Monday, May 15, 2017

Man, it feels like space again


--------------------------

Since Aristotle, man has organized his knowledge vertically in separate and unrelated groups - Science, Religion, Sex, Relaxation, Work etc. Had man been able to see past this hypnotic way of thinking, to distrust it (as did Einstein), and to resystematize his knowledge so that it would all be related horizontally, he would now enjoy the perfect sanity which comes from being able to deal with his life in its entirety.

Recently, it has become possible for man to chemically alter his mental state and thus alter his point of view (that is, his own basic relation with the outside world which determines how he stores his information). He can restructure his thinking and change his language so that his thoughts bear more relation to his life and his problems, therefore approaching them more sanely.

It is this quest for pure sanity that forms the basis of the songs on this album.

- The Psychedelic Sounds of the 13th Floor Elevators


A map is not the territory, என் profession சார்ந்ததென்பதால் இந்த ஸ்டேட்மென்ட் மூலம் Alfred Korzybskiயின் பெயர் மட்டும் பரிட்சயம். மற்றபடி அவரைப்பற்றியோ அவரது semantics பற்றியோ ஒன்றுமே தெரியாது. ஆனால் இந்த mathematician/philosopherக்கு என்னைபோன்ற psychedelic rock இசைப்பிரியர்கள் பெரிதும் நன்றிக்கடன்பட்டிருக்கிறார்கள். இவரின் horizontal thinking வழிமுறையால் ஈர்க்கப்பட்ட ஒரு 23 வயது இளைஞன் (படிப்பு, Chemical Engineering + Psychology ) இந்த horizontal thinkingகை ராக் இசையின்மூலம் வெளிபடுத்தினால் எப்படியிருக்கும் என்று யோசித்ததின் விளைவு...The 13th Floor Elevators. அந்த இளைஞன் பெயர் - Tommy Hall.

Psychoactive plants/flowers வகைகள்...நமக்கு பரிட்சயம் இல்லாவிட்டாலும் (?) மதிகெட்டான் சோலை என்ற பெயரையாவது கேள்விப்பட்டிருப்போம். தேனி, கொடைக்கானல் என்று நம்மூரிலேயே பல இடங்கள் இந்தப்பெயருடைய சோலைகள் உண்டு. முன்பு காடுகள், காடுகளாகயிருந்தபொழுது இதுமாதிரியான இடங்களுக்குள் நுழைந்தால், கொஞ்சகொஞ்சமாக hallucinations வளர ஆரம்பிக்குமாம். ஆனால் நம்மால் அதை உணர முடியாது. ரொம்ப மெல்லமெல்லதான் அதன் வீரியம் செயல்பட ஆரம்பிக்கும். Psychedelic இசையின் முக்கிய வகைகளில் இதுவும் ஒன்று. ரொம்ப மெதுவாக ஆரம்பித்து...ஒரு grand climaxசை நோக்கி நகரும். இதுமாதிரியான இசை, போகப்'போக அதே patternனில் சிக்கக்கொண்டது. அதைவிட மோசம்....நம்மால் அடுத்து என்னமாதிரியான இசைக்கோர்ப்பு வரப்போகிறது என்று predict செய்யுமளவிற்கு repetitiveவான இசையாகப்போயிற்று. ஆனால், 13th Floor Elevatorsல் ஆரம்பித்து King Gizzard and Lizard Wizard வரை, இதற்கு நேர்மாறான poleல் இருந்து...எடுத்த உடனே பட்டென்று நமது அட்ரினலின் சுரப்பிகளுக்கு வேலைவைக்கும் இசை. என்னமாதிரியான இசையாகயிருந்தாலும் Psychedelic இசையைப் பொறுத்தவரை, it's not about the question of how but where?.

Mid-60களில் சைக்கடெலிக் ராக் இசை, அமெரிக்கவின் சில பகுதிகளில் தலையெடுக்கத் தொடங்கியதென்றாலும், முதன்முதலில் தங்களுது இசையை "Psychedelic music"கென்று வகைப்படுத்திய குழுவினரென்றால் அது The 13th Floor Elevators தான். இத்தனைக்கும் Tommy Hallக்கு முறையான இசைப்பயிற்சியென்று எதுவுமில்லை. ஆனால், psychic விஷயங்களின்மீது மட்டும் ஏகவெறி இருந்தது. அந்த psychic தன்மையை இசையில் கொண்டுவர அவர் தேர்ந்தெடுத்தவழி - வேறென்ன, அந்த காலத்தில் ஏகப்பட்ட இசை ஆளுமைகள் நம்பிய அதே வழிதான் - LSD. அவர்களது குழு, தங்களது முதல் jamming sessionனை ஆரம்பிக்கும் முன்னர் ஒரு புனித LSD பயணம் மேற்கொண்டனர். இதுவும் போதாதென்று, 13th Floor Elevatorன் ஒவ்வொரு மெம்பரும் - ஒவ்வொரு முறை இசைக்கருவியை தொடும்முன்னர் LSDயை தொட்டுப்பார்த்தாக வேண்டுமென்ற உன்னத சத்தியத்தை Tommy வாங்கிக்கொண்டார். ஒரேயொரு மெம்பரைத்தவிர எல்லா ஆட்களும் மிகக்குஷியாக இதற்கு உடன்பட்டனர். விளைவு ?

---------

வாழ்ந்து கெட்டவர்கள் ஒருவகையென்றால், தாங்கள் ராஜாவைப்போல வாழ்ந்து, கெட்டொழிந்து போனதையே உணராத/உணரமுடியாதவர்கள் இன்னொரு வகை. 13th Floor Elevatorsன் Singer/Guitarist/Harmonica player/Song writer - Roky Erickson, இரண்டாவது வகை. Garage Rock/Psychedelic Rock இசையைப்பொறுத்தவரை இன்றளவும் Roky - லெஜென்ட். மிகமிக அனாயசமாக குரலின் pitchசை மாற்றுவதாகட்டும், கூடவே harmonicaவை இசைப்பதாகட்டும், லிரிக்ஸாகட்டும் - Rokyயை தலையில்தூக்கி வைத்து கொண்டாடினர். அவரது vocal rangeக்கு ஒரு சிறிய உதாரணமாக...இந்த வீடியோ. அந்த அதிர்வு, throw...Rokyயை காரணமில்லாமலா கொண்டாடினர்.

Tommy Hallன் தீர்க்கமான - இப்படித்தான் தங்கள் இசையிருக்க வேண்டும் - பார்வை, Rokyன் அதகளமான மியூசிகல் சென்ஸ், மற்ற மெம்பர்களின் (குறிப்பாக Stacy Sutherland) ஆளுமை...The 13th Floor Elevators வெகுஅனாயசமாக பல பிம்பங்களை உடைக்கத்தொடங்கினர். அடுத்த paraவில் அதைப்பற்றி பேசிக்கொள்ளலாம். // எல்லா ஆட்களும் மிகக்குஷியாக இதற்கு உடன்பட்டனர். விளைவு ? // இதைப்பற்றி பேசுவோம். 1966 - 68, இரண்டே ஆண்டுகள்.  புகழின், க்ரியேட்டிவிட்டியின் உச்சத்தை பார்த்தாயிற்று. பிறகென்ன....சரிவுதான். அளவுக்கதிகமான போதை மருந்து உட்கொண்டதன் விளைவு, Roky Ericksonன் போலீசால் கைது செய்யப்பட்டு - Paranoid schizophrenia இருப்பதாக கண்டறியப்பட்டு - மனநல விடுதியில் 4 ஆண்டுகள் கழித்தார்.ஒரே வார்த்தையில் சொல்வதென்றால் - நரகம். ஷாக் ட்ரீட்மென்டில் ஆரம்பித்து ஏகப்பட்ட சிகிச்சைகள். அதிலயே ஆள் முக்கால்வாசி காலி. வெளியவந்தவரிடம் ரிகார்ட் லேபிள் ஆட்கள் சக்கையாக ஏமாற்றி - ஷோ நடத்தியும்/ராயல்டி விவகாரங்களிலும் - காசு பார்த்தனர். இவரோ, தன்னைச்சுற்றி என்ன நடக்கிறததென்பதையே சரிவர உணர முடியாத ஆளாக சுற்றிக்கொண்டிருந்தார். கடன் சுமை, வறுமை, மனநிலை கோளாறிலிருந்து முழுமையாக வெளிவராத நிலைமை...எல்லாம் சேர்ந்து Rokyயை ஒரேடியாக அமுக்கிப்போட்டுவிட்டது. அந்த முழுகதையையும் இந்த documentaryயில் பார்க்கலாம். Tommy Hall கதையே வேறு. இன்றளவும் psychic experiments, LSD என்று ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறார்

ஏன் 13th Floor Elevators முக்கியமான band ? Impact and influence. Cream, The Doors, Grateful Deadல் ஆரம்பித்து ZZ Top, Spaceman 3, Brian Jonestown Massacre, Black Flag என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் இவர்கள் பாதித்த bands ஏராளம். Mid-60களின் சைக்கடெலிக் இசையைப்பொறுத்தவரை ஒரு துல்லியமான pattern உண்டு. Hippie/Free love/Indian - Asian இசைக்கூறுகள்/mysticism/LSD எல்லாம் கலந்த folk-based அல்லது progressive இசையின் நீட்சியாகவே இருந்தது. பட்டென்று சொல்வதென்றால், slow - poison. மெ...து...வா...க மி...த...ப்...ப...பதைப் போன்ற இசை. ஆனால், 13th Floor Elevatorsயின் இசை polar opposite. ரணகளம். சடக்கென்று ஒரு high-stateல் நம்மை மிதக்க வைக்கும். உதாரணம் வேண்டுமா ? Reverberation. இந்த வார்த்தையின் sonic manifestation தான் இந்தப்பாடல்




கிடாரின் echo/reverberation, Roky Ericksonனின் dope குரல், பின்னணி குரல்....எல்லாவற்றையும் தாண்டி ஒரு குறிப்பிட்ட இசை உள்ளுக்குள் குடைகிறாதா ? அதற்குப்பெயர்தான் Electric Jug. இசைப்பவர் - bandன் காரணகர்த்தா Tommy Hall. இந்த electric jug தான் 13th Floor Elevatorsன் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. Electric Jug ஏற்படுத்தும் குறுகுறுப்பு மிகஅலாதியானது. கேட்க ஆரம்பித்தபுதிதில் அந்த atmosphereரிலிருந்து வெளிவர எனக்கு சிலபல நாட்களானது. எந்தவிதத்தில் பார்த்தாலும், 13th Floor Elevatorsன் முதல் ஆல்பம் - The Psychedelic Sounds of the 13th Floor Elevators, seminal work. Pink Flyodல் ஆரம்பித்து பல bandகளை இந்த ஒரு ஆல்பம் ஏகத்துக்கும் பாதித்திருக்கிறது. இந்த ஆல்பம் + Easter Everywhere, தொடர்ச்சியாக கேட்டால்...கஞ்சாவாவது ஒண்ணாவது. இதற்கு மிஞ்சிய weed ஒன்றுமேயில்லை. Ericksonனின் வார்த்தைகளில் சொல்வதென்றால் "This music makes you see things if you want to". (
எப்படி இதை சொல்லாமல் இருப்பது ? இந்தப் பாடலை சொல்லாமல்விட்டால் ஏழேழு ஜென்மத்துக்கும் எனக்கு மோட்சம் கிடையாது. Ericksonன் range and dynamics... )


A monkey could play one note. But could a stoned monkey?: Will Carruthers, Spacemen 3

80களில் இவர்களது நீட்சியாக வந்த பல psychedelic குழுவினருள் முக்கியமான ஆட்கள் - Spaceman 3. Neo - psychedeliaவில் fiercenessசை உள்ளே புகுத்தியதில் இவர்கள் பங்கு மிகப்பெரியது. Slow burning psychedeliaவிலிருந்து, 13th Floor Elevatorsசைப் போன்றே அதகள psychedelic இசையில் தான் இவர்களது ஆரம்பகால ஆல்பங்களிருந்தது. பின்னாட்களில் experimental rock இசையை நோக்கி நகரத்தொடங்கினர். Pink Flyodதனமான Playing with Fire தான் பலரது ஆதர்ஷம் என்றாலும், எனக்குப்பிடித்த இரண்டு ஆல்பம்கள் The Perfect Prescription and Taking Drugs to Make Music to Take Drugs To


--------------------------

1990's. The Brian Jonestown Massacre. இந்த bandடைப் பற்றி ஏன் பேசுகிறேன் என்று சத்தியமாக எனக்கும் தெரியவில்லை. அசரடிக்கும், புதிய திறப்புகளை/தளங்களைத்தொட்ட குழுவா - இசையா (actually, Anton Newcombeன் ஒன்-மேன் ஷோ தான் இந்தக்குழு) என்றால், இல்லை. வேண்டுமானால் Pop-psych-rock என்று சொல்லலாம். ஒருவேளை, இப்பொழுதுதான் சைக்கடெலிக் கேட்க ஆரம்பித்திருந்தால், casual listenersக்கான அருமையான ஆரம்பம் - The Brian Jonestown Massacre. எல்லாவற்றையும் தாண்டி, And This Is Our Music மற்றும் Revelation, நல்ல ஆல்பங்களே. அப்பறம், பாடல்களுக்கு பெயர் வைப்பதில் சமர்த்தர்கள்.



--------------------


Australia. ஜியாலஜிகலாக/பூகோளரீதியாக/ஈகாலஜிகளாக பல தனித்தன்மைகளைக், ஏகப்பட்ட சுவாரஸ்யங்களைக் கொண்ட கண்டம்/நாடு. குறிப்பாக, barren lands, desert. அதன் நிலப்பரப்புக்கு நிச்சயமாக அடர்ந்த சைக்கடெலிக்தன்மை இருக்க வேண்டும். இல்லாவிட்டால் சொல்லிவைத்தது போல், Post - 2000னின் ரகளையான psychedelic bands அனைத்தும் ஆஸ்த்ரேலியாவைச் சேர்ந்ததாக எப்படியிருக்க முடியும் ? Tame Impala - Pond - King Gizzard and the Lizard Wizard (இதில் Tame Impala பற்றி போதுமென்றளவிற்கு பேசியாகிவிட்டது).


Nonagon infinity opens the door. True. So fucking true. படம் பேர் ஞாபகமில்லை...Keanu நடித்து, The Keymaker கூட ஒவ்வொரு கதவாக திறக்க முற்படும் காட்சி. அதுபோலவே, இந்த ஆல்பம்குள் நுழைந்துவிட்டால் - லிட்ரலி - முடிவே கிடையாது. 9 பாடல்கலென்று சொல்லப்பட்டாலும் 41:45 நிமிடமும் ஒரே இசைக்கோர்ப்பு போலவேயிருந்தால் எப்படியிருக்கும் ? ஒரு பாடலும் இன்னொரு பாடலும் அவ்வளவு கச்சிதமாக seamless loopல் கோர்க்கப்பட்டிருக்கும். ரெண்டாவது பாடலின் வரிகள் ஏழாவது பாடலில் வரும்; எட்டாவது பாட்டின் வரிகள் மூன்றாவது பாடலில். சுருக்கமாக, இந்த ஆல்பத்திற்கு முடிவே கிடையாது. நீங்கள் லூப்பில் ஓடவிட்டீர்களென்றால் நிறுத்தவே முடியாது/தோணாது. இசையென்று எடுத்துக்கொண்டால், savage. எத்தனை கிடார் லேயர்கள், புல்லாங்குழல்/சிதார் போன்ற கருவிகள் பயன்படுத்தப்பட்டிற்கும்விதம், background vocals, time signature/shifting போன்றவைகளில் கையாளப்பட்டிருக்கும் tweaks...ஏகவிஷயங்கள் உண்டு. "அனுபவித்தால் மட்டுமே புரியும்" என்ற திராபை உதராணத்தைதவிர வேறு வார்த்தைகள் தோன்றவில்லை. Wah Wah - Road Train - Robot Stop, மூன்றும் ஒன்றுசேரும் இடம்...


பல புகழ்பெற்ற bandகளைப் போலவே King Gizzard & Lizard Wizardம் ஹைஸ்கூல் நண்பர்களால் ஆரம்பிக்கப்பட்ட band. இந்த குழுவின், மூலவர் - Stu Mackenzie. கிறுக்குத்தனம் மிஞ்சிய ஆள். வருடத்திற்கு ஒரு புது இசைக்கருவியை கற்றுக்கொள்வது இந்தாளின் பல resolutionகளில் ஒன்று. சைக்கடெலிக்/garage rock அதுஇது என்று ஓவராக சலம்பாமல், Stu சொன்ன ஒரு விஷயம் - Intellectualising music is a bit dumb, in a way - கச்சிதம். ஒருவகையான, கேட்பதற்கு "ரம்மியமான" சைக்கடெலிக் இசையைப்போட்டு தேய்க்காமல் ஒவ்வொரு ஆல்பத்திலும் எதையாவது பரீட்சார்த்தமாக செய்துகொண்டே இருக்கிறார்கள். அது, நாலு பாடல்கள் கொண்ட ஆல்பத்தின் ஒவ்வொரு பாடலும் 10:10 நிமிஷம் - Quartersஸாகட்டும் (Jazzy flowவுடன் ஒவ்வொரு பாடலும் வேறு லெவல்); இல்லை - இந்த வருடம் வெளியான - Flying Microtonal Banana ஆகட்டும்,எதையாவது செய்துதொலைத்துவிடுகிறார்களா... நம்மால் அதைவிட்டு வெளியே வரவே முடிவதில்லை.

Flying Microtonal Banana, microtone - இருப்பதிலேயே குறைந்த - இரண்டு notesகளுக்கிடையேயான இடைவெளி (Ref: 1, 2) - மாயாஜாலங்கள் தேவை என்பதற்காக custom made guitar எல்லாம் செய்து...ஒன்றை சொல்லியாக வேண்டும். KGATLW band, "புதுமையாக" எதையாவது செய்கிறேன் பேர்வழியென்று வம்படியாக எதையும் செய்யாமல், it just flows. ஒரு பாடல்...ஒரேயொரு பாடல் இந்த ஆல்பத்திலிருந்து. ஆல்பம் கவர் ஆர்ட்டில் - பாம்பு/கிதார், இதெல்லாம் காரணமில்லாமலா ? அதுவும் இந்த வருடம், 5 ஆல்பம்களை வெளியிடப்போவதாக சொல்லியிருக்கிறார்கள். Insane.


Kevin Parker (Tame Impala) - Pond, இரண்டிற்கும் ஏக தொடர்பிருக்கிறது. Kevin Parker Pondல் (honorary) member + producer/arranger. முக்கியமாக Jay Watson, இரண்டிலும் மெம்பர். Tame Impalaவின் இசை, intact + trippyயென்றால் Pondன் இசை Freewheelin + Pop தன்மைகொண்டது. போன வாரம் வெளியான The Weather (Produced by Kevin Parker), அதற்குள்ளாகவே க்ளாசிக் என்று ரசிகர்களால் கொண்டாப்படுகிறது.



ஒரு upcoming band பற்றி சொல்லியாக வேண்டும். Magic Shoppe. Psychedelic என்றால், உடனடியாக நமக்கு என்னவெல்லாம் ஞாபகம்வருமோ, அத்தனையும் இவர்கள் இசையில் உண்டு. 60களின் குரல் + தெறிக்கும் கிடார் + ஸின்த். Would say, அலாதியான இசை என்றெல்லாம் சொல்ல முடியாது - ஆனால், ரசித்து கிறங்கக்கூடிய இசை. கடைசியாக வெளிவந்த இவர்களது "Wonderland"...அப்படியொரு தரம்.



இன்னொரு ஆளைப்பற்றி சொல்லாமல் போனால் இந்த போஸ்ட், முழுமை பெறாது. Captain Beefart. Youtubeல், இந்த channelலின் சொந்தக்காரர். Cult personality. இவரது அப்லோட்ஸ்க்கு பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. முழுக்கமுழுக்க சைக்கடெலிக் இசைகளை மட்டுமே அப்லோட் செய்வார். இவரது புண்ணியத்தால் பல mesmerizing இசைக்கோர்ப்புகள் தெரியவந்தன. பல புதிய bandsகளைப்பற்றி தெரிந்துகொள்ள முடிந்தது. இப்படியாக இவர் மூலமும், இவரைப்போன்ற பல ஆட்கள்/சேனல்கள் (குறிப்பாக, Stoned Meadow Of Doom) மூலம் கேட்டதில் எனக்கு மிகப்பிடித்த "typical" psychedelic albumsகளில் சில. 
  • Kikagaku Moyo - Kikagaku Moyo (ஜாப்பனீஸில் Geometric Patterns என்று அர்த்தம். காரணப்பெயர். ஏனென்று இந்த ஆல்பம் கேட்டால் புரிந்துவிடும்)
-------------------------



Facebookers..

1 comment :

  1. Dont know how I missed this one in FB.....One of your best after Tame Impala/Glass Animals.....Great finds! Keep rocking!

    ReplyDelete