இன்று பல கடவுள்கள் நிறைய "அற்புதங்களை" நிகழ்த்தித்தான் தங்கள் இருப்பை உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது. Survival of the fittest. இல்லையென்றால்சக்திமிக்கதொரு வேறொரு கடவுளைத் தேடி மக்கள் சென்று விடுவர். மூலவர்களுக்கே இந்த கதி என்றால் பூசாரிகளுக்குகாற்றிலிருந்து கோல்ட் வாட்ச் வரவழைத்த சாய்பாபா முதல் நடக்க முடியாதவர்களை நடக்க வைக்கும் பேர்வழிகள் வரை பல உதாரணங்களைக் கூறலாம். 

அந்தரத்தில் மிதக்க வைப்பேன் என்று யாராவது சொன்னால், அறிவியலை நம்பும் ஆட்கள், இதைப் பற்றி சட்டை செய்யக்கூட மாட்டார்கள். காரணம்மிக எளிது. அந்தரத்தில் மிதப்பது என்றால் - புவியீர்ப்பு விசை இருப்பது அறிவியல்பூர்வமான உண்மை. அதற்கெதிராக செயல்பட இன்னென்ன வழிமுறைகள் உள்ளன எனபது நமக்குத் தெரியும். ஆகஒரு நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைக்கெதிராக செயல்படும் போது - மிக அதிகமான சான்றுகள், நிரூபணங்கள் தேவை. ஒருவரும் இதுவரை உருப்படியான ஒரு நிரூபனத்தையும் தந்ததில்லை(ஏறக்குறைய எல்லா அற்புதங்களின் போதும் இதுதான் வாடிக்கை). ஆகவே இதுபோன்றதொரு action - based வழிமுறையை நம்பி இவர்கள் இறங்கியதால்அறிவியலின் பணி சுலபமாகப் போயிற்று. 

இதுவே ஒரு தனிப்பட்ட அனுபவமாக முன்னிறுத்தப்படும் போது?  இதுதான் மிகப் பெரிய சிக்கலே.எப்படியோ பல பேர் நம்புகின்ற அற்புதம் போன்ற விஷயங்கள் மெல்ல மெல்ல படர்ந்து குழுக்கள் சார்ந்த நம்பிக்கையாகஒரு மாபெரும் குமிழியாக உருவெடுக்கும் போதெல்லாம் அறிவியலின் துணை கொண்டு பல பேர் அக்குமிழியை உடைத்ததிருக்கின்றனர். ஆனால், தனிப்பட்ட அனுபவங்கள் என்று வரும் பொழுது, அறிவியல் அதை விளக்க ஒரு காலத்தில் சிரமப்பட்டது உண்மை. ஏனென்றால் இது முழுக்க முழக்க மூளை சார்ந்த விஷயம். முன்னர் எல்லாம் இந்தளவுக்கு மூளையின் நடவடிக்கைகளை நுணுக்கமாக பதிவு செய்யும் வசதிகள் இல்லை. கடந்த இருபது வருடங்களாக, அளப்பரிய தொழில்நுட்ப வளர்ச்சியினால் இந்தக் குறை தீர்ந்தது.சக்திவாய்ந்த எலெக்ட்ரான் மைக்ரோஸ்கொப்களை பயன்படுத்தினால் கூட, அது உமிழும் ஒளியானது மூளையை ஆராய இடையுறாக இருந்தததால், புறுஊதா கதிர்கள் கொண்டு இயங்கும் மிக மிக உன்னிப்பாக மூளையை ஆராயும் அளவிற்கு உபகரணங்கள் வந்து விட்டன. And the best part of science is, போதும் என்றே நினைக்காமல் இன்னும் இன்னும் என்று தொடர்ந்து ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பது. 
------------------------------- 
நேற்றிரவு கடவுள்(irrespective of religion) என்னுடன் அமர்ந்து Last temptation of jesus christ படம் பார்த்தார். நான் இதுபோன்றதொரு ஸ்டேட்மென்ட் விடுகிறேன். இதை எப்படி இல்லை என்று மறுப்பீர்கள் ? (மறுபடியும் ரஸ்ஸிலின் teapot உதாரணத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்). எத்தனை பேர் இதனை நம்புவார்கள் அல்லது குறைந்தபட்சம் சீரியசாகவாவது எடுத்துக் கொள்ள முயல்வார்கள். (இதே போன்றதொரு அறிக்கையை முக்கிய இடத்தில இருக்கும் ஒரு பிஷப் வெளியிடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்பொழுது எத்தனை பேர் இதனை நம்புவார்கள்எதனடிப்படையில் இவர்களது நம்பிக்கை மாறும் இந்த கோணத்தை வைத்தே பல பதிவுகள் எழுதலாம்)

மேல நான் சொன்ன பிரசன்னத்தை நம்பாதவர்கள் - நம்புகிறவர்கள்என்ற இரு பிரிவினரையும் தாண்டிநிச்சயம் ஒரு சாரர் எனது கூற்றை ஏற்றுக் கொள்ள சங்கடப்படுவார்கள் (கவனிக்க: சங்கடப்படுவார்கள்). கடவுள் குறித்த நம்பிக்கை இருந்தாலும்ஏன் இவர்கள் இதனை ஏற்க சங்கடப்பட வேண்டும் அவர்களின் மூளையில் எங்காவது ஒரு ஓரத்தில் – either knowingly or unknowingly - இது சாத்தியமில்லை என்று இதுகுறித்து சந்தேகத்தை (அ) தெளிவை இவர்களிடம் எழுப்பியது எதாக இருக்க முடியும் ?  

இந்த கேள்வியைப் பற்றி யோசித்துக் கொண்டே இருங்கள். கேள்வியை அப்படியே freeze செய்துவிட்டு அடுத்த பதிவில் தொடருவோம். இப்பொழுது கொஞ்சம் மூளையப் பற்றிப் பார்ப்போம். இது மிக மிக முக்கியம். படிக்க அசதியாகக் கூட இருக்கலாம். ஆனால், மூளை தூண்டுகிறது - மூளையில் பதிகிறது - அதை செய்கிறது இதை செய்கிறது என்று வெறும் வாயில் முழம் போடுவதை விட, தகுந்த தகவல்களுடன் பகிர்ந்தால் விஷயங்களை சொல்ல ஏதுவாக இருக்கும் என்ற ஒரே காரணம் தான்.
--------------------------- 
உடம்பின் மொத்த எடையில் வெறும் 2%. ஆனால் இயங்க, 25% சக்தியை எடுத்துக் கொள்கிறது. மூளை. இயற்கையின் உச்சகட்ட டிசைன் இதுதான் எனலாம் - எந்த உயிரினமாக இருந்தாலும் சரி. ஒருசில வரிகளில் இதன் மகத்துவத்தை விளக்குவது கடினம். நீங்களே, இதை படிப்பதை நிறுத்திவிட்டு....................சிந்தியுங்கள்.  

இன்றளவும் விஞ்ஞானிகளை அதிசயப்பட வைக்கும், மூளையின் இரண்டு அம்சங்கள், அதன் கணிக்க முடியாதன்மை (unpredictability) மற்றும் நெகிழ்வுத்தன்மை(elasticity). ஒரு சூழ்நிலைக்கு ஏற்றவாறு எப்படி அது ரியாக்ட் செய்கிறது என்று உறுதியாக அறுதியிட்டு கூறவியலாது. ஒவ்வொரு அனுபவத்திற்கும் ஏற்ப தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்கிறது. ஒவ்வொரு வகையான செயலுக்கும் ஒரு குறிப்பட்ட பகுதியை மூளையே நியமித்து வைத்திருக்கிறது.

மூளையை, அதன் செயல்பாட்டை வைத்து மூன்று பகுதியாக பிரித்திருக்கின்றனர். 
 • Hind brain
 • Limbic system
 • Neocortex
 அதன் துணைப் பிரிவுகளை படத்தில் காணலாம். 
தகவல்களை திரட்டியது இங்கிருந்து.               படம் எனது வேலை

Source: Click here

----------------------------------------------------------

நாம் நம் புலன்களின் வழியாக உள்வாங்கும் விஷயங்களை எப்படி மூளை தன்னகத்தே பதிவு செய்யும் ? சுருக்கமாக ஒரே பதிலில் சொன்னால், நியூரான்கள். மூளை + முதுகுத் தண்டு என்று மொத்தமான நரம்பு மண்டலம் அனைத்திருக்கும் மிக மிக அடிப்படையான விஷயம், இந்த நியூரான்கள் தான். Nothing but nerve cells. இந்த செல், தபால்காரர்கள் போல. உடம்பு முழுமைக்குமான செய்திகளை மூளையிலிருந்து அதற்குரிய இடங்களுக்கும் & vice - versa, எடுத்து செல்வதுதான் இதன் வேலை.


ஒரு ஸினாரியோவைப் பார்ப்போம். க்ளீன் ஸ்லேட்டாக இவ்விஷயத்தை அணுகினால் மட்டுமே விளக்க சுலபமாக இருக்கும். உங்கள் ரீடரில் இந்தப் பதிவைப் பார்க்கிறீர்கள். உங்கள் கண் பார்க்கிறது. உடனே கண், மின் அலைகளை(Electrical impulses) மூளைக்கு அனுப்பும். என்னவென்று ? இதுபோல கொழந்தையின் புதுபதிவு ஒன்று பதிவேற்றப்பட்டுள்ளது. கண் அனுப்பும் electrical impulsesகளை மூளைக்கு கடத்திச் செல்ல ஒரு ஆள் வேண்டாமா ? அதுதான் நியூரான்கள். ஒருவித ரிலே ரேஸ் மாதிரி தான் இந்த நிகழ்வுகள். ஒரு நியூரான் to மற்றொரு நியூரான் to அடுத்த நியூரான் to அடுத்த நியூரான் என்று இந்த செய்தி போகும். சரி, ஒரு நியூரானும் மற்றொரு நியூரானும் எப்படி அந்த செய்தியை பரிமாறிக்கொள்ளளும்? Neurotransmitters. இந்த ட்ரான்ஸ்மிட்டர்கள் தான், பார் உன் காலில் முள் குத்துகிறது, உனக்கு பிடித்த பாடல் டிவியில் ஓடிக் கொண்டிருக்கிறது போன்ற நாம் முழுமையாக உணரும் விஷயங்கள் முதல், இதயம் - நுரையிரல் என்று அதது அதனதன் வேலையைச் செய்யவென்று - இதுபோல நம் உணராமலே நடக்கும் விஷயங்கள் உட்பட - அனைத்திருக்கும் காரணம்.
Source: Click here
மேலிருக்கும் படத்தைப் கொஞ்சம் சற்று பொறுமையாக கவனித்தாலே சுலபமாக புரிந்து விடும். ஒரு நியூரான் மற்றொரு நியூரானுக்கு (Axonகள் வழியாக) செய்தியை அனுப்புகிறது. செய்தியை வேர் போன்ற அமைப்பின்(Axon Terminal) மூலமாக பரிமாறிக் கொள்ளும். அதனை ஜூம் செய்து தனியாக எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். ஒரு வேர் மற்றொரு வேரை தொடும் இடத்தில் தான் நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் வெளியேறும். வெளியேறியவற்றை வாங்கிக் கொள்ள ஏதுவாக, ரிஸப்டார்கள்(Receptors) தயாராக இருக்கும். செய்தியை வாங்கிக் கொண்டு, இந்த ரிஸப்டார்கள் மறுபடியும் மின்வேதியில் வினைகளுக்கு(Electrochemical reaction) உட்பட்டு, மறுபடியும் வேரைச் சென்றடையும். 


இதில் என்ன முக்கியாமான விஷயம் என்றால், ஒவ்வொரு விஷயத்திற்கும் மூளை தனியாக நியூரான்கள் வைத்திருக்கின்றன. கொழந்தையின் பதிவா, மொக்கை - கருந்தேளின் பதிவா, படிக்கலாம் - பாலாவின் பதிவா, அவர் எழுதுவதே இல்லையே, என்று முடிவு செய்யும். பதிவு என்பது ஒரே விஷயம் தான் அதில் துணைப் பிரிவுகளாக இது பிடித்தது, இது பிடிக்காதது, இது தேவையில்லை என்று ஏற்கனவே பிரித்து வைத்திருந்த விஷயத்தை மறுபடியும் கோழி கிளறுவது போல கிளறிப் பார்க்கும். இந்த ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும், பிடித்த பதிவர் - மொக்க பதிவர் - பிடிக்காத பதிவர் - காமெடிப் பதிவர், அவரவரது பதிவுகள் என்று - தனித்தனியாக நியூரான்கள் இருக்கின்றன(Specialised neurons). மூளை இந்த பிரிக்கும் வேலையை கற்பனைக்கும் அப்பாற்பட்ட வேகத்தில் நடத்தி முடிக்கும். படிக்க ஆரம்பிக்கும் போதே இதை மூளை முடிவு செய்துவிடும். நீங்கள் முன்முடிவுகளை எடுக்கக் கூடாது என்ற வைராக்கியத்துடன் இருக்கலாம். ஆனால், மன்னிக்க. மூளை நீங்கள் வேண்டாம் வேண்டாம் என்றாலும் அதனை செய்து முடித்துவிடும். ஒருவேளை படித்த பிறகு முடிவில் சிறிது மாறுதல் ஏற்படலாம். அப்பொழுது மூளை அதற்கேற்றவாரு சில மாறுதல்களை செய்துகொள்ளும். ஒருவேளை தொடர்ந்து நீங்கள், முன்னர் மொக்கை என்று நினைத்திருந்த பதிவை - நல்லாயிருக்கே என்று ரசிக்க தொடங்கினால், அதையும் சேமித்து வைத்துக் கொள்ளும். ஆனால், ஒரு போதும், அந்த பழைய - இதுமொக்கை - நினைப்பு மறையாது அல்லது மறைவது மிகக் கடினம்.


மூளையியை மடல்களை(lobe), மடிப்புகள் போன்று இருக்குமே - அதன் செயல்பாட்டை வைத்து நான்கு பகுதிகளாக பிரித்திருக்கின்றனர். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு. (கீழே படத்தில் உள்ளது). 
ஆக, பதிவு -> எழுத்து -> அப்படி என்றால் communication, அதற்குரிய மூளையின் பகுதி முதலில் தூண்டப்படும்.Temporal lobe will be initiated.  அதே சமயத்தில் இந்தப் பதிவைப் படிக்கலாமா வேண்டாமா - யார் எழுதியது - இவர் இப்பொழுது எழுதுவதே இல்லையே, என்று எல்லாவற்றையும் சடுதியில் மூளை முடிவு செய்து(Frontal lobe) அததற்குரிய நியூரான்களை தூண்டிவிடும்.  எத்தனை ஒரு காம்ப்ளெக்சான - அற்புதம் நிறைந்த உறுப்பு, நமது மூளை.

இரண்டு நியூரானுக்கு இடையே செய்தியை பரிமாறும் ட்ரான்ஸ்மிட்டர்கள் குறித்து மேலே குறிப்பிட்டிருந்ததை மறுபடியும் ஞாபகப்படுத்திக் கொள்ளவும்.  நமது உடம்பில் ஏறத்தாழ 40 - 100 வகையான நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள் உள்ளன.இதை மூன்று விரிவான பிரிவுகளாகப் பிரிக்கின்றனர். அதிலொன்று தான்Biogenic amine neurotransmitters. இதன்கீழ் வரும் முக்கிய நியூரோட்ரான்ஸ்மிட்டர்கள்  
 • Serotonin
 • Norepinephrine
 • Epinephrine
 • Dopamine
 • Histamine
 • Acetylcholine 
ஒவ்வொன்றிருக்கும் ஒரு தனித்துவம் உண்டு. இதில் ஒன்றான டொபமைன் தான் பல அதிமுக்கிய விஷயங்களுக்கு காரணம். அது என்னென்ன என்பது அடுத்த பதிவில்.....

கடவுள்களும் மதங்களும் geneகளின் சேட்டையா - 3

பூமிக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் இடையேஒரு பீங்கான் தேநீர்க் கோப்பை நீள்வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று நான் கூறினால் எவராலும் அக்கூற்றை தவறென்று நிரூபிக்க முடியாது -  நமது சக்திவாய்ந்த தொலைநோக்கிகளால் கூட கண்டறிய முடியாத அளவிற்கு சிறிய கோப்பை அது என்ற வார்த்தைகளை நா எனது கூற்றில் கவனமாக சேர்த்திருந்தால் ஒழிய. சரியாராலும் இக்கூற்றை தவறென்று நிரூபிக்க இயலவில்லையே என்று தொடர்ந்து இதை சொல்லிக் கொண்டிருந்தால்அப்படியொரு கோப்பை இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதே கூட நமது பகுத்தறிவின்படி சகிக்கவே முடியாத ஒரு அனுமானமாகத் தானே இருக்க முடியும். ஒருவேளைஎப்படியானாலும் - இதுபோன்றதொரு தேநீர்க் கோப்பையின் இருப்பை பழங்கால நூல்கள் ஊர்ஜிதப்படுத்தியிருந்தால்ஒவ்வொரு ஞாயிறுக்கிழமையின் போதும் இந்தக் கூற்று புனிதம் பொருந்திய உண்மையாக போதிக்கப்பட்டிருந்தால்பள்ளிக் குழந்தைகளின் மனதில் தொடர்ச்சியாக இவ்விஷயம் கற்பிக்கப்பட்டிருந்தால்அறிவு எழுச்சி மிக்கதொரு காலகட்டத்தில் இவ்வாறான கோப்பையின் இருப்பை சந்தேகிப்பதே கூட மனப்பிறழ்வின் அடையாளமாகவும்சந்தேகிப்பவர் மனநல மருத்துவரின் கவன ஈர்ப்புக்கும் ஆளாக நேரிடும்.

மேலிருக்கும் வார்த்தைகள் பெர்ட்ரண்ட் ரஸ்ஸலின் புகழ் பெற்ற "Russel's Teapotஎன்ற ஒப்புமை ஆகும்.  
Nobody can prove that there is not between the Earth and Mars a china teapot revolving in an elliptical orbit, but nobody thinks this sufficiently likely to be taken into account in practice. I think the Christian God just as unlikely. 
மனிதனின் பரிணாம வளர்ச்சியில் விழுந்த முதல் பொறி, நெருப்பினுடையதே. நெருப்பு - perhaps the greatest discovery of mankind. நெருப்பின் கண்டுபிடிப்பு தாமதப்பட்டுப் போயிருந்தால், பல நிகழ்வுகள் தள்ளிப் போயிருக்கலாம். யார் கண்டது. சாப்பிடும் பொருட்களை அதில் வாட்டுதல்-இருள்,குளிரை சமாளித்தல்-ஆயுதம் செய்யவென்று பல அதிமுக்கிய நிகழ்வுகளுக்கு நெருப்பே பிரதானம். அதனினும் முக்கியமாக ஒரு நிகழ்வை-அட, கற்களை உரசினால் டக்கென்று பொறி வருகிறதே-தன்வசப்படுத்த முடிந்த பெருமை உளவியல் ரீதியாக மிகப் பெரும் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தியிருக்கும். அதனைத் தொடர்ந்து புலம் பெயர்தல் - குழுக்கள் உருவாகுதல் என்று ஆரம்பித்து, படிப்படியான மனித இன வளர்ச்சியின் சுழற்சி குறித்து ஆறாம் வகுப்பிலேயே படித்திருப்போம்(திருக்க வேண்டும்). 

மனித இனம் அதன் வளர்ச்சியின் ஓட்டத்தில், பல புதிய விஷயங்களை எதிர்கொள்ள ஏதுவாக இந்த புலம்பெயர்வுகள் இருந்தன. ஒவ்வொரு அனுபவமும் ஒரு பாடம். அபாரமான சிந்திக்கும் திறன் கொஞ்ச கொஞ்சமாக வளர ஆரம்பித்தது இதுபோன்ற அனுபவங்களின் அடிப்படையிலேயே.இதை ஏதோவொரு தேவ தூதரோ வேற்றுகிரகவாசியோ வந்து நிகழ்த்திவிட்டு செல்லவில்லை.முழுக்க முழக்க பரிணாம வளர்ச்சியின் விளைவே இது.சுமார் 3,00,000 கிமுவின் போதே நெருப்பு பரவலாக உபயோகத்தில் இருந்தது என்று பல ஆராய்ச்சிளார்கள் கூறுகின்றனர். ஆகஅன்று தொடங்கி எத்தனை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் - எத்தனை விஷயங்களை மனித இனம் கடந்து வந்திருக்கும். எத்தனை புதிய விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்திருக்கும். இவை எல்லாவற்றையும் எதிர்கொள்ள துணை புரிந்தது, Adaptation - சூழ்நிலைக்கு தக்கவாறு தகவமைத்துக் கொள்ளும் திறன். இது இயற்கையாகவே எல்லா உயிரினத்திற்கும் உண்டு, ஒரு செல் உயிரி முதல் பல செல் உயிரினம் வரை. இந்த தகவமைக்கும் பண்பே மனித இனத்தின் நடவடிக்கை சார்ந்த வளர்ச்சிக்கு(behavioral evolution) முக்கிய காரணி.அன்று நிகழ்ந்த பல உளவியல் சார்ந்த மாற்றங்கள், இன்றளவும் நமது ஜீன்களில் உயிர்ப்புடனேயே இருக்கிறது.

பல மானுடவியளாலர்களின கூற்றப்படி, மனித இனம் குழுக்களாக வாழ ஆரம்பித்து ஒரு மாதிரியான வாழ்க்கை முறைக்கு தங்களைத் தகவமைத்துக் கொண்ட பின்தான் சடங்குகள் - அது சார்ந்த கடவுள்கள் என்ற விஷயங்கள் தோன்ற ஆரம்பித்தது. இந்த சடங்குகளுக்கும் கடவுள்களுக்கும் பின்னணியில் இருந்தது பயம், பயம் மட்டுமே. Fear of the unknown. பெரும்பாலும் இயற்கை நிகழ்வுகள் குறித்த பயம் தான் முழுமுதல் காரணம். பின்னர் விலங்குகள். சில சடங்குகள் செய்தால் இதிலிருந்து தப்பி விடலாம் என்று ஆதி மனிதர்கள் ஆரம்பித்த விஷயங்கள் தான் மதம், அதற்குறிய சடங்குகள் என்று ஒரு வடிவெடுக்க வழிவகுத்தது. இயற்கை குறித்த பயம், மிரட்சி என்றால் ஆதி காலத்தில் என்னவாக இருந்திருக்க முடியும்? பல விஷயங்கள் இருந்தாலும், முதலில் சூரியன் குறித்த பயமே பிரதானமாக இருந்திருக்கலாம். என்னடா இது, இதனை ஏறெடுத்துக் கூட பல சமயங்களில் பார்க்க முடியவில்லையே - தோன்றுகிறது - மறைகிறது - மறுபடியும் தோன்றுகிறது என்று, இந்த சுழற்சி ஆதி மனிதர்களுக்கு புதிராகவே இருந்திருக்கும். இந்த தினசரி நடவடிக்கைகளுக்கு அவர்கள் பழகியிருக்கும்பொழுது, கிரகணங்கள் ஏற்படும் காலங்களை, குறிப்பாக சூரிய கிரகணம் - நினைத்துப் பார்ப்போம். ஆதி மூளையில் அது எத்தகையதொரு பீதியை ஏற்படுத்தி இருக்க வேண்டும். நிமிடக் கணக்கில் நீடித்த கிரகணங்கள் நிச்சயம் பெரும் பயத்தை உண்டு பண்ணியிருக்கும் என்பதில் ஐயமில்லை. அடுத்ததாக மின்னல் - இடி. இன்றுவரை பலரையும் பயமுறுத்தி வரும் இவ்விஷயங்கள், அக்காலகட்டத்தில் மிகுந்த பயத்திற்குரியதாய் இருந்திருக்கும் என்பது தெளிவு. ஆக, சூரியன், வானம் - அது சார்ந்த நிகழ்வுகள் தொன்றுதொட்டே மனிதர்களுக்கு புதிர் நிறைந்த ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. 
இதில் இன்னொன்றை கவனித்தோமானால், உலகின் பெரும்பாலான மதங்களின் கடவுள்கள், வானம் - வெளி (space) சார்ந்த ஒன்றிலிருந்தே விவரிக்கபட்டிருப்பர். கடவுள் தோன்றினார் என்ற யாராவது சொன்னால், அனிச்சையாக பல பேர்களின் கழுத்து மேல் நோக்கியே திரும்பும். கடவுள் தோன்றினார் - பிரசன்னமானார் என்பதே கூட வெளி சார்ந்த ஒரு விவரிப்பு தானே.
இந்த வானம் - வெளி சார்ந்த விஷயங்கள் மீது ஆதி மனிதனுக்கு இருந்த தீராவேட்கையை அவர்களது மேலிருந்து ஒளி இறங்குவது போலவோ,அமானுஷ்ய உருவங்கள் இருப்பது போலவோ வரைந்த(?) அல்லது செதுக்கிய குகை ஓவியங்கள் - சுவர் சித்திரங்கள் - சிற்ப வேலைகள் போன்றவைகளிலிருந்து நாம் மிகச் சுலபமாக உணரலாம். எப்பொழுதுமே வானம் அவனுக்கு எட்டா தொலைவு தான். மலை - கடல் - காடு என்று எல்லாவற்றுடனும் அவனுக்கு ஒரு physical contact இருந்தது. ஆனால், வானத்துடன் மட்டும், mere psychological contact. 

ஒருபுறம் பயம் இருந்தாலும், வானம் -> வானியல் சார்ந்த நிகழ்வுகளை எவ்வடிவிலாவது பதிவு செய்ய வேண்டும் என்ற உந்துதலும் வளரத் தொடங்கியது. கி.பி.15,000 போன்ற காலகட்டத்திலேயே நிலவின் வளர்பிறை - தேய்பிறை சுழற்சியினை (lunar calendar) வரைந்து வைத்துள்ளனர். Stonehenge மாதிரியான விஷயங்கள் நிறுவப்பட்டு வந்தன. சில கட்டுமானங்களின் பயன் தெரியாவிட்டாலும், பெரும்பாலும் இதுபோன்ற அமைப்புகள் அனைத்தும் நட்சத்திரங்கள்சூரியன்நிலவு போன்றவைகளின் இடங்களை - திசையை கண்டறியவே (sort of a calendar) கட்டப்பட்டது (உம். நாஸ்கா லைன்ஸ்). தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில், வானியல் நிகழ்வுகள் கூர்மையாக கவனிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஆவணப்படுத்தப்பட்டன. அன்றிலிருந்தே வெகு சீராக ஏதோவொரு வகையில் வான்வெளியை கூர்ந்து நோக்கும் பழக்கம் தொடங்கியிருக்கிறது. 

ஆனால், ஒருகட்டத்தில் வானியல் நிகழ்வுகளை தங்களது வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கும் விஷயமும் நடைமுறைக்கு வந்தது (Astrology). ஒருசில பேர் அறிவியல் ரீதியாக இவ்விஷயங்களை அணுக முற்பட்டாலும், பெரும்பாலானவர்களுக்கு கடும் மழை, புயல், வெள்ளம, எரி நட்சத்திரம் போன்ற இயற்கை நிகழ்வுகள் குறித்து பயம் இருந்தபடியால், சடங்குகள் ரீதியிலான வழிமுறையே அவர்களுக்கு ஏதுவாக இருந்தது. இந்த சடங்குகளைச் செய்தால், இதிலிருந்து தப்பிக்கலாம் எனும் போது, சர்வ நிச்சயமாக அந்த வழியையே அவர்கள் தேர்ந்தெடுத்ததில் தவறோ - வியப்போ இல்லை. Emergency exit. 

இந்த இயற்கை - வானியல் குறித்த நிகழ்வுகளை அக்காலகட்டத்தில் எவ்வாறு கையாண்டனர் என்பது மிக மிக முக்கியமானதொரு விஷயம். காரணம், இதன் பின்னணியில் மதம் பெரும் பங்காற்றியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 
 • இதுகுறித்த மிக முக்கியமானதொரு கட்டுரை 1795ஆம் ஆண்டிலேயே எழுதப்பட்டுள்ளது. The History of Astronomy by Adam Smith. 
 • யார் இந்த ஆடம் ஸ்மித் ? ஸ்காட்லாந்தைச் சேர்ந்த, 18ஆம் நூற்றாண்டின் மிக முக்கியமானதொரு சமூக தத்துவியலாளர். 
 • Father of economics என்று பலர் இவரை அழைக்கின்றனர். அவரின் இந்தக் கட்டுரை மிக உன்னிப்பாக - வானியல் சார்ந்த மூட பழக்கங்களையும் மனிதர்களிடம் அந்நிகழ்வுகள் ஏற்படுத்திய தாக்கத்தையும் வெகுவாக பதிவு செய்திருக்கிறது.
 • அவர் எதனடிப்படையில் இவ்விஷயத்தை அணுகினார் எனபது குறித்து சர்ச்சைகள் இருந்தாலும், பெரும்பாலானவர்கள் மிகச் சிறந்த அறிவியல்பூர்வமான அணுகுமுறை இதிலிருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்கிறார்கள். 
 • இவரது புகழ் பெற்ற மற்றொரு புத்தகம் குறித்து - The Wealth of nations - எகனாமிக்ஸ் படித்த நண்பர்கள் பின்னுட்டத்தில் விவரித்தால் நல்லது. ஆனால், தெரிந்தோ - தெரியாமலோ அப்புத்தகத்தில் பல கேபிட்டலிச கருத்துகள் இறைந்துகிடப்பதாக பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதன் பொருட்டே Father of capitalism என்றழைக்கப்படுபவர்.

நூற்றாண்டுகள் செல்லச் செல்ல, அறிவியலின் அளப்பரிய வளர்ச்சியால் மதம்  கடவுள் குறித்து பார்வைகள் முற்றிலும் மாறிப் போனது. வெளி - வளி மண்டலம் - சூரியன் - அண்டம் போன்றவைகள் பற்றிய நமது பார்வை விரிவடைய விரிவடைய, அதன் மர்மங்கள் - சூட்சமங்கள்  - பிரமாண்டம் ஓரளவிற்கு புரிய ஆரம்பித்தது (ஆனால், இன்னும் அதில் நாம் முழுமையடவில்லை. முடியுமா என்பதும் கேள்விக்குறியே).அறிவியல் எவ்வளவோ வளர்ந்துவந்த போதிலும், மனித மூளையில் அளப்பரிய அளவிற்கான radical change ஏற்பட வழிவகுத்த போதிலும், இன்னும் பல வகைகளில் மதங்களின் பெயரால் சில (போலி)நம்பிக்கைகள் உலா வந்துகொண்டே தான் இருக்கின்றன. சுருக்கமாக இதுபோன்றவைகளை "அற்புதங்கள்" என்று அதனை நம்புகிறவர்கள் அழைக்கிறார்கள். 


இதை அவர்கள் நம்புவது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது. அவரவர் தனிப்பட்ட விஷயம். ஆனால், அவர்கள் நம்பும் விஷயங்களை அறிவியல் எப்படி பார்க்கிறது என்பது குறித்து பல நாட்களாக எழுத நினைத்ததன் விளைவே இந்த மிகச் சிறிய முயற்சி. Everyone will(should) have their own ideology. அதுபோல எனக்கிருக்கும் ஐடியாலஜியின் அடிப்படையில் இவ்விஷயங்களை நான் எப்படி பார்க்கிறேனோ அதை அப்படியே இங்கே பகிர்கிறேன். That's it. 

இதற்கு குறிப்புகள் எடுக்க உதவிய நூல்கள், டாகுமென்டரிகள் பற்றிய பட்டியலை(ஹி..ஹி..) கடைசியாக வெளியிடுகிறேன். அதேபோல் தலைப்பிற்கும் பதிவிற்கும் என்ன சம்பந்தம் என்பது போன்ற முன்முடிவுகளுக்கு இப்பொழுதே வர வேண்டாம். சற்றே அடுத்த பதிவு வரை பொறுக்கவும்

WE, THE PEOPLE OF INDIAhaving solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens. 


மேலே படத்தில் இருக்கும் பெண்மணி வல்லரசு (அல்லது) developing country எனும் வேற்றுகிரகத்தை சேர்ந்தவர். இந்த வேற்றுக்கிரகவாசிகளை சாதாரண மனித உருவத்தில் தேனி - மதுரை முதற்கொண்டு ரயில்வே நிலையங்கள் வரை அநேகம்பேர் பார்த்திருப்போம். ஒருமுறை இதுபோன்றதொரு வேற்றுகிரகவாசியை சந்திக்க நேர்ந்தது. அவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, மிகுந்த ஆச்சரியகரமான ஒரு விஷயம் தெரிய வந்தது. அந்த கிரகத்திலும் ஜாதி என்று அமைப்பு - ஒரு காலத்தில் நம் நாட்டில் இருந்ததே, அது போல இருக்கிறதாம். இந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்கள் 98% ஒரே ஜாதி தானாம். ஆஸ்துமா - காசநோய் - சர்மநோய்கள்(இன்னும் என்னென்னவோ நோய்கள் எல்லாம் சொன்னார்கள்)  எல்லாவற்றையும் விட கடுமையான மன உளைச்சல் - சமூக தீண்டாமை போன்றைவகள் எல்லாம் இருந்தும் இந்த வேலைதான் செய்வோம் என்று பிடிவாதமாக இருப்பதாக சொன்னார்கள். அதில் 30 - 40% வரை தங்களது வாரிசுகளையும் இந்த தெய்வ செயலுக்கே நேர்ந்து விட்டிருப்பதாய் சொன்னார்கள். 

இருந்தாலும் எனக்கு மனசு கேக்கவில்லை. ஏன் உங்கள் அரசாங்கம் பல நடவடிக்ககைள் எடுக்கிறதே. உங்களுக்கு உதவுவதற்கென்றே நிறைய திட்டங்கள் வகுத்துள்ளதே, அதெல்லாம் உங்களுக்கு தெரியாதா என்று கேட்க, அப்படியா என்று பதிலுக்கு அவர் என்னை கேட்கிறார். உங்க நாடு மாதிரி இல்ல தம்பி, இங்க ஜாதி ரொம்ப பாப்பாங்க. அதுவும் இந்த வேல செஞ்சவங்கனு தெரிஞ்சா வேற வேலையும் தர மாட்டேங்குறாங்க.  வேற வேல கெடைக்காட்டி என்ன பண்ண, மறுபடியும் இதுக்குதான் போகணும். ஆனா இப்ப கொஞ்சம் நெலம பராவாயில்ல. நிறைய பேர் வேற பக்கம் பொழப்பு தேடி போக ஆரம்பிச்சுட்டாங்க. 

இன்னொரு விஷயமும் சொன்னாரு. படிக்க பள்ளிகூடத்துக்கு போகுற அவுங்க பிள்ளைகள விட்டு ஆசிரியர்களே டாய்லெட்ட கழுவச் சொல்றாங்களாம். யப்பா....என்னவொரு கொடூர கிரகம் அது. நம்ம நாடு சொர்க்கமங்க. நல்லவேல, நம்மநாடு அந்த கிரகம் மாதிரி இல்ல. பயங்கர வசதியோட - அணுவுலை வெச்சு - நுக்ளியர் பார்க்லாம் கொண்டு வரப்போற பயங்கர வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் நாடாக இருப்பதால் இந்த கீழ்த்தரமான - சக மனிதனை நடத்தும் அசிங்கம் எல்லாம் இங்க இல்ல. எத்துனை குடுத்து வைத்தவர்கள் நாம்.
During the partition of India and Pakistan in 1947, migration to India was allowed except for the manual scavengers, because if they were allowed to leave, then who would do their job? Government of India was concerned about Hindus residing in Pakistan but not them. The author of the Indian Constitution Dr. Ambedkar expressed his deep concern about this unfortunate community in Pakistan by writing a letter to the then Prime Minister Jawahar Lal Nehru. He said that the Hindu scavenging employees in Pakistan were being forced to do the degrading work warranting the intervention of the government of India. Yet, even after so many years of Independence the practice continues. It also exists in Bangladesh, Sri Lanka, Nepal and Pakistan but in different forms. In all the countries it is based on caste hierarchy.
மேல இருக்கும் தகவலகளை இந்த லிங்க்ல இருந்து எடுத்தது. கண்டிப்பா அனைவரும் படிக்க வேண்டுகிறேன். நா சொல்லியிருக்குறது நூத்துல பத்து சதவிகிதம் தான். மதுரையில் எவிடன்ஸ் அமைப்பினர் - கதிர் - கூட இதுபற்றி நிறைய பத்திரிக்கைகளில் எழுதியது நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். இன்னொரு முக்கிய விஷயம், இந்த புள்ளி விவரங்கள் அரசாங்கமே கொடுத்தது. அரசாங்க புள்ளி விவரங்கள் எப்படி இருக்கும்னு நமக்கு தெரியும். அப்ப, உண்மை நிலவரம் எப்படி இருக்குமோ ?

மேலும் அந்த கிரகத்த பத்தி நா தேடி எடுத்த புள்ளி விவரங்கள பாருங்க.

 • 65% மக்களுக்கு டாய்லெட் வசதி இல்லை, இருங்க இது வெறும் ஆரம்பம்தான். கொஞ்சம் பின்னாடி வரும் ஷாக்கிங்கான பாய்ன்ட்கள ஊன்றி படிங்க.

 • பிரசவத்தின் போதும் பிரசுவித்த பிறகு 42 நாட்களுக்கு பெண்கள் இறப்பு விகிதம்(Maternal mortality rate) - 8 நிமிசத்துக்கு ஒரு பெண் இங்க இறக்க நேரிடுகிறது (பங்களாதேஷ் - ஸ்ரீலங்கா கூட நமக்கு முன்னாடி தான். Again, இந்த இறப்பு விகிதம் லோயர் க்ளாஸ்ல தான் மிக அதிகம். 
           Source:


          Source:

 • Human Development index - மனிதவள மேம்பாட்டு குறியீட்டில், 134வது இடம். நமது ஆதர்ச ஹீரோக்கள் - அமேரிக்கா - பிரான்ஸ் - ஜெர்மனி -கனடா - இங்கிலாந்து எத்தனையாவது இடம் தெரியுமா ? (வல்லரசுனா இதுல காமிக்க வேண்டியதுதான உங்க வளர்ச்சிய). அட, நமக்கு முன்னாடி பல ஆப்ரிக்க நாடுகள் குட இருக்கு. 

          Source:


இதுமாதிரி பல புள்ளி விவரங்கள அடுக்கிகிட்டே போகலாம். அதுனால என்ன பிரயோஜனம் ? ஒண்ணும் கெடையாது. GDP அதிகமாகுறது மட்டுமே வளர்ச்சின்னு பல காலமா நம்ம பொது புத்தியில பதிய வெச்சாச்சு. இனி அத ஒண்ணும் பண்ண முடியாது. 

கவலையெல்லாம் இத்தன அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருக்கும் போது, இந்தளவுக்கு அணு சக்தி திட்டங்களில் முனைப்பு காட்ட வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு ? எந்த ரஷ்யன் விஞ்ஞானியோ, நம்ம ஆட்களின் போராட்டம் பத்தி டிவில நக்கலா பேட்டி தரான். அதையும் வெக்கமில்லாம நாம பாத்துகிட்டு இருக்கோம்.இந்த வளரும் நாடு - சூப்பர் பவர் - அமெரிக்க - வல்லரசு - லொட்டு லொசுக்குன்னு பேசும் விஞ்ஞானிகள், மேல இருக்கும் கேள்விகளோட இந்த கேள்விகளுக்கும் பதில் சொல்லுவாங்கன்னு நம்புறேன்.
 • இந்தியா தவிர, அணு சக்தி பயன்படுத்தும் - நீங்க ஆதர்சமா அடிக்கடி இதுபோன்ற "வளர்ச்சிகளுக்கு" உதாரணம் காட்டும் பிரான்ஸ் - அமெரிக்க - ஜப்பான் - கனடா - ஜெர்மனி - இங்கலாந்து போன்ற நாடுகளில், இதுபோல பீயை கைகளில் அள்ளும் ஆட்களை காமிங்க பாப்போம். 
 • 1980கள் முதற்கொண்டு அணு திட்டம் மட்டும் போட தெரியுதுல்ல. சுதந்திரம் வாங்கி 65 வருஷத்துல இதுபோன்ற மனித கழிவுகள அகற்றும் ஆட்களுக்கு என்னத்த கிழிச்சீங்க.(ஓரளவு முன்னேற்றம் இருக்கு. ஆனா, படு பயங்கர ஸ்லோ. அத முன்னேற்றம்ன்னு கூட சொல்ல முடியாது)
 • உண்மையான வளர்ச்சி என்பது வெறும் அணு சக்தி தானா ? அடிப்படை வசதிகளான, சுகாதாரம் - மருத்துவம் - அதற்குறிய காப்பீடு - கல்வி - மாதிரியான விஷயங்கள் இல்லையா ? ரைட்டு, இந்த துறைகளில் முன்னேற்றம் இருக்கவே செய்யுது. ஆனா, உலகத்துலையே மெதுவா நகர்கிற உயிரினம் ஸ்லோத் என்பதுதான் - அதவிட மெதுவால இந்த துறைகளில் வளர்ச்சி இருக்கு.
 • மருத்துவம் - கல்வி வளர்ந்திருக்கு. ஆனா அதுலையே எத்தன ஏற்ற தாழ்வுகள். ஏன் ஒரே மாதிரி சிஸ்டம் இல்ல.
 • இன்னொரு பெரிய ஜோக். பாதுகாப்பு துறைய வலுப்படுத்தவாம். கிளிச்சாங்க. உலகளவில் பாதுகாப்புக்கு என்று அதிகளவில் நிதி ஒதுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒண்ணு. ஆனா, என்ன பிரயோஜனம். சிறிலங்கா மாதிரி கொசுவ கூட ஒண்ணும் பண்ண முடியல. குறைந்தபட்சம் மிரட்டவாவது முடிஞ்சதா. அதுக்கு கூட துப்பில்ல. தென் கொரியா மாதிரி சின்ன நாடுகளுக்கு இருக்கும் தைரியத்தில் நூத்துல ஒரு சதவீதம் கூட நம்மகிட்ட இல்ல. அப்பறம் என்ன மயிரு பாதுகாப்பு துறைக்கு இத்தன கோடி.அதையாவது ஒழுங்கா செஞ்சாங்களா. அந்த துறைல கூட ஊழல்.(2.7% of GDP on military expenditure)
 • இந்த அடிப்படை தேவைகள எல்லாம் பிற "வளர்ந்த" நாடுகள் மாதிரி ஆக்கிட்டு அப்பறம் இதுக்கு வர வேண்டியதுதான.
 • என்னமோ சொந்த மூளையில கண்டுபுடிச்ச டெக்னாலஜி மாதிரி இத்தன பீட்டரு....இதுவும் ஐரோப்பியர்கள் கண்டுபுடிச்ச விஷயம் தான. இதுல கூட புதுசா ஒண்ணும் கண்டுபுடிக்க முடியல. இதல எங்கிருந்து தன்னிறைவு ?
 • இத்தன வருஷமா - சுமார் முப்பது ஆண்டு காலமா என்னதான் இந்த அரசாங்கங்கள் மாற்று திட்டம் வெச்சிருந்தது ? இதுகுறித்து கொஞ்சம் கூட யோசிக்கலையா....இல்ல, யோசிக்க ரஷ்யாவின் டோலர்கள் விடலையா ? 
சரி, இத்தனையும் மீறி - இதுதெல்லாம் சகஜம் தான். "வளர்ச்சி" தான் முக்கியம்ன்னு சொல்றவங்கிட்ட ரெண்டே ரெண்டு கேள்வி மட்டும் கேட்க ஆசை.
 1. வாரன் ஆண்டர்சன் யாரு தெரியுமா ?
 2. போபால் மக்களுக்கு எவ்வளவு ஈழப்பீடு குடுத்தாங்க தெரியுமா ?
நண்பர்களே, அணுவுலை ஆதரித்து பேசுபவர்களிடம், உடனே இந்த ரெண்டு கேள்வியையும் கேளுங்க. மலங்க மலங்க முழிப்பாங்க. சர்வ நிச்சயம். மேற்கொண்டு பதில் சொல்லத் தெரிந்த ஆட்களிடம் மட்டும் கருத்து பரிமாற்றம் செய்யுங்க. மத்த ஆட்களிடம் பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. குறைந்தபட்சம் போபால் விபத்து நடந்த ஆண்டையாவது கேளுங்க. ஒரு மயிறும் பதிலாக கிடைக்காது. 28 வருஷமா போராடும் மக்களுக்கு நீதி கிடைக்காத இந்த நாடு தானா இந்த விஷயங்களில் ட்ரான்ஸ்பரன்சியோட நடந்துக்க போகுது. ஒண்ணும் நடக்காது. 

பி.கு:
நண்பர்கள் தயவுசெய்து, இப்ப இல்லாட்டியும் டவுன்லோட் செஞ்சு வெச்சிட்டு - நேரம் கிடைக்கும் போது மேல இருக்கும் லிங்க்கள படிச்சு பார்க்கமாறு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பா, "வளர்ந்த" நமது ஆதர்ச நாடுகளுக்கும் நமக்குமான இடைவெளி - ரொம்ப முக்கியம். அதைவிட முக்கியம் குட்டி நாடுகளுக்கும் நமக்குமானது.