பாத்து புளுத்துனான். தேவ்டியா மவேன். நம்மமாறி ஈன பெறவிகளுக்கு ஏதுறா சாமீ

- ராமப்பாமிகப்பிடித்த என்று சொல்வதை விட, மிகவும் பாதித்த ஓவியங்களில் ஒன்று. The Scream. Lucid dreamமாக இதுமாதிரி ஒரு உருவம் அவ்வப்போது தூக்கத்தில் வருவதுண்டு. இதை வரைந்த Edvard Munch, Van Gogh - இருவருமே எக்சிஸ்டென்சியலிச படைப்புகளை அதிகளவில் படைத்தவர்கள் இருவரும் (Of course, அந்த காலகட்டத்தில் existentialism என்ற வார்த்தையே புழக்கத்தில் இல்லை). டக்கென்று அவர்களின் ஓவியங்களைப் பார்த்தாலே ஒரு விஷயம் துண்டாகத் தெரியும். Human suffering (கனத்த மௌனத்தில் - கன்னத்திலோ/தலையிலோ கைவைத்தபடியான ஆட்களை அதிகளவில் இவர்களது ஓவியங்களைப் பார்க்கலாம்). இருவருமே அதை வெளிப்படுத்தியவிதம்தான் அலாதியானது. ஒன்றுமில்லை, சாதாரண ஷூக்கள். அதைவைத்து Van Gogh வெளிப்படுத்திய emptiness ஏராளம். அதுமாதிரியே, Munch திரும்பத்திரும்ப அலைக்கழிப்பிற்குள்ளான/ஏமாற்றமடைந்த முகங்களாகவே வரைந்து தள்ளினார்.  அவர்களது காலத்துக்கு முந்தைய ஆட்களில் பலரும் இவ்வாறான ஓவியங்களை வரைந்திருந்தாலும், அதிலொரு நளினம் இருக்கும். Sufferingல் என்ன எழவு நளினம் வேண்டிக்கிடக்கிறது; நம்மைச்சுற்றி அனைத்துமே வெறுமையாகவும்/அசௌகரியமாகவும் இருக்கும்போது....இப்பிடியெல்லாம் யோசிக்காமல் மிகஇயல்பாகவே அவர்களுக்கு இந்த ஓவியங்கள் கைவரப்பெற்றது. காரணம், அவர்கள் வாழ்க்கை அப்படி. அது தனிக்கதை.

எதற்கு இந்தப்பேச்சை எடுத்தேன் என்றால், க்ரேக்கின் Epicurus காலம் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை, மனித இனம் - ஒரு விஷயத்தில் இருந்துமட்டும் தொடர்ந்து ஓடிஒழிய பிரயத்தனப்பட்டுக்கொண்டே இருக்கிறது. Suffering. எந்தவடிவில் இருந்தாலும், அதிலிருந்து தப்பித்தால் போதும் என்ற மனநிலை (பல மதங்களிலும், தன்னைத்தானே வதைக்குள்ளாக்கும் விஷயங்களுக்கும் இதற்கும் நிறைய தொடர்புண்டு என்றுபடுகிறது). Sufferingல் இருந்து மனிதர்கள் தப்பிக்க ஓடிய/ஓடும் escape routeடை நான்கு வழிகளாகப் பிரிக்கலாம். ஏகப்பட்ட கிளை பாதைகள் உண்டென்றாலும், நான்குதான் பிரதானமாக கண்ணுக்குத் தெரிகிறது. மதம் - அரசியல் - தத்துவம் - கலை

இதில் மதமும் - அரசியலும் தான் மிகமுக்கியமானவைகள். பெரும்பான்மையான மக்களை நேரடியாக பாதிக்கும் ஆற்றல் பெற்றவைகள். ஒருவேளை மனிதனுக்கு பயம்/துன்பம்/ஆற்றாமை/வதை போன்றவைகள் இல்லாமல் இருந்திருந்தால், கடவுளுக்கு வேலையே இருந்திருக்காது. மதங்கள் தோன்ற வாய்ப்பேயில்லை. பல அரசியல் கோட்பாடுகளும் சித்தாந்தங்களும், இந்த sufferingகை ஒழிக்கிறேன் என்று தோன்றியவைகள்தானே. கம்யூனிஸத்தை எடுத்துக்கொள்வோமே. அதன் ஆரம்பம் - human sufferingகை வைத்துதானே இருந்தது. அதோடு சேர்த்து மார்க்ஸ் - religious sufferingகைப் பற்றியும் பேசத்தவறவில்லை. Capitalismமின் கைப்பாவை தான் மதம் என்று கடுமையாகவே எழுதித்தள்ளினார். ஆனால் மதமும் - அரசியலும் ஒரு விசயத்தில் மட்டும் ஒன்றுக்கொன்று மாறுபட்டதல்ல. அதிகாரம். அன்றைக்கு க்றிஸ்தவ மதம் தொடங்கி இன்றைய புத்த மதம் வரை (ஸ்ரீலங்கா நல்ல உதாரணம்) எல்லா மதங்களின் ஆகப்பெரிய குறிக்கோள்களில் ஒன்றாக அதிகாரமே முன்னிலையில் இருக்கிறது. அரசியல் மட்டும் சளைத்ததா. ஒன்றும் வேண்டாம். "மதம் ஒரு ஓபியம்" என்ற கம்யூனிஸ நாடுகளில் என்ன நடந்தது ? "அதிகாரமே ஓபியம்" என்ற நிலையைத்தான் அடைந்தது. ஒரு சின்ன வேலை செய்யுங்களேன்: ட்ராட்ஸ்கி எப்படி/எங்கு இறந்தார் ? என்று தேடிப்படித்துப் பாருங்கள். அதிகாரத்தின் போதை அளப்பரியது. எப்பேர்ப்பட்ட நிலையான மனிதனையும்/ஆட்சியையும் தன்வசப்படுத்தும் ஆற்றல் அதிகார போதைக்கு உண்டு. ரொம்ப சிரமப்படுவானேன். பல தொலைக்காட்சிகளிலும் RSS/பிஜேபி ஆட்கள் முன்னெப்பொழுதையும்விட தற்போது அதிகளவில் தங்கள "கருத்துகளை" வெளிப்படையாகப் பேசுவதை எப்படி பார்ப்பது ?.  


Sci-Fi என்றாலே one dimensionalலாக பறக்கும் தட்டு, டைம் ட்ராவல் என்ற படங்களா போய்க்கொண்டிருந்த ஒரு காலத்தில், தர்கொவ்ஸ்கி வெறிமுத்திய சமயம்....Stalker பார்க்க நேர்ந்தது. Stalkerம் Solarisம் பெரிய revelation என்றே சொல்லலாம். அறிவியல் புனைவு என்பது வெறும் வேற்றுகிரகம், டைம் ட்ராவல், இத்யாதிகள் என்றில்லாமல் காலம்/நேரம் எல்லாம் கடந்த ஒரு environment எப்படி இருக்கும் (மிகமெதுவாக நகரும் காட்சிகளுக்கான காரணம் இதுவாக இருக்கலாம்) - ஒரு பார்வையாளராக Sci-Fi படத்தை பார்க்கிறோம் என்பதைத் தாண்டி, நாமே அந்த இடத்தில் வாழ்ந்தால் ? இதுதான் அந்த இரண்டு படத்திற்கும் அடிப்படை. வெறுமனே படத்தை "பார்த்தல்" என்றில்லாமல்....Stalker படத்தில் வருவதைப் போன்ற ஒரு zoneனிற்குள் போகநேர்ந்தால் ? இந்த psychological approachசை கற்றுக்கொண்டது தர்கொவ்ஸ்கியின் படங்களில் இருந்துதான். 


அப்படியான Stalker படத்தின் கதையை/திரைக்கதையை எழுதியது Arkady and Boris Strugatsky சகோதரர்கள். 1964ஆம் ஆண்டு அவர்கள்  எழுதிய Hard to be God என்ற கதை படமாக வந்துள்ளது என்றவகையில் தான் இந்தப்படம் அறிமுகம். படத்தின் பெயர் - Hard to be God. ட்ரைலர் பார்த்தேன் - அதகளம். அவ்வளவுதான். மேற்கொண்டு எதுவும் யோசிக்காமல் படம் பார்த்தாயிற்று. அதன்பிறகு தான் Alexei German என்ற ஜீனியஸ் பற்றி தெரியவந்தது. இந்தாளைப்பற்றி இத்தனை நாள் தெரியாமல் இருந்துவிட்டோமே என்று வருத்தப்படும் அளவிற்கு இருந்தது Hard to be God. இந்தப் படம் வெளிவரும்போது அவர் உயிருடன் இல்லை. எப்பேர்ப்பட்ட உழைப்பிற்குப் பிறகு இந்தப் படம் வெளிவந்தது என்று தெரிந்துகொள்ள விருப்பமிருப்பின், இங்கே படித்துப் பார்க்கலாம்.மதம் + அதிகாரம் = Suffering, இம்மூன்றும் குவியும் புள்ளிதான் இந்தப் படம். எவ்வளவு brutalலாக அதன் விளைவுகளைக் காண்பிக்க முடியுமோ அத்தனை தூரம் காண்பித்திருக்கிறார்கள். இதில் ஏகபட்ட அரசியல்/கலை பற்றிய பகடிகளும் உண்டு. நிறங்கள் எல்லாம் குறியீடா ? Knowledge என்பது என்ன ? அதைக் கற்றுத்தரத்தானே இங்கிருந்து அங்கே 30 பேர் போனார்கள். ஆனால் இந்த "ஞானம்" யாருக்கானது ? எப்படியானது ? Communism தான் மக்களது விடுதலைக்கான வழியா ? ஏகப்பட்ட கேள்விகளும் உள்குத்துகளும் படத்தில் உள்ளன. குறிப்பாக ஐரோப்பிய சமூகத்தைப் பற்றி. மேற்கொண்டு ஒரு வார்த்தை சொன்னாலும், படத்தைப் பற்றிய உங்கள் பார்வையை அது பாதிக்கக்கூடும். நீங்களே பார்த்துவிடுங்கள். ஆனால், நிச்சயமாக எனக்கொரு தனித்துவமான அனுபவத்தை இந்தப்படம் கொடுத்ததுபோல உங்களுக்கும் கொடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.