Wednesday, September 29, 2010

70's - 80's ராக் இசை - Led Zeppelin


பெரும்பாலானவர்களைப் போல நானும் மைக்கேல் ஜாக்சன் மூலமா தான் ஆங்கில பாடல்களையே கேட்க ஆரம்பிச்சேன். அதுவும் கடந்த ஆறு வருடங்களாகத்தான் நெறைய கேட்கவே முடிஞ்சது. ஏன்னா பத்தாவது வரைக்கும் எங்க வீட்டில கேபிள் கிடையாது. பத்தாவதுக்கப்பறம்-அதுவும் முழுப்பரீட்சை லீவ்ல தான் கேபிள் கொடுப்போம். கேபிள் வாடகையும் அதிகம்- கொடுத்தா நா ரொம்ப பார்ப்பேன்னு வேற கொடுக்க மாட்டாங்க. 12வது முடிச்சு காலேஜ் ரெண்டாவது வருசத்தில இருந்து தான் முழுநேரமும் கேபிள் இருந்தது. அப்ப இருந்து என் ராஜ்ஜியம் தான். எங்க வீட்டில யாருக்கும் சீரியல் பார்க்குற பழக்கம் இல்லாதது ரொம்ப வசதியா போச்சு. காலேஜில இருந்து வந்த உடனே vh1 சேனலத்தான் முதல்ல போடுவேன். ராத்திரி ஏதாவது எழுதிகிட்டு இருந்தாலும் எனக்கு பாட்டு ஓடிகிட்டே இருக்கணும். அப்ப இருந்துதான் பெருமளவில் நிறைய கேட்க ஆரம்பிச்சேன்.


அப்ப எனக்கு AC/DC, Bob Dylan,John Lennon,Marley இந்த மாதிரி யாரையுமே தெரியாது. ஏதோ முன்னாடி 10வது லீவ்ல பார்த்தத வெச்சு Robbie Williams, Metallica மாதிரி கொஞ்சம் பேரை மட்டுமே தெரியும்.இத எதுக்கு சொல்றேன்னா இசையில் முக்கியமான ஆளுமைகள தெரியாட்டியும் முதல் முறையா கேட்க்கும் போதே பல இசை வடிவங்கள் பெருமளவில் என்னை ஈர்த்திருச்சு. AC/DC-Back in Black கேட்ட உடனே ரொம்பவே பிடிச்சிருந்தது. அப்பறம் அவுங்க பாடல்கள் எல்லாத்தையும் தேடித்தேடி கேட்க ஆரம்பிச்சேன்(எல்லோரும் அப்படித்தானே...). எனக்கு அப்படியே வேற வேற இசை வடிவங்களை கேட்டுகிட்டே இருக்கணும். இதுல திருப்தியே வர மாட்டேங்குது. வலையபட்டி தவில், ஷேய்க் சின்ன மௌலானா இந்த மாதிரியே ஒரு டிவிடி முழுவதும் வெச்சுருக்கேன். திண்டுக்கல்லைச் சேர்ந்த சக்தி பெண்கள் தப்பாட்டக் குழுவுடைய இசையமைப்பையும் கேட்டிருக்கேன். திடீர்ன்னு Eminemகு தாவிருவேன். அதுக்கு சம்பந்தமே இல்லாம Bach, Mozartன்னு கேட்பேன். எனக்கு புதுசு புதுசா கேட்டுகிட்டே இருக்கணும். அதே சமயம் மேலோட்டமா கேட்கவும் பிடிக்காது. எதுக்கு இவ்வளோ சுயதம்பட்டம்...நிஜமா எனக்கே தெரியல...எந்தவொரு பதிவுக்கும் Intro வேணுமில்ல..இத அதுமாதிரி எடுத்துக்கோங்க...
                                       Mission Impossible 2 படத்த பெரும்பாலானவர்கள் பார்த்திருப்போம். அந்தப் படத்தின் OST ஞாபகமிருக்கா...ஒண்ணு Metallica-I Disappear இன்னொன்னு Limp Bizkit-Take a look around. ரெண்டுமே செமையா இருக்கும். அப்படித்தான் எனக்கு Hard Metal Rock அறிமுகமானதே. இதுல Metallicaவின் பாடல் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.அப்பயிருந்து அவுங்களப் பத்தி தேட ஆரம்பிச்சது...கொஞ்ச கொஞ்சமா வளந்து பல ராக் இசை குழுக்களைப் பற்றிய தேடல்ல முடிஞ்சது. இப்ப உள்ள Green Day, Wolfmother, White Stripes, Linkin Park மாதிரி பல குழுக்கள் பிடித்திருந்தாலும் 70's-80'sல வந்த ராக் இசை பெருமளவில் என்னை கவர்ந்துள்ளது. அதிலிருந்து சில பாடல்களை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். இந்த வகை இசைக்கு புதியவர்கள் இந்தப் பாடல்களைக் கேட்டுட்டு அதை விரும்ப ஆரம்பிச்சாங்கன்னா ரொம்ப சந்தோஷம். மத்தபடி ராக் இசை காட்டுக் கூச்சல், ஏகாதிபத்தியத்தின் எதிரொலி..இந்த மாதிரி எண்ணம் உள்ளவர்களுக்கு இது கண்டிப்பா பிடிக்காது...

Led Zeppelin:


70'sக்கு அப்பறம் என்பதால Beatles, Elvis, Rolling Stone மாதிரி முன்னோடிகள தவிர்த்து நேரா கலக்கலானா ராக் வகையான Heavy Metal-Hard Rock வகைக்கு போயிர்றேன்.

இதுல மிகப் பெரிய மாற்றதை கொண்டு வந்த குழுவினர் இங்கிலாந்தைச் சேர்ந்த Led Zeppelin. இதுக்கு முக்கியக் காரணம் இந்தக் குழுவில் இருந்த ஜிம்மி பேஜ்(Jimmy Page)-கிடாரிஸ்ட். உலகின் மிகச் சிறந்த 3 கிடாரிஸ்ட் பட்டியலில் இவருக்கு நிச்சயம் ஒரு இடமுண்டு. எலெக்ட்ரிக் கிடாரில் மிகப் பெரிய அளவில் மாறுதல்களை கொண்டு வந்தவர். 


அதுமட்டுமில்லாம இந்தக் குழுவின் பாடகரான ராபர்ட் பிளான்டின்(Robert Plant) குரலும் ஒரு முக்கியக் காரணம். எந்த ஒரு ராக் குழுவிற்கும் stage presence என்பது ரொம்ப முக்கியம்.குறிப்பாக..அதன் பாடகருக்கு. நீங்க ராபர்ட் பிளான்ட் பாடுவதைக் கேட்டால்-பார்த்தால் அதைப் புரிந்து கொள்ளலாம். Queen குழுவின் பாடகரும் உலகின் தலைசிறந்த குரல்களில் ஒன்றான Freddie Mercury கூட தன்னை மிகப் பாதித்த குரலில் ஒன்று ராபர்ட் பிளான்டின் குரல் என்று கூறியுள்ளார்.


2008ல் Led Zeppelin குழுவினரைப் பற்றி ஒரு புத்தகம் வெளிவந்திச்சு. அதன் தலைப்பு - When Giants Walked the Earth. என்ன ஒரு தலைப்பு பாருங்க..இவுங்க பாடலை இப்ப கேட்கும் எனக்கே இப்படினா... 70's-80'sல கேட்டவுங்களுக்கு எப்படி இருக்கும்...உங்களுக்கு தெரிந்தவர்களோ..உறவினர்களோ..ஏன் நீங்க கூட அந்த காலகட்டத்திலேயே இவர்களைக் கேட்டிருந்தீங்கன்னா அது குறித்து ஏதும் சொல்ல முடியுமா....இவர்களது பாடல்களில் எனக்கு மிகப் பிடித்த சில பாடல்களை பகிர்ந்துக்கிறேன்.
இதைத் தவிர பல பாடல்கள் இருந்தாலும்-சட்டுன்னு தோன்றுனது இவைகளே. Right Click-Save Target கொடுத்து டவுன்லோட் செஞ்சுக்கலாம்.

சற்றே பெரிய பி.கு:
இதைத் தவிர நிறைய குழுவினர்களைப் பற்றியும் நான் ரசிக்கும் இசை வகைகள் பற்றியும் எழுதலாமா வேணாமன்னு ஒரு பெரிய குழப்பம்.எனக்கு இசை நுணுக்கங்கள குறித்து அளப்பரிய அறிவு கிடையாது.ஒரு சாமானிய ரசிகனாகத்தான் இருக்கேன்.பார்ப்போம்.சும்மா name dropping மாதிரி பாடல்கள்-குழுவினர்களை சொல்லிட்டு போக விருப்பம் இல்லை. முதல்ல நா எழுதுறது எனக்கு திருப்தியா இருக்கணும். அப்பறம்தான் எல்லாம்.என்னித படிக்கிற பத்து பேர்ல ஒருத்தராவது பாடல்களைக் கேட்டா இன்னும் சந்தோஷமா இருக்கும். யாருக்கும் ப்ளாகில் பாடல்களைக் கேட்கும் அளவிற்கு நேரம் இருக்காது என்று தெரியும். டவுன்லோட் செஞ்சு அப்பறம் கேட்டா கூட சந்தோஷம்.   
Facebookers..

48 comments :

  1. நீங்களும், நானும் மாத்தி மாத்தி பின்னூட்டம் போட்டுகிட்டா தான் உண்டு.

    மற்றபடி 'Led Zeppelin' ஒரு சரித்திரம் என்பதை மறுக்க முடியாது. இவர்களை பற்றி ஒரு நீண்ட கட்டுரை என்னோட ட்ராஃப்டில் இருக்குது. நீங்க சொன்ன 'When Giants walked the earth' புத்தகம் அருமையானது. ஜிம்மி பேஜ்ஜின் குழந்தை பருவத்திலிருந்து ஆரம்பித்து, அவர்கள் முதலில் இருந்த இசைக்குழுவான Yardbirds என்று சகலத்தையும் சொல்லியிருப்பார்கள்.

    நம்மோட திருப்திக்கு தானே எழுதுறோம். எழுதுங்க...

    ReplyDelete
  2. மெட்டாலிக்காவின் 'I Disapper' ஒன்றும் அவர்களின் சிறந்த பாடல் இல்லை. ஆனால், அதன் ம்யூசிக் வீடியோவில், மெட்டாலிக்காவிற்கு பிடித்த ஆக்ஷன் படங்களுக்கு மரியாதை செலுத்தி இருப்பர். 'North By Northwest', 'Bullitt', 'Die Hard' மற்றும் 'Brazil' படத்திலிருந்து வரும் ஆக்ஷன் காட்சிகளை மெட்டாலிக்கா குழுவினர் பெர்ஃபார்ம் செய்திருப்பர்...

    ReplyDelete
  3. எனக்கெல்லாம் ராக், பாப், ராப் எல்லாம் ஒன்னுதான்! ஏதோ டிவில போடற சில பாட்டுகள் பார்ப்போம். அதோட இசைதானே நம்மை கவருகிறது! (அதை எங்க அம்மா அப்பா பார்த்தா, கன்னாபின்னான்னு கத்திகிட்டு இருக்காங்க இதை பார்க்கிறீங்களேன்னு சொல்வாங்க! :-))

    ReplyDelete
  4. நானும் காலேஜ் படிக்கும் சமயத்தில் கன்னாபின்னாவென்று Pop, Rock என்று கண்ணில் ப்ட்டதையெல்லாம்(!) கேட்டிருக்கிறேன். ஆனால் இசையைப் பற்றியோ, பாடகர் அல்லது அந்தக் குழுவைப் பற்றி எதுவுமே தெரியாது.

    இப்போதெல்லாம் New Age Music & Fusion-ல் Settle ஆகிவிட்டேன். Prem Joshua, Enigma, Buddha Bar - இவைதான் நான் அதிகம் கேட்பது. அவ்வப்போது Hindustaniயும் உண்டு.

    ReplyDelete
  5. @Prasanna Rajan
    பாஸ்..ஒருவேள என்னய மாதிரி யாரும் overdose self-propaganda பண்றதில்லையோ..

    //மெட்டாலிக்காவின் 'I Disapper' ஒன்றும் அவர்களின் சிறந்த பாடல் இல்லை.// எனக்கு பின்னாடி அவர்களின் பாடலை அதிகமா கேட்க கேட்க தான் இது தெரிஞ்சது. ஆனா முதல் முறையாக கேட்கும் போது அந்த riffs,வீடியோ எல்லாம் எனக்கு புதுசா இருந்தது.

    Kirk Hammett & Metallicaவின் பெரிய ரசிகன் நான்.

    ReplyDelete
  6. @எஸ்.கே
    //கன்னாபின்னான்னு கத்திகிட்டு இருக்காங்க இதை பார்க்கிறீங்களேன்னு சொல்வாங்க//
    பாஸ்..சண்டைல கிழியாத சட்ட எங்கயிருக்கு...
    மத்தபடி இத டவுன்லோட் பண்ணி கேட்டுப் பாருங்க..ஒரு அதிர்வ கண்டிப்பா உணருவீங்க...

    ReplyDelete
  7. @சு.மோகன்...
    Enigmaவின் Return to Innocence யாருக்குத்தான் பிடிக்காது...மத்தபடி இலக்கில்லாம எல்லா வகை இசைகளையும் கேட்பேன். நீங்க கேட்குறத வெச்சு பார்க்கும் போது Bob Dylan அதிகமா கேட்பீங்கன்னு தோணுது.இல்லையினா உடனே ஆரம்பிங்க..

    ReplyDelete
  8. ஃபண்டாஸ்டிக்!!!!!!!!!!!!!!

    vh1 , என்னுடைய மிக மிக ஃபேவரைட்டும் தான். கோவையில் இருக்கும்வரை அதனைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இங்கே பெங்களூரில், சன் டிடிஹெச்சில், அது வருவதில்லை. கேட்டால், சாட்டலைட்டில் பவர் கட் என்று 4 மாதங்களாக இன்னமும் கூறிக்கொண்டிருக்கின்றனர் ;-(

    இதுவரை Led Zeppelin கேட்டதில்லை. ஆனால், நண்பர்கள் பலரும் கேட்கச்சொல்லியிருக்கின்றனர். இப்பொழுது நீங்கள் வேறு எழுதிவிட்டீர்களா... இதோ போடுய்யா டௌன்லோட் ;-)

    எனக்கு மிகப்பிடித்தவர் - பான் ஜோவி. க்ரேடில் ஆஃப் ஃபில்த்தின் அடி பிடிக்கும் ;-).. மற்றபடி, எனக்குப் பிடித்தவர்கள் கொஞ்சம் பழையவர்கள்.. எவானஸென்ஸ், ஏரோஸ்மித், J.Loவின் கணவர் ;-), தலைவர் ப்ரயன் ஆடம்ஸ், ஜார்ஜ் மைக்கேல், ஃபில் காலின்ஸ்... இப்படிப் போகும் என்னுடைய ப்ளே லிஸ்ட் ;-) ...

    Led Zeppelin கேட்டுவிட்டுத்தான் மறுவேலை !! ;-)

    ReplyDelete
  9. உங்களது ரசனை பிரமிக்க வைக்கிறது.. உங்களைப்போலவே பல்வேறு இசையைக் கேட்கும் ஒரு நபரை எனக்கு நன்றாகத் தெரியும்.. அது - சாரு !

    ReplyDelete
  10. // ராக் இசை காட்டுக் கூச்சல், ஏகாதிபத்தியத்தின் எதிரொலி..//

    என்னாது ????? எடுய்யா அரிவாளை !!

    ReplyDelete
  11. //டவுன்லோட் செஞ்சு அப்பறம் கேட்டா கூட சந்தோஷம். //

    இதோ ஆரம்பிச்சாச்சு !! ;-)

    ReplyDelete
  12. //எவானஸென்ஸ், ஏரோஸ்மித், J.Loவின் கணவர் ;-), தலைவர் ப்ரயன் ஆடம்ஸ், ஜார்ஜ் மைக்கேல், ஃபில் காலின்ஸ்//

    தல..உங்க blogல வம்பிழுத்துக்கிட்டு இருந்தேன். இங்க இருந்தீங்களா..
    உங்களுக்கு லவ் சாங்ஸ் ரொம்ப பிடிக்குமோ...லிஸ்ட்ட பார்த்த அப்படி தெரியுதே..

    ReplyDelete
  13. //உங்களது ரசனை பிரமிக்க வைக்கிறது.. உங்களைப்போலவே பல்வேறு இசையைக் கேட்கும் ஒரு நபரை எனக்கு நன்றாகத் தெரியும்.. அது - சாரு//

    ணா..நா உண்மைலயே இசைல கொழந்தைதான். நிறைய இசை வடிவங்கள கேட்க பிடிக்குமே - தவிர தெரியாது. சாருவ அவ்வளவா பிடிக்காட்டியும் கூட அவர் எழுதி சில வகை இசைகள தெரிஞ்சுகிட்டேன்(ரய்..இந்த மாதிரி). தொடர்ந்து அவர் பல அறிமுகங்கள செஞ்சுக்கிட்டு வர்றார். கலகம்-காதல்-இசை மாதிரி இன்னொரு புத்தகம் எழுதுனா நல்லாயிருக்கும். இப்ப அந்த மாதிரி எழுதுறத ஏன் குறைச்சுட்டார்னு தெரியல..

    ReplyDelete
  14. அண்ணன் கருந்தேள் அவர்களுக்கும் & மற்றவர்களுக்கும்...

    http://www.torrentdownloads.net/torrent/1381563/led+zeppelin+-+greatest+hits+(2cd)+2009+mp3+320kbps

    http://www.kickasstorrents.com/led-zeppelin-greatest-hits-t3931678.html

    இந்த ரெண்டு torrentஇ(ரெண்டிலுமே ஒரே பாடல்கள்தான் சைஸ் பார்த்து முடிவு பண்ணிக்கோங்க)ல் நான் கேட்ட அவர்களது பல சிறந்த பாடல்கள் வந்து விடுகிறது. இதிலிருந்து டவுன்லோட் பண்ணி கேட்டா தனித்தனியா எடுக்குற வேல மிச்சம்

    ReplyDelete
  15. Led Zeppelin என் பாஸின் ஃபேவரி கலைஞர்.இவரிதானே நாடு கடத்திட்டாங்க?இல்ல வரி கட்டமுடியாமல் இவரே வேறு நாட்டுக்கு போய்ட்டாரா?எது எப்படியோ இது கேட்ட்வுடன் கவரவில்லை,எரிச்சல் தான் வந்தது,பழகிவிட்டால் போதை

    ReplyDelete
  16. உங்கள் மேல்தட்டு இரசனை மலைக்க வைக்கிறது,அந்த ஷாஜிக்கு பதில் நீங்கள் இசையை ஆராய்ச்சி செய்தால் கூட தேவலாம்.நாங்கள் மார்கெடிங் ஐ பார்த்துப்போம்.

    ReplyDelete
  17. பதிவுக்கு சம்பந்தமில்லா செய்தி,
    1900 என்னும் இத்தாலிய மொழிப்படம் 1976 ல் வந்தது,அதை பார்த்தேன்,
    5 1/2 மணிநேரபடம்,ராபர்ட் டிநீரோ முழு நிர்வாணமாக நடித்துள்ளார்.வரலாற்று சம்பவ படம்,உங்களுக்கு பிடித்த காட்சிகள் நிரம்ப உண்டு,சரி எங்களுக்கும் பிடித்த

    ReplyDelete
  18. இதையெல்லாம் கேட்கையிலே கர்நாடக இசையையும் ஒதுக்காமல் கேளுங்க,

    ReplyDelete
  19. //Led Zeppelin என் பாஸின் ஃபேவரி கலைஞர்//
    தல..பதிவ படிக்கவேயில்லையா...அவ்வளோ மொக்கையா...ஏன்னா Led Zeppelin ஒரு Rock Band..தனிப்பட்ட ஆள் இல்லையே...

    //உங்கள் மேல்தட்டு இரசனை மலைக்க வைக்கிறது,அந்த ஷாஜிக்கு பதில் நீங்கள்//
    அண்ணாத்த...எனக்கு மேல்தட்டு..குழித்தட்டு..இதெல்லாம் என்னன்னு கூட தெரியாது...நீங்க தேடித்தேடி உலகப் படங்கள் பார்க்குறீங்க..நா உங்க அளவிற்கு தேடாட்டியும் எல்லா வகை இசையும் கேட்க விரும்புவேன். அவ்வளவே. மத்தபடி தவில்,பறை(எனக்கு மிகப் பிடித்தது), Afro இசை எல்லாத்தையும் கேட்க விரும்புவேன்.
    என் பதிவ கொஞ்சம் கூட படிக்கலையா...அய்யகோ..என்ன கொடுமை...

    மறுபடியும் சொல்றேன். கேட்க ரொம்ப விரும்புவேனே தவிர பல தரபட்ட உலக இசையை ஓரளவே கேட்டுருக்கேன். ஷாஜி எழுதி அதன் மூலமாக பலத தெரிஞ்சுகிட்டாலும் சில சமயம் அவர் எழுத்தோட என்னால் ஒன்ற முடிவதில்லை. மத்தபடி அந்த மாதிரி ஓரளவிற்கு எழுதணும்னா கூட நிச்சயம் பல வருட கடும் உழைப்பு தேவை(அவர் எழுதுவது நல்லாயிருகா-இல்லையா அதுக்கே நான் போல). இந்த மாதிரி விஷயங்களில் நான் இன்னும் கைக்குழந்தை(சினிமாவையும் சேர்த்துக்கலாம்)

    ReplyDelete
  20. //1900 என்னும் இத்தாலிய மொழிப்படம்//
    தல..இந்த novecento பேருல Bertolucci எடுத்தாரே அந்தப் படமா...கேள்விப்பட்டிருக்கேன். வாய்ப்பு கெடச்சா கண்டிப்பா பார்க்கிறேன்.

    //கர்நாடக இசையையும் ஒதுக்காமல் கேளுங்க// நிறைய கேட்டிருக்கேன்..but....கண்டிப்பா முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  21. நான் கல்லூரி இரண்டாம் ஆண்டிலிருந்து தான் (2000) மேற்கத்திய இசை கேட்க ஆரம்பித்தேன். உங்களைப்போல Michael Jackson மற்றும் Backstreet Boys ஆகியோரில் இருந்து தான் ஆரம்பம். சில ஆண்டுகளில் ரசனை எங்கோ போய்விட்டது. Def Leppard, Guns n Roses, Aerosmith, Bon Jovi, Within Temptation, Linkin Park, Green Day ஆகியன பிடித்தமான குழுக்கள். என்ன காரணத்தாலோ எழுபதுகளின் இசையை ரொம்ப கேட்டதில்லை.

    ReplyDelete
  22. நான் பெரிதாக ராக் பாடல்கள் கேட்டதில்லை.. Only MJ's pop!!
    இருந்தாலும் நீங்கள் பின்னணியில் ஓடவிட்டுள்ள trampled underfoot நன்றாக இருக்கிறது..

    ReplyDelete
  23. @Ben
    பாஸ்...நீங்க சொல்லியிருப்பதை போல பல பேருக்கும் MJ தான் வாசலை திறந்து விட்டிருக்கார்.
    //எழுபதுகளின் இசையை ரொம்ப கேட்டதில்லை// மிஸ் பண்ணாதீங்க.இன்றளவும் எழுபதுகளில் வந்த ராக் இசை மாதிரி சிறந்தவை கிடையாதுன்னு சொல்லறாங்க. (நான் கேட்ட கொஞ்சம் பாடல்களை வைத்து நானும் கூட அதையே சொல்வேன்.அதுனால வயசானவன்ன்னு நெனச்சிராதீங்க. பச்ச மண்ணு நானு)

    ReplyDelete
  24. @JZ
    நண்பா.....
    MJ இசையில் pop மட்டுமல்லாமல் Rock,R&B,Funk என்று பல வகைகளும் கலந்து கட்டி இருப்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். அவரது Beat it, Dirty Diana, Black or White(rock shade இருக்கும்) அவரது ராக் முயற்சிக்கு உதாரணங்கள். குறிப்பா Beat itல வர சுண்டியிழுக்கும் கிடார் இசை புகழ் பெற்ற கிடாரிஸ்ட் Eddie Van Halen பின்னி பெடலேடுத்திருப்பார்

    ReplyDelete
  25. பதிலுக்கு நன்றி கொழந்த!! guitarists பற்றி ரொம்ப ஆர்வமா இருக்கீங்களே.. உங்களுக்கு மிகவும் பிடித்தமான கிடாரிஸ்ட் யார்?

    ReplyDelete
  26. @JZ
    நண்பா..அது ஒரு பெரிய லிஸ்ட்.
    Jimi Hendrix-கண்டிப்பா ஒரு சகாப்தம்
    Jimmy Page - Led Zeppelin
    Kirk Hammett-Metallica
    Agnus Young - AC/DC
    Slash - Guns n Roses
    Carlos Santana
    இதான் எனக்கு தெரிந்த பெயர்கள். இது போக பெயர் எனக்கு தெரியாத பல பேரின் கிடார் இசையும் பிடிக்கும்.
    எனக்கு கிடார் ரொம்ப பிடிக்கும். அது யார் வாசிச்சாலும். அதில் உள்ள நுணுக்கங்கள் எனக்குத் தெரியாது.

    சரி..உங்களுக்கு பிடித்த கிடாரிஸ்ட்கள் யார் யார்?

    ReplyDelete
  27. அட நீங்க வேற.. உங்களுக்குத் தெரிஞ்ச அளவு பேரக் கூட எனக்குத் தெரியாது. எனக்கும் Jimi Hendrix தான்பர்ஸ்ட்!!
    அதுக்கப்புறம் Eric Clapton பிடிக்கும்.

    ReplyDelete
  28. ஹலோ,கொழந்த,
    அது பேண்ட்டின் பேரு தான் யாரு இல்லைன்னா?
    பின்னூட்டம் போடும் போது இதுபோல ஸ்லிப்பானா பதிவை படிக்கலைன்னு சொல்லறதா?லாஸ்ட் மந்த்,இவங்க பாட்டா போட்டு கொன்னார்,எங்க பாஸ்,ஸ்டுயோவில,அதும் சத்தமாக,அவர் தாளம் போட்டு ரசிக்கிறார்,ஆனா எங்களுக்கு கொலவெறி:)அதே படம் தான் கொழந்த.உங்களுக்கு எல்லாமே தெரிந்திருக்கு,ஷாஜியின் எழுத்துக்களை படிக்கவேறு செய்யனுமா?தூக்கம் தான் வரும் ,ஏன்னா அதை தமிழ்ல எழுதிகுடுப்பதே ஜெயமொக்கென் தான்.

    ReplyDelete
  29. @கீதப்ப்ரியன்
    ஹி...ஹி...உணர்ச்சிவசப்பட்டுட்டேன்..பெரும்பாலும் நீங்க எழுதும் போது பிழை வராதே..எங்க என் பதிவு அவ்வளோ மொக்கையானு நெனச்சுட்டேன்.

    //அதே படம் தான் கொழந்த.உங்களுக்கு எல்லாமே தெரிந்திருக்கு//
    தல... Bertolucci எடுத்த படங்களைப் பத்தி எங்கயோ படிச்சது ஞாபகம் இருந்திச்சு.அவ்வளவே

    //ஷாஜியின் எழுத்துக்களை படிக்கவேறு செய்யனுமா?தூக்கம் தான் வரும் ,ஏன்னா அதை தமிழ்ல எழுதிகுடுப்பதே ஜெயமொக்கென் தான்//
    சரி..ரைட்டு :))))

    ReplyDelete
  30. எனக்கு எப்போதும் தனிமையில் Stairway To Heaven கேட்கப் பிடிக்கும்.. அதுவும் மீடியா பிளேயரில் ரிப்பீட் போட்டுத் திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டே இருப்பேன்.. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட மற்ற பாடல்கள் எனக்கு கூச்சலாகவே தோன்றும்... Stairway To Heaven is a real Classic! அது ஆன்மாவைத் தொடும் பாடல். இசையைப் பற்றி நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  31. @RNS..
    //ஆனால் நீங்கள் குறிப்பிட்ட மற்ற பாடல்கள் எனக்கு கூச்சலாகவே தோன்றும்//
    பாஸ்..ஆச்சரியமா இருக்கு.சரி.. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு feelings...
    //இசையைப் பற்றி நிறைய எழுதுங்கள் வாழ்த்துக்கள்// நீங்க எல்லாரும் தான் இப்படி உசுப்பேத்துரீங்க. பின்விளைவுகளுக்கு நீங்க எல்லோரும் தான் பொறுப்பு....

    ReplyDelete
  32. அதில்லை நண்பா Stairway To Heaven னோடு ஒப்பிடும் போது வேறு எந்தப் பாடலும் அதனருகே கூட நிற்க முடியாது என்பதே எனது கருத்து. மற்றபடி கூச்சல் என்ற சொல் அதிகப்படியான வார்த்தையாகத் தோன்றினால் மன்னியுங்கள்.

    ReplyDelete
  33. @RNS..
    //மற்றபடி கூச்சல் என்ற சொல் அதிகப்படியான வார்த்தையாகத் தோன்றினால் மன்னியுங்கள்//
    (விஜயகாந்த-base குரலில் படிக்கவும்)
    ஏய்...தமிழ்,ஆங்கிலம்,கன்னடம்,தெலுகு,சௌராஷ்ட்ரா..இப்படி இந்த மொழியிலயும் எனக்கு பிடிக்காத வார்த்த..மன்னிப்பு..

    (அப்படியே toneஅ மாத்தி சீரியஸ் -அதே சமயம் கமரும் குரலில் படிக்கவும்)
    நண்பா..னு சொல்லிட்டு இப்படி தீடீர்னு மன்னியுங்கள். freeஆ விடு மாமே...

    Seriously...எனக்கு இப்படி யாராவது சொன்னா சங்கோஜமா இருக்குது..என்ன பண்ண..நான் சொல்ல வந்தது..Stairway To Heaven பிடிச்சவர்க்கு Kashmir பிடிக்கலையானு ஆச்சரியமே..வேற ஒண்ணுமில்ல...

    ReplyDelete
  34. About Me
    ரொம்ப முக்கியம்

    இந்த சுய சொறிதல் தானே இங்கே ரொம்ப முக்கியமா தேவைப்படுது(?)

    போன மாசம் எடுத்தது

    அப்ப இந்த மாசம் எடுத்த ஜட்டியோட உள்ள படத்தை எப்ப போடுவீங்க?????

    Stereotyped

    அப்ப பகிர்வுக்கு நன்றி அப்படின்னு போட்டா கம்படி நிச்சயம் தானே?

    இப்ப உருப்படியா பேசுவோம்,

    கடந்த 15 மாத வலையுலக அனுபவத்தில் நான் கற்றுக்கொண்ட பாடம் ஒன்று உண்டு.

    உணர்ந்து உள்வாங்கி அனுபவித்து படிப்பவர்கள், தேடலுடன் வலையுலகை பயன்படுத்திக் கொள்பவர்கள் எவரும் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதேயில்லை.

    என்னுடைய பொக்கிஷ புதையலே, ஹாலிவுட் பாலாவுக்கு பிறகு நல்ல நக்கல்பார்ட்டீடீடீடீடீடீ.

    நன்றி கொழந்த சாரி பெரியவரே,,, எப்பூடீடீடீடீடீடீடீ

    ReplyDelete
  35. @ஜோதிஜி...
    பாராட்டுக்கள் எனக்கு பழகிப் போச்சு..(பல்ல ரொம்ப கடிப்பது உடல் நலத்திற்கு கேடு...)

    ஆனா..இந்த " நக்கல்பார்ட்டீடீடீடீடீடீ"னு ஒரு வார்த்தை வருதே..அப்படினா என்ன uncle.......

    ReplyDelete
  36. அப்டின்னா யாரோ ஒரு குழந்தை இன்னமும் தன் வயதை மறைத்துக் கொண்டு தன்னை கொளந்தபுள்ளயாகவே நினைத்துக் கொண்டுருக்குது என்று அர்த்தம் மாமோய்..........

    நாக்கை துருத்துவது இங்கு தடை செய்யப்பட்டுள்ளது(?)

    ReplyDelete
  37. @ஜோதிஜி
    நா ஒரு சிக்குமங்கு சிக்குமங்கு சச்சப் பப்பா..

    ReplyDelete
  38. நான்

    கண்ணன் ஒரு கைகுழந்தை (?)

    ReplyDelete
  39. @ஜோதிஜி
    கண்ணன் சார்...யார் சார் நீங்க..ஜோதிஜி பேருல வந்து கமெண்ட் போட்டிருக்கீங்க...

    நீங்க..கண்ணன்..கைக்குழந்தையா இருந்தா என்ன கால்குழந்தையா இருந்தா என்ன...ஜோதிஜி சார்..எவ்வளோ மூமூமூத்தவர்.....அவரது idல நுழைஞ்சு இந்த மாதிரி கமெண்ட் போடாதீங்க...அது தப்பு...

    ReplyDelete
  40. அய்யோ ராசா கலைஞர் ஒருத்தர் தான் குறிபார்த்து அடிப்பவர்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். அட ஆச்சரியமே....... அவருக்கு ஒரு வாரிசா.......

    ஸ்டாலின் அழகிரி உங்களுக்கு ஆப்பு தாண்டிடிடிடிடிடிடி

    ReplyDelete
  41. @ஜோதிஜி
    அப்படி வாங்க வழிக்கு..அது..

    ReplyDelete
  42. //.என்னித படிக்கிற பத்து பேர்ல ஒருத்தராவது பாடல்களைக் கேட்டா இன்னும் சந்தோஷமா இருக்கும்//

    நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் :) காஷ்மீர் ரொம்ப பிடித்திருக்கிறது..

    ReplyDelete
  43. //நான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் //

    என் இனமடா நீ..க.க.க.போ..

    ReplyDelete
  44. உங்க மெயில் ஐடி சொல்லுங்க கொழந்த :)

    ReplyDelete
  45. யோவ் கொயந்த என்னாயா இப்டி வகை வாரியா பாட்டு கேட்டு வச்சிருக்க :)

    நம்மளால இளையராஜா..ரஹ்மான கூட இன்னும் தாண்ட முடியல நீ இன்னான்னா...

    சரி தரவிறக்கி கேட்டுத்தான் பாப்போமே....

    ReplyDelete
  46. இங்க பெங்களூர் ல Purple Haze பப்ல புல்லா ராக் மியூசிக் தான் போடுவாங்க...போதைல இத கேக்குறதே ஒரு சொகம்...
    இப்போதான் காஷ்மீர் கேட்டேன்...என்னமோ பண்ணுது இந்த பாட்டும் கிடாரும் ...

    ReplyDelete
  47. @Kamal kanth

    மியூசிக்கே பெரிய போத தான.....அதுக்கு மேல ஒரு போத தேவையா.....

    போதைல எல்லா பாட்டுமே நல்லாத்தான் இருக்கும்னு காக்கை சித்தரே சொல்லியிருக்காரு :)

    ReplyDelete