பதினாறாம் நூற்றாண்டின் ஆரம்பம். தென் அட்லாண்டிக் கடல் பகுதி. இரவு நேரம். அடிமைகளின் கப்பல் ஒன்று கடலை கிழித்துக்கொண்டு அமெரிக்கப் பகுதிகளை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. ஒரு அடிமை மற்றொரு அடிமையின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறான். கை – கால் விலங்குகளினால் ஏற்பட்ட காயங்களையும் மீறி கழுத்தை நெறிப்பது சிரமமாகவே இருக்கிறது. நெறிபடுபவனிடம் ஒரு எதிர்ப்பும் இல்லை. ஏனென்றால் நெறிக்கச் சொன்னதே அவன்தானே. ஏன் ? தான் இறந்தால் மட்டுமே இந்த அவல சூழ்நிலையில் இருந்து விடுபட்டு மறுபடியும் தனது நாட்டிற்க்கும் வீட்டிற்கும் சென்று சேர முடியும் என்ற உறுதியான – குழைந்தைத்தனமான நம்பிக்கை. இயற்கையோட இயைந்த அவர்கள் மனது பின் எவ்வாறு சிந்திக்கும். வெற்றிகரமாக இறந்தும் விடுகிறான். சற்று நேரங்கழித்து காவலாளி ஒருவன் உள்ளே வர, இறந்தவனின் உடலைக் காண நேரிடுகிறது. உடலை எடுத்து கடலில் வீசினானா? அதான் இல்லை. நீண்ட கத்தி; ஒரே வெட்டு: தலை வேறு – உடல் வேறாக. தற்கொலை செய்து வீடு போய் சேரலாம் என்று நினைத்தால் அதைக் கூட நடக்க விட மாட்டோம் என்ற கொடூரமான புத்தி.
ஆப்ரிக்க அடிமை முறை:
இந்த அடிமை முறை ஆதிகாலம் தொட்டே – எகிப்தியர்களால் திறம்பட தொடங்கிவைக்கப்பட்டது.பின் எட்டாம் நூற்றாண்டில் "மூர்ஸ்” என்றழைக்கபட்ட வட-ஆப்ரிக்காவைச் சேர்ந்த முஸ்லிம்கள் ஸ்பெயின & போர்ச்சுகல் பகுதிகளை கைபற்றிய போது மீண்டும் அந்த பகுதிகளில் அடிமை முறை செழிப்படையத் தொடங்கியது. அதற்கு முன்னரே, பல நூற்றாண்டுகளாக “அரேபிய அடிமை வணிகமுறை” உலகளவில் மிக பிரபலமாக நடைமுறையில் இருந்ததை கவனத்தில் கொள்க.
1492ஆம் ஆண்டு கிறிஸ்தவ படைகள் – யாரின் தலைமையில் என்று உங்களுக்கே தெரியும் – ஏற்கனவே ஸ்பானிய படைகள் கைப்பற்றியிருந்த க்ரானடா போன்ற பகுதிகளுடன் சேர்த்து, புதிதாக மேற்கிந்திய பகுதிகளையும் கைப்பற்றியது. அதற்கப்பிறகு உலக வரலாறே மாறியது என்று சொன்னால் அது மிகையில்லை. ஏனென்றால் இந்த கடல் பயணம் கொடுத்த தைரியமும், மிதமிஞ்சிய லாபமும் புதிய நாடுகளை நோக்கி ஐரோப்பியர்களை வெறிகொண்ட குதிரைகள் போல ஓடச் சொன்னது. சேனமில்லாமல் குதிரைகளா......இந்த ஐரோப்பிய குதிரைகளின் சேனம் – மதம். இந்த அனைத்து படையெடுப்புகளிலும் மதம் மிகப்பெரிய பங்காற்றியது.
இவ்வாறு பல புதிய நாடுகளை பிடித்தாயிற்று. குறிப்பாக, ஆப்ரிக்க நாடுகளை.அதன் அற்புதமான வளங்களையும் இயற்கை செல்வங்களையும் பல முக்கிய பொருட்களையும் சுரண்டியாயிற்று. சுரண்டப்பட்ட அனைத்தையும் தத்தமது நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும், அவரவர் நாட்டில் ஏற்றுமதி செய்யபட்ட பொருட்களையும் பிற வசதிகளையும் வைத்து - புதிதாக தொடங்கப்பட்ட தொழில்களில், உதராணமாக சுரங்கம், கடும் வயல் வேலைகள், கட்டுமான பணிகள் போன்ற தொழில்களில் வேலை செய்வதற்குரிய ஆட்களை எங்கே பிடிப்பது? அவரவர் நாட்டில் மிக சொற்ப அளவிலேயே ஆட்கள் கிடைத்தனர்.ஐரோப்பியர்களுக்கோ இதுபோன்ற கடுமையான காலநிலை நிலவும் இடங்களில் வேலை செய்து பழக்கம் இல்லை.என்ன செய்வது? யோசித்தனர்..........இதுவரை ஆப்ரிக்க நாடுகளில் இருந்து பல வகை பொருட்களை எடுத்து வந்தாகிவிட்டது.வேறு என்ன அங்கிருந்து எடுக்க முடியும் ? அபரிதமாக அங்கிருக்கும் மனித வளங்கள் தான் அவர்கள் கண்ணில்பட்டது. திடகாத்திரமான உடல். எதை சொன்னாலும் நம்பிவிடும் அறியாமை.இயற்கையோட ஒன்றி வாழ்ந்தாலும் அதன் சில விஷயங்களின் மீது பயம். இதுபோதாதா....
நியூ வேல்ட்(New World) பகுதிகள் என்றழைக்கபட்ட அமெரிக்க பகுதிகளை நோக்கியே பெரும்பாலான கடல் வழி அடிமை வியாபரம் அமைந்திருந்தது. முக்கோண வணிகம்(Triangle Trade) என்ற வியாபார முறை தொடங்கிற்று. கீழுள்ள படத்தைப் பார்த்தாலே நான் சொல்ல வந்துது மிகச் சுலபமாகப் புரியும்.
செனகல் போன்ற ஆப்ரிக்க கடல் பகுதிகளில் இந்த அடிமை வணிகத்திற்க்காகவே ஒன்றல்ல....ரெண்டல்ல.......அறுபது சந்தைகள் நிறுவப்பட்டன. சந்தைகளுக்கு மக்களை எங்கிருந்து பிடித்து வந்தனர்?. அனைவரையும் ஆப்ரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்துதான். ஆயிரக்கணக்கான மக்களை எவ்வாறு “அழைத்து” வந்தனர்? கை விலங்கிட்டு நடைபயணமாகவே. 1000 மையில் தூரத்தை கூட நடந்தே கடந்து வந்தனர்.மிக கடுமையான பாதைகளில் இந்த கொடுமையான பயணத்தினாலேயே பாதிபேர் உயிரிழந்து விடுவர்.இந்த பயணமே சில சமயம் மாதக்கணக்கில் ஆகும். உயிர் பிழைத்திருப்பவர்களை மாட்டுக் கொட்டடி போன்ற சந்தைகளில் அடைத்து வைத்திருந்தனர்.
கடல் பயணம்:
கப்பல்,படகு என்றெல்லாம் அழைக்கவே தகுதியற்ற வஸ்துக்களில் தான் அனைவருக்கும் அமேரிக்கா போன்ற நாட்டை நோக்கி பயணம். கப்பலின் அமைப்பு எவ்வாறு இருக்கும்? கீழுள்ள படத்தைப் பாருங்கள்.
ஒருவரோடு ஒருவர் கை – கால்களுடன் சேர்த்து விலங்கிடப்பட்டு, ஒருவரின் மூச்சுக்காற்று மற்றவரின் பிடறி மயிரின் மேல்பட்டு வெளியேற முடியாமல் தவிக்கும் அளவுக்கு நெருக்கமான சூழ்நிலை.தனது மலஜலம் - ரத்தம், எது பிறரின் மலஜலம் - ரத்தம் எது என்று பிரித்தறிய முடியாத இடப்பற்றாக்குறை.இந்த அவலம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றவர்கள் அநேகம்.அவல சூழ்நிலையின் தாக்கத்தால் சின்னம்மை, கொடுங்காய்ச்சல் போன்ற நோய்களால் இறந்தவர்களும் அநேகம். குறைந்தபட்சம் இருபது நாட்கள் முதல் மாதக்கணக்கில் இந்தக் கொடூரமான பிரயாணம் நீளும்.

சில விவரங்கள்.
1.இந்த வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்ட நாடுகள் – இங்கிலாந்து,ஸ்பெயின,போர்ச்சுகல்,பிரான்ஸ்,நெதர்லாந்து
2. 16 – 18ஆம் ஆண்டின் தொடாக்கம் வரை – ஐரோப்பியர்கள், இந்த கடல் வழி வணிகத்தில் எத்தனை முறை ஈடுபட்டுள்ளனர் தெரியுமா......50,000 தடவ..
3. 15 - 19ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் மட்டும் முழுவதுமாக – இந்த கடல் பகுதியில் மட்டும் – குறைந்தபட்சம் 150 லட்சம் பேர் அடிமைகளாக சிறைபிடிக்கப்பட்டனர். இதில் 20 இருபது லட்சம் பேர் வரை கடல் பிரயானத்திலேயே உயிரிழந்து விட்டனர். ஆம்...முழுவதுமாக 150 லட்சம் பேருக்கும் மேல்.
4. ஆரம்பத்தில் போர்ச்சுகல் தான் இந்த வணிகத்தின் தாதா. பின்பு அந்த இடத்தை முறையே இங்கிலாந்தும் அமெரிக்காவும் எடுத்துக்கொண்டன
5. இந்தியாவில் இதுபோல அடிமை முறை இருந்ததா என்று யாருக்கும் கேள்வியெழ வாய்ப்பில்லை.நாம்தாம் சொந்த மக்களையே மனுதர்மம்,லொட்டு லொசுக்கு என்ற பல பேர்களில் அடிமைகளாக வைத்திருந்தோமே.
6. அதேசமயம் ஆப்ரிக்காவின் குழுக்களுக்கும் இந்த அடிமைமுறை இருந்தது, அவர்களை கொடூரமாக பலியிடும் பழக்கமும் இருந்தது என்பதும் உண்மை.
அமெரிக்காவில் ஆரம்பித்த அடிமை முறை:
1619ஆம் ஆண்டு. அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணம்.அமெரிக்க மண்ணில் முதல் ஆப்ரிக்க அடிமைகளைத் தாங்கிய கப்பல் கரை சேர்கிறது. அன்றிலிருந்து இரண்டு நூற்றண்டுகள், அமரிக்காவின் ஏறக்குறைய எல்லா வகையான கடினமான வேலைகளிலும் பங்கேற்று அல்லது பங்கெடுக்க வைக்கபட்டு, அந்நாட்டை முன்னேற்றியது ஆப்ரிக்கர்களே. 1808ஆம் ஆண்டு, அரசாங்கமே அடிமைகளை “இறக்குமதி” செய்வதற்கு தடைவிதித்தது. இறக்குமதி செய்யத்தான் தடையே தவிர அடிமைமுறை ஒழியவில்லை. 1861ஆம் ஆண்டு “சிவில் வார்’ ஆரம்பிக்கின்றது.அமெரிக்க சரித்திரமே அதற்குப்பிறகு முற்றிலுமாக மாறியது.
ஏற்கனவே கூறியது போல, ஆப்ரிக்க நாடுகளிலும் அடிமைமுறை இருந்தாலும், பிற நாடுகளிலும் இந்த அடிமை முறை இருந்தாலும் அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்த அடிமைமுறை முற்றிலும் மற்ற நாடுகளைவிட மாறுபட்டது.மிக கொடூரமானதொரு பழக்கம் நடைமுறையில் இருந்தது. என்ன அது ? ஒரு அடிமைக்கு பிறக்கும் குழைந்தையும்.....பிறக்கும் போதே அடிமைதான்.அந்த எஜமானனாக பார்த்து மனது வைத்தால் தான் உண்டு.இல்லாவிட்டால் அக்குழந்தையும் அதன் பிறகு வரும் தலைமுறையும் கூட அடிமைதான்.கொடூரம்.
ஒரு மனிதனுக்கு மற்றொரு மனிதன் செய்யக் கூடிய மிகபெரிய கொடுமை எதாக இருக்க முடியும்......அவன் வாழ்வாதாரத்தை சிதைப்பது, உணவு இருப்பிடம் போன்ற அத்தியாவசிய விஷயங்களை மறுப்பது....இவைகளா....இவை மட்டும்தானா ? எனக்கு தெரிந்த வரையில் ஒரு மனிதனின் கலாசாரத்தை – அவனது வரலாற்றை அழித்தொழிப்பதுதான் மிகப்பெரிய கொடுமையாக இருக்க முடியும். And the americans precisely did that. முதலில் பெயரை மாற்றினர் (இதன் காரணமாகவே மால்கம் லிட்டிலாக இருந்தவர் மால்கம் X சாக மாறினார்). அவர்களின் நாட்டுடன் எவ்வித தொடர்பில்லாமல் செய்தனர்.அவரது மத நம்பிக்கைகளை குழைத்தனர்.
எவ்வளவுதான் தடுக்க முயற்சித்தாலும் நமது இதய துடிப்பை நிறுத்த முடியாதல்லவா....அதுபோலவே ஆப்ரிக்கருக்கு – இசை. உலகின் மூத்த குடி – மிக பழமையான பழங்குடியினர் அவர்கள்தானே.... அதிரவைக்கும் தோல் இசை முதற்கொண்டு பல்வேறு வகை உணர்ச்சிகரமான – நேரடியான இசை அங்கிருந்ததானே பிறந்தது...சாப்பிடுவது உறங்குவது ஏன் சிறுநீர் கழிப்பது போல, இசை என்பது ஆப்ரிகர்களுக்கு வாழ்கை முறை. அப்படிப்பட்ட இனத்தை சேர்ந்த ஆப்ரிக்க அடிமைகளிடம் இருந்து எல்லாவற்றையும் பறித்தாலும், இசையை யாராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. அடிமைகளை கொண்டு வரும் கப்பலில் இருந்தே – ஒருவரை ஒருவர் தேற்றிக் கொள்ளவும், சற்றே ஆசுவாசப்படுத்திக் கொள்ளவும் - இந்த இசைதான் அவர்களுக்கு வடிகால். அதுவும் 18ஆம் நூற்றண்டின் ஆரம்பத்தில்தான் இதுபோன்ற “கொண்டாட்டங்களுக்கு” அனுமதி கிடைத்தது.
வயல்களில் வேலை பார்க்கும் பொழுது அலுப்பு தெரியாமல் இருக்கவும், தன் இயலாமை, கோபம், வருத்தம், காதல், காமம், மகிழ்ச்சி என்று எல்லா உணர்வுகளை வெளிப்படுத்துவும்,எல்லாவற்றையும் விட முக்கியமாக – தனது தாய்நாட்டிற்கும் தனக்குமான தொடர்பை பேணிக் காக்கவும் இசையே அவர்களுக்கு உற்று துணையானது. மலையுச்சியில் இருந்து கூக்குரலிட்டால் ஏற்படும் எதிரொலிப்பு போல, அவர்களது எண்ணங்களின் எதிரொலிப்பாக இசை மாறிப்போகிறது.இசையின் மூலமே இந்த அவலச் சூழ்நிலையில் இருந்து விட்டு விடுதலையாகி எங்கெங்கோ, பெயர் தெரியாத பறவைகள் போல பறந்து செல்லமுடியுமென்று நம்பினர். கிடார் - அவர்களது உற்ற தோழனானது. குடும்பத்தில் ஒரு உறுப்பினரானது. அவர்கள் பேசுவதற்கு பதிலாக தனது நரம்புகளின் மூலமாக பதிலளிக்க ஆரம்பித்தது. அன்றிலிருந்து பிறந்ததுதான் உலகளவில் Rock n Roll, Jazz, Rhythm & Blues(R & B) போன்ற இசை வகைளுக்கு நேரடியாகவும் பிற்பாடு வந்த Rock, Ska, Reggae, Hip – Hop, Rap போன்றவற்றிக்கு மறைமுகமாகவும் காரணமாக இருந்த, சாத்தானின் இசை என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட – ப்ளூஸ் இசையாகும்.
இந்த நாலு பதிவுகளுக்கு அப்பறம் பதிவுகளில் இருந்து VRS குடுத்திரலாம்ன்னு ரோசனை இருந்தது....அப்பறம்...எண்ணற்ற ரசிகர்களை மனதில் வைத்து முடிவை மாற்றிக் கொண்டேன்...யாரும் கலங்க வேண்டாம்
ReplyDeleteதூங்க போறேன்...வர ஒன்றிரண்டு கமென்ட்களுக்கு நாளை பதிலளிக்கிறேன்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteரஜினி படம் கணக்கா வெயிட் பண்ணது தல நல்ல தீனி போட்டுருக்கு... பதிவ படிச்சுட்டு வந்துறேன்..
ReplyDeleteஜோதிஜி அவர்களின் தொடரை படிக்கும்போது ரொம்ப கஷ்டமா இருந்தது. ஆனால் அவர்களுக்குள் இசை என்ற ஒரு ஒளி இருந்தது இப்பத்தான் தெரியுது. நிச்சயம் இந்த தொடர் சுவாரசியமா இருக்கும்னு நினைக்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள் கொழந்த ... எனக்கு பிடித்த genre இது ... நன்றி .!!
ReplyDeleteஅட்டகாசம் !! அற்புதம் ! அபாரம் !
ReplyDeleteஇதுவரைக்கும் நான் பார்த்தறியாத ஒரு மொழியை இந்தக் கட்டுரையில் பார்த்தேன். பிரம்மாதம் போங்க ! அடிச்சி பட்டையைக் கிளப்புங்க !! Eagerly waiting for the next episodes. I really wanna know the story. Me sharin this rightaway !!!!!
Will coem tomorrow to comment further :-)
///இதுவரைக்கும் நான் பார்த்தறியாத ஒரு மொழியை இந்தக் கட்டுரையில் பார்த்தேன். பிரம்மாதம் போங்க ! அடிச்சி பட்டையைக் கிளப்புங்க//
ReplyDeleteசத்தியமா இத நான் நினச்சேன் refresh பண்ணி கீழ கமெண்ட் பாக்குறேன் தேளு சொல்லிட்டாரு... வழக்கமான கொழந்த மொழி இல்ல.. ரொம்ப உணர்வு பூர்வமா இருக்கு மொழி நடை... அடிமை முறை பற்றி சொன்னப்ப அப்டியே கண்ணு முன்னாடி நிக்குது படிக்கும்போ,து சும்மா பாராட்டனும் ன்னு சொல்லல.. உங்கள் பதிவுகளிலேயே தி பெஸ்ட் இதான்... ரொம்ப ஆர்வமா இருக்கு இன்னும் நிறைய தெரிஞ்சுக்க உங்க அடுத்த பதிவுகள்ல இருந்து..
சொல்ல மறந்துட்டேன்.. தலைப்பே அதகளம்... சாத்தானின் இசை... கலக்கிட்டிங்க.. வாழ்த்துக்கள்...
ReplyDeleteGood one. Keep posting.
ReplyDeleteThanks,
Ananth,
Chicago
அதிக நாட்கள் இடைவெளி எடுக்கும் போதே தோணுச்சு, ஏதோ பெரிய திட்டத்தோட கொழந்த இருக்காருன்னு, 5 மாசத்துக்கு முன்னாடி சொன்னதை இப்ப செய்திருக்கீங்க, தேளு, முரளி சொன்ன மாதிரி எழுத்தோட்டம் அருமையா இருக்கு இவ்ளோ நாள் இத எங்க வச்சிருந்தீங்க?
ReplyDelete//ஆரம்பத்தில் போர்ச்சுகல் தான் இந்த வணிகத்தின் தாதா.//
ReplyDeleteஇந்த வணிகத்தில் மட்டுமல்லாது, கடல் பயணங்கள், காலணி பிடித்தல் எனப் பல கலைகளில்:) அவர்கள் தாதாவாக விளங்கியதற்கு மதத்தின் ஆதரவை விட அரச ஆதரவு பயங்கரமாக இருந்தது மற்றொரு காரணம். Henry-the navigator என்று அழைக்கப் படுமளவுக்கு அரசர் இந்தத் துறைக்கு பல விதங்களில் ஆதரவு அளித்தார், நூறாண்டுகள் கிழக்கிந்திய வாணிபத்தில் ஒற்றையாய் ஆதிக்கம் செலுத்தியவர்கள் ஆச்சே... இவர்களின் ஆதிக்கம் மங்கத் தொடங்கிய பிறகுதான் இங்கிலாந்தில் சூரியன் மறையாமல் இருந்ததெல்லாம்
good work kolantha... great
ReplyDeleteI differ from above comments. U r way more capable than this post & style. Felt like the style changes rapidly between each section (must be working on it for last couple weeks I guess).
ReplyDeleteCongrats then. U made me comment again. :)
Great Work Boss... Hats off :)
ReplyDeleteநா எளிதல் உணர்ச்சிவசப்படக்கூடிய ஆளில்லன்னு சொல்லிகுவேன்.....
ReplyDeleteஆனா..ரொம்ப உணர்ச்சிவசப்பட்டிருவேன்...........உண்மையிலேயே i m overwhelmed..........
தனித்தனியா ஒண்ணும் சொல்லத்தொணல.....more than anything, சொல்ல நெனச்ச விஷயம் நெறைய பேரை போய் சேர்ந்ததுன்னா, அதுவே மிகப்பெரிய சந்தோஷம்.....
Bluesச மட்டும் ரசிக்க ஆரம்பிச்சாசுன்னா, ராக் - ராப் - ஹிப் ஹாப்ன்னு மத்த எல்லாத்தையும் மேலும் ரசிக்க ரொம்ப ஏதுவா இருக்கும்....
@யோஹான்...
நன்றி பாஸ்....
@முரளி
என்னென்னமோ சொல்றீங்க....கேக்க நல்லாத்தான் இருக்கு....
@எஸ்.கே..
நன்றி நண்பா..மீண்டும் உங்கள பாக்கும் போது, சில நல்ல ப்ளுஸ் பாடல்களுடன் வரேன்.
@Ananth..
Thank Q mate....
@தமிழினியன்
நன்றி நண்பரே......தொடர்ந்து வரவும் @ வர முயற்சிக்கவும் :)
@கருந்தேள்
நீங்க செஞ்ச மற்றொரு "வேலைக்கும்" மிக்க நன்றி....என்னென்னா......இத்தன பேர் படிக்குறாங்க..பாராட்டுறாங்க..என்பதைவிட நெறைய பேருக்கு போயி சேர்ந்திருக்கு....அதான் ரொம்ப முக்கியம்....
@பாலா...
இது என்ன மதுரைக்கு வந்த சோதன ........... எல்லாம் உங்கள மாதிரி நண்பர்களின் ஊக்கம் தான்....(நா சென்டிமென்டலிஸ்ட்டா மாறிக்கிட்டு இருக்கேனோ)... இத்தன பேரின் பாராட்டையும் தக்க வைக்கணும் என்பதை விட, விசயத்தை போர் அடிக்காம கொண்டுபோகணும்........கர்த்தரே அதற்கு துணை
சாரு - தனது வலைத்தளத்தில் லிங்க் குடுத்திருக்காரு...........
ReplyDeleteஎல்லாம் ராஜேஷ் அவருக்கு படிக்க சொல்லி இந்த லிங்க் அனுப்புனதுனால ஏற்பட்டது...
இசைப் பித்து மிக்க(அவரின் பல இசை சார்ந்த கருத்துக்களுடன் என்னால் ஒன்றமுடியவில்லை என்றாலும்) ஒரு எழுத்தாளரின் பாராட்டு நிச்சயம் சந்தோசமா இருக்கிறது.....வேலமெனக்கெட்டு இந்த பதிவ படிச்சிட்டு லிங்க் குடுத்தமைக்கு மிக்க நன்றி........
முக்கியமா, இதன் மூலம் இன்னும் நெறைய பேரை இந்த பதிவில் இருக்கும் விஷயம் - அடையும்...அதுதான் ரொம்ப முக்கியமா எனக்குப்படுது...
அருமையான பதிவு! இதை எழுதுவதற்கு எவ்வளவு மெனக்கெட்டு இருப்பீர்கள் என்று உங்கள் எழுத்தில் தெரிகிறது! தொடரட்டும் ....
ReplyDeleteஅடேயப்பா..இன்னிக்கு ராத்திரி தூங்க முடியாது..மனதில் பாரத்தையும்,வியப்பையும் கொடுத்த எழுத்து
ReplyDeleteஅருமையான பதிவு நண்பரே ..பல தகவல்கள் ..
ReplyDeleteநன்றி பதிந்தமைக்கு .. எங்களுடன் பகிர்ந்து கொண்ட நண்பர் வில்லன் அவர்களுக்கும் நன்றிகள் ..
அன்புடன்
விஷ்ணு ..
அந்த படங்களும் உங்களது எழுத்தும் நெஞ்சை மிகவும் பதைக்க வைக்கிறது. ஆப்ரிக்க மக்கள் மேல் நடத்தபட்ட கொடுமை யாருக்கும் நடக்க கூடாது. இதை தான் ஐரோப்பியர்கள் நாகரிகத்தில் முன்னேறிவர்கள் என்று கூறியதின் பின்னனியோ.. :(
ReplyDeleteஅருமையான ஆரம்பம். எனக்கு இசை வகை பற்றி எல்லாம் தெரியாது. தெரிந்ததெல்லாம் கேட்ட மாத்திரத்தில் பிடிக்குதா இல்லையா என்பது மட்டும் தான். உங்கள் தொடரை படித்தால் கொஞ்சம் புரியும் என நம்புகிறேன்.
பட்டையை கிளப்ப வாழ்த்துக்கள் :)
அருமையான பதிவு நண்பரே.. பகிர்வுக்கு நன்றி..
ReplyDeleteபதிவை படிக்க தொடங்கியதுமே தளத்திற்கு மாறி வந்துடோமொனு ஒரு தடவை சரி பார்த்துக்கொண்டேன் , அவ்வளவு அருமையான எழுத்து நடை , கனவு பதிவுனா ஹங்கேரி , சேக்கொச்லேவியா ,தாஸ் தாபுஸ்கி, இப்படி எதையாவது எழுதி தொலைச்சு இருப்பீங்கன்னு நினைத்து தான் வந்தேன் ,யோவ் நீ பிறவி (இசை ) கலைங்கன்னு நிருபிச்சிடீர் ,
ReplyDeleteஒரே நாளில் மூவாயரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ,பத்துக்கும் மேற்பட்ட
பகிர்பவர்கள் ,
வாழ்த்துக்கள் பிரபல பதிவரில் இருந்து நட்சத்திர பதிவராக மாறிவிட்டீர்கள்
என்னுடைய தளத்தில் முதல் பாலோவரும் ,முதல் கமெண்ட்டும் தங்களுடையது என்பதில் பெருமை கொள்கிறேன்
ReplyDeleteவெறித்தனமாக தங்கள் அடுத்த பதிவை எதிர்பார்கிறேன்
ReplyDelete@ஒரு வாசகன்
ReplyDeleteநன்றி........சந்தோசமான மெனக்டல்கள்......... :)
@josiyam sathishkumar
நன்றி நண்பரே.....ப்ளூஸ் கேக்க தொடங்குனா, எல்லா பாரமும் தான இறங்கிரும்
@Vishnu
நன்றி....உங்களுக்கும் வில்லனுக்கும்....
@kanagu
கரெக்டா சொன்னீங்க...... ஆனா, நாமளும் ஐரோப்பியர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதையும் ஞாபகம் வெச்சுக்கணும்.....
கேக்க ஆரம்பிங்க..நிச்சயம் புடிச்சு போகும்........அடுத்த பதிவுகளில் இருந்து பாடல்களையும் ஷேர் செய்யுறேன்
@நந்தா...
நன்றி பாஸ்...
@டெனிம்..
:)))))))))))))
நேரில் பார்க்கும் போது இந்த கமென்ட்களுக்கு தகுந்த முறையில் கவனிக்கப்படுவீர்கள்
சிறப்பா எழுதி இருக்கீங்க... ரொம்ப கஷ்டம் தான் இது போல தகவல்கள் திரட்டுவது.
ReplyDelete@கிரி
ReplyDeleteநன்றி நண்பரே.................
நன்றிஎஸ்கே.
ReplyDeleteகொழந்த நானும் கன்னாபின்னாவென்று உணர்ச்சி வசப்பட்டு ஆச்சரியமாக இந்த கட்டுரையை படித்து முடித்தேன். நன்றி கிரி.
@ ஜோதிஜி திருப்பூர்
ReplyDeleteவாங்க சார்...ரொம்ப நாள் ஆச்சு.......கிரி அவர்களுக்கும் நன்றி
உங்களது இந்த இடுகையை வலைசரத்தில் இணைத்துள்ளேன் ...
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/04/blog-post_10.html
நன்றி .
குணா
நிறைய தகவல்கள் .. நன்றி நண்பா
ReplyDelete