Monday, August 5, 2013

The Voice a.k.a Sinatra

Yes.....there were times, I'm sure you knew
When I bit off more than I could chew
But through it all......when there was doubt
I ate it up and spit it out
I faced it all and I stood tall and did it my way
 

இதுவரையிலான நமது வாழ்க்கையை திரும்பிப் பார்க்க 1) வயதாகியிருக்க வேண்டும் 2) மரணப் படுக்கையில் இருக்க வேண்டும், இவைகள் தவிர வேறு வழி இல்லையா ? (நானும் "நாளை ஒரு விபத்தின் காரணமாக நான் மரணப் படுக்கையில் இருக்க நேரிடுகிறது என்று வைத்துக் கொள்வோம்" என்றுதான் இப்பதிவை ஆரம்பித்தேன். பின்பு ஏன் இந்த ஹாலிவுட்தனமான போலி உணர்வுச்சுரண்டல் என்று விட்டுவிட்டேன்). என்னைக் கேட்டால் இப்பொழுது வேண்டுமானாலும் இந்த நினைப்பு வரலாம். தன்னுணர்தல் (Self realization ?) ஏதாவது ஒரு காலகட்டத்தில் ஒவ்வொருவருக்கும் தெரிந்தோ தெரியாமலோ வந்தேதீரும் என்று நம்புகிறேன். வாழ்க்கை தாறுமாறாக நம்முடன் பிங்-பாங் ஆடியிருந்தால், அதனை நோக்கி தானாகவே நமது பயணம் இருக்கும்(இருக்க வேண்டும்). இந்தத் தன்னுணர்தலின் ஒரு முக்கிய பகுதியாக எனக்குப்படுவது self acceptance. இதுவரை என்னென்ன செய்தோம் என்பதை தயவுதாட்சண்யமின்றி ஏற்றுக் கொள்ளும் பக்குவம்.சுயபரிசோதனையின் முதற்படி. இந்த self acceptanceக்கு பாஸிடிவ் - நெகடிவ் என்று இரண்டு பக்கங்கள் உண்டு தானே. அந்த பாஸிடிவ் பக்கத்திற்கான ஒரு சிறந்த tributeடாகத்தான் இந்தப் பாடல் எனக்கு எப்பொழுதுமே தோன்றும். பெரும்பாலும் பிரபலங்களின், மிகக் குறிப்பாக சினிமா ஆட்களின் அருமைபெருமைகளை மட்டுமே மாய்ந்து மாய்ந்து பேசும் நாம், நம்முடைய - நம்மைச் சுற்றி இருப்பவர்களின் பாசிடிவ் அம்சங்களை பற்றி என்ன மதிப்பீடு வைத்திருக்கிறோம் ? (என்னைக் கேட்டால் எல்லாரும் ஒருவகையில் பிரமுகர்கள் தான்). இந்தப் பாடத்தை என் அப்பாவிடம் இருந்து கற்றுக் கொண்டேன். செய்யும் வேலையை லயிப்புடனும் நேர்த்தியுடனும் செய்யும், "எளிய" மனிதர்களாக நாம் கருதும், எங்கள் வீட்டின் அருகே இருந்த பலரையும் சிலாகித்து அவர் பேசிய கணங்களில் இருந்து தெரிந்துகொண்ட பாடமது. தனக்கான வாழ்வை வாழத்தான் எல்லோருக்கும் ஆசை உண்டு. ஆனால் சூழ்நிலைகள், பொறுப்புகள் பலரை அவ்வாறு இருக்க விடுவதில்லை. ஏகப்பட்ட அசௌகரியங்களுக்கும் அனுசரிப்புகளுக்கும் விரும்பியோ விரும்பாமலோ தங்களை ஆட்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. யாராக இருந்தாலும் "என்ன செஞ்சுகிட்டு இருக்கோம் ?" என்ற கேள்வி ஒரு சமயத்தில் எழாமல் போகாது. ஆனால் பலருக்கும் இந்தக் கேள்வி அன்றிரவோடு முடிந்துவிடும். அதான் சிக்கல். ஒருவித தீவிரத்துடன் இக்கேள்வியை அணுகினால்......நம்மை நாமே பரிசோதனை செய்துகொள்ள அது உதவும் என்று நம்புகிறேன். மேற்கொண்டு இதனைப் பற்றியே ஜல்லி அடித்துக் கொண்டிருதேன் என்றால் "வாழ்வை வாழ்வது எப்படி ?" ரீதியிலான மேலாண்மை புத்தகத்தை படிக்கும் நினைப்பு வந்துவிடக்கூடும் என்பதால், நிறுத்திக் கொள்கிறேன். பேசிப்பேசி இவ்விஷயத்தின் வீரியத்தைக் குறைக்க விரும்பவில்லை. விஷயத்திற்கு வருவோம்.


பாடலில் வருவது போல, எனக்குத் தெரிந்தவரை நான் மிகப் பிடிவாதக்காரனாகவே இருந்திருக்கிறேன். என் அப்பா அடிக்கடி என்னைத் திட்ட உபயோகப்படுத்தும் வார்த்தைகள், Impractical ideologist & Utopian (கா-த-கு-பொ-கு). ரிலையன்ஸ் கம்பனியின் செயல்பாடுகள் பிடிக்காத காரணத்தால், என் துறை சார்ந்த பெரிய வேலை வந்தபோது அப்ளை செய்யக்கூட மாட்டேன் என்று சண்டை பிடித்தேன். என்ஜினியரிங் சேர தாராளமான மதிப்பெண்கள் இருந்தும், ஃப்சிகிஸ் தான் சேருவேன் என்று அடம்பிடித்து சேர்ந்தேன். என் பெற்றோர் சொல்லிப் பார்த்துவிட்டு என் இஷ்டத்திற்கே விட்டு விட்டனர். இன்னும் சில விஷயங்களை சொன்னால்....படிப்பவர்களுக்கு தலைசுத்தல் எல்லாம் நேர வாய்ப்புண்டு. சமீபத்தில் கூட வேலையில்லாமல் பல மாதங்கள் இருக்க நேரிட்ட போதும், பிடித்தமாதிரி வேலை வந்தாலொழிய சேர்வதில்லை என்று முரட்டுத்தனமான பிடிவாதத்துடன் இருந்து, பல அறிவுரைகளை கேட்க வேண்டிவந்தது தனிக் கதை. இதுபோன்ற பல பிடிவாதங்களை அனைவரும் கடந்துதான் வந்திருப்போம். ஆனால் அதற்கான பின்விளைவுகளை (பின்விளைவு என்பதே நாம் ஏற்றுக்கொள்வதைப் பொறுத்துதானே), குறிப்பாக என் அப்பாவின் மருத்துவ செலவினங்களின் போது நினைத்து கொஞ்சம் வருந்தியது உண்டு. ஆனால் அது கொஞ்சநேரத்திற்கு மட்டுமே. இதுவரையிலான என் வாழ்கையின் பல முக்கிய முடிவுகளை நானே எடுத்தேன் என்பதில் எனக்கொரு திருப்தி உண்டு. "தீதும் நன்றும் பிறர்தரா வாரா" என்பதில் எனக்கு அசைக்க முடியாது நம்பிக்கை உண்டு. இதுகுறித்து போனவாரம் கூட ராஜேஷும் நானும் பேசிக் கொண்டிருந்தோம் (எந்த விஷயத்திற்கு என்று நினைவில்லை. ராஜேஷ் முன்பெல்லாம் அவர் பதிவுகளில் இதுபோன்ற வாழ்வியல் சார்ந்த விஷயங்களை எழுதி வந்தார். இப்பொழுது வேறு கட்டத்தில் இருப்பதால், அதுபோன்ற பழக்கத்தை வழக்கொழித்துவிட்டார்/நேரமில்லை. சுயபரிசோதனை பற்றி அன்னாரிடம் பல விஷயங்கள் உண்டு). எவ்வளவு தீர்க்கமாக 2000 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டனர். நமக்கான வாழ்வை யாராலும் ஏற்படுத்தித் தரவோ/கெடுக்கவோ முடியாது. நம்மை மீறி நடக்கும் நிகழ்வுகளுக்கும் மனிதத் தவறுகளும் அவர்களுது விருப்பு வெறுப்புகளுமே காரணமாக இருக்குமேயன்றி, ஒரு வெளிப்புற சக்தி இதற்கெல்லாம் காரணமாக இருக்கவே முடியாது என்று உறுதியாக நம்பும் கட்சி நான்(ஒரு ஃப்சிகிஸ் மாணவனுக்கு இதில் நம்பிக்கை இல்லாவிட்டால் தான் ஆச்சர்யம்).பெரியோரை வியத்தலும் இலமே. சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. இந்தப் பத்தியும்,இதற்கு முந்தைய பத்தியும் கொஞ்சம் ரொமான்டசைஸ் செய்யப்பட்டதாக தோன்றாலும். ஆனால் கொஞ்சம் பொறுமையாக பாடலைக் கேட்டுப் பாருங்கள்.நான் சொல்ல நினைப்பது புரியும். இந்தப் பாடலை பல வருடங்களுக்கு முன் எப்போது கேட்டேனோ, அன்றிலிருந்து மனதிற்கு மிகநெருக்கமான ஒரு பாடலாக உள்ளது. மேலே வார்த்தைகளால் சொன்ன/சொல்ல முடியாத பல விஷயங்களை மிகத்தெளிவாக பூடகமின்றி இப்பாடலில் உணரலாம். இப்பொழுதுதான் இந்தப் பாடலை நீங்கள் முதன்முதலில் கேட்பதாக இருந்தால், நிச்சயம் மில்லிமீட்டர் அளவிற்காவது உங்களை அசைத்துப் பார்க்கும்.பல்வேறு பொறுப்புகள்,நிர்பந்தங்கள்,சூழ்நிலைகளில் உழன்று கொண்டிருக்கும் பலரும் தாங்களே கவனிக்க மறந்த தங்களது இன்னொரு பக்கத்தை இப்பாடல் நினைவுக்கு கொண்டுவரலாம்.


சினட்ராவின் வாழ்க்கையே ஒரு ரோலர் கோஸ்டர் பயணத்திற்கு ஒப்பானது. பள்ளி காலம் முதல் (ஜெயிலுக்கு போனதெல்லாம் உண்டு) பிந்தைய வாழ்க்கைவரை ஏகப்பட்ட பிரச்சனைகள், மனஅழுத்தங்களுடன் அல்லாடியவர். திருமண வாழ்க்கையும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை(Ava Gardnerரை இவர் சந்தித்தது ஒரு சுவாரஸ்யமான சிறுகதைக்கு ஒப்பானது). புரிந்துகொள்ள இயலாத உணர்ச்சிகள் நிரம்பிய மனிதராகவே நண்பர்களும் உறவினர்களும் அவரைக் குறிப்பிடுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு obsessive compulsiveவான ஒரு ஆள். பல பெண்களுடன், சிக்கலான உறவுநிலையில் இருந்தாலும் (I'm supposed to have a Ph.D. on the subject of women. But the truth is I've flunked more often than not. I'm very fond of women; I admire them. But, like all men, I don't understand them) "Fly me to the moon" போன்ற அற்புதமான காதல் பாடல்களை உணர்ச்சித் ததும்ப பாடியுள்ளார். இன்னொரு குறிப்பிடத்தக்க  விஷயம், மிகசொற்ப பாடல்களையே அவர் எழுதி பாடியுள்ளார்/சேர்ந்து எழுதியுள்ளார். பெரும்பாலான சமயங்களில் அவர் பாடகர் என்ற அளவிலயே நின்று விட்டார். ஆனாலும் தனது அடர்ந்த கனமான குரலில் அவர் பாடும்பொழுது, என்னமோ அவரே அனைத்து பாடல்களையும் எழுதியது போன்றதொரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்கவே இயலாது.

ஃப்ரான்க் சினட்ரா - எனது விருப்பத்திற்குரிய ஜாஸ்/ஸ்விங் குரல்களில் ஒன்று. பாடும் போது மிகமிக சர்வசாதாரணமாகப் பாடுவது போலத் தோன்றும். ஆனால் பாடலில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள்........வாய்பேயில்லை. My way பாடலையே எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாவது பாராவில் "Flash flood" மாதிரி ஹைபிட்சில் பாடிகொண்டே சட்டென்று கீழிறங்கும். பாடும் முறையின் மீதி  இதுபோன்றதொரு அளப்பரிய ஆதிக்கம் அவருக்கு இருந்தது. அந்தக்குரலை இறுதிவரை தன் கட்டுக்குள் வைத்திருந்தார். பாடும் முறையைப் பொறுத்தவரையில் ஆரம்ப காலங்களில் இதற்கென அவர் பிரத்தியேக பயிற்சி எதுவும் எடுக்காவிடினும், தாளம் - பிட்சிங் போன்றவற்றில் அளப்பரிய உள்ளுணர்வு அவருக்கு இருந்ததாக உடன் பணியாற்றியவர்கள் கூறுகின்றனர். Mic effects எனப்படும் மைக்கின் உதவியுடன் குரலில் ஜாலங்கள் காட்டுவதில் அவர் வித்தகர். இந்த ஜாலத்தை அவர் ஒன்றிரண்டு ஆண்டுகள் அல்ல, தொடர்ந்து அறுபது ஆண்டுகளாகச் செய்து வந்தார் என்று நினைக்கும் பொழுது பிரமிப்பே ஏற்படுகிறது.


சினட்ராவிற்கு நடிகர் என்றொரு முகமும் உண்டு. The Manchurian Canditate (டென்சல் வாஷிங்டன் நடிப்பில் இதனை ரீமேக்கினார்கள்), From here to eternity போன்ற பல புகழ்பெற்ற படங்களில் நடித்துள்ளார். இதைவிட முக்கியாமான மற்றொரு விஷயம் "Rat Packs" என்ற குழுவில் இவர் + Dean Martin + Sammy Davis Jr சேர்ந்து அடித்த கூத்துகள். எல்லாரையும் சகட்டு மேனிக்கு கலாய்ப்பதுதான் இவர்களது வேலை. கென்னடியும் (இவரின் நெருங்கிய நண்பர்) அவ்வப்போது இந்நிகழ்ச்சியில் பங்குபெறுவது உண்டு. Reservoir dogs முதல் Oceans 11 வரை இவர்களது தாக்கம் உண்டு.


இப்படியான சினட்ராவிற்கு இன்னொரு இருண்ட பக்கமும் உண்டு. அது மாஃபியாயுடனான தொடர்பு. J.Edgar, என்று சில வருடங்கள் முன்பு ஈஸ்ட்வுட் இயக்கத்தில் டி காப்ரியோ நடிப்பில் ஒரு படம் வெளிவந்ததே ஞாபகம் உள்ளதா....அமெரிக்க FBIயின் முதல் இயக்குனர்...அந்த எட்கர், சினட்ராவிற்கும் மாஃபியாவிற்குமான தொடர்பு குறித்து மிகவிரிவாக அரசுக்கு அறிக்கைகள் அனுப்பியுள்ளார் (இங்கே). காட்ஃபாதர் படம்......அனைவரும் பார்த்திருப்போம். அதில் ஜானி ஃபான்டைன் என்றொரு பாடகர் கதாபாத்திரம் வருமே...இந்தக் காட்சி ஞாபகம் உள்ளதா .....அந்தக் கதாபாத்திரத்தின் அசல் - சினட்ராதான் என்று சொல்கிறார்கள். அப்படித்தான் அதலபாதாளத்தில் தனது மார்கெட் இருந்த பொழுது, From here to eternity படத்தின் வாய்ப்பைப் பெற்றதாக சொல்கின்றனர் (க்ளிக்கி படிக்கலாம்). என்னதான் முரண்பாடுகளின் மூட்டையாக சினட்ரா திகழ்ந்தாலும் அவரைப் பற்றி அவரே சொன்னதுதான் அவரின் மொத்த வாழ்கையின் பிரதிபலிப்பாக உள்ளது.

Whatever else has been said about me personally is unimportant. When I sing, I believe...I'm honest

"My way" பாடலுக்கு பல சுவாரசியமான பின்னணித் தகவல்கள் உண்டு. பால் ஆங்கா என்பவர், ஃப்ரான்சில் தான் கேட்ட கணவன் - மனைவிக்கு இடையான உறவைப் பற்றி விவரிக்கும் பாடலை மாற்றி எழுதியதுதான் "My Way". ஆரம்பத்தில் இந்தப் பாடலின் மீதி சினட்ராவிற்கு பெரியளவில் பிடிப்பொன்றும் இல்லை. பாப் தன்மை உள்ள பாடல் என்றே குறைபட்டுக் கொண்டார். இன்றளவும் உலகில் அதிகமாக Cover Versionக்கு உட்படுத்தப்பட்ட பாடல்களில் இதுவும் ஒன்று. எல்விஸ் முதற்கொண்டு நினா சிமோன் வரை நூற்றுக்கணக்கான பேர் இதனை மீள்உருவாக்கம் செய்துள்ளனர். இதில் எனக்குப் பிடித்த ஐந்து கவர் வெர்ஷன்கள் - Elvis, Aretha Franklin, Nina Simone, Sid Vicious.....ஐந்தாவது ?? :) சஸ்பென்ஸ்.

Frank Sinatra for dummies: (Right click & download):

சினட்ராவை கேட்டிராதவர்கள், இரவு நேரத்தில் கேட்டுப் பாருங்கள். நிச்சயம் மறக்க இயலாத ஒரு அனுபவமாக இருக்கும் (320kbpsசா தேடிபுடிச்சு லிங்க் குடுத்திருக்கேனாக்கும்)













Facebookers..

17 comments :

  1. முருகேசாAugust 6, 2013 at 2:43 AM

    வழக்கத்துக்கு மாறான வேற வகையான சுய சொறிதல் கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கே.

    ReplyDelete
  2. கொழந்தAugust 6, 2013 at 2:48 AM

    அந்த பாய்ன்ட்க்கு தான இந்த பாட்டு புடிச்சதுனு மாங்கு மாங்குனு எழுதியிருக்கேன்......

    ReplyDelete
  3. கும்ரன்August 6, 2013 at 2:53 AM

    இன்னொரு அட்டகாசமான கலைஞனை அறிமுகப் படுத்தியிருக்கீங்க, செம. எல்லாப் பாட்டையும் இனி கேக்க வேண்டியதுதான்.

    உட்டோப்பியன்குற வார்த்தையை முத முதல்ல மார்க்ஸ் எழுத்துலதான் நான் தெரிஞ்சுகிட்டேன், நெப்போலியன் பத்தின புத்தகத்துலயா, அறிக்கைலயான்னு ஞாபகம் இல்ல. இந்தப் படத்தையும் பாத்துர வேண்டியதுதான்.

    ReplyDelete
  4. கணேஷ் குமார்....August 6, 2013 at 3:15 AM

    சினட்ராவை கேட்டிராதவர்கள், இரவு நேரத்தில் கேட்டுப் பாருங்கள். கண்டிப்பா இன்னைக்கு நைட் போஸ் ஸ்பீக்கர்ல கேட்பேன் கொயந்த...இசைய ராசா

    ReplyDelete
  5. எல்லாப் பாடலையும் டவுன்லோட் செய்துட்டேன். அறிமுகப் படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  6. Very Good article. I like the first 2 paragraphs about practical dealing of life. Will listen to his song soon and Thanks for introducing him.

    ReplyDelete
  7. ரொம்ப நல்லா இருந்துச்சு Fly me to the moon and My way .கம்பீரமான குரல் . My way song கண்ணை மூடி கொண்டு கேட்ட நமக்காகவே பாடுன மாறி இருந்துச்சு .Beautiful .
    Its nice to know you are living your life as you like :-)

    You noted down even minute information about him. Good work and All the best for your writing . Thx for your links . பெரிய paragraph எழுதும் போது ஒரு para நடுவுல சின்ன சின்ன பிரேக் /pause இருந்தா படிக்கும் போது கொஞ்சம் சுலபமா இருக்கும் :-).

    ReplyDelete
  8. என் மிகப்பெரிய பொழுதுபோக்கு - புத்தகம். பாடல் அவ்வளவாக கேட்பதில்லை. ஆங்கிலப்பாடல்கள் ஆராய்ச்சி சுத்தமாக கிடையாது. உங்கள் பதிவில் வரும் பாடல்கள் எல்லாம் நான் கேள்விப்பட்டதேயில்லை. வீட்டிற்குப்போய் கேட்கவேண்டுமென்று நினைப்பேன். ஆனால் குழந்தைகளுடன் (இது வேறு இருவர் - சூர்யா மற்றும் வர்ஷா) நேரம் போய்விடும். ஆனால் உங்கள் பதிவுகளை, உங்கள் அனுபவங்களுடன் படிக்கும்போது கேட்காமல் miss செய்கிறேனோ என்று தோன்றுகிறது.

    உண்மையில் சொன்னால், நீங்கள் குறிப்பிடும் பாடல்கள் கேட்பேனா என்று சந்தேகமே. ஆனால் உங்கள் வாழ்வியல் பதிவுகளை ஆர்வமுடன் படிக்கிறேன்.

    ReplyDelete
  9. the 5th guy ... is it Landau Eugene Murphy, Jr?!

    ReplyDelete
  10. யோவ்..ஹரி...மெயில் ஐடில மாட்டிகினே பாரு...

    யார் அது Landau Eugene Murphy ???? நா சொல்ல வர்ற ஆள் வேற..சஸ்பென்ஸ்

    ReplyDelete
  11. எனக்கு புத்தங்கங்கள் முதற்கொண்டு எல்லாத்திலும் கொஞ்சம் ஆர்வம் உண்டு. அம்புட்டுதான். எப்பவாவது நீங்க வழக்கமா கேக்குற பாடல்கள் போர் அடிச்சா இவைகள ட்ரை பண்ணு பாருங்க..நிச்சயம் பிடிக்கும்

    ReplyDelete
  12. பெரிய பாரா - சின்ன பாரா.......நன்றிங்க..புதுசா போட்ட பதிவுல இத கவனிச்சு மாத்திட்டேன். உங்க கமெண்ட்ஸ்க்கு பெரிய தாங்க்ஸ்.

    என் இஷ்டத்துக்கு வாழத்தான் விருப்பம் (யாருக்குத்தான் இந்த ஆச இல்ல)......பாப்போம்...நொச்சு புடிச்ச ஒலகம்ல இது....

    ReplyDelete
  13. பாட்ட கேட்டீங்களா ???? அதான முக்கியம்.

    ReplyDelete
  14. கேட்டேனா இல்லியானு சொல்லவே இல்லியேப்பா.......

    ReplyDelete
  15. செம படங்க அது...தவறாம பாருங்க...மார்க்ஸ் - உட்டோபியா, எனக்கு தெரியாது...இந்தத் தகவலுக்கு ரொம்ப நன்றி

    ReplyDelete
  16. Great post kolandha!! I've heard Frank Sinatra's few numbers, but this post has made me to hear his music more..I am heard MY WAY song just now..Not to mention this song is for surely looking up on you in a self-retrospective way..Again great post!!

    ReplyDelete
  17. A.K.A Sinatra பாட்டு கேட்கும் போது இந்த லிங்க் ஞாபகம் வந்துச்சு. உங்களுக்கு நேரம் இருந்த இந்த songs கேட்டுட்டு பிடிச்சா review போடுங்க . Everly brothers ஓட நியூ வெர்சன் தான். But Excellent.

    http://www2.norahjones.com/news/billie-joe-armstrong-and-norah-jones

    ReplyDelete