Are you observing or participating?

                                                                                                                                                                                                                            - Hannibal
1) குற்றாலம் போன்ற இடங்களில் அவ்வளவு நெருக்கமாக....யாரென்றே தெரியாத.... பெருந்திரளான ஆட்களுடன் அருவியில் நிற்பது.... அசூயையை ஏற்படுத்துமா/தாதா ?

2) Enochlophobia/Demophobia/Topophobia -  குறிப்பாக நமது நாட்டில் - பெண்களுக்கு அதிகம் இருக்குமா ? ஆண்களுக்கா ? 
----------------------------------------

3)  Fante was my god என்று Bukowski ஏன் சொன்னார் ? 

4) Dwight Yoakamமை - எத்தனை பேருக்கு பிடிக்கும் ?

5) பனிக்கு வாசனை/நாற்றம் உண்டா ?
----------------------------------------

சோஷியாலஜி, க்ரிமினாலஜி, சைக்காலஜி – இந்தத் துறையில் உங்களுக்கு PhD செய்யும் ஆர்வம் இருந்தால் என்னிடம் ஒரு ஐடியா உண்டு. பல வருடங்களாகவே உள்ளே இருக்கும் ஐடியா. தட்பவெப்ப நிலைக்கும் – க்ரைம்களுக்கும், குறிப்பாக இந்தியா போன்ற நாட்டில் - உள்ள தொடர்பு. “நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல.... எங்க எப்பிடி இருக்க வேண்டியவன் ”. அடிக்கடி இல்லாவிட்டாலும், தினமும் ஒருமுறையாவது இந்த நினைப்பு வராமல் போகாது. இந்த ஐடியா குறித்த சுயசிலாகிப்பும் அப்படியே. இணையத்தில் தேடும் பொழுது - உதா: இங்கேஇங்கேஇங்கே – மிகக்குறைவான ஆட்களே இந்தக் கோணத்தில் யோசித்து, ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர் என்று தெரிந்தது. இந்த ஐடியாவிற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, 2012ல் ஒரு சின்ன விஷயம் நடந்தது (என் fieldல் அது பெரிய விஷயம். Access to data). South Asia Network on Dams, Rivers & People (SANDRP) என்ற அமைப்பினர் ஒரு RTI தாக்கல் செய்கின்றனர். என்னவென்று... இந்திய வானியல் துறை அதிகாரிகளே..... ஏகப்பட்ட, வருடக்கணக்கில் சேகரிக்கப்பட்ட வானியல் தொடர்பான dataகளை என்ன செய்தீர்கள் ?. கேட்ட பிறகுதான், சரி போனால் போகட்டும் என்று – இந்திய வானியல்துறை 1901 – 2001 வரையில், இந்தியா முழுமைக்கும் – மாவட்டவாரியாக – மழை அளவு போன்ற சில டேட்டாகளை டவுன்லோட் செய்ய ஏற்பாடு செய்தது. ஆனால் இந்த டேட்டாக்களை மட்டும் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏனென்றால் National Crime Records Bureauவில் மாதவாரியாகவோ ஆண்டுவாரியாகவோ க்ரைம் ரேட்கள் குறித்த தகவல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற டேட்டாபேஸ்களை கட்டமைப்பதில் இந்தியா மி......க....வு....ம் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. போகட்டும்.

எதற்கு இவ்வளவு பெரிய முன்னோட்டம் என்றால், வெயில் உக்கிரமாக வாட்டி எடுக்கும் நமது ஊருக்கு நேர்மாறான தட்பவெப்ப நிலை இருக்கும், நமக்கெல்லாம் – பனிப்பொழிவு என்றாலே என்னவென்று தெரியாது.... ஆனால் வருடத்தில் பாதி நாட்களுக்கு மேல் உறைபனி; நாலைந்து மாதங்களுக்கு இரவையே பார்த்திராத; எல்லாவற்றிற்கும் மேலாக பல இடங்களில் மக்களின் நடமாட்டமே மிகக்கம்மியாக இருக்கும் நோர்டிக் நாடுகளில்....தட்பவெப்ப நிலைக்கும் - க்ரைம்களுக்கும் தொடர்பு இருக்குமா ? ஒரு எளிய உதாரணம். தமிழ்நாட்டின் மொத்த ஏரியா – 1,30,058 சதுர கிமீ. நோர்டிக் நாடுகளில் ஒன்றான நோர்வேயின் மொத்த ஏரியா – 3,85,178 சதுர கிமீ. கிட்டத்தட்ட தமிழ்நாட்டை விட மூன்று மடங்கு. ஆனால், மக்கள்தொகை ? தமிழ்நாடு – 7,21,47,030. நோர்வே - 51,36,700. தமிழ்நாடு கிட்டத்தட்ட 14 மடங்கு மக்கள்தொகையைக் கொண்டுள்ளது. அட.....மக்கள் தொகை அடர்த்தி (Population density).... சென்னையை எடுத்துக் கொள்வோம். மூச்சைப் பிடித்துக்கொள்ளுங்கள். ஒரு சதுர கிமீல்  26,903 பேர் வசிக்கின்றனர். நோர்வே – 16 பேர்/சதுர கிமீக்கு. வெறும் பதினாறு பேர். தமிழ்நாட்டின் மிகக்கம்மியான மக்கள் தொகை அடர்த்தி என்று பார்த்தால் கூட – 288 பேர் (நீலகிரி).

6)  1

7)  2

என்ன இதுக்கு இவ்வளவு புவியியல் சார்ந்த தகவல்கள் என்று தோன்றலாம். ஆனால், நிச்சயமாக ஒரு நாட்டின் புவியியல் அமைப்பு/தட்பவெப்ப நிலைக்கும் மக்களின் மனநிலைக்கும் மிகப்பெரிய தொடர்புண்டு. எவ்வளவு தான் உதாரணங்கள், படங்கள் போட்டு விளக்க முற்பட்டாலும், நம்மில் பெரும்பாலானவர்களின் - இதுபோன்ற நாடுகளின் human geography எப்படி இருக்கும் என்பதே - கற்பனைக்கு அப்பாற்பட்டது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் நமக்கு நினைவு தெரிந்த நாள்முதல் எங்கு திரும்பினாலும் மக்கள்..... மக்கள்..... மக்கள்.... மக்கள்.... வெயில்... வெயில்... வெயில்... வெயில். நோர்டிக் நாடுகளின் மிக நீண்ட பகல்பொழுதுகளைப் பற்றி கற்பனை செய்யவே கிர்ர்ரர்ர்ர்ரென்று இருக்கிறது. தொடர்ந்து வெளிச்சம் இருந்துகொண்டே இருந்தால்....எப்படி தூங்குவது, புதிதாக இந்த சூழ்நிலைக்கு வரும் ஆட்கள் எவ்வாறு/எவ்வளவு சீக்கிரம் அதற்கு பழக்கப்படுத்திக் கொள்வார்கள், அட்ஜெஸ்ட் செய்ய முடியுமா போன்ற பல கேள்விகள் எழாமல் போகாது. ஒருவேளை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியாவிட்டால் ?

[youtube http://www.youtube.com/watch?v=Wf__4yiDMRw]

த்ரில்லர் கதைகள் பிடிக்காத ஆட்கள் யாராவது உண்டா என்ன. குழந்தைகளாக இருக்கும்போது கிளம்பும் பலவித curiousityகளின் நீட்சியே த்ரில்லர் கதைகளின் மீதான நமது விருப்பத்திற்கு காரணமானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஸ்கூல் பையனாக இருந்த சமயங்களில், பைலட் – டிடெக்டிவ்...இது ரெண்டில் ஏதாவது ஒன்று (அ) ரெண்டுமாகவே ஆவது என்ற தீவிர முடிவில் இருந்தேன். ஷெர்லாக் ஹோம்ஸின் தாக்கம் அப்படி (Tintin தனி உலகம். அதைத்தாண்டி ஆலிஸ் இன் வொன்டர்லேண்ட், அம்புலிமாமா, பூந்தளிர், ராணி காமிக்ஸ்...etc...etc...போன்ற புத்தகங்களில் வந்த கதைகள் கூட அந்த வயதில் நம்மில் பலருக்கு பலவித திகில் அனுபவத்தை கிளப்பியிருக்கக் கூடும்). இன்றுவரையிலும், ஷெர்லாக் கதைகளை படித்து முடித்து வெளியே செல்லும்போது....எல்லாவற்றையும் ஷெர்லாக் ஸ்டைலில் அப்ஸெர்வ் செய்வதாக நினைத்துக்கொண்டு என்னமாவது கேனத்தனம் செய்வது தொடர்கிறது. சிலபல பேருக்கு நான் சொல்ல வருவது புரியும் என்று நினைகிறேன் (பல மட்டைகள் in a குட்டை). அவ்வளவு ஏன்...Following பார்த்த சமயத்தில்....விடுங்கள்....அதுவொரு தனிக்கதை. Intelligence Bureau(IB) நடத்திய பல தேர்வுகளை எழுதியுள்ளேன். சனியன்கள்....எது தேவையோ அதைவிட்டுவிட்டு, இந்திய காங்கிரசை தோற்றுவித்தவர் யார் போன்ற மொக்கை கேள்விகளைக் கேட்டு சாகடித்தார்கள். சரி, GIS படித்திருக்கிறோமே...Forensic departmentல் ஈசியாக நுழைந்துவிடலாம் என்று பார்த்தால் அவர்கள் அதைவிட மோசம்.

சற்றே “பெரியவனாக” வளர்ந்த பின்னர் லைப்ரரிகளின் உபயத்தால் தமிழில் க்ரைம் கதைகள் எளிதாக கிடைக்கத் தொடங்கியது. லைப்ரரியில் புத்தகத்தை ரிட்டன் செய்யும் டேபிள் அருகே ஏற்கனவே ரிட்டன் செய்யப்பட்ட பல புத்தகங்கள் குவிந்திருக்கும். அதில், ராஜேஷ்குமார் – சுஜாதா – இந்திரா சவுந்தரராஜன் போன்றவர்களின் புத்தகங்களில் சில எப்பொழுதுமே இடம்பெற்றிருக்கும் (இதில் சுஜாதா-நடிகை அல்ல-என் அப்பாவின் மூலம் ஏற்கனவே அறிமுகம்). புத்தகத்தின் என்ட்ரி போடும் பக்கம் முழுவதும் தேதிகளால் நிரம்பியிருக்கும். அவ்வாறு அறிமுகமான பாத்திரங்கள் தான் விவேக், ரூபலா, அவினாஷ், சுபா, ஆர்னிகா நாசர், blah blah blah.... சுஜாதா – அஞ்சாறு கதைகளுக்குப் பிறகு சுஜாதா க்ரைம் கதைகள் ஞே என்று முழிக்க வைத்தது. எவ்வித depthம் இல்லாத பாத்திரங்கள். வெற்று த்ரில்லாகவே நகரும் சம்பவங்கள், எவ்வித emotional connectம் சுத்தாமாக இருக்காது (வசந்த் – எந்த பெண் கதாபாத்திரதத்தை பார்க்கும்பொழுதும், மேல் பட்டன் திறந்திருந்தது, மார்பு விம்மியிருந்தது – போன்ற வசனங்கள் வராமல் போகாது). ராஜேஷ்குமார், சுபா – போன்ற ஆட்களிடமிருந்து எங்கே சுஜாதா தனித்து நிற்பார் என்றால், நடுநடுவே வரும் – Beatles, Nietzsche – போன்ற விஷயங்கள். மற்றொரு பிடித்த விஷயம்,  வாக்கியங்களின் கச்சிதம். ஆனாலும் சிலபல காரணங்களால் சுஜாதா க்ரைம் கதைகள் படிக்கப்படிக்க அலுப்பையே தந்தது (அதுவும் Ray Bradbury, George Orwell (என் இனிய இயந்திரா & சொர்க்கத் தீவு ), Theodore Sturgeon போன்ற எழுத்தாளர்களைப் படிக்க ஆரம்பித்தவுடன், சுத்தமாக சுஜாதாவின் க்ரைம் கதைகள் மீதான ஆர்வம் வடிந்தேவிட்டது).

அப்பறம் James Ellroy, Michael Connelly, பழைய ஆட்களில் Hadley Chase போன்ற ஆட்கள்....blah....blah....blah. ஆங்கில க்ரைம் கதைகள் படிக்கும் அனைவருக்கும் பரிட்சயமான அதே லிஸ்ட். All the president’s men பார்த்த சமயத்தில், எல்லா முக்கிய பொலிடிகல் த்ரில்லர் கதைகளையும் ஒரு கை பார்த்துவிடுவது என்று வெறிகொண்டு டவுன்லோட் செய்ததோடு சரி. ஒன்றையும் படித்ததாக ஞாபகம் இல்லை. ஒரு கட்டத்தில் க்ரைம் கதைகள் என்ற நினைப்பே எரிச்சல் தர ஆரம்பித்தது. படித்த வரையில் ஒரே மாதிரியான ப்ளாட் – ஆழமற்ற பாத்திர படைப்புகள் – style over substance என்ற ஹாலிவுட் பாணியிலான கதையோட்டம் என்று பயங்கர கடுப்பைக் கிளப்பும் கதைகள். கதையில் நடைபெறும் சம்பவங்கள் எவ்விதத்திலும் நம்மை பாதிக்காது. “இவன போட்டானா....அடுத்து அவனையா/அவளையா....எப்பிடி மாட்டுவான், அடுத்து எவன் சாவான்...” என்பது மாதிரி வெறும் த்ரில் அனுபவமாகவே பெரும்பாலான கதைகள் இருந்தன. நான் வேண்டுமென்றால் பந்தயம் கட்டத் தயார். ஆங்கிலம்/தமிழில் வந்த சிறந்த க்ரைம் கதைகள் என்று நீங்கள் நினைக்கும் கதையை எடுத்துக்கொள்வோம்....ஆரம்ப இருபது பக்கங்கள் – நடு இருபது பக்கங்கள் – கடைசி இருபது பக்கங்கள். மேற்கொண்டு எதுவும் படிக்க தேவையில்லை. குறிப்பாக கடைசி இருபது பக்கங்களில் கதாபாத்திரங்களே எல்லா குற்றத்தையும் ஒப்பித்தபடி சாவார்கள் (அ) மாட்டிக்கொள்வார்கள்.

இப்படியாக க்ரைம் கதைகள் – புத்தகங்கள் எல்லாம் மொண்ணை அனுபவங்களாகவே போய்க்கொண்டிருந்த வறட்சி காலத்தில் (வேற்று மொழி க்ரைம் படங்கள், புத்தகங்களின் இடத்தைப் பிடித்துக்கொண்டன) சொல்வனம் தளத்தில் இந்தத் தொடர் வெளிவந்தது.


பல க்ரைம் கதைகள் மொண்ணையாக இருக்கிறது, ஆனால் ஏன் என்று சரியாக என்னால் சொல்லமுடியாமல்.....அதற்கு முதல் கட்டுரையில் விடை கிடைத்தது. தமிழில் – எந்த வடிவிலாகட்டும் – நான் படித்த மிகச்கச்சிதமான கட்டுரைகளில் அதுவம் ஒன்று. தொடரின் ஐந்தாவது கட்டுரையை – அர்னல்டூர்: ஐஸ்லேன்ட் குற்றப் புனைவு எழுத்தாளர் – படிக்கும்போதே ஒரு பொறி தட்டியது. அர்னல்டூர் – இந்தப் பெயரை எங்கேயோ கடந்து வந்திருக்கிறோமே என்று யோசித்து யோசித்து....Jar City. இந்தப் படத்தைப் பற்றி 2011ல் படுமொக்கையான பதிவு ஒன்றை போட்டிருந்தேன். பதிவை விடுங்கள். அதில் // ஐஸ்லாந்தின் பின்னணி தெரிஞ்சிருந்தா இன்னும் புடிச்சிருக்குமோ என்னவோ. நெட்டில் பார்த்தால், ஐஸ்லாந்தில்(அங்கேயும்) வன்புணர்ச்சி பெரிய பிரச்சனையா இருப்பது தெரியுது.முக்கியமா இன்செஸ்ட் வகையான வன்கொடுமைகள். அதுனாலயே பல வகையான – மரபணு ரீதியான நோய்கள் – பரவுவதாக சொல்கிறார்கள் //. இந்த வரிகள் எனக்கே சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியது. நோர்டிக் க்ரைம் கதைகளில் என்ன இருக்கும், எவ்வாறு அக்கதைகளை அணுகுவது, hard core இலக்கியத்திற்கு மட்டுமே உண்டான சமாச்சாரங்கள் என்று நான் அபத்தமாக நம்பிக்கொண்டிருந்த - கதையின் சூழ்நிலை எவ்வளவு முக்கியம், சைக்காலஜிகளாக ஒரு கதாப்பாத்திரத்தை எவ்வாறு அணுகுவது என்று பல விஷயங்கள் பிடிபடத் தொடங்கின. பல்ப் கதைகளாகவே நாம் பாவித்துவரும் க்ரைம் கதைள் கூட எத்தகைய பரிமாணங்களை எடுக்கலாம் என்பதை உணர்ந்து தருணங்கள் அவை.

இந்தத் தொடர் வெளிவருவதற்கு கொஞ்ச நாட்கள் முன்னர் தான் The Girl with the dragon tatoo வெளியானது. எப்படியும் ஒரிஜினல் அளவுக்கு வராது...அதனால் முதலில் ஸ்வீடிஷ் வெர்ஷனை பார்த்துவிடுவதென்று மூன்று படங்களையும் அடுத்தடுத்து பார்த்து முடிக்க, அதன்மூலம் தான் ஸ்டிக் லார்சன் – மில்லேனியம் ட்ரியாலஜி – ஸ்காண்டிநேவியன் நுவார் என்று பல விஷயங்கள் தெரியவர ஆரம்பித்தன. மிகச்சரியாக இவ்விஷயங்கள் பற்றிய ஆர்வம் பீறிட ஆரம்பித்த சமயத்தில் தொடரும் வெளிவர.......செமத்தியான அனுபவம் காத்திருப்பது புரிந்தது.

Original Title: Men who hate women என்பதுதான் 
Original Title: Men who hate women என்பதுதான்

நோர்டிக் நாடுகள். ஸ்வீடன், டென்மார்க், நோர்வே, ஃப்ன்லாந்த், ஐஸ்லாந்த், க்ரீன்லாந்த் நாடுகளை உள்ளடக்கிய நிலப்பரப்பு. வட துருவதிற்குள் கீழேயே இருப்பதால், பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் பனியால் மூடப்பட்டிருக்கும். புவியியல் அமைப்பு, தட்பவெப்ப நிலை போன்றவைகளைத் தாண்டி...மற்ற விஷயங்களைக் கணக்கில்கொண்டால் பாலின பாகுபாடுகளில் ஆரம்பித்து குழந்தை வளர்ப்பு, தனிநபர் வருமானம் என்று பலவற்றிலும் மற்ற பெரிய/வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் எப்பொழுதுமே முன்னோடியில் இருக்கும். Gender gap, Economy, Welfare, Child Growth... இதுபோன்ற புள்ளிவிவரங்களைத் தேடினால்....நோர்டிக் நாடுகள் தான் முன்னணியில் இருக்கும் (நிற்க: உலகில் அதிகளவில் தற்கொலை நடைபெறும் நாடுகள் பட்டியலைப் பார்க்கவும்). ஆனால் (Bold & Italic).... நோர்டிக் நாடுகளில் பிரச்சனையேயில்லையா... அனைவரும் வாழவிரும்பும் கனவு தேசமா என்றால்... நிச்சயம் சில பிரச்சனைகள் – எல்லா நாடுகளையும் போல – இருக்கவே செய்கின்றன.

நோர்டிக் நாடுகளில், குறிப்பாக ஸ்வீடன் போன்ற நாட்டில் – பல ஆண்டுகளாகவே xenophobia, பெரிய அளவில் வெளியே தெரியாவிட்டாலும், அவ்வப்போது தனது முகத்தை காட்டத் தவறுவதில்லை. உலகிலயே முதன்முதலில் State Institute for Racial Biology என்ற இனரீதியிலான ஆராய்ச்சியை தொடங்கியது.....ஜெர்மனி கூட இல்லை.... ஸ்வீடன் தான். 1922ல். 1975 வரை இந்த அமைப்பு பல்வேறு ஆராய்ச்சிகளை தன்போக்கில் செய்து வந்தது. Xenophobia தாண்டி, கடந்த இருபது ஆண்டுகளில், உலகின் பல்வேறு நாடுகளைப் போல – Islamophobiaவும் சேர்ந்து கொண்டது. ஸ்வீடனின் வரலாற்றை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால்.....80களில் நோர்டிக் நாடுகளை மொத்தமாக உலுக்கிய ஒரு படுகொலை நடந்தது. ஸ்வீடனின் பிரதம மந்திரி Olaf Palme....தியேட்டரில் படத்தை பார்த்துவிட்டு நடந்து வீட்டுக்குச் செல்லும்போது பாய்ன்ட் ப்ளான்கில் சுட்டுக் கொல்லப்பட்டார். எவ்வாறான அதிர்வை இந்தப்படுகொலை ஏற்படுத்தியிருக்கும் என்று புரிந்துகொள்ள முடிகிறது. மற்றொரு கொடுமையான விஷயம்...இன்றுவரை யார் கொலையாளி என்பது தெரியாது. கேஸ் இன்றும் முடிவடையாமலேயே உள்ளது.

Olaf_palme_

இதே காலகட்டத்தில் தான் வெளிப்படையான நாஸி ஆதரவு கோஷங்கள் ஸ்வீடனில் தலைத்தூக்கத் தொடங்கியது. புலனாய்வு நிருபராகவே தன்னை அழைத்துக்கொள்ள விரும்பும் ஸ்டிக் லார்சன் உட்பட, பல மக்களையும், எழுத்தாளர்களையும், கலைஞர்களையும் அடுத்தடுத்து நடந்த இதுபோன்ற சம்பவங்கள் கண்டபடி பாதித்தன. அமைதிப்பூங்கா என்று நினைத்திருந்த நாட்டில், அதன் பிரதம மந்திரியே சுட்டுக்கொல்லப்படுகிறார் என்றால், யாருக்கு தான் பாதுகப்பிருக்கும் ? சமூகநீதியை நம்பும் நாட்டில் இனவெறியா போன்ற குழப்பங்கள் மக்களை சுழற்றி அடித்தது. நம்பிக்கைகள் உடைபடுவது யாருக்குதான் கலக்கத்தை ஏற்படுத்தாமல் போகாது ? இந்த ஆற்றாமையை க்ரைம் கதை எழுத்தாளர்கள், தங்களைது கதைகளின் மூலம் வெளிப்படுத்தத் தொடங்கினர். கதைகளில் இருந்த grimness அன்றைய மக்களின் மனநிலையோடு பொருந்திப்போக....நோர்டிக் நுவார்களின் பொற்காலம் - அசாதாரண சூழ்நிலையில் - தொடங்கியது.

Racist, Sexist பார்வைகளைக் கொண்ட Right wing extremist க்ரூப்களை மிகக்கடுமையாகச் சாடி தனது "Expo" பத்திரிக்கையில் எழுதிவந்தார் லார்சன்.  நம்ப முடிகிறதா, ஸ்வீடனில் “Honour Killng” நடந்துள்ளதென்று. Fadime Sahindal என்ற குர்திஷ் முஸ்லிம் பெண்ணை அவரது தந்தையே படுகொலை செய்துள்ளதை, Honour Killng என்ற பதத்திலயே சில ஸ்வீடன் பத்திரிகைகள் அழைத்தன.
  • இதே ஆண்டில் தான் Melissa Nordell என்ற மாடலும் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.
ஸ்டிக் லார்சன், பல வருடங்களாக தனது மனதில் தேக்கி வைத்திருந்த  கோபத்தின் வெளிப்பாடு தான் iconoclasitc, anti-social மனநிலைக் கொண்ட லிஸபெத் சாலண்டர். இதையெல்லாம் பேசக்கூடாது, எழுதக்கூடாது, செய்யக்கூடாது என்று சொல்கிறீர்களா... ”இப்ப என்ன செய்வீங்க..” என்று நக்கலாக கொக்கரித்தவாறு லிஸபெத் கதாபாத்திரத்தை படைத்திருக்கக் கூடும். சமூக நிலையைத் தாண்டி, பெர்சனலாக ஒரு சம்பவம் வாழ்நாள் முழுவதும் அவரை துரத்திக்கொண்டே இருந்தது.

லார்சனுக்கு முன்னோடியாக Maj Sjowall and Per Wahloo ( The queen of crime )என்ற தம்பதியினர் இடதுசாரி சிந்தனையுடன் கூடிய க்ரைம் கதைகளை எழுதி வந்தனர் (Martin Beck என்ற புகழ்பெற்ற கதாபாத்திரம் இவர்களது கைங்கரியமே). அவர்கள் எவ்வாறு ஜோடியாக சேர்ந்து கதைகளை எழுதினர் என்பதே படுசுவாரசியமான விஷயம். நோர்டிக் க்ரைம் கதைகளைப் பொறுத்தவரை இவர்கள் இருவரும் எம்.எஸ்.விஸ்வநாதன் போல. பல தலைமுறை எழுத்தாளர்களையும் பாதித்தவர்கள். ஸ்வீடனின் மற்றொரு முக்கிய க்ரைம் எழுத்தாளர் Henning Mankell ஒரு கட்டுரையில் குறிப்பிடுவதைப் போல... “Anyone who writes about crime as a reflection of society has been inspired to some extent by what they wrote…. Sjöwall and Wahlöö broke with the hopelessly stereotyped character descriptions that were so prevalent. They showed people evolving right before the reader’s eyes”.  இவர்கள் எழுதிய ஒரு கதையை வைத்து எடுக்கபட்ட படம் தான் The Man on the Roof. மார்ட்டின் பெக் கதாபாத்திரம் இடம்பெற்ற ஒரு அட்டகாசமான police procedural படம்.


ஐஸ்லாந்து. எங்கு திரும்பினாலும் பனி. நம்ப முடியாத பனி. பனியும் gloominessம் conjoined twins போல. இதனை சரியாக உபயோகப்படுத்திக் கொண்டவர், Arnaldur Indridason. இவரைப்பற்றியும்/கதைகள் பற்றியும் இந்தக் கட்டுரை மிகச்தெளிவாக அனைத்தையும் பேசுகிறது. இதற்கு மேல் நான் ஒன்றும் எழுதிவிட முடியாது.

நோர்வே. யோ நேஸ்போ (Jo Nesbo). சொல்லப்போனால் இந்த பதிவை எழுதியே ஆக வேண்டும் என்று மூளையை விட்டு இறங்காமல், உள்ளே நச்சரித்துகொண்டிருந்தது, இவரது டிடெக்டிவ் - ஹேரி ஹூலெ(Harry Hole). மற்ற சிலபல மாதங்கள் முன்னர் படிக்க ஆரம்பித்து......ஹேரி ஹூலெயின் சீரிசை பாதியில் விட முடியாமல் ஈபுக் - ஆடியோ புக் என்று எல்லா வழியிலும் படித்து/கேட்டு வந்தேன். மற்ற நோர்டிக் கதைகளிலிருந்து எங்கு யோ நேஸ்போவின் கதைகள் வேறுபடுகிறது என்றால், அதிலிருக்கும் outright punkness. குறிப்பாக ஹேரி ஹூலெவின் cynicism. ஸ்கார்சேஸி இவரது The Snowman நாவலை படமாக்கப்போகிறார் என்ற செய்தியின் மூலம் தான், நேஸ்போ பற்றி தெரியவந்தது.
நேஸ்போ

யோ நேஸ்போ - ரகளையான பெர்சனாலிட்டிகளைக் கொண்டவர். கால்பந்தாட்ட வீரர் (முழுநேர கால்பந்தாட்ட வீரராக ஆகியிருப்பார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக வேற துறைகளில் நுழைய வேண்டியதாகப் போயிற்று), நோர்வேயின் புகழ்பெற்ற Di Derre என்ற ராக் இசைக் குழுவில் ஒரு முக்கிய ஆள். இரண்டாம் உலகப்போர் முதல், பயோ-டெக்னாலஜி வரை எல்லா வகையான விஷயங்களையும் இவரது நாவலில் காணலாம். எதுவுமே வலியத் திணிக்கப்பட்டதாக, துருத்திக்கொண்டு தெரியாது. கதையோடு மிகக்கச்சிதமாகப் பொருந்திப்போகும். மேலும், இவரது கதையோட்டத்தில் இருக்கும் ஒருவித cluttering தன்மையே மற்றவர்களிடமிருந்து இவரை தனித்து அடையாளப்படுத்துகிறது. படிக்கும்பொழுது, ஆரம்ப கட்டங்களில் மேலோட்டமான எழுத்து நடையாகத் தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு விஷயத்தையும் மெல்ல மெல்ல கோர்க்கத் தொடங்குவார். ஆரம்பத்தில் நாம் அவைகளை கவனிக்கத் தவறினால்.....பெரிதாக நம்மை கதையோட்டம் ஈர்க்காது என்பதே உண்மை. மிக அமைதியான நாடு என்று நோர்வே அறியபட்டாலும், அவ்வப்போது அங்கு நிகழும் படுகொலைகளும், கொள்ளைகளும் பெரிதாகவே நோர்வே நுவார் எழுத்தாளர்களை பாதிக்கவே செய்கின்றன. தமது நாட்டைப்பற்றி தனக்கிருக்கும் பிம்பத்தில் ஏற்படும் சிறுவிரிசல் கொடுக்கும் அதிர்ச்சி....அவர்களது கதைகளில் வெளிப்படுகிறது.

I think for me.. it started when I was a young boy. I can remember in the classroom there was a guy  who was sitting on the window row and he would catch flies in the windowsill, and then he would start picking, using tweezers...to pick off one leg and then the wings. Of course this is not unusual, but what fascinated me was the tweezers. It was the idea of this boy being at home, and planning what he would do when he'd get to the classroom.

- Jo Nesbo

மேலும் பல முக்கிய நோர்டிக் எழுத்தாளர்களைப் பற்றியும், இந்த க்ரைம் கதைகளின் பின்புலம் பற்றியும் அட்டகாசமான documentary இது. மேற்கொண்டு நான், போரடிக்கும் வாக்கியங்களாக எழுதித் தள்ளி...அதையும் நீங்கள் படிக்க முற்பட்டு....இந்த தொல்லைக்கு டாக்குமென்டரியை பார்ப்பதே நல்லது. பல சுவாரசியமான விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடியும். 

[youtube http://www.youtube.com/watch?v=RiwObVhyoc8]

ஓகே. மேலே படித்த எல்லா விஷயங்களையும் ஒரு ஓரமாக வைத்துவிட்டு....ஏன் பல நாடுகளில் க்ரைம் த்ரில்லர்கள் எழுதப்பட்டாலும், நோர்டிக் கதைகள் மட்டும் பயங்கர தாக்கத்தை உண்டு பண்ணுகின்றன என்று யோசித்தால்....எனக்கு சில காரணங்கள் இருப்பதாகப்படுகிறது.

1) மேலிருக்கும் பல லின்க்களை படிக்காவிட்டாலும் போகிறது. இதை படித்துப் பாருங்கள். இந்தியாவில் மட்டும் தான் இந்தக் கொடுமைகள் அதிகம் என்ற நினைப்பில் இருப்போம்.

ஸ்வீடன்_ரேப்

உலகின் பல நாடுகளைக் காட்டிலும் ஸ்வீடனில் பாலியல் கொடுமை அதிகம்.  பல புள்ளிவிவரங்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. க்ரைம் கதைகளை இந்தக் குற்றயுணர்ச்சியின் வடிகாலாகப் பார்க்கிறார்களோ என்று தோன்றுகிறது. ஒரு குற்றம் நடக்கிறதென்றால், பல தளங்களிலும் - பல ஆட்களிடமும் அதன் பாதிப்பு இருக்கவே செய்யும் தானே. அதை பல்ப் வகை த்ரில்லர்கள் ஒருபோதும் வெளிப்படுத்தாது. ரேப் - என்பது பல்ப் கதைகளில் ஒரு சம்பவம். அவ்வளவே. ஆனால், பல முக்கிய நோர்டிக் க்ரைம் கதைகள் அதன் பின்னால் இருக்கும் வலியை மிகத்துல்லியமாக பதிவு செய்கின்றன. 

After all, சமூகம் என்ன வேற்றுகிரக ஜந்துவா.... நான்/நீங்கள்/அவர்/இவர் எல்லாரும் சேர்ந்ததுதானே. எந்த நாடாக இருந்தாலும், அந்நாட்டின் முக்கிய படைப்புகளில் அச்சமூகத்தின் பிரதிபலிப்பை எந்த வடிவிலாவது நிச்சயம் காணமுடியும். ஸ்வீடனின் மைந்தன், இங்க்மார் பெர்க்மானையே எடுத்துக்கொள்வோமே. அவரது படங்களில் இருக்கும் bleakness எங்கிருந்து வந்தது ? அவர் வளர்ந்த/வாழ்ந்த சூழ்நிலை, சமூகத்தில் இருந்துதான். அதை அவர் தனக்குத் தெரிந்த மொழியில் வெளிப்படுத்தினார். அவ்வளவே (அர்னல்டூரின் Arctic Chill நாவலின் மையம் - இனவெறி, Henning Mankellன் - Faceless Killersன் மையம் எப்படி பொறுப்பற்ற மீடியாக்களால் இனவெறி தூண்டிவிடப்படுகிறது என்பதுதான்). 

போலீஸ் துறையில் இருக்கும் அதிகாரப்போக்கு, ஊழல், அரசின் அரசியல் நிலைப்பாடு என்று பல விஷயங்கள் தான் பல முக்கிய நோர்டிக் க்ரைம் கதைகளின் அடிச்சரடு.
2) சமூகக்காரணிகளைத் தாண்டி, டெக்னிகலாக யோசித்தால்........ நோர்டிக் நுவார் கதைகள் அனைத்தும்..... கொஞ்சகொஞ்சமாக நம்மை உள்ளிழுக்கக் கூடியது. வெறும் சீப் த்ரில்களாக காட்சி விவரிப்புகள் இருக்காது. மிகமிக மெதுவாகவே நம்மை உள்ளே கூட்டிச் சென்று ஒவ்வொரு கதவாக மூடி விடுவார்கள். கதாபாத்திரங்களின் suffocationனை நாமும் உணர்ந்து, திணற ஆரம்பித்துவிடுவோம். நமக்கே தெரியாமல் ஒரு oblivion zoneற்க்குள் சென்றிருப்போம். ஒவ்வொரு இடத்தையும், ஒவ்வொரு சம்பவங்களையும், ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மெல்ல மெல்ல நமக்கு இன்ஜெக்ட் செய்வார்கள். இங்குதான் கதைக்களம்/atmosphere பெரிதும் கைகொடுக்கின்றன. கதாபாத்திரங்கள் போல, அவர்கள் முன்வைக்கும் நிலப்பரப்பிற்கும் பிரத்தியேக குணங்கள் இருக்கும். முக்கியமாக பனி. 

3) Memories of murder. ஏன் நம்மில் பலருக்கும் பிடித்திருக்கக்கூடும் ? இத்தனைக்கும் அதில் கொலையாளில் யார் என்றே சொல்ல மாட்டார்கள். அப்பறமும் ஏன் அளப்பரிய தாக்கத்தை (குறைந்தபட்சம் எனக்கு) அந்தப்படம் ஏற்படுத்த வேண்டும் ?. சிம்பிள். அந்த போலீஸ்காரர்களுக்கு இருந்த obsession. கண்மூடித்தனமான obsession. ஆரம்பத்தில் அவர்கள் கரெப்ட்டான ஆசாமிகளாக இருந்தாலும், கொஞ்சகொஞ்சமாக கொலையாளியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வெறி மேலோங்க ஆரம்பித்துவிடும். ஒரு கொடிய நோயைப்போல அவர்களோடு சேர்ந்து நம்மையும் அந்நினைப்பு தொற்றிக்கொள்ளும். ஒவ்வொரு முறையும் அவர்களோடு சேர்ந்து நாமும் பரபரப்படைந்துவிடுவோம். இந்த obsessionனை நோர்டிக் நுவார் கதைகளின் முக்கிய போலீஸ்/டிடெக்டிவ் ஆட்களிடத்தில்( (அனைவருமே flawed ஆசாமிகள் தான்) அப்படியே உணரலாம்.

4) ஒரு போலீஸ்காரருக்கும் மற்றொரு போலீஸ்காரருக்கும் இருக்கும் உறவு, ஒரு போலீஸின் தனிபட்ட வாழ்க்கை, எவ்வாறு வேலை அவர்களது வாழ்கையை பாதிக்கிறது போன்ற உறவு சார்ந்த பதிவுகள் கதை நெடுகிலும் வரும்.  இது அடுத்தடுத்த புத்தகங்களிலும் வரும்போது, அக்கதாபாத்திரங்களை மனதுக்கு நெருக்கமானவர்களாக உணரத்துவங்குவோம். மேலும் gloominessக்கென்று ஒரு கெட்ட பழக்கம் உண்டு. டக்கென்று ஒருத்தரிடமிருந்து இன்னொருத்தருக்கு பரவிவிடும் (Arnaldur Indridasonன் Voices கதையில் இவ்வாறு ஒரு வசனம் வரும்..."Christmas is for happy people". அவரது உருவாக்கமான Detective Erlendurன் பெர்ஸனாலட்டியும் இதுவே). அதனால் நோர்டிக் கதைகளில் வரும் டிடெக்டிவ்கள் நமக்கு நெருக்கமாகத் தெரிவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

ரஸ்கால்நிகாஃப்

எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிட்டு பார்த்தால், இயல்பாகவே மனித மனம் flawed தான். தான்...தன் சுகம். அடுத்தவர் நமது நடவடிக்கைகளால் எவ்வாறு பாதிப்படைவார்கள் என்பது பற்றியெல்லாம் நமக்கென்ன கவலை, நமக்கு நடக்காது வரை எதுவும் குற்றம் இல்லை, நமக்கு சாதகமாக நடந்தால் அது குற்றமேயில்லை. ஆழ்மனதில் இந்த உண்மையை நாம் உணர்ந்திருக்கிறோம் என்றே தோன்றுகிறது. இந்த உணர்வுக்கு - எப்போதெல்லாம், எந்தெந்த வழியிலெல்லாம் வடிகால் கிடைக்கிறதோ அதை நாம் பயன்படுத்திக்கொள்ள தவறுவதேயில்லை. கூட்டமாகச் சென்று ஒருவரை அடிப்பது, Facebookல் வீரத்தைக் காட்டுவதில் தொடங்கி ஏராளமான உதாரணங்களைப் பார்க்கலாம். உலகின் தலைசிறந்த படைப்புகள் பலவற்றின் அடிச்சரடும் "குற்றம்" தான் (குற்றம் என்பது கொலை, கொள்ளை என்பது மட்டுமில்லையே). தொஸ்தோயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் மிகச்சரியான உதராணம். மனித மனதின் evilnessசை சரமாரியாக கேள்விக்குட்படுத்திய நாவல் அது. அவ்வளவு தூரம் போவானேன்......வண்ணநிலவனின் எஸ்தர் (அதிலிருக்கும் element of crime, வெறும் குற்றம் என்ற அளவில் வைத்துமட்டும் அதனை பார்க்க முடியாது தான்). நோர்டிக் நுவார் கதைகள் அந்தளவிற்கு எவ்வித தத்துவ விசாரணைக்கும் நம்மை உட்படுத்த முயலுவதில்லை என்றாலும், மனதளவில் நம்மை அதற்கு தயார் செய்வதில் வெற்றி கண்டுவிடுகின்றன. அச்சமயத்தில்  நமக்கு தேவையெல்லாம் a little push. அவ்வளவே.

நோர்டிக் நுவார் புத்தகங்கள் தாண்டி, அதன் சீரியல்களும் அதகளமானவை. இதோடு ஒப்பிட்டால் Ture Detective எல்லாம் குழந்தைகளுக்காகனதாகவே எனக்குப்படும். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் இருக்கும் depthness. சொல்லப்போனால், முக்கிய சீரியல்கள் அனைத்திலும் க்ரைம் இரண்டாம்பட்சம் தான். கதாபாத்திரங்களின் உளவியல் தான் பிரதானம். அதனால்தானோ என்னவோ எனக்கு பல சீரியல்கள் மிகவும் பிடித்துப்போனது. குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு அம்சம், எல்லா தொடரிலும் மெயின் டிடெக்டிவ் - பெண்கள் தான். பெண் அதிகாரிகளும் எவ்வாறு obsessiveவாக வேலை செய்வார்கள் என்பதை மிகத்துல்லியமாக இந்த தொடர்களின் வழியாக உணரலாம். காதலுக்காக பெண்கள், Flightல் ஏறிய பிறகு......மனம்மாறி ஓடிவருதாகவே இதுவரை பார்த்திருப்போம். ஆனால், The Killingல் உல்டா. வேலை மீதிருக்கும் obsession காரணமாக இது நடக்கும். 

பாதி கட்டுரையை எழுதிக்கொண்டிருந்த போதுதான் இந்தக் கட்டுரை கண்ணில்பட்டது. முன்னாடியே இதைப் பார்த்திருந்தால், இந்த கட்டுரையின் லிங்க்கை மட்டும் பதிவில் போட்டிருக்கலாம். அவ்வளவு நேர்த்தி. என்னென்ன புத்தகங்கள் படிக்கலாம் என்பது பற்றியெல்லாம் மிகத்தெளிவான பரிந்துரைகள் இக்கட்டுரையில் உள்ளன. என்னைக் கேட்டால், Jo Nesboவின் The Devil's Starல் ஆரம்பிக்கலாம்.

-------------------------------------------------------

இதுவரை நோர்டிக் சீரியல்கள் பார்த்திராவிட்டால், இந்த வரிசையில் தாராளமாக பார்க்கத் தொடங்கலாம். ஆங்கில ரீமேக்களை தவிர்த்துவிடவும். படு திராபைகள்.
  • Forbrydelsen (The Killing) - Season 1 (link)
  • Bron Broen (The Bridge) -  Season 1 (link)
  • Wallander - Series 1 (link)
இங்லாந்த் தொலைக்காட்சியிலும் நோர்டிக் சீரிஸ்களின் தாக்கத்தை பெரிதும் பார்க்கலாம். அதில் எனக்குப்பிடித்த சீரிஸ்கள்:
  • The Fall  - Season 1 (link) -  அட்டகாசமான சீரியல் இது. தவறவிட வேண்டாம்
  • The Fall  - Season 2  (link)
  • Broadchurch (link)
  • Top of the lake (link)