Sunday, August 28, 2011

Peppermint Candy(கொரியன்) - ஒரு கொடுங்கனவு



1. Outdoor Excursion: Spring 1999
சில விஷயங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது. ஆறு – பாலம் – அதில் கடக்கும் ரயில், இது போல. அதுபோன்று ஒரு சூழல். சற்றே நடுத்தர வயதான ஆட்கள், ஒரு 10-15 பேர் அங்கே குழுமியிருக்கின்றனர். இருபது வருடங்களுக்கு முன்னர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக படித்த மாணவர்கள் இத்தனை ஆண்டுகள் கழித்து சந்திக்கும் நிகழ்ச்சி. அனைவரும் உற்சாகமாக பாடிக் கொண்டும் பழைய கதைகளை பேசிக் கொண்டும் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். திடீரென்று எங்கிருந்தோ புதிதாக ஒரு ஆள், கோட் சூட்டுடன் வருகிறான். முதலில் அவனை யார் என்று தெரியாதவர்கள், பின்னர் அவன்தான் ஓங்கோ என்று கண்டுகொள்கின்றனர். அவனும் பழைய மாணவன் தான்.ஆனால் அவனை யாரும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கவில்லை.அதற்காக அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அவனிடம் மன்னிப்பும் கேட்கிறார்.

ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகவே போகின்றது – ஓங்கோ பாட ஆரம்பிக்கும் வரை.ஒருமாதிரியான பிறழ்ந்த மனநிலையியே அவன் இருப்பது அப்போதுதான் அனைவருக்கும் தெரிய வருகிறது. திடீரென்று வெறி கொண்டு ஆற்றில் இறங்கி அக்கரையினை நோக்கி ஓட ஆரம்பிக்கிறான். பாலத்தில் மீது ஏறி தண்டவாளத்தின் மீது நின்று கொண்டு கண்டபடி கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறான்.ஆரம்பத்தில் அதை அவ்வளவாக கணக்கில் எடுத்துக் கொள்ளாத நண்பர்கள், தூரத்தில் ஒரு ரயில் வர ஆரம்பித்தவுடன் பதட்டமடைகின்றனர்.அவனை இறங்கச் சொல்லி கூக்குரலிடுகின்றனர்.அதனை எல்லாம் கேக்கும் மனநிலையிலே யே அவன் இல்லை.ஆனால் எதிர்பாராவிதமாக ரயில் அடுத்த தண்டவாளத்தில் கடந்து போகின்றது. தெரிந்துதான் விளையாடுகின்றான் போல என்று நண்பர்கள் சகஜ நிலைக்கு திரும்புகின்றனர். இருந்தாலும் அவன் கீழே இறங்கி வருவதாய் இல்லை. கொஞ்சநேரத்தில் அவன் நின்றிருக்கும் தண்டவாளத்திலேயே ரயில் வருகின்றது. அனைவரும் திடுக்கிட்டு பயங்கரமாக கூச்சலிடுகின்றனர்.அவன் வேறொரு உலகில் இருக்கும் போது எப்படி இதெல்லாம் கேக்கும்.ரயில் மிகக்கிட்ட வருகிறது. ரொம்பவும் அசுவாரசியமாக ரயிலை நோக்கி திரும்புகிறான். மிகுந்த உக்கிரமான மனநிலையில் இருக்கிறான்.ரயில் மிகவும் அருகே வந்துவிட்டது. தான் இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்த வாழ்க்கையை நினைத்துக்கொண்டு "I m going back" என்று ரயிலை நோக்கிக் கத்துகிறான்.

திரை ஸ்தம்பிக்கிறது
ஆரம்பிக்கிறது.....ஓட.....பின்னோக்கி....அப்படியே.....ரயில்.....

ஏன் அவன் தற்கொலை முடிவுக்குச் சென்றான்(அவன் இறந்தானா என்பது குறித்து எதுவும் காட்டப்படவில்லை), யாருமே அவனை அந்நிகழ்ச்சிக்கு அழைக்காமல் எப்படி அங்கு வந்தான், நண்பர்கள் அவனிடம் பேசுவதை வைத்துப்பார்க்கும் போது, ஒரு சாதாரணமான மாணவன்-நண்பனாக இருந்தவன் ஏன் இந்த நிலைக்கு ஆளானான் என்பது போன்ற கேள்விகளுக்கு ஆறு பகுதிகளில் விடை தெரிய வருகிறது.

ஓங்கோ – என்ற ஒரு 19-20 வயது மாணவனின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் கால ஓட்டத்தில் சீரழிகின்றது என்பதே படத்தின் அடிநாதம். அப்பொழுதுதான் முதல் காதல் அரும்ப தொடங்கியிருந்த காலகட்டம்(அதுதான் படத்தின் கடைசிப் பகுதியான Picnic: Fall 1979). ஒரு புகைப்படக்கலைஞனாக ஆவதே லட்சியம் என்று அலைந்து கொண்டிருப்பவன் சுகிம் என்ற மாணவியை அப்பொழுதான் சந்திக்கிறான். சிறிதுனாட்களுக்குள் ராணுவ நடவடிக்கைகளில், சக நாட்டுக்காரர்கள் போல -அவனும் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தபடுகிறான்.பல கொடூரமான மனத்தாக்குதல்களை அவன் அதன்மூலம் சந்திக்க நேரிடுகிறது. உக்கிரமான மனநிலையில் அதற்குப் பிறகு அவன் நடந்து கொள்ள அந்த காலகட்டமே காரணமாகிப் போகின்றது. பாதியிலே அவன் ராணுவத்தில் இருந்து விடுபட்டாலும்கூட, மிகுந்த மனபாதிப்புகளுக்கு உள்ளாகின்றான்.அது உடனே வெளியே தெரியாவிட்டாலும் கூட நாளடைவில் மூர்க்த்தனம் சிறுகச்சிறுக கசிய ஆரம்பிக்கின்றது.


பின்பு போலீஸ் வேலை – கம்யூனிச கொள்கை கொண்ட மாணவர்கள் - சொந்தமாக தொழில் – வேண்டாவெறுப்பாக காதலித்து, கடனுக்கே என்று மணந்து கொண்ட மனைவி – அவளுக்கு இருக்கும் வேறொரு தொடர்பு – வியாபாரத்தில் ஏமாற்றிய நண்பன் – முதல் காதலியின் கணவன் என்று அவனது வாழ்கையே படத்தின் மீதி ஆறு பகுதிகள்

2. The Camera: Three days ago: Spring  1999
3. Life is beautiful: Summer  1994
4. Confession: Spring  1987
5. Prayer: Fall  1984
6. Military Visit: May  1980
7. Picnic: Fall  1979

மேற்கொண்டு ஆறு பகுதிகள் குறித்து நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. இந்த ஆறு பகுதிகளில் என்ன விஷேசம் என்றால், அனைத்துமே தனித்தனியான ஒரு சிறுகதைபோலவே இருந்தது. ஓங்கோ – என்ற மனிதனின் வரலாற்றை காலம் கச்சிதமாக ஆறு பகுதிகளாக கிழித்தெறிந்து அதனை ஒருவர் படமாக இயக்கி இருந்தால், அது இப்படமாகத் தான் இருந்திருக்கும்.கிழித்தெறியப்பட்ட அந்த வரலாற்றை எழுதியது கொரியா. ஏனென்றால் கொரியாவின் ராணுவ ஆட்சி – மாணவர் புரட்சி – பொருளாதார வீழ்ச்சி போன்ற 1980 - 2000 வரையிலான கொரியாவின் மிக முக்கிய நிகழ்வுகள் தான் ஓங்கோவை ஒருவகையில் பாதிக்கின்றது. முக்கியமாக, கட்டாய ராணுவ சேவை. விடாது துரத்தும் கொடுங்கனவு போல அந்நிகழ்ச்சிகளே அவனை உள்ளிருந்து எதையோ நோக்கி தொடர்ச்சியாக தள்ளிக்கொண்டே இருக்கின்றது. மேலும் சரியான இளமைப்பருவம் கிடைக்காமால் போவதைவிட – இளமைப்பருவம் மறுக்கப்படுவதே மிகக் கொடுமையானது. குறிப்பாக, ராணுவ ஆட்சிகள் நிறைந்த நாடுகளைச் சொல்லலாம். மாபெரும் ஒரு கூட்டத்தின் பிரதிநிதியாகவே ஓங்கோவை பார்க்க வேண்டியுள்ளது.

படத்தின் கடைசிப் பகுதியில் – ஆரம்பத்தில் வரும் அதேமாதிரியான பிக்னிக், அதே மாணவர்கள், அதே இடம், அதே ஓங்கோ. ஆனால், அனைவரும் இருபது வயதில். மிகவும் வெகுளினயான ஓங்கோ, சுகிம் உடன் பேசிக் கொண்டிருக்கிறான். அதன் பின்பு வரும் ஐந்து நிமிடக் காட்சிகள்.............புதிர் நிறைந்த ஒரு கவிதை.அதிலொரு சின்ன விஷயம் உண்டு.நான் சொல்ல விரும்பவில்லை. பார்த்துவிட்டு(?) நீங்கள் நினைப்பதைச் சொல்லுங்கள்.



டைரக்டர் – லீ சாங் டாங். இவரது மற்ற படங்களும் இதே போன்று வீரியத்துடனே இருப்பதாக இணையத்தில் அவரைப் பற்றி படிக்கும் போது தெரிகிறது.  இதில் ஓங்கோவாக வரும் சொல் யுங் கு பற்றி என்ன சொல்ல. 20 வருடமாக அலைபாயும் ஒருவனது வாழ்கையை இவரளவிற்க்கு வேறு யாரும் காட்டமாக திரையில் வெளிப்படுத்தியிருப்பார்களா என்று தெரியவில்லை. 

படத்தில் மூன்று முக்கிய கதாபாத்திரங்கள், ஓங்கோ – ரயில் – பெப்பர்மின்ட் கேண்டி. ரயில் - அனைத்து பகுதியிலுமே, முக்கிய காட்சிகளை - இரவில் நிலவை சுமந்து ஓடும் ஆற்றினைப் போல, எங்கோ எடுத்துச் செல்கின்றது. சற்றே வித்தியாசமாக பின்னோக்கி. படம் குறித்து எவ்வளவோ சொல்ல ஆசை இருந்தாலும்......வேண்டாம்....நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சமீபத்தில் ஹெர்சாக் – டார் – கோடார்ட் போன்றவர்களின் படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறேன். ஆனால், அது எல்லாவற்றையும் விட இந்தப் படம், பார்க்கும் போதே ரொம்பவும் பாதித்துவிட்டது. Emotionally intense. பார்க்காமல் விட்டீர்கள் என்றால் பெரிய இழப்பு
Facebookers..

24 comments :

  1. Really Gud Review ... படிச்சதும் பாக்கனும்ன்னு தோணிடுச்சு ...பாத்துடு சொல்றேன்...

    ReplyDelete
  2. ஒரு நாவல் கதை மாதிரி நல்லாதான் இருக்கு.. அதை ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. மத்த பிரிவுகளை விரிவா எழுதியிருக்கலாமே?

    ReplyDelete
  3. //இந்தப் படம், பார்க்கும் போதே ரொம்பவும் பாதித்துவிட்டது//
    இந்த தாக்கம் பாதிப்பு போன்ற வார்த்தைகள் கொழந்த பதிவுகளில் சமீபமாகவே அதிகரித்து வருகின்றன..
    Mountain Patrol, Russian Ark, Werckminstor Harmonies, அப்புறம் இது...
    எல்லா ரிவீயுக்களும் ஒன்றை விட ஒன்று அதிகமாகவே இருப்பது போல் தோன்றுவதால், தங்கள் வாயாலேயே இதில் எது பெஸ்ட் எனகூறிவிடவும்!!

    ReplyDelete
  4. அருமையா எழுதியிருக்க மக்கா.வாழ்த்ஸ்.

    ReplyDelete
  5. மத்த பிரிவுகளை விரிவா எழுதியிருக்கலாமே? ///
    .
    .
    ஏம்பா அவுரு வச்சிகிட்ட வஞ்சனை பண்ணுறாரு?

    ReplyDelete
  6. நான் இதைப் படிக்கப்போவதில்லை. படத்தைப் பார்த்துட்டு வரேன். பீ கேர்ஃபுல்.

    ReplyDelete
  7. @ αηαη∂
    பாத்துட்டா................சொல்லுங்க


    @எஸ்.கே
    விரிவா நானே எழுதுறதா.....................என்னத்துக்கு ஆகுறது.....................தவறவிடாமல் படத்த பாருங்க


    @Philosophy Prabhakaran
    நன்றி


    @JZ
    நண்பா.ஒவ்வொன்னும் ஒவ்வொரு வகையில சிறந்தது.தனியா சொல்லுறதுல எனக்கு உடன்பாடில்ல...இப்ப இருக்குற மனநிலைக்கு - Peppermint Candyதான் பார்க்க சொல்வேன்

    தாக்கம், பாதிப்பு - எழுதும் போதே நெனச்சேன். Repetitiveவா இந்த வார்த்தைகள் வருதேன்னு...வேற என்னத்த சொல்றது


    @மரா
    மயில் ராவணன் என் பதிவில் கமென்ட் போட்டதே - நா - ஒருவேள எக்குத்தப்பா எப்பவாச்சு செஞ்ச - புண்ணியத்தின் பலன்தான். மறக்காம படத்த பாத்திருங்க


    @மனித புத்திரன்
    சுத்தம்....ஒண்ணும் புரியல.நன்றி..வணக்கம்


    @கருந்தேள் கண்ணாயிரம்
    அது..............சூட்டோட சூடா பாத்திருங்க

    ReplyDelete
  8. படிக்கப் போறதுமில்லை. பார்க்க போறதுமில்லை.

    ReplyDelete
  9. @ யோகி ஸ்ரீராமானந்த குரு

    ம்க்கும்....இத சொல்றதுக்குதான் பல ஹரிக்கேன்களுக்கு மத்தியில வந்தீங்களா ??

    ReplyDelete
  10. சுத்தம்....ஒண்ணும் புரியல.நன்றி..வணக்கம்///
    /.
    .
    .
    கொழந்த இல்ல அதான் வெளங்கல!!சரி உடு மாமு!!

    ReplyDelete
  11. romba intresting ah irukku kandippa pakkanum

    ReplyDelete
  12. @hai da
    நன்றி..............படத்த பாருங்க....புடிக்காம போக வாய்ப்பு மிக மிக குறைவு

    @மனித புத்திரன்
    நன்றி.....

    ReplyDelete
  13. ரொம்ப நாளா பதிவில எதுவும் எழுதலையே.. டச் விட்டு போச்சேன்னு நெனச்சிட்டு இருந்தேன்.. சரி இந்த வாரத்தில எழுத ஆரம்பிப்போம்.. peppermint candy படம் பத்தி எழுதுவோம்ன்னு நெனச்சேன்.. நீங்க எழுதிட்டீங்க.. :)) what a co-incidence.. :)

    ReplyDelete
  14. படத்தின் அரசியலை/அரசியல் நிகழ்வுகள் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவா எழுதியிருக்கலாம் தல.. குறிப்பா அந்த Gwangju படுகொலை நிகழ்த்தப்படும் நாளில்தான் இவனும் காலில் குண்டடிப்படுகிறான்.. தவறுதலாய் அந்த அப்பாவி இளம்பெண்ணை சுட்டுவிடுகிறான்..

    ReplyDelete
  15. இளையராஜாவை தவிர எல்லா நதாரிங்க பத்தியும் பதிவை போடு கேட்டா எனக்கு ராஜா பிடிக்காது.ஆனா ஓங்க பிளேஸ் பெக்குல கோவணம் கட்டிக்கிட்டு இதே ராசாவின் ராகத்தைதான் முனுமுனுதீர்கள் என்பதை மறக்க வேண்டாம்!!ரகுமான் ப்யூஸ் போன பல்பு!!வி.டி.வி. பாடல்கள் செம மொக்க!!போங்கடா லூசுங்களா

    ReplyDelete
  16. ரகுமானின் **** பண்ண பூ* நக்குடா!!ஒரே இரைச்சல்தான் அவன் இசை,!!!ஆனா ஆஹா இதுவல்லவோ ஒலக இசைன்னு நீயெல்லாம் சொன்னா அது ஒலக இசை ஆகிடுமா?சாரு என்னும் பொம்பள பொறுக்கியின் செருப்பை நக்கும் நாய்கள் நீங்கள்!!

    ReplyDelete
  17. மனுஷ்ய புத்திரனின் இயற்பெயர் ஹமீதாமே?

    ReplyDelete
  18. film was as u say emotionally intense...life tears him apart....
    non linear screen play does magic in the story....

    as like other korean movies emotional and things are raw in this to stir our souls!

    ReplyDelete
  19. நண்பர்களே.....பின்னூட்டம் தாமதமாயிருச்சு..நெட் தாறுமாறா பிரச்சனை.....அதுனாலதான்..

    @MSK / Saravana

    இல்ல பாஸ்.எனக்கு என்ன தோணுச்சுனா, நா படம் பாக்கும் போது இந்த தகவல்கள் எல்லாம் தெரியாது.அப்பவே ரொம்ப ஈர்த்தது.........இப்ப தெரிஞ்ச பிறகுதான் அதன் வீரியம் புரியுது.........

    அந்த விசயத்த லேசு பாசா சொல்லியிருக்கேன். பாத்துட்டு அவுங்கவுங்களே தெரிஞ்சுக்குவாங்கன்னு நெனைகிறேன்.........

    நீங்களும் எழுதுங்க.என்ன இப்ப.............

    @யோகி ஸ்ரீராமானந்த குரு
    What !!!!!!! Was Gandhi shot dead !!!!!

    @மகேஷ்

    உங்க கமென்ட் - என் மொத்த பதிவையும் நாலு வரில சொல்லிட்டீங்க...........சூப்பர்

    ReplyDelete
  20. நான் இன்னைக்குதான் பார்த்தேன்..கன்பெஷன் ஸ்பிரிங்1987 வரை பார்த்து இருக்கேன்...அதுக்குள்ள குழந்தை அழுத காரணத்தால் அப்படியே முடிவு தெரியாமல் இருக்கின்றேன்.நல்ல வேளை மேலோட்டமாக விமர்சித்தமைக்கு நன்றி

    ReplyDelete
  21. [im]http://img165.imagevenue.com/img.php?image=595249159_hlly_122_249lo.JPG][img=http://img165.imagevenue.com/loc249/th_595249159_hlly_122_249lo.JPG[/im]

    ReplyDelete
  22. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.

    ReplyDelete
  23. @ நன்றி ஜாக்கி..........இதுக்குள்ள முழுசா பாத்திருப்பீங்கன்னு நம்புறேன்...


    @நன்றி மாலதி........

    ReplyDelete