Monday, January 11, 2016

Life unworthy of life

ஒரு processன் மீது மட்டும் என்றுமே தீராக்காதல் உண்டு. Observation. அவதானிப்பு. குழந்தைகளிடம் இருக்கும்பொழுது எதுவும் பேசப்பிடிக்காது. மாறாக, குழந்தைகள் இயல்பிலேயே எல்லாவற்றையும் அவதானித்தே வளர வேண்டுமென்பதால்....அவர்களை அப்செர்வ் செய்வது பல விஷயங்களை எனக்குப்புரிய வைத்திருக்கிறது. Sociologyயில் இருந்து Linguistics வரை. எந்தவித கற்பிதங்களோ முன்முடிவுகளோ அவர்களுக்கு கிடையாது. சூழ்நிலை தான் எல்லாவற்றையும் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். புதிதாக ஒன்றுமில்லை. எந்த விஷயத்தையும் அணுகும்முன் psychologicalலாக அந்த மேற்சொன்ன ஸ்டேட்க்கு போக முடிகிறதா என்று முயற்சிப்பேன். க்ளீன் ஸ்லேட் மனநிலை. காசா பணமா. முயற்சிப்பதில் ஒன்றும் தவறில்லையே. பெரும்பாலும் தோல்விதான் என்றாலும், சிலசமயம் முடிந்திருக்கிறது. இது என்ன மாதிரியான “தெளிவை (வேறு வார்த்தை கிடைக்கவில்லை)” வழங்குமென்றால், ஒரு விஷயம் – இப்பிடி நடக்குது – இது சரியில்ல – இதனால் இந்தமாதிரி பாதிப்பு வரும் – இவர்களை இது பாதிக்கும் – இதுல நான் தனிமனிதனாக என்ன செய்ய முடியும் – இப்படி நான் செய்வதால் என்ன நடக்கும் - என்று எந்தவித தலையீடும் இல்லாமல் நம்மால் யோசிக்க முடியும். உங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்வதெல்லாம், விலங்குகள் – சல்லிகட்டு – இத்யாதிகள் எல்லாவற்றை பற்றி ஏற்கனவே உங்களுக்கு இருக்கும் முன்முடிவுகளை/நம்பிக்கைகளை கழட்டிவிட்டுவிட்டு இந்த விஷயங்களை அணுக முடிகிறதா என்று பாருங்கள். 

மொழிரீதியாக, பாலியல்ரீதியாக, இனரீதியாக, பொருளாதராரீதியாக, etc... ஒரு சுப்பீரியர் ஆளாக என்றுமே நான் உணர்ந்ததில்லை. உறுதியாக சொல்ல முடியும். ஆனால், இவர்களைக் காட்டிலும் எனக்கு அதிகம் தெரிகிறது (Intellectual Snob) என்ற கற்பிதத்தை முற்றிலுமாக கைவிட முடியவில்லை. எங்கேயாவது தலைதூக்கி விடுகிறது. வெளியே காமிக்கக்கூடாது என்ற cautious உணர்வு இருந்தாலே உள்ளே இருக்கிறது என்றுதானே அர்த்தம். அது போகட்டும். என் அப்பா கேன்சரில் தான் இறந்தார். ஒரு மாதத்தில், வருடத்தில் அல்ல. மூன்று வருடங்கள் கழித்து...பெரும்வலியுடன். அந்த மூன்று வருடங்கள் தந்த அனுபவங்கள் ஏகப்பட்ட விஷயங்களை கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கின்றன. ஐந்து ஆண்டுகளாகிவிட்டாலும் இன்றும் கூட சில நாட்களில் தூக்கம் வராது. அவர்பட்ட suffering அந்தமாதிரி. இங்கு suffering என்று நான் சொல்வது...எனது அப்பாவுடன் நிற்காமல், ஹாஸ்டலில் ஒன்றிரண்டு வயது குழந்தைகள் முதல் வயதானவர்கள்வரை ஏகபட்ட ஆட்களை பார்த்துள்ளேன். வெறும் உடல்நிலை – இறப்பு – ஒரு உறவு இல்லாமால் போவது என்பதோடு மட்டும் இதை குறுக்கிப்பார்க்க வேண்டாம். காசு இருப்பவர்களுக்கு என்னமாதிரியான ட்ரீட்மெண்ட் – அவர்கள் இந்த விஷயத்தை எப்படி அணுகுகிறார்கள், இல்லாத ஆட்கள் என்ன செய்வார்கள் – medical trailகளுக்கு, அதன் விளைவுகளை பற்றி முழுவதுமாக புரிந்துகொள்ளாமல் volunteerகளாக போய் சேர்வார்கள் என்பதில் ஆரம்பித்து இதை டாக்டர்கள் எவ்வாறு அணுகிறார்கள், நண்பர்கள் – உறவினர்கள் (ரத்த உறவுதானே நமக்கு என்றும் முக்கியம்) எவ்வாறு அணுகுகிறார்கள் என்று ஏகப்பட்ட திறப்புகள் உண்டு. இதுமாதிரி அனுபவங்கள் ஒரு subdued/detached மனநிலைக்கு நம்மை கொண்டுவந்துவிடும். நமது இயல்பே அப்படியென்றால், இன்னும் வசதி. 1 + 1 = 2. இது விஷயங்களை உணர்வுபூர்வமாக அணுகாமல், தூரத்தில் இருந்து telescopic viewவிற்கு பெரிதும் உதுவும்.

இதற்கடுத்த பெரிய learning process எதுவென்றால், bird watchingகைத் தான் சொல்வேன். அதை பொழுதுபோக்கு என்று சொல்வதைக்கூட நான் விரும்புவதில்லை. மொத்தமே 180 – 200 பறவைகளை மட்டுமே பார்த்திருக்கலாம். இனி பேர்ட் வாட்சிங்காக எங்கும் போகாமல் கூட இருக்கலாம். அது விஷயமேயில்லை. ஏற்கனவே பல விவரிக்க முடியாத தெளிவுகளை எனக்கிது கொடுத்துள்ளது. என் வாழ்க்கை முழுமைக்கும் போதுமான தெளிவு. அதில் பல இருந்தாலும், மிகமிக முக்கியமான ஒன்று: நான் இங்கே ஒரு உயிரினம். இந்த பூமியில் “நானும்” வாழ்கிறேன். எனக்கு பலகோடி ஆண்டுகள் முன்பே பல உயிரினங்கள் இங்கே நடமாடிக்கொண்டுதான் இருக்கின்றன. எந்தவிதத்திலும் அந்த உயிரினங்களின் சூழலை குலைக்க எனக்கு அதிகாரமில்லை (புலியும் – நானும் நேருக்கு நேர் சந்திக்கிறோம் என்றால், என் உயிரை காப்பாற்றிக்கொள்ள என்ன வேண்டுமென்றாலும் செய்வேன். Survival of the fittest. அது வேறொரு டிபார்ட்மென்ட்). புத்தகத்தில் வாக்கியங்களாக படிப்பதற்கும், உணர்வதற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உண்டு. எப்படி மொழிரீதியாக, பாலியல்ரீதியாக நான் சுப்பீரியர் இல்லை என்று உணர்ந்தேனோ, அதேபோல்தான் இதுவும். நமது சிந்திக்கும் திறன், ஆறாவது அறிவு எல்லாம் வேறொரு பக்கம். ஆனால் விலங்குகள்/பறவைகள்/பூச்சிகள் எல்லாமே ஒரு processல்/sequenceல் தான் இயங்குகிறது. அதற்குள் தலையிட நமக்கு எந்த உரிமையும் இல்லை என்பது மட்டும் உறுதியாகப் புரிந்தது. தவிர, ஒரு Homo sapien இன்னொரு Home sapienனோடு கம்பேர் செய்து கொள்வதுதானே நியாயம். ஒரு புழுவோடும் சிங்கத்தொடும் நாயோடுமா நம்மை ஒப்பிட்டு பார்த்து மகிழ்வது.



சொல்லப்போனால் இந்த இரண்டு புரிதல் வந்தவுடன் பல விஷயங்களை அணுகுவதும்/புரிந்துகொள்வதும் மிகஎளிதாக இருந்தது/இருக்கிறது. இது மிகவும் முக்கியமான விஷயங்களாக தோன்றியதாலேயே, இவ்வளவுதூரம் சுற்றி வளைத்துக்கொண்டு வர வேண்டியதாகப்போயிற்று. இனி நேரடியாகவே எனக்குத் தோன்றிய கேள்விகளை முன்வைக்கிறேன்.

1) ஹிட்லருக்கு/அந்த கூட்டத்துக்கு  ஒரு கற்பிதம் இருந்தது. தனது "இனம்" தான் மிக உயர்வானது; மற்றவர்கள் தங்களைவிட கீழானவர்கள்; அதனால் அவர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள்; Racism. இவர்கள் அதோடு நிற்கவில்லை. மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் - ஊனமுற்றவர்கள், இவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதனால் இவர்களைக் கொல்லலாம். இவர்கள் அனைவரும், nothing but empty shells of human beings. இவர்களது வாழ்க்கை, life unworthy of life - Lebensunwertes Leben. எளிய, சாதாரண மக்களிடமிருந்து இந்த கற்பிதம் தொடங்கவில்லை. இரண்டு ப்ரோஃபசர்கள் தான் 1920ல் இதை ஆரம்பித்து வைத்தது. இந்தக் "கோட்பாடு" பிடித்துப்போய் நாஸிக்கள் அடுத்தடுத்த கட்டத்திற்கு இதை கொண்டுபோக ஆரம்பித்தார்கள்.


Speciesism. எப்பிடி தனது "இனம்" மட்டுமே உயர்ந்தது என்று நினைக்கிறோமோ அதுபோலவே  "மனிதன்" இனம் மற்ற எல்லா இனங்களை விட உயர்ந்தது; தனக்கு கீழ்தான் எல்லாம் என்று நினைப்பிற்க்கு பெயர். Racism, Sexism போல. 

நேரடியாக பேசுவோமே. ஆடு - மாடு - கோழிகள் -நாய்கள் - இன்னும் பல விலங்குகள் இதெல்லாம் சாகடிக்கப்பட வேண்டியவைகள்; "மனித" நன்மைக்காக - உணவுக்காக - பொழுதுப்போக்கிற்காக - தேவைகளுக்காக என்றால், மனநிலை சரியில்லாதவர்களால் நமக்கு எவ்வித "பயனுமில்லையே". கடுமையாக பாதிக்கப்பட்ட பலருக்கு, விலங்குகளை விட "awareness" குறைவுதான். விலங்குகளை கொல்வது நமது பார்வையில் சரி என்றுபடுமானால், ஹிட்லர் கோஷ்டியின் பார்வையில் அதுவும் சரிதானே.

ஏற்கனவே ஒரு பதிவு எழுதியுள்ளேன். அதன் ஆரம்பமே, இந்த life unworthy quoteடை வைத்துதான். இந்தியா போன்ற நாட்டில் ஏற்கனவே நாம் சக மனிதர்களை "unworthy life" என்றே நடத்திக்கொண்டிருக்கிறோம். இங்கு விலங்குகள் - அதன் மனநிலை - உரிமை பற்றி பேசுவதெல்லாம் அதீத எதிர்பார்ப்பு. பெண்கள், குழந்தைகள் உட்பட inferior என்று நாம் நம்பும் அனைவரிடமும் நம் "வீரத்தை" காமிக்க முற்படுவோம். விலங்குகளிடத்திலும் அதேதான். 

2) 20 வாரங்களுக்கு முன்பு கருவில் இருக்கும் குழந்தைக்கு வலி தெரியாது/தெரியும் என்று பெரிய சண்டை ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அபார்ஷனை முன்வைத்து. ஆனால், அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் - அந்த கருவை விட, வளர்ந்த நாய்க்கோ - ஆட்டுக்கோ - பன்றிக்கோ வலியை உணரும்தன்மை மிகமிக அதிகம். Awarenessம் அதிகம். இதில் நமது நிலைப்பாடு என்ன ?




Complex Science at Issue in Politics of Fetal Pain

3) மீனவர்கள் மீனை உண்பதற்கும், பூர்வகுடிகள் காட்டுக்கோழியை அடித்து உண்பதற்கும்(இரண்டுமே முன்னொரு காலத்தில்)  - KFC/McDonald's செயற்கையாக புஷ்டியாக்கப்ப்பட்ட - மோசமான சூழ்நிலையில் அடைத்துவைத்து வளர்க்கப்படும் கோழிகளை நாம் உண்பதற்கும், இமயமலைக்கும் பரங்கிமலைக்கும் உள்ள வித்தியாசம் உண்டு. முன்னது ecologyல் ஒரு பகுதி(யாக இருந்தது). இரண்டாவது luxury.

4) பெரும்பான்மை/அதிகாரம் மிகுந்த குழுவின் கூட்டு மனநிலைக்கு எது சரி/வசதி என்று தோன்றுகிறதோ அதுதான் கடைபிடிக்கப்பட ஆரம்பிக்கும். பின்னர் அதுவே மரபாக மாறிவிடும். நாகரீகங்கள் – மரபுகள் – சடங்குகள் வளர்ந்ததெல்லாம் இவ்வாறுதான். ஆனால் அது இன்றைய காலகட்டத்திற்கு தேவையா - அதன் பயன் என்ன - இதெல்லாம் யோசித்துப்பார்த்து அது ஒத்துவராவிட்டால் அதை தூக்கி எறிந்துவிட்டு போக வேண்டியதுதானே. ஒருவேளை மரபை முன்னிலைப்படுத்துவதுதான் நோக்கம் என்றால், தமிழர் மரபு/பெருமை பேசும் நாம்தான் இன்னொரு பக்கம் சாதிக்கொடுமைகளை தொடரந்து செய்துகொண்டிருக்கிறோம். 

South Africaவில் இல்லாத மரபா, பெருமையா. அவர்களும் இதுபோன்றே பலவிழாக்களை கொண்டாடவே செய்கிறார்கள். ஆனால் அதோடு - இப்பிடியான மியுசியம்களையும் வைத்திருக்கிறார்கள். ஏன் ?

Apartheid Museum

நமது மரபின்மீது பற்றிருக்குமாயின் - அதன் குறைகள்/நிறைகள் இரண்டையும் பொதுவில் வைத்தால்தானே மக்களுக்கு இதை தொடரலாமா இல்லையா என்ற தெளிவு பிறக்கும். அதைவிடுத்து, மரபு - மொழி - தமிழர் என்று பேசிக்கொண்டிருந்தால் இப்படியே பல நூற்றாண்டுகளுக்கு உட்காந்திருக்க வேண்டியதுதான். இதுபோலவே, விலங்குகள் மீது நாம் இவ்வளவு கொடுமைகள் நிகழ்த்துகிறோம் என்ற factsசை ஒப்புக்கொண்டு பொதுவில் இதைப்பற்றி பேசாமல் ஒழிய, எப்படி இதுபற்றிய பார்வை மாறும். மாறலாம். மாறாமல் போகலாம். ஆனால் முற்றிலுமாக இன்னொரு கோணத்தை பேசவே தயாரில்லை என்றால், என்ன மனநிலை இது ? யார் கண்டது....அடுத்த தலைமுறையிலோ அதற்கடுத்த தலைமுறையிலோ இப்படியெல்லாம் விலங்குகளை கொடுமைப்படுத்தியிருக்கிறோமா என்பதை உணர்ந்து வேறு வகையில் இதற்கு தீர்வு காண முற்படக்கூடும்.

------------------------------------

Circa 1994. திண்டுகல்லில் MVM என்ற பள்ளியில் தான் LKG முதல் 5வது வரை படித்தேன். ரொம்ப விசாலமான ஸ்கூல். விளையாட ஏகப்பட்ட இடங்கள் உண்டு. இன்னொரு முக்கியமான விஷயம், மாடுகள். மிகப்பெரிய மாட்டுப்பண்ணை இருந்தது. தள்ளி இருந்தாலும், அஞ்சாங் க்ளாஸ் படிக்கும்போது மாட்டுக்கொட்டகைகள் கொஞ்சம் பக்கத்தில் இருக்கும். பெரிய பெரிய திமிளோடு சில மாடுகளை கொட்டகையின் ஸ்கூலின் ஒரு பக்கத்தில் இருந்து அந்தப் பக்கமாக கொண்டுபோவார்கள். கொஞ்சநேரத்தில் மற்றொரு மாட்டின் மீது இந்தமாடு ஏறி சண்டை போட்டுக்கொண்டிருக்கும். ஆ..வு..என்ற கூச்சல் வேறு. ப்ரேக்கின்போது அந்தப்பக்கமாகப் போனால் ரத்தம் எல்லாம் இருக்கும். இப்பிடி மாடுகள் பெரிய சண்டைபோட்டு, நான் ஸ்கூலுக்கு போகாமல் இருந்தால் அடுத்தநாள் நண்பர்கள்....இன்னிக்கு செம சண்டடா என்று திகிலுடன் சொல்வார்கள். இப்படியாக, ரெண்டு மாடுகள் ஏன் சண்டைபோடுகின்றன என்ற தாத்பரியம் கிட்டத்தட்ட 20....சரி, 15....ஓகே....10 ஆண்டுகள் கழித்துதான் எனக்குப் புரிந்தது. 

சிலபல மாதங்கள் முன்பு ஆஃபிஸ் நண்பர் ஒருவருடன் அவர் ஊரைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். சேலம் பக்கம் எதோவொரு ஊர். மாடுகள் பற்றி பேச்சு வந்தபோது, சுவாரஸ்யமான பல தகவல்கள் சொன்னார். அதற்கு முன்னமே இதுபற்றி எனக்குத்தெரிந்தாலும், இவ்வளவு தகவல்கள் தெரியாது. அவர்கள் ஊரில் ஒரு “பொலி காளை” ஒருநாளைக்கு 200 – 300 ரூபாய் வரை சம்பாரிக்குமாம். பல சமயங்களில் ரெண்டு பசு மாடுகள், சில சமயங்களில் மூன்று பசு மாடுகள் வரை இணை சேரும். அதற்கு முன்னர் பொட்டாசியம் பெர்மாங்கனேட் போட்டு கழுவி விடுவார்கள். நோய் தொற்றிக்கொண்டால். அதுபோக காளைக்கு சிலசமயம் மூட் செட்பண்ண – அதற்கு கொஞ்சம் முன்னாடியே பசு மாட்டை கட்டிவைத்திருப்பார்களாம். நேரம் வரும்போது வரிசையில் வேறுசில பசுமாடுகளை கொண்டுவந்து நிறுத்துவார்கள். இதில் சில பொலி காளைகள் மைனர் குஞ்சுகளாக மாறி ஊரை சுற்றிக்கொண்டிருக்கும். யாருக்கும் அடங்காது; எந்த வேலையும் செய்யாது. ரொம்ப முரண்டு பிடிக்கும். அப்படியான காளைகளை கூட்டிக்கொண்டுபோய்....பொட்டீர்....காயடித்து விடுவார்கள். அப்பறம் விதியை நொந்தபடி ஓரமாக நின்றுகொண்டிருக்கும். 

இதெல்லாம் நடந்தது பல ஆண்டுகள் முன்பு. இன்று, இந்தியாவில் கிட்டத்தட்ட 80% மாடுகள் எப்பிடி கன்றுக்குட்டிகளை ஈனுகின்றன என்றால்... Artificial Insemination எனப்படும் செயற்கையாக காளையின் விந்தை மாட்டுக்குள் செலுத்தும் முறையின்மூலம் தான். அமெரிக்க போன்ற நாடுகளில் இதன் சக்சஸ் ரேட் 80% என்றால், நம்மூரில் 30%தை தாண்டுவதே பெரிது. இந்தமுறையில் நோஞ்சான் காளை மாட்டை எல்லாம் சீந்த மாட்டார்கள். நல்ல திடகாத்திரமான – High breed – காளைகளுக்கு தான் மௌசு. இந்தமுறையில் ஒருமுறை எடுக்கப்பட்ட விந்தை பல மாடுகளுக்கும் பயன்படுத்து முடியும். விலையும் கம்மி. ஒரு ஷாட் ஐம்பது ரூபாய்(என்று கேள்வி). இதன் முக்கிய நோக்கம், காளையின் உதவியின்றி கன்றுகளை ஈனலாம் என்பதைத்தாண்டி பால் உற்பத்தி அதிகளவில் இருக்கும் என்பதினால்தான். பசு கன்றை ஈன்ற பிறகு, பால் உற்பத்தி படிப்படியாக குறையத்தொடங்கும். அடுத்த கன்றை ஈன்றால்ஒழிய உற்பத்தி குறைவாகத்தான் இருக்கும். இதை எப்படி override செய்வது ? அதற்குதான் வருடாவருடம் செயற்கையாக கருத்தரிக்க வைப்பது. பால் உற்பத்தி குறையாதல்லவா.

இந்தியாவில் இந்தமுறை 50களில் தொடங்கினாலும், 70களில் வேகமெடுக்கத் தொடங்கியது. 60களுக்குப் பிறகான இந்தியாவின் பொருளாதார கொள்கைகளை பற்றித் தெரிந்திருந்தால் இந்நேரம் இந்த செயற்கை கருத்தரிப்புமுறை எவ்வாறு நமது நாட்டில் பயன்படுத்துப்பட்டது என்பது புரியும். White Revolution –  90களில் தூர்தர்ஷன் சுரபி அமுல் விளம்பரம். ஞாபகம் வருகிறதா ? White, Green, Blue, Grey, Yellow என்று நமது நாட்டில் நடந்த புரட்சிகள் ஏராளம். இதனைப்பற்றி தெரிந்துகொள்வதும் அதன் விளைவுகளை (நல்லது/கெட்டது/சரிசெய்ய முடியாத இழப்புகள் என்று பல விளைவுகளை இந்தப்புரட்சிகள் ஏற்படுத்தியுள்ளன) புரிந்துகொள்வதும், தற்போதைய சூழ்நிலையில் மிகமிக அவசியம். ஏனென்றால் அப்போதைய இந்தியாவை அடுத்ததடுத்து பல வறட்சிகள்/பஞ்சங்கள் தாக்கிக்கொண்டிருந்தன. அன்றைய நேரு regime இதையெல்லாம் அடுத்தடுத்து பார்த்தினால் இதுபோன்ற “Revolution”கள் தான் விடிவு/நிவாரணம் என்று நம்பினார்கள். குறிப்பாக, நேரு – தொழில் புரட்சியைவிட விவாசய புரட்சியே மிகவும் அவசியம் என்று உறுதியாக நம்பினார். இந்தப் புரட்சிகளின் விளைவாகத்தான் இந்தியா உணவு உற்பத்தியிலும் பால் உற்பத்தியிலும் 90களில் தன்னிறைவை அடைய முடிந்தது. 60களின் சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு பார்த்தால் இது பல லட்சம் மக்களைக் காப்பற்றியுள்ளது என்பதே நிஜம். ஆனால், சரியான அணுகுமுறையும்/மாற்று சிந்தனைகளும் இல்லாத காரணத்தால் இந்த வழிமுறைகளையே பிடித்துதொங்கிக் கொண்டிருந்ததன் விளைவுகளைத்தான் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.



மாடுகளும் உயிர்கள் தான்; அதற்கும் ஓரளவு பிரக்ஞை – எங்கிருக்கிறோம், எப்படி நமது இடத்திற்கு திரும்புவது, பிடித்தவன்/பிடிக்காதவன் யார்யார் - உண்டு என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்று நினைக்கிறேன். அப்படியான, தெய்வமாக பலரும் வணங்கும், மாடுகளுக்காக கொலைகூட நடக்கும் இந்நாட்டில் தான் இயற்கையாக ஒரு உயிரினம் குட்டியை ஈன்றெடுக்கும் முறையைக்கூட நமது சுயநலத்திற்காக மாற்றி...மாடுகளை போட்டு வதைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பசுவதை தடுப்புச்சட்டம் இதையெல்லாம் கண்டுகொள்ளாது. இதுவெறும் ஆரம்பம் தான். இதில் தொடங்கி பசுவின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை ஏராளம். இப்பிடி சக்கையாக உறிஞ்சப்பட்ட மாடுகள், கடைசி காலங்களில் அடிமட்ட விலைக்கு விற்கப்படுகின்றன. அதில் சில கறிக்கும் பல மாடுகள் தோலுக்காகவும் கொல்லப்படுகின்றன.அதைக் கொல்ல கேரளா போன்ற ஊர்களுக்கு கொண்டுபோகும் முறை அதைவிட கொடுமையானது.  கன்றுக்குட்டிகள் நிலைமை படுமோசம். இதுபற்றி நல்ல விரிவான கட்டுரையை இங்கே படிக்கலாம். இன்னொரு விஷயம், நான் முட்டை கூட சாப்பிடாத சைவம். பால்/பால் பொருட்கள் மட்டும் எடுத்துக்கொள்வேன் என்றால், ரத்தகறை நம்மீதும் படிந்தே இருக்கிறது.


1) பத்து பேர் சேர்ந்துகொண்டு ஒரு மாட்டை கேரோ செய்யும்பொழுது அது பதிலுக்கு தாக்கவே செய்யும். இது எல்லா விலங்குகளுக்கும் பொருந்தும். இதைவைத்துக்கொண்டு, அது “விளையாடுகிறது” என்று முடிவு செய்ய நமக்கு என்ன உரிமை இருக்கிறது ?. ஒன்றுமில்லை. ஒரு பசுமாட்டின் முன்பு போய், கத்திக்கொண்டே இருங்கள். கொஞ்சநேரத்தில் கடுப்பாகி முட்ட வரும். ஆயிரம்பேர் கூச்சல் போட்டுக்கொண்டிருக்கும் இடத்தில் அதைவிட்டால் சீறத்தான் செய்யும். இதிலென்ன விஷயம் இருக்கிறது ?

2) தமிழர்கள் ஏறு தழுவுதல்/மஞ்சு விரட்டுதல்/சல்லிக்கட்டு போன்ற விஷயங்களை ஆரம்பித்தபொழுது இருந்த காளை – மாடுகளின் எண்ணிக்கை வேறு. அப்போதிருந்த சூழ்நிலை வேறு. வாழ்க்கைமுறை வேறு. பொழுதுபோக்கு வேறு. 

3) ஒரு மாடு – மற்றொரு மாடுடன் இயற்கையாக இணை சேரும் முறையில் ஆரம்பித்து பல விஷயங்களை நமது சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். அது பிரச்சனையில்லை.

4) மரபுரீதியிலான விவசாயத்தை கைவிட்டாயிற்று. அட...விவசாயம் நசிந்து போய்கொண்டிருக்கிறது. அப்பறம் எங்கே மரபுரீதியிலான விவசாயம். அது பிரச்சனையில்லை. 

5) மரபுரீதியிலான உணவுப்பழக்கம் போயே போய்விட்டது. அது பிரச்சனையில்லை.

6) விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து....நம்மை சுற்றி ஏராளமான பிரச்சனைகள் நடந்துகொண்டே இருக்கிறது. அதுவும் முக்கியமில்லை

7) இந்த விஷயங்களை எல்லாம் தாண்டி, சல்லிக்கட்டை நடத்துவதன் மூலம் நாம் என்ன சாதிக்க நினைக்கிறோம் ? அல்லது இதன் நோக்கம் என்ன ? வீரமா ? வெட்டி பெருமையா ? 

இன்னொரு வாதத்தையும் பார்க்க முடிகிறது. நியாமான காரணங்களும் கூட. சல்லிக்கட்டில் காளைகள் பங்கேற்பதால் விவசாயிகளுக்கும் நன்மை. காளைகள் இனம் காக்கப்படுகிறது. 

காளைகளை வளர்ப்பதென்பது லேசுப்பட்ட காரியமல்ல. ஏகப்பட்ட காசு செலவுசெய்தாக வேண்டும். சாதாரண விவசாயிக்கெல்லாம் இது கஷ்டமான காரியம். அப்படியென்றால் பொருளாதார ரீதியில் ஓரளவு நன்றாக இருப்பவர்கள் மட்டுமே காளைகளை வளர்க்க முடியும். அதிலும் மிகவசதியாக இருந்தால் மட்டுமே நல்ல உணவாகக்கொடுத்து காளைகளை தினவுடன் வளர்க்க முடியும். 

இரண்டாவது பாய்ன்ட் மிகமுக்கியமானது, தேவையானதும் கூட. Artificial Inseminationனை விடுத்து இயற்கையான வழியில் அதன் இனத்தை காப்பது. ஆனால், சல்லிக்கட்டு நடக்காத மாநிலங்களில் மட்டும் எப்படி காளைகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டை விட அதிகளவில் இருக்கின்றன ? இத்தனைக்கும் நமது காளை வகைகளை விட அங்கு அதிகளவில் வகைகள் உள்ளன.

National Kamdhenu Breeding Centre

நோஞ்சான் காளைகளும், வயதான காளைகளும் - பெரும்பாலும் - எவ்வாறு கொல்லப்படுகின்றன ? இதுவொரு முறை. பெரிய சுத்தியால் முதுகில் நாலைந்து அடிகள். அவ்வளவே. இதுபோல பல உண்டு. ஆக, காளைகள் தெய்வம் - உயிர் என்றால், எப்படி இதுமாதிரியான உயிர்வதையை இத்தனைநாள் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம். "பல்லுயிர் ஓம்புதல்" என்ற தமிழரின் "மரபிற்கு" முற்றிலும் எதிரானதாகல்லவா இருக்கிறது.

1) Why the Ban on Cow Slaughter is not Just Anti-Farmer but Anti-Cow as Well

2) Who killed the holy cow


பிராய்லர் கடைகள் 10 – 15 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இன்று அதிகம் இருப்பதைக்காண முடிகிறது. இந்த கோழிகள் எங்கிருந்து வருகின்றன ? எவ்வாறு வளர்க்கப்படுகின்றன ? அது புஷ்டியாக வளர என்னவெல்லாம் கொடுக்கப்படுகிறது ? இதுபற்றி எத்தனை பேர் சிந்தித்திருக்கிறோம் ? இந்தப்பக்கம் அந்தப்பக்கம் நகர முடியாத கூண்டில் தான் முக்கால்வாசி ஆயுளை இக்கோழிகள் கழிக்கின்றன. கோழிகளுக்கும் உணர்வு உண்டு; வலி உண்டு; தனது சூழலியல் பற்றிய அறிவு உண்டு. அப்படியான உயிரினத்தை இவ்வளவு மோசமாக நாம் நடத்திக்கொண்டிருக்கிறோம்.

ஆனால், தமிழர்கள்/இந்தியர்கள் அடிக்கடி மேற்கோள் காட்டும் “மரபு”...அதன்படி...கோழிகளை அதன்போக்கில் வளர்ப்பார்கள். அது அந்த இடத்தைச் சுற்றி அதுபாட்டுக்கு சுற்றிக்கொண்டிருக்கோம். ஒருநாள் படக்கென்று பிடித்து குழம்பு வைத்து விடுவார்கள் (சைவைம் – அசைவம் – இதுமிகப்பெரிய டாபிக். இந்தப் பதிவின் நோக்கம் அதுவல்ல ). ஆனால் இந்த இறக்குமதி செய்யப்பட்ட livestock farming முறை வந்தவுடன் நமது “மரபு” அடியோடு மாறிப்போயிற்று. உற்பத்தி – லாபம் என்ற நோக்கில் மட்டும் வெறித்தனமாக கோழிகளை கையாள்கிறோம்.


கோழிகள் மட்டுமல்லாமல், பன்றிகள், மாடுகள் என்று எல்லா விலங்குகளையும் நமது சுயநலத்திற்காக படுமோசமாக நடத்துகிறோம் என்பதே நிஜம். KFC, McDonalds போன்ற இடங்களில் எல்லாம் நாம் கைவைக்கும் ஒவ்வொரு துண்டும் கண்டிப்பாக இவ்வாறு கொடுமையான சூழ்நிலையில் வளர்க்கப்படும் விலங்குகளே. இதைச்சொல்லி உணர்ச்சிகளை துண்டுவது என் வேலையல்ல. இது facts. ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவர் விருப்பம்.



உணவுப்பழக்கம் தான் இப்படியென்றால், இதற்கு மற்றொரு முனையில் இன்னொருதுறை இருக்கிறது. Pharmaceutical industry. உணவுக்காக நடத்தபடும் அவலங்களாவது கொஞ்சம் வெளியே தெரிகின்றன. பரவலாக பேசுப்படுகின்றன. ஆனால் இதுபோன்ற பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படும் விலங்குகள் பற்றி வெளியே தெரிவதேயில்லை. நண்பர் ஒருவர் (ஒருவேளை அவர் இதைப்படித்தால் கொஞ்சம் விரிவாக இதைப்பற்றி எழுதுவாராயின் சந்தோஷம்), Biotech முடித்தவர். இதுபற்றி கதைகதையாக சொல்லி இருக்கிறார். Sampleக்கு ஒன்று. அதை அப்படியே தருகிறேன்.

“ முயல் கண்ணுல டெஸ்ட் பண்ணுவோம்னு அன்னிக்கு சொன்னீங்களே...அது Draize eye test தான சொன்னீங்க ? “

“Irritation இருக்கான்னு டெஸ்ட் பண்ணுவாங்க.... Draize eye irritant test. எல்லா முகப்பூச்சு க்ரீமும் இப்படி டெஸ்ட் செய்யப்படும். Maybelline கண் மை வகையராவும் இப்படியே

அது டெஸ்டிங் க்காக தான்.. நான் அந்த experiment பண்ணல..... Animal testing License வாங்கணும்னா , எலியைக் கொல்லனும்...தினுசு தினுசா,, Carbon monoxide விட்டு கொல்வது, கழுத்து எலும்பை உடைத்துக் கொல்வது, கருப்பையில் இருக்கும் foetus கொல்ல கத்திரிக்கோல் வைத்து வெட்டுவது...

இது முதல் படி...அடுத்து முயலின் கண்ணில் இருக்கும் ஒரு ரத்த நாளம், இதயத்தின் அருகே இருக்கும் ரத்த நாளம் ...இதில் ஓட்டை போட்டு extraction of blood. அப்பால காதுல எல்லாம் எக்கச்சக்க irritability inducing agents போட்டு, மருந்து அலேர்ஜி ஏற்படுத்துதான்னு பாப்பாங்க

Embryotoxicity. அப்படின்னு ஒரு மேட்டர் இருக்கு கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பொருளான்னு சோதனை... முயல் செம்ம ஸ்பீடா, அடிக்கடி குட்டி போடும் அனிமல்...அதனால் கருவில் இருக்கும் குட்டிகளில் இதை சோதிப்பார்கள். LD 50 எல்லாத்துலையும் இருக்கும்.....பெக்டீரியால கூட அது செய்வாங்க.. “

இன்னொரு உதாரணம் பார்ப்போமே. “Horseshoe Crab” என்றொரு வகை நண்டு உள்ளது. இதற்குள்ள சிறப்பம்சம் இதன் ரத்தம் ப்ளூ கலரில் இருக்கும். ஏன் அவ்வாறு இருக்கிறது ? அதனால் நமக்கென்ன பயன் ? படித்துப்பாருங்கள்

தேமே என்று திரிந்துகொண்டிருந்த நண்டுகளை பிடித்து அதை வைத்து பில்லியன் கணக்கில் காசு பார்க்கிறார்கள். முதலீடு ? கொஞ்சமேகொஞ்சம். லாபம் ? மலைப்பாக இருக்கிறது. 

இந்தத் துறையில் எல்லாம் அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. Tissueகளை வைத்து சோதனை செய்வது, Simulation என்று மாற்றுவழிகள் இல்லாமல் இல்லை. 

Literalலாக, என்னை சுற்றி ஆட்கள் இருந்தாலே எனக்கு மூச்சுமுட்டும். எரிச்சல் மண்டும். வேறுவழியில்லாமல் காலம்தள்ள வேண்டியுள்ளது. ஆனால் எந்தவொரு closed environment - Train AC compartment, ஜன்னலே இல்லாத ரூம்கள் - மாதிரியான இடங்கள் என்றால், பெரிய கஷ்டம். அஞ்சு நிமிடத்திற்கு மேல் suffocateடாக ஆரம்பித்துவிடும். ஆறறிவு உள்ள நமக்கே இப்படி இருக்கிறதென்றால், கோழிகள் - யானைகள் - டால்பின்கள் மாதிரி, ஷோ காமிக்க வளர்க்கப்படும் மிருகங்களின் நிலைமை ? கோழி எல்லாம் படுபரிதாபத்திற்குரிய ஜீவன்கள். இந்தப்பக்கம் - அந்தப்பக்கம் நகர முடியாது. கோவில் யானைகள், புறாக்களில் ஆரம்பித்து ஏகப்பட்ட உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். நமது "Entertainment"க்காக க்ராஸ் - பரீட் செய்யப்பட்ட கலர்கலர் பறவைகளும், மீன்களும் இதில் அடக்கம். இப்படியான, முற்றிலும் ஒரு அந்நிய சூழ்நிலையில் விடப்பட்டு வித்தைகாட்ட பழக்கப்படுத்தப்பட்ட Orca திமிங்கிலத்தைப் பற்றிய டாக்குமெண்டரி இது. தனது ட்ரைனர் உட்பட, இருவரை கடித்து "கொன்றுவிட்டது". நாம் பேசிக்கொண்டிருப்பது கடலில் தன்போக்கில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு உயிரினத்தை கூட்டிவந்து, இப்படி மிகமிகமிக சிறிய இடத்தில் அடைத்துவைத்து வித்தைகாட்டயது யார் தவறு ? அதை ஆயிரக்கணக்கான மக்கள் உறுத்தலின்றி இத்தனை ஆண்டுகளாக பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள். பண்டைய ரோமர்கள் காலத்தில் நடந்ததைப் போல. உயிரினங்கள் வேறு - அடிப்படை மனநிலை ஒன்றுதான்.


மேலிருக்கும் பத்து பக்கங்களையும் தாண்டி, இந்த My life as a Turkey documentaryயை முன்வைக்கிறேன். இதுவொன்றே பல புரிதல்களை தரக்கூடியது. Romanticize செய்யப்பட்டதாக தோன்றலாம் (அப்படி இருந்தால், இதை ஷேர் செய்திருக்கவே மாட்டேன்). முழுதாக பார்த்தீர்களானால் நான் சொல்ல வருவது புரியும். Animal behavior - அதில் நம் பங்கு - அதற்கும் நமக்கு உள்ள தொடர்பு/எல்லை - எல்லாவற்றையும் பின்புலமாகக்கொண்டது இந்த documentary.


பெண்ணுரிமை, மனித உரிமை, மாற்று பாலின உரிமை இதெல்லாம் பேசுகிறோம். தேவை. அவசியம். நல்லது. ஆனால் விலங்குகள் பற்றி ஏன் கண்டுகொள்வதில்லை ? ஒருவேளை நாம் எல்லோருமே ஏதாவதொருவிதத்தில் விலங்குகள் மூலம் பயனடைவதால் take it for granted என்று எடுத்துக்கொள்கிறோமா ? இயற்கை - சூழலியல் பற்றி பேசுகிறோம். மாடு - ஆடு - கோழி - உட்பட அனைத்தும் அதிலொரு அங்கம். நாமும் அதிலொரு உறுப்பினரே தவிர, நாம் மட்டுமே முக்கியம் கிடையாது. வேறுவகையில் கலிலியோ இதை சொன்னதற்காகத்தான் அந்தாளை சாகடிக்க வந்தார்கள். அந்த மனநிலையில் தான் நாம் இன்னும் இருக்கிறோமா ? நமக்காகத்தான் எல்லாம்/நம்மைச்சுற்றி தான் எல்லாம் என்ற படுஆபத்தான மனநிலை. "இயற்கையை காப்போம்" என்ற வார்த்தையே பயங்கர காமெடி. இயற்கை தான், நம்மை காப்பற்றிக்கொண்டிருக்கிறது. யாரைப்பார்த்தாலும் "வருங்கால தலைமுறைக்கு நீர், நிலம், லொட்டு லொசுக்கு...." அதிலும் வடிகட்டிய சுயநலம். சுயநலம் - எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானதுதான். மறுப்பதற்கில்லை. ஆனால் எந்த extentக்கிற்கு என்பதுதான் இங்கு பிரச்சனை.

Mass culture என்றொரு டெர்ம் உண்டு. தமிழ்நாடு/இந்தியா/உலகம் என்று காலங்காலமாக அது தொடர்ந்து இருந்துகொண்டே வருகிறது. அதன் முக்கிய கூறுகளில் ஒன்று, individual significanceசை சட்டை செய்யாது. அதற்கு தனிநபர் விருப்பு/வெறுப்பு தேவையில்லாத விஷயம். பெரும்பான்மைக்கு எது உகந்ததோ அதை பின்பற்ற வைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை செய்ய முற்படுவதுதான் இதன் முக்கிய அம்சம். Propaganda அதிலொரு வழி. அதை கடைசியாக பார்ப்போம். லாஜிக்கலாக யோசித்தால், தனிநபருக்கோ - சிறுகுழுக்களுக்கோ - முக்கியத்துவம் தேவையில்லை என்று தோன்றும். பெரும்பான்மை ஆட்களுக்கு நன்மை நடக்கும்பட்சத்தில் இதை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே. ஆனால், Moral responsibility...நம் மனித இனத்திற்கு மட்டுமே உரியது என்று சொல்கிறோமோ...அதுதான் நடுவில் வந்து தொலைக்கிறது. Moral responsibilityயை முன்வைத்து ஒரு சமூகம் நகரும்பொழுதுதான், என்னளவில் அது சிறந்த சமூகம்/மரபு/எல்லாமே. ஒரு Utopianனின் கடைந்தெடுத்த பிதற்றலாக இது தோன்றலாம். பிரச்சனையில்லை.  ஒரு தனிநபரின் விருப்புவெறுப்பை mass culture மதிக்காமல் போகலாம். அல்லது mass cultureன் கருத்துகளோடு அவர் ஒத்துப்போகலாம். அது இரண்டாம்பட்சம். அதற்கு முன்னர், ஒரு பெரிய "thought process" இருந்தாலொழிய நம்மால் தனியாக சிந்திக்க முடியாது. After all, நமது சிந்தனையை யாரும் தடை செய்ய முடியாதே. திரும்பத்திரும்ப இந்த பாய்ன்ட்டையே வலியுறுத்த விரும்புகிறேன். Think individually. பிறகு அவன்/அவள்/அவர்/இவர்/சமூகம் என்று பார்த்துக்கொள்வோம். Marxist theoryயில் முக்கிமான கூறு - False Consciousness/False Needs. தேவை எதுவோ அதைவிட்டுவிட்டு, இதுதான் உனது தேவை என்று நம்ப வைக்கும் முயற்சி. மரபு, மொழி, இனம், இத்யாதிகள் எல்லாம் அவ்வாறன false needsகளை நோக்கி நம்மைத் தள்ளுகிறதோ/தள்ளிவிடுமோ என்ற பயம் எப்பொழுதும் எனக்குண்டு. அதிலிருந்து லாவகமாக தப்பிப்பது...நம் திறமை. Art form, இசை - இலக்கியம் - சினிமா, எதுவாக இருந்தாலும்...அவைகளின் பலவேலைகளில் இதுவும் ஒன்று. தெளிவைத் தருவது. விழித்தெழ செய்ய வேண்டுமெயன்றி ஒரேடியாக போட்டு தூங்க வைப்பது கலையின் வேலையல்ல.

கடைசியாக இதோடு முடிக்கிறேன்.
The function of propaganda does not lie in the scientific training of the individual, but in calling the masses attention to certain facts, processes, necessities, etc., whose significance is thus for the first time placed within their field of vision
The whole art consists in doing this so skillfully that everyone will be convinced that the fact is real, the process necessary, the necessity correct, etc.
All propaganda must be popular and its intellectual level must be adjusted to the most limited intelligence among those it is addressed to. Consequently, the greater the mass it is intended to reach, the lower its purely intellectual level will have to be.

Facebookers..

14 comments :

  1. ரொம்ப பிரமாதமான கட்டுரை!!

    ReplyDelete
  2. Neenga solra visayam evlo sensitive nu puriyudhu.
    Aanaa ithuku enna pannalam nu ethum sollaliye

    ReplyDelete
  3. நல்ல விளக்கம் அருமை

    ReplyDelete
  4. கோழிய கொல்றத பத்தி நெனைச்சு பீல் பண்ணிக்கிட்டே இருந்தா சிக்கன்ன ருசிச்சி ரசிச்சி சாப்பிட முடியாது சார் ...நீங்க சொல்ற மாறி இருந்தா ஒரு Paracetamol மாத்திர கூட சாப்பிட முடியாது உக்காந்து யோசிச்சுக்கிட்டே இருக்க வேண்டியதுதான் ....வெளிய ஆயிரத்தெட்டு பிரச்சன இருக்கதான் செய்யுது ,சில விசயம் தப்புன்னு தெரிஞ்சாலும் மனித சுயநலத்துக்காக தூக்கி போட்டு தான் போறோம் ..போக முடியும் ..

    ReplyDelete
  5. This is such a nice collection many topics surrounding this area of animal cruelty. I wish it were in English so I could have shared with my friends who don't know tamil. Anyway I think the people who need to read it knows tamil . Perhaps if u can make a video of you talking these things. It would have more reach which is much wanted attention in the topic. Loved your writing style. Thanks for writing for what I believe in. Every little bit helps.

    ReplyDelete
    Replies
    1. வீடியோ - வொர்க் ஆகும்ன்னு தோணல.

      Delete
  6. A very beautiful piece of writing. Deep. Lots of questions arise from your post sir. And of course, the post itself has the answers. For starters, if we ban kfc and McD, what happens to the masses that get paid working there,let alone their bosses and owners. This is a very mediocre or below mediocre level brain posing such questions. But that's where it starts. We, by our own intelligence, have morally buried us and taken ourselves to a place where is there is no return. Honestly, those videos and your post totally convince to convert to vegetarian. But there are the genes.
    Using Darwinism isn't escapism, it's the only pathetic way to have a better sleep. There are the genes from the ancestors who had loved the non vegetarian food. Darwinism is for some of us.
    To jallikattu - the answer again lies in your post. If not for tradition, why can't tamils support jallikattu just to save a few bulls and prevent AI.
    There is a hype. Hooplah. But beneath all this,I see that we are fighting for something good also. Accidentally.

    ReplyDelete
    Replies
    1. Thanks Bro. அப்பறம், சார்ன்னு சொல்லி மட்டும் இன்சல்ட் பண்ணிறாதீங்க.

      Delete
  7. weight thala
    really sema article - awesome work

    ReplyDelete
  8. I am feel sick bro very sick இந்த கட்டுரை படிச்சதுக்கு பிறகு ஒவ்வொரு முறை non veg சாப்பிடும் போதும் ரொம்ப குற்றஉணர்சியா feel பண்றேன் ..really I must be try to avoid eat N.V..கட்டுரைகாக நீங்க எடுத்து இருக்கும் effort amazing bro..very impressive & detailed ..its must be reach more peoples ...some one definitely change their thought's like me.thanks bro...

    ReplyDelete
  9. The Roots of Evil: The Origins of Genocide and Other Group Violence - Where did you download this book?

    ReplyDelete