Monday, April 4, 2016

A trip to Laputa with Hiatus Kaiyote


பெரும்பாலானவர்களுக்கு இந்த அனுபவம் இருக்கக்கூடும். கொஞ்சம் obsessiveவாக எதையாவது செய்துதொலை-த்த/த்துக்கொண்டிருக்கும் சமயங்களில் கனவில்கூட அதே விஷயங்கள் நீண்டுகொண்டே இருக்குமில்லையா. சிலபல மாதங்கள் முன்பு, nordic noir வெறிகொண்டு திரிந்தபொழுது ஒரு க்ரைம் கனவு. மர்டர். Locked  room mystery. கொலையாளி ? வேறு யார்...நான் தான். அபாண்டமாக பழி விழுகிறது. எப்படி என் கற்பை நிரூபிக்கிறேன்...இல்லை,நிரூபிக்க முயல்கிறேன் என்பதுதான் கனவே. இரண்டு/மூன்று நாட்களுக்கு தொடர்ச்சியாக இதே கனவுதான். என்ன விஷயமென்றால், முதல்நாள் முடிந்த இடத்திலிருந்து அடுத்தநாள் தொடரும். கனவென்று - தெரியும்/தெரியாது நிலை. Lucid dreaming என்று சொல்கிறார்கள். கனவு காண்கிறோம் என்கிற பிரக்ஞையுடனே கனவு காண்பது. 

Dream Caused by the Flight of a Bee Around a Pomegranate

திராபையான என்  கனவைப்பற்றி சொல்லக்காரணம், விஷயம் கனவு பற்றியல்ல. அந்த awareness பற்றி. ஒருவேளை அந்த awareness இல்லாத trippy கனவென்று வைத்துக்கொள்வோம். அதை இசையாக வெளிப்படுத்த முடிந்தால் (அ) அந்தமாதிரியான அனுபவங்களை தரக்கூடிய இசை – nothing but psychedelic music. ஆனால், நாம் இதுமாதிரியான நிலையில் தான் இருக்கிறோம் என்று தெள்ளத்தெளிவாகத் உணர்ந்தே கேக்கும் நிலை இருக்குமில்லையா ? Hiatus Kiyoteயின் இசை அதுமாதிரியானது. பதிவில் எதையாவது எழுத வேண்டுமென்று சொல்லவில்லை. அவர்களது இசையின் texture and structure அந்தமாதிரி. ஏதாவதொரு band பிடித்துப்போனால், குறைந்தது இரண்டு/மூன்று வருடங்கள் கேட்டுவிட்டு அதற்குப்பிறகுதான் அவர்களைப்பற்றி போஸ்ட்போடுவது என்ற “கொள்கையை” வைத்துள்ளேன். ஆனால் இந்த band மட்டும் விதிவிலக்கு. போனவாரம் தான் மிக தற்செயலாக கேட்க நேர்ந்தது. திரும்ப<->திரும்ப அவர்களது இரண்டு ஆல்பம்களையும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

Hiatus Kiyote: என்ன  எழவு  பெயர் இது ? 
Kaiyote is not a word. It’s a made up word – it’s a word that involved the listeners creativity as to how they perceive it. So it reminds you of things but it’s nothing specific. When I looked it up on online it was like a bird appreciation society around the world, so for me that was a great omen, because I’m a bird lady. A hiatus is essentially a pause, it’s a moment in time. So, to me, a hiatus is taking a pause in your life to take in your surroundings, have a full panoramic view of your experiences and absorbing, and “Kaiyote” is expressing them in a way involves the listeners creativity
இந்த இன்டர்வியுவில், Nai Palm தனது bandற்கான பெயர்க்காரணத்தை பற்றிக்கூறியதை படிக்கும்போதே தெரிந்தது. நிச்சயம் இந்த band நமது கடைசிகாலம் வரை கூடவே வரப்போகிறதென்று. Pause and Observe மற்றும் listener's creativity - இரண்டுமே நான் முழுமையாக நம்பும் விஷயங்கள். அதனால் இந்த bandன் மீது ஏற்பட்ட ஈர்ப்பு இயற்கையானதே. 


HKன் இசையின் வேர்கள், R and B மற்றும் Soul இசை (அவர்கள் அவர்களது இசையை இவ்வாறு அழைத்துக்கொள்கிறார்கள் - Wondercore or Multi-dimensional Polyrthymic Gangster Shit). ஆனால் அவர்களது இசையில் Tribal, Psychedelic, Hip-Hop, Jazz, Electronica என்று பலதரப்பட்ட இசையின் கூறுகளையும் கேட்க முடிகிறது. அனைத்தையும் தாண்டி...Tribal/Native மக்களின் இசையின் கூறுகள். அவர்களது பாடலின் டைட்டில்களிலிருந்தே இந்தத்தன்மையை எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணத்திற்கு, Nakamarra. ஆஸ்திரேலிய பழங்குடியின மக்களிடையே இருக்கும் பெயர்வைக்கும் பழக்கம். பச்சை குத்துதல் மாதிரி. இரண்டு வெவ்வேறு க்ரூப்பை சேர்ந்த பழங்குடியின ஆட்கள் சந்தித்துக்கொண்டால், இந்த பெயரை வைத்து மற்றவரை தங்களது உறவினர்களாக பாவிப்பது. இதற்கான முழுவிளக்கத்தையும் இங்கே படிக்கலாம். இப்படியான Tribal கூறுகளும், பஞ்சபூதங்களுக்கான இசையையும், விலங்குகள் - பறவைகள் - ஊர்வன - பறப்பன, இப்படியான nomadic soulகளுக்கான HK இசை இருக்க ஒரே காரணம், bandன் பாடகி/கிதாரிஸ்ட் - Nai Palm. அவரது உடையிலிருந்து இசை வரை துல்லியமாக மேற்கூறிய விஷயங்கள் அனைத்தும் பளிச்சென்று தெரிவதைக் காணலாம்.



Nai Palm மற்றொரு interviewவில் தனது ஆதர்சமாக பலரைக் கூறினாலும், இருவர் தனித்து தெரிந்தனர். Mariem Hassan and Toumani Diabaté. இதில் Mariem Hassan - சஹாரா பகுதியின் இசையான Saharawi இசையின் முக்கிய ஆளுமை என்று போற்றப்படுகிறார். இவரைப்பற்றி படிக்கும்போதே எப்படியான வாழ்க்கை வாழ்ந்தவர் என்று புரிகிறது.

Toumani Diabaté - இவர் யாரென்றால், 1 - 5 - 10 - 20....ம்ஹும், 72வது தலைமுறையாக மாலி தேசத்தின் கோரா  என்ற இசைக்கருவியை மீட்டிக்கொண்டிருக்கும் நபர். முதல்முறையாக அவர் இசையை கேட்டபொழுது, நிஜமாகவே ஸ்லோ-பாய்சன் தான்.  



இந்த இரண்டு பேரை மட்டுமின்றி, பல ஆப்ரிக்க இசைக்கலைஞர்களையும், ஆப்ரிக்க இசையும் தன்னை அதிகம் பாதித்த இசைகள் என்று கூறுகிறார்.

Nai Palm மேலே கூறிய சில விஷயங்களை தெரிந்துகொண்ட பின்னர் இந்தப்பாடலைக் கேட்கும்பொழுது அவரது குரலில் தெறிக்கும் இசையின் கூறுகள் எங்கிருந்து வந்ததென்று புரிகிறது


அவர்களது முதல் ஆல்பமான Tawk Tomahawk அவர்களது வருகைக்கு ஒரு prelude மாதிரி என்று கூறலாம். பல பாடல்களும் 2 நிமிடங்களுக்கும் கீழ். ஆனால் மொத்த ஆல்பத்தையும் கேட்டமுடித்தவுடன் ஒரு அலாதியான rawness நம்மைத் தாக்கியதுபோன்ற உணர்வு நிச்சயம் எழும். இரண்டாவது ஆல்பமான, Choose Your Weapons தான் அதகளம். ஆல்பம் ஆர்ட்...அதுவே இது எப்படியான ஆல்பமாக இருக்கப்போகிறது என்பதற்கான சாட்சி.


HK - Nai Palmமோடு சேர்த்து மொத்தம் நான்கு பேர்: Simon Mavin(Synth,Keys) Perrin Moss(Drums), Paul Bender(Bass). ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தில் கில்லி. Multi-instrumentalistகளும் கூட. இதன் காரணமாகவே பதிவின் ஆரம்பத்தில் பார்த்த "texture and structure" அட்டகாசமாக இவர்களது இசையில் வெளிப்படுகிறது.  உதாரணத்திற்கு இந்தப் பாடல்:



Polyrhythm என்ற ஒரே  சமயத்தில் இரண்டுக்கும் மேற்பட்ட ரிதம் structure எப்படி seamlessஸாக ஒலிக்கிறது. பாடலின் ஓப்பனிங்கிற்கும் மேலே Toumani Diabatéன் இசைக்கும் எவ்வளவு ஒற்றுமை !!. 

Breathing Underwater: A tribute to Stevie Wonder. தவிர, "different examples of love and compassion in the world that are beyond the limitation of romance" தான் பாடலின் அடிப்படை. இந்த "different examples"களை மிகவும் வலிய திணித்து வித்தியாசமாக இசையமைக்கிறோம் என்றில்லாமல், மிகஎளிதாக பாடலின் ஒவ்வொரு லேயரும் மெர்ஜாகிக் கொண்டிருப்பதைக் கேட்க முடியும்.


மற்றுமொரு அற்புதம், Jekyll. பாடலின் பெயருக்கேற்றார் போல, அந்த duality Jazzy இசை மாதிரி தொடங்கி எவ்வாறு முடிகிறது பாருங்கள்.



Borderline with my atoms: இந்தப் பாடலைப்பற்றி என்ன எழுதுவது, எவ்வாறு விவரிப்பதென்றே தெரியவில்லை. Melt into other world... Dream Caused by the Flight of a Bee Around a Pomegranate



கடைசியாக, Laputa. A flying island. Gulliver's Travelsலில் வரும் 4.5 மைல் பறக்கும் தீவு. இதை அடிப்படையாக வைத்துதான் Hayao Miyazaki Laputa: Castle in the Sky என்ற படத்தை எடுத்துள்ளார். இது எப்படி தெரிந்தது ? A saga-born and hand drawn artisan dreamer...Miyazaki frontier என்று பாடலிலேயே வருகிறது. பாடல், மொத்தம் 2:30 நிமிடங்கள் கூடயில்லை. ஆனால்...அதற்குள்ளாகவே பாடலின் டைட்டிலைப்போல் எங்கெங்கோ இழுத்துச்செல்கிறது



Choose Your Weapon முழு ஆல்பமையும் இங்கே கேட்கலாம். காமென்ட்'ஸ் எல்லாம்  பார்த்தால்....Finding them changed my life, headbangs into the universal unknown. ஒருசேர முழு ஆல்பத்தையும் கேட்டால், நிச்சயம் மறக்கமுடியாது அனுபவம்வசப்படும். அதற்கு நான் கியாரண்ட்டி.

Facebookers..

2 comments :

  1. தமிழ்நாட்டுல Toumani Diabaté கேக்கற இன்னொரு ஜீவராசி

    ReplyDelete
  2. Wow wow wow.. toumani diabate vaaipe illa.. and, hiatus kooda. Romba romba romba nandri sir :)

    ReplyDelete