Wednesday, January 11, 2012

Contagion(2011) & Drive (2011)


Contagion:
உலகத்திலயே அபரிதமான வருமானம் கொழிக்கும் தொழில் எதுவாக இருக்கும் ? ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் தொழிலா? இல்லை, பெட்ரோல் போன்ற எண்ணெய் வியாபாரமா. ஒருவேளை தொழில்நுட்பம் சார்ந்த வியாபாரமாக இருக்குமோ. இது எல்லாவற்றையும் விட லாபமும் லாபியிங்கும் (Lobbying) வெகு அபாரமாக புழங்கும் தொழில் - சர்வநிச்சயமாக மருந்துத் தொழில் தான். நமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவு பணம் கொழிக்கும் தொழில்.புதுப்புது வைரஸ்கள் தோன்றுவதற்கு பின்னால் இந்த மருந்து கம்பெனிகளின் கைங்கரியம் உண்டென்று கூறுகின்றனர்.எய்ட்ஸ் நோய்க் கிருமி கூட ஒரு ஆராய்ச்சி கூடத்தில் இருந்தே வெளியேறியதாகவும் பேச்சு உண்டு.அதில் ஆரம்பித்து, மருந்து விற்பனை பிரதிநிதிகள் மூலம் மருத்துவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு குறிப்பட்ட மருந்துகளை வாங்க வைப்பது, மருத்துவ பரிசோதனைகள் செய்யச் சொல்வது என்று இந்த பட்டியல் நீளும்.

இதெல்லாவற்றையும் விட முக்கியமானது, ஒரு மருந்து கண்டுபிடித்தால், அதனை எவ்வாறு பரிசோதிப்பது ? பெரும்பாலும் இதில் - சோதனையும் ஆரம்ப காலகட்டத்தில் மாட்டுவது ரீசஸ் குரங்கு தான்.என்னதான் விலங்குகளின் மீது பரிசோதித்து வெற்றி கண்டாலும், மனிதர்களிடம் எப்படி அது செயல்படும் ? யாருக்கு முதலில் செலுத்தி நோட்டம் பார்ப்பார்கள் ? அங்குதான் மறைந்திருக்கிறது அல்லது கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது பல உண்மைகள். பெரும்பாலும் ஆப்ரிக்கா - நைஜிரியா போன்ற உலக நாடுகளின் மக்கள் மீதுதான் இந்த ஆராய்ச்சி இருக்கும். இந்தியாவிலும் இது நடக்கவே செய்கிறது. இது மருந்தில் இருந்து ஆரம்பித்து பால் பௌடர் வரை தொடர்கிறது. நெஸ்லே, குழந்தைகளுக்கு கொடுக்கின்றார்களே, அதை புறக்கணிக்கவே International Nestle Boycott Committee என்று ஓரமைப்பு 1977 முதல் இயங்கி வருகின்றது. இதுபோன்ற விஷயத்தை என்னவோ நான் போறபோக்கில் எழுதுவதாக எண்ண வேண்டாம். கீழே இருப்பவைகளை ஒருமுறையேனும் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

பல பன்னாட்டு மருந்து கம்பெனிகள் மில்லியன் கணக்கில் திடீரென்று ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்குவதாக செய்திகளில் வருகின்றனவே, அதற்கு பின்னால் இதுபோல பல கதைகள் ஒளிந்திருக்கலாம்.இதுகுறித்து குறைந்தது 100 பதிவுகளாவது எழுதலாம்.அவ்வளவு விஷயங்கள் உள்ளன. முடிந்தால் அதுகுறித்து விரிவாக ஒருநாள் பார்க்கலாம்.


இதுவரை நாம் எந்த மாதிரி வைரஸ் பரவும் படங்களை பார்த்திருப்போம் - ஒன்று அனைவரும் ஜோஃம்பிகளாய் மாறி விடுவர், I Am Legend - 28 days later மாதிரி. இல்லாவிட்டால், வைரஸ் மூலம் நோய் பரவுவதை அறிந்த ஹீரோ, பல்வேறு சாகசங்களுக்குப் பிறகு வைரசை அழித்தோ அல்லது அதற்கான முறிமருந்தை கண்டறிந்தோ உலகை உய்விப்பார். ஆனால், ஒரு கொடிய வைரஸ் நோய் எவ்வாறு பரவும் என்பது குறித்து இதுவரை வந்த படங்களிலேயே ஆகச் சிறந்த விவரணை கொண்ட படம் இதுவாகத் இருக்கும் என்று-நான் சொல்லவில்லை, பல அறிவியல் அறிஞர்களே பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.உதாரணமாக சார்ஸ் என்ற நோய், இரண்டாண்டுகள் முன்னர் உலகையே உலுக்கியதே, ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.அது எவ்வாறு பரவியிருக்கும்? இந்தப் படம் அதுபோன்ற ஒரு சூழ்நிலையை தத்ரூபமாக பிரதிபலிக்கின்றது.மிகமிக சிக்கலான அறிவியல் பதங்கள்(Terminology) எளிய முறையில் விளக்கப்பட்டிருக்கின்றன.நம்மைப் போன்ற ஒரு ப்ளாக்கரின் வாயிலாகவே பல விஷயங்கள் பார்வையாளருக்கு விளக்கப்படுகின்றன. விக்ஸ், சளிக்கு தேய்க்கின்றோமே அதற்கு பின்னால் ஒரு வரலாறு உண்டு. நெட்டில் தேடிப் பாருங்கள். மேலும், விக்ஸினால் நமக்கு நிஜமாக பெரியளவில் நமக்கு பலன் கிடைப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா ? சற்றே நாசியின் பாதையினை விரிவாக்கி, சளி குறைந்ததைப் போன்ற பிம்பத்தைதான் விக்ஸ் ஏற்படுத்துகின்றது. இது அறிவியல்பூர்வமான உண்மை. இங்கே படிக்கவும்.இதுபோன்ற பல கேள்விகள் பதிவராக வரும் - ஜுட் லா மூலமாகவே நமக்கு புரிய வைக்கப்பட்டிருக்கின்றன.

என்னதான் வைரஸுக்கான முறிமருந்தை கண்டுபிடித்தாலும் ஒரே நாளிலெல்லாம் அதனை தயாரிக்க முடியாது.பலவேறு நிலைகளைத் தாண்ட வேண்டும்.அத்தனையையும் மிகத் தத்ரூபமாக இப்படம் சித்தரித்துள்ளது. இதுபோன்ற தொற்றுநோய் பரவும் காலங்களில் அரசாங்கமும் மக்களும் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு பிராச்சார படமாகக் கூட இதனை எடுத்துக் கொள்ளலாம்.


இந்தப் படத்தைப் பார்க்க ஒரே காரணம் - ஸ்டீவன் சொடர்பெர்க். எனக்கு மிகப் பிடித்த ஒரு இயக்குனர்.நமக்கு மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான இங்க்மார் பெர்க்மானின் கவனத்தையும் கவர்ந்தவர்.இந்த பேட்டியைப் படியுங்கள்.

ஸ்கூல்ல பயன்படுத்தினோமே, மைக்ரோஸ்கோப் - அதைவிட சற்றே பெரிய ஒன்றை வைத்துக் கொண்டு DNA ஆராய்ச்சி செய்யும் படம் தான் தமிழின் ஆகச்சிறந்த அறிவியல் கதை என்று ஆணித்தரமாக நம்பும் ஆட்கள் இந்தப் படத்தை பார்க்காதிருக்க ஆண்டவர் அருள் புரியட்டும்.


----------------------------------------------------------------------------------------------------

Drive:
பெயரில்லா யாத்ரீகன் போல யார், என்னவென்று ஒரு விவரமும் தெரியாத இளைஞன்.அபாரமான டிரைவர். அதுவே அவனது மூலதனம்; passion; பொழுதுபோக்கு, எல்லாமும். ஒரு கார் கேராஜில் வேலை செய்து வருகிறான். தவிர, ஹாலிவுட் பட கார் ஸ்டன்ட்களில் டூப்பாக ஈடுபட்டும் வருகிறான்.இதைத் தவிர, இவனது மற்றொரு முக்கிய வேலை, கொள்ளையர்களை - திருடர்களை அவர்கள் வேலை முடிந்தவுடன் காரில் லாவகமாக தப்ப வைக்கும் டிரைவராக பணியாற்றுவது. ஆனால், அதிலும் அவனுக்கு கடுமையான நிபந்தனைகள் உண்டு. யாருக்காகவேணும் அந்த நிபந்தனைகளில் இருந்து கீழிறங்கி வர மாட்டான்.

இந்த சாட்டின் ஜெர்கினுக்காகவே ராஜேஷ் இந்தப் படத்தைப் பார்ப்பார் என்று ஒரு பட்சி சொல்கின்றது
புதிதாக குடியேறிய இடத்தில் ஒரு பெண்ணையும் அவளது மகனையும் சந்திக்க நேரிடுகிறது.அவளது கணவன் திருட்டுக் குற்றத்திற்காக சிறைச்சாலையில் இருக்கிறான்.இந்நிலையில் அவனது கேராஜ் முதலாளி கார் பந்தய விளையாட்டில் இவனை நம்பிக் குதிக்கிறார்.அதற்காக அந்த ஊரின் "தல" மாதிரியான ஆளிடம் கடன் வாங்குவதோட மட்டுமல்லாமல், அவன் பங்குதாரராய் உள்ளே வருவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

ஜெயிலில் இருந்து அவன் கணவன் வெளியே வருகிறான்(ஒருபுறம் அவள் மகிழ்ந்தாலும் அவளது முகத்தில் ஏதோ பிரிவுத் துயரம் இருக்கிறதே, ஏனோ?)
கணவன் - ஸ்டாண்டர்ட் (பெயர் தான்) மீண்டுமொரு சிக்கலில் மாட்ட நேரிடுகிறது. மாஃபியா குடும்பத்திற்கு சொந்தமான, லாக்கரில் இருக்கும் பணத்தை எடுத்து வெளியே வர வேண்டும். வேலையை முடிக்காவிடில் அவன் மனைவிக்கும் குழந்தைக்கும் ஆபத்து நேரும் சூழல்.இந்தவொரு காரணத்திற்காகவே ஸ்டாண்டர்டுக்கு அவன் உதவ சம்மதிக்கிறான்.ஆனால் எல்லாம் தலைகீழாய் மாறிப்போகிறது. பல திருப்பங்கள் - கொலைகள் என்று எல்லாருடைய வாழ்வும் சுக்குநூறாய் சிதறுகிறது.

சுலபமாக யூகித்துவிடக்கூடிய கதைதான்.ஆனால் எடுத்தவிதம் எனகென்னவோ மிகவும் பிடித்துப் போனது. அதற்கு மற்றொரு முக்கிய  படத்தின் இயக்குனர், டென்மார்கைச் சேர்ந்த நிகோலஸ் விண்டிங் ரெஃப்னின் மற்றொரு படமான Valhalla Rising. அதியற்புதமான ஒளிப்பதிவு. ஒரு ஸ்டைல் இருந்தது. இந்த ட்ரைலரைப் பாருங்கள். நீங்களே அப்படத்தைத் தரவிறக்கிப் பார்ப்பீர்கள். (Drive படம் பார்க்கும் போது, Valhalla Rising பட இயக்குனரது படம் என்று தெரியாது)


அந்தப் படம் மாதிரியே, இந்தப் படத்திலும் மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார்.மிக மிக குறைவான வசனங்கள்.செமத்தியான கேமரா வொர்க். மற்றொரு முக்கிய விஷயம், இந்தப் படம் - சர்ரியலிச படங்களில் அசாத்தியாமான புனைவுகளை உருவாக்கிய அலசாண்ட்ரோ சொரோவ்ஸ்கி (Alejandro Jodorowsky)க்கு ஒரு tribute என்று படத்தின் இயக்குனர் சொல்லி இருப்பது. அதற்கேற்ப, குறியீடுகளும் அவ்வப்போது வந்து போகின்றன. மேலும் 70களில் சக்கைபோடு போட்ட, ஸ்டீவ் மெக்குவீன் நடித்த Bullit (இந்தப் படத்தைப் நிறைய பேர் பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். குறைந்தபட்சம் "அந்த" புகழ் பெற்ற கார் ஜேசிங் குறித்தாவது கேள்விப்பட்டிருப்பார்கள்) போன்ற படங்களின் நாஸ்டால்ஜியா என்றும் இயக்குனர் கூறியுள்ளார்.டைட்டில் போடும் போது, என்னடா இது 80களின் சாஃப்ட் ராக் வகை இசை தொடங்கிய போதே என்னவோ வித்தியாசமாக இருக்கிறதே என்று தோன்றியது. டைட்டில் கூட பிங்க் கலரில். பல 80களின் ஆங்கில படங்களில் பார்த்திருப்போம்.

புரட்டிப் போடும் படம் என்றெல்லாம் கூற முடியாவிட்டாலும், என்னவோ பிடித்துப் போனது. அதனால், பார்க்க முடிவு செய்திருந்தால் ரொம்பவும் எதிர்பார்ப்பில்லாமல் பார்க்கவும். இந்த இயக்குனரை நினைவில் வைத்துக் கொள்ளவும்.டென்மார்க்கின் மார்டின் ஸ்கார்சேசே என்றுகூட இவரைக் கூறுகின்றனர் (கொஞ்சம் ஓவராதான் போயிட்டாங்களோ)

Facebookers..

12 comments :

  1. Wolfgang Petersen இயக்கிய outbreak படம் பாருங்களேன் ,அந்த காலத்திலேயே வைரஸ் பரவும் விதத்தை சிறப்பாக விளக்கி இருப்பார்கள்

    ReplyDelete
  2. A.R Murugadoss இயக்கிய 7th sense படம் பாருங்களேன் ,அந்த காலத்திலேயே வைரஸ் பரவும் விதத்தை சிறப்பாக விளக்கி இருப்பார்கள்

    ReplyDelete
  3. இதில் drive மட்டும் பார்த்துள்ளேன் ,ஏனோ சுத்தமாக பிடிக்கவில்லை,
    //ஸ்கூல் படிக்கும் போது பயன்படுத்துவோமே, மைக்ரோஸ்கோப் - அதைவிட சற்றே பெரிய ஒன்றை வைத்துக் கொண்டு DNA ஆராய்ச்சி செய்யும் படம் தான் தமிழின் ஆகச்சிறந்த அறிவியல் கதை என்று ஆணித்தரமாக நம்பும் ஆட்கள் இந்தப் படத்தை பார்க்காதிருக்க ஆண்டவர் அருள் புரியட்டும்.//

    என்ன இப்படி சொல்லிடீர் ... டிவியில் காட்டும் DNA படத்தைபார்த்தே மூலக்கூறை உருவாக்கி இருக்காங்களே

    ReplyDelete
  4. @Dr.Dolittle

    // Wolfgang Petersen இயக்கிய outbreak படம் பாருங்களேன் //

    // A.R Murugadoss இயக்கிய 7th sense படம் பாருங்களேன் //

    English தமிழ் english தமிழ் தமிழ்.............டாக்டர்.உங்கள மோகன் செமத்தியா ஓட்டுறாரு...

    அவுட்ப்ரேக்லாம் எப்பவோ பாத்தது......எனக்கென்னவோ அது புடிக்கல......என்னைப் போன்ற சில்லுன்டிகளுக்கும் கூட contagion படம் புரிஞ்சது. அதுவும் காம்ப்ளெக்சான ஒரு விஷயத்தை இப்படி காட்சி ரீதியா புரிய வைக்கிறது கஷ்டம்ன்னு நெனைக்கிறேன்.....


    @டெனிம்...

    டிரைவ் படம் உங்களுக்கு புடிக்காதது குறித்து மகிழ்ச்சி.

    என்னைய கூட மதிச்சு காலங்காத்தால கமென்ட் போட்டுது குறித்து அளவு கடந்த ஆனந்தம்....

    ReplyDelete
  5. இன்னிக்கி மதியத்துக்குள்ள படிப்பேன். படிச்சிபுட்டு வரேன்.

    ReplyDelete
  6. டெனிம் அண்ணன் பத்தி வள்ளுவர் அப்பவே சொல்லி இருக்காரு ,
    "ஓட்டலில் சிறந்த ஓட்டல் (hotel அல்ல ) டெனிம் அண்ணே ஓட்டல்
    அவ்வோட்டல் நாள் பூரா ஓட்டப்படும் ".

    ReplyDelete
  7. Drive படத்தை இப்ப தான் டவுன்லோட் பண்ணியிருக்கேன்... எனக்கு புடிக்கும்-னு நம்புறேன்.. அமெரிக்கா-ல ஆஹா ஒஹோ-னு சொன்னாலும் நம்ம ஆளுங்க நிறைய பேருக்கு இந்த படம் புடிக்கல..

    இந்த டைரக்டரோட pusher trilogy நல்லாயிருக்கும்-னு கேள்விபட்டுருக்கேன். நீங்க பாத்துருக்கீங்களா??

    Contagion பாக்கணும்-னு இருக்குற படம். பாத்துட்டு சொல்றேன்.

    ReplyDelete
  8. ஜனநாதன் இந்த விசயத்தை ஈ படத்துல செமயா காமிச்சிருப்பாரே....

    //ஸ்கூல் படிக்கும் போது பயன்படுத்துவோமே, மைக்ரோஸ்கோப் - அதைவிட சற்றே பெரிய ஒன்றை வைத்துக் கொண்டு DNA ஆராய்ச்சி செய்யும் படம் தான் தமிழின் ஆகச்சிறந்த அறிவியல் கதை என்று ஆணித்தரமாக நம்பும் ஆட்கள் //

    மன்னிக்கவும்...நெஞ்சில் ஒரு ஆலயம் படத்தில் டாக்டராக வரும் கல்யாணகுமார் கேன்சர் செல்களை மைக்கேராஸ் வழியாக பார்ப்பார். அதுதான் எனக்கதெரிந்து தமிழில் வந்த முதல் மற்றும் கடைசி அறிவியல் படம். :))

    ReplyDelete
  9. நானும் ட்ரைவ் படத்தைப் பற்றி எழுதியிருந்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது, முக்கியமாக ரையன் கோஸ்லிங்கின் நடிப்பு டைவர்சிட்டி.

    Drive விமர்சனம்

    Contagion படத்தை டவுன்லோட் செய்து வைத்திருக்கிறேன். சீக்கிரமே பார்க்கிறேன்.

    நன்றி.

    ReplyDelete
  10. நல்ல அருமையான விமர்சனம்.நன்றி..

    ReplyDelete
  11. @kanagu
    Drive படத்த பொறுத்தவரை நெட்ல ரெண்டே ரெண்டு category தான்....ஒண்ணு ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்றாங்க...இல்ல, படுமொக்கை என்ற கமென்ட்...

    இந்நேரம் பாத்துரிப்பீங்க...பிடிச்சிருக்கும்னு நெனக்கிறேன்...


    @பிரதாப்.....
    நீங்க சொல்றது வாஸ்தவம்தான்.இதுக்குதான் ஒரு மூ..த்த தமிழ் உடன் பிறப்பு வேணும்னு சொல்றது...

    @ஹாலிவுட்ரசிகன்

    ஆமா பாஸ்..ஓபனிங்ல இருந்து - கார்ல உக்காந்திருப்பானே - கோஸ்லிங் நடிப்பு செம.............ஆனா, ரொம்ப அபாராம்னு என்னால சொல்ல முடியல.......

    @Kumaran
    நன்றி நண்பா.........முடிஞ்சா படத்த பாருங்க....

    ReplyDelete
  12. விக்ஸ் பத்தின பாராவுல இங்கே படிக்கவும்னு போடிங்களே... லிங்க் குடுத்திங்களா.. இதுக்கு தாம்லே ஒரு டெஸ்ட்டர் வேணுங்கறது..

    ReplyDelete