Thursday, August 30, 2012

Martin Scorsese: Part I (Video பதிவு)...


நிச்சயம் இதுமாதிரி,இவ்ளோ நேரம் யாராவது வீடியோ பதிவு என்ற பேரில் எதுனா போட்டா, நா பாப்பனே என்பது சந்தேகமே. பதிவுகளையே முதல் பேரா - கட் - கடைசி பேரான்னு படிக்கும் ஆட்கள் நாம. இதெல்லாம் தெரிஞ்சாலும், இப்படி அப்லோட் செய்யத்தான் எனக்கு பிடிச்சிருக்கு. நெஜமா எத்தன பேர் பாப்பாங்க பத்தி ஒரு கவலையும் இல்ல. ஒரு பத்து இருபது நிமிஷத்தில் பேசி முடிக்கும் அளவுக்கு ஸ்கார்சேஸி மொக்க டைரக்டரா என்ன ? 

இதுல வரும் காட்சிகள் - இணையத்தில் இருந்தும், என் டிவிடிகளில் இருந்தும், ரொம்ப குறிப்பா.......இந்த Fan montage tribute videoல இருந்து கட் செஞ்சது. அவரே கோல்டன் க்ளோப் வீடியோல இருந்து தான் கட் செஞ்சிருக்கார்.

அடுத்த பார்ட் - கொஞ்சம் அதிர்ச்சிய ஜீரணிக்க 5,6 பேர் மட்டுமே பாத்தாலும், அவுங்களும் பாவம் தான - மூணு நாள் டைம் குடுத்து, திங்கள் கிழமை அப்லோடுகிறேன்.


Facebookers..

17 comments :

  1. பிரமாதமான பதிவு.. அட்டகாசம்.. பாத்துட்டு வந்து மீதி சொல்றேன்..

    ReplyDelete
  2. ஐய்ய்யா... 60நிமிடமும் கொயந்தயவே பாக்க வேண்டிய கொடுமை இல்லை......

    ReplyDelete
  3. போச்சா...... மகிழ்ச்சியெல்லாம் கொஞ்ச நேரந்தான் போலயே..........................

    ReplyDelete
  4. கதவை திற. காத்து வரட்டும்

    ReplyDelete
  5. என்னது... 14 வயசுல டீனேஜில் எண்டர் ஆகுறாரா?

    ReplyDelete
  6. @ காஸ்ட்ரோ கார்த்தி & தமிழினியன்

    தங்களது மேலான கருத்திற்கு மிக்க நன்றி.....

    @பாலா....
    நா பேசுறத தவிர வீடியோவுல எல்லாத்தையும் பாருங்க....

    13 வயசு ஒரு flowல மாறிருச்சு...

    ReplyDelete
  7. தலைவா வாயில புரியாத பெயர்..இப்போ தான் முதல் முறையாக கேள்விப்படுகிறேன்(என் சினிமா(உலக) அறிவு அவ்ளோ தான் )..
    ஆனால் வீடியோவ முழுதாக பார்த்தேன் என்று கூறமாட்டேன்.அரை பகுதி பார்த்து மிகுதி பகுதி கேட்டேன்!!
    நிறைய தகவல்கள்..இன்னமும் கொஞ்சம் பாக்கி இருக்கு பார்க்க..
    இன்னிக்கு இது பார்த்தே நெட் கனெக்சன் ஸ்லொவ் ஆயிரிச்சு..நாளைக்கு பார்க்கலாம்.அத்தோடு முழுதாய்
    மீண்டும் ஒரு தடவை "கேட்கணும்".அப்போ தான் கொஞ்ச விசயமாச்சும் மனசில நிக்கும்.வாழ்த்துக்கள் தல!

    ReplyDelete
  8. @மைந்தன் சிவா...
    நாளிக்கு பாத்துட்டு(?) சொல்லுங்க....நன்றி பாஸ்.

    ReplyDelete
  9. ஆங்... "எக்ஸாம்" அப்டீன்னு ஒரு படம். ஒரு ரூமுக்குளே தான் நடக்குமாம். ஆனா செமையான சுவாரசியமா இருக்குமாம், அந்த படத்த பாரு மச்சின்னு ஒரு நண்பன் சொன்னான், அது என்னடா ரூமுக்குள்ள‌ சுவாரசியமா இருக்கிறது? நாளைக்கு வருதுடா ஒரு ரூம் வீடியோ.. அப்டீன்னு சொல்லி அந்த படத்தோட டவுன்லோடு போட்டு வீணாக்காம , என்னோட டேட்டாவ சேமிச்சு வச்சிருந்தேன் வீடியோ பாக்கிறதுக்கு. ஐயா.. வீடியோ வந்தாச்சி... இனிமே தான் பாக்க போறேன்.. பாத்துட்டு சொல்லுறேன்.

    ReplyDelete
  10. அண்ணே செம்மையா இருக்கு... அந்த கோர்ட்டு..அப்புறம் டை... செமையான கெட்டப்பு அண்ணே.. ஆனாலும் போங்கண்னே சில நிமிஷம் மட்டுமே பேசிட்டு போய்டீங்க.. அதுக்கு அப்புறம் யாரோ ஒராளு பேசுறாரு..பேசுறாரு.. பேசிக்கிட்டே இருக்கிறாரு.. தூங்கிட்டேன். யாரோ ஆஸ்மா டாக்டர் போல இருக்கு...

    ReplyDelete
  11. சாரிண்னே.. தொடர்ந்து பாக்கமுடியல... அவரு செமினரி போனவரைக்கும் தான் பாக்க முடிஞ்சுது. மீதிய பாத்திட்டு சொல்லுறேன்.

    ReplyDelete
  12. நல்ல முயற்சி:-)

    இண்டர்நெட் ஸ்பீட் கம்மியா இருக்கிறதால கொஞ்சம் கொஞ்சமா ஸ்ட்ரீம் ஆகி பார்க்கிறதுக்குள்ள கடுப்பாகி நிறுத்திறலாமான்னு தோணுது:-) ஆனா நிச்சயம் இவ்வளவு விஷயத்தையும் எழுதியிருந்தீங்கன்னு சுவாரசியமா படிச்சிருப்பேன்...

    கொஞ்சம் கையை காலை ஆட்டி பேசுங்க.. நீங்களே சோகமா பேசற மாதிரியே இருக்கு:-)

    வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. வணக்கம்...

    எனக்கு இட்ட கருத்துரையை படித்தேன்...

    சில விளக்கங்கள்...

    (http://saravanaganesh18.blogspot.in/2012/08/martin-scorsese-1-european-cinema-video.html) இந்தப் பதிவில் கருத்துரை இட்டது நான் இல்லை... Profile பாருங்கள்... (பெயரின் மேல் சொடுக்கவும்) Profile Not Available என்று வரும்...

    (http://saravanaganesh18.blogspot.in/2012/07/the-psychology-of-dark-knight.html) இது உங்களின் முந்தைய பதிவு... எனது புகைப்படத்துடன், எனது தளத்திற்கான லிங்க்வுடன் இருக்கும்... Profile பாருங்கள்... (பெயரின் மேல் சொடுக்கவும்) இது தான் உண்மை... மேலும் விவரங்களுக்கு அதில் கைப்பேசி எண் உள்ளது... விருப்பப்பட்டால் பேசவும்...

    உங்களின் mail id தெரியாதலால் இதில் சொல்கிறேன்... நன்றி...

    ReplyDelete
  14. நல்ல முயற்சி தல! டைம் பெருசா இழுக்கறதால முழுசா பார்க்க முடியுமான்னுதான் தெரியலை.. அங்கங்கே விட்டு விட்டுப் பார்த்தேன்..

    பிளாக்-வைட் எஃபெக்டுல்லாம் போட்டிருக்கீங்க.. முதல் பதிவை விட இது ரொம்ப முன்னேற்றமாயிருக்கு. எஸ்.கே சொன்ன மாதிரி கையசைவுகளும் இருந்தால் நல்லா இருக்கும்! Noise Supression பண்ணினீங்களான்னு தெரியலை.. இல்லாவிட்டால் பண்ணவும். நீங்களும் தாழ்வாக கதைப்பதால் தெளிவின்மை :)

    முழு வீடியோவும் பார்த்த பின் கருத்தை தெரிவிக்கிறேன்.



    * 42வது நிமிஷத்துலயெல்லாம் பயங்கரமா நாய் குலைக்குது.. எங்க கான்சென்ட்ரேட் பண்ணனும்னே தெரியலை! :)

    ReplyDelete
  15. //42வது நிமிஷத்துலயெல்லாம் பயங்கரமா நாய் குலைக்குது//

    அது வீடியோ ஆரம்பிச்ச ரெண்டாவது நிமிஷத்துலயே குரைக்க ஆரம்பிச்சிடுச்சி.

    ReplyDelete
  16. ஆ இப்ப ஞாபகம் வருது.....உங்க வீட்டுக்கு வந்தப்ப இங்க உட்காந்துதான் தோசை சாப்பிட்டேன்

    ReplyDelete
  17. @ கிஷோகர்....

    முழு வீடியோ பாத்துட்டு எதா இருந்தாலும் சொல்லுங்க....நன்றி

    @எஸ்.கே...
    பாஸ்...எவ்ளோ விஷயங்கள எழுத ரொம்ப நாள் ஆகும்...வேற மாதிரி பண்ணலாமேனு எடுத்த முயற்சிதான் இது. போன வீடியோ பாருங்க - கை,கால ஆட்டி பேசுனதுக்குதான் ஓட்டி எடுத்துட்டாங்க


    @திண்டுக்கல் தனபாலன்.
    விளக்கத்திற்கு நன்றி...விஷமிகளின் வேலை தான் அது

    @JZ
    ஹி..ஹி..நாய்ஸ் தான.....அடுத்த முறை சரி செய்யபாக்குறேன்...
    முழுசா வீடியோ பாத்துட்டு(?) சொல்லுங்க...

    @பாலா
    நல்ல கருத்து..ஒரு நல்ல விஷயம் கூட கண்லபடலையா ??

    @மோகன்..
    ஆம் அதேதான்..நன்றி....

    ReplyDelete