Wednesday, October 31, 2012

Film noir: An Intro

You know what the fellow said – in Italy, for thirty years under the Borgias, they had warfare, terror, murder and bloodshed, but they produced Michelangelo, Leonardo da Vinci and the Renaissance. In Switzerland, they had brotherly love, they had five hundred years of democracy and peace – and what did that produce?  The cuckoo clock.

- Harry lime, The Third Man
ஐரோப்பிய சினிமாக்களைப் பொறுத்தவரை – நாஜிகள் & இரண்டாம் உலகப் போரின் தாக்கம் பற்றிப்  பேசாமல் இருக்க முடியாது. ஏற்கனவே ஸ்கார்சேசே பற்றிய வீடியோ பதிவில் இதுபற்றி சற்றே பேசியிருக்கிறேன். ஃப்லிம் நுவாரோடு மட்டுமில்லாமல், அமெரிக்க-ஐரோப்பிய சினிமாக்களைப் பற்றிப் பேசும்பொழுது மிகமுக்கியமானதொரு விஷயமிது. சரி, நுவாரோடு இந்த விஷயம் எவ்வாறு தொடர்புடையது ?

ஜெர்மனியில், நாஜிக்களின் கெடுபிடியால் எக்ஸ்ப்ரஸனிஸ்ட் படங்களின் பிதாமகன்கள் அனைவரும் அமெரிக்காவிற்கு புலம்பெயரத் தொடங்கினர். அவர்கள் மட்டுமா.....ஒளிப்பதிவாளர், செட் டைரக்டர்கள் என்று ஒரு பட்டாளாமே அவர்களைப் பின்தொடர்ந்தது. ஹாலிவுட்டில் தங்கள் பாணியில் படங்களை எடுக்க ஆரம்பித்தனர். விளைவு, இதுவரை ஹாலிவுட் பார்த்தறியாத கேமரா கோணங்கள் – இசை – செட்டிங்ஸ் என்று முற்றிலும் புதுவகையான சினிமாக்கள் தயாராகத் தொடங்கியது. கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம், இந்த காலகட்டத்திற்கு முன்னர்வந்த ஹாலிவுட் படங்கள் எல்லாம் மிகமிக ஜனரஞ்சகமான மசாலாத்தனமான படங்கள் தான்.

நுவார் படங்களின் மிக முக்கியமானதொரு அம்சம், முக்கிய கதாபாத்திரம் – வேறு நாட்டையோ ஊரையோ சேர்ந்தவர்களாக இருப்பார்கள், புலம் பெயர்ந்த இயக்குனர்கள் போல. அந்தக் கதாபாத்திரங்கள் திடீரென்று உயிர்போகும்  நெருக்கடிக்கு ஆளாக நேரிடும். இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் அப்போதைய அமெரிக்க இயக்குனர்களுக்கு – வெறும் படத்துடன் தொடர்புடைய விஷயங்கள். ஆனால், ஐரோப்பிய இயக்குனர்களைப் பொறுத்தவரை, நாஜிக்களின் பிடியில் அவர்கள் ஏற்கனவே இருந்தபடியால் அவர்களால் கதாபாத்திரங்களின் மனநிலையை எளிதாக உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. உதாரணமாக, The Killers படத்தில், தன்னைக் கொல்ல வருகிறார்கள் என்று தெரிந்தும், தப்பியோட நினைக்காமல் அறையிலயே சாவை எதிர்நோக்கி காத்திருக்கும் கதாபாத்திரத்தை எப்படி அவ்வளவு தத்ரூபமாக அதன் இயக்குனர், ராபர்ட் சிட்மேக்கால் பிரதிபலிக்க முடிந்தது ? காரணம், அவர் பிறந்தது ஜெர்மனியில். அங்கே படங்கள் எடுத்துக் கொண்டிருந்த போது நாஜிகள் ஆட்சிக்கு வருகின்றனர். கடும் கெடுபிடி. நடுராத்திரி கண்காணிப்பு, மிரட்டல் என்று அன்றைய பல ஜெர்மனிய படைப்பாளிகள் அனைத்து விதமான நுவார் சூழ்நிலைகளையும் பார்த்துவிட்டிருந்தனர். பில்லி வைல்டர், எட்கர் உல்மர், ஃப்ரிட்ஸ் லேங் என்று ஜெர்மனியைச் சேர்ந்தவர்களே ஆரம்பகாலகட்டத்தில் நுவார் ஜானரில் கோலோச்சினார்கள். தங்களது எக்ஸ்ப்ரஸனிஸ்ட் பட நுணுக்கங்கள் + அந்நிய நாடான அமெரிக்காவில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்கள் + அமேரிக்கா குறித்து அவர்களுக்கு இருந்த கற்பிதங்கள் என்று அனைத்தையும் கலந்துகட்டி அட்டகாசமான திரைப்பட உத்திகள் மூலம் படங்களாகக் கொடுக்கத் தொடங்கினர்.


அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிய கால கட்டம். Pearl Harbour தாக்குதல் – ஹிரோஷிமாவிற்கு பிறகு, நமது நாட்டின் மீதும் அணுஆயுதத் தாக்குதல் நடைபெறலாம் என்று மக்கள் அஞ்சத் தொடங்கினார். இந்த அணுஆயுத விஷயம் 40களின் இறுதியில் கோல்ட் வார் சமயத்தில், உச்சத்தில் இருந்தது. இந்தகாலகட்டத்தில், அமெரிக்காவில் வெளிவந்த சினிமா, கதைகள் என்று சகலத்திலும் இந்தப் பயத்தை அப்பட்டமாகப் பார்க்கலாம். அப்போதைய பொருளாதார சீர்த்திருத்தங்களினால் வேலை சார்ந்த நிச்சயமற்றத் தன்மையும் இருந்தது. இந்தப் பயம் – நிச்சயமற்ற தன்மை அனைத்தையும் அமெரிக்க இயக்குனர்களின் நுவார்ப் படங்களில் காணலாம். The big american dream என்ற ஒரு பதம் உண்டே, அதுகுறித்தான கேள்விகளை மறைமுகமாக நுவார் படங்கள் கோடிட்டுக் காட்டியது.

ஃப்லிம் நுவார் படங்களின் கூறுகள் என்னென்ன ?
  • குற்றம்,கொலை,கொள்ளை
  • நல்லவன்/கெட்டவன் என்றெல்லாம் வரையறுக்க முடியாத ஆண்கள்
  • டிடெக்டிவ்ஸ்
  • குயுக்தி பிடித்த கவர்ச்சிகரமான பெண்கள்
  • நேர்மையற்ற போலீஸ்காரர்கள்
  • விளிம்புநிலை மனிதர்கள்
  • வெளியூரில்/நாட்டில் இருந்து வந்த கதாபாத்திரங்கள்
  • அவர்களின் பார்வையில் அவர்கள் புகந்த நாடுகள்
– இவர்கள் அனைவரும் சிக்கல்கள் நிறைந்த மனநிலையில் எப்படியாவது எல்லாவற்றிலும் இருந்து தப்பி வெளியேறிவிட முடியாதா என்று ஏங்குபவர்களாகவே இருப்பர்.


  • நக்கல்/குதர்க்கம் நிறைந்த வசனங்கள்
  • ஆள் அரவமற்ற சாலைகள்: போஸ்ட் கம்பங்கள்
  • ஒழுங்கில்லாமல் நீளும் நிழல்கள்
  • நியான் விளக்குகள்
  • ஒடுக்கமான குடியிருப்புகள்
  • பனி மூட்டம், ஏராளமான சிகரெட்கள்
  • எல்லாவற்றிற்கும் மேலாக படம் முழுக்க விரவிக்கிடக்கும் டார்க் டோன்.
  • செமி – டாக்மெண்டரி ஸ்டைல், இத்தாலிய நியோ – ரியலிசத்தின் விளைவாக.
- மற்றொன்று பல்ப் ஃபிக்சன். பல நுவார் படங்கள் பல்ப் ஃபிக்சன் வகை நாவல்களின் அடிப்படையிலேயே இயற்றப்பட்டது. ஒரு  பல்ப் ஃபிக்சன் கதையிலிருந்தோ ஒன்றுக்கு மேற்பட்ட பல்ப் ஃபிக்சன் கதைகளின் கோர்வையாகவோ அப்படங்கள் இருந்தன.
1940 – 1958 வரையான காலகட்டம் தான் நுவார் படங்களின் பொற்காலம். இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் மேற்கூறிய கூறுகளுடன் வெளிவந்த படங்களே க்ளாசிக் நுவார் படங்கள் ஆகும். ஃப்லிம் நுவார் என்பது ஃப்ரெஞ்ச் சொல். ஃப்லிம் நுவார் = டார்க் ஃப்லிம் (Dark film) என்று பொருள்.  ஃப்ரெஞ்ச் திரைப்பட திறனாய்வாளர்கள் தான் இந்தப் பெயரைச் சூட்டியது. இது தனி வகை ஜானரா(Genre) அல்லது நியு-வேவ் மாதிரியான நிகழ்வா என்பது குறித்து மாற்றுக் கருத்துகள் உள்ளன. 
ஆண்கள்:

நல்லவன் – கெட்டவன் என்பதெல்லாம் ரிலெடிவ் பதங்கள்தானே. அது நுவார் படங்களின் ஆண்களுக்கு அப்படியே பொருந்தும். என்ன யோசிக்கிறார்கள், இதைச் செய்வார்களா மாட்டார்களா என்பதையெல்லாம் நாம் ஊகிக்கவே முடியாது. ஒரு சிக்குண்ட மனநிலையிலேயே எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய ஆட்களாகவே இருப்பார்கள். உதாரணமாக, The Maltese Falcon(1941 – முதல் நுவார் படம் என்று பரவலாக அறியப்படும் படம்) படத்தின் ஹம்ப்ரி போகார்ட் – ஒரு டிடெக்டிவாக வருவார். தனது பார்ட்னரின் மனைவியுடன் ஒழுங்குமீறிய தொடர்பு வேறு இருக்கும். இன்னொரு பெண்ணுடன் காதல்(?) மலரும். ஆனால், இறுதியில் அவள் எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும் போலீசில் பிடித்துக் கொடுத்துவிடுவார். இன்னதான் செய்வார் என்று யாரலும் கணிக்க முடியாது ஒரு கதாபாத்திரம். ஏன் இவ்வாறு அவர்களது பாத்திரப்படைப்பு இருந்தது என்பதற்கு விடை – மேலே சொன்ன இரண்டாம் உலகப் போர்: அணுஆயுதப் போர் குறித்த பயங்கள் – அந்தகாலகட்டத்தில் சமூகத்தின் மனநிலை.

பெண்கள்:

நுவார் படங்களைப் பொறுத்தவரை இருவகைப் பெண்கள் இருப்பார்கள். ஒருதலைப்பட்சமாக ஒருவனைக் காதலிக்கும் அப்பாவி வகையான பெண்கள். மற்றொரு வகையான பெண்கள் தான், பல நுவார் படங்களின் அடிநாதமே – Femme Fatales என்றழைக்கபடும் சூழ்ச்சி நிறைந்த பெண்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் Double Indemnity(1944) படத்தில் வரும் ஃப்லிஸ் டைட்ரிசன். பேசியே ஆளை மயக்கிவிடுவார்கள். இவர்களால் ஆபத்து என்று அந்த ஆண்களுக்கு தெரிந்தாலும் விலகிச் செல்ல முற்படாமல் வலியப் போய் அவர்களின் சிலந்தி வலையில் அகப்பட்டுக் கொள்வார்கள். இதை இன்னொரு வகையாகவும் பார்க்கலாம். சுதந்திரமாக தனக்கு பிடித்ததைச் செய்யும், தனக்கான முடிவுகளை தானே எடுக்கும், ஆண்களின் மேல் அதிகாரம் செலுத்தும் பெண்களாக இருப்பர்.

பரவியிருக்கும் இருண்மை  & கேமரா கோணங்கள்:

படம் முழுவதும் ஒருவித அசௌகரியம் விரவிக்கிடக்கும். பெரும்பாலும் கறுப்ப வெள்ளையிலேயே படங்கள் இருக்கும். ஒருவேளை, கறுப்பு – வெள்ளைக்கு மத்தியிலிருக்கும் க்ரே ஷேட்ஸ்களை அவைகள் குறிக்கிறதோ ? கதாபாத்திரங்களும் அவ்வாறு நல்லது – கெட்டது, இரண்டிற்கும் இடையிலேயே ஊசலாடிக்கொண்டிருப்பர். அவர்களது மனஓட்டத்தை பிரதிபலிக்கும் விதமாகவே படத்தின் டோன் இருப்பதைக் காணலாம்.

லோ – ஆங்கிள், டட்ச்(Dutch) ஆங்கிள் என்று தனித்துவமான கேமரா கோணங்களை இப்படங்களில் அதிகளவில் கையாண்டிருப்பர். எனக்கு தனிப்பட்ட முறையில், The Third Man படத்தில் வரும் கேமெரா கோணங்கள் மிகப் பிடிக்கும்.குறிப்பாக டனல்களில் கேமெரா செய்திருக்கும் ஜாலங்கள்...இன்று வரை ஒருசில படங்களே அத்தனை அழுத்தமாக இருந்திருக்கின்றன.


சரி, 1958 வரை நுவாரின் பொற்காலம் என்று சொல்லியாயிற்று. அப்படியென்றால் அதற்கு பிறகு நுவார் படங்கள் வந்ததில்லையா ? நுவார் படங்கள் காலம் முடிந்ததா என்றால்.........இல்லை. நுவார் படங்களின் தாக்கம் ஃப்ரெஞ்ச் நியு-வேவ் படங்களில் அதிகளவில் இருந்தது. அதன் காரணமாகப் பிறந்ததுதான் நியோ – நுவார் (Neo noir). அதன் முதல்  & தலையாய படம் குறித்தான பதிவு தான் இது. கோதார்தின் Bande a part படத்தில் நுவாரின் கூறுகளைக் காணலாம். இந்த நியோ நுவார் பல வடிவங்களை எடுத்து, Pulp fictionல் வேறு தளத்திற்குச் சென்றது. கோயன் ப்ரதர்ஸின் நுவார்+ ஹிட்சகாக் படங்களுக்கான ட்ரிபியுட் தான், The man who wasn’t there.  The Dark knight கூட, நுவார் வகைப் படம் தான். அவ்ளோ ஏன், Blue velvetல் கூட நுவாரின்  பல கூறுகள்உள்ளன.

ஆனால், பல க்ளாசிக் நுவார் ஸ்டைலுடன் தற்போதைய பல வகை நுவார்களைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். நுவார் = டார்க்......அதுபோக மேல இருக்கும் கூறுகள் கொண்ட படங்கள் அனைத்தும் நுவார் என்ற பெரிய ஆலமரத்தின் கீழ் அடங்கும். அதில் கிளைகளாக இருக்கும் பிற நுவார்கள் தான் – neo noir, sci fi noirs, etc.. எல்லாம்.

எனது பரிந்துரைகள்:

நுவார் பற்றி தெரிந்துகொள்ள நினைப்பவர்கள், இந்த ஆறு படங்களைப் பார்த்தால் போதும் என்பது என் கருத்து. இவைகளை பார்த்தபின் தானாகவே அதன் மீது மோகம் வந்துவிடும். ஒவ்வொன்றும் ஒரு ஜெம். டைம்லஸ் க்ளாசிக். ஒவ்வொன்றைப் பற்றியும் ஒரு பதிவாவது எழுத வேண்டும்.

நம்மூரைப் பொறுத்தவரை எனக்குப் பிடித்த இரண்டு நுவார் படங்கள்:

புதிய பறவை:

என் அப்பா இந்தப் படத்தின் தீவிர ரசிகர். அவர் சொல்லித்தான் தாதா மிராசி(இந்தப் படத்தின் இயக்குனர்) குறித்தெல்லாம் எனக்கு தெரியும். படம் ஒரு ஆங்கில -> வங்களா மொழிப்படத்தின் ரீமேக். இதில் சிவாஜி – உன்னை ஒன்று கேட்பேன் பாடலில் சிகரெட் பிடிக்கும் காட்சியும், ஆகா மெல்ல நட மெல்ல பாடலில் – அணிந்துவரும் சட்டையும் அப்போது மிகப் பிரபலமாம். இப்போது கூட படத்தின் ஒளிப்பதிவு துல்லியமாக இருப்பதை உணரலாம். எம்ஜியார் படத்திற்கு முன்னமே இவ்ளோ அற்புதமாக கலருடன் படம் வெளிவந்ததில் எம்ஜியார் ரசிகர்கள் எரிச்சலில் இருந்திருக்கின்றனர். அந்த எம்ஜியார் படம் குறித்து என் அப்பா சொன்னது நினைவில்லை.


Johnny gaddar:

நான் பார்த்த இந்தியப் படங்களில் தலைசிறந்த நுவார் என்று இதைச் சொல்வேன். ஜேம்ஸ் ஹாட்லி சேஸ் நாவலைப் படித்தே கதையின் நாயகன்(?) திட்டத்தை தீட்டுவதாக வரும். அட்டகாசமான டிவிஸ்ட்கள் நிறைந்தது. இன்னொரு பிடித்த விஷயம், இசை.


இதுபோக, 60களின் எம்ஜியார் படங்கள் – என் தங்கை – பலவற்றிலும் நுவார்த்தன்மை இருப்பதைக் காணலாம். சுஜாதாவின், கணேஷ் வசந்த் கதைகளில் பல நுவார் படங்களின்(அல்லது அதன் மூல நாவல்களின்) தாக்கத்தை நிறையவே காணலாம். திடீரெண்டு அவர்கள் ஆபிசில் ஒரு பெண் வந்து உட்காந்திருப்பாள் (The Maltese Falcon) செத்தவன் திடீரென்று உயிரோடு வருவான் (The Third man)...இதுபோல. ரேமன்ட் சாண்ட்லர், ஜேம்ஸ் கெய்ன் போன்ற நுவார் வகை பல்ப் எழுத்தாளர்கள் குறித்து அவர் எங்கோ எழுதிப் படித்த ஞாபகம்.

தமிழ் சினிமாவில் இன்னும் சரிவரப் கையாளப்படாதா வகை இந்த நுவார் என்பது என் கருத்து. பல அட்டகாசமான படங்களை இதில் எடுக்கலாம். மிஷ்கின் அதற்கு மிகப் பொருத்தமான இயக்குனர் என்பது என் கருத்து. அவரின் சில படங்கள் கூட நுவார் வகைகள் தான்.
-----------------------------------------------------------

Facebookers..

39 comments :

  1. புதிய பல தகவல்கள். எப்படியாவது எல்லாப் படங்களையும் பார்க்கவேண்டும்.

    இந்த தாண்டவம் போன்ற படங்கள் என்ன கேட்டகிரி என்று தில் இருந்தால் பலமுறை பார்த்து ஒரு இடுகை இட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. அது மஸோகிசம் என்ற கேட்டகிரியில் வரும்.......டவுன்லோட் செஞ்சு பாருங்க...வேணும்னா, The Third manல இருந்து ஆரம்பிங்க.. அட்டகாசமான படம்....

    ReplyDelete
  3. //சுஜாதாவின், கணேஷ் வசந்த் கதைகளில் பல நுவார் படங்களின்(அல்லது அதன் மூல நாவல்களின்) தாக்கத்தை நிறையவே காணலாம். //

    கடவுளைப் பத்தியா தப்பா பேசுற நீ... நாளைக்கு உனக்கு சங்குதான்.

    ReplyDelete
  4. நா எங்க தப்பா பேசுனேன்.......உள்ளத சொன்னேன்.....

    ReplyDelete
  5. நீ எப்படிய்யா அதை சொல்லலாம்?
    சுஜாதா அளவுக்குப் பாதி உலக அறிவே இல்லாத எழுத்தாளர்கள் இப்போது எல்லாவற்றிலும் கால்வைத்துக் கருத்துச் சொல்கிறார்கள் என்பது கொடுமை

    ReplyDelete
  6. அவர் எழுதிய ஏறக்குறைய அனைத்து கதைகைளும் படிச்சிருக்கேன்...முடிஞ்சா நீங்க பழைய ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள், ரே ப்ராட்பேரி, அசிமோவ், ஜார்ஜ் ஆர்வெல்னு பலத - ஒருவேள இதுவர படிக்கலைனா - படிச்சிட்டு அப்பறம் முடிவு பண்ணுங்க.....

    // நீ எப்படிய்யா அதை சொல்லலாம்? //
    அதபத்தி உங்களுக்கு என்ன வந்துச்சு......உங்களுக்கு அவரை கடவுள்னு நெனைக்க பூரண உரிமை இருக்கு...அத வந்து இங்க திணிக்க பாக்காதீங்க...தேவையில்லாம வார்த்தைகள வுட்டா, பதிலுக்கு எனக்கும் பேசத் தெரியும்......

    அப்பறம், முடிஞ்சா ஒரிஜினல் பேர்ல கமென்ட் போடுங்க....

    ReplyDelete
  7. Good Review .

    Hats off to you sir

    ReplyDelete
  8. thanks sir.....

    ReplyDelete
  9. Neo noir.....

    ReplyDelete
  10. கொழந்த அட்டகாசம்யா
    ஆனா கோயன் பற்றி சொல்லவே இல்லையே,
    அவர்களின் the man who was not there மிக நல்ல noir ஜெனருக்கு உதாரணம்,
    ஹட்சக்கர் ப்ராக்ஸி படமும்,
    பின்னர் ஜாக் நிக்கல்சனின் 1980களில் வந்த போஸ்ட்மேன் ஆல்வேஸ் ரிங்ஸ் ட்வைஸ் படமும்,என் மனதில் நீங்கா இடம் பிடித்த noir ஜெனர் படங்கள்.கோயன் படங்கள் அனேகம் ஒர்தி வாட்ச்,
    ரஷ்ய இயக்குனர் அலெக்ஸி பால்பனேவின் மார்பைன்,of Freaks and Men அவசியம் பார்க்கவும்.
    நல்ல கட்டுரைக்கு நன்றி கொழந்த,இங்கே துபாய் வந்து இன்னும் செட்டில் ஆகவில்லை,அவசரத்தில் பின்னூட்டுகிறேன்,பை

    ReplyDelete
  11. nice article...I think sin city also come in this list...

    ReplyDelete
  12. அழகான, விரிவான தகவல்கள். இந்த வகைப்படங்களின் அடிப்படையை அறிந்துகொள்ளமுடிந்தது. நீங்கள் பட்டியலிட்ட படங்களை பார்க்கிறேன். தங்களின் அக்கறையான பதிவுக்கும், ஆற்றலுக்கும் வணக்கங்கள்.

    ReplyDelete
  13. Johnny gaddar is good noir film. Few more listings-
    Black friday
    Gulaal
    ishqiya
    No smoking
    aranya kandam
    BTW awesome post kozhandha, Upto now I was knowing about film/neo noir by watching few movies and reading in IMDB. For the first time read about noir film making in a public post. Thanks
    :D

    ReplyDelete
  14. என்னண்ணே இப்புடி பொசுக்குன்னு கோவப்ப்ட்டுட்டீய.

    நானு உங்க தீவிர வாசாகர்ணே. நானு மேல சொன்னதெல்லாம் சில தீவிர எலக்கிய வாசாகர்கள் சில நாளுக்கு முன்னாடி மூஞ்சிபுக்குலயும் டுவிட்டர்லயும் சுஜாதா பத்தி பேசுனதுக்கு போட்டதுன்ணே. உங்களையும் அப்புடிச் சொல்லுவாங்கன்னு நான் போட்டதுன்ணே

    நீங்களே இப்புடி பொசுக்குன்னு கோவிச்சுகிட்டா என்னனே

    ReplyDelete
  15. ஆண்புள்ள நண்பரே..நலமா....கோயன் ப்ரதர்ஸ் - அந்த படம் பத்தி கீழ சொல்லியிருக்கேன். அவசரத்தில் பாக்கம இருந்திருப்பீங்க..ஜாக் நிக்கல்சன் வெர்சனை விட பழசு தான் அருமைனு நெட்ல பேசிக்கிறாங்க....அப்பிடியா ? பழசு பாத்துருக்கீங்களா ?

    ரஷ்யன் இயக்குனர் - குறிச்சு வெச்சிருக்கேன்....

    துபாய் - செட்டில் ஆயிட்டு ஒருநாள் ஹேங்அவுட் வாங்க....

    ReplyDelete
  16. எஸ்.சின் சிட்டி - graphic novel சார்ந்த நுவார்...

    ReplyDelete
  17. நாந்தான் உங்களளது கனிவான வார்த்தைகளுக்கு வணக்கம் சொல்லணும்..ரொம்ப நன்றி..படங்கள டவுன்லோட் செஞ்சு பாத்தீங்களா ?

    ReplyDelete
  18. நாந்தான் உங்களுக்கு வணக்கம் சொல்லனும்...இவ்ளோ கனிவான கமென்ட்களுக்கு.......படம் டவுன்லோட் செஞ்சு பாத்தீங்களா ?

    ReplyDelete
  19. Except Jhn.Gaddar, all the other ones will fall under the category - neo noir......that's y i didn't mention it... Currently, vishal baradwaj & Anurag kashyap are the baap's of neo noirs... thanks for your comment....

    ReplyDelete
  20. // ஒரிஜினல் பேரு // ஹா..ஹா...ஹா..... அருமை....

    கோவிக்கலாம் இல்ல...சின்ன எரிச்சல்......அம்புட்டுதான்

    ReplyDelete
  21. கொழந்த
    நான் ஒரு கமெண்ட் முந்தாநாள் போட்டிருந்தேன்,குஷ்டப்பட்டு போட்டேன் ,ஆனா அது காணுமேய்யா?என்னாச்சி!!!

    ReplyDelete
  22. கொழந்த நான் நிச்சயம் எகிவேட்டர் பார்க்கறேன்,இதை பற்றி லூயி மாலை பற்றி ஐஎம்டிபியில் படிக்கையில் ஒருவர் சிலாகித்து எழுதியிருந்தார்.

    noir ஜெனர் எனக்கு உயிர்
    postman always rings twice=பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் கான்செப்ட்
    1980ல் வந்த ஜாக் நிக்கல்சன் ஜெசிக்கா லாஞ்ச் படம்

    the man who wasnot there,பில்லி பார் தார்ண்டனின் மாஸ்டர் பீஸ்,கோயன் இயக்கியது,ப்ளாக் அண்ட் ஒயிட் கவிதை,இதுவும் கோயன் சகோவுடையது
    ஃபார்கோவும் அதிலே சேரும்,ஆனால் கலர்.

    அவர்களின் முதல்படமான ப்ளட் சிம்புள் 1980 மிஸ் பண்ணக்கூடாத அமர்க்களமான படம்,ஹட்சக்கர் ப்ராக்ஸியும் ஒரு நுவார் வகை ஸ்க்ரூபால் காமெடி படம்,நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென் நிச்சயமாக சேரும்,

    13 என்னும் படம் கூட சொல்லலாம்,

    ருஷ்ய இயக்குனரில் எனக்கு மிகவும் பிடித்தவர் அலெக்ஸி பாலபானோவ்
    இவரின் கார்கோ200,மார்பைன்,ஆஃப் ஃப்ரீக்ஸ் அன் மென்,படம் ஒரிஜினல் நுவார் வகை,லீவு போட்டு கூடபார்க்க ஒர்த்.ப்ராட் 1 அண்ட் 2,அப்புறம் கடைசியாக வந்த கோச்சிகர் என்னும் படம் நிச்சயம் நல்ல படைப்பு.

    ட்ராவெல்லிங் வித் பெட்ஸ் என்னும் படமும் சொல்வேன்.

    பின்னூட்டம் ஏன் வெளியாகமாட்டேன் என்கிறது?ஏதாவது சூட்சுமம் உள்ளதா?

    ReplyDelete
  23. அதெல்லாம் வெளியாகி இருக்கு...போன தடவ போட்ட கமென்ட்யும் வந்திருக்கு....Man who wasn't there - பதிவுல சொல்லியிருந்தேன்...விரிவா தற்கால நுவார்கள் பத்தி பேசல....ரொம்ப பெருசா போயிரும் என்ற காரணத்தால்....

    // ருஷ்ய இயக்குனரில் எனக்கு மிகவும் பிடித்தவர் அலெக்ஸி பாலபானோவ் // பேரையே இப்பத்தான் கேள்விப்படுறேன்......கார்கோ நீங்க எழுதியிருந்தீங்கள்ள ???

    ReplyDelete
  24. Thanks... :)

    ReplyDelete
  25. இருக்கே.......நா படிச்சிட்டு ரிப்ளை கூட செஞ்சிருந்தேனே ?

    ReplyDelete
  26. என்னய்யா இது ஆளாளுக்கு ஒரு படத்துப் பேரக் கேக்குறாங்க அதுக்கு இவரு பதில் சொல்லுறாரு.

    நாமும் ஒரு கேள்வி கேப்போம்.

    basic instinct படம் என்ன வகை?

    ReplyDelete
  27. நான் ஜேம்ஸ் பான்ட் பதிவுக்கு போட்ட பின்னூட்டமும் வரவில்லை...இதற்கு போட்ட பின்னூட்டமும் வரவில்லை..என்ன ஆச்சு பாஸ்?

    ReplyDelete
  28. கொழந்த இப்போதான் அதும் இன்னைக்கு தான் கமெண்ட் வெளியாயிருக்கு!!!என்ன இது ஒரு ஸ்டண்டா?!!!இரண்டு நாலுக்கு பின் ரிலீஸ் செய்யுறது?பிச்சுபிச்சு

    நேத்து Ascenseur.pour.l'échafaud.(1958) பார்த்தேன்யா

    மனுஷன் கலக்கிருக்கான்யா!!!பிரமிச்சுட்டேன்,இதே ஒளியமைப்பு சோனன் ஃபீல்டுக்கு தான் பின்னாளில் சாத்தியப்பட்டிருக்கு.

    தவிர என்னளவில் 1980ன் போஸ்ட்மேன் ஆல்வேஸ் ரிங்ஸ் ட்வைஸ் தான் பெஸ்ட்,

    ஜாக்கின் போக்கிரித்தனமான நடிப்புக்கு முன்னர் சாம்பார் போல இருக்கும் ஜான் கார்ஃபீல்ட் எம்மாத்திரம்,தவிர ஜெசிக்கா லாஞ்சின் கிச்சன் மேடை மேக்கிங் அவுட் சீன் 1980ன் ஸ்பெஷல்யா.


    எதோ சொல்லனும்னு தோனிச்சு,பதிவு பெரிசு பற்றியெல்லாம் யோசிக்கவேண்டாம்.!!!

    இன்னும் ஒரு தகவல்

    The Cook The Thief His Wife & Her Lover

    peter greeaway என்னும் இயக்குனரின் படம்,அவசியம் பார்க்கவும்,நம்மை போன்ற ரசனை கொண்டோருக்கானது
    இவரின் மானசீக சிஷ்யர் Steven Shainberg இயக்கிய secretary தவறாமல் பார்க்கவும்

    அப்படியே அவரின் fur என்னும் படமும் பார்க்கவும்,டி ஆர் போல மேனியெங்கும் முடி கொண்டவரின் உண்மைக்கதை

    ReplyDelete
  29. உங்க மெயில் பாத்தீங்களா ??

    வோர்ட்ப்ரெஸ்ல சில கோளறு இருக்கு..அதுனால ஏற்பட்ட குயப்பங்கள்.......

    ReplyDelete
  30. உங்க Fb மெசேஜ் பாத்தீங்களா ??

    நீங்க இங்க போட்ட கமென்ட் இருக்கே.......

    ReplyDelete
  31. Basic instinct - Noir தான்......எரோடிக் நுவார்....

    ReplyDelete
  32. நல்ல நேர்த்தியான கட்டுரை

    ReplyDelete
  33. கொழந்தJuly 12, 2015 at 3:42 PM

    Thanks boss

    ReplyDelete
  34. பிரதர், அப்படின்னா கிரிஸ்டஃபர் நோலனை "நியோ-நுவார்" இயக்குநர் என்றே கூட சொல்லலாமா?

    ReplyDelete
  35. எனக்கு அப்பிடி தோணல. Following...அதுவும்கூட நுவார் டைப்ல வராதே

    ReplyDelete