Wednesday, December 14, 2011

சாத்தானின் இசை: 4 - தாக்கமும், சில அடிப்படைகளும்

இதுவரை, இந்தத் தொடரை பொறுத்தவரை, ப்ளூஸ் இசை நுணுக்கம் என்ற அடிப்படையில் டெக்னிகலாக நாம் எதையும் பார்க்கவில்லை. முதல்முறையாக அதன் முக்கிய கட்டமைப்பு ஒன்றைப் பற்றிப் பார்க்கலாம்.

12 Bar Blues: 
ஏன் குறிப்பாக இந்த ஒரு நுணுக்கம் குறித்து சொல்ல நினைக்கிறேன் என்றால், ஜாஸ் இசை முதற்கொண்டு பல இசை வடிவங்களில் இந்த 12 bar ப்ளூஸின் தாக்கம் மிக அதிகம். தவிர,ப்ளூஸின் மிக மிக அடிப்படையான இசை கட்டமைப்பில் இதுவே முதன்மையானது. மேற்கொண்டு இதை தொடரும் முன்னர், கிடார் குறித்த சில அடிப்படையான விஷயங்களைப் பார்ப்போம்.

கிடாரில் ஸ்ட்ரம்.........ம்ம்ம்......மீட்டல் என்று சொல்லலாமா, அதில் மிக அடிப்படையானது, 4/4 Strumming. அதாவது 1 - 2 - 3 - 4......1 - 2 - 3 - 4 என்ற வகையில் இருக்கும். இந்த நாலு ஸ்ட்ரம்களை ஒன்றாக ஒரு பார் (bar) என்றழைப்பர்.


கிடாரில் எத்தனை ஸ்ட்ரிங்ஸ் (நரம்புகள்) இருக்கும் ? நாலு முதல் - பதினெட்டு வரை இருக்கும். இந்த ஸ்ட்ரிங்ஸ்களில், உதாரணமாக 1-2-3-4 என்று ஸ்ட்ரமிங் செய்வார்கள். இதற்கு பெயர் கார்ட் (Chord). அதை எந்த ஸ்ட்ரிங்கில்மீட்டுவார்கள் என்பதைப் பொறுத்து 1st Chord, 3rd Chord, 5th Chord என்று கூறுவர். ப்ளூசை பொறுத்தவரை 5th Chord அதிகளவில் பயன்படுத்தப்படுவது. இதற்கு மற்றொரு பெயர் Power Chord. அந்தளவுக்கு வீரியமாக இருக்கும்.


இதை கேட்டு விடுங்கள்.கேட்டுவிட்டால், பின் நான் எதுவும் சொல்லத் தேவையில்லை.சுலபமாக புரிந்துவிடும்.இந்த நுணுக்கம் புரிந்துவிட்டால், இன்னும் நன்றாக - ப்ளூசை மட்டுமன்றி பிறவகை இசைகளையும் ரசிக்க முடியும்.



  • ஒரு நொடி இடைவேளையில் 1 - 2 - 3 - 4 .......திரும்ப 1 - 2 - 3 -4 என்று எண்ணுங்கள். நீங்கள் பனிரெண்டு தடவை எண்ணியிருப்பீர்கள். பாடலும் முடிவுற்றிருக்கும்.சரிதானே ?
  • இப்போது மறுபடியும் அதேபோல், ஆனால் இந்தமுறை கவனமாக அந்த நோட்களை கவனியுங்கள். 
  • 1 bar (அதாவது, முதல் 1 - 2 - 3 - 4) ஒரு மாதிரி ஒலிக்கிறதா....ஆனால் அடுத்த பார்(2nd bar) நோட் மாறியிருக்கும். நீங்களே கவனித்தீர்கள் என்றால் சுலபமாக புரியும். 
  • தொடர்ந்து ரெண்டு வகையான நோட்களே ஒலித்துக் கொண்டிருக்கும். ஆனால், முற்றிலும் புதிய நோட் ஒன்று 9 பாரில் ஒலிக்கும். இந்த 9th bar வேற்றுமை தான் மொத்த 12 - bar ப்ளூஸின் சிறப்பு.
இதனை புரிந்து கொள்ள மிகச் சிறந்ததொரு உதாரணம்.......Elmore jamesஇன் Dust my broom என்ற மிகப் புகழ் பெற்ற ஒரு பாடல்.....



சுடப்பட்டது: http://www.pbs.org/theblues/classroom/essays12bar.html 


---------------------------------------------------------------

ப்ளூஸ் இசை என்பது ஒரு State of mind. இந்த சொற்கள் மிகமிக முக்கியம். ஏனென்றால் பின்னாட்களில் ப்ளூஸில் இருந்து நேரடியாக கிளர்த்தேழுந்த இசை வகைகளையும் அதன் தாக்கங்கள் இருந்த இசை வகைகளையும் புரிந்து கொள்ள அடிப்படை இதுதான்.

இந்த சார்ட் நான் தயாரித்ததே.சுலபமாக புரிந்து கொள்ளக்கூடிய வகையில் இருக்கும் என்று நம்புகிறேன்.இதிலிருக்கும் ஆண்டுகள், அந்தந்த இசை வகைகள் சீராக வளர ஆரம்பித்த வருடங்கள். க்ளிக் செய்து முழு அளவில் பார்த்தால் தெளிவாக இருக்கும். ஏதாவது சந்தேகம் இருப்பின், பின்னுட்டத்தில் தெரியப்படுத்தினால் நலம்.


ராக் n ரோல்:
மட்டி வாட்டர்ஸின் (Muddy waters, புகழ் பெற்ற ப்ளூஸ் கலைஞர்) பாடல் ஒன்று உண்டு. “The blues had a baby and they named it Rock & Roll”. முற்றிலும் உண்மை. இரண்டாம் உலகப் போர் முடிந்த சமயம்.அழுத்தமான சூழ்நிலைகளில் இருந்து எப்படியாவது விடுபட்டால் போதும் என்ற நிலையில் மக்கள் இருந்தனர்.நான்கு ஆண்டுகள் குடும்பத்தை விட்டு பிரிந்திருந்த ராணுவ வீரர்கள் வீடு திரும்ப ஆரம்பித்தனர்(இனிவரும் நாலைந்து வாக்கியங்களை நன்றாக கவனியுங்கள்).சட்டென்று மக்கள் தொகை பெருக ஆரம்பித்தது.இதனை Post World War Baby Boom என்றே அழைக்கின்றனர்.இந்த காலகட்டத்தில்(40'கள்) பிறந்த குழந்தைகளுக்கு 60களில் 18 - 20 வயதிருந்திருக்குமா? இந்த தலைமுறைதான் ராக் இசையை கொண்டு வந்தது.யோசித்துப் பாருங்கள்.தொடர்ந்து சிறுவயது முதல் ப்ளூஸ் போன்ற அட்டகாசமான தாளகட்டு கொண்ட இசை கேட்டு வளர்ந்தால் பின்னாட்களில் அவர்களின் நடவடிக்கைகளிலும் அது எதிரொலிக்குமல்லவா....அதுதான் நடந்தது.Led Zeppelin, Jimi Hendrix என்று பின்னாளில் ராக் இசையை புரட்டிப் போட்ட அனைவரும் ப்ளூஸில் இருந்தே தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர்.அவ்வளவு ஏன்,Rolling Stoneஸ் கூட ஆரம்பத்தில் பிறரது ப்ளூஸ் பாடல்களை மேடையில் பாடும் குழுவாகத்தான் தங்களுது பயணத்தை ஆரம்பித்தனர். எல்விஸின் பல பாடல்களில் அந்த காலகட்டத்தின் ப்ளூஸ் பாடல்களின் தாக்கத்தைக்(அல்லது தழுவலை) காணலாம். ஆக, ப்ளூஸ் நேரடியாக ராக் n ரோல்க்கும் மறைமுகமாக அதேசமயம் ஒரு அழுத்தமான காரணியாக ராக் இசைக்கும் காரணமாயிருந்திருக்கிறது.

ரிதம் & ப்ளூஸ்(R & B): 
ப்ளூஸ் இசையில் சர்ச் மியூசிகின்(Gospel Music) தாக்கம் குறித்து ஏற்கனவே பார்த்திருக்கிறோம். ப்ளூஸ் + ஜாஸ் + காஸ்பல், இம்மூன்று இசை வடிவங்களின் கூட்டுக் கலவையாக உருவானதே R & B என்ற இசை வடிவமாகும்.காஸ்பல் இசை, அதன் துள்ளலான தாளத்திற்குப் பெயர் போனது.அதன் நேரடியான தாக்கத்தை நாம் R&B இசையில் கேட்கலாம். மேலும் ப்ளூஸ் மற்றும் ஜாஸின் அற்புதமான லயமும் சேர்ந்தே இவ்விசை உருவானது.மற்றொரு காரணத்திற்க்காகவும் R&;B மிக முக்கியாமனது. இவ்விசை, ஒரு சீரான வளர்ச்சியை அடைந்த பிறகு காஸ்பலுடன் சேர்ந்து Soul Musicகிற்கும், ஜாஸுடன் சேர்ந்து Funk Musicகிற்கும் வழிகோலியது. 


ஹிப்-ஹாப்: 
“Blues is a state of mind”, இந்த வாக்கியத்தை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள். ஹிப் – ஹாப்பை பொறுத்தவரை, அதை விவரிக்க வேறு சிறந்ததொரு வாக்கியம் இருக்க முடியாது.இது ராக் n ரோல் போல நேரடியாக ப்ளூஸில் இருந்து பிறக்காவிட்டாலும், ப்ளூஸ் மற்றும் அதன் கிளை இசை வடிவங்களின் தாக்கம் மிகமிக அதிகம்.அதிலும் குறிப்பாக Soul இசையின் பங்கு மிக முக்கியமானது. ஜேம்ஸ் ப்ரௌனின் (Godfather of Soul) பங்கும் இதில் குறிப்பிடத்தக்க வேண்டிய ஒன்று. ஹிப்-ஹாப் மற்றும் அதன் இரட்டையரான ராப் குறித்தும் தனியாக பதிவெழுதும்(??) உத்தேசம் இருப்பதால்....இத்துடன் முடித்துக் கொள்கிறேன். 

ஜாஸ்: 

ஜாஸ் – ப்ளூஸ், இரண்டும் சிலகாலங்கள் வரை ஒன்றையொன்று பற்றிப்படர்ந்தே வளர்ந்தது. ஆனால் ஜாஸின் ஆரம்பகாலங்களில் ப்ளூஸ் மிகப்பெரும் பங்காற்றியது என்பதே உண்மை.மிகமுக்கியமாக, இப்பதிவின் ஆரம்பத்தில் பார்த்தோம் அல்லவா, 12 – bar blues, ஜாஸில் கூட இது மிக முக்கியமானதொரு கட்டமைப்பு.1930கள் வரை, இரண்டு இசை வகைகளும் பெரும்பாலும் ஒன்று போலவே இருந்துவந்துள்ளது. மாறி மாறி பல நுணுக்கங்களை ஒன்றுடன் ஒன்று பரிமாறிக் கொண்டுள்ளன. 40களில் இருந்து ஒரு தெளிவான வேறுபாட்டுடன் பயணிக்க ஆரம்பித்தன.ப்ளூசை பொறுத்தவரையில், பாடல்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கும். ஆனால், ஜாஸில் வாத்தியங்களுக்கே முக்கியத்துவம் இருக்கும். சற்றே கடினமான இசைக் கோர்ப்புகளை தன்னகத்தே கொண்டது ஜாஸ்.அந்த காலகட்டம் முதல் ஜாஸ் தொடர்ந்து வளர்ந்து வந்தாலும், ப்ளூஸ் 60களில் அதன் முக்கியத்துவத்தை இழக்க ஆரம்பித்தது.ராக் போன்ற பல்வேறு இசை வகைகளின் வளர்ச்சியும் ஒரு காரணம்.மேலும், கறுப்பின மக்கள் இப்பாடல்களை ஒருவித புலம்பல்களாக கருத ஆரம்பித்தனர்.இதிலொரு முரணாக, சில காலங்கள் கழித்து வெள்ளையர்கள் இந்த இசை வகையின்பால் பெருமளவில் ஈர்க்கப்பட்டு மீண்டும் செழிப்புற வளர ஆரம்பித்தது. 

ப்ளூஸ் இசையின் தாக்கத்தை வெறும் மற்ற இசை வகைகளின் தோற்றத்திற்கு காரணமான ஒன்று என்ற அளவில் மட்டும் முடித்துவிட இயலாது.வெள்ளையர்கள் – கறுப்பினத்தவர்களுக்கான ஒரு பாலமாகவும் 50 – 60களில் ஆப்பரிக்க இசைகள் இருந்து வந்தது.அமெரிக்க நடுத்தர – அடித்தட்டு மக்களின், எந்த நாடாக – நிறமாக – புலம்பெயர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு ஒரு வடிகாலாகவும் பொழுதை கழிப்பதற்கும் தங்களது ஆற்றாமையை வெளிப்படுத்தவும் இவ்வகை இசைகளைப் பார்த்தனர்.கிளப்களில் விரும்பி இசைக்கப்படும் இசையாக மாறிப்போனது.அதேசமயம் மேல்மட்ட மக்கள், ஐரோப்பிய இசை வகைகளிலேயே நாட்டம் கொண்டிருந்தனர்.கருப்பின மக்களின் இசையை ஒரு சாரர் அசூயையுடனே அணுகி வந்தனர்.ஆனால், காலப்போக்கில் இந்த நிலை மாறி - இந்த ஜாஸும் ப்ளூஸும் மிக முக்கியமானதொரு இடத்தில இருக்கின்றன.எங்கிருந்து இந்த இசை வந்ததோ, எத்தகைய மக்களின் இசையாக உருவேடுத்ததோ அந்த நோக்கத்தையே புரிந்து கொள்ளாமல் நம் நாட்டில் ப்ளூஸ் - ஜாஸ் இரண்டையும் மாட்சிமை தாங்கிய மக்களுக்குரிய இசையாக கருதும்படி செய்து விட்டனர். நமது நாட்டுப்புற இசையை ரசிக்கும் மனநிலை இருந்தால் நிச்சயம் இவ்வகை இசைகளை வெகுவாக ரசிக்க முடியும் என்பது என் கருத்து.
Facebookers..

14 comments :

  1. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இதை ஒரு ஆறு மாதத்திற்கு பிறகு வந்து படித்தால் புரியுமென்று நினைக்கிறன்

    ReplyDelete
  4. யோவ்.........

    இதுல புரியாம போறதுக்கு ஒண்ணுமேயில்ல......... கொஞ்சம் ஈடுபாட்டோட படிச்சா எல்லாம் புரியும்............என்னமோ போங்க...........

    வருகைக்கும் ஆழ்ந்த கருத்திற்கும் நன்றி.............

    ReplyDelete
  5. நான் இன்னும் படிக்கவே இல்லையே

    ReplyDelete
  6. அருமை....கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக......

    ReplyDelete
  7. அந்த PIC மேட்டர் நல்லா புரியுது ......... ஏதும் மாத்த வேணாம்

    ReplyDelete
  8. இசைதேவன் பீத்தோன்(கொளந்த) வாழ்க வாழ்க...:))

    கிட்டார் வாங்கி கொஞ்ச நாள் கிளாஸ்க்கு போனேன்.... அதோட சரி.... அந்த கிட்டார் அப்படியே ஒரு முலைல கிடக்குது.... உங்கள் பதிவு என்னை வாசிக்க துண்டுகிறது...:)))

    ReplyDelete
  9. கொழந்த ரொம்ப டெக்னிக்கலா இருக்கு அதே சமயம் புரியற மாறியும் இருக்கு.... இப்ப ஒரு பாடல கேக்கும்போது அது ப்ளூஸ் வகையா, இல்ல ஜாஸ் வகையா, ராக்கா, R & B யானு எப்படி கண்டு பிடிக்குறது...??? நீங்கள சொன்ன ஜாஸ் மற்றும் ப்ளூஸ் வித்தியாசம் புரியுது... பாடல்கள் மற்றும் இசை கோர்வை வச்சு வித்தியாசம் கண்டு பிடிக்குறது... ஆனா மத்தது எல்லாம் எப்படி கண்டு பிடிக்குறது..... ????

    ReplyDelete
  10. இந்த Grunge லாம் எந்த வகைய சார்ந்தது.... southern hip hop க்கும் northern hip hop க்கும் என்ன வித்தியாசம் ???

    ReplyDelete
  11. ரொம்ப நல்லா இருந்தது. இப்பதான் படிக்கிறேன். நான் ஒரு காலத்துல ஒரு மாசம் கிதார் கிளாஸ் போனேன் (சென்னையில் இருந்தப்ப). அப்போ வாசிச்ச அனுபவங்கள் எல்லாம் நினைவு வருது :-) . இன்னிக்கி நைட்டு விரிவா இங்க வரேன்.

    ReplyDelete
  12. அப்பப்ப blog hang ஆவுது. கவனிக்கவும்

    ReplyDelete
  13. @டெனிம்...

    உங்களுக்கு படம் காமிச்சாதான் நல்லா புரியுமே...


    @பிரதாப்.......
    கிடார் தப்பியது.......கடவுள் இருக்கான் கொமாரு.....


    @கருந்தேள்...........
    நீங்க கிடார் ஸ்ட்ரிங்களில் எல்லாம் வல்லவராமே.....


    @முரளி.....
    கேக்க கேக்க எல்லாம் புரியும்........நாலு பதிவல எழுத வேண்டியது கேள்வியா கேட்டா என்ன செய்ய ??? :)

    பொறுமை....வேற ஒண்ணு தயாராகுது...
    (ஆனா...ஹிப் - ஹாப் வித்தியாசம் கேட்டீங்க பாருங்க....அங்க நிக்குறீங்க.......)

    ReplyDelete
  14. ப்ளாக்....ஹேங் ஆகுதா ??? எனக்கு ஒண்ணும் தெரியல...இருந்தாலும் செக் பண்றேன்.....டெம்ப்ளேட் வேற மாத்தணும்.....

    ReplyDelete