Wednesday, October 10, 2012

Elevator to the gallows


All of Louis Malle, all his good qualities and faults, was in Elevator to the Gallows

Francois Truffaut


மர்மம் பொதிந்த வசீகரக் கண்கள். படம் தொடங்குவதே அந்தக் கண்களின் க்ளோஸ்-அப்பில் இருந்துதான். ஃப்ளோரன்ஸ்(அந்தப் பெண்), ஜூலியன்(ஒரு ஆண்) தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் தம்பதிகளாகவோ காதலர்களாகவோ இருக்கலாம். "இந்த வேலையை எப்படியாவது முடித்தாக வேண்டும்" என்ற ரீதியில் ஒரு பூடகமான பேச்சாகவே அவர்களின் உரையாடல் நீள்கிறது. பேசி முடித்தவுடன் ஜூலியன் அலுவலக உதவியாளரிடம்,  அவள் எப்பொழுது பணியிலிருந்து வீட்டிற்குக் கிளம்புகிறாள் என்பது குறித்து கேட்டுக் கொண்டிருக்கிறான். அப்போது வரும் ஒரு தொலைப்பேசி அழைப்பின் மூலம் - தனது மேலதிகாரியான கார்லா - இன்னும் சிறிது நேரத்தில் ஜெனிவா புறப்படுகிறார் என்பதைத் தெரிந்து கொள்கிறான்.

தனது அறைக்கு திரும்பி, உள்ளே கதவைத் தாளிடுகிறான். டேபிள் ட்ராயரைத் திறக்க - கையுறை, துப்பாக்கி, கொக்கி கொண்ட கயிறு...மூன்றும் அங்கே பல்லிளித்துக் கொண்டிருக்கிறது. அறையின் ஜன்னல் கதவைத் திறந்து அதனோரம் இருக்கும் வராண்டாவில் நடந்து சென்று, கொக்கியை அவனது அறைக்கு மேல இருக்கும் அறையின் கம்பிகளை நோக்கி வீசுகிறான். கச்சிதமாக கொக்கி, அந்தக் கம்பிகளை கவ்விக் கொள்ள, மெல்ல யாரும் பார்த்திராதவாறு மேலே ஏறுகிறான். மேலே இருக்கும் அறை: அவனது மேலதிகாரி, சைமன் கார்லாவின் அறை. உள்ளே நுழைகிறான். அவனுடன் Miles Davisன் மிஸ்டிகல் ஜாஸ் இசையும் கதவிடுக்கில் புகைப் போல நுழைந்து அறை முழுவதும் வியாபிக்கத் தொடங்குகிறது. சட்டென்று  ஒருவித பரவசம், திகில், அடுத்ததாக என்னமோ நடக்கப் போகிறது - இந்த மூன்று உணர்வையும் ஒருசேர அவ்விசை நமக்குத் தருகிறது. அவனைக் கண்டவுடன் மிகுந்த உற்சாகத்துடன் கார்லா பேசத் துவங்குகிறார். அவர் பேசுவதில் இருந்து ஏதோ நிழலுலக வேலைகளில் அவர்கள் ஈடுபட்டிருப்பது தெரிகிறது. டக்கென்று துப்பாக்கியை இவன் எடுக்க, முதலில் ஏதோ ஒரு விளையாட்டு என்று கார்லா கருதுகிறார். பின் திடீரென்று "என் துப்பாக்கி உன்னிடம் எப்படி வந்தது" என்று  கார்லா கேட்க...........ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ப்ப்ப்ப்.

மிகச் சாதுர்யமாக அந்த அறையை உள்பக்கமாக மூடிவிட்டு, வந்தே வழியாகவே அந்தக் கயிறின் மூலம் தனது அறைக்கு திரும்புகிறான். நேரம் ஆகிவிட்டபடியால் அனைவரும் வீட்டுக்கு கிளம்பத் தொடங்குகின்றனர். அலுவலக பணியாள், கார்லா இந்நேரம் தனது ட்ரெயினை பிடிக்கப் போயிருப்பார் என்று உதவியாளரிடம் கூறுகிறான். லிஃப்டில் இறங்கிக் கொண்டிருக்கும் போது - அலுவலக உதவியாளர், நம் அதிகாரி கார்லாவை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. அடிக்கடி யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்குச் சென்று விடுகிறார். பல நிழலுக வேலைகளில் எல்லாம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் என்று பேசிக் கொண்டு வருகிறாள். ஜூலியன் அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டு தனது காரில் ஏறி அமர்கிறான்.எதிர்த்த நடைபாதையில் இருக்கும் பூக்கடையில் வேலை பார்க்கும் பெண், தனது காதலனுக்கு  அவனைக் காட்டி ஏதோ கூறிக் கொண்டிருக்கிறாள். அவனது காதலன், On the waterfront படத்தின் ப்ராண்டோவின் ரசிகன். அதே போன்ற ஜாக்கெட் எல்லாம் அணிந்திருக்கிறான். ஒரு fake முரடன்.

காரை ஸ்டார்ட் செய்த ஜூலியன், ஏதேச்சையாக மேல பார்க்க...........அங்கே.......அந்தக் கயிறு அப்படியே தொங்கிக் கொண்டிருக்கிறது. படீரென்று தான் செய்த தவறு உரைக்க, காரை ஸ்டார்ட் செய்து நிலையிலேயே அப்படியே விட்டுவிட்டு தலைதெறிக்க அலுவலகம் நோக்கி ஓடுகிறான். லிப்ஃடில் ஏறி பொத்தானை அழுத்துகிறான். அதேசமயம் கீழே அலுவலகப் பணியாளன் லிப்ஃடை ஆஃப் செய்ய அதன் சுவிட்சை நோக்கிப் போகிறான். 3............4..........5........கடைசி தளத்தை லிஃப்ட் நெருங்கிவிட்டது. ஜூலியன் தனது லைட்டரை எடுத்து பற்ற வைக்கும்......அந்த மைக்ரோ விநாடியில்.......லிஃப்ட் நிற்கிறது.

உள்ளிருந்து பூட்டப்பட்ட அறைக்குள் கார்லாவின் பிணம் -  அவரது வெளிஅறையின் கம்பிகளில் கயிறு தொங்கிக் கொண்டிருக்கிறது - கொலை செய்த ஜூலியன் லிஃப்டுக்குள் - அவனது கார் ஸ்டார்ட் செய்யபட்ட நிலையில் ரோட்டில் நிற்கிறது - அதனை கவனித்துக் கொண்டிருக்கும் காதலர்கள் - ஜூலியனுக்காக அங்கே காத்திருக்கும் ஃப்ளோரன்ஸ்.............எத்தனை பேர் இந்த plotக்கே இந்நேரம் இந்தப் படத்தை டவுன்லோட் செய்ய எத்தனித்திருக்கிறீர்கள் ??



Miles Davis - ஜாஸ் இசைப் பிரியர்களுக்கு நன்கு பரிச்சயமான பெயர். மைல்ஸ் டேவிஸ் குறித்து வேறொன்றை நெட்டில் தேடிக் கொண்டிருந்த பொழுது, அவர் இசையமைத்த படம் என்று இந்த படத்தின் பெயரைப் பாத்தேன். அடுத்து ட்ரைலர்....கீழே இருக்கும் ட்ரைலரைக் காண நேரிட்டது. சரியாக ட்ரைலரின் 18வது நொடியில், செமி - டார்க்நெஸில்    லிஃப்டிற்குள் ஒரு கதாபாத்திரம் லைட்டரை ஆன் செய்வான். அப்போதே எனக்குத் தெரியும், இதுபோன்ற ஒரு பதிவை நான் எழுதிக் கொண்டிருப்பேன் என்று.


படத்தின் பின்னணி இசை.....ட்ரைலரை பார்க்கும் போதே ஒருவித அதிர்வுக்கு உள்ளாகியிருப்பீர்களே.......மைல்ஸ் டேவிஸ் + இயக்குனர் லூயி மால் + படத்தின் கதாநாயகி(?) ஜேன் மோரூ, மூவரும் ஷம்பைன் அருந்தியவாரு பின்னணி இசை குறித்துப் பேசிப் பேசி செதுக்கியிருக்கிறார்கள். இரவு 11 மணிக்கு தொடங்கி, அதிகாலை 5 மணி அளவில் டேவிஸ் முழு படத்திற்கான இசையையும் முடித்து விட்டார். இந்தப் படத்தின் இசை குறித்து, விக்கிபிடியாவில் ஒரு க்ரிடிக் சொன்னதாக இருந்தது.



The loneliest trumpet sound you will ever hear, and the model for sad-core music ever since. Hear it and weep


இந்த படத்தின் இசையை புரிந்து கொள்ள, அமெரிக்க நுவார் படங்களின் பரிச்சயம் இருந்தால் நலம். அமெரிக்க படங்களில், அந்த காலகட்டத்தில் வந்த நுவார் படங்களில், இசை துருத்திக்கொண்டே ஒலிக்கும் (நமது தமிழ்ப் படங்களில் ஆதி காலம் தொட்டு இன்றளவும் அவ்வாறே பல படங்களின் இசை இருந்து வருகிறது. சினிமா -  என்ற "விஷுவல்" மீடியத்தை அளவுக்கதிகமான இசை, வசனங்கள் போன்றவற்றின் மூலம் நிரப்புவதில் எனக்கு உடன்பாடில்லை). இந்தப் படம் நுவார் படங்களின் பின்னணி இசைப் பொறுத்தவரை, மிக மிகக் கச்சிதமாக படத்துடன் பொருந்திப் போகிறது. தனியாக இதனை தரவிறக்கி கேட்டுப் பாருங்கள். பின்னர், படத்தைப் பாருங்கள். இசையிலயே படத்தின் அடிநாதம் ஒளிந்திருப்பதைக் கேட்கலாம். எந்தவிதத்திலும் படத்தை பின்னுக்குத் தள்ளாமல், படத்தை பல்வேறு தளங்களுக்கு மிக அனாயசமாக இசை இட்டுச் செல்வதைக் கேட்கலாம். ஜூலியனைத் தேடிக் கொண்டு ஃப்ளோரன்ஸ் பாரீஸ் நகர வீதியில் வெறுமையுடன் நடைபோடும் காட்சிகளில், ஒளிப்பதிவு + இசை, ஒவ்வொரு ஷாட்டும் ஒரு கவிதை. நான் சொன்னதில் துளி கூட மிகைப்படுத்தலே இல்லை.

ஒளிப்பதிவு........நிச்சயம் படத்தைப் பார்ப்பவர்களுக்கு மறக்கவியலாத ஒரு அனுபவத்தை ஒளிப்பதிவு தரும். ஒளிப்பதிவாளர் குறித்து, யாரென்று தேடிய பொழுது தான் - எனக்கு மிகப் பிடித்த மற்றொரு ப்ரெஞ்சு இயக்குனர், ழான் பியர் மெல்வில்லின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ஹன்ரி டேகே தான் இதற்கும் ஒளிப்பதிவு என்று தெரிய வந்தது. படம் முழுக்க விரவியிருக்கும் அந்த டார்க் டோன், பார்ப்பவர்களை முழுவதுமாக உள்ளிழுத்துக் கொள்ளும். போலிஸ் விசாரணைக் காட்சிகளில் வரும் லைட்டிங்.......வாவ்......


ரைட்.......இதுதான் முக்கிய பகுதி. இயக்குனர் - லூயி மால். இப்படத்தை இயக்கிய பொழுது அவருக்கு வயது 24. லூயி மால் குறித்து சில மாதங்கள் முன்னர், நண்பரும் Ex-பதிவருமான கீதப்ரியன், ஃபேஸ்புக்கில் இவரின் டாகுமென்டரி - கல்கத்தா குறித்துப் பகிர்ந்திருந்தார். அப்பொழுதுதான் முதன்முறையாக இவர் பெயர் கேள்விப்படுகிறேன். பின்னர் இந்த படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதுதான், ஆஹா..இந்த இயக்குனர் தானே கீதப்ரியன் சொன்ன கல்கத்தாவின் இயக்குனர் என்பது உரைத்தது. அதைவிட ஆச்சரியமாக - சில வாரங்கள் முன்னர், மதுரை புத்தகக் கண்காட்சியில் - லூயி மால் என்ற பெயரில் ஒரு புத்தகத்தைப் பார்த்தவுடன் கிட்டத்தட்ட அதிர்ச்சியாகி விட்டேன் என்றே சொல்லலாம். முதன்முதலாக வண்ணக் கலரில், ஆழ்கடல் பற்றிய டாகுமெண்டரி ஒன்றை - இன்னொரு இயக்குனரோடு சேர்த்து - எடுத்தது இவர்தான்.படங்களோடு மட்டுமில்லாமல், சிறந்த டாகுமெண்டரி இயக்குனராகவும் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது.French new wave கோஷ்டியினரோடு இவருக்கு பரிச்சயம் இருந்தாலும், அவர்களிடமிருந்து விலகி தனக்கென்று ஒரு பாணியை ஏற்படுத்திக் கொண்டவர். மிகுந்த கறாரான விமர்சகராக அறியப்பட்ட ப்ரான்சுவா த்ரூஃபோ இவரது மேக்கிங்கை பலமுறை சிலாகித்திருக்கிறார்(இப்பொழுதுதான் இவரின் படங்களை பார்க்கத் தொடங்கி உள்ளேன். குறைந்தது ஒரு பத்து படங்களையாவது பார்த்த பின் இவரைப்பற்றி பேசவோ எழுதவோ முயற்சிக்கிறேன்).

தமிழ் திரைப்படங்களைப் பொரறுத்தவரை  இப்பொழுது சகஜமாக புழங்கும் ஒரு வார்த்தை, "ஸ்டைலிஷான மேக்கிங்". 1958லேயே, இவ்வளவு நேர்த்தியுடன் எடுக்கபட்ட இந்த படத்தையெல்லாம் எவ்வாறு அழைப்பார்கள் என்று தெரியவில்லை.

லூயி மால்

ப்லிம் நுவார் (Film noir) - இந்த வார்த்தையை நம்மில் பல பேர் அடிக்கடி கேள்விப்பட்டிருப்போம். மிக மிக சுவாரசியமான, பல்வேறு பரிசோதனை முயற்சிகள், அட்டகாசமான திரைக்கதைகள், அசரடிக்கும் ஒளிப்பதிவு என்று நுவார் படங்களின்  பரிமாணங்கள் பல. அதன் சரியான அர்த்தம் தான் என்ன ? நுவார் படங்களின் அடிப்படைகள் என்ன ? குறிப்பாக, இந்தப் படம் எவ்வாறு நுவார் வகையின் மிக முக்கியமான திருப்புமுனை படமாக இருக்கிறது ? எல்லாவற்றையும் அடுத்த பதிவில் எனக்குத் தெரிந்த அளவில் பார்ப்போம். அதற்கு முன் நீங்கள் பார்த்த, ஹிட்ச்காக்கின் ஆரம்ப கால படங்களையும், Orson Wells, John Huston, Billy Wilder போன்ற ஆட்களையும் நினைவுப்படுத்திக் கொள்ளுங்கள். கூடவே, நுவார் படங்களின் அடிநாதமான குற்றப் புனைவு (Crime Fiction) குறித்த இந்தக் கட்டுரைகளையும் படித்து விடுங்கள். Of course, இந்த கட்டுரைகள் இலக்கியம் சார்ந்ததாக மட்டுமிருந்தாலும், நுவார் குறித்த பார்வையும் - குற்றப் புனைவுகள் குறித்த பல சுவாரசியமான விஷயங்களையும் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்(கொண்டேன்).




பி.கு:
நேற்று ஒரு வெகுஜனப் பதிவருடன் நடந்த உரையாடலின் விளைவே இந்தப் பதிவு. வேற ஒரு பதிவைத் தான் டைப்புவதாக இருந்தேன். அந்த வெகுஜன பதிவர் இந்த படத்தைப் பார்த்தாரா என்று தெரியவில்லை ? இன்னொரு நண்பர்/ முன்னாள் புரட்சிப்பதிவர் ஒருவருக்கும் இந்தப் படத்தை போன வாரம் அனுப்பியிருந்தேன். அவரும் இந்தப் படத்தைப் பார்த்த மாதிரி தெரியவில்லை.

மற்றொரு இடைச் சொருகல்:

Facebookers..

13 comments :

  1. லிஸ்டில் இன்னும் எந்தப்படத்தையும் பார்க்கலை. அந்த பாடாவதி ஜப்பான் படத்தை தவிர. எல்லா படமும் லைப்ரரியில் இருக்கு. ரெக்வஸ்ட் போட்டிருக்கேன்.

    நீங்க சொன்ன நிறைய டெக்னிக்குகளை ஹிட்ச்காக் இந்த ஃப்ரென்ச் படத்துக்கு முன்னாடியே பண்ணியிருக்காரே? Dial M for Murder படம் ஒரு உதாரணம்.

    ReplyDelete
  2. அதுல இந்தளவுக்கு கேமெரா மூவ்மென்ட், மினிமலிசம் எல்லாம் இல்லியே...இசை - இது முற்றிலும் வேற லெவல்...ஸ்டைல் அப்ரோச், எல்லாம் இப்பவும் - அட்லீஸ்ட் எனக்கு - பிரமிப்பா இருக்கு. லிப்ட் கீழ ஒரு ஷாட் வரும்...சான்சேயில்ல......

    இந்த படம், நியு வேவ் படங்களுக்கு ஒரு முன்னோடி...ஊகிக்க முடியாத, லூப் ஹோல்கள் இல்லாத கதைனுலாம் சொல்ல முடியாது. சிம்பிள் கதை தான் அத எக்சிகியுட் பண்ண விதம்........ஹிட்ச்காக் படங்கள், ஒருவித நாடகத்தன்மை இருக்கும்...இதுல அது சுத்தமா மிஸ்ஸிங்...

    ReplyDelete
  3. எல்லாமு முடிச்சிட்டு மெதுவா கத்திய வச்சு கதவ உள்பக்கமா பூட்டுவாரே அங்க கரண்டு போச்சு, அதுக்கப்புறம் இன்னும் பாக்க வாய்ப்பே இல்ல.

    பரமபிதாவின் கடைக்கண் பார்வை பட்டு கரண்டு வந்தா முழுசா முடிச்சிர வேண்டியதுதான்.

    Le samourai படம் அட்டகாசம்.

    ReplyDelete
  4. பாருங்க மக்களே...இந்த மாதிரி ஏதோவொரு ஐடில இருந்து கமென்ட் போட்டிருக்கிறது.....திருவாளர் தமிழினியன் தான்....புனைப் பெயர்..போலி ஐடி....என்னமோ உதைக்குதே........

    ReplyDelete
  5. எனக்கும் பல நாளா noir பிலிம் noir பிலிம் சொல்றாங்களே அப்படினா என்னான்னு தெரிஞ்சிக்க இணையத்திலும் பார்த்தேன் எதுவும் சரியா பிடிபடவில்லை. ஸ்டைலிஷ் படம்னா எந்த மாதிரி ஸ்டைலிஷ் படங்களை noir வகையில சேக்குறாங்கனும் புரியலை

    ReplyDelete
  6. உலகசினிமாவில் மிக முக்கியமாக கொண்டாடப்படும் மாபெரும் இயக்குனரின் மாஸ்டர்பீஸ் படத்தை அறிமுகப்படுத்தி எழுதியமைக்கு நன்றி.
    இது போன்ற் மாஸ்டர்கள் படங்களை தொடர்ந்து எழுதுங்கள்.
    இந்த வேண்டுகோளை கட்டளையாக எடுத்துக்கொள்வீர்கள் என்றால் மிக மகிழ்வேன்.

    ReplyDelete
  7. Miles davis கொஞ்சமா கேட்ருக்கேன், இத டவுன்லோடிங். செம போஸ்ட் :) :)

    ReplyDelete
  8. ஆமாக்கா.........கல்ட் படமே தான்.....கல்ட் படம் என்பதற்கான பதிவுலக விளக்கம் உங்களுக்கு தெரியும்ல.....

    ReplyDelete
  9. அடுத்த பதிவுல எழுதிருவோம்...ஆனா, உங்க கமென்ட் பாத்த பிறகு இன்னும் கொஞ்சம் நல்லா எழுதணும்னு பொறுப்புணர்வு வந்திருச்சு

    ReplyDelete
  10. நேத்து நைட்ல இருந்து டவுன்லோட் பண்றேன்....டவுன்லோட் பண்றேன்.....சொல்றீங்க..........இன்னுமா ஆகுது ?? படம் பாத்துட்டு சொல்லுங்க

    ReplyDelete
  11. நிச்சயம் எழுத முயற்சிக்கிறேன்...தங்கள் ஊக்கத்திற்கு நன்றி......

    ReplyDelete
  12. கொழந்த நான் நிச்சயம் எகிவேட்டர் பார்க்கறேன்,இதை பற்றி லூயி மாலை பற்றி ஐஎம்டிபியில் படிக்கையில் ஒருவர் சிலாகித்து எழுதியிருந்தார்.

    noir ஜெனர் எனக்கு உயிர்
    postman always rings twice=பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் கான்செப்ட்
    1980ல் வந்த ஜாக் நிக்கல்சன் ஜெசிக்கா லாஞ்ச் படம்

    the man who wasnot there,பில்லி பார் தார்ண்டனின் மாஸ்டர் பீஸ்,கோயன் இயக்கியது,ப்ளாக் அண்ட் ஒயிட் கவிதை,இதுவும் கோயன் சகோவுடையது
    ஃபார்கோவும் அதிலே சேரும்,ஆனால் கலர்.

    அவர்களின் முதல்படமான ப்ளட் சிம்புள் 1980 மிஸ் பண்ணக்கூடாத அமர்க்களமான படம்,ஹட்சக்கர் ப்ராக்ஸியும் ஒரு நுவார் வகை ஸ்க்ரூபால் காமெடி படம்,நோ கண்ட்ரி ஃபார் ஓல்ட் மென் நிச்சயமாக சேரும்,

    13 என்னும் படம் கூட சொல்லலாம்,

    ருஷ்ய இயக்குனரில் எனக்கு மிகவும் பிடித்தவர் அலெக்ஸி பாலபானோவ்
    இவரின் கார்கோ200,மார்பைன்,ஆஃப் ஃப்ரீக்ஸ் அன் மென்,படம் ஒரிஜினல் நுவார் வகை,லீவு போட்டு கூடபார்க்க ஒர்த்.ப்ராட் 1 அண்ட் 2,அப்புறம் கடைசியாக வந்த கோச்சிகர் என்னும் படம் நிச்சயம் நல்ல படைப்பு.

    ட்ராவெல்லிங் வித் பெட்ஸ் என்னும் படமும் சொல்வேன்.

    பின்னூட்டம் ஏன் வெளியாகமாட்டேன் என்கிறது?ஏதாவது சூட்சுமம் உள்ளதா?

    ReplyDelete