Tuesday, May 24, 2011

கனவுகளற்றவனின் கனவின் கதை


Every child is an artist. The problem is how to remain an artist once we grow up.
- Pablo Picasso


                                

                                     ஒரு பிறழ்ந்த ஊர் (dystopian society). அந்த ஊர்ல ஒரு விஞ்ஞானி இருந்தார்.அதிகப்படியான அறிவுள்ள விஞ்ஞானி.அவருக்கு மனைவி குழந்தைகள்னு யாருமில்ல.இந்த சூழ்நிலை ரொம்பவும் அலுப்பா இருக்கவே....மனைவியையும் குழந்தைகளையும் தன் அறிவியல் திறமையினால பரிசோதனை கூடத்துல தயார் செய்கிறார்.பரிசோதனைல என்ன கோளாறு ஏற்பட்டுச்சோ அவர் நெனச்ச மாதிரி ஏதுவும் வரல. மனைவி வளர்ச்சியில்லாத ஒரு அடி உருவமுள்ள பெண்மணியாகவும், மகன்கள் - மரபணு நகலாக்க (Cloning) முறையில் உருவாக்கப்பட்டவர்கள், ஒவ்வொருவரும் ஒவ்வொரு குறைபாட்டுடன் இருக்கின்றனர். வெறுத்துப்போன நம்ம விஞ்ஞானி மேலும் ஒரு மூளையை மட்டும் உருவாக்கி தண்ணிதொட்டிகுள்ள வெச்சு வளர்க்க ஆரம்பிக்கிறார்.அதுவும் போதாம இன்னொரு மனிதனை - தனக்கு இருக்கிற எல்லா ஆற்றலையும் அறிவையும் கொண்டு - உருவாக்குகிறார். அந்த மனிதனின் பெயர் - கிரான்க் (இந்த கதைய படிக்கிறவர்கள் இவன ஞாபகம் வெச்சுக்கோங்க). ஒருநாள் ஏற்படும் தகராறுல கிரான்கும்,அந்த பெண்மணியும் சேர்ந்து நம்ம விஞ்ஞானி மண்டையில அடிச்சு கடலுக்குள்ள தள்ளிற்றாங்க.ஆனாலும் எப்படியோ உயிர் தப்பிக்கிறாரு,அம்னீசியா குறைபாட்டுடன்.கடலுக்கடியில என்னமோ பண்ணி வாழ்கையை ஓட்டிகிட்டிருக்கார்.



அதே ஊர்ல மோசமான சயாமீஸ் இரட்டையர்கள் (Siamese Twins - உடம்பு ஒட்டியே பிறந்த இரட்டையர்கள்)இருக்காங்க.அவுங்க வேல - குழந்தைகளை நல்ல முறையில் தயார் செஞ்சு சீரும் செம்மையுமா - திருட வைக்கிறது. அந்த திருட்டு குழந்தைகளின் கும்பல்ல மியாட் என்ற தலைவி அந்தஸ்துல ஒரு பெண் குழந்தையும் இருக்கு.இந்த குழந்தைகளால, ஒருநாள் ரோட்டுல வித்த காமிச்சிகிட்டு இருக்குற ஒரு ஆள் சாக நேரிடிகிறது. செத்த ஆள்ட வேல செஞ்சுகிட்டு இருக்குறவந்தான் - ஒன் (One). எப்புடியாப்பட்ட சங்கிலில பிணச்சாலும் அத ஓடச்சுகிட்டு வெளிய வரக்கூடிய திறமை உள்ளவன்.மீச வெச்ச கொழந்த - என்ற வாக்கியத்துக்கு பொருத்தமானவன். அவுங்க கூடவே - வீட்டவிட்டு காணாம போய் இவுங்க கையில கிடச்ச-டென்ரீ என்ற சின்ன குழந்தையும் இருக்கான்.நம்ம ஒன் இந்த குழந்தை மேல உசுரயே வெச்சிருக்கான். இப்புடி போய்கிட்டு இருக்கு இவுங்க வாழ்க்கை.

தொட்டி மூளை
ஆறு க்ளோனிங்கள்










ஆங்......நம்ம கிரான்க்க ஞாபகம் வெச்சுக்க சொல்லியிருந்தேனே....அவன பத்தி ஒரு ரொம்ப முக்கியமான விஷயத்த சொல்லாம விட்டுட்டேன். இவன்ட என்ன பிரச்சனைனா,விஞ்ஞானி இவன உருவாக்குனதிலிருந்து - இவன் பிறந்ததிலிருந்து இவனுக்கு கனவுகளே வரதில்லை. கூடவே அழுகையும் வரதில்ல. அதுனால ரொம்ப வேகமாவே வயசு இவனுக்கு கூடிகிட்டு போகுது.இத எப்புடி தடுக்கன்னு யோசிச்சு...ஒருவழிய கண்டுபிடிக்கிறான். உலகத்திலேயே அற்புதமான தூய்மையான கனவுகள காணக் கூடியவர்கள் யாரா இருக்க முடியும்?குழந்தைகளைத் தவிர.அதுனால அந்த ஊர்ல இருக்குற குழந்தைகள கடத்திட்டு வந்து அவுங்க கனவை திருடப் பார்க்கிறான்.இருந்தாலும் எல்லா முயற்சியும் தோல்வி அடைஞ்சுகிட்டே வருது.ஒரு குழந்தையும் அவன் முயற்சிக்கு ஏதுவா இல்லை.


Cyclops
One & Miyat









Cyclops என்ற கண்பார்வை அற்ற கும்பல் ஒண்ணும் அந்த ஊருக்குள்ள இருக்கு. அவுங்களுக்கு "மூன்றாவது கண்" என்ற செயற்கை கண்ணை தயாரிச்சு தந்து பதிலுக்கு அவர்களை குழந்தைகள கடத்திட்டு வர பயன்படுத்திக்கிறான் நம்ம கிரான்க்.இப்புடி ஒவ்வொரு குழந்தையா அந்த ஊருலயிருந்து காணாம போய்கிட்டிருக்கு. Cyclops ஒரு தடவ நம்ம டென்ரீயவே கடத்தி கொண்டுபோயிர்றாங்க. டென்ரீய பாத்த கிரான்க் ரொம்பவே சந்தோசமாயிடுறான். ஏன்னா அவன் நெனச்ச மாதிரி-அவனின் ஆராய்ச்சிக்கு ஏத்த மாதிரி டென்ரீ இருக்கான். ஒன் - துடிச்சுப் போயிர்றான். எப்படியாவது அந்த குழந்தைய மீட்க துடிக்கிறான். அவனுக்கு இதுல திருட்டு குழந்தைகளும் குறிப்பா மியாட்டும் ரொம்பவே உதவி செய்யுறாங்க.இருந்தாலும் பல கடுமையான சோதனைகள சந்திக்க வேண்டியிருக்கு. இதற்கிடையில அம்னீசியாவால பாதிக்கபட்டிருந்த நம்ம விஞ்ஞானிக்கும் நினைவு திரும்புது. இவர்கள் எல்லாம் சேர்ந்து கிரான்க்ட இருந்து டென்ரீயயையும் பிற குழந்தைகளையும் மீட்க முடிஞ்சதா.....ஒன் - டென்ரீ கூட சேர்ந்தானா.....ஒன் மேல அளப்பரிய பாசம் வச்சிருக்கும் சிறுமி மியாட் என்னானாள்.....


உண்மையிலேயே இந்த திரைப்படத்தை பார்ப்பது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. Stunning visualsன்னு சொல்வாங்களே........அதுக்கு உதாரணம் இதுதான். எல்லா காட்சிகளும் ஒரு தேர்ந்த சர்ரியலிச ஓவியம் போலவே இருந்தது. இந்த படத்தை குறித்து நெட்டில் படிக்கும் போது - ஒரு சிறுவனின் @ சிறுமியின் பாதி கலைந்த கனவு (Half- Remembered dream) மாதிரியே இருப்பதாக பலரும் பாராட்டியுள்ளது தெரிந்தது. அது நிஜமும் கூட.பெரும்பாலான குழந்தைகளுக்கு அஞ்சு வயசுக்கப்பறம் - எல்லா நாட்டிலுமே - nightmare என்று சொல்லக்கூடிய பயமுறுத்தலான கனவுகளே வருகிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது. அந்த மாதிரி ஒரு nightmarish yet enjoyableஆனா ஒரு அனுபவமே இந்தத் திரைப்படம். மேலோட்டமாக இந்த படத்தை பார்த்தால் ஒரு சாதரணமான குழந்தைகள் திரைப்படம் என்றே இருக்கும். ஆனால் போகிற போக்கில் பல கேள்விகளை எழுப்பும் என்பது நிச்சயம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்க்கும் உள்ள குணாதிசயங்கள் ரொம்பவும் அருமையான முறையில் எடுத்தாளப்பட்டுள்ளது. குறிப்பாக க்ளோனிங்காக ஆறு பேரை வெளிப்படுத்தியவரின் நடிப்பு அபாரம். ஒன் – ஏற்கனவே நமக்கு பரிச்சயமான Ron Perlman (Hell boy) தான். கிரான்க்காக வருபவர் Daniel Emilfork.

           இந்த படத்தின் டைரக்டர்கள் Marc Caro & Jean - Pierre Jeunet. இவர்கள் இதற்கு முன்னர் எடுத்த Delicatessen படமும் சிறப்பான, இதே மாதிரி அமைப்பு கொண்ட என்ற திரைப்படம். குறிப்பாக இப்படத்தை இயக்கிய Jean - Pierre Jeunet மற்றுமொரு திரைப்படம்தான் - Amelie . Del Toro மாதிரியே இவரது படங்களும் குழந்தைகளுக்கான படங்களில் மிகுந்த தனித்தன்மை வாய்ந்தவை.

எனக்கு தெரிந்த வரை படத்தில் வரும் கிரான்க்கை விட நிறைய பெற்றோர்களது நடவடிக்கைகள் இம்சையாக இருக்குது.கிரான்க்காவது குழந்தைகளின் கனவுகளைத் திருட மட்டுமே செய்கிறான்.இங்கே பெற்றோர்கள் குழந்தைகளை கனவு காணவே விடுவதில்லையே. ஒண்ணு, ஸ்ட்ராவ போட்டு அவுங்க கனவுகளை உறிஞ்சிர்றாங்க.இல்ல,இங்க் ஃபில்லர்ல சொட்டு சொட்டா தங்களது கனவுகளை குழந்தைகளின் தலைக்குள் விடுறாங்க.குழந்தைகளுக்கும் சேர்த்தே அவுங்களே கனவு காண ஆரம்பிச்சிர்றாங்க. Materialistic வகையான கனவோ இல்ல அப்துல் கலாம் வகையான கனவுகளையோ மட்டுமே நிறைய குழந்தைகள் காண வேண்டி இருக்கு. இதுக்கு நடுவுல மாட்டிக்கிட்டு குழந்தைகள் வெயில்ல காஞ்ச தேங்காய் சிரட்டை மாதிரி ஆயிறாங்க.

City of lost children. நான் மேல கொடுத்துள்ள மேற்கோளை மறுபடியும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.இந்த படத்தின் தலைப்புக்கும் அதற்கும் உள்ள தொடர்பு புரியும்.ஒருவேள நமக்குள்ள உள்ள குழந்தைத்தனம் வயது வளர வளர காணமல் போவதைத்தான் lost childrenன்னு அர்த்தப்படுத்துறாங்களோ. கிரான்க் – குழந்தை ரெண்டுமே நாமதான.வெறும் கார்டூன் படங்கள் பார்ப்பதும்,அப்பாவியா பேசுவதும் மட்டுமே குழந்தைத்தனம் ஆயிராது.யார்டையாவது சண்ட போட்டா – தூங்கும் போதே அத மறந்திட்டு – அடுத்தநாளே பழைய மாதிரி பேசிக்கும் மனசு குழந்தைகளோடது. அது வேணும். 
Facebookers..

60 comments :

  1. 1. எனக்குத்தான் சுடுசோறு.. இருங்க சாப்புட்டு வாரேன்
    2. வடை எனக்குத்தான்
    3. மீ த ஃபர்ஸ்ட்டு... இருங்க படிச்சிட்டு வாரேன்
    4. செம்ம பதிவு தல.. சும்மா அதிருது
    5. உங்கள் பதிவு படம் பார்க்க தூண்டுகிறது..
    ௬. உங்கள் பதிவைப் படித்தபின்னர் தான் சினிமா, டிராமா ஆகிய அனைத்தையும் அறிந்துகொண்டேன்

    ReplyDelete
  2. தல இந்த படம் கதைய கேக்கும்போது monsters inc., மாறி இருக்கு.. ஆனா நீங்க சொல்ற கதாபாத்திர வடிவமைப்பு ரொம்ப புதுசு.. இன்னைக்கு நைட்டு இதான் பாக்க்கலாம்முனு முடிவு பண்ணிருக்கேன் உங்கள நம்பி...

    ReplyDelete
  3. தம்பி..இது வந்தது...1995..monsters inc படத்துல இந்த படத்தின் சாயல் நெறையவே இருக்கும்...

    ReplyDelete
  4. //தம்பி..இது வந்தது...1995../// இதுக்குத்தான் ஊருக்குள்ள ஒரு ஆல் இன் ஆல் அழகு ராஜா வேனும்ன்றது... என்ன டிடைல்லு...

    ReplyDelete
  5. //1. எனக்குத்தான் சுடுசோறு.. இருங்க சாப்புட்டு வாரேன்
    2. வடை எனக்குத்தான்
    3. மீ த ஃபர்ஸ்ட்டு... இருங்க படிச்சிட்டு வாரேன்
    4. செம்ம பதிவு தல.. சும்மா அதிருது
    5. உங்கள் பதிவு படம் பார்க்க தூண்டுகிறது..
    ௬. உங்கள் பதிவைப் படித்தபின்னர் தான் சினிமா, டிராமா ஆகிய அனைத்தையும் அறிந்துகொண்டேன்//

    7. உங்கள் பதிவைப் படித்தபின்னர் தான், தமிழ் என்ற மொழியையே கண்டுபிடித்தேன் (கொக்கமக்கா.. அப்புறம் எப்புடிய்யா படிச்சேன்னு கேட்கப்படாது)
    8. ரிப்பீட்டு.
    9.//சொட்டு சொட்டா// - நச் !
    10. //கிரான்க் – குழந்தை ரெண்// - சரியாகச் சொன்னீர்கள்
    11. நீங்க தாராளமா திரைக்கதை எழுத ஆரம்பிக்கலாம். இவ்வளவு நாள் எங்க இருந்தீங்க தல?
    12. இதே இயக்குநரின் ‘dildo the dragon' என்ற படம், இதைவிட நன்றாக இருக்கும். அதைப் பார்த்திருக்கிறீர்களா? (இது புதிய ட்ரெண்டு. ஒரு படத்த பத்தி எழுதினா, அதைப்பத்தி சொல்றத விட்டுட்டு, ‘அந்தப்படம் பார்த்தியா’, ‘இந்தப்படம் பார்த்தியா’, இல்லேன்னா, ‘அந்தப்படம் அருமையா இருக்கும். அதைப்பாருங்க மொதல்ல’ அப்புடீன்னு நம்மாளுக உடுற சலம்பல் இருக்கே... உஸ்ஸ்ஸ்ஸ்)

    ReplyDelete
  6. அதேமாதிரி, இன்னொரு காமெடி என்னன்னா, படத்துல வர்ர நடிகைய எடுத்துக்கிட்டு, ‘இந்த நடிகை, இருபது வருடங்களுக்கு முன்னர், ‘பிக்காளிப்பயலே’ என்ற படத்தில் ஜன்னலைத் திறப்பார். அப்போது வானத்தில் பறந்த காக்கை நன்றாக இருக்கும்’ அப்புடீன்னு வேற நம்மாளுக கமெண்ட் போட பழகிட்டானுவ :-) .. இதை நாமளும் கத்துக்கணும்

    ReplyDelete
  7. ஜோக்ஸ் அபார்ட், இந்தப் படம் ரொம்ப டிஃபரண்டா இருக்கு. கட்டாயம் பார்த்துவிடுவேன். நல்ல விமர்சனம். உங்கள் பதிவு படம் பார்க்கத் தூண்டுகிறது

    ReplyDelete
  8. @கருந்தேளு...

    தல உங்க கமெண்ட் சூப்பர்... உங்க கமெண்ட், என்னை மீண்டும் மீண்டும் கமெண்ட் போட தூண்டுகிறது..அதிலும் இந்த வரி கலா சிந்தனை அதிகம் உள்ள ஒருவனால் மட்டுமே இது முடியும் ///இது புதிய ட்ரெண்டு. ஒரு படத்த பத்தி எழுதினா, அதைப்பத்தி சொல்றத விட்டுட்டு, ‘அந்தப்படம் பார்த்தியா’, ‘இந்தப்படம் பார்த்தியா’, இல்லேன்னா, ‘அந்தப்படம் அருமையா இருக்கும். அதைப்பாருங்க மொதல்ல’ அப்புடீன்னு நம்மாளுக உடுற சலம்பல் இருக்கே... உஸ்ஸ்ஸ்ஸ்///

    ReplyDelete
  9. இனிமே இங்கே வந்து என்னத்த கமென்ட் போட? எதை எழுதினாலும் கிண்டல் செய்வீர்கள் போலுள்ளதே?

    கிங் விஸ்வா
    தமிழ் சினிமா உலகம் - மைதானம் சினிமா விமர்சனம்

    ReplyDelete
  10. சூப்பர்........அற்புதம்....அருமை.........

    அவ்ளோதான்..முடிஞ்சது.....இனி கமெண்ட் பாக்ஸ்சே தேவையில்ல....யாராவது தமிழ் படிக்கத் தெரியாதவன் வந்து கமெண்ட் போட்டாதான் உண்டு.......

    ReplyDelete
  11. @கருந்தேள் கண்ணாயிரம்..
    எல்லாம் ஒக்கே..பதிவ பத்தி ரெண்டு மூணு எழுதுக்களாவது சொல்லியிருக்கலாம்....

    @Murali Krishnan..
    நீங்க என்னைக்கு சார் ப்ளாக் ஆரம்பிக்க போறீங்க......மொத பதிவு வரட்டும்....செத்தீங்க.....


    @King Viswa...
    ணா..உங்கள போய் கிண்டல் பண்ணுவோமா.....கருந்தேள் அவ்வளோ காண்டுல இருக்கார்....அவரு போட்டிருக்கிற கமெண்ட்ல ரெண்டு மூணு எனக்கே பொருந்தும்....நம்மள நாமளே கிண்டல் பண்ணலைனா வேற யார் பண்ணப் போற......

    ReplyDelete
  12. ஒரு பதிவ படிப்பதும் படிக்காததும் அவுங்கவுங்க விருப்பம். ஆனா ஒண்ணைத்தையும் படிக்காம படிச்ச மாதிரி க்ளிஷேதனமான கமெண்ட் போடுறதுனால பாதிக்கப்பட்டவரின் ஓலக்குரல் தான் மேல நீங்க பாக்குறது...

    என்னய விடுங்க....என் பதிவுகள் எப்புடின்னு தெரியல....நானே பல ப்ளாக்ல பாத்திருக்கேன்...ஒரு பதிவ ரொம்ப சிரமப்பட்டு முக்கி முக்கி எழுதியிருப்பாங்க....நெறைய பேர் படிச்சே பாக்காம எதோ ஒரு கமெண்ட் போடுறது...அதுக்கு கமெண்ட்டே போடாம இருந்திரலாம்....மொக்க கமெண்ட் போட எவ்வளவு உங்களுக்கு உரிமை இருக்கோ...அதவிட அதிகமாவே அத நக்கல் பண்ணும உரிமை பதிவ எழுதுறவங்களுக்கு இருக்கு.....

    ReplyDelete
  13. விஸ்வா . . நான் பல பதிவுகள்ள, போய்ப் படிக்கும்போது, இந்த 'சுடுசோறு' கமென்ட் இருக்கே.. அதைப் பார்த்தாலே கொலைவெறி வந்திரும் :-) . . உதாரணத்துக்கு, நீங்க ஒரு அருமையான பதிவு எழுதிருக்கீங்க. சரி.. மக்கள் என்னடா நினைக்கிறாங்கன்னு உங்களுக்குத் தோணும்தானே? சில கமெண்ட்டும் வந்திருச்சி.. என்னதான் வந்திருக்குன்னு போய் பார்த்தா, 'தல..சுடுசோறு எனக்குத்தான். வடை எனக்குத்தான். பொங்கலும் எனக்குத்தான்' அப்புடீன்னு எவனாவது கமெண்டு போட்டு வெச்சிருந்தான்னா, உங்களுக்கு, அவனைப் புடிச்சி மண்டைலயே நங்குன்னு அடிக்கனும்னு தோணுமா தோணாதா ? அதுனாலதான், டெம்ப்ளேட் பின்னூட்டத்தை வெறுப்போர் சங்கம்னு ஒரு சங்கம் ஆரம்பிச்சி நடத்திக்கினு வாரோம். அதுனாலதான் இப்புடியெல்லாம். நீங்க இதை சீரியஸா எடுத்துக்கவேணாம்.

    ReplyDelete
  14. இப்ப சொல்றேன்யா பதிவப்பத்தி . . . இந்த இயக்குநரின் அமேலி படம் மட்டுமே நான் பார்த்திருக்கிறேன். அதில், காட்சியமைப்புகள் அட்டகாசமாக இருக்கும். சர்ரியலிச ஓவியம்னு சொல்லிருக்கீங்க. அதுக்காகவே இந்தப் படத்தைப் பார்க்கனும்னு தோணுது. பாதி கலைந்த கனவு - எனக்கு என்ன தோணுதுன்னா, நமக்கு வர்ற கனவுகளே பலசமயம் அப்புடித்தான் இருக்குன்னு ஒரு பீலிங்கி. ரான் பேர்ல்மேன் - எனக்குப் பிடித்த நடிகர்களில் ஒருவர். உங்களோட எழுத்து நடை, தடுமனு பார்த்தா, நம்ம ஹாலிவுட் பாலா எழுதுறமாதிரியே இருக்கு. அந்த டைம்ல அவரோட பின்னூட்டப்பெட்டி, பட்டைய கிளப்பும். விஸ்வா, நானு, கீதப்ரியன், பப்பு, ராமசாமி கண்ணன், காதலர், அண்ணாமலையான், கிஷோர், இன்னும் பலர்.,. ஹூம்.. அந்த நாளும் வந்திடாதோ :'-(

    ReplyDelete
  15. //பாதிக்கப்பட்டவரின் ஓலக்குரல்// - என்னால, 'ஏய் நரி.. எங்க ஊளஉடு பார்ப்போம்..' ......'ஊஊஊஊஊஊஊ' - இத்தை நினைக்காம இருக்க முடில :-) . . கவுண்டமணி த க்ரேட் . . .

    ReplyDelete
  16. டெம்ப்ளேட்டுகளை இந்த வாங்கு வாங்கின அனைவருக்கும் நன்றிய்யா,தெய்வம்யா.
    அய் அய் சோறு சோறு சுடுசோறு எனக்கு எதையோ நினைவு படுத்தும்.இன்னொரு கமெண்ட் இருக்கு //வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் . மீண்டும் வருவேன். _____@@@@@+++++//... சார் முதல் முறை வந்திருக்கிறேன். இனி தொடர்ந்து வருவேன். ...ல்ல்ல்///... எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது பதிவின் எழுத்து நடை ... தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன் ...//அருமை கவிதை . வாழ்த்துக்கள் . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன். //உணர்வுகள் தெறிக்கிறது வார்த்தைகளில் . தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்//மிகவும் சிறப்பான பதிவு . பகிர்வுக்கு நன்றி ! தொடருங்கள் மீண்டும் வருவேன் . ... ...//வாழ்த்துக்கள் நண்பரே சிறப்பானதொரு தொடக்கம் தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன் ...//… சிந்திக்க வைத்துவிட்டது உங்கள் பதிவு..... தொடருங்கள் மீண்டும் வருவேன் . ... ...//வாழ்த்துக்கள் நண்பரே சிறப்பானதொரு தொடக்கம் தொடர்ந்து எழுதுங்கள் மீண்டும் வருவேன்//
    :)
    :))
    :)))
    :(
    :((
    :(((

    சிறப்பான புரிதலான பகிர்வுக்கு நன்றி என்றும் அன்புடன்

    நல்ல பதிவு பகிர்வுக்கு நன்றி என்றும் தோழமையுடன்

    போதுமாய்யா கொழந்த?!!!:))

    ReplyDelete
  17. The mind was dreaming. The world was its dream — Jorge Luis Borges

    இந்த கமெண்ட்டை க.கண்ணாயிரத்திற்கு டெடிகேட் செய்கிறேன்....

    கருத்திற்கு நன்றி.....

    ReplyDelete
  18. அவ்வளோதான்................ஃபினிஷ்டு...........கதம்...........ஷட்டர க்ளோஸ் பண்ணுங்க.........கமெண்ட் பாக்ஸ்சாவது ஒண்ணாவது.....

    ReplyDelete
  19. @கீதப்ப்ரியன்

    தங்களது மேலான கருத்திற்கு நன்றி....

    ReplyDelete
  20. ( வி.எஸ்.ராகவன் குரலில் வாசிக்கவும்)

    அதுவேற ஒண்ணுமில்ல காமாச்சி.....சுவத்தல அடிச்ச பந்து எனக்கே திரும்புது...

    ReplyDelete
  21. கஷ்=முஷ், கர்=புர், தஸ்=புஸ் இதெல்லாம் கருந்தேளை நக்கல் பண்ணிதான....

    ReplyDelete
  22. இல்லய்யா அது போல சிலர் பதிவுக்கு டிஸ்கியும் கமெண்டும் போட்டு பெரிய விடுகதை போட்டுட்டதா நினைச்சுக்கிறானுங்க

    ReplyDelete
  23. இதுவேறயா......ரொம்ப அடிபட்டிருப்பீங்க போல.....

    ReplyDelete
  24. விஎஸ் ராகவன்னா பாலசந்தர் சீரியல்ல வரும் தாத்தாவா?நல்ல ஆக்டர்,ஹாஹா,நல்லா இருந்தது வசனம்

    ReplyDelete
  25. இந்த கமென்டகள மட்டும் பேஸ்புக்ல போடுவோம்.....படிச்சாவது திருந்தட்டும்....

    ReplyDelete
  26. பீலி சிவம் போல அடிக்குரல்ல படிக்கவும்

    தம்பி,எப்புடி இருந்தது படம்?நான் இன்னும் பாக்கல,நல்லா இருக்கும் போல இருக்குது,அமெலீ பார்திருக்கேன்,பல ஆச்சர்யங்கள கொடுத்தது,இதுவும் அப்படியே இருக்கும்ங்கிற நம்பிக்கையில பார்க்கபோறேன்,

    ReplyDelete
  27. என்னால கவுன்ட்டர் குடுக்க முடியல...தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்....

    ReplyDelete
  28. கண்ணிசிமிட்டிக்கொண்டே சண்முக சுந்தரம் போல படிக்கவும்

    தம்பி அப்படியா செய்யபோறீங்க?,நல்லா செய்யுங்க,அந்தஅம்மன் உங்களுக்கு எப்போதும் துணையிருப்பாய்யா!!!தம்பிக்கு மோர் குடும்மா செல்வி

    ReplyDelete
  29. அப்புடியே நெஞ்ச தடவிக்கிட்டு படிச்சா தான் சண்முகசுந்தரம்.....

    ReplyDelete
  30. ஆமாம் அப்படியே கண்ணையும் சிமிட்டி,கன்னத்தையும் ஒதுக்கனும்,அப்போதான் ஃபினிஷ் இருக்கும்யா,சரியா?காஞ்சிவரம் படத்துல நம்ம களவாணி விமல் இருக்கார் பார்த்தீங்களா?அப்போ படம் பார்த்தப்போ ,கண்டுபிடிக்கலை,போனவாரம் பார்த்தப்போ தெரிஞ்சது,டைட்டில் கார்டில க்ரெடிட் சின்னவயசு ரங்கன் கதாபாத்திரத்துக்கு தான் கொடுத்துள்ளனர்.இவர் இளைஞனா ப்ரிட்டிஷ் ராணுவத்துல சேர்ந்து மலேசியாக்கு போறார்.பெரிய வயது ரங்கனுக்கு க்ரெடிட் இல்ல.

    அப்புறம் நம்ம பீலிசிவத்தோட முதல் படம் சிலநேரங்களில் சில மனிதர்கள்.
    அதுல ஸ்ரீகாந்தோட மகளுக்கு பாய்ஃப்ரெண்டா வர்ரார்.

    இதெல்லாம் சினிமா வாழ சில துணுக்ஸ்.

    ReplyDelete
  31. நீங்க ஒரு பதிவுலகின் பிலிம் நியுஸ் ஆனந்தன்...

    ReplyDelete
  32. கருத்திழந்தவன் கவிதை

    அபாரம் என்றால் அடி
    அருமை என்றால் உதை
    பின்னீட்டிங்க என்றால் குத்து
    சான்ஸே இல்லை என்றால் வெட்டு

    கனவிழந்தவன் போலவே கருத்திழந்தவன்
    இலை இளை வேறறியான்
    மனவெறு வெளி வரி
    பதிந்து கனவு விதையிட்டான்

    :))

    ReplyDelete
  33. நண்பரே,

    என் மனதில் இது ஜான் பீய்ர் ஜெனெயின் படமாகவே பதிந்துவிட்டது. அவரின் படங்களை பார்க்கும் உங்களிற்கு அவரின் கதை சொல்லலின் நுட்பம் தெரிந்தே இருக்கும். பாத்திரங்களில் பொதிந்திருக்கும் அபத்தங்களைகூட அழகான விதத்தில் ரசிக்க செய்துவிடுவார். மனிதம் கரைந்த உணர்வுகளை அவர் பரிமாறும்விதம் சிறப்பாக இருக்கும். வண்ணக்கலவைகூட காட்சிகளில் வித்தியாசமாக இது யதார்த்தமா என சுரண்டுவது போலிருக்கும். சிறுவர்களின் கனவுகள் குறித்த உங்கள் வரிகளில் அறக்கோபம் தெரிகிறது. ஆனால் இந்த சமூகத்தில் வெற்றியை மட்டும்தானே கனவுகளாக கருதுகிறார்கள் :))

    ReplyDelete
  34. இனியும் நா கமெண்ட் போடனுமா ....,
    :((

    ReplyDelete
  35. //உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும்.



    Share//

    இத பத்தி எதுமே சொல்லலயே ...:)

    ReplyDelete
  36. // உங்கள் பதிவு நன்றாக இருந்தது செய்திகளை கீழே பதியவும் //

    இதெல்லாத்தையும் பிரபல பதிவர்களின் பதிவுகள்ள மட்டுமே நா பாத்திருக்கேன்.....எனக்கு இந்த கமெண்டை போட்டிருக்காங்கன்னா...ஏதோ உள்நாட்டு சதி...

    //கீழே பதியவும்// இது என்ன அரக்கீரையா...கீழ பதிய..வேற வார்த்தைய தேடக் கூடாதா...எல்லாத்துலையும் இதயே போடுறீங்களே......

    அதுல பாத்தீங்கன்னா...எல்லா பொம்பள பேருலயே இந்த கமெண்ட்கள போடுறது....முன்னாடி - ஸ்வேதா, இப்ப - சரோ....உடனே நம்பெல்லாம் அவுங்க பேர பாத்திட்டு அந்த சைட்ல மெம்பர் ஆயிருவோம்ன்னு இதுக கண்டுபிடிப்பு.....

    ReplyDelete
  37. @கனவுகளின் காதலன்..
    நீங்க டெம்ப்ளேட் கமெண்ட்கூட போடுங்க..பரவாயில்ல...ஆனா ஒரு கவித எழுதியிருக்கீங்க பாருங்க..ஒவ்வொறு வார்த்தையும் ஒரு சயனைட் குப்பி மாதிரி நெஞ்சை அறுக்குது...


    // சிறுவர்களின் கனவுகள் குறித்த உங்கள் வரிகளில் அறக்கோபம் தெரிகிறது//

    அட நீங்க வேறண்ணே......அப்துல்கலாம் = கனவு, கனவு = அப்துல்கலாம் இப்புடி பேசுற பல பேர பாத்திட்டேன்..அதையும் தாண்டிய பல கனவுகள் இருப்பத தெரிஞ்சுகிட்டே பேசாம இருக்காங்களா...இல்ல.....ஒண்ணும் தெரியாதான்னு புரியல....

    //ஆனால் இந்த சமூகத்தில் வெற்றியை மட்டும்தானே கனவுகளாக கருதுகிறார்கள் //
    நல்லா காசு பணம் சம்பாரிப்பது ஒன்றே வெற்றியின் அடையாளம்ன்னு ஆகிப்போச்சே என்ன பண்றது...

    ReplyDelete
  38. @αηαη∂
    உங்க கருத்த நீங்க தராளமா சொல்லலாம்..அதுல ஒரு பிரச்சனையும் இல்ல...மேற்கூறிய விஷயங்கள் அனைத்தும் டெம்ப்ளேட் பின்னூட்டகாரர்களுக்கு மட்டுமே.......

    ReplyDelete
  39. நேற்று ப்ரகாஷ் ஜா இயக்கிய அபஹரன் படம் பார்த்தேன்[2005],முஸ்லீம் எதிர்ப்பு படமா தெரிஞ்சது,செம கடுப்பானது,இப்புடியாடா மட்டம் தட்டி எடுப்பான்னு வெறுப்பாயிடுச்சு,ஒரு முஸ்லீம் எம்பி த்ப்ரேஸ் அஸ்லாம் தலைமையில் அத்தனை ஆட்கடத்தல் ,கொலைகள் திகட்ட திகட்ட செய்கின்றனர்,வெறுத்து போய்விட்டேன்,கமலே தேவலைன்னு தோணியது, அதன்பின்னர் அவுட்லுக் விமசனம் படிச்சால் தான் புரியுது,அந்த நானா படேகர் கேரக்டர் நிஜ கேரக்டராம்,படத்தில் சாகும் அந்த கேரக்டர் , இப்போது ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கிறானாம் மொஹம்மது சஹாபுதீன் என்பது அவன் பெயர்.மக்களுக்கு மறதி ஜாஸ்திய்யா,நல்லவேளை இதுபோல படங்கள் எடுத்தால் தான் மக்கள் அந்த திருட்டு @@@@@பசங்களை ஆயுளுக்கும் மறக்க மாட்டார்கள் என தோன்றுகிறது.
    இவனை பற்றி அறிய
    http://im.in.com/connect/images/profile/b_profile3/Mohammad_Shahabuddin_300.jpg
    http://www.outlookindia.com/article.aspx?229574
    http://en.wikipedia.org/wiki/Mohammad_Shahabuddin

    ReplyDelete
  40. ரொம்பவே வித்தியாசமான படம்தான் கொழந்த.. (நாமதான் வெரைட்டியா பார்த்து பழகினதில்லையே!!)
    இந்த பதிவு படிக்கற எனக்கு கொஞ்சம் ஸ்பெஷலா இருக்கு.. ஒரு கொழந்தையே குழந்தை மனசைப் பத்தி விவரிக்குதே.. அதான்!!

    ReplyDelete
  41. ஆமாம்.. தங்களின் கடைசி கனவு ஏதாவது ஒரு Nightmare-ஆ??

    ReplyDelete
  42. // ஒரு கொழந்தையே
    குழந்தை மனசைப் பத்தி
    விவரிக்குதே// அடடே....ஆச்சர்யக்குறி...

    // தங்களின் கடைசி கனவு ஏதாவது ஒரு Nightmare-ஆ // கிட்டத்தட்ட அப்புடித்தான்....ஒருத்தர் மியூசிக்க பத்தி தனியா பதிவெழுத ஆரம்பிச்சிருக்கார்....அத படிச்சதிலயிருந்து ஒரே பயங்கர கனவா வருது......அந்த லிங்க்க உங்களுக்கு வேணா அனுப்பவா.....

    ReplyDelete
  43. @கீதப்ப்ரியன்
    Apaharan குறித்து கேள்விப்பட்டிருந்தாலும் நீங்க எழுதிதான் இன்ன கதைனு தெரியுது.....(இது டெம்ப்ளேட் அல்ல..)அஜய் தேவ்கன் எப்ப பாத்தாலும் ஒரே மாதிரி முகத்த வெச்சிருப்பார்னு தான் பாக்கவா வேணாமான்னு ரோசனை....

    ReplyDelete
  44. //கனவிழந்தவன் போலவே கருத்திழந்தவன்
    இலை இளை வேறறியான்
    மனவெறு வெளி வரி
    பதிந்து கனவு விதையிட்டான்
    //

    உண்மைய சொல்லுங்க. நீங்க கோணங்கி தானே ? காதலரோட ஐடிய திருடி, இப்புடி கமெண்டு போட்ருக்கீங்க. கவிதைலயும் இறங்கிட்டீங்களே கோணங்கி . . இனி எத்தனை பேரு பாயைப் பிரான்டப் போறங்களோ தெரியலையே . . லாலே லாலலி லாலா . . (கோரஸ்: ஓஓஓ )

    ReplyDelete
  45. //தம்பிக்கு மோர் குடும்மா செல்வி//
    ஹீ ஹீ :-) செம்ம காமெடி :-)

    ReplyDelete
  46. //ஒருத்தர் மியூசிக்க பத்தி தனியா பதிவெழுத ஆரம்பிச்சிருக்கார்// - யாரந்த ஜீனியஸ்??
    //அத படிச்சதிலயிருந்து ஒரே பயங்கர கனவா வருது// - எனக்கும்தான் !!
    //அந்த லிங்க்க உங்களுக்கு வேணா அனுப்பவா// - ஒரே தூக்கமா வருது.. Sweet Nightmares!!

    ReplyDelete
  47. இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பதிவில் நானும் கமெண்ட் போடுவதில் பெருமை கொள்கிறேன்

    ReplyDelete
  48. இருங்க படிச்சிட்டு வாரேன்

    ReplyDelete
  49. பதட்டப் படாதீங்க நேற்றே படித்துவிட்டேன்,

    ReplyDelete
  50. இந்தப் பதிவைப் பற்றி சொல்லனும்னா

    ReplyDelete
  51. அதுக்குமுன்னாடி

    ReplyDelete
  52. கொஞ்சம் லேட்டா வந்துட்டேனோ

    ReplyDelete
  53. //உண்மைய சொல்லுங்க. நீங்க கோணங்கி தானே// :)) அவர் நாவல்களை உங்களிற்கு பரிசாக வழங்க பரிந்துரை செய்கிறேன் நண்பர் கருந்தேள் அவர்களே.

    ReplyDelete