே சுகமன்றி வேறோன்றும் அறியேன் பராபரமே - நித்தியானந்தர்

மேலே இருக்கும் கோட்டுல என்ன வரும்? அதாவது கொழந்த சீக்கிரம் பதிவு போடா விட்டால் – னு வரும்...இப்ப படிச்சு பாருங்க.கரெக்ட்டா வருதா...நா பதிவு போடாட்டி உலகளவுல கொந்தளிப்பு இருக்கும்...குறைந்தபட்சம் பதிவுலகத்திலயாவது ஏதாவது இருக்கும்னு பார்த்தா...ம்கும்..ஒன்னும் நடக்கல..அதான் பூன கண்ண மூடுனா உலகமே இருண்டிருமாம்..சரிதான்..ரைட்..முதல் paraவை எப்படியோ தேத்தியாச்சு.

கலக்கல் காமெடி: Naked Gun Series
 • From the Files of Police Squad!
 • The Smell of Fear
 • The Final Insult
டிஸ்கி: படத்தின் தலைப்பை பார்த்திட்டு ஏதோ வேற மாதிரி படத்தை எதிர்பார்த்து ஏமாந்தீங்கன்னா நான் பொறுப்பில்லை.

Spoof Parody வகைப் படங்கள் உங்களுக்கு பிடிக்குமா?(எனக்கென்னவோ பல தமிழ் படங்களே Spoof  மாதிரிதான் தெரியுது). Spoof படங்கள் குறித்து இதில் எழுத இணையத்தில் தேடியபோது பல ஆச்சரியமான விஷயங்கள் தெரியவந்தது. முதல்முதலாக பரவலாக அறியப்பட்ட Spoof படம் எப்ப வந்திருக்கும்னு நினைக்குறீங்க – 1922.படம்:Mud & Sand. அந்த காலகட்டத்தில் வெளிவந்த Blood & Sand படத்தின் Spoofவாம் அது. அதை தொடர்ந்து Dr. Pyckle and Mr. Pryde - 1925. டைட்டில பார்த்த உடன் தெரிந்திருக்கும் - Dr. Jekyll and Mr. Hyde படத்தின் Spoof இதுன்னு. 1940களில் ஒரு உலக புகழ்பெற்ற ஆளிடமிருந்து வந்த Spoof படம் குறித்து ஏற்கனவே நான் எழுதியுள்ளேன்.

அப்படியே கொஞ்சகொஞ்சமாக வளர்ந்துவந்த Spoof படங்களுக்கு தனி பாணியை ஏற்படுத்தியவர் – Mel Brooks. இவரது History of the World படத்தை நாம் பலரும் பார்த்திருப்போம். பின்னி பெடலேடுத்திருப்பார். அவரை தொடர்ந்து பிரிட்டைனை சேர்ந்த Monty Python குழுவினரும் கலக்க ஆரம்பித்தனர்(இந்த பேரை மட்டும் எங்கேயோ கேட்டிருக்கேனே தவிர அவர்களது எந்த படத்தையும் நாடகத்தையும் பார்த்ததில்லை).இதற்கு அடுத்ததாக வந்தவர்கள்தான் David Zucker, Jim Abrahams, and Jerry Zucker கூட்டணி. அவர்கள் எடுத்த Airplanes, Naked Gun Series படங்கள் இன்றளவும் சிறந்த Spoof படங்களாக கொண்டாடப்படுகின்றன. இந்த Naked Gun Series படங்களில் நடித்து புகழ் பெற்றவர் - லெஸ்லி நீல்சன்.


மனுசன் கொஞ்சம் கூட அலட்டிக்காம காமெடி பண்ணுவார். பார்த்த உடனே யாராயிருந்தாலும் சிரிப்பது நிச்சயம். நம்ம மிர்ச்சி சிவாவுக்கெல்லாம் காமெடில தாத்தா இவர்.இவரது சேட்டைகளை ரசிக்காத ஆளே இருக்க முடியாது. முதல் பாகத்தில Clint Eastwood Dirty Harry படத்தில் ஒரு புகழ் பெற்ற டயலாக் வரும்
[Harry Callahan - Clint Eastwood
Harry Callahan: Well, when an adult male is chasing a female with intent to commit rape, I shoot the bastard. That's my policy.
The Mayor: Intent? How did you establish that?
Harry Callahan:  When a naked man is chasing a woman through an alley with a butcher's knife and a hard-on, I figure he isn't out collecting for the Red Cross!
The Mayor: He's got a point.

அத இந்த படத்தில் இவர் சொல்லுவார் பாருங்க......

Frank:  When I see five weirdos stabbing a guy in broad daylight, I shoot the bastards. That's my policy.
The Mayor That was a Shakespeare In The Park production, you moron! You killed five actors! Good ones!

இந்த படம் மூன்று பாகங்களா வெளிவந்தது. முடிஞ்சா தொடர்ந்து மூன்று பாகத்தையும் பாருங்க. இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் குறித்து நமது பதிவுலகத்தின் மூத்த பதிவர்களில் ஒருவர் – பல ஆண்டுகளாக பதிவுலகில் இயங்கிவரும் – உங்களைப் போன்ற இளைஞர்களுக்கும் என்னைப் போன்ற சிறுவர்களுக்கும் வழிகாட்டியாய் திகழும் - பதிவுலக பூந்தோட்டத்தின் காவல்காரன்புலன் விசாரணை புலி – பதிவுலகத்து வல்லரசு – தங்கத்திலும் சொக்கத் தங்கம்மரியாதைக்குரிய – எங்கள் அண்ணாகேப்டன் கருந்தேள் எழுதியுள்ளதை படித்து கதை குறித்தும் படம் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
    
அட்டகாசமான திரில்லர்:

Seven, Fight Club – போன்ற செமையான படங்களின் இயக்குனர் - எனக்கும் உங்களுக்கும் பிடித்த David Fincherன் இன்னொரு அட்டகாசமான திரில்லர் தான் Zodiac திரைப்படம். ஒரு சைக்கோ கொலையாளி – சும்மா கொலை மட்டும் பண்ணாம ஒவ்வொரு தடவையும் சின்ன சின்ன க்ளுவை பத்திரிக்கைகளுக்கு அனுப்புறான். அது எப்படிப்பட்ட க்ளுனா Zodiac letters அதாவது Special charactersன்னு சொல்லுவோம்ல, அதான், அந்த வகைல இருக்கும். அவனுக்கும் ஒரு பத்திரிக்கையாளனுக்கும் நடக்கும் ஆட்டம் தான் கதை. போஸ்டர் பார்த்தாலே பார்க்கணும்ன்னு தோணனும். சில பேருக்கு இந்தப் படம் பிடிக்காம கூட இருக்கலாம். எனக்கு ரொம்பவும் பிடித்தது. இது குறித்து தனியாவே ஒரு பதிவு எழுத நினைத்திருப்பதால் இப்போதைக்கு இந்த ரெண்டு போஸ்டரோட அப்பீட் ஆகிக்கிறேன். திரில்லர் பிரியர்கள் இந்தப் படத்தை இதுவரைக்கும் பார்க்கலைனா கட்டாயம் உடனே பாருங்க.(ஆனா ஒரே பேருல ரெண்டு படம் இருக்கு - ஜாக்கிரதை). 


மேற்கொண்டு இந்தப் படத்தை பற்றி விவரமறிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
2, ஈபிள் டவர் அருகில், பாரிஸ்,
பிரான்ஸ்.

போன்:  ஏக் சூன்ய சூன்ய சூன்ய தோ சார் ஏக்.........

முதல் மொக்கை:
இது ஒரு தமிழ் படம்...அதோட நிறுத்திகிட்டு உங்க ஊகத்திற்க்கே விட்டு விடுகிறேன். என்னால சமாளிக்க முடியாதுப்பா....

ரெண்டாவது மரண மொக்கை:
இவ்வளவு நேரமா படிச்சும் அது என்னனு தெரியலைனா உங்கள மாதிரி பச்ச மண்ணுக்கு இந்த ரத்த பூமில என்ன வேல...

பி-கு: இது போன பதிவுக்கு முன்னாடியே எழுதியது. அதான் போன போஸ்ட்லயே ஒரு மொக்க பதிவுன்னு எச்சரிச்சிருந்தேனே...அப்பறமும் ஏன் படிச்சீங்க...அது உங்க தப்பு..மேலும் நானும் எத்தன நாள் தான் சுவாரசியமாவே எழுதுறது (எங்க ஓடுறீங்க), என்னாலயும் மொக்கையா எழுத முடியும்ன்னு நிரூபிக்கவே இது...                      
ரொம்ப நாள் கழித்து எழுதுவதால் ஒரு மொக்க பதிவ தான் யோசிச்சு வெச்சிருந்தேன். ஆனா எப்ப இந்த பாடல்களை கேட்டேனோ அப்ப இருந்து இதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளாட்டி தலையே வெடிச்சிரும் போல இருக்கு. எனக்கு ஏன் ரகுமான் பிடிக்கும் என்பது குறித்தும் அவரது இசையில் – ஏதோ என் அறிவிற்கு எட்டிய வரை - தெரியும் உலகளாவிய தன்மை குறித்தும் தனியே எழுத வேண்டும் என்று ரொம்ப நாளாக ஒரு எண்ணம். அதுக்கு ஒரு முன்னோட்டமா இதை ஆரம்பிக்கிறேன்.


இப்ப உங்க முன்னாடி ரெண்டு வாய்ப்பு இருக்கு. ஒண்ணு - வரிசைல நின்னு கும்பலா ஒருத்தர் முதுகு நம்ம முகத்தில உரச ஒரு 5 நிமிஷம் குற்றாலத்தில குளிக்கிறது. இன்னொன்னு – ரொம்ப தூரமா, கடினமான நடை தேவைப்படும், அதேசமயத்தில சுவாரசியம் நிறைந்த பாதையில போனா மட்டுமே சென்று குளிக்கக் கூடிய இன்னொரு அருவி இருப்பது தெரிய வருது. ரெண்டுல எதை நீங்க தேர்ந்தேடுப்பீங்க?. மாமூலான முதல் வகைனா இந்தப் இசைத் தொகுப்பு உங்களுக்கு பிடிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. ரெண்டாவது வகையறாக்களுக்காகவே இந்த ஆல்பம் என்று கூட சொல்லலாம்.
                                        
தனித்தனியா ஒவ்வொரு பாடலா பிரிச்சு சொல்லக் கூடிய அளவிற்கு எனக்கு இசை அறிவோ பொறுமையோ கிடையாது.அதுனால மொத்தமா சொல்றேன். மத்த எல்லா இசை அமைப்பாளர்களை விட ரஹ்மான் எனக்கு ரொம்ப பிடித்துப் போக இருக்கும் பல காரணங்களில் ஒன்று – அவர் எந்த இசையையும் ஒதுக்குவதில்லை. அதற்கு சரியான மற்றுமொரு உதாரணம் இந்தத் தொகுப்பு. ஏன்..நீங்க தாள் ஹிந்தி படத்தின் தீம் இசையை கேட்டிருப்பீங்க. அதுல தண்ணி விழுவதை கூட சிவமணியும் ரகுமானும் சேர்ந்து பின்னி பெடலேடுத்திருப்பாங்க. இத எதுக்கு சொல்லுறேன்னா இசை அவர்ட இருக்கு இவர்ட இருக்கு இங்கிருக்கு அங்கிருக்குனு காமெடிக்கு சொன்னாலும் அதுதான் நிஜம். அதை முழுமையா எனக்கு புரிய வெச்சதுல பெரும் பங்கு ரகுமானையே சாரும்.127 HOURS - Track Listing:
1. Never Hear Surf Music Again - Free Blood
2. The Canyon - A.R. Rahman
3. Liberation Begins - A.R. Rahman
4. Touch of the Sun - A.R. Rahman
5. Lovely Day - Bill Withers
6. Chopin: Noctrne No. 2 in E flat, Op. 9 No. 2
7. Ca Plane Pour Moi - Plastic Bertrand
8. Liberation In A Dream - A.R. Rahman
9. If You Love Me (Really Love Me) - Esther Phillips
10. Acid Darbari - A.R. Rahman
11. R.I.P. - A.R. Rahman
12. Liberation - A.R. Rahman
13. Festival - Sigur Ros
14. If I Rise - Dido / A.R. Rahman


இந்த ஆல்பத்தில் இருக்கும் Acid Darbaariல வரும் குரல் அது மாதிரியான ஒரு பெரிய அனுபவமா கேக்குறவங்களுக்கு இருக்கும். உலகப் புகழ் பெற்ற உலகின் தலைசிறந்த குரல்களில் ஒன்று என்று பெரும்பாலானவர்கள் சொல்லும் பிரெஞ்சுன் Edith Piafன் ஒரு version – மற்றொரு ஆங்கில பாடகி பாடியதுதான் If You Love Me (Really Love Me). சத்தியமா தூங்கிருவீங்க. அட்டகாசம். இன்னொரு ரகளை - Ca Plane Pour Moi. இந்தப் பாடல் கூட 1977லேயே வந்ததாம். அதை ரகுமானின் Orchestrationல கேட்கும் போது என்னவொரு துள்ளல்,உற்சாகம். வாய்ப்பேயில்லை.Liberation Begins, Liberation in a dream, Liberation – படத்தோட கதை தெரிந்தவர்களுக்கு இதன் அர்த்தம ரொம்ப சுலபமா புரிஞ்சிடும். Johnny Gaddaar ஹிந்தி படம் உங்களில் பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பீங்கனு நினைக்கிறேன். அந்த படத்தின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும்(Shankar-Ehsan-Loy).அதில் வரும் ஒரு அட்டகாசமான பாடல் Move your body. அதைப் பாடிய Hard Kaurரை ரஹ்மான் R.I.P பாடலில் எப்படி பயன்படுத்தியிருக்கிறார் என்று நீங்களே கேளுங்கள்.மற்றுமொரு புகழ் பெற்ற 70’s R & B வகைப் பாடல் Lovely Day by Bill Withers. இன்னொரு அட்டகாசம் (இந்த தகவல்கள் நெட்டில் தேடிய போது கிடைத்தவைகள்). ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த Sigur Roosன் இசையே Festival. நீங்க Eminemன் Stan என்ற செமத்தியான பாடலை நிச்சயமாக கேட்டிருப்பபீர்கள். அதில் introintroவாக வரும் குரலுக்கு சொந்தக்காரர் – புகழ் பெற்ற பாடகி Dido. அவரோட நம்ம ஆளு இணைந்து பாடி இருக்கும் பாடல் If i rise. இந்த வருடம் ஆஸ்காருக்கு இந்தப் பாடல் தேர்ந்தேடுக்கப்டும் என்று நெட்டில் பேச்சு அடிபடுகிறது.இன்னொரு பொக்கிஷம் Chopin: Nocturne No. 2 in E flat, Op. 9 No. 2. Classical வகை இசை.பாருங்க...ஒரு ஆல்பத்தில் எத்தனை வகை இசை.. எத்தனை நாட்டின் இசை என்று. அதான் ரஹ்மான். 


கடைசியா ஒரு பாடலை சொல்றேன். அதுதான் ஆல்பத்தின் முதல் பாடல் - Never Hear Surf Music Again – Free blood குழுவினரின் பாடல். ட்ரைலரில் கூட இதான் வரும். ஒருமாதிரியான psychelidic வகை பாடல். சத்தியமா மிரண்டே போய்ட்டேன். இது வேற குழுவின் பாடல் என்றாலும் கூட ரகுமானின் இசைச் சேர்ப்பு மிரட்டுகிறது. இதன் ஒரிஜினலே இப்படித்தானா என்று தெரியவில்லை.ஆக மொத்தம் டெல்லி-6க்கு அப்பறம் எனக்கு ரொம்ப பிடித்த ரகுமானின் இசைத் தொகுப்பு. Haunting music.அப்படியே எங்கேயோ இழுத்திட்டு போயிருது. அவசரமா எழுதுவதால் சரியாக சொல்ல நினைத்தவைகளை சொல்ல முடியவில்லை. தயவுசெய்து யாரும் மிஸ் பண்ணக் கூடாத - பண்ண முடியாத இசைத் தொகுப்பு. உங்களது எல்லாவித ரசனையும் சோதித்துப் பார்க்கும். அதற்கு சரியான தீனியும் உண்டு என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

தட்கல் தொல்லைகள் ஏதும் இல்லாத, எப்ப வேணும்னாலும் எடுக்கக்கூடிய,எப்ப எடுத்தாலும் confirm ஆகிற ரயிலோ-பிரயாணமோ இருக்கா?இருக்கு.எல்லோருக்கும் அந்த வண்டில நிச்சயம் ஒரு இடம் உண்டு.ஆனா எப்ப என்பதில்தான் சுவாரஸ்யமே...சில பேர் தானே விரும்பி அந்த வண்டில ஏறிருவாங்க. சில பேருக்கு போக விருப்பமிருந்தும் காத்திருப்பு பட்டியல்ல தான் இடமிருக்கும்.இன்னும் சில பேரை உறவினர்கள் புடை சூழ வந்து வழியனுப்பி வைப்பாங்க.சில பேர் வண்டி பிளாட்பாரத்தை விட்டு கிளம்பும்போது அவசரமாக வந்து ஏறுவாங்க.நம்ம ஸ்டேசனுக்கும் அந்த வண்டி ஒருநாள் வரத்தான் போகுது.ஏற்கனவே சொன்ன மாதிரி எப்ப என்பதில்தான் சுவாரஸ்யம் - திரில் எல்லாம். அது என்ன வண்டி என்பது உங்களுக்கே இந்நேரம் தெரிஞ்சிருக்கும்.

                           
பில் ப்ளேக் - என்ற மனிதன் கிளீவ்லாண்ட் ஊரிலிருந்து மெஷின் என்ற ஊருக்கு ரயிலில் சென்றுகொண்டிருப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது. அங்கு ஒரு கம்பெனியில் அக்கௌன்டன்ட் வேலையில் சேர வரச்சொல்லி அனுப்பப்பட்ட கடிதத்துடன் அங்கு செல்கிறான். போன பிறகுதான் தெரிகிறது அவன் சேர வேண்டிய வேலையில் வேறொருவர் சேர்ந்திருப்பது.இது குறித்து அக்கம்பெனியின் முதலாளியிடம் கேட்கச் சென்று - அவரது கோக்கு மாக்கான நடவடிக்கைகளால் கலவரமடைந்து வெளியே வருகிறான். கையில் வேறு சுத்தமாக காசில்லை. இந்நிலையில் ஒரு பெண்ணின் அறிமுகம் கிடைக்க அவளுடனேயே அன்றிரவை கழிக்கிறான். மறுநாள் காலை அப்பெண்ணின் முன்னால் காதலன் அங்கு வர,அதில் ஏற்படும் தகராறில் அப்பெண்ணும் - காதலனும் இறக்க நேரிடுகிறது.ப்ளேகும் காயமடைகிறான். கொலைப்பழிக்கு அஞ்சி ப்ளேக் காட்டிற்குள் காதலனின் குதிரையில் தப்பிக்கிறான்.ரத்தப் பெருக்கால் நினைவிழக்கிறான். இதற்கிடையே அவனால் சுடப்பட்ட காதலன் - அவன் வேலை தேடி வந்த கம்பெனியின் முதலாளியின் மகன். அவன் தலைக்கு அவர் விலை வைக்கிறார்.இதற்காக பிரத்தியேகமாக மூன்று ஆட்களை - இதுபோன்ற செயல்களில் நிபுணர்களை - நியமிக்கிறார். அதுபோக யார் ப்ளேக்கை உயிருடனோ-பிணமாகவோ கொண்டு வந்தாலும் பரிசு என்று போஸ்டர் கூட ஒட்டுகிறார்.

                                                                                
அடர்ந்த காட்டிற்குள் கண்விழிக்கும் ப்ளேக் தன் முன் ஒரு பழங்குடியின செவ்விந்தியன் நிற்பதையும் அவனே தனக்கு சிகிச்சை அளித்ததையும் உணர்ந்து கொள்கிறான். அந்த செவிந்தியனின் பெயர் - Nobody. அவன் ப்ளேகின் பெயரை கேட்க இவனும் சொல்ல - செவிந்தியன் இவனை William Blake என்ற இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த கவிஞராக கற்பிதம் செய்து கொள்கிறான். தனக்கு William Blakeன் கவிதைகள் என்றால் உயிர் என்றும் தான் அடிமையாய் இருந்த போதும் அதிலிருந்து தப்பி வந்த போதும் அனைத்து பயணத்திலும் அவரின் கவிதைகளே உந்துசக்தியாக இருந்ததாக ப்ளேக்கிடம் கூறுகிறான்.Nobody ப்ளேக்கிடம் உங்களைப் போன்ற கவிஞர்களுக்கு உகந்த இடம் இதுவல்ல-உங்களை கடலைத் தாண்டி இருக்கும் அமைதியான ஒரு இடத்திற்கு அனுப்பி வைப்பது என் பொறுப்பு என்று சூளுரைக்கிறான்.ஏற்கனவே நீங்கள் ஒரு வெள்ளையனை சுட்டிருக்கிறீர்கள்..மேலும் பல வெள்ளையர்களை அழிக்க வேண்டிய கடமை நமக்குள்ளது என்று கூறி இருவரும் சேர்ந்து பல சண்டைகளில் ஈடுபட நேர்கிறது. ப்ளேக் Nobodyன் கிராமத்திற்குச் செல்ல நேர்கிறது. அங்கே வெள்ளையர்கள் பழங்குடியினர்களுக்கு எதிராக புரிந்த கொடுமைகளைக் கண்டு திகைப்படைகிறான். இந்நிலையில் அவனை கொல்ல அனுப்பப்பட்ட 3 பேரில் ஒருவன் ப்ளேக்கை தொடர்ந்து அக்கிராமத்திற்கே வந்துவிடுகிறான்.அவனால் ப்ளேக் என்ன ஆனான்-Nobody என்ன ஆனான் இதுவே மீதிக் கதை.


முதல்முதலில் காட்டப்படும் ரயில் பிரயாணம் - ஊர்களின் பெயர் - ஆட்களின் பெயர்: Nobody - வசனங்கள்:   
        
                                                Nobody: Did you kill the white man who killed you? 
                                    William Blake:  I'm not dead. Am I?

      இதிலிருந்தே சில விஷயங்களை புரிந்து கொள்ளலாம்.நீங்கள் பார்த்திங்கன்னா உங்களுக்கே புரியும். சில பேருக்கு வெறும் படமாக தோணலாம். சில பேருக்கு அதிலுள்ள உள்ளார்ந்த அர்த்தம் புரியலாம். எனக்கு முதல்முறையாக பார்க்கும் போது குழப்பமாக இருந்தது. இணையத்தில் மேற்கொண்டு இப்படத்தின் விமர்சனங்களை படித்தே இவ்விஷயங்கள் குறித்து ஓரளவு அறிந்துகொள்ள முடிந்தது.படம் முழுவதும் அத்தனை குறியீடுகள். இசை,ஒளிப்பதிவு முதற்கொண்டு எங்கும் அக்குறியீடுகள் வியாபித்திருக்கிறது. இசை - புகழ் பெற்ற கிடாரிஸ்ட் Neil Young.

              படத்தின் டைரக்டர் அமெரிக்காவைச் சேர்ந்த Jim Jarmusch. இவரின் படங்களை Zee Studioவில் ரெண்டு-மூணு வருஷத்திற்கு முன் தொடர்ச்சியாகப் போட்டார்கள். அதில் நான் பார்த்த ரெண்டு படங்கள் - Dead Manனும் Coffee & Cigaretesசும். இதுல Dead Man என்ற தலைப்பே மிகக் கவர(Johnny Deppம் ஒரு காரணம்) அந்த படத்தை தேடிப்பிடித்து மறுபடியும் சமீபத்தில் பார்த்தேன்.Coffee & Cigaretes கிடைக்கவில்லை. அதுவும் ஒரு அலாதியான கதை: 11 குறுங்கதைகளின் தொகுப்பு.அனைத்து கதைகளையும் இணைக்கும் விஷயம் Coffee மற்றும் Cigaretes. சில கதைகளில் சிகரெட்டின் தீமைகள் குறித்து சிலர் casualலாக உரையாடிக்கொண்டிருப்பார்கள், சில கதைகள் காபி சிகரட் குடித்துக்கொண்டு தங்கள் சொந்த வாழ்கை குறித்து சுவாரசியாமாக சிலர் பேசிக் கொண்டிருப்பார்கள். ரொம்பவே வித்தியாசமான திரைப்படம். முழுவதும் பார்க்க முடியவில்லை.சிலது மட்டுமே ஞாபகம் இருக்கு.சிலவற்றை விக்கிபீடியா பார்த்து தெரிந்து கொண்டேன்.இந்தப் படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா.....ரொம்ப சோகமா - ஏதாவது மொக்க படத்தையோபதிவையோ பார்த்ததுனால - எரிச்சல்ல உக்காந்திருக்கீங்க. வழக்கமா நீங்க கேட்குற பாடல்களை கூட கேட்கும் மனநிலையில் நீங்க இல்ல.அப்ப உங்க நண்பர் வந்து ஒரு சிடிய கொடுத்து இத கேட்டுப்பாருனு சொல்லிட்டு போறார். அசுவாராஸ்யமா அத போட்டு கேட்க ஆரம்பிக்கிறீங்க. Awestruck...எல்லாம் செம பீட். அற்புதமான கிடார் riffs.உங்க மனநிலைய தலைகீழா திருப்பிப் போடுது.அந்த மாதிரி இசை உங்களுக்கு பிடிச்சா மேற்கொண்டு இதைப் படிக்கவும்.

Alternating Current(AC)/Direct Current(DC)னா என்னன்னு உங்களுக்கு தெரியும். ஏன் இந்த ராக் பேண்ட்டுக்கு அந்த பெயர்னு அவுங்க பாடல்களை கேட்கும் போதும்-இசை வீடியோக்களை பார்க்கும் போதும் உங்களுக்கே சுலபமா தெரிஞ்சிரும்.பல சேட்டைகள் நிறைந்த குறும்புத்தனமான பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர்கள்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குழுவினர்.1973ல் ஆரம்பிக்கப்பட்ட குழு இன்னைக்கு வரை உலகின் சிறந்த Hard Rock-Heavy Metal குழுவினர்களில் ஒருவராக கருதப்படுகின்றனர்.சகோதரர்கள் Angus Young-Malcolm Young சேர்ந்து இக்குழுவை ஆரம்பித்தனர். ரெண்டு பேருமே கிடாரிஸ்ட். பாடகருக்கு என்ன பண்றது..ஆரம்பத்தில் ஒருத்தர் ரெண்டு பேர் பாடியிருந்தாலும் ஏதோ ஒன்று அவர்களின் குரலில் இல்லை என்று நினைக்கவே வேறு ஆளை தேட ஆரம்பித்தனர்.அப்படி கிடைத்தவர்தான் Bon Scott.ரொம்பவே வித்தியாசமான ஹை-பிட்சில் அனாயசமாக பாடக்கூடியவர்.இவர்கள் எல்லாம் சேர்ந்து முதலில் வெளியிட்டது High Voltage என்ற ஆல்பத்தை(பேரை கவனிச்சீங்களா..) இது ஆஸ்திரேலியாவில் மட்டுமே வெளியானது.அடுத்து அவர்கள் வெளியிட்டதுதான் T.N.T. பல பாடல்கள் ஹிட் ஆன ஆல்பம்.முக்கியமாக T.N.T பாடல்.அதன் வரிகளை கவனியுங்கள்.செம குறும்பு. அப்படியே கொஞ்ச கொஞ்சமாக பல ஹிட் பாடல்களை கொடுக்க ஆரம்பித்தனர். அப்படி இவர்கள் வெளியிட்ட ஆறாவது ஆல்பம் Highway to Hell.இன்றளவும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. எனக்கும் மிகப் பிடித்த பாடல்கள் கொண்ட ஆல்பம். குறிப்பாக டைட்டில் ட்ரேக்கான Highway to Hell. செம வரிகள்.செம மியூசிக்.

ஒழுங்கா போய்க்கொண்டிருந்த குழுவில் ஒரு இடி.பாடகர் Bon Scott மிதமிஞ்சிய குடிப்பழக்கத்தால் இறக்க நேரிடுகிறது. அவருக்கு மாற்றாக வந்த இன்னொரு புயல்தான் Brian Johnson. எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த வசீகர குரல்களில் ஒன்று இவரோடது.புது பாடகருடன் மறுபடியும் குழு களத்தில் இறங்கிய ஆல்பம் - Back in Black. உலகிலேயே அதிகமா அளவு விற்ற ஆல்பம் - உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் - மைக்கேல் ஜாக்சனின் Thriller. அதற்கடுத்து அதிகம் விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் ஆல்பம் - Back in Black. இந்த ஆல்பத்தில் வரும் பல பாடல்களின் கிடார் riffகள் உலகளவில் ரொம்பவே பிரசித்தி ஆனது.குறிப்பாக டைட்டில் ட்ரேக்கான-Back in Black.வாய்பேயில்லை.என் மொபைல் ரிங்டோனாக இதுதான் உள்ளது.

                                 80-களில் ட்ரும்மருடன் ஏற்பட்ட தகராறு - ஆல்பங்களின் விற்பனையின்களின் வீழ்ச்சி - இதெல்லாத்தையும் தாண்டி 90களின் ஆரம்பத்தில் இருந்து மறுபடியும் இன்னும் வேகமாக களத்தில் இறங்கினர்.அந்த காலகட்டத்தில் இருந்து தொடர்ச்சியாக பல துள்ளலான அதே சமயம் வேறுபாடுகள் உள்ள பாடல்களை தந்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் வந்த Ironman 1 & 2 படத்தில் கூட இவர்களது பாடல்களே பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவும் உலகின் அதிகம் விரும்பப்படும்-விற்பனையாகும் இசை குழுவினர்களில் ஒருவர்.மேலும் பல குழுவினர்களும் கலைஞர்களும் முன்னோடியாக கருதும் குழுவினர்.  முதல்முறையாக கேட்கும் போது எல்லா பாடல்களும் ஒரேமாதிரி இருந்தாலும் - Heavy Metal & Hard Rock வகையே அதுபோல தான் இருக்கும் - போகப்போக பலூன்காரரை நேசிக்கும் சிறுவர்கள் போல நீங்களும் கண்டிப்பாக விரும்ப ஆரம்பித்திருவீர்கள். இவர்களது குழுவின் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தா - கிடாரிஸ்ட் Angus Young. ஸ்டேஜில்-சின்ன டவுசரை போட்டுக்கொண்டு-இவர் செய்யும் சேட்டைகள் மிகப் பிரசித்தம்.இந்த வீடியோவை பாருங்கள்.தெரிந்து கொள்வீர்கள்.

எனக்கு பிடித்த AC/DCன் பாடல்கள்...
இன்னும் பல.....
  பி.கு: 
  • வழக்கம்போல download linkம் உண்டு. Right Click - Save Target கொடுத்து டவுன்லோட் செஞ்சுக்கோங்க...
  • Led Zeppelin பதிவை பலரும் படித்து அந்த பாடல்களை டவுன்லோட் செஞ்சு கேட்டதாக ஊருக்குள்ள பேசிக்குறாங்க.அந்த ஆத்மாக்கள் இந்த பாடல்களையும் கேளுங்க..கேட்டுட்டு சொல்லுங்க.நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தான..

  An artist never works under ideal conditions. If they existed, his work wouldn`t exist, for the artist doesn`t live in a vacuum. Some sort of pressure must exist. The artist exists because the world is not perfect. Art would be useless if the world were perfect...

  எல்லோருக்கும் தெரிந்ததுதான் - உலகம் முழுவதுமே ரெண்டே ரெண்டு வகையான படங்கள் மட்டுமே உள்ளன. வணிக ரீதியானது.மற்றொன்று சினிமாவை கலையாக பாவித்து எடுக்கப்படுவது.இதில் ரெண்டாவது வகை படங்களின் டைரக்டர்களிடம் கேட்க கூடாத சில கேள்விகள் உள்ளன.ஒரு கவிஞரிடம் போய் நீங்க ஏன் கவிதை எழுதறீங்கனு கேட்பது எவ்வளோ அபத்தமோ அதுபோல டர்கோவ்ஸ்கி போன்ற ஆட்களிடம் நீங்க ஏன் சினிமா எடுக்குறீங்கனு கேட்பதும்...


                         அந்திரே ருபெலோவ் (15வது நூற்றாண்டு) என்பவர் ரஷ்யாவின் தலைசிறந்த ஓவியர்களில் ஒருவராக கருதப்படுபவர். Icons என்று அறியப்படும் ஏசு,மரியாள்,தேவதைகள் போன்றோர்களை வரைவதில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியவர். அதுவரை இருந்த ஓவியங்கள் அனைத்தும் காலண்டர் ஓவியங்களைப் போல் இருக்க..இவரே குறியீட்டுத்தன்மையை ஓவியங்களில் புகுத்தியுள்ளார். ஆனால் இந்த மாற்றத்தை அவரால் உடனடியாக செயல்படுத்த முடிந்ததா,அவரிருந்த உலகம் அவரையும் அவரின் ஓவியங்களையும் எவ்வாறு பாதித்தது என்பதே இந்தப் படத்தின் கதை..


                                 படம் முன்னுரை - ஏழு பகுதிகள் - முடிவுரை என்ற அளவில் நகர்கிறது. உண்மையிலேயே நகர்கிறது. இதில் முன்னுரை படத்திற்கு துளியும் சம்பந்தமில்லாமல் ஒரு குறியீடாகவே சொல்லப்பட்டுள்ளதாக தெரிகிறது. 1400ஆம் ஆண்டில் ஒரு தேவாலயத்தில் இருந்த ருபெலோவ் + கிரில்+டானியேல் மூவரும்,பாதிரியார்கள் -வேலை தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு குணாம்சம். அங்கிருந்து தொடங்கும் ருபெலோவின் வாழ்கையை ஏழு பகுதிகளாக இப்படம் சித்தரிக்கிறது. தியோபோனஸ் என்ற அக்காலகட்டத்தின் மற்றொரு சிறந்த ஓவியர் ருபெலோவிற்கு அழைப்பு விடுக்க அது கிரில் & டானியேலிடம் பொறாமையை தூண்டி விடுகிறது. தியோபோனஸிடம் ருபெலோவ் பணியாற்றும் போது அவரின் கண்களின் வழியாகவே வெளியுலகத்தையும் ஓவியங்களையும் காண வேண்டிய கட்டாயத்திற்கு ருபெலோவ் ஆளாகிறான். ஓவியங்கள்-கடவுள்-மதம்-மக்கள் குறித்து ருபெலோவ் தியோபோனஸிடம் பலமுறை விவாதங்களில் ஈடுபடுகிறான். இந்த காலகட்டத்தில் ரஷ்யாவில் பெரும் குழப்பம் இருந்தது. மங்கோல்-துருக்கியர்கள் ஆக்கிரமிப்பு, சொந்த மன்னனின் கொடுங்கோள் ஆட்சி இதுபோக பெரும் வறட்சி என மிகுந்த கொந்தளிப்பான நேரம். துருக்கியர்கள் பெரும் படையுடன் ருபெலோவ் ஓவிய வேளையில் ஈடுபட்டிருக்கும் தேவாலயத்தின் மீது கொடும் தாக்குதல் நடத்துகின்றனர். மக்களையும் பாதிரிகளையும் ஏன் கால்நடைகளை கூட விட்டுவைக்காமல் வெறித்தனமானா தாக்குதல் தொடுக்கின்றனர். இதைக் கண்ட அதிர்ச்சியில் ருபெலோவ் ஓவியம் வரைவதை விட்டுவிடுவதோடு மட்டுமல்லாமல் ஆழ்ந்த மௌனத்திற்கு செல்கிறார்.1408 - 1424 வரை யாருடனும் ஒருவார்த்தை கூட பேசாமல் ஓவியமும் வரையாமல் காலத்தை கழிக்கிறார். அவர் மீது பொறாமை கொண்டு மடாலயத்தை விட்டு ஓடிய கிரில் திரும்ப வந்து அவரிடம் மன்னிப்பு கேட்டு மீண்டும் வரைய நிர்பந்திக்கும் பொழுது கூட பேசாமல் இருக்கும் ருபெலோவ் கடைசியாக ஒரு சந்தர்ப்பத்தில் வாய் திறக்கிறார். "We will go to the Trinity monastery together. You’ll cast bells. I’ll paint icons". யாரிடம் இதைக் கூறுகிறார்? 16 ஆண்டுகால மௌனத்தை கலைக்கும் அளவிற்கு அவர் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது யார்..எது என்பதே கடைசி பகுதியின் கதை..முடிவுரையாக அதுகாறும் கருப்பு-வெள்ளையில் காண்பிக்கப்பட்ᮟ படம்,சட்டென வண்ணங்களின் ஊடே ருபெலோவின் ஓவியங்களை பகுதிகளாக காண்பிப்பதுடன் முடிவடைகிறது..


                                                   இந்தப்  படத்தை பற்றி நான் உலகின் சிறந்த ஒளிப்பதிவுகளில் ஒன்று என்ற வரையில் தெரிந்து வைத்திருந்தேன். அது முற்றிலும் உண்மை. ஆரம்பத்தில் வரும் பலூனின் பறக்கும் காட்சிகளாகட்டும், ஓடும் சுனைநீரில் கலக்கும் வண்ணங்களின் கலவையாகட்டும்,கொடுமையான தாக்குதல் காட்சிகளாகட்டும், பரந்து விரிந்த ரஷ்யாவின் நிலப்பரப்பாகட்டும் ஒவ்வொன்றும் நாம் பார்வையாளர்கள் என்பதை மறக்கச் செய்து ஒரு கதாபாத்திரமாகவே நம்மை மாற்றி விடுகிறது. இதற்கு close-up காட்சிகள் மிகக்குறைவாகவே இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் ஒருமுறை கூட ருபெலோவ் வரைந்த ஓவியங்களின் முழு பரிமாணத்தையும் டர்கோவ்ஸ்கி காண்பிக்கவேயில்லை. அதுவே ஓவியங்கள் குறித்து ஒரு புதிர்த்தன்மையை அதிகப்படுத்துவதாக எனக்குத் தோன்றுகிறது.

                                     இந்தப் படத்தை தர்கோவ்ஸ்கி 1966ல் எடுத்து விட்டிருந்தாலும் கூட 1971ல் தான் ரஷ்யாவில் வெளியீட முடிந்துள்ளது. படத்தில் மதங்கள் குறித்தும்,ரஷ்யாவின் ஆட்சியமைப்பை குறித்தும் சர்ச்சைக்கிடமான கருத்துக்கள் இருக்கிறது என்று ரஷ்ய அரசாங்கம் நினைத்ததால் இந்த நிலைமை. இந்த படம் கூற வரும் கருத்தும் அதுவே.சுதந்திரம் இல்லாத,கட்டுப்பாடுகள் நிறைந்த,மனிதத்தன்மையற்ற கலைகள் குறித்து கருத்துக்களே இப்படம்.

                                    
  படம் முழுவதும் பல வித குறியீடுகள்..குதிரை,நீர்,ஒற்றை மரம் ஏன் ஓவியங்களில் கூட விரவிக்கிடக்கிறது குறியீடு. தத்துவம்-வாழ்வியல் போன்றவைகளில் ஈடுபாடு இருப்பவர்கள், சினிமாவும் கலையின் நீட்சியே என்று நம்பும் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். பார்க்கும் ஒவ்வொருத்தரிடமும் ஒவ்வொரு தாக்கத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும்.சில பேருக்கு மொன்னைத்தனமாக தோன்றும்,சிலருக்கு படைப்பின் உச்சமாக தோன்றும்,சிலருக்கு தத்துவத்தின் கலவையாக தோன்றும்.பார்த்துவிட்டு சொல்லுங்கள். என்னளவில் நான் உணர்ந்தவைகள் 10% கூடயிருக்காது. அதேபோல் சொல்லாமல் விட்டவைகளும் ஏராளம். ஆனால் இந்தப் படம் என்னுள் படுஆழமான தாக்கங்களை உண்டு பண்ணியிருக்கிறது.சரியாக அதனை வெளிப்படுத்தும் பக்குவம் கைகூடவில்லை என்று நினைக்கிறன்.நிச்சயமாக ஒருநாள் மீண்டும் இந்த படத்தைப் பற்றி ஒரு பதிவு எழுத விருப்பம். பார்ப்போம்.

  பி.கு:
  • இந்தப் படத்தை நான் மதுரை புத்தகக் கண்காட்சியில் பாஸ்கரன் அவர்களின் கடையில் வாங்கியது. Director notes-views உட்பட பல விஷயங்கள் அந்த டிவிடியில் இருந்தது பல விதங்களில் உதவியது.
  • ருபெலோவ் குறித்தும் அவரது சில புகழ் பெற்ற ஓவியங்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் இங்கே கிளிக்கவும்.
  One good thing about music, when it hits you, you feel no pain
  - Bob Marley 

  Playing For Change Foundation - உலகின் பல பகுதிகளில் இருந்து இசைக் கலைஞர்களை இணைக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. வெறும் இசை கலைஞர்களின் சங்கமிப்பாக மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு குறிப்பாக வளர்ச்சியடையாத நாட்டிலுள்ள சிறுவர் சிறுமியருக்கு இசையைக் கற்றுத் தரும் நோக்கத்துடனும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்களது இந்த ரெண்டு வீடியோக்களையும் நான் ஏற்கனவே பார்த்திருந்தாலும்,பாப் மார்லியின் War No more Trouble பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது இந்த வீடியோக்கள் ஞாபகம் வரவே இதை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

  War No more Trouble - பாப் மார்லியின் புகழ் பெற்ற மற்றுமொரு பாடல். இதன் வரிகளை அவர் எழுதாவிட்டாலும் இசைக் கோர்ப்பு உட்பட அனைத்து விஷயங்களிலும் அவரே பெரும்பங்கு ஆற்றியுள்ளார். ரொம்பவே அற்புதமான வரிகள்.Playing For Change அந்த பாடலின் அடிப்படையில் இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர். கண்டிப்பாக அனைவரும் பாருங்கள்.முடிந்தால் பாப் மார்லியின் பாடலை கேட்டுவிட்டு இதைக் கேட்கவும்.அவரின் War வீடியோவையும் பாருங்கள். அவரின் வீச்சை உணருவீர்கள். இந்த வீடியோவில் குறிப்பிடத்தக அம்சம் - அதில் பங்குபெறுபவர்களின் நாட்டை கவனியுங்கள்-Gnana,Congo போன்ற நாட்டை சேர்த்தவர்களே அதிகம்.U2 குழுவின் Bonoவும் இதில் உள்ளார்.

                              
  Until the philosophy which holds one race
  Superior and another inferior
  Is finally and permanently discredited and abandoned
  Everywhere is war, me say war

  That until there is no longer first class
  And second class citizens of any nation
  Until the colour of a man's skin
  Is of no more significance than the colour of his eyes
  Me say war

  That until the basic human rights are equally
  Guaranteed to all, without regard to race
  Dis a war

  That until that day
  The dream of lasting peace, world citizenship
  Rule of international morality
  Will remain in but a fleeting illusion
  To be pursued, but never attained
  Now everywhere is war, war

  And until the ignoble and unhappy regimes
  That hold our brothers in Angola, in Mozambique,
  South Africa sub-human bondage
  Have been toppled, utterly destroyed
  Well, everywhere is war, me say war

  War in the east, war in the west
  War up north, war down south
  War, war, rumours of war

  And until that day, the African continent
  Will not know peace, we Africans will fight
  We find it necessary and we know we shall win
  As we are confident in the victory

  Of good over evil, good over evil, good over evil
  Good over evil, good over evil, good over evil

  பாடலை இங்கிருந்து டவுன்லோட் செய்யவும்  Stand by me - ரொம்பவும் நெகிழ்வான வீடியோ.இந்த பாடலை பாடுபவர் - Roger Ridley. Playing for Changeன் குழுவினர் சிறிய அளவில் இசை பரப்பும் முயற்சியில் இருந்த போது இவரின் பாடலை கேட்க நேர்ந்துள்ளது.அவரின் குரலில் இருந்த ஆன்மாவே தாங்கள் உலகவில் இந்த அமைப்பை தொடர உந்து சக்தியாக இருந்ததாக தங்கள் வலைத்தளத்தில் கூறியுள்ளனர். இசை எத்தனை பேரை இணைக்கிறது என்று இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

    

  பி.கு:
  தயவுசெய்து வீடியோக்களை பார்த்துவிட்டு எப்படியிருந்து என்று பின்னூட்டமிடவும். எனக்கு Bob Dylan, John Lennon, Bob Marley போன்றவர்களைப் பற்றி தனித்தனியாக பதிவுகள் போட ரொம்பவே ஆசை. இருந்தாலும் ஒரு 3 வருடமாகத்தான் இவர்களின் இவர்களின் பாடல்களை அதிகளவில் கேட்க ஆரம்பித்திருப்பதால், இன்னும் நிறைய கேட்டுவிட்டு அப்பறம் எழுதலாம் என்றிருக்கிறேன். 
  451 என்ற எண் பொறித்த தீயணைப்பு வண்டியின் சைரன் அலறுகிறது. படு வேகமாக வண்டி கிளம்பிச் செல்ல ஆரம்பிக்கிறது.இதற்கிடையே மற்றொரு இடத்தில் ஒரு இளைஞன் அமர்ந்திருக்கிறான்.தீடீரென அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒரு தொலைப்பேசி அழைப்பு.அவன் தொலைப்பேசியை எடுக்க,மறுமுனையில் "Get out..Hurry" என்று ஒரு பெண்ணின் குரல்.அவன் வெளியேறி ஓடத்துவங்கவும்...தீயணைப்பு வண்டி அங்கு வரவும் சரியாக இருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் அதிரடியாக வீட்டினுள் நுழைந்து தேட ஆரம்பிக்கின்றனர்.

                                                 அவர்கள் தேடும் அது முதலில் ஒரு விளக்கினுள் ஒளித்து வைத்திருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். பின் மேஜை,டிவி,கட்டில் என்று அனைத்து இடங்களிலும் அது நீக்கமற நிறைந்திருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். அனைத்தையும் மொத்தமாக ஒரு பையில் கட்டி எடுத்து வந்து கீழே குமிக்கின்றனர்.சிறுவன் ஒருவன் ஆர்வத்தினால் குவியலில் இருந்து அதில் ஒன்றை எடுக்க வீரர்களின் முறைப்பைக் கண்டு பயத்துடன் அதை திருப்பி வைக்கிறான். குவித்து வைக்கப்பட்ட அதை மொன்டாக் என்ற வீரன் தீயிலிட்டு பொசுக்குகிறான். அவனது வேலையை பாரட்டும் கேப்டன் சீக்கிரமே உனக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது என்று கூறிச் செல்கிறார்.


  யார் இந்த வீரர்கள்? அப்படி எதை அவர்கள் கண்டுபிடித்தனர்? எதை வெறியுடன் தீயிட்டு பொசுக்கினர்.ஏன் வண்டியின் எண் 451?அவர்கள் பொசுக்கிய அது எது - புத்தகங்கள். நிறைய புத்தகங்கள். 451F என்பது புத்தகங்களின் எரியும் வெப்பநிலை. ஏன் புத்தகங்களை பொசுக்க வேண்டும்? அந்த அரசு என்ன நினைக்கிறது என்றால் -எவரொருவர் புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கின்றாரோ அவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் திறன் வளரும்;சுயசிந்தனை வளர்ந்தால் தனித்துவம் வளரும்;தனித்துவம் தோன்றினால் அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி கேட்கத்தோன்றும்.எனவே அனைத்து அனைத்து அச்சு ஊடகத்திற்க்கும்-புத்தகங்கள்,செய்தித்தாள்கள் அனைத்திற்கும்-கடுமையான தடை. வெளியுலக செய்திகளை தெரிந்து கொள்ள இருக்கும் ஒரேவழி - தொலைக்காட்சி.அதுவும் அரசாங்கமே நடத்தும் நிகழ்ச்சிகள் மட்டுமே தெரியும்.முழுக்கமுழுக்க அபத்தங்கள் - மக்களின் மூளையை மழுங்கடிக்கும் நிகழ்ச்சிகள் மட்டுமே-ஒளிபரப்பப்படும். இதுபோக கடுமையான சட்டதிட்டங்களை அரசாங்கம் வகுத்துள்ளது. இன்ன அளவில்தான் தலையில் முடியை வளர்க்க வேண்டும், அரசாங்க விவகாரங்களைப் பற்றி பேசக்கூடாது இதுபோல பல கட்டுப்பாடுகள்.இந்த கட்டுப்பாடுகளை செயல்படுத்த அரசாங்கம் நியமித்துள்ள வீரர்கள் தான் இந்த தீயனைப்பு வீரர்கள்.அவர்களில் ஒருவன் தான்-மொன்டாக். சொல்ல மறந்து விட்டேன்.மொன்டாகின் "வேலையை மெச்சி" அவனுக்கு உயரதிகாரியாக பதவிவுயர்வு கிடைக்கிறது.


  இந்நிலையில் மொன்டாகின் அலுப்புதட்டும் வாழ்க்கையில் ஒரு பெண்-ஆசிரியை குறுக்கிடுகிறாள். ஒருநாள் பிரயாணத்தின் அந்த பெண்ணை சந்திக்க நேரிடுகிறது. அவனுடைய வேலை குறித்தும் புத்தகங்கள் குறித்தும் உள்ளார்ந்த விஷயங்களை அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அந்தப்பெண் ஒரு கேள்வி கேட்கிறாள் "Do you ever read the books you burn?". இந்தக் கேள்வி அவனை சலனப்படுத்த ஆரம்பிக்கிறது.வீட்டிற்கு வந்தால் மனைவி தொலைக்காட்சியிலேயே மூழ்கியிருப்பதைப் பார்த்து வருத்தமடைகிறான். புத்தகங்களை குறித்தே அவனது சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது. கடைசியாக ஒரு முடிவுடன் தான் ரொம்ப காலத்திற்கு முன் ஒளித்து வைத்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறான்.அந்த புத்தகம் The Personal History of David Copperfield by Charles Dickens. வாசிக்க வாசிக்க ஒரு இனம்புரியாத சந்தோசத்திற்கு ஆட்படுகிறான். ஒவ்வொரு முறை புத்தகங்களை எரிக்கும் போதும் யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு புத்தகங்களை எடுத்து வந்து படிக்க ஆரம்பிக்கிறான். மனைவிக்கு தெரியவந்து அவனை எச்சரிக்க "Behind each of these books, there's a man" என்று விசனத்துடன் பதிலளிக்கிறான்.


  இந்நிலையில் அந்த ஆசிரியப் பெண்ணிடம் இருந்து, இது போல புத்தகங்களை நேசிப்பவர்கள் படு ரகசியாமாக இயங்கிக் கொண்டிருப்பதும் ஒரு நூலகத்தையே அவர்கள் நடத்தி வருவதும் அவனுக்கு தெரிய வருகிறது. நாளுக்குநாள் அவனது புத்தக ஆர்வம் அதிகரித்து வர....வேலையில் நடக்கும் ஒரு சம்பவம் அவனது மனதை பெருமளவில் பாதிக்கிறது. அந்த பாதிப்பும் விரக்தியும் முற்றிப்போய் தீயணைப்புத்துறையின் கேப்டனையே கொலை செய்து விடுகிறான். அப்படி அவனை கொலை செய்யும் அளவிற்கு தூண்டியது எது? அவனது நிலை- அவனது புத்தகங்களின் நிலை என்ன? இதையெல்லாம் தெரிந்து கொள்ள திரைப்படத்தைக் காண்பதே உத்தமம்.அப்பொழுதுதான் அதன் வீச்சை முழுமையாக உணர முடியும்...

  Ray Bradburyன் மிகப் புகழ் பெற்ற ஒரு Sci-Fi நாவலான Fahrenheit 451 தழுவி உலகின் சிறந்த டைரக்டர்களில் ஒருவரான பிரான்சுவா த்ருஃபா(François Truffaut) எடுத்த படம். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அவர் எடுத்த ஒரே ஆங்கிலப் படம் இது. இந்த நாவல் குறித்தும் அது என்ன வகை என்பது குறித்தும் ஏற்கனவே ஒரு பதிவில் எழுதியுள்ளேன்.


  படம் ஒருவித மொன்னைதனத்துடன் மெதுவாக நகர்வது போல தோன்றும். அது படத்தின் கதை நடக்கும் சூழலை பிரதிபலிக்க delibrateஆக எடுக்கப்பட்ட ஒரு உத்தி. மெதுவாக இருப்பது போல இருந்தாலும் கேமராவில் பல புதுமையான கோணங்களை த்ருஃபா புகுத்தியிருப்பார். ஆனாலும் அவருக்கு ஆங்கிலம் சரியாக வராதது படத்திலும் தெரியும். அது ஒன்றே படத்தில் அந்நியாமாகத் தெரியும். படத்தை கூர்ந்து பார்த்தீங்கன்ன எங்கயுமே எழுத்து தெரியாது.அதாவது நாம வாசிக்கவே முடியாது. டைட்டில் கூட voice-over முறையில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும். பாடத்தில் காண்பிக்கும் செய்தித்தாள்களும் வெறும் படங்களாகவே இருக்கும். படத்தில் நாம் வாசிக்க டைரக்டர் விட்டு வைத்திருக்கும் ஒரே விஷயம் புத்தகங்களின் தலைப்பு.எப்படி படத்தின் முக்கிய கதாபாத்திரம் வேற எதையும் படித்ததில்லாமல் - புத்தகங்களை தலைப்பை மட்டும் படித்து அதனால் ஈர்க்கப்படுகிறானோ,அந்த மனநிலையை நமக்கும் கடத்த டைரக்டர் நினைத்திருக்கிறார். இருந்தாலும் நாவலுக்கும் படத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டென்று கூறுகிறார்கள்(நான் நாவலை இன்னும் படித்ததில்லை). படத்தில் சில குறைகள் இருந்தாலும், நல்ல ரசிப்புக்குரிய திரைப்படம் என்பது என் கருத்து.
                                                    
  ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984க்கும் இந்த நாவலுக்கும் பல ஒற்றுமைகளை இருப்பதைக் காணலாம். ரெண்டுமே ஒரு dystopian society குறித்த கதை. Dystopian என்பதை Utopian என்பதற்கு எதிர்ப்பதமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த நாவல் 1950களில் எழுதப்படுள்ளது.பனிப்போர் ஆரம்பித்த நேரமது.அப்போது அமெரிக்காவில் நிலவி வந்த கட்டுப்பாடுகளின் பிரதிபலிப்பாகவே ரே பிராட்பெரி இந்நாவலை எழுதியுள்ளதாக கூறுகின்றனர்.ஆனால் தொலைகாட்சி எவ்வாறு படிக்கும் பழக்கத்தை குறைத்து மூளையை மழுங்கடிக்கிறது என்பதின் வெளிப்பாடாக எழுதியதாக அவரே சொன்னதாகவும் கூறுகின்றனர்.


  எனக்கென்னமோ நம்மவூருளையும் இந்த நிலையை நோக்கி நகர்ந்துகிட்டு இருக்கிற மாதிரி தோணுது.நிறைய பேர்களின் பொழுதுகளை தொலைக்காட்சியே பெருமளவு ஆக்கிரமிப்பு செய்கிறது. எல்லா தொலைக்காட்சியிலுமே-நியூஸ் சேனல் உட்பட-biased  செய்திகளையே வெளியிடுகின்றனர். Times Now, NDTV போன்ற சேனல்களின் மீதும் எனக்கு எரிச்சல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் பற்றி சொல்லவே வேண்டாம். என் போன பதிவில் அரட்டை அரங்கம் வகையறாக்கள் குறித்து கருந்தேள் கூறியதை அப்படியே வழிமொழிகிறேன். இதெற்கெல்லாம் மாற்றாக புத்தகங்கள் மட்டுமே இருக்க முடியும் என்பது என் கருத்து. நல்ல சினிமா-தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகள் குறைவா இருக்கும் நம்மவூருல மாற்றுக்கருத்துடைய புத்தகங்களும் பத்திரிகைகளும் அதிகளவில் வந்தா மட்டுமே ஓரளவு நாட்டு நடப்ப புரிஞ்சுக்க முடியும்.

  எனக்கு இந்த சந்தேகம் இருக்கு - எல்லா செய்தித்தாள்களும் சேனல்களும் ஏன் ஒரேவிதமான செய்திகளுக்கு மட்டும் ஒரே சமயத்தில் முக்கியத்துவம் கொடுக்கின்றன..அது ஏதாவது ஒரு அரசியல் நிகழ்வாகவோ, சினிமா,வணிகம்,ஏதாவது ஒரு product-கார்(Nano ஞாபகத்திற்கு வருகிறது) இருக்கலாம். அந்த மாதிரி சமயத்தில வேற விஷயங்கள நீர்த்துப்போகச் செய்றாங்களானு தெரியல...மேலும் இப்பலாம் சேனல்கள் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்கும் செய்திகள் மட்டுமே முக்கிய செய்திகள் ஆயிருது.sorry....எழுத்து எங்கயோ போயிருச்சு.கண்டிப்பா இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.பார்த்திட்டு நம்ம ஊர் நிகழ்வுகள் எதுவும் ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை

  பி.கு:
  படத்தின் டைரக்டர் பிரான்சுவா த்ருஃபா ஒரு பெரிய புத்தகப் பிரியர் என்கிறார்கள். படத்தில் காண்பிக்கப்படும் எல்லா புத்தகங்களும் அவரது சொந்த லைப்ரரியில் இருந்து எடுத்து வரப்பட்டதாம். பல அருமையான சிறந்த புத்தகங்கள் அதில் இருக்கிறது. அந்த புத்தகங்களின் பெயர்களை ஆர்வமிருந்தால் இங்கே பாருங்கள்.மலைத்துப் போவீர்கள்.

  அண்ணன் கனவுகளின் காதலன் ஒருவேளை இந்தப் பதிவை படித்தால், பிரான்ஸில் த்ருஃபாவின் status எப்படிப்பட்டது என்று சொன்னால் நன்றாகயிருக்கும்.        
  வன்முறைல உச்சகட்டமானது எது? நான் ரொம்ப கொடுமையானதா நினைப்பது குழந்தைகளின் மீதான வன்முறையை.ஏன் நடக்குது,எதுக்கு-இந்த காரணங்கள் எதுவுமே தெரியாம வன்முறையின் பிடியில் சிக்குவது எவ்வளோ கொடுமை.பெண்கள் மீது கட்டவிழ்த்தப்படும் வன்முறையை கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியும்.ஆனா குழந்தைகள்,மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இவர்களுக்கு என்ன புரியப் போகுது.விலங்குகள்,பறவைகள் கூட instinctனால ஒருவாறு புரிந்து கொள்கின்றன..ஆனால் இவர்களுக்கு அந்த வாய்ப்பு கூட இல்லை.


  போன வாரம் லைப்ரரில இருந்து "குழந்தைப் போராளி-சைனா கெய்ரெற்சி" இந்தப் புத்தகத்த எடுத்து வந்து படிக்க நேர்ந்தது. ரொம்பவே சங்கடப்படுத்திய புத்தகம். உகண்டாவை சேர்ந்த சைனா கெய்ரெற்சி என்பவரின் சுய வரலாற்று நூல் இது. 1976ல் பிறக்கிறார் சைனா. அவரது தாயை,கொடூரமான குணம் கொண்ட தந்தை வீட்டை விட்டு அடித்து துரத்திவிட கொடுமைக்கார பாட்டியிடம் சைனா வளர நேர்கிறது. தந்தை மறுமணம் செய்து கொள்கிறார். வந்த சித்தியும் கொடுமைக்காரராக இருக்க-ஒன்பது வயதில் தன் தாயைத் தேடி வீட்டைவிட்டு வெளியேறுகிறார். இங்கிருந்து அவரது வாழ்க்கை சின்னாபின்னமாகிறது. National Resistance Army(NRA) என்று சொல்லப்படும் ஆட்சிக்கு எதிரான புரட்சிப் படையில் சேர்க்கப்படுகிறார்-அப்போது அவருக்கு வயது....வெறும் ஒன்பது. National Resistance Armyன் தலைவர்-முசேவெணி, ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுகிறான். அதற்காக வரலாற்றில் முதல்முறையாக முழுக்க முழுக்க குழந்தைகளை கொண்ட படை ஒன்றை உருவாக்குகிறான். குழந்தைகள் என்றல் சொல்லும் வேலையை மறுபேச்சியின்றி செய்வார்கள்,யாருக்கும் சந்தேகம் வராது...இந்த மாதிரி காரணங்களுக்காகவே இந்தப் படை. துப்பாக்கி உயரம் கூட இல்லாத குழந்தைகளின் கையில் மெசின்-கன், வெடிகுண்டுகள் மாதிரியான விஷயங்கள். சொல்ல முடியாத அளவிலான மன உளைச்சல்களுக்கு இடையே சைனாவும் மற்ற குழந்தைகளும் வளருகிறார்கள்.

                  
  ஆண்டுகள் செல்லச்செல்ல அதுவரை குழந்தைகளாக உயரதிகாரிகளின் கண்களுக்கு தெரிந்தவர்கள் இனி பெண்களாக தெரிய ஆரம்பிக்கின்றனர். புரட்சிப் படை என்று சொல்லிக் கொண்டாலும் பெண்களின் மீது,குறிப்பாக பெண் குழந்தைகளின் மீது பெருமளவு பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருப்பது சைனாவிற்கு தெரிய வருகிறது.அதிலிருந்து அவர் தப்பித்துக் கொண்டே இருந்தாலும் ஒரு கட்டத்தில் உயரதிகாரியிடம் சிக்கி பெரும் கொடுமைக்கு ஆளாக நேரிடுகிறது. இது போல் பல இன்னல்களுக்கு ஆளாகி, உயிருக்கு பல சமயங்களில் ஏற்படும் நெருக்கடியுடன் வாழ்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார். பின் துணிச்சலாக முடிவெடுத்து தென் ஆப்ரிக்காவிற்கு தப்பிச் செல்கிறார். அங்கும் ஒரு நான்கு ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக UN உதவியுடன் டென்மார்க்கிற்கு அகதியாக குடியேறுகிறார்(2000).அப்போது அவரின் வயது வெறும் 24. ஒரு இடத்தில சைனா கூறுகிறார் "குழந்தைப் போராளிகள் எல்லாவித கொடுமைகளிலும் பங்கேடுத்துக்கொள்வார்கள். பல குழந்தைகளுக்கு கொலையும் சித்திரவதையும் மிகப் பிடித்தமான வேலைகள் . கொலை சித்திரவதையின் மூலம் தங்களது தளபதிகளின் நன்மதிப்பை குழந்தைகள் சீக்கிரமே பெற்று விட முடியும். போர்க் கைதிகளையும், உளவாளிகள்-துரோகிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களை குரூரமாக சித்திரவதை செய்தும் புதைகுழிகளிற்கு அனுப்பியும் ஒரே நாளில் ராணுவத்தில் படிநிலைகளை தாண்டி குழந்தைகள் சென்று விட முடியும். கைதிகளிற்கு நாங்கள் அளிக்கும் உச்சபட்ச சித்திரவதைகள் எதிர்காலத்தில் எங்கள் உளவியலை எவ்வாறு பாதிக்கப் போகின்றன என்பதை அறியாத குழந்தைகளாக நாங்கள் இருந்தோம்.நாங்கள் தலைவரால் சாவதற்கென்றே வளர்க்கப்பட்டோம்".

                                                
  என்னை இது போன்ற விஷயங்கள் சீக்கிரம் மனதை சலனப்படுத்திவிடும். நான் இங்கு சொல்லி இருப்பது கம்மியிலும் ரொம்ப கம்மி. இந்த மாதிரி விஷயங்களை குறித்து எழுதுவது எனக்கு எப்பவுமே ரொம்ப கஷ்டம்.மேலும் Autobiographical வகையில் சாமானிய மக்களின் வரலாற்றை படிப்பதே பல விஷயங்களை கத்துக் கொடுக்கும் என்பது என் கருத்து. அப்படி நான் பல புத்தகங்களை படித்திருந்தாலும் இதுபோல் சில புத்தகங்களே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.ஒரு காலத்தில் நான் Escapist போல, உண்மையை சந்திக்கும் திராணியற்று இந்த வகையான புத்தகங்களை படிக்க முடியாமல் தவிர்த்து வந்தேன்(இப்ப வரை என்னால் சோளகர் தொட்டி புத்தகத்தை படித்து முடிக்க முடியவில்லை). உண்மையை தவிர்க்க நினைத்தால் நம் நாட்டில் 100ல் 90% விஷயங்களை படிக்கவே முடியாது என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது. எனவே கண்டிப்பாக அனைவரும் படித்துப் பாருங்கள்.சைனாவிற்கு ஏற்பட்ட பாதிப்பை நீங்களும் கட்டாயமாக உணர முடியும். கடைசியாக ஒன்று - எனக்கு தெரிந்த வரை குழந்தைகளின் மீது உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் பிரயோகிக்கப்படும் வன்முறைக்கு 99.99% so-called பெரியவர்களும் அவர்களது அலட்சியமுமே காரணம். இப்ப நான் பார்க்கும் குழந்தைகள் பல பேர் குழந்தைத்தனம்னா கிலோ என்ன விலை..என்ற ரீதியில தான் இருக்காங்க. இது என் பார்வைக் கோளாறன்னு தெரியல...உகாண்ட மாதிரி நாட்டில் குழந்தைகளின் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைக்கு சற்றும் குறைந்ததல்ல தற்போது நம் நாட்டில் தொலைக்காட்சியின் மூலமாக குழந்தைகளின் மீது பிரயோகிக்கப்படும் உளவியல் ரீதியான தாக்குதல் என்பது என் கருத்து.

                                            குழந்தைப் போராளி - சைனா கெய்ரெற்சி
                                                                 வெளியீடு - கருப்புப்பிரதிகள் 
                                                                        விலை - ரூ. 180.00
                                                     மொழிபெயர்ப்பு - தேவா

  பி.கு: இந்த புத்தகத்தை படிக்கும் போது Blood Diamond படம் ஞாபகத்திற்கு வந்தது. இந்தப் புத்தகத்தையும் Miramax நிறுவனத்தார் திரைப்படமாக எடுக்கப்போவதாக நூலில் சொல்லப்பட்டிருந்தது.நண்பர்கள் இது போல் குழந்தைப் போராளிகளைப் பற்றி சொல்லப்பட்டுள்ள ஏதாவது திரைப்படம் தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள்.

  பெரும்பாலானவர்களைப் போல நானும் மைக்கேல் ஜாக்சன் மூலமா தான் ஆங்கில பாடல்களையே கேட்க ஆரம்பிச்சேன். அதுவும் கடந்த ஆறு வருடங்களாகத்தான் நெறைய கேட்கவே முடிஞ்சது. ஏன்னா பத்தாவது வரைக்கும் எங்க வீட்டில கேபிள் கிடையாது. பத்தாவதுக்கப்பறம்-அதுவும் முழுப்பரீட்சை லீவ்ல தான் கேபிள் கொடுப்போம். கேபிள் வாடகையும் அதிகம்- கொடுத்தா நா ரொம்ப பார்ப்பேன்னு வேற கொடுக்க மாட்டாங்க. 12வது முடிச்சு காலேஜ் ரெண்டாவது வருசத்தில இருந்து தான் முழுநேரமும் கேபிள் இருந்தது. அப்ப இருந்து என் ராஜ்ஜியம் தான். எங்க வீட்டில யாருக்கும் சீரியல் பார்க்குற பழக்கம் இல்லாதது ரொம்ப வசதியா போச்சு. காலேஜில இருந்து வந்த உடனே vh1 சேனலத்தான் முதல்ல போடுவேன். ராத்திரி ஏதாவது எழுதிகிட்டு இருந்தாலும் எனக்கு பாட்டு ஓடிகிட்டே இருக்கணும். அப்ப இருந்துதான் பெருமளவில் நிறைய கேட்க ஆரம்பிச்சேன்.


  அப்ப எனக்கு AC/DC, Bob Dylan,John Lennon,Marley இந்த மாதிரி யாரையுமே தெரியாது. ஏதோ முன்னாடி 10வது லீவ்ல பார்த்தத வெச்சு Robbie Williams, Metallica மாதிரி கொஞ்சம் பேரை மட்டுமே தெரியும்.இத எதுக்கு சொல்றேன்னா இசையில் முக்கியமான ஆளுமைகள தெரியாட்டியும் முதல் முறையா கேட்க்கும் போதே பல இசை வடிவங்கள் பெருமளவில் என்னை ஈர்த்திருச்சு. AC/DC-Back in Black கேட்ட உடனே ரொம்பவே பிடிச்சிருந்தது. அப்பறம் அவுங்க பாடல்கள் எல்லாத்தையும் தேடித்தேடி கேட்க ஆரம்பிச்சேன்(எல்லோரும் அப்படித்தானே...). எனக்கு அப்படியே வேற வேற இசை வடிவங்களை கேட்டுகிட்டே இருக்கணும். இதுல திருப்தியே வர மாட்டேங்குது. வலையபட்டி தவில், ஷேய்க் சின்ன மௌலானா இந்த மாதிரியே ஒரு டிவிடி முழுவதும் வெச்சுருக்கேன். திண்டுக்கல்லைச் சேர்ந்த சக்தி பெண்கள் தப்பாட்டக் குழுவுடைய இசையமைப்பையும் கேட்டிருக்கேன். திடீர்ன்னு Eminemகு தாவிருவேன். அதுக்கு சம்பந்தமே இல்லாம Bach, Mozartன்னு கேட்பேன். எனக்கு புதுசு புதுசா கேட்டுகிட்டே இருக்கணும். அதே சமயம் மேலோட்டமா கேட்கவும் பிடிக்காது. எதுக்கு இவ்வளோ சுயதம்பட்டம்...நிஜமா எனக்கே தெரியல...எந்தவொரு பதிவுக்கும் Intro வேணுமில்ல..இத அதுமாதிரி எடுத்துக்கோங்க...
                                         Mission Impossible 2 படத்த பெரும்பாலானவர்கள் பார்த்திருப்போம். அந்தப் படத்தின் OST ஞாபகமிருக்கா...ஒண்ணு Metallica-I Disappear இன்னொன்னு Limp Bizkit-Take a look around. ரெண்டுமே செமையா இருக்கும். அப்படித்தான் எனக்கு Hard Metal Rock அறிமுகமானதே. இதுல Metallicaவின் பாடல் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.அப்பயிருந்து அவுங்களப் பத்தி தேட ஆரம்பிச்சது...கொஞ்ச கொஞ்சமா வளந்து பல ராக் இசை குழுக்களைப் பற்றிய தேடல்ல முடிஞ்சது. இப்ப உள்ள Green Day, Wolfmother, White Stripes, Linkin Park மாதிரி பல குழுக்கள் பிடித்திருந்தாலும் 70's-80'sல வந்த ராக் இசை பெருமளவில் என்னை கவர்ந்துள்ளது. அதிலிருந்து சில பாடல்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இந்த வகை இசைக்கு புதியவர்கள் இந்தப் பாடல்களைக் கேட்டுட்டு அதை விரும்ப ஆரம்பிச்சாங்கன்னா ரொம்ப சந்தோஷம். மத்தபடி ராக் இசை காட்டுக் கூச்சல், ஏகாதிபத்தியத்தின் எதிரொலி..இந்த மாதிரி எண்ணம் உள்ளவர்களுக்கு இது கண்டிப்பா பிடிக்காது...

  Led Zeppelin:


  70'sக்கு அப்பறம் என்பதால Beatles, Elvis, Rolling Stone மாதிரி முன்னோடிகள தவிர்த்து நேரா கலக்கலானா ராக் வகையான Heavy Metal-Hard Rock வகைக்கு போயிர்றேன்.

  இதுல மிகப் பெரிய மாற்றதை கொண்டு வந்த குழுவினர் இங்கிலாந்தைச் சேர்ந்த Led Zeppelin. இதுக்கு முக்கியக் காரணம் இந்தக் குழுவில் இருந்த ஜிம்மி பேஜ்(Jimmy Page)-கிடாரிஸ்ட். உலகின் மிகச் சிறந்த 3 கிடாரிஸ்ட் பட்டியலில் இவருக்கு நிச்சயம் ஒரு இடமுண்டு. எலெக்ட்ரிக் கிடாரில் மிகப் பெரிய அளவில் மாறுதல்களை கொண்டு வந்தவர். 


  அதுமட்டுமில்லாம இந்தக் குழுவின் பாடகரான ராபர்ட் பிளான்டின்(Robert Plant) குரலும் ஒரு முக்கியக் காரணம். எந்த ஒரு ராக் குழுவிற்கும் stage presence என்பது ரொம்ப முக்கியம்.குறிப்பாக..அதன் பாடகருக்கு. நீங்க ராபர்ட் பிளான்ட் பாடுவதைக் கேட்டால்-பார்த்தால் அதைப் புரிந்து கொள்ளலாம். Queen குழுவின் பாடகரும் உலகின் தலைசிறந்த குரல்களில் ஒன்றான Freddie Mercury கூட தன்னை மிகப் பாதித்த குரலில் ஒன்று ராபர்ட் பிளான்டின் குரல் என்று கூறியுள்ளார்.


  2008ல் Led Zeppelin குழுவினரைப் பற்றி ஒரு புத்தகம் வெளிவந்திச்சு. அதன் தலைப்பு - When Giants Walked the Earth. என்ன ஒரு தலைப்பு பாருங்க..இவுங்க பாடலை இப்ப கேட்கும் எனக்கே இப்படினா... 70's-80'sல கேட்டவுங்களுக்கு எப்படி இருக்கும்...உங்களுக்கு தெரிந்தவர்களோ..உறவினர்களோ..ஏன் நீங்க கூட அந்த காலகட்டத்திலேயே இவர்களைக் கேட்டிருந்தீங்கன்னா அது குறித்து ஏதும் சொல்ல முடியுமா....இவர்களது பாடல்களில் எனக்கு மிகப் பிடித்த சில பாடல்களை பகிர்ந்துக்கிறேன்.
  இதைத் தவிர பல பாடல்கள் இருந்தாலும்-சட்டுன்னு தோன்றுனது இவைகளே. Right Click-Save Target கொடுத்து டவுன்லோட் செஞ்சுக்கலாம்.

  சற்றே பெரிய பி.கு:
  இதைத் தவிர நிறைய குழுவினர்களைப் பற்றியும் நான் ரசிக்கும் இசை வகைகள் பற்றியும் எழுதலாமா வேணாமன்னு ஒரு பெரிய குழப்பம்.எனக்கு இசை நுணுக்கங்கள குறித்து அளப்பரிய அறிவு கிடையாது.ஒரு சாமானிய ரசிகனாகத்தான் இருக்கேன்.பார்ப்போம்.சும்மா name dropping மாதிரி பாடல்கள்-குழுவினர்களை சொல்லிட்டு போக விருப்பம் இல்லை. முதல்ல நா எழுதுறது எனக்கு திருப்தியா இருக்கணும். அப்பறம்தான் எல்லாம்.என்னித படிக்கிற பத்து பேர்ல ஒருத்தராவது பாடல்களைக் கேட்டா இன்னும் சந்தோஷமா இருக்கும். யாருக்கும் ப்ளாகில் பாடல்களைக் கேட்கும் அளவிற்கு நேரம் இருக்காது என்று தெரியும். டவுன்லோட் செஞ்சு அப்பறம் கேட்டா கூட சந்தோஷம்.