Monday, March 26, 2012

கடவுள்களும் மதங்களும் geneகளின் சேட்டையா - 1


பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையேஒரு பீங்கான் தேநீர்க் கோப்பை நீள்வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று நான் கூறினால் எவராலும் அக்கூற்றை தவறென்று நிரூபிக்க முடியாது -  நமது சக்திவாய்ந்த தொலைநோக்கிகளால் கூட கண்டறிய முடியாத அளவிற்கு சிறிய கோப்பை அது என்ற வார்த்தைகளை நா எனது கூற்றில் கவனமாக சேர்த்திருந்தால் ஒழிய. சரியாராலும் இக்கூற்றை தவறென்று நிரூபிக்க இயலவில்லையே என்று தொடர்ந்து இதை சொல்லிக் கொண்டிருந்தால்அப்படியொரு கோப்பை இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதே கூட நமது பகுத்தறிவின்படி சகிக்கவே முடியாத ஒரு அனுமானமாகத் தானே இருக்க முடியும். ஒருவேளைஎப்படியானாலும் - இதுபோன்றதொரு தேநீர்க் கோப்பையின் இருப்பை பழங்கால நூல்கள் ஊர்ஜிதப்படுத்தியிருந்தால்ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையின் போதும் இந்தக் கூற்று புனிதம் பொருந்திய உண்மையாக போதிக்கப்பட்டிருந்தால்பள்ளிக் குழந்தைகளின் மனதில் தொடர்ச்சியாக இவ்விஷயம் கற்பிக்கப்பட்டிருந்தால்அறிவு எழுச்சி மிக்கதொரு காலகட்டத்தில் இவ்வாறான கோப்பையின் இருப்பை சந்தேகிப்பதே கூட மனப்பிறழ்வின் அடையாளமாகவும்சந்தேகிப்பவர் மனநல மருத்துவரின் கவன ஈர்ப்புக்கும் ஆளாக நேரிடும்.

மேலிருக்கும் வார்த்தைகள் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் புகழ் பெற்ற "Russel's Teapotஎன்ற ஒப்புமை ஆகும்.  
Nobody can prove that there is not between the Earth and Mars a china teapot revolving in an elliptical orbit, but nobody thinks this sufficiently likely to be taken into account in practice. I think the Christian God just as unlikely. 
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் விழுந்த முதல் பொறி, நெருப்பினுடையதே. நெருப்பு - perhaps the greatest discovery of mankind. நெருப்பின் கண்டுபிடிப்பு தாமதப்பட்டுப் போயிருந்தால், பல நிகழ்வுகள் தள்ளிப் போயிருக்கலாம். யார் கண்டது. சாப்பிடும் பொருட்களை அதில் வாட்டுதல்-இருள்,குளிரை சமாளித்தல்-ஆயுதம் செய்யவென்று பல அதிமுக்கிய நிகழ்வுகளுக்கு நெருப்பே பிரதானம். அதனினும் முக்கியமாக ஒரு நிகழ்வை-அட, கற்களை உரசினால் டக்கென்று பொறி வருகிறதே-தன்வசப்படுத்த முடிந்த பெருமை உளவியல் ரீதியாக மிகப் பெரும் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும். அதனைத் தொடர்ந்து புலம் பெயர்தல் - குழுக்கள் உருவாகுதல் என்று ஆரம்பித்து, படிப்படியான மனித இன வளர்ச்சியின் சுழற்சி குறித்து ஆறாம் வகுப்பிலேயே படித்திருப்போம்(திருக்க வேண்டும்). 

மனித இனம் அதன் வளர்ச்சியின் ஓட்டத்தில், பல புதிய விஷயங்களை எதிர்கொள்ள ஏதுவாக இந்த புலம்பெயர்வுகள் இருந்தன. ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம். அபாரமான சிந்திக்கும் திறன் கொஞ்ச கொஞ்சமாக வளர ஆரம்பித்தது இதுபோன்ற அனுபவங்களின் அடிப்படையிலேயே.இதை ஏதோவொரு தேவ தூதரோ வேற்றுகிரகவாசியோ வந்து நிகழ்த்திவிட்டு செல்லவில்லை.முழுக்க முழக்க பரிணாம வளர்ச்சியின் விளைவே இது.சுமார் 3,00,000 கிமுவின் போதே நெருப்பு பரவலாக உபயோகத்தில் இருந்தது என்று பல ஆராய்ச்சிளார்கள் கூறுகின்றனர். ஆகஅன்று தொடங்கி எத்தனை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் - எத்தனை விஷயங்களை மனித இனம் கடந்து வந்திருக்கும். எத்தனை புதிய விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும். இவை எல்லாவற்றையும் எதிர்கொள்ள துணை புரிந்தது, Adaptation - சூழ்நிலைக்கு தக்கவாறு தகவமைத்துக் கொள்ளும் திறன். இது இயற்கையாகவே எல்லா உயிரினத்திற்கும் உண்டு, ஒரு செல் உயிரி முதல் பல செல் உயிரினம் வரை. இந்த தகவமைக்கும் பண்பே மனித இனத்தின் நடவடிக்கை சார்ந்த வளர்ச்சிக்கு(behavioral evolution) முக்கிய காரணி.அன்று நிகழ்ந்த பல உளவியல் சார்ந்த மாற்றங்கள், இன்றளவும் நமது ஜீன்களில் உயிர்ப்புடனேயே இருக்கிறது.

பல மானுடவியளாலர்களின கூற்றப்படி, மனித இனம் குழுக்களாக வாழ ஆரம்பித்து ஒரு மாதிரியான வாழ்க்கை முறைக்கு தங்களைத் தகவமைத்துக் கொண்ட பின்தான் சடங்குகள் - அது சார்ந்த கடவுள்கள் என்ற விஷயங்கள் தோன்ற ஆரம்பித்தது. இந்த சடங்குகளுக்கும் கடவுள்களுக்கும் பின்னணியில் இருந்தது பயம், பயம் மட்டுமே. Fear of the unknown. பெரும்பாலும் இயற்கை நிகழ்வுகள் குறித்த பயம் தான் முழுமுதல் காரணம். பின்னர் விலங்குகள். சில சடங்குகள் செய்தால் இதிலிருந்து தப்பி விடலாம் என்று ஆதி மனிதர்கள் ஆரம்பித்த விஷயங்கள் தான் மதம், அதற்குறிய சடங்குகள் என்று ஒரு வடிவெடுக்க வழிவகுத்தது. இயற்கை குறித்த பயம், மிரட்சி என்றால் ஆதி காலத்தில் என்னவாக இருந்திருக்க முடியும்? பல விஷயங்கள் இருந்தாலும், முதலில் சூரியன் குறித்த பயமே பிரதானமாக இருந்திருக்கலாம். என்னடா இது, இதனை ஏறெடுத்துக் கூட பல சமயங்களில் பார்க்க முடியவில்லையே - தோன்றுகிறது - மறைகிறது - மறுபடியும் தோன்றுகிறது என்று, இந்த சுழற்சி ஆதி மனிதர்களுக்கு புதிராகவே இருந்திருக்கும். இந்த தினசரி நடவடிக்கைகளுக்கு அவர்கள் பழகியிருக்கும்பொழுது, கிரகணங்கள் ஏற்படும் காலங்களை, குறிப்பாக சூரிய கிரகணம் - நினைத்துப் பார்ப்போம். ஆதி மூளையில் அது எத்தகையதொரு பீதியை ஏற்படுத்தி இருக்க வேண்டும். நிமிடக் கணக்கில் நீடித்த கிரகணங்கள் நிச்சயம் பெரும் பயத்தை உண்டு பண்ணியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அடுத்ததாக மின்னல் - இடி. இன்றுவரை பலரையும் பயமுறுத்தி வரும் இவ்விஷயங்கள், அக்காலகட்டத்தில் மிகுந்த பயத்திற்குரியதாய் இருந்திருக்கும் என்பது தெளிவு. ஆக, சூரியன், வானம் - அது சார்ந்த நிகழ்வுகள் தொன்றுதொட்டே மனிதர்களுக்கு புதிர் நிறைந்த ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. 
இதில் இன்னொன்றை கவனித்தோமானால், உலகின் பெரும்பாலான மதங்களின் கடவுள்கள், வானம் - வெளி (space) சார்ந்த ஒன்றிலிருந்தே விவரிக்கபட்டிருப்பர். கடவுள் தோன்றினார் என்ற யாராவது சொன்னால், அனிச்சையாக பல பேர்களின் கழுத்து மேல் நோக்கியே திரும்பும். கடவுள் தோன்றினார் - பிரசன்னமானார் என்பதே கூட வெளி சார்ந்த ஒரு விவரிப்பு தானே.
இந்த வானம் - வெளி சார்ந்த விஷயங்கள் மீது ஆதி மனிதனுக்கு இருந்த தீராவேட்கையை அவர்களது மேலிருந்து ஒளி இறங்குவது போலவோ,அமானுஷ்ய உருவங்கள் இருப்பது போலவோ வரைந்த(?) அல்லது செதுக்கிய குகை ஓவியங்கள் - சுவர் சித்திரங்கள் - சிற்ப வேலைகள் போன்றவைகளிலிருந்து நாம் மிகச் சுலபமாக உணரலாம். எப்பொழுதுமே வானம் அவனுக்கு எட்டா தொலைவு தான். மலை - கடல் - காடு என்று எல்லாவற்றுடனும் அவனுக்கு ஒரு physical contact இருந்தது. ஆனால், வானத்துடன் மட்டும், mere psychological contact. 

ஒருபுறம் பயம் இருந்தாலும், வானம் -> வானியல் சார்ந்த நிகழ்வுகளை எவ்வடிவிலாவது பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதலும் வளரத் தொடங்கியது. கி.பி.15,000 போன்ற காலகட்டத்திலேயே நிலவின் வளர்பிறை - தேய்பிறை சுழற்சியினை (lunar calendar) வரைந்து வைத்துள்ளனர். Stonehenge மாதிரியான விஷயங்கள் நிறுவப்பட்டு வந்தன. சில கட்டுமானங்களின் பயன் தெரியாவிட்டாலும், பெரும்பாலும் இதுபோன்ற அமைப்புகள் அனைத்தும் நட்சத்திரங்கள்சூரியன்நிலவு போன்றவைகளின் இடங்களை - திசையை கண்டறியவே (sort of a calendar) கட்டப்பட்டது (உம். நாஸ்கா லைன்ஸ்). தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில், வானியல் நிகழ்வுகள் கூர்மையாக கவனிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஆவணப்படுத்தப்பட்டன. அன்றிலிருந்தே வெகு சீராக ஏதோவொரு வகையில் வான்வெளியை கூர்ந்து நோக்கும் பழக்கம் தொடங்கியிருக்கிறது. 

ஆனால், ஒருகட்டத்தில் வானியல் நிகழ்வுகளை தங்களது வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் விஷயமும் நடைமுறைக்கு வந்தது (Astrology). ஒருசில பேர் அறிவியல் ரீதியாக இவ்விஷயங்களை அணுக முற்பட்டாலும், பெரும்பாலானவர்களுக்கு கடும் மழை, புயல், வெள்ளம, எரி நட்சத்திரம் போன்ற இயற்கை நிகழ்வுகள் குறித்து பயம் இருந்தபடியால், சடங்குகள் ரீதியிலான வழிமுறையே அவர்களுக்கு ஏதுவாக இருந்தது. இந்த சடங்குகளைச் செய்தால், இதிலிருந்து தப்பிக்கலாம் எனும் போது, சர்வ நிச்சயமாக அந்த வழியையே அவர்கள் தேர்ந்தெடுத்ததில் தவறோ - வியப்போ இல்லை. Emergency exit. 

இந்த இயற்கை - வானியல் குறித்த நிகழ்வுகளை அக்காலகட்டத்தில் எவ்வாறு கையாண்டனர் என்பது மிக மிக முக்கியமானதொரு விஷயம். காரணம், இதன் பின்னணியில் மதம் பெரும் பங்காற்றியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 
  • இதுகுறித்த மிக முக்கியமானதொரு கட்டுரை 1795ஆம் ஆண்டிலேயே எழுதப்பட்டுள்ளது. The History of Astronomy by Adam Smith. 
  • யார் இந்த ஆடம் ஸ்மித் ? ஸ்காட்லாந்தைச் சேர்ந்த, 18ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமானதொரு சமூக தத்துவியலாளர். 
  • Father of economics என்று பலர் இவரை அழைக்கின்றனர். அவரின் இந்தக் கட்டுரை மிக உன்னிப்பாக - வானியல் சார்ந்த மூட பழக்கங்களையும் மனிதர்களிடம் அந்நிகழ்வுகள் ஏற்படுத்திய தாக்கத்தையும் வெகுவாக பதிவு செய்திருக்கிறது.
  • அவர் எதனடிப்படையில் இவ்விஷயத்தை அணுகினார் எனபது குறித்து சர்ச்சைகள் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் மிகச் சிறந்த அறிவியல்பூர்வமான அணுகுமுறை இதிலிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். 
  • இவரது புகழ் பெற்ற மற்றொரு புத்தகம் குறித்து - The Wealth of nations - எகனாமிக்ஸ் படித்த நண்பர்கள் பின்னுட்டத்தில் விவரித்தால் நல்லது. ஆனால், தெரிந்தோ - தெரியாமலோ அப்புத்தகத்தில் பல கேபிட்டலிச கருத்துகள் இறைந்துகிடப்பதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன் பொருட்டே Father of capitalism என்றழைக்கப்படுபவர்.

நூற்றாண்டுகள் செல்லச் செல்ல, அறிவியலின் அளப்பரிய வளர்ச்சியால் மதம்  கடவுள் குறித்து பார்வைகள் முற்றிலும் மாறிப் போனது. வெளி - வளி மண்டலம் - சூரியன் - அண்டம் போன்றவைகள் பற்றிய நமது பார்வை விரிவடைய விரிவடைய, அதன் மர்மங்கள் - சூட்சமங்கள்  - பிரமாண்டம் ஓரளவிற்கு புரிய ஆரம்பித்தது (ஆனால், இன்னும் அதில் நாம் முழுமையடவில்லை. முடியுமா என்பதும் கேள்விக்குறியே).அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவந்த போதிலும், மனித மூளையில் அளப்பரிய அளவிற்கான radical change ஏற்பட வழிவகுத்த போதிலும், இன்னும் பல வகைகளில் மதங்களின் பெயரால் சில (போலி)நம்பிக்கைகள் உலா வந்துகொண்டே தான் இருக்கின்றன. சுருக்கமாக இதுபோன்றவைகளை "அற்புதங்கள்" என்று அதனை நம்புகிறவர்கள் அழைக்கிறார்கள். 


இதை அவர்கள் நம்புவது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அவரவர் தனிப்பட்ட விஷயம். ஆனால், அவர்கள் நம்பும் விஷயங்களை அறிவியல் எப்படி பார்க்கிறது என்பது குறித்து பல நாட்களாக எழுத நினைத்ததன் விளைவே இந்த மிகச் சிறிய முயற்சி. Everyone will(should) have their own ideology. அதுபோல எனக்கிருக்கும் ஐடியாலஜியின் அடிப்படையில் இவ்விஷயங்களை நான் எப்படி பார்க்கிறேனோ அதை அப்படியே இங்கே பகிர்கிறேன். That's it. 

இதற்கு குறிப்புகள் எடுக்க உதவிய நூல்கள், டாகுமென்டரிகள் பற்றிய பட்டியலை(ஹி..ஹி..) கடைசியாக வெளியிடுகிறேன். அதேபோல் தலைப்பிற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்பது போன்ற முன்முடிவுகளுக்கு இப்பொழுதே வர வேண்டாம். சற்றே அடுத்த பதிவு வரை பொறுக்கவும்
Facebookers..

20 comments :

  1. பதிவு போட்டு பாத்து நிமிஷம் ஆகுது இன்னும் ஒரு கமெண்ட்டையும் காணோம்.. பசங்களுக்கு பயம் விட்டு போச்சுனே.. உங்க Biography ய ஒரு பதிவா போடுங்க.. அப்போதான் பயம் வரும்..

    ReplyDelete
  2. நா என்ன பிரபல பதிவரா......உடனே கமென்ட் அள்ளுறதுக்கு. ஏதோ வழக்கம் போல ஒண்ணு ரெண்டு பேர் கமென்ட் போடுவாங்க. அம்புட்டுதான்.

    அத்த விடுங்க, உங்கள கமென்ட்ல "பாத்து நிமிஷம் ஆகுது" இது தற்செயலா நிகழ்ந்தா.........இல்ல, எதுனா உள்குத்தா ??

    ReplyDelete
  3. என்னோட கருத்து - அறிவியலால சில விஷயங்களை விளக்க முடியாது. It's just a postulate. ஏன் இதுன்னு கேட்டா, அது அப்புடித்தான்னு, மதவாதிகள் மாதிரி அறிவியலும் சில சமயம் பேசுவது எனக்கு தெரியும்.

    கடவுளும் மதங்களும் ஜீன்களின் சேட்டையா? இந்தக் கேள்வியை என்கிட்ட கேட்டா, ஒரு 65% அப்புடித்தான்னு சொல்வேன். பாக்கி 35%? அது அனுபவிச்சா தான் புரியும்னு தோணுது. காரணம், நான் அடிப்படையில் நாத்திகனா இருந்தாலும், ஆஸ்திகம் என்பதையோ அல்லது ரெண்டுக்கும் இடையே இருக்கும் agnostic மனநிலையையோ நான் தப்புன்னு சொல்லமாட்டேன். எப்புடி நாத்திகம் என்பது ஒரு அனுபவமோ, அப்படியே ஆத்திகமும் என்பது என் கருத்து.

    ரமணர் போன்றவர்கள், அவர்களது ஜீன்களின் சேட்டையால் கோவணத்துடன் அமர்ந்துகொண்டிருந்தார்கள் என்பது என்னைப்பொறுத்தவரையில் ஒப்புக்கொள்ளமாட்டேன். காரணம், ரமணர், அரவிந்தர் போன்றவர்கள், தங்களைக் காணவந்தவர்களின் இறந்தகாலம், எதிர்காலம் ஆகியவற்றை அப்படியப்படியே உரைத்திருக்கிறார்கள் (உடனே, அதுக்கு எவிடென்ஸ் இருக்கான்னு கேட்கக்கூடாது. அப்புடிப்பார்த்தா, சமகாலத்தில் வாழ்ந்த ஒருவர், என்னாண்டையே அப்புடி சொல்லிருக்காரு. சும்மா ஆடிப்பூட்டேன்).

    பட், என்னைப்பொறுத்தவரை, எவனோ கடவுள் அந்தரத்துல இருந்து நம்மைப் பார்த்துக்கினே இருக்கான் என்பதை நம்ப முடியாது. வாழ்க்கை, நாம் செலக்ட் செய்யும் பாதைகளிலிருந்தே உருவாகிறது. அம்புட்டுதேன் என் கருத்து.

    ஏலியன், லொட்டு லொசுக்கு எல்லாம்? கண்டே புடிக்க முடியாத ஒரு விஷயத்தை மர்மத்தோடு முடிச்சுப்போடுவதே மனித இயல்பு. யூனிவர்ஸ்ல, மனிதன் போகமுடியாத தூரங்கள்தான் 99%. அந்த ஏரியாக்களை மனிதன் சென்று அடைவதற்கு, இன்னும் 9999999999 லட்சம் வருடங்கள் ஆகும். அதுவரை, ஏலியன் வாரான்... தூக்கிக்கினு போறான்...ன்னு பேசிக்கினே இருக்க வேண்டியதுதான்

    ReplyDelete
  4. இந்த பாதிவுக்கும் நமக்கும் ரொம்ப தூஊஊஊராம்

    ReplyDelete
  5. கொயந்த ஈஸ் டைப்பிங் சம்திங் லாங் அய் திங்க்

    ReplyDelete
  6. நல்ல கட்டுரை

    ReplyDelete
  7. @Rajesh Da Scorp

    இதுல சில விஷயங்கள் பத்தி நாளை வரப் போகும் பதிவுல எனக்கு தோன்றியவைகள சொல்லியிருக்கேன். அதுனால இப்போதைக்கு சுருக்கமா என் கருத்த சொல்லிறேன்

    - ஆன்மிகம் அனுபவம் - தேடல் இதுகுறித்து அறிவியல் விளக்க ஒண்ணுமே இல்லையினு நினைக்கிறேன். இது முழுக்கு முழுக்கு தனிப்பட்ட அனுபவங்களின் - தேடலின் அடிப்படையில் நிகழ்வது.

    - // அப்புடிப்பார்த்தா, சமகாலத்தில் வாழ்ந்த ஒருவர், என்னாண்டையே அப்புடி சொல்லிருக்காரு. சும்மா ஆடிப்பூட்டேன் //

    உங்ககிட்ட சொன்னவரின், அல்லது இதுமாதிரி எனக்கு நடந்தது என்று நினைப்பவரின் - சிந்தனை ஓட்டம் எப்படி இருந்திருக்கும் - அதுவரைக்கும் அவர் எதையெல்லாம் நம்புனாரு - சின்ன வயசுல இருந்து அவர் வளர்ந்து விதம மாதிரியான பல கேள்விகள அறிவியல் முன்வைக்குது. ஏன்னா சப் கான்ஷியஸ் மைன்ட்ல சின்ன வயசுல கேட்ட பல நிகழ்வுகள் - கதைகள் இருந்திருக்க வாய்பிருக்கு. ஆகா, இந்த மனநிலைக்கு காரணம் பெரும்பாலும் ஜீன் தான்னு நவீன அறிவியல் சொல்லுது. இது அறிவியல் முன்வைக்கும் ஒரு - பரிசோதித்து நிரூபிக்கப்பட்ட விஷயம்.

    Again, இதை நம்புறதும் நம்பாததும் அவரவர் விருப்பம் சார்ந்தது. இதுபோன்ற விஷயங்கள் மன நிறைவையோ ஒரு பிடிப்பையோ தெளிவையோ தரும் போது, அத்த பின்பற்றுவதை யாராலும் தவறு என்று சொல்ல முடியாது தான.

    - மேலும் சில விசயங்களை சொல்ல நினைகிறேன். அத்த நாளை பதிவுல சொல்லியிருக்கேன்.

    ReplyDelete
  8. @டெனிம்
    நன்றி...


    @ஆள்தோட்ட பூபதி
    மிக்க நன்றி

    @Amizhthini
    நன்றி பாஸ்

    @ராஜேஷ்
    ஆங்..சொல்ல மறந்தது.....இது ஏலியன்ஸ்கக்கா ஆரம்பிச்ச பதிவு. வேற ரூட்ல இதுக்கு வரலாம்ன்னு தோணிச்சு

    ReplyDelete
  9. பழய தொடர்லாம் என்னாபா ஆச்சு எனிவே நல்லாகீது ப்ளீஸ் கன்டினியூ திஸ் :)))

    ReplyDelete
  10. கடந்த காலத்தை சொல்ல முடியும் (சய்ண்டிஃபிக்காவே). ஏன்னா உங்க இறந்த காலத்தை.. உங்களுக்கு முன்னாடி இருக்கறவர்கிட்ட சொல்லிகிட்டு இருக்கறதே நீங்கதான்.

    ஆனா எதிர்காலத்தை எந்தக் கொம்பனாலும்(!) சொல்ல முடியாது. அது கடவுளேயானாலும். நம் எதிர்காலம் பட்டர்ஃப்ளை எஃபெக்ட்டால் தீர்மானிக்கப்படுது. சுனாமில செத்த லட்சக்கணக்கான பேரை எந்த ‘எதிர்கால’ கணிப்பவரும் காப்பாத்தலை (அந்த யுட்யூப் வீடியோ.. வால்பையன் ஃப்ரெண்டைத் தவிர :) :)).

    ராஜேஷுக்கு நடந்தது.. எப்படினா... “எந்த ஜோசியர் கிட்ட போனாலும்.. முதல்ல உங்க கடந்த காலத்தை.. அப்டி---இப்டி சரியா சொல்லி.. முதல்ல உங்களை நம்ப வைப்பாங்க.

    அடுத்துதான் எதிர்காலம். அப்புறம் என்ன சொன்னாலும் நம்புவீங்க. அப்படியே எதிர்காலத்தை சொன்னாலும்.. ஒரு மாதிரி மேம்போக்காதான் சொல்லுவாங்க”.

    எதிர்காலம்ன்னா.. எல்லாமே எதிர்காலம்தான். இங்கே... அந்த சமகாலத்தவரை.. நான் எத்தனை மணிக்கு நாளைக்கு டாய்லெட் போவேன்னு கண்டுபிடிச்சி சொல்லச் சொல்லுங்க பார்க்கலாம். அது ஏன்.. எல்லாரும்.. எப்ப கல்யாணம் நடக்கும், எப்ப குழந்தை பிறக்கும்னு... ‘ஒரு 2-3 வருசம் தள்ளி நடக்கும் நிகழ்ச்சியை மட்டும் “கணிச்சி” சொல்லுறாங்க?

    எதோ ஒரு ஊர்ல.. “ஓலைச்சுவடி” எடுப்பானுங்களே தெரியுமா? அந்த டெக்னிக் எப்படி வொர்க்கவுட் ஆகுதுன்னு யோசிச்சிப்பாருங்க. :) :)

    ReplyDelete
  11. ஒண்ணும் புரியல...தார்க்காவ்ஸ்கி படம் போல இருக்கு உங்கள் பதிவு.

    ReplyDelete
  12. சுவாரஸ்யமான டாபிக் ஒன்றை கட்டவிழ்த்து விட்டிருக்கிறீர்கள்.. தொடர் போகும் பாதையில் சரமாரியான விவாதங்கள் வருமென எதிர்பார்க்கிறேன்..

    //இது "ஏலியன்ஸ்கக்கா" ஆரம்பிச்ச பதிவு//-
    தவறுதலாக இப்படியெல்லாமா "டைப்" பண்ணப்படும்??

    ReplyDelete
  13. எனக்கு ரொம்ப பிடிச்ச டாபிக்.., நெருப்பை கண்டுபிடிச்சது தான் மனுஷங்க உள்ள பிரிவினைக்கும் தொடக்கமா இருந்து இருக்கலாம்.., அதை கண்டுபிடிச்ச குழு தங்களை Superior -ஆக நினைச்சு இருக்கலாம்.., மற்ற இனங்கள் மேல ஆயுதமா கூட பயன் படுத்தி இருக்கலாம்.., அதுவே கடவுளின் தொடக்கமா இருக்கலாம்.., இன்னமும் நமக்கு நெருப்பு கடவுள் தான !! இது என்னோட Wild Guess தான் கண்டிப்பா ப்ரூஃப் பண்ண முடியாது...

    //எதோ ஒரு ஊர்ல.. “ஓலைச்சுவடி” எடுப்பானுங்களே தெரியுமா? அந்த டெக்னிக் எப்படி வொர்க்கவுட் ஆகுதுன்னு யோசிச்சிப்பாருங்க. :) :)//

    அது வைத்தீஸ்வரன் கோவில்..,நா படிச்சுமுடிச்சிட்டு வேலை இல்லாம சுத்திக்கிட்டு இருந்தப்போ அங்க போய் நாடி ஜோசியம் பாத்தா வேலை கிடைச்சிடும்ன்னு சொன்னாங்க அனேகம் பேர் :)))

    ReplyDelete
  14. ரொம்ப பிடிச்ச டாபிக்னாலும் ஒன்னும் பெருசா தெரியாது. தொடர் பதிவு ஆரம்பிச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ் பாஸ்..

    ஒன்லி 3 பார்ட்டா ??

    ReplyDelete
  15. @ பாலா

    ஒருவேள யாராவது ஒருத்தர் உங்க எதிர்காலத்த கணிச்சு சொல்லிட்டா அப்ப என்ன உங்க முன்முடிவு மாறுமா ??

    அப்ப, இதுபோன்ற Supernatural விசயங்கள் சார்ந்துதான் நம்ம முடிவு மாறுமா ? Do u think people r that much vulnerable ?

    நா சரியா எழுதியிருக்கேனான்னு தெர்ல..குழப்புன மாதிரி எனக்கே இருக்கு.

    ReplyDelete
  16. @ உலக சினிமா ரசிகன்
    அடுத்த பதிவு படிச்சா................(சுத்தமா புரியாம கூட போக வாய்ப்பிருக்கு)....

    @JZ
    அந்த பிழை, சகவாச தோஷம்.........

    ReplyDelete
  17. என் எதிர்காலத்தை எத்தனையோ பேர் இதுவரைக்கும் கணிச்சிருக்காங்க.

    ஒரு வார்த்தை.. அட்லீஸ்ட் ஒரு வார்த்தையாவது பலிச்சிருக்கனுமே?

    மத்த மேட்டர்ல என்ன கேட்க வர்றீங்கன்னு புரியலை.

    ReplyDelete
  18. நெருப்பை எப்படி கண்டுபிடித்தார்கள் , கண்டுபிடித்து மனிதனா? , குரங்கு போன்ற உயிரினமா ? இந்த சந்தேகம் எனக்கு நெடு நாட்களாக இருந்தது , இந்த காணொளியை காணும் வரை , இந்த காணொளியில் அந்த உயிரினம் சிக்கி முக்கி கல்லை கொண்டு நெருப்பு உருவாக்குவதை அற்புதமாக படம் பிடித்து உள்ளார்கள் ...
    http://www.youtube.com/watch?v=5Hx6y9hEuK0

    ReplyDelete
  19. hii.. Nice Post

    Thanks for sharing

    Best Regarding.

    More Entertainment

    For latest stills videos visit ..

    www.chicha.in

    ReplyDelete