Thursday, August 4, 2011

தமிழக பதிவர்கள் திருச்சபை.............






இந்த முயற்சி தனிப்பட்ட முறையில எனக்கு ரொம்ப முக்கியமாபடுது. உண்மைய சொன்ன, இந்த பதிவுகள், பாராட்டுக்கள் - இதெல்லாம் ஒரு போதை மாதிரி தான. இதுல சிக்குனோம்னா அவ்வளவுதான். மேற்கொண்டு யோசிக்கவுட மாட்டேங்குது. ஒருமாதிரியான intellectual terrorism - arrogance வளர ஆரம்பிக்குது (intellectualனா என்ன ?). கருத்து திணிப்பும் சேர்ந்து.

எப்ப ஒரு எழுத்தாளர் படிப்பவன "வாசகர்"ன்னு கூப்புடுறாங்களோ அப்பவே அவர்கள தன்னவிட கீழ தான் வெச்சு பாக்குறாங்க - சமீபத்துல பேயோன் டுவீட்டிருந்தார்

உலகத்திலேயே ரொம்ப புதிரான விஷயம் - Reader's Mind. ஏன்னா அவுங்களுக்கு என்னென்ன தெரியும் எவ்வளோ தெரியும் (பலசமயம் எழுத்தாளர்களைவிட அதிகமாவே தெரியும்) என்று யாருக்கும் தெரியாது. லூயி போர்ஹே சொன்னது.

நெறய ப்ளாக்ல நானும் பாத்துட்டேன், நண்பர் - நண்பர்கள்குள்ள பேசிக்கிற மாதிரி இல்லாம, ஒரு rigidness, எழுத்தாளர் - வாசகர் தன்மை இருக்கு. எனக்கு இதெல்லாம் ஒவ்வாமை. (அதுக்காக எல்லார் கூடவும் நட்பா இருக்க முடியாது). அதுபோன்ற ஒவ்வாமை வியாதி இருக்குறவங்க எல்லாம், வாங்க இத உபயோகப்படுத்திக்கலாம்.இது இப்ப பதிவு வரைக்கும் வந்திருச்சு. என் பதிவுகளில் கூட இதுபோல தெரியுதான்னு தெரியல. ஆனா, நா எப்பவும் ஒரு விஷயத்துல தெளிவா இருக்கேன். எனக்கே சிலது தெரியும் போது - எல்லாருக்கும் அது தெரிஞ்சிருக்கும்ன்னு. நெறைய சமயத்துல இதே கண்ணோட்டத்துடன் சில நண்பர்களிடம் பேசும் போது அதுவே backfire ஆகிருது. நம்மளுக்கு தெரியலன்னு கிண்டல் பண்றான்னு. அதுனாலேயே இப்பலாம் பாத்து பாத்து பேச வேண்டியிருக்கு. இதுக்கும் பதிவுக்கும் எதுனா சம்பந்தம் இருக்கா......எப்புடியாவது சம்பந்தம் படுத்திக்கோங்க............இந்த ப்ளாக்க delete செஞ்சுட்டு அங்க மட்டும் அப்பப்ப எழுதுனா என்ன ??

சரி மேட்டருக்கு வரேன். சில பேருக்கு தனியா ப்ளாக் ஒண்ணுலாம் தொறந்த எழுத புடிக்காம இருக்கலாம். அவுங்ககிட்ட சொல்ல பல விஷயங்கள் இருக்கும். அப்புடி நெனைக்கிறவங்க இத பயன்படுத்திக்கலாம். இன்னும் கொஞ்சநாள்ல admin மாதிரி கச்சடா விஷயங்கள் இருக்கப் போறதில்ல. நேரா மெயில் பண்ணா பப்ளிஷ் தான். அப்பறம் முக்கியமா, இந்த கமெண்ட்கள். என்ன மாற்று கருத்து வேணாலும் சொல்லுங்க. ஆனா உண்மயான பேருல வந்தா நலம். சொல்ற கருத்துல உறுதியாவும் அந்த விஷயத்துல நாம நேர்மையான நிலைப்பாட்டுடன் இருந்தா, அனானி போர்வைகள் எல்லாம் தேவையில்லை என்பது என் கருத்து.

குலேபகாவலி:
தமிழ் படங்களில் சில டெம்ப்ளேட்தனங்கள் இருக்கும். ராயபுரம் ஏரியாவா - ரவுடிங்க, அதுக்குன்னு ஒரு பேரு வைப்பாங்க, அப்பாவி கேரேக்ட்டர்களா -அதுக்கு ஒரு பேரு, வில்லனா - அதுக்கு ஒரு பேரு, தமிழ் தீவிரவாதியா - அதுக்குன்னு ஒரு பேரு, தீவிரவாதியா - பாங்கு சத்தத்துடன் முஸ்லிம்கள காமிக்கிறது. அதே மாதிரி எப்புடி பெரியார் - காந்தி - சே - ஏன் கடவுள் கூட இங்க பெயர்ச்சொல் தான். அதுனால பேருல என்னயிருக்கு............இங்க பேரோ - பதிவரோ முக்கியமில்லை, content தான் முக்கியம். இந்த பேரு வைக்கும் போது தோனல. அப்பறம் யோசிச்ச போதுதான் இது தோனுச்சு. பேருக்கு குடுக்குற முக்கியத்துவத்த விசயங்களுக்கு குடுப்பது இல்லைன்னு தோனுது. கொஞ்சநாள் கழிச்சு இந்த பேரையும் மாத்திரலாம். இதெல்லாம் என் தனிப்பட்ட கருத்துகள். நண்பர்கள் எல்லாம் சேர்ந்துதான் முடிவெடுக்கணும்.
(தமிழக பதிவர்கள் திருச்சபை - காரணம் புரிஞ்சிருக்குமே, புனித பிம்பம் ஏற்படுத்த என்னாலான முயற்சி......ஹி...).

இப்புடி நெறைய பேர் சேர்ந்து எழுதும் போது - கருத்து மோதல்கள் இருக்கத்தான் செய்யும் - அதையும் தாண்டி பல்வேறு டாபிக்ல நல்ல கருத்து பரிமாற்றம் இருக்கபோவது உறுதி.தனித்தனியாய இப்ப கும்மி அடிக்கிறோம். சேர்ந்து அடிச்சா ஒரே இடத்துலேயே எல்லாத்தையும் படிச்சுக்கலாம்ல. மத்தபடி - இது ஒண்ணும் இதுவந்து பதிவுலகத்தையே பொரட்டி போடும் முயற்சி - யாரும் செய்யாத முயற்சி இப்புடிலாம் சொல்ற அளவுக்கு நான் கல்நெஞ்சக்காரன் கிடையாது. இதுக்கு மேல மொக்க போட எனக்கே போர் அடிக்குது. யாராவது, மொபையில் ஷார்ட் பிலிம் முயற்சி செஞ்சுருக்கீங்களா. அனுப்பனும்ன்னு நெனச்சா தாராளமா அனுப்பலாம். நானும் ஒண்ணு எடுக்கலாம்னு இருக்கேன்.யாரவது உதவி செய்ங்க. தனிமனித - ஜாதிய - மத - பாலின ரீதியிலான தாக்குதல்கள் இதுல கண்டிப்பா வராது. அதுமட்டும் நிச்சயம். 

சரி எப்புடி......பதிவுகள அனுப்ப ?

  • உங்க மெயில்ல இருந்து powerstarsrini.share@blogger.com க்கு மெயில் அனுப்புங்க. (இது defaultடா எல்லா ப்ளாக்ளையும் இருக்கிற Mail2blogger சமாச்சாரம் தான்)
  • சப்ஜெக்ட் என்ன குடுக்குறீங்களோ அதான் பதிவின் டைட்டிலா வரும்.
  • எதுனா இமேஜ் - வீடியோவ mailல இன்சர்ட் செய்திருந்தீங்கன்னா, எங்க இன்சர்ட் பண்ணியிருக்கீங்களோ அதுகூடசரியா வந்திருது. செக் பண்ணி பாத்தாச்சு.
அதுனால சட்டுபுட்டுன்னு எழுதி அனுப்புவோம்............

Facebookers..

15 comments :

  1. Good post. But have you thought about 'filtering' or 'editing' the content that you'll receive?

    If anybody can write 'anything' or 'auto publishing' through email, then it would bring more trouble on your table.

    Other than that, congratulations.

    ReplyDelete
  2. பிரபல பதிவர்August 5, 2011 at 11:13 AM

    குலேபகாவலி? எத்தனை பேரு பாலோயர்ஸ்? என்ன ஹிட் கவுன்ட்டு? யாரையாவது திட்டி அதுல போஸ்ட் வந்திருக்கா? இது மாதிடி புள்ளி விவரங்கள அதுல போடுங்க. அப்பதான் அதை என்னோட வாசகர்களுக்கு பரிந்துரைக்க முடியும்.

    ReplyDelete
  3. அதி மூத்த பதிவர்August 5, 2011 at 11:41 AM

    டாய். யார்ரா நீங்கெல்லாம்? பழைய ப்லாக்கர்சை எல்லாம் என்னான்னுடா நினைச்சீங்க . . நாங்கதான்டா ஒரிஜினல் ப்லாக்கர்ஸ்.

    ReplyDelete
  4. @நன்றி!

    நன்றி..............தமிழ் திருச்சபை தான்.......

    // If anybody can write 'anything' or 'auto publishing' through email, then it would bring more trouble on your table //

    எல்லாத்துக்கும் பொதுவாயிருச்சுனா, யாரும் ஓனர்ன்னு இருக்க போறதில்லையே..............இருந்தாலும் நல்ல பாய்ன்ட்....எதுனா ஐடியா இருந்தா குடுங்க..

    ReplyDelete
  5. அனானி அன்பர்களே.........

    ஒருஆளு செஞ்ச வேலையாள optionனையே தூக்க வேண்டியதா போச்சு......

    ReplyDelete
  6. @நன்றி.......

    அனானி ஆப்சன்...........

    ReplyDelete
  7. இந்த திருச்சபைய ஏற்க முடியாது...

    ReplyDelete
  8. இயேசுவால் கூடாத காரியம் ஒன்றுமில்லை... போப்பென்ன போப்...

    இந்த திருச்சபையை நாங்கள் ஆதரிக்கிறோம்...

    வாராவாரம் ஒரு அய்யோகுய்யோ கூட்டம் போட்டுவிடுங்கள்,
    இயேசு ரட்சிப்பார்

    ReplyDelete
  9. ஏற்கனவே இருக்க திருச்சபையெல்லாம் போதாதா? ஏற்கனவே கொல்றீங்க இதுல இன்னும் ஒன்னா?

    பரம்பிதாவே இவர்களை மண்ணியும்

    ReplyDelete
  10. #%^!@&# நான் பண்ணின தப்புக்கே எனக்கு மண்ணிப்பு இல்ல, இதுல நான் மண்ணிக்குறதா?

    ReplyDelete
  11. இன்று பதிவிடவில்லையெனில்... க ராமசாமி தீக்குளிப்பார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
  12. குளிக்கவா வேணாமான்னு ரோசனை பன்னிட்டு ஒக்காந்திருக்கேன்.. இதுல தீக்குளிக்கனுமா.. பாலியானந்தா ஏன். ஏன்... ஏன்... ? :)

    ReplyDelete
  13. நண்பர் இராமசாமி, யாரந்த பாலியானந்தா?

    ReplyDelete