Sublimation(பதங்கமாதல்):பள்ளியில் படித்திருப்போமே நினைவிருக்கிறதா. திட நிலையிலிருந்து நேரடியாக வாயு நிலைக்கு மாறும் நிகழ்வு. From solid state to gaseous state without attaining liquid state. கற்பூரம் சிறந்த உதாரணம். மற்றொரு சிறந்த உதாரணம் ட்ரை ஐஸ்(Dry ice, வேறொன்றும் இல்லை. திண்ம(Solid) வடிவில் இருக்கும் கார்பன் டை ஆக்சைட்: CO2).  −78.5°Cல் ட்ரை ஐஸ் சப்ளிமேட் ஆகும். அதாவது நேரடியாக வாயுவாக மாறிவிடும். எனது sublimation temperature இந்த இரு பாடல்களும் தான். 




1960. ரே சார்ல்ஸ் அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாணத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த இசை விழாவில் கலந்து கொள்ளவது குறித்து மிகுந்த குதூகலத்துடன் இருந்தார். இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதையும் தாண்டி ஜியார்ஜியாவில் நடப்பதுதான் அவரது அதீத மகிழ்ச்சிக்குக் காரணம். ஏனென்றால் ஜியார்ஜியா, அவர் பிறந்த மாகாணம்.
அதே காலகட்டத்தில் தான் அமெரிக்காவில் ஜிம் க்ரோ சட்டம் அமலில் இருந்தது.கறுப்பினர்கள் - வெள்ளையர்களுக்கு என்று தனித்தனியாக -வாஷ்பேசின் முதற்கொண்டு - அனைத்தும் (ப்ளூஸ் பதிவில் பார்த்தோமே) அமைக்கப்பட்டிருக்கும்.அந்த சட்டம் கடுமையாக அமலில் இருந்த மாகாணங்களில் ஜியார்ஜியாவும் ஒன்று. இசை நிகழ்ச்சிகளின் போது கூட வெள்ளையர்களும் - கறுப்பர்களும் தனித்தனியாகவே பிரித்து வைக்கப்பட்டிருப்பர். தனது இசை நிகழ்ச்சிலாவது இது நடக்காது என்று ரே சார்ல்ஸ் நினைத்திருந்தார். கடைசிவரை இந்த நடைமுறையை மாற்ற முடியாது என்று நிகழ்ச்சி அமைப்பாளர்கள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். 60களின் ஆரம்பங்களில் தான் ரே மிகவும் புகழடைத் தொடங்கிய காலகட்டம். அவர் கேட்டால் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கொட்டிக் கொடுக்க தயாராக இருந்தனர்.இந்நிகழ்ச்சிக்கும் அவ்வாறே கொட்டிக் கொடுத்திருந்தனர். ரே நினைத்திருந்தால் போய் கலந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டார். அதையும் மீறி இதுபோன்றதொரு பிரித்து வைக்கபட்ட கூட்டத்தில் அவர் இசைத்திருந்தால் இசையும் அடிப்படையே தகர்ந்திருக்குமல்லவா. ரத்து செய்ததினால், அந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் கோர்ட் படியேற, தான் வாங்கிய தொகையைப் போல கிட்டத்தட்ட இருமடங்கு தொகையை அவர் நஷ்டஈடாக கொடுக்க வேண்டி வந்தது.இதுகுறித்து அவர் கொஞ்சம் கூட வருந்தவேயில்லை.
இருப்பினும் இந்நிகழ்ச்சி அவர் மனதை அலைகழித்துக் கொண்டே இருந்தது. அதன் காரணமாகவே ஜியார்ஜியா குறித்த இப்பாடலை பதிவு செய்ய விரும்பினார். இது அவரது பாடல் இல்லை. 1930ல் ஹோகி கார்மிக்கேல் மற்றும் ஸ்டுவர்ட் கொரேல் ஆகியோர் இயற்றிய பாடல். இப்பாடலை அடிக்கடி காரில் போகும் போதும் வீட்டிலிருக்கும் போதும் ரே முணுமுணுப்பது வழக்கம். இப்பாடலையே தனது பாணிக்கு தக்கவாறு மாற்றிக கொள்ள தீர்மானித்தார்.பொதுவாக ரேயின் பாடல்கள் 12 - 15 டேக்குகள் வரை எடுப்பது வழக்கம். ஆனால் இந்தப் பாடல் நாலே டேக்கில் முடிந்துவிட்டது.
இன்னொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். முதன் முதலில் 30களில் அப்பாடலை இயற்றப்பட்ட போது - ஜியார்ஜியா என்று அவர்கள் மனதில் வைத்து எழுதியது ஒரு பெண்ணைப் பற்றி.
1979. அதே ஜியார்ஜியா மாகாணம். சிவில் உரிமைப் போரின் விளைவாக ஜிம் க்ரோ மாதிரியான விஷயங்களில் ஒழிந்துவிட்ட நேரம். தனது மாகாணத்தில் இதுபோன்றதொரு சட்டம் இருந்ததே என்பதற்கு வருந்தியும் இந்த பாடலினால் ஈர்க்கப்பட்டும் 'Georgia on my mind' பாடலை தனது மாகாணத்தின் பாடலாக - ரே சார்ல்ஸின் முன்னிலையிலேயே - ஜியார்ஜியா அரசாங்கம் அறிவித்தது (நமது தமிழ்த்தாய் வாழ்த்து மாதிரி). 60க்கு பிறகு ரே அன்று தான் ஜியார்ஜியாவிற்கே செல்கிறார்.தனது வாழ்வில் உன்னதமான தருணங்களில் ஒன்று என்று இந்நிகழ்ச்சியை அவர் குறிப்பிடுகிறார்.
My version of Georgia became the state song of Georgia. That was a big thing for me, man. It really touched me. Here is a state that used to lynch people like me suddenly declaring my version of a song as its state song. That is touching.


ஏக்கம்,பிரிவு,பால்யம் என்று அனைத்தும் வெளிப்படும் ஒரு பாடல்.இதில் வரும் ஜியார்ஜியாவை காதலியாக - குழந்தையாக - நண்பனாக - மழையாக - நமது சிறுவயது ஊர் என்று மனதுக்கு நெருக்கமான எந்தவொரு விஷயத்தோடும் தொடர்புபடுத்திக் கொள்ளலாம். சற்றே அமைதியான மனநிலையில் கேட்டுப் பாருங்கள்.



Georgia, Georgia,
The whole day through 
Just an old sweet song 
Keeps Georgia on my mind 

I'm say Georgia 
Georgia 
A song of you 
Comes as sweet and clear 
As moonlight through the pines 

Other arms reach out to me 
Other eyes smile tenderly 
Still in peaceful dreams I see 
The road leads back to you 

I said Georgia, 
Ooh Georgia, no peace I find 
Just an old sweet song 
Keeps Georgia on my mind 

Other arms reach out to me 
Other eyes smile tenderly 
Still in peaceful dreams I see 
The road leads back to you 

Georgia, 
Georgia, 

No peace, no peace I find 
Just this old, sweet song 
Keeps Georgia on my mind 

I said just an old sweet song, 
Keeps Georgia on my mind 



ரே சார்ல்ஸ் - என்னவொரு மனிதர்.என் வாழ்வே எனது செய்தி என்று காந்தி கூறியது போல இவர் வாழ்வு நம் அனைவருக்கும் ஒரு உந்துசக்தி.தான் சம்பாதித்தவைகளை பெருமளவில் நன்கொடையாகவே பல்வேறு விஷயங்களுக்குக் கொடுத்தவர்.அவர் பியானோவின் முன்னமர்ந்து குழந்தை போல மிதமிஞ்சிய குதூகலத்துடன் இசையமைப்பதைக் பார்ப்பதே ஒரு கண்கொள்ளக் காட்சி. இவரது கதை தான் Ray என்ற பெயரில் ஜேமி ஃபாக்ஸ் ரேயாக நடிக்க, 2004ல் வெளிவந்தது. 14 மணிநேரம் கண்ணில் லென்ஸ் அணிந்துகொண்டு ரேயாகவே ஜேமி அப்படத்தில் உருமாறி இருப்பார் (இதுவொரு க்ளீஷேவான வார்த்தையாக போய்விட்டது.கேரேக்டராக வாழ்ந்திருப்பார் என்று சொல்வது. அதுபோல இதையும் நினைக்க வேண்டாம்). இப்படத்தைப் பார்க்காதவர்கள் ஒருமுறையேனும் அப்படத்தை பார்க்க வேண்டுகிறேன். ரே சார்லஸ் பற்றி தனியாகவே விரிவாக எழுத நினைத்திருப்பதால் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன். 
I'm not into the money thing. You can only sleep in one bed at a time. You can only eat one meal at a time, or be in one car at a time. So I don't have to have millions of dollars to be happy. All I need are clothes on my back, a decent meal, and a little loving when I feel like it. That's the bottom line.

  --------------------------------------------------------------------------------

இந்தப் பாடலும் அப்படியே Georgia on my mind போலத்தான்.டெல்லியை மனதில் வைத்துப் பாடியது. ஆனால் கேட்பவர்கள் மனநிலையைப் பொறுத்து யாரை வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் கண்முன் நிறுத்தும்.
இரண்டு - மூன்று மாதங்கள் முன்னர், NDTV பேட்டி ஒன்றில் பிரணாய் ராய் நிகழ்ச்சியின் முடிவில் ரஹ்மானிடம் "any other thing that u would like to play that defines rahman, his music..anything if u want to play..." என்று கேட்ட பொழுது சற்றும் யோசிக்காமல் ரஹ்மான் தனது வசீகரக் குரலில் இந்தப் பாடலையேப் பாடுவார். இசையைக் கடந்த பாடல்களில் ஒன்றாக இது எனக்குத் தோன்றும்.பின்னணி இசை எதுவும் இல்லாவிட்டாலும் கூட கேட்பவர்களை என்னவோ செய்யவல்லது.


ரஹ்மானின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று இசைக் கோர்ப்பு - ஆர்க்கெஸ்ட்ரேஷன். மிக அலாதியான புதிய வகையான வெவ்வேறு லேயர்களில் நுணுக்கமானதாக பல இசைக் கோர்ப்புகள் அமைந்திருக்கும். நான் கேட்ட வரையில் ரஹ்மான் தான் இவ்விஷயத்தில் எனக்கு மிகப்பிடித்தவர்.அவரால் கடினமான ஆர்க்கெஸ்ட்ரேஷகளையும் கையாள முடியும். Rockstarல் வரும் Hawa Hawa பாடல் போல. அக்கார்டியன் + வயலின் + கிடார் என்று அப்பாடல் பல தளங்களில் மிக அசாதாரணமாக பயணிக்கும்.
அதற்கு நேரெதிராக இப்பாடலில் Continuum Fingerboard + Bass guitar + Keyborad என்று வெகு குறைவான ஆர்கெஸ்ட்ரேஷன்.ஆனாலும் கூட என்னவொரு இசை. டாலியின் சர்ரியலிச ஓவியம் சட்டென்று இசைக் கோர்ப்பாக உருமாறியதைப் போல.
Jama Masjid: Delhi (Image src: Marcoryanphotography.com)



Stay..........
Just...stay, as you are
A little pain, a little comfort
Just stay, stay as you are
A gentle breeze, a stormy obsession
A bit silky, my beloved; a little rough too

Stubborn at times, you quarrel or fill with fragrance
Wouldn't want to change you, not even a little
Without adornment, without impurity, no more, no less
I like you, just as you are
In your rainfall, I want to soak and dissolve
In your flame, I want to burn and turn to ash
If you torment me
You soothe me too
I find love in that wounds too

O..........Sea of love...
Let me drown in you
Just stay, stay as you are

If we are to travel hand in hand
How can our right hands together?
We have to walk holding hands
How can we hold our right hands together?
One would be right, one would be left
Take my hand, hold my hand
We have to travel together, so hold my hand

கடைசி மூன்று நிமிடம் ரஹ்மான் வாசிக்கிற - Continuum Fingerboard, உலகளவில் வெகு சிலபேருக்கே மிகச் சரியாக, கவனிக்கவும் - மிகச் சரியாக வாசிக்கத் தெரியும். உலகளவில் John Williams, Led Zeppelin's Paul Jones மாதிரியான ஆட்கள் இதை பயன்படுத்தி உள்ளனர்.இந்த Fingerboardன் தனித்துவமே, இதுவொரு முப்பரிமாண(3D) இசைக் கருவி.வழக்கமான கீபோர்ட் கீக்களுக்குப் பதில் டச் கீ வகையிலயே இருக்கும். சரி, அதென்ன இசைக் கருவியில் முப்பரிமாணம். X,Y axis போக மூன்றாவதாக, Z axisலையும் - அழுத்தத்துக்கு(Pressure) ஏற்ப, இசை வெளிப்படுமாம். இந்த வீடியோ மேலதிக தகவல்களையும் புரிதல்களையும் தரும் என்று நம்புகிறேன்.
 பி.கு:
  • Ray படத்தில் ஜியார்ஜியா மாகாணத்தில் அந்நிகழ்ச்சியில் ரே கலந்து கொள்ளாமல் இருக்க முடிவெடுத்த பிறகு அவருக்கு அம்மாகாணம் தடை விதித்ததாகவும் பின்னர் அதற்காக 1979ன் மன்னிப்பு கேட்டதாகவும் காண்பித்திருப்பர். ஆனால், நிஜத்தில் தடை எல்லாம் விதிக்கப்படவில்லை. 1979ல் அதிகாரப்பூர்வ பாடலாக அதனை அறிவிக்கும் நிகழ்ச்சியில் ஜிம் க்ரோ போன்ற கொடூர வழக்கங்கள் அந்த மாகாணத்தில் இருந்தமைக்காக வருத்தம் தெரிவித்தனர். அவ்வளவே.
  • இதில் Rehna Tu குறித்த விஷயங்கள் நான் ஏற்கனவே G+லிலும் Facebookலிலும் எழுதியது. மொழிபெயர்ப்பு, சில தளங்களில் இருந்து எடுத்து சில வார்த்தைகளை மட்டும் எனது விருப்பத்திற்கு மாற்றியிருக்கிறேன்.
  • திடீரென்று தான் இந்த இருபாடல்களுக்கான இந்த ஒப்புமை பதிவு தோன்றியது. Georgia பாடலைக் கேட்டுக கொண்டிருந்தேன்.சட்டென்று முந்தாநாள் இது தோன்றியது.அவ்வளவே.
சொல்ல மறந்தது:
Kanye Westம் Jamie Foxxம் சேர்ந்து ரேவின் "I got a woman" பாடலை அடிப்படையாக வைத்து பாடிய இந்த ஹிப் - ஹாப் பாடல், one of my most favourite hip - hop songs. அசரடிக்கும் பீட். முடிந்தால் ஒரிஜினல் ரே பாடிய I got a womanயும் கேட்டுப் பாருங்கள்.


Contagion:
உலகத்திலயே அபரிதமான வருமானம் கொழிக்கும் தொழில் எதுவாக இருக்கும் ? ராணுவத் தளவாடங்கள் தயாரிக்கும் தொழிலா? இல்லை, பெட்ரோல் போன்ற எண்ணெய் வியாபாரமா. ஒருவேளை தொழில்நுட்பம் சார்ந்த வியாபாரமாக இருக்குமோ. இது எல்லாவற்றையும் விட லாபமும் லாபியிங்கும் (Lobbying) வெகு அபாரமாக புழங்கும் தொழில் - சர்வநிச்சயமாக மருந்துத் தொழில் தான். நமது கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவு பணம் கொழிக்கும் தொழில்.புதுப்புது வைரஸ்கள் தோன்றுவதற்கு பின்னால் இந்த மருந்து கம்பெனிகளின் கைங்கரியம் உண்டென்று கூறுகின்றனர்.எய்ட்ஸ் நோய்க் கிருமி கூட ஒரு ஆராய்ச்சி கூடத்தில் இருந்தே வெளியேறியதாகவும் பேச்சு உண்டு.அதில் ஆரம்பித்து, மருந்து விற்பனை பிரதிநிதிகள் மூலம் மருத்துவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு குறிப்பட்ட மருந்துகளை வாங்க வைப்பது, மருத்துவ பரிசோதனைகள் செய்யச் சொல்வது என்று இந்த பட்டியல் நீளும்.

இதெல்லாவற்றையும் விட முக்கியமானது, ஒரு மருந்து கண்டுபிடித்தால், அதனை எவ்வாறு பரிசோதிப்பது ? பெரும்பாலும் இதில் - சோதனையும் ஆரம்ப காலகட்டத்தில் மாட்டுவது ரீசஸ் குரங்கு தான்.என்னதான் விலங்குகளின் மீது பரிசோதித்து வெற்றி கண்டாலும், மனிதர்களிடம் எப்படி அது செயல்படும் ? யாருக்கு முதலில் செலுத்தி நோட்டம் பார்ப்பார்கள் ? அங்குதான் மறைந்திருக்கிறது அல்லது கண்டுகொள்ளாமல் விடப்படுகிறது பல உண்மைகள். பெரும்பாலும் ஆப்ரிக்கா - நைஜிரியா போன்ற உலக நாடுகளின் மக்கள் மீதுதான் இந்த ஆராய்ச்சி இருக்கும். இந்தியாவிலும் இது நடக்கவே செய்கிறது. இது மருந்தில் இருந்து ஆரம்பித்து பால் பௌடர் வரை தொடர்கிறது. நெஸ்லே, குழந்தைகளுக்கு கொடுக்கின்றார்களே, அதை புறக்கணிக்கவே International Nestle Boycott Committee என்று ஓரமைப்பு 1977 முதல் இயங்கி வருகின்றது. இதுபோன்ற விஷயத்தை என்னவோ நான் போறபோக்கில் எழுதுவதாக எண்ண வேண்டாம். கீழே இருப்பவைகளை ஒருமுறையேனும் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

பல பன்னாட்டு மருந்து கம்பெனிகள் மில்லியன் கணக்கில் திடீரென்று ஆப்ரிக்கா போன்ற நாடுகளுக்கு நன்கொடையாக வழங்குவதாக செய்திகளில் வருகின்றனவே, அதற்கு பின்னால் இதுபோல பல கதைகள் ஒளிந்திருக்கலாம்.இதுகுறித்து குறைந்தது 100 பதிவுகளாவது எழுதலாம்.அவ்வளவு விஷயங்கள் உள்ளன. முடிந்தால் அதுகுறித்து விரிவாக ஒருநாள் பார்க்கலாம்.


இதுவரை நாம் எந்த மாதிரி வைரஸ் பரவும் படங்களை பார்த்திருப்போம் - ஒன்று அனைவரும் ஜோஃம்பிகளாய் மாறி விடுவர், I Am Legend - 28 days later மாதிரி. இல்லாவிட்டால், வைரஸ் மூலம் நோய் பரவுவதை அறிந்த ஹீரோ, பல்வேறு சாகசங்களுக்குப் பிறகு வைரசை அழித்தோ அல்லது அதற்கான முறிமருந்தை கண்டறிந்தோ உலகை உய்விப்பார். ஆனால், ஒரு கொடிய வைரஸ் நோய் எவ்வாறு பரவும் என்பது குறித்து இதுவரை வந்த படங்களிலேயே ஆகச் சிறந்த விவரணை கொண்ட படம் இதுவாகத் இருக்கும் என்று-நான் சொல்லவில்லை, பல அறிவியல் அறிஞர்களே பாராட்டு தெரிவித்திருக்கின்றனர்.உதாரணமாக சார்ஸ் என்ற நோய், இரண்டாண்டுகள் முன்னர் உலகையே உலுக்கியதே, ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.அது எவ்வாறு பரவியிருக்கும்? இந்தப் படம் அதுபோன்ற ஒரு சூழ்நிலையை தத்ரூபமாக பிரதிபலிக்கின்றது.மிகமிக சிக்கலான அறிவியல் பதங்கள்(Terminology) எளிய முறையில் விளக்கப்பட்டிருக்கின்றன.நம்மைப் போன்ற ஒரு ப்ளாக்கரின் வாயிலாகவே பல விஷயங்கள் பார்வையாளருக்கு விளக்கப்படுகின்றன. விக்ஸ், சளிக்கு தேய்க்கின்றோமே அதற்கு பின்னால் ஒரு வரலாறு உண்டு. நெட்டில் தேடிப் பாருங்கள். மேலும், விக்ஸினால் நமக்கு நிஜமாக பெரியளவில் நமக்கு பலன் கிடைப்பதில்லை என்பது உங்களுக்கு தெரியுமா ? சற்றே நாசியின் பாதையினை விரிவாக்கி, சளி குறைந்ததைப் போன்ற பிம்பத்தைதான் விக்ஸ் ஏற்படுத்துகின்றது. இது அறிவியல்பூர்வமான உண்மை. இங்கே படிக்கவும்.இதுபோன்ற பல கேள்விகள் பதிவராக வரும் - ஜுட் லா மூலமாகவே நமக்கு புரிய வைக்கப்பட்டிருக்கின்றன.

என்னதான் வைரஸுக்கான முறிமருந்தை கண்டுபிடித்தாலும் ஒரே நாளிலெல்லாம் அதனை தயாரிக்க முடியாது.பலவேறு நிலைகளைத் தாண்ட வேண்டும்.அத்தனையையும் மிகத் தத்ரூபமாக இப்படம் சித்தரித்துள்ளது. இதுபோன்ற தொற்றுநோய் பரவும் காலங்களில் அரசாங்கமும் மக்களும் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு பிராச்சார படமாகக் கூட இதனை எடுத்துக் கொள்ளலாம்.


இந்தப் படத்தைப் பார்க்க ஒரே காரணம் - ஸ்டீவன் சொடர்பெர்க். எனக்கு மிகப் பிடித்த ஒரு இயக்குனர்.நமக்கு மட்டுமல்ல, உலகின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான இங்க்மார் பெர்க்மானின் கவனத்தையும் கவர்ந்தவர்.இந்த பேட்டியைப் படியுங்கள்.

ஸ்கூல்ல பயன்படுத்தினோமே, மைக்ரோஸ்கோப் - அதைவிட சற்றே பெரிய ஒன்றை வைத்துக் கொண்டு DNA ஆராய்ச்சி செய்யும் படம் தான் தமிழின் ஆகச்சிறந்த அறிவியல் கதை என்று ஆணித்தரமாக நம்பும் ஆட்கள் இந்தப் படத்தை பார்க்காதிருக்க ஆண்டவர் அருள் புரியட்டும்.


----------------------------------------------------------------------------------------------------

Drive:
பெயரில்லா யாத்ரீகன் போல யார், என்னவென்று ஒரு விவரமும் தெரியாத இளைஞன்.அபாரமான டிரைவர். அதுவே அவனது மூலதனம்; passion; பொழுதுபோக்கு, எல்லாமும். ஒரு கார் கேராஜில் வேலை செய்து வருகிறான். தவிர, ஹாலிவுட் பட கார் ஸ்டன்ட்களில் டூப்பாக ஈடுபட்டும் வருகிறான்.இதைத் தவிர, இவனது மற்றொரு முக்கிய வேலை, கொள்ளையர்களை - திருடர்களை அவர்கள் வேலை முடிந்தவுடன் காரில் லாவகமாக தப்ப வைக்கும் டிரைவராக பணியாற்றுவது. ஆனால், அதிலும் அவனுக்கு கடுமையான நிபந்தனைகள் உண்டு. யாருக்காகவேணும் அந்த நிபந்தனைகளில் இருந்து கீழிறங்கி வர மாட்டான்.

இந்த சாட்டின் ஜெர்கினுக்காகவே ராஜேஷ் இந்தப் படத்தைப் பார்ப்பார் என்று ஒரு பட்சி சொல்கின்றது
புதிதாக குடியேறிய இடத்தில் ஒரு பெண்ணையும் அவளது மகனையும் சந்திக்க நேரிடுகிறது.அவளது கணவன் திருட்டுக் குற்றத்திற்காக சிறைச்சாலையில் இருக்கிறான்.இந்நிலையில் அவனது கேராஜ் முதலாளி கார் பந்தய விளையாட்டில் இவனை நம்பிக் குதிக்கிறார்.அதற்காக அந்த ஊரின் "தல" மாதிரியான ஆளிடம் கடன் வாங்குவதோட மட்டுமல்லாமல், அவன் பங்குதாரராய் உள்ளே வருவதையும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிருக்கிறது.

ஜெயிலில் இருந்து அவன் கணவன் வெளியே வருகிறான்(ஒருபுறம் அவள் மகிழ்ந்தாலும் அவளது முகத்தில் ஏதோ பிரிவுத் துயரம் இருக்கிறதே, ஏனோ?)
கணவன் - ஸ்டாண்டர்ட் (பெயர் தான்) மீண்டுமொரு சிக்கலில் மாட்ட நேரிடுகிறது. மாஃபியா குடும்பத்திற்கு சொந்தமான, லாக்கரில் இருக்கும் பணத்தை எடுத்து வெளியே வர வேண்டும். வேலையை முடிக்காவிடில் அவன் மனைவிக்கும் குழந்தைக்கும் ஆபத்து நேரும் சூழல்.இந்தவொரு காரணத்திற்காகவே ஸ்டாண்டர்டுக்கு அவன் உதவ சம்மதிக்கிறான்.ஆனால் எல்லாம் தலைகீழாய் மாறிப்போகிறது. பல திருப்பங்கள் - கொலைகள் என்று எல்லாருடைய வாழ்வும் சுக்குநூறாய் சிதறுகிறது.

சுலபமாக யூகித்துவிடக்கூடிய கதைதான்.ஆனால் எடுத்தவிதம் எனகென்னவோ மிகவும் பிடித்துப் போனது. அதற்கு மற்றொரு முக்கிய  படத்தின் இயக்குனர், டென்மார்கைச் சேர்ந்த நிகோலஸ் விண்டிங் ரெஃப்னின் மற்றொரு படமான Valhalla Rising. அதியற்புதமான ஒளிப்பதிவு. ஒரு ஸ்டைல் இருந்தது. இந்த ட்ரைலரைப் பாருங்கள். நீங்களே அப்படத்தைத் தரவிறக்கிப் பார்ப்பீர்கள். (Drive படம் பார்க்கும் போது, Valhalla Rising பட இயக்குனரது படம் என்று தெரியாது)


அந்தப் படம் மாதிரியே, இந்தப் படத்திலும் மேக்கிங்கில் மிரட்டி இருக்கிறார்.மிக மிக குறைவான வசனங்கள்.செமத்தியான கேமரா வொர்க். மற்றொரு முக்கிய விஷயம், இந்தப் படம் - சர்ரியலிச படங்களில் அசாத்தியாமான புனைவுகளை உருவாக்கிய அலசாண்ட்ரோ சொரோவ்ஸ்கி (Alejandro Jodorowsky)க்கு ஒரு tribute என்று படத்தின் இயக்குனர் சொல்லி இருப்பது. அதற்கேற்ப, குறியீடுகளும் அவ்வப்போது வந்து போகின்றன. மேலும் 70களில் சக்கைபோடு போட்ட, ஸ்டீவ் மெக்குவீன் நடித்த Bullit (இந்தப் படத்தைப் நிறைய பேர் பார்த்திருப்பார்கள் என்று நம்புகிறேன். குறைந்தபட்சம் "அந்த" புகழ் பெற்ற கார் ஜேசிங் குறித்தாவது கேள்விப்பட்டிருப்பார்கள்) போன்ற படங்களின் நாஸ்டால்ஜியா என்றும் இயக்குனர் கூறியுள்ளார்.டைட்டில் போடும் போது, என்னடா இது 80களின் சாஃப்ட் ராக் வகை இசை தொடங்கிய போதே என்னவோ வித்தியாசமாக இருக்கிறதே என்று தோன்றியது. டைட்டில் கூட பிங்க் கலரில். பல 80களின் ஆங்கில படங்களில் பார்த்திருப்போம்.

புரட்டிப் போடும் படம் என்றெல்லாம் கூற முடியாவிட்டாலும், என்னவோ பிடித்துப் போனது. அதனால், பார்க்க முடிவு செய்திருந்தால் ரொம்பவும் எதிர்பார்ப்பில்லாமல் பார்க்கவும். இந்த இயக்குனரை நினைவில் வைத்துக் கொள்ளவும்.டென்மார்க்கின் மார்டின் ஸ்கார்சேசே என்றுகூட இவரைக் கூறுகின்றனர் (கொஞ்சம் ஓவராதான் போயிட்டாங்களோ)