Sunday, May 15, 2011

காலம் என்பது கழங்கு போற் சுழன்று - தீராக்காதலி


1940களில் ஒரு நாள்:
                        ஈரோடு ரயில் நிலையம்.அன்று காலை ஸ்டேஷனுக்கு வந்து கொண்டிருக்கும் அனைத்து ரயில்களும் உள்ளே நுழைய முடியாமல் அரை பர்லாங் தள்ளியே நிறுத்தப்படுகின்றன.பெரும் கூச்சல்,குழப்பம்.ஏன்..சுமார் பத்தாயிரம் பேர் தண்டவாளத்தில் அமர்திருக்கின்றனர், மூன்று மணி நேரமாக.ஏதேனும் மறியலா? இல்லை, சுதந்திர போராட்ட ஊர்வலமா?. ம்ஹும்....கொச்சி எக்ஸ்ப்ரசில் சென்னைக்கு ஈரோடு வழியாகப் போகும் தியாகராஜ பாகவதரைக் காணத் தான் அத்தனை கூட்டம். அவர் வர மேலும் இரண்டு மணி நேரம் தாமதமாகும் என்றாலும் அதே பொறுமையுடன் உட்காந்திருகின்றனர். அவர் வந்தே பிறகே கூட்டம், அவரை பார்த்து விட்டு கலைந்து செல்கிறது.

1944:
             ஹரிதாஸ் படம் மெட்ராஸ் பிராட்வே டாக்கிசில் வெளியாகிறது. 100,200,300 நாட்கள் அல்ல – 1000 நாட்களை – மூன்று தீபாவளியைக் கடந்து படம் ஓடியது. படத்தின் கதாநாயகன் – MTB.

1959:
               திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் பிரகாரம். மன அமைதி வேண்டி ஒரு மொட்டை அடித்த, கண்பார்வை பாதிப்படைந்த ஒருவர் அப்பிரகாரத்தில் அமர்ந்துள்ளர்.கோயிலை விட்டு வெளியே வந்த ஒரு புண்ணியவானுக்கு அன்றைகென்று தர்ம சிந்தனை பெருக்கெடுத்து ஓட, அமர்திருந்த ஆளை பிச்சைக்காரர் என்று நினைத்து காசு போட்டு விட்டுச் செல்கிறார். அமர்ந்திருந்தவர் – தியாகராஜ பாகவதர்.


“ராஜா மாதிரி இருக்கான், ராஜ வாழ்கை” இந்த வாக்கியங்களை ஒரு காகிதத்தில் எழுதி செராக்ஸ் எடுத்தால் வெளியே வரும் பெயர் தியாகராஜா பாகவதாராகத் தான் இருக்கும். கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு 40களில் அவர் புகழ் இருந்துள்ளது (நாடகம் ஒன்றே பொழுதுபோக்காக இருந்த அந்த காலகட்டத்தையும் நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்). ஆனால் 1950களில் அவரது புகழ் சரியத் தொடங்கிது. சிறைச்சாலை சென்று வந்ததும் ஒரு காரணம்.இருக்கும் வரை அள்ளி அள்ளி கொடுத்தவர் கடைசி காலத்தில் மேற்கூறிய நிலையில் தான் இறந்து போனார்.


         தியாகராஜா பாகவதர் குறித்து சாரு நிவேதிதா 23 பக்கங்களில் எழுதியுள்ளதை இங்கே எப்படி எழுதுவது என்று சத்தியமாக எனக்குத் தெரியவில்லை.வான்கா-தன் காதை தானே அறுத்துக் கொண்ட நிலையில் தன்னையே self-portrait ஆக வரைந்திருப்பார். அதை எவ்வளவுதான் விளக்கிக் கூற முற்பட்டாலும் அதை ஒருவர் பார்த்து உணர்ந்தால் ஒழிய அந்த தாக்கத்தை புரிந்து கொள்ள முடியாது.அது போலத்தான் இந்த கட்டுரையும். படித்தால் மட்டுமே புரியும்.“இதுவரை எத்தனையோ கட்டுரைகள் எழுதியிருந்தாலும் தியாகராஜா பாகவதர் குறித்த இந்த கட்டுரை மனித வாழ்வு பற்றிய என்னுடைய நம்பிக்கைகளையே மாற்றிப் போட்டுவிட்டது” என்று எழுத்தாளரே கூறும் அளவிற்கான வாழ்க்கை பாகவதருடையது.

பி.யூ.சின்னப்பா:

                                                  
M.T.B - ரஜினி என்றால் , பி.யூ.சின்னப்பா – கமல். அவர் – எம்.ஜி.யார் என்றால் , இவர் – சிவாஜி. இத்தகைய பிரிவுக்கு முன்னோடிகளே இவர்கள்தாம். பாடகராக மட்டுமின்றி குஸ்தி, சிலம்பம், குத்துச்சண்டை, குதிரையேற்றம் என்று நிஜமான சகலகலாவல்லவராகவே சின்னப்பா இருந்துள்ளார். ரொம்ப பெரிய குசும்பர் என்று இவரைப் பற்றி படிக்கும் போதே தெரிகிறது. MTBக்கும் சின்னப்பாவிர்க்கும் இடையே பாடும் முறையில் இருக்கும் வேறுபாடுகள், சின்னப்பாவின் தனித்துவமான பாடும் குணாதிசயங்கள் என்று எழுத்தாளர் சுருங்கச் சொல்லியே அருமையாக விளங்க வைக்கிறார் (எனக்குதான் ஒண்ணும் புரியல). சின்னப்பா குறித்த கட்டுரையில் கடைசியாக வரும் வாக்கியங்கள் இவை 
                     
பி.யூ சின்னப்பாவின் புதுக்கோட்டையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது சமாதி எந்த கதியில் இருக்கிறதென்றே தெரியவில்லை. திருச்சியில் தியாகராஜா பாகவதரின் சமாதி கழுதை,நாய்,பன்றி போன்ற விலங்குகளும் மனிதர்களும் மலம் கழிக்க பயன்படுத்தப்பட்டுவருகிறது”. இந்த இரண்டு பேர் குறித்து கட்டுரையை படித்து முடியுங்கள். அப்பொழுதுதான் மேற்கூறிய வாக்கியங்களின் தாக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.

எஸ்.ஜி.கிட்டப்பா – கே.பி.சுந்தராம்பாள்:


                                   
கே.பி.சுந்தராம்பாள் பற்றி சுட்ட பழம் – சுடாத பழம் அளவிற்கே முன்பு எனக்கு தெரிந்திருந்தது. பின்பு நந்தனார் படத்தில் சுந்தராம்பாள் நடித்த போது அக்காலத்தில் அது எத்தகையா சாதிய ரீதியிலான விமர்சனங்களை சந்தித்தது என்று படித்திருக்கிறேன். ஆனால், கிட்டப்பா மேல் இவர் வைத்திருந்த காதல் @ பக்தி @ பித்து குறித்து இக்கட்டுரைகளின் மூலமே தெரிந்து கொண்டேன். இதில் என்ன ஒரு கொடுமையென்றால் கடைசி வரை கிட்டப்பா கசுந்தராம்பாள் தன் மீது வைத்திருந்த அளப்பரிய காதலை புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. இருவருரது வாழ்க்கையுமே ஒரு தேர்ந்த திரைக்கதை போலவே இருக்கிறது. தன்னோடு ஏழு ஆண்டுகள் உயிருடன் இருந்த கணவனுக்காக  - அந்த ஏழு ஆண்டுகளிலும்  மூன்றுஆண்டுகள் மட்டுமே சேர்ந்திருந்தனர் - மீதி 47 ஆண்டுகளும் ஒரு துறவியயைப் போன்றே வாழ்ந்துள்ளார். அவரது நினைவாகவும் அவரது தீராக்காதலின் நினைவாகவுமே இப்புத்தகத்திற்க்கு "தீராக்காதலி" என்று பெயரிட்டுள்ளார் சாரு. நெகிழ வைக்கும் கதை சுந்தராம்பாளினுடையது.

எம்.ஆர்.ராதா – எம்.ஜி.ஆர்:

எம்.ஆர்.ராதா குறித்து நான் கொஞ்சம் படித்திருந்ததனால் (மணா எழுதிய புத்தகம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது) இதிலுள்ள விஷயங்கள் சிலபல, பரிச்சயமானவைகளே. ஆனாலும் படிக்க சுவாரசியமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் குறித்து நம் அனைவருக்கும் அவர் திரைப்படங்களில் நடித்து ஒரு சக்தியாக வளர்ந்த பின்னர் உள்ள கதை ஓரளவிற்கு தெரிந்திருக்கும்.ஆனால் அவரது சிறுவயது – இளமைக்காலம் உங்களுக்கு தெரியுமா...எனக்கு தெரியாது. எம்.ஜி.ஆர். பிறந்தது ஒரு செல்வச் செழிப்பான குடும்பத்திலேயே.ஆனாலும் சிறுவயதில் தந்தையின் மறைவிற்குப் பிறகு வறுமையில் வாடக் காரணம்–அக்காலத்தில் கேரளாவில் புழக்கத்தில் இருந்த “மருமக்கள் தாயம்" என்ற பழக்கம். மருமக்கள் தாயம் – அப்படியென்றால்?. புத்தகத்தைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

காலம் என்பது கழங்கு போற் சுழன்று
மேலது கீழாய் கீழது மேலாய் மாறிடும் தோற்றம்

                                                                                                                           – மனோன்மணீயம்


                                                                             
இதே போன்று ஜென்னிலும் வட்டம் முன்னிறுத்தப்பட்ட கோட்பாடு - Circle of Zen - உண்டு. திபெத்திய புத்த மதத்திலும் சக்கரங்கள் குறித்த தத்துவம் உண்டு. வெர்னெர் ஹெர்சாக்கின் Wheel of Time பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்(நானும் அதன் மூலமே தெரிந்து கொண்டேன்). இந்த கீழது மேலாய் – மேலது கீழாய் எல்லாருக்கும் பொருந்தும்.எனக்கு-உங்களுக்கு - பாகவதருக்கு – எம்.ஜி.ஆருக்கு – கருணாநிதிக்கு – ஜெயலலிதாவிற்கு. எப்ப – எப்படி என்று தெரியாமல் இருப்பதுதானே இதிலுள்ள சுவாரசியம்.

என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் இது போன்ற ஆளுமைகளைப் பற்றி கட்டுரை எழுதுவதென்பது சிரமம்.அதை விட - சுவாரசியமாகவும், அதே சமயம் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலும் எழுதுவதென்பதுதான் உண்மையிலேயே மிகக் கடினம். சில வகை கட்டுரைகள் தினத்தந்தியில் அரசு தேர்விற்கு தயாராகும் ஆட்களுக்கு உதவும் வகையில் இருக்கும். “தியாகராஜா பாகவதர் அவர்கள் 1910 ஆம் ஆண்டு – இந்த நாள் – இந்த கிழமை – இந்த இடம் – இந்த ஆஸ்பத்திரி. தந்தை, தாயார்,தாத்தா,பாட்டி இவர்கள் பெயர். பிறக்கும்போது அவருக்கு அவருக்கு வயது – ஒரு நாள்" இந்த ரீதியிலேயே இருக்கும். மேலும் சில கட்டுரையாளர்கள் – இசை போன்ற விஷயங்களை குறித்து எழுதும் போது கூட(விஜயகாந்த் ஹஸ்கி குரலில் பேசுவது போல) புள்ளிவிவரக் குறிப்புகளாகவே இருக்கும் (இங்கு யாராவது ஒரு இசை விமர்சகர் ஞாபகம் வந்தால் எந்த விதத்திலும் அதற்கு நான் பொறுப்பில்லை). ஆனால் ஒரு சிறந்த இசை ரசிகர் சிறந்த எழுத்தாளராகவும் இருக்கும் போது இசை குறித்தும் – பாடகர்கள் குறித்தும் – இசை அமைப்பாளர்கள் குறித்தும் எழுதும் போது – அதன் வீச்சே தனி.

ஏனென்றால் சாரு அவர்களே, இந்த புத்தகத்தில் மட்டுமல்ல நிறைய கட்டுரைகளில் கூட எழுதுவதை விட இசையே மிகப் பிடித்தமான ஒன்றாக குறிப்பிடுகிறார். எனக்கு தெரிந்த வரையில் தமிழ்நாட்டில் நான் படித்த – தெரிந்து வைத்திருக்கக் கூடிய ஒரு எழுத்தாளரும் Cradle of Filth குறித்தோ Eminem குறித்தோ - சாரு அவர்களைத் தவிர்த்து - எழுதி நான் படித்ததில்லை. நான்சி அஜ்ரமை நிறைய பேர் இப்பொழுது ரசிக்க சாருவும் ஒரு காரணமாக இருக்கலாம் என்பது என் அனுமானம். அவர் கலகம் - காதல் - இசை போன்று இசை வகைகள் குறித்தும் இன்னபிற நுணுக்கங்கள் குறித்தும் எழுதியிருந்தாலும் இது போன்ற ஆளுமைகள் குறித்து – ஜிம் மோரிசன் குறித்தோ, ஜிம்மி ஹென்றிக்ஸ் குறித்தோ – ஏன் அந்த 27 Club குறித்து கூட இதுபோன்ற கட்டுரைகளாக எழுதினால் ரொம்பவே மகிழ்ச்சி. ஆனாலும் எனக்கு சில சமயம் அவரது எழுத்து ரொம்பவும் பிடிக்காமலும் இருந்திருக்கிறது. இருந்தாலும் அவரைத் தவிர Freddie Mercury போன்ற ஆளுமையைக் குறித்து எழுத இங்கு – இசை விமர்சகர்கள் இருக்கலாம் – எழுத்தாளர்கள் இல்லை. ஏனென்றால் இசை போன்ற உணர்ச்சிபூர்வமான விஷயத்தை எழுத்தாளர்களாலேயே அதன் முழு பரிணாமத்தையும் வெளிப்படுத்த முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.

              இந்த புத்தகத்தின் தாக்கம் எந்த அளவிற்கு இருந்தது என்றால் பாகவதரின் பாடல்களை தேடிப் பிடித்து கேட்க ஆரம்பித்து விட்டேன் (இங்கே சொடுக்கி நீங்களும் கேட்டு மகிழுங்கள்). எனக்கு என்ன வருத்தம் என்றால் 1950களின் Blues Legend – Muddy Watersயை தெரிந்து வைத்திருந்த அளவிற்கு ( அதுவே சொற்பம், அத காட்டிலும் இது இன்னும் சொற்பம் ). மேலும் இந்த இசைக் கலைஞர்கள் குறித்து தேடித் பார்த்தல் – இதில் சாரு அவர்கள் கூறியுள்ளதைப் போல–மிக மிக சொற்பமான அளவிற்கே ஆவணங்களும், மிக முக்கியமாக பாடல்களும் உள்ளன.அவரும் கூட மிகுந்த சிரமங்களுக்கு இடையே தான் இந்தத் தகவல்களைத் திரட்டியுள்ளார்.இதுவே வெளிநாட்டில் என்றால் இந்த நிலை இருந்திருக்குமா. 1930களில் பதியப்பட்ட ப்ளுஸ் பாடல் முதற்கொண்டு அத்தனனையும் பத்திரப்படுத்தியுள்ளனர். நானும் கூட பழைய திரைப்படம் குறித்து எழுதியுள்ளேன் - அது ஜெர்மன். இதுவரை ஒரு பழைய தமிழ்படம் குறித்துக் கூட எழுதியதில்லை. நிறைய படங்கள் எனக்கு பிடித்திருந்தாலும் கூட.இனி சில பழைய படங்கள் குறித்தும் அவ்வப்போது எழுத உத்தேசித்துள்ளேன்.. நண்பர்கள் நமது பழையபடங்கள் குறித்தும் – அதன் ஆளுமைகள் குறித்தும் – அக்காலகட்டதில் திரைப்பட சூழல் எவ்வாறு இருந்து என்பது குறித்தும் தெரிந்து கொள்ள(அனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் கருத்து)கீழ்க்கண்ட நூல்களை படிக்கலாம் என்று நினைக்கிறேன்.வேறு நூல்கள் குறித்தும் தாராளமாக நீங்களும் சொல்லலாம்.
Facebookers..

30 comments :

  1. நாளிக்குதான் வருவீங்க போல...பொறுமையா படிச்சிட்டு( ??) வாங்க..

    ReplyDelete
  2. அருமை... /// மிக சொற்பமான அளவிற்கே ஆவணங்களும், மிக முக்கியமாக பாடல்களும் உள்ளன.அவரும் கூட மிகுந்த சிரமங்களுக்கு இடையே தான் இந்தத் தகவல்களைத் திரட்டியுள்ளார்.இதுவே வெளிநாட்டில் என்றால் இந்த நிலை இருந்திருக்குமா. /// முற்றிலும் நிஜம்...

    ReplyDelete
  3. அப்போ கொழந்த கூடிய சீக்கிரம் சாரு அவர்களுடைய தளத்தில் உங்களின் இந்த பதிவின் லிங்க் ஐ காணலாம்... கலக்கற கொழந்த...

    ReplyDelete
  4. http://ennangalezuththukkal.blogspot.com/2011/05/blog-post_11.html
    சூப்பர் கொழந்தம்சாருக்கு லின்க் குடுத்துருக்கேன்,நல்ல ஒர்த்தான அறிமுகம்,
    பழைய சினிமா பார்க்க ஆரம்பிச்சிருக்கேன்,முதல் கட்டமா அந்த நாளும்,பொம்மையும்,சந்திரலேகாவும் பார்த்தேன்.மேலே உள்ள சுட்டியில் சாரதா என்பவர் பழைய படங்களையும்,அரிய சினிமா தகவல்களையும் மிக அழகாக எழுதி அறிமுகம் செய்கிறார்.

    ReplyDelete
  5. உலகை குலுக்கிய கவர்ச்சி நடிகைகள் ---- எனக்கு பெருத்த ஏமாற்றம்,அடுத்த பதிவில் வாசகர் குறை தீர்க்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்,

    ReplyDelete
  6. அறியாத தகவல்கள்,இதில் தியாகராஜ பாகவதரின் சமாதி மட்டும் திருச்சியில் இருப்பது முன்பே தெரியும்,மற்றவைகள் புதிது,நல்ல கட்டுரை,

    ReplyDelete
  7. தீராக்காதலி - சாருவின் அட்டகாசமான புத்தகம். படித்து முடித்தவுடன், எனது தந்தைக்கு அளித்து விட்டேன் - அவரையும் படிக்கச் சொல்லி. சாருவின் அத்தனை புத்தகங்களும் அருமையாக இருக்கும் என்றாலும், இப்புத்தகம், அமைதியானதொரு இரவில், கோப்பை நிறைய விஸ்கியோடு, இதில் உள்ள நட்சத்திரங்களின் பாடல்களைப் போட்டுவிட்டு, அந்த உணர்ச்சிகரமான இரவில் படிக்க மிகவும் ஏற்றது. குறிப்பாக, தியாகராஜ பாகவதரின் பல பாடல்களை நான் இன்றும் கேட்பதுண்டு. அவரது 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே', 'ராஜன் - மகராஜன்', 'கிருஷ்ணா முகுந்தா முராரே', 'தீன கருணாகரனே நடராஜா' ஆகிய பாடல்களை, நான் மேற்சொன்ன நிலையில் கேட்டால் . . . . . . WOW !! Tat's da ultimate ! அப்படியே, சில மாதங்களுக்கு முன்னர், சாரு, உயிர்மையில், பழைய தமிழ்ப்படங்களைப் பற்றி எழுதிய ஒரு கட்டுரையையும் நினைவு படுத்த விரும்புகிறேன்.

    ReplyDelete
  8. எனது தந்தை, பாகவதரைப் பற்றிய பல தகவல்களைக் கூறுவார். அவர், எம்.கே.டியின் ரசிகர். ராஜவாழ்க்கை வாழ்ந்த ஒரு மனிதர், காலத்தின் சுழலில் சிக்கி, அத்தனையும் இழந்து, மிகமோசமானதொரு மரணத்தைத் தழுவியது, நமக்கு ஒரு பாடம். துணுக்குச் செய்தி : - எம்.கே.டி, தனது கடைசிக் காலத்தில், கோயில் கோயிலாகச் சுற்றியபோது, சாய்பாபாவையும் தரிசித்துள்ளார். அந்தச் சமயத்தில், இருவருக்கும் நடந்த உரையாடல், குறிப்பிடத் தக்கது. அதனைப் பற்றி, ரா.கணபதி எழுதியுள்ள 'ஸ்வாமி' புத்தகத்தில் காணலாம்.

    ReplyDelete
  9. //என் சிற்றறிவிற்கு எட்டிய வரையில் இது போன்ற ஆளுமைகளைப் பற்றி கட்டுரை எழுதுவதென்பது சிரமம்//

    //என் சிற்றறிவிற்கு தெரிந்த வரையில் தமிழ்நாட்டில் நான் படித்த தெரிந்து வைத்திருக்கக் கூடிய ஒரு எழுத்தாளரும் Cradle of Filth குறித்தோ Eminem குறித்தோ எழுதி நான் படித்ததில்லை.//

    என் சிற்றறிவுக்கு தெரிந்த வரையில் இது ஒரு நல்ல புத்தகம்... அதை விளக்கும் நல்ல பதிவு!!

    ReplyDelete
  10. சொல்ல மறந்துவிட்டேன். அட்டகாசமான கட்டுரை. இதை FB யில் பகிர்ந்தாயிற்று :-)

    ReplyDelete
  11. @Murali Krishnan...
    // சாரு அவர்களுடைய தளத்தில் உங்களின் இந்த பதிவின் லிங்க் ஐ காணலாம் //

    எனக்கு சாரு பிடிக்கும்...ஆனா....பிடிக்காது....நிலைமைதான்...அவர் எழுதிய நெறைய விஷயங்களில் எனக்கு ஒத்து வராதது. அதுனால லிங்க் குறித்து நா ரொம்பவும் யோசிக்கவில்லை (உண்மைய சொன்னா - நானும் கூட யோசிச்சேன்...ஒருவேள லிங்க் கொடுத்தா அப்பறம் நானும் ஒரு இலக்கியவாதி ஆகிருவேன்....உயிரெழுத்து,உயிர்மை,காலச்சுவடு முதற்கொண்டு எல்லா பத்திரிகைகளிலும் என் கட்டுரைதான் வரும்..அப்புடியே ஸ்டேட் வுட்டு ஸ்டேட்...அப்பறம் நாடு விட்டு நாடு...அப்பறம் நோபெல் தான்...)

    லிங்க் குறிச்சு அப்பறம் கவலப்பட்டுக்கலாம்..முதல்ல தியாகராஜ பாகவதரின் பாடல்களை கேளுங்க....ஒரு சொடுக்கி குடுத்திருக்கேன் பாருங்க.....


    @டெனிம் மோகன்......
    ஏற்கனவே நீங்க Wanita Malam பாத்து ரொம்ப உணர்ச்சிவசப்பட்டிருப்பீங்கன்னுதான் "அந்த" பதிவு தள்ளிபோயிர்ச்சு....

    //அறியாத தகவல்கள்// - தகவல்களா......யோவ்....ஒரு வாழ்ந்து கெட்ட மனுசனின் கத பத்தி பேசிகிட்டு இருக்குறது உங்களுக்கு தகவல்களா....எனக்கு தெரிஞ்சு ரொம்பவும் கொடுமையான விஷயங்களில் ஒண்ணு நல்லா வாழ்ந்தவர்கள் நடுத்தெருவுக்கு வருவது....

    முக்கி முக்கி Circle of Zenன பத்திலாம் எழுதியிருக்கேன்...அதுகாகவாச்சு ரெண்டு பாகவதர் பாட்ட கேளுங்க...

    ReplyDelete
  12. @கீதப்பிரியன்...
    தல...அப்புடியே நீங்க பழைய படங்கள் குறிச்சு எழுதும் ட்ரெண்டை ஆரம்பிச்சு வைக்க வேண்டுகிறேன்....அப்புடியே நாங்க follow பண்ணி வந்திர்றோம்.......

    நீங்க குடுத்திருந்த லிங்க் நிறைய பேருக்கு பயன்படும்...

    ReplyDelete
  13. @கருந்தேள்....

    எப்பா....இவுரு ஒருத்தர்தான் மெயின் மேட்டர பத்தி எழுதியிருக்கார்......
    // காலத்தின் சுழலில் சிக்கி, அத்தனையும் இழந்து, மிகமோசமானதொரு மரணத்தைத் தழுவியது, நமக்கு ஒரு பாடம்//

    அதத்தான் "காலம் என்பது கழங்கு"..சரி விடுங்க....

    தீன கருணாகரனே நடராஜா - செம பாட்டு...ஒரு ஹிப் ஹாப் பீட் இருக்கும்.....

    // சாய்பாபாவையும் தரிசித்துள்ளார்// அது குறிச்சு இந்த புத்தகத்திலும் எழுதி இருக்கார்...ஆனா ரொம்ப விரிவா இல்ல...

    //சொல்ல மறந்துவிட்டேன். அட்டகாசமான கட்டுரை// நா எழுதுற கட்டுரைகள் எல்லாமே அட்டகாசம் என்பது ஏற்கனவே வரலாற்றில் பொறிக்கப்பட ஒன்று.....இருந்தாலும்.....ரொம்ப நன்றி....(ரொம்ப நாள் கழிச்சு என் கட்டுரைய என்ன தவிர இன்னொருத்தர் FBல லிங்கியிருக்கார்)

    ReplyDelete
  14. //என் சிற்றறிவுக்கு தெரிந்த வரையில் இது ஒரு நல்ல புத்தகம்... அதை விளக்கும் நல்ல பதிவு!!//

    பாஸ்..எனக்கு கொஞ்சம் தன்னடக்கம் ஜாஸ்தி.....முதல்ல புக்க படிங்க..அப்பறம் பாடல்களை கேட்டுட்டு சொல்லுங்க...

    ReplyDelete
  15. //என் சிற்றறிவிற்கு தெரிந்த வரையில் தமிழ்நாட்டில் நான் படித்த தெரிந்து வைத்திருக்கக் கூடிய ஒரு எழுத்தாளரும் Cradle of Filth குறித்தோ Eminem குறித்தோ எழுதி நான் படித்ததில்லை//

    மிக உண்மை. இங்கே, எழுத்து என்றால், அது 'உள்ளொளி தரிசனம்', 'தூய அத்வைதம்', 'தூய புத்திசம்' என்ற ரீதியில் அல்லவா இருக்கிறது :-) . . (அது என்னய்யா எதை எழுதினாலும் 'தூய', 'தூய' என்று ஒரு அடைமொழியைச் சேர்த்துக்கொள்கிறீர்கள்? )

    ReplyDelete
  16. எனக்கொரு ஆசை. நம்மூர் இலக்கியவாதிகள் அனைவரையும் ஒரு அறையில் அடைத்துவிட்டு, Cradle of Filth பாடல்கள் உச்சபட்ச வால்யூமில் அந்த அறையில் அலற விட்டுவிடவேண்டும். அதன்பின் அங்கே என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். எனக்குத் தெரிந்து, சாருவைத் தவிர, பாக்கியிருக்கும் எழுத்தாளர்கள் அனைவருமே இருபது ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருப்பதாகப் படுகிறது. அதிலும் இந்தத் 'தூய' எழுத்தாளர் இருக்கிறாரே. . . அரே பக்வான் . . .

    ReplyDelete
  17. கோணல் பக்கங்களில், எமினெம் பற்றி சாரு இன்னொரு எழுத்தாளரிடம் சொல்லப்போக, அவர், 'அதெல்லாம் என்னோட பேரன் மட்டும்தான் கேட்பான். . எனக்கு சுத்தமா அந்த இரைச்சல் புடிக்காது' என்று சொல்ல, உடனே இவர், 'அப்போ உங்க பேரன் கிட்டதான் பேசமுடியும். உங்ககிட்ட இல்ல' என்று சொல்லிவிட்டு அங்கிருந்து எழுந்துவந்துவிட்டதாக எழுதியிருப்பார். இங்கே, எழுத்தாளர்கள், வாழ்வை அனுபவிப்பதை விட்டுவிட்டு, மொக்கை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது (உடனே, இதைப் படிக்கும் யாராவது, 'டாஆஅய்ய்ய.. ' என்று ஆரம்பித்து, உள்ளொளி தரிசனத்தைப் பற்றி பல பத்திகள் எழுதவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் )

    ReplyDelete
  18. தீராக்காதலி படித்திருக்கும் உங்களை, 'தாந்தேயின் சிறுத்தை' புத்தகத்தையும் படிக்கச்சொல்லி சிபாரிசு செய்கிறேன். சாருவின் கட்டுரைத் தொகுதிகளிலேயே, எனக்கு மிகப்பிடித்த ஒரு புத்தகம் அது. கடந்த முப்பது வருடத் தமிழ் இலக்கியத்தின் போக்கைப் பற்றி எளிதில் தெரிந்துகொண்டுவிடலாம் - அதனைப் படித்தால். படு சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

    ReplyDelete
  19. ஹலோ.. மைக் டெஸ்டிங். 1....2....3....

    ReplyDelete
  20. ஜெயமோகனையும் எனக்கு அவ்வளவா பிடிக்காது...சாருவை பிடிக்கும் - பிடிக்காது....இந்த ரேஞ்சுக்கு தான்....ஆனா எல்லாரையும் படிப்பேன்...30 வருசத்துக்கு மேலயும் அந்த passion கொறயாம இருக்குற எல்லாரும் - சாருவா இருக்கட்டும் - உ.த.எ - இளையராஜாவா இருக்கட்டும் - Scorsese ஆக இருக்கட்டும் - ஹெர்சாக்கா இருக்கட்டும் - எல்லாருமே எனக்கு பல வகையிலும் பிடிச்சவங்க...இவுங்களை படிக்காம தவிர்த்தேனா முழு நஷ்டமும் எனக்குத்தான்....அது மட்டும் எனக்கு புரியும்...மத்தபடி ஐ ஆம் எ கத்துக்குட்டி.....

    by the way, Cradle of Filth எனக்கென்னமோ பிடிக்கல....ஆனா Slipknot கொஞ்சம் பிடிக்கும்...

    ReplyDelete
  21. என்ன...........கருந்தேள் என் ப்ளாக்கில் இத்தன கமெண்ட் போட்டிருக்காரா......BitterSweet Life என்னதான் ஆச்சு...(அடச்ச....கேக்கக்கூடாதுன்னு பாத்தா..)

    //கோணல் பக்கங்களில், எமினெம் பற்றி சாரு இன்னொரு எழுத்தாளரிடம் சொல்லப்போக, அவர், 'அதெல்லாம் என்னோட பேரன் மட்டும்தான் கேட்பான்.//

    /தீராக்காதலி படித்திருக்கும் உங்களை, 'தாந்தேயின் சிறுத்தை' புத்தகத்தையும் //

    தல..என்ன நீங்க.....கோணல் பக்கங்கள் நானும் படிச்சிருக்கேன்...

    தாந்தேயின் சிறுத்தை - என்ன பிரச்சனைனா அவுரு நெறைய கட்டுரைகள இணையத்திலேயே எழுதிறார். நானேல்லாம். மாசத்துக்கு எப்படியாச்சு எங்கப்பாவும் நானும் ரெண்டு மூணு புத்தகம் வாங்கிருவோம். புத்தகக் கடையில பார்க்கும் போது இத ஏற்கனவே இணையத்திலும் உயிமையிலயும் படிச்சாசேன்னு சொல்லி வேற புத்தகத்த வாங்கிருவோம்...பொருளாதார நிலைமையையும் பாக்கணும்ல......

    ReplyDelete
  22. நண்பரே,

    சாருவின் இக்கட்டுரைகளில் சிலவற்றை உயிர்மையில் தொடராக வெளிவந்தபோது படித்திருக்கிறேன், சாரு வித்தியாசமான ஒரு மொழிநடையை இதில் கையாண்டிருப்பார். ராஸலீலாவிலும் எமினெம் வருவார்.ஆவணப்படுத்துவது என்பது தமிழிற்குரிய சாபம் போலும் ;) பழைய திரைப்படங்கள் என்றால் ரிவால்வர் ரீட்டா குறித்தும் எழுத வேண்டும் :)

    ReplyDelete
  23. // ரிவால்வர் ரீட்டா // முழுசா இன்னும் நா ரிவால்வர் ரீட்டாவ பாக்கல....

    // சாரு வித்தியாசமான ஒரு மொழிநடையை இதில் கையாண்டிருப்பார். ராஸலீலாவிலும் எமினெம் வருவார் //
    நீங்களும் நெறைய சாருவின் நாவல்களும் கட்டுரைகளையும் படிச்சிருபீங்கன்னு தெரியுது...அப்பப்ப அதையும் எடுத்து விடுங்க....

    ReplyDelete
  24. நண்பரே,
    வெகு நாட்களாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தாத தமிழ் சினிமா உலகம் என்ற தளம் இன்று முதல் இயங்க ஆரம்பித்து இருக்கிறது. இந்த வாரம் ரிலீஸ் ஆன த ப்ரீஸ்ட் காமிக்ஸ் கதையை மைய்யமாக கொண்டு வந்த கல்லறை உலகம் என்கிற ப்ரீஸ்ட் படமே முதல் விமர்சனம்.

    கிங் விஸ்வா
    தமிழ் சினிமா உலகம் - ப்ரீஸ்ட் - கல்லறை உலகம் விமர்சனம்

    ReplyDelete
  25. This comment has been removed by the author.

    ReplyDelete
  26. வழக்கம் போல... நான் கமெண்ட் செக்‌ஷனுக்கு வந்திட்டேன்.

    மிக அருமையான பதிவு.

    நீங்க கொழந்ததானே? ஒரு ஆட்டோக்ராப் போட முடியுமா?

    நேரம் கிடைத்தால் எங்களூருக்கு வருவீர்களா?

    ReplyDelete
  27. நா கனடாவில் - அடுத்த மாதம் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வருகிறேன்.......அது முடிஞ்சு முழுவதும் ரெண்டு நாள் - நயகாரா சுத்தி பார்த்தல்................

    அதுவும் முடிஞ்சு ஒரே ஒரு நாள் - US வரேன்..............broadwayஇல் தமிழ் நாடகம் ஒன்றை தொடங்கி வைப்பதற்கு...............அங்கு வந்தால் ஆட்டோகிராப் போடுகிறேன்...............

    ReplyDelete
  28. தினத்தந்தில முன்னாடி வரலாற்று சுவடுகள்னு ஒரு தொடர் வந்திச்சு.. அதில இது மாதிரி பாகவதர் விசயங்கள் நிறைய படிச்சிருக்கேன். அவர் பாடல்கள் ரொம்ப பழைய காலத்து பாடல்களா இருந்தாலும் அது கொஞ்சம் வித்யாசமா ரசிக்கிற மாதிரிதான் இருக்கும்..

    ReplyDelete
  29. "கறங்கு" னு இருக்காப்ல இருக்கு, மனோன்மணீயத்துல.

    ReplyDelete