Wednesday, November 17, 2010

ரஹ்மானின் மற்றுமொரு அற்புதம்

ரொம்ப நாள் கழித்து எழுதுவதால் ஒரு மொக்க பதிவ தான் யோசிச்சு வெச்சிருந்தேன். ஆனா எப்ப இந்த பாடல்களை கேட்டேனோ அப்ப இருந்து இதை யாரிடமாவது பகிர்ந்து கொள்ளாட்டி தலையே வெடிச்சிரும் போல இருக்கு. எனக்கு ஏன் ரகுமான் பிடிக்கும் என்பது குறித்தும் அவரது இசையில் – ஏதோ என் அறிவிற்கு எட்டிய வரை - தெரியும் உலகளாவிய தன்மை குறித்தும் தனியே எழுத வேண்டும் என்று ரொம்ப நாளாக ஒரு எண்ணம். அதுக்கு ஒரு முன்னோட்டமா இதை ஆரம்பிக்கிறேன்.


இப்ப உங்க முன்னாடி ரெண்டு வாய்ப்பு இருக்கு. ஒண்ணு - வரிசைல நின்னு கும்பலா ஒருத்தர் முதுகு நம்ம முகத்தில உரச ஒரு 5 நிமிஷம் குற்றாலத்தில குளிக்கிறது. இன்னொன்னு – ரொம்ப தூரமா, கடினமான நடை தேவைப்படும், அதேசமயத்தில சுவாரசியம் நிறைந்த பாதையில போனா மட்டுமே சென்று குளிக்கக் கூடிய இன்னொரு அருவி இருப்பது தெரிய வருது. ரெண்டுல எதை நீங்க தேர்ந்தேடுப்பீங்க?. மாமூலான முதல் வகைனா இந்தப் இசைத் தொகுப்பு உங்களுக்கு பிடிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு. ரெண்டாவது வகையறாக்களுக்காகவே இந்த ஆல்பம் என்று கூட சொல்லலாம்.
                                        
தனித்தனியா ஒவ்வொரு பாடலா பிரிச்சு சொல்லக் கூடிய அளவிற்கு எனக்கு இசை அறிவோ பொறுமையோ கிடையாது.அதுனால மொத்தமா சொல்றேன். மத்த எல்லா இசை அமைப்பாளர்களை விட ரஹ்மான் எனக்கு ரொம்ப பிடித்துப் போக இருக்கும் பல காரணங்களில் ஒன்று – அவர் எந்த இசையையும் ஒதுக்குவதில்லை. அதற்கு சரியான மற்றுமொரு உதாரணம் இந்தத் தொகுப்பு. ஏன்..நீங்க தாள் ஹிந்தி படத்தின் தீம் இசையை கேட்டிருப்பீங்க. அதுல தண்ணி விழுவதை கூட சிவமணியும் ரகுமானும் சேர்ந்து பின்னி பெடலேடுத்திருப்பாங்க. இத எதுக்கு சொல்லுறேன்னா இசை அவர்ட இருக்கு இவர்ட இருக்கு இங்கிருக்கு அங்கிருக்குனு காமெடிக்கு சொன்னாலும் அதுதான் நிஜம். அதை முழுமையா எனக்கு புரிய வெச்சதுல பெரும் பங்கு ரகுமானையே சாரும்.



127 HOURS - Track Listing:
1. Never Hear Surf Music Again - Free Blood
2. The Canyon - A.R. Rahman
3. Liberation Begins - A.R. Rahman
4. Touch of the Sun - A.R. Rahman
5. Lovely Day - Bill Withers
6. Chopin: Noctrne No. 2 in E flat, Op. 9 No. 2
7. Ca Plane Pour Moi - Plastic Bertrand
8. Liberation In A Dream - A.R. Rahman
9. If You Love Me (Really Love Me) - Esther Phillips
10. Acid Darbari - A.R. Rahman
11. R.I.P. - A.R. Rahman
12. Liberation - A.R. Rahman
13. Festival - Sigur Ros
14. If I Rise - Dido / A.R. Rahman


இந்த ஆல்பத்தில் இருக்கும் Acid Darbaariல வரும் குரல் அது மாதிரியான ஒரு பெரிய அனுபவமா கேக்குறவங்களுக்கு இருக்கும். உலகப் புகழ் பெற்ற உலகின் தலைசிறந்த குரல்களில் ஒன்று என்று பெரும்பாலானவர்கள் சொல்லும் பிரெஞ்சுன் Edith Piafன் ஒரு version – மற்றொரு ஆங்கில பாடகி பாடியதுதான் If You Love Me (Really Love Me). சத்தியமா தூங்கிருவீங்க. அட்டகாசம். இன்னொரு ரகளை - Ca Plane Pour Moi. இந்தப் பாடல் கூட 1977லேயே வந்ததாம். அதை ரகுமானின் Orchestrationல கேட்கும் போது என்னவொரு துள்ளல்,உற்சாகம். வாய்ப்பேயில்லை.Liberation Begins, Liberation in a dream, Liberation – படத்தோட கதை தெரிந்தவர்களுக்கு இதன் அர்த்தம ரொம்ப சுலபமா புரிஞ்சிடும். Johnny Gaddaar ஹிந்தி படம் உங்களில் பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பீங்கனு நினைக்கிறேன். அந்த படத்தின் இசை எனக்கு ரொம்ப பிடிக்கும்(Shankar-Ehsan-Loy).அதில் வரும் ஒரு அட்டகாசமான பாடல் Move your body. அதைப் பாடிய Hard Kaurரை ரஹ்மான் R.I.P பாடலில் எப்படி பயன்படுத்தியிருக்கிறார் என்று நீங்களே கேளுங்கள்.மற்றுமொரு புகழ் பெற்ற 70’s R & B வகைப் பாடல் Lovely Day by Bill Withers. இன்னொரு அட்டகாசம் (இந்த தகவல்கள் நெட்டில் தேடிய போது கிடைத்தவைகள்). ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த Sigur Roosன் இசையே Festival. நீங்க Eminemன் Stan என்ற செமத்தியான பாடலை நிச்சயமாக கேட்டிருப்பபீர்கள். அதில் introintroவாக வரும் குரலுக்கு சொந்தக்காரர் – புகழ் பெற்ற பாடகி Dido. அவரோட நம்ம ஆளு இணைந்து பாடி இருக்கும் பாடல் If i rise. இந்த வருடம் ஆஸ்காருக்கு இந்தப் பாடல் தேர்ந்தேடுக்கப்டும் என்று நெட்டில் பேச்சு அடிபடுகிறது.இன்னொரு பொக்கிஷம் Chopin: Nocturne No. 2 in E flat, Op. 9 No. 2. Classical வகை இசை.பாருங்க...ஒரு ஆல்பத்தில் எத்தனை வகை இசை.. எத்தனை நாட்டின் இசை என்று. அதான் ரஹ்மான். 


கடைசியா ஒரு பாடலை சொல்றேன். அதுதான் ஆல்பத்தின் முதல் பாடல் - Never Hear Surf Music Again – Free blood குழுவினரின் பாடல். ட்ரைலரில் கூட இதான் வரும். ஒருமாதிரியான psychelidic வகை பாடல். சத்தியமா மிரண்டே போய்ட்டேன். இது வேற குழுவின் பாடல் என்றாலும் கூட ரகுமானின் இசைச் சேர்ப்பு மிரட்டுகிறது. இதன் ஒரிஜினலே இப்படித்தானா என்று தெரியவில்லை.ஆக மொத்தம் டெல்லி-6க்கு அப்பறம் எனக்கு ரொம்ப பிடித்த ரகுமானின் இசைத் தொகுப்பு. Haunting music.அப்படியே எங்கேயோ இழுத்திட்டு போயிருது. அவசரமா எழுதுவதால் சரியாக சொல்ல நினைத்தவைகளை சொல்ல முடியவில்லை. தயவுசெய்து யாரும் மிஸ் பண்ணக் கூடாத - பண்ண முடியாத இசைத் தொகுப்பு. உங்களது எல்லாவித ரசனையும் சோதித்துப் பார்க்கும். அதற்கு சரியான தீனியும் உண்டு என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
Facebookers..

24 comments :

  1. //மீ தி 1st//

    ஜஸ்டு மிஸ்ஸு...

    ReplyDelete
  2. //அதேசமயத்தில சுவாரசியம் நிறைந்த பாதையில போனா மட்டுமே சென்று குளிக்கக் கூடிய இன்னொரு அருவி இருப்பது தெரிய வருது.//


    நான் கண்டிப்பா இந்த வகைதான்,

    ReplyDelete
  3. 127 hours படம் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன்..... பாடல் இன்னும் கேட்டகவில்லை..... கேட்டுவிடுகின்றேன்....Danny Boyle புண்ணியத்தில் நம்ம தலைக்கு இன்னொரு ஆஸ்கார் கிடைத்தாலும் கிடைக்கும்

    ReplyDelete
  4. இந்த படம் இங்கே வெளியாகாதது கொஞ்சம் வருத்தமே

    ReplyDelete
  5. நண்பரே,

    அறிமுகத்திற்கு நன்றி. கண்டிபாக கேட்டு விடுகிறேன்.

    ReplyDelete
  6. @Denim mohan...
    என்ன தல...கமெண்ட்கள் பழைய மோகன் மாதிரி இல்லையே.....

    @சு.மோகன்.
    பின்னுட்டத்திற்குநன்றி.

    @கனவுகளின் காதலன்.
    தல...Edith piaf பற்றி உங்ககிட்டதான் கேக்கலாம்னு இருந்தேன்..தெரிந்தவைகளை சொல்லவும்

    ReplyDelete
  7. அவரை பற்றி நினைத்தாலே ஒரு பெருமை, மகிழ்ச்சி.. நான் இப்போ தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.. Good intro..

    ReplyDelete
  8. அவரை பற்றி நினைத்தாலே ஒரு பெருமை, மகிழ்ச்சி.. நான் இப்போ தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.. Good intro..

    ReplyDelete
  9. @கொழந்த
    இதோ உடனே கேட்கிறேன்
    எனக்கு ராஜாவும் ரஹ்மானும் இரு கண்கள்

    ReplyDelete
  10. @Prasanna..
    நண்பா...கேட்டிட்டு கட்டாயம் சொல்லுங்க..
    //அவரை பற்றி நினைத்தாலே ஒரு பெருமை, மகிழ்ச்சி.//
    க.க.க.போ...

    ReplyDelete
  11. @geethappriyan..
    உங்ககிட்ட பேசுவேன்னு சத்தியமா எதிர்பார்க்கவில்லை..

    பாடல்களை கேட்டுப்பாருங்க..அப்பறம் சொல்லுங்க

    ReplyDelete
  12. இப்போ தான் கேக்க ஆர்ம்பிச்சேன்
    ட்ரெய்லர் பார்த்தேன்,செம
    எனக்கு இதுபோல துளைக்குள்ள மாட்டுறது,சுரங்கத்துக்குள்ள மாட்டுறது,குழாய்க்குள்ள மாட்டுறது எல்லாமே நினைத்து கூட பார்க்க தைரியம் கிடையாது,படம் நிச்சயம் பயத்தோடயே பார்ப்பேன்.

    ReplyDelete
  13. //என்ன தல...கமெண்ட்கள் பழைய மோகன் மாதிரி இல்லையே.....//

    எனக்கு எந்த வித்தியாசமும் தெரியலையே,என்ன வித்தியாசத்தைக் கண்டீர்

    ReplyDelete
  14. நண்பா, பாடல்களை சில பாடல்களை யூடியூபில் கேட்டேன் மிக நன்றாக இருந்தது, குறிப்பாக முதல் பாடல்.

    நல்ல அறிமுகம். நன்றி!

    ReplyDelete
  15. நண்பா,

    பாடல்கள் பலவும் எனக்குப் பிடித்திருந்தன. ஆனால்....

    //ஒரு ஆல்பத்தில் எத்தனை வகை இசை.. எத்தனை நாட்டின் இசை என்று. அதான் ரஹ்மான்//

    இசை மட்டும்தானா, பாடல்களும் மற்றவர்களுடையதா, தெரியவில்லையே :) (இதுவரை தன்னுடைய பாடல்களையே Remake செய்து கொண்டிருந்தவர், இப்போது மற்றவர்களுடைய பாடல்களை remake செய்யத் தொடங்கிவிட்டாரோ என்று தோன்றுகிறது)

    எனக்கென்னவோ அவர் தன்னுடைய originality-ஐ விட்டுவிட்டதாகவும், இசை அமைப்பாளர் என்பதைக் காட்டிலும், சிறந்த இசை நிபுணராக மாறி வருவதாகவும்தான் தோன்றுகிறது.

    ReplyDelete
  16. இது சீக்கிரமே கேட்பேன்...

    ஆனால், ரஹ்மானின் இசையைப் பற்றிப் பதிவு எழுதிய அதேசமயத்தில், தமிழகம் பெற்றெடுத்த தவப்புதல்வர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் தெய்வீக லலல்லா இசையைப் பற்றி எதுவுமே எழுதாமல் ஓரவஞ்சனை செய்யும் இந்தக் குழந்தையை முற்றிலும் கண்டிக்கிறோம். அவரது இசைக்கோர்ப்புகள் எம்மி வரை எம்பி எம்பிச் சென்றும், அங்கே இருந்த மக்கள், ‘அது வருது... எல்லாரும் ஓடுங்க’ என்று கூக்குரலிட்டு மறைந்தது ஏன்? எதற்காக? ராஜ்குமார் என்றால் இளக்காரமா?

    இதைக்குறித்துப் புலனாய்வு செய்து கொழந்தயை ஒரு பதிவு எழுதும்படி கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில், வரிசையாக அன்னாரது பாடல்களை எனது தளத்தில் பிளே லிஸ்ட்டாக வைத்து அவரது பெருமையை உலகெங்கும் பரப்புவேன்.

    ReplyDelete
  17. //கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
    @கொழந்த
    இதோ உடனே கேட்கிறேன்
    எனக்கு ராஜாவும் ரஹ்மானும் இரு கண்கள் //

    எனக்கு இரு காதுகள :))

    ஸ்லம்டாக் அப்புறம் டேனி பாயில் ஒரு எதிர்பார்ப்பை தூண்டயிருக்கிறார். கண்டிப்பாக பார்க்கவேண்டும்.

    ReplyDelete
  18. ஆங். கேட்க மறந்துட்டேன்..
    எப்படி இருக்கீங்க கொழந்த...ரொம்ப நாளைக்குப்புறம்..:) All is well?

    ReplyDelete
  19. @கீதப்ப்ரியன்...
    Nothing but claustrophobia..மெட்ராஸ்ல உள்ளவங்க நிலைமை கிட்டத்தட்ட இது மாதிரி இருக்குமோ...குறிப்பா மேன்சன் வாசிகள்...

    @denim
    சரிதான்..கொல்லிமலைல ஏதும் பார்க்கக் கூடாதாத பார்திட்டீங்களா....

    @சு.மோகன்
    தல...உங்ககிட்டதான் போன்லயே அளவலாவிட்டேன்னே...

    @எஸ்.கே
    நண்பா..யுடியுப் அந்த அளவு தரம் இல்லை..முடிஞ்சா 256kbps மேல உள்ள ரேட்டில் டவுன்லோட் செஞ்சு கேளுங்க..

    @கருந்தேள்....
    நான் கேக்கிறேன்...இது போல பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று...சாம் ஆண்டர்சன் தெரியாது...வீராசாமி பார்த்ததில்லை..பின் எங்கள் தங்கம் எஸ்.ஏ.ராஜ்குமார் பத்தி நீங்கள் பேசக் கூடாது..ஆமாம்

    @நாஞ்சில் பிரதாப்™
    என்ட உங்க மாதிரி pairரா சொல்லக் கூடிய சிறிய உறுப்பு வேற இல்லை..எனவே நானும் கண்கள் என்றே சொல்கிறேன்..ஆனா ரெண்டுமே ரகுமான்தான்..

    //எப்படி இருக்கீங்க கொழந்த...ரொம்ப நாளைக்குப்புறம்..:) All is well//

    நல்லாயிருக்கேன் நண்பரே..இப்பதான் வேலைக்கு சேர்ந்தேன்..ஒரு பத்து நாள் ஆச்சு..அதான் ப்ரேக்..

    ReplyDelete
  20. நண்பரே,

    La Vie en Rose படத்தின் மூலமாகவே நான் எடித் பிய்யாஃப் குறித்து அதிகம் அறிந்திருக்கிறேன். கண்டிப்பாக நீங்கள் அப்படத்தை பார்க்க வேண்டும். விக்கி சுட்டி கீழே.
    http://en.wikipedia.org/wiki/La_Vie_en_rose_(film)

    ReplyDelete
  21. நம்ம ஆன்ட்டி மரியன் கொடிலார்ட் நடிச்சதுதான....பார்க்கணும்...

    ReplyDelete
  22. கொழந்த
    உங்க பதிவு ஓவர்ரேட்டடாக இருக்கிறது,நான் இதை 320kbps [நல்ல கம்ப்ரெஷன்]தரவிறக்கி ஏர்ப்ஹோனில் தான் கேட்டேன்.ஆனால்,ஈர்க்கவில்லை,11+3 போனஸ் ட்ராக்குமே அப்படித்தான்.ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற தரத்தில் இருக்கும் இதை,டெல்லி6உடன் ஒப்பிட்டு,என் ம்ற்றும் என் நண்பர்கள் ஆவலையும் நேரத்தையும் கொஞ்சம் சாப்பிட்டீர்களே கொழந்த!!!நான் வேறூ இரண்டாவது முறையாக ஆஸ்கார் கிடைக்கும் என்றெல்லாம் நன்பர்களிடம் பகிர்ந்தேன்,இது ஹாண்டிங் ரகம் அல்ல.நான் சொலிகிறேன் ஹாண்டிங் ரகம் என்றால் எப்படி இருக்கும் என்று
    http://en.wikipedia.org/wiki/Warriors_of_Heaven_and_Earth
    15 ட்ராக்களை ஆங்கிலம்&ஹிந்தியில் தரவிறக்கி கேட்டுவிட்டு சொல்லுங்கள்.இது தான் ரஹ்மானின் ஹாண்டிங் மியூசிக்

    ReplyDelete