Saturday, October 23, 2010

AC/DC: குறும்புக்கார காளைகள்....(70's ராக் இசை-2)


ரொம்ப சோகமா - ஏதாவது மொக்க படத்தையோபதிவையோ பார்த்ததுனால - எரிச்சல்ல உக்காந்திருக்கீங்க. வழக்கமா நீங்க கேட்குற பாடல்களை கூட கேட்கும் மனநிலையில் நீங்க இல்ல.அப்ப உங்க நண்பர் வந்து ஒரு சிடிய கொடுத்து இத கேட்டுப்பாருனு சொல்லிட்டு போறார். அசுவாராஸ்யமா அத போட்டு கேட்க ஆரம்பிக்கிறீங்க. Awestruck...எல்லாம் செம பீட். அற்புதமான கிடார் riffs.உங்க மனநிலைய தலைகீழா திருப்பிப் போடுது.அந்த மாதிரி இசை உங்களுக்கு பிடிச்சா மேற்கொண்டு இதைப் படிக்கவும்.

Alternating Current(AC)/Direct Current(DC)னா என்னன்னு உங்களுக்கு தெரியும். ஏன் இந்த ராக் பேண்ட்டுக்கு அந்த பெயர்னு அவுங்க பாடல்களை கேட்கும் போதும்-இசை வீடியோக்களை பார்க்கும் போதும் உங்களுக்கே சுலபமா தெரிஞ்சிரும்.பல சேட்டைகள் நிறைந்த குறும்புத்தனமான பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர்கள்.ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குழுவினர்.1973ல் ஆரம்பிக்கப்பட்ட குழு இன்னைக்கு வரை உலகின் சிறந்த Hard Rock-Heavy Metal குழுவினர்களில் ஒருவராக கருதப்படுகின்றனர்.சகோதரர்கள் Angus Young-Malcolm Young சேர்ந்து இக்குழுவை ஆரம்பித்தனர். ரெண்டு பேருமே கிடாரிஸ்ட். பாடகருக்கு என்ன பண்றது..ஆரம்பத்தில் ஒருத்தர் ரெண்டு பேர் பாடியிருந்தாலும் ஏதோ ஒன்று அவர்களின் குரலில் இல்லை என்று நினைக்கவே வேறு ஆளை தேட ஆரம்பித்தனர்.அப்படி கிடைத்தவர்தான் Bon Scott.ரொம்பவே வித்தியாசமான ஹை-பிட்சில் அனாயசமாக பாடக்கூடியவர்.இவர்கள் எல்லாம் சேர்ந்து முதலில் வெளியிட்டது High Voltage என்ற ஆல்பத்தை(பேரை கவனிச்சீங்களா..) இது ஆஸ்திரேலியாவில் மட்டுமே வெளியானது.அடுத்து அவர்கள் வெளியிட்டதுதான் T.N.T. பல பாடல்கள் ஹிட் ஆன ஆல்பம்.முக்கியமாக T.N.T பாடல்.அதன் வரிகளை கவனியுங்கள்.செம குறும்பு. அப்படியே கொஞ்ச கொஞ்சமாக பல ஹிட் பாடல்களை கொடுக்க ஆரம்பித்தனர். அப்படி இவர்கள் வெளியிட்ட ஆறாவது ஆல்பம் Highway to Hell.இன்றளவும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. எனக்கும் மிகப் பிடித்த பாடல்கள் கொண்ட ஆல்பம். குறிப்பாக டைட்டில் ட்ரேக்கான Highway to Hell. செம வரிகள்.செம மியூசிக்.

ஒழுங்கா போய்க்கொண்டிருந்த குழுவில் ஒரு இடி.பாடகர் Bon Scott மிதமிஞ்சிய குடிப்பழக்கத்தால் இறக்க நேரிடுகிறது. அவருக்கு மாற்றாக வந்த இன்னொரு புயல்தான் Brian Johnson. எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த வசீகர குரல்களில் ஒன்று இவரோடது.புது பாடகருடன் மறுபடியும் குழு களத்தில் இறங்கிய ஆல்பம் - Back in Black. உலகிலேயே அதிகமா அளவு விற்ற ஆல்பம் - உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் - மைக்கேல் ஜாக்சனின் Thriller. அதற்கடுத்து அதிகம் விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் ஆல்பம் - Back in Black. இந்த ஆல்பத்தில் வரும் பல பாடல்களின் கிடார் riffகள் உலகளவில் ரொம்பவே பிரசித்தி ஆனது.குறிப்பாக டைட்டில் ட்ரேக்கான-Back in Black.வாய்பேயில்லை.என் மொபைல் ரிங்டோனாக இதுதான் உள்ளது.

                                 80-களில் ட்ரும்மருடன் ஏற்பட்ட தகராறு - ஆல்பங்களின் விற்பனையின்களின் வீழ்ச்சி - இதெல்லாத்தையும் தாண்டி 90களின் ஆரம்பத்தில் இருந்து மறுபடியும் இன்னும் வேகமாக களத்தில் இறங்கினர்.அந்த காலகட்டத்தில் இருந்து தொடர்ச்சியாக பல துள்ளலான அதே சமயம் வேறுபாடுகள் உள்ள பாடல்களை தந்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் வந்த Ironman 1 & 2 படத்தில் கூட இவர்களது பாடல்களே பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவும் உலகின் அதிகம் விரும்பப்படும்-விற்பனையாகும் இசை குழுவினர்களில் ஒருவர்.மேலும் பல குழுவினர்களும் கலைஞர்களும் முன்னோடியாக கருதும் குழுவினர்.  முதல்முறையாக கேட்கும் போது எல்லா பாடல்களும் ஒரேமாதிரி இருந்தாலும் - Heavy Metal & Hard Rock வகையே அதுபோல தான் இருக்கும் - போகப்போக பலூன்காரரை நேசிக்கும் சிறுவர்கள் போல நீங்களும் கண்டிப்பாக விரும்ப ஆரம்பித்திருவீர்கள். இவர்களது குழுவின் வெற்றிக்கு முக்கிய காரணகர்த்தா - கிடாரிஸ்ட் Angus Young. ஸ்டேஜில்-சின்ன டவுசரை போட்டுக்கொண்டு-இவர் செய்யும் சேட்டைகள் மிகப் பிரசித்தம்.இந்த வீடியோவை பாருங்கள்.தெரிந்து கொள்வீர்கள்.

எனக்கு பிடித்த AC/DCன் பாடல்கள்...
இன்னும் பல.....
    பி.கு: 
    • வழக்கம்போல download linkம் உண்டு. Right Click - Save Target கொடுத்து டவுன்லோட் செஞ்சுக்கோங்க...
    • Led Zeppelin பதிவை பலரும் படித்து அந்த பாடல்களை டவுன்லோட் செஞ்சு கேட்டதாக ஊருக்குள்ள பேசிக்குறாங்க.அந்த ஆத்மாக்கள் இந்த பாடல்களையும் கேளுங்க..கேட்டுட்டு சொல்லுங்க.நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தான..
    Facebookers..

    35 comments :

    1. சிறந்த இசைமைப்பாளராக வாழ்த்துக்கள்!

      ReplyDelete
    2. அய்யோ நண்பா! இந்த வீடியோவ வீட்ல பார்த்துட்டு அவருக்கு என்னோ ஆயிடுச்சு என்ன ஆச்சுன்னு கேட்கிறாங்களே!

      ReplyDelete
    3. இரண்டு பாட்டு கேட்டேன் செமையா இருக்கு! சொன்னா மாதிரி நமக்குள்ளே ஒரு வேகம் வருது!

      ReplyDelete
    4. //சொன்னா மாதிரி நமக்குள்ளே ஒரு வேகம் வருது//

      வருதா..வருதா...அதான் சொல்ல வந்தது..
      அப்படி வந்தாதான் நீங்க யூத்,
      இல்லனா பழைய டெலிபோன் பூத்

      நல்ல systemல கேளுங்க...நீங்க எதுல கேப்பீங்க...Headphone?

      ReplyDelete
    5. எனக்கு ஸ்பீக்கர்ல கேட்டாதான் புடிக்கும்!

      ReplyDelete
    6. மிகவும் நல்ல பதிவு,உங்கள் பதிவு பாடலை கேட்க தூண்டுகிறது

      ReplyDelete
    7. //எனக்கு ஸ்பீக்கர்ல கேட்டாதான்//
      சூப்பர்..அலறவிட்டு வீட்டுல உள்ளவங்கள கதிகலக்கிருங்க...

      ReplyDelete
    8. //மிகவும் நல்ல பதிவு,உங்கள் பதிவு பாடலை கேட்க தூண்டுகிறது//
      பிழைகள் இல்ல...அப்படியே ஒற்றுப்பிழைகளையும் சரி பண்ணிட்டா எங்கயோ போயிருவீங்க....

      ReplyDelete
    9. நமக்கும் இசைக்கும் ரொம்ப தூரம் கொழந்த, எப்பயாவது கேட்பேன்,கேட்டு பார்க்கிறேன்.

      ReplyDelete
    10. எனக்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் Head Phone-ல் கேட்கப்பிடிக்கும்

      ReplyDelete
    11. //நமக்கும் இசைக்கும் ரொம்ப தூரம் கொழந்த//
      என்ன ஒரு எட்டு கஜம் இருக்குமா...அட என்ன பாஸ்...நா மட்டும் என்ன வாயில மௌத்ஆர்கனோடையும் கையில கிடாரோடையுமா பொறந்தேன்..ஏதோ கொஞ்சம் ஆர்வம்..அவ்வளவே...எனக்கும் இசைக்கும்..என்ன உங்களைவிட கொஞ்சமே தூரம் கம்மி..கேளுங்க...கண்டிப்பா பிடிக்கும்..

      நைட் இந்த மாதிரி பாடல்களை கேட்பதை தவித்தால் நல்லது..

      ReplyDelete
    12. //எனக்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் Head Phone-ல் கேட்கப்பிடிக்கும்//

      அப்ப..கூடிய விரைவில் காது கோளாறா போக வாய்ப்பிருக்கு...ஆனா நீங்க ரொம்ப நேரம் கேட்குற ஆளில்லைனு நினைக்கிறேன்.

      ReplyDelete
    13. கண்டிப்பா,

      மெலடி னா கூட கேட்க வாய்ப்பு இருக்கு.......

      ReplyDelete
    14. //மெலடி னா கூட கேட்க வாய்ப்பு இருக்கு//

      எனக்கு பிடித்த Jazz இசை - பாடல்கள் குறித்து சீக்கிரம் எழுதப் போறேன்..உங்களுக்கு Jazz பிடிக்கும்தானே?

      ReplyDelete
    15. அதுக்குன்னு இப்படி யா பதிவ படிக்க வர்றவங்களை வலுக்கட்டாயமாகவா கேட்க வைப்பது,BTW என் அடுத்த பதிவுக்கு இதே வழியை பயன்படுத்தி கொள்கிறேன் கொழந்த........

      ReplyDelete
    16. Jazz-னா மெலடி தானே அப்ப பிடிக்கும்

      ReplyDelete
    17. //அதுக்குன்னு இப்படி யா பதிவ படிக்க வர்றவங்களை வலுக்கட்டாயமாகவா கேட்க வைப்பது//

      அதான் pause பண்ண option இருக்கே..கேட்கவைக்கணும்னு ஒரு வெறி தான்.....

      ReplyDelete
    18. anyway தங்கள் இசை பயணம் மேலும் தொடர வாழ்துக்கள்

      ReplyDelete
    19. //தங்கள் இசை பயணம் மேலும் தொடர வாழ்துக்கள்//
      தங்களது கருத்திற்கும் ஆசிர்வாதத்திற்கும் அனேக நன்றிகள்

      ReplyDelete
    20. //BTW என் அடுத்த பதிவுக்கு இதே வழியை பயன்படுத்தி கொள்கிறேன்//

      அய்யய்யோ...

      நானும் இசை பற்றி ஒரு பதிவு போட்டாதான் அடங்குவீங்கன்னு நினைக்கிறேன்.

      ReplyDelete
    21. AC/DCக்கு Anti Christ/Devils Child என இன்னொரு விரிவாக்கம் உள்ளது உங்களுக்கு தெரிந்தது தானே! எப்படியோ நீங்கள் Hard Rock இசைப் பிரியராக இருப்பதில் மகிழ்ச்சி! ஒரு காலத்தில் என் குல தெய்வங்களாக (!!) இருந்த Guns n Roses, Aerosmith, Def Leppard ஆகியோரைப் பற்றியும் எழுத வேண்டுகிறேன் :)

      ReplyDelete
    22. @சு.மோகன்
      தங்களது மேலான கருத்துகளிற்கு நன்றிகள் கோடி..


      @Ben
      தல...எனக்கு அவுங்களுக்கு இந்த மாதிரி ஏதோ ஒரு பேர் இருக்குன்னு தெரியுமே தவிர..exact பேர நீங்க சொல்லித்தான் தெரிஞ்சுகிட்டேன்.If u want blood you got it,Sin City,Hells Bells இந்த மாதிரி பாட்டு எழுதுனதுனால வந்தா இருக்கும்.

      //Guns n Roses, Aerosmith, Def Leppard ஆகியோரைப் பற்றியும் எழுத வேண்டுகிறேன் //
      நீங்க வேண்டலாம் வேண்டாம்.எனக்கு தெரிஞ்சதே நாலு படம்,ரெண்டு பாட்டு - அத வெச்சுதான் ப்ளாக்கே ஓடுது.So Welcome to the jungle...

      ReplyDelete
    23. //Led Zeppelin பதிவை பலரும் படித்து அந்த பாடல்களை டவுன்லோட் செஞ்சு கேட்டதாக ஊருக்குள்ள பேசிக்குறாங்க//

      உதாரணத்துக்குத்தான் நாம இருக்கோம்ல..
      இதே மாதிரி இன்னும் நிறைய பேன்டை introduce பண்ணி வைங்க...

      ReplyDelete
    24. @கொழந்த,

      நண்பா ரொம்ப வயசாயிருச்சுன்னு நினைக்கிறேன். நீங்க ரொம்பவும் சிலாகிச்சிருந்த முதல் பாட்டை மட்டும் download பண்ணிக் கேட்டேன், முடியலை...

      அடுத்து music பத்துன பதிவுதான்...ஜாக்கிரதையா இருங்க...

      ReplyDelete
    25. நண்பரே,

      மின்சாரம் என் மீது பாய்கிறதே... ஓ யா பேபி... :)

      ReplyDelete
    26. @JZ
      வேற வேலை என்ன இருக்கு நமக்கு....

      @சு.மோகன்
      தல..நாங்கெல்லாம் யூத்துக...எஸ்.கே சொன்னத பார்த்தீங்களா...


      @கனவுகளின் காதலன்
      மின்சாரம் பாஞ்சது உங்க துள்ளலான பதில்லயே தெரிகிறது

      ReplyDelete
    27. காலையிலிருந்து உங்கள் வலைப்பூ பாடல்கள்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என்ன ஒரு உற்சாகாமான ஒரு பொழுதை இப்பாடல்கள் உருவாக்கி விடுகின்றன நண்பரே.

      ReplyDelete
    28. //தல..நாங்கெல்லாம் யூத்துக...எஸ்.கே சொன்னத பார்த்தீங்களா...//

      சரிதான் நான் பேசாம ஜென் கவித எழுதறதோட நிறுத்திக்கிறேன்.

      Anyway - என்னோட புதுப் பதிவைப் படிச்சு கருத்து சொல்லுங்க...

      ReplyDelete
    29. @கனவுகளின் காதலன்
      Youth clubற்கு உங்களை வரவேற்கிறோம்

      @சு.மோகன்
      எஸ்.கே,காதலன்,JZ போன்ற யூத்களின் பரிகாசத்திற்கு ஆளாக வேண்டாம்

      ReplyDelete
    30. யாய்... ஊருக்குப் போயிட்டு வர்ரதுக்குள்ள யாருய்யா பதிவு போட்டது ???????

      ReplyDelete
    31. இந்தப் பேண்டை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி.. இன்னும் பல பேண்டுகளை.. ஜீன்ஸ், கார்டுராய், பைஜாமா, கோடு போட்ட பட்டாபட்டி அண்ட்ராயர் ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தவும்

      ReplyDelete
    32. தங்கள் இசைப்பயணம், மேலும் ஏலும் ஊர் ஊராகத் தொடர வாழ்த்துகள்.. முடிந்தால் எங்கள் கிராமப்பக்கம் வந்து, எதாவது இசைக்கருவி வாசிக்கவும் - இப்படிக்கு, மீசிக் கேட்கும் தமிழன்

      ReplyDelete
    33. குலைஞர் said..... இசை.. இசைன்னா என்னது? அது எங்கயிருக்கும்?

      பழகிரி said.... இசை..இசைன்னா..... இசை.. ஆர்மோனியப்பெட்டிக்குள்ளார இருக்கும்

      குறைமுருகன் said... ஹாஹ்ஹஹ்ஹா.. இசை, எங்க குலைஞர் எழுதிய வசனம் மாதிரி.. தூண்லயும் இருக்கும்.. துரும்புலயும் இருக்கும்.. இப்ப, பொது அறிவு விஷயத்துக்கு வருவோம்.. அதான் முக்கியம்

      பழகிரி (பயந்துபோய்) said... மூணத்தொட்டது யாரு?? (கண்டபடி ஓடுகிறார்)

      ReplyDelete
    34. கைய கட்டி போட்டது போல இருக்கு. நானும் இங்க கொஞ்சம் செட்டில் ஆகிக்கிறேன். அப்பறம் பாருங்க பதிலடிய.

      ReplyDelete
    35. கொளந்தையை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை,காணாமல் போகும் போது வெள்ளை நிற பனியனும்,ஊதா நிற அறை கால் டவுசரும் அணிந்து இருந்தார்,இவரை யாராவது கண்டு பிடித்தால் காதை பிடித்து தரதர வென இழுத்து வருமாறு கேட்டுகொள்ளபடுகிறோம்...

      ReplyDelete