Wednesday, November 24, 2010

ஒரு கலக்கல் காமெடி , ஒரு அட்டகாசமான திரில்லர் மற்றும் இரண்டு மரண மொக்கைகள்..

__________________நா இனிமேல் கையை ஆட்டிகிட்டி போஸ் கொடுக்க மாட்டேன் – ஓபாமா
__________________நா இனிமேல் சட்டை இல்லாம போஸ் கொடுக்க மாட்டேன் – புடின்
__________________நா இனிமேல் எதுவும் பண்ண மாட்டேன் – பெர்லூஸ்கோனி
__________________நா இனிமேல் தான் ஏதாவது பண்ணுவேன் – மன்மோகன் சிங்
__________________நா குஷ்பு கூட இனி பேச மாட்டேன். மானாட மயிலாட பார்க்க மாட்டேன் – கலைஞர்
__________________நா எங்க வீட்டு டெலிபோன் பில்ல கட்ட மாட்டேன் – ஆ.ராசா
__________________ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா – அழகிரி
__________________நா கருந்தேள் பேரில் பதிவு எதையும் போட மாட்டேன் – குருணாநிதி
__________________ணா...சாகும் வரை என் படங்களை நானே தொடர்ந்து பார்க்கும் போராட்டத்தை தொடங்குவேன் – விஜய்.
__________________நா இனி நடிக்க மாட்டேன் – சுந்தர்.C (ஓ....அப்புடியே நடிச்சிட்டாலும்.....)
__________________நா என் அடுத்த படத்தில் நடிக்க மாட்டேன். டெனிம் மோகன ஹீரோவாவும் என்னை யாருன்னு தெரியாதுனு சொன்ன சு.மோகனை வில்லனாகவும் நடிக்க வெச்சிட்டு நா ஒதுங்கிக்க போறேன் – சாம் ஆண்டர்சன் (தல..அவுங்களுக்கு நீங்களே பரவாயில்லை)
__________________ஆபிரகாம் லிங்கனை கொன்னவனுக்கும் சோனியா குடும்பத்தினருக்கும் உள்ள தொடர்பு குறித்து என்னிடம் உள்ள ஆதாரங்களை வெளியிட மாட்டேன் – சுப்பிரமணிய சுவாமி
__________________சும்மா இருத்தலே சுகமன்றி வேறோன்றும் அறியேன் பராபரமே - நித்தியானந்தர்

மேலே இருக்கும் கோட்டுல என்ன வரும்? அதாவது கொழந்த சீக்கிரம் பதிவு போடா விட்டால் – னு வரும்...இப்ப படிச்சு பாருங்க.கரெக்ட்டா வருதா...நா பதிவு போடாட்டி உலகளவுல கொந்தளிப்பு இருக்கும்...குறைந்தபட்சம் பதிவுலகத்திலயாவது ஏதாவது இருக்கும்னு பார்த்தா...ம்கும்..ஒன்னும் நடக்கல..அதான் பூன கண்ண மூடுனா உலகமே இருண்டிருமாம்..சரிதான்..ரைட்..முதல் paraவை எப்படியோ தேத்தியாச்சு.

கலக்கல் காமெடி: Naked Gun Series
  • From the Files of Police Squad!
  • The Smell of Fear
  • The Final Insult
டிஸ்கி: படத்தின் தலைப்பை பார்த்திட்டு ஏதோ வேற மாதிரி படத்தை எதிர்பார்த்து ஏமாந்தீங்கன்னா நான் பொறுப்பில்லை.

Spoof Parody வகைப் படங்கள் உங்களுக்கு பிடிக்குமா?(எனக்கென்னவோ பல தமிழ் படங்களே Spoof  மாதிரிதான் தெரியுது). Spoof படங்கள் குறித்து இதில் எழுத இணையத்தில் தேடியபோது பல ஆச்சரியமான விஷயங்கள் தெரியவந்தது. முதல்முதலாக பரவலாக அறியப்பட்ட Spoof படம் எப்ப வந்திருக்கும்னு நினைக்குறீங்க – 1922.படம்:Mud & Sand. அந்த காலகட்டத்தில் வெளிவந்த Blood & Sand படத்தின் Spoofவாம் அது. அதை தொடர்ந்து Dr. Pyckle and Mr. Pryde - 1925. டைட்டில பார்த்த உடன் தெரிந்திருக்கும் - Dr. Jekyll and Mr. Hyde படத்தின் Spoof இதுன்னு. 1940களில் ஒரு உலக புகழ்பெற்ற ஆளிடமிருந்து வந்த Spoof படம் குறித்து ஏற்கனவே நான் எழுதியுள்ளேன்.

அப்படியே கொஞ்சகொஞ்சமாக வளர்ந்துவந்த Spoof படங்களுக்கு தனி பாணியை ஏற்படுத்தியவர் – Mel Brooks. இவரது History of the World படத்தை நாம் பலரும் பார்த்திருப்போம். பின்னி பெடலேடுத்திருப்பார். அவரை தொடர்ந்து பிரிட்டைனை சேர்ந்த Monty Python குழுவினரும் கலக்க ஆரம்பித்தனர்(இந்த பேரை மட்டும் எங்கேயோ கேட்டிருக்கேனே தவிர அவர்களது எந்த படத்தையும் நாடகத்தையும் பார்த்ததில்லை).இதற்கு அடுத்ததாக வந்தவர்கள்தான் David Zucker, Jim Abrahams, and Jerry Zucker கூட்டணி. அவர்கள் எடுத்த Airplanes, Naked Gun Series படங்கள் இன்றளவும் சிறந்த Spoof படங்களாக கொண்டாடப்படுகின்றன. இந்த Naked Gun Series படங்களில் நடித்து புகழ் பெற்றவர் - லெஸ்லி நீல்சன்.


மனுசன் கொஞ்சம் கூட அலட்டிக்காம காமெடி பண்ணுவார். பார்த்த உடனே யாராயிருந்தாலும் சிரிப்பது நிச்சயம். நம்ம மிர்ச்சி சிவாவுக்கெல்லாம் காமெடில தாத்தா இவர்.இவரது சேட்டைகளை ரசிக்காத ஆளே இருக்க முடியாது. முதல் பாகத்தில Clint Eastwood Dirty Harry படத்தில் ஒரு புகழ் பெற்ற டயலாக் வரும்
[Harry Callahan - Clint Eastwood
Harry Callahan: Well, when an adult male is chasing a female with intent to commit rape, I shoot the bastard. That's my policy.
The Mayor: Intent? How did you establish that?
Harry Callahan:  When a naked man is chasing a woman through an alley with a butcher's knife and a hard-on, I figure he isn't out collecting for the Red Cross!
The Mayor: He's got a point.

அத இந்த படத்தில் இவர் சொல்லுவார் பாருங்க......

Frank:  When I see five weirdos stabbing a guy in broad daylight, I shoot the bastards. That's my policy.
The Mayor That was a Shakespeare In The Park production, you moron! You killed five actors! Good ones!

இந்த படம் மூன்று பாகங்களா வெளிவந்தது. முடிஞ்சா தொடர்ந்து மூன்று பாகத்தையும் பாருங்க. இந்தப் படத்தின் மூன்றாம் பாகம் குறித்து நமது பதிவுலகத்தின் மூத்த பதிவர்களில் ஒருவர் – பல ஆண்டுகளாக பதிவுலகில் இயங்கிவரும் – உங்களைப் போன்ற இளைஞர்களுக்கும் என்னைப் போன்ற சிறுவர்களுக்கும் வழிகாட்டியாய் திகழும் - பதிவுலக பூந்தோட்டத்தின் காவல்காரன்புலன் விசாரணை புலி – பதிவுலகத்து வல்லரசு – தங்கத்திலும் சொக்கத் தங்கம்மரியாதைக்குரிய – எங்கள் அண்ணாகேப்டன் கருந்தேள் எழுதியுள்ளதை படித்து கதை குறித்தும் படம் குறித்தும் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
    
அட்டகாசமான திரில்லர்:

Seven, Fight Club – போன்ற செமையான படங்களின் இயக்குனர் - எனக்கும் உங்களுக்கும் பிடித்த David Fincherன் இன்னொரு அட்டகாசமான திரில்லர் தான் Zodiac திரைப்படம். ஒரு சைக்கோ கொலையாளி – சும்மா கொலை மட்டும் பண்ணாம ஒவ்வொரு தடவையும் சின்ன சின்ன க்ளுவை பத்திரிக்கைகளுக்கு அனுப்புறான். அது எப்படிப்பட்ட க்ளுனா Zodiac letters அதாவது Special charactersன்னு சொல்லுவோம்ல, அதான், அந்த வகைல இருக்கும். அவனுக்கும் ஒரு பத்திரிக்கையாளனுக்கும் நடக்கும் ஆட்டம் தான் கதை. போஸ்டர் பார்த்தாலே பார்க்கணும்ன்னு தோணனும். சில பேருக்கு இந்தப் படம் பிடிக்காம கூட இருக்கலாம். எனக்கு ரொம்பவும் பிடித்தது. இது குறித்து தனியாவே ஒரு பதிவு எழுத நினைத்திருப்பதால் இப்போதைக்கு இந்த ரெண்டு போஸ்டரோட அப்பீட் ஆகிக்கிறேன். திரில்லர் பிரியர்கள் இந்தப் படத்தை இதுவரைக்கும் பார்க்கலைனா கட்டாயம் உடனே பாருங்க.(ஆனா ஒரே பேருல ரெண்டு படம் இருக்கு - ஜாக்கிரதை). 


மேற்கொண்டு இந்தப் படத்தை பற்றி விவரமறிய தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
2, ஈபிள் டவர் அருகில், பாரிஸ்,
பிரான்ஸ்.

போன்:  ஏக் சூன்ய சூன்ய சூன்ய தோ சார் ஏக்.........

முதல் மொக்கை:
இது ஒரு தமிழ் படம்...அதோட நிறுத்திகிட்டு உங்க ஊகத்திற்க்கே விட்டு விடுகிறேன். என்னால சமாளிக்க முடியாதுப்பா....

ரெண்டாவது மரண மொக்கை:
இவ்வளவு நேரமா படிச்சும் அது என்னனு தெரியலைனா உங்கள மாதிரி பச்ச மண்ணுக்கு இந்த ரத்த பூமில என்ன வேல...

பி-கு: இது போன பதிவுக்கு முன்னாடியே எழுதியது. அதான் போன போஸ்ட்லயே ஒரு மொக்க பதிவுன்னு எச்சரிச்சிருந்தேனே...அப்பறமும் ஏன் படிச்சீங்க...அது உங்க தப்பு..மேலும் நானும் எத்தன நாள் தான் சுவாரசியமாவே எழுதுறது (எங்க ஓடுறீங்க), என்னாலயும் மொக்கையா எழுத முடியும்ன்னு நிரூபிக்கவே இது...                      
Facebookers..

20 comments :

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. இதையும் இந்த ராத்திரில படிக்கிறீங்களே..

    அங்கிள்....நீங்க..நல்லவரா...கெட்டவரா

    ReplyDelete
  3. இந்த மாதிரி ஏதாவது பதிவு வரும்னு தெரிஞ்சோ என்னவோ அந்த 61-வது மனுசன் ஓடிட்டாருன்னு நினைக்கிறேன்.

    கொடுத்து வச்ச மவராசன்...

    ReplyDelete
  4. //இதையும் இந்த ராத்திரில படிக்கிறீங்களே..//

    படிச்சதுக்கு அப்புறம்தானயா தெரியும் மொக்கையா இல்லையான்னு...

    ReplyDelete
  5. நா தூங்கப் போறேன்..என் பதிவை படிச்சு கொந்தளிச்ச உள்ளங்களுக்கு நாளை பதிலளிக்கிறேன்...

    ReplyDelete
  6. //இந்த மாதிரி ஏதாவது பதிவு வரும்னு தெரிஞ்சோ என்னவோ அந்த 61-வது மனுசன் ஓடிட்டாருன்னு நினைக்கிறேன்.

    கொடுத்து வச்ச மவராசன்//
    அதான் ஒரு தடவ சொல்லியாச்சே...ஏன்.....

    குத்துங்க எசமான் குத்துங்க...இந்த கவிஞர்களே (சொல்லிக்கிறாரு) இப்படித்தான்

    ReplyDelete
  7. இந்த பதிவு எழுதிய கொழந்தைக்கு நம..நம..நமீதாவின் ஏராளமான கவர்ச்சி போட்டாக்களை பரிசாக வழங்குகிறேன்.

    ReplyDelete
  8. zodiac படம் பிடிக்காத சிலரில் ஒருவன் :)

    ReplyDelete
  9. எந்த கொலையையும் காட்ட மாட்டார்கள் அந்த படத்தில்.. படம் உண்மை சம்பவம் என்று கேள்விப்பட்டேன்.. I liked Ruffalo's performance a lot..

    ReplyDelete
  10. leslie nielsen எனக்கு பிடிக்கும், டிராகுலா படத்தில் நல்லா காமெடி பண்ணியிருப்பார்!

    வெல்கம் பேக் கொழந்த!

    ReplyDelete
  11. நண்பரே,

    ஈபிள் கோபுரம் அருகில் அதிக நேரம் நின்றால், குண்டு வைக்கும் க்ருப் ஆள் என அமுக்கிவிடுவார்கள் :) சோடியாக் நல்லதொரு படைப்பு. லெஸ்லியின் முகபாவனைகளே போதுமே படத்தை ரசிக்க.

    ReplyDelete
  12. @உலக சினிமா ரசிகன்
    //நம..நம..நமீதாவின் ஏராளமான கவர்ச்சி போட்டாக்களை பரிசாக வழங்குகிறேன்//

    கைவசம் நிறைய்ய்யய......ஸ்டாக் இருக்கும் போல தெரியுது...


    @சென்ஷி
    தல...வருகைக்கு நன்றி..
    -இப்படிக்கு: zodiac படம் பிடித்த பல பேரில் ஒருவன்

    @Prasanna
    உண்மைச் சம்பவங்களை லேசா பட்டி பார்த்து டிங்கரிங் பண்ணி எடுத்ததா நானும் கூட படித்திருக்கிறேன்..கேமெரா செமையா இருந்திச்சில்ல.....

    நண்பரே & நண்பர்களே...
    முடிஞ்சா இதையும் படிங்க...படத்தையும் உண்மைச் சம்பவங்களையும் கம்பேர் பண்ணி அலசி எடுத்திருக்காங்க
    http://www.zodiackillerfacts.com/movie.htm


    @எஸ்.கே
    நீல்சன் யாருக்குத்தான் பிடிக்காது நண்பா...
    ஆமா..நா உப்பு சத்தியாகிரகத்தில கலந்துகிட்டு ஜெயிலுக்கு போயிட்டு வெளிய இப்பதான் வரேன்...இதுல வெல்கம் பேக்..(ஏதோ உள்குத்து தெரியுதே...)


    @ கனவுகளின் காதலன்
    ணா..படத்த பத்தி ஏதாவது நச்சுன்னு சொல்லுவீங்கன்னு எதிர்பார்த்தா..சப்புன்னு முடிச்சிட்டீங்களே

    ReplyDelete
  13. இதுல குறிப்பிட்டு இருக்குற சாம் ஆண்டர்சன் நீங்க தானே..................... zodiac பார்க்க வேண்டும்

    ReplyDelete
  14. மொக்கை மொக்கை என்று கொஞ்சம் மொக்கை தான் போட்டு விட்டீர்களோ

    ReplyDelete
  15. @Denim
    உங்களுக்கு இங்கிதம் என்றால் என்னவென்று தெரியாதா???? இதை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை...

    ReplyDelete
  16. பின்ன...chatல் சொன்ன அந்த உண்மையை - நாந்தான் சாம்@saamy - என்பதை இப்படி பொதுவில் போட்டு உடைத்தால்...எல்லாரும் ஆட்டோகிராப் கேட்க ஆரம்பித்தால்...நா எங்க போறது...ஏற்கனவே கமிட் ஆனா படங்களை முடிக்க முடியல...இப்ப உங்களால புதுசா நிறைய வாய்ப்பு வரப்போகுது. ஒரே சமயத்தில் பல படங்களில் நடிக்கும் போது ஆக்டிங்ல கவனம் செலுத்துவது கஷ்டமாயிருக்கும்

    ReplyDelete
  17. Naked Gun சீரியஸில் நடித்த நடிகர், லெஸ்லி நீல்ஸன் இன்று காலமாகி விட்டார் கொழந்தை. உங்கள் பதிவை படித்துவிட்டு ந்யூஸ் பார்த்தால் இப்படி ஒரு செய்தி... :(

    ReplyDelete
  18. நண்பா எப்படி இருக்கீங்க? நலமா!

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

    ReplyDelete
  19. www.classiindia.com Best Free Classifieds Websites
    Indian No 1 Free Classified website www.classiindia.com
    No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
    Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

    ReplyDelete