Wednesday, October 24, 2012

James Bond and the guilty pleasures

2 செப்டம்பர் 1945. நேச நாடுகளின் முன் ஜப்பான் சரணடைவதாக ஒப்புக் கொண்டு  Shigemitsu Mamoru, Umezu Yoshijiro இருவரும் போட்ட கையெழுத்துடன் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது அன்று தான். 1939ல் இரண்டாம் உலகப் போர் தொடங்கியபொழுது ஜெர்மனிக்கு எதிராக அணி சேர்ந்த நாடுகள் மூன்று - க்ரேட் ப்ரிட்டன், ஃப்ரான்ஸ் மற்றும் போலந்து. பின்னர்தான் மற்ற நாடுகள் வந்து சேர்ந்து கொண்டன(இந்தத் தகவல்களை எல்லாம் அனைவரும் எட்டாம் வகுப்பிலயே படித்திருப்போம்). க்ரேட்  ப்ரிட்டன், இனி இங்க்லாந்து - தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் போரில் பங்கேற்றது. 1939 முதல் 1945 வரை. விளைவு, பல்வேறு நெருக்கடிகளுக்கு இங்க்லாந்து 1945க்கு பிறகு ஆளாக நேரிட்டது. மிக முக்கியமாக, கிட்டத்தட்ட அரசு கஜானா காலியாகும் நிலைமை. தன் பிழைப்பே தள்ளாட்டமாக இருக்கும் பொழுது, வேறு நாடுகளையும் சேர்த்து கட்டி மேய்க்க வேண்டுமா என்று யோசித்து, தனது ஆதிக்கத்தின் கீழ் இருந்த பல நாடுகளை கழட்டிவிட ஆரம்பித்தது. Of course, இந்தியாவிற்கும் சுதந்திரம் கிடைத்தது.

பொருளாதரா பின்னடைவோடு சேர்ந்து பல்வேறு பிரச்சனைகளை இங்க்லாந்து அந்த காலகட்டத்தில் சந்திக்க நேர்ந்தது. அதில் மிக மிக முக்கியமான சிக்கல் - க்ரேட் ப்ரிட்டன் என்ற சாம்ராஜ்யம் குறித்த கற்பிதங்கள், மாயைகள், ஐடியாலாஜி அனைத்தும் உடைபடத் தொடங்கியதுதான். பெண்கள் - சமூகத்தில் அவர்களுக்கு உரிய இடம், தினக் கூலிகள், அதிகாரவர்க்கம் என்ற அனைத்து தரப்பு மக்கள் குறித்தான பார்வை மாறத் தொடங்கியது. இது அப்போதைய சினிமா, இசை என்று அனைத்திலும் பரவலாகக் காணப்பட்டது. இந்த மாற்றம், பழைய க்ரேட் ப்ரிட்டன் மகாராணி காலத்து மேட்டுக்குடி ஆசாமிகள் பலருக்கு உவப்புடையதாய் இல்லை. அவர்களால் பழைய ராணி காலத்து மனோபாவத்தில் இருந்து வெளியே வர முடியவில்லை. பெண்கள் என்றால், சிற்சில வேலைகளுக்குத்தான் லாயக்கு(போகப் பொருட்கள்), க்ரேட் ப்ரிட்டன் நாட்டு மக்கள் மட்டுமே உலகில் மிக உயர்ந்த இனம் - மற்ற நாட்டு மக்கள், குறிப்பாக ஆப்ரிக்க - ஆசிய நாட்டு மக்கள் குறித்த பார்வை, மகாராணிக்கு கீழ்படிதல், விசுவாசம், அரசு சொல்லும் வேலையை செவ்வனே செய்வதே உண்மையான குடிமகன்: இவ்வாறு இருக்கும் அவர்களது மனோபாவம். அது போன்றதொரு ஆசாமி தான் - இயன் லான்சஸ்டர் ஃப்ளமிங்.


இயன் ஃப்ளமிங் - பயங்கர செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர்(அப்பா - பாராளுமன்ற உறுப்பினர் வேறு). படிப்பை முடித்து ஆரம்பத்தில் பல்வேறுவிதமான வேளைகளில் ஈடுபட்டு வந்தார். பின்னர்தான் இரண்டாம் உலகப் போரின் சமயம், இங்க்லாந்து ராயல் நேவியில் சேர்ந்தார். அங்கு அவர் சந்தித்த மனிதர்கள், சம்பவங்களை எல்லாம் வைத்து 1950களின் ஆரம்பத்தில் ஆரம்பித்து 1952 - மார்ச் -18ல்(எனது பிறந்தநாள் ஹி..ஹி) ஒரு உளவாளி பற்றிய நாவலை எழுதி முடிக்கிறார். Casino Royale. கரீபியனைச் சேர்ந்த ஒரு பறவையியல் நிபுணரின் பெயர் பிடித்துப் போக - அந்த நிபுணரின் பெயரை தனது உளவாளிக்கு சூட்டுகிறார்  - ஜேம்ஸ் பான்ட் . பான்ட் கதாபாத்திரத்தை வைத்து, Casino Royale தொடங்கி Octopussy & The Living Daylights வரை மொத்தம் பதினேழு  நாவல்களை படைத்துள்ளார். பான்ட் கதாபாத்திரத்தை தான் சந்தித்த சுவாரசியமான மனிதர்களை வைத்து உருவாக்கியிருக்கிறார். அதுகுறித்த ஏராளமான டாகுமென்டரிகள் கூட உள்ளன. 

பான்ட் கதாபாத்திரம் வாயிலாக இயன் ஃப்ளமிங் எதையெல்லாம் புத்தகத்தில் வெளிப்படுத்தினார் ?

1. மூன்றாம் நாடுகள், அதன் மக்கள் குறித்தான அவரது பார்வை.  பிற்பாடு நாவலை படமாக எடுத்தபொழுது, இனவெறி நிறைந்த அவரது வார்த்தைகளை பெருமளவில் மட்டுப்படுத்த வேண்டியிருந்தது. உதாரணமாக, Goldfinger நாவலில்
Bond intended to stay alive on his own terms. Those terms included putting Odd-Job or any other Korean firmly in place, which in Bond’s estimation was lower than apes in the mammalian hierarchy
பாருங்கள். "lower than apes in the mammalian hierarchy" இதுவொரு மிகச் சிறிய உதாரணம் தான். கூகிளில் Ian Fleming+racism என்று அடித்துப் பாருங்கள். வண்டி வண்டியாக அவர் நாவல்களில் இருந்து உதாரணங்கள் கொட்டும்.பான்ட் பட வில்லன்கள் எல்லாம், பெரும்பாலும் மூன்றாம் நாடுகளையும், ரஷ்யாவையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். உடலோ முகமோ விகாரமான ரீதியில் தான் இருக்கும். ஏன் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா ?

2. பெண்கள். இரண்டாம் உலகப் போரின் சமயம், போரில் பங்கேற்ற அனைத்து நாடுகளிலும் ஆண்கள் போருக்கு சென்றுவிட பெண்களின் பங்கு மிகமிக முக்கியமானதாக மாறத் தொடங்கியது. இங்கலாந்தில் போர் முடிந்து, பெண்ணியம் குறித்த கருத்துகள் பெருமளவில் வளரத் தொடங்கியது. இதுவும் பல ஆண்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது நிதர்சனமா உண்மை. அது இந்தியாவாகட்டும் இங்க்லாந்து ஆகட்டும். ஜேம்ஸ் பான்ட்டை பொறுத்தவரை, தன் காரியம் முடிய -பெண்களை எப்படி வேண்டுமென்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். தனது ஆணழகை காண்பித்து எளிதில் அவர்களை வீழ்த்தி விடலாம்....இந்த நினைப்புதான் பான்ட்டிற்கு. அதிலும் ஆப்ரிக்க பெண்களாய் இருந்தால், வில்லத்தனமாகத் தான் சித்தரிக்க வேண்டும். மொத்தத்தில் தேவதாசி முறையை ஆதரித்து பேசிய சத்தியமூர்த்தி போன்று - நிறைய படித்திருந்தாலும்(?), பெண்கள் விஷயத்தில் பிற்போக்குத்தனமான சிந்தனை உள்ளவர் தான் இயன் ஃப்ளமிங்.

3. க்வீன், அரசு - குறித்த பிம்பத்தை கட்டமைக்க தனது நாவல்கள் மூலம் பெரிதும் பாடுபட்டார். உண்மையான ஊழியம், விசுவாசம், கீழ்படிதல்.....என்று பட்டியல் நீளும். இன்றுவரை, ஒருவரை - Majesty என்றெல்லாம் ஒரு நாடே அழைப்பதை என்னவென்று சொல்வது ?

4. ப்ராண்டிங்(Branding) - பான்ட்டையும் ப்ராண்டிங்கையும் பிரிக்கவே முடியாது. வால்தர் PPKவில் ஆரம்பித்து, மான்ட் ப்ளான்க் பேனா, மார்டினி, ஆஸ்டன் மார்டின் கார் என்று சகலத்திலும் ஒருவித ப்ராண்டிங் சார்ந்த ப்ரேமையை வெளிப்படுத்தினார். இதைவொரு பெரிய குற்றமாக சொல்ல முடியாது. அட, பான்ட் இதை உபயோகிக்கிறாரா என்று நமது நுகர்வு பழக்கத்துடன் இது தொடர்புடையது.


மேலே சொன்ன முதல் மூன்று முக்கிய விஷயங்கள் போக, பான்ட் நாவல்களில் ஏகப்பட்ட மொன்னைத்தனங்கள் உள்ளன. பான்ட் நாவல்கள் (என்னளவில் மட்டுமல்ல) B grade வகை பல்ப் நாவல்கள். அவ்ளவே(நான் இரண்டு நாவல்கள் வரை படிக்க முயற்சி செய்திருக்கிறேன். கொஞ்ச நேரத்தில் தூங்கி விட்டேன்). Foucault's Pendulum, The name of rose போன்ற நாவல்களை எழுதிய இத்தாலிய இலக்கிய விமர்சகர்  உம்பர்த்தோ ஈகோ ஜேம்ஸ் பான்ட் நாவலை கிழிகிழி என்று கிழித்திருக்கிறார் (அடச்சே....நா வேற லிங்க்ல இந்த மேட்டர படிச்சு, கடைசில விக்கில இயன் ஃப்ளமிங் பேஜ்லயே இந்த மேட்டர் எல்லாம் இருக்கு).
Eco also noted that the Bond villains tend to come from Central Europe or from Slavic or Mediterranean countries and have a mixed heritage and "complex and obscure origins". Eco found that the villains were generally asexual or homosexual, inventive, organizationally astute, and wealthy. Jeremy Black observed the same point: "Fleming did not use class enemies for his villains instead relying on physical distortion or ethnic identity ... Furthermore, in Britain foreign villains used foreign servants and employees ... This racism reflected not only a pronounced theme of interwar adventure writing, such as the novels of Buchan, but also widespread literary culture". Writer Louise Welsh found that the novel "Live and Let Die taps into the paranoia that some sectors of white society were feeling" as the civil rights movements challenged prejudice and inequality.
இதெல்லாம் இயன் ஃப்ளமிங் எழுதிய பான்ட் நாவல் குறித்தான பார்வைகள். திரைப்படங்களுக்கு வருவோம்.

ஜேம்ஸ் பான்ட் நாவல்கள் வெளிவர ஆரம்பித்த சிறிது நாட்களிலேயே மேற்கூறிய குற்றச்சாட்டுகள் வெகுவாக எழத் தொடங்கின. அதன்காரணமாக திரைப்படமாக பான்ட் நாவல்களை எடுத்தபொழுது, இந்த விஷயங்களை எல்லாம் கவனத்தில் கொண்டே எடுக்கப்பட்டது. பான்ட் கதாபாத்திரம் நாவல் வடிவில் வந்து, பத்து ஆண்டுகள் கழித்தே - 1962ல் Dr.No படமாக வந்தது.  நாவல்களில் இருந்து பல மாறுதலுக்குட்பட்டே சினிமாவில் பான்ட் வலம் வந்தார். ரேசிஸ விஷயங்கள் - வெளிப்படையாக - வராமல் பார்த்துக் கொண்டனர். ஆனால், புத்தகத்தில் இருந்த அதே டெம்ப்ளட்தனம் தொடரவே செய்தது(கிறது). மடத்தனமான பல ஹாலிவுட் படங்கள் போல, வில்லன்கள் ரஷ்யாவில் இருந்துதான் பெரும்பாலும் வருவார்கள், இல்லாவிட்டால் வேறு மூன்றாம் நாடுகள். தமிழ்ப் பட முஸ்லிம் - தீவிரவாதி டெம்ப்ளட்தனம் போல. அதுபோக, விஜயகாந்த் பட வாசிம் கான் தமிழில் பேசுவது மாதிரி, வேறு நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அட்டகாசமான எதுகை மோனையுடன் கூடிய ஆங்கிலத்தில் வில்லன்கள் பேசுவார்கள். சரியான காமெடி. டிபிகல் தமிழ் பட (அ) ஹாலிவுட் பட டெம்ப்ளட்கள். படங்களில் ட்விஸ்ட் என்று எதுவுமே இருக்காது. மிகமிக எளிதாக கொழந்தைகள் கூட யூகித்து விடக்கூடிய திருப்பங்கள். ஆரம்பகால பான்ட் பட சண்டைக் காட்சிகளின் தரம் எல்லாம் நாம் அறிவோம். அதே காலகட்டத்தில் வெளிவந்த பல ஆங்கிலப் படங்களில் பிரமாதமான சண்டைக் காட்சிகள் எல்லாம் உண்டு. அவ்ளோ தூரம் போவானேன், 60களில் வெளிவந்த எம்ஜியார் படங்கள் கூட அப்போதைய பான்ட் படங்களை விட எனக்கு நல்ல பொழுதுபோக்காக தெரிகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், பான்ட் படங்களுடன் இன்னொரு முக்கிய விஷயமும் சம்பந்தப்பட்டுள்ளது. Nostalgia. எனது வயதுக்காரர் ஒருவரைக் கேட்டால், Golden eye படத்தை வாயைப் பிளந்தபடி பார்த்தது நினைவுக்கு வரும். நாற்பது வயதுக்கு மேல் இருக்கும் ஆசாமிகளுக்கு,  The Spy who loved me ஞாபகத்திற்கு வரும். ஐம்பதுக்கு மேற்ப்பட்ட ஆசாமிகளுக்கு Dr.Noவில் ஆரம்பித்து பல பான்ட் படங்களின் ஞாபகம் வரும். ஏனென்றால் ஆங்கிலப் படங்களை அந்த காலகட்டத்தில் பார்ப்பது, ஒரு கிக்கான  விஷயம் அல்லவா. இப்பொழுது மாதிரி கைசொடுக்கில் என்ன மொழி படமாக இருந்தாலும் டவுன்லோட் செய்யும் வசதியெல்லாம் அப்பொழுது இல்லையே. மதுரையாய் இருந்தால் தங்கம் தியேட்டரிலும், தங்க ரீகல் டாக்கீசிலும் ஆங்கிலப் படங்கள் வெளியாகும்(என் அப்பா சொல்லித்தான் இதெல்லாம் எனக்குத் தெரியும்). விருதுநகர், சிவகாசி என்று ஆங்கிலப் படங்களை பார்ப்பதற்க்கென்றே ஒரு கூட்டம் மதுரைக்கு வருமாம். அதுவும் அப்போது - ஆசியாவிலயே பெரிய தியேட்டராக இருந்த தங்கம் தியேட்டரில் படம் பார்ப்பதே பயங்கரமான அனுபவம். அதேபோன்று மெட்ராசிலும் (பான்ட் படங்கள் ரிலீஸ் ஆகும் தியேட்டர்கள் என்று என்னமோ சொல்லியிருக்கிறார்....மினர்வாவோ ஆல்பர்ட்டோ, ஞாபகம் இல்ல) ஆங்கிலப் படத்திற்கென்றே ஒரு கூட்டம் உண்டு என்று கேள்வி. 50 ஆண்டுகள் கடந்தும் பான்ட் படங்கள் வெளியாவதால், சென்று தலைமுறையினருக்கு அந்தநாள் ஞாபகங்களை பான்ட் படங்கள் போகிறபோக்கில் மிகச் சாதாரணமாக மீள்கொணர்ந்து விடும். ஏன் 25+ல் இருக்கும் என்னை போன்ற ஆட்களுக்கு - கோல்டன் ஐ படத்தைப் இப்பொழுது பார்த்தால், சரியான காமெடியாகத் தெரியும். ஆனால், ஒருகணமேனும் ஆரம்ப காட்சியில் டேம் மேலிருந்து ப்ராஸ்னன் குதிக்கும் பொழுது, நாம் தியேட்டரில் ஆஆவென பார்த்தது ஞாபகம் வராமல் போகாது. இந்த நோஸ்டால்ஜியாவிற்கும், அந்த படங்களின் தரத்திற்கும் துளியும் தொடர்பில்லை. அப்படங்கள் சார்ந்த நினைவுகள் தானே முக்கியம் ? அந்நினைவுகளே மறுபடி மறுபடி நம்மை பான்ட் படங்களை நோக்கித் தள்ளுவதாக எனக்குப்படுகிறது. இது ரஜினி,கமல் என்று எல்லாருடைய படங்களுக்கும் பொருந்தும்.

இதுவரை வந்த 22 பான்ட் படங்களில் எனக்கு நாலு படங்கள் மட்டுமே பிடிக்கும்(எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன்). மீதியெல்லாம் என்னைப் பொறுத்தவரை படு மோசம். பத்து நிமிடங்கள் கூட பார்க்க முடியாத அளவிற்கான பான்ட் படங்கள் எல்லாம் உள்ளன, மூன்ரெக்கர் போல. பல விஜயகாந்த், அர்ஜூன் படங்கள் கூட இந்த பான்ட் படங்களை விட நல்ல விறுவிறுப்பாக இருந்திருக்கிறது. இதையெல்லாம் மீறி, எனக்கு மிகமிகப் பிடித்த பான்ட் படம் - காசினோ ரோயல். அதேபோல மிகப் பிடித்த பான்ட் - டேனியல் க்ரேக் தான். ப்ராஸ்னனிடம் ஒரு ஸ்டைல் உண்டு. ஆனால், க்ரேகிடம் இருக்கும் rawness யாரிடமும் இல்லை என்பது என் கருத்து. ஷான் கான்ரி எல்லாம் - என்னளவில், ஓவர் ரேட்டட். கொஞ்ச நேரத்தில் போர் அடிக்க ஆரம்பித்து விடும். மற்ற மூவரின் நடிப்பிலும் அழுத்தம் இல்லாதது போன்ற உணர்வு. தமிழோ ஆங்கிலப் படமோ, பான்ட் போன்ற மசாலா படத்திற்கு தேவையான கச்சிதமான ஸ்க்ரீன்ப்ளே தானே மிக முக்கியம். அது ஸ்கைஃபால் படத்தில் இருந்தால் ஓகே. ஆனால், இதிலும் ஒப்புக்கு ஒரு ஆப்ரிக்க நடிகை, வில்லன் பெயர் சில்வா (ப்ரேசிலாக இருக்கும்) என்று டெம்ப்ளட்தனங்களுக்கு பஞ்சம் இல்லாதது போலத் தெரிகிறது (குறைவாக தண்ணீர் ஓடும் ஆற்றில் நெட்டுகுத்தலாக ஓடும் ரயிலில் இருந்து பான்ட் விழுகிறார். அதுவும் குண்டடிபட்டு. வேட்டைக்காரன் விஜயே பரவாயில்லை போல). தமிழ் படங்களில் மட்டும் தோண்டித் துருவி லாஜிக் பார்ப்பது, மசாலா ஆங்கிலப் படங்களை எந்த கேள்வியும் இல்லாமல் சிலாகிப்பது - என்ற colonial hangoverயில் இருந்து நான் விடுபட்டு பல ஆண்டுகள் ஆகின்றது. ஒரு மசாலா படத்தில், தமிழோ ஆங்கிலமோ கொரியனோ - அதற்குரிய மசாலாத்தனங்கள் சரியாக இருக்கிறதா.... அவ்ளோதான்.  

மேலும் படிக்க:
பி.கு:

பான்ட் குறித்து நான் கீபோர்டில் நடனமாட ஆரம்பித்த விஷயமே வேறு. அந்த விஷயம் குறித்து நடனமாடி முடித்து, அந்தப் பதிவு ட்ராஃப்டில் இருக்கிறது. இதுவே பெரிய பதிவாக இருப்பதால், அது நாளை.
Facebookers..

18 comments :

  1. நாளை பாண்ட் தீம் பாடல்கள் குறித்த பதிவை ஆவலோடு எதிர்நோக்றேன் :)

    ReplyDelete
  2. இந்த பாமரன் கருத்துக்கும் செவி சாய்த்த உங்களுக்கு கைகூப்பு நமஸ்காரமுங்க...

    ReplyDelete
  3. நீங்க சொல்றது எல்லாம் கரெக்டு ...ஆனா அந்த அந்த கால கட்டத்துல அந்தப் படங்கள் எல்லாம் ரசிகர்கள கண்டிப்பா திருப்தி படுத்தி இருக்கும் தானே .....எனக்கும் காசினோ ரோயலே மிகப் பிடித்த படம் ..ஆக்சன் காட்சிகள் குறைவாக இருந்தாலும் நல்ல நேரேசன் இருக்கும் படம் முழுசும் ..ஆனா ப்ராஸ்னன் அளவுக்கு டேனியல் க்ரேக் ஸ்கோர் பண்ண முடியல[ன்னு நினைக்கிறன் ]..ஏன்னா அவர்ட்ட இருந்த ஸ்டைல் இவர்கிட்ட மிஸ்ஸிங் ...பான்ட் படங்கள்ள லாஜிக் பாக்க ஆரம்பிச்சா டைட்டில மட்டும் தான் பாக்க முடியும் ..அப்புறம் 1952 – மார்ச் -18 உங்க பிறந்த நாளா ..போட்டோல பாத்தா சின்ன பையன் மாதிரி இருக்கீங்க ....?????

    ReplyDelete
  4. எனக்கு பிடித்த பாண்ட் பியர்ஸ் பிராஸ்னன் தான்... மெம கெத்து & ஸ்டைல்....

    ReplyDelete
  5. கொடும .. நூத்துக்கணக்கான கமெண்டு வரும் சொன்னிங்க.. பதிவு போட்டு ரெண்டு மணி நேரமாகியும் ஒரு கமெண்ட்டும் காணோம்... எப்படியோ நானே முதல் கருத்த கூறுகிறேன்... நல்ல பதிவு தொடருங்கள்...

    ReplyDelete
  6. நானும் ஆவலோடு எதிர்நோக்குகிறேன்.....நன்றி இளவலே....

    ReplyDelete
  7. உங்கள் நகைச்சுவை உணர்வு வாய்க.....

    ReplyDelete
  8. பான்ட் படங்களில் லாஜிக் பாக்கல.......ஆனா பல பான்ட் படங்கள் அசுவாரஸ்யமான இருக்குன்றது தான் என் நினைப்பு.

    அது பிறந்த வருஷம் இல்லியே...நல்லா பாருங்க."பிறந்த நாள்" நாவொரு சிசுங்க.......

    ReplyDelete
  9. ஸ்டைல் ஓகே..எனக்கும் புடிக்கும்

    ReplyDelete
  10. நல்ல குருத்து(நன்றி செ. ம).....நன்றி முரளி

    ReplyDelete
  11. ஜேம்ஸ் பாண்ட் கதை உருவான விதம்,படங்கள் என்று நல்ல விரிவான அலசல்,நன்கு மெனக்கட்டிருக்கிறீர்கள்,எனக்கு கமலுக்கு பிறகு பியர்ஸ் பிராஸ்னன் தான் பிடித்த ஹீரோ.

    ReplyDelete
  12. // கதை உருவான விதம்,படங்கள் என்று நல்ல விரிவான அலசல்,நன்கு மெனக்கட்டிருக்கிறீர்கள் //

    இதெல்லாம் எனக்கு பெருமையா....கடம :) ப்ராஸ்னன் - யாருக்குத்தான் தான் அவர் ஸ்டைல் புடிக்காது.

    ReplyDelete
  13. பான்ட் படங்களின் மீதான என் மாயை கேசினோ ராயல் பார்த்தபின்னர்தான் நீங்கியது. குவாண்டம் ஆப் சோலஸ் பார்த்தபின்னர்தான் இனிமேல் தைரியமாக பான்ட் படங்கள் பார்க்கலாம் என்கிற தைரியமே வந்தது. எனக்கும் டேனியல் க்ரைக்தான் மிகவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் ப்ராச்னந்தான் நான் பார்த்த முதல் பான்ட் படத்தின் ஹீரோ என்பதால் ஆவர் மீதும் கொஞ்சம் கரிசனம் உண்டு.

    ReplyDelete
  14. டேனியல் க்ரேக்ட இருக்கும் - rawness.....மத்த எந்த பான்ட்'டையும் இல்லாத மாதிரி எனக்கு தோணுது.

    ReplyDelete
  15. [...] A. James Bond and the Guilty Pleasures [...]

    ReplyDelete
  16. Yeah still remembering watching goldeneye in Madurai mapillai vinayagar theatre , tat opening sequence superrrr ...now only Thanga reagal is here ( mattran running) and sky fall is good

    ReplyDelete
  17. எல்லா கமென்ட்க்கும் சேர்த்து ஒரு பெரிய நன்றி.இவ்ளோ லேட்டான பதிலுக்கு சாரி..... // Casino royale – I love the song very much for its guitar arrangements //சூப்பர்.....ஆனா, டை அனதர் டே எனக்கு அவ்ளோவா பிடிக்கல......

    அப்பறம், ஐபோனா ????? பாத்ததோட சரி.......

    ReplyDelete
  18. This comment has been removed by the author.

    ReplyDelete