Sunday, July 24, 2011

Russian Ark - உன்னதம்

Has all this been staged for me?   Am I expected to play a role?  What kind of play is this?   Let's hope it's not a tragedy.                    
   
            ஒரு ரஷ்ய நாட்டினன் - அப்படித்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.ஒரு விபத்திற்குப் பிறகு என்னவென்றே புரியாத நிலையில் விழிப்படைகிறான். இனி, அவனது குரலுக்கும் நமது குரலுக்கும் மொழியில் மட்டுமே வேறுபாடு இருக்கப் போகிறது.அவனது கண்கள் வழியாகவே அங்கு நடக்கும் காட்சிகளை காணப் போகிறோம்.


அதுவொரு அரண்மனை. நிறைய கூட்டம். மக்களின் ஆடைகளை வைத்து காலம்: 1800 என்று கணிக்க வேண்டியுள்ளது. யாரும் அவன் முன்னேறிச் செல்வதை தடுக்கவில்லை.அவன் பேசுவதும் அவர்களுக்குக் கேக்கவில்லை. ஒருவேளை அவர்களின் கண்களுக்கு அவன் தெரியவில்லையோ ?அட, அவனைப் போலவே மற்றொரு மனிதனும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறான். அவன் கேப்பதற்க்கு முன்னர் – அம்மனிதன் “இது எந்த இடம் ?” என்று வினவுகிறான். அதைவிட ஆச்சரியத்திற்குரிய வகையில், தான் ரஷ்ய மொழியில் பேசுவதே வியப்பளிப்பதாக அவன் கூறுகிறான்.அவனும் இவனுடனே சேர்ந்து செல்கிறான்.........இல்லை.. இவன்தான் அவனுடன் சேர்ந்து அந்த இடத்தை சுற்றிப்பார்க்கிறான். ஓ...அடுத்த அறையில்......அவர்தான்......பீட்டர் தி கிரேட்...வழமை போல யாரையோ அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்.புது மனிதர் அக்காட்சியை காண சகிக்காமல், அடுத்த அறைக்குள் நுழைகிறார்.அங்கே நாடக ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது.கேதரின் தி கிரேட் தலைமையிலான ஆட்சி போல. யாரவன் ? ஆரம்பம் முதலே அவர்களை பின்தொடர்ந்து செல்கிறானே...நண்பரே...அவனை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதற்கிடையே அந்த அரண்மனை – ரஷ்யாவின் புகழ் பெற்ற பீட்டர்ஸ்பர்கின் ஹேர்மிடாஜ் அருங்காட்சியகம் என்பதை கண்டுகொள்வதில் அவர்களுக்கு பெரிய சிரமம் ஒன்றும் இருக்கவில்லை. புது மனிதரான மார்கஸ் டி குசினுடன்
அவன் (பின்னர் அவர்கள் அருங்காட்சியகத்தின் நிர்வாகிகளோட பேசும் போது அவர் பெயர் தெரியவந்தது) தொடர்ந்து பயணிக்கும் போது பல சுவாரசியமான பேச்சுகள் நடைபெறுகிறது. அருங்காட்சியகத்தில் எந்தவொரு சிறந்த கலைப்படைப்பை பார்த்தாலும், அது பெரும்பாலும் ஐரோப்பியர்களுடையதாகவே இருக்க வேண்டும் என்ற ரீதியிலே மார்கஸ் பேசுகிறார். ஏன் ரஷ்யர்கள் ஐரோப்பிய படைப்புகளின் நகல்களாகவே தங்கள் படைப்புக்களை உருவாக்குகிறார்கள் என்று பகடி செய்ய தவறவில்லை. அதேசமயம் சிறந்த ரஷ்ய படைப்புகளை பாராட்டவும் தவறவில்லை.முன்பு பின்தொடர்ந்த ஆள் அங்கும் அவர்களைத் தொடர்கிறான்.



                                           பேச்சு சுவாரசியமாக நகர்கிறது. பீட்டர் தி கிரேட் இந்நகரத்தை நிர்மாணித்ததை குறித்தும் அவரது நோக்கம் குறித்தும் காரசாரமாக பேசிக் கொள்கிறார்கள்.மேலும் அங்கிருக்கும் ஓவியங்களை குறித்தும் அளவளாவிய ஈடுபாட்டுடன் உரையாடுகிறார்கள்.பின்தொடர்ந்து உளவு பார்க்கும் ஆள் தன் பணியை செவ்வனே செய்து கொண்டிருக்கிறான். அடுத்து பக்கம் நகர்கிறார்கள். ஈரான் மன்னர் ரஷ்ய மன்னன் நிகோலாய் Iயிடம் தனது நாட்டில் ஏற்பட்ட ஒரு சமபவத்திற்காக வருத்தம் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.மறு அறையில் பிரமாதமான விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே மன்னன் நிகோலாய்  2 தனது குடும்பத்தினருடன் உணவருந்துவதையும் காண்கிறார்கள். அவன் தடுத்தும் கேளாமல் மார்கஸ் ஒரு அறைக்குள் நுழைகிறார்.அங்கே லெனின்க்ராட் தடுப்பு போரில் பாதிப்படைந்த மனிதனை சந்திக்க நேர்கிறது.தனக்குத்தானே சவப்பெட்டிகளை தயாரிக்கும் வேளையில் ஈடுபட்டிருக்கிறான்.அதிர்ச்சியடைந்த இருவரும் வெளியே வருகின்றனர்.

அருங்காட்சியகத்தின் நிர்வாகி இறந்து போன தன் தந்தையுடன் உரையாடிக் கொண்டிருக்கிறார்.போருக்கு பிறகு எத்தகைய சிரமமேற்ப்பட்டது என்பதை குறித்துதான் பேசிக்கொண்டிருந்தனர். அதேவேளையில் அற்புதமான இசையுடன் கூடிய நடன நிகழ்ச்சி ஆரம்பம் ஆகின்றது.புகழ் பெற்ற ரஷ்ய கவிஞர் புஷ்கின் கூட அதிலிருக்கிறார். நிகழ்ச்சி முடிந்து மார்கசிடம் அவன் முன்னேறிச் செல்லலாமா என்று கேக்க.....வேண்டாம்..தான் இங்கேயே தங்க விரும்புவதாக கூறுகிறார். அவரில்லாமல் அவன் மட்டும் மீண்டும் தன் பயணத்தை தொடர்கிறான். ஆனால், அதே இடத்திலா என்று உறுதியாக கூற முடியாது.

பீட்டர் தி கிரேட் I ( 1672 – 1725):
இவர்தான் ரஷ்யாவின் புகழ் பெற்ற பீட்டர்ஸ்பர்க் நகரை நிர்மாணித்தவன்.எவ்வளவுக்கு எவ்வளோ திறமையானவனாக இருந்தானோ அந்தளவிற்கு கொடுமைக்காரனாகவும் இருந்தான்.சொந்த மகனே அவனை கொலை செய்ய முயற்சி செய்துள்ளான்.

கேதரின் தி கிரேட் II (1729 – 1796):
இந்த கதை நடைபெறும் ஹேர்மிடாஜ் அருங்காட்சியகம் இவரது முயற்சியால் உருவானதே. மிகுந்த கலாரசனை உள்ளவர்.ரஷ்யாவின் பல்வேறு கலைப்படைப்புகளுக்குக் காரணமாக இருந்தவர்.

ஈரான் மன்னர் ரஷ்ய மன்னன் நிகோலாய் Iயிடம் வருத்தம் தெரிவிக்கும் நிகழ்ச்சி:
இது ஏன் இவ்வளோ முக்கியத்துவம் பெறுகிறது என்றால், இந்நிகழ்ச்சிக்கு பிறகுதான் ஈரான் போன்ற நாடுகளின் மீது The Great Russian imperialism என்று சொல்லப்படும் ஆதிக்கம் தொடங்க அச்சாரம் அமைத்த நிகழ்வு என்பதால் .

லெனின்க்ராட் blockade:
லெனின்க்ராட் என்பது வேறொன்றுமில்லை – பீட்டர்ஸ்பர்க் நகரம் தான். இரண்டாம் உலகப் போரின் சமயம் நடைபெற்ற மிகமுக்கிய நிகழ்வு, ஜெர்மன் படைகள் இந்நகரத்தை கைபற்றும் முயற்சியில் ஈடுபட்டு தோல்வியை தழுவியது. அதற்காக ஜெர்மன் படைகள் September: 8: 1941 அன்று ஆரம்பித்த முற்றுகை எப்போது முடிவடைந்து தெரியுமா January: 27: 1944 அன்று. ஒருநாள் இல்லை – ஒரு மாதம் இல்லை – ஒரு வருடம் இல்லை, 872 நாட்கள். இத்தனை நாட்களுக்கு பிறகும் அந்நகரம் சரணடையவில்லை. கிட்டத்தட்ட 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்தாக சொல்கின்றனர்.

மார்கஸ் டி குசின்:
பிரெஞ்சு நாட்டவர். பயணியாக ரஷ்யா வந்து – 1839இல் – அப்போதைய அரசர்களை எதிர்த்து கேள்வி எழுப்பி பகடி செய்து கட்டுரைகள் எழுதியுள்ளார். தொடர்ச்சியாக வேவு பார்க்கப் பட்டார். அக்காலகட்டத்தில் பீட்டரின் ஆட்சியல் உளவு பார்த்தல் உச்சத்தில் இருந்தது. எதனால் படத்தில் உளவு ஆசாமி வருகிறான் என்று இப்போது புரிந்திருக்குமே.  Empire of the Czar: A Journey Through Eternal Russia அவர் எழுதிய புத்தகம் தான். என்ன எதிர்த்தாலும் ரஷ்யாவை அதன் கட்டமைப்பிற்காக பெரிதும் விரும்பினார்.

ஹேர்மிடாஜ் அருங்காட்சியகம்:
                       படத்தின் ஹீரோ. உலகின் பழமையான – பெரிய அருங்காட்சியகத்தில் ஒன்று. மொத்தம் 3 கோடி கலைப் படைப்புக்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன. இரண்டாம் உலகப் போரின் போது தனியாக ஒரு ரயிலை அமர்த்தி பல படைப்புக்களை அங்கிருந்து வெளியேற்றி பத்திரப்படுத்தியுள்ளனர். கிட்டத்தட்ட 300 பகுதிகள் உள்ளன. பல்வேறு உலகப் புகழ் பெற்ற கலைபடைப்புகள் உள்ளன. ரஷ்யாவின் தலைசிறந்த அருங்காட்சியகமாக இன்றும் திகழ்கிறது.

இத்திரைப்படம் குறித்து:
  • ஒரே ஷாட். Action – Cut . அவ்வளவே. மொத்தம் 96 நிமிடங்கள். தொடர்ந்து ஒரே ஷாட். எவ்வித editingம் கிடையாது.
  • ஒருசில காட்சிகளில் மட்டும் – காட்சியமைப்பு கருதி சற்றே மெருகேற்றப்பட்டவைகள், கம்ப்யூட்டர் உதவியுடன். மற்ற அனைத்தும் அப்படியே பதிவு செய்யப்பட்டவைகள்.
  • இதற்காகவே பிரத்தியேகமாக கேமெரா தயார் செய்துள்ளனர். கேமேராவை கையாண்டிருக்கும் டில்மன் பட்னரை குறித்து வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
  • கடும் உடல் சிரமங்களை தாண்டி அவர் நிகழ்த்தியிருக்கும் மாயாஜாலத்தை படத்தை பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இதற்கு மேல் சொல்லத் தெரியவில்லை.
அலெக்சாண்டர் சுக்ரோவ்:

                 என்ன மாதிரியான ஒரு இயக்குனர் ! நாலு வருடங்களாக பக்காவான திரைக்கதை தயார்செய்து, ஒரே நாள் மட்டுமே அனுமதி கிடைத்த அருங்காட்சியகத்தில் – முதல் மூன்று முயற்சிகள் தோல்வி அடைந்தும் – நாலாவதாக வெற்றிகரமாக இந்த மகத்தான சாதனை நிகழ்த்திக் காட்டியுள்ளார். மிக முக்கியமான இயக்குனர். ஹிட்லர் – லெனின் – ஜப்பானின் அரசர், இம்மூவரையும் குறித்து இவர் எடுத்துள்ள படங்கள் மிக முக்கியமான திரைப்படங்கள்.


இவரது அனைத்து படங்களுமே முக்கியமானவைகளே. குறிப்பாக Mother & Son என்ற இவரது படம் உலகப் புகழ் பெற்றது. இவரது பெயரை நண்பர்கள் எங்கு பார்த்தாலும் அத்திரைப்படத்தை வாங்குமாறு தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன்.பெரும்பான்மையான ரஷ்ய இயக்குனர்களை போல – ரசனைக்குரிய பிரமிக்கத்தக்க காட்சியமைப்புகளுக்கு சொந்தக்காரர்.இவரது இந்த பேட்டியை படியுங்கள். கலை அல்லது திரைப்படம் குறித்த இவரது பார்வை அற்புதம்.

Russian Ark:

இந்த படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது – editing இல்லை, இதுபோன்ற காரணங்களுக்காக மட்டும் எனக்கு பிடித்துப் போகவில்லை. படத்தின் தாக்கம்...என்னமாதிரியான ஒரு உணர்வலையை எழுப்பியது, அதுவே காரணம். 300 ஆண்டு கால ரஷ்யாவின் கலை – கலாச்சாரம் – மகிழ்ச்சி – சோகம் – அதிகார போதை – இசை – உற்சாக நடனங்கள் – அனைத்திலும் நானே பங்கேற்றேன். அதற்கு மற்றொரு முக்கிய காரணம், கேமெரா பார்வையாளனின் கோணத்திலேயே நகர்ந்தது. படத்தில் மொத்தமே நான்கு கேமெரா கோணங்கள் – பார்வையாளன் (நாம்), பிரெஞ்சு பயணி குசின், அவரை உளவு பார்க்கும் உளவாளி மற்றும் அருங்காட்சியகம்.இயக்குனர் அவ்வருங்காட்சியகத்தை ஒரு உயிர்ப்புள்ள விஷயமாக கருதியே அனைத்தையும் கையாண்டுள்ளார்.அனைத்து கதாபாத்திரங்களும் – போர்ஹேயின் கதையில் வருவதைப் போன்றே காலத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்திலேயே வந்து செல்கின்றனர். Realistically magical. ஆன்டன் செகாவின் கதைகளை போல.ஓவியங்களிடம் கேமெராமேனும் இயக்குனரும் ஒவ்வொரு முறையும் சாவகாசமாக உரையாடுகின்றானர். பதிலுக்கு அவ்வோயியங்கள் பேசும் வார்த்தைகளை புரிந்து கொள்ளும் அளவிற்கு எனக்கு அறிவு இல்லை. புரிந்திருந்தால் இப்படி பதிவு எழுதிக் கொண்டிருக்க மாட்டேன்.உங்களுக்கு ஏற்கனவே ரஷ்ய வரலாறு – இலக்கியங்கள் (என்னைப் போன்று கொஞ்சத்திலும் கொஞ்சமே தெரிந்திருந்தால் கூட போதுமானது) தெரிந்திருந்தால் நன்றாக படத்தை ரசிக்க முடியும்.

ரஷ்யாவின் பெரிய இயக்குனர்களின் படங்களில் ஒருவித உள்ளார்ந்த தேடல் இருப்பதை அனைவரும் அறிவோம்.இவரும் அதற்கு விதிவிலக்கல்ல.செர்கே ஐசன்டைனின் புகழ் பெற்ற ஓடாசா காட்சியமைப்பு எப்படி படிகளில் நடந்ததோ, அதைப்போன்ற இப்படமும் திரளான மக்கள் படிகளில் இறங்கி வருவதுடன் முடிவடைகிறது. ஆனால், ஒன்று editing உத்தியின் தோற்றுவாய். மற்றொன்று சமகால சினிமாவின் non-editingயின் மகத்தான சாதனை.குறிப்பாக 837 நடிகர்களுக்கு மத்தியில் எப்படி சுழன்று சுழன்று மக்கள் வெள்ளத்திற்கு இடையே எடுத்தனர் என்பதை நினைக்கும் போது பிரம்மிப்பாக இருக்கின்றது.படம் ரஷ்யாவை அதீதமாக புகழாமல் அனைத்து விஷயங்களையும் சமமாக விமர்சிக்கின்றது. ஐரோப்பிய கலாசச்சார மோகம் – பிற நாடுகளின் மீது ஆதிக்கம் – சொந்த நாட்டிலேயே அடக்குமுறை – சர்ச்களின் போக்கு போன்றவற்றையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை.குசினின் எள்ளல் மிகுந்த வசனங்கள் வாயிலாக நாம் இவற்றை தெரிந்து கொள்ளலாம்.மேலும் காட்சியமைப்பே பல விஷயங்களை உணர்த்தி விடுகிறது. குறிப்பாக – கேதரின் மகாராணி பனியின் நடுவே ஊர்ந்து கொண்டே ஓடும் காட்சி – அரசாட்சி முடிவுற்று கொண்டிருப்பதை உணர்த்தும் வகையில் மெய்மறக்கச் செய்யுமாறு படமாக்கப்பட்டிருக்கும். படத்திற்கு ஏன் ஆர்க் என்று பெயர் ? அற்புதமான கடைசி காட்சியில் கடலை காண்பிக்கும் போது உங்களுக்கு புரியும் – புரிய வேண்டும்....படம் உங்களை முழுவதும் ஈர்த்திருந்தால்.........




தூங்கிக் கொண்டிருக்கிறீர்கள். பழக்கமில்லாத சத்தம் கேட்டு விழிக்கிறீர்கள்.பார்த்தால், ஏதோவொரு பெயர் தெரியாத கடற்கரையில் இருக்கிறீர்கள். கடலுக்கு எதற்கு பெயர் ? கடல் – கடல் தான். அதுபோன்ற சூழலில் என்ன மாதிரியான மன உணர்வு உங்களுக்கு ஏற்படுமோ – அதே உணர்வு படம் முடியும் போது கடைசி காட்சியின் போது எனக்கு இருந்தது. நித்தியிடம் குண்டலினி பயிற்சிக்கு செல்பவர்களுக்கு இந்த படத்தை குறித்து சொல்ல வேண்டும். அந்தரத்தில் சுலபமாக மிதக்கலாம். கடைசியாக படம் பார்க்கும் முன் ஒன்றே ஒன்றை ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டுகிறேன். Life cannot be edited.
Facebookers..

59 comments :

  1. யாரும் கமென்ட் போடா விட்டாலும் பரவாயில்லை....தயவுசெஞ்சு படத்த பாத்திருங்க....அதான் முக்கியம்.....

    தூக்கம் வருது....கமென்ட் நாளைக்கு......

    ReplyDelete
  2. http://docs.google.com/viewer?a=v&q=cache:9-dpOLJIiwgJ:www.ucalgary.ca/~tstronds/nostalghia.com/TheNews/RussianArk_SevillePressNotes.pdf+RussianArk_SevillePressNotes&hl=en&gl=in&pid=bl&srcid=ADGEESiUq1SQycuJ5Baw12XTP9yL3wyWNcrwhT_Sj9qH8d6EibVe0KE-0xVuH_ba-6dMkqXWMGsTJd2p0hInCeMai_erQeLVJWEvSoyH6DFjRPCetAYMzQCKdOpgQG_IBWH5D7IUkBer&sig=AHIEtbSm1US0iXOKJuAtE9zuDn3-Xj2FRg&pli=1


    அனைவரும் நிச்சயம் படியுங்கள்............

    ReplyDelete
  3. ///ஒரே ஷாட். Action – Cut . அவ்வளவே. மொத்தம் 96 நிமிடங்கள். தொடர்ந்து ஒரே ஷாட்./// முதல் பகுதி உங்களோட எழுத்து கூட இப்படியே தொடர்ச்சியா போகுதே திட்டமிட்டு எழுதுனதா? ஆமாம்னாலும், நல்லா இருக்கே... வழக்கம் போல எனக்கும் ஒரு பிரதி வேணும், அடுத்த முறை வாங்கிக்குறேன்.

    ReplyDelete
  4. // தூக்கிக் கொண்டிருக்கிறீர்கள். //

    கர்மமடா சாமீ....!!! எழவு... இந்த எலக்கியவியாதிங்க கூட சேர வேணாம்னு சொன்னாலும் கேக்கறதில்லை.

    ReplyDelete
  5. ப்லாக் எழுதாததினால்... ஏற்படும் நன்மைகள் என்னன்னா...

    1. இந்த பதிவு புரிஞ்சதுன்னு கதை விடத் தேவையில்லை
    2. ஆண்டன் சகோவ், அற்புத புகோவ் எல்லாம் யாருன்னே தெரியத் தேவையில்லை.
    3. இந்தப் படத்தை உடனே பார்க்கப் போறேன், டவுன்லோட் போட்டுட்டேன்னு பீலா விடத் தேவையில்லை.
    4. இந்தப் படத்தை, ரெண்டு வருஷம் முன்னாடியே பார்த்துட்டேன், அப்ப சரியா புரியலை. நீங்க சொன்னதில் எல்லாம் விளங்கிடுச்சின்னு சொல்லத் தேவையில்லை.

    ReplyDelete
  6. இவ்வளவு விசயம் இருக்குனா நல்லாதான் இருக்கும்னு நினைக்கிறேன். பார்க்க முயற்சிக்கிறேன்!

    ReplyDelete
  7. //இவ்வளவு விசயம் இருக்குனா நல்லாதான் இருக்கும்னு நினைக்கிறேன். பார்க்க முயற்சிக்கிறேன்!//

    5. இதையும் சொல்லத் தேவையில்லை

    ReplyDelete
  8. கொளந்தையீன் இந்தப் பதிவு புரிய கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும்,அகிரோ படங்கள் எப்படி ஆங்கிலேயர்களால் தூசு தட்டி எடுக்கப்பட்டு தலையில் வைத்து கொண்டாடினார்களோ ஒரு நாள் அது போல கொளந்தையீன் பதிவுகளும் தூசு தட்டப்படும், யோவ் நீர் இலக்கிய வாதிதான் எங்களை மாதிரி பாமரன்களையும் மனதில் வைத்து எழுதி இருக்கலாம்

    ReplyDelete
  9. முதலில் நண்பர்கள் மன்னிக்க....தமிழ்ல பிழை செய்வது ரொம்பவே அசிங்கமாயிருக்கு. இனி கவனத்துடன் இருப்பேன்

    ReplyDelete
  10. //முதலில் நண்பர்கள் மன்னிக்க....தமிழ்ல பிழை செய்வது ரொம்பவே அசிங்கமாயிருக்கு. இனி கவனத்துடன் இருப்பேன்//

    என்னங்க... இது? இவர் நிஜமா திருந்திட்டாரா... இல்ல எதுனா ட்ராமாவா? இவ்ளோ சீரியஸா பேசுறாரே?

    ReplyDelete
  11. சீரியஸ் ...............அந்த இங்கிலீஷ் படம் எந்த தியேட்டரில் ஓடுது ???

    தயவுசெஞ்சு இந்த படத்த நண்பர்கள் பாத்திருங்க. படத்த பத்தி எப்புடி எழுதுறதுன்னு சுத்தமா எனக்கு பிடிபடல. நாலு தடவ பாதி வரை எழுதி மாத்திட்டேன்.

    எல்லாமே காட்சிகள். நம்மளே அங்க இருக்கிறது மாதிரி. அத விளக்கி எழுதுறதே கஷ்டமா போச்சு. படத்த பாருங்க. நா சொல்றது புரியும்.

    ReplyDelete
  12. @சுப.தமிழினியன்
    // முதல் பகுதி உங்களோட எழுத்து கூட இப்படியே தொடர்ச்சியா போகுதே திட்டமிட்டு எழுதுனதா? //

    ஆம்......பாக்கும் போது என்ன மாதிரி இருக்குதோ..அதுமாதிரி எழுதி அதே உணர்வ கொண்டு வர முடியுமான்னு நானும் பாக்குறேன்............ஒண்ணும் வேலைக்கு ஆகல. இன்னொரு உதாரணம் Snatch - Andrei Rubelev..

    @எஸ்.கே
    எலி குஞ்சை வழிமொழிகிறேன். எப்புடியாவது பாத்திருங்க..

    @டெனிம்
    பாமரன்களுக்கு எல்லாம் புரியும்....யோவ்..........இந்த படத்த வேற மாதிரி எழுத எனக்கு தெரியல. நா ஒண்ணும் ப்ளான் பண்ணி வார்த்தைகள போடல.ரஷ்ய இலக்கியங்கள் - வரலாறு, என்னக்கு கொஞ்சம் ஆர்வம் உண்டு. அதெல்லாம் சொன்னாதான் நாமும் இலக்கியவியாதிகள் ஆக முடியும்..

    ReplyDelete
  13. @எலி குஞ்சூ.................

    குஞ்சு சார், நீங்க என்ன கமென்ட் வேணாலும் போடுங்க.....போடாம போங்க..ஆனா இந்த படத்த ஒருமுறை பாத்திட்டு சொல்லுங்க. உங்கள கருத்துகள தெரிஞ்சுக்கு ரொம்ப ஆர்வம்.

    மேல டெனிம்க்கு, இந்த படத்த எப்புடி எழுதுறதுன்னே தெரியல. அப்புடி எழுதக்கூடிய ஆட்கள் சிலரும் - ரொம்ப பிகு பண்ணிக்கிட்டு எழுத மாட்டேங்குறாங்க....பிள்ள இல்லா வுட்டுல கிழவன் துள்ளி வெளையாண்ட கத தான்.....நானெல்லாம் எழுதுறது.

    இதுல ஒருத்தர் "வளையங்களின் கடவுள்" பதிவ தவிர வேற எதையும் எழுத மாட்டேன்னு சங்கல்பமே எடுத்திருக்கார். அப்பறம்...............

    ReplyDelete
  14. வளையங்களின் கடவுள் "" ஹி ஹி

    ReplyDelete
  15. //பாமரன்களுக்கு எல்லாம் புரியும்....யோவ்..........இந்த படத்த வேற மாதிரி எழுத எனக்கு தெரியல. நா ஒண்ணும் ப்ளான் பண்ணி வார்த்தைகள போடல.ரஷ்ய இலக்கியங்கள் - வரலாறு, என்னக்கு கொஞ்சம் ஆர்வம் உண்டு. அதெல்லாம் சொன்னாதான் நாமும் இலக்கியவியாதிகள் ஆக முடியும்..//

    நா இந்த படத்த பற்றி கேள்வி பட்டு இருக்கேன் தல,ஒரே சாட்ல எடுத்துன்னு இப்பதான் தெரியும்,ரோப் பார்த்து இருக்கேன்,கேமரா கட் இல்லாம இந்த கதைய எப்படி எடுத்து இருப்பாங்கனு யோசிச்சுட்டு இருக்கேன்

    ReplyDelete
  16. தஸ்தயெவ்ஸ்கி,டால்ஸ்டாய்,துர்கனேவ் இவர்களால் இப்பொழுதுதான் பாதிக்கப்பட்டு ரஷ்ய இலக்கியங்கள் மேல் கொஞ்சம் ஆவல் வந்துள்ள நிலையில் இந்த படம் கொஞ்சம் பயனுள்ளதாக இருக்குமென நம்புகிறேன்

    ReplyDelete
  17. யோவ்..உங்கள நேர்ல பாத்தா அடி கொல்லப்போறேன்..எல்லாரையும் சகட்டுமேனிக்கு தல - தலன்னு சொல்றீங்க ?? அந்த வார்த்தையே அலர்ஜியா இருக்கு....கருந்தேள் - பாலா மாதிரி மூ........த்தவர்களுக்கு ஓகே...

    ரோப்...ஒரே ஷாட் இல்ல...சமயோஜிதமா அங்கங்கு சேர்த்திருப்பாங்க.
    இந்த படம் சும்மா - ஒரே நாளில் எடுக்கப்பட்ட படம் , கின்னஸ் சாதனை - என்ற ரீதில எடுக்கப்படல. படம் பாருங்க. நா சொல்றது புரியும்.
    கொஞ்ச நேரத்தில..நீங்க ரிங் படத்துல வர மாதிரி (அதுக்கு உல்டா ) டிவிகுள்ள இறங்கி அந்த இடத்த சுத்தி பாக்க ஆரம்பிச்சிருவீங்க.....கண்டிப்பா சினிமா சரித்திரத்தில் ஒரு மகத்தான சாதனை இந்த படம்..

    ReplyDelete
  18. ஆன்டன் செகாவின் " மாய சந்யாசி"ன்னு ஒரு கதை இருக்கு. திடீர் திடீர்ன்னு ஒருத்தர் வருவாரு - மறஞ்சு போவாரு..கிட்டத்தட்ட - இந்த படத்தின் கதாபாத்திரங்கள் மாதிரி. அவர் கதைகளையும் படிங்க..

    ReplyDelete
  19. //கொளந்தையீன் இந்தப் பதிவு புரிய கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும்,அகிரோ படங்கள் எப்படி ஆங்கிலேயர்களால் தூசு தட்டி எடுக்கப்பட்டு தலையில் வைத்து கொண்டாடினார்களோ ஒரு நாள் அது போல கொளந்தையீன் பதிவுகளும் தூசு தட்டப்படும்//

    இதை நான் எகனை மொகனையாகக் கண்டிக்கிறேன்...

    கொழந்த பதிவெழுத துவங்கி publish பொத்தானை அழுத்திய நொடியிலிருந்து இந்த நொடிவரை எல்லா பதிவுகளையும் நான் விடாமல் படித்து வருகிறேன். திரும்பத் திரும்பப் படித்து வருகிறேன். ஆனால், இப்போதுதான் முதல் முறையாக பின்னூட்டம் இடுகிறேன். என்னைப்போலவே இன்னும் லட்சோப லட்சம் பேர் கொழந்தயின் பதிவுகளை தொடர்ந்து படித்து இன்புற்று வருகின்றனர்.

    மாதத்தில் ஒரே முறை பதிவு போடும் சமயங்களிலெல்லாம், அந்த பதிவையே அச்செடுத்து நினைக்கும்தோறும் படித்து இன்பம் துய்ந்து வந்திருக்கிறேன். அதனால், தூசு தட்டப்படும் என்ற வார்த்தைகளை நீக்கிவிடுங்கள்...

    வாழ்க கொழந்த!
    வளர்க அவரது எழுத்து!!
    ......................!!!

    ReplyDelete
  20. நீங்க இவ்ளோ சொல்லுறிங்கண்ணா படத்துல எதோ பெருசா இருக்கும்ன்னு நினைக்குறேன்...கண்டிப்பா பாக்குறேன்... Stagevu la கிடைக்குமா ??

    ReplyDelete
  21. ஆட்டோஃபிக்ஷன் நாவல் எழுத எல்லா தகுதியும் உங்களுக்கு வந்துட்டு.... :)

    ReplyDelete
  22. @kolandharasigan
    வாவ்.....ஆனா...இந்த மாதிரி வார்த்தைகள உபயோகிச்சா நீங்கதான்னு தெரிஞ்சு போயிருது....கமென்ட் போடுறதெல்லாம் ஒரு கலை. அது ஒருசில பேருக்குதான் இருக்கு. அவுங்க பேரு மாத்தி கமென்டிட்டாலும் தெரிஞ்சிரும்.......குஞ்சு சார், நீங்க எல்லாம் ...நல்ல உதாரணம்....

    @...αηαη∂....
    டவுன்லோட் பண்ண வேணாம்.அடுத்த முறை பார்க்கும் போது நெறைய ரைட் பண்ணி கொண்டு வரேன்...

    // ஆட்டோஃபிக்ஷன் நாவல் எழுத எல்லா தகுதியும்//
    அப்பறம்..அது என்ன ....ஆட்டோ பிச்சையா...........ஆட்டோல போயி தெருத் தெருவா பிச்சை எடுக்குறதா ???

    ReplyDelete
  23. எலிக்குஞ்சு உதிர்க்கிறத பாத்த அக்கரைச்சீமையிலிருந்து எழுதிகிட்டிருந்த ஒரு மூத்த பதிவரோட பதிவுகளைத் தொடர்ந்து படிச்சி, எல்லாக் கமென்ட்டையும் பிரிஞ்சு மேஞ்சவர் மாதிரி தெரியுது...

    ReplyDelete
  24. @ஆனந்த்.. ஆட்டோ பிக்ஷன் எழுதுறத பத்தி அன்னைக்கு ஷேர் ஆட்டோல உட்கார்ந்துகிட்டு சொன்ன மேட்டர ஆட்டோவோட உட்டுட்டீங்களா???

    ReplyDelete
  25. *பிரிச்சு மேஞ்சவர்... அப்புறம் எலிக்குஞ்சு சார், நமக்கு அட்வைஸ் பன்ன தகுதியிருக்கான்னு கேப்பாரு... கரெக்ட்தானே எலிக்குஞ்சு சார்???

    ReplyDelete
  26. கொழந்த(ரசிகன்)... ஒலக மகா நடிப்புடா சாமி...

    எப்படி இத்தனை அக்கவுன்ட் வச்சி மெயின்டெய்ன் பன்றீரு??? யோவ் கொழந்த ஒழுங்க அனானி ஆப்ஷன் வைய்யா, நாங்களும், பூனைக்கண்னு, கொழந்த எதிரி, க்வீன் எலிஜபெத்துன்னெல்லாம் கமென்ட்டு போடனும்.

    ReplyDelete
  27. @சுப.தமிழினியன்

    எலி குஞ்சையே எதித்து கேள்வி கேக்கும் அளவிற்கு உங்களுக்கு வளர்ந்திருச்சா..........அறிவு..........

    1 அக்கவுன்ட் இருந்தா சாதாரண பதிவர்
    5 அக்கவுன்ட் இருந்தா மத்தியதர பதிவர்
    10 அக்கவுன்ட் இருந்தா சற்றே பிரபல பதிவர்
    15 அக்கவுன்ட் இருந்தா பிரபல பதிவர்
    20 அக்கவுன்ட் இருந்தா உலகப் புகழ் பதிவர்

    தெரிஞ்சுகிட்டு உங்க அக்கவுன்ட்ட 10ல இருந்து 15 ஆக்குற வழியப்பாருங்க..

    ReplyDelete
  28. இம்புட்டு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கியேன்னே நீயி........


    அப்போ 25 அக்கவுண்ட் வச்சிருக்க நீங்க யார்னே?

    ReplyDelete
  29. நா அனைத்தையும் கடந்த பதிவர்..........நா கலைத்தாகத்துக்கு மட்டுமே பதிவு எழுதுறேன்

    இப்ப போறேன்..அப்பறம் வரேன்.......

    ReplyDelete
  30. குத்து மதிப்பா http://www.number30.com/ன்னு போட்ட அங்கயும் ஒரு பதிவு இருக்கு...

    ReplyDelete
  31. எப்போ வரீங்கோ.. :)

    //அப்பறம்..அது என்ன ....ஆட்டோ பிச்சையா...........ஆட்டோல போயி தெருத் தெருவா பிச்சை எடுக்குறதா ??? //

    நீங்க தான சொன்னீங்க தமிழ்ல யாருக்கும் ஒழுங்கா எழுத வரல ... எல்லா தமிழனும் 50 வருஷத்துக்கு பாய பிராண்டுற மாதிரி எதோ எழுத போறீங்கன்னு

    ReplyDelete
  32. //எப்போ வரீங்கோ.. :)
    //
    நல்ல கேள்வி?

    ReplyDelete
  33. // எல்லா தமிழனும் 50 வருஷத்துக்கு பாய பிராண்டுற மாதிரி எதோ எழுத போறீங்கன்னு// ஏற்கனவே பல பாய்களை பிராண்டி கிழிந்து தொங்குகிறது, இலவசமாக பாயைத் தர முடியுமா?

    ReplyDelete
  34. தமிழினியன் மொக்க தாங்க முடியல............இதுலவேற அனானியா கமென்ட் போடுறாராம்.............

    ReplyDelete
  35. எப்போ நாங்களும் பெரிய ஆளா ஆவுறது??? இப்புடி மொக்கய போட்டாத்தான உண்டு

    ReplyDelete
  36. 6 . இந்தப் படத்தைப் பத்தி கேள்விப்பட்டேயில்லை. இப்பதான் பட்டாச்சே. இனிமே இதை எப்புடியாச்சும் பார்த்திரலாம்.

    7 . ஆனா இந்தப் படத்தை விட, 'Dumb and Dumber ' படம் அற்புதமான படைப்பாச்சே. நீங்க எழுதுனதுல இருந்தே, அதை நீங்க பார்க்கலன்னு தெரியுது. நான் அதைப் பார்த்தாச்சு. அதுனால, அதை மறக்காம பாருங்க (எப்படியோ.. உங்களை விட எனக்கு விவரம் அதிகம் தெரியும்னு நிரூபிச்சாச்சு . . இனி நிம்மதியா தூங்கலாம்)

    8 . என்னதான் இப்புடியெல்லாம் நீங்க அரிய படங்களைப் பத்தி எழுதுனாலும், நான் போடும் மொக்கை பதிவுக்குதான் ஒட்டு அதிகம் விழும். Followers உம் எனக்குத்தான் ஜாஸ்தி. ஆகவே நாந்தான் பெரியவன். இதை வெளிப்படையா கமெண்டா அடிக்க முடியாது. அதுனால உங்க பதிவையே இக்னோர் பண்ணுறேன். என்னோட சொம்புங்க பதிவுல (மட்டும்) போய் கமென்ட் போடுவேன்.

    ReplyDelete
  37. இப்ப வர்றது என்னோட (நிஜ) கருத்து

    ஒரு கட் கூட இல்லாம ஒரு முழுநீளப் படம் எடுக்கணும்னா, அதுக்கு கட்டாயம் உயிரைக் கொடுக்கும் ரிஹர்சல் தேவை. சும்மா ரெண்டு நிமிஷம் கட் இல்லாம எடுக்கனும்னாலே, அதுக்கு ஒரு வாரம் ரிஹர்சல் இங்க நடக்குது. ஸோ, ஒரு முழுநீள நாடகம் போல , படத்தை எடுத்திருக்கும் dedication மனமாரப் பாராட்டத் தக்கது. அதுக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கப் போறேன்.

    மட்டுமில்லாமல், இதுக்காகக் கையாளப்பட்டிருக்குற தீம் - அது, ரஷ்யாவின் முன்னூறு ஆண்டுகால சரித்திரத்தைப் புரட்டிப் பார்ப்பது போல இருக்கிறது. அது, ஒரு முக்கியமான விஷயம். கட் இல்லாம மசாலாவும் எடுக்கலாம். அதுலயும், போர்ஹேவின் கதைகளை நீங்க refer செய்திருப்பதிலேயே, இந்த இயக்குனர், பின்நவீனத்துவ கோட்பாடுகளில் பரிச்சயம் உடையவர்னு தெரியுது. இந்தப் படத்தை நீங்க விவரிக்கும்போதே இது கட்டாயம் ஒரு post modernistic film னு புரிஞ்சது. அதுக்கப்புறம் பார்த்தா நீங்களும் அதையே இண்டைரக்டா சொல்லிருக்கீங்க. அதுதான் ஒரு நல்ல திரைப்படத்தின் வெற்றி. அதாவது, இலக்கியத்தைப் படிச்சி அந்தக் கருத்தை உள்வாங்கிகிட்டு, அதை ஒரு அழகியல் அனுபவமா கொடுப்பது. சுக்ரோவின் பேட்டியையும் படிச்சேன்.

    Realistically magical = Magical Realism :-)

    ReplyDelete
  38. 7 . மேல இருக்கிறது மாதிரி எழுதாம இருக்கலாம் :-)

    ReplyDelete
  39. //என்னதான் இப்புடியெல்லாம் நீங்க அரிய படங்களைப் பத்தி எழுதுனாலும், நான் போடும் மொக்கை பதிவுக்குதான் ஒட்டு அதிகம் விழும். Followers உம் எனக்குத்தான் ஜாஸ்தி. ஆகவே நாந்தான் பெரியவன். இதை வெளிப்படையா கமெண்டா அடிக்க முடியாது. அதுனால உங்க பதிவையே இக்னோர் பண்ணுறேன். என்னோட சொம்புங்க பதிவுல (மட்டும்) போய் கமென்ட் போடுவேன்.//

    அட்டகாசம்.... :) :)

    என்னை குஞ்சு.. குஞ்சு-ன்னு ஒருத்தர் கூப்பிட்டு அசிங்கம் பண்ணுறார். நான் இன்னைக்கே வேற பேர் மாத்திட்டு வர்றேன்.

    ReplyDelete
  40. என்னங்க கொழந்த ஆனாலும் உங்களுக்கு தமிழ் பற்று ரொம்ப கம்மி... நீங்க ஒரு பச்சை தமிழனே இல்ல... என்னமோ பெருசா ஒரே நாள்ல எடுத்த படம் ன்னு ஒரு பதிவு போட்டு பெருசா சொல்றிங்க.. இந்த மாறி ஒரே நாள்ல ஒரு அற்புதமான திரைக்கதையோட தமிழன் எப்பவோ எடுத்து சாதனை பண்ணிட்டான்.. அந்த படம் தான் ... "சுயம்வரம்" ... ஆனா இது வரைக்கும் நீங்க அந்த படத்த பாராட்டி எதுவுமே சொல்லல... நீங்கலாம் ஒரு தமிழனா...

    ReplyDelete
  41. யோவ்....ஒழுங்கா படிக்கலை போலயே......அது ஒரே நாள் இல்ல....ஒரே ஷாட்.......எடிட்டிங் இல்லாம..

    அப்ப.......இதுமாதிரி தான் எல்லா பதிவையும் கடனுக்கேன்னு படிச்சதா சொன்னீங்களா......என்ன கொடும சார்...

    ReplyDelete
  42. யோவ் பதிவ பத்தி கமெண்ட் போடுரதுக்கும் உன்ன கலாய்க்க்குறதுக்கும் வித்தியாசம் தெரியாதா ய... இந்த பதிவ நான் காலைலயே படிச்சுட்டேன்... ஆபீஸ் ல கூகிள் sync blocked ... அதனால தான் கமெண்ட் போட முடில.. மத்த படி என்ன சொல்லுரதுனே தெரில... இதுல நீங்க சொன்ன விஷயம் எல்லாமே எனக்கு புதுசா இருக்கு(உங்க ப்ளாக் ல எல்லாமே எனக்கு புது விஷயமா தான் இருக்கு)... முதல் பாதி ய நீங்க ஒழுங்கான பாணிலயே சொல்லிருக்கலாம்...

    ReplyDelete
  43. // என்னமோ பெருசா ஒரே நாள்ல எடுத்த படம் ன்னு ஒரு பதிவு போட்டு // ??????????????/


    // முதல் பாதி ய நீங்க ஒழுங்கான பாணிலயே சொல்லிருக்கலாம்... //

    எனக்கு தெரிஞ்சத தான எழுத முடியும். இப்புடித்தான் வருது...படம் பாத்து என்ன தோணுச்சோ - அப்புடியே கொட்டிடேன்.......அது என்னங்க ஒழுங்கான பாணி...........பின்நவீனத்துவ உலகில் அப்படி ஒண்ணு இருக்கா ??

    (இதெலாம் சீரியஸ் டோன்ல சொன்ன கமென்ட்கள் இல்லை என்று புரிந்து கொண்டிருப்பீர்கள்ன்னு நெனைக்கிறேன் )

    ReplyDelete
  44. யோவ் போயா டிஸ்கி....

    ReplyDelete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. நைட் ரஷ்யன் ஆர்க் மேக்கிங் பார்த்தேன்,(படத்தை சண்டே பார்த்துடுரேன்),மிக அருமை,இலக்கியத்த போதுமான அளவுக்கு நீங்க எழுதிட்டீங்க,அதுல டெக்னிக்கள் விஷயங்கள் நிறைய தெரிஞ்சிகிட்டேன்,உண்மையில் ஆடித்தான் போயிட்டேன்,800
    ப்ரோபசனல் நடிகர்கள் , 1000 க்கும் மேற்ப்பட்ட துணை நடிகர்கள் ,
    90 நிமிடங்கள் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும் இடையில் யாராவது ஒருத்தர் ஒரு சின்ன தவறு செய்தாலோ அல்லது வசனங்களை மறந்தாலோ என்ன ஆவது,இதில் மைனசில் குளிர்,கமெராவில் மிஸ்ட் படாமல் எடுக்க வண்டும்,இதெல்லாம் கூட ஓகே அந்த கேமரா மேனை பற்றி நினைத்து பார்த்தால் புல்லரிக்குது,1 1/2 கிலோ மீட்டர் பரப்பளவுள்ள ஷூட்டிங் ஏரியாவில் இன்ச் பை இன்ச்சாக மனதில் பதிய வைத்துகொண்டு 35 கிலோ காமெராவை தூக்கிக்கொண்டு 90 + 3 ரீடேக்குகள்,உண்மையில் இந்தப்படன் ஒரு சரித்திரமே

    ReplyDelete
  47. //இதுல நீங்க சொன்ன விஷயம் எல்லாமே எனக்கு புதுசா இருக்கு(உங்க ப்ளாக் ல எல்லாமே எனக்கு புது விஷயமா தான் இருக்கு// - கொளந்த ஒரு வற்றாத ஞான ஊற்று. கொளந்தைய அமுக்குனா, வர்றதெல்லாம் ஞானப்பாலாத்தான் இருக்கும் :-) . . கொளந்தை என்னுடைய நண்பர் என்பதை சொல்லிக்கொள்வதில் மயிரு கூச்சு அடைகிறேன்.

    ReplyDelete
  48. //கொளந்தைய அமுக்குனா, வர்றதெல்லாம் ஞானப்பாலாத்தான் இருக்கும் //

    vulgar...............vulgar..............vulgar............

    ReplyDelete
  49. இந்த படம எழுதனும்னு நினைச்சி டைம் இல்லாத காரணத்தால் எழுதவில்லை...ரொம்ப நல்லா எழுதி இருக்கிங்க...அவுங்க இந்த படத்தை எடுக் மெனெக்கெட்ட விஷயத்தையே தனிப்பதிவா எழுதலாம்... இது பற்றிய ஒரு தமிழ் கட்டுரை நிழல் பத்திரிக்கையில் வந்ததாக நியாபகம்..

    பிரியங்களுடன்
    ஜாக்கிசேகர்

    ReplyDelete
  50. 4 & 8 = ^

    Elikunju

    ReplyDelete
  51. குழந்த...
    இப்படத்தை கோணங்கள் பிலிம் சொட்டியில் திரையிட்ட போது ஒன்றும் புரியவில்லை.
    தங்கள் பதிவைப்படிச்சும் ஒன்றும் விளங்க வில்லை.
    ஆனாலும் படம் ஒரு மியூசியத்தை சுற்றிப்பார்த்த பரவசத்தை வழங்கியது.
    [இப்படத்தின் கேமரா மேன் ரன் லோலா ரன் படத்தின் ஒளிப்பதிவாளர்]

    இப்படம் முழுமையாக விளங்க வேண்டுமென்றால் ரஷ்ய கலாச்சாரம்,இலக்கியம்,அரசியல்,சரித்திரம் தெரிய வேண்டும் எனத்தெரிந்தேன்.
    சரிதானே?

    ReplyDelete
  52. @ஜாக்கி சேகர்

    நன்றி ண்ணே.......

    தொழில்நுட்ப விசயங்கள ரொம்ப சொல்லி, நல்ல நாள்லயே எனக்கு ஒழுங்கா எழுத வராது - ஏதோ ஒரே நாளில் எடுத்த படம், ஒரே ஷாட்டில் எடுத்த படம்ன்னு - கின்னஸ் ரேஞ்சுக்கு படத்த நெனச்சுட்டா...அதான்...

    ReplyDelete
  53. தனிப்பட்ட முறையில, படத்துக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும்ன்னு எப்பவுமே ஒரு "இது" வெச்சிருக்கேன்.இந்த படத்தோட தாக்கம், அத்தான் மொதல்ல சொல்ல தோணுச்சு. அபாரமான தொழில்நுட்ப விசயங்கள - நண்பர் ஒருத்தர் எழுதுறேன்னு சொல்லியிருக்கார்

    ReplyDelete
  54. @உலக சினிமா ரசிகன்

    sir,,,,,கொஞ்சம் ரஷ்ய வரலாறு தெரிந்திருந்தால் பிரமாதமாக புரியும்....உங்களுக்கு தெரிஞ்சிருக்குமே ..

    இருந்தாலும் தெரியாவிட்டாலும் கூட என்னமோ என்னய ரொம்ப ஈர்த்துருச்சு.. இத்தனைக்கும், இந்த படத்த பத்தி ஒண்ணும் தெரியாமா, டைரக்டர் பேர பாத்து வாங்குனது..

    ReplyDelete
  55. to read 1ly world movies add folowing feeds in google reader...


    Jackie Sekar-உலக சினிமா
    http://www.jackiesekar.com/feeds/posts/default/-/உலகசினிமா?max-results=500
    Jackie Sekar-பார்க்க வேண்டிய படங்கள்
    http://www.jackiesekar.com/feeds/posts/default/-/பார்க்க%20வேண்டியபடங்கள்?max-results=500
    Jackie Sekar-பார்த்தே தீர வேண்டிய படங்கள்
    http://www.jackiesekar.com/feeds/posts/default/-/பார்த்தே%20தீர%20வேண்டிய%20படங்கள்?max-results=500

    karundhel-full-all
    http://www.karundhel.com/
    karundhel-உலக சினிமா
    http://karundhel.blogspot.com/feeds/posts/default/-/உலக%20சினிமா?max-results=500

    karundhel- director கிம்கிடுக்
    http://karundhel.blogspot.com/feeds/posts/default/-/கிம்%20கி%20டுக்?max-results=500

    karundhel-ஆங்கிலம்
    http://karundhel.blogspot.com/feeds/posts/default/-/ஆங்கிலம்?max-results=500
    karundhel-காமெடி
    http://karundhel.blogspot.com/feeds/posts/default/-/காமெடி?max-results=500
    karundhel-காதல்
    http://karundhel.blogspot.com/feeds/posts/default/-/ஆங்கிலம்/காதல்?max-results=500

    aadav-சினிமா/english
    http://aadav.blogspot.com/feeds/posts/default/-/சினிமா/English?max-results=500
    aadav-சினிமா/spanish
    http://aadav.blogspot.com/feeds/posts/default/-/சினிமா/Spanish?max-results=500
    aadav-சினிமா/korean
    http://aadav.blogspot.com/feeds/posts/default/-/சினிமா/Korean?max-results=500



    geethappriyan-அயல் சினிமா
    http://geethappriyan.blogspot.com/feeds/posts/default/-/அயல்%20சினிமா?max-results=500

    geethappriyan- உலக சினிமா பார்வை
    http://geethappriyan.blogspot.com/feeds/posts/summary/-/உலக%20சினிமாபார்வை?max-results=500

    geethappriyan- உலக சினிமா
    http://geethappriyan.blogspot.com/feeds/posts/default/-/உலக%20சினிமா?max-results=500

    babyanandan- உலக சினிமா
    http://www.babyanandan.in/feeds/posts/summary/-/உலக%20சினிமா?max-results=500

    babyanandan- சினிமா
    http://www.babyanandan.in/feeds/posts/summary/-/சினிமா?max-results=500


    பிச்சைபாத்திரம்- அயல் சினிமா
    http://pitchaipathiram.blogspot.com/feeds/posts/default/-/அயல்சினிமா?max-results=500

    ashwin-cinema
    http://ashwin-cinema.blogspot. com/

    worldmoviesintamil
    http://worldmoviesintamil. blogspot.com/

    கனவுகளின் காதலன்‍‍‍‍- சினிமா
    http://kanuvukalinkathalan. blogspot.com/feeds/posts/default/-/சினிமா?max-results=500

    illuminati8
    http://illuminati8.blogspot. com/

    thacinema-all summary
    http://www.thacinema.com/feeds/posts/summary?max-results=500

    saravanaganesh18
    http://saravanaganesh18.blogspot.com/

    umajee-hollywood
    http://umajee.blogspot.com/feeds/posts/default/-/Hollywood?max-results=500

    umajee-உலக சினிமா
    http://umajee.blogspot.com/feeds/posts/default/-/உலக%20சினிமா?max-results=500


    cablesankar- English
    http://cablesankar.blogspot.com/feeds/posts/default/-/english%20Film%20reveiw?max-results=500

    cablesankar-பார்க்க வேண்டிய படங்கள்
    http://cablesankar.blogspot.com/feeds/posts/default/-/பார்க%20வேண்டிய%20படங்கள்?max-results=500

    butterflysurya- full-all
    http://butterflysurya. blogspot.com/

    butterflysurya-category dont miss movies
    http://butterflysurya.blogspot.com/feeds/posts/default/-/Dont%20Miss%20Movies?max-results=500


    அக்கரைச்சீமை- summary- all posts
    http://hollywoodbalas.blogspot.com/feeds/posts/summary?max-results=500

    அக்கரைச்சீமை-r rating movies
    http://hollywoodbalas.blogspot.com/feeds/posts/summary/-/Rated%20R?max-results=500


    feed of hollywood dot mayuonline dot com

    http://feeds.feedburner.com/tahollywood



    denimmohan
    http://denimmohan.blogspot.com/

    cinemajz
    http://cinemajz.blogspot.com/


    luckylimat
    http://luckylimat.blogspot.com/


    konangaltamil
    http://konangaltamil.blogspot.com/

    mayilravanan- ulaga cinema
    http://mayilravanan.blogspot.com/feeds/posts/default/-/உலக%20சினிமா?max-results=500


    oliyudayon- thiraivimarsanam
    http://oliyudayon.blogspot.com/feeds/posts/default/-/திரை%20விமர்சனம்?max-results=500


    2 Notes:
    1. கூகிள் ரீடர் என்பது என்ன?
    http://ravidreams.net/forum/topic.php?id=106
    2. how to get posts from particular category from a blogger blog in google reader?

    http://ravidreams.net/forum/topic.php?id=108

    ...d...

    ReplyDelete
  56. note: important:



    சில சமயங்களில் நீங்கள் feed URlஐ google readerல் add செய்த பிறகு கூகிள் ரீடரில் Your search did not match any feeds என்று வரலாம். அப்படி வந்தால் நீங்கள் add செய்திருக்கும் feed URLலில் extraவாக charactersகளுக்கு இடையில் தேவை இல்லாத spaceகள் வந்துள்ளன என்று அர்த்தம். அந்த தேவையில்லாத spaceகளை நீக்கி விட்டு feed URLஐ மீண்டும் google readerல் add செய்யவும். அதன் பின் கட்டுரைகளை கூகிள் ரீடரில் பெறுவதில் சிக்கல் வராது....d....

    ReplyDelete
  57. சில சமயங்களில் நீங்கள் feed URlஐ google readerல் add செய்த பிறகு கூகிள் ரீடரில் Your search did not match any feeds என்று வரலாம். அப்படி வந்தால் நீங்கள் add செய்திருக்கும் feed URLலில் extraவாக charactersகளுக்கு இடையில் தேவை இல்லாத spaceகள் வந்துள்ளன என்று அர்த்தம். அந்த தேவையில்லாத spaceகளை நீக்கி விட்டு feed URLஐ மீண்டும் google readerல் add செய்யவும். அதன் பின் கட்டுரைகளை கூகிள் ரீடரில் பெறுவதில் சிக்கல் வராது.

    ReplyDelete