Sublimation(பதங்கமாதல்):பள்ளியில் படித்திருப்போமே நினைவிருக்கிறதா. திட நிலையிலிருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு. From solid state to gaseous state without attaining liquid state. கற்பூரம் சிறந்த உதாரணம். மற்றொரு சிறந்த உதாரணம் ட்ரை ஐஸ்(Dry ice, வேறொன்றும் இல்லை. திண்ம(Solid) வடிவில் இருக்கும் கார்பன் டை ஆக்சைட்: CO2). −78.5°Cல் ட்ரை ஐஸ் சப்ளிமேட் ஆகும். அதாவது நேரடியாக வாயுவாக மாறிவிடும். எனது sublimation temperature இந்த இரு பாடல்களும் தான்.
1960. ரே சார்ல்ஸ் அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த இசை விழாவில் கலந்து கொள்ளவது குறித்து மிகுந்த குதூகலத்துடன் இருந்தார். இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதையும் தாண்டி ஜியார்ஜியாவில் நடப்பதுதான் அவரது அதீத மகிழ்ச்சிக்குக் காரணம். ஏனென்றால் ஜியார்ஜியா, அவர் பிறந்த மாகாணம்.
ஏக்கம்,பிரிவு,பால்யம் என்று அனைத்தும் வெளிப்படும் ஒரு பாடல்.இதில் வரும் ஜியார்ஜியாவை காதலியாக - குழந்தையாக - நண்பனாக - மழையாக - நமது சிறுவயது ஊர் என்று மனதுக்கு நெருக்கமான எந்தவொரு விஷயத்தோடும் தொடர்புபடுத்திக் கொள்ளலாம். சற்றே அமைதியான மனநிலையில் கேட்டுப் பாருங்கள்.
ரே சார்ல்ஸ் - என்னவொரு மனிதர்.என் வாழ்வே எனது செய்தி என்று காந்தி கூறியது போல இவர் வாழ்வு நம் அனைவருக்கும் ஒரு உந்துசக்தி.தான் சம்பாதித்தவைகளை பெருமளவில் நன்கொடையாகவே பல்வேறு விஷயங்களுக்குக் கொடுத்தவர்.அவர் பியானோவின் முன்னமர்ந்து குழந்தை போல மிதமிஞ்சிய குதூகலத்துடன் இசையமைப்பதைக் பார்ப்பதே ஒரு கண்கொள்ளக் காட்சி. இவரது கதை தான் Ray என்ற பெயரில் ஜேமி ஃபாக்ஸ் ரேயாக நடிக்க, 2004ல் வெளிவந்தது. 14 மணிநேரம் கண்ணில் லென்ஸ் அணிந்துகொண்டு ரேயாகவே ஜேமி அப்படத்தில் உருமாறி இருப்பார் (இதுவொரு க்ளீஷேவான வார்த்தையாக போய்விட்டது.கேரேக்டராக வாழ்ந்திருப்பார் என்று சொல்வது. அதுபோல இதையும் நினைக்க வேண்டாம்). இப்படத்தைப் பார்க்காதவர்கள் ஒருமுறையேனும் அப்படத்தை பார்க்க வேண்டுகிறேன். ரே சார்லஸ் பற்றி தனியாகவே விரிவாக எழுத நினைத்திருப்பதால் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்.
--------------------------------------------------------------------------------
ரஹ்மானின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று இசைக் கோர்ப்பு - ஆர்க்கெஸ்ட்ரேஷன். மிக அலாதியான புதிய வகையான வெவ்வேறு லேயர்களில் நுணுக்கமானதாக பல இசைக் கோர்ப்புகள் அமைந்திருக்கும். நான் கேட்ட வரையில் ரஹ்மான் தான் இவ்விஷயத்தில் எனக்கு மிகப்பிடித்தவர்.அவரால் கடினமான ஆர்க்கெஸ்ட்ரேஷகளையும் கையாள முடியும். Rockstarல் வரும் Hawa Hawa பாடல் போல. அக்கார்டியன் + வயலின் + கிடார் என்று அப்பாடல் பல தளங்களில் மிக அசாதாரணமாக பயணிக்கும்.
பி.கு:
1960. ரே சார்ல்ஸ் அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த இசை விழாவில் கலந்து கொள்ளவது குறித்து மிகுந்த குதூகலத்துடன் இருந்தார். இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதையும் தாண்டி ஜியார்ஜியாவில் நடப்பதுதான் அவரது அதீத மகிழ்ச்சிக்குக் காரணம். ஏனென்றால் ஜியார்ஜியா, அவர் பிறந்த மாகாணம்.
அதே காலகட்டத்தில் தான் அமெரிக்காவில் ஜிம் க்ரோ சட்டம் அமலில் இருந்தது.கறுப்பினர்கள் - வெள்ளையர்களுக்கு என்று தனித்தனியாக -வாஷ்பேசின் முதற்கொண்டு - அனைத்தும் (ப்ளூஸ் பதிவில் பார்த்தோமே) அமைக்கப்பட்டிருக்கும்.அந்த சட்டம் கடுமையாக அமலில் இருந்த மாகாணங்களில் ஜியார்ஜியாவும் ஒன்று. இசை நிகழ்ச்சிகளின் போது கூட வெள்ளையர்களும் - கறுப்பர்களும் தனித்தனியாகவே பிரித்து வைக்கப்பட்டிருப்பர். தனது இசை நிகழ்ச்சிலாவது இது நடக்காது என்று ரே சார்ல்ஸ் நினைத்திருந்தார். கடைசிவரை இந்த நடைமுறையை மாற்ற முடியாது என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். 60களின் ஆரம்பங்களில் தான் ரே மிகவும் புகழடைத் தொடங்கிய காலகட்டம். அவர் கேட்டால் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொட்டிக் கொடுக்க தயாராக இருந்தனர்.இந்நிகழ்ச்சிக்கும் அவ்வாறே கொட்டிக் கொடுத்திருந்தனர். ரே நினைத்திருந்தால் போய் கலந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார். அதையும் மீறி இதுபோன்றதொரு பிரித்து வைக்கபட்ட கூட்டத்தில் அவர் இசைத்திருந்தால் இசையும் அடிப்படையே தகர்ந்திருக்குமல்லவா. ரத்து செய்ததினால், அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கோர்ட் படியேற, தான் வாங்கிய தொகையைப் போல கிட்டத்தட்ட இருமடங்கு தொகையை அவர் நஷ்டஈடாக கொடுக்க வேண்டி வந்தது.இதுகுறித்து அவர் கொஞ்சம் கூட வருந்தவேயில்லை.
இருப்பினும் இந்நிகழ்ச்சி அவர் மனதை அலைகழித்துக் கொண்டே இருந்தது. அதன் காரணமாகவே ஜியார்ஜியா குறித்த இப்பாடலை பதிவு செய்ய விரும்பினார். இது அவரது பாடல் இல்லை. 1930ல் ஹோகி கார்மிக்கேல் மற்றும் ஸ்டுவர்ட் கொரேல் ஆகியோர் இயற்றிய பாடல். இப்பாடலை அடிக்கடி காரில் போகும் போதும் வீட்டிலிருக்கும் போதும் ரே முணுமுணுப்பது வழக்கம். இப்பாடலையே தனது பாணிக்கு தக்கவாறு மாற்றிக கொள்ள தீர்மானித்தார்.பொதுவாக ரேயின் பாடல்கள் 12 - 15 டேக்குகள் வரை எடுப்பது வழக்கம். ஆனால் இந்தப் பாடல் நாலே டேக்கில் முடிந்துவிட்டது.
இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். முதன் முதலில் 30களில் அப்பாடலை இயற்றப்பட்ட போது - ஜியார்ஜியா என்று அவர்கள் மனதில் வைத்து எழுதியது ஒரு பெண்ணைப் பற்றி.
1979. அதே ஜியார்ஜியா மாகாணம். சிவில் உரிமைப் போரின் விளைவாக ஜிம் க்ரோ மாதிரியான விஷயங்களில் ஒழிந்துவிட்ட நேரம். தனது மாகாணத்தில் இதுபோன்றதொரு சட்டம் இருந்ததே என்பதற்கு வருந்தியும் இந்த பாடலினால் ஈர்க்கப்பட்டும் 'Georgia on my mind' பாடலை தனது மாகாணத்தின் பாடலாக - ரே சார்ல்ஸின் முன்னிலையிலேயே - ஜியார்ஜியா அரசாங்கம் அறிவித்தது (நமது தமிழ்த்தாய் வாழ்த்து மாதிரி). 60க்கு பிறகு ரே அன்று தான் ஜியார்ஜியாவிற்கே செல்கிறார்.தனது வாழ்வில் உன்னதமான தருணங்களில் ஒன்று என்று இந்நிகழ்ச்சியை அவர் குறிப்பிடுகிறார்.
My version of Georgia became the state song of Georgia. That was a big thing for me, man. It really touched me. Here is a state that used to lynch people like me suddenly declaring my version of a song as its state song. That is touching.
Georgia, Georgia,
The whole day through
Just an old sweet song
Keeps Georgia on my mind
I'm say Georgia
Georgia
A song of you
Comes as sweet and clear
As moonlight through the pines
Other arms reach out to me
Other eyes smile tenderly
Still in peaceful dreams I see
The road leads back to you
I said Georgia,
Ooh Georgia, no peace I find
Just an old sweet song
Keeps Georgia on my mind
Other arms reach out to me
Other eyes smile tenderly
Still in peaceful dreams I see
The road leads back to you
Georgia,
Georgia,
No peace, no peace I find
Just this old, sweet song
Keeps Georgia on my mind
I said just an old sweet song,
Keeps Georgia on my mind
ரே சார்ல்ஸ் - என்னவொரு மனிதர்.என் வாழ்வே எனது செய்தி என்று காந்தி கூறியது போல இவர் வாழ்வு நம் அனைவருக்கும் ஒரு உந்துசக்தி.தான் சம்பாதித்தவைகளை பெருமளவில் நன்கொடையாகவே பல்வேறு விஷயங்களுக்குக் கொடுத்தவர்.அவர் பியானோவின் முன்னமர்ந்து குழந்தை போல மிதமிஞ்சிய குதூகலத்துடன் இசையமைப்பதைக் பார்ப்பதே ஒரு கண்கொள்ளக் காட்சி. இவரது கதை தான் Ray என்ற பெயரில் ஜேமி ஃபாக்ஸ் ரேயாக நடிக்க, 2004ல் வெளிவந்தது. 14 மணிநேரம் கண்ணில் லென்ஸ் அணிந்துகொண்டு ரேயாகவே ஜேமி அப்படத்தில் உருமாறி இருப்பார் (இதுவொரு க்ளீஷேவான வார்த்தையாக போய்விட்டது.கேரேக்டராக வாழ்ந்திருப்பார் என்று சொல்வது. அதுபோல இதையும் நினைக்க வேண்டாம்). இப்படத்தைப் பார்க்காதவர்கள் ஒருமுறையேனும் அப்படத்தை பார்க்க வேண்டுகிறேன். ரே சார்லஸ் பற்றி தனியாகவே விரிவாக எழுத நினைத்திருப்பதால் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்.
I'm not into the money thing. You can only sleep in one bed at a time. You can only eat one meal at a time, or be in one car at a time. So I don't have to have millions of dollars to be happy. All I need are clothes on my back, a decent meal, and a little loving when I feel like it. That's the bottom line.
இந்தப் பாடலும் அப்படியே Georgia on my mind போலத்தான்.டெல்லியை மனதில் வைத்துப் பாடியது. ஆனால் கேட்பவர்கள் மனநிலையைப் பொறுத்து யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் கண்முன் நிறுத்தும்.
இரண்டு - மூன்று மாதங்கள் முன்னர், NDTV பேட்டி ஒன்றில் பிரணாய் ராய் நிகழ்ச்சியின் முடிவில் ரஹ்மானிடம் "any other thing that u would like to play that defines rahman, his music..anything if u want to play..." என்று கேட்ட பொழுது சற்றும் யோசிக்காமல் ரஹ்மான் தனது வசீகரக் குரலில் இந்தப் பாடலையேப் பாடுவார். இசையைக் கடந்த பாடல்களில் ஒன்றாக இது எனக்குத் தோன்றும்.பின்னணி இசை எதுவும் இல்லாவிட்டாலும் கூட கேட்பவர்களை என்னவோ செய்யவல்லது.
ரஹ்மானின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று இசைக் கோர்ப்பு - ஆர்க்கெஸ்ட்ரேஷன். மிக அலாதியான புதிய வகையான வெவ்வேறு லேயர்களில் நுணுக்கமானதாக பல இசைக் கோர்ப்புகள் அமைந்திருக்கும். நான் கேட்ட வரையில் ரஹ்மான் தான் இவ்விஷயத்தில் எனக்கு மிகப்பிடித்தவர்.அவரால் கடினமான ஆர்க்கெஸ்ட்ரேஷகளையும் கையாள முடியும். Rockstarல் வரும் Hawa Hawa பாடல் போல. அக்கார்டியன் + வயலின் + கிடார் என்று அப்பாடல் பல தளங்களில் மிக அசாதாரணமாக பயணிக்கும்.
அதற்கு நேரெதிராக இப்பாடலில் Continuum Fingerboard + Bass guitar + Keyborad என்று வெகு குறைவான ஆர்கெஸ்ட்ரேஷன்.ஆனாலும் கூட என்னவொரு இசை. டாலியின் சர்ரியலிச ஓவியம் சட்டென்று இசைக் கோர்ப்பாக உருமாறியதைப் போல.
![]() |
Jama Masjid: Delhi (Image src: Marcoryanphotography.com) |
Stay..........
Just...stay, as you are
A little pain, a little comfort
Just stay, stay as you are
A gentle breeze, a stormy obsession
A bit silky, my beloved; a little rough too
Stubborn at times, you quarrel or fill with fragrance
Wouldn't want to change you, not even a little
Without adornment, without impurity, no more, no less
I like you, just as you are
In your rainfall, I want to soak and dissolve
In your flame, I want to burn and turn to ash
If you torment me
You soothe me too
I find love in that wounds too
O..........Sea of love...
Let me drown in you
Just stay, stay as you are
If we are to travel hand in hand
How can our right hands together?
We have to walk holding hands
How can we hold our right hands together?
One would be right, one would be left
Take my hand, hold my hand
We have to travel together, so hold my hand
கடைசி மூன்று நிமிடம் ரஹ்மான் வாசிக்கிற - Continuum Fingerboard, உலகளவில் வெகு சிலபேருக்கே மிகச் சரியாக, கவனிக்கவும் - மிகச் சரியாக வாசிக்கத் தெரியும். உலகளவில் John Williams, Led Zeppelin's Paul Jones மாதிரியான ஆட்கள் இதை பயன்படுத்தி உள்ளனர்.இந்த Fingerboardன் தனித்துவமே, இதுவொரு முப்பரிமாண(3D) இசைக் கருவி.வழக்கமான கீபோர்ட் கீக்களுக்குப் பதில் டச் கீ வகையிலயே இருக்கும். சரி, அதென்ன இசைக் கருவியில் முப்பரிமாணம். X,Y axis போக மூன்றாவதாக, Z axisலையும் - அழுத்தத்துக்கு(Pressure) ஏற்ப, இசை வெளிப்படுமாம். இந்த வீடியோ மேலதிக தகவல்களையும் புரிதல்களையும் தரும் என்று நம்புகிறேன்.
- Ray படத்தில் ஜியார்ஜியா மாகாணத்தில் அந்நிகழ்ச்சியில் ரே கலந்து கொள்ளாமல் இருக்க முடிவெடுத்த பிறகு அவருக்கு அம்மாகாணம் தடை விதித்ததாகவும் பின்னர் அதற்காக 1979ன் மன்னிப்பு கேட்டதாகவும் காண்பித்திருப்பர். ஆனால், நிஜத்தில் தடை எல்லாம் விதிக்கப்படவில்லை. 1979ல் அதிகாரப்பூர்வ பாடலாக அதனை அறிவிக்கும் நிகழ்ச்சியில் ஜிம் க்ரோ போன்ற கொடூர வழக்கங்கள் அந்த மாகாணத்தில் இருந்தமைக்காக வருத்தம் தெரிவித்தனர். அவ்வளவே.
- இதில் Rehna Tu குறித்த விஷயங்கள் நான் ஏற்கனவே G+லிலும் Facebookலிலும் எழுதியது. மொழிபெயர்ப்பு, சில தளங்களில் இருந்து எடுத்து சில வார்த்தைகளை மட்டும் எனது விருப்பத்திற்கு மாற்றியிருக்கிறேன்.
- திடீரென்று தான் இந்த இருபாடல்களுக்கான இந்த ஒப்புமை பதிவு தோன்றியது. Georgia பாடலைக் கேட்டுக கொண்டிருந்தேன்.சட்டென்று முந்தாநாள் இது தோன்றியது.அவ்வளவே.
சொல்ல மறந்தது:
Kanye Westம் Jamie Foxxம் சேர்ந்து ரேவின் "I got a woman" பாடலை அடிப்படையாக வைத்து பாடிய இந்த ஹிப் - ஹாப் பாடல், one of my most favourite hip - hop songs. அசரடிக்கும் பீட். முடிந்தால் ஒரிஜினல் ரே பாடிய I got a womanயும் கேட்டுப் பாருங்கள்.
என்ன ஒரு coincidence ... இப்பொழுது தான் ஒரு நண்பனின் வீட்டில் Ray Charles, Led Zeppelin, Terry Reid போன்றவர்களைப் பற்றி கேள்விப்பட்டு அவர்களைப் பற்றி சற்று ஆராய்வோம் என வந்தால், Ray Charles பற்றி ஒரு அருமையான ஒரு பதிவிட்டிருக்கிறீர்கள்.
ReplyDeleteஇரு பாடல்களும் மிகவும் அற்புதம், அதிலும் Still in peaceful dreams I see
The road leads back to you வரி பிடித்திருக்கிறது. கேட்க கேட்க மனது இலேசாகிவிடுவது போல இருக்கிறது.
மிகவும் நன்றி.
@ஹாலிவுட்ரசிகன்
ReplyDeleteஓ..க்ரேட்............பதிவ படிக்கிறது விட - அத ரசிச்சு கேட்டிருக்கீங்க பாருங்க....செம போங்க........
இன்னொரு விளம்பரம்...Led Zeppelin பத்தி நா கூட ஒரு பதிவு எழுதிருக்கேன்....
நிறைய புது ஆளுங்களையும் புது இசைகளையும் அறிமுகப்படுத்திறீங்க..
ReplyDelete@ எஸ்.கே
ReplyDeleteயாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்...
ரெண்டு பாட்டும் கேட்டீங்களா ? ரெஹ்னா தூ ஏற்கனவே கேட்டிருப்பீங்கனு நெனைக்கிறேன்...
கேட்டேன்..நல்லா இருந்தது.. இந்த மாதிரி மியூசிக்லாம் அமைதியான நேரத்தில் அப்படியே ஹெட்போன் மாட்டிகிட்டு கண்ணை மூடிக்கிட்டு ரசிக்கனும்:-)
ReplyDeleteநீரே ரசிகன்...............
ReplyDeleteஅப்பறம், உங்க நண்பர் பாலா கூட பேசினீங்களா ?
இல்லையே:-( அவர் நம்பர் தெரியலை. என் நம்பர் மெயில் பண்ணேன்...
ReplyDeleteஅடடா.........இருங்க உங்களுக்கு மெசேஜ் பண்றேன்........
ReplyDeleteரே சார்லஸை இன்ஸ்பிரேஷனாகக் கொண்டு பசுபதி ஒரு கேரக்டர் செய்திருப்பார்..சேரன் படம் என்று நினைக்கிறேன்!
ReplyDeleteஅருமையான அலசல்!
@Rettaival
ReplyDeleteராமன் தேடிய சீதை தான....பசுபதி தனக்கு வர்றத ஒழுங்கா செஞ்சிருந்தாருனு தோணுச்சு...
சூப்பர் பதிவு. தகவல் களஞ்சியம் என்றுகூட உங்களை சொல்லலாம்.
ReplyDeleteசாவி யின் தமிழ் சினிமா உலகம்.
மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!
ஹாய் கொழந்த நண்பா.. எனக்கு சமீபத்துல லீப்ஸ்டர் ப்ளாக் அவார்டன்னு ஒரு விருது கிடைத்தது. இந்த விருதின் விதிமுறைப்படி எனக்கு பிடித்த 5 இளம்பதிவர்களுக்கு விருது அளிக்கனுமாம்..
ReplyDeleteஅந்த வரிசையில உங்களுக்கும் இந்த விருதை அளிக்கின்றேன். மேலதிக விவரங்களுக்கு -http://www.cinemajz.blogspot.com/2012/02/blog-post.html