__________________நா இனிமேல் கையை ஆட்டிகிட்டி போஸ் கொடுக்க மாட்டேன் – ஓபாமா
__________________நா இனிமேல் சட்டை இல்லாம போஸ் கொடுக்க மாட்டேன் – புடின்
__________________நா இனிமேல் எதுவும் பண்ண மாட்டேன் – பெர்லூஸ்கோனி
__________________நா இனிமேல் தான் ஏதாவது பண்ணுவேன் – மன்மோகன் சிங்
__________________நா குஷ்பு கூட இனி பேச மாட்டேன். மானாட மயிலாட பார்க்க மாட்டேன் – கலைஞர்
__________________நா எங்க வீட்டு டெலிபோன் பில்ல கட்ட மாட்டேன் – ஆ.ராசா
__________________ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா – அழகிரி
__________________நா கருந்தேள் பேரில் பதிவு எதையும் போட மாட்டேன் – குருணாநிதி
__________________ணா...சாகும் வரை என் படங்களை நானே தொடர்ந்து பார்க்கும் போராட்டத்தை தொடங்குவேன் – விஜய்.
__________________நா இனி நடிக்க மாட்டேன் – சுந்தர்.C (ஓ....அப்புடியே நடிச்சிட்டாலும்.....)
__________________நா என் அடுத்த படத்தில் நடிக்க மாட்டேன். டெனிம் மோகன ஹீரோவாவும் என்னை யாருன்னு தெரியாதுனு சொன்ன சு.மோகனை வில்லனாகவும் நடிக்க வெச்சிட்டு நா ஒதுங்கிக்க போறேன் – சாம் ஆண்டர்சன் (தல..அவுங்களுக்கு நீங்களே பரவாயில்லை)
__________________ஆபிரகாம் லிங்கனை கொன்னவனுக்கும் சோனியா குடும்பத்தினருக்கும் உள்ள தொடர்பு குறித்து என்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட மாட்டேன் – சுப்பிரமணிய சுவாமி
__________________சும்மா இருத்தலே சுகமன்றி வேறோன்றும் அறியேன் பராபரமே - நித்தியானந்தர்

மேலே இருக்கும் கோட்டுல என்ன வரும்? அதாவது கொழந்த சீக்கிரம் பதிவு போடா விட்டால் – னு வரும்...இப்ப படிச்சு பாருங்க.கரெக்ட்டா வருதா...நா பதிவு போடாட்டி உலகளவுல கொந்தளிப்பு இருக்கும்...குறைந்தபட்சம் பதிவுலகத்திலயாவது ஏதாவது இருக்கும்னு பார்த்தா...ம்கும்..ஒன்னும் நடக்கல..அதான் பூன கண்ண மூடுனா உலகமே இருண்டிருமாம்..சரிதான்..ரைட்..முதல் paraவை எப்படியோ தேத்தியாச்சு.

கலக்கல் காமெடி: Naked Gun Series
  • From the Files of Police Squad!
  • The Smell of Fear
  • The Final Insult
டிஸ்கி: படத்தின் தலைப்பை பார்த்திட்டு ஏதோ வேற மாதிரி படத்தை எதிர்பார்த்து ஏமாந்தீங்கன்னா நான் பொறுப்பில்லை.

Spoof Parody வகைப் படங்கள் உங்களுக்கு பிடிக்குமா?(எனக்கென்னவோ பல தமிழ் படங்களே Spoof  மாதிரிதான் தெரியுது). Spoof படங்கள் குறித்து இதில் எழுத இணையத்தில் தேடியபோது பல ஆச்சரியமான விஷயங்கள் தெரியவந்தது. முதல்முதலாக பரவலாக அறியப்பட்ட Spoof படம் எப்ப வந்திருக்கும்னு நினைக்குறீங்க – 1922.படம்:Mud & Sand. அந்த காலகட்டத்தில் வெளிவந்த Blood & Sand படத்தின் Spoofவாம் அது. அதை தொடர்ந்து Dr. Pyckle and Mr. Pryde - 1925. டைட்டில பார்த்த உடன் தெரிந்திருக்கும் - Dr. Jekyll and Mr. Hyde படத்தின் Spoof இதுன்னு. 1940களில் ஒரு உலக புகழ்பெற்ற ஆளிடமிருந்து வந்த Spoof படம் குறித்து ஏற்கனவே நான் எழுதியுள்ளேன்.

அப்படியே கொஞ்சகொஞ்சமாக வளர்ந்துவந்த Spoof படங்களுக்கு தனி பாணியை ஏற்படுத்தியவர் – Mel Brooks. இவரது History of the World படத்தை நாம் பலரும் பார்த்திருப்போம். பின்னி பெடலேடுத்திருப்பார். அவரை தொடர்ந்து பிரிட்டைனை சேர்ந்த Monty Python குழுவினரும் கலக்க ஆரம்பித்தனர்(இந்த பேரை மட்டும் எங்கேயோ கேட்டிருக்கேனே தவிர அவர்களது எந்த படத்தையும் நாடகத்தையும் பார்த்ததில்லை).இதற்கு அடுத்ததாக வந்தவர்கள்தான் David Zucker, Jim Abrahams, and Jerry Zucker கூட்டணி. அவர்கள் எடுத்த Airplanes, Naked Gun Series படங்கள் இன்றளவும் சிறந்த Spoof படங்களாக கொண்டாடப்படுகின்றன. இந்த Naked Gun Series படங்களில் நடித்து புகழ் பெற்றவர் - லெஸ்லி நீல்சன்.


மனுசன் கொஞ்சம் கூட அலட்டிக்காம காமெடி பண்ணுவார். பார்த்த உடனே யாராயிருந்தாலும் சிரிப்பது நிச்சயம். நம்ம மிர்ச்சி சிவாவுக்கெல்லாம் காமெடில தாத்தா இவர்.இவரது சேட்டைகளை ரசிக்காத ஆளே இருக்க முடியாது. முதல் பாகத்தில Clint Eastwood Dirty Harry படத்தில் ஒரு புகழ் பெற்ற டயலாக் வரும்
[Harry Callahan - Clint Eastwood
Harry Callahan: Well, when an adult male is chasing a female with intent to commit rape, I shoot the bastard. That's my policy.
The Mayor: Intent? How did you establish that?
Harry Callahan:  When a naked man is chasing a woman through an alley with a butcher's knife and a hard-on, I figure he isn't out collecting for the Red Cross!
The Mayor: He's got a point.

அத இந்த படத்தில் இவர் சொல்லுவார் பாருங்க......

Frank:  When I see five weirdos stabbing a guy in broad daylight, I shoot the bastards. That's my policy.
The Mayor That was a Shakespeare In The Park production, you moron! You killed five actors! Good ones!

இந்த படம் மூன்று பாகங்களா வெளிவந்தது. முடிஞ்சா தொடர்ந்து மூன்று பாகத்தையும் பாருங்க. இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் குறித்து நமது பதிவுலகத்தின் மூத்த பதிவர்களில் ஒருவர் – பல ஆண்டுகளாக பதிவுலகில் இயங்கிவரும் – உங்களைப் போன்ற இளைஞர்களுக்கும் என்னைப் போன்ற சிறுவர்களுக்கும் வழிகாட்டியாய் திகழும் - பதிவுலக பூந்தோட்டத்தின் காவல்காரன்புலன் விசாரணை புலி – பதிவுலகத்து வல்லரசு – தங்கத்திலும் சொக்கத் தங்கம்மரியாதைக்குரிய – எங்கள் அண்ணாகேப்டன் கருந்தேள் எழுதியுள்ளதை படித்து கதை குறித்தும் படம் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
    
அட்டகாசமான திரில்லர்:

Seven, Fight Club – போன்ற செமையான படங்களின் இயக்குனர் - எனக்கும் உங்களுக்கும் பிடித்த David Fincherன் இன்னொரு அட்டகாசமான திரில்லர் தான் Zodiac திரைப்படம். ஒரு சைக்கோ கொலையாளி – சும்மா கொலை மட்டும் பண்ணாம ஒவ்வொரு தடவையும் சின்ன சின்ன க்ளுவை பத்திரிக்கைகளுக்கு அனுப்புறான். அது எப்படிப்பட்ட க்ளுனா Zodiac letters அதாவது Special charactersன்னு சொல்லுவோம்ல, அதான், அந்த வகைல இருக்கும். அவனுக்கும் ஒரு பத்திரிக்கையாளனுக்கும் நடக்கும் ஆட்டம் தான் கதை. போஸ்டர் பார்த்தாலே பார்க்கணும்ன்னு தோணனும். சில பேருக்கு இந்தப் படம் பிடிக்காம கூட இருக்கலாம். எனக்கு ரொம்பவும் பிடித்தது. இது குறித்து தனியாவே ஒரு பதிவு எழுத நினைத்திருப்பதால் இப்போதைக்கு இந்த ரெண்டு போஸ்டரோட அப்பீட் ஆகிக்கிறேன். திரில்லர் பிரியர்கள் இந்தப் படத்தை இதுவரைக்கும் பார்க்கலைனா கட்டாயம் உடனே பாருங்க.(ஆனா ஒரே பேருல ரெண்டு படம் இருக்கு - ஜாக்கிரதை). 


மேற்கொண்டு இந்தப் படத்தை பற்றி விவரமறிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
2, ஈபிள் டவர் அருகில், பாரிஸ்,
பிரான்ஸ்.

போன்:  ஏக் சூன்ய சூன்ய சூன்ய தோ சார் ஏக்.........

முதல் மொக்கை:
இது ஒரு தமிழ் படம்...அதோட நிறுத்திகிட்டு உங்க ஊகத்திற்க்கே விட்டு விடுகிறேன். என்னால சமாளிக்க முடியாதுப்பா....

ரெண்டாவது மரண மொக்கை:
இவ்வளவு நேரமா படிச்சும் அது என்னனு தெரியலைனா உங்கள மாதிரி பச்ச மண்ணுக்கு இந்த ரத்த பூமில என்ன வேல...

பி-கு: இது போன பதிவுக்கு முன்னாடியே எழுதியது. அதான் போன போஸ்ட்லயே ஒரு மொக்க பதிவுன்னு எச்சரிச்சிருந்தேனே...அப்பறமும் ஏன் படிச்சீங்க...அது உங்க தப்பு..மேலும் நானும் எத்தன நாள் தான் சுவாரசியமாவே எழுதுறது (எங்க ஓடுறீங்க), என்னாலயும் மொக்கையா எழுத முடியும்ன்னு நிரூபிக்கவே இது...                      
ரொம்ப நாள் கழித்து எழுதுவதால் ஒரு மொக்க பதிவ தான் யோசிச்சு வெச்சிருந்தேன். ஆனா எப்ப இந்த பாடல்களை கேட்டேனோ அப்ப இருந்து இதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளாட்டி தலையே வெடிச்சிரும் போல இருக்கு. எனக்கு ஏன் ரகுமான் பிடிக்கும் என்பது குறித்தும் அவரது இசையில் – ஏதோ என் அறிவிற்கு எட்டிய வரை - தெரியும் உலகளாவிய தன்மை குறித்தும் தனியே எழுத வேண்டும் என்று ரொம்ப நாளாக ஒரு எண்ணம். அதுக்கு ஒரு முன்னோட்டமா இதை ஆரம்பிக்கிறேன்.


இப்ப உங்க முன்னாடி ரெண்டு வாய்ப்பு இருக்கு. ஒண்ணு - வரிசைல நின்னு கும்பலா ஒருத்தர் முதுகு நம்ம முகத்தில உரச ஒரு 5 நிமிஷம் குற்றாலத்தில குளிக்கிறது. இன்னொன்னு – ரொம்ப தூரமா, கடினமான நடை தேவைப்படும், அதேசமயத்தில சுவாரசியம் நிறைந்த பாதையில போனா மட்டுமே சென்று குளிக்கக் கூடிய இன்னொரு அருவி இருப்பது தெரிய வருது. ரெண்டுல எதை நீங்க தேர்ந்தேடுப்பீங்க?. மாமூலான முதல் வகைனா இந்தப் இசைத் தொகுப்பு உங்களுக்கு பிடிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. ரெண்டாவது வகையறாக்களுக்காகவே இந்த ஆல்பம் என்று கூட சொல்லலாம்.
                                        
தனித்தனியா ஒவ்வொரு பாடலா பிரிச்சு சொல்லக் கூடிய அளவிற்கு எனக்கு இசை அறிவோ பொறுமையோ கிடையாது.அதுனால மொத்தமா சொல்றேன். மத்த எல்லா இசை அமைப்பாளர்களை விட ரஹ்மான் எனக்கு ரொம்ப பிடித்துப் போக இருக்கும் பல காரணங்களில் ஒன்று – அவர் எந்த இசையையும் ஒதுக்குவதில்லை. அதற்கு சரியான மற்றுமொரு உதாரணம் இந்தத் தொகுப்பு. ஏன்..நீங்க தாள் ஹிந்தி படத்தின் தீம் இசையை கேட்டிருப்பீங்க. அதுல தண்ணி விழுவதை கூட சிவமணியும் ரகுமானும் சேர்ந்து பின்னி பெடலேடுத்திருப்பாங்க. இத எதுக்கு சொல்லுறேன்னா இசை அவர்ட இருக்கு இவர்ட இருக்கு இங்கிருக்கு அங்கிருக்குனு காமெடிக்கு சொன்னாலும் அதுதான் நிஜம். அதை முழுமையா எனக்கு புரிய வெச்சதுல பெரும் பங்கு ரகுமானையே சாரும்.127 HOURS - Track Listing:
1. Never Hear Surf Music Again - Free Blood
2. The Canyon - A.R. Rahman
3. Liberation Begins - A.R. Rahman
4. Touch of the Sun - A.R. Rahman
5. Lovely Day - Bill Withers
6. Chopin: Noctrne No. 2 in E flat, Op. 9 No. 2
7. Ca Plane Pour Moi - Plastic Bertrand
8. Liberation In A Dream - A.R. Rahman
9. If You Love Me (Really Love Me) - Esther Phillips
10. Acid Darbari - A.R. Rahman
11. R.I.P. - A.R. Rahman
12. Liberation - A.R. Rahman
13. Festival - Sigur Ros
14. If I Rise - Dido / A.R. Rahman


இந்த ஆல்பத்தில் இருக்கும் Acid Darbaariல வரும் குரல் அது மாதிரியான ஒரு பெரிய அனுபவமா கேக்குறவங்களுக்கு இருக்கும். உலகப் புகழ் பெற்ற உலகின் தலைசிறந்த குரல்களில் ஒன்று என்று பெரும்பாலானவர்கள் சொல்லும் பிரெஞ்சுன் Edith Piafன் ஒரு version – மற்றொரு ஆங்கில பாடகி பாடியதுதான் If You Love Me (Really Love Me). சத்தியமா தூங்கிருவீங்க. அட்டகாசம். இன்னொரு ரகளை - Ca Plane Pour Moi. இந்தப் பாடல் கூட 1977லேயே வந்ததாம். அதை ரகுமானின் Orchestrationல கேட்கும் போது என்னவொரு துள்ளல்,உற்சாகம். வாய்ப்பேயில்லை.Liberation Begins, Liberation in a dream, Liberation – படத்தோட கதை தெரிந்தவர்களுக்கு இதன் அர்த்தம ரொம்ப சுலபமா புரிஞ்சிடும். Johnny Gaddaar ஹிந்தி படம் உங்களில் பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பீங்கனு நினைக்கிறேன். அந்த படத்தின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும்(Shankar-Ehsan-Loy).அதில் வரும் ஒரு அட்டகாசமான பாடல் Move your body. அதைப் பாடிய Hard Kaurரை ரஹ்மான் R.I.P பாடலில் எப்படி பயன்படுத்தியிருக்கிறார் என்று நீங்களே கேளுங்கள்.மற்றுமொரு புகழ் பெற்ற 70’s R & B வகைப் பாடல் Lovely Day by Bill Withers. இன்னொரு அட்டகாசம் (இந்த தகவல்கள் நெட்டில் தேடிய போது கிடைத்தவைகள்). ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த Sigur Roosன் இசையே Festival. நீங்க Eminemன் Stan என்ற செமத்தியான பாடலை நிச்சயமாக கேட்டிருப்பபீர்கள். அதில் introintroவாக வரும் குரலுக்கு சொந்தக்காரர் – புகழ் பெற்ற பாடகி Dido. அவரோட நம்ம ஆளு இணைந்து பாடி இருக்கும் பாடல் If i rise. இந்த வருடம் ஆஸ்காருக்கு இந்தப் பாடல் தேர்ந்தேடுக்கப்டும் என்று நெட்டில் பேச்சு அடிபடுகிறது.இன்னொரு பொக்கிஷம் Chopin: Nocturne No. 2 in E flat, Op. 9 No. 2. Classical வகை இசை.பாருங்க...ஒரு ஆல்பத்தில் எத்தனை வகை இசை.. எத்தனை நாட்டின் இசை என்று. அதான் ரஹ்மான். 


கடைசியா ஒரு பாடலை சொல்றேன். அதுதான் ஆல்பத்தின் முதல் பாடல் - Never Hear Surf Music Again – Free blood குழுவினரின் பாடல். ட்ரைலரில் கூட இதான் வரும். ஒருமாதிரியான psychelidic வகை பாடல். சத்தியமா மிரண்டே போய்ட்டேன். இது வேற குழுவின் பாடல் என்றாலும் கூட ரகுமானின் இசைச் சேர்ப்பு மிரட்டுகிறது. இதன் ஒரிஜினலே இப்படித்தானா என்று தெரியவில்லை.ஆக மொத்தம் டெல்லி-6க்கு அப்பறம் எனக்கு ரொம்ப பிடித்த ரகுமானின் இசைத் தொகுப்பு. Haunting music.அப்படியே எங்கேயோ இழுத்திட்டு போயிருது. அவசரமா எழுதுவதால் சரியாக சொல்ல நினைத்தவைகளை சொல்ல முடியவில்லை. தயவுசெய்து யாரும் மிஸ் பண்ணக் கூடாத - பண்ண முடியாத இசைத் தொகுப்பு. உங்களது எல்லாவித ரசனையும் சோதித்துப் பார்க்கும். அதற்கு சரியான தீனியும் உண்டு என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.