Sunday, August 7, 2011

Funky Blaaze.............




                                               2002-03 அப்பறம் தான் எனக்கு பல்வேறு இசை வடிவங்களை கேக்கும் வாய்ப்பு தொடர்ந்து கிடைக்க ஆரம்பித்தது.காரணம், வீட்டில கேபிள் வந்தது. அதுவும் Vh1 போன்ற சேனல்கள் அப்பத்தான் எங்க ஊர்ல தெரிய ஆரம்பிச்சது. இப்ப மாதிரி [V], MTv அப்போல்லாம் மொக்கை இல்லை. நெறைய ஆங்கில இசையும் உலக இசை குறித்தும்(கொஞ்சம் தான் என்றாலும்) ஒளிபரப்பிகிட்டு இருந்தாங்க. இப்ப தான் சுத்தம். மரண மொக்கை. சன் டிவி, கலைஞர் டிவிக்கு இணையா அந்த ரெண்டு சேனல்களையும் வெறுக்கிறேன்.விஷயத்துக்கு வரேன்.


                                 
முதல் முதலாக ப்ளாசே எனக்கு தெரிய வந்தது மேலே இருக்கும் பாடல் மூலமாகத்தான்.MTvல 2004களில் அடிக்கடி இந்த பாடலை பார்க்க நேர்ந்தது.கேட்டவுடனே எனக்கு அந்த Funky Rhythm புடிச்சு போச்சு(பாடலின் மையக்கருத்து குறித்தெல்லாம் அப்ப தெரியாது). அடுத்து நான் கேக்க நேர்ந்த ப்ளாசேயின் பாடல், Ban the police. ஒரு உலுக்கு உலுக்கின பாடல்.அப்பத்தான் எங்கப்பா மூலமா மஞ்சுநாத் என்ற ஆள் ரொம்ப ஆழமா பாதிச்சிருந்தார்.யார் இந்த மஞ்சுநாத் என்று தெரியாதவர்களுக்கு – IIMல் MBA முடித்துவிட்டு இந்தியன் ஆயில் கார்ப்ரேசனில் சேல்ஸ் மானேஜராக, பல வெளிநாட்டு வாய்ப்புகள் வந்த போதும் உறுதியாக அவைகளை மறுத்துவிட்டு இங்குதான் வேலை செய்ய வேண்டும் என்ற பிடிவாதத்துடன் வேலைக்கு சேர்ந்தார். உத்திர பிரதேசத்தில் இருக்கும் IOCஇல் 2005 சேல்ஸ் மானேஜராக சேருகிறார்.அங்கு ஏற்கனவே பல்வேறு தில்லுமுல்லுகள்.பெட்ரோல் – டீசல்களில் கண்டபடி கலப்படம். பலமுறை நடவடிக்கை எடுக்கிறார்.அதற்காக நிறைய தடவை கடுமையாக மிரட்டபடுகிறார்.இருந்தாலும் நேர்மையாக நடவடிக்கைகளை தொடர்ந்ததற்க்காக படுகொலை செய்யப்பட்டார். போலீஸ் உண்மையானா குற்றவாளிகளை கைது செய்வதில் மிகுந்த குழப்பம் ஏற்படுத்தியது.இதை பற்றியெல்லாம் நெட்டில் தேடித் பாருங்கள். அவர் பெயரில் ஒரு ட்ரஸ்ட் கூட இயங்குகிறது. கொலை செய்யப்படும் போது அவர் வயது – 27. என்னை விட ஒருவயதே அதிகம்.அந்த வயதில் எனக்கு அவ்வளவு மனதிடம் இருக்குமா என்று தெரியவில்லை.எங்கப்பா இந்த நிகழ்ச்சியை அடிக்கடி சொல்லுவார்.அவர் வேலைக்கு சேர்ந்த புதிதில் நெறைய அமைச்சர்களுடன் சண்டை போட்டுள்ளார்.அதையும் கேட்டிருக்கிறேன். மேலும் இந்த பாடலில் வரும் – பில்கிஸ் பானுஜெசிகா லால் – குஜராத் கலவரம் – சஞ்சய் பாண்டேபேராசியர் சபர்வால் இவுங்கள பத்திலாம் ஓரளவுக்காவது அனைவருக்கும் தெரிந்திருப்பது அவசியம்.


Ban the police – எங்கப்பாவும் ஒரு அரசு ஊழியர் தான்.அதுனால போலீசை – அரசு ஊழியர்களை போறபோக்குல திட்டுற ஆள் நானில்லை.எத்தனயோ நேர்மையாவங்க வளைஞ்சு குடுக்காத ஆட்களை பாத்திருக்கேன்.இருந்தாலும் அவுங்க எண்ணிக்கை கம்மியாக இருப்பதுதான் நிதர்சனம்.

இந்த பாடலில் இருந்து எந்த ப்ளாசேவின் பாடலையும் விடக்கூடாது என்ற முடிவுக்கு வந்தேன்.வெறும் துள்ளலான பாடல்களாக மட்டுமல்லாமல் அவரின் பாடல்களில் ஒரு emotional angst இருக்கும். Rap இசையின் உச்சம் அதுதான்.அப்பறம்தான் ரஹ்மானுடன் இவர் சேர்ந்து பணியாற்றிய பல பாடல்கள் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தது. அதில் தமிழை விட ஹிந்தி பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். ரஹ்மானின் முக்கியமான பாடலான Pray for me brotherயை எழுதியவர் இவரே.ஒரு முக்கியமான பாடலை இவரை எழுத வைக்கும் முடிவுக்கு ரஹ்மானை வரவைக்கும் அளவிற்கு இருந்திருக்கிறது இவர் எழுத்துத் திறமை.சில சமயம் ரொம்ப கிளிஷேதனமாக தமிழ்–ஹிந்தி பாடல்களை பாடியிருப்பதையும் மறுப்பதிற்கில்லை.இருந்தாலும் ரஹ்மானின் இசையில் இவர் பாடிய பல பாடல்கள் நன்றாகவே இருக்கும்.ஸ்லம்டாக் மில்லினியர் படத்தில் ஒரு செமத்தியான hip-hop styled funky பாடல். முக்கியமாக ரஹ்மானின் ஒரு சிறந்த ஆல்பமாக நான் கருதும் Connectionஇல் வரும் திருக்குறள் பாடல் நல்ல execution.


இவர் வளர்ந்து எல்லாம் ஜாம்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில்.அங்கிருக்கும்போது 16 வயதில் அந்நாட்டு ஜனாதிபதிக்காக தேர்தல் பிரச்சார பாடல் ஒன்றை பாடி தன் பயணத்தை ஆரம்பிக்கிறார்.பின்பு அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு, 2002இல் இந்தியா வந்து, பாபாவில் ஆரம்பித்து – பின் MTvயில் பணியாற்றிவிட்டு, இன்று செமத்தியாக கலக்கிக் கொண்டு இருக்கிறார்.எனக்கு பிடித்த இவரது பாடல்களை கீழே கொடுத்துள்ளேன். முடிந்தால் தரவிறக்கி கேட்டுப் பாருங்கள்.தேடித் புடிச்சு நல்ல குவாலிட்டி பாடல்கள மட்டுமே குடுத்திருக்கிறேன்.











                                        ------------------------------------------------------------------------------

SuperHeavy பத்தி அடிக்கடி FBல் சொல்லியிருக்கிறேன். இந்த காம்பினேஷன் எனக்கு ரொம்ப பிடிச்சது. இதுல டேமியன் மார்லி – மைக் ஜாக்கர் – ரஹ்மான் நல்லா தெரியும். டேவ் ஸ்டுவர்ட் சிறந்த கிடாரிஸ்ட் என்ற அளவில் தெரியும். ஜாஸ் ஸ்டோன் – அப்பப்ப Vh1ல் பாத்திருக்கிறேன்.


இந்த பாடல் – perfect amalgamation of Reggae + Soft Rock. மார்லி யார் புள்ள. சொல்லவா வேணும்.இந்த பாடலை தவறாமல் கேக்க வேண்டுகிறேன்.
Facebookers..

19 comments :

  1. தமிழ் ப்லாகில் முதல் முறையாக.. மொத்த பதிவையும் படித்துவிட்டு.....

    ‘வட’

    ReplyDelete
  2. இசை பல பறிமானங்களில் திரியுது.. :)

    ReplyDelete
  3. நான் ப்ளேஸின் ராப்-பை என் நண்பர்களுக்கு இங்க போட்டு காட்டினா... இவங்க யாருக்கும் பிடிக்கலைங்க.

    திட்டுறாங்க.

    ReplyDelete
  4. அப்புறம்.. வேட்டையாடு விளையாடு-ல கூட ஒரு ரேப் வருமே. அதை காறி துப்பினாரு ஒரு கறுப்பு நண்பர்.

    என்ன ரீஸன்னு தெரியலை.

    ReplyDelete
  5. @நன்றி
    அவுங்க பல பேருக்கு tupacக்கே புடிக்காதே......

    தவிர..இவரிதுல இந்தியன் ஸ்டைல் நெறைய இருக்கும்...அவுங்களுக்கு hard coreஆ இருந்தாதான் புடிக்கும்...........

    வேட்டையாடு விளையாடு - ஒரு ரேப் வருமே. அதுல பல ரேப் வருமே..அதுக்கும் இசைக்கும் என்ன தொடர்ப்பு............

    ReplyDelete
  6. ரேப்- இல்லீங்க.. ‘ராப்’.

    ராகவாஆஆன்... -ன்னு வருமே...

    ReplyDelete
  7. அதுவா.......அவுங்கெல்லாம் ரசன கெட்ட மூடர்கள்............

    ReplyDelete
  8. nanba....pathivu arumai..\
    thodaratum thangal isai thedalgal/pathivugal...
    will hear the musix...n comment later!

    ReplyDelete
  9. @மகேஷ்

    thank u bro............hear it & tell me u r thoughts........

    ReplyDelete
  10. அவரோட மத்த ஆல்பங்கள அறிமுகபடுத்துனதுக்கு நன்றி கொழந்த... funky blaaze' - னு போட்ட உடனே வேற யாரோ-னு நெனச்சுட்டேன்..

    தமிழ்-ல எனக்கு தெரிஞ்சு இவர் தான் ராப் பாட்டு எல்லாம் நல்லா பண்றார்.

    எனக்கு இவரோட பாபா தீம் ராப்பும் பிடிக்கும் :)

    ReplyDelete
  11. வாத்தியார் படத்தில வருவாரே அவர்தானே?

    ReplyDelete
  12. பெயரில் என்ன இருக்கிறதுAugust 8, 2011 at 10:03 AM

    லக்ஷ்மி நரசிம்ம விஜய ராஜகோபால் சேஷாத்ரி ஷர்மா ராஜேஷ் ராமன் வாழ்க

    ReplyDelete
  13. மீனிங் சொல்பவன்August 8, 2011 at 10:05 AM

    //லக்ஷ்மி நரசிம்ம விஜய ராஜகோபால் சேஷாத்ரி ஷர்மா ராஜேஷ் ராமன்// - ப்லாஸேயோட உண்மைப் பேரு இதான்

    ReplyDelete
  14. செந்தேள் சென்காயிரம் ரயில் டிரைவர்August 8, 2011 at 10:13 AM

    சார்.. நான் ஒன்னு மட்டும் சொல்லுரேன் . . தண்டபாணி தேசிகரோட குருனாதர் பேரு ராமசுப்பிரமானிய பாவகதர் . . அவரு காப்பி மட்டுமே குடிச்சி பல வருசம் வால்ந்தாராம் . .அதையேல்லாம் மொதோள்ள எளுதுங்க. அதை விட்டுட்டு அரமொட்டைத்தலையன் இவனைப் பத்தி எழுத்த வன்துட்டீங்க. மீறி எலுதினால் உங்க சைட்ல ஸ்பேம் கமெண்டு போடுவேன். நான் ரெடி. நீங்க கரடியா?

    ReplyDelete
  15. @பெயரில் என்ன இருக்கிறது - மீனிங் சொல்பவன் - செந்தேள் சென்காயிரம் ரயில் டிரைவர்

    ////லக்ஷ்மி நரசிம்ம விஜய ராஜகோபால் சேஷாத்ரி ஷர்மா ராஜேஷ் ராமன்// - ப்லாஸேயோட உண்மைப் பேரு இதான் //

    அப்புடியா.எனக்கு தெரியாதே.................அதுகூட தெரியாம எழுதியிருக்கேன் பாருங்களேன்.....

    என்ன பிரச்சன உங்களுக்கு, பதிவ படிங்க படிக்காம போங்க. அது உங்க இஷ்டம். எதுக்கு இப்புடி புனைப் பெயர் பூனை பெயர்னு வந்து இம்ச பண்றீங்க.. எதுனா நீங்க போடுற கமென்ட் ரசிக்கிற மாதிரி இருக்கா. ரகளையா கமென்ட் போடுறதெல்லாம் ஒரு ஆர்ட். உங்களுக்கு சுத்தமா வரல. வுட்டுருங்க. கருந்தேளை ஒட்டுறதுதான் உங்க முழு நேர வேலையா. அப்புடி இருந்தாலும் கொஞ்சம் கற்பனை நயத்துடனாவது பேரு வைக்க கூடாதா...."செந்தேள் செங்காயிரம் ரயில் டிரைவர்".............என்ன பேருங்க.............உங்க கமென்ட்டை சீரியஸா எடுத்துகிட்டு கருந்தேள் கோபப்பட்டுட்டாரே......

    ReplyDelete
  16. @kanagu

    பாபா, அத Rapன்னு சொல்லலாமா என்ன.இவர்ட இருந்து பெரிய Hardcore rap - MCing எதிர்பார்க்க முடியாது. HIp hop - funky beatடுடன் கூடிய பாடல்கள் இவர் பாடுவதுன்னு எனக்கு தோணுது. பிற பாடல்களை
    கேட்டுப்பாருங்க....

    @எஸ்.கே
    ஆமாம்.அவர்தான்.

    ReplyDelete
  17. @பிரபல பதிவர்

    ஆஆஆஆஆஆஆஅ..................அஹ்ஹஹஹஹாஹ்.........ஆஆஆஆ...............(இருங்க........அழுது அழுது வாயெல்லாம் எச்சி).......

    ReplyDelete
  18. இளையராஜாவை தவிர எல்லா நதாரிங்க பத்தியும் பதிவை போடு கேட்டா எனக்கு ராஜா பிடிக்காது.ஆனா ஓங்க பிளேஸ் பெக்குல கோவணம் கட்டிக்கிட்டு இதே ராசாவின் ராகத்தைதான் முனுமுனுதீர்கள் என்பதை மறக்க வேண்டாம்!!ரகுமான் ப்யூஸ் போன பல்பு!!வி.டி.வி. பாடல்கள் செம மொக்க!!போங்கடா லூசுங்களா ப்லேஸ் ஒரு *******ளி

    ReplyDelete