Thursday, October 14, 2010

Playing for Change - இசையால் உலகை இணைக்கும் முயற்சி...

One good thing about music, when it hits you, you feel no pain
- Bob Marley 

Playing For Change Foundation - உலகின் பல பகுதிகளில் இருந்து இசைக் கலைஞர்களை இணைக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. வெறும் இசை கலைஞர்களின் சங்கமிப்பாக மட்டுமில்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு குறிப்பாக வளர்ச்சியடையாத நாட்டிலுள்ள சிறுவர் சிறுமியருக்கு இசையைக் கற்றுத் தரும் நோக்கத்துடனும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவர்களது இந்த ரெண்டு வீடியோக்களையும் நான் ஏற்கனவே பார்த்திருந்தாலும்,பாப் மார்லியின் War No more Trouble பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்போது இந்த வீடியோக்கள் ஞாபகம் வரவே இதை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

War No more Trouble - பாப் மார்லியின் புகழ் பெற்ற மற்றுமொரு பாடல். இதன் வரிகளை அவர் எழுதாவிட்டாலும் இசைக் கோர்ப்பு உட்பட அனைத்து விஷயங்களிலும் அவரே பெரும்பங்கு ஆற்றியுள்ளார். ரொம்பவே அற்புதமான வரிகள்.Playing For Change அந்த பாடலின் அடிப்படையில் இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர். கண்டிப்பாக அனைவரும் பாருங்கள்.முடிந்தால் பாப் மார்லியின் பாடலை கேட்டுவிட்டு இதைக் கேட்கவும்.அவரின் War வீடியோவையும் பாருங்கள். அவரின் வீச்சை உணருவீர்கள். இந்த வீடியோவில் குறிப்பிடத்தக அம்சம் - அதில் பங்குபெறுபவர்களின் நாட்டை கவனியுங்கள்-Gnana,Congo போன்ற நாட்டை சேர்த்தவர்களே அதிகம்.U2 குழுவின் Bonoவும் இதில் உள்ளார்.

                            
Until the philosophy which holds one race
Superior and another inferior
Is finally and permanently discredited and abandoned
Everywhere is war, me say war

That until there is no longer first class
And second class citizens of any nation
Until the colour of a man's skin
Is of no more significance than the colour of his eyes
Me say war

That until the basic human rights are equally
Guaranteed to all, without regard to race
Dis a war

That until that day
The dream of lasting peace, world citizenship
Rule of international morality
Will remain in but a fleeting illusion
To be pursued, but never attained
Now everywhere is war, war

And until the ignoble and unhappy regimes
That hold our brothers in Angola, in Mozambique,
South Africa sub-human bondage
Have been toppled, utterly destroyed
Well, everywhere is war, me say war

War in the east, war in the west
War up north, war down south
War, war, rumours of war

And until that day, the African continent
Will not know peace, we Africans will fight
We find it necessary and we know we shall win
As we are confident in the victory

Of good over evil, good over evil, good over evil
Good over evil, good over evil, good over evil

பாடலை இங்கிருந்து டவுன்லோட் செய்யவும்



Stand by me - ரொம்பவும் நெகிழ்வான வீடியோ.இந்த பாடலை பாடுபவர் - Roger Ridley. Playing for Changeன் குழுவினர் சிறிய அளவில் இசை பரப்பும் முயற்சியில் இருந்த போது இவரின் பாடலை கேட்க நேர்ந்துள்ளது.அவரின் குரலில் இருந்த ஆன்மாவே தாங்கள் உலகவில் இந்த அமைப்பை தொடர உந்து சக்தியாக இருந்ததாக தங்கள் வலைத்தளத்தில் கூறியுள்ளனர். இசை எத்தனை பேரை இணைக்கிறது என்று இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  

  

பி.கு:
தயவுசெய்து வீடியோக்களை பார்த்துவிட்டு எப்படியிருந்து என்று பின்னூட்டமிடவும். எனக்கு Bob Dylan, John Lennon, Bob Marley போன்றவர்களைப் பற்றி தனித்தனியாக பதிவுகள் போட ரொம்பவே ஆசை. இருந்தாலும் ஒரு 3 வருடமாகத்தான் இவர்களின் இவர்களின் பாடல்களை அதிகளவில் கேட்க ஆரம்பித்திருப்பதால், இன்னும் நிறைய கேட்டுவிட்டு அப்பறம் எழுதலாம் என்றிருக்கிறேன். 
Facebookers..

52 comments :

  1. Playing For Change Foundation பத்தி இப்பொழுதுதான் கேள்வி படுகின்றேன்,முதல் பாடல் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது, முற்றிலும் எனக்கு புதிய தகவல்கள்,பயனுள்ளதாக உள்ளது,இசையை பற்றி மேலும் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. ///இயற்கை விவசாயம், பிளாஸ்டிக் கழிவுகள், அரசியல் எதிர்பார்ப்புகள், மரம் வளர்ப்பு, சுகாதாரம், மழை நீர் சேமிப்பு , மக்கள் விடுதலை, சமுதாய குறைபாடுகள், சத்தான உணவுகள், உடல் நலம், மருத்துவம், கணினி, தொழில வளர்ச்சி, பங்கு சந்தை, கோபம் குறைக்கும் வழிகள், குடும்பத்தில் அன்பு பாராட்டும் செயல்கள், அன்பு புரிதல்கள், பிள்ளை வளர்ப்புகள் , கல்வி இதில் எதை பற்றி வேண்டுமானாலும் நீங்கள் எழுதலாம்//
    முடியல...........

    ReplyDelete
  3. @denim
    பாஸ்..நன்றி. முதல் பாடலை பாப் மார்லின் குரலிலும் கேட்டுப்பாருங்கள்.டவுன்லோட் லிங்க் கொடுத்திருக்கேனே...
    //இசையை பற்றி மேலும் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்//நீங்க நிறுத்த சொன்னாலும் நிறுத்த போறதில்ல.எனக்கு தெரிஞ்சதே நாலு படம்,ரெண்டு பாட்டு.அதையும் எழுதாம வேற என்னத்த தான் எழுதப் போறேன்....அதுனால நீங்க எல்லாரும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  4. கண்டிப்பா அந்த முதல் பாடல் திரும்ப திரும்ப எனையும் அறியாமல் கேட்கதுண்டுகிறது...மெஸ்மரிசம் பண்ணமாதிரி இருக்கு .....

    ReplyDelete
  5. @denim
    அதான் bob marleyஇன் மேஜிக். எனக்கும் முதல்முறை அப்படியே இருந்தது. Reggae இசையின் தனித்துவம் அப்படி. torrentல Bob marley - greatest hits டவுன்லோட் செஞ்சு கேளுங்க...கண்டிப்பா உங்களுக்கு பிடிக்கும்

    ReplyDelete
  6. Bob Marley - The REAL Greatest Hits 74 MB-க்கு ஒரு file-ல டவுன்லோட் போட்டாச்சு கேட்டுட்டு சொல்லுறேன்....

    ReplyDelete
  7. நீங்க எல்லாம் என்னய பாட்டு கேட்கறீங்க gloomy Sunday-னு ஒரு பாட்டு(suicide சாங்) இத கேட்டுட்டு நிறைய பேர் தற்கொல பண்ணிகிட்டன்கலாம்,பாட்ட கம்போசே பண்ணவங்க,ஏழுதுனவங்க கூட தற்கொலை பண்ணிகிடாங்கலாம்,நிறைய country-ல இந்த பாட்ட தடை பண்ணிட்டாகலாம்,நா கேட்டேன் ஒன்னும் தோனல கொழந்த ட்ரை பண்ணி பாருங்க.

    http://www.youtube.com/watch?v=48cTUnUtzx4

    பி.கு RNS-தான் இந்த பாட்டை எனக்கு அறிமுகம் செய்தவர்...

    ReplyDelete
  8. அப்புறம் Bob Marley - The REAL Greatest Hits டவுன்லோட் ஆய்டுச்சு.. யெல்லாம் ஒரே மாதிரி இருக்கே...Buffalo solider நல்லா இருக்கு.....

    ReplyDelete
  9. @denim
    gloomy Sunday பாடல் குறித்து ஷாஜி உயிர்மைல எழுதியிருந்தார். சாருவும் அதைப் பத்தி குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாடல் Schindler's List படத்தில பல இடங்களில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.(சாரு அவர்கள் எழுதித்தான் இது குறித்து எனக்குத் தெரியும்).

    //யெல்லாம் ஒரே மாதிரி இருக்கே...Buffalo solider நல்லா இருக்கு//

    ரெகே இசை வடிவம் முதல்ல கேட்கும் போது அதுமாதிரி தான் தோணும். கேட்கக்கேட்க அதன் நுணுக்கங்கள் பிடிபட ஆரம்பிச்சிரும்.
    I shot the sheriff,
    Roots Rock Reggae,
    Jammin,
    One Love,
    Redemption Song இதெல்லாம் எனக்கு ரொம்ப பிடித்த மார்லியின் பாடல்கள். வார்த்தைகள கவனிங்க..அதுதான் ரொம்ப முக்கியம்

    ReplyDelete
  10. @denim
    //நீங்க எல்லாம் என்னய பாட்டு கேட்கறீங்க gloomy Sunday-னு ஒரு பாட்டு(suicide சாங்) இத கேட்டுட்டு நிறைய பேர் தற்கொல பண்ணிகிட்டன்கலாம்,பாட்ட கம்போசே பண்ணவங்க,ஏழுதுனவங்க கூட தற்கொலை பண்ணிகிடாங்கலாம்,நிறைய country-ல இந்த பாட்ட தடை பண்ணிட்டாகலாம்,நா கேட்டேன் ஒன்னும் தோனல கொழந்த ட்ரை பண்ணி பாருங்க.//

    ஏதோ அரசியல் இருக்கற மாதிரி தெரியுதே? என் பிளாகை அவரு ஒருத்தர்தான் ஒழுங்கா(?) படிக்கறாரு, அதைவிட வேற தண்டனை வேண்டுமா அவருக்கு? Anyway அந்தப் பாடல் குறித்து நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். கேட்டுப் பார்க்கிறேன் (யாராவது link தெரிஞ்சா சொல்லுங்கப்பா...)

    ReplyDelete
  11. @கொழந்த,

    காஃப்காவை எதிர்பார்த்திட்டு இருந்தா, gap-ல இதைப் போட்டிடிடீங்களா?
    சரி சரி எங்க இருந்து இந்த matter-லாம் பிடிக்கிறீங்க?

    பாடலையும் வீடீயோவையும் பார்த்துவிட்டு மீண்டும் வருகிறேன்.

    ReplyDelete
  12. @denim

    //நீங்க எல்லாம் என்னய பாட்டு கேட்கறீங்க gloomy Sunday-னு ஒரு பாட்டு(suicide சாங்) இத கேட்டுட்டு நிறைய பேர் தற்கொல பண்ணிகிட்டன்கலாம்,பாட்ட கம்போசே பண்ணவங்க,ஏழுதுனவங்க கூட தற்கொலை பண்ணிகிடாங்கலாம்,நிறைய country-ல இந்த பாட்ட தடை பண்ணிட்டாகலாம்,நா கேட்டேன் ஒன்னும் தோனல//

    இன்னுமா அந்தக் கனவுக்குக் காரணம் தெரியல?

    @எஸ்.கே (எப்படியிருந்தாலும் வருவீங்கல்ல),

    Note this...

    ReplyDelete
  13. @சு.மோகன்
    //ஏதோ அரசியல் இருக்கற மாதிரி தெரியுதே?//
    நா கூட கவனிக்கலையே....அந்த அளவிற்கு கல்மிஷம் இல்லாத பிஞ்சு நான். வீட்டுக்கு ஒரே பையன். பார்த்து ஏதாவது பண்ணுங்க.

    By the way, அந்த பாட்ட நானும் லேசுபாசா கேட்டிருக்கேன். பெருசா ஒண்ணும் தோணல.உருக்கமா இருக்கும்.அவ்வளவே. மத்தபடி ஏதாவது டோப்பு கேசுங்க கேட்டுட்டு ஏதாவது செஞ்சிருப்பாங்க...

    //காஃப்காவை எதிர்பார்த்திட்டு இருந்தா, gap-ல இதைப் போட்டிடிடீங்களா?//
    இன்னும் ரெண்டு மூணு நாளுக்குள்ள எழுதிர்றேன்.

    //சரி சரி எங்க இருந்து இந்த matter-லாம் பிடிக்கிறீங்க?//
    டிவி என்கிற வஸ்துவை பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா......

    ReplyDelete
  14. யோவ் கனவுக்கும் அந்த பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை யா.நீங்க வேற SK இத பத்தி ஆராய்ச்சி பண்றேன்னு சொல்லி இருக்காறு....

    ReplyDelete
  15. @மோகன்

    அந்த பாட்டுக்கு லிங்க் நா என் கமெண்ட்க்கு கீலையே கொடுத்து இருக்கிறேன்...

    ReplyDelete
  16. கொழந்த கொஞ்சம் personal-லா ஒரு கேள்வி.நீங்க என்ன ஊரு,என்ன பண்ணிட்டு இருக்கிங்க,தெரிஞ்சு என்னடா பண்ணபோறனு தோனிச்சுனா,இந்த கம்மெண்ட delete பண்ணிடுங்க....

    ReplyDelete
  17. @denim,

    //அந்த பாட்டுக்கு லிங்க் நா என் கமெண்ட்க்கு கீலையே கொடுத்து இருக்கிறேன்...//

    அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்... இப்பவே கேட்டுவிடுகிறேன்... கேட்டுவிட்டு ஏதேனும் செய்து கொள்ளாமல் இருந்தால், பதிலிடுகிறேன்.

    @கொழந்த

    இல்லாவிட்டால் எனக்காக ஒரு இரங்கல் பதிவு போட கொழ்ந்தயைப் பணிக்கிறேன்...

    ReplyDelete
  18. கிதார் பாடால்கள் கேட்க அது ஒரு விதம்தான்! நல்லாயிருக்குங்க!

    ReplyDelete
  19. நண்பரே,

    இரு பாடல்களும் அருமையான தெரிவு.

    ReplyDelete
  20. @denim
    இதுல என்ன இருக்கு...விருமாண்டில கமல் ரோஹினிட்ட கேட்ட தகவல்கள் மாதிரி சங்கோஜப்படுறீங்க...

    எனக்கு பர்சனல் விஷயங்கள் இருக்குற அளவிற்கு இன்னும் வளரல. சொல்லப்போன என் போட்டோவைத் தவிர அனைத்தையும் எங்க எழுதிட்டேன்.நேர இருந்தா இதைப் படிச்சுப்பாருங்க.ஏன்னா மறுபடியும் விளக்கம் சொல்லி...எதுக்கு...

    http://saravanaganesh18.blogspot.com/2010/09/blog-post.html

    http://saravanaganesh18.blogspot.com/2010/09/blog-post_15.html

    தல..நீங்க எந்த ஊரு...உங்க ப்ளாக்ல timings வேற நேரமா இருக்கே...

    ReplyDelete
  21. @சு.மோகன்
    //இல்லாவிட்டால் எனக்காக ஒரு இரங்கல் பதிவு போட கொழ்ந்தயைப் பணிக்கிறேன்//
    ஒரு தத்துவ வாதிட்ட இருந்து தப்பிச்சோம்டா சாமி....
    அடுத்த டார்கெட் RNS தான்.

    ReplyDelete
  22. @எஸ்.கே
    நன்றி எஸ்.கே. வீடியோ பார்ததிருப்பீங்கன்னு நினைக்கிறேன். அவுங்க expressions எப்படி உயிரோட்டமா இருந்தது பார்த்தீங்களா...

    ReplyDelete
  23. @கனவுகளின் காதலன்
    ஒருவேள மறுபடியும் இதைப் படித்தால்...
    பிரான்சில் நீங்க ரசிக்கும் இசை வடிவம் எது என்பது குறித்து சொல்ல முடியுமா.....கேட்க விருப்பம்

    ReplyDelete
  24. @கொழந்த,

    நண்பா, எல்லாவற்றையும் கேட்டேன். எனக்கென்னவோ முதல் தடவை கேட்கும்போதே Gloomy Sunday பிடித்திருந்தது. மற்ற மூன்றும் ஈர்க்கவில்லை.

    //ஒரு தத்துவ வாதிட்ட இருந்து தப்பிச்சோம்டா சாமி....//
    I am very sorry, better luck next time

    //பி.கு RNS-தான் இந்த பாட்டை எனக்கு அறிமுகம் செய்தவர்...//
    தத்துவவாதிகளுக்கு இந்தப் பாட்டு ரொம்பப் பிடிக்கும்போல...

    ReplyDelete
  25. கொழந்த உங்கள் இரண்டு கட்டுரையும் படித்தேன், ரொம்ப கஷ்டமா இருந்துசு,இப்ப அப்பா எப்படி இருகார்,நீங்க படிச்சதுக்கு north-ல தான் வேலை இருக்குனு எழுதி இருந்திங்க,நான் மும்பை-ல தான் வொர்க் பண்ணிட்டு இருக்கிறேன்.எப்ப வென்ன வாங்க...எதைபத்தியும் கவலை படாதிங்க... பாத்துக்கலாம் வாங்க.....வர இஷ்டம் இருந்தா என்ன காண்டக்ட் பண்ணுங்க....

    அப்புறம் நம்மூரு கரூர்ங்க படிச்சது எல்லாம் நம்ம ஹாலிவுட் பாலா படிச்ச திருச்சி பிஷப் ஹீபர் காலேஜ்,Bcom அப்புறம் சென்னைல 3d animation diploma இப்ப வேலை பார்ப்பது Tata Elxsi ல computer graphics artist-டா இவ்வளவு தான் நம்மளப்பத்தி.....

    ReplyDelete
  26. இப்ப என்ன பண்ணிட்டு இருக்கிங்கனு தெரியல,but u should work,அப்பா அப்ப தான் சந்தோஷ படுவார்.....நான் சொன்னது உங்களுக்கு தப்பா பட்டா
    மன்னித்து கொள்ளவும்

    ReplyDelete
  27. அடப்பாவிங்களா நான் வர்ரதுக்குள்ள கும்மிய முடிச்சுட்டீங்களா... சாரி கொழந்த Am too late i guess... இருங்க பதிவ படிச்சுட்டு வந்துற்றேன்...

    ReplyDelete
  28. உங்க பதிவ படிச்சுட்டு சந்தோஷமா எழுதலாம்னு இருந்தேன்.. பாதியிலேயே உங்க வாழ்க்கையைப் பத்தின பதிவையும் படிச்சேன்.. ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.. என் நண்பரோட நான் அடிக்கடி மதுர Gh போய் சும்மாவாவது அங்க இருக்கறவங்கள பாத்திருக்கேன்.அதனால தான் என்னால எல்லா விஷயங்களையும் தத்துவமா பாக்க ஆரம்பிச்சேன். நானே நிறைய அனுபவப்பட்டிருக்கேன்.எங்ககம்மா இறந்தது Throat cancerல தான்.அப்பா இறந்தது liver failiureல.அதனால நிறைய விஷயங்கள சாதாரணமா எடுத்துக்க ஆரம்பிச்சேன்.கவலைப்படாதீங்க நண்பா.எல்லாம் நண்மைக்கே.

    “எந்த வாளாலும் காயப்படுத்த முடியாத காற்றைப் போல் திகழுங்கள்”
    - மிர்தாத.

    ReplyDelete
  29. ok ok.. no more feelings...யோவ் கொழந்த என்னையா பண்ணுற........ நானே என்னைகாவதுதான் ஆபீஸ்ல இருந்து சீக்கிரம் வரேன்....

    ReplyDelete
  30. RNS இந்த பாட்டெலாம் கேட்டு இருக்கியாப்பா

    ReplyDelete
  31. @RNS,

    நம்மளை ஒழிச்சுக் கட்ட சதி நடக்குது, நீங்க என்னடான்னா ‘பிடில்’ வாசிச்சுட்டிருக்கீங்களே!

    ReplyDelete
  32. @denim
    நண்பர்களே...சாரி..இப்பதான் சிஸ்டத்துக்கு வரேன்.

    //நீங்க படிச்சதுக்கு north-ல தான் வேலை இருக்குனு எழுதி இருந்திங்க,நான் மும்பை-ல தான் வொர்க் பண்ணிட்டு இருக்கிறேன்.எப்ப வென்ன வாங்க...எதைபத்தியும் கவலை படாதிங்க... பாத்துக்கலாம் வாங்க.....வர இஷ்டம் இருந்தா என்ன காண்டக்ட் பண்ணுங்க//

    நண்பா...உங்கள் வார்த்தைகளுக்கு ரொம்பவே நன்றி. இது templateதனமா இருந்தாலும் வேற எப்படி சொல்றதுன்னு தெரியல.அப்பா..இப்ப physiotherapy மாதிரியான விஷயங்கள் செய்துகிட்டு வர்றார். நல்ல முன்னேற்றம் தெரியுது. நடக்கறது தவிர சில உபாதைகள்- வேற எந்த பிரச்சினைகளும் இல்லை.இதுவும் போகப்போக சரியாயிரும்னு நம்புகிறோம்.


    பெங்களூர்,சென்னையிலையே வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அநேகமா அடுத்த மாசதிற்க்குள்ள எங்கேயாவது செட ஆயிருவேன்னு நினைக்கிறேன். இவ்வளோ பட்டும் compromise பண்ண மனசில்லாம பிடிச்ச வேலை கிடைக்க முயற்சிசெய்து கொண்டிருக்கிறேன்.
    அப்பறம் மத்தத உங்களுக்கு மெயில் பண்ணுறேன்.

    கரூர்,திண்டிக்கல்லில் இருந்து 60km தானே.லீவுக்கு கரூர் தான் வருவீங்களா...

    ReplyDelete
  33. @Denim
    //நான் சொன்னது உங்களுக்கு தப்பா பட்டா மன்னித்து கொள்ளவும்//
    உங்களுக்கு சேரன் ரொம்ப பிடிக்குமா..இவ்வளோ சென்டிய பிழியரீங்களே...அந்த மாதிரி எனக்கு யோசிக்கக் கூட தெரியாது.

    ReplyDelete
  34. @RNS
    //கவலைப்படாதீங்க நண்பா.எல்லாம் நண்மைக்கே//

    நண்பா..ஹாஸ்பிடல்ல முதல்ல ஒரு மாசத்திற்கு தான் எங்க கஷ்டம்தான் உலகத்திலயே ரொம்ப பெருசா தோணிச்சு. ஆனா அங்குள்ளவங்கள பார்க்கப்பார்க்க நாங்க எவ்வளவோ பரவாயில்லைனு தோணிச்சு. இதுவும் கடந்து போகும்..

    ReplyDelete
  35. @RNS
    உங்களுக்கு எந்த ஊரு...profileலயிருந்து எல்லாமே நிழலாவே இருக்கே...உங்களுக்கு Denim எப்படி பழக்கம்...

    ReplyDelete
  36. அப்பறம் முடிஞ்சா இதன் முதல் paraவையும் படிச்சிருங்க..
    http://saravanaganesh18.blogspot.com/2010/09/blog-post_17.html

    @சு.மோகன்
    வட போச்சே.....
    தல..அதான் நா ஏற்கனவே சொல்லிட்டேனே...அந்த பாடல் உருக்கமாயிருக்குமே தவிர...

    மத்தபடி ஏதாவது டோப்பு கேசுங்க கேட்டுட்டு ஏதாவது சூசைட் செஞ்சிருப்பாங்க

    ReplyDelete
  37. @ சு.மோகன்

    ஹா.. ஹா... நண்பா நம்மள யாராலயும் அழிக்க முடியாது.. இன்னும் நாலஞ்சு தத்துவ பிட்டுகளப் போட்டோம்னா கொழந்த பிளாகிலருந்தே ஓடிருவார்னு தோணுது... மிர்தாத் என்ன சொல்ல வர்றார்னா.... ஹி.. ஹி.. பாருங்க இப்பயே கொழந்த அழுக ஆரம்பிச்சுருச்சு.. வேணாம் விட்ருவோம்..

    @ டெனிம்

    தம்பி டெனிம் மோகன்.. உங்கூட சேர்ந்தா என்னிக்கி இந்த மாதிரி பாட்டுகள கேக்க வுட்டுருக்க... இப்ப தான் கொழந்த தயவால கேக்க ஆரம்பிச்சுருக்கேன்....

    ReplyDelete
  38. @ கொழந்த

    //இதுவும் கடந்து போகும்..//

    பரவால்லயே கொழந்தக்கி கூட கொஞ்சம் தத்துவம் வருது.. நான் டெனிம்லாம் ஒரே காலேஜ்ல CG படிச்சோம்.நான் சென்னைல வெட்டியா இருக்கேன்.அவரு பாம்பேல பெரிய தாதாவா இருக்காரு... டெனிம் கரூர்லந்து ஓடி வந்த மாதிரி நான் மதுரை...

    ReplyDelete
  39. @ கொழந்த

    உண்மைலயே அந்தப் பாட்ட கேட்டு நெறைய பேர் தற்கொல பண்ணிருக்கறதா சொல்றாங்க..உண்மையான்னு தெரியல நானும் நெறைய தடவ கெட்டுட்டேன் அடுத்தவன் மேல கொல வெறிதான் வருதே தவிர தற்கொல.. சான்ஸே இல்ல... மே பி நீங்க சொன்ன டோப்பாதான் இருக்குமோ...?

    ReplyDelete
  40. @RNS
    மதுரையின் சொத்தே...தங்களது முழுப்பெயர் என்னவோ...

    ReplyDelete
  41. நானும் மதுர பக்கட்டுதான். திண்டுக்கல்...மெட்ராஸ்ல எங்க வேலை பார்க்குரீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா..

    ReplyDelete
  42. எனது அம்மா சொந்த ஊர் திண்டுக்கல் பக்கத்தில இருக்கிற நத்தம் தான்..... கண்டிப்பா லீவுக்கு கரூர் வருவேன்....ஆமா 60 km தான்.... நானும் RNS-ம் Friends, Rns என்ன பண்ணுறாருனு அவருகிட்டேயே கேட்டுகங்க..... கொஞ்சம் அதுல suspense இருக்கு......

    ReplyDelete
  43. @denim
    உங்களுக்கு மெயில் அனுபியிருக்கேன். மற்றவை அதில்...

    RNS-எனக்கு தெரியாட்டி தலையே வெடிச்சிரும் போல இருக்கு..ஒருவேள ஏதும் திரைப்படங்களில் வேலை செய்யறீங்களா...

    ReplyDelete
  44. முதல் பாட்டு நல்லாருக்கு, அந்த காலத்தில் போனி எம் மியூசிக் கேட்பேன்.அப்புறம் மைகேல் ஜாக்சன் அவ்வளவுதான் நமக்கு தெரிஞ்ச ஆங்கில பாடல்.பாப் மார்லி பற்றி படிச்சிருக்கேன்.ஆனா, இப்பத்தான் கேட்குறேன்.

    ReplyDelete
  45. @ கொழந்த

    உங்களுக்கு மெயில் அனுப்பிருக்கேன். பாருங்க பாஸ்:-)

    ReplyDelete
  46. @ மைதீன்
    //அந்த காலத்தில் போனி எம் மியூசிக் கேட்பேன்//
    அவுங்க பாடல்களெல்லாம் கிளாஸிக் ஆச்சே...பாப்மார்லியும் கேளுங்க கண்டிப்பா பிடிக்கும்

    ReplyDelete
  47. @RNS
    //உங்களுக்கு மெயில் அனுப்பிருக்கேன்//
    நானும் அனுப்பிச்சுட்டேன் :))

    ReplyDelete
  48. இந்த இரு பாடல்களையும் இன்னும் கேட்டிருக்காததால், அதனை வெளியே சொல்லாமல் மறைத்து, நான் கேட்ட பாடல்களைப் பற்றி ஒரு பதிவு போடுவேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் ;-)

    ReplyDelete
  49. மீ த ஹாஃப் சென்சுரி... ஓ யா பேபி :-)

    ReplyDelete
  50. உங்க பதிவு பாடவும் ஆடவும் இங்கேந்து ஓடவும் தோன்றுகிறது கொழந்த,ஹாஹாஹா,மீ த 53ர்ட்

    ReplyDelete
  51. @கருந்தேள் கண்ணாயிரம்
    //நான் கேட்ட பாடல்களைப் பற்றி ஒரு பதிவு போடுவேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்//
    இந்த மாதிரி பல தடவ பல பதிவுகள போடுறேன்னு சொல்றீங்க. நானும் வலைமேல் விழி வெச்சு காத்துகிட்டுயிருந்தாலும் ஒண்ணும் வரல...இதையாவது தயவுசெய்து எழுதுங்க.....

    @கீதப்ப்ரியன்
    //உங்க பதிவு பாடவும் ஆடவும் இங்கேந்து ஓடவும் தோன்றுகிறது//
    அங்கிருந்து வேற எங்கேயும் போகாம இங்க ஓடி வந்தா சரி தான்

    ReplyDelete