Wednesday, October 6, 2010

குழந்தைப் போராளிகள்

வன்முறைல உச்சகட்டமானது எது? நான் ரொம்ப கொடுமையானதா நினைப்பது குழந்தைகளின் மீதான வன்முறையை.ஏன் நடக்குது,எதுக்கு-இந்த காரணங்கள் எதுவுமே தெரியாம வன்முறையின் பிடியில் சிக்குவது எவ்வளோ கொடுமை.பெண்கள் மீது கட்டவிழ்த்தப்படும் வன்முறையை கூட அவர்களால் புரிந்து கொள்ள முடியும்.ஆனா குழந்தைகள்,மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இவர்களுக்கு என்ன புரியப் போகுது.விலங்குகள்,பறவைகள் கூட instinctனால ஒருவாறு புரிந்து கொள்கின்றன..ஆனால் இவர்களுக்கு அந்த வாய்ப்பு கூட இல்லை.


போன வாரம் லைப்ரரில இருந்து "குழந்தைப் போராளி-சைனா கெய்ரெற்சி" இந்தப் புத்தகத்த எடுத்து வந்து படிக்க நேர்ந்தது. ரொம்பவே சங்கடப்படுத்திய புத்தகம். உகண்டாவை சேர்ந்த சைனா கெய்ரெற்சி என்பவரின் சுய வரலாற்று நூல் இது. 1976ல் பிறக்கிறார் சைனா. அவரது தாயை,கொடூரமான குணம் கொண்ட தந்தை வீட்டை விட்டு அடித்து துரத்திவிட கொடுமைக்கார பாட்டியிடம் சைனா வளர நேர்கிறது. தந்தை மறுமணம் செய்து கொள்கிறார். வந்த சித்தியும் கொடுமைக்காரராக இருக்க-ஒன்பது வயதில் தன் தாயைத் தேடி வீட்டைவிட்டு வெளியேறுகிறார். இங்கிருந்து அவரது வாழ்க்கை சின்னாபின்னமாகிறது. National Resistance Army(NRA) என்று சொல்லப்படும் ஆட்சிக்கு எதிரான புரட்சிப் படையில் சேர்க்கப்படுகிறார்-அப்போது அவருக்கு வயது....வெறும் ஒன்பது. National Resistance Armyன் தலைவர்-முசேவெணி, ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுகிறான். அதற்காக வரலாற்றில் முதல்முறையாக முழுக்க முழுக்க குழந்தைகளை கொண்ட படை ஒன்றை உருவாக்குகிறான். குழந்தைகள் என்றல் சொல்லும் வேலையை மறுபேச்சியின்றி செய்வார்கள்,யாருக்கும் சந்தேகம் வராது...இந்த மாதிரி காரணங்களுக்காகவே இந்தப் படை. துப்பாக்கி உயரம் கூட இல்லாத குழந்தைகளின் கையில் மெசின்-கன், வெடிகுண்டுகள் மாதிரியான விஷயங்கள். சொல்ல முடியாத அளவிலான மன உளைச்சல்களுக்கு இடையே சைனாவும் மற்ற குழந்தைகளும் வளருகிறார்கள்.

                
ஆண்டுகள் செல்லச்செல்ல அதுவரை குழந்தைகளாக உயரதிகாரிகளின் கண்களுக்கு தெரிந்தவர்கள் இனி பெண்களாக தெரிய ஆரம்பிக்கின்றனர். புரட்சிப் படை என்று சொல்லிக் கொண்டாலும் பெண்களின் மீது,குறிப்பாக பெண் குழந்தைகளின் மீது பெருமளவு பாலியல் வன்கொடுமை நடந்து கொண்டிருப்பது சைனாவிற்கு தெரிய வருகிறது.அதிலிருந்து அவர் தப்பித்துக் கொண்டே இருந்தாலும் ஒரு கட்டத்தில் உயரதிகாரியிடம் சிக்கி பெரும் கொடுமைக்கு ஆளாக நேரிடுகிறது. இது போல் பல இன்னல்களுக்கு ஆளாகி, உயிருக்கு பல சமயங்களில் ஏற்படும் நெருக்கடியுடன் வாழ்கையை ஓட்டிக்கொண்டிருக்கிறார். பின் துணிச்சலாக முடிவெடுத்து தென் ஆப்ரிக்காவிற்கு தப்பிச் செல்கிறார். அங்கும் ஒரு நான்கு ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு ஒருவழியாக UN உதவியுடன் டென்மார்க்கிற்கு அகதியாக குடியேறுகிறார்(2000).அப்போது அவரின் வயது வெறும் 24. ஒரு இடத்தில சைனா கூறுகிறார் "குழந்தைப் போராளிகள் எல்லாவித கொடுமைகளிலும் பங்கேடுத்துக்கொள்வார்கள். பல குழந்தைகளுக்கு கொலையும் சித்திரவதையும் மிகப் பிடித்தமான வேலைகள் . கொலை சித்திரவதையின் மூலம் தங்களது தளபதிகளின் நன்மதிப்பை குழந்தைகள் சீக்கிரமே பெற்று விட முடியும். போர்க் கைதிகளையும், உளவாளிகள்-துரோகிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களை குரூரமாக சித்திரவதை செய்தும் புதைகுழிகளிற்கு அனுப்பியும் ஒரே நாளில் ராணுவத்தில் படிநிலைகளை தாண்டி குழந்தைகள் சென்று விட முடியும். கைதிகளிற்கு நாங்கள் அளிக்கும் உச்சபட்ச சித்திரவதைகள் எதிர்காலத்தில் எங்கள் உளவியலை எவ்வாறு பாதிக்கப் போகின்றன என்பதை அறியாத குழந்தைகளாக நாங்கள் இருந்தோம்.நாங்கள் தலைவரால் சாவதற்கென்றே வளர்க்கப்பட்டோம்".

                                              
என்னை இது போன்ற விஷயங்கள் சீக்கிரம் மனதை சலனப்படுத்திவிடும். நான் இங்கு சொல்லி இருப்பது கம்மியிலும் ரொம்ப கம்மி. இந்த மாதிரி விஷயங்களை குறித்து எழுதுவது எனக்கு எப்பவுமே ரொம்ப கஷ்டம்.மேலும் Autobiographical வகையில் சாமானிய மக்களின் வரலாற்றை படிப்பதே பல விஷயங்களை கத்துக் கொடுக்கும் என்பது என் கருத்து. அப்படி நான் பல புத்தகங்களை படித்திருந்தாலும் இதுபோல் சில புத்தகங்களே பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.ஒரு காலத்தில் நான் Escapist போல, உண்மையை சந்திக்கும் திராணியற்று இந்த வகையான புத்தகங்களை படிக்க முடியாமல் தவிர்த்து வந்தேன்(இப்ப வரை என்னால் சோளகர் தொட்டி புத்தகத்தை படித்து முடிக்க முடியவில்லை). உண்மையை தவிர்க்க நினைத்தால் நம் நாட்டில் 100ல் 90% விஷயங்களை படிக்கவே முடியாது என்று இப்போது எனக்குத் தோன்றுகிறது. எனவே கண்டிப்பாக அனைவரும் படித்துப் பாருங்கள்.சைனாவிற்கு ஏற்பட்ட பாதிப்பை நீங்களும் கட்டாயமாக உணர முடியும். கடைசியாக ஒன்று - எனக்கு தெரிந்த வரை குழந்தைகளின் மீது உளவியல் ரீதியாகவும் உடல்ரீதியாகவும் பிரயோகிக்கப்படும் வன்முறைக்கு 99.99% so-called பெரியவர்களும் அவர்களது அலட்சியமுமே காரணம். இப்ப நான் பார்க்கும் குழந்தைகள் பல பேர் குழந்தைத்தனம்னா கிலோ என்ன விலை..என்ற ரீதியில தான் இருக்காங்க. இது என் பார்வைக் கோளாறன்னு தெரியல...உகாண்ட மாதிரி நாட்டில் குழந்தைகளின் மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைக்கு சற்றும் குறைந்ததல்ல தற்போது நம் நாட்டில் தொலைக்காட்சியின் மூலமாக குழந்தைகளின் மீது பிரயோகிக்கப்படும் உளவியல் ரீதியான தாக்குதல் என்பது என் கருத்து.

                                          குழந்தைப் போராளி - சைனா கெய்ரெற்சி
                                                               வெளியீடு - கருப்புப்பிரதிகள் 
                                                                      விலை - ரூ. 180.00
                                                   மொழிபெயர்ப்பு - தேவா

பி.கு: இந்த புத்தகத்தை படிக்கும் போது Blood Diamond படம் ஞாபகத்திற்கு வந்தது. இந்தப் புத்தகத்தையும் Miramax நிறுவனத்தார் திரைப்படமாக எடுக்கப்போவதாக நூலில் சொல்லப்பட்டிருந்தது.நண்பர்கள் இது போல் குழந்தைப் போராளிகளைப் பற்றி சொல்லப்பட்டுள்ள ஏதாவது திரைப்படம் தெரிந்தால் பின்னூட்டமிடுங்கள்.
Facebookers..

36 comments :

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. @மைதீன்
    என்னது இவ்வளோ வேகமா என் ப்ளாக்கில் ஒரு கமென்டடா.....

    ணா..நான் போரினால் பாதிக்கப்பட்ட தவறான பாதைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தைகள் குறித்தே சொல்ல நினைத்தேன்..
    இந்த லிங்க்-ல பல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்..

    http://www.warchild.org/links_resources/childrenandconflict/childrenandconflict.html

    http://en.wikipedia.org/wiki/Military_use_of_children

    http://www.warchild.org/

    ReplyDelete
  4. கொழந்த,நல்ல புத்தக அறிமுகம்,எனக்கும் குழந்தைகள் மீதான போராளிகளின் அடக்குமுறையும்,அவர்களை போருக்கு தயார்படுத்துதலும் மனவருத்தம் தரும்,நான் வாய்ப்பு கிடைத்தால் படிக்கிறேன்.நன்றி,என்ன கரண்ட் வந்ததா?

    ReplyDelete
  5. எந்த யுகத்துல இருக்கீங்க?
    ஸ்டோன் ஏஜ்லயா?
    ரெண்டுநாளா கரண்ட் கட்,ஓமைகாட்

    ReplyDelete
  6. @ கீதப்ப்ரியன்..
    உங்க பதிவ "பார்த்துகிட்டு" இருந்தா இங்க ஒரு கமெண்ட்டா...

    இன்னைக்கு காலையில இருந்துதான் கரண்ட் சரி ஆச்சு.

    ReplyDelete
  7. @ கீதப்ப்ரியன்..
    அப்பறம் பி.கு ல கேட்டிருந்தது..தெரியுமா..உங்களுக்கு கண்டிப்பா ரெண்டு முணு படம் தெரியும்னு நெனச்சேன்

    ReplyDelete
  8. தொலைக்காட்சியால் குழந்தைகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றது என்பதை ஏற்க்கனவே கமெண்டில் கூறியிருக்கிறேன்.

    ReplyDelete
  9. @மைதீன்
    ணா..நல்லா ஞாபகமிருக்கு. ஏன் முதல் ரெண்டு கமெண்ட்ட தூக்கிட்டீங்கனு தெரிச்சுக்கலாமா...

    ReplyDelete
  10. நண்பரே,

    சிறுவர்களை ராணுவத்தில் வலுக்கட்டாயமாக இணைப்பது என்பது உலகின் பல பகுதிகளிலும் கிலேசமில்லாமல் நடாத்தப்படும் ஒரு விடயம்தான். துப்பாக்கியில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. அது கையில் இருக்கும்போது முன்னால் இருப்பவன் குறித்த அச்சம் விலகிவிடுகிறது- அவனும் துப்பாக்கியுடன் இருக்காதவரையில்- நிச்சயமாக மிகவும் மனவேதனையான விடயம். ஆனால் ஏதும் செய்யமுடியாது.ஆயுதங்கள் விற்கப்படவேண்டும், அதை ஏந்தக் கைகள் வேண்டும், இது தொடரும் ... இதைப்போன்ற நூல்களும்... புத்தகங்களை குறித்து தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
  11. சாரி கொழந்த,பதிவுக்கும் கமெண்டுக்கும் சம்பந்தம் இல்லன்னா பின்ன அது எதுக்கு? அது தூக்க கலக்கத்துல சரியா கவனிக்காம கமன்டினது.

    ReplyDelete
  12. நிறைய படங்கள் பார்த்து உள்ளேன் ஆனா குழந்தை பேராளிகளை பத்தி பாத்தாக நினைவு இல்லை கொழந்த, நல்ல பதிவு கண்டிப்பாக படித்து விடுகிறேன்.

    ReplyDelete
  13. சாரி போராளிகள் எப்ப தான் தமிழ தப்பு இல்ல ம ஏழுத போறேனோ...

    ReplyDelete
  14. நல்ல புத்தகம் அறிமுகம் செய்ததற்கு நன்றி!
    இந்த படம் பாருங்கள். Innocent Voices. இது குழந்தை போராளி படமில்லை. ஆனால் போரினால் பாதிக்கப்படும் சிறுவனின் கதை. நீங்கள் விமர்சித்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  15. @எஸ்.கே
    நண்பா..இந்தப் படத்த கூகிளில் குழந்தை போராளி பற்றி ஏதாவது படமிருக்கானு தேடின போது பார்த்தேன்..இப்ப நீங்களும் சொல்லிட்டீங்க...எங்க அகப்படும்னு தெரியல..கண்டிப்பா பார்த்திட்டு சொல்றேன்..

    ReplyDelete
  16. @denim
    நண்பா..கண்டிப்பா படிங்க..

    அப்பறம்.."எப்ப தான் தமிழ தப்பு இல்ல ம ஏழுத போறேனோ" ஏன்ன்.......
    (Google Transல NHMவோட பிழை கம்மியா வர மாதிரி எனக்குத் தோன்றுகிறது)

    @மைதீன்
    ணா...முதல் கமெண்ட் பார்க்கும் போதே நெனச்சேன்..அவசரத்தில கமெண்டிருப்பீங்கன்னு..அதுனால என்ன...

    ReplyDelete
  17. @கனவுகளின் காதலன்
    ணா...//ஆனால் ஏதும் செய்யமுடியாது.ஆயுதங்கள் விற்கப்படவேண்டும், அதை ஏந்தக் கைகள் வேண்டும், இது தொடரும்// முற்றிலும் உண்மை. Silent spectatorஆ இதெல்லாத்தையும் பார்க்க வேண்டியிருப்பது ரொம்ப கஷ்டமாயிருக்கு..

    ReplyDelete
  18. ஆமா NHM ல னா "ந" போடா ரொம்ப கஷ்ட பட்டேன்

    ReplyDelete
  19. சரவணன், மனிதக்குழந்தை மட்டும்தான் தாயையோ, தந்தையையோ சார்ந்து நீண்ட காலம் வாழவேண்டியிருக்கிறது. பரிணாம வளர்ச்சி ஒரு காரணம் என்றாலும் சமூகம், பொருளாதாரம் போன்ற பிற காரணிகளும் அவர்களைப் பெரியவர்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவே முயல்கின்றன. அதனால் எல்லாக் குழந்தைகளும் சீக்கிரமே வளர்ந்துவிட முயல்கிறார்கள் அல்லது வளர்ந்துவிட்டதாய்க் காட்டிக் கொள்கிறார்கள். வெறுமனே விஷயங்களைத் தெரிந்துகொண்டால் மட்டும் வளர்ந்துவிடமுடியாது என்பது பலருக்குப் புரிவதில்லை. அதுதான் ‘இப்ப நான் பார்க்கும் குழந்தைகள் பல பேர் குழந்தைத்தனம்னா கிலோ என்ன விலை’ என்று நீங்கள் சொல்லியிருப்பதற்குக் காரணம்.

    ReplyDelete
  20. @கனவுகளின் காதலன்,

    நண்பரே,

    //துப்பாக்கியில் ஒரு கவர்ச்சி இருக்கிறது. அது கையில் இருக்கும்போது முன்னால் இருப்பவன் குறித்த அச்சம் விலகிவிடுகிறது//

    இந்த வார்த்தைகளை மிகவும் ரசித்தேன். நம்மைக் கொல்ல விரும்புபவனின் முகம்கூடத் தெரியாமல் பலியாவது மிகவும் துக்ககரமான விஷயம்.

    ReplyDelete
  21. சரவணன், ‘Ivan's childhood’ என்ற திரைப்படம் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறேன். Andrei Tarkovsky இயக்கியது. இரண்டாம் உலகப்போரின்போது ஒற்றனாக வேலை செய்யும் ஒரு சிறுவன் பற்றிய படம். நான் இன்னும் பார்க்கவில்லை

    ReplyDelete
  22. // denim said...
    ஆமா NHM ல னா "ந" போடா ரொம்ப கஷ்ட பட்டேன்//
    nhmல் w தானுங்களே ந

    ReplyDelete
  23. @சு.மோகன்
    //அதனால் எல்லாக் குழந்தைகளும் சீக்கிரமே வளர்ந்துவிட முயல்கிறார்கள் அல்லது வளர்ந்துவிட்டதாய்க் காட்டிக் கொள்கிறார்கள்//
    கடுமையான கண்டனங்கள்..ஏன்..நா ஒழுங்கா இல்ல...சரி..சரி...

    Jokes apart..இதுல பெற்றோர்கள் பண்ற கொடும தாங்க முடியல.எந்த டிவிய திருப்பினாலும் பாட்டுப் போட்டி இல்ல டான்ஸ் இல்ல அரட்டை அரங்கம் வகையறா..

    அரட்டை அரங்கம் டைப் நிகழ்ச்சிகள பார்த்திருக்கீங்களா..எப்பா...சாமி...குழந்தைகளா இந்த மாதிரி பேசுறாங்க..

    Ivan's childhood டர்கொவ்ஸ்கி படம் என்பதால நானும் கேள்விப்பட்டிருக்கேன்..பார்க்கணும்..

    ReplyDelete
  24. @denim
    நண்பா...நீங்க google Trans உபயோகப்படுத்திபாருங்க. கண்டிப்பா வித்தியாசத்த உணருவீங்க..அப்பறமா கூட NHMக்கு மாறிக்கோங்க...

    ReplyDelete
  25. அரட்டை அரங்கம் - வன்கொடுமை ! அதுல பேச ட்ரைன் ஆகுர குழந்தைங்க, ஃப்யூச்சர்ல எப்புடியெல்லாம் ரெடியாகுமோன்னு நினைக்கும்போதே எரிச்ச்சலா இருக்கு !

    பாட்டுப்போட்டிகள் - இதுல ஜெயிக்கணும்னா, நீங்க வெள்ளைத்தோல் கொண்ட உயர் வர்க்கத்தைச் சேர்ந்த குழந்தையாவோ, அல்லது ஆளாவோ இருக்கணூம்.. ஏன்னா, அதுல வர்ர ஜட்ஜுகள் முக்காலே மூணு வீசம், அந்த ஜாதியைச் சேர்ந்தவர்களே.. நான் சேம்பிளுக்கு சில நிகழ்ச்சிகளை கவனித்தேன்.. அதுல, tanned தோல் கொண்டவர்கள் எவ்வளவு நன்றாகப் பாடினாலும், நொள்ளை சொல்லியே நிராகரிக்கப்படுகிறார்கள்.. இது அடுத்த கொடுமை :-(

    ReplyDelete
  26. எழுதுனது கொழந்த

    நாங்க நம்பித்தானே ஆகனும் (?)

    அப்புறம் கம்மியிலும் கம்மியாக எழுதியிருந்தாக்கூட குரல் கம்ம தொண்டைக்குள் ஏதோவொன்று சிக்குவது போல.

    ஈழத்தில் குழந்தை போராளிகளைப் பற்றி நிறைய படித்துள்ளேன்.

    இதெல்லாம் நமக்கு ரொம்பு புதுசு.

    ReplyDelete
  27. //ஆனா குழந்தைகள்,மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இவர்களுக்கு என்ன புரியப் போகுது//

    குழந்தைகள் மீதான வன்முறை மிகவும் கொடூரமானது.கிம்புக் பான்தி நினைவுக்கு வருகிறார்.அருமையான அறிமுகம் நண்பா.

    ReplyDelete
  28. @ஜோதிஜி
    சார்..நீங்கள் கூறியிருப்பது முற்றிலும் உண்மையே.நம்ம ஊருல வேற வகையா இது நடக்குது என்று எனக்கு தோன்றுகிறது...

    ReplyDelete
  29. @கருந்தேள் கண்ணாயிரம்
    ணா..நீங்க சொல்லிட்டீங்க..நான் சொல்லனும்னு நெனச்சு சொல்லாம விட்டுடேன். எழுத்துக்கு எழுத்து உங்க பதிலை ஆமோதிக்கிறேன்

    ReplyDelete
  30. @RNS
    கிம்புக் பான்தி பற்றி கேள்விப்பட்டதில்லை...நீங்களும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. யாருன்னு தேடி படிச்சிறேன்.

    ReplyDelete
  31. http://www.peace.ca/kimstory.htm

    வியட்னாம் போரில் அமெரிக்காவின் கோர முகத்தை வெளிச்சம் போட்டு காட்டிய புகைப்படத்தில், நடுவே நிர்வாணமாக ஓடிவரும் சிறுமி.

    ReplyDelete
  32. @RNS
    நண்பா..தயவுசெய்து இந்தப் பதிவை படிக்கவும்...(சிறுமியின் பேர் எனக்கு மறந்து விட்டது)

    http://saravanaganesh18.blogspot.com/2010/08/blog-post_07.html

    ReplyDelete
  33. வாவ் நண்பா... இதப் பத்தி நீங்க எப்பயோ பதிவே எழுதிட்டீங்களா.அந்தச் சிறுமியின் பெயர்தான் கிம்புக் பான்தி. உடல் முழுவது வெந்து போய் ரத்தக் குழாய்கள் ஒன்றோடு ஒன்று சேர்ந்ததால், இப்போதும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்.போரில் அகதிகளாக்கப்பட்டோர்க்கு சேவை செய்வதாக கேள்வி.ஒருமுறை விகடனில் கூட அவர் பேட்டி பிரசுரமானது.

    ReplyDelete
  34. //இந்தப் பெண்மணியை எழுத்தாளர்.அ.முத்துலிங்கம் தேடிப் பேசியுள்ளார். இது சமீபத்தில் விகடனில் வந்திருந்தது. அது கிடைக்குமா என்று தேடிய போது இது கிடைத்தது. அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டுகிறேன் //

    ReplyDelete
  35. @RNS
    நண்பா..அந்தப் பதிவிலேயே விகடன் பேட்டியையும் இணைப்பாக கொடுத்துள்ளேன்..

    ReplyDelete
  36. சை...அவசரப்பட்டுட்டேன்..படிச்சாச்சா..ஓகே

    ReplyDelete