Sunday, August 21, 2011

Stamp Stock Book

நா அப்ப எட்டாப்பு படிச்சுகிட்டு இருந்தேன். படிச்ச ஸ்கூல் – எம்.எஸ்.பி, திண்டுக்கல். 6 – 12 வரை அங்கதான் படிச்சேன். ஒருகாலத்துல தொடர்ந்து வருஷாவருஷம் ஸ்டேட் ரேங்க் ஹோல்டர்கள உருவாக்கிகிட்டு இருந்த ஸ்கூல்.நாங்கெல்லாம் சேர்ந்த பெறகு எப்புடி உருப்புடும் ? இப்பலாம் கழுத தேய்ஞ்சு கட்டெறும்பான கததான். எங்க வுட்டேன், ஆங்....எட்டாப்பு. சுப்பிரமணியன்னு ஒரு வாத்தியார் இருந்தார்.ரொம்ப அருமையான வாத்தியார்.ஏன் அருமைனா, பாடம் நடுத்துவத தவிர, நெறைய விசயங்கள மாணவர்களிடம் அறிமுகப்படுத்தினார். அவுரு வீட்டில பழைய Mad, National Geographic இதழ்கள் எல்லாம் நெறைய இருக்கும்.அப்ப இருந்துதான் அந்த புத்தகங்கள் தெரிய வந்தது.அவுரு யாரையும் டியுஷன் வாங்கன்னு கூப்பிடாட்டியும் கூட வம்படியா போய் சேர்ந்தோம்.அவுரு பாடங்களை தவிர, பிற வாத்தியார்களின் பாடங்களையும் கஷ்டமாயிருக்குனு சொன்னா, அதையும் சேத்து நடத்துவார்.

ஒருதடவ இந்த தூதரகங்கள்(Embassy) பத்தி பேச்சு வந்துச்சு.அப்ப, அவர் எங்ககிட்ட நீங்க ஏதாவது தூதரகங்களுக்கு – உங்க நாட்டை பத்தி தெரிஞ்சுக்க விரும்புறோம்,அதுனால உங்க நாட்டை பத்தி எதுனா புக் அனுப்புங்க – அப்புடின்னு லெட்டர் போட்டா அவுங்க ஒரு புக் மாதிரி அனுப்பி வைப்பாங்க.கூடவே சில ஸ்டாம்ப்களும் அனுப்பி வைப்பாங்கனு சொன்னார்.மொதல்ல எனக்கொன்னும் பெருசா தெரியல.ஆனா எங்க க்ளாஸ் பசங்க நாலஞ்சு பேருக்கு நோர்வே,சீனா - அப்பறம் சிலநாடுகள் ஞாபகம் இல்ல – அங்கிருந்து ரிப்ளை வர ஆரம்பிச்சது.அவ்வளவுதான்.எதித்த பாய் கடையில போஸ்ட் கவருக்கு டிமான்ட் ஏற ஆரம்பிச்சுது.நாங்க சரமாரியா லெட்டர் போட ஆரம்பிச்சோம்.வெறும் ஸ்டாம்ப்போட வுட்டோமா...உங்க நாட்டு நாணயங்கள் எப்புடி இருக்குன்னு பார்க்க விரும்புறோம், பணம் எப்படி இருக்குன்னு பாக்க விரும்புறோம்....இந்த பிட்டுகளையும் சேர்த்தே போட்டோம்.ஒருத்தர் ரெண்டு பேருக்கு ஒருசில சில்லற காசும் வந்திச்சு.பாருங்க....அப்பவே எப்புடி நேக்கா அவுங்ககிட்ட இருந்து காச கறந்தோம்னு.ஆனா, கொஞ்சநாள்ல சுதாரிச்சுட்டாங்க.அப்பறம் வெறும் புக்கும் ஸ்டாம்ப்களும் மட்டும்.

அதுக்கு முன்னாடி சிலபல ஸ்டாம்ப்கள சேத்து – அதை சேகரிப்புன்னு சொல்ல முடியாது, கோலி குண்டு, பிலிம் துண்டு மாதிரி சேத்து வெச்சது – வெச்சிருந்தேன்.இந்த தூதரக விஷயத்துக்கு அப்பறம் திடீர்னு ஸ்டாம்ப் சேகரிக்கும் வெறி ஏறிருச்சு.எங்க போனாலும் – யார பாத்தாலும் உங்ககிட்ட எதுனா வெளிநாட்டு ஸ்டாம்ப் இருக்கான்னு கேட்டு உசுர வாங்குறதே பொழப்பா போச்சு.நெறைய ஸ்டாம்ப்கள் ஆப்படவும் செஞ்சது.அப்பத்தான் நண்பர்கள் மூலம் இந்த ஸ்டாம்ப்கள சேகரிச்சு வைக்குறதுக்குனே ஒரு புக் இருக்கு, அதோட கடையில் மொத்த விலைக்கே ஒரு ஆல்பம் மாதிரி ஸ்டாம்ப்கள் விக்குறாங்கன்னு தெரிய வந்தது. அப்ப எங்கூர்லயே பெரிய புத்தக கடை சகாய பேப்பர் ஸ்டோர்ன்னு ஒரு கடைதான்.அங்க போயி அந்த ஆல்பத்தையும் ஸ்டாம்ப் ஸ்டாக் புக்கையும் வாங்கின போது இருந்த பரவசம் இன்னும் நினைவிருக்கு. அன்னைக்கு நைட்டே உக்காந்து எல்லாத்தையும் அடுக்கி அடுத்த நாள் ஸ்கூல்ல எல்லார்கிட்டயும் காமிச்சு ஒரே கலக்கல். என்ன ஒண்ணு, கடையில மொத்தமா வாங்குனதுனால ஏதோ ஒரு குறை.நாம சேகரிக்காம சுலபமா வாங்கிட்டோமேன்னு(இப்பலாம் போஸ்ட் ஆபிஸ்களிலேயே இந்த மாதிரி ஆல்பங்கள் வந்திருச்சு). அப்பறம் என்ன கொஞ்சம் கொஞ்சமா அந்த போதை உச்சத்துக்கு போயி சுருதி குறைய ஆரம்பிச்சிருச்சு.இப்பலாம் கிட்டத்தட்ட அந்த பழக்கம் உட்டே போயிருச்சு.ஸ்டாம்ப்களோட பழைய நாணயங்களும் நெறைய வெச்சிருக்கேன். பிரிட்டிஷ் நாணயங்கள் நெறைய இருக்கு.


சரி..............இந்த ஸ்டாம்ப்கள முதல்முதல்ல எங்க – எந்த நாடு வெளியிட்டிருக்கும் ? எதுனா யூகிக்க முடியுதா........ஒருவேள நீங்க இங்கிலாந்து என்று யூகிச்சிருந்தீங்கன்னா.....கரெக்ட். 1840 ஆம் ஆண்டு மே 1 – உலகின் முதல் தபால்தலையான Penny black: க்வீன் விக்டோரியாவின் உருவம் தாங்கியது இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை இங்கிலாந்து வெளியிடும் அனைத்து ஸ்டாம்ப்களையும் இங்கிலாந்து ராணிதான் அப்ரூவ் செய்ய வேண்டும்.இன்னொரு முக்கிய விஷயம், இதுவரை தான் வெளியிட்ட அனைத்து ஸ்டாம்ப்களிலும் – இன்ன நாடு – என்று அச்சடிக்காத ஒரே நாடும் இங்கிலாந்துதான்.சரி....ரெண்டாவதாக ஸ்டாம்ப்பை வெளியிட்ட நாடு, ஆச்சரியமாக – பிரேசில்.

Penny Black

தபால்தலை சேகரிப்பும் தபால்தலை வெளியிடப்பட்ட கொஞ்சநாளிலேயே தொடங்கிருச்சு.அரிதான தபால்தலைகள சேகரிக்கும் போட்டியில இங்கிலாந்தில் 1890வாக்கில் கொலை கூட நடந்திருக்காம்.ரெகுலரான தபால்தலைகள் போக ஸ்பெஷலான தபால்தலைகள ஒவ்வொரு நாடும் சிலபல சமயங்களில் வெளியிடும்.யாராவது முக்கிய ஆளுமைகள பெருமைப்படுத்த, முக்கிய நிகழ்வுகளை குறிக்க, விலங்குகள் – இயற்கை சார்ந்தவைகள், அரசியல் ரீதியிலான நிகழ்வுகள், ஏதாவது சமூக விஷயத்த ப்ரோமொட் பண்ண, விளையாட்டு – அறிவியல் போன்ற ஏறக்குறைய எல்லா துறைகளுக்கும் ஸ்டாம்ப் வெளியிடுவாங்க.நாணயங்களும் அதுபோலவே.

ஸ்டாம்ப்கள், சும்மா தபால் அனுப்ப மட்டும் பயன்படுவதில்ல.ஒவ்வொரு ஸ்டாம்ப்க்கும் ஒரு வரலாறு உண்டு.எத்தனையோ முக்கிய விஷயங்கள அதன் மூலம் தெரிஞ்சுக்கலாம். அந்தகாலத்தில் இருந்த முக்கிய ஆட்கள், முக்கிய நிகழ்வுகளின் ஆவணம் தான் தபால்தலைகள். பாக்குற ஒரே வினாடில எங்கேயோ இழுத்துகிட்டு போயிரும். ஒரு தபால்தலை எத்தனை மனிதர்கள் எத்தனை நிகழ்வுகள் எத்தனை போஸ்ட் ஆபிஸ்களை பாத்திருக்கும். உணர்ச்சிகள் நிரம்பிய எத்தனை கடிதங்கள கொண்டு போய் சேர்த்திருக்கும். நீங்ககூட உங்க வீட்டில பழைய ஸ்டாம்ப் எதுனா இருந்தா எடுத்து பாருங்க.நா சொல்றது புரியும். முக்கிய விஷயங்கள தெரிஞ்சுக்கலாம்னு சொன்னேனே, அதுக்கு உதாரணமா எங்கிட்ட இருக்குற ரெண்டு ஸ்டாம்ப்களயே பாப்போம்.

மொதல்ல இது...


ஹாங்காங் – வரலாறு சற்றே குழப்பமானது. சீனாவுக்கும் பிரிட்டிஷ்க்கும் இடையேயான முதலாம் ஓபியம் போர்க்கு (1839–42) பிறகு பிரிட்டிஷ் அரசாங்கம் தான் அங்கு அரசாட்சி செலுத்தியது.ஒருவழியா 1997ஆம் ஆண்டு ஹாங்காங்கிற்கு தன்னாட்சி கெடச்சு சீனாவின் முதல் சிறப்பு நிர்வாகப் பகுதியாக(Special Administrative Regions) இணைந்தது.இந்த ஸ்டாம்ப் அதுகுறித்து இல்லை என்றாலும், இதுல பாத்தா பிரிட்டிஷ் முத்திரை இருக்கும். இப்ப இருக்குற ஹாங்காங் குறித்து மட்டுமே தெரிந்தவர்கள் இத பாக்கும் போது என்னடா பிரிட்டிஷ் க்ரௌன் இருக்கேன்னு ஆச்சரியப்படலாம், மேலும் அதுகுறித்து தெரிஞ்சுக்கவும் இந்த ஸ்டாம்ப் தூண்டலாம்.

ரெண்டாவது....இந்த ஸ்டாம்ப்:


எண்ணெய் கிணறுகள் பிரச்சனைல ஈராக் – குவைத் மீது 1990ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு செய்தது. இது கண்டு பொங்கிய உலக பாதுகாவலன் அண்ணன் அமெரிக்கா குவைத்தை ஆதரிக்கிறேன் பேர்வழி என்று பேருல உள்ள நொழஞ்சது. விளைவு – கல்ஃப் போர்.அதுக்கப்பறம் நடந்ததுதான் எல்லாருக்கும் தெரியுமே. அண்ணைக்கு இருந்து இந்த எண்ணெய் வளங்கள மறைமுகா கண்ட்ரோல் பண்ண ஆரம்பிச்சார் பெரியண்ணன். ஈராக்ல அப்ப ஆட்சில இருந்தது சதாம் உசைன். அமெரிக்காவில பெரிய புஷ். இந்த கதைய ஆரம்பிச்சு போயிகிட்டே இருக்கும்.அதுனால, ஸ்டாம்ப் பத்தி மட்டும் பாப்போம். ஈராக்கின் 1990ஆம் ஆண்டு குவைத் ஆக்கிரமிப்பு குறித்தே இந்த தபால்தலை


இந்த ஸ்டாம்ப் சேகரித்தல் நெறைய பேருக்கு வருமானம் ஈட்டித்தரும் விஷயமாகவும் இருக்கு.ஏன்னா, பெரும்பாலான சமயங்களில் தலைவர்களின் உருவம் – சில முக்கிய நிகழ்வுகள் தாங்கிய தபால்தலையோ நாணயமா ஒருமுறை அச்சடித்தால் திரும்ப அடிக்க மாட்டங்க.உதாரணமா இந்திராகாந்தி உருவம் பொறித்த பழைய பெரிய சைஸ் நாணயம்(எங்கிட்ட ரெண்டு இருக்கு) இப்ப நாலாயிரம் ரூபாய் வரை விலை போறதா இங்க படிச்சேன்.அதுமாதிரிதான் பல ஸ்டாம்ப்களும். அரிதான ஸ்டாம்ப்கள், நாணயங்கள என்ன விலை கொடுத்தாவது வாங்கவும் ஆட்கள் இருக்காங்க.


சரி.....எப்படி தபால்தலைகள சேகரிக்க ஆரம்பிக்க ? அது ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும்.சில பேர் கையில கெடச்சதெல்லாம் சேகரிப்பாங்க(என்னைய மாதிரி).சில பேர் எதுனா ஒரு குறிப்பட்ட வகை சார்ந்த – திரைப்படம், அறிவியல், விலங்கு, தலைவர்கள் – இப்படி சேகரிப்பாங்க. தவிர மெட்ராஸ் மூர் மார்கட் மாதிரியான இடங்களில் இதுபோன்ற கடைகளே உள்ளன.முக்கியாம ரெண்டே ரெண்டு விஷயங்கள் சொல்லி முடிக்கிறேன்.

1) வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் – உங்களுக்கு போர் அடிச்சா ஒருமாறுதலுக்கு, அந்தநாட்டின் ஸ்டாம்ப்கள சேகரிச்சு பாருங்க. கொஞ்சநாள்லயே அந்நாட்டின் வரலாறு, முக்கிய விஷயங்கள் கூட தெரிய வரலாம். முடிஞ்சா முயற்சி செஞ்சு பாருங்க.சுவராசியமா இருக்கும்.



2)    நம்மூர் ஆளுங்களுக்கு, பெரிய போஸ்ட் ஆபிஸ்கள் அனைத்திலும் Philatelic bureau என்ற அமைப்பு இருக்கும்.அதுக்கு சந்தா கட்டினோம்னா சில முக்கிய தபால்தலைகள் வெளியிடும் போதோ ஸ்பெஷல் கவர்கள் வெளியிடும் போதோ நமக்கும் அனுப்பி வைப்பாங்க.
  1. தகவல்களுக்கு இங்கே பார்க்கவும்.  
  2. இங்கேயும் பார்க்கலாம். 
உங்களுக்கு தெரிந்த பசங்க யாராவது இருந்தாங்கனா அவுங்க பிறந்தநாள் போன்ற விஷயங்களுக்கு இதுபோல அவுங்க பேருல சந்தா கட்டிவிட்டா அவுங்களுக்கு நல்ல ஒரு தொடக்கமா இருக்கும்.
Facebookers..

26 comments :

  1. பள்ளி நாட்கள்களனா நினைவு படுத்திட்டிங்க தலைவா

    ReplyDelete
  2. @Keanu

    தங்களது மேலான கருத்திற்கு நன்றி...

    ReplyDelete
  3. சுப்பிரமணியன்ன வாத்தியார் - ரியலி கிரேட்.

    தூதரகங்களுக்கு – உங்க நாட்டை பத்தி தெரிஞ்சுக்க விரும்புறோம்,அதுனால உங்க நாட்டை பத்தி எதுனா புக் அனுப்புங்க – அப்புடின்னு லெட்டர் போட்டா அவுங்க ஒரு புக் மாதிரி அனுப்பி வைப்பாங்க. - இந்த விஷயம்னா காலம் கடந்து இப்பதான் கொழந்த தெரியவருது. இப்ப உள்ள பசங்க இந்த மாதிரியான விசயத்துலனா ஆர்வமா இருக்காங்கலானு தெரியல.

    அவுங்க பிறந்தநாள் போன்ற விஷயங்களுக்கு இதுபோல அவுங்க பேருல சந்தா கட்டிவிட்டா அவுங்களுக்கு நல்ல ஒரு தொடக்கமா இருக்கும். - இனிமே இதுதான் வேலை.

    ReplyDelete
  4. நீங்கள் ஏன் இந்தக் கட்டுரையை சுட்டி விகடனுக்கு அனுப்ப கூடாது

    ReplyDelete
  5. நான் எதையும் தொடர்ந்து செஞ்சதா பூகோளமில்லை. அதுல இதுவும் ஒன்னு. நிறைய கலெக்ட் செஞ்சி... அதை ஒட்டுறதுக்கெல்லாம்.. தனியா வாங்கித் தர்ற நிலையில் எல்லாம் இல்லை. ஏற்கனவே எழுதின நோட்டில் ஒட்டி வைப்போம்.

    அதையும் ஒழுங்கா வச்சிக்கத் தெரியாது.

    ReplyDelete
  6. @Keanu

    அன்பரே.......thanks.....


    @டெனிம்
    அத சுட்டிக்கு அனுப்பவா, சிறுவர் மலருக்கு அனுப்பவா என்று பயங்கர குழப்பமா இருக்கு.


    @டங்குவார்
    ஆக, பெரும்"பாலா"னர்வர்களுக்கு இந்த பழக்கம் இருந்திருக்கு....இன்னும் இருக்கு என்று தெரிகிறது. இத பத்தி எதுனா பண்ணனும்.

    ReplyDelete
  7. ப்ளாஷ்பேக்-ல இருந்து அட்வைஸ் பதிவா? கலக்குங்க..
    நான் ஸ்டாம்ப் கலெக்ட் பண்ணதுல்லாம் ரொம்பக் குறைவு.. அதுல 7 மட்டும்தான் வெளிநாட்டு ஸ்டாம்ப்.
    பிறகு அதெல்லாத்தையும் சின்சியரா கலெக்ட் பண்ணிக்கிட்டிருந்த ஒரு ப்ரெண்டுக்கு கொடுத்துட்டேன். பதிலுக்கு அவன் Michael Jackson பத்தின நியூஸ்பேப்பர் கட்டிங்ஸை கொடுத்தான். (அத சேகரிச்சுக் கொட்டினதுல்லாம் ஒரு காலம்!!)

    ReplyDelete
  8. @JZ
    பாஸ்.......
    இங்க சிறுவர் மலர் என்று பத்திரிக்கை வரும்.அதுல ஒருகாலத்தில் விலங்குகள், விளையாட்டு வீரர்கள்ன்னு வந்துச்சு.அதெல்லாம் கட் செஞ்சு நாலஞ்சு நோட் போட்டு வெச்சிருந்தேன்.இன்னும் இருக்கு.அதோட சேர்ந்து ஸ்போர்ட்ஸ்ஸ்டார்...

    அப்பறம், அட்வைசா............நானா.....உங்களுக்கு நல்ல நகைச்சுவை உணர்வு

    ReplyDelete
  9. எனது பெரிய அண்ணனுக்கு பள்ளியில் படிக்கும்போது இந்த பழக்கம் இருந்தது. அவருக்காக நிறைய ஸ்டாம்பு சேகரித்து...சரியா சொன்னா பொறுக்கி குடுத்திருக்கேன். ஒரு ஸ்டாம்புகொடுத்தா பத்து பைசா தருவார். சும்மாவா? :)) இப்போ அதெல்லாம் எங்க போச்சோ...
    இநத்ப்பதிவு என்னை எங்கயோ கொண்டுபோய்டுச்சு...:)

    சமீபத்தில் ஏதோ புத்தகத்தில் படித்தேன். பாம்பு படம் போட்ட ஸ்டாம்புகளை மட்டும் ஒருவர் ஆயிரக்கணக்கில் சேகரித்து வைத்திருந்தார்.

    ReplyDelete
  10. மீ நவ் கமெண்டிங்.

    நானும் என்னோட சின்ன வயசுல பல ஸ்டேம்ப் கலெக்ட் பண்ணியிருக்கேன். பஹ்ரெய்ன் ஸ்டாம்ப், படு ஈஸியா கிடைக்கும். எக்ஸ்சேஞ்ச் பண்ணும்போது அதுக்கு மதிப்பு ரொம்பக் கம்மி. ஆனா ச்சேட் (chad) ட்ரையாங்கிள் ஸ்டாம்ப் ஒண்ணு இருந்தது. அது ரொம்ப ரேர் ஸ்டேம்ப். அதுனால பத்திரமா வெச்சிருந்தேன். ஆனா, நான் இல்லாதப்ப, என்னோட ஸ்டாம்ப் புக்கை தலைகீழா கவுத்தி, என் ஃப்ரெண்டு குண்டு சீனி ஆட்டையைப் போட்டதுக்கப்புறம், அந்த இண்ட்ரெஸ்ட் மாறி, டீச்சர்களை நோட்டம் விட ஆரம்பிச்சிட்டேன் :-)

    ReplyDelete
  11. ஸ்டாம்ப்கள் மூலமா உலக சரித்திரம் தெரியும்ன்னு நீங்க போட்டது... வெரி ட்ரூ. உண்மைய சொல்லணும்னா, ஆட்டை சமயத்துல கொஞ்சம் எங்க ஸ்கூல் லைப்ரரியாண்ட ஒதுங்கி, இந்த நாடுகள் பத்தி என்சைக்ளோபீடியால படிக்க ஆரம்பிச்சிருந்தேன். ஆனா உடனடியா அவை களவாடப்பட்டமையால், வேற புக்கெல்லாம் படிக்க வேண்டியதா போச்சி :-)

    ReplyDelete
  12. @நாஞ்சில் பிரதாப்
    // இநத்ப்பதிவு என்னை எங்கயோ கொண்டுபோய்டுச்சு...:) //
    ஆக...............இந்த கமென்ட் போட்டிருக்கிற அனைவருக்கும் ஒருவகையில இந்த பழக்கம் இருந்திருக்கு...மகிழ்ச்சி...நீங்க ஏன் என்னை போன்ற சிறுவர்களின் பேரில் சந்தா கட்டி இந்த பழக்கத்தை ஆரம்பித்து வைக்க கூடாது ???


    @கருந்தேள்

    // குண்டு சீனி ஆட்டையைப் போட்டதுக்கப்புறம், அந்த இண்ட்ரெஸ்ட் மாறி, டீச்சர்களை நோட்டம் விட ஆரம்பிச்சிட்டேன் :-)//

    ஆம்பள டீச்சரா பொம்பள டீச்சரா என்று சொல்லவே இல்லை...ஏன்னா எங்க ஸ்கூல் பாய்ஸ் ஸ்கூல்.அதுனால 6 - 12 ஆம்பளை டீச்சர்கள் தான்....

    ஆனா...பாருங்க...நம்ம சர்க்கிளில் பெரும்பான்மையானவர்களுக்கு இதுபோல ஒரேவிதமான பழக்கம் - ரசனை இருந்திருக்கிறது ஆச்சரியாமாகவே இருக்கு...

    // படிக்க ஆரம்பிச்சிருந்தேன். ஆனா உடனடியா அவை களவாடப்பட்டமையால், வேற புக்கெல்லாம் படிக்க வேண்டியதா போச்சி :-) //

    நாடு ஒரு அறிஞரை இழந்து விட்டது.....போகட்டும்.....பதிலுக்கு ஒரு இலக்கியவாதி அல்லவா கிடைத்திருக்கிறார்.

    ReplyDelete
  13. sir, naan kuda M.S.P. than, scout supramanisira[pepsi] avarukku eeann pepsi peruvanthuchu???????

    ReplyDelete
  14. //இலக்கியவாதி அல்லவா கிடைத்திருக்கிறார்.//

    'Pin' vittutteenga.

    ReplyDelete
  15. @ganesh kumar

    What ???????????????? sir ???????

    தயவுசெஞ்சு இந்த மாதிரி கூப்பிட்டு நெஞ்சை நோகடிக்காதீர்கள்.........

    அப்பறம் அவுரு அந்த சுப்பிரமணியன் இல்ல. இவுரு வேற. எட்டாப்பு எடுப்பார்.கொஞ்சம் தாண்டியா இருப்பார்.

    @டங்குவாரு...
    ஆனாலும் அநியாயத்துக்கு நீங்க அறிவுடையநம்பியின் கதியில கமென்ட் போட்டிருந்தீங்க பாருங்க....நீங்க தான் அசல் பி.ந.வாதி

    ReplyDelete
  16. ஸ்டாம்ப்லாம் சேகரிக்க ஒரு காலத்தில் ஆசைப்பட்டதுண்டு. ஆனால் அதுக்கான வாய்ப்புகள் சரியா அமையல:-(
    ஆனா பாருங்க, சின்ன வயசுல சக்திமான் கார்டு, ட்ரம்ப் கார்டுனு நிறைய நோட்புக்கில ஒட்டி சேகரிச்சிருக்கோம்:-)

    ReplyDelete
  17. @எஸ்.கே

    யோவ்.......
    வீட்டிலயே...போஸ்டல் துறையில ஒருத்தர் இருக்கார்.............உங்கப்பாகிட்ட கேளுங்க....இந்தமாதிரி சந்தா கட்டும் திட்டம் எதுவும் இருக்கானு.....நானும் கட்டனும்..

    அப்பறம், ட்ரம்ப் கார்டு இல்லாத பசங்கள அப்பலாம் பாக்க முடியாது..இந்த boomer bubblegum வந்தப்ப அதுகூட குடுத்தாங்க..ட்ரம்ப் கார்டு அப்படி பரிச்சயமானது தான் எனக்கு

    ReplyDelete
  18. sir, naanum subramaniam sir student daan... i think avaroda kadasi eightth set nanga dan.... engalukkum neraya visayam solli koduthaaru... aana namma pasangala pathi daan theriume.. dinamum avar class edukka varapo laa.. sir ida pathi sollunga ada pathi sollunga nu solli manusana verupaethitanuga.... adukkaparam adigama class mattume eduthar... avar kodukra essay la padikka easy ah irukkum... nan 8th E section... avar kaiyaala rendu adi perambula vaangirukken.. innauku varaikum nenavu irukku....

    ReplyDelete
  19. @logu.......

    அய்யா...லோகு அவர்களே....பொசுக்குனு சார் - ன்னு சொல்லி கலங்கடிச்சிட்டீங்களே........

    எந்த வருஷம் நீங்க..........

    நா தொடர்சியா 6 - 10 F Section தான்..12th - B Sec..........

    ReplyDelete
  20. sorry boss... adukkunu enna aiyya nu kooptu ennaiyum kalangadichutteenga... nan 2007,12th B section la kuppaiya kottitu vandhen... :-)

    ReplyDelete
  21. @kulandhai :
    subramaniam sir ,

    pala manavarkalin oli vilaku avar !!! ur blog reminds my 8th std days in MSP.

    @logu :
    machi namaa ramar ayya, suna pana pathi,ravindran oru blog eluthalame..?

    ReplyDelete
  22. Mikka sirapu,,,, en palli paru ninaivugalai thonditenga...

    Valthukal... :)

    ReplyDelete
  23. நானும் இதுல பைத்தியமா திரிந்திருக்கிறேன் , அப்போ ஹிந்து யுங் வேர்ல்டில் கடைசி பக்கத்தில் நிறைய ஸ்டாம்ப் படங்கள் வெளியிடுவார்கள் , அதை அழகாக கத்தரித்து , ஸ்டாம்ப் ஓரங்களில் வரும் ஓட்டைகளை போலவே "பின்" னால் குத்தி ஒரு நாதாரி நண்பன் என்னிடம் விற்றுருக்கிறான் . நான் ஒரிஜினலா இல்லையா என கண்டுபிடிக்க பின்னாடி எச்சில் தடவும் டெஸ்ட் செய்வோம் , அந்த டெஸ்ட்டில் பாஸ் செய்ய அவன் அதன் பின்னால் கோந்து வேற ஒட்டி காய வைத்து என்னையும் எனது நண்பர்களையும் ஏமாற்றி விட்டான் , ரெம்ப நாள் கழிச்சு தான் நாங்கள் அதை கண்டுபிடித்து , பின்னர் அவனை கவனித்து அனுப்பினோம் .

    ReplyDelete
  24. @ Dr.Dolittle

    ஏங்க.....இப்படி ஏமார்ற அளவுக்கு அப்பாவியா நீங்க ???? !!!! பேப்பர் பின்னால எழுத்துகள் இருக்கேமே......

    @Nivas B
    நன்றி நண்பா......

    ReplyDelete