Thursday, March 21, 2013

Seven Psychopaths

Tommy, the moment I first saw Angela's eyes, I knew it. I knew it was love, I knew I was fucked. And lo and behold, I was. So, Tommy, the moment after you kill her.....please, shoot her fucking eyeballs out.
The Story of the quaker:
க்வேக்கர்ஸ் (ஒருவித சமயக் குழு) அமைப்பை சேர்ந்த ஒரு க்வேக்கரின் பெண் குழந்தை காணாமல் போகிறது. சிலநாட்கள்கழித்து பயங்கரமான காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக அக்குழந்தையை மீட்டேடுக்கின்றனர். கொன்றவன் தாங்கமுடியாத குற்றவுணர்ச்சி காரணமாக சரியாக ஒரு வருடம் கழித்து போலீசில் சரணடைகிறான். தன்னை தூக்கில் போடுமாறு கெஞ்சிக் கேட்டும், கோர்ட் அவனுக்கு ஆயுள் தண்டனை மட்டும் விதிக்கிறது.

பதினேழு வருடங்கள் கழிகிறது. மதம் அவனை ஆட்கொள்கிறது. திருந்திய ஆன்மாவாகிறான். ஆனால் அவன் ஜெயிலுக்குள்கூட எங்கு சென்றாலும் - வெளியே உடற்பயிற்சி செய்வது மாதிரியான வேலைகளின்போது, வாசலுக்கு வெளியே அந்த க்வேக்கர் நின்றுகொண்டு அவனையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருபப்தைக் உணருகிறான். நடத்தை காரணமாக தண்டனைக் காலம் முடிவடைகிறது. ஊழியம் செய்து குறைகாலத்தை ஒப்பெற்றலாம் என்ற முடிவு செய்கிறான்.ஆனால்.......அந்த க்வேக்கர் விடாமல் பகல் - இரவு என்று பாராமால் அவனது வீட்டிற்கு வெளியே நின்று அவனைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார். உடல்ரீதியாக அவனுக்கு எந்தவித அச்சுறுத்தலயும் அவர் கொடுக்கவில்லை.ஆனால் மனரீதியாக அவனை சாகடிக்க ஆரம்பிக்கிறார். பைத்தியம் பிடிக்கும் முனைக்கு அவனைத் தள்ளுகிறார். அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவரின் நினைப்பு ஒரு கொடுங்கனவு போல அவனை போகும் இடமெல்லாம் துரத்த ஆரம்பிக்கிறது. ஒன்றல்ல இரண்டல்ல........பதினோரு வருடங்களுக்கு இந்த சித்திரவதையை அவன் அனுபவிக்கிறான். ஓரிரவில், தற்கொலை செய்து கொண்டவர்களுக்கு மட்டுமே நரகத்தில் இடம் என்பதை க்ரிஸ்தவ நூலில் இருந்து தெரிந்துகொள்கிறான். தனக்கு இந்த தண்டனைதான் சரியானது....மேலும் நரகத்திற்கு போனால் இந்த க்வேக்கர் அங்குவரமாட்டான் அல்லவா என்பதாக........கத்தியால் ஜன்னலின் முன்னமர்ந்து அந்தக் குவேக்கரின் கண்முன்னே கழுத்தை அறுத்துக் கொள்கிறான். உயர் பிரியப் போகும் அந்த கடைசி வினாடிகளில் அவன் பார்த்தது............குவேக்கர் தனது கழுத்தை அறுத்துக் கொண்டிருப்பதைத்தான்



காட்ஃபாதரில் வரும் மோ க்ரீன் போலல்லாமல் நிஜ வாழ்கையில் யாராவது நேரடியாக கண்ணில் சுடப்பட்டு இறந்திருக்கிரார்களா.............என்று வெகுசுவாரசியமாக இருவர் பேசிக் கொண்டிருப்பதுடன் படம் ஆரம்பிக்கிறது (பின்னணியில் வரும் பாடலைக் கவனிக்கவும்). எந்தளவுக்கு சுவாரசியமாக என்றால்........சரியாக மூன்றாவது நிமிடத்தில் - இருவரின் மூளையும் "பொழக்" என்று கேமராவில் தெறிக்கும் அளவிற்கு - பின்னாடி ஒரு ஆள் வந்து துப்பாக்கியை எடுப்பதைக் கூட கவனிக்கதா அளவிற்கான சுவாரசியம். இந்த இடத்தில் தான் சைக்கோ - 1 என்ட்ரி கொடுக்கிறார்.

Marty (படத்தின் இயக்குனர் Martin McDonagh) ஒரு கதாசிரியன். ஒரு படத்திற்கான வேலையை தொடங்க வேண்டிய நிலையில், கற்பனை வறட்சியால் பரிதவித்துக் கொண்டிருக்கிறான். குடிப்பழக்கம் வேறு நாளுக்குநாள் அதிகமாக......குடிகாரன் என்ற பெயர் வேறு கிடைக்கத் தொடங்குகிறது. ஒருவழியாக தனது திரைக்கதைக்கான தலைப்பை தேர்ந்தெடுக்கிறான்: Seven Psychopaths. மார்ட்டியின் நண்பன், பில்லி பிக்கில். தனது நட்பை நிரூபித்தே ஆகவேண்டும் என்று எல்லா சமயங்களிலும் கங்கணம் கட்டிக் கொண்டலைபவன். இந்த பில்லி பிக்கிலின் இன்னொரு நண்பன், ஹன்ஸ் கீஸ்லாவ்ஸ்கி. இருவரின் தொழில்: நாய்க் கடத்தல். நல்ல வசதியான நாய்களாகப் பார்த்து - கடத்தி - கண்டுபிடித்தது போல திரும்ப கூட்டிக் கொண்டு போய் பரிசுத் தொகையை வாங்குவதுதான் இவர்கள் வேலை.

மார்ட்டி, தனது திரைக்கதையான Seven Psychopaths பற்றி பில்லியிடம் ஒருநாள் பேசிக் கொண்டிருக்கிறான். புத்தமத சைக்கோ தான் படத்தின் பிரதானம், வழமையான ஹாலிவுட் ஜல்லியடிப்புகளற்ற, எந்நேரமும் கைகளில் துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு சுத்தும் ஆட்களற்ற (சுருள்: In Bruges படக்கதை) திரைக்கதையை எழுதுவதே தனது விருப்பம். படம், பிற்பகுதியில் மெர்குரியைப் போல வெகுஇயல்பாக அன்பு & அமைதியை நோக்கிச் செல்ல வேண்டும் என்றவாறேல்லாம் பேசிக் கொண்டிருக்கிறான். திடீரென பில்லி, "Jack of diamonds" என்ற சீரியல் சைக்கோ கொலைகாரன் பற்றி பேப்பரில் வந்த செய்தியை மார்ட்டியிடம் காண்பிக்கிறான். இந்த சைக்கோவிற்கென்று ஒரு கொள்கை உள்ளது: மற்ற சீரியல் கில்லர்களை மட்டுமே இந்த சீரியல் கில்லர் கொல்வான் என்று பில்லி கூறுகிறான். இந்த கில்லரின் கொள்கைப் பிடிப்பினால் கவரப்பட்டு, மார்ட்டி இவனையே தனது தனது திரைக்கதையின் முதல் சைக்கோவாக முடிவு செய்கிறான். இதற்கிடையில், Dognapperசான பில்லியும் ஹன்ஸும் Costello என்பவனது ஷி ஷூ (Shih Tzu, படம் முழுக்க ஷிட் ஷூ என்றே சொல்வார்கள்) வகை நாயான bonnyயை கடத்திவிடுகின்றனர். இந்த காஸ்டெல்லோ ஒரு/பல மார்க்கமான பேர்வழி. சுருக்காமாக, மார்ட்டியின் திரைக்கதையில் - சைக்கோ: 3.

இதுவொரு பக்கம் நடந்து கொண்டிருக்க, நண்பனுக்காக ஏதாவது செய்தேயாக வேண்டும் என்று வெறிகொண்டு அலைந்து கொண்டிருக்கும் பில்லி புத்திசாலித்தனமாக (?) ஒரு காரியம் செய்கிறான். அது..............



அடுத்தநாள் கையில் முயல் குட்டியுடன், ஒரு சைக்கோ கொலைகாரன் பிக்கிலின் வீட்டிற்கே வந்தாகியாயிற்று. அவனது கதையைக் கேட்ட, மார்ட்டி அவனையும் அவனது மனைவியையும் முறையே சைக்கோ: 4 & 5 என்று தனது திரைக்கதையில் பாத்திரங்களாக்க தீர்மானிக்கிறான். இந்த சைக்கோ, வீட்டில் இருந்து கிளம்பும் முன் மார்ட்டியிடம் இருந்து ஒரு உறுதிமொழியை வாங்கிக் கொள்கிறான். அஃதாவது: படத்தின் முடிவில், தனது தொலைப்பேசி நம்பரை திரையில் ஓடவிட வேண்டும். அதைப் பார்த்து, பிரிந்து போன தனது மனைவி (சைக்கோ: 5) தன்னை தொடர்புகொள்ளக்கூடும் என்பதுதான் அது. இதற்கிடையில், காஸ்டெல்லோ ஹன்ஸ் & பிக்கிலின் நாய் திருட்டு வேலையை அறிந்து ஹன்ஸின் மனைவியைப் பார்க்க கான்சர் வார்டுக்குச் செல்கிறான். __________________________________________________________________________________________________________________________________________________________________கோடிட்ட இடங்களில், ஹன்ஸின் மனைவியின் கதி என்னானது, மீதி இரண்டு சைக்கோகள் யார், படத்தைப் பாருங்கள்..... இதுமாதிரியான படவிமர்சனங்களின்(?) இறுதியில் வாசிப்பவர்களைப் பார்த்து எழுப்பப்படும் கேள்விகளைப் போட்டு - இதற்குமேல் எதைச் சொன்னாலும் சுவாரசியம் போய்விடும் ஆபத்து இருப்பதால், இத்துடன் முடித்துக் கொள்கிறேன் - என்பதையும் சேர்த்து நிரப்பிக் கொள்ளுங்கள்

ஏன் கதாபாத்திரங்கள், நாயின் பெயர் முதற்கொண்டு நான் பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன் என்றால்..........மீண்டும் அந்தப் பெயர்களை பாருங்கள் - costello, bonny, bickle, Kieslowski, Marty, Jack the diamonds இந்தப் பெயர்கள் எல்லாம் பார்க்கும் போது ஏதேனும் பொறிதட்டுகிறதா ? வெல்.......by default, நான் ஒரு பிரபல பதிவர் என்பதால் படம் பார்க்கும் போதே பெயர்களின் பின்னணி புரிந்துவிட்டது. சிரமப்பட்டு விக்கி லிங்க்களை க்ளிக் செய்து கொண்டிருக்கவில்லை. In Bruges என்ற படத்தை நம்மில் பலபேர் பார்த்திருப்போம். மிகஅட்டகாசமான characterization உள்ள திரைப்படம் (காலின் ஃபெரலின் ஐயர்லாந்த் உச்சரிப்பு அட்டகாசமாக இருக்குமல்லவா). மிகஇயல்பான ப்லாக் காமெடி வசனங்கள் அந்தப் படத்தில் நிறைந்திருக்கும். அந்தப் படத்தின் இயக்குனரான Martin McDonaghயின் அடுத்த படம் தான் இது. இதுவும் அதேபோன்ற, ப்லாக் காமெடி வகைப் படம் தான். ஆனால் திரைக்கதை முற்றிலும் வேறானது. இது எவ்வாறு post modern படமாக உள்ளது என்றால்............

1) போஸ்ட் மாடர்ன் படங்கள் என்றால் வெறும் டேவிட் லின்ச் வகைப் படங்கள் மட்டும் தான் என்ற பொதுக்கருத்து இங்கே உண்டு. டாரண்டினோ முதற்கொண்டு ஹெர்சாக் வரை வெவ்வேறு விதமாக போஸ்ட் மாடனிசம் படங்களில் வெளிப்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த வரிசையில் இந்தப் படத்தையும் சேர்த்துக் கொள்ளலாம்.

2) கோலாஜ்(Collage) ஞாபகம் இருக்கிறதா.....................பள்ளி, கல்லூரிகளில் எல்லாமே முயற்சித்திருப்போமே................. அதுபோன்ற கூறுகளை போஸ்ட் மாடனிசத்தில் பார்க்கலாம். வெவ்வேறு வகையான விஷயங்களை ஒன்றாக்கி ஒருவடிவத்திற்குள் அடைக்க முயலும் முயற்சி. அதைப்போலவே இந்தப் படத்தில் (ஏன் எல்லா டாரண்டினோ படங்களிலும் தான்) பின்னணி இசையாக - முற்றிலும் அந்நியமான சூழ்நிலையில் - பாப் பாடல்களை ஒலிக்க விடுவதாகட்டும்; இதுவே ஒரு திரைப்படம் - அந்தத் திரைப்படத்திற்குள் பிற திரைப்படங்களை, குறிப்பாக கதாபாத்திரங்களை நுழைப்பது (Reservoir Dogs - Madonna) என்று.......ஒரு பாப் ஆர்ட் போலவே இதுபோன்ற படங்கள் இருக்கும். நமக்கு பரிச்சயமான பல சீரியல் கில்லர்கள் - Zodiac போல - படத்தில் வந்து போகிறார்கள். தகிஷி கிடானோவின் Violent Cop படத்தைப் பார்த்துக் கொண்டே பில்லியும் மார்ட்டியும் பேசிக் கொண்டிருக்கும் ரகளையான காட்சி ஒன்று உண்டு



3) (Self)Parody & Black Comedy - டாரண்டினோ பல படங்களில் வந்து வெடித்துச் சிதறுவதோ, குத்துப்பட்டு சாவதோ இதில் சேர்த்தி. ஏனென்றால், இதுபோன்ற காட்சிகள் - இயக்குனர், முக்கியமானவர், கேப்டன் ஆஃப் த ஷிப், மிகமுக்கியாமான வேடத்தில் பேரரசு, ரவிகுமார் மாதிரி - வரப்போகிறார் என்று நமது நினைப்பை de-construct (இந்த வார்த்தையை உபயோகப்படுத்தாட்டி பின்நவீனத்துவ பதிவு இல்லை என்றாகி விடும்) - என்ற நமது நினைப்பை சிதறடிக்கிறது அல்லவா. இந்தப் படம் முழுக்க ஏராளமான ப்லாக் காமெடி விரவிக்கிடக்கிறது. அதுபோக இயக்குனர், தனது படங்கள், ஹாலிவுட் என்று ஆரம்பித்து ப்ரிட்டைன், யுஎஸ்ஏ என்று எல்லா நாடுகளையும் நக்கல் விடுகிறார்.

4) Irony - இயக்குனர் காந்தியின் ரசிகர் போல. In Brugesயிலும் காந்தி பற்றி வசனங்கள் வரும். இதில் அதையும் சேர்த்து, ஒரு சைக்கோவின்(Zodiac) வீட்டில் காந்தியின் புகைப்படமிருக்கும்.நான் வெகுவாக ரசித்த காட்சி அது. அதைபோலவே லூதர் கிங் போன்ற ஆட்களைப் பற்றிய வசனங்கள். எங்கே இது நகைமுரணாக மாறுகிறது என்றால், இவர்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் காட்சியிலோ அதற்கடுத்த காட்சியிலோ வன்முறை வெடிக்கும். அதுவும் இருவரையும் சிலாகித்து கூறும் ஆளே வன்முறையில் இறங்குவார். அதேபோன்ற ஏன் கீஸ்லாவ்ஸ்கி என்ற பெயரை வைக்க வேண்டும் ? கீஸ்லாவ்ஸ்கியின் படங்களைப் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். குறைந்தபட்சம், A short film about killing படத்தை பார்த்திருந்தால் சுளுவாக இதன் பின்னணி புரிந்துவிடும்.

இந்தப் படத்தில் வன்முறையை சிலாகிக்கவில்லை. மாறாக மேல சொல்லியிருந்த "படம், பிற்பகுதியில் மெர்குரியைப் போல வெகுஇயல்பாக அன்பு & அமைதியை நோக்கிச் செல்ல வேண்டும் " என்ற விஷயத்தை முன்னிறுத்துகிறது. அதை கடைசி கட்டங்களில் வரும் வசனங்களிளும் நிகழ்ச்சிகளிலும் கொஞ்சம் கவனித்தோமானால் புரிந்துவிடும்.



5) இதுதான் மிகமுக்கியமானது. தனியாக இதுவொரு படமா.........அல்லது மார்ட்டியின் திரைக்கதையை படமாக பார்க்கிறோமா......அல்லது அந்தத் திரைக்கதை எவ்வாறு தயாரானது என்பது பற்றிய படமா...என்று மோபியஸ் வளைவு போல எங்கு நுழைந்து எங்கே வெளியேறுகிறது என்றே தெரியாது. இந்தக் கோணத்தில் இன்னும் கொஞ்சம் ஆழமாக இறங்கியிருக்கலாம். சற்று மேலோட்டமாக முடிந்துவிட்டதைப் போன்றதொரு உணர்வு.

இயக்குனரிடம் ஆரம்ப காட்சியில் அந்த அடியாட்கள் பேசிக் கொள்ளும் காட்சியில் ஆரம்பித்து பல இடங்களில் டாராண்டினோவின் தாக்கம் வெகுவாகத் தெரிகிறது. ஆனால் டாராண்டினோவின் கதாபாத்திரங்கள் சிலசமயங்களில் comicalலாக ஏதையாவது செய்து எரிச்சலூட்டுவார்கள். ப்லாக் காமெடியின் மற்றொரு முக்கியமான ஆட்களான - கோயன் ப்ரதர்ஸ் படங்களின் கதாபாத்திரங்களும் அப்படியே. சில வேளைகளில் சிவாஜியைப் போன்ற ஓவர் ஆக்ட் செய்வார்கள். ஆனால் இந்தப் படத்தில் அதுபோன்ற விஷயங்கள் இல்லாமல், subtlety படம் முழுவதும் தொடர்கிறார்கள். குறிப்பாக, க்றிஸ்டோஃபர் வால்கனின் பூடகமான நடிப்பு எனக்குப் பிடித்திருந்தது. சாம் ராக்வெலை Confessions of a Dangerous Mindயில் இருந்தே பிடிக்கும். நல்லவேளையாக காலின் ஃபெரல் அடக்கி வாசித்திருக்கிறார். வழக்கமான மொன்னைத்தனம் இல்லாதது பெரிய ஆறுதல். கடைசியாக இந்தப் படம், ஒரு மிகச் சிறந்த படமா.......என்றால், ஏதோவொன்று குறைவதைப் போன்ற உணர்வு எழுவதை தவிர்க்க இயலவில்லை. ஆனாலும் எங்குமே தொய்வில்லாமல்.....ஜாலியாக ரசிக்கலாம். படத்தில் ஆறு சைக்கோகளை மட்டுமே காமிப்பார்கள். அந்த ஏழாவது சைக்கோ ? நம்மைத்தான் சொல்கிறாரோ...... romanticize செய்யப்பட்ட ஹாலிவுட் அபத்த வன்முறைப் படங்களை ரசிக்கிறீர்களே...என்றே நம்மை நக்கல் விடுகிறாரோ என்னவோ.
Facebookers..

4 comments :

  1. costello, bonny, bickle, Kieslowski, Marty, Jack the diamonds - கூகிள் மற்றும் விக்கி'க்கு பிறகும் எனக்கு இவர்களின் link புரியவில்லை... அப்போ நான் பிரபல பதிவர் இல்லையா? ;-)

    btw, மதன்'இன் "மனிதனுக்குள் மிருகம்" படித்திருக்கிறீர்களா boss? it's about about serial killars...

    ReplyDelete
  2. கொழந்தApril 6, 2013 at 2:55 AM

    நீங்க தான் பிரபல Facebooker ஆச்சே....அட்டகாசமா பல சமயங்களில் ஸ்டேடஸ் போடுறீங்களே.

    Costello - The Departedல வரும் பிரதான கேங்க்ஸ்டர் பேரு. மீதி இருக்கும் மற்ற பெயர்களும் அதே போல.படத்துக்குல்லையே மற்றொரு படத்தை அதுவும் குறிப்பா கதாபாத்திரங்கள் refer செய்யப்படுகிறது. விதிவிலக்கு - Kieslowski. அவர் படங்கள் வன்முறைக்கு எதிரானது. அதுனால அந்த ஒரு கதாபாத்திரத்திற்கு மட்டும் அந்தப் பேர். அந்த கதாபாத்திரம், வன்முறையை நம்பாத ஆள்.

    மனிதனுக்குள் மிருகம் - முன்னாடி ஜூவில வந்தப்ப கொஞ்சம் படிச்சிருக்கேன். போரிங்....

    ReplyDelete
  3. நக்கீரன்April 27, 2013 at 2:17 PM

    இந்தப் பதிவில் சில இடங்களில் ப்லாக் என்றும் ப்ளாக் என்றும் மாற்றி மாற்றி சொல்லி தமிழ்த் தேசிய வாதிகளை நக்கலடிக்கிறீர்களா? அல்லது இதுவும் பின் நவீனத்துவத்தின் நாலாந்தர குறியீடுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட படிம உத்தியா?

    ReplyDelete
  4. கொழந்தMay 11, 2013 at 2:06 AM

    ஹி..ஹி..அது எழுத்துப்பிழை..அதை இப்படி கூட எடுத்துக்கலாமா........

    ReplyDelete