451 என்ற எண் பொறித்த தீயணைப்பு வண்டியின் சைரன் அலறுகிறது. படு வேகமாக வண்டி கிளம்பிச் செல்ல ஆரம்பிக்கிறது.இதற்கிடையே மற்றொரு இடத்தில் ஒரு இளைஞன் அமர்ந்திருக்கிறான்.தீடீரென அமைதியைக் கிழித்துக்கொண்டு ஒரு தொலைப்பேசி அழைப்பு.அவன் தொலைப்பேசியை எடுக்க,மறுமுனையில் "Get out..Hurry" என்று ஒரு பெண்ணின் குரல்.அவன் வெளியேறி ஓடத்துவங்கவும்...தீயணைப்பு வண்டி அங்கு வரவும் சரியாக இருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் அதிரடியாக வீட்டினுள் நுழைந்து தேட ஆரம்பிக்கின்றனர்.
அவர்கள் தேடும் அது முதலில் ஒரு விளக்கினுள் ஒளித்து வைத்திருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். பின் மேஜை,டிவி,கட்டில் என்று அனைத்து இடங்களிலும் அது நீக்கமற நிறைந்திருப்பதைக் கண்டுபிடிக்கின்றனர். அனைத்தையும் மொத்தமாக ஒரு பையில் கட்டி எடுத்து வந்து கீழே குமிக்கின்றனர்.சிறுவன் ஒருவன் ஆர்வத்தினால் குவியலில் இருந்து அதில் ஒன்றை எடுக்க வீரர்களின் முறைப்பைக் கண்டு பயத்துடன் அதை திருப்பி வைக்கிறான். குவித்து வைக்கப்பட்ட அதை மொன்டாக் என்ற வீரன் தீயிலிட்டு பொசுக்குகிறான். அவனது வேலையை பாரட்டும் கேப்டன் சீக்கிரமே உனக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது என்று கூறிச் செல்கிறார்.
யார் இந்த வீரர்கள்? அப்படி எதை அவர்கள் கண்டுபிடித்தனர்? எதை வெறியுடன் தீயிட்டு பொசுக்கினர்.ஏன் வண்டியின் எண் 451?அவர்கள் பொசுக்கிய
அது எது -
புத்தகங்கள். நிறைய புத்தகங்கள். 451F என்பது புத்தகங்களின் எரியும் வெப்பநிலை. ஏன் புத்தகங்களை பொசுக்க வேண்டும்? அந்த அரசு என்ன நினைக்கிறது என்றால் -எவரொருவர் புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கின்றாரோ அவர்களுக்கு சுயமாக சிந்திக்கும் திறன் வளரும்;சுயசிந்தனை வளர்ந்தால் தனித்துவம் வளரும்;தனித்துவம் தோன்றினால் அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேள்வி கேட்கத்தோன்றும்.எனவே அனைத்து அனைத்து அச்சு ஊடகத்திற்க்கும்-புத்தகங்கள்,செய்தித்தாள்கள் அனைத்திற்கும்-கடுமையான தடை. வெளியுலக செய்திகளை தெரிந்து கொள்ள இருக்கும் ஒரேவழி - தொலைக்காட்சி.அதுவும் அரசாங்கமே நடத்தும் நிகழ்ச்சிகள் மட்டுமே தெரியும்.முழுக்கமுழுக்க அபத்தங்கள் - மக்களின் மூளையை மழுங்கடிக்கும் நிகழ்ச்சிகள் மட்டுமே-ஒளிபரப்பப்படும். இதுபோக கடுமையான சட்டதிட்டங்களை அரசாங்கம் வகுத்துள்ளது. இன்ன அளவில்தான் தலையில் முடியை வளர்க்க வேண்டும், அரசாங்க விவகாரங்களைப் பற்றி பேசக்கூடாது இதுபோல பல கட்டுப்பாடுகள்.இந்த கட்டுப்பாடுகளை செயல்படுத்த அரசாங்கம் நியமித்துள்ள வீரர்கள் தான் இந்த தீயனைப்பு வீரர்கள்.அவர்களில் ஒருவன் தான்-மொன்டாக். சொல்ல மறந்து விட்டேன்.மொன்டாகின் "
வேலையை மெச்சி" அவனுக்கு உயரதிகாரியாக பதவிவுயர்வு கிடைக்கிறது.
இந்நிலையில் மொன்டாகின் அலுப்புதட்டும் வாழ்க்கையில் ஒரு பெண்-ஆசிரியை குறுக்கிடுகிறாள். ஒருநாள் பிரயாணத்தின் அந்த பெண்ணை சந்திக்க நேரிடுகிறது. அவனுடைய வேலை குறித்தும் புத்தகங்கள் குறித்தும் உள்ளார்ந்த விஷயங்களை அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது அந்தப்பெண் ஒரு கேள்வி கேட்கிறாள் "
Do you ever read the books you burn?". இந்தக் கேள்வி அவனை சலனப்படுத்த ஆரம்பிக்கிறது.வீட்டிற்கு வந்தால் மனைவி தொலைக்காட்சியிலேயே மூழ்கியிருப்பதைப் பார்த்து வருத்தமடைகிறான். புத்தகங்களை குறித்தே அவனது சிந்தனை ஓடிக்கொண்டிருக்கிறது. கடைசியாக ஒரு முடிவுடன் தான் ரொம்ப காலத்திற்கு முன் ஒளித்து வைத்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பிக்கிறான்.அந்த புத்தகம்
The Personal History of David Copperfield by Charles Dickens. வாசிக்க வாசிக்க ஒரு இனம்புரியாத சந்தோசத்திற்கு ஆட்படுகிறான். ஒவ்வொரு முறை புத்தகங்களை எரிக்கும் போதும் யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு புத்தகங்களை எடுத்து வந்து படிக்க ஆரம்பிக்கிறான். மனைவிக்கு தெரியவந்து அவனை எச்சரிக்க "
Behind each of these books, there's a man" என்று விசனத்துடன் பதிலளிக்கிறான்.
இந்நிலையில் அந்த ஆசிரியப் பெண்ணிடம் இருந்து, இது போல புத்தகங்களை நேசிப்பவர்கள் படு ரகசியாமாக இயங்கிக் கொண்டிருப்பதும் ஒரு நூலகத்தையே அவர்கள் நடத்தி வருவதும் அவனுக்கு தெரிய வருகிறது. நாளுக்குநாள் அவனது புத்தக ஆர்வம் அதிகரித்து வர....வேலையில் நடக்கும் ஒரு சம்பவம் அவனது மனதை பெருமளவில் பாதிக்கிறது. அந்த பாதிப்பும் விரக்தியும் முற்றிப்போய் தீயணைப்புத்துறையின் கேப்டனையே கொலை செய்து விடுகிறான். அப்படி அவனை கொலை செய்யும் அளவிற்கு தூண்டியது எது? அவனது நிலை- அவனது புத்தகங்களின் நிலை என்ன? இதையெல்லாம் தெரிந்து கொள்ள திரைப்படத்தைக் காண்பதே உத்தமம்.அப்பொழுதுதான் அதன் வீச்சை முழுமையாக உணர முடியும்...
Ray Bradburyன் மிகப் புகழ் பெற்ற ஒரு Sci-Fi நாவலான Fahrenheit 451 தழுவி உலகின் சிறந்த டைரக்டர்களில் ஒருவரான பிரான்சுவா த்ருஃபா(François Truffaut) எடுத்த படம். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அவர் எடுத்த ஒரே ஆங்கிலப் படம் இது. இந்த நாவல் குறித்தும் அது என்ன வகை என்பது குறித்தும் ஏற்கனவே ஒரு
பதிவில் எழுதியுள்ளேன்.

படம் ஒருவித மொன்னைதனத்துடன் மெதுவாக நகர்வது போல தோன்றும். அது படத்தின் கதை நடக்கும் சூழலை பிரதிபலிக்க delibrateஆக எடுக்கப்பட்ட ஒரு உத்தி. மெதுவாக இருப்பது போல இருந்தாலும் கேமராவில் பல புதுமையான கோணங்களை த்ருஃபா புகுத்தியிருப்பார். ஆனாலும் அவருக்கு ஆங்கிலம் சரியாக வராதது படத்திலும் தெரியும். அது ஒன்றே படத்தில் அந்நியாமாகத் தெரியும். படத்தை கூர்ந்து பார்த்தீங்கன்ன எங்கயுமே எழுத்து தெரியாது.அதாவது நாம வாசிக்கவே முடியாது. டைட்டில் கூட voice-over முறையில் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும். பாடத்தில் காண்பிக்கும் செய்தித்தாள்களும் வெறும் படங்களாகவே இருக்கும். படத்தில் நாம் வாசிக்க டைரக்டர் விட்டு வைத்திருக்கும் ஒரே விஷயம் புத்தகங்களின் தலைப்பு.எப்படி படத்தின் முக்கிய கதாபாத்திரம் வேற எதையும் படித்ததில்லாமல் - புத்தகங்களை தலைப்பை மட்டும் படித்து அதனால் ஈர்க்கப்படுகிறானோ,அந்த மனநிலையை நமக்கும் கடத்த டைரக்டர் நினைத்திருக்கிறார். இருந்தாலும் நாவலுக்கும் படத்திற்கும் நிறைய வேறுபாடு உண்டென்று கூறுகிறார்கள்(நான் நாவலை இன்னும் படித்ததில்லை). படத்தில் சில குறைகள் இருந்தாலும், நல்ல ரசிப்புக்குரிய திரைப்படம் என்பது என் கருத்து.
ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984க்கும் இந்த நாவலுக்கும் பல ஒற்றுமைகளை இருப்பதைக் காணலாம். ரெண்டுமே ஒரு dystopian society குறித்த கதை. Dystopian என்பதை Utopian என்பதற்கு எதிர்ப்பதமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த நாவல் 1950களில் எழுதப்படுள்ளது.பனிப்போர் ஆரம்பித்த நேரமது.அப்போது அமெரிக்காவில் நிலவி வந்த கட்டுப்பாடுகளின் பிரதிபலிப்பாகவே ரே பிராட்பெரி இந்நாவலை எழுதியுள்ளதாக கூறுகின்றனர்.ஆனால் தொலைகாட்சி எவ்வாறு படிக்கும் பழக்கத்தை குறைத்து மூளையை மழுங்கடிக்கிறது என்பதின் வெளிப்பாடாக எழுதியதாக அவரே சொன்னதாகவும் கூறுகின்றனர்.
எனக்கென்னமோ நம்மவூருளையும் இந்த நிலையை நோக்கி நகர்ந்துகிட்டு இருக்கிற மாதிரி தோணுது.நிறைய பேர்களின் பொழுதுகளை தொலைக்காட்சியே பெருமளவு ஆக்கிரமிப்பு செய்கிறது. எல்லா தொலைக்காட்சியிலுமே-நியூஸ் சேனல் உட்பட-biased செய்திகளையே வெளியிடுகின்றனர். Times Now, NDTV போன்ற சேனல்களின் மீதும் எனக்கு எரிச்சல் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. குழந்தைகள் பற்றி சொல்லவே வேண்டாம். என் போன
பதிவில் அரட்டை அரங்கம் வகையறாக்கள் குறித்து கருந்தேள் கூறியதை அப்படியே வழிமொழிகிறேன். இதெற்கெல்லாம் மாற்றாக புத்தகங்கள் மட்டுமே இருக்க முடியும் என்பது என் கருத்து. நல்ல சினிமா-தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான முயற்சிகள் குறைவா இருக்கும் நம்மவூருல மாற்றுக்கருத்துடைய புத்தகங்களும் பத்திரிகைகளும் அதிகளவில் வந்தா மட்டுமே ஓரளவு நாட்டு நடப்ப புரிஞ்சுக்க முடியும்.
எனக்கு இந்த சந்தேகம் இருக்கு - எல்லா செய்தித்தாள்களும் சேனல்களும் ஏன் ஒரேவிதமான செய்திகளுக்கு மட்டும் ஒரே சமயத்தில் முக்கியத்துவம் கொடுக்கின்றன..அது ஏதாவது ஒரு அரசியல் நிகழ்வாகவோ, சினிமா,வணிகம்,ஏதாவது ஒரு product-கார்(Nano ஞாபகத்திற்கு வருகிறது) இருக்கலாம். அந்த மாதிரி சமயத்தில வேற விஷயங்கள நீர்த்துப்போகச் செய்றாங்களானு தெரியல...மேலும் இப்பலாம் சேனல்கள் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுக்கும் செய்திகள் மட்டுமே முக்கிய செய்திகள் ஆயிருது.sorry....எழுத்து எங்கயோ போயிருச்சு.கண்டிப்பா இந்த படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.பார்த்திட்டு நம்ம ஊர் நிகழ்வுகள் எதுவும் ஞாபகம் வந்தா அதுக்கு நான் பொறுப்பில்லை
பி.கு:
படத்தின் டைரக்டர் பிரான்சுவா த்ருஃபா ஒரு பெரிய புத்தகப் பிரியர் என்கிறார்கள். படத்தில் காண்பிக்கப்படும் எல்லா புத்தகங்களும் அவரது சொந்த லைப்ரரியில் இருந்து எடுத்து வரப்பட்டதாம். பல அருமையான சிறந்த புத்தகங்கள் அதில் இருக்கிறது. அந்த புத்தகங்களின் பெயர்களை ஆர்வமிருந்தால்
இங்கே பாருங்கள்.மலைத்துப் போவீர்கள்.
அண்ணன் கனவுகளின் காதலன் ஒருவேளை இந்தப் பதிவை படித்தால், பிரான்ஸில் த்ருஃபாவின் status எப்படிப்பட்டது என்று சொன்னால் நன்றாகயிருக்கும்.
அட ரொம்ப வித்தியாசமான கதையா இருக்கே! நிச்சயம் பார்க்கனும் நண்பா! புத்தகங்கள் படிக்கிற பழக்கம் ரொம்ப குறைஞ்சு போயிடுச்சு. அப்படி பக்கிறங்களை மற்றவங்க விநோதமா பாக்கிறது கூட நடக்குது!
ReplyDeleteநண்பரே,
ReplyDeleteவித்தியாசமான கதை, மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.
மீடியா பற்றி நன்கு புரிந்துகொள்ள ‘மீடியா உலகம்’ என்ற புத்தகம் கிடைத்தால். தமிழில் வெளிவந்த ஒரு ஆச்சரியமான புத்தகம். பல வருடங்களுக்கு முன் படித்தது, சொந்தமாக வாங்கத் தேடிக்கொண்டொருக்கிறேன். யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
நான்கூட சினிமா பார்க்கத்துவங்கியவுடன் படிப்பது குறைந்துவிட்டது. இன்றுதான் அதுகூறித்து Feel பண்ணினேன் பார்த்தால், நீங்கள் இப்படி ஒரு பதிவை எழுதியிருக்கிறீர்கள்.
புத்தகங்கள் குறித்து எழுதுவதாகச் சொன்னீர்கள், ஆனால் எதையும் காணோமே நண்பா?
@எஸ்.கே
ReplyDeleteநண்பா...முடிந்தால்..நாவலை படித்து விட்டு படத்தை பார்க்கவும்
@சு.மோகன்
ReplyDeleteதல...ரெண்டு பதிவுக்கு முன்னாடிதான் "குழந்தைப் போராளிகள்" புத்தகத்தை பற்றி எழுதியிருந்தேன். ஒரு 4-5 புத்தகம் pipelineல இருக்கு..சீக்கிரம் எழுத முயற்சி செய்றேன் (புத்தகம் எழுதனுமேன்னு எழுதுனா ஒரு திருப்தியே இல்ல)
முடிஞ்சா இந்த நாவல படிச்சுப் பாருங்க...எனக்கு நாவலை வெச்சுதான் இந்த படமே தெரியும்
@வாவ்.. அருமை நண்பா கலக்கிட்டீங்க.பரபரப்பான எழுத்து நடை.படம் எப்படி இருந்தாலும் நீங்க எழுதுனதுக்கே பாக்கலாம்.
ReplyDelete//அந்த மனநிலையை நமக்கும் கடத்த டைரக்டர் நினைத்திருக்கிறார்.//
இந்த மாதிரி நுணுக்கமான விஷயங்கள எங்க பாஸ் புடிக்கிறீங்க.சூப்பர் :-)
//அந்த மாதிரி சமயத்தில வேற விஷயங்கள நீர்த்துப்போகச் செய்றாங்களானு தெரியல//
ReplyDeleteஎல்லாம் டிஆர்பி ரேட்டுக்காக அலையும் பணம்தின்னி சேனல்கள். வேற எப்படி எதிர்பார்க்க முடியும்.
பின்னுட்டம் போட லின்க் தேடி தேடி கடைசில அது மேல இருக்கு...;))
நாவலுக்காக எடுத்துகொண்ட கதைக்கரு மிகவும் வித்தியாசம்,
ReplyDeleteநம்முர்ல சில எழுத்தாளர்களின் புத்தகத்தை தடைசெய்யனும்னு அரசு முடிவெடுத்து உங்க கிட்ட கருத்து கேட்டால் யாரோட புத்தகத்தை சொல்வீங்க? :)
நாவலுக்காக எடுத்துகொண்ட கதைக்கரு மிகவும் வித்தியாசம்,
ReplyDeleteநம்முர்ல சில எழுத்தாளர்களின் புத்தகத்தை தடைசெய்யனும்னு அரசு முடிவெடுத்து உங்க கிட்ட கருத்து கேட்டால் யாரோட புத்தகத்தை சொல்வீங்க? :)
@RNS...
ReplyDelete//இந்த மாதிரி நுணுக்கமான விஷயங்கள எங்க பாஸ் புடிக்கிறீங்க//
பாஸ்..அது என்ன..கோழியா..ஓட விட்டு பிடிக்க.........சும்மா ..சும்மா
எல்லாம் உங்கள மாதிரி மூத்த உடன்பிறப்புகள்ட்ட இருந்து கத்துகிறது தான்..
//நம்முர்ல சில எழுத்தாளர்களின் புத்தகத்தை தடைசெய்யனும்னு அரசு முடிவெடுத்து உங்க கிட்ட கருத்து கேட்டால் யாரோட புத்தகத்தை சொல்வீங்க//
ReplyDeleteகுறிப்பிட்டு யாரையும் சொல்லத் தெரியல...யாரு வேணாலும் எழுதட்டும்..பிடிச்சவங்க படிக்கப் போறாங்க...அவ்வளவுதான..
ஆனா...ஜாதிரீதியா,மதரீதியா,பாலினரீதியா ஒருத்தரை மட்டம் தட்டியோ,வேணும்னே அசிங்கப்படுத்தி எழுதுற எல்லாத்தையும் தடை செய்யனும்றது என் கருத்து...
(அப்படியும் சில ஜந்துகள் இருக்காங்க)
//ரெண்டு பதிவுக்கு முன்னாடிதான் "குழந்தைப் போராளிகள்" புத்தகத்தை பற்றி எழுதியிருந்தேன்//
ReplyDeleteSorry மறந்துட்டேன், உண்மையில் நான் எதிர்ப்பது உங்களுக்குப் பிடித்த நாவலகள் குறித்த பதிவை.
நான் ஏற்கெனவே சொல்லியிருந்ததுபோல், டமிலில் நான் படித்தது (குறிப்பாக டமில் எழுத்தாளர்கள் எழுதியது) மிகவும் குறைவு. இப்போதுதான் மீண்டும் தொடங்கியிருக்கிறேன். So நீங்கள் எழுதினால் உபயோகமாக இருக்கும்.
படம்னா மறுபடியும் ரெண்டு மணிநேரத்தில பார்த்திட்டு எழுதிரலாம்..நாவல் மறுபடியும் படிக்க சில நாட்கள் ஆயிறது.அதுக்குள்ள புதுசு வாங்கிறேனா..அத படிக்க ஆரம்பிச்சிற்றேன்...ரொம்ப பிடித்த ஆழி சூழ் உலகு மறுபடியும் படிச்சிகிட்டு இருக்கேன்.சீக்கிரமே பகிர்ந்துக்கிறேன்.
ReplyDelete//டமிலில் நான் படித்தது (குறிப்பாக டமில் எழுத்தாளர்கள் எழுதியது) மிகவும் குறைவு// தொரை..........
தமிழில் வாண்டுமாமா எழுதிய பலே கில்லாடியும் பறக்கும் டவுசரும் என்ற கதையை விமர்சிக்க வேண்டுகிறோம் - டவுசர் பறப்பதை ரசிக்கும் சங்கம்
ReplyDeleteஅப்படியே, கோகுலம் இதழில் வந்த ‘திப்பிலிராஜா’ கதைத்தொடரில், திப்பிலிராஜா விண்வெளிக்குப் பறந்த கதையை, ஏன் அவசர கதியில் முடித்தார்கள் என்று ஒரு கட்டுரை சமர்ப்பிக்கவும்
ReplyDelete@கருந்தேள் கண்ணாயிரம்
ReplyDeleteதல...செம...ரொம்ப நல்லாயிருந்தது..சிரிச்சு சிரிச்சு முடியல...இந்த மாதிரி கமென்ட் பார்த்தா ரொம்ப சந்தோசமாயிருக்கு
@கருந்தேள் கண்ணாயிரம்
ReplyDeleteம்ஹும்...இவ்வளோ நேரம் யோசிச்சும் இதுக்கு என்னால கவுன்ட்டர் அடிக்க முடியல...தோல்விய ஒப்புக்கொள்கிறேன்..ஆ..ஆஆஅ....
அட நிசம்மா.. நான் கொழந்தையா இருக்கும்போது, இந்தத் திப்பிலிராஜா கதைகளைப் படிச்சி, உளுந்து உளுந்து சிரிப்பேன் :-) ஒரு லொள்ளுசபா ரேஞ்சுல இருக்கும் :-)
ReplyDeleteகோகுலம் நானுந்தன் படிச்சிருக்கேன்..அப்படி ஒரு கத வந்ததே ஞாபகமில்ல...சுப்பான்டியின் சாகசங்கள் ஞாபமிருக்கா...(சுப்பான்டி..இத கூட ப்ளாக்க்கு வெச்சுருக்காலம்)
ReplyDeleteசுப்பாண்டியெல்லாம் மறக்கவே முடியாதே :-)..
ReplyDeleteஅதெல்லாம் போயி, சவிதா பாபி வந்திருச்சி :-)
தல..நீங்க அம்புலிமாமா, கோகுலம் இதுகள படிச்சிருக்கீங்களா..நீங்க எல்லாம் இங்லிபீச்சு காமிக்ஸ் தான் படிச்சிருப்பீங்கனு தமிழ் பரிச்சயம் இருக்காதுன்னு நெனச்சிருந்தேன்
ReplyDelete@கருந்தேள் கண்ணாயிரம்
ReplyDeleteதல...சவிதா பாபி நான் கேள்விப்பட்டதில்லையே..எந்த புத்தகத்தில் வந்திச்சு.....
அடப்பாவி. தமிழ்ல பூந்தளிர் முதல் இதழ்ல இருந்து, ரத்னபாலா, பாலமித்ரா, லயன், திகில், மினி லயன், ஜூனியர் லயன் காமிக்ஸ், ராணி காமிக்ஸ், அம்புலிமாமா, கோகுலம், பைகோ க்ளாஸிக்ஸ் இது எல்லாமே ஒண்ணு விடாம படிச்சவன் நான் ! அதையெல்லாம் இன்னமும் மறக்கவே முடியாது....
ReplyDeleteஅப்பல்லாம், ரத்னபாலால , விண்வெளி அண்ணல்னு ஒரு தொடர் வரும்... படக்கதை.. அதுல வர்ர அந்த ஹீரோ கேரக்டர் எனக்கு ரொம்பப் புடிக்கும்...
ReplyDeleteஅய்யய்யோ.... நாஸ்டால்ஜியா பதிவு எழுத வெச்சிருவாய்ங்க போலயே :-) ... கிங் விஸ்வா தான் இதுக்கு சரியான ஆள்.. அவர் இங்கே வரவும் :-)
ReplyDeleteபூந்தளிர்,லயன், முத்து, ராணி காமிக்ஸ், அம்புலிமாமா, கோகுலம் இவைகள் மட்டுமே நான் படிச்சது..அப்பவே நீங்க இத்தனை புத்தகங்களை படிச்சிட்டீங்களா..பிஞ்சிலேயிய பழுத்த பழம்
ReplyDeleteபிஞ்சிலேயிய பழுத்த பழம் = சவிதா பாபி வாழ்க :-)
ReplyDeleteஅம்புலிமாமாவில நீதிநெறிக் கதைகள் வரும்.அத ரொம்ப சீரியஸ்ஸா பல காலம் கடைபிடிச்சேன்....இப்ப யோசிச்சு பார்த்த அதிலும் கூட ஒரு அர்த்தம் இருக்குற மாதிரி தெரியுது
ReplyDeleteதல..
ReplyDeleteசவிதா பாபினு கூகுளில் தட்டிப் பார்த்தா மேற்படி சமாச்சாரங்கள் வருதே..அந்த சவிதா பாபி தான் இந்த சவிதா பாபியா...
// கூகுளில் தட்டிப் பார்த்தா//
ReplyDeleteதட்டி மட்டுமே பார்த்தேன்
ஹீ ஹீ.. அதே பாபி தான் இது :-)
ReplyDeleteரைட்டு... மீ த ஸ்லீப்பிங் :-) .. சீ யு டுமாரோ ;-)
ReplyDelete@கருந்தேள் கண்ணாயிரம்
ReplyDeleteமீ டு த ஸ்லீப்பிங் ஒன் ஹாவர் ஆப்டர்...
நண்பரே,
ReplyDeleteபிரான்சுவாஸ் த்ருபோவா?!!! யார் அவர் :) பிரெஞ்சு சினிமாவின் மிக முக்கியமான இயக்குனரான இவரின் பெயரில் அமைந்திருக்கும் ஒரு சினிமாத்துறை நூலகத்தை கடந்தே நான் வழமையாக படங்களை பார்க்கும் திரையரங்கிற்கு செல்வேன் .. பெரிய்ய ஆள், நான் தான் கவனிக்க மாட்டேன் என்கிறேன் :) சிறப்பான ஆக்கம். காலச்சுவடில் இம்மாதம் புத்தக எரிப்பு குறித்து ஒரு கட்டுரை வந்திருக்கிறது இன்னமும் படிக்காவிடில் படித்துப்பாருங்கள்.
http://www.kalachuvadu.com/issue-130/page19.asp
@கனவுகளின் காதலன்
ReplyDeleteணா..நீங்க கண்டிப்பா பிரான்சுவாஸ் த்ருபோ குறித்து ஒரு பதிவை எழுத வேண்டும்...
வீட்டில உயிர்மை தான் வாங்குறோம்.முன்னாடி காலச்சுவடு வாங்கி-அப்பறம் நிப்பாட்டியாச்சு...
அந்த லிங்க் மிக பயனுள்ளதாக இருந்தது.நன்றி.
நீங்க கொடுத்த லிங்க்கில் கூட நான் குறிப்பிட்டுள்ள புத்தகங்களையும் குறித்து எழுதியுள்ளனரே..!!!!!
//‘Anyone who kills a man, kills a reasonable creature ; but he who destroys a good book kills reason itself’-மில்டன்// அந்த பக்கத்தில் படித்தது...
நண்பரே,
ReplyDelete//நீங்க கொடுத்த லிங்க்கில் கூட நான் குறிப்பிட்டுள்ள புத்தகங்களையும் குறித்து எழுதியுள்ளனரே..!!!!!// சுட்டியை தந்ததே அதற்காகத்தானே :)
பிரான்சுவா த்ருபோ மீது ஆர்வம் உண்டாகினால் எழுதுவேன். உயிர்மையை விட காலச்சுவடு நன்றாக இருக்கிறது [ இப்போது] என்பது என் தாழ்மையான கருத்து. காலச்சுவட்டை நீங்கள் இணையத்திலேயே படித்து விடலாம். அந்தக் கட்டுரை சிறிய கட்டுரை ஆனாலும் மனதிற்கு மிகவும் பிடித்துப்போய்விட்டது :) பார்த்தால் நீங்கள் கூட அக்கட்டுரையில் உள்ள ஒரு புத்தகத்தைப் பற்றி சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள் அது என்னை ஆச்சர்யம் கொள்ள வைத்தது. இவ்வகையான ஆச்சர்யங்களால் நிரம்பியதுதானே வாழ்க்கை :)
@கனவுகளின் காதலன்....
ReplyDelete//உயிர்மையை விட காலச்சுவடு நன்றாக இருக்கிறது [ இப்போது] என்பது என் தாழ்மையான கருத்து//
ணா...நீங்க எப்படி வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம்...ஒண்ணு யோசிக்க வேண்டாம் "தாழ்மையான" வார்த்தைகள் எல்லாம் ரொம்ப கஷ்டமாயிருக்கு.
காலச்சுவடு,உயிர்மை எல்லாத்திலையும் ஒரு biased பார்வை இருக்குற மாதிரி தெரியுது...உயிர்மையும் இணையத்திலேயே வந்துருதே..இருந்தாலும் என்னால முடிஞ்ச பங்களிப்பா இந்த புத்தகங்களையாவது வாங்குறேன். எனக்கு உயிரெழுத்து,புத்தகம் பேசுது,உங்கள் நூலகம் உட்பட எல்லா சிறுபத்திரிகைகளையும் வாங்க ஆசைதான்....டப்பு லேது....
கொழந்த முழுசும் படிச்சுட்டு போட்டதால தாமதம்,படம் தரவிறக்கிவிட்டேன்,நல்ல அறிமுகம் கொழ்ந்த ட்ருஃபாட்னே உச்சரிச்சு வந்திருக்கேன் இம்புட்டு நாளா,புத்தகம் வாங்கி இலக்கியம் வளர்ச்சிக்கு பங்களிக்கும் பாங்கு அருமை.
ReplyDelete@|கீதப்ப்ரியன்
ReplyDeleteணா...ட்ருஃபாட் ஆ...த்ருபோ வா..இல்ல த்ருஃபா வா னு குழப்பம் இருக்கு. Voice-overல டைரக்டர் - த்ருஃபா அப்படின்னு தான் சொல்லுறாங்க.பார்த்திட்டு சொல்லுங்க
இப்ப புத்தகம் படிக்கிற பழக்கம் கொஞ்ச கொஞ்சமா கொறஞ்சிக்கிட்டே வரது எனக்கு வருத்தமா இருக்கு.என்ன செய்ய பொழப்பு நடத்தவே நேரம் பத்த மாட்டேங்குது.எனிவே உங்க விமர்சனம் வழக்கம்போல நல்லாகீது, கொஞ்சம் நம்ம கடை பக்கம் வந்து போங்க. புதுசா பொருளெல்லாம் தொடச்சு வச்சிருக்கேன்.
ReplyDeletehttp://tmaideen.blogspot.com/2010/10/sometimes-in-april.html
@ மைதீன்
ReplyDeleteஉங்க கட சொக்ககீது..கண்டின்யூ..