I start thinking, how many souls hip-hop has affected
How many dead folks this art resurrected
How many nations this culture connected
I just want to innovate and stimulate minds
Travel the world and penetrate the times
Escape through rhythms in search of peace and wisdom
- Common: The 6th Sense
La Haine. Hip-hop/Rapன் அசல் தாக்கத்தை இந்தப்படமளவிற்கு கச்சிதமாக பதிவு செய்த படங்கள் மிகமிகக்குறைவு. இந்த காட்சி....முதல்முறை படத்தைப் பார்த்தபொழுது, when the beat drops....சுற்றியிருந்த அனைத்துமே காணாமல் போய்விட்டது. இரண்டடி அந்தரத்திலேயே மிதந்துகொண்டிருந்தேன். முதலில் staticக்காக நிற்கும் கேமரா, அப்படியே மிதக்க ஆரம்பித்து...Vincent Casselன் முகத்திற்கு நேரே வந்து நிற்கும். எத்தனைமுறை பார்த்தாலும் இந்தக்காட்சி அலுக்காமல் சலிக்காமல் வசியப்படுத்திக்கொண்டேயிருக்கிறது.


இதில் ஒலிக்கும் மூன்று பாடல்கள்: KRS One - Sound of Da police, NTM – Police, Edith Piaf - Non Je Ne Regrette Rien. முதலிரண்டு பாடல்களும் பலவகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தவைகள். ஏன் ? Sound of Da police – இந்த வீடியோவைப் பாருங்கள்; இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமா  ? அதுபோலவே NTM – Police பாடலும் (NWA - Fuck da Policeசையும் ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்).

இந்தப் படம் என்ன மாதிரியான சூழ்நிலையில் வெளியானது, ஏன் முக்கியத்துவம்வாய்ந்தது என்றறிய - தற்போது ஈரோப் முழுக்க நிலவும் சூழ்நிலையை மனதில்கொண்டு - இந்தக் கட்டுரைகளை படித்துப்பாருங்கள். குறிப்பாக, ஃப்ரான்ஸ். அரேபியர்கள்/முஸ்லிம்கள்/அல்ஜீரியா போரில் ஆரம்பித்து சமீபத்திய Charlie Hebdo வரை பெரிய வரலாறே உண்டு. அந்தமாதிரியான political tension கனன்றுகொண்டிருந்த 90களில்தான் இந்தப்படமும் வந்தது.
  1. Twenty Years of Hate: Why ‘La Haine’ is More Timely Than Ever
  2. La Haine 20 years on: what has changed?

கானா இசையும் – Rapம், ஒருவகையில் அண்ணன்-தம்பி உறவு முறைதான். கானா பரிட்சயம் இருந்தால், நான் சொல்லமுற்படும் தொடர்பையும் rap இசையின் தொடக்கத்தையும் மிகஎளிதாக புரிந்துகொள்ளலாம். Rap இசை, உருவெடுத்து – செழித்து வளர்ந்த இடங்கள், நமது வட சென்னை/ஹௌசிங் போர்ட் காலனிகள் போன்றவைகள். மழை/வெள்ள மீட்புப்பணிகளாகட்டும், உயர்கல்வி நிலையங்கள் தொடங்கப்படுவதாகட்டும், தொழில்வாய்ப்புகளாட்டும் – வட சென்னை எந்தளவிற்கு புறக்கணிக்கப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. தங்களது வாழ்க்கையில தொடங்கி....சமூக வலிகளை, ஆதங்கத்தை, புறக்கணிப்புகளை எவ்வாறு இம்மக்கள் வெளிப்படுத்துவது ? ஏதாவதொரு outlet வேண்டுமல்லவா  ? அப்படி பிறந்துதான் Hip-hop/Rap இசை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக நம்மூரில் சினிமா பாடல்களே எல்லாவற்றிக்குமான outlet என்றாகிவிட்டது. எஸ்கேபிஸ்ட் மனநிலையிலயே மக்கள் இசையை அணுகுவதும்/pampering செய்வது மட்டுமே இசையின் வேலையென்று நமது இசையமைப்பாளர்கள் நினைப்பதும் இந்த நிலைமைக்கு காரணமாக இருக்கக்கூடுமோ ?.



இது Commonன் Like Water for Choclate ஆல்பம் கவர். இந்தக்காட்சிகள் நமக்கு புதிதல்ல. இத்தனைக்கும் இந்த ஆல்பம், 2000தில் தான் வெளிவந்தது ? ஏன் இதை கவர் ஃபோட்டோவாக வைக்க வேண்டும் ? மெட்ராஸ் படத்தைப்பற்றி பேசும் பலரும் தவறாமல் ஒரு விஷயத்தை கூறுவதைக் கேட்டிருக்கிறேன். “இதில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நிலை பற்றி குறியீடாக பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன”. என்னமாதிரியான நிலையில் இருக்கிறோம் பாருங்கள். கண்ணுக்குமுன்னே நடக்கும்/நடந்த சமூக அவலங்களைப்பற்றி குறியீடுகளில் பேசிக்கொண்டிருக்கிறோம்; ஆனால் வெளிப்படையாக சாதிகளை போற்றிப்பாடும் படங்களுக்கும் பாடல்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. எத்தகைய மொன்னையான மனநிலை இது ? Commonன் ஆல்பம் கவர்போல இங்கு எந்த படத்திற்காவது/ஆல்பத்திற்காவது கவர் photo வைக்க முடியுமா ?. நாம் இயல்பிலேயே மந்தமான/மொன்னையான மனநிலை கொண்டவர்கள் என்பதால் இதெல்லாம் சாத்தியமேயில்லை என்பது என் நம்பிக்கை. அதெல்லாம் வெளிப்படையாக பேசக்கூடிய கானா இசையெல்லாம் ஒருபோதும் இங்கு பெரிதாக வளரப்போவதில்லை. அப்படியான எனது ஆதங்கத்தை Hip-hop/Rapபை கொண்டாடுவதன் மூலம் தீர்த்துக்கொள்கிறேன். அவ்வளவே.



Rap இசை, 80களின் ஆரம்பத்தில் எந்த காரணத்திற்காக அமெரிக்காவில் தோன்றி படுவீரியமாக வளரத்தொடங்கியதோ அதே காரணத்திற்காகதான் உலகம் முழுக்க கொண்டாடப்படலாயிற்று. Rap, முழுக்க முழுக்க verbal outletடாகத்தான் ஆரம்பகட்டங்களில் இருந்தது. Social, Political statement. வார்த்தைகள்தான் இங்கு முக்கியமேயன்றி இசை இரண்டாம்பட்சம் தான். உள்ளுக்குள் எதாவது ஒரு விஷயம் குடைந்துகொண்டே இருக்கிறது; வெளியே சொல்லியாக வேண்டும். வேறுவகை இசை என்றால் பெரிய அளவில் பயிற்சி வேண்டும்; பிறகு என்னதான் செய்வது ? மிக எளிமையாக தங்களிடம் இருந்த டிஸ்க்களில் ஜாலம் காட்ட ஆரம்பித்து (scratching) அதிலிருந்து beatகளை உருவாக்கி விளையாட ஆரம்பித்தனர். புறக்கணிக்கப்பட்ட/ஒடுக்கப்பட்ட மக்களின் இசையாக வளர்ந்ததால், உலகம் முழுவதும் அதே சூழ்நிலைச்சேர்ந்த மக்களை Hip-hop/Rap எளிதில் தன்வசப்படுத்தியது. எவ்வித பாசாங்கும் இல்லை; பட்டென்று முகத்தில் அடிப்பதைப்போல வார்த்தைகளின் மூலம் தங்களது கஷ்டங்களை பகிர்ந்துகொள்ளும் இசையை யாருக்குதான் பிடிக்காது ? (Rap இசையில் – Misogyny, Violence, Drugs எல்லாம் பிரிக்கவே முடியாத விஷயங்கள் என்பதையும் ஒத்துக்கொண்டேயாக வேண்டும். Social commentary என்றளவில் இதை நான் பார்க்கிறேன்).

திரும்ப Franceசிற்கு போவோம். ஆரம்பித்தில் கொடுத்திருந்த La Haine கட்டுரைகளை படித்திருந்தால், அந்த காலகட்டத்தில் நிலவிய social/political tension மிகத்தெளிவாகப் புரியும். அப்படி, Franceன் racial minoritiesகளின் இசையாகவே rap இசை வளரத்தொடங்கியது. இதுபற்றி, நான் வாசித்த மிகச்சிறந்த – தெளிவான கட்டுரைகளில் ஒன்று... இந்த 13 பக்கங்கள், நிச்சயமாக rap இசையைப் பற்றியும் வேறுவிதமான பார்வையும் புரிதலையும் நிச்சயம் கொடுக்கும்.  

பல hardcore hip-hop ரசிகர்களும் 1996ரோடு ஹிப்-ஹாபின் பொற்காலம் முடிந்துவிட்டது என்று யூடியுப் முதற்கொண்டு பல தளங்களிலும் காமென்ட் செய்வதைப் பார்க்க முடிகிறது. டெக்னிகலாக “Flow, Rhythm, Story-telling” என்று மட்டும் வைத்துப்பார்த்தால்(எதற்கும் இந்தப்பதிவையும் படித்துவிடுங்கள்) பழைய ஆட்களைப்போல டெக்னிக்கில் இன்றைய பெரும்பாலான ஆட்கள் அருகில்கூட வரமுடியாதென்றாலும், musicalலாக மிரட்டவே செய்கின்றனர். ஆரம்பகாலம்தொட்டே பலரும் R and B/Jazz/Soul இசை sampleகளை தொடர்ந்து பயன்படுத்திவந்தாலும், beats கேட்க துள்ளலாக இருந்தால்போதும் என்ற நிலைதான் பெருமளவில் இருந்தது(உள்ளது). A Tribe called Quest போன்று சிலர் பரீட்சார்த்த முயற்சிகளை மேற்கொண்டாலும் வார்த்தைகள் தான் இங்கு பிரதானம் என்ற மனநிலையே இருந்தது. ஆனால் பின்-2000ல் இருந்துதான் இந்தநிலை பெருமளவில் மாறத்தொடங்கியது. புதிதாக வந்த பலரும் Psychedelic முதற்கொண்டு Progressive வரை, மெயின்ஸ்ட்ரீம் rapகளிலேயே முயற்சிக்க ஆரம்பித்தனர். ASAP Rockyன் இந்தப்பாடல் ஒரு நல்ல உதாரணம்.


Flatbush Zombies க்ரூப்பை எடுத்துக்கொள்வோம். அவர்களது ஆல்பம் டைட்டிலைப் பாருங்கள்.... 3001: A Laced Odyssey. இவ்வளவு trippyயான rap ஆல்பம் கடந்த பத்து வருடத்தில் வந்ததாக நினைவில்லை. எந்தளவிற்கு இந்த ஆல்பத்திற்கு ரசிகர்கள் உண்டென்றால்....இந்த வீடியோவே சாட்சி


Young Fathers. Alternative hip-hopன் இளவரசர்கள். ஹிப்-ஹாப்/ராப்  என்றால் அனிச்சையாக நமெக்கென்ன நியாபகம் வரும் ? அதன் beats தானே. இவர்கள் அதையே அடியோடு மாற்றியிருக்கிறார்கள் (Punk இசையின் அடிப்படையும் இதுதான்). இசை முழுக்க விரவிக்கிடக்கும் ஒருமாதிரியான அசௌகரியம். கேட்கக்கேட்க பாடலில் இருக்கும் cluttering தன்மை எளிதில் தொற்றிக்கொள்ளும்.


இன்னொரு முக்கியமான, experimental hip-hop group - Death Grips. Young Fathersகெல்லாம் Fathers. வார்த்தைக்கு வார்த்தை, punkதனம் தெறிக்கும்.



Young Thug: 
Hip-Hop/Rapபைப் பொறுத்தவரை ஆரம்பகாலம்தொட்டே, “ஆண்மை” என்ற tagline விடாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஆண் ராப் ஆர்டிஸ்ட் எப்படி இருப்பான் – உடலமைப்பு எப்படி இருக்க வேண்டும் – ஆணின் வெற்றி என்பதென்ன – வயலன்ட்டான ஆளாக தன்னை முன்னிறுத்திக்கொள்வது – gang culture, இப்படி பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம் (50 Cent நல்ல உதாரணம்). இதன் காரணமாகவே LL Cool J (Ladies Love Cool James) போன்ற ஆட்களை ஏகத்துக்கும் பலரும் பகடி செய்வதுண்டு. Rapபில் போய் முக்கல்முனங்கல்களுடன் காதல் பாடல்களை  (திராபை பாடல்கள் என்பது இன்னொரு பக்கம்) பாடுவதா என்று செமத்தியாக ஓட்டப்பட்டார். அப்போதிருந்த சூழ்நிலை அப்படி. Tupac, Biggie, Snoop Dog, Ice Cube, NWA போன்ற ஆட்களின் பாடல்களே எங்கு திருப்பினாலும் ஒலித்துக்கொண்டிருந்தது. இந்த சூழ்நிலை மாற கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆனது. ஆண் rapperகள் இப்படித்தான் பாடவேண்டும், தங்களது weaknessகளை/vulnerable மனநிலையை வெளியே காட்டிக்கொள்ளக் கூடாது என்பதை பெரிய அளவில் மாற்றிய ஆள் – Kanye West. Gangster Rap அடிபிரித்தெடுத்துக்கொண்டிருந்த காலத்தில் வரிசையாக தனது weakenssகளை, தோல்விகளை மட்டுமே முன்னிலைப்படுத்தி ஆல்பமாக வெளியிட்டுகொண்டிருந்தார் (The Day Kanye West Killed Gangsta Rap). அதில் pinnacle என்றால், 808 and Heartbreaks. Production, Auto-tune என்று இந்த ஆல்பம் இன்றுவரை ஒரு க்ளாசிக். ஆனாலும் கூட Kanyeவில் தொடங்கி இன்றைய Drake வரை, ஆண்கள் – வலிமை – உடலமைப்பு போன்றவற்றில் பழைய ஆட்கள் போலத்தான். இந்த சூழ்நிலையை வைத்துப்பார்க்கும் பொழுது, Young Thug – Fetty Wap இருவரின் popularityம் பெரும் ஆச்சரியமாகவே இருக்கிறது. குறிப்பாக, Thugger a.k.a Young Thug. பத்து – பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இப்படியான ஒரு ஆள், ஹிப்-ஹாபில் இந்தளவிற்கு வெற்றிபெற்றிருக்கவே முடியாது. மிகமிக ஒடிசலான உருவம்; குழப்பமான உதறல் குரல்; மொன்னையான fashion sense என்றுதான் எடுத்தவுடன் தோன்றும். ஆனால், ஆனால் Kanye West சொல்வதைப் பாருங்கள் “Young Thug is super inspiring to me. Amazing artist !!!“. காரணமில்லாமல் இல்லை. இதை படித்துப்பாருங்கள்

Young Thug: 'I like everything people say about me – you gay, you a punk, you can't rap, you're the hardest'

போன வாரம் வந்த இந்தப்பாடல். Thuggerன் unique flowவிற்கு நல்ல உதாரணம். அப்பறம், Swagonometryயை எப்படி மறக்க முடியும்.  



Joey Bada$$:
I got sick of class, started making classics
Flow அடிபின்னும். 17 வயதில் வெளியிட்ட mixtape 1999, இன்ஸ்டன்ட் க்ளாசிக். "Golden age of Hip-hop"பின் அத்தனை கூறுகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தும் ஆள். 



Mick Jenkins – Chance the Rapper – Vic Mensa:
Rapபில் மாறிவரும் musicality பற்றி பேசிக்கொண்டிருந்தோமே, அதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள்: Mick Jenkins and Chance the Rapper. ரகளையின் மறுபெயர் – Chance the Rapper. Acid Rap காலம்தொட்டே, Chanceன் rap முழுக்கமுழுக்க கொண்டாட்டம்தான். Gospel rap கைவந்த கலை. போதுமே..எல்லா பாடல்களிலுமே அந்த gospel flow இருப்பதைக் கேட்கலாம். Mick Jenkins இதற்கு அப்படியே நேர்மாற். சுற்றிவளைக்காமல், எடுத்தவுடன் கோதாவில் இறங்குவதைப்போல rap செய்ய ஆரம்பித்துவிடுவான். Musicalலாக சிலபல பரீட்சார்த்த முயற்சிகளை செய்யத்தவறுவதும் இல்லை. எல்லாவற்றையும் விட rhymes....அதகளம். Vic Mensa – எப்பொழுதும் ஒருவித மென்சோகம் இழையோடும் ஆத்மா. ஆனால் flowவில் கில்லி.







Logic – King Los:
I was from Nazareth. I'm resurrecting hip-hop like it was Lazarus
Lyrical senseசை வைத்துப்பார்த்தால், இந்த இருவரின் லெவலே வேறு. ஒரே சிக்கல் – King Los இதுவரை முழு ஆல்பம் எதையும் வெளியிடவில்லை. ஆனால், இந்தாளின் lyrical skillக்கு மிகச்சிறந்த உதாரணம், இந்த freestyle தான்.





Childish Gambinoவை ஏன் பிடிக்கும் என்றெல்லாம் தெரியாது. ஆனால் பிடிக்கும். ஒரு quirkiness உண்டு. இத்தனைக்கும் பெரும்பாலான பாடல்கள், popதனமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு ஆல்பத்திற்கும் ஸ்டைல் மாறிக்கொண்டேயிருக்கிறது.


Rapsody - Angel Haze - Lizzo - Jungle Pussy:

இறைவிகளாவது ஒண்ணாவது, போங்கடா _____ டைப் ஆள்  தான் Jungle Pussy. டெக்னிக் என்றளவில் Rapsody தவிர, மூவரும் போக வேண்டிய தூரம் மிகமிக அதிகம். ஆனால், rap என்பது expressions என்பதை பலமுறை திரும்பத்திரும்ப மேலே பேசியிருக்கிறோம். அந்தளவில், ஒரு பக்கவான ஆல்பமோ – mixtapeப்போ இல்லாவிட்டாலும், மூவரையுமே தவிர்க்க முடியாது. 


Rapsodyயின் கதையே வேறு. மிக கச்சிதமான flow. Throw மட்டும் ஒன்று போலவே இருக்கும்.அது மட்டும்தான் குறை. மற்றபடி, female rapper என்று தனியாக அழைப்பதிலெல்லாம் உடன்பாடில்லை.



Jazz Cartier - Isaiah Rashad:
Drakeன் ரொமாண்டிசைஸ் செய்யப்பட்ட Toronto நகரின் மறுபக்கத்தின் பிரதிபலிப்பு தான், Jazz Cartier a.k.a Jacuzzi La Fleur. நிச்சயமாக ஒரு fierceness/presence பாடல்களில் உண்டு. தவிர, புதிதாக பரீட்சார்த்தமாக எதையாவது செய்துபார்க்கும் ஆர்வமும் உண்டு. இந்தப் பாடலைப் போல. அதுபோக, நல்ல beat senseசம் உண்டு. எல்லாவற்றையும் விட, டைட்டிலைப் பாருங்கள் - Marauding In Paradise.


Kendrick - Ab-soul - SchoolBoy Q - Jay Rock வரிசையில், TDE companyன் இன்னொரு அதகளம். தனித்துவமான flow உண்டென்றாலும், இன்னும் முழு ஆல்பமாக எதுவும் வெளிவரவில்லை.



மூன்று முக்கிய ஆட்களைப்பற்றி பார்க்கும் முன், UK - Grime பற்றியும் சொல்லியாக வேண்டியுள்ளது. Fbயில் Stormzy பாடல்களை அடிக்கடி ஷேர் செய்வதுண்டு. மேலோட்டமாக பார்த்தால்(கேட்டால்) மிகவேகமாக பாடும் ஒரு முறை/டெக்னிக் என்றளவில் இதை சுருக்கி பார்க்கக்கூடும். ஆனால், இதற்குப்பின்னாடியும் ஒரு கதை. Then...மறக்காமல் காமென்ட்களையும் படிக்கவும். இல்லாவிட்டால், முழுகதையையும் தவறாக புரிந்துகொள்ளக்கூடும்

Grime isn’t just music - it’s about working-class struggle

Grimeயில் சமீபமாக கலக்கிக்கொண்டிருக்கும் ஆள் - Skepta. போன மாதம் வெளிவந்த Konnichiwa (Japaneseயில் - Good Day என்று அர்த்தம்), என்னமாதிரியான ரகளை என்பதற்கு இந்தவொரு பாடல் சான்று



Earl Sweatshirt:


I don't like Shit, I don't go outside அளவிற்கு depressingகான rap ஆல்பமை நான் கேட்டதில்லை. Wordplays...வாய்ப்பேயில்லை. ஒரு சிறிய உதாரணம், close your eyes to what you can't imagine. Earlன் பெரும்பாலான பாடல்களை கேட்டுமுடித்தவுடன், கொஞ்ச நேரத்திற்கு mundane மனநிலையிலேயே இருக்க நேரிடும். 20வருடங்கள் முன்பெல்லாம் இதுபோன்ற rapperகளை பார்த்திருக்காவே முடியாது.



Tyler, the Creator - Vince Staples:

மற்ற அனைவரையும்விட, எனது personalityயுடன் நெருக்கமாக உணரும் இரண்டு ஆட்கள் இந்த இருவரும் தான். Odd Future Wolf Gang Kill Them All (OFWGKTA) - Tyler தலைமையில் செயல்பட்டுவந்த க்ரூப். எக்ஸ்ட்ரீம் லெவல் of சேட்டைகளுக்கு பிரசித்தம். குறிப்பாக, Tyler. Slim Shadyயின் வாரிசு என்று சொல்லலாம். ஆனால், Slim Shadyயை விட மியுசிக்கல் சென்ஸ் அதிகம். இந்த க்ரூபில் Earlம் ஒரு அங்கம். க்ரூப் முழுக்க முழுக்க anti-religious. கேட்க வேண்டுமா ? Tyler + இந்த க்ரூப் எந்தளவிற்கு ரகளையானவர்கள் என்பதற்கு மிகச்சிறிய உதாரணம் இதோ 



அடுத்த 5 ஆண்டுகளில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆளேன்றால் நிச்சயமாக அது Vince Staples தான். டெக்னிக் என்று பார்த்தால், நேரடியாக preaching செய்வதைப்போன்றதொரு தோரணை. Dead pan/Black humour எல்லாம் போகிறபோக்கில் தெறிக்கும். ஆனால் குரலில், இசையில் அந்த நக்கல் கொஞ்சம்கூட வெளிப்படாது. அதுதான் விஷயம். இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கும்போதுகூட Orlandoவில் இப்படியான படுகொலைகள் நடேந்தேறிக்கொண்டிருக்கின்றன. 

இதற்கு முன்னர், Young black men killed by US police at highest rate in year of 1,134 deaths இதுமாதிரியான பல செய்திகளை நீங்களும் படித்திருக்கக்கூடும். இந்த பின்னணியில் இருந்துதான் Vince Staplesன் பாடல்களை அணுக வேண்டியுள்ளது.
  


இதே சூழ்நிலை அப்படியே இந்தியாவுக்கும் பொருந்தும். எப்படி? Most Prisoners in India Are Muslims, BCs: NCRB. ஆனால் இதுபோன்ற விஷயங்கள் நமது படங்களிலோ/பாடல்களிலோ வெளிவராது. அதான் சிக்கலே. Vinceன் musical ஸ்டைலும் ஒருவித glominessசுடனே இருக்கும். இதற்கு தெளிவான காரணத்தை அவரே கூறுகிறார்.

Pitchfork: You’ve said that you felt like your purpose in music is to make people uncomfortable, what do you mean by that? 
Vince Staples: I just feel like that’s what music is supposed to be. Like, that’s my problem with fucking trap music: People are rapping about killing niggas and selling fucking drugs all day, but it sounds happy—that’s bullshit. That shit’s stressful: You’re not going to make no fucking money, somebody’s going to end up dead, and you’re not going to be able to pay for his funeral because his mom probably 
-----------------------------------
Must listen:
Danny Brown - Atrocity Exhibition
ASAP Rocky - At. Long. Last. ASAP
Logic - Under Pressure
Mick Jenkins - The Waters
Chance the Rapper - Acid Rap
Tyler, the Creator - Goblin
Vince Staples - Summertime 06
Vic Mensa - Innanetape
Earl Sweatshirt - I Don't Like Shit, I Don't Go Outside
Joey Bada$$ - 1999
Young Thug - Slime Season 3
Jazz Cartier - Marauding In Paradise
Mac Miller - Faces
Isaiah Rashad - Cilvia Demo