Wednesday, January 23, 2019

The Political Untouchables: தமிழக தேர்தலும் தலித் வேட்பாளர்களும்


ஒருநாள் அந்த தாயோழி கடவுளை செமத்தியாக திட்டிவிட்டேன்
கேட்டுக்கொண்டு வெக்கமில்லாமல் சிரித்துக்கொண்டிருந்தார் 
பக்கத்து வீட்டு ஐயருக்கோ பேரதிர்ச்சி 
மீண்டும் கடவுளை நோக்கி நல்ல வசவை வீசினேன்
பல்கலைக்கழக கட்டிடங்கள் குலுங்கத்தொடங்கின
அனைத்து ஆராய்ச்சியாளர்களும், ஒரே சமயத்தில்
"மக்களை எது கோபப்படுத்துகிறது" என்ற 

ஆராய்ச்சி பணியை தொடங்கினர் 
- Keshav Meshram 


இந்த நாட்டில் தலித்கள் உள்ளே நுழைய முடியாத(விடாத) பல இடங்கள் உண்டு. அப்படியான இடங்களைப் பட்டியல்போட்டால்  முதலில் எது இருக்கும் ? கோவில்கள் ?. Nah. இன்றும் பல இடங்களில் தலித்கள் உள்ளே நுழைய தடையிருந்தாலும் முன்பிருந்ததைவிட தற்போது கொஞ்சம் சுமார் என்று சொல்லலாம். நுழைந்தாகிவிட்டது. அர்ச்சகர்களாக முடியுமா ? ஆகியிருக்கிரார்களா ? ம்ம்ம்ம்....எனக்குத் தெரிந்து – தமிழ்நாட்டில் இல்லை (அப்படியே நடந்தாலும் பெரிய கோவில்களில் மட்டுமே சாத்தியம். சாதிப் பிணைப்பு கொண்ட சிறுகோவில்களில் வாய்ப்பேயில்லை); கேரளாவில் ஆகியிருக்கிறார்கள்; திருப்பதியில் சொல்லியிருக்கிறார்கள்; இந்தியாவில் வேறெங்கும் ஆனதாக தெரியவில்லை. தலித்கள், ஹிந்து மதத்தைவிட்டு வெளியேற வேண்டும்; அவர்கள் ஹிந்துக்களே கிடையாது; ஒருபோதும் ஹிந்துவாக சாக மாட்டேன் – என்ற அம்பேத்கரின் பார்வையில் யோசித்தால் தலித்கள் அர்ச்சகர்களாகி பொங்கலையும் புளியோதரையையும் வைத்து என்ன செய்வது ? தலித்கள் அர்ச்சகர்களாவதிலுள்ள social impactடை புரிந்துகொள்ளமுடிகிறதென்றாலும், அர்ச்சகராவதைக் காட்டிலும் முக்கியமான விஷயங்கள் உண்டல்லவா. ட்ராக் மாற வேண்டாம். வழிபாட்டு தளங்களில் “நுழையலாம்”; IIT/IIM/IISc மாதிரியான பெருங்கல்வி நிலையங்களில் “நுழையலாம்” (உயர் பொறுப்புகளில் யார் இருக்கிறார்கள் என்பதெல்லாம் தனிக்கதை); ISRO/DRDO மாதிரியான நாட்டின் முக்கியமான அரசு நிலையங்களில்கூட “நுழைந்துவிட” முடியும்; கோர்ட்கள் – Yes. அரசு நிர்வாகம் – ஓரளவிற்கு. என்னதான்யா சொல்ல வர்ற ? தலித்கள் மிகமிகக் கடுமையாக - almost நுழையவே முடியாத ஒரு இடமுண்டு. அந்த நிலைக்கு நான், நீங்கள், உங்கள் பிரியத்திற்கும் பக்திக்குமுரிய அரசியல் கட்சிகளும் (Of course, வாக்காளர்களும்) காரணம். 

போன வருடம் ஒரு ப்லாக் போஸ்ட் எழுதும்போது “அரசியல் கட்சிகள், குறிப்பாக திராவிட கட்சிகள், அதிலும் குறிப்பாக சமூகநீதி பேசும் திமுக போன்ற கட்சிகள் – தேர்தலென்று வரும்போது வேட்பாளரின் ஜாதிதான் முதலில், மத்ததெல்லாம் அப்பறம் என்ற ரீதியிலேயே ஆட்களை நிறுத்துகிறார்கள்” என்று ஒரு வரியை டைப் செய்துவிட்டு, இதை பலரும் பல்வேறு சமயங்களில் சொல்லியிருக்கிறார்கள்; நாமும் சோஷியல் மீடியாவில் இதுபற்றி பலதடவை  வெத்து அறச்சீற்றம் காட்டியிருக்கிறோம்...உண்மையில் எத்தனை வேட்பாளர்கள் இவ்வாறு நிறுத்தப்படுகிறார்கள், என்ன நிலவரம் என்ற factsகளை தேடிஓடியதன் விளைவுதான் இந்த போஸ்ட். தேடலின் ரிசல்ட்ஸ் – நானே எதிர்பாராதது. இவ்வளவு மோசமாக இருக்குமென்று சத்தியமாக நினைக்கவில்லை. நிறைய கோபமும்/வருத்தமும்/இயலாமையும் மட்டுமே எஞ்சியிருக்கிறது. 

தமிழ்நாட்டின் மொத்த 234 தொகுதிகளில் 46 – SC/STகளுக்கான reserved தொகுதிகள். அதுபோக, மீதியிருக்கும் 188 பொதுத்தொகுதிகளில் – எந்த சாதியினரும் நிற்கலாம்.
Src: Caste, a fault line of AIADMK politics now

அந்த 188 பொது தொகுதியில் 2006 – 2011 – 2016, மூன்று தேர்தல்களிலும் எத்தனை தலித் வேட்பாளர்கள் சேர்த்து ஜெயித்திருப்பார்களென்று நினைக்கிறீர்கள் ? ஒன்று. நிற்க வைத்தால்தானே ஐயா ஜெயிப்பதற்கு. கட்சிகள், மிகமிகத் துல்லியமாக படுலாவகத்துடன் - இங்கே இவனை நிறுத்தினால், அந்த தலித்களோ வேறு சாதி  ஆட்களோ ஓட்டு போடாவிட்டாலும் பரவாயில்லை - சொந்த சாதி ஓட்டு வந்து சேர்ந்துவிடும். மெஜாரிட்டிக்கு பங்கமில்லை. தலித் கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், ரிசர்வ்ட் தொகுதிகளை அவர்களுக்கு கொடுத்துவிடுவோம். அவர்கள் தோற்றாலும் நாம் மெஜாரிட்டி அடைவதில் சிக்கல் வராது - திட்டம்போடாமல் இது சாத்தியாமே இல்லை. I mean, தெரியாமல் கூடவா நிற்க வைக்காமல் போய்விட்டார்கள் ? என்ன லாஜிக் ஐயா இது ? திமுகவிற்கு ஒரு தலித் வேட்பாளர் கூடவா கிடைக்கவில்லை ? அவர்கள் கட்சியில் பொதுத்தொகுதியில் நிற்க ஒரு தகுதியான தலித் வேட்பாளர்கூடவா இல்லை ?
  • திமுக நிறுத்திய வேட்பாளர்கள் – 0
  • காங்கிரஸ் – 0 
  • அதிமுக – 1 (தெரியாமல் நிறுத்தியிருப்பார்களோ ? ஜெயித்த ஒரே வேட்பாளர்) 
  • இங்குதான் சிக்கலே. BJP – ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்தபட்சம் 5 வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறார்கள்.
  • தலித் கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் - புதிய தமிழகம் உட்பட, கம்யூனிஸ்ட் கட்சிகளையும் சேர்த்து - ஒரேயொரு பழங்குடியினர்(ST) வேட்பாளரைக்கூட நிறுத்தவில்லை
Tamilnadu Election: ST Candidates in General Constituency (2006 - 2016)
தமிழக சட்டசபை தேர்தலில் மட்டுமல்ல, லோக் சபா தேர்தலிலும் - இந்தியாவின் பிற மாநிலங்களில் கூட அதிகளவில் தலித் வேட்பாளர்களை நிறுத்தும் ஒரே கட்சி பகுஜன் சமாஜ்வாதி பார்ட்டி (BSP) மட்டுமே (அவர்களுக்கு செல்வாக்கிருக்கிறதா, ஜெயிக்கிரார்களா என்பது வேறு கதை). உச்சபட்ச கொடுமையாக கடந்த 2016 தேர்தலில் பாமக 5 தலித் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இந்த மூன்று தேர்தல்களுக்கு முந்தைய தேர்தல்களின் (1952 - 2006) வேட்பாளர்களின் சாதி - வயது - கட்சி பற்றி Election Commission of Indiaவிற்கு RTI தட்டிவிடலாம் என்றிருந்தேன். அப்பறம் வெறுத்துப்போய் விட்டுவிட்டேன். நிச்சயமாக, சர்வநிச்சயமாக இந்த 67 ஆண்டுகளில் பொதுத்தொகுதியிலிருந்து தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தலித்களின் எண்ணிக்கை ஐந்தைத் தாண்டாது. ஐந்தாவது இருக்குமா ?


2006 - 2016 General Constituency: Candidates - Category 

சரி, தமிழக சட்டசபை தேர்தலில் மட்டும்தான் இப்படியா ? லோக் சபா தேர்தலில் ? அந்த விஷயத்தில் இந்தியா இந்தியாதான். தலித்கலென்று வரும்பொழுது கட்சி, மத, மொழி, இன வேறுபாடின்றி அணைத்து மாநிலங்களும் சமூக நீதி பேசும் அணைத்து கட்சிகளும் (கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் சேர்த்துதான்) ஒரு தலித் வேட்பாளரைக் கூட லோக் சபாவிற்கான பொதுத்தொகுதியில் நிற்க வைக்கவில்லை. காங்கிரஸ், போனால் போகிறதென்று கொஞ்சமே கொஞ்சம் நிற்க வைத்திருக்கிறார்கள் (2014 data compile செய்யவில்லை. ஆனாலும் கவலையேபடாதீர்கள். நிச்சயமாக இந்தச் சூழ்நிலை பெரிதாக மாறியிருக்காது) 


இதிலென்ன தப்பு. தலித்களுக்கென்றுதான் தனித்தொகுதிகளை ஒதுக்கியிருக்கிரார்களே. அப்பறம் என்ன வந்தது...இப்படியொரு கேள்வியெழுப்பினால். இப்படி வைத்துக்கொள்வோமே. தலித்களுக்கென்றுதான் தனியாக கோவில்கள் உள்ளதே, எதற்கு எல்லா கோவில்களுக்குள்ளும் அவர்களை நுழைய விட வேண்டும் ? தலித்களுக்கென்றுதான் தனிப்பள்ளிகள் உள்ளதே. எதற்கு எங்கள் பிள்ளைகளுடன் சரிக்குசமமாக அவர்கள் உட்கார வேண்டும் ? தலித்கள் புழங்குவதற்குத்தான் தனி டம்பளர்கள் உள்ளதே....the list goes on. இவைகள் போலவே, இது இன்னொரு வகையான அரசியல் தீண்டாமை. Simple as that. உங்களுக்கென்றுதான் தனித்தொகுதி உள்ளதே. அதற்குள் ஒரு தலித் வேட்பாளர் இன்னொரு தலித் வேட்பாளரோடு போட்டிபோட்டுக்கொள்ளட்டும். வன்னியர்/தேவர்/கவுண்டர்/முதலியார்களுக்கு சமமாக எங்கள் தொகுதிக்கு வந்து எங்களுடன் போட்டிபோடுவதா ? அதானே இதன் சாராம்சம் ?

This is how the journey of Indian constitution started:

தலித்கள் உட்பட - எந்தவொரு, உலகின் எந்தப்பகுதியைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்களானாலும் - அவர்களது முன்னேற்றத்திற்கான இரண்டு முக்கிய கூறுகள் Political Freedom + Social Freedom. இதில் இரண்டுமே closely knitted. ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை. ஆனால் இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இவ்விரண்டையும் செயல்படுத்த முக்கிய தேவை Constitutional Freedom. இப்படி யோசிப்போமே...இந்திய அரசியலமைப்பில் மட்டும் பிற்படுத்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோர்களுக்கென சிலபல உரிமைகளை சேர்க்காமல் போயிருந்தால்...தொலைந்தார்கள். தெளிவான அரசியலமைப்பு இருந்துமே இந்தப்பாடு. அதுவும் இல்லாதிருந்தால். 


27th January 1919. 28 வயதேயான அம்பேத்கர், Southborough Commission முன்பு - ஒடுக்கப்பட்டவர்களுக்கென Separate Electorate முறை வேண்டுமென்று கேட்டதிலிருந்து தொடங்கியது இந்திய அரசியலமைப்பின் பயணம். 1919 - 1950 வரையிலான 30 ஆண்டுகால அம்பேத்கரின் போராட்டங்கள், கோபங்கள், காந்தியின் - செத்தாலும் பரவாயில்லை Separate Electorate முறை வேண்டாமென்ற வறட்டுப்போக்கு, அவரின் மத நம்பிக்கையை இதற்குள்ளும் நுழைக்கப்பார்த்தது - வல்லபாய் படேலின் மிகமிகக்கடுமையான எதிர்ப்பு, நேருவின் பங்கு, ரெட்டமலை சீனீவாசன் - M.C.Raja உட்பட பலரின் பங்கு என்று, an absolutely brilliant book - Ambedkar, Gandhi and Patel: The Making of India’s Electoral System. ஒன்று..ஐந்து..பத்து, கிடையாது - 15 ஆண்டுகளாக ஒவ்வொரு முக்கிய தகவல்களாக ஆய்வு செய்து... such a meticulous work by Raja Sekhar Vundru. கண்டிப்பாக படித்துப்பாருங்கள்.

அம்பேத்கர் மிகமிக உறுதியாக இருந்திருக்காவிட்டால், நம் அனைவருக்கும் ஓட்டுரிமை தள்ளிப்போயிருக்கலாம். ஐரோப்பிய/அமெரிக்க நாடுகளே அனைவருக்கும் ஓட்டுரிமை என்ற வாதத்தை ஏற்காமல், படிப்படியாக அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கிக்கொண்டிருந்த காலத்தில் மொத்தமாக - படித்தவன், படிக்காதவன், ஆண், பெண், வசதியானாவன், ஓட்டாண்டி - யாராகயிருந்தாலும் ஓட்டுரிமை வேண்டுமென்பதில் பின்வாங்கவே இல்லை (இந்த விஷயத்தில் நேரு அம்பேத்கர் பக்கம்). அவர் சொன்ன காரணம் “My feeling is that every man is intelligent enough to understand exactly what he wants. Literacy has not much bearing on this point; a man may be illiterate, none the less he may be very intelligent”. அதற்கு முன்னால் இந்தியாவில், படித்தவர்கள் - வரி செலுத்துபவர்கள் மட்டுமே தேர்தலில் ஓட்டு போடா முடியும். அம்பேத்கர் இன்னொரு படி மேலே செல்ல முயன்றார். ஓட்டு போடுவதை, "Fundamental Right" என்ற அடிப்படையில் இந்திய அரசியலமைப்பில் சேர்க்க விரும்பினார். ஆனால் அதற்கும் சரி - அனைவர்க்கும் ஓட்டுரிமை என்ற வாதத்தை அவர் முன்வைத்தபோதும் சரி - அதைக்கடுமையாக எதிர்த்த நபர் யார் தெரியுமா ? இவர்தான்

இந்தப் புத்தகத்திலேயே Raja Sekhar Vundru, அம்பேத்கரின் நோக்கங்களாக மூன்று விஷயங்களைக் கூறுகிறார்.
For Ambedkar any electoral system for the dalits, must serve three purposes. 1) It must enable the dalits to send its true representatives to the legislatures. 2) Dalits must not be completely isolated politically from the majority 3) It must enable the dalits to influence the election of the members of the majority community to the legislature. Isolation, according to Ambedkar, was the worst thing that would happen to dalits, since no matter how large a representation was given to dalits, it was bound to remain a minority.
இதனடிப்படையிலேயே இனிவரும் பகுதிகளைப் பார்ப்போம்.

Dalits - True Representation - Separate Electorate: 

தலித்களின் பிரதிநிதிகள் யார் ? திராவிட கட்சிகளா ? கம்யூனிஸ்ட் கட்சிகளா ? தலித் கட்சிகளா ? காங்கிரஸ் ? பிஜேபி ? ஒருவேளை பாமகவோ ? திராவிட கட்சிகளின் (திமுக என்றே எடுத்துக்கொள்ளலாம். அதிமுகவை குறிக்காது. அதிமுகவின் (பெயரளவிலான) கொள்கையென்ன என்று சரியாக சொல்பவர்களுக்கு 1 லட்சம் தருகிறேன்) தலைவர்கள், தொண்டர்கள், பக்தர்கள் பலரிடமும் வெளிப்படும் கடும் எரிச்சல்தரும் patronizing tone ஒன்று உண்டு. தலித்களுக்கு நாங்கள்தான் அவ்வளவு செய்திருக்கிறோம்; அவர்களது முன்னேற்றத்திற்கு எங்கள் கட்சியளவிற்கு உழைத்த கட்சி எதுவும் இல்லை; அம்பேத்கரின் அரசியலை நாங்கள் மட்டுமே முன்னெடுக்கின்றோம். எனக்குத் தெரிந்து அவர்கள் இன்னமும் சொல்லாதது “பெரியாரின் வழிகாட்டுதலின்பேரில், கலைஞர்தான் இந்திய அரசியலமைப்பு இப்படித்தான் இருக்கவேண்டுமென்று அம்பேத்கருக்கு கடிதமெழுதினார்” என்பதுதான். அதைத்தவிர எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்கள். 

திராவிட கட்சிகளின் வருகைக்கு முன்பிருந்தே தலித் மக்களும் தலைவர்களும் தங்களுக்கான போராட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். விஷயம் தெரியாதவர்கள் எவரேனும் (ஒருசிலர் நீங்கலாக) திராவிட கட்சி ஆட்களின் தலித்களின் போராட்டங்கள் குறித்தான பேச்சைக்கேட்டால், என்னமோ இக்கட்சிகளின் வரவிற்குமுன் – தமிழ்நாட்டில் (அ) திராவிட நாட்டில், தலித்தல் அடிமைப்பெண் எம்ஜிஆர் போல அலைந்துகொண்டிருந்ததைப் போலவும், ஜெயலலிதா – அம்மா என்றால் அன்பு டைப் பாட்டு பாடி திராவிட கட்சிகள் தலித்களை முன்னேற்றிவிட்டதைபோலவும் ஒரு தோற்றமெழும். அயோத்திதாசர் இருந்திராவிட்டால் திராவிட இயக்கங்கள் வலுப்பெற சிறிது காலம் பிடித்திருக்கும். ரெட்டமலை ஸ்ரீனிவாசன் போன்ற ஆளுமையின் தாக்கம் ஜஸ்டிஸ் பார்ட்டி -> திராவிட கழகம், மிகமிகப்பெரியது. 

ஜஸ்டிஸ் பார்ட்டி (திராவிட கழகம்) பெரியார் தலைவராகி இனி தேர்தலில் திராவிடர் கழகம் பங்கேற்காதென்று அறிவிக்கும் வரையில் ஜஸ்டிஸ் பார்டியின் சார்பில் சட்ட மேலவை தேர்தல்களில் பெருமளவில் நின்றது முதலியார்கள், ரெட்டியார்கள், நாயர்கள் மாதிரியான ஆட்கள்தான். தலித்கள் மிகச்சொற்பம். இதன் காரணமாகவே, M.C.Rajah போன்ற தலித் தலைவர்கள் ஜஸ்டிஸ் பார்ட்டியிலிருந்து விலகினார்கள். இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும்: Ambedkar – Gandhi – Poona Pactடின்போது ரெட்டைமலை ஸ்ரீனிவாசன் அம்பேத்கர் பக்கமும் – M.C.Rajah, காந்தி பக்கமும் நின்றனர். தலித்கள்தான் உண்மையான இந்துக்களென்று எம்.சி.ராஜாவின் வாதம். அப்பறம், திராவிடர் கழகத்திலிருந்து திராவிட முன்னேற்ற கழகம் பிறந்து -> அதிலிருந்து அதிமுக முளைத்து, மதிமுக போன்ற கட்சிகளும் கிளம்பி...இந்த வரலாறு அனைவரும் அறிந்ததே. 

முதல் தலித் பெண் அமைச்சர் – 1967ல் – முதல் திராவிட ஆட்சி தமிழ்நாட்டில் மலர்ந்த உடன், திமுகவின் சத்தியவாணி முத்து அவர்கள்தான் தலித்களுக்கான பல திட்டங்களை முன்னெடுத்தார். அண்ணாவின் அரசு, பின்னாளில் கருணாநிதியின் அரசும் அதற்க்கு செயல்வடிவம் கொடுத்தது. ஆனால், அதே சத்தியவாணி முத்துதான் 1974ல், தலித்கள் திமுகவில் சரியாக நடத்தப்படுவதில்லை என்றுகூறி வெளியே வந்து தனியாக கட்சி ஆரம்பித்தார். பின்னர் அதிமுகவில் இணைந்தார். 

தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும் பின்-80களிலிருந்துதான் அம்பேத்கரை கட்சிகள் சொந்தம் கொண்டாட ஆரம்பித்தன. குறிப்பாக, 1991 அம்பேத்கர் நூற்றண்டு விழாவிலிருந்துதான் அம்பேத்கரோடு தங்கள் கட்சியினை தொடர்புபடுத்திக்கொள்ள ஆரம்பித்தனர். இதெல்லாம் நான் சொல்லவில்லை. Kancha Ilaiah Shepherd,  Anand Teltumbde, Prakash Yashwant Ambedkar போன்ற ஸ்காலர்களின் கூற்று (மெட்ராஸ் சட்ட கல்லூரிக்கு திமுக அம்பேத்கர் பெயர் சூட்டியது எந்தாண்டு என்று நீங்களே தேடிக்கொள்ளுங்கள்).

தமிழ்நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள். ஒடுக்கும் தேவர்/வன்னிய கட்சிகளோடு ஒரு தேர்தலில் கூட்டு, ஒடுக்கப்படும் விடுதலை சிறுத்தைகள்/புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் கூட்டு. என்ன நியாயம் இது ? Oppressorகளும் - Oppressedகளும் ஒன்றா ? 80களில் மலைச்சாமியின் மறைவிற்கு பிறகு, புதிய தமிழகம் கிருஷ்ணசாமி - விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் போன்றவர்களால் ஏன் ஒரு கட்டத்திற்குமேல் நகர முடியவில்லை ? ஒன்று திராவிட கட்சிகளில் எதாவது ஒன்றிடம் சரணடைந்துவிடுகின்றனர், இல்லை ஒவ்வொரு தேர்தலிலும் லிட்டரலாக ஒன்றுமே செய்ய இயலாமல் விஜயகாந்தை எல்லாம் முதலமைச்சராக முன்னிறுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். இக்கட்சிகளின் தலித் மக்களுடனான செயல்பாடு (பள்ளர் - பறையர் - அருந்ததியர் பிரச்சனையே பெரும்பிரச்சனை), நோக்கம், கட்ட பஞ்சாயத்து (என் ஊர் திண்டுக்கல். திண்டுக்கல் - திருச்சி - மதுரை, பகுதிகளில் செமத்தியான கட்ட பஞ்சாயத்து நடவடிக்கைகள் உண்டு) எல்லாவற்றையும் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு - இக்கட்சிகளின் நிலைமைக்கு இவர்களை மட்டுமே காரணாமாக சொல்வது சரியாக இருக்குமா என்று யோசித்தல் நலம். தலித்களுக்கான கட்சி என்பதாலேயே இவர்கள் மிகவும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற கட்டயாம் வேறு உண்டு. 60 ஆண்டுகால திராவிட கட்சிகளுக்கு இந்தத்தொல்லை இல்லை. தலித் கட்சிகளிடம் நாம் கேட்கும் கேள்விகளை திராவிட கட்சிகளை நோக்கி கேட்பதில்லை என்பதே உண்மை.

திராவிட கட்சிகள் எப்படி தலித் கட்சிகளை dismantle செய்கிறார்கள் என்பதற்கு, 1999 லோக் சபா தேர்தலே சாட்சி. திமுக + பாமக + பிஜேபி கூட்டணி. முதன்முறையாக பிஜேபி வலுவாக தமிழகத்தில் காலூன்ற ஆரம்பித்தது இந்தத்தேர்தலிலிருந்துதான். அதுஒருபக்கமிருக்க, 90களில் கிருஷ்ணசாமி, திருமா போன்ற தலித் தலைவர்கள் தலித் ஓட்டுகளை நிர்ணையிக்கும் சக்திகளாக உருவெடுக்கத்தொடங்கினர். இந்நிலையில் சிதம்பரம் தேர்தல் வருகிறது. என்ன நடந்தது ?



Src: PhD Thesis: N.R.Suresh Babu - DYNAMICS OF CASTE CONFLICTS IN SOME SELECTED VILLAGES OF TAMIL NADU: A SOCIOLOGICAL STUDY

90களில் தான ஜாதி அத்துமீறல்கள், கொலைகள், வன்முறைகள் தென்தமிழகத்தில் மீண்டும் பரவலாக தலையெடுக்கத் தொடங்கின. தேவர், வன்னியர், பின் - 90களில் கவுண்டர்கள் - புதுபுது கட்சிகளாக ஆரம்பிக்கத்தொடங்கினர். கூடவே, 90களில் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் முக்குலத்தோரின் ஜாதிய வன்முறைகள் அதிகமானதேயன்றி குறையவில்லை. நாப்பது பக்கத்திற்கு 90களின் ஜாதிய வன்முறை பற்றி எழுதலாம் (மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் PhD தீசிஸை ஆர்வமிருப்பின் படித்துப்பார்க்கவும்). திமுக\அதிமுக, இரண்டு கட்சிகளுமே ஓட்டை மனதில் வைத்துக்கொண்டு பெரிதாக எதையும் செய்யவில்லை. தலித்கள் மீதான வன்முறைக்கு காரணமானவர்கள் எத்தனைபேர் தண்டிக்கக்பட்டிருபபார்களென்று நினைக்கிறீர்கள் ? // C.Lakshmanan, assistant professor at the Madras Institute of Development Studies, points out that not a single person has been punished for atrocities against Dalits in the last 70 years, though a dozen or so enquiry commissions have been set up. Worse, he says, not even one member of these commissions has been a Dalit //. எந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் அவர் சொன்னாரென்று தெரியவில்லை. ஐந்து வருடங்கள் முந்தைய கட்டுரை என்பதால் நிலைமை கொஞ்சம் தேறியிருக்கும்.

இந்தத் தகவல்களெல்லாம் ஏன் மிகமுக்கியமென்றால், இப்படி யோசிப்போமே. ஒரு பொதுத்தொகுதி இருக்கிறது. 2 லட்சம் பேர் இருக்கிறார்கள். 70,000 பேர் வன்னியர்கள். 50,000 பேர் தேவர்கள். 40,000 தலித்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். ஏற்கனவே அந்த இரண்டு க்ரூப்பும் தலித்களை ஒடுக்கி வருகிறது. இதில், திமுக/அதிமுக போன்ற கட்சிகள் இந்த ஜாதி கட்சிகளுக்கு பெரிய முக்கியத்துவம்கொடுத்து அவர்களை அங்கிகரிக்கும்போது - அங்குள்ள தலித் மக்கள் நிலைமை ? அவர்களுக்கான பிரதிநிதியாக யார் செயல்படுவார்கள் ? வன்முறையின்போதுகூட திராவிட கட்சிகள் எப்படி "சுமூகமாக" பிரச்சனையை முடிப்பதென்றுதான் பார்க்கிறார்களே தவிர ஒரு நடவடிக்கையையும் எடுத்ததில்லை. எடுக்கவும் மாட்டார்கள் (ஜாதி வன்முறைகளை உதாரணமாக மட்டுமே சொல்லியிருக்கிறேன். Physical violenceசை தாண்டி, தலித்கள் அனுபவிக்கும் mental violence ரொம்ப அதிகம்). சரி, reserved தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் தலித் வேட்பாளர்களாவது அரசிடம் இதுபற்றி பேசி எதாவது செய்யலாமென்றால் - அவர்களும் திமுக/அதிமுக கட்சிகளின் பிரதிநிதிகள். அவ்வளவே. ஆக தலித்களுக்கான நிஜமான பிரதிநித்துவம் இன்றுவரையில் இல்லையென்பதே நிதர்சனம்.

இதற்குத்தான் அம்பேத்கர் - Separate Electorate முறை - வேண்டுமென்று தலைப்பாடாக அடித்துக்கொண்டார். ப்ரிட்டிஷ் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவும் செய்தது. காந்தி & கோ உள்ளே புகுந்து அனைத்தையும் கெடுத்துவிட்டனர். Separate Electorate முறை ஏன் முக்கியம் ?  ஏன் தேவை ? 2004ல் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மிகத்தெளிவாக கூறியுள்ளதை படிக்கவும். ஆனால் - அதே கிருஷ்ணசாமி இன்றிருக்கும் நிலைமை ?. 

1) Dalit leader calls for revamp of electoral system

அட பொதுத்தொகுதிகளை விட்டுத்தள்ளுங்கள். SC/STகளுக்கான தனித்தொகுதிகளை எடுத்துத்கொள்வோமே. 2016 சட்டசபை தேர்தல். என்ன கொடுமை ஐயா இது. தலித் தொகுதியில் பாமக, தலித் வேட்பாளர்களை நிறுத்துகிறது. அவர்களுக்கு விழுந்திருக்கும் ஓட்டை பாருங்கள். சில இடங்களில் தலித் கட்சியான விடுதலை சிறுத்தைகளை விட அதிகளவில் பாமக ஓட்டு வாங்கியிருக்கிறது. ஒரு பேச்சுக்கு, பாமக தலித் தொகுதி ஒன்றில் வெற்றிபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் கட்சி தலித் முன்னேற்றத்திற்கு பாடுபடுகிறது என்று எடுத்துக்கொள்ள முடியுமா ?. 
2016 SC/ST Constituencies. Data Src: Election Commission of India

2011 தேர்தல் இன்னொரு காமெடி. ஜாதிக் கட்சிகளான பாமக + கொங்குநாடு முன்னேற்ற கழகம், இரண்டோடு, தலித் கட்சியான விடுதலை சிறுத்தைகளுடன் திமுக தேர்தலை சந்திக்கிறது (திமுகவை பொறுத்தவரை தொடர்ச்சியாக ஒன்றைக்கவனிக்கலாம். கூட்டணியிலிருக்கும் தலித் கட்சியினருக்கு SC/STகளுக்கான தொகுதியை மட்டுமே பெரும்பாலும் ஒதுக்குவார்கள்). தலித்களுக்கான தொகுதிகளில் கூட, திராவிட கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதற்காக அவர்களுக்கு தலித் ஓட்டுகள் நிறைய விழுகிறதென்று அர்த்தம் கிடையாது. தலித்கள் ஓட்டுகள் போடாவிட்டால்கூட பல தொகுதிகளில் பிற ஜாதியினரின் ஓட்டுகள் மூலம் இக்கட்சிகள் ஜெயிக்க வாய்ப்புண்டு. In fact, தலித்கள் ஓட்டுக்கள் யாருக்கு போகின்றன என்பதே சரியாகத் தெரியவில்லை. இதைத்தன அம்பேத்கர் representation குறைபாடு என்கிறார். 


2006 SC/ST Constituencies. Data Src: Election Commission of India

2011 SC/ST Constituencies. Data Src: Election Commission of India
சரி, திராவிட கட்சிகளின் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்களையாவது அமைச்சரவையில் உட்கார வைக்கிறார்களா ? அதிலும் பட்டும்படாமல் இருக்கிறார்கள். இன்று நேற்றல்ல, 1977 முதல் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. ஆச்சரியகரமாக - கம்யூனிஸ்ட்கள் - திராவிட கட்சி ஆளும் மாநிலங்கள்தான் முதல் மூன்று இடங்களில் உள்ளது. அப்படியே இலாக்காள் ஒதுக்கப்பட்டாலும் முக்கிய இலாக்கள் ஒதுக்கப்படுவதில்லை.


Lok Sabha Elections:

தற்போதைய இந்திய சூழ்நிலையில் மிகமிக cruicalலானது  அம்பேத்கரின் இவ்வார்த்தைகள் “As I understand the matter, the fundamental issue is: Are the Untouchables a separate element in the national life of India or are they not? This is the real issue in the controversy and it is on this issue that the Congress and the Untouchables have taken opposite sides. The answer of the Untouchables is yes. They say, they are distinct and separate from the Hindus. The Congress on the other hand says No' and asserts that the Untouchables are a chip of the Hindu block”. அம்பேத்கர், பலமுறை இதே கருத்தை திரும்பத்திரும்ப கூறி வந்துள்ளார். “We are not a subsection of the Hindus but a separate element in the national life”. காந்தி Separate electorate முறைக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கக்காரணமும் இதுதான். தலித்களுக்கென்று Separate electorate கொடுக்கப்பட்டால், அவர்கள் ஹிந்து மதத்தின் பகுதி இல்லையென்ற அம்பேத்காரின் வாதத்தை அங்கீகரிப்பதுபோலாகிவிடும்; தவிர, ஹிந்துக்கள் – தலித்கள் கைவிட்டுவிட்டார்கள் என்ற “பழி” நேரிடும்; ஹிந்து மதம் பிளவுபடும்; தலித்கள் முற்றிலுமாக புறந்தள்ளப்பட வாய்ப்பிருக்கிறது; தலித்களை முன்னேற்றுவது ஹிந்துக்கள்/காங்கிரஸ்ன் கடமை என்று உறுதியாக பெருசு நம்பினார். 

இங்குதான் பெரிய ட்விஸ்ட். Entered RSS/VHP/BJP. தலித் அரசியலை தேசிய அளவிலும்/மாநில அளவிலும் தொடர்ந்து கவனித்து வருபவர்கள் கடந்த 10 – 20 ஆண்டுகளாக ஒரு ட்ரென்டை கவனித்திருக்கலாம். BJP, அதிகளவில் தலித் ஓட்டுகளை வாங்க ஆரம்பித்திருப்பது. இதுவரை இந்திய தேர்தல் வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு – 2014 Lok Sabha தேர்தலில், BJP – மொத்த தலித் ஓட்டுகளில் 25%தை பெற்றது. 2014 Lok Sabha தேர்தலில் 84 Reserved SC Seats, 47 Reserved ST Seatsகளில் ஏறக்குறைய பாதியை BJP தான் பெற்றது. போனவருடம் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் தலித்கள் அதிகமிருக்கும் பகுதிகளில் BJP வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது (ஒருவாறு எதிர்பார்த்தேன்). இரண்டு நாட்கள்முன்புகூட - Rajnath Singh BJP asks workers to counter Congress propaganda about party being anti-Dalit - கூறியிருந்தார். BJP, திரும்பத்திரும்ப தலித்களை குறிவைக்கக் மிகமிக எளிமையான காரணம், தலித்களுக்கென்று (Uttar Pradesh நீங்கலாக) இந்திய அளவில் (மாநில அளவிலும் கூட) செல்வாக்குமிகுந்த கட்சி கிடையாது, தலைவர் கிடையாது. ஆனால் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் 15% - 25% ஓட்டுகள் அவர்கள்வசம் உண்டு.



சரி, BJP இவ்வளவு ஓட்டுகள்/சீட்கள் வாங்கியிருக்கிறதே...அப்படியென்றால் தலித்கள் அவர்களை நம்புகிறார்கள், “தலித்களின் பாதுகாவலர்கள்” நாங்களென்று அவர்கள் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாமே ? 

1) Nature of crime against Dalits has worsened after 2014

2) Since 2014, crimes against SCs have increased one percent overall, although there was a steep rise of 5.5 percent in 2016


3) Violence against India’s Dalit women on the increase

4) Dalits have realised BJP is not for them


வலுவிழந்திருந்த பல சேனாக்களும், பரிக்ஷத்களும் மீண்டும் வலுப்பெற்று எழத்தொடங்கியிருப்பது BJPயின் ஆட்சி காலத்தில்தான். இதைத்தாண்டி, Reserved தொகுதிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் தலித்களுக்காவது அமைச்சரவையில் இடமுண்டா என்றால்...ம்ஹும். காங்கிரஸ், BJP, ஏன் Communist கட்சிகள் உட்பட (BSP நீங்கலாக) – இந்தியாவில் எந்தக்கட்சியும் தலித்களுக்கு அமைச்சரவையில் போதிய இடங்கள் தருவதேயில்லை. கொடுக்கப்படும் இலாக்காக்களும் முக்கிய துறைகளாக இருப்பதேயில்லை. BJP ஆளும் மாநிலங்களில் தலித்களுக்கெதிரான வன்முறைகள் எந்தளவிற்கு வலுப்பெற்று வருகிறன - தலித்களின் ஓட்டுகள் எந்தளவிற்கு தேசிய கட்சிகளுக்கு முக்கியம் என்பதையெல்லாம் புரிந்துகொள்ள இந்த கட்டுரைகளை படித்துப்பார்க்கவும்

1) The Dalit awakening

2) The Political battle for Dalit votes

3) Old Dalit vs New Dalit: How battle for 23 million new voters can play out

Epilogue:

கல்வியில் - வேலையில் - மற்ற துறைகளில் ரிசர்வேஷன் காரணமாக பல தலித்களின் நிலைமை வெகுவாக மாறிவருகிறது. இது மறுக்க முடியாத உண்மை. ஆனால் individualகளின் முன்னேற்றங்களை ஒரு கூடத்தின் collective முன்னேற்றமாக எடுத்துக்கொள்ள முடியுமா ? அப்படியான முன்னேற்றத்தின் அடையாளமான political freedom இன்னமும் அவர்களை சென்றடையவில்லையே. அப்படி நடந்திருந்தால் - SC ST Atrocities actல் சூப்ரீம் கோர்ட் வேறுமாதிரி தீர்ப்பு வழங்கியிருக்கக்கூடும். இரண்டுக்கும் என்ன சம்பந்தம் ? இருக்கிறது. இதுவரை எத்தனை தலித் நீதிபதிகள், சூப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிகளாக பதவியேற்றிருக்கிறார்களென்று நினைக்கிறீர்கள். ஒரே ஒருவர். அட..சூப்ரீம்கோர்ட் வரை போவானேன். ஹை கோர்ட்களில் மட்டும் என்ன வாழ்கிறதாம் ? After 2010, not even a single Dalit chief justice in 24 high courts.

முதலில், பிற்படுத்தப்பட்டோர் - தலித்கள், இருவரும் ஒன்றா ? தேவரும் யாதவரும் ஒன்றா ? நாடாரும் கொங்கு கவுண்டரும் ஒன்றா ? முதலியாரும் வன்னியரும் ஒன்றா ? அட, தலித்தும் தலித்தும் ஒன்றா ? புரியவில்லையா...பறையரும் அருந்ததியரும் ஒன்றா ? வெட்டிக்கொண்டு சாகிறார்கள். எல்லாதரப்பு மக்களுமே victims of caste system தான். ஓகே. ஆனால் ஒரு victimமான வன்னியரும் தேவரும் இன்னொரு victimமான பள்ளரையும் பறையரையும் இப்படித்தான் நடத்துவானா ? அது வேறொன்றுமில்லை. அடிப்படையான மனித சைக்காலஜி. பார்ப்பான், நம்மை அடிமையாக நடத்துகிறானே. அப்படியென்றால் நாமும் நம்முடைய அதிகாரத்தை யாரிடம் காண்பிப்பது...பறையரிடம் தான். பறையர்களோ -> அருந்ததியரிடம். இதுவொரு endless cycle. எனக்குத்தெரிந்து இது ஒழிய வாய்ப்பேயில்லை. இந்நிலையில்தான் எல்லாவற்றையும் ஒன்றாக்கி திராவிடம் பேசும் அரசியல் கட்சிகளை/ஆட்களை பயத்துடன் பார்க்க வேண்டிருக்கிறது.


எனது ஊரான திண்டுக்கலில் 2016 தேர்தலில், ஆத்தூர் தொகுதியில் - திமுக சார்பில் ஐ பெரியசாமியும், பழனியில் அவரது மகன் ஐ.பி/செந்தில்குமாரும் நிற்கவைக்கப்படுகிறார்கள். இதற்கு அவர்கள் கட்சியில் இடமளிக்கிறது. ஆனால், ஒரு தலித் வேட்பாளர்கள்கூட அவர்களுக்கு கிடைக்கவில்லைபோலும். பாவம்.திமுகவின் உள்கட்சியிலாவது ஏதாவது முன்னேற்றம் ? DMK has 1 Dalit among its 65 district secretaries. ஒருவராவது இருக்கிறாரே. அந்தமட்டுக்கும் மகிழ்ச்சி. அட கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமென்ன சளைத்தவர்களா...இதைப் படியுங்கள். ஆனால் ஆச்சரியகரமாக இரண்டு கட்சிகளும் பதிலும் ஒரே மாதிரியே - BJPதனமாகவே உள்ளதை கவனியுங்கள். மாறாக அணைத்து கட்சிகளும் தலித் ஓட்டுகளை tokenize செய்வதிலேயே முனைப்பாக உள்ளன. BJP - தலித் ஜனாதிபதி போல. மைல்கல்லில் ஹிந்தியில் எழுதினால் தமிழ்நாடே கொதிக்கிறது. சோஷியல் மீடியா அலறுகிறது. ஏனென்றால் BJP/ஹிந்திமயம் - தமிழர்களின் (திராவிடர்களின்) பொது எதிரி. ஆனால் - ஜாதி நம் எல்லோருக்குமான பொது எதிரி இல்லையா ? அப்படித்தானே இருக்க வேண்டும். அதுதானே நியாயம். ஆனால் தேர்தலென்று வரும்போது இவ்வளவு மோசமாக உள்ளது. ஆனாலும் நமக்கு இதுபற்றி எவ்வித சங்கடமும் இல்லை. கவலையும் இல்லை. நமக்கு பிடித்தமான கட்சி/அதன் தலைவர். அதுவேபோதும். தலித்களின் நிலைமைதான் மிகப்பரிதாபகரமாக உள்ளது. ஒரு நல்ல தலைவரும் இல்லை; கட்சி இல்லை; பிடிக்கிறதோ இல்லையோ தொகுதியில் நிற்கும் யாருக்காவது ஓட்டு போட்டுத்தொலைய வேண்டியிருக்கிறது. Even, Ambedkar சொன்னபடி Separate electorate இருந்திருந்தால் கூட - தற்போதைய சூழ்நிலையை வைத்து சொல்வதென்றால், எனக்கொன்றும் தலித்கள் பெரிதாக தேர்தல்களத்தில் வளர்ந்துவிட முடியுமென்று தோன்றவில்லை. Their electoral future is very bleak it seems. இந்த election முறை - வோட்டிங் முறை - கூட்டணி கட்சி - பெரும்பான்மை - இத்யாதிகள் - கடும் சிக்கல்நிறைந்ததாக உள்ளது. கணிப்பு தவறினால் மிகமிக சந்தோஷம்.

Note: 2006 - 2016 வரையிலான Election Commission of Indiaவின், தமிழ்நாடு தேர்தல் ரிபோர்ட்களில், வேட்பாளர்களின் ஜாதி குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலிருந்து அனைத்து pdfகளையும் டவுன்லோட் செய்து, நானே process செய்த data. So, தவறுகளுக்கு வாய்ப்பில்லை. 
Facebookers..

15 comments :

  1. வித்யாசாகரன்January 23, 2019 at 11:24 PM

    .தெரிந்த பிரச்சினை. தீவிரத்தை உணர்த்தியிருக்கிறீர்கள்.
    திமுகவின் எரிச்சலூட்டும் patronising tone பற்றி சொன்னதும் உண்மை.
    தலித்துகளின் வாக்குகளை ஒருங்கிணைப்தும், தலித் அல்லாத முற்போக்காளர்களைச் சேர்ப்பதுமே தலித் அரசியலின் தற்போதைய நோக்கமாக இருக்க முடியும். விசிக ஓரளவு சரியாகவே செல்கிறது.

    அடையாள அரசியல். இது தவிர்க்க இயலாததோ! இதே கணக்கு மத அடிப்படையிலும் செய்யலாம். இப்படித்தான் இருக்கும்

    ReplyDelete
  2. கொள்கை அரசியல் வேறு, ஓட்டு அரசியல் வேறு , தேர்தலில் வெற்றி முக்கியம் - உடன்பிறப்புகள் பதில்

    ReplyDelete
  3. Hard truths. Well researched and written article. Mm... Unity is important among Dalits

    ReplyDelete
  4. அருமை நண்பரே...

    ReplyDelete
  5. Nice analysis bro!. Ambedkar party was called as caste party by Congress persons during his time. After BSP rise only, ambedkar has popularized much. Even Bharat Ratna was given to Ambedkar in 1990 only by V.P Singh. I also read about M.C Raja different stands at different periods .. check this book "Ambedkar and Untouchability" christophe jaffrelot. இது எல்லாம் EPW ல போடலாம்.. வொர்த் ரீடிங்! ♥️♥️♥️

    ReplyDelete
  6. “At least 62% of 5.72 crore micro, small and medium sized enterprises are owned by people belonging to SC/ST and OBCs in India. Tamil Nadu has the large number of Dalit entrepreneurs,” said Milind Kamble, chairman and founder of Dalit Indian Chamber of Commerce and Industry.

    காரணம் , திராவிட கட்சிகள் dot.

    ReplyDelete
  7. Very detailed fact based analysis brother.
    The caste system dwells on each and every individual in thought form. Even with Orwellian Thought Police it could not be detected and it stays beneaths many peronas of a person.

    But atleast to stay alive in this caste based society one (dalit) has to associate himself to any popular party.

    After reading your article I can conclude your analysis in nutshell :

    Majority based political system cannot or will not solve problems of minority.

    As long as people stay packets of minority some of the packets will be exploited.

    What could be end of this problem ?

    Excellent work brother !!!

    ReplyDelete
  8. நேரடி தேர்தல் இல்லா நியமன பதவிகள் (மேல் சபா MP) பற்றி ஒரு Analysis செய்யலாமே.. கட்சிகளின் உண்மை முகம் இன்னும் தீவிரமாக வெளிப்படும்.

    ReplyDelete
  9. Brilliant and timely analysis.

    ReplyDelete
  10. Speechless bro, Kudos to you!!

    Itha padicha apram innum bayama iruku ☹️☹️

    ReplyDelete
  11. Hey bro, where are you now? . i expected some proper writeup about the corona virus from you.
    i try to find your email address but it ended up in a vein. write bro.

    ReplyDelete
    Replies
    1. இனி வாரம் ஒண்ணு வரும்

      Delete
  12. Well, a thorough and detailed analysis. Kudos to you brother. In spite of being the state with highest proportion of dalits, we are still in the position of asking for seats. By now we should be in a position to allocate candidates as per our wish in atleast one fourth of the total seats. Dravidian parties are just shifting power from Brahmins to OBCs. Dalits remain as Dalits... They make alliances just for pacifying us. We should show some interest and determination.
    Mr. Thiruma approached TN CM for establishing Chennai mayor post as a reserved post. I saw that as the starting point but unfortunately it faded away because of strict opposition from DMK due to their interests. But that's how we gain momentum in politics. Stand for our values and ideas. Thats to get Chennai mayor seat- it doesn't matter whom we ally with- if it pleases our interest... If Bjp/congress gets us towards that goal, we should move closer and that's how we win! Jai Bhim!

    ReplyDelete
    Replies
    1. // it doesn't matter whom we ally with- if it pleases our interest... If Bjp/congress gets us towards that goal // நா காமென்ட் பண்ண முடியாது. But i can understand why.

      Thanks for the comment

      Delete
    2. Absolutely agree with this . The goal has to be achieved to change this unfair status quo . Doesn't matter how we get there

      Delete