Sunday, September 19, 2010

Snatch = ஸ்டைல் = கைய் ரிட்சி

                 (9)
                 என் பெயர் Turkish.என்ன..பிராய்லர் கோழி பேரு மாதிரி இருக்குன்னு நெனக்கிரீங்களா..என் மம்மியும் டாடியும் ஒரு விமான விபத்துல தான் சந்திச்சுகிட்டாங்க.அந்த ப்ளேன் பேரயே எனக்கு வெச்சுட்டாங்க. இந்தா..என் பக்கத்தில உக்காந்திருக்காரே என் நண்பன் Tommy...அவன் பெயருக்கு என்ன காரணம்னா....வேற வேலையில்ல.ரைட்.மேட்டருக்கு வரேன்.நா குத்துச்சண்டை போட்டிகள ஏற்பாடு பண்ணுறவன்.குத்துச்சண்டைனா உங்க படத்தில வர மாதிரி ஒரு குத்துவிட்டு அவரு அ...அ..ஆ.ஆ.ஏ..ஏ.ன்னு தமிழில் எல்லா உயிர் எழுத்துக்களையும் சொல்லி எக்கோ விட்டுகிட்டு கீழே விழ ஆரம்பிப்பார்.நீங்க நைட் சாப்பட்டையும் முடிச்சு காலையில எழுந்திரிச்சு சிலபல வேளைகள முடிச்சிட்டு டிஃபனுக்கு உக்காதீங்கன்னா அப்பதான் விழுந்து முடிப்பார்.நா சொல்றது அந்த மாதிரி பாக்ஸிங் இல்ல. திருட்டுத்தானமா லைசென்ஸ் வாங்காத பாக்ஸிங். அடி ஒவ்வொன்னும் சும்மா நங்குனு இறங்கும். ஆளுக அப்பப்ப மௌத் ஆகுறதும் உண்டு. இந்த வேலயத்தான் போன வாரம் வரை செஞ்சுகிட்டு இருந்தேன்.இப்ப எல்லாம் தலைகீழா மாறிருச்சு. எனக்கு வைரங்களைப் பத்தி இதுவரைக்கும் ஏதாவது தெரியுமா... வைரங்க என்ன Antwerpலயிருந்தா வருது?  
(2)

(சில பாதிரியார்கள்(1,2,3,4,5)-செக்யூரிட்டி ஆட்கள்)
                       1: ஆதாம்-ஏவாள் கதை தெரியும்ல...Nice story.
                       2: அத நம்பச் சொல்லுறீங்களா?
செக்யூரிட்டி: இதென்ன..இதென்னனு கேக்குறேன்ல....
                       1: அட..என்னப்பா நீ..பேன்ட் நீக்க வேணாம..கொஞ்சம் பெரிய 
                           பெல்ட்.வேணா பெல்ட கிழிச்சி பார்த்துக்க..
செக்யூரிட்டி: சரி..சரி..போங்க...
                       1: கத்தோலிக் மதமே.....
                       3: சாமி....நிறுத்தமாட்டீங்களா...போர் அடிக்குது. நாம யாரப் பார்க்கப் 
                           போறோம்.
                       1: மைக்கேல்
(ரூமின் வெளியேயிருந்து கதவைத் தட்டுகிறார்கள்) 
 மைக்கேல்: யாரது?..
                      1: நா தான்-முட்டி
 மைக்கேல்: ரூடி...அவுங்கள உள்ள அனுப்பு.....வா வா வா..முட்டி.எவ்வளோ 
                         நேரம் வையிட் பண்றது...யூ முட்டி???? 
                 -Gunshots-                                 -நிறைய  Gunshots-
                     1: எல்லாரும் கீழ படுங்க.now.கீழ படுங்கன்னு சொல்றேன்ல யு   F^*##
             
(7 நிமிடங்கள்..33 நொடிகள்.. முடிந்து)
                     1: மைக்கேல்..எங்க அந்த வைரம்...சொல்லுப்ப ராஜா....
----------
                     4: உன் ப்ளேன் எப்ப கிளம்புது...
      1@Franky: இன்னும் 20 நிமிசத்தில..
                     4: உன் துப்பாக்கிய கொடுத்திட்டு போ..அப்பறம் நீ லண்டன் 
                         போனதுக்கப்பறம் துப்பாக்கி தேவைப்பட்ட இந்த நம்பருக்கு கால்            
                         பண்ணு. உனக்கு தேவைப்படுற ஏத வேணாலும் இவர் ஏற்படுத்திக் 
                         கொடுப்பார்.
            Franky: என்ன பேரு...Boris the Blade....

(7)

Turkish: இங்க பாரு ...இந்த மாதிரி உளுத்துப்போன caravan வண்டிய வெச்சுக்கிட்டு 
             எப்படி நா ஆபீஸ் நடத்துறது..எவனாது மதிப்பான..நீ எனக்கு ஒரு caravanன 
             ஏற்பாடு பண்ற டாமி..
Tommy: why me?
Turkish: ஏன்னா நீ ஒரு மாசம் caravanல இருந்திருக்கே.so..என்ன விட உனக்கு 
            அதிகமா உனக்கு அதைப்பத்தி தெரியும்.Thats why you.ஒண்ணும் 
            கவலப்படாத.ஏற்கனவே எல்லாம் பேசியாச்சு.இந்த அட்ரஸ்ல போய் 
            எடுத்துகிட்டு வந்துரு.
Tommy: யோவ்..என்ன லந்தா..இந்த அட்ரஸ்ல இருக்குறவங்க pikeys. சத்தியமா 
             எனக்கு ஆகாது. 
Turkish: இந்தா..இதுல ஒரு லட்சம் இருக்கு. மீதிய கரெக்ட்டா கொடுத்திரு.
Tommy: F***
Turkish: ஏ..என்னாது...என்னமோ நீட்டிக்கிட்டு இருக்கு.
Tommy: அது என் பெல்ட்.
Turkish: ப்ச்..பெல்டில்ல...அதுல சொருகி வச்சிருக்கியே gun அதைப் பத்தி.உனக்கு 
             எதுக்கு அது..உக்காரும் போதும் வெடிச்சு கண்டது தெறிக்க போகுது.
Tommy: ஒரு பாதுகாப்புக்கு..
Turkish: எங்க கிடச்சது உனக்கு..
Tommy: Boris The Blade.
Turkish: யாரு அந்த F****** ரஷ்யனா...கிழிஞ்சது

(6)
Tommy & Borris the Blade - சில நாட்கள் முன்பு:
Tommy: Gun ரொம்ப வெயிட்டா இருக்கே...
  Borris: வெயிட்தான் எப்பவும் நல்லது பையா..ஒருவேள சுடலைனா கூட 
             அடிச்சே ஆளக்காலி பண்ணிரலாம்.
Tommy: ஓகே..நா வாங்கிக்கிறேன்

மக்களே..புதுசா டாமிக்கு துப்பாக்கிகள் மேல ஆர்வம் பீறிடுவதற்கு காரணமிருக்கு = Brick Top

(1)
Turkish & Brick Top கொஞ்சம் சில நாட்கள் முன்பு: 
Brick Top ஆட்களை அப்புறப்படுத்துவதில் அலாதியான அணுகுமுறை இருக்கும். ஒரு ஸ்டன் கன்-பிளாஸ்டிக் பை(பிளாஸ்டிக் சுற்றுப்புறத்திற்கு கேடு)-அப்புறம் பன்றிகள்-நிறைய பன்றிகள். இந்த வரிசைலதான் இருக்கும். அந்த ஆள்ட்ட சர்வ ஜாக்கிரதைய டீல் பேசணும். நாம அந்தாளுக்கு கைமாத்து தர வேண்டிய நெலமைலா மாட்டுனோம்...தொலைஞ்சோம்.

Brick Top: இந்த பாரு Turkish..நா முடிவுபண்ற மாதிரிதான் இந்த குத்துச்சண்டை 
                 போட்டி இருக்கனும். என்ன நம்பி பல பேர் பெட் கட்டுவாங்க. ஒழுங்கா 
                  நடந்தா உனக்கு பல விதத்துல நல்லது(இந்த வார்த்தைலதான் 
                 விழுந்திட்டேன்.).என்ன வெறுப்பேத்துற மாதிரி ஏதாவது ஆச்சு...
-
(4)
இதற்கிடையில்.........
4: Boris.....Franky கல்லு சைஸ்க்கு ஒரு வைரத்தோட லண்டன் வரான். வைரத்த ஒரு பெட்டில வெச்சு கையோட மாட்டியிருப்பான்.உன்ட துப்பாக்கி வாங்க சொல்லியிருக்கேன்.நீ இதுல இறங்காத. என் அண்ணன் மாதிரி யோசி..வேற யாராவது விவரமான ஆட்கள ஏறக்கு.அப்பறம் இன்னொன்னு..அவனுக்கு சூதாட்டம் ரொம்ப பிடிக்கும்...

(3)
அதே சமயத்தில்........
     Avi: 86 காரட்டா...... வெரி குட் Franky boy. எப்ப நியூயார்க் திரும்புற?
 Frank: எனக்கு லண்டன்ல கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சவுடனேயே 
           நியூயார்க்தான்.
    Avi: ரொம்ப முக்கியமா Frank சூதாட்டத்திலிருந்து தள்ளியேயிரு. முடிஞ்சா என் 
           மாமா பையன் Dougக போய் பாரு.அவன்ட நீ வந்த விசயத்த சொல்லி 
           வைக்கிறேன்.

(இந்த Doug வேற யாருமில்ல-நகைகள விக்கனும்னா-திருட்டு நகைகள விக்கனும்னா இவன்தான் அதுக்கு சரியான ஆளு)

(5)
Boris & Frank-சந்திப்பு:
Boris: வெய்ட்ட இருக்குற துப்பாக்கிகள்தான் எப்பவுமே நம்பகமானது. 
          வெயிட்டா இருக்குறதுல இன்னொரு உபயோகமும்மிருக்கு.
Frank: சரி..எடுத்திக்கிறேன். எவ்வளோ...
Boris: ஒண்ணும் வேண்டாம்..
Frank: எதுக்கு இந்த சகாயம்....
 Boris: எனக்கு ஒரு உதவி பண்ணனும்.இன்னும் கொஞ்ச நாள்ல இங்க 
           லைசென்ஸ் இல்லாத பாக்ஸிங் போட்டி நடக்கப்போகுது. என் சார்பா நீ   
           பெட் கட்டனும்.
Frank: நீயே பண்ணலாமே.....
Boris: எனக்கு தெரியாதா...அதுல சில வில்லங்கம் இருக்குனுதானே உண்ட 
          கேக்குறேன்..முடியுமா-முடியாதா?ஆமா... உனக்கு சூதாட்டம்-பெட்டிங் 
           எல்லா வருமா.....
Frank: ஹே..ஹேய்....

(8)
Tommy & Mikey:
   Tommy: I hate F****** pikeys Gorgeous
Gorgeous: சரி...வந்த வேலைய முடிப்போம். இத முடிச்சிட்டு சீக்கிரம் போயி நா 
                 நடக்கப்போற பாக்ஸிங்க்கு ப்ராக்டிஸ் பண்ணனும்.
   Tommy: இங்க...Mr. O'Neilகறது..
            X: அதோ அவந்தா...
    Tommy: Mr. O'Neil??
    Mickey: F****. என்ன மிக்கினே கூப்பிடு.
    Tommy: இந்த caravan சம்மந்தமா....
    Mickey: யா.ரைட்..ஒரு ட்ரிங்க போட்டுகிட்டே talkகடிக்கலாம். 

(வாட்ச்ச பாருங்க கொஞ்ச நேரம் ஆச்சா...)
    Mickey: ஓகே பாஸ்..பேசுனபடி அந்த வண்டி ஓகே தான..எடுத்துகோங்க

(....டாமி caravanனை ஓட்டிப் பார்க்க அது கரகாட்டக்காரன் வண்டி டைப்ன்னு தெரியுது..)
Tommy: பாரு மிக்கி...பணத்த கொடுத்துரு...வண்டிய நீயே வெச்சுக்க..
Mickey: அ..ஆங்..டீல் அதில்லேயே..பார்த்த வண்டிய எடுத்துக்கன்னு தான 
             சொன்னேன்.
Tommy: இதெல்லாம் ரொம்ப ஏமாத்துற வேல. 
Mickey: சரி..இந்த Gorgeousக்கும் எனக்கும் சண்ட வெச்சுக்கலாம். அவன் ஜெயிச்சா 
             கேட்ட வண்டிய கொடுக்ககுறேன். எப்படி வசதி.

.....சண்டைல முதல்ல மிக்கி செமத்தியா அடிவாங்குனான்.ஆனா திருப்பி அடிக்கல. அப்பறம்தான் எங்களுக்கு தெரிய வந்துச்சு.மிக்கி bare-knuckle boxing champion. bare-knuckleன்னா கையுறை,வேற பாதுகாப்பு எதுவுமில்லாம கைய வெச்சு சொம்மா மங்குனு குத்துறது. ஒரே அடிதாங்க Gorgeousய அடிச்சான். அப்ப விழுந்தவந்தான். ஹாஸ்பிடல்ல தா எந்திரிச்சான்.....
(10)
                       இந்த Gorgeousத்தான் நா Brick Top ஏற்பாடு பண்ண பாக்ஸிங் மேட்ச்சுக்கு ரெடி பண்ணி வெச்சுருந்தேன். இப்ப அவன் வாயில கம்பியோட பேச கூட முடியாம ஹாஸ்பிடல்ல கிடக்கான்.Brick Top இந்த மேட்ச நம்பி பல திட்டங்கள் போட்டு வெச்சிருந்தான். அவன நாம எரிச்சல் படுத்துனா என்ன ஆகும்னு ஏற்கனவே சொல்லியிருந்தேன். ஸ்டன் கன்-பிளாஸ்டிக் பை-பன்றிகள். வேற என்ன பண்றதுன்னு தெரியாமதான் Brick Topட்ட இந்த விசயங்கள சொல்லப்போனோம். அப்ப புடிச்ச சனி..அவன் விரிச்ச வலைல விழுந்துட்டோம். அதுலயிருந்து பல இழப்புகள். ஏகப்பட்ட குழப்பங்கள்.சாவுகள்.அபத்தங்கள்.இதுல மிக்கிகும் பெரும் பங்குயிருக்கு. எல்லாம் முடிஞ்சு கைல இந்த 86-காரட் வைரத்தோட இந்த வியாபாரி முன்னாடி ஒக்காந்திருக்கோம். இந்த ஒரு வாரத்திலதான் இத்தன விசயங்களும் நடந்திருக்கு. நா அத சொல்ல ஆரம்பிக்கும் போதுதான் நீங்க இதை படிக்க ஆரம்பிச்சீங்க.முழுசா சொன்னா யாரும் பொறுமையா படிக்கமாட்டாங்க. பொறுமை இல்லாத ஆட்கள் Guy Ritchieன் Snatch படத்தப் பாருங்க. முழுசா சொல்லுங்க...கேட்போம்ன்னு சொல்லுற வேலவெட்டி இல்லாதவங்க....இருங்க இந்த வைரத்தா பேசி முடிச்சிட்டு வந்து மீதி கதையையும் சொல்றேன். இந்த ஆளட்ட போய் விக்க வந்தோம் பாருங்க..சொம்மா நொச்சு நொச்சுன்னு பேசிகிட்டு.க்கும்...எங்ககிட்டயே பேசி முடிக்கல..இதுல தொரை போன்ல வேற பேசுறாரு...
              "ஹலோ Avi...நா Doug பேசுறேன்.நாமா தேடிக்கிட்டுயிருந்த........................  "

                
எனக்கு ரொம்ப பிடித்த இந்த தலைமுறையை சேர்ந்த டைரக்டர்களில் ஒருவர் Guy Ritchie.ரெண்டு காரணங்கள்: செமத்தியான மேக்கிங், ரகளையான மியூசிக். இப்ப Rock-n-Rollaல வந்த ஒரு சரியான பாடல் சாம்பிளுக்கு. தினம் ஒரு தடவையாவது இத கேட்டிருவேன். நீங்களும் இத கேட்டுகிட்டே மேற்கொண்டு படிச்சா ஒண்ணும் தப்பில்ல.

              
Lock, Stock& Two Smoking Barrels தான் நான் பார்த்த ரிட்சியின் முதல் படம். அது ஒரு 5-6 வருசமிருக்கும். அப்ப எனக்கு Guy Ritchie பத்தி ஒண்ணும் தெரியாது. ஆனாலும் LSATSB படம் வெகுவாக என்னை கவர்ந்தது. குறிப்பா டைட்டில் போடும் போது வரும் ஸ்லோ-மோசன் காட்சிகள்.இன்னும் நன்றாக ரசித்தது ஞாபகமிருக்கு. இவர் எடுக்கும் படங்கள் அனைத்தும் ஒரே மாதிரி இருந்தாலும்கூட(Revolver சற்றே மாறுபட்டது) கண்டிப்பா பார்வையாளர்களை உள்ள இழுத்துரும். ஆனா சப்-டைட்டிலுடன் பார்த்தா மட்டுமே முழுதாக ரசிக்க முடியுமென்று எனக்குத் தோணுது. அமெரிக்காவிற்கு டரண்டினோ மாதிரி இங்கிலாந்திற்கு இவர் என்று சொல்லலாம். ஆனா டரண்டினோ படத்திலிருக்கும் சிலது கண்டிப்பா மிஸ்சாகும். மேலும் இவர் படத்தில நகைச்சுவை அட்டகாசமாக இருக்கும். அதே போன்று casting. எடிட்டிங்க்கு-Snatch படம் சரியான உதாரணம். டைட்டில் போடும் போது வரும் கட்டிங் செம...இந்தப் படத்தின் நான்-லீனியாரிட்டி குழப்பமாகயிருக்குனு சிலர் சொல்லறாங்க.எனக்கு அப்படி ஒண்ணும் தோணல. இதுல பிராட் பிட் பத்தி சொல்லியே ஆகணும்.Pikey கதாபாத்திரத்தை(நம்ம ஊர் நரிக்குறவர்கள் மாதிரின்னு நெனைக்கிறேன்) ரொம்ப அநாயசியமாக பண்ண மாதிரி தெரியுது. இதைப் போன்றே Burn it after readingளையும் பின்னியிருப்பார். So, கண்டிப்பா எல்லாரும் பாருங்க. முக்கியமா என்ன மாதிரி இங்லிபீசு தெரியாதவங்க சப்-டைட்டிளோட பார்த்தா தான் இன்னும் நல்லா ரசிக்க முடியும்.நா சொன்னது ஒரு கால் சதவிதம் தான். நீங்க பாருங்க (பார்த்தவங்க மறுபடியும் ஒருமுறை) இன்னும் ரகளையா இருக்கும். முடிஞ்சா Guy Ritchieன் அனைத்து படங்களையும் பாருங்க (மடோனா ஆண்ட்டி நடிச்ச ஒரு அட்டு படத்தைத் தவிர)
Facebookers..

15 comments :

  1. ஸ்னாட்ச், எனக்கு எப்பவும் புடிச்ச படங்கள்ல ஒண்ணு.. அதுல வர்ர ப்ராட் பிட் கேரக்டரோட casual arrogance எனக்குப் புடிக்கும் ;-) .. அப்புடியே, அந்த வில்லன்.. பன்னிகளை வெச்சி மேச்சிகினு அவன் குடுக்குற டெரர்.. ஓவரால், அட்டகாசமான மேக்கிங்.

    லாக் ஸ்டாக்கும் புடிச்சது. ஆனா அது கொஞ்சம் லோ budgeted மேக்கிங்ன்றதுனால, அதை மறுபடி பார்க்கும் உத்தேசம் இல்லை.. ஆனா ஸ்னேட்ச் எவ்வளவு தடவைகள் வேண்டுமானாலும் பார்ப்பேன் ;-)

    ReplyDelete
  2. அதே போல், அந்தப் பாதிரியார்கள் போல் வேடமிட்டு வரும் காட்சியும் புடிக்கும் ;-) .. நீங்க போட்ருக்கிற டயலாக்ஸ் பார்த்ததும் நினைவு வந்தது ;-)..

    இந்தக் கான்வர்சேஷன் படிச்சதும், சாமுவேல் ஜாக்ஸன், பல்ப் ஃபிக்‌ஷன்ல சொல்ற அந்த மெகா பன்ச் டயலாக் நினைவு வந்தது.. (ஆஹா... பல்ப் ஃபிக்‌ஷன் மறுபடி பார்க்கணும் போல இருக்கே... )

    ReplyDelete
  3. இந்த படம் இன்னும் பார்க்கலை பார்க்கணும். துரதிர்ஷ்டவசமா நான் பார்த்த முதல் கை ரிச்சி படம் swept away (madona). பிடிக்கவேயில்லை.
    அப்புறம் சப்டைட்டில் நிறைய இடத்தில் கிடைக்கிறது எது கொஞ்சம் நல்லதுன்னு சொல்றீங்களா?

    ReplyDelete
  4. நண்பரே,

    ஸ்னாட்ச் படம் எனக்கு மிகவும் பிடிக்கும். குறிப்பாக நகைச்சுவை.

    ReplyDelete
  5. @கருந்தேள் கண்ணாயிரம்
    ணா..இன்னும் ஒரு மாமாங்கம் கழிச்சு வந்தாக்கூட நீங்கதான் முதல்ல இருந்திருப்பீங்க..

    பிராட் பிட் இப்படியும் நடிக்கிறார். பாபேல்,Benjamin Button மாதிரியான படங்களிலும் பிண்ணுறார். என்னத்த சொல்ல..

    ReplyDelete
  6. @எஸ்.கே
    //துரதிர்ஷ்டவசமா நான் பார்த்த முதல் கை ரிச்சி படம் swept away (madona)//
    அய்..மடோனாக்காக பார்த்திட்டு..துரதிர்ஷ்டவசமான்னு... உங்கள யாரோ கட்டாயப்படுத்தி பார்க்க வெச்ச மாதிரி அலுத்துக்கிறீங்க....

    அப்பறம் சப்-டைட்டிலுக்கு இவைகள் நல்லாயிருக்கு.
    http://www.anysubs.com
    http://www.opensubtitles.org
    http://www.divxsubtitles.net
    http://www.subscene.com
    பட பேர வெச்சு கூகிள் தேடிப்பாருங்க, இன்னும் நல்லதா கிடைக்கும்

    ReplyDelete
  7. @கனவுகளின் காதலன்
    பாஸ்...யூத்துக எல்லாருக்கும் snatch படம் கண்டிப்பா பிடிக்கும். உங்களுக்கு பிடிச்சதுல ஆச்சரியமேயில்ல. ஒருவேள நீங்க.........?

    ReplyDelete
  8. நீங்க வேற நான் இங்கிலீஷ் படம் பாக்கிறதே அப்ப அபூர்வம். ஏதோ ஒரு படம்னுதான் அந்த படத்தை பார்த்தேன். எனக்கு கைரிச்சி, மடோனா எதையும் அப்ப தெரியாது. தெரிஞ்சது ஜாக்கிஜான் அர்னால்ட், ஸ்டோலன் மட்டும்தான். இப்பத்தான் கைரிச்சி பற்றி படிச்சுட்டு அவர் படத்தை தேடினால் அந்த படம் பேரு வருது. எனக்கு அந்த படம் கதையே பிடிக்கலை. வேற எந்த கை ரிச்சி படமும் இதுவரை பார்க்கலை. முதல்ல இந்த படத்தை பார்க்க முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  9. @எஸ்.கே
    பாக்கணும் எஸ்.கே பாக்கணும்.

    Snatchலயிருந்து ஆரம்பிங்க. செமையா இருக்கும்

    ReplyDelete
  10. Hai Ganesh nice to read ur blogs. Hope u remember me.

    ReplyDelete
  11. நண்பா
    அதுக்குள்ள 8வயசுக்கு வளர்ந்துட்டீங்களே?!!!காம்ப்ளானா?

    அப்பா எப்படி இருக்கார்?
    சாரி போன வாரம் முழுக்க பிஸி,எங்கும் பின்னூட்டவே டயமில்லை,தவிர ஹாலிபாலியின் பதிவு விவகாரம் வேறு,அதுதான் இதை பார்த்திருந்தாலும் பின்னூட்டவில்லை,இதோ ஆஃபீஸிலிருந்து வந்ததும் இங்கே வந்தேன்,ஆஃபீஸில் வேறு இப்போது ப்ளாக் படிக்கவோ எழுதவோ முடியலை.

    ===
    ஸ்னாட்ச்
    எனக்கு மிகவும் பிடித்த படம்,கைரிட்சி நல்ல இயக்குனர்,வித்தியாசமான படங்களை இயக்குபவர்,படம் மட்டும் புரிந்து பார்த்தால் ஒன்றிவிடுவோம்.நல்ல நடை.புரியாதவருக்கு உதவும்படியான கட்டுரை

    ReplyDelete
  12. @கீதப்ப்ரியன்
    ணா..
    ஒரு ரெண்டு வாரத்திற்கு முன்னாடி நடக்குறது ரொம்ப சிரமமாயிருந்துச்சு. இப்ப டெய்லி முன்னேற்றமா இருக்கு. சில எக்ஸசைஸ் செய்கிறார்.
    நேரம் இருக்கும்பொழுது இதைப் படிக்க முடியுமா என்று பாருங்கள்...
    http://saravanaganesh18.blogspot.com/2010/09/blog-post_15.html.
    நீங்கெல்லாரும் அக்கறையா கேட்குறது ரொம்ப சந்தோஷமா இருக்கு

    //இதோ ஆஃபீஸிலிருந்து வந்ததும் இங்கே வந்தேன்// நல்லா ரெஸ்ட் எடுத்திட்டு பின் எல்லோருடையா ப்ளாகிற்கும் வாங்க.(இது என் கருத்து)

    கை ரிட்சி படங்கள் யூத்துகளுக்கு தான் ரொம்ப பிடிக்கும்னு சொல்லுவாங்க...அப்பறம் எப்படி...

    ReplyDelete
  13. @Padmanaban.
    // Hope u remember me//

    ணா..இதெல்லாம் ரொம்ப ஓவர். ஹாஸ்பிடல்..அலைச்சல்ன்னு டச் விட்டுப்போச்சு. என் ப்ளாக்கில ஹாஸ்பிடல் குறித்தே பதிவுகள் போட்டிருக்கேன். உங்களுக்கு மெயில் பண்ணுறேன்.

    ReplyDelete
  14. கை ரிட்சி இடம் எனக்கு பிடித்த விஷயம் அவர் லண்டன் காக்னி மற்றும் எஸ்செக்ஸ் வகைஆங்கிலத்தை இவரது படங்களில் நன்றாக பயன்படுத்தி இருப்பார் (eg:harry and bacon in "lock stock and two smoking barrels" and bricktop in "snatch") ... அதனால் தான் இவர் படங்களை சப் டைட்டில் இல்லாமல் பார்க்க முடிவதில்லை ... !!

    ReplyDelete