Thursday, August 25, 2011

Werckmeister Harmonies

When you watch my movies, please don’t speculate. Just trust your eyes and listen to your heart 
 - Bela Tarr

கனவுக்கும் விழிப்புக்கும் இடையேயான அந்த குறுகிய, மிகக்குறுகிய நிலை உங்களுக்கு ஞாபகம் இருக்கா ? இந்தப் படம் அதையே எனக்கு ஞாபகப்படுத்தியது.


ஹங்கேரியன் ஒரு சிறிய ஊர்.பனியும் காரணமே தெரியாத பீதியும் சேர்ந்தே படர்ந்திருக்கும் ஊர். யானுஸ் வலுஸ்கா என்ற பேப்பர் போடும் ஆள்.பேப்பர் போடுவதைத் தவிர ஊரின் முக்கிய பிரமுகரான கியோர்கி எஸ்டர் என்பவர்க்கு பணிவிடை செய்யும் வேலையையும் செய்து வருகிறான். கியோர்கி Andreas Werckmeister என்ற ஹங்கேரியின் இசை கோட்பாட்டாளரின் இசை குறித்தான ஆராய்ச்சி செய்து வருகிறார். Werckmeisterன் ஹார்மனியானது இயற்கையின் முழுமையான ஒலி அளவை எட்டவில்லை, வெளிக்கொனரவில்லை. அதனடிப்படையில் அமைந்த அவரின் அனைத்து இசைக் கோர்ப்புகளுமே தவறு என்பதாகப் போகிறது அவரது ஆராய்ச்சி. கியோர்கி மனைவி அவரைப் பிரிந்து அவ்வூரின் முக்கிய போலீஸ் அதிகாரியுடன் வாழ்ந்து வருகிறார். புரட்சி இயக்கம் என்ற பெயரில் ஏதோ ஒரு இயக்கத்தின் முக்கியமான ஆளும் கூட.


வழமை போல மிகுந்த அசுவாரசியமாக நாட்கள் நகர்கிறது. ஒருநாள் இரவில் நீண்ட நிழல்களை படரவிட்டபடி மிகப்பெரிய ராட்சஸ வண்டி ஒன்று ஊருக்குள் வருகிறது. புகழ் பெற்ற – உலகின் மிகப்பெரிய திமிங்கலமும் ப்ரின்ஸ் என்ற ஆளும் இன்னபிற விசித்திர ஜந்துக்கள் கொண்ட சர்க்கஸ் வண்டிதான் அது. திமிங்கலமும் ப்ரின்ஸும் எந்த ஊருக்கெல்லாம் இதுவரை சென்றிருந்தார்களோ அவ்விடங்கள் எல்லாம் பெரும் இன்னல்களுக்கு ஆளாகி இருப்பதாக ஒரு பேச்சு நிலவுகிறது.அதனால் சர்க்கஸ் வண்டி வந்தவுடன் மொத்த ஊரின் கலக்கமும் பலமடங்கு உயர்கிறது. ஆளாளுக்கு அதைபற்றி மட்டுமே பேசுகின்றனர்.வலுஷ்கா எங்கு சென்றாலும் யாவரும் இதைபற்றியே பேசிக்கொண்டிருப்பதும் இவனிடமும் அதைபற்றியே கேட்பதும் வாடிக்கையாகிப்போனது.


இதெல்லாம் கேட்டுக் கேட்டு வலுஷ்கா அத்திமிங்கலத்தின் பால் கடுமையாக ஈர்க்கப்படுகிறான். சர்க்கஸ் திறந்த முதல்நாளே முதல் ஆளாக திமிங்கலத்தை மிகுந்த ஆசையுடனும் ஒருவிதமான பரவசத்துடனும் காண்கிறான்.வார்த்தைகளே இல்லாத மொழியில் இருவரும் பேசிக்கொள்கின்றனர்.பெரும் தாக்கத்துடன் வெளியே வருகிறான்.ஆனால் ப்ரின்ஸ் மட்டும் யாருக்கும் வெளியே காமிக்கப்படவில்லை.

இந்நிலையில், கியோர்கியின் மனைவி தங்களது இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்குமாறு கண்ணியாமாக மிரட்டல் விடுக்கிறார்.எப்படி ? தங்களது நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் மறுபடியும் கியோர்கியுடன் சேர்ந்து வாழ அவர் வீட்டுக்கே வந்துவிடுவேன் என்று.அதிலேயே அவர் அரண்டு போய் அவர்களது நிர்பந்தத்திற்கு அடிபணிகிறார். இந்த சூழ்நிலையிலும் கூட வலுஷ்காவின் நினைவில் திமிங்கலம் தன் நீச்சலை ஜோராக அடித்துக் கொண்டிருக்கிறது.கியோர்கியிடமும் கடவுளின் எத்தகைய உயர்ந்த படைப்பு என்ற ரீதியில் அடிக்கடி சிலாகித்து பேசி வருகிறான்.


வலுஷ்கா மறுபடியும் திருட்டுத்தனமாக திமிங்கலத்தை பார்க்கச் செல்கிறான்.அந்த வண்டி ஊரின் முக்கிய சந்திப்பில் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது.குளிரடைந்த அந்த இரவில் பலபேர் அங்கு குழுமியிருந்தனர்.ஒருவகையான மூர்க்கத்தனம் ஏறிய மனநிலையிலேயே இருக்கின்றனர்.அவர்களுக்கிடையே நழுவிச்சென்று திமிங்கலத்தைக் காண்கிறான்.இம்முறை, ப்ரின்ஸ்சை பார்க்க முடியாவிட்டாலும், தன் முதலாளியுடன் ப்ரின்ஸ் ஒரு சிறிய கூண்டினுள் இருந்துகொண்டு ஒரு மொழிபெயர்ப்பாளனின் உதவியுடன் தனக்கு இங்கிருந்து விடுதலை வேண்டும் - மக்கள் அனைவரும் என் பின்னாள் அணி திரள்வார்கள் - இங்கு நடக்கும் அனைத்து விஷயங்களையும் அடியோடு மாற்றப் போகும் புரட்சி நடக்கப்போகிறது என்று உரையாற்றிக் கொண்டிருப்பதைக் கேட்கிறான்.என்னமோ ஒருவகையான ஆபத்து ஊரைத் தாக்கப்போவதாக அனைவரும் நினைத்தார்களே.........அது இதுதானோ.....

பெரும் கலக்கமுற்றவனாக ஓடத் துவங்குகிறான். இருளைக் கிழித்துக் கொண்டு தீ ஜுவாலைகள் எரிய ஆரம்பிக்கின்றன.ஒவ்வொரு ஆளாக ஒன்றுகூடுகின்றனர். ப்ரின்ஸ் அவர்களுக்கு இடையே இருக்கிறானா ? தெரியவில்லை.கூட்டம் மெல்ல நடைபோட ஆரம்பிக்கிறது.வேகம் அதிகமாகிறது.இன்னும் கொஞ்சம் வேகமாக.இன்னும் கொஞ்சம் வேகமாக. இப்போது நாமும் அவர்களுடன் சேர்ந்தே நடக்கிறோம். அதோ , ஆதரவற்றவர்களுக்கான மருத்துவமனைக்குள் நுழைகிறார்கள்.மிகுந்த கட்டுக்கோப்புடன் – கட்டிலில் இருக்கும் நோயாளிகளை முதியவர்களை எல்லாம் இழுத்துப் போட்டு கொடூரமாக தாக்குகிறார்கள்.கண்ணில்படும் அனைத்து பொருட்களையும் – மருத்துவ உபகரணங்கள் உட்பட, அடித்து துவம்சம் செய்கிறார்கள்.இதை அனைத்தையும் ஒளிந்திருந்து யானுஸ் பார்த்துக்கொண்டிருக்கிறான். ஒவ்வொரு அறையாக முடித்துக் கொண்டு வருகிறார்கள்.அப்படி நுழைந்த ஒரு அறையில் குளியலறை திரைச்சீலையால் மூடப்பட்டிருக்கிறது. ஆவேசத்துடன் அதை கிழித்து எரிகிறார்கள்..........அங்கே..................



இதை கண்ட மொத்த கூட்டமும் அப்படியே திரும்பிச் செல்கின்றனர். ஒருவேளை மனித வாழ்கை அவ்வளவுதான் என்று உணர்ந்தவர்கள் கொண்டார்களா.

வலுஷ்கா மிகுந்த மன அழுத்தத்துடன் அங்கிருந்து நகர்கிறான்.தூங்காமல் இரவை ஒரு நொறுக்கப்பட்ட கட்டிடத்தில் கழித்த பின், அதிகாலையில் அங்கிருந்து வெளியேறுகிறான்.பெரிதும் கலங்கிய மனநிலையில் ஒரு தண்டவாளத்தில் நடக்கத் தொடங்குகிறான்.திடீரென்று ஒரு ஹெலிகாப்டர் அவனை துரத்த ஆரம்பிக்கிறது.

ஒரு மனநல மருத்துவமனையில் வலுஷ்கா அமர்ந்திருக்கிறான்.அருகில் கியோர்கி.அவனிடம் அளவளாவி விட்டு வெளியே வருகிறார். சதுக்கத்தை கடக்கும் போது அங்கு இதுவரை வலுஷ்கா வற்புறுத்தியும் பார்க்காத – திமிங்கலம் தனியாக உருக்குலைந்து கிடக்கிறது.விவரிக்கமுடியாத துக்கத்துடன் அதை கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்கிறார்.


நானும் பல்வேறு நாடுகளின் சினிமாக்கள் சிலவற்றை பார்த்திருக்கிறேன்.ஆனால், இந்த அளவுக்கு என்னை ஒளிப்பதிவு தாக்கிய படங்கள் ரொம்ப குறைவு. ஊழிப்பெருவெள்ளம் மாதிரியான அப்படியே மொத்தமாக மூழ்கடிக்கும் வகையான ஒளிப்பதிவு இல்லை.சிறுகச்சிறுக அப்படியே உள்ளிழுத்தது. படத்தின் ஆரம்பத்தில் வரும் 10 நிமிட பார் காட்சி ஆகட்டும், அந்த திமிங்கலம் ஊருக்குள் வரும் காட்சியாகட்டும், அந்த மாபெரும் கூட்டம் முன்னேறும் காட்சி ஆகட்டும் உண்மையாகவே அவைகளையெல்லாம் பார்த்தால் தான் நான் சொல்ல வருவது புரியும்.

கதாபாத்திரங்களின் நிழலுக்கு உயிர்வந்து கையில் கேமேராவுடன் நடமாடி இருக்கும் போல.அத்தனை நெருக்கம் + தாக்கம்.வீடு சம்பந்தமான காட்சிகளில், அழையா விருந்தாளி போல கேமெரா - கதாபாத்திரங்கள் வரும் முன்னரே வீட்டினுள்ளே ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு படம் பிடித்ததைப் போல தோன்றுகின்றன.

படத்தில் மொத்தமே 39 கேமெரா ஷாட்கள்.ஏன் இந்த நீண்ட நெடிய ஷாட்கள் தேவைப்படுகின்றன ? என்னளவில் இதுபோன்ற காட்சியமைப்புகள் மூலம் படத்திற்கும் பார்வையாளருக்கும் இடையேயான இடைவெளி குறைவதாக உணர்கிறேன்.கதாபாத்திரங்கள் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் நாமும் அப்படத்தை நோக்கி ஒவ்வொரு அடியாக உள்ளிழுக்கப்படுவதாக எனக்குப்படுகிறது.கருப்பு & வெள்ளை படங்கள் என்றாலே தானாகவே ஒரு ஆழம் படத்தில் குடிகொண்டுவிடும்.அதையும் தாண்டி இவர் வைத்திருக்கும் கோணங்கள்...........

அடிக்கடி வலுஷ்கா கடவுள் குறித்து பேசுவதால், அந்த திமிங்கலத்தை கடவுள் சார்ந்த குறியீடாக எடுத்துக் கொள்ளலாமா................இல்லை....ஹங்கேரி ஆரம்பகாலத்தில் கடுமையான கம்யூனிசத்தின் பிடியில் இருந்தது.அந்த காலகட்டத்தில் நிலவிய அசாத்திய சூழ்நிலைகளை குறிக்கிறதா..............................கடந்த இருபது ஆண்டுகளாக உலகமயமாக்கலால் பல்வேறு தொழில் சிதைவுகள் ஹங்கேரியில் நிகழ்ந்துள்ளதே(அங்கு மட்டும் தானா)........அந்த காப்டலிசம் குறித்தான பார்வையா............அல்லது கியோர்கி செய்து வரும் ஆராய்ச்சி - பேதம் இருப்பதாக அவர் கருதும் இசையமைப்பு போல – சமன்குழைந்த அவ்வூர் மக்களின் வாழ்வு குறித்தானதாகவும் இருக்கலாம். இதுபோன்ற குறியீடுகள் இல்லாமலே கூட அதன் இயக்குனர் கையாண்டிருக்கலாம். அவரவர் கண்ணோட்டத்தை பொறுத்து இவை எல்லாம் வேறுபடலாம். மேலே குறிப்பிட்டிருக்கும் டாரின் மேற்கோளை மறுபடியும் படிக்க வேண்டுகிறேன். (இந்த தகவல்கள், கோணங்கள் எல்லாம் பிறகு நெட்டில் தேடியபோது புலப்பட்டவைகள்).

எனக்கு இந்த படத்தின் முடிவில் அந்த திடுக்கிடும் காட்சி, அசோகமித்திரனின் பதினெட்டாவது அட்சக்கோடை ஞாபகப்படுத்தியது.அப்படிப் பார்த்தால் இந்தப் படம் நம் நாட்டிற்கே பல சமயங்களில் பொருந்தும். மேற்குறிய அதே மதம் – இசங்கள் காரணமாகவே.






பெல்லா டார் (Bela Tarr) – சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். ஹங்கேரி நாட்டினர். 16வயது வரை ஒரு தத்துவவாதியாக ஆவதயே லட்சியமாக் கொண்டிருந்தவர் 17 வயதில் திடீரென்று சினிமாவின்பால் ஈர்க்கப்பட்டு தீவிரமாக இதில் இறங்கினார்.அவரைப்பற்றி கொஞ்சமே கேள்விப்பட்டுள்ளேன்.தெரிந்தவற்றை இங்கே பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

அடுத்த தர்கொவ்ஸ்கி என்றே பலபேர் இவரை அழைக்கின்றனர். இதில் முக்கியமான விஷயம் டர்கொவ்ஸ்கி ஆகட்டும் பெல்லா டார் ஆகட்டும், தங்களின் படங்களில் குறியீடுகளை எல்லாம் வேண்டுமென்றே வைப்பதில்லை என்று மறுத்தவர்கள்.மேலும் டார் – ஹெர்சாக் போன்றவர்கள் ஸ்டோரி போர்டு சமாச்சாரத்தை நம்பாதவர்கள்.கேமரா...என்ன சொல்ல. Master of long takes என்றே இவரை அழைக்கின்றனர். மேலும் வெறும் காட்சியின் அழகியலுக்காக கேமெரா கோணங்களையும் நீண்ட காட்சிகளையும் இவர் வைப்பதாகத் தெரியவில்லை.


இவரது படங்கள் பெரும்பாலும் ஒரு கனவின் மீது கட்டமைக்கப்பட்ட யதார்த்தமாக இருப்பதாகத் தெரிகிறது(Dreamscape). இன்னொரு முக்கியமான விஷயம், இவருக்கும் ஹங்கேரியின் எழுத்தாளரான Lazlo Krasznarhokai உள்ள நட்பு.அவரது பல நாவல்களையே – இந்தப் படம் உட்பட – டார் படமாக்கி உள்ளார்.அப்படியே நாவலை தழுவி எடுக்காமல், ஒவ்வொரு முறையும் எழுத்தாளருடன் அமர்ந்து கதையை மெருகேற்றுகிறார். ஒவ்வொரு திரைப்படத்திற்கும் இவர் எடுத்துக் கொள்ளும் இடைவெளியைப் பாருங்கள்.ஆண்டுக்கணக்கில் நீண்ட காட்சியமைப்புகளுக்கு ஏற்ப அனைத்தையும் திட்டமிட்டு................அபாரம் போங்கள். அவரது மிக முக்கியமான திரைப்படம் Satango (Satan + Tango).கிட்டத்தட்ட ஏழரை மணிநேரம் ஓடும் திரைப்படும் அது.ஏழரை மணிநேரமாக இருந்தாலும் கூட பார்வையாளர்களை மொத்தமாகத் தன்வயப்படுத்திய படம் என்று தெரிகிறது.
இனி அவரது மற்ற படங்களி தேடிப்பிடித்து பார்ப்பதுதான் என் வேலை.நேற்று இந்த படத்தைப் பார்த்து முடித்த கையோடு மற்றொரு படத்தை தரவிறக்கி விட்டேன்.மற்றவைகளும் இனி பார்க்க வேண்டும்.
  1. Family Nest (1977)
  2. The Outsider (1981)
  3. The Prefab People (1982)
  4. Autumn Almanac (1985)
  5. Damnation (1988)
  6. Satan's Tango (1994)
  7. Werckmeister Harmonies (2000)
  8. The Man from London (2007)
  9. The Turin Horse (2011)

படத்தை இங்கே தரவிறக்கலாம்:
Facebookers..

33 comments :

  1. வட....என்று யார் கமென்ட் போட்டாலும், அவர்கள் கனவில் பத்து நாளைக்கு தொடர்ந்து நான் வருவேன் என்று சாபமிடுகிறேன்......

    ReplyDelete
  2. ஹி ஹி சூப்பர் .. அ.மி நாவலை சொன்னது

    ReplyDelete
  3. படம் ரொம்ப ஸ்லோவா போனாலும் நல்லா இருக்கும்னுதான் நினைக்கிறேன் ட்ரைலர் நல்லா இருந்தது.

    ReplyDelete
  4. // சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். ஹங்கேரி நாட்டினர்.//

    வாட் எழவு திஸ்? வொய் திஸ் சமகாலம்? நாட்டினர் ஈஸ் ப்ளூரல்! டோண்ட் ட்ரை டூ ஹார்ட் டு பி எல்கியவாதி.

    யு ஸோ ஃபன்னி.. நாட் பன்னி.

    ReplyDelete
  5. //சேவல் முட்டை போடும் வரை காத்திருக்கும்//

    இட் யூஸ்வலி டேக் ஒன்லி 5 நிமிட்ஸ்.

    ReplyDelete
  6. //இவரது படங்கள் பெரும்பாலும் ஒரு கனவின் மீது கட்டமைக்கப்பட்ட யதார்த்தமாக இருப்பதாகத் தெரிகிறது(Dreamscape). //

    //கனவுக்கும் விழிப்புக்கும் இடையேயான அந்த குறுகிய, மிகக்குறுகிய நிலை உங்களுக்கு ஞாபகம் இருக்கா ? //

    இட் மீன்ஸ்... யு ஆர் இன் டோப்.

    ReplyDelete
  7. ennavo boss ...pudhusa pudhusa padam podraina!!!

    ReplyDelete
  8. எத்தனை கேமரா ஷாட் என்றெல்லாம் மிகவும் நுணுக்கமாக ஆராயந்திருக்கிறீர்கள்...

    ReplyDelete
  9. கதையின் மீது எனக்கு என்னவோ ஆர்வம் ஏற்படவில்லை...

    ReplyDelete
  10. தல... Grosteque என்றொரு படம் பார்த்தேன்... எரிச்சலாகி விட்டேன்... அந்த படத்தை பற்றி உங்கள் கருத்தை தெரிந்துக்கொள்ள விழைகிறேன்...

    ReplyDelete
  11. பாஸ் தெரியாம்தான் கேக்கறேன். உங்களுக்கு எப்படி படம் பார்க்கறதுன்னே தெரியாதா? ஏன் இப்படி என் வாயிலேயே விழறீங்க?

    ReplyDelete
  12. பெலா தார் படங்கள் மிகத்தீவிரமான படங்கள்.எங்கள் கோணங்கள் பிலிம் சொசைட்டியில் இவரது படங்களை போடப்போகிறார்கள்.உலக சினிமாவின் மிக முக்கியமான ஆளுமையை தொட்டிருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. @Amizhthini

    செல்வம் மாணிக்கம் அவர்களே என் பதிவுல கமென்ட் போட்டுட்டாரு.............இதுக்கு மேல என்ன வேணும்......???

    @எஸ்.கே
    நண்பா.....னா அந்த வேகத்துல படம் போகும்.இருந்தாலும் எனக்கு அது ரொம்ப புடிச்சது

    @யோகி ஸ்ரீராமானந்த குரு
    ஷுவாமி...
    // சமகாலத்தின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். ஹங்கேரி நாட்டினர் //
    எழுதும் போதே அந்த சந்தேகம் வந்தது......

    நாட்டினன்............ஓகே............

    மரியாதையா எப்புடி சொல்வது................தெரியல.............

    // இட் யூஸ்வலி டேக் ஒன்லி 5 நிமிட்ஸ் //
    என்னாது..........நிமிசத்துல சேவல் முட்ட போடுமா............அப்ப உங்ககிட்ட இருந்து விலகியே இருக்கணும்...

    ReplyDelete
  14. @மகேஷ்
    // pudhusa pudhusa padam podraina //
    ண்ணா........அப்ப தான்தாங்கண்ணா இலக்கியவாதி ஆக முடியும்...அதுக்குதான் சமகாலம் போன்ற வார்த்தைகள உபயோகிக்கிறேன்....


    @Philosophy Prabhakaran
    நண்பா...
    இந்த படத்தின் கதையை - ரொம்பல்லாம் தெரியாம, டெக்னிகல் விஷயங்கள் தெரியாமா - டைரக்டர் பேர வெச்சு மட்டுமே பாத்தேன். பெரும்பான்மையான படங்கள அப்படி பாக்குறதுதான் வழக்கம். லாங் ஷாட்கள் எல்லாம் பாக்கும் போதே தெரிஞ்சிருதே.........

    இவரை போன்ற டைரேக்டர்கள் சும்மா போற போக்குல லாங் ஷாட்கள வைப்பதில்லை.பாத்தீங்கன்னா உங்களுகே தெரியும்

    கதை.................எனக்கு இது போன்ற ஆன கதைகள் ரொம்ப புடிக்கும்

    Grosteque - அந்த படம் கருப்பா - சிவப்பான்னு கூட தெரியல......என்னமோ ஒரு பயங்கர ஹாரர் படம்ன்னு கேள்விப்பட்டிருக்கேன்...................இந்த படத்த பத்தி - டெனிம் மோகன் விளக்கி சொல்லுவாரு


    @ஆனந்த்-ஷா
    தங்களது மேலான கருத்திற்கு நன்றி


    @உலக சினிமா ரசிகன்
    நன்றி சார்...

    அவர் படங்கள பெரிய திரையில பாத்தா - எப்புடி இருக்கும்னு நெனைக்கவே செமையா இருக்கு.................முதல் பத்து நிமிசத்துலயே நானெல்லாம் ஆடி போயிட்டேன்...

    ReplyDelete
  15. ஒன்னும் புரியல ,என்னை போல பாமரனையும் மனதில் வைத்து கொண்டு எழுதி இருக்கலாம்,நாளுக்குநாள் உங்கள் எழுத்து கடினமாகிகொண்டே போகிறதே,

    //படத்தில் மொத்தமே 39 கேமெரா ஷாட்கள்.ஏன் இந்த நீண்ட நெடிய ஷாட்கள் தேவைப்படுகின்றன ? படத்தில் மொத்தமே 39 கேமெரா ஷாட்கள்.ஏன் இந்த நீண்ட நெடிய ஷாட்கள் தேவைப்படுகின்றன ? என்னளவில் இதுபோன்ற காட்சியமைப்புகள் மூலம் படத்திற்கும் பார்வையாளருக்கும் இடையேயான இடைவெளி குறைவதாக உணர்கிறேன்.//

    ஸ்டான்லி குப்ரிக்கும் இதையே தான் சொல்லி இருக்கிறாரு,நீங்கதான் அடுத்த ஸ்டான்லி குப்ரிக்,

    அடுத்த தர்கொவ்ஸ்கி என்றே பலபேர் இவரை அழைக்கின்றனர்//

    நீங்கதான் அடுத்த தர்கொவ்ஸ்கின்னு நினைத்துட்டு இருந்தேன்,நீங்க சொல்லவந்தவர் Fyodor Dostoyevsky தானே,இல்ல நான் தான் தவறா புரிஞ்சு கிட்டேனா ?

    ReplyDelete
  16. @Denim mohan
    உங்களுக்கு இதே வேலையா போச்சு.....நைட் வேல பாத்துட்டு tiredஆ வந்திருப்பீங்க..இப்பதான் முழிச்சிருப்பீங்க.................தூக்க கலக்கத்துல படிச்சா....................

    அந்தாளு முக்கி முக்கி ஏழு வருஷம் செலவழிச்சு, அப்பறம் இந்த படத்த எடுத்திருக்கான்..அத ஒரு பதிவுல எப்புடி சொல்ல முடியும் ? இதுல கடினாமா என்ன இருக்குன்னு ஒண்ணும் புரியல.........

    அட..சீரியசா வேற மாதிரி எழுதவும் தெரியல...முந்தாநாள்
    பாத்தேன்..நேத்து எழுதுனேன்........என்ன தோணுச்சோ, அப்புடியே எழுதுனேன்..சிரமப்பட்டு வாரத்தைகள - வேணும்னே தேடி புடிச்சு போடல.......

    குப்ரிக் சொல்லியிருகாரா ? யார்ட - எப்ப ?? அப்ப, இங்க ரெண்டு பேருக்கும் ஒரே அலைவரிசை போல...............சத்தியமா, என் மனசுல - லாங் ஷாட்கள பத்தி நேத்து டக்குனு இதான் தோணுச்சு

    இன்னொரு தடவ - இந்த பாமரன் என்ற வார்த்தைய பாத்தேன், என்ன நடக்கும் என்று எனக்கே தெரியாது.......

    ReplyDelete
  17. உங்களுக்கு இதே வேலையா போச்சு.....நைட் வேல பாத்துட்டு tiredஆ வந்திருப்பீங்க..இப்பதான் முழிச்சிருப்பீங்க.................தூக்க கலக்கத்துல படிச்சா....................

    என்னமோ சொல்லுறீங்க திரும்ப படிச்சு பார்க்குறேன்

    ReplyDelete
  18. இங்க ரெண்டு பேருக்கும் ஒரே அலைவரிசை போல..//

    நானும் அதைதான் சொல்ல வரேன்

    ReplyDelete
  19. நண்பா,
    கதையை ரெண்டு தடவை வாசித்தேன். ஆனால் புரிய மாட்டேங்குது. புரட்சியாளர்கள் ஏன் மருத்துவமனையை தாக்க வேண்டும்? அந்த கலகத்தில் கியோர்கிக்கும் பங்கு இருக்கிறதா? வெளியூர்க்காரன் பிரின்ஸுக்கு எப்படி கலகத்தைப் பற்றி முன்கூட்டியே தெரியும்?
    வெர்க்மெயிஸ்டர் ஹார்மனி பற்றி படத்தின் ஆரம்பத்தை தவிர வேறெங்கும் காட்டவேயில்லையா??

    ReplyDelete
  20. 2011லயும் கறுப்பு -வெள்ளை படமெடுக்கிறாரா? இந்த டைரக்டரை புரிஞ்சுக்கவே முடியலையே!!!

    ReplyDelete
  21. அட... நிச்சயமா பார்த்தே ஆகணுங்கிற ஆவலை இந்தப்படம் தூண்டிடுச்சி.. இணையத்தில் பதிவிறக்கி பார்ப்பதில்லை என்ற கொள்கை வைத்திருப்பதால், எப்படியாது இந்தப்படத்தை வாங்க முயற்சிக்கிறேன்

    ReplyDelete
  22. @JZ

    புரிஞ்சுக்குற மாதிரி சொல்ல முடியாத கதை.அதுக்குதான் அந்த quote சொல்லியிருக்கேன்.

    When you watch my movies, please don’t speculate. Just trust your eyes and listen to your heart

    நா ரொம்ப கஷ்டப்பட்டு தேடிபுடிச்சு தான் இது போன்ற களை எழுதுறது. ஆனா கவனிக்கப்படமாலே போயிருது...

    நமக்கே சில சமயம் ஒருவித restlessness இருக்கும்.ஏன் எதுக்குன்னு தெரியாம............அதுமாதிரி ஒரே ஊரே இருந்தா..........அதான் கதை................

    பாஸ்..அவுங்க புரட்சியாளர்கள் எல்லாம் இல்ல.........hypnotize பண்ணபட்ட ஆட்கள் மாதிரிதான் அவுங்க நடவடிக்கை இருக்கும்.

    B & W மாதிரி டெப்த் எதிலும் வராது. உங்கலயே நார்மலா ஒரு கலர் போட்டோவும் அதையே B&Wல மாத்தி பாருங்க.உங்களுகே புரிஞ்சிரும். படம் வந்தது 2000............2011 கிடையாது

    ReplyDelete
  23. @கவிதை காதலன்

    // ணையத்தில் பதிவிறக்கி பார்ப்பதில்லை என்ற கொள்கை வைத்திருப்பதால்//
    நல்ல விஷயம் இதுபோன்ற படங்களை அப்படி ஒரிஜினலா வாங்கி பார்ப்பது தன் முறை.....அதன் creatorகளுக்கு நாம் செய்யும் மரியாதையும் கூட..எங்க...ஒரு டிவிடி 700 முதல் 1000 ரூபாய் வர விக்குது...ஒண்ணும் பண்ண முடியாது

    ReplyDelete
  24. //படம் வந்தது 2000............2011 கிடையாது//
    நான் இந்தப் படத்தை சொல்லலை நண்பா.. The Turin Horse ட்ரெயிலர் பார்த்துவிட்டு வந்து தான் அந்த கமெண்டை போட்டேன்..

    //நா ரொம்ப கஷ்டப்பட்டு தேடிபுடிச்சு தான் இது போன்ற களை எழுதுறது. ஆனா கவனிக்கப்படமாலே போயிருது...//
    அதுக்குத்தான் இந்த முறை ட்ரெயிலரையும் போட்டு, டவுன்லோட் லிங்கையும் கொடுத்து வைச்சிருக்கீங்களா? சரி.. பார்த்துடுறேன்!

    ReplyDelete
  25. அண்ணா கலக்குறீங்க!!ஹங்கேரி படம் நான் பார்த்ததில்ல!!(ஸ்வீடிஷ் வரைக்கும் போயிட்டு யூ டர்ன் அடிச்சிட்டேன்!!பார்த்துடுரேன்!நீங்க சொல்ற கனவுக்கும் நிஜத்துக்கும் நடுவிலான நிலைன்னா ஒரு மாதிரி இன்செப்ஷேன் ஷட்டர் ஐலாண்ட் மாதிரியா?சரி அதான் சொல்லிட்டீங்களே dont speculate னு!!

    ReplyDelete
  26. @JZ
    // நான் இந்தப் படத்தை சொல்லலை நண்பா.. The Turin Horse ட்ரெயிலர் பார்த்துவிட்டு வந்து தான் அந்த கமெண்டை போட்டேன்.. //

    ஓ.........அதுவா.............ரைட்

    @VIKI.......
    சார்.....நான் உங்களுக்கு அண்ணனா சார்....பரவாயில்ல வுடுங்க..........

    // !நீங்க சொல்ற கனவுக்கும் நிஜத்துக்கும் நடுவிலான நிலைன்னா ஒரு மாதிரி இன்செப்ஷேன் ஷட்டர் ஐலாண்ட் மாதிரியா //

    இன்செப்சன் எல்லாம்....................Paprika பாத்திட்டீங்க்ளா.........

    இது வேற மார்க்கமான படம்..அதான் சொல்லிட்டேனே........
    // சேவல் முட்டை போடும் வரை காத்திருக்கும் பொறுமைசாலிகளைக் கூட இந்த படத்தின் //

    ReplyDelete
  27. .Paprika பாத்திட்டீங்க்ளா.........//
    .
    .
    மூணு paprika படம் உள்ளது நீங்கள் சொல்வது எதை?(மூனையும் நான் பார்க்கலை)

    ReplyDelete
  28. // மூனையும் நான் பார்க்கலை //

    அது ராத்திரி நல்லா தெரியும்....பகல்ல சிரமப்பட்டு பார்க்கணும்.....


    Paprika - http://www.imdb.com/title/tt0851578/

    ReplyDelete
  29. அது ராத்திரி நல்லா தெரியும்....பகல்ல சிரமப்பட்டு பார்க்கணும்.....///

    .
    .
    அடங்கப்பா ரீல் அந்து போச்சு!!ஹீ ஹீ

    ReplyDelete
  30. என்ன சொல்றது? நீங்க இப்ப எழுதற படங்கள் எல்லாமே சுத்தமா கேள்வியே படாத படங்களா இருக்கு. அதுனால, பல நல்ல இயக்குனர்களின் படங்கள் பத்தி தெரிஞ்சிக்க முடியுது. ஸோ, ஜாலிதான். நிறைய நல்ல படங்கள் கிடைக்குதே. உ.சி. ரசிகரின் கமென்ட் பார்த்தா, இந்தப் பட இயக்குனர்களும் சரி, படங்களும் சரி, எவ்வளவு டெப்தானவை என்பது தெரியுது. கண்டின்யூ பண்ணுங்க. (சீக்கிரமே காலச்சுவடுலையோ இல்ல உயிர்மைலையோ உங்க கட்டுரைகள் வரப்போவுதுன்னு மட்டும் தெரியுது)

    ReplyDelete
  31. @கருந்தேள் கண்ணாயிரம்

    // க்கிரமே காலச்சுவடுலையோ இல்ல உயிர்மைலையோ உங்க கட்டுரைகள் வரப்போவுதுன்னு மட்டும் தெரியுது //

    ஏன்................இல்ல...................ஏன்னு கேக்குறேன்........................ஏதோ.உங்க பதிவுல, FBல மொக்கையா சிலபல கமென்ட் போடுறேன்..அதுவொரு தவறா.................அதுக்கு இம்புட்டு பெரிய வார்த்தையா..........................


    @viki

    Thanks..hi...hi

    ReplyDelete
  32. தோழர் கொழந்த,
    பேலா தாரின் படத்தைப் பற்றிய முதல் பதிவு இதுவாகத்தானிருக்கும் என நினைக்கிறேன், ஏனென்றால் நான் அதிகம் வலைத்தளத்தில் உலாவுபவனில்லை. தற்செயலாக இதைப் பார்க்க நேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி. காலநீட்சியின் அழகியலுக்கு தார்கோவ்ஸ்கிக்கு பின்பு ஒரு புதிய பரிணாமத்தைக் கொடுத்தவர்கள் என்ற நிரலில் தியோ ஆஞ்சலோபெலோஸ்,சுக்ரோவ் போன்றவர்களோடு வைக்கத்தகுந்தவர் பேலா தார். Damnation(1988)லிருந்து Turin Horse வரையிலான ஐந்து படங்கள் இந்த வகையில் கொண்டாடத் தகுந்தவை. அவரின் மற்றைய படங்களைப் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    தோழமையுடன்

    லிங்கராஜ வெங்கடேஷ்
    (lingarajavenkatesh@gmail.com)

    ReplyDelete