Sunday, July 31, 2011

Surrealism - Magical Realism - Existentialism


The mind was dreaming. The world was its dream.

— Jorge Luis Borges

-------------------------------------------------------------------------

                                                   பெரியோர்களே, தாய்மார்களே ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.ஆயிரக்கணக்கான இசங்களில் எனக்கு தெரிஞ்ச ஒரே இசம், தமிழ் சினிமா பாத்து கத்துகிட்டதுதான் – communism. இப்ப இத எழுத காரணம் – பேநாமூடி@ஆனந்த்.சும்மா இருந்த ஆள சொறிஞ்சுவுட்டது அவர்தான். பதிவினால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு அவரே பொறுப்பு.
--------------------------------

          கண்டபடி யாரோ – என்னமோ ஒண்ணு உங்கள தொரத்துது. தப்பிச்சு ஓடிக்கிட்டேயிருக்கீங்க. விலங்குகள் – வேற்றுகிரகவாசிகள் வேற வந்து தீடீர் தீடீர்னு பயமுறுத்துதுங்க.திடுதுப்புன்னு கீழ விழுக ஆரம்பிக்கிறீங்க........ விழுகுறீங்க...........விழுகு.............றீங்க............வி..............ழு..............

                 (கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..........................................Snooze)


கனவுக்கு காரணம் யாரவது வாத்தியார் நேத்து உங்கள திட்டியிருக்கலாம். Cowboys & Aliens படத்த பாத்து பயந்திருக்கலாம்.உங்க ஆபிஸ்ல எதுனா பிரச்சனை இருக்கலாம்.சரி..............ஓகே.........இந்த கனவ பத்தி வாயால சொல்லிறலாம்.ஆனா அத பத்தி ஒரு கவிதையோ – கதையோ – ஓவியமோ உங்களால படைக்க முடியுமா ? முடிஞ்சா நீங்க ஒரு surrealist creator. உங்க படைப்புதான் சர்ரியலிசம்.

20ஆம் நுற்றாண்டின் ஆரம்பம். சிக்மண்ட் ஃப்ராய்டு மெல்ல மெல்ல ஐரோப்பாவில் புகழடஞ்சுகிட்டு வரார்.அதே சமயத்தில் தான் டாடாயிசம்(Dadaism) என்று சொல்லப்படுகிற ஒரு இசம் வளர்ந்துகிட்டிருந்துச்சு. டாடாயிஸ்டுகள் – ஒரு மார்க்கம் இல்ல.....பல மார்க்கமான ஆளுங்க. மனுஷங்களுக்கு கலை லொட்டு லொசுக்கு எல்லாம் எதுக்கு, தேவையேயில்லை.இதுபோன்ற சமாச்சாரங்கள் தான் போர் சண்டைகள் சச்சரவுகள் உருவாக காரணம்(அப்போது முதல் உலகப் போர் நடந்துக்கிட்டுயிருந்துச்சு). இதான் அவுங்க வாதம். Anti art- political -science movement. சுருக்கமா Dada had only one rule: Never follow any known rules (இத்த clickகி படிக்கவும்). 


அதுக்காக புகழ் பெற்ற ஓவியங்கள் மேல எதயாவது கிறுக்கி வைக்கிறது, வாஷ் பேசின்,கக்கூஸ் மாதிரி கண்டகழிய பொருட்களை வரைவது போட்டோ எடுத்து கண்காட்சி வைப்பதுன்னு அதகளம் தான் போங்க. Trash என்று அதுவரை நெனச்சிருந்த பொருட்களில் இருந்து கலையை உருவாக்குவது. இந்த இசம் ரொம்ப ரொம்ப முக்கியம். ஏன்னா இதுதான் பின்னாளில் பல இசங்கள் குறிப்பா போஸ்ட்மாடனிசம் உருவாகக் காரணம். போஸ்ட்மாடனிசத்தின் முக்கிய அம்சமே கலை – கோட்பாடு – பண்பாடு என்று நாம் இதுகாறும் நம்பும் system- கட்டமைப்பை உடைப்பதுதான. அதுனால இதுகுறித்து தெரிந்து கொள்ள விரும்புவர்கள்

                   
இதுல இருக்குற மூணு பார்ட்டையும் தயவுசெஞ்சு அனைவரும் பாத்திருங்க.ஏன்னா,பின்னாளில் பல இசங்களுக்கு அதிமுக்கியமா போஸ்ட்மாடனிசத்துக்கு இதான் காரணம்.இப்ப வரை பல்வேறு வடிவங்களில் இது இசை–சினிமான்னு இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கு. 

டாடாயிச நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஆளு தான் ஆந்த்ரே பிரேதன்.பிரஞ்சு நாட்டு எழுத்தாளர் – கவி – குட்டி மனோதத்துவவாதி - இன்ன பிற. இவரைப் போன்ற பயபுள்ளைங்க எல்லாம் சேர்ந்து 1920ஆம் ஆண்டு வெளியிட்டதுதான் Les Chants Magnétiques (The Magnetic Fields). இதுலதான் Automatic writing என்ற கோட்பாடு வந்ததே. அது என்ன Automatic writingன்னு தெரிஞ்சுக்க நெனைப்பவங்க, கோணங்கியின் – பாழி படிக்கவும் (இந்த பதிவ படிச்சிட்டு அப்பறம் போய் அத படிங்க,அத படிக்க ஆரம்பிச்சா இத நீங்க மறுபடியும் படிக்க வாய்ப்பேயில்லை.).

இதே ஆந்த்ரே பிரேதன் தான் 1924ஆம் ஆண்டு La Révolution surréaliste (Surrealist Manifesto) என்ற அறிக்கையை வெளியிடுகிறார் அப்பயிருந்துதான் சர்ரியலிசம் வீறு கொண்டு கிளம்ப ஆரம்பிச்சது. 

சர்ரியலிசம்:
 நம்ம எல்லாருக்கும் ஆழ்மனம் என்று ஒண்ணு இருக்கு (அதுவும் மனசாட்சியும் ஒண்ணா...தெரியல).அதில கிளம்புற எண்ணங்களை வெளிப்படுத்துற விஷயங்கள் அனைத்துமே சர்ரியலிசம் தான்.

சிலந்தி வலை பின்னுற மாதிரி Fanatasyல இருந்து ஒரு இழை – கனவிலிருந்து ஒரு இழை – தத்துவத்திலிருந்து ஒரு இழை – புதிர்த்தன்மையிலிருந்து ஒரு இழை – எல்லாத்தையும் சேர்த்து ஒரு வலை. ஆனா அந்த வலை நிகழ்காலம் (Reality) மீது அமைந்திருக்கும். கனவும் + புதிர்த்தன்மையும் + நிகழ்காலம். இதிலிருக்கும் + தான் சர்ரியலிசம்.

              ஃப்ராய்டின் தாக்கம் பெருமளவில் இந்த விஷயங்களில் இருக்கும் (என்ன பெரிய ஃப்ராய்டு அவருக்கு முன்னமே பல விஷயங்கள நம்ப ஆளுங்க சொல்லிட்டாங்க).நம்ம subconsious mindல தோணுகிற விஷயங்கள வெளிப்படுத்தும் ஊடகம் தான் சர்ரியலிசம்.இதுல ரொம்ப முக்கியமா ஆளுங்க – டாலி, மேக்ஸ் எர்னஸ்ட், ரெனே மக்ரிதே போன்ற ஓவியர்கள். இதுக்கு மேல நா பேசி போரடிக்க விரும்பவில்லை.முடிஞ்சா டாலியும் – லூயி புனுவேலும் சேர்ந்து உருவாக்கிய இந்த படத்த பாருங்க. 1920லேயே பின்னி பெடலேடுத்துருக்காங்க.யாரும் தவறவிட வேண்டாம். மற்றவர்களை விட டாலியிடம் உள்ள சிறப்பு ரெண்டிலும் தேர்ந்து விளங்கியவர்.மேலும் ஓவியங்களில் optical illusion எல்லாம் கொண்டு வந்தவர். முடிஞ்சா "டாலியின் டைரிக் குறிப்புகள்" படிச்சுப் பாருங்க.ரகள.


இதுபோக பல சர்ரியலிஸ படங்கள் குறித்த நல்ல தொகுப்பு இங்க இருக்கு  Louis Bunuel  – Alexandro Jodorowsky – David Lynch போன்றவர்கள் எல்லாம் இதில் மாஸ்டர்கள்.மேற்கொண்டு ஓவியங்களை ரசிக்க.....இங்கே...


மாஜிகல் ரியலிசம்:
பேர பாத்த உடனே சொல்லிரலாம். அதே சிலந்தி வலை – அதே Fanatasy – அதே கனவு – அதே தத்துவம் – அதே புதிர்த்தன்மை – எல்லாத்தையும் சேர்த்து ஒரு வலை. ஆனால் படைப்பு நிகழும் உலகில் அனைத்தும் நிஜம். இதுவே சர்ரியலிசத்துக்கும் இதுக்கும் உள்ள வேறுபாடு. 

சர்ரியலிசம் – ஒரு உலகத்தை விஷயத்தை தனது ஆழ்மனம் – எண்ணங்கள் எப்புடி intrepret பண்ணுதோ அதை ஒரு படைப்பா வெளியிடுறது. மாஜிகல் ரியலிசம் – எதையும் interpret பண்ண தேவையில்லை.ஏன்னா..... அதுல “reality என்று சொல்லப்படுகிற “எதார்த்தம்இந்த மாஜிகல் விஷயங்கள் அடங்கியதுதான். அந்த உலகத்தில் மாஜிகல் விஷயங்கள் அனைத்தும் எதார்த்தும். சுளுவா உங்களுக்கே புரியும். நா மேற்கொண்டு விளக்கம் என்ற பேருல எதுனா உளறி கெடுக்காம இருக்க நெனைக்கிறேன்.

   இந்த வகை இலக்கியத்துல முக்கிய ஆசாமிகள் லத்தின் – அமெரிக்கர்கள், போர்ஹே – மார்க்வெஸ். இவர்களை தவிர கார்பெந்தியர் - மிலன் குந்த்ரா – கோய்லோ – ஜப்பானிய எழுத்தாளர்கள் – ஏன் காப்கா கூட, இவர்களையும் சொல்கிறார்கள். ஆலிஸ் இன் வோண்டர்லான்ட் கூட மாஜிகல் ரியலிசம் தான். ஆனா, இதை விட அனைத்து அற்புத  அம்சங்களும்  பெரும்பாலனா நமது கதைகளிலேயே இருப்பதுதான.இந்த லிஸ்ட் உபயோகமா இருக்கும் என்று நெனைக்கிறேன்.   



மேல பொட்டிகுள்ள Inception படம் பத்தி சொல்லியிருக்குறத பத்தி இங்க படிக்கலாம். நா ரொம்ப ரசிச்சு எழுதுன பதிவு. 


Existentialism: இருத்தலியல்


இதுகுறித்து FBல நா ஒண்ணு கேட்டிருந்தேன்.அதுக்கு ராஜேஷ் சொல்லியிருந்தது – செம.... போங்க. வாய்ப்பேயில்லை. சுலபமா புரியுற விஷயத்த நீட்டி முழக்கி குழப்பி அடிக்கிறது ஒருவகை(உ.த.எ ஞாபகம் வந்தா அது தற்செயலானதே).கஷ்டமான விஷயத்த சுளுவா சொல்றது மற்றொரு வகை. சுஜாதாவிடம் எனக்கு பிடிச்ச (ஒரே)விஷயம் அதான். அதுபோல ராஜேஷ் ரொம்ப சிம்பிளா சொல்லியிருந்தார்.எனக்கு ஏற்கனவே existentialism குறித்து கொஞ்சம் தெரிந்திருந்தாலும் என்னமோ ஒரு குழப்பம் இருந்திச்சு.அதை டக்குனு அவுரு போக்கிட்டாரு.அதையும் இங்க பகிர்ந்தா எல்லாருக்கும் உபயோகப்படும் என்பதால்....

1)  Existentialism என்றால் என்ன ?

2)  ஏன் அது பெரும்பாலும் சோகமயமாகவே இருக்கு ?


3)  வெறும் சோகம் மட்டுமே வாழ்க்கை ஆயிறாது. அதுனால அதன் அடிப்படையில் இதை பார்ப்பதே தவறு என்று ஒரு கருத்து இருக்கே.
 

4) ஒவ்வொருத்தர் வாழ்வு சார்ந்த வெளிப்பாடு தான இலக்கியம்.அதுனால கஷ்டப்பட்ட எழுத்தாளர்களின் வாழ்க்கை (how the are existing or how they were existed) சோகமயமாதான இருக்கும் ?


1 . எக்சிஸ்டென்ஷியலிஸம் என்பதன் அடிப்படையே, மனித வாழ்வின் அர்த்தமற்ற தன்மையைப் பற்றிய ஒரு பார்வை தான் என்பது என் கருத்து. நாம செய்யுற செயல்கள், செலக்ட் பண்ணுற வழிகள், அதுனால ஏற்படும் விளைவுகள் ஆகிய விஷயங்கள் பற்றிய ஒரு டீப் ஸ்டடி. ஆனா, இதுதான் எக்சிஸ்டென்ஷியலிஸம் அப்படீன்னு டிஃபைன் பண்ணுற விதிகள் எதுவும் இல்லை. பொதுவா மனித வாழ்வு, துயரமாத்தானே இருக்கு? இதுக்கு சாரு ஒரு உதாரணம் கொடுத்துருக்காரு. ஒரு ராணுவ வீரன். அவனோட அம்மாவைப் பார்க்கப் பிரியப்படுறான். அப்ப, அவன் முன்னாடி ரெண்டு சாய்ஸ் இருக்கு. ஒண்ணு- நாட்டுக்காகப் போரிடுவது. இன்னொன்னு, போரை விட்டுட்டு, அம்மாவைப் போய் பார்ப்பது. ரெண்டும் சரிதான். ஆக, அவனோட முடிவு எதுவா இருக்கும்?இந்த ரீதில வாழ்வின் சாய்ஸ்கள் ,அதில் நாம் தேர்ந்தெடுக்கும் வழிகள், அதைப் பொறுத்து அமையும் விளைவுகள் ஆகியன பற்றிய ஒரு ஸ்டடி,எக்சிஸ்டென்ஷியலிஸம் எனப்படுகிறதுன்னு நினைக்கிறேன்.

2 . அது, பல சமயங்களில் சோகமயமா இருக்கு என்பது உண்மைதான். ஏன்? மனித வாழ்வு, அத்தனை பேருக்குமே சோகமயமாகத்தானே உள்ளது? ஒன்னை செய்யப் பிரியப்படுறோம். ஆனா அது நமக்கு அமையாம, வேற ஒண்ணுதான் கெடைக்குது. அப்ப, இந்தப் புது விஷயத்தை நாம சோகமாத்தான் எடுத்துக்குறோம். சிறுபத்திரிக்கை நடத்த ஆசைப்பட்டு, ஆனா அன்றாட வாழ்வில் அது முடியாம, வேற எதுலயும் இன்ட்ரஸ்ட் இல்லாம, கடைசில ஒரு பத்திரிக்கை ஆரம்பிச்சி, பின் தற்கொலை செய்துகொண்ட மணிகண்ணன் (என்று நினைக்கிறேன்) பத்தி சாரு எழுதிருக்காரு. அதுதான் எக்சிஸ்டென்ஷியலிஸம்.

3 . கஷ்டப்பட்ட எழுத்தாளர்களின் வாழ்வு கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா, அந்தக் கஷ்டத்தை அவங்க எப்படி எதிர்கொண்டாங்க?காஃப்கா, தாஸ்தாயேவ்ஸ்கி ஆகியவர்களின் வாழ்க்கையைக் கவனிச்சா, அதுல ஒரு டக்கரான அங்கதம் இருக்கும். அது, அவங்க, தங்களைக் கஷ்டப்படுத்துகிற வாழ்க்கையை எள்ளி நகையாடுன வெளிப்பாடு.

                  ஆக, எக்சிஸ்டென்ஷியலிஸம் என்பது, எப்பவும் அழுவாச்சியாத்தான் இருக்கணும்னு அவசியமில்லை.அது,அவங்கவங்க அந்த உணர்வை வெளிப்படுத்துவதைப் பொறுத்தது.சார்லஸ் ப்யூகோவ்ஸ்கின்னு ஒரு இலக்கியவாதி இருந்தார்.அவரோட புத்தகங்களைப் படிச்சா,அவர் வாழ்க்கையை என்னமா என்ஜாய் பண்ணிருக்காருன்னு தெரியும்.ஆனா , மனிதர் சல்லிக்காசு கூட இல்லாம வாழ்ந்து செத்தவர்தான்.அவரோட நாவலான "Notes of a Dirty oldman" தான்   இப்ப படிச்சிக்கிட்டிருக்கேன்.பல இடங்களில்,அது அவரா இல்லை சாருவான்னு டவுட்டு வருது.இதுவும் எக்சிஸ்டென்ஷியலிஸம்தான். சார்த்தர் தன்னோட எக்சிஸ்டென்ஷியலிஸம் பற்றிய வியூவை,பின்னாட்களில் மாற்றிக்கொண்டுவிட்டார். ஆனா அதையும் வெளிப்படையா ஒத்துக்கொண்ட நேர்மையும் அவரிடம் இருந்தது.


                                                           
                                                  இந்த இசங்கள் பத்தி பதிவு எழுதக் காரணம், சரியோ தவறோ உக்காந்து பேசுனாதான தெரிஞ்சுக்க முடியும்.நானும் நெறய தெரிஞ்சுக்கலம்,அந்த சுயநலம்தான்.சினிமா குறித்து எப்புடி நம்ம இணையதளங்களில் இயங்குபவர்கள்,மற்றவர்களை காட்டிலும் சற்று விழிப்புடன் நெறைய உலக சினிமா குறித்து தெரிஞ்சு  இருக்காங்களோ (???), அதுமாதிரி எல்லாருமே சேர்ந்து இதுபோன்ற விஷயங்களையும் தெரிஞ்சுக்க ஆரம்பிச்சுட்டா நல்லாதான இருக்கும். அப்பறம் நாங்கலாம் தனிப்பிறவிகள் – விதிசமைப்பவர்கள்னு நாமளும் பீட்டர் வுடலாம் (Intellectual arrogance....ஹி....ஹி...). உலகத்தில ரெண்டே ரெண்டு  வகையான  ஆட்கள்தான் – வாய்ப்பு கெடைச்சவங்க, கெடைக்காதவங்க. அதுனால இதுபற்றி தெரிஞ்ச நண்பர்கள் இதுகுறித்து மேற்கொண்டு கருத்துக்கள சொன்னா எனக்கும் மற்ற நண்பர்களுக்கும் ரொம்ப உபயோகமா இருக்கும்.
Facebookers..

55 comments :

  1. ஹலோ யாருங்க நீங்க ... நான் தான் ISO 9001:2000 எலிக்குஞ்சு... என் பேர வச்சி ஏமாத்த பாக்குரிங்க...

    ReplyDelete
  2. உன்னையெல்லாம் எவன்யா எழுதச்சொன்னான்.

    ReplyDelete
  3. இது மிக அருமையானப் படம். நானே இந்தப் படத்தை எழுதலாமென இருந்தேன்.

    ReplyDelete
  4. முரளி கிருஷ்ணன் கமென்ட் எல்லாம் தூக்கியாச்சு....

    ReplyDelete
  5. முரளி கமெண்டோடு சேர்ந்து என் கமெண்ட்டையும்.. எடுத்துட்டீங்களா?

    ReplyDelete
  6. ஆனா.. என் கமெண்ட்ன்னு நினைச்சி... முரளி கமெண்டை வச்சிருக்கீங்க. வெளங்கும்.

    ReplyDelete
  7. ஹலோ...

    பாலாபாய்..........அந்தாள்ட முக்கி முக்கி கேட்டேன்.......நாந்தான் நாந்தான்னு அடிச்சு சொன்னார்.....அந்த பேருகள கேட்டாவே கதிகலங்கிருது....

    ReplyDelete
  8. எங்க இருக்கீங்க? நான் கூகிள் +ல் ஹேங்கவுட் ஆரம்பிச்சி உட்கார்ந்து இருக்கேன்

    ReplyDelete
  9. குறிப்பு கொடுத்தமைக்கு நன்றி ....

    ReplyDelete
  10. உங்களை பார்த்து இருக்கிறேன் ..., பேசி இருக்கிறேன் என்றெல்லாம் நினைக்கும் போது ஒரே புல்லரிப்பா இருக்கு ...,

    ReplyDelete
  11. இந்த வரலாற்று சிறப்பு மிக்க பதிவு வருவதற்கு நானும் ஒரு சிரு துரும்பாக இருந்து என் பிறவி பலனை அடைந்து விட்டேன்....

    ReplyDelete
  12. Jokes Apart ...

    சர்ரேலிசம்ன்னா என்னன்னு தெரிஞ்சுக்கனுன்னு விக்கிபீடியாலம் போரட்டி ஒரு மண்ணும் புரியல ... புரியுற மாதிரி எழுதி இருக்கீங்க .... இனிமே இங்லிஷ்ல படிச்சா கூட ஃபாலோ பண்ணிக்க முடியும்ன்னு நினைக்கிறேன்.. :)

    ReplyDelete
  13. Alexandro Jodorowsky இவர் பேர இப்போ தான் கேள்விபடறேன்...

    ReplyDelete
  14. good post..
    if u write with more examples explaining how in direct life situations
    still more easily readable n understandable to every one..
    keep doing good posts!

    ReplyDelete
  15. இந்தக் கட்டுரை இலக்கிய உலகில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தலாம். நீங்க ரொம்ப ஃபேமஸ்னு சொன்னாங்க. இது வரைக்கும் உங்க ப்லாகை படிச்சதில்லை. நீங்க எழுதின புக் இருந்தா கொடுங்களேன்.

    ReplyDelete
  16. வெண்ண கீழ எங்கண்ணன் எயிதுன மேறி ஒரு பாரா எய்திட்டு அப்பாலிக்கா எல்லாயிசமும் பேசுய்யா கய்த.

    -------

    கவர்மென்ட் ..யூ வான்ட் லேப்டாப்?
    மாணவன்.... நோ

    கவர்மென்ட்.. சைக்கிள் வேணுமா?
    மாணவன்.... நோ...
    கவர்மென்ட்.. செப்பல் வேணுமா
    மாணவன்..... நோ
    கவர்மென்ட்..இலவச பஸ்பாஸ் ??
    மாணவன் .. நோ..
    வேற என்னதான் வேணும்...?? எனக்கு புக்கு புக்குன்னு ஒரு சமாச்சாரம் சொல்லுவாங்களே?? அது வேணும்...

    ReplyDelete
  17. //// இந்த இசங்கள் பத்தி பதிவு எழுதக் காரணம், சரியோ தவறோ உக்காந்து பேசுனாதான தெரிஞ்சுக்க முடியும்///

    ஏன்.. நின்னுகிட்டு பேசினா எழுத மாட்டீங்களாக்கும்?

    ReplyDelete
  18. //இங்கே நடு ரோட்டில் எச்சி துப்பி விட்டு பாரின் போய் ரூல்ஸ் மதிக்கும் புண்ணியவான்கள். நான் செய்தது தவறு என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்//

    என்னை இப்படி சொல்லிட்டானே? ஐயகோ. நான் ஓரமாதான் துப்பினேன்னு எப்படி ஃப்ரூஃப் பண்ணுவேன்?

    ReplyDelete
  19. மதுரைப் பெண்ணே, கவலை கொள்ளாதேடி என் கண்மணியே. என் படைக்கு இப்பொழுதே ஆணையிடுகிறேன்.

    யாரங்கே... உடனடியாக விற்காத என் புத்தகங்களை மதுரைக்கு ஒரு பார்சல் அனுப்பவும்.

    ஸ்பான்ஸரா? யாரங்கே... உடனடியாக ஒரு ஸ்பான்சரை கண்டுபிடிக்கவும்.

    ReplyDelete
  20. உள்ளேன் அய்யா. ஃபேஸ்புக்கில் ஸ்டேடஸ் மெஸெஜ் போட்டால், அவனவன் அல்வா கொடுக்கிறானே ஐயா.

    இதைப்பற்றி அடுத்த வட்டத்தில் பேச வேண்டும்.

    ReplyDelete
  21. விடுங்கள் சாரு. உங்கள் யூசர்னேம் பாஸ்வர்ட் மட்டும் கொடுங்கள். மீதியை நான் பார்த்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  22. பாஸ்வேர்ட் சரியா நினைவில்லையடி. இதில் எதுனா ஒன்னாதான் இருக்கும்.

    “ஐ’ம் பேக்கு”
    “மத்தவனெல்லாம் லூசு”
    “காமெடிபீஸ்”
    ”டுபாக்கூர்”
    “விக்கி டு ப்லாக் ட்ரேன்ஸ்லேட்டர்”
    ”மதுரைப் பொண்ணு”
    “அவளொரு அப்பாவி?”
    “சவுத் அமெரிக்கா”
    “முதுகில் குத்து”
    “எண்டெ கேரளம்”
    ”#$#$#$@#*(^)$(” - (கெட்டவார்த்தை)

    ReplyDelete
  23. யோவ் பாஸ்கர்.. என்னை கண்டமேனிக்கு திட்டிபுட்டு, நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்னு வேற எக்ஸ்ட்ரா பிட்டை போட்ட கடுப்பில் நானிருக்கேன். இப்பப் பார்த்து ஸ்பான்சர், வட்டம்னு ஏன்யா உயிரை வாங்கற?

    ReplyDelete
  24. ஏங்க எனக்குத் தெரிஞ்சி நானும் ஒரு 500 கேரளாகாரங்க கேட்டுப் பார்த்துட்டேன். ஒருத்தருக்கும் இந்த சாரு யாருன்னு தெரியலீங்க. அத விட கொடுமை, கலாகௌமுதின்னா என்னான்னு என்னாண்ட கேக்கறாங்க.

    ReplyDelete
  25. அவுட்சோர்ஸிங்August 1, 2011 at 6:13 AM

    இனிமேல் கொழந்த கலந்துகொள்ளும் அத்தனை ஹேங்கவுட்டையும் அப்பொழுதே ட்ரேன்ஸ்க்ரிட்ப் ரெடி செய்து அப்லோட் செய்ய வேண்டும்.

    இல்லையேல் இவையெல்லாம் காற்றோடு கலந்துவிடும் அபாயமுள்ளது.

    ReplyDelete
  26. பாலசுந்தரம்August 1, 2011 at 8:11 AM

    தமிழில் நான் போடும் இரண்டாவது கமெண்ட் இது. ஆனால் மகேஷை தவிர மற்ற அத்தனை பேரும் போட்டிருக்கும் கமெண்டை பார்த்தால் இதுவே எனது கடைசி கமெண்டாகவும் இருக்கும் போலிருக்கு.

    ReplyDelete
  27. திடீர்ன்னு ஹேங்கவுட் கட்டானதும், விட்டா போதும்னு எல்லாரும் ஓடிட்டோம். ஆனாலும் பாவம்... இந்த க்யானு மட்டும் திரும்ப நாம ‘தல’ன்னு கூப்பிட்டு மொத்த சேட்டிலும் ஒருத்தனை ஓட்டினோமே... அந்த ஆள்கிட்ட திரும்ப மாட்டிகிட்டாராமாம்.

    ரத்தக்கண்ணீரோடு எனக்கு மெயில் பண்ணியிருக்கார் பாவம்.

    ReplyDelete
  28. @...αηαη∂....
    // Alexandro Jodorowsky இவர் பேர இப்போ தான் கேள்விபடறேன்... //
    அப்ப...............மத்த பேருலாம் கேள்விப்பட்டிருக்கீங்க...........

    உங்ககிட்ட இருந்து நெறைய கமென்ட்கள எதிர்பார்த்தேன்...


    @மகேஷ்
    கருத்துகளிற்கு நன்றி பாஸ்....// direct life situations //
    அதெல்லாம் அப்பப்ப FBல சொல்லலாம்னு தோணுது...

    ReplyDelete
  29. மக்களே............

    மேலே உள்ள கடைசி 12 கமென்ட்டிற்க்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. யாருன்னு கூட தெரியல.............சைபர் க்ரைமில் புகார் தெரிவிப்பது எப்படி என்று யாராவது நண்பர்கள் ஐடியா குடுக்கவும்.....

    ReplyDelete
  30. ஓல்ட் காஸ்க்கை ஓசியில் சாப்பிடுபவன்August 1, 2011 at 10:05 AM

    புழியுற மாழிரி பழிவு போழுய்யா ழோவ்வ்வ்வ்வ் . . . வெண்ணை

    ReplyDelete
  31. கனுஷ்யகுத்திரன்August 1, 2011 at 10:06 AM

    எல்லாரும் சரக்கு அடியுங்கள். புதிய நண்பர்களுக்கு சரக்கு அறிமுகப்படுத்தும் பெரும் வேலையைக் கஷ்டப்பட்டு செய்துகொண்டிருக்கிறேன். சரக்கு சாப்பிட அனைவரும் இங்கே வரலாம்

    ReplyDelete
  32. நாந்தாண்டா நெசம்மான கருந்தேள் கண்ணாயிரம்August 1, 2011 at 10:10 AM

    மறுபடியும் எம்பேர்ல எவன்டா கருத்து போடுறது? ங்கொக்கா மக்கா . . .தகுரியம் இருந்தா எங்க தல - பதிவுப் புயல் சாக்கி கிட்ட பேசுங்கடா . .அதை உட்டுப்புட்டு ஏன்டா எம்பேர்ல கமெண்டு போடுறீங்க? பிச்சிபிச்சு

    ReplyDelete
  33. மேல என் பேர்ல கமெண்டுகள் போட்டது நானில்லீங்ணா . . அது சாக்சன்வில்ல உக்காந்துக்கினு கீற ஒருத்தருங்கோவ்ன்னு கொழந்த சொன்னாரு . . . பேரு பாலாவாம்ல :-)

    ReplyDelete
  34. ஐயா..........சாமீ.....அம்மா....தாயே.......யாராவது ஒருத்தராவது பதிவ பத்தி கமென்ட் போடுங்களேன்........

    ReplyDelete
  35. பதிவு அருமை...
    உஙகள் பதிவை படித்ததும், மேலே இருக்க ஒவ்வொரு இசங்களிலிருந்தும் ஒரு சோடி புத்தகங்களை வாங்கி தலைக்கு வைத்து தூங்கலாம் என்றிருக்கிறேன்...

    ReplyDelete
  36. @தமிழினியன்
    கருத்தாழமிக்க கருத்திற்கு மிக்க நன்றி.............

    ReplyDelete
  37. டாஸ்மாக் பொடியன்August 1, 2011 at 11:22 AM

    மப்பில் சலித்த என் தோட்டத்துச் செடியொன்று
    முன்மத்தியானத்தில்
    என் எரிச்சலின் பதம் வேண்டி
    வேகமாகப் படியேறி வந்தது

    செடிகள் நடப்பது சாத்தியமென்று தெரிந்திருந்தும்
    மப்பில் இருந்ததால்
    ஒரு விபரீதக் கனவென்று
    எட்டி உதைக்கத் தாமதித்துவிட்டேன்

    பத்தாயிரம்
    இலை நுனிகளால்
    வேர் நுனிகளால்

    புறக்கணிப்பின் ஆனந்தம் பொங்க
    படியிறங்கிப் போகிறது
    என் தோட்டத்து செடி
    ஹிக்..

    ReplyDelete
  38. ஜாக்சன்வில்லில் வாழும் எனது மனம்கவர்ந்த பிரபல பதிவருக்கு . . . நான் எப்பவுமே ப்ரீதான் . . மெயிலு அனுப்பவும்.

    ReplyDelete
  39. நீங்க சொன்ன சினிமா காரங்க பெயர்கள்ல அவர் பேர கேள்வி பட்டதில்லைன்னு சொன்னேன்...

    //சர்ரேலிசம்ன்னா என்னன்னு தெரிஞ்சுக்கனுன்னு விக்கிபீடியாலம் போரட்டி ஒரு மண்ணும் புரியல ... புரியுற மாதிரி எழுதி இருக்கீங்க .... இனிமே இங்லிஷ்ல படிச்சா கூட ஃபாலோ பண்ணிக்க முடியும்ன்னு நினைக்கிறேன்.. :) // இப்புடி ஒரு கமெண்ட் போட்டு இருந்தேனே பாக்கலையா ??
    அரைகுரையா கூட தெரியாத விஷயத்தை பத்தி என்ன கருத்து சொல்ரது ...

    ReplyDelete
  40. புரிஞ்ச மாதிரி இருக்கு. ஆனா படிச்சு முடிச்ச பிறகு குழப்பமாதான் இருக்கு! அந்த அட்டவணை கொஞ்சம் புரிய வைக்குது.

    ReplyDelete
  41. இப்படிப்பட்ட கமெண்டுகளுக்கு நடுவிலும் உயிர்வாழும் கொழந்தைக்கு,

    நண்பா... இந்த பதிவை ரெண்டு தடவை வாசித்தேன்.. சர்ரியலிசம், மஜிக்கல் ரியலிசமெல்லாம் ஏதோ புரிவது போலிருக்கிறது...
    ஆனால் டாடாயிசம் மட்டும் வாசிப்பதற்கு சுவாரஷ்யமாக இருந்தது !!!

    பி்.கு - (இங்க கூட அப்படியொன்று நடந்து கொண்டிருப்பது போல் தான் தோன்றுகிறது....)

    ReplyDelete
  42. @JZ டாடாயிசம் என்ன? அதெல்லாம் ஜுஜுபி. நீங்கள் பிர்லாயிசம் முயற்சி செய்திருக்கிறீங்களா?

    சும்மா பிச்சி பெடலெடுக்கும்.

    ReplyDelete
  43. ஸ்காட்லாண்ட் யார்ட் போலீஸ்August 1, 2011 at 4:57 PM

    10.05 am - ஓல்ட் காஸ்கை ஓசியில் குடிப்பவன்
    10.06 am - குனுஷ்கியபுத்ரன்
    10.10 am - நாந்தாண்டா நெசமான கருந்தேள்
    10.13 am - கருந்தேள் கண்ணாயிரம்

    ஹி.. ஹி.. ஹி.. ஹி...

    ReplyDelete
  44. //ஐயா..........சாமீ.....அம்மா....தாயே.......யாராவது ஒருத்தராவது பதிவ பத்தி கமென்ட் போடுங்களேன்........//

    வலிக்காத மாறி நடிக்கறது அவ்ளோ ஈஸியில்ல நைனா. யு நீட் மோர் ப்ராக்டிஸ்.

    ReplyDelete
  45. திரு. தமிழினியன் அவர்களே,

    உங்களை ‘மேன் ஆஃப் ஐடியாலஜி’ என்றார் ஒரு பெருந்தகை. வாழ்க எம்பெருமானே.

    ReplyDelete
  46. Wrong Mr.Kunju,

    I said "Man driven by idealogy"

    ReplyDelete
  47. மிக மிக அற்புதமாக விளக்கியுள்ளீர்கள் உங்களால் ஒரு படத்தை கண்டு கொண்டேன் http://en.wikipedia.org/wiki/Un_chien_andalou (கண்ணா ஸ்லைஸ் பன்னுரான்கலாம் படத்துல.ஏற்கெனவே Saw series எ வெறித்தனமா பார்த்தவன்.ஹீ ஹீ )
    டாரன்ட் போட்டு பாக்குரதுதான் அடுத்த வேலை.இது பற்றியெல்லாம் இவ்வளவு விரிவாக புரியும்படி விளக்கியமைக்கு நன்றி.எழுத்தாளர்களிடம் இதேல்லாம் கேட்டா இது கூட தெரியாம இருக்கியா அல்லது இதையும் நான்தான் விளக்கனும் போன்ற பதில்கள்தான் வரும்!!ஆனால் உங்கள் பனி பாராட்டுக்குரியது

    ReplyDelete
  48. எழுதுபிழைக்கு மன்னிக்கவும்.அது கண்ணை ஸ்லைஸ் பன்னுரான்கலாம்!!
    பணி*

    ReplyDelete
  49. @viki..........
    // து பற்றியெல்லாம் இவ்வளவு விரிவாக புரியும்படி விளக்கியமைக்கு நன்றி // ஹி.............ஹி..........டாங்க்ஸ்

    தலிவா....கருத்துக்கு நன்றி..

    torrent...அதுக்கு தேவையேயில்லை.. நா லிங்க் குடுத்திருப்பதே..youtube HDதான்...that itself is enough........


    @செந்தேள் சென்காயிரம் ரயில் டிரைவர்
    சுத்தம்.........ஒண்ணும் புரியல

    ReplyDelete
  50. ராஜராஜன்August 3, 2011 at 10:07 AM

    சூப்பர் சார்!!சாதரணமா இது பத்தி யாரிடமாவது விளக்கம் கேட்டால் அல்லது இணையத்தில் தேடினால் புல்ச்டாப் வைக்காம நாலு பத்திக்கு இருக்கும் விளக்கம்.ஒன்னுமே வேலன்காது.ஆனா நீங்க அருமையா புரிய வச்சீங்க சார்!!நன்றி.இதே போல பல சிக்கலான தத்துவங்களையும் எழுத முயலுங்கள்.நன்றி

    ReplyDelete
  51. Daaaaaai... evenda athu... Senthel Sengaayiram. Power Star kitta un velaiya kaattaatha.

    Mavane Lathika-2 - padaththai 10 dhabaa paarkka vacchiduven.

    ReplyDelete
  52. Interesting. Good attempt at encapsulating various literary devices.

    ReplyDelete